Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 28, 2011

சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பழைய பாலத்தில் சீரமைப்புப் பணி

சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பழைய பாலத்தில் சீரமைப்புப் பணி நடைபெறுவதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ் தெரிவித்தார்.

இது குறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ் தெரிவித்தது:

சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பழைய பாலம் பலவீனமடைந்ததால் அருகில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.இருப்பினும் பழைய பாலத்தில் போக்குவரத்து நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் பழைய பாலத்தின் கைப்பிடிச் சுவர், அடித்தளம் பாதித்துள்ளதால் உடையும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் இந்த பாலத்தை பயன்படுத்த வேண்டாம்.அருகில் உள்ள புதிய பாலத்தை பயன்படுத்த வேண்டும். தற்போது ரூ.30 லட்சம் செலவில் பழைய பாலத்தின் கைப்பிடிச் சுவர், கான்கிரீட் தளம், ஷட்டர் உள்ளிட்டவை சீரமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.எனவே பொதுமக்கள் இப்பாலத்தில் பயணத்தை தவிர்த்து புதிய பாலத்தை பயன்படுத்த வேண்டும் என்றார் செல்வராஜ்

பிப்ரவரி 25, 2011

கடலூர் செல்போன் சேவையை அதிகரிக்க மேலும் 128 டவர்கள்

கடலூர் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் (விழுப்பரம், கடலூர் வருவாய் மாவட்டங்கள்) பி.எஸ்.என்.எல். செல்போன் சேவையை மேம்படுத்த, மேலும் 128 செல்போன் டவர்கள் அமைக்கப்படும் என்று பி.எஸ்.என்.எல். மாவட்டப் பொது மேலாளர் மார்ஷல் ஆன்டனி லியோ தெரிவித்தார்.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆதரவுடன், சென்னை சி.ஏ.ஐ. நுகர்வோர் அமைப்பு மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு இணைந்து செல்போன் பயன்படுத்துவோருக்கான ஆலோசனைக் கருத்தரங்கை கடலூரில் வியாழக்கிழமை நடத்தின.
கருத்தரங்க தொடக்க விழாவில் பொதுமேலாளர் மார்ஷல் ஆன்டனி லியோ கூறியது:

கடலூர் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் தற்போது 1 லட்சம் தரைவழி தொலைபேசி இணைப்புகள் உள்ளன.166 தொலைபேசி இணைப்பகங்கள் உள்ளன. செல்போன் சேவைக்காக 360 டவர்கள் உள்ளன. செல்போன் சேவையை மேம்படுத்த மேலும் 60 டவர்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. மேற்கொண்டு 68 டவர்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.கிராமப்புறங்களில் 30 ஆயிரம் வில் தொலைபேசி இணைப்புகளும், 55 வில் தொலைபேசி நிலையங்களும் உள்ளன.

தமிழகத்தில் மகப்பேறு நிதியுதவியால் 25 லட்சம் பேர் பயன்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

தமிழகத்தில் மகப்பேறு நிதியுதவி திட்டத்தால் 25 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார். கடலூர் அடுத்த வெள்ளக்கரை, புவனகிரி அடுத்த ஆயிபுரம் ஆகிய கிராமங்களில் தலா 21.79 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா நடந்தது. டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணை இயக்குனர் மீரா வரவேற்றார். மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கமலக் கண்ணன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மனோகரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சண்முகம், கல்விக்குழுத் தலைவர் ஜெயபால், ஊராட்சித் தலைவர் ஜெயபால் வாழ்த்திப் பேசினர்.

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் புதிய கட்டடங்களை திறந்து வைத்து பேசியதது:

ஓர் வஃபாத் செய்தி!

நமதூர் பள்ளிவாசல் தெருவில் மர்ஹூம் மொவ்ளவி இனாயத்துல்லாஹ் அவர்களின் மகள் ராபியத்துல் பஷிரியா அவர்கள் இன்று காலை தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கொள்ளுமேடுXpress இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

பிப்ரவரி 24, 2011

இஸ்லாமிய சட்டத்தோடு இணங்கிய புதிய பங்கு சந்தை​ குறியீடு

நாட்டில் எண்ணிக்கையில் அதிகமிருக்கும் முஸ்லிம்களுக்கு பங்கு வர்த்தகத்தை திறந்துவிடும் முயற்சியாக டாசிஸ் ஷரியா 50 எனும் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது ஆசியாவின் பழமைவாய்ந்த பங்குசந்தையான மும்பை பங்குசந்தை.

இந்திய பங்குசந்தையில் பாரம்பரியமாக ஹிந்து முதலீட்டாளர்களே பெரும் அதிகாரம் செலுத்தி வருகின்றனர் ஆனால் இஸ்லாமிய சட்டத்தோடு இணங்கிய புதிய குறியீடு கொண்ட நிதி உள்ளடக்கத்தை நோக்கி பங்குசந்தை நடவடிக்கையை எடுத்து வருகிறது.

"இந்திய பங்கு வர்த்தக உரிமையில், வரலாற்றில் குறைந்த அளவே ஈடுபட்ட முஸ்லிம் சமுதாயத்தை இப்புதிய குறியீடு அடையவேண்டும் என்பதே இதன் நோக்கம்" என்று மும்பை பங்குசந்தையின் சந்தை மேம்பாட்டுத்துறை தலைவர் ஜேம்ஸ் ஷாபிரோ கூறியுள்ளார்.

சவுதி அரேபிய மன்னரின் சலுகைகள்!

உடல் நலம் குன்றியிருந்து மன்னர் அப்துல்லா மொராக்கோவில் சிகிச்சை பெற்ற பின்னர் நேற்று (23.02.2011) சவுதி திரும்பினார்.

நாடு திரும்பியதும் அவர் அரசு ஊழியர்களுக்குச் சம்பளத்தில் 15 சதவிகிதம் உயர்வு வழங்குவதாக அறிவித்தார். இது தவிர வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கான கல்விக் கட்டண உதவி, வேலையில்லாமல் இருக்கும் சவுதி பிரஜைகளுக்கு உதவித் தொகை, கடன் வாங்கி செலுத்த முடியாமல் சிறையில் இருப்பவர்களின் கடனை அரசு வழங்கும் என பல சலுகைகளை அளித்துள்ளார். இவ்வாறு ஏறத்தாழ 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள உதவித் திட்டங்களை அப்துல்லா அறிவித்துள்ளார்.


மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் மக்கள் பொருளாதார நெருக்கடியால் ஆளுகின்ற அரசுக்கெதிராக கிளர்ந்தெழுவது தொடர்ந்து நடைபெற்று வருகையில் சவுதி மன்னரின் இந்த அறிவிப்பு மக்களை அமைதிப்படுத்தும் முயற்சியாக தெரிகிறது.

கடலூர் அணைக்கரை பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்

சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அணைக்கரை பாலத்தில் திங்கள்கிழமை முதல் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பஸ் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தஞ்சை மாவட்டம் அணைக்கரையில் உள்ளது கீழணை. இந்த அணைக்கு கல்லணையிலிருந்து கொள்ளிடம் வழியாக நீர் வருகிறது. கீழணை பாசனம் மூலம் கடலூர், தஞ்சை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் 1.50 லட்சம் ஏக்கர் வேளாண் பாசனம் நடைபெறுகிறது.கீழணையில் அரியலூர், கடலூர், தஞ்சாவூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில் பிரதான பாலம் உள்ளது. இந்த பாலம் வலுவிழந்ததால் பாலத்தில் சில ஆண்டுகளாக கனரக வாகனங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டு கார், வேன் மட்டும் இயக்கப்பட்டு வந்தது.

பிப்ரவரி 23, 2011

முதல்முறையாக 150 ரூபாய் நாணயம் வெளியாகிறது

டெல்லி: இந்தியாவின் நாணய வரலாற்றில் முதல்முறையாக, 150 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிடுகிறது.

வருமான வரித்துறை தொடங்கப்பட்டு, 150 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையில், இந்த சிறப்பு நாணயம் வெளியிடப்படுகிறது.

வருகிற 28-ந் தேதி, பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி பொது பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு இந்த நாணயத்தை வெளியிடுகிறார்.

ஓசோன் ஓட்டையால் அடுத்த 10 ஆண்டுகளில் கடல் மட்டம் அதிகரிக்கும்

ஓசோன் எனப்படும் பாதுகாப்பு வளையம் பூமியை நேரடியாக சூரியக் கதிர்கள் தாக்காமல் பார்த்துக் கொள்கிறது. இந்த படலத்தில் ஓட்டை விழுவது மனிதர்களுக்கு தோல் நோய் உள்பட பல நோய்களை உண்டாக்குகிறது.

