Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 15, 2014

ஓர் வபாத் செய்தி!

நமதூர் கடைதெருவில் இருக்கும் அஜீதுல்லாஹ் அவர்களின் தந்தை முஹமது யூனுஸ் அவர்கள் இன்று காலை தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் "ஷப்ரன் ஜமிலா" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress பிரார்த்தனை செய்கிறது.


டிசம்பர் 04, 2014

ஓர் வபாத் செய்தி!

கொள்ளுமேடு தாயுப் நகர் அப்துல் ஜலால் அவர்களின் தந்தை அப்துல் முத்தலிப் அவர்கள் இன்று காலை தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் "ஷப்ரன் ஜமிலா" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress பிரார்த்தனை செய்கிறது.

நவம்பர் 28, 2014

பணி தடைக்கு (Ban) விதிவிலக்கு- UAE தொழிலாளர் துறை அறிவிப்பு!

“ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள், தமது வேலையை மாற்றிக் கொள்ளும்போது அவர்கள் மீதான ‘பணி தடை’ 1 வருடத்துக்கு விதிக்கப்படுவதில் மாற்றம் ஏதுமில்லை” என்று அறிவித்துள்ள UAE தொழிலாளர் துறை அமைச்சர் , “இந்த தடை குறித்து சில விதிவிலக்குகள் செய்யப்படலாம்” என்று தெரிவித்துள்ளது.

அமீரக தொழிலாளர் பொது சட்டப்படி, ஒரு வெளிநாட்டவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிய வந்தபின், மற்றொரு தனியார் நிறுவனத்துக்கு மாறினால், ஒரிஜினல் நிறுவனத்தில் 2 ஆண்டுகள் பணி புரிந்து இருக்காவிட்டால், அவர் மீது 1 ஆண்டு ‘பணி தடை’ விதிக்கப்படும். இது பொது சட்டம் (general rule). ஆனால், நடைமுறையில் தொழிலாளர் துறை அமைச்சு இதை அமல் படுத்துவதில்லை. மாறாக, ஒரிஜினல் நிறுவனத்தில் 1 ஆண்டு பணிபுரிந்தபின் மற்றொரு நிறுவனத்துக்கு மாறினால், கண்டுகொள்வதில்லை. ஆனால், 1 ஆண்டுக்கு குறைவான காலம் பணிபுரிந்துவிட்டு நிறுவனம் மாறினால்

நவம்பர் 25, 2014

சிதம்பரம் முக்கிய தெருக்களில் ஆக்கிரமிப்பு அகற்றம்!

சிதம்பரத்தில் முக்கிய தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகம் அகற்றியது. ஆக்கிரமிப்பு ஆன்மிக நகரான சிதம்பரத்தில் நாளுக்கு நாள் முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.

போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே முக்கிய சாலைகள், தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் சென்றன. அதன்பேரில் முதற்கட்டமாக பிரசித்திப்பெற்ற தில்லையம்மன் கோவிலுக்கு சுற்றுலா பஸ்கள், வாகனங்கள் செல்லும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. கொட்டகைகள் அகற்றம் அதன்படி நகர அமைப்பு ஆய்வாளர் அறிவுச்செல்வன் தலைமையில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொக்லைன் எந்திரம் உதவியுடன் தில்லையம்மன் கோவில் தெருவின் இருபுறமும் ஆக்கிரமித்து இருந்த கடைகள், வீடுகளின் படிக்கட்டுகள், முகப்பு கொட்டகைகள் மற்றும் அங்கன்வாடி மையம் ஆகியவை அகற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து வேங்கான் தெரு மற்றும் மார்க்கெட் பகுதியிலும் நேற்று ஒரே நாளில்

நவம்பர் 23, 2014

கடலுக்கடியில் அதிநவீன நகரத்தை கட்ட தயாராகும் ஜப்பான்!

கடந்த 2012–ம் ஆண்டில் ஜப்பானை சேர்ந்த ஒபயாசி கார்ப்பரேசன் என்ற கட்டுமான நிறுவனம் விண்வெளியில் கட்டிடம் கட்டி அங்கு சுற்றுலா பயணிகளை அழைத்து சென்று தங்க வைக்க போவதாக அறிவித்தது.

இன்னும் 40 ஆண்டுகளில் அதற்கான முயற்சியை மேற்கொண்டு திட்டத்தை நிறைவேற்ற போவதாக அறிவித்தது. இந்த நிலையில் ஜப்பான் ஷிம்சு என்ற மற்றொரு கட்டுமான நிறுவனம் கடலுக்கு அடியில் அதிநவீன நகரத்தை கட்ட போவதாக அறிவித்துள்ளது. 1500 அடி அகலத்தில் வட்டவடிவிலான கூண்டு அமைக்கப்படுகிறது. அதற்குள் வீடுகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் அமைக்கப்படுகின்றன. இங்கு 5 ஆயிரம் பேர் தங்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. இதற்கு அட்லாண்டிஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆழ்கடல் அதிநவீன நகரம் கட்ட ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவாகும் என

நவம்பர் 17, 2014

கடலூர் மாவட்டத்தில் மழையால் மூழ்கிய 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் நாசம்!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், புவனகிரி, பரங்கிபேட்டை, சிதம்பரம் பகுதிகளில் 1 லட்சத்து 37 ஆயிரம் ஏக்கர் நிலம் காவிரி மூலம் பாசனவசதி பெறுகிறது. இந்த ஆண்டு காவிரி ஆற்றில் தண்ணீர் வந்ததை அடுத்து அனைத்து பகுதிகளிலும் சம்பா பயிர் பயிரிடப்பட்டது.

பெரும்பாலும் நேரடி விதைப்பு மூலம் நெல் பயிரிட்டனர். அவை வளர்ந்து வந்த நிலையில் பருவமழை தொடங்கியது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்துபெய்த பலத்த மழையினால் இந்த பகுதியில் பெரும்பாலான நெய்பயிர்கள் நீரில் மூழ்கின. 3 நாட்களுக்கு மேலாக மூழ்கி கிடந்த பயிர்கள் பெரும்பாலும் அழுகிய நிலையில் இருந்தன. இந்த பயிர்களை காப்பாற்ற வேண்டும் என்றால் உடனடியாக யூரியா உரம் போடவேண்டும். அப்போதுதான் பயிர் பச்சைதண்மை ஏற்பட்டு மீண்டும் வளர ஆரம்பிக்கும். ஆனால் கடலூர் மாவட்டத்தில் யூரியா உரம் தட்டுப்பாடு நிலவுகிறது. விவசாய கூட்டுறவு சங்கம் மூலம் குறிப்பிட்ட அளவு மட்டுமே உரம் சப்ளை செய்யப்படுகிறது.

அது போதுமானதாக இல்லை.வெளிகடைகளிலும் யூரியா உரம் கிடைக்கவில்லை. எனவே அழுகிய பயிர்களை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் உரம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளன. உடனடியாக உரம் கிடைக்காவிட்டால் விவசாயிகள் பலத்த நஷ்டத்துக்கு ஆளாவார்கள் என விவசாய சங்க பிரதிநிதிகள்

ஓர் வபாத் செய்தி!

கொள்ளுமேடு சிராஜூல் மில்லத் வீதியில் இருக்கும் வாய்க்காங்கரை முஹம்மது தாயார் ரஹீமா பீவி (மர்ஹும் அப்துல் ரஜாக் மனைவி ) அவர்கள் இன்று காலை தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் "ஷப்ரன் ஜமிலா" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress பிரார்த்தனை செய்கிறது.

நவம்பர் 09, 2014

காப்பீட்டு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு!

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் பகுதியில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டு நெற்பயிர் சாகுபடி தீவிரமடைந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், புயல், மழை, நோய் ஆகியவற்றின் காரணமாக நெற்பயிர் பாதிக்கப்பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு அரசு தேசிய வேளாண்மை காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் விவசாயிகள் பங்கு கொண்டு பயன்பெறுமாறு காட்டுமன்னார்கோவில் வேளாண்மை உதவி இயக்குநர் கனகசபை கூறியுள்ளார். பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் காப்பீடு செய்வதால் மகசூல் இழப்பு ஈடு செய்யப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறாத விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.12 ஆயித்து 800 காப்பீட்டு தொகையாக வழங்கப்படுகிறது. இதற்கு விவசாயிகள் பிரிமீயம் தொகையான ரூ.128ம் தங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் செலுத்த வேண்டும்.

பணம் செலுத்தும் போது பயிர் செய்வதற்கான ஆதாரங்களான கணினி சிட்டா மற்றும் அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆகியவற்றை இணைக்க வேண்டும். இந்த காப்பீட்டு திட்டத்தில் சேருவதற்கு வரும் 15ம் தேதி கடைசி நாளாகும். எனவே அனைத்து விவசாயிகளும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் சந்தேகங்கள் ஏற்பட்டால் அருகில் உள்ள வேளாண்மை உதவி அலுவலர்களை சந்தித்து ஆலோ சனை பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

நவம்பர் 07, 2014

கொள்ளுமேட்டில் இந்தியன் வங்கியின் ATM சேவை?

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரிக்கரை அருகில் அமைந்துள்ள கொள்ளுமேடு கிராமம் அதை சுற்றியுள்ள இராயனல்லூர், அகரம்,மானியம் ஆடூர், நத்தமலை மற்றும் கந்தகுமாரன் போன்ற ஊர்களின் வர்த்தக மையமாக இருந்துவருகின்றது.

