Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 30, 2013

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்‏!

படித்த வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP) அறிவிக்கப்பட்டு தற்பொழுது செயல்பாட்டில் உள்ளது. சென்னை மாவட்டத்திற்கு 2013-14ம் ஆண்டிற்கு 250 நபர்களுக்கு கடன் வழங்க (ரூபாய் 75 லட்சம் மானியம்) இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இத்திட்டத்தின்படி, புதிதாக தொடங்கும் உற்பத்தி சார்ந்த நிறுவனங்களுக்கு அதிக பட்சமாக ரூபாய் 5 லட்சம் வரையிலும், சேவை சார்ந்த நிறுவனங்களுக்கு அதிகபட்சமான ரூ.3 லட்சம் வரையிலும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலும் திட்டத்தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கடன் பெற விரும்புவோர் 18 வயது பூர்த்தி அடைந்து, குறைந்த அளவு 8ம் வகுப்பு தேர்ச்சி அடைந்து இருக்க வேண்டும். சென்னை மாவட்டத்தில் 3 வருடங்கள் தொடர்ந்து குடியிருந்திருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,50,000/- மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் கடன் பெறும் பயனாளிகளில் திட்டத் தொகையில் (Project Cost) 15% மானியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் வங்கியில் இருந்து கடன் ஒப்புதல் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு 7 நாட்கள் தொழில் முனைவோர் மேலாண்மைப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்காக வட்டாட்சியர் தலைமையில் பெரம்பூர்-புரசைவாக்கம் வட்டாசியர் அலுவலகத்தில் ஜூன் 28ம் தேதியன்று காலை 11.00 அளவில் விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது. மேற்கூறிய விழிப்புணர்வு முகாமில் அந்தப் பகுதியிலுள்ள வங்கியாளர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான சங்க மூத்த உறுப்பினர்கள், வங்கிகளின் மாவட்ட முதன்மை மேலாளர் மற்றும் மண்டல இணை இயக்குநர், தொழில் வணிகத்துறை ஆகியோர் கலந்து கொண்டு தொழில் முனைவோர்களிடையே இத்திட்டத்தைப் பற்றி விளக்கவுரை ஆற்றவுள்ளார்கள்.

தொழில் துவங்க ஆர்வமுள்ள இளைஞர்கள் விழிப்புணர்வு முகாமில்

ஜூன் 29, 2013

இஸ்ரேல் நாடு உருவான கதை தெரியுமா உங்களுக்கு?

அவர்கள் சாமானிய மனிதர்கள் அல்லர். உலகின் மிகப்பெரிய கந்து வட்டிக்காரர்கள் . மகா மகா கோடீஸ்வரர்கள் அமெரிக்க அரசிற்கே அவர்கள் கடன் கொடுப்பவர்கள், ஆம். அவர்கள் தான் யூதர்கள். அவர்களுடைய இனத்திற்கென்று ஒரு பூமி இல்லை. இது தங்கள் தேசம் என்று சொல்லிக் கொள்ள அவர்களுக்கு ஒரு நாடு இல்லை. உலக வரைபடத்தில் முகவரி இல்லை. அவர்கள் தங்களுக்கு இனி ஒரு விலாசம் தேடிக் கொள்வது என்று அந்த சூதாட்ட விடுதியில் முடிவு கண்டனர்.

அவர்களின் தலைவன் தியோடர்ஹெட்நெல் என்பவன் தலைமையில் ஒரு படுபயன்கர ரகசிய சதி திட்டம் தீட்டப்பட்டது. அவர்கள் ‘யூததேசிய நிதி’ என்று வலிமை மிக்க ஓர் பெட்டகத்தைத் திறந்தனர். அங்கே கூடியவர்களே ஆளுக்குப் பல்லாயிரம் கோடி டாலர் என்று நிதி அளித்தனர். இது ஒரு நூற்றாண்டிற்கு முன்னரே நடந்த நிகழ்வு. இனி அவர்கள் தங்கள் இனத்திற்கென்று ஒரு தேசத்தை உருவாக்க வேண்டும். எங்கே உருவாக்குவது? எப்படி உருவாக்குவது ? அவர்களுடைய வேதத்திற்கு பெயர் ‘தவுராத்.’ பத்துக் கட்டளைகள் என்றும் கூறுவார்கள். தங்கள் தேசம் எங்கே இருக்கிறது என்பதை அந்த வேதம் சுட்டிக் காட்டியிருப்பதாக கற்பிதம் செய்தார்கள். இப்படித் தான் இஸ்ரேல் என்ற நாட்டிற்காக ஒரு கரு உருவாக்கப்பட்டது. 

இதனை முதன் முதலாக எதிர்த்துக் குரல் எழுப்பியவர் அண்ணல் காந்தியடிகள் தான். தங்கள் தேசம் இருந்த இடம் என வேதம் வாக்களித்திருக்கிறது என்று கூறி எந்த நாட்டையும் ஆக்கிரமிக்கக் கூடாது. அப்படி இஸ்ரேல் என்று ஒரு நாடு உருவாக்கப் படுவதை எதிர்க்கிறோம். அதனையும் மீறி அப்படி ஒரு நாடு உருவாக்கப்படுமானால் அதனை உலகம் அங்கீகரிக்கக் கூடாது. கண்டிப்பாக இந்தியா அங்கீகரிக்காது என்று காந்தியடிகள் தெரிவித்தார். ஆனாலும், வட்டிக்காக கடன் பெற்றவளின் கண்களையே கேட்கின்ற அந்த யூத மகாப்பிரபுக்கள் ஜோர்டான் எல்லையை ஓட்டிய பாலஸ்தீனப் பகுதிக்குள் காலடி பதித்தனர். அரபு மக்கள் ஒரு வகையினர் நமது நாடோடி மக்களைப் போல் வசிக்கும் பழங்குடி மக்கள் . அவர்களுக்கு ஜோர்டான் எல்லையோரம் பாலஸ்தீனப் பரப்பிற்குள் சொந்த நிலங்கள் இருந்தன. அவைகள் ரோஜா தோட்டங்களோ, பேரீச்சை

'டைம்' இதழில் மியான்மர் பயங்கரவாதத்தின் முகம்!

ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக மியான்மர் (பர்மா) நாட்டில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்குமுறை, இனக்கலவரத்தை முன்னின்று நடத்தும் விராது என்ற புத்தபிக்குவின் முகம் அமெரிக்காவின் 'டைம்' இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு குறிப்பிட்ட டைம் இதழுக்கு மியான்மர் நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

1982ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய குடியுரிமைச் சட்டப்படி ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டு வருவதுடன் மேலும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் மீது திட்டமிட்டு கொடுந்தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதில் தலைமையாகவும் முன்னிலையாகவும் உள்ள புத்த பிக்குவான விராதுவுக்கு ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் முழு ஆதரவு அளித்து வரும் நிலையில் தன்னை 'மியான்மரின் பின்லேடன்' என்றே அநத ஆள் அழைத்துக்கொள்கிறாராம். ஜூலை 1-ந் தேதியிட்ட டைம் இதழ் விராதுவின் முஸ்லிம் விரோதப் போக்கையும் பயங்கரவாத நடவடிக்கைகளையும் பதிவு செய்திருப்பதாகக்

ஜூன் 28, 2013

நோன்பு கஞ்சிக்கான அரிசியை முன்கூட்டியே வழங்க தமிழக அரசுக்கு முஸ்லிம் லீக் கோரிக்கை

சென்னை: ரமலான் நோன்பு துவங்கும் முன்பே நோன்பு கஞ்சிக்கான அரிசியை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது.

கட்சி தலைவர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முகமது அபுபக்கர், பொருளாளர் எம்.எல்.ஏ.ஷாஜகான், எம்.அப்துல் ரகுமான் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு,

உத்தகரகண்ட் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் பிரதமர் நிவாரண நிதிக்கு கட்சி சார்பில் ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

 புனித ரமலான் நோன்பு வரும் ஜூலை மாதம் 10ம் தேதி துவங்கவிருக்கிறது. இதனால் நோன்பு துவங்கும் முன்பே நோன்புக் கஞ்சிக்கான அரிசியை வழங்க தமிழக அரசு நடவடிக்கை

தொழில்நுட்பக் கல்லூரி சேர்க்கைக்கான கலந்தாய்வு

சிதம்பரம் அண்ணாமலைநகர் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டயப் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 3, 4 மற்றும் 5 தேதிகளில் நடைபெற உள்ளது என கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஏ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி: முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் சேர விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு அரசு விதிமுறைப்படி மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப்படுத்தி, கலந்தாய்வுக்காக அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இக்கல்லூரியில், கலந்தாய்வுக்காக அழைக்கப்படும் மாணவர்களின் தரவரிசைப்பட்டியல் விவரத்தை கல்லூரி அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம்.இந்த ஆண்டு சேர்க்கைக்கான தரவரிசை மதிப்பெண்கள் விவரம்:
பொதுப்பிரிவு - 382,
பின்தங்கிய வகுப்பு - 229.
பின்தங்கிய வகுப்பு (முஸ்லிம்)- 306, 
மிகவும் பிற்பட்டோர் - 331,
ஆதிதிராவிடர், மலைவாழ் சாதியினர்,

ஜூன் 27, 2013

இந்தியாவை உளவு பார்த்த குற்றச்சாட்டு: அமெரிக்காவுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி:இன்டர்நெட் வழியாக இந்தியாவை உளவு பார்த்த குற்றச்சாட்டில் அமெரிக்காவுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.ஃபேஸ்புக், கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம், இன்டர்நெட்டில் இந்தியர்கள் பரிமாறிக் கொள்ளும் தகவல்களை அமெரிக்காவின் என்.ஐ.ஏ. உள்ளிட்ட உளவு நிறுவனங்கள் ரகசியமாக உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளையும் அமெரிக்கா இன்டர்நெட் உதவியுடன் உளவு பார்த்துள்ளது. இந்நிலையில் இந்தியர்களின் தகவல்களை உளவு நிறுவனங்களுக்கு அளித்த அமெரிக்க நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அமெரிக்க அரசின் உளவு அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.தங்கள் இணையதளத்தில் பயனாளிகள் அளிக்கும் தகவல்களை ரகசியமாக வைத்திருப்போம் என்று ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் உறுதியளிக்கின்றன. ஆனால் அதற்கு மாறாக பல லட்சம் இந்தியர்களின் தகவல்கள் அமெரிக்க உளவு அமைப்புக்குச் சென்றுள்ளது என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இது இந்திய மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயல் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த மனு

ஜூன் 26, 2013

மகனிடம் அதிகாரத்தை ஒப்படைக்கும் கத்தார் மன்னர்!

தோஹா: கத்தார் மன்னர் ஷேக் ஹமத் பின் கலிபா அல் தானி தனது அதிகாரத்தை தனது மகன் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானிக்கு அளிக்கவிருக்கிறார். அரேபியாவின் பணக்கார நாடுகளில் ஒன்று கத்தார். அதன் மன்னர் ஷேக் ஹமத் பின் கலிபா அல் தானி(61). அவர் கடந்த 1995ம் ஆண்டு மன்னராக இருந்த தனது தந்தையின் ஆட்சியை கவிழ்த்துவிட்டு கத்தாரின் புதிய மன்னர் ஆனார்.

அவர் ஆட்சிக்கு வந்த பிறகு கத்தாரை நவீனமயமாக்கினார். மேலும் பிற நாடுகளுடனான உறவையும் மேம்படுத்தினார். இந்நிலையில் அவர் தனது மகன் இங்கிலாந்தில் படித்த இளவரசர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியை மன்னராக்க விரும்புகிறார். அவர் இது குறித்து முக்கிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடித்தியுள்ளார். அதிகாரம் மாற்றம் குறித்த அறிவிப்பை அவர் இன்று வெளியிடுகிறார் என்று கூறப்படுகிறது. 33 வயதாகும் இளவரசர் தமீம் கத்தார் ஆயுதப்படையின் துணை கமாண்டராக உள்ளார். 2 மில்லியன் மக்கள் தொகை

மாலேகான்:முஸ்லிம்களை குற்றவாளியாக சேர்த்த அதிகாரிகள் மீது பொது நல வழக்கு!