மேலும் பூமி வெப்பத்தை அதிகரிக்கிறது. இதனால் ஆர்ட்டிக், அன்டார்டிக் துருவ பகுதிகளில் பனி மலைகள் உருகி கடல் மட்டம் உயரும் அபாயம், தட்பவெப்ப நிலை மாற்றம், நீர் மாசுபாடு என பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இவ்வாறு ஏற்படும் நீர் மாசுபாடு பல்வேறு நோய்களையும் ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறது. அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் சுற்றுச் சூழல் ஆராய்ச்சி நிறுவனம் உலக வெப்பமயமாதல் குறித்து சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது.

உருது அகாடமி ஆட்சிக்குழு திருத்தி அமைப்பு: கருணாநிதி உத்தரவு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

முதல்-அமைச்சர் கருணாநிதி இஸ்லாமிய சமுதாய மக்களின் நெடுநாள் கோரிக்கையை ஏற்று உருது மொழி வளர்ச்சிக்காக 8-3-2000 அன்று, “தமிழ்நாடு மாநில உருது அகாடமி” என்னும் அமைப்பை உருவாக்கினார்.

இந்த உருது அகாடமியின் ஆட்சிக்குழு முதல்- அமைச்சர் கருணாநிதியால் 18-2-2007 அன்று திருத்தியமைக்கப்பட்டது. அக்குழு உறுப்பினர்கள் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதால் உருது அகாடமியின் ஆட்சிக் குழுவினைத் திருத்தியமைத்து முதல்- அமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

இந்த ஆணையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் ஆட்சிக்குழுத் தலைவராகவும், சென்னை பல்கலைக்கழகத்தில் பன்மொழி அகராதித் திட்ட உறுப்பினராகப் பணியாற்றிய ஏ.எஸ்.சஜ்ஜத் புஹாரி துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

லிபியாவை உடைத்து குட்டி நாடுகளை உருவாக்க முயற்சி- கடாபியின் மகன்

லிபியாவில் 42 ஆண்டுகளாக அதிபராக இருக்கும் முவாம்மர் கடாபி பதவி விலக வலியுறுத்தி அங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது.


நேற்று 6-வது நாளாக போராட்டம் நடந்தது. தலைநகர் டிரிபோலி, பென் காசி, கவுர்லி, கோபுரக், அல்-பாஸ்டா, மில்ரதா உள் ளிட்ட நகரங்களில் கலவரம் பரவியுள்ளது.

கலவரத்தை அடக்க ராணுவம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் துப்பாக்கி மற்றும் கனரக ஆயுதங்களை போராட்டக் காரர்கள் மீது பயன்படுத்தி வருகின்றனர்.

அவர்கள் தவிர அதிபர் கடாபியின் ஆதரவாளர்களும் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடு படுபவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உயிரிழந்து வருகின்றனர்.

பிப்ரவரி 22, 2011

துபாயில் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள்

துபாய்ல் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள் (தமிழில் ) பள்ளி மாணவ, மாணவியருக்காக சென்சுரி மால் மற்றும் துபாய் செண்ட்ரல் பள்ளி ( அல் நஹ்தா ) அருகாமையிலும் நடத்தப்பட்டு வருகின்றன.


சென்சுரி மால் அருகில் மாலை அஸர் தொழுகைக்குப் பின்னரும், செண்ட்ரல் பள்ளி அருகில் மாலை மஹ்ரிஃப் தொழுகை முதல் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நல்வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்பு எண் : 050 6760 859

இந்தாண்டின் இறுதிக்குள், 77 பாஸ்போர்ட் சேவை மையங்கள்

பாஸ்‌போர்ட் அனைவரும் எளிதில் பெறும் வண்ணம், நாடெங்குமிலும் 77 புதிய பாஸ்‌போர்ட் சேவை மையங்கள் இந்தாண்டின் இறுதிக்குள் அமைக்கப்பட இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக உயர் அதிகாரி கே என் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்த சேவை மைய‌ங்கள் திறக்கப்பட்ட பிறகு, பாஸ்போர்ட் குறித்த விசாரணைகள் ஆன்லைனிலே மேற்கொள்ளப்பபடும், இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவல்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். இதன்மூலம் பாஸ்போர்ட் பெறுவது எளிதாக்கப்படும். ஆந்திராவில் 7 மையங்களும், ஐதராபாத்தில் 3 மையங்களும் அமைக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.DM

எஸ்.எஸ்.எல்.சி & பிளஸ்-2 பொதுத் தேர்வு கடலூர் மாவட்டத்தில் 62 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வை கடலூர் மாவட்டத்தில் 62 ஆயிரத்து 262 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள் எனவும், முறைகேடுகளை தடுக்க 25 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் முதன்மை கல்வி அதிகாரி அமுதவல்லி தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் வருகிற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளை சிறப்பாக நடத்துவது சம்பந்தமான மாவட்ட தேர்வுக்குழு ஆலோசனை கூட்டம் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் கலெக்டர் சீத்தாராமன் தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வு மையங்களை பார்வையிட்டு முறைகேடு ஏதுமின்றி தேர்வு நடைபெறுகிறதா என்பதை ஆய்வு செய்வது, வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், தேர்வு மையங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவது குறித்து போலீஸ் அதிகாரிகள், தபால் துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் ஆகியோரின் பணிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்குமான பணிகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

இளைய சமூகத்தின் எழுச்சி - ASA

துனீஷியாவில் துவங்கி எகிப்தை ஆட்டிப்படைத்து லிபியா, பஹ்ரைன், ஜோர்டான், அல்ஜீரியா, யெமன், மொராக்கோ என தீவிரமடைந்துள்ள மக்கள் எழுச்சிப் போராட்டத்தை ஆய்வுச் செய்யும்பொழுது முதலில் நமக்கு தெரியவரும் உண்மை என்னவெனில் 18-30 வயதுடை இளைஞர்கள்தாம் இத்தகைய போராட்டங்களின் முக்கியசக்தி என்பதாகும். அவர்களில் ஆண்கள், பெண்கள்,ஷியா, சுன்னி, முதலாளி, தொழிலாளி, டாக்டர்கள், எஞ்சினீயர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் அடங்குவர்.

ஏதேனும் கட்சிகளோ, இயக்கங்களோ, மத அமைப்புகளோ, தலைவர்களோ இவர்களை வழி நடத்திச் செல்லவில்லை. இத்தகையதொரு எதிர்பாராத உயிர்தெழல் கண்முன்பாக நிதர்சனமான பொழுது சுதந்திரத்திற்காகவும், நீதிக்காகவும், பல ஆண்டுகளாக போராடிய கட்சிகளும் அமைப்புகளுமெல்லாம் மக்கள் எழுச்சிப்பிரவாகத்தில் பங்காளிகளானார்கள்.

கிளர்ந்தெழுந்த மக்கள் எழுச்சியிலிருந்து ஆட்சியை பாதுகாக்க தள்ளாடும் வயதிலும் தந்திரங்களை பயின்றும் அவை பலனற்றுப் போனதால் தடுமாறி வீழ்ந்தனர் ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள்.

பிப்ரவரி 21, 2011

டார்வினிசம் என்பது விஞ்ஞானமல்ல. அது இயற்கயை கடவுளாக கொண்ட ஷாமன மதம்

டார்வினிசம் என்பது அனைத்து விதமான மூடநம்பிக்கைகளையும் உள்ளடக்கிய பண்டைய ஷாமன மதம். ஷாமன மாதம் 50,000 ஆண்டுகள் பழமைவாய்ந்தது.


ஷாமன மதம் மழை, புயல், மின்னல், காற்று, மற்றும் சூரியன் போன்ற இயற்கை சக்திகளை வழிப்படும் முறையை கொண்டது. டார்வினிசம் என்பதும் இயற்கையை வழிப்படும் ஒருவகை மதம். அது இயற்கையை அற்புதமான சக்திகளை கொண்டது என்று வர்ணிக்கிறது. அது கல், பூமி, சூரியன், மின்னல் மற்றும் காற்று ஆகியவை இணைந்து உயிரினங்களை உருவாக்கியது என்று நம்புகிறது.


ஷமனர்கள் அவர்களது சமுதாயத்தில் தங்களை மருத்தவர்கள், முனிவர்கள், தலைவர்கள், ஆட்சியாளர்களாக இணங்காட்டி கொண்டனர். அதை போன்று டார்வினிஸ்டுகளும் தங்களை அதே முறையில் அறிமுகப்படுத்துகின்றனர். ஷமனர்கள் தங்களுக்குதான் இயற்கையின் இரகசியங்கள் தெரியும் என்றும் எதிர்காலத்தையும் கூற முடியும் என்றும் கூறினர். டார்வினிஸ்டுகளும் அதை போன்று அணு மற்றும் பூமி, பொருளின் இரகசியம் தங்களுக்கு தெரியும் என்றும் எதிர்காலத்தில் மனிதர்களும் இயற்கையும் மாற்றமடையும் கற்பனை சிந்தனையை விளக்குகின்றனர்.