 பல ஆண்டுகாலமாக வியாபாரம் மற்றும் வங்கி பணபரிமாற்றங்களுக்கு கொள்ளுமேடு தலைநகரமாகவே விளங்கிவருகின்றது.குறிப்பாக கொள்ளுமேட்டில் மையமாக கொண்டு செயல்படும் இந்தியன் வங்கி சுற்றியுள்ள கிராம மக்களுக்கு சிறப்பான சேவையை செய்துவருகின்றது,இருந்தாலும் கடந்த சில வருடங்களாகவே தன்னுடைய சேவையில் மக்களின் நன்மதிப்பை பெறாமலே இருந்து வருகின்றது.

மக்கள் தங்களின் சேமிப்பு பணத்தை எடுப்பதற்கு அழைகளைக்கபட்டனர் பணம் பற்றாக்குறை என்று பணம் எடுக்கவரும் வாடிக்கையாளர்களை திருப்பி அனுப்பிக்கொண்டிருந்த இந்தியன் வங்கி,தற்போது கொள்ளுமேடு சுற்றுவட்டார மக்களின் நன்மதிப்பை பெரும் பொருட்டு ATM சேவையை தொடங்க

அக்டோபர் 23, 2014

கடலூர் மாவட்டத்தில் மழைவெள்ள பாதிப்புக்கு இலக்காகும் 64 கிராமங்கள்- ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார்

கடலூர் மாவட்டத்தில் மழைவெள்ள பாதிப்புக்கு இலக்காகும் 64 கிராமங்களை கண்டறிந்து அங்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகெளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பருவ மழை பெய்துவருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. ஆட்சியர் அலுவலகம், கேட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் வெள்ளக்கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இவை 24 மணிநேரமும் செயல்படும். வெள்ளக்கட்டுப்பாட்டு அறையுடன் பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் எந்த நேரத்திலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இந்த மழைகாலத்தில் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ உதவி அளிப்பதற்காக சுகாதாரத்துறையினர் தயார் நிலையில்

செப்டம்பர் 19, 2014

பிளஸ் டூ - அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ரூ.10000 உதவித் தொகை!

பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ரூ.10 ஆயிரம் உதவித் தொகை வழங்குகிறது.

இந்த உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்கள் கல்லூரிக் கல்வி இயக்ககத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். வருவாய் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த, படிப்பில் சிறந்த மாணவர்கள், கல்லூரியில் படிக்கும்போது அன்றாட செலவுகளுக்குப் பயன்படும் வகையில் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் திறன் அடிப்படையிலான கல்வி உதவித் தொகையை வழங்குகிறது. என்ஜினீயரிங், மருத்துவம், கலை, அறிவியல், வணிகவியல் உள்பட பல்வேறு இளநிலைப் பட்டப் படிப்புகளில் படிக்கும் மாணவர்கள் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். தொலைநிலைக் கல்வி மூலம் இளநிலைப் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்க முடியாது. இந்த உதவித் தொகை பெற தேர்வு செய்யப்படும் இளநிலைப் பட்ட மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் முதல் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

அதே பாடப்பிரிவில் முதுநிலைப் படிப்பில் தொடர்ந்து படித்தால், அந்த மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் வீதம்

காட்டுமன்னார்குடி பகுதியில் விதிகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல்!

காட்டுமன்னார்குடி பகுதியில் விதிகளை மீறி இயக்கப்பட்ட 9 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

வாகனங்கள் பறிமுதல் காட்டுமன்னார்கோவில் பகுதியில் சரக்கு வாகனங்களில் பொதுமக்கள் ஏற்றிச்செல்லப்படுவதாக சிதம்பரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்துக்கு புகார்கள் சென்றது. அதன்பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியகுமார் மற்றும் அலுவலர்கள் காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையம், கச்சேரி ரோடு, உடையார்குடி ஆகிய பகுதியில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றிச்சென்ற 4 மினிடெம்போக்களை மோட்டார் வாகன ஆய்வாளர் பறிமுதல் செய்தார். மேலும் ஓட்டுனர் உரிமம், செல்போன் ஓட்டிக்கொண்டு வாகனம் ஓட்டியது உள்பட போக்குவரத்து விதிகளை மீறியதாக 2 ஆட்டோக்கள், 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு டிராக்டர் என மொத்தம் 9 வாகனங்கள்

ஓர் வபாத் செய்தி!

நமதூர் தெற்குத் தெரு பெரிய பள்ளிவாசல் அருகில் வசிக்கும் முஹம்மது இக்பால்  அவர்களின் தந்தை முகத்தார் அவர்கள் இன்று காலை தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.... 

எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் "ஷப்ரன் ஜமிலா" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress பிரார்த்தனை செய்கிறது.

ஆகஸ்ட் 15, 2014

இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் குஞ்சாலி மரைக்காயர்!

இந்திய விடுதலைப்போர் என்பது ஒரு வீர காவியம். இந்தப் போரில் எண்ணற்றவர்கள் சிறை சென்றனர். இலட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இத்தியாக வேள்வியில் ஈடுபட்டவர்களில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது.

அலைகடல் அரிமா குஞ்சாலி மரைக்காயர்:  இந்திய விடுதலைப் போரின் முன்னோடிகளாகத் திகழ்பவர் ஒரு முஸ்லிம் தான் என்பதை வரலாறு எடுத்துக் காட்டுகிறது. கடற்போர் பல செய்த தமிழ் மன்னர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் புகழ்ந்து உரைக்கின்றன. அம்மன்னர்களைப் போன்று கடற்போர் பல செய்தவர் குஞ்சாலி மரைக்காயர். ஆங்கிலேயர் நம் நாட்டை அடிமைப்படுத்துவதற்கு முன் இங்கு வந்து கால்பதித்த போர்ச்சுகீசியரை விரட்டியடிக்க கடற்போர் பல செய்த குஞ்சாலி மரைக்காயர் தான் இந்திய விடுதலைப் போரின் முன்னோடி. கடற்போரில் சாகசங்கள் புரிந்த இந்த வீரத் தளபதியை வெற்றி கொள்ள முடியாத எதிரிகள் நயவஞ்சகமாகக் கொன்றனர்.

வாஸ்கோடகாமா கி.பி 1498 மே, 17ல் கோழிக்கோடு கப்பாட்டு என்ற இடத்தில் வந்திறங்கினார். வியாபாரத்தின் பெயரைக் கூரி இந்திய மண்ணில் கால்பதித்த மிகக் குறிய காலத்திலேயே கி.பி 1510ல் போர்ச்சுகீசியர்கள் கோவாநகரைக் கைப்பற்றுகிறார்கள். வாஸ்கோடகாமா வந்தது முதல் கோழிக்கோடு சாமுத்ரி அரசனுக்கும் பரங்கியருக்கும் இடைவிடாத போர் நடை பெற்று வந்தது. மலபார் பிராந்திய பரங்கியர் படைத்தலைவர் மார்டின் டி-ஸோஸா, 25 போர்கப்பல்களுடன் வடக்கிலிருந்த கோலத்ரி மன்னனின் ஆதரவோடு கோழிக்கோடு கடற்கரையை வந்தடைந்தார்.

கோழிக்கோடு அரசன் சாமுத்ரி செய்வதறியாது திகைத்து நின்ற போது தான், “அந்நியரைக் காலூன்ற அனுமதிக்க முடியாது. அதற்காக தரையிலும் கடலிலும் மனித இரத்தம் பெருக்கெடுத்து ஓடினாலும் நாம் அதற்குத் தயார்” என்று அந்நியருக்கெதிராக முதன்முதலில் சூளுரைத்தார் குஞ்சாலி மரைக்காயர். சொன்னது மட்டுமின்றி செயலிலும் காட்டும் முகமாக அந்நியருக்கெதிரான போரில் கடற்படைக்குத் தலைமை தாங்கினார் அந்த இஸ்லாமிய வீரர். இக்காலகட்டத்தில்

இந்திய திருநாட்டின் 68 வது சுதந்திர தினம் இன்று!

இன, மொழி, மத பேதமின்றி நாம் அனைவரும் இந்தியர்  என்பதில் பெருமிதம் கொள்வோம்!


ஆகஸ்ட் 09, 2014

ஓர் வபாத் செய்தி!

நமதூர் தெற்குத் தெருவில் வசிக்கும் மர்ஹும் ஆம்ஷா அவர்களின் மகனும்,அப்துல்பாரி அவர்களின் மருமகனுமாகிய முஹம்மது அமீன் அவர்கள் நேற்று நள்ளிரவு தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.... 

எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் அனைவருக்கும் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் "ஷப்ரன் ஜமிலா" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress பிரார்த்தனை செய்கிறது.