2006 ஆம் ஆண்டு மாலேகானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைதுச் செய்த அதிகாரிகள் மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை மறு விசாரணைச் செய்த தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) குண்டுவெடிப்பை நிகழ்த்தியது ஹிந்துத்துவா தீவிரவாதிகள் என்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து ஒரு மாதம் முடியும் வேளையில், இவ்வழக்கில் அநியாயமாக முஸ்லிம் இளைஞர்களை குற்றவாளிகளாக சேர்த்த புலனாய்வு அதிகாரிகள் மீது செய்யது முஸ்தபா அமீன் என்ற நபர் பொது நல மனுவை அளித்துள்ளார்.

மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்புப்படையின் முன்னாள் தலைவர் கே.பி.ரகுவன்ஷி, மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் என்.என்.ராய், மஹராஷ்ட்ரா டி.ஜி.பி சஞ்சீவ் தயாள் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.நிரபராதிகளை குற்றவாளிகளாக்கிய அதிகாரிகளை சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து விசாரணை நடத்தி முதல் தகவல் அறிக்கையை பதிவுச் செய்யவேண்டும் என்று அம்மனுவில் கோரப்பட்டுள்ளது. மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மஹராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு படை ஒன்பது முஸ்லிம் இளைஞர்கள் மீது வழக்கு பதிவுச் செய்திருந்தது.2006 டிசம்பர் மாதம் 21-ஆம் தேதி மஹராஷ்ட்ரா அரசு இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க ஒப்படைத்தது.ஆனால், ஏ.டி.எஸ்ஸின் கருத்தையே சி.பி.ஐயும் தெரிவித்தது.ஆனால், மாலேகான் குண்டுவெடிப்புக்கு காரணம் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் தாம் என்பதை சுவாமி அஸிமானந்தா அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து 2012 ஏப்ரல் மாதம் என்.ஐ.ஏ இவ்வழக்கை விசாரிக்கும் பொறுப்பை ஏற்றது. குண்டுவெடிப்பிற்கு காரணமானவர்கள் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் தாம் என்பதை கண்டறிந்த என்.ஐ.ஏ, அவர்கள் மீது குற்றம் சாட்டி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

அதேவேளையில் முஸ்லிம்களுக்கு எதிரான விமர்சனங்கள் இதில் இடம் பெறவில்லை. மனித நேயமில்லாமல் செயல்பட்ட முஸ்லிம் விரோத அதிகாரிகளுக்கு

ஜூன் 25, 2013

ஆர்கிடெக்சர்(Architecture) துறை என்பது என்ன?‏

நோக்கம் மற்றும் ஒரு இடத்தின் சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பொறுத்து, முறையான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, திட்டமிடல், வடிவமைத்தல் மற்றும் கட்டடம் கட்டுதல் ஆகிய செயல்களை மேற்கொள்ளல் ஆர்கிடெக்சர் எனப்படும். சிறப்பான வீடு மற்றும் பணியாற்றும் இடம் ஆகியவற்றை மக்கள் அதிகளவில் விரும்புவதால், இந்தத் துறையானது பெரியளவில் வளர்ந்து வருகிறது.

ஆர்கிடெக்சர் என்பது இன்றைய நிலையில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக இருக்கிறது. இப்படிப்பில் சேரும் பல மாணவர்கள், இரண்டாம் செமஸ்டர் காலத்திற்குள்ளேயே, அப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வெளியேறி விடுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் ஆர்கிடெக்சர் என்பதை வெறும் கட்டடத்தை வடிவமைக்கும் பணி என்று நினைத்து விடுகிறார்கள். மேலும், பல மாணவர்கள் நினைப்பது என்னவெனில், ஆர்கிடெக்சர் என்பது அதிகம் அறிவியல் சம்பந்தப்பட்டதல்ல என்றும் அது பெருமளவில் கலைத்திறன் தொடர்பானது என்றும் நினைக்கின்றனர். மாணவர்கள், இப்படிப்பில் சேர்ந்தவுடன், ஒவ்வொன்றையும் வடிவமைப்பு மற்றும் கருத்துடன் இணைக்கும்போது, தாங்கள் எதிர்பார்த்ததைவிட, வித்தியாசமாக உணர்கிறார்கள். கணிதத்திறன் உள்ள ஒவ்வொருவரும் இப்படிப்பை தேர்ந்தெடுக்க தகுதி வாய்ந்தவர்களே. முதல் சில வருடங்கள், புத்தாக்க முயற்சிக்கென்று அதிக நேரம் செலவழிக்க வேண்டாம்.

பொறியியல் படிப்புடன் ஒப்பிடுகையில், இப்படிப்பின் தேர்வு நேரமானது அந்தளவு நெருக்கடியானதல்ல. ஆனால், அதேநேரத்தில், இப்படிப்பில் பலவிதமான பணிகள் நிறைந்திருக்கும். இப்படிப்பின் நான்காம் ஆண்டில், ஒரு மாணவர் ஸ்பெஷலைசேஷனை தேர்ந்தெடுக்கிறார். ஆர்கிடெக்சர் துறையைப் பொறுத்தவரை, ஸ்பெஷலைசேஷன் என்பது பரவலானது. Sustainable development, Contemporary, Interior designing, Architectural photography உள்ளிட்ட பலவிதமான பிரிவுகளிலிருந்து ஒருவர் தனது ஸ்பெஷலைசேஷனை தேர்ந்தெடுக்கலாம். அதேசமயம், தவறான ஸ்பெஷலைசேஷனை தேர்ந்தெடுத்தால், பெரிய சிக்கலில் மாட்ட நேரிடும். தற்போதைய நிலையில், Sustainable architecture எனப்படும் பசுமை கட்டடக்கலை பிரபலமாகி வருகிறது. இப்படிப்பில், 5ம் ஆண்டான இறுதியாண்டில், ஆய்வறிக்கையின் வாயிலாக, வடிவமைப்பு தொடர்பான முழு சுதந்திரம் மாணவர்களுக்கு கிடைக்கிறது. இந்த நிலையில், ஒரு மாணவர், நிபுணத்துவம் பெற்ற ஆர்கிடெக்ட் என்ற நிலையை அடைகிறார். பி.ஆர்க் முடித்தவுடன் என்ன செய்வது என்ற கேள்வி இருக்கும்.

இந்தப் படிப்பானது, எம்.பி.பி.எஸ்., படிப்பை ஒத்ததாகும். ஏனெனில், பி.ஆர்க்., நிறைவுசெய்த பிறகு, ஒருவர் ஏதேனும் ஒரு ஸ்பெஷலைசேஷனில் முதுநிலை படிப்பை

சிறுபான்மை இடஒதுக்கீடு:அரசின் முடிவை உச்சநீதிமன்றம் அங்கீகரிக்கும் – மத்திய அரசு நம்பிக்கை!

சிறுபான்மையினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 4.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் முடிவை உச்ச நீதிமன்றம் அங்கீகரிக்கும் என்று மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிப்பது குறித்து சச்சார் கமிட்டி ஏழு ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது. இந்தக் கமிட்டி தனது அறிக்கையில் இந்திய முஸ்லிம்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலை குறித்து விளக்கியிருந்தது. இந்நிலையில், சச்சார் கமிட்டி தொடர்பாகமும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பேசியது:

சிறுபான்மையினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 4.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வின் முன் விசாரணையில் உள்ளது. அரசின் முடிவுக்கு நீதிமன்றம் விரைவில் அங்கீகாரம் அளிக்கும் என்று நம்புகிறோம். மத்திய அரசின் முடிவு நியாயமானது மட்டுமின்றி சட்டபூர்வமானதும் ஆகும். நாட்டில் சிறுபான்மையினர் 14 சதவீதம் பேர் உள்ளனர். அவர்களில் 9 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோருக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பலராலும் எழுப்பப்படுகிறது. சவூதி அரசாங்கமே தனது ஒதுக்கீட்டை 50 சதவீதமாகவும், மற்ற நாடுகளுக்கான ஒதுக்கீட்டை

ஜூன் 24, 2013

லால்பேட்டை அரபிக்கல்லூரி 69வது பட்டமளிப்பு விழா!

கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் உள்ள ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் 69ஆம் ஆண்டு பட்டமளிப்புவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.நன்றி:லால்பேட் எக்ஸ்பிரஸ் 

ஜூன் 23, 2013

தண்ணீர்க் குழாயிலும் ஜாதி வேறுபாடு! -குஜராத்தின் உண்மை நிலை

இந்தியாவின் அடுத்த பிரதமருக்கான பி.ஜே.பி.யின் வேட்பாளர் என்று விளம்பரப்படுத்தப்படும் நரேந்திர மோடி முதலமைச்சராக இருக்கும் குஜராத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் தண்ணீர் எடுப்பதிலும்கூட - ஜாதி வாரியாக நேர ஒதுக்கீடு - தண் ணீர்க் குழாயில்கூட நான்கு வர்ணம் என்னும் மனுதர்மக் கொடி பறக்கிறது.

மனுதர்மம் குறிப்பிடுகிறது முதலில் பார்ப்பனன், பிறகு சத்திரியன், அடுத்து வைசியர், இறுதியாக சூத்திரர்கள் பகுத்தறிவற்ற விலங்குகளிடம்கூட இல்லாத இந்த பாகுபாட்டை ஆரியர்கள் தங்களின் வயிறு வளர்க்க உழைப்பில்லாமல் வாழ்நாள் முழுக்க உண்டுகொழுக்க வழிகண்டு அதை சட்டமாக எழுதி வைத்தனர். வடக்கே அம்பேத்கர், தெற்கே தந்தை பெரியார் போன்றோர் இதை எதிர்த்து வெற்றி கண்டனர். சில ஆண்டுகளாக அடங்கி இருந்த இந்த மனுதர்ம கோடரி மீண்டும் தன்னுடைய மழுங்கிப்போன கூர் முனையை தீட்டிக்கொண்டு புறப்பட்டுள்ளது. கூர்முனையை தீட்டுவது மனுவின் புதல்வராக தன்னை உலகிற்கு காட்டிக்கொள்ளும் மோடியின் மாநிலமான குஜராத்தில் தான்; அதுவும் தலைநகரின் அருகில், அகமதாபாத்தில் இருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள தன்வாதா (ப்ஹவியா வட்டம்) இந்த ஊரில் உள்ள பஞ்சாயத்துத் தண்ணீர் தொட்டியில் ஜாதீய பாகுபாட்டை நேரடியாக பறைசாற்றும் வாக்கியம் உள்ளது.முக்கியமாக தலித்து களுக்கு எதிரான ஜாதி வன்மம் இதில் அடங்கியுள்ளது. இப்படி பாகுபாடுபார்ப்பது தேசிய குற்றவியல் சட்டப்படி தண்டனைக்குட்பட்டது.

ஜாதிவாரியாக நேரம் காலை 9 மணிமுதல் 10 மணிவரை பார்ப்பனர் மற்றும் உயர்ஜாதி படேல் இனத்தவருக்கு மட்டும்,

காலை 10 முதல் 12 (மதியம்) மணிவரை பர்வாதா வங்கிரீஸ் மற்றும் கும்பார்.

நண்பகல் 12 முதல் (மதியம்) ஒரு மணிவரை தலித் இனத்தவருக்கு என எழுதியுள்ளனர். 

இந்தக் கிராமத்தின் பஞ்சாயத் துத் தலைவர் நிமிஷா தோனியா என்ற பெண் ஆவார், ஆனால் அவர் வீட்டில் ரொட்டி சுடுவதை தவிர வேறு ஒன்றும் செய்வதில்லை; பஞ்சாயத்து நிர்வாகம் அனைத்தையும் அவரது கணவர் ப்ரதாப்சிங்தோனியா தான் நிர்வகிக்கிறார். இந்த வாசகம் எழுதியதைக் குறித்து அவர் பெருமைப்படுகிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு இதில் என்ன தவறு இருக்கிறது? பரம்பரை பரம்பரையாக நாங்கள் செய்து வந்ததைத்தான் செய்கிறோம். இதில் ஜாதிவன்மம் என்று பெயர் சொல்லி நீங்கள் தான் புதிய பிரச்சினையை கிளப்புகிறீர்கள் என்று கூறியவர்.மேலும் ஒரு அதிர்ச்சியான செய்தியை சொல்கிறார். இங்கு மட்டுமல்ல; குஜராத்தில் எந்த ஊருக்கும் சென்று பாருங்கள் இப்படித்தான் இருக்கிறது. இதனால்

இந்திய இயற்கை பேரழிவுகளுக்கு மனிதர்களே காரணம்!

