தமிழக மீனவர்கள் மீண்டும் சிறைப் பிடிப்பு !
ரயில் கட்டணம் உயர்கிறது!!
டீசலும் விலை ஏற்றம் !!!புதிய பிஜேபி ஆட்சி என்பது இதுதான்
காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக் குக் கூட்டணியின் ஆட்சி மீது கூறப்பட்ட அத்தனைக் குற்றச்சாற்றுகளை யும், பிஜேபி தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியும் தொடர்ந்து செய்யத் தொடங்கிவிட் டது. குறிப்பாக தமிழக மீனவர்கள் சிறைச்பிடிப்பு; டீசல் விலையேற்றம், ரயில் கட்டண உயர்வு அறிவிப்புகள் வெளிவரத்தொடங்கி விட்டனவே!
25 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு! தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கைக் கடற்படை சிறைப்பிடித்து அட்டூழியத்தை மீண்டும் காட்டியுள்ளது. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற போது சார்க் நாடுகளின் தலைவர்கள் என்ற அடிப்படையில் இலங்கை, பாகிஸ்தான் அதிபர் மற்றும் பிரதம ருக்கு அழைப்பு விடுக்கப் பட்டதாகக் கூறப்பட்டது. இதனால் நல்லெண்ண நடவடிக்கையாக 151 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுதலை செய்தது. இதைப் பார்த்து இலங்கை அதிபர் ராஜபக் சேவும் தங்களது நாட்டு சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிப்போம் என்று அறிவித்ததார். அதேபோல் இந்தியாவும் ஆந்திரா, ஒடிசா மாநில சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்தது. அதே நேரத்தில் தமிழக மீனவர்கள் மற்றும் ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதிகளை கண்டிப்பாக
நிறைவேற்ற வேண்டும் என்று ராஜபக்சேவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் மீன் பிடித் தடைக் காலம் முடிந்த பின்னர் நேற்றுதான் மீனவர்கள் கடலுக்கு சென் றனர். பாக் ஜலசந்தியில் மீன்பிடித்துக் கொண்டி ருந்த தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கைக் கடற் படை திடீரென சுற்றி வளைத்து தாக்கியது. தமிழக மீனவர்களின் மீன்பிடி வலைகளை அறுத்து வீசி யது. மேலும் 25 மீனவர் களையும் கைது செய்து அவர்களது 6 விசைப்படகு களையும் சிறைப்பிடித்து சென்றுள்ளது ராஜபக்சே வின் கடற்படை.
ரயில் கட்டணம் உயர்வு ரயிலில் அபாயச் சங்கிலி உண்டு - ஆபத்து காலத்தில் இழுத்து ரயிலை நிறுத்தலாம். ஆனால், ரயில் கட்டணத்தை உயர்த்தும் அபாயம் அல்லவா ஏற்பட்டு விட்டது? எதைப் பிடித்து இழுப்பது? பிஜேபியைச் சேர்ந்த ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா - ரயில் கட்டணம் உயரும் என்று அறிவிப்புக் கொடுத்துள் ளார். பழைய அரசு ரயில் கட்டணத்தை உயர்த்த தவறி விட்டதாம் - அத னால் இந்த ஆட்சியில் கட்டண உயர்வாம்! ரயில் கட்டணத்தை உயர்த்தாதது பழைய ஆட்சியின் தவறாம் - எப்படி இருக்கிறது?
டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்வு டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த் தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. மாநிலங்கள் விதிக்கும் வரிகள் சேர்க்கப்படாததால் இந்த விலை உயர்வு, மாநில வாரியாக வேறுபடும். எண்ணெய் நிறுவனங்களுடன் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சனிக்கிழமை நடத்திய ஆலோசனைக்குப் பிறகு இந்த விலை உயர்வு முடிவு எடுக்கப்பட்டது. டீசலுக்கு அளிக்கப்படும் மானியத்தால் மத்திய அரசுக்கு ஏற்படும் இழப்பை குறைப்பதற்காக கடந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மாதந் தோறும் டீசல் விலையை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தும் திட்டத்தை 2013ஆம் ஆண்டு கொண்டு வந்தது.
அந்தத் திட்டத்தின் அடிப்படையில், மத்தியில் புதிதாக அமைந்துள்ள பாஜக அரசும் இந்த விலை உயர்வை மேற்கொண்டுள்ளது. இதனால் மாதந்தோறும் டீசல் விலை உயர்வுத் திட்டம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. கடந்த ஆண்டு ஜன வரி மாதம் முதல் 15 முறை டீசல் விலை உயர்த்தப் பட்டுள்ளது. அதன் மூலம் லிட்டருக்கு இதுவரை ரூ. 9.55 காசுகள் உயர்ந்துள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...