லால்பேட்டை வெற்றிலை கொடிக்காலில் முதலை பிடிபட்டது

லால்பேட்டை வெற்றிலை கொடிக்காலில் புகுந்த முதலையை, தீயணைப்புத் துறையினர் பிடித்து, வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் லால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஹாலிது. இவருக்குச் சொந்தமான வெற்றிலை கொடிக்கால் வீராணம் ஏரிக்கரையையொட்டி உள்ளது. வழக்கம்போல் காலை கொடிக்காலுக்குச் சென்ற ஹாலிது, அங்கு முதலை இருந்தது கண்டு திடுக்கிட்டார்.

தகவலறிந்த காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் கஜபதி ராவ் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கொடிக்காலில் பதுங்கியிருந்த முதலையை, 4 மணி நேரம் போராடி பிடித்து, வனவர் சரவணகுமாரிடம் ஒப்படைத்தனர். 10 அடி நீளமும் 500 கிலோ எடையும் கொண்ட முதலை, சிதம்பரம் அடுத்த வக்காரமாரி குளத்தில் விடப்பட்டது.
-DM

இஸ்லாமிய பொருளாதாரத் துறைக்கான முதல் மின்னணு பத்திரிகை துவக்கம்

இஸ்லாமிய பொருளாதாரத் துறையைக் குறித்த செய்திகளும், சிறப்புகளும் அடங்கிய உலகின் முதல் மின்னணு பத்திரிகை வெளியாகியுள்ளது.

உலகின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பத்திரிகையாளர்கள் 'தி இஸ்லாமிக் க்ளோப்' என்ற இணையதள பத்திரிகையின் பின்னணியில் செயல்படுகின்றனர்.

வாரந்தோறும் வெளிவரும் இஸ்லாமி க்ளோப் மின்னணு பத்திரிகை ஐபாட், ஐஃபோன், ப்ளாக்பெர்ரி, கின்டில் ஆகியவற்றிலும் பார்க்கலாம். உயர்ந்த தரமும், சுதந்திரமான செய்திகளும், கட்டுரைகளும் தி இஸ்லாமிக் க்ளோப் அளிக்கும் என அதன் ஸ்தாபகர்கள் தெரிவிக்கின்றனர்.

1950 ஆம் ஆண்டு பத்திரிகைகளை நினைவுக்கூறும் விதமாக இப்பத்திரிகை வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 20, 2011

பிளஸ் 2 மாணவர்களுக்கு 21ம் தேதி முதல் "ஹால் டிக்கெட்'

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு, 21ம் தேதி முதல், அந்தந்த பள்ளிகளில் நுழைவு சீட்டு வழங்கப்படுகின்றன.

பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், மார்ச் 2ம் தேதி துவங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து ஏழு லட்சம் மாணவர்கள், இத்தேர்வை எழுதுகின்றனர். இவர்களில், அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு, கடந்த 3ம் தேதி துவங்கியது. இத்தேர்வு, வரும் 22ம் தேதியுடன் முடிகிறது. இதற்கிடையே பொதுத்தேர்வு தேதி நெருங்கி விட்டதால், மாணவர்களுக்கான, "ஹால் டிக்கெட்'டுகள், அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம், அனைத்துப் பள்ளிகளுக்கும், "ஹால் டிக்கெட்டு'கள் தனித்தனியே பிரித்து அனுப்பப்படுகின்றன. வரும் 21ம் தேதியில் இருந்து, மாணவர்களுக்கு, "ஹால் டிக்கெட்டுகளை வழங்க, தலைமை ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர். அடுத்த வாரத்துடன், மாணவர்களுக்கான வகுப்புகளும் முடிகின்றன.

மக்கள்தொகை கணக்கெடுப்பும்., மக்களின் அறியாமையும்?

வணக்கம் சார்! மக்கள் தொகை கணக்கெடுக்க வந்துருக்கோம்!'


- ரோட்டில் இருந்து வாசல் கதவை எட்டிப் பார்த்துக் கூவுகிறார் அந்த அரசு ஊழியர்.

"நாளைக்கு சாயந்தரமா வாங்க' என, முகத்தில் அடித்தாற்போல் பதில் வருகிறது. பென்சிலால் அதைக் குறித்துக்கொண்டு, அலுக்காமல் அடுத்த வீட்டு கதவைத் தட்டுகிறார் அந்த ஊழியர்.

இப்படித்தான் இருக்கிறது, மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களின் நிலை. சிலர் காலையில் வரச் சொல்வர்; சிலர் மாலையில்; சிலர் அடுத்த நாள். சிலரிடம் பதிலே கிடையாது. "அவ்வளவு ஏன்? விவரம் சொன்னதும், படாரென்று கதவைச் சாத்தியவர்களும் உண்டு' என, குமுறுகிறார் சென்னையின் புறநகர்ப் பகுதியில் கணக்கெடுக்கும் ஒரு பெண்மணி. மக்களைச் சொல்லியும் குற்றமில்லை. வாரம் முழுவதும் வேலை பார்த்து, வீட்டில் ஓய்ந்து கிடக்கும் நேரத்தில், யாரோ அதிகாரியின் கேள்விகளுக்கு அரை மணி நேரம் பதில் சொல்வதென்றால் கசப்பாகத் தான் இருக்கிறது. இப்படி இரண்டும் இரு துருவத்தில் இருக்கும் என்பதைக் கணித்து தான், இந்தப் பணிக்கு 20 நாட்களை ஒதுக்கியிருக்கிறது உள்துறை அமைச்சகம்.

அலர்ஜி(ஒவ்வாமை) தொல்லைக்கு அசத்தல் டிப்ஸ்

தட்பவெப்பம், உணவு, சுற்றுச் சூழல் மாசு உள்பட பல காரணங்களால் அலர்ஜி உண்டாகிறது. இதற்கு சரியான காரணத்தை கண்டுபிடித்தால் தவிர வேறு எந்த மருந்துக்கும் குணமாகாது.

பலர் அலர்ஜியை ஆரம்பத்தில் பெரிதாக கருதாமல் விட்டுவிடுகிறார்கள். மருத்துவரிடம் செல்லாமல், தங்களுக்கு தெரிந்த மருந்துகளை உபயோகிக்கின்றனர். இதனால் அலர்ஜி குணமாவதற்கு பதிலாக பெரிதாகி தொல்லை கொடுக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

வெளியில் இருந்து உடலுக்கு ஒவ்வாத பொருட்கள் நுழையும் போது, உடல் காட்டும் நோய் எதிர்ப்பு தன்மையின் காரணமாக உருவாவதுதான் அலர்ஜி. இதன் வெளிப்பாடாக தோல் அரிப்பு, மூக்கடைப்பு, தொடர் தும்மல், கண் எரிச்சல் மற்றும் நமைச்சல் போன்றவை தோன்றுகிறது.

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: சி.பி.ஐ. குழு துபை செல்கிறது!

நாட்டையே உலுக்கிய ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு முறைகேட்டில் தவறு செய்தவர்கள் யார்? பின்னணியில் இருந்து இயக்கியவர்கள் யார்? லாபம் அடைந்தவர்கள் யார்? யார்? என்று பல்வேறு கோணங்களில் சி.பி.ஐ.யும், அமலாக்கப் பிரிவினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதல் கட்டமாக அலைவரிசை ஒதுக்கீட்டில் எப்படி முறைகேடு நடந்தது என்று சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் முன்னாள் மத்திய மந்திரி ஆ. ராசா, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த், ராஜாவின் தனிச் செயலாளர் சந்தோலியா, ஸ்வான்-டிபிரியாலிட்டி நிறுவனத்தின் பல்வா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ராசா உள்ளிட்ட 4 பேரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது முதல்கட்ட விசாரணையைத்தான் முடித்துள்ளனர். இவர்களிடம் பெற்ற தகவல்கள் அடிப்படையிலும், ஏற்கனவே கைப்பற்றியுள்ள ஆவணங்களின் அடிப்படையிலும் அடுத்தக்கட்ட விசாரணையை முடுக்கி விட சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரமாகி உள்ளனர்.

பிப்ரவரி 19, 2011

எகிப்தில் டாக்டர் யூசுஃப் அல்கர்தாவியின் ஜும்ஆஉரை

சர்வதேச இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவரும் உலகின் பிரபல முஸ்லிம் அறிஞருமான டாக்டர் யூசுஃப் அல்கர்தாவி நேற்று கெய்ரோ தஹ்ரீர் சதுக்கத்தில் 30 லட்சம்பேர் பங்கேற்ற ஜும்ஆ தொழுகையில் பங்கேற்று உரைநிகழ்த்தினார்.

