Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 31, 2012

கொள்ளுமேடு கடைத் தெருவில் தவ்ஹீத் கிளை நடத்திய தெரு முனைப்பிரச்சாரம் ...


 நமதூர் கொள்ளுமேட்டில் தவ்ஹீத் கிளையின் சார்பில் இன்று 31.01.2012 மகரிபிற்கு பிறகு அமீரகதிதிலுருந்து சென்றுள்ள சகோதரர் ஹுமாயுன் கபீர் மற்றும் முஹம்மது மாருப் தலைமையிலும், முஹம்மது தாரிப் முன்னுரை  வழங்க தெரு முனைப்பிரசாரம் நடந்தது .

சகோதரர் சபி மன்பயி அவர்கள் மவ்லூதின் அபத்தங்கள் பற்றியும் அதனால் ஏற்படும் சிர்க்குகள்  பற்றியும் அழகான முறையில் ஒரு பேருரை நிகழ்த்தினார் மேலும் தவ்ஹீத் ஜமாஅத் நடத்த இருக்கும் முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டத்திற்கு (பிப்ரவரி'14) அழைப்பு விடுத்தும் உரை நிகழ்த்தினார். திரளான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அல்ஹம்து  லில்லாஹ்......... 

பிளாஸ்டிக்கில் 10 ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு


ரூபாய் நோட்டுகளை பிளாஸ்டிக் வடிவில் அச்சிடும் திட்டத்தின் சோதனை முயற்சியாக 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடுகிறது.
நாட்டில் கள்ள நோட்டுகள் பிரச்சினையை தவிர்க்கவும், கரன்சிகள் கிழியாமல் தடுக்கவும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.


இதன் முதற்கட்டமாக குறைந்த அளவில் 10 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு சோதனை நடத்த ரிசர்வு வங்கி முடிவு செய்துள்ளது.
10 ரூபாய் நோட்டுகளை அச்சிட்ட பின்பு இந்திய பருவ நிலை மாற்றங்களால் அதற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் பரிசோதிக்கப்படும். பின்னர் மத்திய அரசின் அனுமதி பெற்று அதிகளவில் பிளாஸ்டிக் கரன்சி அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.


இதுபற்றி சண்டிகரில் ரிசர்வ் வங்கியின் கூடுதல் பொது மேலாளர் மங்களா கூறுகையில், பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகள் இப்போதுள்ள காகித நோட்டுகளை விட நீண்ட காலம் உழைக்கக் கூடியது.


அதிக வெப்பம், கடும் குளிர், கடலோர பகுதிகள் என பல பருவமுறைகள் கொண்ட நம் நாட்டில் முதற் கட்டமாக 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளின் தாக்குபிடிக்கும் தன்மை சோதனை செய்யப்படும்.


அது வெற்றிகரமாக அமைந்தால் அரசு அனுமதி பெற்று பிளாஸ்டிக் கரன்சி அச்சிட்டு வெளியிடப்படும். எனினும், அதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தடைக்கு பதில் தடை: ஈரான்

ஐரோப்பிய யூனியனின் தடைக்கு பதிலாக தடை விதிப்போம் என ஈரான் எச்சரித்துள்ளது.


அணுசக்தி திட்டத்தை ஈரான் கைவிடாததை கண்டித்து ஈரானில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதிச் செய்வதை வருகிற ஜூலை மாதத்தில் பெருமளவில் குறைக்க ஐரோப்பிய யூனியன் தீர்மானித்தது.


இதற்கு பதிலடியாக ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு கச்சா எண்ணெயை வழங்குவதை முற்றிலும் நிறுத்தும் நடவடிக்கையை உடனடியாக அமுல்படுத்த தயங்கமாட்டோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இன்று நடைபெறும் பாராளுமன்ற கூட்டத்தில் இவ்விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படும் என ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய யூனியனின் தடையின் காரணமாக அதிகமான இழப்பு ஐரோப்பிய நாடுகளுக்குதான் ஏற்படும் என ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் தெரிவித்துள்ளார்.

மேட்டூர் அனல் மின் நிலையத்தின் சோதனை இயக்கம் தொடக்கம்


நவீன தொழில் நுட்பத்துடன் மேட்டூரில் புதிதாக அமைத்துள்ள 600 மெகாவாட் அனல் மின் நிலையத்தின் சோதனை இயக்கம் இன்று தொடங்கியது.
தமிழ்நாட்டில் மேட்டூரில் 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலையம்(தெர்மல்) அருகில் 3,550 கோடி ரூபாய் செலவில் நவீன தொழில்நுட்பத்துடன் புதிதாக 600 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.


இந்த புது அனல் மின் நிலையத்தின் முதல்கட்ட கொதிகலன் சோதனை, இன்று கொதிகலனில் நீரை சூடாக்கி அதில் இருந்து அதிக அழுத்தத்துடன் நீராவியை வெளியேற்றி சோதனை நடத்தப்படுகிறது.


கொதிகலன் சோதனை 10 நாட்கள் நடக்கும். தொடர்ந்து அடுத்த கட்ட சோதனைகள் நடைபெறும். சோதனைகள் முடிந்து மின் உற்பத்தி தொடங்க இன்னும் ஆறு மாதங்களாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முஸ்லிம்களைப் பற்றி இனி துவேஷமாக எழுதமாட்டேன்: சு.சாமி!

இனிமேல் முஸ்லிம்கள் குறித்து துவேஷமாக எதுவும் எழுத மாட்டேன்" என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சாமி எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தைக் கொடுத்துள்ளார்.
"முன்னர் முஸ்லிம்களின் வாக்குரிமையைப் பறிக்கவேண்டும்" என்று அவர் எழுதியிருந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் பிணை கேட்டு விண்ணப்பித்திருந்தார். இவ்வாறு அவர் எழுதிக்கொடுத்ததால், அவருக்குப் பிணை வழங்கப்பட்டது.

"இந்தியாவில் வசிக்கும் முஸ்லீம்களின் வாக்குரிமையைப் பறிக்க வேண்டும்" என்பது உள்ளிட்ட பல்வேறு துவேஷக் கருத்துக்களுடன் கூடிய கட்டுரையை முன்பு சுப்ரமணிய சாமி எழுதியிருந்தார். இதற்கு இந்திய முஸ்லிம்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும், சு.சாமியின் மதத்துவேஷம் காரணமாக, தனது பல்கலைகழகத்தில் பாடம் எடுப்பதற்கும் ஹார்வர்ட் பல்கலைகழகம் தடை விதித்தது. துவேஷக் கருத்து எழுதியதால் சாமி மீது டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.

இவ்வழக்கில் சுப்ரமணிய சாமி பிணை கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகினார். நீதிபதி முன்பாக இனிமேல் இதுபோன்ற கட்டுரைகளை எழுத மாட்டேன் என்று சாமி எழுதிக் கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து அவருக்குப் பிணை வழங்கிய நீதிபதி, "கைது செய்யப்பட்டால் ரூ. 25,000 அபராதம் செலுத்தி பிணையில் வெளிவரலாம்" என்று அவருடைய மனுமீது தீர்ப்பு கூறினார்.

எகிப்து:நம்பிக்கையை ஏற்படுத்தும் மாற்றங்கள்

ஜனநாயகத்திற்காக போராடிய லட்சக்கணக்கான அரபுக்களின் விருப்பங்கள் கிட்டத்தட்ட நிறைவேறும் வகையில் எகிப்தி தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. வாக்காளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் சிக்கலான தேர்தல் நடைமுறையை எகிப்திய மக்கள் எளிதாக கையாண்டு இஸ்லாமிய கட்சிகளுக்கு பெரும்பான்மையை அளித்து தாங்கள் யார் பக்கம்? என்பதை தெள்ளத் தெளிவாக அறிவித்துவிட்டனர்.

பாராளுமன்றத்தில் எகிப்தின் விவகாரங்களை இனி கவனிப்பது இஃவனுல் முஸ்லிமீன் என்ற முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் அரசியல் கட்சியான ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டி பார்டி ஆகும். நீண்டகாலமாக அரபு சர்வாதிகாரிகளும், அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியவாதிகளும் பயங்கரவாத பட்டம் சூட்டிய இஃவானுல் முஸ்லிமீன் அரபு சமூகத்தின் இதயங்களில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதன் மறுக்கமுடியாத அறிகுறிகள் அங்கே இருந்து நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

காந்திப் படுகொலையும்! ஹிந்துத்துவா அரசியலும்!

சுதந்திர இந்தியா ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 2-ஆம் தேதியை காந்தி பிறந்த தினமாகவும், ஜனவரி 30-ஆம் தேதியை இரத்தசாட்சி தினமாகவும் அனுஷ்டித்து வருகிறது. ஆனால், காந்தி ஏன் கொல்லப்பட்டார்? என்பது மறந்துபோன ஒன்றாக மாறிவிட்டது.

காந்தி என்ற மகாத்மா, அவரைக் கொன்ற கொலைகாரன் கோட்ஸே, அவனது கும்பல் பரப்புரைச் செய்த அரசியல் சித்தாந்தம், அன்று நீடித்த தேசிய சூழல், சர்வதேச சூழல்கள், நீதிமன்றத்தில் கோட்ஸே வெளியிட்ட காரணங்கள்-ஆகியவற்றை இணைக்க முயன்றால் பல இடங்களில் பொருத்தமில்லாமையை நாம் உணரலாம். ஆகையால் காந்தி படுகொலை குறித்த மீளாய்வில் கூடுதலாக ஏதேனும் கூறவேண்டியது அவசியமாகும்.