புதுடெல்லி:வட-இந்திய மாநிலங்களில் மழை வெள்ளப் பெருக்கு காரணமாக ஏற்பட்டுள்ள அழிவுகளுக்கு விதிமுறைகளை மீறிய கட்டுமானங்களும் சுரங்க அகழ்வுகளும் பாரியளவிலான மின்சார-உற்பத்தி செயற்திட்டங்களுமே காரணம் என்று ஊடகங்கள் பலவும் சுட்டிக்காட்டியுள்ளன.

உத்தராகண்ட் மற்றும் ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை ‘இயற்கையின் சீற்றம்’ என்று அரசாங்கம் தனக்கு வசதியாக வர்ணிப்பதாக நாளிதழ்கள் பலவும் விமர்சித்துள்ளன. விளைவுகளை சிந்திக்காத, தூரநோக்கற்ற மனித நடவடிக்கைகள் தான் வெள்ள அழிவுக்கு காரணம் என்று ஹிந்து நாளிதழ் கூறுகிறது. பெரிய அளவிலான நீர்மின்சாரத் திட்டங்களும் ஆறு குளங்கள் சட்டவிரோதமாக குடிமனைகளாக மாறுகின்றமையும் நெடுஞ்சாலைகளை அமைப்பதற்காக மலைகளையும் பாறைகளையும் வெடிவைத்து தகர்க்கின்றமையுமே மலைப் பிரதேச மாநிலங்களில் இந்த வெள்ள அழிவு ஏற்படக்காரணம் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியுள்ளது. இந்தப் பிரதேசங்களில் பல ஆறுகள் வற்றிவிட்டதாகவும் பத்திரிகைகள் சுட்டிக்காட்டுகின்றன. பல்வேறு தகவல்களை முன்வைத்து ஊடகங்கள் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளன.

இதற்கிடையே, இந்த வெள்ளப்பெருக்காலும் நிலச்சரிவாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 200-ஐ தாண்டி விட்டதாக இந்திய உள்துறை அமைச்சர்

ஜூன் 22, 2013

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கு நுழைவு சீட்டு வழங்கல்!

கடலூர், : கடலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான நுழைவு சீட்டுகள் இன்றும் நாளையும் விநியோகிக்கப்பட உள்ளன. அதற்கான மையங்கள் பற்றிய விவரங்களை அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு இன்றும் (21ம்தேதி) யும் (22ம்தேதி) நுழைவு சீட்டுகள் விநியோகிக்கப்பட உள்ளன. காரைக்கால் கல்வி மாவட்டத்திற்கான நுழைவு சீட்டுகள் காரைக்கால் அன்னை தெரசா மேல் நிலைப்பள்ளியிலும்,

புதுச்சேரி கல்வி மாவட்டத்திற்கான நுழைவு சீட்டுகள் புதுச்சேரி தமிழ்தென்றல் திரு.வி.க உயர் நிலைப்பள்ளியிலும்,

திண்டிவனம் கல்வி மாவட்டத்திற் கான நுழைவு சீட்டுகள் திண்டிவனம் தேசிய மேல்நிலைப்பள்ளியிலும் விநியோகிக்கப்படும்.

விழுப்புரத்திற்கான நுழைவு சீட்டுகள் விழுப்புரம் எம்.ஆர்.ஐ.சி. ஆர்.சி உயர்நிலைப்பள்ளியிலும், கள்ளக்குறிச்சிக்கு அப்பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும்,

விருத்தாசலத்திற்கு அப்பகுதி இன்ஃபன்ட் மெட்ரிக் பள்ளியிலும்

காட்டுமன்னார்கோவிலுக்கு உடையார்குடி ஆர்.சி உயர்நிலைப்பள்ளியிலும் நுழைவு சீட்டுகள் விநியோகிக்கப்படும்.

கடலூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கடலூருக்கும்,

சிதம்பரம் எஸ்.ஆர்.கே.வி பள்ளியில் சிதம்பரத்திற்கும் நுழைவு சீட்டுகள் விநியோகிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தங்களது இருப்பிட முகவரிக்கு அருகாமையில் உள்ள விநியோக மையத்தில் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். தேர்வுக்கூட நுழைவு சீட்டு இல்லாத தேர்வர்கள்

உத்தரகாண்ட் வெள்ளப் பகுதிகளில் சிக்கியவர்களை மீட்க ராணுவம் தீவிரம்!

வெள்ள பாதிப்பு ஏற்பட்ட ஹரித்துவாரில் இருந்து நேற்று 40 உடல்கள் மீட்கப்பட்டன. கேதார்நாத், பத்ரிநாத் பகுதிகளில் சிக்கியுள்ள 9 ஆயிரம் பேரை மீட்கும் பணியில் 40 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், அரியானா மாநிலங்களில் கடந்த வார இறுதியில் பெய்த கனமழை 3 நாட்கள் நீடித்தது. இதனால் உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசத்தில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டன. கங்கை, யமுனை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. உத்தரகாண்ட் மாநிலத்தின் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, சமோலி, உத்தரகாசி போன்ற புண்ணிய தலங்களுக்கு சுற்றுலா வந்த ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆங்காங்கே சிக்கியுள்ள யாத்திரிகர்களை மீட்கும் பணியில் விமானப்படையின் 20 ஹெலிகாப்டர்களும், ராணுவத்தின் 16 இலகு ரக ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 10 ஆயிரம் ராணுவ வீரர்களும், எல்லை சாலை அமைப்பை சேர்ந்த 3 ஆயிரம் பேரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹரித்துவாரில் நேற்று நடந்த மீட்பு பணியின் போது 40 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கேதார்நாத்தில் சிக்கியுள்ள 250 பேரையும், பத்ரிநாத்தில் சிக்கியுள்ள 9 ஆயிரம் பேரை மீட்கும் பணியும் தொடங்கியுள்ளது. கேதார்நாத்தில் நடைபெம் மீட்பு பணிகளை உத்தரகாண்ட் வேளாண் அமைச்சர் ஹரக் சிங் ராவத் நேற்று பார்வையிட்டார். அவர் அளித்த பேட்டியில், ‘‘கேதார்நாத் கோயிலை சுற்றியுள்ள கட்டிடங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்க்கும்போது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. ஆங்காங்கே சடலங்கள் சிதறி கிடக்கின்றன. நம்பிக்கையின் மையமாக இருந்த இடம் மயானமாக காட்சியளிக்கிறது. கேதார்நாத்தில் மீண்டும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி இயல்பு நிலைக்கு கொண்டுவர குறைந்தது 5 ஆண்டுகளாகும்’’

காந்தியைக் கொல்வோம்! பரபரப்பினை ஏற்படுத்திய புதிய நூல்!

காந்தியின் கொள்ளுப் பேரன்  துசார் காந்தி எழுதிய காந்தியைக் கொல்லுவோம்  என்கிற நூல் சமீபத்தில்  பரபரப்பினை  உண்டாக்கிய ஒன்று. இந்நூலினை, தான்  எழுதிய காரணம் பற்றி துசார் காந்தி அவர்கள் குறிப்பிடும்பொழுது,  சமீப காலங்களில் இந்துத்துவ  போன்ற  அமைப்புகள் திட்டமிட்ட ஒரு பிரச்சாரத்தினைச் செய்து வருகிறார்கள். காந்தி கொல்லப்பட்டதை நியாயப்படுத்தி வருகிறார்கள். கோட்சேவை ஒரு வீரப்  புருஷனாகச் சித்தரித்து வருகின்றனர்.
காந்தியின் தூண்டுதலால்தான் இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை உண்டாகியதாகவும், சுதந்திர இந்தியாவை வலியுறுத்தி 55 கோடி ரூபாயினைப் பாகிஸ்தானுக்குக் கொடுக்க வைத்தது காந்திதான் என்றும், எப்பொழுதுமே சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கே காந்தி தனது ஆதரவை வெளிப்படுத்தியதும், அதனால் பெரும்பான்மை இந்துக்களுக்கு எந்தக் கேடு வந்தாலும் கவலை கொள்ளாமல் இருந்தது போன்றவை இந்துமத வெறியர்கள் காந்தியின் கொலைக்கான காரணங்களாகக்   கூறும்  முக்கியக் குற்றச்சாட்டுகள். இதைப் பற்றி எந்தக் கவலையும் சொரணையும் இல்லாமல் காந்தியவாதிகளும், காங்கிரஸ்காரர்களும் வாளாக இருப்பதுதான் வேதனை என்கிறார் துசார் காந்தி. 
இந்தச் சூழ்நிலை தொடர்ந்தால் இந்தியாவில் மீண்டும் பார்ப்பனிய பனியா  கூட்டங்கள் தலைதூக்கி இந்து ராச்சியம் என்கிற பெயரில் மீண்டும் பார்ப்பனர்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி வருணாசிரம தர்மத்தை நிலைநிறுத்திவிடுவார்கள் என்கிற கவலையோடும் கோபத்தோடும் எழுதப்பட்ட நூல்தான் காந்தியைக் கொல்லுவோம் என்கிறார். ஏன் இந்த விந்தையான தலைப்பு என்று கேட்கத் தோன்றும். காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சே மற்றும் அவனது கூட்டாளி ஆப்டே பூனா நகரத்தில், இந்து மகாசபையின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்கள்.
இவர்கள் அக்ரனீ என்கிற நாளிதழை நடத்தி வந்தார்கள். (இந்நாளிதழ்  தடை செய்யப்பட்டவுடன் இந்து ராஷ்டிரா  என்கிற வேறு பெயரில் அதனை மீண்டும் வெளிக்கொண்டு வந்தனர்). இப்பத்திரிகை மூலமாக அவர்கள் இசுலாமிய எதிர்ப்பு விஷக் கருத்துகளைப் பரப்பி வந்தனர். அத்துடன் சர்வர்கரின்  நச்சுக் கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்வதும் அவர்களது பிரதான வேலையாக இருந்தது. இந்தப் பத்திரிகையை நடத்த அவர்கள் இசுலாமிய வெறிக் கொண்ட பெரும் பணக்காரர்களான மார்வாரிகள், பனியாக்கள் போன்றோரை நம்பி இருந்தனர். இவர்களிடம் இசுலாமியர்களை எதிர்த்து இதைச் செய்வோம் அதைச் செய்வோம் என்று வாய்ச் சவடால்விட்டு பணத்தைக் கறந்து பத்திரிகையினை நடத்தி வந்தனர். இதனால் ஏமாற்றமடைந்த பண முதலாளிகள் பணம் தருவதை நிறுத்திவிட்டனர். இவர்களது நம்பகத்தன்மை பெருமளவில் குறைந்து வருகின்ற சமயத்தில், ஏதாவது செய்து தங்களை நிலைநிறுத்திக் கொள்ள  யோசிக்கின்ற வேளையில், கோட்சே நாம் ஏன் காந்தியைக் கொல்லக் கூடாது எனக்  கேட்கிறான். அந்தக் கேள்வியே  இந்திய வரலாற்றில் அழிக்கமுடியாத இரத்தக் கறையை ஏற்படுத்தியது. துசார் காந்தி இதனையே தன் நூலுக்குத் தலைப்பாகக் கொள்கிறார்.
காந்தியைக் கொன்றதற்குக் கூறப்படும் காரணங்கள்

ஜூன் 21, 2013

இந்திய தேசிய லீக் கட்சியுடன் தேசிய லீக் இணைந்தது!!