ஜூலை 27, 2014

ஹஜ் பயணம்: தமிழகத்துக்கு கூடுதல் இடம் ஒதுக்க மத்திய அரசுக்கு ஜெ. கடிதம்

சென்னை: தமிழகத்திலிருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்வோருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு ஹஜ் கமிட்டி 2014ம் ஆண்டுக்காக இதுவரை 13 ஆயிரத்து 159 விண்ணப்பங்களை பெற்றுள்ளது. முஸ்லீம் சமுதாய மக்கள்தொகையின்படி, இந்திய ஹஜ் கமிட்டி குழு நடப்பாண்டில் தமிழகத்துக்கு 2,672 இடங்களை ஒதுக்கியுள்ளது. இதில் 1,180 இடங்கள் சிறுபான்மையினருக்கும், 1,492 இடங்கள் பொதுபிரிவினருக்கும் என்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய ஹஜ் கமிட்டி மூலம் கூடுதலாக 100 இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளின்போது, முஸ்லீம் மக்களின் நலன் கருதி, கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டது என்பதை நான் தங்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கடந்த ஆண்டில், 3,696 யாத்ரிகர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டனர். இது நடப்பாண்டில் புனித பயணம் மேற்கொள்வதற்காக விண்ணப்பம் அளித்துவிட்டு

நீர்வரத்து இல்லாததால் வீராணம் ஏரி நீர்மட்டம் படிப்படியாக குறைவு!

கடுமையான வெயில், நீர் வரத்து இல்லாததால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை மற்றும் கொள்ளுமேடு பகுதியில் வீராணம் ஏரி உள்ளது. 1,465 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டுள்ள இந்த ஏரியின் மொத்த உயரம் 47.50 அடியாகும். இந்த ஏரிக்கு பருவமழை இல்லாத சாதாரண காலங்களில் கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், மழை காலங்களில் வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்தும் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாகவும் மழைநீர் வரும். இதன் மூலம் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் தாலுகாவில் உள்ள 44,856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பூதங்குடி நீரேற்றும் நிலையத்தில் இருந்து குழாய் வழியாக தினமும் 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு அனுப்பப்படுகிறது. இதனால் சென்னை நகரின் குடிநீர் தேவை சரிசெய்யப்படுகிறது.

வீராணம் ஏரியின் நீர்மட்டம் 42 அடிக்கு கீழ் குறையும்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் அளவும் படிப்படியாக குறைக்கப்படும். தற்போது ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து 42.90 அடியாக உள்ளது. கடுமையான வெயில் அடித்து

ஜூலை 26, 2014

மும்பையில் பெப்சி, கோக் விற்பனைக்கு தடை!

மும்பை: பாலஸ்தீனத்தின் காஸா மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இம் மோதலை முடிவுக்கு கொண்டுவராத அமெரிக்காவை கண்டித்தும் மும்பையில் பெப்சி, கோக் குளிர்பானங்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

காஸா பகுதியில் பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்து வருகிறது இஸ்ரேல். மொத்தம் 850 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 100க்கும் மேற்பட்டோர் பிஞ்சு குழந்தைகள். இந்த இனப்படுகொலையை தடுக்க அமெரிக்கா எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதனால் அமெரிக்காவின் நிலைப்பாட்டைக் கண்டித்து மும்பையில் பெப்சி, கோக் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பெந்தி பசார் பகுதியில் உள்ள அனைத்து கடைகளில் பெப்சி, கோக் போன்ற அமெரிக்க நிறுவனங்களின் குளிர்பானங்கள் விற்பனை செய்யக் கூடாது என்று

ஜூலை 19, 2014

காஸ்ஸாவின் மீது தீவிரவாத இஸ்ரேலின் தரைப்படை தாக்குதல்!

ஜெருசலம்: மேற்காசியாவில் அழிவு சக்தியான இஸ்ரேல் காஸ்ஸாவின் மீது தரைப்போரை துவக்கியுள்ளது. போர் நிறுத்தத்திற்கான சர்வதேச அழைப்புகளை புறக்கணித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை வடக்கு காஸ்ஸாவிற்குள் இஸ்ரேல் படையினர் அத்துமீறி நுழைந்தனர். இதனைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஃபலஸ்தீன் மக்கள் புலன்பெயர்ந்து வருகின்றனர்.

ஹமாஸின் ஏவுகணை தளங்கள் மீது நேற்று இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் இம்முறை முதன்முறையாக தரை வழி தாக்குதலை காஸ்ஸா மீது துவக்கியுள்ளது. கடந்த 6 தினங்களில் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 170ஐ கடந்துள்ளது. அரைமணிநேரம் இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை காஸ்ஸா மீது தாக்குதலை நடத்தியது. அதன்பிறகு திரும்பிச் சென்றது.ஹமாஸ் போராளிகளின் எதிர்ப்பு நடவடிக்கையில் நான்கு இஸ்ரேலிய ராணுவத்தினருக்கு காயம் ஏற்பட்டது. காஸ்ஸாவிற்கு எதிராக முழுமையான தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகிவருவதாக ஊகமான செய்திகள் வெளியாகியுள்ளன. வடக்கு காஸ்ஸாவின் எல்லையில் இஸ்ரேலிய ராணுவத்தினர் முகாமிட்டுள்ளனர். வீடுகளிலிருந்து வெளியேற கோரி இஸ்ரேலிய விமானங்கள் ஒரு லட்சம் பேர் வசிக்கும் பிட் லஹியாவில் துண்டு பிரசுரங்களை வீசின.

ஹமாஸ் தளங்களை தாக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. தாக்குதல் நடத்தப்போகும் இடங்களையும் குறிப்பிட்டுள்ளது. ஹமாஸ் ராக்கெட் தாக்குதலை நடத்தும் அனைத்து இடங்களிலும் தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. நான்காயிரத்திற்கும் மேற்பட்ட காஸ்ஸா மக்கள் ஐக்கியநாடுகள் அவை நிவாரண ஏஜன்சியின் எட்டு முகாம்களில் அபயம் தேடியிருப்பதாக ஏஜன்சியின் செய்தி தொடர்பாளர் க்ரூஸ் கன்னஸ் தெரிவித்தார். அதேவேளையில், இரட்டை குடியுரிமை உடைய 800 ஃபலஸ்தீனர்கள், இஸ்ரேலின் எரஸ்க்ராஸிங் வழியாக காஸ்ஸாவை விட்டு வெளியேறத்துவங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சனிக்கிழமை இரவு பாதுகாப்பு படையின் தலைமையகம் மீது இஸ்ரேல் விமானத்தாக்குதலை நடத்தியிருந்தது.ஹமாஸின் ராக்கெட் தாக்குதல் பெரும்பாலும் வடக்கு காஸ்ஸாவில் இருந்து நடத்தப்படுவதால் அங்கு ராணுவ நடவடிக்கை

ஜூலை 07, 2014

சிதம்பரம் நகரில் பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு!

சிதம்பரம் நகரில் பிளாஸ்டிக் கழிவுகளால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

பாதாள சாக்கடை திட்டம்
கடலூர் மாவட்டத்தின் வளர்ந்து வரும் நகராட்சியாக சிதம்பரம் உள்ளது. இங்கு 1962-ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் வீடுகள், கடைகள், ஓட்டல்கள், விடுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் பாதாள சாக்கடை வழியாக வெளியேற்றப்படுகிறது.

பாதாள சாக்கடையில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் நகரின் பல பகுதியில் கழிவுநீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இதில் உற்பத்தியாகும் கொசுக்கள், கிருமிகளால் சுற்றுச்சூழல் கேடு விளைவிக்கிறது. பாதாள சாக்கடை திட்டம் முறையாக செயல்படாததற்கு முக்கிய காரணமாக பிளாஸ்டிக் பைகள் கூறப்படுகிறது.

மக்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் பைகள் பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்புகளை ஏற்படுத்துகிறது. இதனால் கழிவுநீர் சீராக வழிந்து செல்லமுடியாமல் தெரு, சாலையின் மத்தியில் உள்ள பாதாள சாக்கடை திறப்பு வழியாக வெளியே வருகிறது. சில நேரங்களில் பாதாள சாக்கடை அமைத்துள்ள வீட்டுக்குள்ளே கழிவுநீர் புகுந்து விடுகிறது.

காற்றில் பறந்த அபராதம் தீர்மானம்
இதேபோல் மழைநீர் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள கால்வாய் ஓரம் குப்பைகள் கொட்டப்படுகிறது. இந்த குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் கவர்கள், அந்த கால்வாயை அடைத்து விடுகிறது. இதனால் மழை காலங்களில் கால்வாயில் தண்ணீர் செல்லாமல் தெருவில் வழிந்து ஓடி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 12.12.2012- அன்று சிதம்பரம் நகராட்சியில் அவரச கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் மொத்த விற்பனையாளருக்கு ரூ.10 ஆயிரமும், சில்லறை வியாபாரிக்கு ரூபாய் ஆயிரமும், சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.200-ம், உபயோகிப்பாளர்களுக்கு ரூ.100-ம் அபராதம் விதிக்கப்படும் என்று

ஜூன் 28, 2014

அபுதாபி வர்த்தக அமைப்பின் தலைவராக லூலூ(LuLu) நிறுவனத் தலைவர் தேர்வு!