1966-ஆம் ஆண்டுவரை காந்தி படுகொலை குறித்த ஆவணங்கள் மறைத்து வைக்கப்பட்டதற்கு மக்களின் மறதிக்கு நீண்ட ஆயுள் உண்டு என்பதுதான் காரணமா?

ஜனவரி 30, 2012

மனித உரிமை மீறல்களை தடுப்பதில் இந்தியா தோல்வி – ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்


நியூயார்க்:மனித உரிமை மீறல்களை தடுப்பதில் இந்தியா தோல்வியை தழுவியுள்ளதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற சர்வதேச மனித உரிமை இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியாவில் கஸ்டடி மரணங்களும், போலீஸ் சித்திரவதைகளும் அதிகரித்துள்ளது. சிறுபான்மை மக்களை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்ட சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இந்திய அரசு தோல்வியை தழுவியுள்ளது என்று மனித உரிமைகளைக் குறித்த 2011 ஆம் ஆண்டு அறிக்கையில் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த திங்கள் கிழமை இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

ஜம்மு-கஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்கள் ஆகியவற்றில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் பாதுகாப்பு அதிகாரிகள் பெரும்பாலும் பாதுகாக்கப்படுகிறார்கள். மனித உரிமை மீறல் குற்றங்களில் ஈடுபடுவோர் ஒரு போதும் தண்டனையில் இருந்து தப்பிக்க இடம் அளிக்கக் கூடாது. சித்திரவதைகளுக்கு பின்னால் யார் செயல்படுகின்றார்கள் என்பது தெளிவான பிறகும் அவர்களை விசாரணைச் செய்வதில் இந்தியா தோல்வியை தழுவியுள்ளது.

அமீர்கான்:சிறையில் சீரழிக்கப்பட்ட 14 ஆண்டுகால வாழ்க்கை


புதுடெல்லி:எந்த குற்றமும் செய்யாமல் பள்ளிப் பருவத்தில்(19-வயதில்) கைது. 14 ஆண்டுகள் தனிமைச் சிறை வாழ்வு. 20 ஜோடிக்கப்பட்ட குண்டுவெடிப்பு வழக்குகள். தளர்வாதத்தால் சோர்ந்து போன தாய். மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை நினைத்து மனம் உடைந்து மாரடைப்பால் மரணமடைந்த தந்தை.-இந்தியாவில் ஓர் அப்பாவி முஸ்லிமின் வாழ்க்கை எவ்வாறெல்லாம் சீரழிக்கப்படுகிறது என்பதற்கு அமீர்கான் மீண்டும் ஒரு உதாரணமாக திகழ்கிறார்.

1998-ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி பொய் குற்றச்சாட்டை சுமத்தி சட்டத்திற்கு புறம்பான முறையில் டெல்லி போலீசாரால் அமீர்கான் பிடித்துச் செல்லப்பட்டார். மைமூனாபீ அமீர்கானின் தாயார் ஆவார். மூளையில் இரத்த நாளம் உடைந்து தளர்வாத நோயால் பாதிக்கப்பட்ட அவர் தனது மகனை 14 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்போம் என கருதவில்லை.

ஜனவரி 9, 2012 ஆம் ஆண்டு மகன் சிறையிலிருந்து விடுதலையான பிறகு அவரால் தனது மகிழ்ச்சியை உடனடியாக வெளிப்படுத்த இயலவில்லை. கடுமையான முயற்சிக்கு பிறகே வார்த்தைகள் உடைந்து போய் அவரிடமிருந்து வெளியாகின.

ஜனவரி 29, 2012

ஈரான் அணுசக்தி நிலையங்களை அழிக்க அமெரிக்காவிற்கு சக்தி இல்லை

வாஷிங்டன்:பூமிக்கு அடியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து தாக்குவதற்கான மிக சக்தி வாய்ந்த வெடிக்குண்டை தயாரிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக வால்ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி
வெளியிட்டுள்ளது.

தற்போது அமெரிக்கா ராணுவத்தின் கைவசமிருக்கும் பங்கர் பஸ்டர் வெடிக்குண்டால் ஈரானின் அணுசக்தி நிலையங்களை அழிக்க முடியாது. இதனை புரிந்துக்கொண்ட அமெரிக்கா புதிய வெடிக்குண்டை தயாரிக்க திட்டம் வகுத்துள்ளது. இதனை குறிப்பிட்டு பெண்டகன் அமெரிக்க காங்கிரஸிற்கு ரகசிய
அறிக்கையை இம்மாதம் அளித்துள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத பாதுகாப்பு துறை அதிகாரியை மேற்கோள்காட்டி வால்ஸ்ட்ரீட் ஜெர்னல் கூறுகிறது.

பூமிக்கு அடியில் உள்ள பாறைகள் மற்றும் காங்க்ரீட் சுவர்கள் ஆகியவற்றை துளைத்து உள்ளே செல்லும் சக்திமிகுந்த 20 வெடிக்குண்டுகளை தயாரிக்க பெண்டகன் இதுவரை 33 கோடி டாலர் தொகையை செலவிட்டுள்ளதாக பத்திரிகை கூறுகிறது. போயிங் நிறுவனம்தான் இக்குண்டுகளை தயாரித்து வருகிறது.

பெரும் பாதுகாப்பு கட்டமைப்புகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஈரானின் அணுசக்தி நிலையங்களை அழிக்க பங்கர் பஸ்டர் குண்டுகளுக்கு வலு இல்லை என்பதை கடந்த வியாழக்கிழமை அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லியோன் பனேட்டா ஒப்புக்கொண்டார்.

முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும்: சி.பி.எம்

புதுடெல்லி:நீதிபதி ரங்கநாத் மிஷ்ரா தலைமையிலான மொழி-மத சிறுபான்மையினருக்கான் தேசிய கமிஷனின் சிபாரிசின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு நகல் தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில் இந்திய 20-வது மாநாடு ஏப்ரல் மாதம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற உள்ளது. அதனையொட்டி மாநாட்டில் நிறைவேற்றப்பட இருக்கும் அரசியல் நகல் தீர்மானத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரட் வெளியிட்டு செய்தியாளர்களிடையே பேசினார்.

அவர் வெளியிட்டுள்ள அரசியல் நகல் தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள்:

நீதிபதி ரங்கநாத் மிஷ்ரா தலைமையிலான தேசிய கமிஷனின் சிபாரிசின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும். மேல்தட்டு பிரிவினரை தவிர்த்துவிட்டு இந்த இடஒதுக்கீட்டை வழங்கவேண்டும்.

உ.பி:தேர்தல் களத்தில் 109 கிரிமினல்கள்

லக்னோ:உ.பி சட்டப்பேரவைக்கு நடைபெற இருக்கும் முதல் கட்ட தேர்தலில் 109 கிரிமினல்கள் போட்டியிடுகின்றனர். வேட்பு மனு தாக்கல் செய்த 867 வேட்பாளர்களில் 287 பேரின் மனுவை பரிசோதித்த பொழுது இவர்களில் 109 பேர் மீது கொலை, கடத்தல், வழிப்பறி ஆகிய வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. உத்தரபிரதேச மாநில தேர்தல் கண்காணிப்பு குழு வேட்புமனுக்களை பரிசோதித்தது.

கிரிமினல் பின்னணியைக் கொண்ட வேட்பாளர்களில் சமாஜ்வாதி கட்சிக்கு முதலிடம். 28 பேர் இக்கட்சி சார்பாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் பா.ஜ.க சார்பாக 24 பேர் வீதமும், காங்கிரஸிற்கு 15, பீஸ் கட்சிக்கு 12, ஜெ.டி.யு கட்சிக்கு 5 கிரிமினல் வேட்பாளர்கள் மக்களுக்கு சேவை புரிய தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.

284 வேட்பு மனுக்களை பரிசோதித்த பொழுது 144 கோடீஸ்வரர்கள் போட்டியிடுவது தெரியவந்தது. 12.08 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுடன் பகுஜன் சமாஜ் கட்சியின் அஜய் பிரதாப் சிங் பட்டியலில் முதலிடத்தை வகிக்கிறார். காங்கிரஸ் கட்சியின் சவுதரி ரவீந்திர பிரசாத் 6.56 கோடி ரூபாய் சொத்துக்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் சுக்ராம் சிங் 5.5 கோடி மதிப்பிலான சொத்துக்களுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

284 பேரில் 96 பேர் வருமான வரி செலுத்தவில்லை. வருமான வரியை செலுத்தாத கோடீஸ்வர வேட்பாளர்களில் முன்னணி வகிப்பவர் சமாஜ்வாதி கட்சியைச் சார்ந்தவர்.ஃபரீத் மஹ்ஃபூஸ் கித்வாய்க்கு 3.52 கோடி சொத்துக்கள் உள்ளன. 2.88 கோடி ரூபாய் சொத்துக்களுடன் காங்கிரஸ் கட்சியின் கவுரி சங்கரும், 2.57 கோடி ரூபாய் சொத்துக்களுடன் பா.ஜ.கவின் ராம்ஸஜீவனும் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். 867 வேட்பாளர்களில் 65 பேர் பெண்கள் ஆவர்.