இந்திய தேசிய லீக் கட்சியுடன், தேசிய லீக் கட்சி இணைந்தது. கட்சியின் தமிழ்நாடு தலைவராக, பஷீர் அகமது நியமிக்கப்பட்டுள்ளார் என்று, இந்திய தேசிய லீக் கட்சியின் அகில இந்திய தலைவர் முகமது சுலைமான் அறிவித்தார்.
இந்திய தேசிய லீக் கட்சியின் அகில இந்திய நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, கட்சியின் தலைவர் முகமது சுலைமான் தலைமை தாங்கினார். கூட்ட முடிவில், முகமது சுலைமான் நிருபர்களிடம் கூறியதாவது:–
இந்திய தேசிய லீக்
மறைந்த தலைவர்கள் சுலைமான் சேட், அப்துல் லத்தீப் ஆகியோரால் இந்திய தேசிய லீக் கட்சி தொடங்கப்பட்டு கட்சியை திறம் பட நடத்தி வந்தனர். தமிழகம், கேரளா, ஆந்திரா உள்பட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இன்றளவும், அகில இந்திய அளவில் இந்திய தேசிய லீக் கட்சி பல்வேறு மாநிலங்களில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பிரிந்து சென்றவர்களால்…
இடையில் சில காலமாக, இந்த கட்சியில் இருந்து பலர் பிரிந்து, தேசிய லீக் உள்பட பல்வேறு பெயர்களிலும் செயல்பட்டு வந்தனர். இதற்கிடையே, அகில இந்திய அளவில், முஸ்லிம் அமைப்புகளை ஒருங்கிணைத்து, ஒரே குடையின் கீழ் கட்சியை நடத்திச் செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சில நாட்களுக்கு முன் இந்திய தேசிய லீக் கட்சியுடன் தேசிய லீக் கட்சியை இணைப்பது என்று தீர்மானித்தனர்.
இணைப்பு
இதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், தமிழகத்தில் தேசிய லீக் உள்பட பல்வேறு பெயர்களில் செயல்படும் முஸ்லிம் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இந்திய தேசிய லீக் கட்சியின் நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று கூடியது. கூட்டத்தில், தேசிய லீக் கட்சியை, இந்திய தேசிய லீக் கட்சியுடன் இணைப்பது என்று

ஜூன் 20, 2013

தடயறிவியல் படிப்புகள்‏

ஆங்கிலத்தில் போரன்சிக்(forensic) எனப்படும் தடயறிவியல் படிப்பு பெரும்பாலும் மாணவர்களிடையே அதிகம் பிரபலமடையாக படிப்பாகும். அதிகம் பிரபலமடையாவிட்டாலும், ஏராளமான வேலை வாய்ப்பை வழங்கும் படிப்பாக தற்போது இது விளங்குகிறது.

தொழில்நுட்பம் வளர்ந்த அளவிற்கு தற்போது குற்றங்களும் வளர்ந்து வருகிறது. எனவே, ஒவ்வொரு குற்றத்தையும், அந்தந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்ற தடயவியல் நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது. எனவே, தற்போது தடயவியல் துறை நிபுணர்களின் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும், எம்பிபிஎஸ் தடயறிவியல் படித்து பணியாற்றும் மருத்துவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், அத்துறையில் முறையாக மாணவர்களுக்குக் கற்பிக்க ஆளே இல்லாத நிலை நிலவுகிறது. பல முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படிப்பு மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தாத ஒரேக் காரணத்தால் தற்போது பின்தங்கியுள்ள படிப்பாக இருக்கிறது.

ஒரு குற்றம் நடந்த விதத்தை ஆய்வு செய்யும் முறையான பயிற்சி அளிப்பதே தடயறிவியல் படிப்பாகும். நாட்டில் சட்டத்தை நிலைநாட்டவும், குற்றவாளியை குற்றவாளி என நிரூபிக்கவும், குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கவும் தடயவியல் நிபுணர்களின் பணி இன்றியமையாததாக உள்ளது. மேலும், இப்பணி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான அனுபவத்தைத் தரும் என்பதால் எப்போதுமே இத்துறையில் ஆர்வத்தோடு பணியாற்ற இயலும். தடய ஆய்வுத் துறையில் உள்ள உட்பிரிவுகள்

தடய ஆய்வு தொல்லியல்
தடயறிவியல் உயிரியியல்
தடயறிவியல் பொருளாதாரவியல்
தடயறிவியல் பொறியியல்
தடயறிவியல் அறிவுத்திறனியல்
தடயறிவியல் மொழியியல்
தடயறிவியல் உளவியல்
தடயறிவியல் திசுவியல்
தடயறிவியல் மானுடவியல்
தடயறிவியல் தொழில்நுட்பவியல் எம்.டி.
தடயறிவியல் மருத்துவம் எம்.பி.பி.எஸ்.

மாணவர்களுக்கு இரண்டாம் ஆண்டில் தடயறிவியல் பாடம் வருகிறது. அதில் தேர்ச்சி பெற்று எம்.பி.பி.எஸ். முடித்தவர்கள் முதுகலை மருத்துவப் படிப்பாக எம்.டி. தடயறிவியல் மருத்துவம் பிரிவை எடுத்துப் படிக்கலாம். இதனை முடிப்பவர்கள் பிரேத பரிசோதனை செய்யலாம். மருத்துவக் கல்லூரிகளில் விரிவுரையாளராகவும் பணியாற்றலாம். தமிழகத்தில் இப்படிப்பினை முடித்தவர்களுக்கு தற்போது கடும் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே, இப்படிப்பை முடிப்பவர்களுக்கு உடனடி வேலை உறுதி.

பி.எஸ்சி. தடயறிவியல் : பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பாடம் எடுத்துப் படித்தவர்கள் இப்படிப்பில் சேரலாம். இதனை தமிழகத்தில் ஒரு சில கல்வி நிறுவனங்களே அளிக்கின்றன. தடய அறிவியல் படிப்பினை வழங்க சிறப்பு கல்வி நிறுவனங்களும் உள்ளன. அவற்றிலும் இப்படிப்பை மேற்கொள்ளலாம். இதில் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பிரிவை தேர்வு செய்து படிக்க வேண்டும். அத்துறையில் அடிப்படை விஷயங்களை இப்படிப்பு கற்றுத்தரும்.

எம்.எஸ்சி., தடயறிவியல் : ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டத்தை அறிவியல் பாடப்பிரிவில் முடித்தவர்கள் எம்.எஸ்சி., தடயறிவியல் படிப்பில் சேரலாம். குறிப்பிட்ட சில பிரிவுகள் இப்படிப்பில் வழங்கப்படும். அதனை தேர்வு செய்து மாணவர்கள் படிக்கலாம். தற்போது சைபர் பாரன்சிக் எனப்படும் தொழில்நுட்ப தடயறிவியல் படிப்பிற்கு மாணவர்களிடையே வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதில் எம்.பில். ஆராய்ச்சி என மேற்கொண்டு படித்துக் கொண்டே செல்லலாம். இப்படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள் ஆசியன் போரன்சிக் சயின்ஸ் அகாடமி, சென்னை சென்னை பல்கலைக்கழகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சென்னை குற்றவியல் மற்றும் தடயவியல் துறை நிறுவனம், புது தில்லி லக்னோ பல்கலைக்கழகம், லக்னோ மத்திய தடயவியல் துறை ஆய்வகம், ஹைதராபாத் மத்திய தடயவியல் துறை ஆய்வகம், சண்டிகர் மத்திய தடயவியல் துறை ஆய்வகம், கொல்கட்டா ஆகியவை இத்துறையில் பல்வேறு படிப்புகளை வழங்கி வருகின்றன.

பல தொலைநிலைக் கல்வி மையங்கள் தொலைதூரக் கல்வி முறையிலும் இப்படிப்பை வழங்கி வருகின்றன. தற்போது சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி., சைபர் போரன்சிக்ஸ் அன்ட் இன்பர்மேஷன் செக்யூரிட்டி என்ற படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த அளவிற்கு அங்கு குற்றங்களும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே, தகவல் தொழில்நுட்ப முறையில்

எனது மகளின் கொலையால் யாருக்கு லாபம்? – இஷ்ரத்தின் தாயார் கேள்வி!

அஹ்மதாபாத்: ஒரு முஸ்லிம் இளம்பெண்ணை கொலைச் செய்துவிட்டு யார் லாபம் அடைந்தார்கள்? ஏன் எனது மகளை கொலைச் செய்தார்கள்? கேள்வி கேட்பது குஜராத்தில் போலி என்கவுண்டரில் கொலைச் செய்யப்பட்ட இஷ்ரத் ஜஹானின் தாயார் ஷமீமா கவுஸர். நேற்று ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில் அவர் இந்த கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கையில் கூறப்பட்டிருப்பது: எனது மகள் இஷ்ரத் ஜஹானை கடந்த 2004-ஆம் ஆண்டு குஜராத் போலீஸ் கடத்திச்சென்று சுட்டுக்கொலைச் செய்தது. மிகப்பெரிய சதித்திட்டத்தின் விளைவாகவே எனது மகள் கொலைச் செய்யப்பட்டாள். அது ஒரு அரசியல் நாடகமாகும். இஷ்ரத்தும், மூன்று நபர்களும் நரேந்திர மோடியை கொலை ச்செய்ய வந்த தீவிரவாதிகள் என்று குஜராத் போலீஸ் கூறியது. மோடியின் உயிரை பாதுகாப்பதற்காக குஜராத்தில் நடந்த முதல் போலி என்கவுண்டர் படுகொலை இதுவல்ல. முஸ்லிம்கள் அல்லாதவர்களும் குஜராத்தில் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வழக்குகளில் எல்லாம் விசாரணை நடைபெற்று வருகிறது. கல்லூரி மாணவியான எனது மகள் அவளுடைய தந்தையின் மரணத்திற்கு பிறகு சகோதரிகளின் படிப்புக்கு தேவையான பணத்தை சம்பாதிக்க டியூசன் வகுப்புகளை நடத்தி வந்தார். அவள் மரணித்தது முதல் இஷ்ரத் நிரபராதி என்றும், அவள் தீவிரவாதிகள் மற்றும் குற்றவாளிகளுடன் எவ்வித தொடர்பும் இல்லை என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன்.

சி.பி.ஐ விசாரணைக் கோரி நான் உயர்நீதிமன்றத்தை அணுகினேன். ஆனால்,நீண்ட ஒன்பது ஆண்டுகளாக வழக்கை சீர்குலைக்கவும், விசாரணை நடவடிக்கைகளை தாமதப்படுத்தவும் குஜராத் அரசு முயற்சிக்கிறது. ஆகையால், இந்த சம்பவத்திற்கு பின்னணியில் உள்ள சூத்திரதாரி இன்னமும் இருட்டில் தான் உள்ளார். 2009-ஆம் ஆண்டு நீதிபதி தமாங்கின் விசாரணை அறிக்கையில் எனது மகள் நிரபராதி என்றும் அவள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் நியமித்த ஆர்.ஆர்.வர்மா தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழுவும் எனது மகள் நிரபராதி என்பதை தெளிவுப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இவ்வழக்கு 2011-ஆம் ஆண்டு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. தற்போது இவ்வழக்கை உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சி.பி.ஐ விசாரணை நடத்திவருகிறது. எனக்கு நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளது. நீதி கிடைக்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

உயர் போலீஸ் அதிகாரிகள் உள்பட சிலரை சி.பி.ஐ கைதுச் செய்துள்ளது. இச்சம்பவம் போலி என்கவுண்டர் என்று சி.பி.ஐயும் கூறுகிறது. சி.பி.ஐ சேகரித்த ஆதாரங்களின் அடிப்படையில் மிகப்பெரிய சதித்திட்டம் நடந்துள்ளது தெளிவாகிறது. இண்டலிஜன்ஸ் பீரோ(ஐ.பி)வின் சிறப்பு இயக்குநர் ராஜேந்திரகுமார் உள்ளிட்டோர் இந்த சதித்திட்டத்தில் பங்கேற்றிருப்பதாக கூறப்படுகிறது. சி.பி.ஐயின் விசாரணை ஐ.பியின் மீதான தாக்குதல் என்று சில ஊடகங்களில் வெளியான செய்திகள் வருத்தத்தை தருகிறது. இவ்வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில்

ஜூன் 19, 2013

அரசியலில் குதிக்கத் தயாராகும் தாலிபன்கள்!

