Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 12, 2014

உலக கோப்பை கால்பந்தாட்டம் இன்று தொடக்கம்! போராட்ட களத்தில் மக்கள்

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் கடந்த ஒரு மாத கால எதிர்பார்ப்பான 20வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள், இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 11.30 மணிக்கு பிரேசில் நாட்டின் சாவ்போலோ நகரில் கோலகலமாக தொடங்குகிறது.

32 நாட்கள் நடக்கும் இப்போட்டியில் 32 நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன.உலகில் அனைத்து நாடுகளிலும் விளையாடப்படும் ஒரே விளையாட்டு கால்பந்து மட்டுமே. 4 ஆண்டுக்கு ஒருமுறை உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது. இதுவரை 19 உலக கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. 20 வது உலக கோப்பைக்கான போட்டி இந்தாண்டு தென் அமெரிக்காவின் பிரேசிலில் நடத்தப்படுகிறது. இதில், நடப்பு சாம்பியனான ஸ்பெயின், பிரேசில், அர்ஜென்டினா, குரோஷியா உட்பட 32 அணிகள் பங்கேற்கின்றன.

உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கு பிரேசில் நாட்டில் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். அந்த எதிர்ப்பையும்
மீறி உலக நாடுகள் வியக்கும் அளவுக்கு உலக கோப்பை போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பிரமாண்டமான முறையில் செய்துள்ளது.தாங்கள் வறுமையில் வாடும் பொழுது, பிரேசில் அரசு கால்பந்து போட்டிகளுக்காக பலகோடிகளை வாரி இறைப்பதை கண்டித்து மக்கள் தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள். இந்தியாவை போன்ற ஏழைகளின் நாடான பிரேசில், உலககோப்பைக்கு என இதுவரை புதிய மைதானம் அமைப்பது, பாதுகாப்பு வசதிகள் என சுமார் ரூபாய் 84 கோடி வரை செலவிட்டுள்ளது.

மற்றொரு புறத்தில் அதே அரசு மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதியை வெட்டிசுருக்கி வருகிறது. குடிநீர் வினியோகமும், பொது வினியோகத் திட்டமும் நிதி இல்லை என்று கூறி முடக்கப்படுகின்றன. பிரேசில் மக்களில் சுமார் 10 கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர். நிலமற்ற கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் 4 கோடி பேரில், சுமார் 20 லட்சம் பேர் நகர்ப்புறங்களுக்கு குடியேறி அடிப்படை வசதிகள் இல்லாத சேரிகளில் வசிக்கின்றனர்.

பள்ளிகளில் அடிப்படைவசதிகள் இல்லை. உலககோப்பை போட்டிகளுக்கு ஆடம்பரமாக செலவு செய்வது, மக்களின் கோபத்தை தூண்டியுள்ளது. கடந்த ஆண்டு நடந்த கான்பெடரேசன் கோப்பை போட்டிகளின் போதே மக்கள் தங்கள் போராட்டத்தை ஆரம்பித்துவிட்டனர். தற்போதைய போராட்டங்களில் மாணவர்கள்,தொழிலாளர்கள், வீடில்லாதவர்கள், அரசு ஊழியர்கள், வேலை இல்லாத பட்டதாரிகள் என பலரும் பங்கெடுத்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...