அபுதாபியில் வேலைவாய்ப்பு விழா: வெளிநாட்டினருக்கும் வாய்ப்பு

அபுதாபி:தனியார் துறையில் கூடுதல் உள்நாட்டினரை ஈர்க்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அபுதாபியில் பெரிய அளவிலான வேலை வாய்ப்பு விழா3 நாட்கள் நடைபெற இருக்கிறது. ஜனவரி 31, பிப்ரவரி 1, 2 தேதிகளில் அபுதாபி நேசனல் எக்ஸிபிஷன் சென்டரில் ‘தவ்தீஃப்’ என்ற பெயரில் இவ்விழா நடைபெறுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நிதி மற்றும் வங்கியல் துறைகளில் செயல்படும் நிறுவனங்கள் உள்பட ஏராளமான நிறுவனங்கள் இவ்விழாவில் பல்வேறு வேலைவாய்ப்புக்கான நபர்களை தேர்வுச் செய்கின்றன. உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்பை நோக்கமாக கொண்டு இவ்வேலை வாய்ப்பு விழா நடத்தப்பட்டாலும் மூன்றாவது நாள்(பிப்ரவரி-2) அனைத்து வெளிநாட்டினருக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பு விழாவில் பங்கேற்கும் வங்கிகள் மற்றும் இதர நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் வேலைத் தேடுவோர் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

ஜனவரி 31-ஆம் தேதி காலை 11 முதல் மாலை 7 மணி வரை உள்நாட்டினருக்கு(யு.ஏ.இ) மட்டுமே அனுமதி.

பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 11 முதல் மதியம் 2 மணி வரை உள்நாட்டு(யு.ஏ.இ) பெண்களுக்கு மட்டும்.

மதியம் 2 மணி முதல் மாலை 7 மணி வரை உள்நாட்டு(யு.ஏ.இ) ஆண்களுக்கு மட்டும்.

பிப்ரவரி 2-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்து வெளிநாட்டினருக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

இந்த வேலை வாய்ப்பு விழாவில் பங்கேற்க விரும்புவர்கள் www.tawdheef.ae என்ற இணையதளத்திற்கு சென்று முன்னரே பதிவுச் செய்துக்கொள்ளவும்.

ஜனவரி 24, 2012

குறைந்த விலையில் சூரிய சக்தி மின்சாரம் வழங்க அரசு தீவிரம்

"சூரிய ஒளி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை, குறைந்த விலைக்கு கொடுக்க, மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. வருங்காலத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை, யூனிட் 3 ரூபாய்க்கு அல்லது 4 ரூபாய்க்கு கொடுக்க வேண்டும் என்பதே அரசின் இலக்கு' என, மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்தார். 

டில்லியில் இந்திய எரிசக்தி கருத்தரங்கை துவக்கி வைத்த, மத்திய மின்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியதாவது: சூரிய ஒளியிலிருந்து முதன் முதலாக மின்சாரம் தயாரிக்கப்பட்ட போது, மின்சாரம் யூனிட்டுக்கு 18 ரூபாய் என்ற அடிப்படையில், மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது அரசின் பல்வேறு முயற்சிகளால், சூரியசக்தி மின்சாரம் 8 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இதே மின்சாரத்தை இனி வரும்காலங்களில், யூனிட்டுக்கு 3 ரூபாய் முதல் 4 ரூபாய்க்கு வழங்க வேண்டும் என்பதை, அரசு தன் இலக்காகக் கொண்டுள்ளது.

புதிய காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற குடும்ப அட்டை VAO சான்றிதல் இருந்தால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.

ஜனவரி 23, 2012

நாட்டை விட்டு வெளியேறுங்கள் - இஸ்லாமிய அமைப்பினருக்கு இலங்கை உத்தரவு..

இலங்கையில் இஸ்லாமியப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மதக்குழுவினரை இரண்டு வாரங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

முஸ்லிம் மக்கள் மத்தியில் இஸ்லாமிய மதத்தை பின்பற்றுமாறு பிரச்சாரம் செய்து வரும் தப்லீக் ஜமாத் என்ற குழுவினர் கொழும்பில் தங்கி மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் கொழும்பிலுள்ள கிராண்ட்பாஸிலுள்ள தப்லீக் ஜமாத்தின் தலைமையகத்தில் தங்கியிருந்தனர்.

வியாழக்கிழமை தலைமையகம் வந்த காவல்துறையினர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலத்தீவு உள்ளிட்ட 161 நாடுகளிலிருந்து வந்துள்ள தப்லீக் ஜமாத்தைச் சார்ந்தவர்கள் அனைவரையும் வெளியேறுமாறு காவல்துறையினர் கூறியுள்ளனர்.

மெழுகுவர்த்தி செய்தல்.. !!

தமிழகம் போன்ற மின்சாரத்தட்டுப்பாடு மிகுந்த இடங்களில் மெழுகுவர்த்தியின் தேவை அதிக அளவில் காணப்படுகிறது. நல்ல, தரமான மெழுகுவர்த்திகள் செய்தால் சந்தையில் குறிப்பிடத்தக்க அளவு விற்பனை செய்ய முடியும். மெழுகுவர்த்தி செய்வது மிக கடினமான பணியல்ல. வீடுகளிலேயே மிக தரமான மெழுகுவர்த்திகள் செய்யமுடியும்.

இப்போது மெழுகுவர்த்தி செய்யும் முறையினைப் படிப்படியாக காண்போம்:

மெழுகுவர்த்தி செய்ய தேவையான பொருட்கள்:

1. வெண்மெழுகு(paraffin wax) : 900 கிராம்
2. கடின மெழுகு(hard wax) : 100 கிராம்
3. வண்ணநிறமி(dye-oil based)
4. வாசனை எண்ணெய்(essential oil)
5. வார்ப்புகள்(molds - for molding the candles)
6. பாத்திரம்(melting pot)
7. மூங்கில் அல்லது மரக்குச்சி அல்லது கரண்டி(wooden or bamboo sticks)
8. நூல்திரி(wick)
9. அடுப்பு(stove)

மெழுகுவர்த்தி செய்யும் முறை:

* முதலில் மெழுகுகளை உருக்க வேண்டும். அதற்கு boiler method சிறந்த வழி. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை, அதனுள் மற்றொரு பாத்திரத்தில் மெழுகுகளைப் போட்டு அடுப்பிலேற்றிச் சூடேற்றவும். நீர் கொதி வந்ததும் மெழுகு உருகத்தொடங்கும். அவை முழுதாக உருகும் விதத்தில் மூங்கில் குச்சியால் கிளறிக்கொடுக்கவும்.

உணவில் உப்பு குறைக்கிறீர்களா? கவனம்!

உணவில் உப்பின் அளவைக் குறைக்க ஆரம்பித்துள்ளீர்களா? கவனம் தேவை! குறிப்பிட்ட அளவுக்குக் கீழே உணவில் உப்பின் அளவைக் குறைப்போருக்கு இதயத் தொடர்பான நோய்கள் வரும் என சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாதாரணமாக உணவில் உப்பின் அளவு அதிகமாக பயன்படுத்துவோருக்கு இரத்த அழுத்தம் தொடர்பான நோய்கள் உருவாவதோடு அதுவே மாரடைப்பு ஏற்படுவதற்கும் ஒரு காரணமாக அமைகிறது என்ற கருத்து மருத்துவர்களிடையே உள்ளது. இதனால் இரத்த அழுத்தம் தொடர்பான நோய்களுடன் வரும் நோயாளிகளுக்கு உணவில் உப்பின் அளவைக் குறைக்க மருத்துவர்கள் ஆலோசனை கூறுவர்.

தமிழ்நாட்டில் முதல்கட்டமாக 6 லட்சம் பேருக்கு தேசிய அடையாள அட்டை

நாடு முழுவதும் பொதுமக்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை மக்கள் தொகை கணக்கெப்பு துறை செய்து வருகிறது.

தமிழ்நாட்டில் முதல்கட்டமாக கடலோர கிராமங்களில் வசிப்பவர்களுக்கு இருப்பிட அடையாள அட்டைகள் வழங்கப்படுகிறது. மொத்தம் 829 கடலோர கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 11.7 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 லட்சம் பேர் உள்ளனர். இப்போது அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்த அடையாள அட்டையில் பெயர், பாலினம், தாய்-தந்தை பெயர், பிறந்த தேதி, தாலுகா, மாவட்டம்,

அடையாள அட்டை எண் ஆகிய விபரங்கள் இடம் பெற்று இருக்கும். உறுப்பினர் பெயரும், தாய், தந்தை பெயரும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும். மற்ற விபரங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். ஸ்மார்ட் கார்டு போன்ற இந்த கார்ட்டில் உறுப்பினர் பெயர் தொழில், விரல்ரேகை உள்ளிட்ட முழு குடும்ப விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும். இந்த அடையாள அட்டை வழங்கும் பணியை நாளை (23-ந் தேதி) காஞ்சீபுரம் மாவட்டம் பட்டிபுலம் கிராமத்தில் நடைபெறும் விழாவில் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தொடங்கி வைக்கிறார்.
           