தோஹா: அரசியலில் பிரவேசிக்கும் முடிவின் முதல் கட்டமாக, கத்தார் நாட்டில் அரசியல் அலுவலகம் தொடங்கும் முயற்சியில் தலிபான்கள் ஈடுபட்டுள்ளார்களாம். 2001-ம் ஆண்டு அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்ட சம்பவத்திற்கு பதிலடியாக, ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வந்த தலிபான்களை அமெரிக்கா தாக்கி அழித்து, அங்கு ஹமீத் கர்சாய் தலைமையில் அங்கு அரசு அமைத்தது. தற்போது, ஹமீத் கர்சாய் அரசுக்கு எதிராகவும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளுக்கு எதிராகவும் தலிபான்கள் சண்டையிட்டு வருகிறார்கள்.

பாதுகாப்பு பணியில் இருக்கும்அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து அடுத்த இரு வருடங்களில் முழுமையாக வெளியேற இருக்கிறது. சமீபத்தில், தலிபான்கள் ஆயுதங்களை கைவிட்டு அரசியல் கட்சி தொடங்க வேண்டுமென்று அதிபர் கர்சாய் கோரிக்கை விடுத்தார். அதன் தொடர்ச்சியாக அரபு நாடான கத்தார் நாட்டின் மன்னரை சந்தித்த கர்சாய், அங்கு தலிபான்கள் அரசியல் கட்சி தொடங்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார். கர்சாயின் இத்தகைய செயல்களுக்கு இந்த ஆண்டு தொடக்கம் வரை எதிர்ப்பு தெரிவித்து வந்த தாலிபான்கள், தற்போது அந்த முடிவை மாற்றிக் கொண்டுள்ளனராம். கத்தாரில் உள்ள தோஹாவில் தலிபான்கள் அரசியல் அலுவலகம் தொடங்க ஏற்பாடுகள்

ஜூன் 16, 2013

மருத்துவர் படிப்பிற்கு கட்-ஆஃப் எவ்வளவு?‏....

சென்னையில் வரும் 19-ஆம் தேதி தொடங்கவுள்ள முதல் கட்ட எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு மொத்தம் 1,823 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு நடைபெறுமா அல்லது 2,065 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு நடைபெறுமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மத்திய அரசு மிக விரைவில் அனுமதி அளிக்கும் நிலையில் மொத்தம் 2,065 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு முதல் கட்ட கலந்தாய்வை நடத்தி விடலாம் என்பதால் கலந்தாய்வு அட்டவணை தயாரிப்புப் பணியை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு ஒத்திப் போட்டுள்ளது.

நடப்பு ஆண்டு (2013-14) கலந்தாய்வுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணையும் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை; கலந்தாய்வு முடிந்த பிறகே கட்-ஆஃப் மதிப்பெண்ணை வரையறை செய்ய முடியும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் கலந்தாய்வில் பங்கேற்க உள்ள மாணவர்களின் நலன் கருதி எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல் அடிப்படையில் 1,823 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் 2,065 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான உத்தேச கட்-ஆஃப் மதிப்பெண் வகுப்புவாரியாக கீழே

ஹஸன் ரூஹானி ஈரான் அதிபர் தேர்தலில் வெற்றி!

டெஹ்ரான்:சீர்திருத்தவாதியாக அறியப்படும் ஈரானின் ஷியா அறிஞர் டாக்டர்.அலி ஹஸன் ரூஹானி அந்நாட்டின் 11-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.பதிவான வாக்குகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ள ரூஹானி, அஹ்மத் நஜாதிற்கு அடுத்து ஈரானின் தலைமைப் பதவியை வகிக்க உள்ளார்.

நஜாதை விட கடுமையானவர் என்று மேற்கத்திய ஊடகங்கள் வர்ணித்த, அதிபராவார் என கருதப்பட்ட ஸஈத் ஜலீலி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். 3,67,04,156 வாக்குகளை எண்ணியபொழுது ரூஹானிக்கு 1,86,13,329 வாக்குகள் கிடைத்துள்ளன.அவருக்கு அடுத்து முன்னாள் போலீஸ் தலைவரும், டெஹ்ரான் மேயருமான முஹம்மது பாகிர் காலிஃபாப் 60,77,292 வாக்குகளைப் பெற்றுள்ளார்.15.8 சதவீத வாக்குகள் காலிஃபாபிற்கு கிடைத்துள்ளது. ரெவலூஸனரி கார்டின் முன்னாள் தலைவர் முஹ்ஸின் ரிஸாஇக்கு 11.34 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.ஸஈத் ஜலீலிக்கு 11.46 சதவீத வாக்குகளும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், 15 ஆண்டுகளாக ஈரானின் ஆன்மீக உயர் தலைவர் காம்னஈயின் வெளியுறவுத்துறை ஆலோசகராகவும் உள்ள அலி அக்பர் விலாயத்திக்கு 6.06 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன.முன்னாள் அமைச்சர் முஹம்மது கராஸிக்கு 1.18 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

வெள்ளிக்கிழமை நடந்த வாக்குப்பதிவில் 73 சதவீத வாக்குகள் பதிவானதாகவும், வாக்குப்பதிவு முற்றிலும் அமைதியாக நடந்ததாகவும் தேர்தலுக்கு தலைமைப் பொறுப்பை வகித்த உள்துறை அமைச்சர் முஸ்தஃபா முஹம்மது நஜ்ஜார் தெரிவித்துள்ளார். 63 வயதான ரூஹானி, 16 ஆண்டுகளாக அணு விவகாரத்தில் வெளிநாடுகளுடனான ஈரானின் பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தராக உள்ளார்.1989 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்புக் குழுவின் தலைவராகவும், இரண்டு தடவை பாராளுமன்ற துணை சபாநாயகராகவும் பணியாற்றியுள்ளார்.ஆயத்துல்லாஹ் அலி காம்னஈ உடன் நெருக்கமான ரூஹானி, ஈரானின் சீர்திருத்தவாதிகள் மற்றும் தாராளவாதிகளுக்கு விருப்பமானவர். ஈரானின் இஸ்லாமிய குடியரசின் ஸ்தாபகரான

சிதம்பரத்தில் கார் நிறுத்தும் இடமாக மாறிய உழவர்சந்தை!

சிதம்பரத்தில் உழவர்சந்தை முடங்கியதால் அண்ணா கலையரங்கம் கார், வேன் நிறுத்து மிடமாக மாறி விட்டது. காய்கறி விலை உச்சத்தை தொட்டுள்ள நிலையில் உழவர்சந்தையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

வளர்ந்து வரும் நகரங்களுள் ஒன்றாக விளங்குவது சிதம்பரம், கிராமப்புறங்களை மட்டுமின்றி பிச்சாவரம் சுற்றுலா மையம், உலகப்புகழ் பெற்ற நடராஜர் கோயில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயிலும் அண்ணாமலை பல்கலைக்கழகம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், அரசு கலைக்கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் சிதம்பரம் நகரத்தில் அமைந்துள்ளன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சிதம்பரத்தில் கிராமப்புற விவசாயிகளின் விளை பொருட்களை விற்கவும், நகர்ப்புற மக்கள் குறைந்த விலையில் காய்கறிகளை வாங்கி பயனடையும் வகையிலும் கடந்த திமுக ஆட்சியில் 9.8.2000 அன்று ரூ. 7.5 லட்சம் செலவில் அண்ணா கலையரங்கில் உழவர் சந்தை துவங்கியது. உழவர் சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்ய 81 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

2001ம் ஆண்டு வரை எவ்வித தடையுமின்றி சீராக இயங்கி வந்த உழவர்சந்தை அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் பராமரிக்கப்படவில்லை. இதனால் விவசாயிகளின் விளைபொருட்களை கொண்டு வருவதை நிறுத்தி விட்டனர். சிலர் மட்டும் வேறு வழியின்றி காய்கறிகளை கொண்டு வந்து விற்றுவிட்டு சென்றனர். பயன்பாடு குறைந்ததால் உழவர்சந்தைக்கு வருவோரின் எண்ணிக்கையும் பெருமளவு குறைந்துவிட்டது. வியாபாரம் சரியான முறையில் இல்லாததால் வியாபாரிகள் நடராஜர் கோயில் கோபுர வாயில், கீழ வீதி, தெற்குவீதி ஆகிய பகுதிகளில் சாலையோரம் காய்கறிகளை வைத்து விற்றுவிட்டு செல்கின்றனர். உழவர்சந்தை இயங்காததால் அண்ணா கலையரங்கம் மிக மோசமான நிலையில் காட்சியளித்தது. இந்நிலையில் சிதம்பரம் நகரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த வேன் ஸ்டாண்ட், கார் ஸ்டாண்ட் ஆகியவை அண்ணா கலையரங்கத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த மாற்றத்தால் நகரத்தில் போக்குவரத்து நெருக்கடி குறைந்தபாடில்லை. இதனால் பெண்கள் மனஉலைச்சல் அடைந்துள்ளனர். எனவே இப்போதைய சூழ்நிலையில் மறைந்து போன உழவர்சந்தையை மீண்டும் இயக்கினால் பொதுமக்கள்

ஜூன் 13, 2013

160 ஆண்டு கால பழமை வாய்ந்த "தந்தி' சேவை நிறுத்தம்!! - பி.எஸ்.என்.எல்

நாட்டில், 160 ஆண்டு கால பழமை வாய்ந்த, "தந்தி' சேவை, அடுத்த மாதம், 15ம் தேதி முதல் நிறுத்தப்படும் என, பி.எஸ்.என்.எல்., அறிவித்து உள்ளது. இணையதளம்: தகவல்களை விரைவாக பரிமாறிக் கொள்ள, தந்தி சேவையை, மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனினும், இணையதளத்தின் வருகை, ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரிப்பு போன்றவற்றால், மக்கள் மத்தியில், தந்தி சேவைக்கான மவுசு குறைந்து விட்டது.

கடந்த, 1853ம் ஆண்டு, இந்தியாவில் அறிமுகமான இந்த வசதி, சில ஆண்டுகளுக்கு முன் வரை, தகவல் பரிமாற்றத்திற்கு, பலராலும் பயன்படுத்தப்படும் சேவைகளில் ஒன்றாக இருந்தது.சில ஆண்டுகளாக, குறைந்த கட்டணத்தில், போன் மூலம் பேசும் வசதி, எஸ்.எம்.எஸ்., அனுப்பும் வசதி, "இ - மெயில்' மூலம் விரிவான தகவல் களை அனுப்புதல் போன்றவற்றை, அனைத்து தரப்பினரும் பின்பற்ற துவங்கியதை அடுத்து, தந்தி பயன்பாடு, வெகுவாக குறைந்து விட்டது. கடந்த, 160 ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ள இந்த சேவை, இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வருகிறது.அஞ்சல் துறையின் சார்பில் வழங்கப்பட்ட இந்த சேவை, கடந்த சில ஆண்டுகளாக, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் ஏற்று நடத்தி வருகிறது. வணிகரீதியில், லாபம் தராத இந்த சேவையை, ஜூலை, 15 முதல் நிறுத்திக் கொள்ள, பி.எஸ்.என்.எல்., முடிவு செய்துள்ளது.

இது குறித்து, மத்திய அரசிடம், அந்த நிறுவனம் அனுமதி கோரிய போது, பி.எஸ்.என்.எல்., நிறுவனமே முடிவெடுக்கலாம் என, அரசு கூறிவிட்டது. சுற்றறிக்கை: இதையடுத்து, ஜூலை, 15ம் தேதி முதல், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தந்தி இருக்காது. அடுத்த, ஆறு மாதங்களுக்கு, அரசின் ஆணைகள், சுற்றறிக்கைகள் மட்டுமே, தந்தி சேவை மூலம் அளிக்கப்படும். அதன் பிறகு, முழுமையாக, தந்தி சேவை நிறுத்தப்படும்

அமெரிக்காவின் தீவிர கண்காணிப்பில் முஸ்லிம் நாடுகள்!

இணையதளத்தைப் பயன்படுத்தி உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் பல்வேறு ரகசிய தகவல்களை சேகரிப்பது, இ-மெயில் விவரங்களை தெரிந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு வேலைகளை அமெரிக்க உளவு அமைப்புகள் மேற்கொண்டிருப்பது சமீபத்தில் வெளி உலகத்துக்கு தெரியவந்தது. இப்போது நாடுவாரியாக எந்தெந்த நாடுகளை அமெரிக்கா அதிகம் உளவு பார்த்து தகவல்களை சேகரித்துள்ளது என்ற விவரம் தெரியவந்துள்ளது.