அபுதாபி வர்த்தக அமைப்பின் தலைவராக இந்திய தொழிலதிபர் யூசுப் அலி, 3வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஐக்கிய அரபு நாட்டின் தலைநகர் அபுதாபி. இங்கு அரசு நிறுவனமாக அபுதாபி தொழில் வர்த்தக கூட்டமைப்பு செயல்படுகிறது. அந்நாட்டு தொழில் மற்றும் வர்த்தகத்தை முறைப்படுத்தும் ஒரு அமைப்பாக இது உள்ளது. இந்த அமைப்பில் தேர்தலின் மூலம் தலைவர் மற்றும் இயக்குனர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த தேர்தலில் வெளிநாட்டை சேர்ந்த தொழிலதிபர்களும் போட்டியிடலாம். அபுதாபியில் நேற்று இந்த அமைப்புக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இந்திய தொழிலதிபர் யூசுப் அலி(58) தொடர்ந்து 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.

இவர் பிரபல லூலூ(LuLu) நிறுவனத் தலைவர். தேர்தலில் 14,555 பேர் வாக்களித்தனர். இதில் லூலூ நிறுவனத் தலைவர் யூசுப் அலி 1,721 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இவரது பதவிக்காலம் 4 ஆண்டுகள். தேர்தலில் வென்ற யூசுப் அலி கூறுகையில், ‘என் மீது தொழில், வர்த்தக துறையினர் வைத்துள்ள நம்பிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது. எனது பதவி காலத்தில் இந்தியா மற்றும் அபுதாபி நாடுகளுக்கு இடையே

ஜூன் 26, 2014

ரமளானை வரவேற்போம்!

மகத்துவமிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்... இந்த குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது.(அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும்.(பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் 2:185) 

மனித குல மாணிக்கம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் நம்பிக்கைக் கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமளான் மாதத்தில் நின்று வணங்குகின்றாரோ, அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும். அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி 37 கோடையின் கடுமை நம்மை தாக்கிக் கொண்டிருக்கும் சூழலில் இவ்வருட ரமலானை இன்ஷாஅல்லாஹ் சந்திக்க இருக்கிறோம்.இடைநிலை,கடைநிலை ஊழியர்கள் எல்லாம் ஒருவித தவிப்போடு ரமளானின் நோன்பை பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதை பரவலாக நாம் பார்த்து வருகிறோம்.காலத்தைப் படைத்து அதன் சுழற்சியை தன் கையில் வைத்திருக்கும் கருணையாளனாகிய அல்லாஹ் இந்த கடின கோடையை சந்திக்கும் ஆற்றலையும் இன்ஷா அல்லாஹ் நமக்கு வழங்குவான்.

உணவுகள் மட்டுமல்லாது,நம் உள்ளத்திற்கும் வழங்கும் திடமும் ஆற்றலுமே நோன்பை நிறைவு செய்ய உதவுகிறது.எனவே சகோதர,சகோதரிகள் தட்பவெட்ப சூழ்நிலைகளுக்கு பயந்து அலட்சியங்களுக்கோ, பலவீனங்களுக்கோ இடம் தந்துவிட வேண்டாம். ரமளான் மகத்தான அல்லாஹ்வின் அருட்கொடை. மனித இனம் தனது குற்றங்களிலிருந்தும், பாவங்களிலிருந்தும் தன்னை விடுவித்துக்

ஜூன் 21, 2014

ராஜபக்‌ஷேவை சுற்றி வளைத்த 15 முஸ்லிம் நாடுகளின் தூதர்கள் – கண்டனத்தை பதிவுசெய்தனர்

மனித உரிமை மீறலின் உச்சத்துக்கே ஒரு நாடு செல்லும்போது, அந்நாட்டுக்கு எதிராக சர்வதேச நாடுகளின் நெருக்குதலும், ஐ.நா.மன்றத்தின் தலையீடும் அவசியமாகும்.

குறிப்பாக இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் இன அழிப்பைத் தடுக்க, முஸ்லிம் நாடுகள் உடனடித் தலையீடு செய்ய வேண்டும்.அந்த அடிப்படையில் இலங்கையில் அதிபர் ராஜபக்சேவை, பங்களாதேஸ் – ஈரான் – இராக் – எகிப்து இந்தோனேசியா – குவைத் – மலேசியா – மாலத்தீவு – நைஜீரியா – பாக்கிஸ்தான் – பாலஸ்தீனம் – துருக்கி – ஐக்கிய அரபு அமீரகம் – சவூதி அரேபியா – கத்தார் ஆகிய நாடுகளின் தூதர்கள் சந்தித்து தமது அதிருப்தியையும் கண்டனத்தையும் பதிவுசெய்துள்ளனர்.
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இதற்கான ‘லாபி’யை செய்துள்ளார். மத்திய கிழக்கில் உள்ள முஸ்லிம் நாடுகளில் சிங்களர்களுக்கு வேலைவாய்ப்பற்ற சூழல் உருவாகும் என்றும், இலங்கையைச் சார்ந்தவர்களுக்கு அங்கு தொழில் செய்ய இயலாத நிலை உருவானால் பொருளாதார ரீதியில் இலங்கை கடும் பின்னடைவை சந்திக்கும் என்றும் இலங்கையிலுள்ள அயலக வேலைவாய்ப்புப் பணியகம் நேற்றே எச்சரித்தது. இந்நிலையில் முஸ்லிம் நாடுகளின் தூதர்கள் கூட்டாகத் திரண்டு வந்து கண்டித்தது இலங்கை அரசை நடுங்கச்

ஜூன் 19, 2014

குஜராத் பள்ளிக்கூடங்களில் ஆர்.எஸ்.எஸ்ஸின் நூல்கள்!

இந்தியா பன்முகத் தன்மை கொண்ட ஒரு நாடு. பல்வேறு மத நம்பிக்கைகளைப் பின்பற்றுகிற, பல்வேறு மொழிகளைப் பேசுகிற பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் காலம் காலமாக இந்தியாவில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை என்பது இந்திய விடுதலைப் போரின்போது மகத்தான விழுமியங்களாக மேலெழுந்தது. சுதந்திர இந்தியா மதச்சார்பின்மை எனும் மகத்தான அடித்தளத்தின் மீது கட்டப்பட்டது. மதச்சார்பின்மை என்பது மேல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கருத்தாக்கம் அல்ல. நமது நாட்டில் மகத்தான மரபுகளில் ஒன்று அது.ஆனால் இன்று அவை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டு வருகின்றது அதற்கு ஒரு உதாரணமாக காந்தி பிறந்த குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ் தயாரித்த நூல்கள் வதோதராவில் உள்ள பள்ளிக்கூடங்களில் பாடப்புத்தகங்களாக சேர்க்கப்பட்டுள்ளன.

குஜராத் மாநிலம் வதோதராவில் மாநகராட்சி நடத்தும் 105 ஆரம்ப பள்ளிக்கூடங்களில் ஆர்.எஸ்.எஸ்ஸின் கல்வி பிரிவான வித்யாபாரதி அகில பாரதீய சிக்‌ஷா சன்ஸ்தான் தயாரித்துள்ள நூல்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. 1 ஆம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் இவ்வாண்டு முதல் ஆர்.எஸ்.எஸ் தயாரித்த புத்தகங்கள் படித்துக் கொடுக்கப்படும். ஜீவன் விகாஸ் போதி எனப்பெயரிடப்பட்டுள்ள புத்தகங்களில்

ஜூன் 17, 2014

இலங்கையில் முஸ்லிம்கள் மீது சிங்களர் வெறியாட்டம்! 3 முஸ்லிம்கள் கொலை!! -உலக நாடுகள் கண்டனம்

இலங்கையில் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது சிங்களர்கள் நடத்தி வரும் கொலை வெறித்தாக்குதலில் 3 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். முஸ்லிம்களுக்கு சொந்தமான வணிக நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் அடித்து நொறுக்கப்பட்டு வருவதால் நாட்டின் பல பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.

இலங்கை அரசில் தமிழர்கள் பங்கேற்பதை பெரும்பான்மையான சிங்களர்கள் வெறுத்தனர். இதனால் தமிழருக்கு எதிரான இனவிரோத போக்கை சிங்களர்கள் கட்டவிழ்த்தனர். இதைத்தொடர்ந்து தனி ஈழம் கேட்டு விடுதலை புலிகள், ஆயுத போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆயுத போராட்டம் கடந்த சில வருடங்களாக முடிவிற்கு வந்துள்ள நிலையில், சிங்களர்கள் கவனம் தற்போது இஸ்லாமியர்கள் மீது திரும்பியுள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் 10 விழுக்காடாக உள்ள முஸ்லிம்கள், இலங்கை அரசியலில் அதிகம் பங்கெடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று பவுத்த பிட்சுக்கள் பகிரங்கமாக பேசிவருகிறார்கள். இதே கோரிக்கையை வலியுறுத்தி முஸ்லிம்கள் கணிசமாக இருக்கும் பகுதிகளில் நேற்று மாலை பவுத்த பிட்சுக்கள் ஊர்வலம் சென்றுள்ளனர். அப்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டுள்ளனர்.தலைநகர் கொழும்பில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்திலுள்ள அளுத்கம மற்றும் பெருவலா ஆகிய கடலோர நகரங்களில் இருதரப்புக்கும் நடுவே நேற்றிவு முதல் இன்று பகல் வரை மோதல் நடைபெற்று வருகிறது.