ஜனவரி 21, 2012

நவீன நம்பர் பிளேட் திட்டம் மாநில அரசுகளுக்கு மார்ச் 31 இறுதிகெடு

புதுடெல்லி : வாகனங்களில் முறைகேடு செய்ய முடியாத உயர் பாதுகாப்புமிக்க நம்பர் பிளேட்களை பொருத்தும் திட்டத்தை மார்ச் 31ம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் இறுதிகெடு விதித்துள்ளது. வாகன நம்பர் பிளேட்களில் முறைகேடு செய்யப்படுவதால், நாட்டின் பாதுகாப்புக்கு பல்வேறு வகையில் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதை தடுக்க, முறைகேடு செய்ய முடியாத உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்களை பொருத்த உத்தரவுவிடும்படி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த திட்டத்தை அமல்படுத்தும்படி மாநில அரசுகளுக்கு பலமுறை கெடு விதித்தது. கடைசியாக கடந்த டிசம்பர் 8க்குள் அமல்படுத்த வாய்ப்பு அளித்தது. ஆனால், எந்த மாநில அரசும் இதை அமல்படுத்தவில்லை. இந்த நிலையில், தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘இந்த திட்டத்தை மார்ச் 31ம் தேதிக்குள் மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும். இதுதான் கடைசி கெடு. அதற்குள் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கபாடியா எச்சரித்தார்.

ருஷ்டி வருகை ரத்து: முஸ்லிம் அமைப்புகள் வரவேற்பு

ஜெய்ப்பூர்:ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்வதை ரத்துச்செய்த சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் நடவடிக்கையை முஸ்லிம் அமைப்புகள் வரவேற்றுள்ளன.

ருஷ்டி இந்திய வருகையை ரத்துச்செய்தது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என தேவ்பந்த் தாருல் உலூமின் துணைவேந்தர் மவ்லானா அபுல் காஸிம் நுஃமானி கூறியுள்ளார். அனைத்து முஸ்லிம்களின் மார்க்க உணர்வுடன் தொடர்புடைய பிரச்சனை என்பதால் ருஷ்டியின் தீர்மானத்தில் திருப்தி ஏற்பட்டுள்ளதாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தேசிய செயலாளர் முஹம்மது சலீம் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 19, 2012

உடற்பருமன் ஏற்பட்டு விட்டதா?

* ஆமணக்குச் செடி வேரைக் கொண்டு வந்து, நன்றாகப் பொடித்து, அத்துடன் தேனைக் கூட்டிப் பிசைந்து, ஒரு டம்ளர்; தண்ணீரில் அப்படியே ஊற வைத்து விடுங்கள். இரவு முழுவதும் ஊறினதும், காலையில் அதைக் கலக்கி வடிகட்டி அந்த நீரை மட்டும் சாப்பிட்டு வாருங்கள். நாலு வாரத்திற்குள் உங்களுக்கு நல்ல பலன் தெரியும்.

* பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவரம் பருப்புடன் மிளகு சேர்த்து சமைத்து உண்டு வந்தால், 3 மாதங்களில், பெருத்த உடல் பருமன் குறைந்து, நல்ல கெட்டியடைந்து ஆரோக்கியமடையும். வீரிய விருத்தியும் உண்டாகும்.

ஜனவரி 16, 2012

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெறுவதற்கான ஆலோசனைகள்-

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று, நாட்டின் உயர்ந்த பதவியை அடைய ஆசை மட்டுமே போதாது. அதற்கான முயற்சியும், நுணுக்கமும் கட்டாயம் தேவை. முதல்நிலை தேர்வுக்கான பாடத்திட்டம் மாறியுள்ள நிலையில், மாறுதல் குறித்து தெளிவாக அறிந்து, அதற்கு தயாராகும் முறைகள் குறித்தும் நன்கு தெரிந்துகொள்வது அவசியம்.

முதல்நிலையில், சிவில் சர்வீஸ் திறனாய்வு தேர்வு(பிரிலிமினரி) என்பதில், தலா 200 மதிப்பெண்களைக் கொண்ட, 2 ஆப்ஜெக்டிவ் முறையிலான கேள்வி தாள்கள் இருக்கும். ஒவ்வொரு கேள்வித் தாளுக்கும் 2 மணிநேரங்கள் ஒதுக்கப்படும். ஒரு தாள் பொதுஅறிவு சம்பந்தமானது, இன்னொரு தாள் பொது திறனாய்வு தொடர்பானது(முதலில் இந்த தாள் விருப்பப் பாட தாளாக இருந்தது). குறைந்தளவு பணியிடங்களுக்கு மிக அதிகளவிலான ஆட்கள் நாடு முழுவதிலுமிருந்தும் போட்டியிடுவதால், போட்டியானது மிகவும் கடுமையாக இருக்கும். பல நபர்கள் பல தடவைகள் முயற்சி செய்து, இந்தத் தேர்வில் தேறுகிறார்கள்.

பொதுவாக, கேள்வித்தாள்களில் மாற்றங்கள் செய்வதானது, பல மாணவர்களை கலக்கமடையச் செய்கிறது. பலருக்கு கணிதத்தைக் கண்டால் பயம். ஆனால், சிவில் சர்வீஸ் தேர்வில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றமானது, பகுப்பாய்வு திறன் சம்பந்தப்பட்டதே ஒழிய, கணிதம் தொடர்பானதல்ல.

விரிவான வாய்ப்புகளைக் கொண்ட ஹோம் சயின்ஸ் படிப்புகள்

ஹோம் சயின்ஸ் பாடம் என்பது வெறும் சமையல் தொடர்பானது மட்டுமல்ல. அதன் அம்சங்கள் வெகு சிறப்பானவை.

சிறந்த சத்துணவு முறை, ஆடைகள், சுகாதாரம், நீடித்த மேம்பாடு, தகவல்தொடர்பு மற்றும் சிறந்த சமூக வாழ்வு போன்ற பலவித அம்சங்கள் சம்பந்தப்பட்டதுதான் ஹோம் சயின்ஸ் எனப்படும் பயன்பாட்டு அறிவியல். வீட்டு நிர்வாகம் என்பது, அப்பாடத்தின் ஒரு சிறிய பிரிவே ஆகும்.

ஹோம் சயின்ஸ் என்பது வீடு மற்றும் குடும்ப வாழ்க்கை ஆகியவற்றை செம்மைப்படுத்தி, அதனுடன் சேர்த்து சுற்றுப்புறத்தையும் மாற்றுவதற்குரிய அம்சங்களைக் கொண்டதாகும். இந்தப் படிப்பானது தற்போது பெண்களுக்கு மட்டுமானதாக இருக்கிறது. ஹோம் சயின்ஸ் படிப்பை மேற்கொள்ளும் ஒரு பட்டதாரி, ஒவ்வொரு பாடத்திலும் ப்ராஜெக்ட் மேற்கொண்டு, லேப் பிராக்டிகல் பணியையும் வழக்கமாக மேற்கொள்ள வேண்டும்.

நீங்கள் வாழும் பகுதியிலுள்ள குழந்தை தொழிலாளர்களை இனம் கண்டு, அவர்களது வாழ்வை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடுவதும் இப்பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இப்பாடமானது, பெண்களுக்கான வெறும் சமையல் சார்ந்தது என்ற தப்பான எண்ணம் சமூகத்தில் பலருக்கும் உள்ளது.

காதுக்குள் விநோத சத்தம் கேட்கிறதா?!!

காதின் கேட்கும் திறன் இயல்பாக இருக்க, காதினுள் உட்புகும் ஒலியானது நடுக்காதுப் பகுதியில் நுழைந்து பரவி காது ஜவ்வில் மோத வேண்டும். ஆனால் ஒடெஸ்லோரோசிஸ் குறைபாடு இருப்பவர்களுக்கு காதின் உள்ளே நு ழையும் ஒலி ஜவ்வில் மோதுவதற்கு முன்பே ஸ்டேப்ஸ் எலும்பு வளர்ச்சியால் தடுக்கப்படுகிறது, இதனால் காதின் கேட்கும் திறன் பாதிப்படைகிறது.

ஒடெஸ்லோரோசிஸ் குறைபாடு குறித்து…
நமக்கோ அல்லது நம் குழந்தைகளுக்கோ எவரானாலும் சரி, வயது வேறுபாடு இன்றி காதுக்குள் விநோதமான சத் தம் கேட்கத் தொடங்கினால் சில நாட்களில் சரியாகி விடக்கூடும் என்று அதை ஒத்திப் போடுவது அபாயகரமானது. அப்படி விநோதமான சத்தம் வரக் காரணம் என்ன என்பதை காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவரை
அணுகி மருத்துவர் பரிந்துரைக்கும் முழுமையான ஆய்வுகளுக்கு உட்பட்டு விநோத சப்தங்களுக்கான காரணங்களை உடனே அறிய முயற்சிக்க வேண்டும். ஆரம்பத்தில் உரிய மருத்துவ அணுகுமுறை இல்லாமல் புறக்கணித்துவிட்டு, நாட்கள் பல கடந்தபின் கேட்கும் திறனை முழுமையாக இழக்கும்நிலை வரை காத்திருப்பது பு த்திசாலித்தனம் ஆகாது.

ஜனவரி 14, 2012

முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக ஓர் புதிய மினி லேப்டாப்!


ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கம்ப்யூட்டர்(ஒஎல்பிசி) என்ற அமைப்பு, குழந்தைகளுக்காக புதிய ஒரு பிரத்யேக மினி லேப்டாப்பை வழங்க இருக்கிறது. இந்த புதிய மினி லேப்டாப் பெயர் ஒஎல்பிபிசி எக்ஸ்ஒ 3.0 ஆகும். இந்த மினி லேப்டாப் ஒஎல்பிசியின் பழைய கணினிகளை விட மிக அட்டகாசமாக இருக்கும்.
இந்த எக்ஸ்ஒ 3.0 என்ற இந்த மினி லேப்டாப் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் 8 இன்ச் அளவுள்ள 1024 x 768 பிக்சல் ரிசலூசனை வழங்கும் பிக்சல்கியூஐ டிஎப்டி டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. அதோடு 512 எம்பி ரேமுடன் 4 ஜிபி மெமரியை வழங்குகிறது.
இணைப்பு வசதிகளுக்காக இந்த கணினி யுஎஸ்பி போர்ட், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் ஸ்டேன்ட்ர்டு ஹெட்போன் மற்றும் மைக்ரோபோன் ஜாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதுபோல் இதன் சிப்செட் அர்மடா பிஎக்ஸ்எ678 ஆகும்.
இந்த எக்ஸ்ஒ 3.0 மினி லேப்டாப் பொதுவான அம்சங்களைப் பார்த்தால் இது ஆன்ட்ராய்டு அல்லது சுகர் மொபைல் இயங்குதளத்தைக் கொண்டிருக்கும். அதுபோல் குழந்தைகளுக்காக கல்வி மற்றும் விளையாட்டு தேவைகளை நிறைவு செய்வதற்கான அப்ளிகேசன்களைக் கொண்டிருக்கும்.
அதுபோல் மின் திறனிற்காக ரீஜார்ஜ் வசதி கொண்ட ஏசி அடாப்டர் அல்லது சோலார் சார்ஜ் வசதி கொண்ட ஹேண்ட் க்ரான்க் கொண்டிருக்கும் என்று நம்பப்aபடுகிறது. இதன் விலை ரூ.5500 ஆகும். இந்த எக்ஸ்ஒ 3.0 மினி லேப்டாப்பின் எல்லா வசதிகளும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஆனால் இது மிக உறுதியான டிவைஸ் ஆகும். இந்த டிவைஸ் ரப்பரால் மூடப்பட்டுள்ளதால் இது மிக மென்மையாக இருக்கிறது. குறிப்பாக குழந்தைகளின் பொழுதுபோக்கிற்காக இந்த டிவைஸ் ஏராளமான அப்ளிகேசன்களைக் கொண்டிருக்கும் என நம்பலாம். மேலும் இது ஒரு அடக்கமான டிவைஸ் ஆகும்.

பிப்ரவரி 14: இஸ்லாத்தை காதலிக்கும் முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்!


பிப்ரவரி 14 என்றவுடன் காதலர் தினமே மக்களுக்கு நினைவுக்கு வரும். ஆனால் வரும் பிப்ரவரி 14 அன்று இஸ்லாத்தை காதலிக்கும் முஸ்லிம்கள், ஆட்சியாளர்களை கண்டிக்கும் தினமாக அமையும்.

தேர்தல் வரும் போது முஸ்லிம்களை பார்ப்பவர்கள், வெற்றி பெற்றவுடன் முஸ்லிம்களையும் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் மறந்துவிடுகிறார்கள்.

இப்படிப்பட்ட ஆட்சியாளர்களிடம் தொடர் போராட்டங்கள் மூலம் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு பெற முடிந்தது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அரசியல்வாதிகளிடம் விலைபோகிவிடாமல் முஸ்லிம்களின் ஒட்டுமொத்த குரலை கும்பகோணத்தில் பிரமாண்டமாக காட்டியபோது இடஒதுக்கீடுக்கு ஜெயலலிதா ஆணையம் அமைத்தார். இதைத் தொடர்ந்து கருணாநிதியும் முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கினார்.
அதிலும்கூட சரிவர செயல்படுத்தாமல் இருந்தபோது பெரும் போராட்டம் நடத்திஇ,அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி மூலமே முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டில் குளறுபடிகள் நடந்தது உண்மைதான் என்பதை வெளிப்படுத்தினோம்.

முஸ்லிம்களுக்கு கருணாநிதி ஆட்சியில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை.

8 பேர் அமர்ந்து பயணம் செய்யும் வினோத மோட்டார் சைக்கிள்

சீனாவில் ஜிலின் சிட்டி எனும் இடத்தைச் சேர்ந்த ஷாங்யாலி என்பவர் தனது மகனுக்காக வித்தியாசமான இராட்சத மோட்டார் சைக்கிள் ஒன்றினை உருவாக்கியுள்ளார்.  கார்ட்டூனில் அதீத ஆர்வம் கொண்ட தனது மகனுக்காக கார்ட்டூனில் தோன்றுவது போன்ற விசித்திரமான மோட்டார் சைக்கிள்களின் அமைப்பை ஒத்த மோட்டார் சைக்கிளை உருவாக்கிக் கொடுத்துள்ளார். 8 பேர் அமர்ந்து பயணம் செய்யும் வகையில் 1000 கிலோ கிராம் எடையுடைய 18 அடி நீளமும் 10 அடி உயரமுமான இந்த மோட்டார் சைக்கிளை இலங்கை நாணயப்படி சுமார் 340 ஆயிரம் ரூபா செலவு செய்து இரண்டு மாதங்களில் உருவாக்கியுள்ளார்

விமானிகள் 'மொத்த லீவ்': ஏர் இந்தியா விமானங்கள் கேன்சல்!

டெல்லி: ஏர் இந்தியாவில் பணிபுரியும் 12க்கும் மேற்பட்ட விமானிகள் ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டதை அடுத்து சென்னை, பெங்களூரு நகரங்களுக்கு இயக்க இருந்த உள்நாட்டு விமானங்கள் கேன்சல் செய்யப்பட்டன. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணிபுரியும், ஊழியர்களுக்கும், அந்நிறுவனத்தின் நிர்வாகத்திற்கும் இடையே புகைச்சல் உருவாகியுள்ளது. ஊதியம் அளிப்பதில் உருவான பிரச்சினையை அடுத்து சனிக்கிழமை காலை அந்தநிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 12 பேர் விடுப்பு எடுத்துக்கொண்டனர். இதனால் விமானங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது.

விமானங்கள் கேன்சல்

இதனையடுத்து நாக்பூர், சென்னை, லெக், பெங்களூரு, அமிர்தசரஸ், கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் விமானங்கள் கேன்சல் செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. அதிகாலையில் இயங்கும் விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

பண்டிகை நேரமாகையால் பயணிகள் பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளனர்.

ராணுவம் ஆட்சியை கவிழ்ப்பதை தடுக்க பாக்.அரசு தீவிர முயற்சி

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் ராணுவத்திற்கும், அரசிற்கும் இடையே கருத்துவேறுபாடு உச்சக்கட்டத்தை அடைந்துள்ள சூழலில் ராணுவம் ஆட்சியை கவிழ்ப்பதை தடுப்பதற்கு அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

ராணுவ புரட்சிக்கு வாய்ப்பு இருப்பதை உணர்ந்த பிரதமர் கிலானி பாகிஸ்தானில் உயர் பிரிட்டீஷ் ஹைக்கமிஷனர் தாம்ஸனை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு உதவி தேடியதாக டான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், கிலானியின் கோரிக்கைக்கு பிரிட்டன் அளித்த பதில் குறித்து தகவல் கிடைக்கவில்லை. ராணுவம் ஆட்சியை கவிழ்ப்பது எந்த நேரத்திலும் நிகழலாம் என்ற பீதி உயர் அரசு வட்டாரங்களில்
நிலவுகிறது.

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு: தீவிர சோதனை, சேர்மன் ராஜினாமா

சென்னை:தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றிப்பெற பணம் தந்ததாக கருதப்படும் 73 தேர்வர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று(வெள்ளிக்கிழமை) தீவிர சோதனை நடத்தினர். இவர்களின் தேர்ச்சியில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

டி.என்.பி.எஸ்.சி தொடர்பாக ஏற்கனவே மூன்று தடவை சோதனைகள் நடந்துள்ளன. இப்போது நடந்திருப்பது நான்காம் கட்ட சோதனை ஆகும்.

சென்னையில் 10 இடங்களில் சோதனை நடைபெற்றது. உதவி பல் மருத்துவர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பு பார்வையிட கோரியதால் டி.என்.பி.எஸ்.சி. தலைவர், ஊழியர்கள் தவறான வழிகளில் பணப் பயன் பெற முயற்சித்த குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 21 மாவட்டங்களில் 73 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

டி.எஸ்.பி.க்கள் தலைமையில் அதிகாலை 7 மணி முதல் இந்த இடங்களில் 500 லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தினர். சோதனை நடைபெற்ற 73 தேர்வர்களில் பெரும்பாலானோர் தற்போது பணியில் சேர்ந்துவிட்டனர்.

ஜனவரி 12, 2012

ஜாமீன் கிடைத்துவிடும் என்ற அச்சத்தால் முன்னெச்சரிக்கை கைது கூடாது – உச்சநீதிமன்றம்

புதுடெல்லி:ஜாமீன் கிடைத்துவிடும் என்ற அச்சத்தால் ஒருவரை முன்னெச்சரிக்கையாக கைது செய்து காவலில் வைக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களை தவிர அரசியல் சட்டத்தின் 21-ஆம் பிரிவு அறிவுறுத்தும் தனிநபரின் வாழ்வதற்கான
சுதந்திரத்தை மறுக்க முடியாது. இதற்கு புறம்பான முன்னெச்சரிக்கையாக கைது செய்து காவலில் வைப்பதை நியாயப்படுத்த முடியாது என நீதிபதிகளான அல்டமாஸ் கபீர், எஸ்.எஸ்.நிஜ்ஜார், ஜெ.சலமேஷ்வர் ஆகியோர் அடங்கிய
உச்சநீதிமன்ற பெஞ்ச் உத்தரவில் கூறியுள்ளது.