டாக்டர் கர்தாவி எகிப்து நாட்டைச் சார்ந்த மார்க்க அறிஞராவார். ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், இஸ்லாத்தின் எதிரிகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்பவர்.

கடந்த 1981 ஆம் ஆண்டு எகிப்தை விட்டு வெளியேறிய அவர் கத்தர் நாட்டில் வசித்துவருகிறார். இந்நிலையில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி எகிப்தில் மக்கள் எழுச்சிப் போராட்டம் உருவானது. இப்போராட்டம் துவங்கிய நாளிலிருந்தே தொடர்ந்து ஜும்ஆ உரைகளில் ஹுஸ்னி முபாரக்கின் கொடுங்கோல் ஆட்சிக்கெதிராக குரல் எழுப்பி வந்தார் கர்தாவி. மேலும் எகிப்திய மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனையும் நடத்தினார்.

எகிப்தில் ஹுஸ்னி முபாரக் ராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து அந்நாட்டு மக்கள் நேற்று(வெள்ளிக்கிழமை) வெற்றித்தினமாக கொண்டாடினர். இதனையொட்டி தஹ்ரீர் சதுக்கத்தில் நடந்த ஜும்ஆ தொழுகையில் பங்கேற்க 30 ஆண்டுகளுக்கு பிறகு கர்தாவி எகிப்து மண்ணில் காலடி எடுத்துவைத்தார். ஜும்ஆ தொழுகையில் 30 லட்சம் பேர் கலந்துகொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜமாஅத்தே இஸ்லாமியின் புதிய அரசியல் கட்சி உதயமாகிறது!

ஜமாஅத்தே இஸ்லாமியின் சார்பாக புதிய அரசியல் கட்சி வருகிற மார்ச் மாதம் உதயமாகிறது. கட்சியின் பெயரை தீர்மானிக்க மார்ச் ஐந்தாம் தேதி நடக்கும் கூட்டத்திற்கு பிறகு கட்சி பிரகடனம் செய்யப்படும்.

பீப்பிள்ஸ் வெல்ஃபயர் பார்டி, ஜஸ்டிஸ் பார்டி ஆஃப் இந்தியா, வெல்ஃபயர் அண்ட் ஜஸ்டிஸ் பார்டி ஆகிய நான்கு பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. கட்சிக்கு ஹிந்தி மொழியில் பெயர் சூட்டவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கட்சியின் அதிகாரப்பூர்வ பிரகடனம் மார்ச் மாதம் நடைபெறும் என ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் டாக்டர்.எஸ்.க்யூ.ஆர்.இல்யாஸ் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 18, 2011

தோலில் தான் வேதனை உணரும் நரம்புகள் உள்ளன! குர்ஆன்

வேதனைகளை உணரக் கூடிய நரம்புகள் மனிதனின் தோலில் தான் உள்ளன. தோல் கரிந்து விட்டால் எந்த வேதனையையும் மூளை உணராது என்பது சமீபத்திய கண்டு பிடிப்பு. 

இதனால் தான் மேல் தோலை மட்டும் மரத்துப் போகச் செய்யும் ஊசிகளைப் போட்டு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்கின்றனர். முழு உடலையும் மரத்துப் போகச் செய்வதில்லை. அவ்வாறு மரத்துப் போகச் செய்தால் மனிதன் செத்து விடுவான்.

அது போல் தான் தீக்காயத்தில் தோல் கருகிப் போனவர்கள் வேதனையால் துடிக்காமல் இருப்பதையும் காண்கிறோம். 


4:56யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.

திருக்குர்ஆன்'அவர்களின் தோல் கருகும் போது அதை மாற்றுவோம்என்று கூறாமல்'வேதனையை அவர்கள் உணர்வதற்காகவே மாற்றுவோம்என்று 14நூற்றாண்டுகளுக்கு முன்னால் கூறுவதென்றால் மனிதனைப் படைத்த இறைவனால் தான் சாத்தியமாகும். திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதற்கு இதுவும் வலுவான சான்றாக அமைந்துள்ளது.

source:ஆன்லைன்pj

வீராணம் ஏரியில் தண்ணீர் குறைந்தது சென்னைக்கு குடிநீர் செல்வதில் சிக்கல்

கோடை காலம் துவங்கும் முன்பே, வீராணம் ஏரியில் தண்ணீர் குறைந்ததால் சென்னைக்கு குடிநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரி மூலம் 70 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. சென்னைக்கு தினமும் 72 கன அடி தண்ணீர் செல்கிறது. கடந்தாண்டு பருவமழை தாமதமானதால், மேட்டூர் அணையிலிருந்து குறித்த காலத்தில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் குறுவை சாகுபடி தாமதமானது.

கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பெய்த கடும் மழையால் நெற்பயிர்களை வெள்ளம் சூழ்ந்தது. வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டும், பாதுகாப்பு கருதியும் வீராணம் ஏரியில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. கீழணையில் இருந்து வீராணத்திற்கு வந்த தண்ணீர், கொள்ளிடம் வழியாக கடலுக்கு திருப்பி விடப்பட்டது. வெள்ளம் வடிந்த பின், கீழணையில் இருந்து வீராணத்திற்கு தினமும் 600 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. ஒரு மாதத்திற்கு முன் கீழணைக்கு தண்ணீர் வரத்து இல்லாததால், வீராணத்திற்கு தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.தற்போது ஏரியின் மொத்த தண்ணீர் அள வான, 1,465 மில்லியன் கன அடிக்கு 150 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.

பிப்ரவரி 17, 2011

பிறர் புகையால் மரணமடைபவர்கள் எண்ணிக்கை 6 லட்சம்

"பேசிவ் ஸ்மோக்கிங்" என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தான் புகை பிடிக்காமல் புகைப்பழக்கமுள்ளவர்களுடன் தொடர்புடையதாலேயே மரணமடைபவர்களின் எண்ணிக்கை ஆண்டொன்றுக்கு 6 லட்சம் பேர் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

நாம் பொதுவாக நம் நண்பர்கள் புகைப் பிடிக்கும் போது அருகில் நிற்போம். மதுபான விடுதிகளிலும் பிற பொது இடங்களிலும் சிகரட் புகையினால் பாதிக்கப்படுபவர்கள் புகை பிடிப்பவர்கள் மட்டுமல்ல அருகில் இருப்பவர்களும்தான்.

பிரிட்டன் மருத்துவ இதழான லான்செட்டில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுத் தகவல்களின் படி குழந்தைகளில் 40 சதவீதத்தினரும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோரில் 30 சதவீதத்தினரும் இம்மாதிரியான பிறரது புகைப்பழக்கத்திற்கு பாதிக்கப்படுகின்றனர்.

சர்வதேச ஐ.டி. கல்லூரியில் உயர் படிப்புகள்

தகவல் தொழில்நுட்ப படிப்புகளுக்கு எப்போதுமே மாணவர்கள் மத்தியில் மவுசு உண்டு. அதிக சம்பளம் முக்கிய காரணம். கூடுதலாக முதுநிலை, ஆராய்ச்சி படிப்புகளை படிப்பவர்கள் எளிதில் வேலைவாய்ப்பை தட்டிச்சென்று விடுகிறார்கள்.

புனேயில் செயல்பட்டு வரும் சர்வதேச தகவல் தொழில்நுட்ப கல்லூரியில் எம்டெக், எம்எஸ், பிஎச்டி உள்ளிட்ட முதுநிலை, ஆராய்ச்சி படிப்புகள் அளிக்கப்படுகின்றன. எம்டெக் அட்வான்ஸ்டு இன்பர்மேஷன் டெக்னாலஜி என்றபடிப்பில் சாப்ட்வேர் டெக்னாலஜிஸ், நெட்வொர்க்கிங் அண்ட் டெலிகம்யூனிகேஷன்ஸ், எம்பெட்டட் சிஸ்டம்ஸ் டிசைன், மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் அண்ட் விஎல்எஸ்ஐ டிசைன், நானோ பயோடெக்னாலஜி, இன்டெலிஜன்ட் டிரான்ஸ்போர்டேஷன் சிஸ்டம்ஸ், சாட்டிலைட் கம்யூனிகேஷன் அண்ட் ஸ்பேஸ் சிஸ்டம்ஸ், ஆட்டோமோட்டிவ் இன்ஜினியரிங் அண்ட் &மனுபாக்சரிங் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன

10 சதவீதம் தொகுதிகளை ஒதுக்கும் கட்சியுடன் கூட்டணி - எஸ்.டி.பி.ஐ

     முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் தொகுதி ஒதுக்கீடு, ஊழலை ஒழிக்க சரியான செயல்திட்டம் போன்ற எஸ்.டி.பி.ஐ-ன் கோரிக்கைகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்து வரும் சட்டமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. போட்டியிடும் என அக்கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ.-ன் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; "எஸ்.டி.பி.ஐ. கடந்த 1 1/2 வருடங்களாக தமிழகத்தில் தீவிரமாக செயல்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் தனது கட்டமைப்பை ஏற்படுத்தி லட்சக்கணக்கான உறுப்பினர்களுடனும், பல்லாயிர கணக்கான செயல் வீரர்களுடனும் மக்கள் பணியாற்றி வருகிறது.