இதில் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். முஸ்லிம்களின் கடைகள், வணிக நிறுவனங்கள், பவுத்த கடும்போக்குவாதிகளால் அடித்து நொறுக்கப்பட்டன. சில பகுதிகளில் மசூதிகள் தாக்கப்பட்டதுடன், தொழுகை நடத்தியவர்களும் ரத்தம் வரும்வரை அடிக்கப்பட்டுள்ளனர். மேலும், பஸ்சில் பயணம் செய்த முஸ்லிம்களை கூட பவுத்த கடும்போக்குவாதிகள் விட்டுவைக்கவில்லை. பஸ்களை நிறுத்தி அவர்களை கீழே இழுத்து அடித்துள்ளனர். போலீசார் தலையிட்டு வன்முறையாளர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஆயினும், நிலைமை கைமீறி போனதால் அலுத்கமா, பெருவலா பகுதிகளில் இன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது., சட்டத்துறை அமைச்சர் ஹக்கீம் , "பவுத்தர்கள் தாக்குதல் நடத்தியதை காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்தது. இந்த அரசில் அங்கம் வகிக்க நான் அவமானப்படுகிறேன்" என்று தெரிவித்ததாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

ஐநா மனித உரிமை ஆணையர் நவிபிள்ளை அதிர்ச்சி!

இலங்கையில் இஸ்லாமியர்கள் மீது சிங்களர்களால் நடத்தப்பட்ட தாக்குதல் தனக்கு அதிர்ச்சியளிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்

ஜூன் 16, 2014

கொள்ளுமேடு அன்வாருல் ஹுதா பெண்கள் மதரசா பட்டமளிப்பு விழா!

கொள்ளுமேடு அன்வாருல் ஹுதா பெண்கள் மதரசாவின் 9ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா  சிறப்பாக நடைபெற்றது!


தொழில்நுட்ப கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணபிக்கலாம்!-லெக்டர் சுரேஷ்குமார்

கடலூர் மாவட்டத்தில் தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

கல்வி உதவித்தொகை தமிழ்நாட்டில் வாழும் மதவழி சிறுபான்மையினரான கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் பிரிவை சார்ந்த தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்வி பயிலும் மாணவ–மாணவிகள் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2014–2015–ம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான காலவரையரை புதியதற்கு 30–9–2014 மற்றும் புதுப்பித்தலுக்கு 15–11–2014 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு 2,279 மாணவர்களுக்கு புதிய கல்வி உதவித்தொகை மைய அரசால் 2014–2015–ம் ஆண்டிற்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை பெற விரும்பும் மாணவ– மாணவிகள் கடந்த ஆண்டு பொது தேர்வில் குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர், பாதுகாவலர் ஆண்டு வருமானம் அனைத்து வகையிலும் ரூ.2½ லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஆன்–லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்:
 www.momascholarship.gov.in என்ற இணைய தள முகவரியில் ஆன்–லைன் மூலம் விண்ணப்பித்த மாணவ–மாணவிகள் பதிவு செய்யப்பட்ட அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கையொப்பமிட்டு, அத்துடன் மதிப்பெண் சான்றிதழ், சாதி மற்றும் வருமான சான்றிதழ் ஆகியவற்றின் நகலுடன், கல்விக்கட்டணம் செலுத்திய ரசீது, இருப்பிட முகவரி, வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களுக்கான ஆவணங்களை இணைத்து

ஜூன் 15, 2014

கொள்ளுமேடு மதரசா அன்வாருல் ஹுதா பட்டமளிப்பு விழா!



மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரி பணிக்கான தேர்வு, 37 ஆயிரம் பேர் எழுதினார்கள்

கடலூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான போட்டி தேர்வை 37 ஆயிரம் பேர் நேற்று எழுதினார்கள்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கான போட்டி தேர்வு நேற்று நடத்தப்பட்டது. இத்தேர்வு எழுத கடலூர் மாவட்டத்தில் 47 ஆயிரத்து 929 பேர் விண்ணப்பித்திருந்தனர். இத்தேர்வுக்காக கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, பண்ருட்டி, திட்டக்குடி, விருத்தாசலம் ஆகிய இங்களில் 101 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. 10 ஆயிரம் பேர் வரவில்லை

 இத்தேர்வு மையங்களில் நேற்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி மதியம் 1 மணிக்கு முடிவடைந்தது. தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தவர்களில் 10 ஆயிரத்து 218 பேர் தேர்வு எழுதவரவில்லை. இதனால் 37 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள். முன்னதாக தேர்வு

ஜூன் 14, 2014

மின்துறையில் எஸ்.எம்.எஸ் . சேவை : தொடங்கி வைத்தார் ஜெயலலிதா !!

எஸ்.எம்.எஸ். மூலம் மின் கட்டணத்தை அறியும் வசதியை ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார் .இந்த திட்டத்தின் மூலம் 2 கோடி நுகர்வோர் பயன் பெறுவார்கள் .இந்த திட்டத்தின் மூலம் ,மின் அளவை கணக்கு எடுத்த பிறகு நாம் செலுத்த வேண்டிய தொகை ,பணம் செலுத்துவதற்கான கடைசி நாள் ஆகியவை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும் . பிறகு பணம் செலுத்துவதற்கு கடைசி 3 மூன்று தினங்களுக்கு முன் அதனை நினைவூட்டும் வகையில்

ஜூன் 12, 2014

உலக கோப்பை கால்பந்தாட்டம் இன்று தொடக்கம்! போராட்ட களத்தில் மக்கள்

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் கடந்த ஒரு மாத கால எதிர்பார்ப்பான 20வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள், இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 11.30 மணிக்கு பிரேசில் நாட்டின் சாவ்போலோ நகரில் கோலகலமாக தொடங்குகிறது.

32 நாட்கள் நடக்கும் இப்போட்டியில் 32 நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன.உலகில் அனைத்து நாடுகளிலும் விளையாடப்படும் ஒரே விளையாட்டு கால்பந்து மட்டுமே. 4 ஆண்டுக்கு ஒருமுறை உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது. இதுவரை 19 உலக கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. 20 வது உலக கோப்பைக்கான போட்டி இந்தாண்டு தென் அமெரிக்காவின் பிரேசிலில் நடத்தப்படுகிறது. இதில், நடப்பு சாம்பியனான ஸ்பெயின், பிரேசில், அர்ஜென்டினா, குரோஷியா உட்பட 32 அணிகள் பங்கேற்கின்றன.

உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கு பிரேசில் நாட்டில் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். அந்த எதிர்ப்பையும்

மீன்கள் சில உண்மைகள்!

மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

மீன்களிலே பொதுவாக நான்கு பெரும் பிரிவுகள் உள்ளன:

வலுவான எலும்புகள் கொண்ட மீன்வகைகள் (சுமார் 20,000 வகைகள்),

குருத்தெலும்பு கொண்ட எளிய வகை மீன்கள்.(சுமார் 50 வகைகள்) ,

குருத்தெலும்பு கொண்ட சுறாமீன்கள், மற்றும் திருக்கை மீன்கள் முதலியன (சுமார் 600 வகைகள்)

செதிள் இல்லா குருத்தெலும்பு உள்ள எளிய மீன் வகைகள் (விலாங்கு, ஆரல் முதலானவை; சுமார் 50 வகைகள்)

முதுகெலும்புள்ள மற்ற உயிரினங்களின் எண்ணிக்கையை விட மீன்களின் எண்ணிக்கை அதிகம். மீன்கள் குளிர் ரத்த பிராணிகள். இவற்றின் உடல் சூடு, அவை வாழும் நீரின் வெப்பநிலையைப் பொறுத்து மாறும். ஏறக்குறைய எல்லா மீன்களும் துடுப்புகளைப் பெற்றுள்ளன. இவை நீந்துவதற்குப் பயன்படுகின்றன. அதே போல் செதில்கள் மீன்களின் உடல் பாதுகாப்புக்கு உதவுகின்றன. மீன்களில் சுமார் 22 ஆயிரம் வகைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகை மீனும் நிறத்திலும் வடிவத்திலும் பருமனிலும் வேறுபட்டு உள்ளது.

பொதுவாக மீன்களுக்கு நுரையீரல் கிடையாது. மீன்கள் வாய் மூலம் நீரைக் குடித்து கன்னத்திலுள்ள செவுள்கள் மூலம் வெளியேற்றுகின்றன. அப்போது நீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகின்றன. மீன்கள் கண்ணைத் திறந்து கொண்டே தூங்குகின்றன. ஏனென்றால் இவற்றுக்கு இமைகள் கிடையாது. ஆழ்கடலில் வாழும் மீன்கள் தூங்குவதில்லை. மீன்களுக்கு புறச்செவிகள் கிடையாது. அதேசமயம் நீரில் உண்டாகும் அதிர்வுகளைத் துல்லியமாக உணர்ந்து கொள்கின்றன. காட், சுறா போன்ற மீன்களில் இருந்து எண்ணெய் எடுக்கிறார்கள். உணவாகவும், எலும்பு மற்றும் செதில்கள் உரமாகவும் பயன்படுத்தப்படுகின்றன. மிகச்சிறிய மீன் கோபி. இது 13 மி.மீட்டர் அளவே இருக்கும். மிகப்பெரிய மீன் திமிங்கலச் சுறா. இது 18 மீட்டர் நீளம்

ஜூன் 11, 2014

மோசுல் நகரை கைப்பற்றியது,‘ஈராக்கிய இஸ்லாமியத் தேசம்‘எனும் லெவெண்ட்‘ அமைப்பு!