அரசியல் சட்டத்தின் 21 மற்றும் 22-வது பிரிவுகள் கூறும் குறிப்பிட்ட சூழல்களை தவிர வேறு எதற்கும் முன்னெச்சரிக்கை காவல் கூடாது. நிரந்தர குற்றவாளி, ஏராளமான வழக்குகளில் பங்கு, முன்பு முன்னெச்சரிக்கை காவலில் வைக்கப்பட்டவர் ஆகிய முந்தைய கால அனுபவங்கள் ஒருவரை முன்னெச்சரிக்கையாக காவலில் வைப்பதற்கு காரணங்களாக கூறுவதையும் உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

குவாண்டனாமோ:மனித உரிமை மீறல்களின் 10 ஆண்டு

மனித உரிமை மீறல்களில் வரலாற்றின் எக்காலத்திலும் முதல் இடத்தை பிடிக்கும் குவாண்டானாமோ சிறைக் கொட்டகை நிறுவப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவுறுகிறது.

ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் போர்க்களத்தில் இருந்து பிடிக்கப்படும் நபர்களை சித்திரவதைச் செய்து சீரழிப்பதற்காக மட்டும் ஜார்ஜ் w புஷ் அரசாங்கத்தால் கியூபாவில் உள்ள குவாண்டனாமோவில் அமெரிக்க கடற்படை தளத்தில் பிரம்மாண்டமான சிறைக் கொட்டகை உருவாக்கப்பட்டது.

சிறைக்கைதிகளின் முதல் குழு 2002-ஆம் ஆண்டு ஜனவரி,11-ம் தேதி குவாண்டனாமோவில் அடைக்கப்பட்டு 10-வது ஆண்டு நிறைவுறுகிறது. ஆனால்,10 ஆண்டுகள் கழிந்த பிறகும் விசாரணை இல்லாமல் 171 சிறைக்கைதிகள் விடுதலையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

முதல் கட்டமாக குவாண்டானாமோவில் அடைக்கப்பட்டவர்களில் குறைந்தபட்சம் பன்னிரெண்டு நபர்கள் இப்பொழுதும் அங்கு துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இவர்களில் ஒருவருக்கு மட்டுமே இதுவரை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளோருக்கு விசாரணை கூட நடத்தப்படவில்லை. குற்றவாளிகள் அல்லர் என்பதை கண்டறிந்த பிறகும் 89 பேரின் விடுதலைக் குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை.

ஜனவரி 10, 2012

இது இந்தியாவின் வெட்கக் கேடு!

டெல்லி: உலகில் ஊட்டச் சத்து குறைபாடு உள்ள 3 குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியாவைச் சேர்ந்தது. நாட்டில் ஐந்து வயதுக்குள்ளான 42 சதவீத குழந்தைகள் எடை குறைவாக உள்ளன. இது ஒரு தேசிய அவமானமாகும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

நாடு முழுவதும் பொருளாதாரரீதியில் மிகவும் கீழ் நிலையில் உள்ள 9 மாநிலங்களின் 112 மாவட்டங்களில் 73,000 வீடுகளில் ஆய்வு நடத்தி தனது அறிக்கையைத் தயாரித்துள்ளது HUNGaMA (Hunger and Malnutrition) என்ற அமைப்பு. இந்த அறிக்கையை வெளியிட்டுப் பேசிய பிரதமர் கூறுகையில்,

நமது நாடு மிக வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டி வந்தாலும், குழந்தைகளிடையே ஊட்டச் சத்து குறைபாடு ஏற்க முடியாத அளவுக்கு உள்ளது. இந்த நாட்டில் 6 வயதுக்கு உட்பட்ட 16 கோடி குழந்தைகள் உள்ளனர். நாட்டில் ஐந்து வயதுக்குள்ளான 42 சதவீத குழந்தைகள் போதிய ஊட்டச் சத்து இல்லாமல் எடை குறைவாக உள்ளன.

தமிழக அரசின் புதிய காப்பீட்டுத் திட்டம்-நாளை ஜெ தொடங்கி வைக்கிறார்

சென்னை: தமிழக அரசின் புதிய காப்பீட்டுத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா நிறுத்தினார். அதற்குப் பதிலாக விரிவான இன்னொரு காப்பீட்டுத் திட்டம் அமலாக்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி 1 கோடியே 34 லட்சம் மக்கள் பயன் பெறும் வகையில் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை நாளை அவர் துவக்கி வைக்கிறார். இந்த காப்பீட்டுத் திட்டத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் பயன் பெறுவர். 1,016 சிகிச்சைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு ரூ.1 லட்சம் வீதம் 4 வருடங்களுக்கு ரூ.4 லட்சம் வரை வழங்க இந்த திட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு, "முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

மாட்டுக்கறி சாப்பிடலாம் தப்பில்லை: கெட்ட கொழுப்பை குறைக்கும்-ஆய்வு

மாட்டுக்கறி சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. மாட்டுக்கறி சாப்பிடுபவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ள அந்த ஆய்வு முடிவின் விபரம்

தினமும் சிறிதளவு மாட்டுக்கறி உண்பவர்களுக்கு எல்.டி.எல் எனப்படும் கெட்ட கொழுப்பு கட்டுப்படுகிறதாம். இது இதயத்திற்கு ஏற்ற உணவு என்றும் டாஷ் (DASH, Dietary Approaches to Stop Hypertension) எனப்படும் உயர் ரத்த அழுத்த நோயில் இருந்து பாதுகாக்கும் என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

பெனிசில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தி பீப் ஆன் ஆப்டிமல் லீன் டயட் மேற்கொண்ட ஆய்வில் தினசரி சிறிதளவு மாட்டுக்கறி உண்பவர்களின் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு பத்து சதவிகிதம் வரை குறைந்துள்ளது. 5.4 சதவிகிதத்தில் இருந்து 4.0 சதவிகிதமாக குறைந்தது.

இதன் மூலம் இதயநோய் பாதிப்புகள் தடுக்கப்படுகிறது என்றும் ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மேலும் கெட்ட கொழுப்புகள் குறைவதால் ஹைபர் டென்சன் எனப்படும் உயர்ரத்த அழுத்தமும் கட்டுப்படுகிறது என்கின்றனர் விஞ்ஞானிக்கள். இந்த ஆய்வு முடிவு தொடர்பான கட்டுரை அமெரிக்காவில் வெளியாகும் உணவியல் தொடர்பான இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தானே புயலால் கடலூர் மாவட்டம் முற்றிலும் சேதம்: மத்திய குழுவினர் தகவல்

கடலூர்: தானே புயலின் தாக்குதலால் கடலூர் மாவட்டம் முற்றிலும் சிதைந்து போயுள்ளதாக சேதமதிப்பை பார்வையிட்ட மத்திய ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. புயல் சேதத்தை தேசிய பேரழிவாக அறிவிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசுடன் கலந்து ஆலோசித்த பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் ஆய்வுக்குழு கூறியுள்ளது.

தானே புயல்

கடந்த டிசம்பர் 30-ந் தேதி கரையை கடந்த தானே புயல் கடலூர் மாவட்டத்திலும், புதுச்சேரியிலும் வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தியது. புயலால் கடலூர் மாவட்டத்தில் 41 பேர் பலியானார்கள், மூன்றரை லட்சம் வீடுகள் சேதம் அடைந்தன, ஒரு லட்சத்து 8 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள், முந்திரி, பலா, வாழை மரங்கள் அழிந்தன, 45 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்தன. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன.

புதுவை, கடலூரில் ஆய்வு


இந்த நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக வந்த உள்துறை இணைச்செயலாளர் லோகேஷ் ஜா தலைமையிலான மத்திய குழுவினர் ஞாயிறுக்கிழமையன்று புதுச்சேரியில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர்.

திங்கட்கிழமை காலையில் கடலூர் வந்த ஆய்வுக்குழுவினர், மாவட்ட ஆட்சியர் அமுதவல்லி மற்றும் பேரிடர் கண்காணிப்பு சிறப்பு அதிகாரி அபூர்வா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்கள்.

இதனையடுத்து கடலூர் அருகே உள்ள தோட்டப்பட்டு பஞ்சாயத்துக்கு உள்பட்ட டி. குமாரபுரத்துக்கு சென்ற அவர்கள் அங்கு புயலின் காரணமாக மரம் முறிந்து விழுந்ததால் இடிந்து சேதம் அடைந்த ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கூடத்தை பார்வையிட்டனர். அதன்பிறகு காராமணிக்குப்பம் கிராமத்தில் ஒருங்கிணைந்த கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையத்தை பார்வையிட்டனர்.

234 தொகுதி M.L.A.க்கும் தனி தனியே E-Mail. I.D

ஒவ்வொரு தொகுதி M.L.A.க்கும் ஒரு E-Mail. I.D கொடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் உங்கள் "நியாயமான" கோரிக்கைகளை நீங்கள் அனுப்பலாம். எல்லா M.L.A.க்கும் லேப் டாப் கொடுக்கப்பட்டுள்ளது அதனால்... உங்கள் கோரிக்கைகளுக்கு கண்டிப்பாக பதில் கிடைக்கும் என நம்புவோம். 