பிப்ரவரி 16, 2011

டவர் இல்லாமலேயே செயல்படும் செல்போன்கள்

செல்போன் டவர்கள் மூலமாக சமிக்ஞைகளை பெற்று தான் தற்போது செல்போன்கள் இயங்கி வருகின்றன. டவர்கள் இல்லாவிட்டால் செல்போன்கள் இயங்காது.

ஆனால் அமெரிக்க விஞ்ஞானிகள் டவர்கள் இல்லாமலேயே செல்போன்கள் இயங்கச் செய்யக் கூடிய செல்போன் தொழில் நுட்பத்தை அவர்கள் உருவாக்கி உள்ளனர். பிளைண்டர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் செயல்படும் சர்வதேச குழு சாப்ட்வேர் ஒன்றை உருவாக்கி உள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை தேர்தலுக்கு முன் கடைசி வாய்ப்பு

சட்டசபைத் தேர்தலுக்கு முன், வாக்காளர் அடையாள அட்டை குறைகளை தீர்க்க கடைசி வாய்ப்பாக, வரும் 19, 20ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியின் செய்தி குறிப்பு:
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தொடர்பான குறைகளை தீர்ப்பதற்காக, வரும் 19, 20 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இச்சிறப்பு முகாம்கள் ஊரகப் பகுதிகளில் பிர்கா நிலையிலும், நகரப் பகுதிகளில் நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் நடக்கும். ஊரகப் பகுதிகளில் வருவாய் ஆய்வாளர்களும், நகராட்சி, மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் மேலாளர்களும் இதற்கான படிவங்களை பெறுவர்.

லால்பேட்டையில் ஓட்டல் கடைகள் எரிந்து சாம்பலாயின!

லால்பேட்டை காயிதே மில்லத் சாலையில் முகமது நவமான் ஓட்டல் நேற்று முன்தினம் இரவு 2 மணியளவில் திடீரென தீ பிடித்து எரிந்தது. தொடர்ந்து அருகில் உள்ள அப்துல்கான், முகமது சாதிக் அலி ஆகியோரது கோழிக்கடையும், முகமது ஆலீது வீடும் தீ பிடித்தன. தகவலறிந்த காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் (பொறுப்பு) கஜபதி ராவ் தலைமையில் தீயணைப்பு விரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் கடைகளில் இருந்த கோழிகள் மற்றும் பொருட்கள் என 3 லட்சம் ரூபாய் அளவில் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
DM

அந்நியர்களாக்கப்படும் இந்திய குடிமக்கள் - அஸ்ஸாம்

ரஸியா பேகம், அஸ்ஸாம் மாநிலம் பார்பெட்டாவைச் சார்ந்தவர். தனக்கு நேர்ந்த கொடுமைகளையும், துயரச் சம்பவங்களையும் விவரிக்கும்போது உடைந்துபோய் அழுகிறார். கடந்த 24 வருடங்களாக டெல்லி போலீசாரின் கொடுமைகளுக்கு ஆளாகி வருகிறது இவரது குடும்பம்.

சில தினங்களுக்கு முன்னால் ரோஹினி பகுதியைச் சார்ந்த போலீசார் இவரது மகள் ராணியை போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அவரிடம் ரூ.1750 ஐ பெற்றுக்கொண்டு விடுவித்துள்ளனர்.

ரஸியாவின் ஒரே மகனான அப்துற் ரஸ்ஸாக் கடந்த 2006-ஆம் ஆண்டு தற்கொலைச் செய்துக்கொண்டார். இதற்கு போலீசாரின் தொந்தரவும் இதர பிரச்சனைகளும்தான் காரணம். ஆனால், போலீசார் இவர் போதைப் பொருளுக்கு அடிமையானதால் ஏற்பட்ட மனச்சோர்வினால் தற்கொலைச் செய்துக் கொண்டதாக கூறியுள்ளனர்.

பிப்ரவரி 15, 2011

மீலாத் விழா ஓர் இஸ்லாமியப் பார்வை

அன்பான அழைப்பு:
மவ்லிதை ஓதி, மீலாத் விழா நடத்தும் சகோதரர்களே! முதலாவதாக உங்கள் நடைமுறையால் நபி (ஸல்) அவர்களை நேசியுங்கள்.

எப்படித் தொழுதார்கள்? எவ்வாறு திருமணம் செய்தார்கள்? அல்லது எப்படி திருமணம் செய்யச் சொன்னார்கள்? எவ்வாறு ஆடை அணியச் சொன்னார்கள்? எவ்வாறு இல்லற வாழ்வில் ஈடுபடும்படி கூறினார்கள்.? குழந்தைகளை எவ்வாறு வளர்த்தார்கள்? அண்டை அயலவர்கள், ஏழைகள் விருந்தினர்கள், எதிரிகள், குழந்தைகள், மனைவியர் ஆகியோருடன் எவ்வாறு நடந்து கொண்டார்கள்? தாடி எவ்வாறு வளர்த்தார்கள்?

 மீசை எவ்வாறு வைத்திருந்தார்கள்? எவ்வாறு உறங்கினார்கள்? உணவருந்தினார்கள்? நீர் பருகினார்கள்? காலை, மாலையில் என்ன ஃதிக்ர்" பிரார்த்தனை ஓதினார்கள். என்பன போன்ற நூற்றுக்கணக்கான நபியின் உண்ணத நடைமுறையை உங்கள் அன்றாட வாழ்வில் கடைப்பிடியுங்கள். அப்படி செய்தால், உங்கள் வாழ்வில் நடக்கும் பெரிய மீலாத் விழா வேறொன்றுமில்லை.

நபியின் காலத்தில் இல்லாத ஒரு வழி முறையை தொழுகை, மற்றும் இதர வணக்கங்கள் போலாக்கி ஓதி வருவதை, கொண்டாடுவதை உலகில் அங்கீகரித்தவர்கள் யார்? நபித்தோழர்கள் முதல் அவர்களின் வழி வந்த எந்த இமாம்மும் அதனை அங்கீகரிக்கவில்லையே! மவ்லிதைப் பாடுவோர் அறிவால் விளக்கத்தால் முன்னோர்களான நபித்தோழர்கள், இமாம்களை விடவும்சிறந்தவர்களா?

”எவர் அவருடைய (முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின்) கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக்கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 24:63)

இந்தியர்களுக்கு மீண்டும்! அமெரிக்கா

இந்தியாவில் மீண்டும் தகவல்தொழில்நுட்ப அவுட்சோர்சிங் மற்றும் பேக் ஆபிஸ் புரா‌ஜெக்ட் திட்டங்களை ஒப்படைக்க இருப்பதாக அமெரிக்காவின் முனன்ணி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான சிட்டிகுரூப், ஜேபி மார்கன் மற்றும் பேங்க் ஆப் அமெரிக்கா உள்ளிட்டவைகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

அமெரிக்காவின் பொருளாதாரம், சமீபத்தில் கடும் வீழ்ச்சி கண்டது. தற்போது, அதிலிருந்து மெல்ல‌ மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கிறோம். விரைவில், பழைய நிலையை அடை‌ந்து விடுவோம் என்பதில் எவ்வித சந்தேகமுமி்லலை. அமெரிக்க அரசின் புதிய அவுட்சோர்சிங் கொள்கைகள் மற்றும் புதிய ஒருங்கிணைந்த வங்கிக் கொள்கைகள் மற்றும் திட்டங்களின் மூலம் மீண்டும், புதிய நிலையை அடைய தீர்மானித்துள்‌ளோம்.

வீராணம் ஏரியில் காடுகள் தீ வைத்து அழிப்பு


கொள்ளிடக்கரையை மேம்படுத்தும் பணிக்காக, வீராணம் ஏரியில் மண் எடுக்க, ஏரியில் வளர்ந்துள்ள காடுகள் தீ வைத்து அழிக்கப்படுகின்றன.