ஈராக் மற்றும் சிரியாவில் பகுதிகளில் செயல்படும் போராளி குழுவான ஈராக்கிய இஸ்லாமியத் தேசம்‘ மற்றும் ‘இசிஸ்‘ என்று அழைக்கப்படும் ‘லெவெண்ட்‘ அமைப்புகள், ஈராக் மற்றும் சிரியாவின் உள்ள ஷியா ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடிவருகின்றனர்.தற்போது அரசின் கட்டு பாட்டில் உள்ள ஈராக்கின் மோசுல் நகரை இவர்கள் கைப்பற்றிய பிறகு அங்கிருந்து மக்கள் வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 மோசுல் நகரை கைப்பற்றியுள்ள, ‘ஈராக்கிய இஸ்லாமியத் தேசம்‘ மற்றும் ‘இசிஸ்‘ என்று அழைக்கப்படும் ‘லெவெண்ட்‘ அமைப்புகள் மேலும் முன்னேறி வருகின்றன. ‘இது அந்தப் பிராந்தியத்துக்கே மிகவும் அபாயகரமானது‘ என்று அமெரிக்கா கூறியுள்ளது. அல்கொய்தாவின் ஒரு கிளை அமைப்பான ‘இசிஸ்‘, இப்போது கிழக்கு சிரியா, மேற்கு மற்றும் மத்திய ஈராக் ஆகிய பகுதிகளில் கணிசமான அளவுக்கு நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. மேலும் ஈராக்கின் கிர்குக் மற்றும் சலாஹதீன் மாகாணங்களிலும் அந்த அமைப்பினர் முன்னேறி வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டில் பெரும்பான்மையாக வசிக்கும் சன்னி முஸ்லிம்களுடன் இணைந்து

ஜூன் 09, 2014

ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் !

டெல்லி: ராஜ்யசபாவில் ஆளும் கட்சி குழு தலைவராக மத்திய பாதுகாப்பு மற்றும் நிதித்துறை அமைச்சரான அருண் ஜெட்லியும், எதிர்க்கட்சி தலைவராக காங்கிரசின் குலாம் நபி ஆசாத்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தியதும், இரு அவைகளும் தனித்தனியே கூடின. ராஜ்யசபா துணை குடியரசு தலைவரும், ராஜ்யசபா தலைவருமான ஹமீத் அன்சாரி, தலைமையில் கூடியதும், அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் ஆளும் கட்சி தலைவராக ஜெட்லியும், எதிர்க்கட்சி தலைவராக குலாம் நபி ஆசாத்தும் செயல்படுவார்கள்

ஜூன் 08, 2014

கடலூர் மாவட்டத்தின் 14–வது கலெக்டராக சுரேஷ்குமார் பதவி ஏற்பு !

கடலூர் மாவட்டத்தின் புதிய கலெக்டராக சுரேஷ்குமார் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது அவர் ‘பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை நேரடியாக சந்தித்து பிரச்சினைகளை தெரிவிக்கலாம்‘ என கூறினார்.

கடலூர் மாவட்டமானது ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து கடந்த 30–9–1993 அன்று தென்னாற்காடு வள்ளலார் மாவட்டம் என்ற பெயரில் உதயமானது. தற்போது பதவி ஏற்றுள்ள சுரேஷ்குமார் கடலூர் மாவட்டத்தின் 14–வது கலெக்டர் ஆவார். புதிய கலெக்டர் சுரேஷ்குமார் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். எம்.எஸ்.சி.(ஜியாலஜி), எம்.பி.ஏ. படித்துள்ள இவர் 2001–ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்–1 தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு பணியில் சேர்ந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்று பழனி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் வருவாய் கோட்டாட்சியராகவும், தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அதிகாரியாகவும் பணிபுரிந்துள்ளார்.

கடலூர் மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் சென்னை கூட்டுறவு பதிவாளராக பதவி உயர்வு பெற்று செல்கிறார். இதை அடுத்து தமிழ்நாடு நீர்வடி பகுதி மேம்பாட்டு முகமையின் நிர்வாக இயக்குநர் எஸ்.சுரேஷ்குமார் கடலூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து புதிய கலெக்டர் பதவி ஏற்கும் நிகழ்ச்சி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. நிகழ்ச்சியில் கடலூர் மாவட்டத்தின் புதிய கலெக்டராக

ஜூன் 06, 2014

பாடாய்படுத்தும் சர்க்கரை நோய் !

இன்றைய வாழ்க்கை முறையில் நாம் பார்க்கும் முக்கிய நோய்களில் ஒன்றான சர்க்கரை நோய் இன்றைய தலைமுறையினரை பாடாய்படுத்தி வருகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை குறிப்பிட்ட அளவு இல்லாமல், கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும்.ஆனால் இதனை உணவு முறை கொண்டும் கட்டுப்படுத்த முடியும். சரியான உணவு வகைகளை உட்கொண்டால், சர்க்கரை நோய் தீவிரத்தின் அளவை கட்டுப்படுத்தலாம். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க, எதை சாப்பிடலாம், எதை சாப்பிட கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

சர்க்கரை நோய் என்பது எது?
நமது இரைப்பையும் குடலும் நாம் உண்ணுகின்ற உணவிலிருந்து க்ளுகோஸ் எனும் சர்க்கரையை எடுத்து இரத்தத்தில் செலுத்துகிறது.அதே சமயம் கணையத்திலிருந்து இன்சுலின் உற்பத்தியாகி இரத்தத்தில் கலக்கிறது. க்ளுகோஸ் எனும் சர்க்கரை தான் நம் உடலுக்கு கிடைக்கும் சக்தி. இது ரத்தத்தின் மூலம் உடலில் உள்ள செல்களை சென்றடைய வேண்டும். ஆனால் செல்கள் தானாக சர்க்கரையை உள்ளே அனுமதிக்காது. அதற்குத் தான் இன்சுலின் உபயோகப்படுகிறது.

இரைப்பைக்கும் முன் சிறுகுடலுக்கும் இடையில் உள்ள கணையம் (Pancreas) என்ற உறுப்புதான் இன்சுலின் என்ற ஹார்மோனைச் சுரக்கிறது. ரத்தத்தில் சர்க்கரையின் (குளுகோஸ்) அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது இந்த இன்சுலின்தான். ஒருவேளை, இன்சுலின் சுரப்பது குறைந்துபோனாலோ அல்லது நின்றுபோனாலோ சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதைத்தான் சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு

ஜூன் 05, 2014

முஸ்லிம் வாக்குகளை பிரிக்க உபி யை மூன்றாக பிரிக்க திட்டமிடும்- பிஜேபி

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான  உத்தர பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது. சட்டம்-ஒழுங்கை சீரமைக்கவும், குற்றங்களைத் தடுக்கவும் உ.பி. மாநிலத்தை 3 ஆக பிரிக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.பலாத்காரம்,சட்டம்-ஒழுங்கு குறித்து மோடியிடம் கேள்வி எழுப்ப வேண்டியதுதானே என்று காங்கிரஸ் கட்சியின்  திக் விஜய் சிங் ஊடகங்கள் மீது கேள்வி எழுப்பியுள்ளார்!

உ.பி.யில் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 73 இடத்தை பாஜக கூட்டணி பிடித்தது. சமாஜ்வாதி கட்சிக்கு 2 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. பாஜகவின் வெற்றிக்கு மோடியின் நண்பரும், உ.பி. மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளருமான அமித் ஷாவின் தேர்தல் வியூகமே காரணம் என்று கூறப்படுகிறது. இதே வெற்றியை உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தலிலும் பெற பாஜக திட்டமிட்டுள்ளது. அதற்கான வியூகங்கள் வகுக்கும் பொறுப்பு அமித் ஷாவிடம் வழங்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச சட்டசபைக்கு 2017 ஆம் ஆண்டு தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கு முன்னதாக வெற்றி வியூகத்தை இறுதி செய்ய அமித் ஷா திட்டமிட்டுள்ளார். அதற்கு ஏற்ற வகையில் உத்தர பிரதேச மாநிலத்தை 3 மாநிலமாக பிரிக்க அவர் திட்டம் தீட்டியுள்ளார். அரிபிரதேஷ், அவத் ஆகிய பகுதிகள் ஒன்றாக இருந்தால் ஜாட் சமுதாய மக்களின் எண்ணிக்கை 26 சதவீதமாக அதிகரிக்கும் என்றும், முஸ்லீம் மக்களின் எண்ணிக்கை 18 சதவீதமாக குறையும் என்றும் அவர் கருதுகிறார். இது பாஜகவுக்கு சாதகமாக

சிரியா அதிபராக கொடுங்கோலன் பஷர் அல் ஆசாத் மீண்டும் தேர்வு

தன்  சொந்த நாட்டு மக்களையே கொன்று குவித்து அகதிகளாக்கிய கொடுங்கோலர்களின் கையில் ஆட்சி அதிகாரம் சென்று சேர்வது தொடர்ந்து நடந்துகொண்டே வருகின்றது அந்த வரிசையில் தற்போது சிரியாவின் அதிபராக முடிசூடியுள்ளார் ஆசாத்!

