எதிர்காலச் சிந்தனை எல்லா மனிதரிடத்தும் நிறைந்திருப்பதைப் பார்க்கிறோம். படித்தவனோ, பாமரனோ, பணக்காரனோ, ஏழையோ எல்லோருக்குள்ளும் ஓர் கனவு இருக்கிறது. அதை விரைந்து நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென்ற உந்துதலும் மனிதர்களிடத்தில் காண்கிறோம்...
ஆனால் இந்த எதிர்காலச் சிந்தனை என்பது இவ்வுலக பலாபலன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது அதற்குண்டான தயாரிப்புகளிலேயே பலர் மோகம் கொண்டிருப்பதையும், மூழ்கியிருப்பதையும் பார்க்கிறோம்.
ஆனால் இந்த எதிர்காலச் சிந்தனை என்பது இவ்வுலக பலாபலன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது அதற்குண்டான தயாரிப்புகளிலேயே பலர் மோகம் கொண்டிருப்பதையும், மூழ்கியிருப்பதையும் பார்க்கிறோம்.
முழுவீச்சுடன் செயல்திட்டங்களை வகுப்பதில் பலர் கொண்டிருக்கும் ஆர்வம் இயற்கையான மனித உணர்வு களுக்கும் உறவுகளுக்கும் கூட முக்கியத்துவம் கொடுக்காமலிருப்பதை சமயங்களில் நாம் காணலாம். இது நாளடைவில் நம்முள் இறைவன் வைத்திருக்கும் மனித மாண்புகளை குழிதோண்டிப் புதைத்துவிடுமோ என்ற அச்சம் நம்முள் எழாமலில்லை.
உலக வாழ்வில் எதிர்காலச் சிந்தனை கூடாது என்று நாம் சொல்லவில்லை. அதுவும் வேண்டும். அதனூடே யாராலும் அழிக்க முடியாத உண்மைகளாய் இருக்கும் மரணம்,மண்ணறை வாழ்வு,மறுமை பற்றிய அந்த எதிர்காலச் சிந்தனை நம்முள் எத்தனை தூரம் ஆழமாய் வேரூன்றி யுள்ளது.அதற்கான தயாரிப்பில் நாம் எந்தளவு முனைப்புடன் முன்னேற்பாடுகளைச் செய்துள்ளோம் என்பதை நம்முள் ஒவ்வொருவரும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். அப்படி இந்த உலகில் வாழ்வதற்காக, தன்னையே தியாகம் செய்து,அதற்காக சிந்தித்து, அதனடிப்படையில் செயல்பட்டு வரும் மனித சமூகம்,தான் மரணித்தவுடன் தனக்கு ஏற்படப் போகும் வாழ்விற்காக என்ன சம்பாதித்து வைத்துள்ளோம் என்பதை நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கண்ணியத்திற்குரிய இறைவன் கூறுகிறான்:
நம்பிக்கை கொண்டோரே! நாளைக்கு என தாம் செய்த வினையை ஒவ்வொருவரும் கவனிக்கட்டும். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் (அல்குர்ஆன் : 59:18)
தாம் எதற்காக படைக்கப்பட்டோம், எதற்காக நமக்கு வாழ்வும் மரணமும் ஏற்படுகிறது என்பதைப் பற்றி மறந்து விட்ட நிலையில், நம்மை படைத்த எல்லாம் வல்ல இறைவன் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.
உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக தான் மரணத்தையும் வாழ்வையும் அவன் படைத்தான் (அல்குர்ஆன்: 67:2)
இந்த உலகில் மனிதன், தன் தாயின் வயிற்றில் இருந்து பிறந்து, வளர்ந்து, திருமணம் புரிந்து வாழ்ந்து மரணிப்பது என்பது சம்பிரதாய வாழையடி வாழையாக வரக்கூடிய சுழற்சியாக அமைந்து விட்டது.
ஆனால் இறைவன் இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் ஒரு மனிதன் எப்படி தன்னுடைய வாழ்வை அமைத்துக் கொள்கிறான், நன்மையான செயல்களை செய்கின்றான் என்பதை சோதித்துப் பார்க்கும் பரீட்சைத் தளமாக தான் ஆக்கியுள்ளான். அதாவது இறைவனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு, அடிபணிந்து, அவன் வழியில் நல்ல செயல்கள் செய்கின்றோமா? என்பதை சோதித்துப் பார்க்கும் களம்தான் இவ்வுலக வாழ்க்கை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
மேலும் நாளைய தினம் அதாவது மறுமை நாளில் அல்லாஹ்வை சந்திக்கும்போது, அவனின் கேள்விகளுக்கு என்ன பதில் தரப்போகிறோம் என்பதை சிந்திக்க வேண்டும்.
ஜின், மனித சமுதாயமே! உங்களுக்கு என் வசனங்களை எடுத்துக் கூறி இந்த நாளை நீங்கள் சந்திக்கவிருப்பதை உங்களுக்கு எச்சரிக்கை செய்யும் தூதர்கள் உங்களில் இருந்து உங்களிடம் வரவில்லையா? (என்று இறைவன் கேட்பான்).எங்களுக்கு எதிராக நாங்களே சாட்சி கூறுகிறோம் என்று அவர்கள் கூறுவார்கள். இவ்வுலக வாழ்வு அவர்களை மயக்கி விட்டது. (ஏக இறைவனை) மறுத்தோராக இருந்தோம் எனத் தங்களுக்கு எதிராக அவர்கள் சாட்சியமளிப்பார்கள்(அல்குர்ஆன்: 6:130)
மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள். தந்தை மகனைக் காக்க முடியாத, மகன் தந்தையைச் சிறிதும் காப்பாற்ற இயலாத நாளை அஞ்சுங்கள்! அல்லாhஹ்வின் வாக்குறுதி உண்மையானது. இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றி விட வேண்டாம். ஏமாற்றுபவனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை ஏமாற்றி விட வேண்டாம். (அல்குர்ஆன்: 31:33)
ஏனெனில் ஏமாறுதல் என்பது மனிதர்களுக்குப் பல வகையிலும் நிகழக்கூடியது. மனம் மனிதனை ஏமாற்றும். வேண்டாத பல எண்ணங்களுக்கு