வெள்ள பாதிப்புக்கு நிரந்த தீர்வு காணும் வகையில் கடலூர் மாவட்டம், கொள்ளிடம் ஆற்றின் கரையை மேம்படுத்தி, சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது, 108 கோடி ரூபாயில் அணைக்கரையில் இருந்து முகத்துவாரம் வரை பணிகள் நடக்கின்றன. இப்பணிக்காக, வீராணம் ஏரியின் மேல்கரையில், கருணாகரநல்லூர் பகுதியில் மண் எடுக்கப்படுகிறது. வீராணம் ஏரியில் மற்ற பகுதியிலும் மண் எடுப்பதற்கு வசதியாக, ஏரியின் உட்பகுதியில் புதர் மண்டியிருந்த காடுகள் அகற்றும் பணி துவங்கியுள்ளது. இதன் துவக்கமாக, ஏரியின் உட்புறம் உள்ள அடர்ந்த காடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டு வருகின்றன.

பிப்ரவரி 14, 2011

ஊட்டச்சத்து- புரதம் இதன் முக்கியத்துவம்

புரதங்கள் அமினோ அமிலங்களினால் ஆனவை. இவை உயிர்வாழ்வினங்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பல வேலைகளை செய்வதற்கு இன்றியமையாத பொருளாகும். பெரும்பாலும் உடலிலுள்ள புரத அளவில் பாதியளவு தசை வடிவில் அமைந்துள்ளன. புரதத்தின் தரமானது உணவில் அமைந்துள்ள அத்தியாவசியமான அமினோ அமிலங்களைப் பொறுத்து அமைகிறது.

புரதத்தின் செயல்பாடுகள்:

புரதமானது உடலில் ஏற்படக்கூடிய முக்கிய வேதியியல் மாற்றச் செயல்களுக்கு என்ஸைம் மற்றும் ஹார்மோன் வடிவிலும் தேவைப்படுகிறது. குழந்தை மற்றும் விடலைப் பருவத்தில் உடல் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான ஆதாரப்பொருட்களை புரதங்கள் தருகின்றது. வளர்ந்தவர்களில் தேய்மானம் மற்றும் சேதாரத்தினால் ஏற்படும் இழப்புகளை பராமரிக்க புரதங்கள் உதவியாயிருக்கின்றன.

எகிப்து மக்கள் எழுச்சியில் இஃவான்களின் பங்கு என்ன?

தஹ்ரீர் சதுக்கத்தை மையமாக வைத்து கடந்த 18 தினங்களாக நடைபெற்ற மக்கள் எழுச்சிப் போராட்டத்தை அமைதியான முறையில் நிர்வகித்தது யார்? என்ற கேள்விக்கு பதிலாக அனைவரும் சுட்டிக் காட்டுவது எகிப்தின் பிரதான எதிர்கட்சியான இஃவானுல் முஸ்லிமீன் இயக்கமாகும்.


மக்கள் எழுச்சிப் போராட்டம் வலுப்பெறுவதற்கு இணையதளமும், அல்ஜஸீராவும் முக்கிய பங்கு வகித்த பொழுதிலும் வலுவான தலைமையில்லாமல் இந்த மக்கள் புரட்சி வெற்றிப் பெறவியலாது என்பதைத்தான் இஃவான்களின் பங்களிப்பு நமக்கு உணர்த்துகிறது.

சிதம்பரம் பஸ் நிலைய கடைகள் அடைப்பு!!

சிதம்பரம் சப் இன்ஸ்பெக்டரை கண்டித்து பஸ் நிலையத்தில் வியாபாரிகள் கடையடைப்பு செய்தனர். சிதம்பரம் நகரில் இரவு 11 மணிக்கு மேல் கடைகளை அடைக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. நேற்று பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்ற சப் இன்ஸ்பெக்டர் பாபு, பஸ் நிலையத்தில் திறந்திருந்த ஒரு பெட்டிக்கடையை அடைக்கும்படி கூறினார். மேலும் ரோந்து பணி முடித்து விட்டு வரும்போதும் கடை திறந்திருந்ததால் ஆத்திரமடைந்து லத்தியால் தட்டிய போது கடையில் இருந்த பாட்டில்கள் உடைந்தன. இதனை கண்டித்து பஸ் நிலையத்தில் நேற்று காலை வியாபாரிகள் கடையடைப்பு நடத்தினர். அதனை தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு கடைகள் 10 மணியளவில் திறக்கப்பட்டன.
-Dinamalar

பிப்ரவரி 13, 2011

பிறந்ததினத்தை எதிர்த்த நபிக்கே பிறந்த தினக் கொண்டாட்டமா?

உலகில் வாழும் மக்களுக்கு நேர் வழி காட்டுவதற்காக காலத்திற்குக் காலம் இறைவன் பல நபிமார்களை அனுப்பி அவர்கள் மூலமாக மனிதர்களுக்கு நேர்வழியை சொல்லிக் கொடுத்தான்.

நல்லது எது? தீயது எது? என்பதை அந்த நபிமார்கள் மூலமாக பிரித்துக் காட்டினான். இந்த உலகுக்கு இறுதித் தூதராக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் நாம் நேர் வழி பெற வேண்டும் என்பதற்காக இறைவனால் கொடுக்கப்பட்ட திருமறைக் குர்ஆனைத் தந்ததுடன் அதற்கு விளக்கமாக வாழ்ந்தும் காட்டினார்கள்.

நபியவர்கள் எப்படி வாழ்ந்தார்களோ, நம்மை எப்படி வாழும் படி சொன்னார்களோ அந்த அடிப்படையில் தான் நாம் வாழ வேண்டும்.நபியவர்கள் காட்டிய வழிமுறைக்கு மாற்றமாக நாம் வாழ்ந்தால் நாளை மறுமையில் தோழ்விதான் மிஞ்சும் என்று இறைவன் தனது அருள் மறையில் குறிப்பிடுகிறான்.

இந்தத் தூதர் எதனை (மார்க்கமாக) தந்தாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்.அவர் எதை விட்டும் தடுத்தாரோ அதனை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்.(59:7)

ஒரு வயது குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் மருத்துவ நிதி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

பிறந்த குழந்தை முதல் ஒரு வயது வரையில் உள்ள குழந்தைகள் இலவசமாக சிகிச்சை பெற ரூ.1 லட்சம் வரையில் நிதி உதவி பெறும் புதிய திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்தெரிவித்தார்.

பண்ருட்டி நகராட்சிக்கு உள்பட்ட கடலூர் சாலை-கும்பகோணம் சாலை இணைக்கும் பிரதான சாலை திறப்பு விழா, இலவச கலர் டி.வி. வழங்கும் விழா, கர்ப்பிணிகளுக்கு நிதி உதவி வழங்கும் விழா பண்ருட்டி நகராட்சி வளாகத்தில் புதன்கிழமை நடந்தது.

விழாவில் இலவச கலர் டி.வி.க்களையும், கர்ப்பிணிகளுக்கு நிதி உதவிகளை வழங்கியும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியது.

இறுதியில் பதவி விலகினார் முபாரக்

சுழன்று வீசிய மக்கள் எழுச்சி சூறாவளிக் காற்றில் மீண்டும் ஒரு அரபுலக சர்வாதிகாரியின் பதவி வேரோடு சாய்ந்தது.எகிப்து மக்களின் உறுதியான மனோதிடத்தின் முன்னால் முப்பது ஆண்டுகள் நீண்ட முபாரக்கின் துயரங்கள் நிறைந்த ஆட்சி முடிவுக்கு வந்தது.

அதிபர் பதவியை ராஜினாமாச் செய்யப்போவதாக முபாரக் தொலைக்காட்சி வாயிலாக பிரகடனப்படுத்திய பொழுது தலைநகரான கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது. மகிழ்ச்சியில் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொண்டனர்.

போராட்ட வீதிகளில் உயிர் தியாக செய்த தியாகிகளின் பெயர்களை மக்கள் முழங்கியது கெய்ரோவை அதிர்வடையச் செய்தது.துனீசியாவில் துவங்கிய மக்கள் புரட்சியின் தீக்கனலை நெஞ்சில் ஏற்றிக்கொண்ட எகிப்து நாட்டு மக்கள் போராட்டத்தில் குதித்த 17-வது தினம் முபாரக் பதவி விலகியுள்ளார்.

பிப்ரவரி 10, 2011

இறைவனிடம் கேட்பது பற்றிய இஸ்லாமிய நிலைபாடு- RASMIN M.I.Sc

ஒரு மனிதன் இறைவனிடம் தனது தேவைகளை முன்வைப்பதற்கு இஸ்லாமிய மார்க்கம் அழகிய நடை முறைகள் பலவற்றைக் கற்றுத் தருகிறது.அதிலே மிகவும் முக்கியமான நடைமுறை எவருக்கு எந்தத் தேவையானாலும் அதை அவர் தனது இறைவனிடம் நேரடியாக் கேட்க்க வேண்டும் இடைத்தரகர் வைக்கக் கூடாது. அதே போல் எந்தக் காரணம் கொண்டும் இறைவன் அல்லாதவர்களிடம் கேட்கவே கூடாது அப்படிக் கேட்டால் அது இறைவனுக்கு இணை வைத்தல் என்ற மாபெரும் குற்றமாக கருதப்படும்.