234 தொகுதி M.L.A.க்கும் தனி தனியே கொடுக்கப்பட்டுள்ளது..... 


கட்டுர்மன்னர் கோயில் தொகுதி MLA ஈ மெயில் முகவரி 


 Kattumannarkoil---mlakattumannarkoil@tn.gov.in


மற்ற தொகுதி MLA - க்கள் ஈ மெயில் முகவரி 


1 Acharapakkam - mlaacharapakkam@tn.gov.in 
2 Alandur - mlaalandur@tn.gov.in
3 Alangudi - mlaalangudi@tn.gov.in
4 Alangulam - mlaalangulam@tn.gov.in
5 Ambasamudram -- mlaambasamudram@tn.gov.in
6 Anaicut -- mlaanaicut@tn.gov.in 
7 Andhiyur --mlaandhiyur@tn.gov.in 
8 Andimadam --- mlaandimadam@tn.gov.in 
9 Andipatti----mlaandipatti@tn.gov.in 
10 AnnaNagar--- mlaannanagar@tn.gov.in 
11 Arakkonam ----mlaarakkonam@tn.gov.in 
12 Arantangi-- mlaarantangi@tn.gov.in 
13 Aravakurichi --- mlaaravakurichi@tn.gov.in 
14 Arcot --- mlaarcot@tn.gov.in 
15 Ariyalur --mlaariyalur@tn.gov.in 
16 Arni -- mlaarni@tn.gov.in 
17 Aruppukottai ---mlaaruppukottai@tn.gov.in 
18 Athoor--- mlaathoor@tn.gov.in 
19 Attur ---mlaattur@tn.gov.in 
20 Avanashi ---mlaavanashi@tn.gov.in 

உ.பியில் முஸ்லிம்களுக்கு 9 சதவீத உள் ஒதுக்கீடு: காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி

ஃபாரூக்காபாத்:உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு 9 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவோம் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமான அங்கு ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தேர்தல் பிரசாரமும் சூடுபிடித்துள்ளது.

அங்குள்ள ஃபரூக்காபாத் தொகுதியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் மனைவி லூயீஸ் போட்டியிடுகிறார். அங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் சல்மான் குர்ஷித் உரையாற்றினார். அப்பொழுது அவர் கூறியதாவது:

இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் 27 சதவீத இட ஒதுக்கீட்டில் சிறுபான்மையினருக்கு 4.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் முடிவை மத்திய அரசு ஏற்கெனவே எடுத்துள்ளது. இப்போது நான் உங்களுக்கு புதிய வாக்குறுதியை அளிக்கிறேன். உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு 9 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவோம் என்றார் அவர்.

ஜனவரி 09, 2012

அடுத்த தேர்தலில் இருந்து வெளிநாட்டு இந்தியர்களும் வாக்களிக்கலாம்!

அடுத்த தேர்தலில் இருந்து வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில் வாக்களிக்கலாம் என பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டது.

இதனால், இந்த மாதம் முதல் மார்ச் வரை உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடக்கும் சட்டமன்றத் தேர்தல்களிலேயே அந்த மாநிலங்களைச் சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க முடியும்.

வாக்களிக்க விரும்புவோர் முதலில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். இதையடுத்து இவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பேசுகையில் பிரதமர் மன்மோகனன் சிங் இதனைத் தெரிவித்தார்.

கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களின்போது ஓமன் நாட்டில் வசிக்கும் சுஜித் தத்தா என்ற ஒரே ஒருவர் மட்டுமே தேர்தல் ஆணையத்திடம் தனது பெயரைப் பதிவு செய்து கொண்டு மேற்கு வங்கத் தேர்தலில் வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 06, 2012

ஈரானுக்கு துருக்கி, சீனா ஆதரவு



டெஹ்ரான்:ஈரான் மீதான ஒருதலைபட்ச தடையை திணிப்பதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு சட்டங்களை சர்வதேச சட்டங்கள் மீது திணிக்கும் வேலையை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் செய்வதாக சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹோங் லெ தெரிவித்துள்ளார். ஈரானுடன் பொருளாதார ரீதியான உறவு தொடரும். மேலும் எரிசக்தி துறையிலும் உறவு தொடரும் என அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, துருக்கியும் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைக்கு துருக்கியின் வெளியுறவுத்துறை அமைச்சர் அஹ்மத் தாவுதோக்லு புதன்கிழமை ஈரான் தலைநகரான டெஹ்ரானுக்கு சென்றார். இரண்டு தின சுற்றுப்பயணத்தில் அவர் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் ஸாலிஹியுடன் சந்திப்பை நடத்துவார் என துருக்கி அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

31 லட்சம் பேர் புதிதாக சேர்ப்பு தமிழகத்தில் 5.4 கோடி வாக்காளர்

சென்னை: தமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை 5.4 கோடியாக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் இது 60 சதவீதத்திற்கும் மேலானதாகும் தமிழககத்தில் புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதை வெளியிட்டு தலைமைத் தேர்தல்அதிகாரி பிரவீன் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:



தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் 24-10-2011 அன்று முதல் வெளியிட தொடங்கினோம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், நீக்குவதற்கும், இடமாற்றம் செய்வதற்கும் விண்ணப்பங்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24-ந் தேதியில் இருந்து நவம்பர் மாதம் 11-ந் தேதி வரை பெறப்பட்டன.



இதில் எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்தன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 38 லட்சத்து 98 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தன. இவற்றை வட்டார அளவில் அதிகாரிகள் வீடுவீடாக சென்று சரிபார்த்தனர். இவற்றில் மொத்தம் 33 லட்சத்து 26 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.


ஜனவரி 05, 2012

அலிகார் முஸ்லீம் பல்கலையில் சேர்க்கை-

உத்திர பிரதேசம், அலிகார் முஸ்லிம் பல்கலையில் எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்புகளில் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணபிக்க விரும்பும் மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண்களோடு தொடர்புடைய படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்படிவத்தை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அத்துடன் 500 ரூபாய்க்கான டி.டி மற்றும் கல்விச்சான்றுகளின் நகல்களை இணைத்து 12.01.2012க்குள் விண்ணப்பிக்க வேண்டும். 5.02.2012 அன்று நடைபெறும் நுழைவுத்தேர்வில், பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெறும். மேலும் விவரங்கள் அறிய www.amu.ac.in/pdf/event1212201102.pdf என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம்


எப்போதும் துறுதுறுவென விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகமாக இருக்கும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

விளையாடிக் கொண்டே இருக்கிறான், கொஞ்ச நேரம் கூட உட்கார மாட்டான் என்றும், எப்போதும் துறுதுறுவென எதையாவது செய்கிறான் என்று புலம்பும் பெற்றோரா நீங்கள். அப்படியானால் இந்த ஆராய்ச்சி முடிவு உங்களுக்கு சந்தோஷத்தை அளிக்கும்.

ஆம், நெதர்லாந்தில் உள்ள வ்யூ யூனிவர்சிட்டி மெடிக்கல் சென்டரின் எம்கோ சுகாதார ஆராய்ச்சி நிறுவனம், குழந்தைகளின் உடல் அசைவுகளுக்கும், அவர்களது கல்வித் திறனுக்கும் உள்ள தொடரபு குறித்து ஆய்வு செய்தனர்.

அரசு வேலை வாய்ப்பில் சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத ஒதுக்கீடு

அரசு வேலை வாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓபிசி) வழங்கப்படும் 27 சதவீத இட ஒதுக்கீட்டில் சிறுபான்மையினருக்கு 4.5% உள் ஒதுக்கீடு அளிக்கும் முறை ஜனவரி 1ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.

அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களிலும் சிறுபான்மையினத்தவருக்கு 4.5% உள் ஒதுக்கீடு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதனை பல்வேறு மாநிலங்களில் உள்ள வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டு அறிவிப்பினை வெளியிட்டது.

இதையடுத்து, இந்த ஒதுக்கீட்டை பொதுத் துறை நிறுவனங்களும் ஜனவரி 1ம் தேதியில் இருந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள முஸ்லிம், சீக்கியர், கிறிஸ்டியன், புத்தம், சவுராஷ்டிரம் ஆகிய இனத்தைச் சேர்ந்தவர்கள் சிறுபான்மையினத்தவராகக் கருதப்படுவர்.

இது குறித்து பொதுத் துறை நிறுவனங்கள் அனைத்து அமைச்சகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. நாட்டில் மொத்தம் 249 பொதுத்துறை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 04, 2012

மொராக்கோ:இஸ்லாமியவாதிகளின் தலைமையில் புதிய அமைச்சரவை

ரபாத்:மொராக்கோவில் இஸ்லாமிய கட்சியான ஜஸ்டிஸ் அண்ட் டெவல்ப்மெண்ட் கட்சியின் (பி.ஜெ.டி) தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது.

பி.ஜெ.டி தலைவர் அப்துல் இலாஹ் பென்கிரானை பிரதமராகவும், 31 உறுப்பினர்களை கொண்ட அமைச்சரவையும் மொராக்கோ மன்னர் நியமித்துள்ளதாக அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் கூறுகிறது. புதிய அமைச்சரவையில் பிரதமர்,
வெளியுறவுத்துறை, சட்டம், செய்தி ஒலிபரப்பு உள்பட 11 அமைச்சர்கள் பி.ஜெ.டி கட்சியை சார்ந்தவர்கள் ஆவர்.