இதில் ஈரான் முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் இருந்து கடந்த மார்ச் மாதம் மட்டும் 14 கோடி ரகசிய தகவல்களை அமெரிக்கா திரட்டியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக பாகிஸ்தான், ஜோர்டான் ஆகிய நாடுகளிடம் இருந்து அதிக தகவல்களை இணைய தளம் மூலம் அமெரிக்க உளவு அமைப்புகள் திருடியுள்ளனர். அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளாகக் கருதப்படும் அரபு நாடுகள் இப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக எகிப்தை, அமெரிக்கா அதிகம் கண்காணித்துள்ளது. இப்பட்டியில் 5-வது இடத்தில் உள்ள இந்தியாவில் இருந்து 6 கோடியே 30 லட்சம் முக்கிய தகவல்களை அமெரிக்கா ரகசியமாக சேகரித்துள்ளது. நாடுகளை எந்த அளவுக்கு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்பதை வண்ணங்கள் மூலம் அமெரிக்கா பிரித்து வைத்துள்ளது. இதில் பச்சை வண்ண குறியீடு கொடுக்கப்பட்டுள்ள நாடுகள் அதிகம் கண்காணிப்புக்கு உள்ளாகவில்லை.

சிவப்பு நிறம் குறியீடு உள்ள நாடுகள் அதிகம் கண்காணிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு நடுவே மஞ்சள், ஆரஞ்சு நிற குறியீடுகளில் நாடுகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் சிவப்புக்கு அடுத்தபடியாக உள்ள ஆரஞ்சு நிற எச்சரிக்கை குறியீட்டை அமெரிக்கா அளித்துள்ளது. இதனிடையே தங்களின் தொலைபேசி ஒட்டுக் கேட்பு செயல்களை நியாயப்படுத்தும் வகையில் அமெரிக்க அரசு பல தகவல்களை

ஜூன் 12, 2013

பிரீபெய்டு மின் கட்டண மீட்டர் வசதி -விரைவில் அறிமுகம்

செல்போன் வாடிக்கையாளர்கள் பிரீபெய்டு திட்டத்தை பயன்படுத்தி வருகிறார்கள். தங்கள் தேவைக்கு ஏற்றவாறு ரீசார்ஜ் செய்து பேசி வருகிறார்கள். மின்சாரத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும் இனி பிரீபெய்டு மூலம் மின் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. மராட்டியம், டெல்லியில் பிரீபெய்டு மீட்டர் திட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல தமிழ்நாட்டிலும் விரைவில் பிரீபெய்டு மின் கட்டண மீட்டர் வசதி முறையை அறிமுகப்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டு மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையத்தின் என்.ஜி.ஒ. இது குறித்து ஆலோசனை செய்து வருகிறது. நுகர்வோர் கட்டணம் செலுத்தி பிரீபெய்டு இணைப்பை பெறலாம். இதற்கான மீட்டரை மின்சார வாரியம் பொருத்தும். அதோடு அதற்கான கார்டும் வழங்கப்படும். மின்சாரத்தை பயன்படுத்தும்போது நாம் செலுத்திய பணம் குறைந்து வரும். பிரீபெய்டு மீட்டரில் 10 சதவீதம், பேலன்ஸ் இருக்கும் போது உஷார் ஒலி சத்தம் கேட்கும். உடனே நுகர்வோர் அந்த கார்டு மூலம் ஆன்லைனிலோ அல்லது கவுண்டர் மூலமோ ரீசார்ஜ் செய்துகொள்ள வேண்டும். இதன்மூலம் நுகர்வோர் தாங்கள் பயன்படுத்தும் மின் அளவுக்கு எவ்வளவு பணம் செலவாகும் என்பதை அறிய முடியும். அதற்கு ஏற்றவாறு மின்சாரத்தை பயன்படுத்தி சிக்கனப்படுத்திக் கொள்ளலாம்.

பிரீப்பெய்டு மீட்டர் மூலம் மின் திருட்டையும் தடுக்க முடியும் என்று அந்த அமைப்பின் அதிகாரி தெரிவித்தார். மேலும் அந்த அதிகாரி கூறும்போது பிரீபெய்டு மீட்டரின் விலை ரூ.2,500 ஆகும். இதை இலவசமாக பொருத்துவோம். நுகர்வோர் ரூ. 500 செலுத்தி பிரீபெய்டு கார்டை பெறலாம். ஆன் லைன் மூலமோ

ஜூன் 10, 2013

உம்ராஹ் விசா கட்டுப்பாடு - இரண்டு வாரங்கள் மட்டுமே அனுமதி!

சவூதி அரேபியாவின் ஹஜ் அமைச்சு உம்ராஹ் விசாக்களின் காலப் பகுதியை 14 நாட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக சவூதி அரேபியாவின் அரப் நியுஸ் இன்று செய்தி வெளியிடுள்ளது. தற்போது புனித மக்காவில் மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டுமான மற்றும் புனித கஹ்பாவை சுற்றும் பகுதியின் விரிவாக்கல் வேலைத்திட்டம் காரணமாகவே இந்த புதிய விதி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு சவூதி அரபியாவில் உள்ள உம்ராஹ் முகவர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள சவூதி தூதுவராலயங்கள் ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்ட சுற்று நிருபத்தின் அடிப்படையில், இந்த புதிய விதி நாளை திங்கள் கிழமையில் இருந்து அமுலுக்கு வருகின்றது. இந்த விதியின் அடிப்படையில், இனி வெளிநாடுகளில் இருந்து உம்ராஹ் செல்பவர்கள் இரு வாரங்களுக்கு மாத்திரமே உம்ராஹ் விசாவில் சவூதி அரேபிபியவுக்கு செல்லமுடியும்.

அடுத்த ஆண்டுமுதல் துபாயில் ஹலால் சான்றிதழ் கட்டாயம்!

அடுத்த அண்டு முதல் ஐக்கிய அரபு அமிர் ராஜ்யம் சகல உற்பத்தி பொருட்களிலும் ஹலால் சான்றிதழ் இருப்பது அவசியம் என அறிவித்துள்ளது.

துபாயை ஹலால் பொருளாதாரத்தின் தலைமையகமாக மாற்றும் ஐக்கிய அரபு அமிர் ராஜ்யத்தின் உப ஜனாதிபதியும் பிரதமருமான ஷேக் முஹம்மத் பன் ரசித் அல் மக்தூமின் திட்டத்தின் ஓர் அங்கமாகவே இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஹலால் ஒழுங்குவிதி பொதியின் கீழ் உணவுப் பொருட்களுக்கு மேலதிகமாக அழகுச் சாதனங்கள், வாசனைப் பொருட்கள், பிடைவைகள் மற்றும் உபகரணங்களுக்கும் ஹலால் சான்றிதழ் இருக்க வேண்டும். தற்போது ஐக்கிய அரபு அமிர் ராஜ்யத்தின் உணவு பொருட்களுக்கு ஹலால் என்பதனை உறுதிப்படுத்தும் மட்டுப்படுத்தப்பட்ட ஏற்பாடுகளே தற்போதிருப்பதாக அமிரேட்சின் தரப்படுத்தல் மற்றும் காலநிலை அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் முஹம்மத் சாலே பத்ரி தெரிவித்தார்.

அண்மையில் ஒஜாசி அமைப்பு சகல இஸ்லாமிய நாடுகளிலும் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் வாசனைப் பொருட்களுக்கு அமுல்படுத்தும் ஹலால் ஒழுங்கு விதியை வகுத்து இஸ்லாமிய நாடுகள் இதனைக் கட்டாயமாக அறிமுகப்படுத்த வேண்டுமென்றும் கேட்டிருந்தது. ஒவ்வொரு அமிரேட்டிலும் ஹலாலை உறுதிப்படுத்துவதற்காக

சிரியாவுக்கு உதவி! - ஐக்கிய நாடுகள் சபை!

ஐக்கிய நாடுகள் சபையின் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மனிதாபிமான அடிப்படையிலான மிகப் பெரிய நிதியுதவி சிரியாவுக்கு அளிக்கப்பட இருக்கிறது. சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த நிதியுதவி உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் ஒரு கோடி பேருக்குக் கிடைக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. சிரியாவில் கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் உள்நாட்டுப் போரில் சுமார் 15 லட்சம் பேர் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் 90,000 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சிரியாவுக்குள் மட்டும் சுமார் 70 லட்சம் பேர் நிதியுதவியை நம்பியிருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. சிரியாவில் போர் தொடர்ந்த அடுத்த தலைமுறையே இருக்காது என்று யுனிசெஃப் எச்சரித்துள்ள

பாஜக பிரசாரக்குழு தலைவராக மோடி! காங்கிரஸுக்கே சாதகம் -வீரப்ப மொய்லி

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன்னிறுத்தினால் காங்கிரஸ் கட்சிக்குத்தான் அது சாதகம் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிப்பதற்கு பாஜகவில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. பாஜகவில் ஜனநாயகக் கருத்துச் சுதந்திரம் கிடையாது. பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டால் அது நிச்சயம் காங்கிரஸுக்கு சாதகமாக அமையும். குஜராத்மதக் கலவரங்களால் லோக்சபா தேர்தலில் 30 கோடி சிறுபான்மையினரின் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கவிருக்கிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு

ஜூன் 09, 2013

பெண்கள் பள்ளிகளில் ஆசிரியைகள் மட்டுமே நியமனம்:தமிழக அரசு உத்தரவு

அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டுமே நியமிக்கப்படுவர் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான உத்தரவை பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் டி.சபீதா பிறப்பித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் நியமனத்தில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது.

எனவே பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இனி ஆசிரியர்களாகவும் தலைமை ஆசிரியர்களாகவும் பெண்கள் மட்டுமே நியமிக்கப்படுவர். இதேபோன்று ஆண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆண்கள் மட்டுமே ஆசிரியர்களாகவும் தலைமை ஆசிரியர்களாகவும் பணியமர்த்தப்படுவர். அதேநேரத்தில் ஆண்- பெண் இருபாலரும் படிக்கும் பள்ளிகளில் மட்டும் ஆண்களும் பெண்களும் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர் என பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் 3096 அரசு உயர்நிலைப்பள்ளிகளும் 2,595 அரசு மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இதுதவிர

ஜூன் 08, 2013

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம்

சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் ரா. கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களில் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர் மற்றும் பார்சி வகுப்பைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 2013-2014 கல்வி ஆண்டுக்கு கல்வி உதவித்தொகைப் பெற மாணவ, மாணவியரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். முந்தைய ஆண்டின் இறுதித் தேர்வில் மாணவர்கள் (9-ஆம் வகுப்பு நீங்கலாக) 50 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர்நலத் துறை மற்றும் இதர துறைகள், நலவாரியங்கள் மூலம் 2013-2014-ஆம் ஆண்டில் கல்வி உதவித்தொகை பெறுதல் கூடாது.

குடும்பத்தில் அதிகபட்சம் இருவருக்கு மட்டும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மாணவ, மாணவிகள் புதிய மற்றும் புதுப்பித்தலுக்கான விண்ணப்பப் படிவங்களை

மாலேகான் குண்டுவெடிப்பு:முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது! – மத்திய அமைச்சர்!