தான் பலவீனமானவன் என்பதையும் இறைவன் சர்வ சக்தி படைத்தவன் என்பதையும் பிரார்த்தனையின் மூலம் மனிதன் ஒப்புக் கொள்கின்றான். எனவே அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு திருக்குர்ஆனில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. மேலும் நபி (ஸல்) அவர்களும் இதை வலியுறுத்தியுள்ளார்கள்.

''பிரார்த்தனை தான் வணக்கமாகும். (ஏனெனில்) உங்கள் இறைவன் கூறுகின்றான்: என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கின்றேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூற்கள் : அபூதாவூத் (1264) திர்மிதீ (3294) இப்னுமாஜா (3818) அஹ்மத் (17629)

யூதர்களின் பிடியில் உலக ஊடகங்கள்

நபிமார்களைப் பொய்யாக்குவது, படுகொலை செய்வது (5:70, 2:87) அல்லாஹ்வைப் பிச்சைக்காரன் என்று இழிவாகப் பேசுவது, அல்லாஹ்வை விட நாங்கள் செல்வச் செழிப்பு மிக்கவர்கள் என்று திமிராகப் பேசுவது (3:181) அல்லாஹ்வின் வலிமையையே நாங்கள் வென்றவர்கள் என்று கிறுக்குத்தனமாக உளறுவது (5:64) அல்லாஹ்வினால் அருளாக வழங்கப்பட்ட வேத வசனங்களை இடம் மாற்றி, பொருள் மாற்றிப் புரட்டல் செய்வது (4:46) அறிந்து கொண்டே அல்லாஹ்வின் மீது பொய்யைக் கூறுவது (3:75) பூமியில் கிளர்ச்சிகளை ஏற்படுத்துவது, யுத்தச் சூழலை உருவாக்குவது (5:64)

முஃமீன்களை கடும் பகைவர்களாகக் கருதுவது (3:118-119) ஒப்பந்தங்களை முறிப்பது (2:100) மார்க்கத்தை கேலிப் பொருளாகவும் விளையாட்டாகவும் கருதுவது (5:57) தடை செய்யப்பட்ட பொருள்களை உண்பது, மக்கள் சொத்தை முறைகேடாக உண்பது, வட்டியை உண்பது (4:161) உலக வாழ்வை அளவு கடந்து நேசிப்பது, மரணத்தை வெறுப்பது (2:96) ஈவு, இரக்கத்தைத் தொலைத்து எந்தப் பழிபாவத்துக்கும் அஞ்சாமல் மனதைக் கல்லாக இறுக வைத்துக் கொள்வது (5:13

பிப்ரவரி 09, 2011

கொள்ளுமேட்டில் இன்று தவ்ஹீத் மர்கஸ் திறப்பு - தவ்ஹீத்தின் எழுச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருப்பையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொளுமேடு கிளையின் சார்பாக மர்கஸ் கட்டப்பட்டு இன்ஷாஅல்லாஹ் இன்று 09.01.2011 புதன் கிழமை அஷர் தொழுகையுடன் துவங்குகிறது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் அப்துர்ரஜ்ஜாக் மற்றும் அபூபக்கர் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.கிளை தலைவர் ரஜ்வி மற்றும் தாயகம் சென்றுள்ள மர்கஸ் மேலாண்மைக்குழு உறுப்பினர் முஹம்மது மஃரூப் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இன்ஷாஅல்லாஹ் மர்கஸ் திறப்பு நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விரைவில் வெளியிடுகின்றோம்.....

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!அல்குர்ஆன் 72:18

பிப்ரவரி 08, 2011

வந்துவிட்டது பறக்கும் நவீன கார்!!

சமீப காலமாக உலகம் முழுவதிலும் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகிவிட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இதனால் திட்டமிட்டப்படி ஒரு இடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களில் விமானம் போல் பறந்து சென்று கடந்து சென்றால் என்ன? என்று நமக்கு தோன்றும்.

இதையே தற்போது நிஜமாக்கி இருக்கிறது அமெரிக்காவை சேர்ந்த டெரபுஜியா டிரான்சிசன் நிறுவனம். இந்நிறுவனம் தயாரித்துள்ள நவீன கார் சாலையில் மணிக்கு 105 கி.மீ. வேகத்திலும், ஆகாயத்தில் 185 கி.மீ. வேகத்திலும் பறக்கும். இந்த காருக்கு விமானத்திற்கு பயன்படுத்தும் பெட்ரோல் தேவை இல்லை.

ஆண்கள் குடித்து விட்டு கொடுமைப்படுத்துவதால் ஊருக்குள் சாராயம் விற்க தடை விதித்த பெண்கள்!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் அருகே தலன்பூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு மலைவாழ் மக்கள் 3,000 பேர் வசிக்கிறார்கள். இந்த ஊரில் பெரும் பாலான ஆண்களுக்கு குடிப்பழக்கம் உண்டு.

இதனால் அவர்கள் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவி மார்களை கொடுமைப்படுத்துவது அதிகரித்தது. இதையடுத்து பெண்கள் ஒன்று கூடி மகிலா சமிதி என்ற அமைப்பை உருவாக்கினார்கள்.

இதன் தலைவியாக 30வயது புனி பாய் என்ற பெண் தேர்வு செய்யப்பட்டார். இந்த அமைப்பு ஆண்களின் குடிப்பழக்கத்தை ஒழிக்க கிராமத்துக்குள் யாரும் சாராயம் விற்க கூடாது என்று தடை விதித்தது உள்ளது. மீறி சாராயம் விற்றால் ரூ.2100 அபராதம் விதிக்கப்படும்.

பொருளாதாரப் பிரச்சனைக்கு தீர்வளிக்கின்ற மார்க்கம்.

கடந்த சில மாதங்களுக்கு முன், உலகளவில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, மனித சமுதாயத்தின் சீரான இயக்கத்தின் மீது படுமோசமான தாக்குதல்கள் நிகழ்ந்தன.. தினமும் எத்தனையோ வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் திவாலாகி போவதென்பதும், பலர் வேலைவாய்ப்பினை இழந்து வறுமையின் கோரப்பிடியில் சிக்கி பறிதவிப்பதும் தொடர்கதையாக இருந்து கொண்டிருந்தது. அந்த பாதிப்புகளையெல்லாம் செய்திதாள்களின் மூலமாக நாம் அறிந்து வைத்துள்ளோம்.

இதைப் போன்றே மாபெரும் பொருதாரப் பிரச்சனைகள், நெருக்கடிகள் அவ்வப்போது தோன்றி, ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையும் வாட்டி வதைத்து வேதனைப் படுத்தியிருக்கின்றன என்பதை உலக சரித்திரத்தைத் திருப்பிப் பார்ப்பவர்களால் தெரிந்து கொள்ள முடியும்.

எகிப்து:மக்​கள் எழுச்சிப் போ​ராட்டத்திற்​கு தூண்டுகோலா​க அமைந்தது அஸ்மா மஹ்ஃபூஸின் வீடியோ

முப்பது ஆண்டுகாலமாக எகிப்து நாட்டில் ஆட்சி புரிந்துவரும் ஹுஸ்னி முபாரக்கின் சர்வாதிகார ஆட்சியை ஆட்டங்காண வைத்திருக்கும் மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு தூண்டுகோலாக அமைந்தது எகிப்தைச் சார்ந்த அஸ்மா மஹ்ஃபூஸின் வீடியோவாகும்

கடந்த 2008 ஆம் ஆண்டு அல்மஹல்லா அல் குப்ரா தொழில் நகரத்தில் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்த தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து துவக்கப்பட்ட 'ஏப்ரல் 6 இளைஞர் இயக்கம்' என்ற ஃபேஸ் புக் குழுமத்தின் ஸ்தாபகர்களில் ஒருவர்தான் அஸ்மா மஹ்ஃபூஸ்.இளைஞர்களுக்கு புரட்சியின் தீக்கனலை கிளறச்செய்யக் காரணமாக அமைந்தது அவருடைய ப்ளாக்கில் போஸ்ட் செய்யப்பட்ட வீடியோக் காட்சியில் இடம்பெற்ற வார்த்தைகளாகும்.

பிப்ரவரி 07, 2011

கைது பயத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ்!

குவான்டனாமோ சிறைக் கைதிகளைக் கொடுமைப்படுத்திய விவகாரத்தில் தான் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தால், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் தனது சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்து விட்டார்.