சிவிலியன் அரசுக்கு கூடுதல் அதிகாரத்தை உறுதிச்செய்யும் புதிய அரசியல் சட்டத்தின் அடிப்படையில் கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் பி.ஜெ.டி அதிக இடங்களை கைப்பற்றிய

மத்தியபிரதேச மாநிலத்தில் பசுவதைக்கு சிறைத்தண்டனை 7 ஆண்டாக அதிகரிப்பு

போபால்:பா.ஜ.க ஆளும் மத்தியபிரதேச மாநிலத்தில் பசுவதை தடைச் சட்டத்தை மீறுவோருக்கு சிறைத் தண்டனை 3 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுத்தொடர்பான திருத்த மசோதாவை குடியரசு தலைவர் அங்கீகரித்துவிட்டதாகவும், ஆதலால் இச்சட்டம் அமுலுக்கு வந்துள்ளதாகவும் மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு கூறுகிறது.

பசுவதை தடைச்சட்டத்தை கடந்த ஆண்டு மாநில அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. புதிய சட்டம் நடைமுறைக்கு வந்ததன் மூலம் 2004-ஆம் ஆண்டு நிறைவேற்றிய ‘கோ வம்ச ப்ரதிஷேட் அதிநியமம்’ என்ற சட்டம் வழக்கொழிந்தது.

பசுவதை தடை சட்டத்தை மீறுவோருக்கு குறைந்த அபராதமாக 5 ஆயிரம் ரூபாய் விதிக்கவும் இச்சட்டத்தில் பிரிவு உள்ளது. நீதிமன்றங்கள் இத்தொகையை அதிகரிக்கலாம். பசுக்களை கொல்வதற்காக வாகனத்தில் கொண்டு செல்வோரும் தண்டனையை பெறுவர். ஹெட் கான்ஸ்டபிளுக்கு மேல் ராங்குடைய அதிகாரிகளுக்கு பரிசோதனை நடத்தவும், வழக்கு பதிவுச்செய்யவும் அதிகாரம் உள்ளது.

புதிய மசோதா குடியரசு தலைவரின் அங்கீகாரத்திற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.

வருகிறது இன்னொரு வசதி சேமிப்பு கணக்கு எண் மாறாமல் விரும்பிய வங்கிக்கு மாறலாம்

செல்போன், இன்சூரன்ஸ் ஆகியவற்றை தொடர்ந்து நம்பர் மாறாமல் நிறுவனம் மாறும் வசதி வங்கிகளுக்கும் விரிகிறது. சேமிப்பு கணக்கு எண் மாறாமல் வேறு வங்கியில் கணக்கு தொடங்கும் வசதி ஏற்படுத்த மத்திய நிதி அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. மத்திய நிதி அமைச்சகத்தின் ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில் நிதி சேவை துறை செயலர் மிட்டல், பொருளாதார விவகார செயலர் கோபாலன், நிதித் துறை செயலர் குஜ்ரால், தலைமை பொருளாதார ஆலோசகர் கவுசிக் பாசு ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்துக்கு பிறகு மிட்டல் கூறியதாவது:

வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் அந்த எண் மாறாமல் வேறு வங்கியில் கணக்கு தொடங்கும் வசதி அளிக்க விரும்புகிறோம். அதை செய்வதில் சில தொழில்நுட்ப பிரச்னைகள் உள்ளன. அவற்றை அடையாளம் கண்டுள்ளோம். அந்த பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். அதன் பிறகு, ஒரு வங்கியில் இருந்து சேமிப்பு கணக்கை வேறு வங்கிக்கு மாற்றுவதற்கான வசதி அறிமுகமாகும். வாடிக்கையாளரின் அடையாள குறியீடு, வாடிக்கையாளரை அறியும் விதிமுறைகள் (கேஒய்சி), கணினி மூலம் இணைக்கபட்ட வங்கி சேவை (கோர் பாங்கிங்) ஆகியவற்றை வங்கிகள் ஒருங்கிணைப்பதன் மூலம் சேமிப்பு கணக்கு எண் மாறாமல் வங்கி மாறும் சேவை கிடைக்கும்.

ரயில் டிக்கெட் முன்பதிவு: மொபைல்போனில் எளிது

மொபைல்போன் மூலமாக, ரயில் பயண டிக்கெட் முன்பதிவுக்கு, ரயில்வே துறை புதிய வசதியை துவக்கி உள்ளது. ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இ-டிக்கெட் மூலம் முன்பதிவு செய்யும் வசதி வந்த பிறகு, பலருக்கும் இது பயனுள்ளதாக இருந்தது. இதில், அடுத்த கட்டமாக, மொபைல்போனை பயன்படுத்தி, ரயில் பயண முன்பதிவு டிக்கெட் பெறும் வசதியை, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் அறிமுகப்படுத்தி உள்ளது. 

இன்டர்நெட் வசதி கொண்ட மொபைல்போன்களை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே, இத்திட்டம் பொருந்தும். இவ்வசதியுள்ளவர்கள், முதலில் மொபைல்போன் மூலமாக, தனது பெயர் மற்றும் பல தகவல்களை பதிவு செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து, ஐ.டி., மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை, முன்பதிவு மையம் பயணிக்கு வழங்கும். அதன் பிறகே, டிக்கெட் முன்பதிவை செய்ய இயலும். முன்பதிவு செய்ததும், பயணிக்கு பி.என். ஆர்.எண், ரயில் எண், பயணத் தேதி, எந்த வகுப்பு போன்ற தகவல்கள் (எலக்ட்ரானிக் ரிசர்வேஷன் ஸ்லிப்) அனுப்பப்படும்.

இப்புதிய வசதி காரணமாக, பயணிகள் அத்தகவல்களை பிரின்ட் அவுட் எடுக்கத் தேவையிருக்காது. தங்களது மொபைல்போனில் பதிவான தகவல்களை, ரயில் பயணத்தின் போது காண்பித்தால் போதுமானது. முதல் கட்டமாக துவக்கப்பட்டுள்ள இவ்வசதியை, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கான சேவைக் கட்டணம், இ-டிக்கெட் பெறும்போது வசூலிக்கப்படுவதைப் போன்றே, தூங்கும் வசதிக்கு ஒரு டிக்கெட்டிற்கு 10 ரூபாயும், உயர் வகுப்புகளுக்கு, 20 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும்.

10ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை அறிவிப்பு

இந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியருக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஏப்ரல் 4ம் தேதி முதல் 23ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்க உள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி தேர்வுத் துறை செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், 
ஏப்ரல் 4ம் தேதி தமிழ் முதல் தாள்
ஏப்ரல் 6ம் தேதி தமிழ் இரண்டாம் தாள்
ஏப்ரல் 11ம் தேதி ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 12ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 16ம் தேதி கணிதத் தேர்வு
ஏப்ரல் 19ம் தேதி அறிவியல் தேர்வு
ஏப்ரல் 23ம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறும்.

தமிழகம் முழுவதும் சுமார் 11 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தினால், அரசு மற்றும் மெட்ரிக் என சி.பி.எஸ்.இ. தவிர அனைத்து பள்ளி மாணவர்களும் ஒரே பாடப்பிரிவின் கீழ் தேர்வு எழுத உள்ளனர்.

சமச்சீர் கல்வித் திட்டத்தின் இம்முறை 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் அறிவியல் செய்முறைத் தேர்வு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 01, 2012

‘ஈராக் ஃபலுஜாவில் என்னுடைய பங்கு குறித்து நான் மன்னிப்பு கோருகிறேன்’ – ரோஸ் கேபுட்டி


லண்டன்:ஈராக்கில் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்திய போது அங்கு பிரிட்டன் படையில் இருந்த ரோஸ் கேபுட்டி என்னும் ராணுவ வீரர் தான் அந்த போரில் கலந்து கொண்டதற்காக மன்னிப்பு கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது; ‘ஈராக்கின் ஃபலுஜா என்னும் இடத்தை இரண்டாவது தடவை முற்றுகையிட்டு இந்த வருடத்துடன் ஏழு வருடங்கள் ஆகிறது. அமெரிக்க படைகள் அந்நகரத்தை அழித்ததுடன் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்றனர். மேலும் பல ஆயிரக்கணக்கான மக்களை இடம் பெயரச் செய்தனர். மேலும் அந்த நகரில் வாழும் மக்களை கேன்சர் நோய்க்கு ஆளாக்கியதுடன் அங்கு பிறக்கும் குழந்தைகள் குறையுடனேயே பிறக்கின்றன’ என்று தெரிவித்துள்ளார்.

‘இது நடந்து ஏழு வருடங்கள் ஆகிவிட்டன ஆனால் எந்த காரணத்தை சொல்லி நாங்கள் தாக்குதலை மேற்கொண்டோமோ அது வெறும் பொய்யான நம்பிக்கை மட்டுமே. மேலும் அமெரிக்க வீரர்கள் இதுவரை தாம் எதற்க்காக பேர் செய்கிறோம் என்றும் யாரை எதிர்த்து போர் செய்கிறோம் என்றும் இன்னும் புரியாமல்தான் உள்ளனர்’ என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தானும் அந்த படையில் இருந்ததால் தனுக்கு அது நன்றாக தெரியும் என்றும் கூறியுள்ளார்.