புதுடெல்லி: 2006-ஆம் ஆண்டு மாலேகானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் முஸ்லிம் இளைஞர்களை மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படையும், சி.பி.ஐயும் குற்றவாளிகளாக சேர்த்து கைதுச் செய்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் கூறியுள்ளார். இத்தகைய தவறுகள் இனி நடக்காது என்றும், இவ்வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு ஏஜன்சியிடம்(என்.ஐ.ஏ) ஒப்படைத்தது சரியான நடவடிக்கை என்றும் சிங் மேலும் தெரிவித்துள்ளார். இவ்வழக்கில் கடந்த மாதம் 22-ஆம் தேதி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் நான்கு ஹிந்துத்துவா தீவிரவாதிகள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

டான்சிங், ராஜேந்திர சவுத்ரி, மனோகர் நர்வாரியா, லோகேஷ் சர்மா ஆகிய ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் பங்கினை விவரிக்கும் இக்குற்றப்பத்திரிகையில், பலகுண்டுவெடிப்புகளில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள ஹிந்துத்துவா தீவிரவாதிகளான டாங்கே, ராம்ஜி கல்சங்கரா உள்ளிட்டோரின் பெயர்களும் விமர்சிக்கப்பட்டுள்ளன. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தயாரிக்கப்பட்ட வெடிக்குண்டுகளை மோட்டார் சைக்கிளில் பொருத்தி மாலேகான் மஸ்ஜிதுக்கு அருகில் வைத்ததாக வழக்கு. இக்குண்டுவெடிப்பில் 38 பேர் கொல்லப்பட்டனர். 125 பேருக்கு காயம் ஏற்பட்டது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த உடனேயே 13 அப்பாவிமுஸ்லிம் இளைஞர்களை கைதுச் செய்த மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ் இவ்வழக்கு விசாரணை முடிந்ததாக அவசர கதியில் வழக்கை மூடியது. பின்னர் இவ்வழக்கு அரசால் சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐயும், ஏ.டி.எஸ் கூறிய கதையையே திரும்ப கூறியது.

இந்நிலையில் இந்தியாவின் பல பகுதிகளில் நிகழ்ந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் பங்கு வெட்ட வெளிச்சமானதால் இவ்வழக்கின் விசாரணை

ஜூன் 07, 2013

கடலூர் மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாமல் இயங்கும் 44 பள்ளிகளை மூட உத்தரவு!!

கடலூர் மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாமல் இயங்கும் 44 மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009-ன் படி எந்த ஒரு மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியும் முதன்மைக்கல்வி அலுவலர் அல்லது மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அங்கீகாரம் பெறாமல் செயல்படக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரிடமிருந்து பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் 44 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவது தெரியவந்துள்ளது. அப்பள்ளிகளுக்கு 4 முறை காரணம் கேட்பு அறிவிக்கை அனுப்பப்பட்டும் எந்த பதிலும் கிடைக்காத நிலையில் இப்பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 2013-2014-ம் கல்வி ஆண்டில் இப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம்.

மூட உத்தரவிடப்பட்டுள்ள பள்ளிகள் விவரம்: அண்ணாகிராமம் ஒன்றியத்தில் அகரம் மற்றும் முத்துகிருஷ்ணாபுரம் ஆப்ரகாம், அக்கடவல்லி மற்றும் அருங்குணம்குச்சிபாளையம் பாரதி,

புதுப்பேட்டை ஜவஹர், எணதிரிமங்கலம் வைஷ்ணவி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி.

புவனகிரி ஒன்றியத்தில், கணேஷ்நகர் வின்வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி.

கடலூர் ஒன்றியத்தில், வண்டிப்பாளையம் விவேகானந்தா, பாதிரிக்குப்பம் சக்தி, வெள்ளக்கரை கே.பி.ஜீத்யாலயா, ரெட்டிச்சாவடி ஸ்டீபன், தூக்கணாம்பாக்கம் சரஸ்வதி,

வழிசோதனைப்பாளையம் ஜவஹர், சான்றோர்பாளையம் மற்றும் மணக்குப்பம் தாமோதரனார், ராமாபுரம் மாடர்ன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி.

விருத்தாசலம் வட்டத்தில் கோட்டேரி செம்பா மற்றும் அன்னை காளிகாம்பாள், கங்கைகொண்டான் மில்லர், புதுக்குப்பம் நேரு, கருவேப்பிலங்குறிச்சி ஜெ.வி.சக்ஸஸ், பேரளையூர் ஸ்ரீவிஷ்வா வித்யாலயா, ராஜேந்திரப்பட்டினம் பாரதி, சத்தியவாடி எஸ்டிஎஸ், எம்.பரூர் ஸ்டீபன் மற்றும் ஓம்சக்தி, திட்டக்குடி இந்தியன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி.

கம்மாபுரம் ஒன்றியத்தில் வி.குமாரமங்கலம் நியூ ஆக்ஸ்போர்டு, சேப்பளாநத்தம் புனித ஜோசப், பாலக்கொள்ளை நித்யமலர். 

காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்தில் மாணியம் ஆடூர் கிரசண்ட், மாமங்களம். அன்னை திலகவதி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி.

குமராட்சி ஒன்றியத்தில் சிதம்பரம் சிவசக்தி நகர் அன்னீஸ், மந்தக்கரை விவேகானந்தா, வடக்கொளக்குடி கெய்சான்,

சிதம்பரம் ஞாயிறுமடத்தெரு கந்தசாமி, லால்பேட்டை ஜக்கரியா, சிதம்பரம், சரஸ்வதி நகர், ராஜலட்சுமி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி . குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில்

சதக் அறக்கட்டளை மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர் செ.மு. ஹமித் அப்துல் காதர் வஃபாத்தானார்!!

தமிழகத்தில் பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரி, நர்சிங், பார்மஸி கல்லூரிகள், உயர்நிலைப்பள்ளி, அறிவியல் படிப்புடன் கூடிய மதரஸா உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட சமுதாய உயர் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் முஹம்மது சதக் அறக்கட்டளையின் தலைவர் மற்றும் பொருளாளருமான அல்ஹாஜ் முனைவர் செ.மு. ஹமித் அப்துல் காதர் ( வயது 81 ) அவர்கள் அலுவல் நிமித்தமாக புது தில்லி சென்றிருந்தபோது 06.06.2013 வியாழக்கிழமை மாலை 6.48 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு வஃபாத்தானார். ( இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் )

புதுதில்லியில் அல்ஹாஜ் செ.மு. ஹமித் அப்துல் காதர் இதன் விபரம் வருமாறு : அதிகமான சமுதாயக் கல்வி நிறுவனங்கள் இருந்தும் நம் சமுதாயத்திற்கென ஒரு மருத்துவக் கல்லூரி இல்லையே என்ற ஆதங்கத்தில் 200 படுக்கைகள் கொண்ட ஒரு மிகப்பெரிய மருத்துவமனையை ஏற்படுத்தியுள்ளார் அல்ஹாஜ் செ.மு. ஹமித் அப்துல் காதர். இம்மருத்துவமனையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுவதற்காக மத்திய சிறுபான்மை விவகாரங்களுக்கான அமைச்சர் திருமிகு கே. ரஹ்மான் கான் அவர்களை சந்திக்க தனது ஆழ்ந்த விருப்பத்தினை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் அவர்களிடம் கேட்டுக் கொண்டார். அதன்படி 05.06.2013 புதன்கிழமை சந்திப்பு நிகழ்வினை எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி.யின் ஏற்பாட்டில் மத்திய அமைச்சருடனான சந்திப்பும் சிறப்புடன் நடைபெற்றது.

மருத்துவக்கல்லூரி துவங்குவதற்கு முன்னேற்பாடாக மருத்துவமனை ஏற்படுத்துவது குறித்து பெருமகிழ்வடைந்தார் அமைச்சர் ரஹ்மான் கான். மருத்துவமனை திறப்பு விழாழ்வில் தான் நிச்சயம் பங்கேற்கிறேன் என்ற உறுதியினையும் அமைச்சர் ரஹ்மான் கான் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அப்துல் ரஹ்மான் எம்.பியின் ஏற்பாட்டில் இந்திய துணை ஜனாதிபதி திருமிகு. ஹமீது அன்சாரியினை மரியாதை நிமித்தமாக அல்ஹாஜ். செ.மு. ஹமித் அப்துல் காதர் அவர்கள் சந்தித்தார். அப்போது சமுதாயத்திற்கென மருத்துவக் கல்லூரி துவங்கப்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தினை தெரிவித்தார். துணை ஜனாதிபதி அவர்களும் அதற்காக தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்குடன் துணை ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து விட்டு, இத்தகைய நிகழ்வுகளை ஏற்பாடு செய்த வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மானுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து டெல்லியில் பிற அலுவல்களை முடித்து விட்டு 06.06.2013 வியாழன் மாலை சென்னை செல்வதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக டெல்லியில்

ஜூன் 05, 2013

சிறுபான்மையினர் கல்வி மேம்பாட்டிற்காக 5 பல்கலைக்கழகங்கள்!-மத்தியஅமைச்சர்

புதுடெல்லி:சிறுபான்மையினர்களின் கல்வி மேம்பாட்டுக்காக 5 பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும் என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறைஅமைச்சர் கே.ரஹ்மான் கான் கூறியுள்ளார். இது தொடர்பாக டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “சிறுபான்மையினர் கல்வி மேம்பாட்டுக்காக 5 பல்கலைக்கழகங்களை தொடங்குவது என முடிவு செய்துள்ளோம். இப்பல்கலைக்கழகங்கள் அமையவுள்ள இடங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

சிறுபான்மை மதத்தினருக்கு கல்வி அளிப்பதற்காகத் தொடங்கப்படும் இப்பல்கலைக்கழகங்களில் மதம் தொடர்பாக கவனம் செலுத்தப்படமாட்டாது. கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படும். நாட்டில் சிறுபான்மையினரின் வாழ்க்கைத் தரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித்த சச்சார் குழு, சிறுபான்மையினரின் கல்வி நிலை, எஸ்.சி., எஸ்.டி.,யினரின் நிலையை விட பின்தங்கியுள்ளது எனத் தெரிவித்துள்ளது. அதனால்தான் இப்பல்கலைக்கழகங்களைத் தொடங்க முடிவு செய்தோம்” என்றார். தலித் சமூகத்தில் இருந்து இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களை, கல்வி மற்றும் அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு வழங்க வசதியாக பட்டியல் இனத்தில் சேர்ப்பது குறித்து ரஹ்மான் கான் கூறியதாவது:”நியாயப்படி இக்கோரிக்கை சரியானதுதான். ஆனால், அரசியல் சாசன சட்டப்படி அவ்வாறு வழங்க முடியுமா என்பது குறித்து ஆராய வேண்டும்.

அரசியல் சாசனம் கூறுவதுதான் இறுதியானதாக இருக்கும்” என்றார்.அடுத்த ஆண்டு வரவுள்ள மக்களவைத்

மிஃராஜ் ஓர் அற்புதம்!!!

மிஃராஜ் என்பது நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதமாகும். வேறு எந்த மனிதருக்கும், ஏன் வேறு எந்த நபிக்கும் கூட வழங்கப்படாத மாபெரும் அற்புதமாக இந்த விண்ணுலகப் பயணம் அமைந்துள்ளது.

மிஃராஜ் ஓர் அற்புதம் மஸ்ஜிதுல் ஹராமிருந்து சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை அழைத்துச் சென்றவன் தூயவன் அவன் செவியுறுபவன் பார்ப்பவன். (17:1) ஓர் இரவில் மஸ்ஜிதுல் ஹராம் என்ற மக்காவிருந்து ஜெருஸலத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வரை அழைத்துச் சென்ற செய்தியை இவ்வசனத்தில் அல்லாஹ் கூறிக் காட்டுகிறான். ஒரேயொரு இரவில் இவ்வளவு பெரிய தொலைவைக் கடந்து செல்வது என்பது சாத்தியமற்ற செயல் என்று பலர் நினைத்தாலும் ரப்புல் ஆலமீனாகிய இறைவனுக்கு இது சாத்தியமானதே! அழகிய தோற்றமுடைய வலிமைமிக்கவர் (ஜிப்ரில்) அதைக் கற்றுக் கொடுக்கிறார். அவர் (தெளிவான) அடிவானத்தில் இருக்கும் நிலையில் நிலை கொண்டார். பின்னர் இறங்கி நெருங்கினார். அது வில்ன் இரு முனையளவு அல்லது அதை விட நெருக்கமாக இருந்நது. தனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அவன் அறிவித்தான். அவர் பார்த்ததில் அவர் உள்ளம் பொய்யுரைக்கவில்லை. அவர் கண்டது பற்றி அவரிடத்தில் தர்க்கம் செய்கிறீர்களா?. (53:5-12)

ஜிப்ரில் என்னும் வானவரை நபி (ஸல்) அவர்கள் முதன் முதல் சந்தித்ததை இறைவன் மேற்கூறிய வசனங்களில் கூறுகின்றான். இந்தச் சந்திப்பு நபி (ஸல்) அவர்களுக்கு முதன் முதல் வஹீ அறிவிக்கப்பட்ட போது நடந்தது. இந்த வசனங்களைத் தொடர்ந்து வரும் வசனங்களில் ஜிப்ரீலை மற்றொரு முறை நபி (ஸல்) அவர்கள் சந்தித்ததாகக் கூறுகிறான். ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார். அங்கே தான் சொர்க்கம் எனும் தங்குமிடம் உள்ளது. அந்த இலந்தை மரத்தை மூட வேண்டியது மூடிய போது, அவரது பார்வை திசை மாறவில்லை; கடக்கவுமில்லை. தமது இறைவனின் பெரும் சான்றுகளை அவர் கண்டார். (53:13-18) இந்தச் சந்திப்பு ஸித்ரத்துல் முன்தஹா என்னும் இடத்தில் நடந்ததாகவும் அந்த இடத்தில் தான் சுவர்க்கம் இருப்பதாகவும் கூறுகிறான். நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் என்னும் விண்வெளிப் பயணம் சென்றதைத் தான் இவ்வசனங்கள் கூறுகின்றன.