தற்போது சிரியாவின் அதிபராக உள்ள ஆசாத்தின் மேற்பார்வையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 88.7 சதவீத வாக்குகள் பெற்று பஷர் அல் ஆசாத் சிரியா அதிபராக மீண்டும் தேர்வாகியுள்ளார்.

சிரியாவில் அதிபர் ஹபீஸ் அல் ஆசாத் தொடர்ந்து 29 ஆண்டு காலம் ஆட்சி நடத்தினார். அவர் 2000-ம் ஆண்டு மறைந்த பின்னர், அவரது மகனான பஷர் அல் ஆசாத் அதிகாரத்துக்கு வந்தார். 14 ஆண்டுகளுக்கு முன் தேர்தல் நடந்தபோது எதிர்ப்பின்றி 99 சதவீத ஓட்டுக்களை கைப்பற்றி வெற்றி பெற்ற அவர், மீண்டும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலிலும் அமோக வெற்றி பெற்றார். பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இதில், 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் உள்பட ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 65 லட்சம் பேர் சொந்த நாட்டை விட்டு வெளியேறி ஜோர்டான், மற்றும் லெபனான் உள்ளிட்ட பல அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், அந்நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த 3-ம் தேதி நடைபெற்றது.

திட்டமிட்டபடி காலை ஏழு மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் எதிர்பாராத வகையில் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க திரண்டதால் நள்ளிரவு வரை வாக்குப்பதிவு நீட்டிக்கப்பட்டது. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் 73.42 சதவீதம் அளவுக்கு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் தற்போதைய அதிபராக உள்ள பஷர் அல் ஆசாத், மொத்தம் பதிவான வாக்குகளில் 88.7 சதவீதம் வாக்குகளை பெற்று, மீண்டும் வெற்றி

ஜூன் 03, 2014

புதிய பிஜேபி ஆட்சி என்பது இதுதான்! -விடுதலை கட்டுரை

தமிழக மீனவர்கள் மீண்டும் சிறைப் பிடிப்பு !
ரயில் கட்டணம் உயர்கிறது!!
டீசலும் விலை ஏற்றம் !!!புதிய பிஜேபி ஆட்சி என்பது இதுதான்

காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக் குக் கூட்டணியின் ஆட்சி மீது கூறப்பட்ட அத்தனைக் குற்றச்சாற்றுகளை யும், பிஜேபி தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியும் தொடர்ந்து செய்யத் தொடங்கிவிட் டது. குறிப்பாக தமிழக மீனவர்கள் சிறைச்பிடிப்பு; டீசல் விலையேற்றம், ரயில் கட்டண உயர்வு அறிவிப்புகள் வெளிவரத்தொடங்கி விட்டனவே!

25 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு! தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கைக் கடற்படை சிறைப்பிடித்து அட்டூழியத்தை மீண்டும் காட்டியுள்ளது. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற போது சார்க் நாடுகளின் தலைவர்கள் என்ற அடிப்படையில் இலங்கை, பாகிஸ்தான் அதிபர் மற்றும் பிரதம ருக்கு அழைப்பு விடுக்கப் பட்டதாகக் கூறப்பட்டது. இதனால் நல்லெண்ண நடவடிக்கையாக 151 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுதலை செய்தது. இதைப் பார்த்து இலங்கை அதிபர் ராஜபக் சேவும் தங்களது நாட்டு சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிப்போம் என்று அறிவித்ததார். அதேபோல் இந்தியாவும் ஆந்திரா, ஒடிசா மாநில சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்தது. அதே நேரத்தில் தமிழக மீனவர்கள் மற்றும் ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதிகளை கண்டிப்பாக

லால்பேட்டை அரபுக் கல்லூரியின் 70 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா!

jma 1

ஜூன் 01, 2014

கோடை விடுமுறை கழிந்தது தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறப்பு !

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மாணவர்களுக்கு நாளையே இலவச புத்தகம், நோட்டு, சீருடைகள் வழங்கப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான ஆண்டு தேர்வுகள் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றன. இதனை தொடர்ந்து கோடை விடுமுறைக்காக பள்ளிகளுக்கு கடந்த மே 1ந் தேதி முதல் விடுமுறை விடப்பட்டது இதையடுத்து பள்ளிகள் மீண்டும் ஜூன் மாதம் 2ந் தேதி முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. வெயில் அதிகமாக உள்ளதால் ஜூன் 9ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்தன. எனினும், திட்டமிட்டபடி ஜூன் 2ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

தனியார் பள்ளிகள் அவரவர் விருப்பப்படி முடிவெடுத்து கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் நாளை அரசு பள்ளிகள்

மே 31, 2014

அசத்தலான அனிமேஷன் படிப்பு!

வால்ட் டிஸ்னி எப்போது மிக்கி மவுசை கண்டுபிடித்தாரோ அப்போதிருந்தே அனிமேஷன் துறைக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அதன்பிறகு தொழில் முறையிலான அனிமேஷன் படிப்புகள் வளரத் தொடங்கின. தொழில்நுட்பம் வளர வளர அந்த நுட்பங்களை அனிமேஷன் துறை இழுத்து கொண்டது.சாப்ட்வேர் மட்டுமே அனிமேஷன்களை உருவாக்கிவிடாது. அனிமேஷன் அடிப்படைகளை தெரிந்தவர்களுக்கு சாப்ட்வேர் உதவி செய்யும். கற்பனைத்திறன், விடாமுயற்சி, கடின உழைப்பு கொண்டவர்களுக்கு இத்துறை சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கி தரும்.சர்வதேச அளவில் எடுக்கப்படும் டிவி தொடர்கள், சினிமா, இன்டர்நெட் என்று ஏராளமான துறைகளில் அனிமேஷன் பயன்படுகிறது. இத்துறை நாள்தோறும் வளர்ந்து வருவதாலும், பணியாளர்களின் தேவை அதிகரித்திருப்பதாலும் நல்ல வேலைவாய்ப்பு உருவாகி உள்ளது.

படிப்புகள்:
அனிமேஷன் தொடர்பான ஏராளமான இளநிலை, முதுநிலை டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் உள்ளன. அவற்றில், பி.எஸ்சி / எம்.எஸ்சி., இன் அனிமேஷன், பிஏ/ எம்ஏ இன் மல்டிமீடியா அண்ட் விஷூவல் எபக்ட்ஸ், சர்டிபிகேடேடு கோர்ஸஸ் இன் அனிமேஷன் அண்ட் கிராபிக்ஸ், டிப்ளமோ இன் அனிமேஷன், வீடியோ கேம் ப்ரோக்ராமிங், கேம் ஆர்ட், கம்ப்யூட்டர் ஜெனரேட்டேடு இமேஜெரி ( சிஜிஐ), டிசைன், ஸ்டாப் - மோஷன் அனிமேஷன், க்ளைமேஷன் அண்ட் 3டி பிலிம் மேக்கிங் போன்றவை முக்கியமானவை.
வடிவமைப்புக்கான தேசிய கல்வி நிறவனம் (என்ஐடி), பிஐடிஎஸ், ஐஐடி மற்றும் எப்டிஐஐ புனே போன்ற கல்வி நிறுவனங்கள், அனிமேஷன், மல்டிமீடியா, வடிவமைப்பு மற்றும் கணிப்பொறி கிராபிக்ஸ் போன்ற பிரிவுகளில் பல விதமான படிப்புகளை வழங்குகின்றன.

தகுதி:
அனிமேஷன் துறை என்பது அதிகளவில் தொழில்நுட்பம் தொடர்பானது என்பதால், அத்துறையில் ஈடுபடும் ஒருவர், சமீபத்திய தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் மென்பொருள் மேம்பாடுகள் குறித்து தெளிவான அறிவை தினந்தோறும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பள்ளிப்படிப்பை

நீர் ஆதாரத்தை மேம்படுத்த கடலூர் மாவட்டத்தை என்எல்சி தத்தெடுக்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

கடலூர், : நீர் ஆதாரத்தை மேம்படுத்த கடலூர் மாவட்டத்தை என்எல்சி தத்தெடுக்க வேண்டுமென குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். கடலூர் மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைகளை முன்வைத்து பேசியதாவது: வீராணம் ஏரியை தூர் வார அரசு ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்டும் பணிகள் துவங்கப்படவில்லை. என்எல்சி நிறுவனம் நாளொன்றுக்கு 72 ஆயிரம் கி.லிட்டர் தண்ணீரை உறிஞ்சி எடுக்கிறது. இவ்வாறு வெளியேற்றப்படும் தண்ணீரில் 22 ஆயிரம் ஏக்கர் மட்டுமே பாசன வசதி பெறுகின்றன. என்எல்சி நிறுவனம் கடந்த ஆண்டு ஆயிரத்து 534 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. அதிலிருந்து ரூ ஒரு கோடியே 34 லட்சம் மட்டுமே ராயல்டியாக கலெக்டரிடம் வழங்கப்பட்டு அந்த நிதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடலூர் மாவட்டத்தின் நீர்வளத்தை உறிஞ்சி லாப மீட்டும் என்எல்சி மிகவும் பின்தங்கிய இந்த மாவட்டத்தை தத்தெடுத்து ரூ.50 கோடி மதிப்பீட்டில் தடுப்பணைகள், செயற்கை முறை நீர்செறிவு ஆழ்துளை கிணறுகளை அமைக்க வேண்டும். ஏரிகளை தூர் வாரி நீராதாரத்தை மேம்படுத்த வேண்டும். கொள்ளிடம் ஆறு வழியாக 40 கி.மீ தூரத்திற்கு கடல்நீர் உட்புகுந்து உப்புநீராகி விட்டது. இதனால் 25 ஆயிரம் ஏக்கரில் விவசாயம்

மே 29, 2014

எகிப்து அதிபர் தேர்தல்:ராணுவத் தளபதி சிசி அமோக வெற்றி

எகிப்தில் சர்வாதிகாரம் நடத்தி வந்த ஹோஸ்னி முபாரக்கை கடந்த 2012-ம் வருடம் பதவியிலிருந்து இறக்கி ஆட்சியைக் கைப்பற்றியவர் முகமது மோர்சி. ஆனால் ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் இவரது ஆட்சியில் பொதுமக்களின் போராட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கியபோது அந்நாட்டு ராணுவத் தளபதியான அப்டெல் படா அல் சிசி மோர்சியை கடந்த வருடம் ஜூலை மாதம் பதவியிலிருந்து இறக்கி காவலில் வைத்தார்.

அவருக்குத் துணையாக இருந்த முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியினரும் ஒடுக்கப்பட்டு வந்தனர். அங்கு ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்புகளும், கலவரங்களும் நாட்டையே நிலை குலைய வைத்தது. இதனிடையில் கடந்த 25-ம் தேதி அங்கு அதிபருக்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. தனது ராணுவத் தளபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிபர் வேட்பாளராக சிசி களத்தில் இறங்கினார். பெரும்பான்மையானோரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப இன்று வெளிவந்துள்ள முடிவுகளில் சிசி மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நடைபெற்ற 50 சதவிகித இடங்களில் 92.2 சதவிகித வாக்குகளை சிசி பெற்றிருந்தார். அவரது ஒரே போட்டியாளரான ஹம்தீன் சபஹி 3.8 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தார். 4.2 சதவிகிதம் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. சிசியின் முடிவுகள் வெளிவரத் தொடங்கியதும் கெய்ரோவில் வாணவேடிக்கை கொண்டாட்டங்களும் தொடங்கின. அவரது ஆதரவாளர்கள் எகிப்து நாட்டின் கொடியினை அசைத்தும், கார் ஹாரன் ஒலியை எழுப்பியும் தங்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தை வெளிப்படுத்தினர். எகிப்தை ஆட்சி செய்து வந்துள்ள ராணுவத்தினரின் வரிசையில் சிசி சமீபத்தியவரவாகும். எகிப்தில் நடைபெற்றுவரும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும் வலிமை படைத்தவர் இவர் என்று அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

ஆனால் அரசியல் ஆய்வாளர்களோ ராணுவ நலன்களைப் பாதுகாக்கும் மற்றொரு சர்வாதிகாரியாக இவரும் மாறக்கூடும் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய கட்டணம்: அதிகாரி விளக்கம்

சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்டமாக வரும் அக்டோபர் மாதம் இறுதியில் கோயம்பேடு – ஆலந்தூர் இடையே 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் பாதையில் போக்குவரத்து தொடங்க உள்ளது. கோயம்பேடு – ஆலந்தூர் இடையே சோதனை ஓட்டமும் தொடங்கிவிட்டது. இந்த பாதையில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் அக்டோபர் மாதம் சோதனை நடத்த உள்ளார். அவர் அறிக்கை கிடைத்ததும் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடக்க விழா தேதி இறுதி செய்யப்படும். 

இதற்கிடையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதற்கான கட்டணம் இறுதி செய்யப்பட்டு, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் 3 இயக்குனர்கள், தமிழக நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், டெல்லி மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக அதிகாரி ஆகியோரை கொண்ட கட்டண நிர்ணயக் குழு பல கட்டங்களாக ஆலோசனை நடத்தி மெட்ரோ ரயில் கட்டணத்தை இறுதி செய்துள்ளது. அதன்படி

சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை செல்ல (24 கி.மீ.) ரூ. 40 கட்டணம்

சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கான ரூ.19 கோடி நிலுவை!

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர்கள் கே.ஆதிமூலம், தேவநாதன் ஆகியோர் கடலூர் மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமாரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில்,

சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே.கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு பண பாக்கி ரூ.19 கோடியை வழங்கவும், எத்தனால் ஆலைக்காக விவசாயிகளிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.3 கோடியை திருப்பி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி. சர்க்கரை ஆலை நிர்வாகம் 2013–14–ம் ஆண்டு கரும்பு அரவை பருவத்துக்கு தமிழக அரசு அறிவித்த விலை அடிப்படையில் கரும்பு பண பாக்கி ரூ.27 கோடியை விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யவும், கரும்பு வாகனங்களில்

மே 28, 2014

ஓர் வபாத் செய்தி!

நமதூர் தெற்குத் தெருவில் வசிக்கும் மர்ஹும் அப்துரஹ்மான் அவர்களின் மனைவியும்,இத்ரிஸ் அவர்களின் தாயார் அவர்கள் இன்று மாலை  தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.... 

எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் அனைவருக்கும் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் "ஷப்ரன் ஜமிலா" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress பிரார்த்தனை செய்கிறது.

துபையில் லால்பேட்டை யை சேர்ந்த ரில்வானுல்லா அவர்களை காணவில்லை!

லால்பேட்டை நூரி  தெரு முஹப்பத் ஹைடெக் நூருல்லா அவா்களின் சகோதாரியின் மகன் ஃபஹது என்கிற ரில்வானுல்லா அவா்கள் கடந்த 22.05.2014 அன்று முதல் துபையில் காணவில்லை! இவரை பற்றி தகவல் அறிந்தால் பின்வரும் தொலைபேசியில் தெரிவிக்கவும்...

துபை..+971 55 8692475
E mail id:- nifraj.ahmed@gmail.com
லால்பேட்டை. 9842003961



source:lalpetexpress.com

மே 26, 2014

மோடி பதவி ஏற்பு விழா 5 மாநில முதலமைச்சர்கள் புறக்கணிக்கிறார்கள்!

இந்தியாவின் 15–வது பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவி ஏற்கிறார். ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள வெளிப்புற முற்றத்தில் மாலை 6 மணிக்கு பதவி ஏற்பு விழா நடக்கிறது. பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க தெற்காசிய கூட்டமைப்பு உறுப்பு நாடுகளின் (சார்க்) தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதனை ஏற்று சார்க் நாட்டு தலைவர்கள் பங்கேற்கிறார்கள். ஆனால் மோடி பதவி ஏற்பு விழாவை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய 5 மாநில முதலமைச்சர்கள் புறக்கணிக்கிறார்கள்.

மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க இலங்கை ராஜபக்சே அழைக்கப்பட்டதற்கு தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். ராஜபக்சேவை அழைத்த செயல் ‘‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. எனவே அதனை தவிர்த்திருக்க வேண்டும்’’ என்று அவர் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தார். இதன் காரணமாக மோடி பதவி ஏற்பு விழாவில் அவர் பங்கேற்வில்லை. தமிழக அரசு சார்பிலும் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்க

ஆங்கிலேய படைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய திப்பு சுல்தானின் மோதிரம் $1.42 கோடிக்கு விற்பனை!

லண்டன்:இந்திய சுதந்திர போராட்ட வீரர் திப்பு சுல்தானின் மோதிரம் இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.42 கோடிக்கு விற்பனையானது.

இந்தியாவில் 18ம் நூற்றாண்டில் மைசூரை தலைமையாக கொண்டு ஆட்சி செய்தவர் திப்பு சுல்தான். அப்போது இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. ஆனால் திப்பு சுல்தான் மட்டும் பிரிட்டிஷ் படைகளான கிழக்கிந்திய படைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். பிரிட்டிஷ் படைகளை போலவே தனது படையிலும் பீரங்கி உள்ளிட்ட நவீன போர்க்கருவிகளை வைத்திருந்தார்.கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்திற்கு எதிராக தனது படைகளை கொண்டு திப்பு சுல்தான் போர் நடத்தினார். 1799ம் ஆண்டு ஸ்ரீரங்கபட்டணத்தில் போர்முடிவுக்கு வந்தது. அதில் திப்பு சுல்தான் போர்களத்தில் வீரமரணம் அடைந்தார்.

அப்போது அவரை அடையாளம் காண்பதற்காக அவரது உடலில் இருந்து திப்பு சுல்தான் அணிந்திருந்த மோதிரத்தை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். தங்கத்தில் 41.2 கிராம்

மே 24, 2014

கொள்ளுமேடு ஷார்கர்ஸ் கிளப் நடத்தும் கிரிக்கெட் போட்டி!





கொள்ளுமேட்டில்  வருடாந்திரம் நடைபெறக்கூடிய கிரிகெட் போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன.இதில் கொள்ளுமேடு சுற்றுவட்டாரத்தில் உள்ள பல ஊர்களை சேர்ந்த அணிகள் பங்குபெற உள்ளன.இந்த போட்டியில் வெள்ளகூடிய சாம்பியன் அணிக்கு ரூ 8000/- பரிசுத்தொகையும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடிக்கக்கூடிய அணிகளுக்கு தலா ரூ 6000 மற்றும் 4000 முறையே வழங்கப்படுகின்றது.