இல்லையெனில் வானுலகில் உள்ள ஸித்ரத்துல் முன்தஹாவுக்கு அருகில் நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீலைப் பார்த்திருக்க முடியாது. எனவே இதுவும் மிஃராஜ் பற்றியே கூறுகிறது. (முஹம்மதே) உமக்கு நாம் காட்டிய காட்சியை குர்ஆனில் மனிதர்களுக்கு சோதனையாகவே ஆக்கியுள்ளோம். (17:60) இவ்வசனத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு காட்சியைக் காட்டி அதை மனிதர்களுக்கு சோதனையாக அமைத்ததாக அல்லாஹ் குறிப்பிடுகிறான். நபி (ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு பல காட்சிகளைக் கண்டார்கள். அந்தக் காட்சிகளை மக்களிடம் சொன்ன போது மக்கள் அதை ஏற்க மறுத்தனர். நபி (ஸல்) அவர்களை ஏற்றிருந்த பலர் இந்த நிகழ்ச்சியைக் கூறிய பொழுது மதம் மாறிச் சென்றனர். அதைத் தான் இவ்வசனத்தில் மனிதர்களுக்குச் சோதனையாகவே அக்காட்சியை உமக்குக் காட்டினோம் என்று குறிப்பிடுகிறான்.

அக்காட்சியை நபி (ஸல்) அவர்களுக்குக் காட்டி அவர் மக்களுக்கு கூறும் பொழுது மக்கள் நம்புகிறார்களா? என்று சோதித்து உறுதியான நம்பிக்கை உள்ளவர்கள் யார்? பலவீன நம்பிக்கை உள்ளவர்கள் யார்? என்பதை அடையாளம் காட்ட இதைச் செய்ததாக இறைவன் குறிப்பிடுகிறான். எனவே நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் உண்மையான இறை நம்பிக்கையாளர்களைப் பிரித்து அடையாளம் காட்டிய நிகழ்ச்சியாக மிஃராஜ் என்னும் நிகழ்ச்சி

ஜூன் 03, 2013

எதிராளிகளை உபசரித்த லண்டன் பள்ளிவாசல் நிர்வாகம்!!

தமக்கு எதிராகப் போராட்டம் நடத்த வந்த கடும்போக்காளர்களுக்கு டீ மற்றும் பிஸ்கட் கொடுத்து ஒரு பள்ளிவாசல் உபசரித்திருக்கிறது. பிரிட்டனில் நடந்த இந்தச் சம்பவத்தை பல தரப்பினரும் பாராட்டியிருக்கிறார்கள். அண்மையில், லண்டனில் பிரிட்டிஷ் படைச் சிப்பாய் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து பல இடங்களிலும் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டதுடன், அவற்றுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் நடந்திருக்கின்றன.

இவ்வாறான பல ஆர்ப்பாட்டங்கள் வலதுசாரிக் குழுவான ''இங்கிலிஸ் டிபன்ஸ் லீக்'' என்னும் அமைப்பின் ஆதரவாளர்களால் நடத்தப்பட்டுள்ளன. அப்படியான ஒரு ஆர்ப்பாட்டம் யோர்க்கில் இருக்கின்ற புல் லேனில் உள்ள பள்ளிவாசலுக்கு எதிராகவும், கடந்த ஞாயிறன்று நடத்தப்பட்டுள்ளது. அந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்காக 6 பேர் அங்கு கூடியுள்ளனர். அந்த ஆர்ப்பாட்டம் நடக்கவிருப்பதை அறிந்து அந்தப் பள்ளிவாசலின் ஆதரவாளர்கள் சுமார் 100 பேரும் அங்கு திரண்டுவிட்டனர். ஆனால் அந்த பள்ளிவாசலைச் சேர்ந்தவர்களோ அந்த ஆர்ப்பாட்டக்காரர்களை உள்ளே அழைத்து அவர்களுக்கு டீ, பிஸ்கட் கொடுத்து உபசரித்து, அவர்களுடன் கால்பந்தும் விளையாடியிருக்கிறார்கள்.

இதனை, யோர்க் பிராந்தியத்துக்கான ஆயர் டாக்டர் ஜோண் செண்டமு அவர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளார். ''டி, பிஸ்கட், கால்பந்து என்பது யோர்க் பகுதிக்கான ஒரு பிரத்தியேக உபசரிப்பு முறை'' என்று அவர் பாராட்டியுள்ளார். கடும்போக்கு கருத்துக்களுடன் வருபவர்களை தணிக்க இது மிகவும் சிறப்பான உபசரிப்பு என்றும் அவர்கூறியுள்ளார்.
-source:Asiananban

பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை மாணவர் சேர்க்கை; விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு‏

சென்னை: தனியார் சுயநிதி, மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை மாணவர்களை சேர்ப்பதற்கான இறுதி தேதியை 2 வாரங்களுக்கு நீட்டித்து மெட்ரிக்குலேஷன் இயக்குனரகம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் சுயநிதி பள்ளிகள் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் ஆரம்ப வகுப்புக்களில் 25 சதவீதம் இடங்களில் ஏழை மாணவர்களை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும். அந்த மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசு ஏற்றுக்கொள்ளும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

இதையடுத்து கடந்த மே மாதம் 3ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை இதற்கான விண்ணப்பங்களை பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று மெட்ரிக்குலேஷன் கல்வி இயக்குனரகம் அறிவித்தது. ஆனால் பெரும்பாலான பள்ளிகள், 25 சதவீதம் இடங்களில் ஏழை மாணவர்களை சேர்த்தால் நன்கொடை கிடைக்காது, மேலும் அரசு நிர்ணயித்த குறைந்த கல்வி கட்டணமே கிடைக்கும் என்று ஏழை மாணவர்களுக்கு விண்ணப்பங்களை தராமல் இழுத்தடித்தன. மே மாதம் 9ஆம் தேதிக்கு பிறகு பள்ளிக்கு சென்ற பெற்றோர்களிடம் இறுதி தேதி முடிந்து விட்டது என்று காரணம் சொல்லி தனியார் பள்ளிகள் திருப்பி அனுப்பின. இதனால் பல தனியார் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்படாமலே இருந்தன. தனியார் பள்ளிகளின் இந்த மோசடி நாடகத்தை எதிர்த்து கல்வியாளர்கள் குரல் கொடுத்தனர். இதை தொடர்ந்து மெட்ரிக்குலேசன் கல்வி இயக்குனரகம் இன்று அதிரடியாக ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், சிறுபான்மை அல்லாத தனியார் சுயநிதி மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் ஆரம்ப நிலை வகுப்புகளில் 25 சதவீதம் இடங்களை ஏழை மாணவர்களை சேர்க்க வேண்டும். குறிப்பாக ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கு குறைவாக உள்ள

ஜூன் 01, 2013

இஸ்லாத்திற்கு புறம்பான உருஸ் விழா!!லால்பேட்டையில் கடையடைப்பு போராட்டம்!

லால்பேட்டையில் நடந்து வரும் உருஸ் விழாவை கண்டித்து ஜமாத் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.அப்துல் பஷீர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இவரது நினைவு தினத்தை அவரது மகன்கள் ஒவ்வொரு ஆண்டும் உருஸ் விழாவாக நடத்துகின்றனர். மூன்று நாட்கள் நடக்கும் இவ்விழாவை நடத்த லால்பேட்டை அனைத்து ஜமாத் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து கோர்ட் அனுமதி பெற்று விழா நடத்தப்பட்டு வருகிறது. லால்பேட்டையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்த விழாவின் போது ஜமாத் அமைப்பினர் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்ததால் கலவரம் ஏற்பட்டது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் போலீஸ் பாதுகாப்புடன் விழா நடக்கிறது. இந்தாண்டு விழா நேற்று முன்தினம் போலீஸ் பாதுகாப்புடன் துவங்கியது. விழாவை கண்டித்து அனைத்து ஜமாத் அமைப்பினர் நேற்று வெள்ளிக்கிழமை காலை 6 மணிமுதல் இன்று சனிக்கிழமை காலை 6 மணிவரை கடையடைப்பு போரட்டம் நடத்தினர்.

-source:lalpetexpress

யுனெஸ்கோவின் இளம் விஞ்ஞானி விருது பெரும்! - இந்தியாவின் பிலால் ஹபீப்!

உலகில் கல்வி, கலச்சாரம், அறிவியல்களின் மேம்பாட்டிற்காக செயல்படும் ஐ.நா. அமைப்பான யுனெஸ்கோவின் தலைமையகம் பிரான்ஸ் தலைநகர் பாரசில் அமைந்துள்ளது. இங்கு 27-30 தேதி வரை யுனெஸ்கோ அமைப்பின் நிகழ்ச்சிகள் நடந்தன. அப்போது யுனெஸ்கோ அமைப்பின் இளம் விஞ்ஞானிகளுக்கான 6 விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் இந்தியாவை சேர்ந்த பிலால் ஹபீப் என்ற உத்தரகாண்ட் இளைஞரும் ஒருவர். சுற்றுச்சூழல் கண்காணிப்பு குறித்து அவரின் ஆராய்ச்சிக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது ஆராய்ச்சியை ஊக்கப்படுத்தும் நோக்கில் அவருக்கு 5000 டாலர் பரிசும் அளிக்கப்படும். மேலும் மனிதன் மற்றும் உயிர்க்கோள திட்டத்தின் அமைப்பும் கூடுதல் பரிசை வழங்கும்.

source:Asiananban

வீராணம் ஏரி வறண்டது வாத்து கூடாரமாக மாறிய அவலம்

வீராணம் ஏரி
வீராணம் ஏரிக்கு கீழணையிலிருந்து வடவாறு வழியாக தண்ணீர் வரும். ஏரியின் மொத்த கொள்ள லவு 47.50 அடியாகும். ஏரியில் தேக்கப்படும் தண்ணீர் மூலம் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன. சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணியும் நடைபெற்று வரும். இந்த ஆண்டு பருவமழை பெய்யாததால் ஏரி முழு கொள்ளலவை எட்டவில்லை.

மேலும் சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணியும் விரைவாக நிறுத்தப்பட்டது. ஏரி மிக வேகமாக இந்த ஆண்டு வறண் டது. ஏரி வறண்டதால் இந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் கிரிக்கெட் விளையா டும் மைதானமாக ஏரியை பயன்படுத்துகின்றனர். கந்தகுமாரன் அருகே ஏரியில் சிறு சிறு பள்ளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த தண்ணீரை வெளி மாவட்டங்களிலிருந்து வாத்து மேய்ப்பதற்கு வந்தவர்கள் வாத்துக்களை கோடை வெப்பத்தை தணிக்கும் பொருட்டு தண்ணீரில் மேய்த்து வருகின்றனர். ஏரியில் தண்ணீர் தேங்கியுள்ள பள்ளங்களுக்கு அருகே வாத்து மேய்ப்பவர்கள் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். ஏரி வறண்டதால் வாத்து மேய்ப்பவர்கள் தங்குவதற்கு வசதியாக உள்ளது என கூறப்படுகிறது. இதுவரை இதுபோன்று ஏரி வறண்டதில்லை என