"குவான்டனாமோ சிறையில் உள்ள, சில கைதிகளை சித்ரவதை செய்யும்படி சிறை அதிகாரிகளுக்கு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உத்தரவிட்டார்' என்று அமெரிக்காவில் இயங்கி வரும் மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.இந்நிலையில், இம்மாதம் 12ம் தேதி சுவிட்சர்லாந்தில் நடக்க உள்ள, ஒரு ஆண்டு விழாவில் முக்கியப் பேச்சாளராக புஷ் கலந்துகொள்ள இருந்தார்.சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில், அவர் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

போலிசுக்கு தலைவலி; குற்றவாளிகளுக்கு கொண்டாட்டம்!

புதுடெல்லி: தொடர்பு எண்களை மாற்றிக்கொள்ளாமலே, வேறு மொபைல்போன் நிறுவனத்தின் சேவைக்கு மாறிக்கொள்ளும் புதிய வசதியை அமல்படுத்தியுள்ளது மத்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்). இந்த வசதி, வாடிக்கையாளருக்கு வரப்பிரசாதமாக அமைந்த போதிலும், குற்ற வழக்குகளை கையாளும் காவல்துறையிருக்கு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

ஒரு வாடிக்கையாளராக இருப்பவர், வேறு மொபைல்போன் நிறுவனத்தின் சேவைக்கு மாறுவதாக இருந்தால்... ஏற்கனவே, தான் பயன்படுத்தி வரும் மொபைல்போன் எண்களை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. தாங்கள் பயன்படுத்தும் எண்ணுக்குரிய மொபைல்போன் சேவை நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைக் கட்டணத்தை செலுத்தியபின், அதற்குரிய ஆவணங்களுடன், புதிதாக மாற விரும்பும் மொபைல்போன் நிறுவனத்திடம் விண்ணப்பித்தால் போதும்; பழைய மொபைல்போன் எண்களை பயன்படுத்திக்கொண்டே, புதிய மொபைல்போன் நிறுவனத்தின் சேவையை பெற முடியும். இந்த அறிவிப்பானது மொபைல்போன் வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் விவசாயத்தை வீழ்த்திய தொழிற்சாலைகள்!

கிழக்குக் கடற்கரை ஓரமாக கடலூர் வழியாக, பரங்கிப்பேட்டை முதல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வரை நீண்டு கிடப்பது பக்கிம்ஹாம் கால்வாய்.

பக்கிம்ஹாம் கால்வாயின் இருபுறமும் பச்சைப் பசேலென காட்சி தந்த வேளாண் பயிர்கள், உடலுக்கும் மனதுக்கும் இதம் தரும் கண்கொள்ளா காட்சி. வானுயர வளர்ந்து நிற்கும் பனை மரங்கள், மாமரங்கள், தென்னை மரங்கள், ஆயிரக்கணக்கான ஏக்கரில் முந்திரிக் காடுகள், சவுக்குத் தோப்புகள், மணிலா, வெட்டிவேர் வயல்கள், கத்தரி, வெங்காயம் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்கள் என்று விரிந்து பரந்து கிடந்த நிலப்பரப்பு இன்று, தொழிற்சாலைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு புகை கக்கிக் கொண்டு இருக்கின்றன.

ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் மரங்கள் வெட்டப்பட்டு, சில கட்டடங்கள் தவிர மற்றபடி, பெரும்பகுதி சுடுகாடாய்க் காட்சி அளிக்கின்றன. வேளாண்மையை அழித்தது மட்டுமன்றி, நச்சு வாயுக்களை பெருமளவுக்கு வெளியேற்றி 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்களின் சுகாதாரத்தை பாழ்படுத்தி வருகின்றன. அன்று வெள்ளைக்காரர்களால் எளிமையான நீர்வழிப் போக்குவரத்துக்காக உருவாக்கப்பட்ட பக்கிம்ஹாம் கால்வாய் (உப்பனாறு) இன்று தொழிற்சாலைக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு தகுதியான இடமென மத்திய, மாநில அரசுகள் வகைப்படுத்தி, அங்கு பன்னாட்டு ரசாயனத் தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளித்து வருவது, குதிரை குப்புறத் தள்ளியதுமன்றி குழியும் பறித்த கதையாகி விட்டது.

கடவுளாக ரோட்டோர எல்லை கல்!

ராமநாதபுரம்:ரோட்டோர எல்லை கல்லை சிலர் கடவுளாக சித்தரித்து விட்டு செல்ல, பலரும் அதை வழிபட்டு வருகிறார்கள்.ராமநாதபுரம் மாவட்டம் எட்டிவயல் அருகே மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் எல்லை கல் ஒன்று உள்ளது. சில நாட்களுக்கு முன், அந்த கல் மீது சிலர் மாலை போட்டு, பூஜை நடந்ததற்கான அடை யாளங்களுடன் விட்டு சென்றனர். அதை அவ்வழியாக வந்தவர்கள் பார்த்து, வழிபட துவங்கினர். சில நாட்களில் எல்லை கல் வழிபாடு பிரபலமானது.

வெளியூர் வாசிகள் இதை பொருட்படுத்தவில்லை என்றாலும், அருகில் உள்ள கிராமத்தினர் இவ்வழியாக செல்லும் போது எல்லை கல்லை வழிபடுவதை வழக்கமாக்கினர். நெடுஞ்சாலைத்துறையினர் ஒட்டிய ஒளிரும் ஸ்டிக்கரால்,இரவில் கல் ஒளிர்வதை கூட, கடவுளின் அருள் என அப் பகுதியினர் நம்புகின்றனர்.

அரபு-முஸ்லி​ம் உலகில் மாற்றத்திற்​கான காற்று வீசுகிறது -​ பாப்புலர் ஃப்ரண்ட்

அரபு-முஸ்லிம் உலகில் மாற்றத்திற்கான எழுச்சி தவிர்க்க முடியாதது என பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் தெரிவித்துள்ளார்.

எகிப்தில் ஏற்பட்டுள்ள வெகுஜன எழுச்சியை நவீன காலனி ஆதிக்க-சியோனிஷ சக்திகள் அபகரித்துவிடுமோ என்ற கவலையையும் இ.எம்.அப்துற்றஹ்மான் வெளிப்படுத்தினார்.

துனீசியாவில் வெகுஜன மக்களின் சக்தி வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து எகிப்தில் ஹுஸ்னி முபாரக்கின் சர்வாதிகார ஆட்சிக்கெதிராக போராட்டம் நடந்துவருகிறது.

பிப்ரவரி 06, 2011

கணிதத்தில் ஆராய்ச்சி படிப்பு!

மாணவர்களுக்கு கணித திறமையை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த படிப்பு Level 1, 2, 3 என மூன்று பிரிவுகளாக நடத்தப்படுகிறது.
thanks: dinakaran

திருச்சியில் விமான நேரங்கள் மாற்றம்!

திருச்சியில் இருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா விமான நேரங்கள் மாற்றப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.

சென்னை- திருச்சி- கோலாலம்பூருக்கு தினமும் இயக்கப்படும் ஐ.எக்ஸ்622 விமானம் சென்னையில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு 11.55 மணிக்கு வரும். திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு நள்ளிரவு 1.20 மணிக்கு புறப்படும். அதே போன்று கோலாலம்பூர்- திருச்சி- சென்னைக்கு தினமும் இயக்கப்படும் ஐ.எக்ஸ்621 விமானம் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு காலை 10.35மணிக்கு வரும் பிறகு 11.25 மணிக்கு சென்னைக்கு புறப்படும்.

மோடியை கைது செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!!

குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தை திட்டமிட்டு நடத்தியவர் நரேந்தி மோடிதான் என்றாலும் அவருக்கு இதில் தொடர்பு இல்லை என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மோடியின் ஆதரவாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.

மோடி குற்றவாளி - சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கை

2002 ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு தெளிவான பங்கிருப்பதாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (SIT Report) கண்டறிந்துள்ளது.

பாரபட்சமாக நடந்துக்கொண்டும், நடவடிக்கைகள் மேற்கொள்ளாமலும், பாதிக்கப்பட்டவர்களை புறக்கணித்தும் கலவரத்திற்கு உதவியதாக மோடி மீது குற்றஞ்சாட்டி எஸ்.ஐ.டி தனது அறிக்கையில் கூறியுள்ளது.

2010 ஆம் ஆண்டு மே மாதம் 12-ஆம் தேதி விசாரணையை பூர்த்திச் செய்து முத்திரை வைக்கப்பட்ட உறையில் வைத்து உச்சநீதிமன்றத்தில் எஸ்.ஐ.டி சமர்ப்பித்த அறிக்கையை டெஹல்கா பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதிலும், வகுப்புவெறியை தூண்டிவிட்ட பத்திரிகைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதிலும் மோடி தோல்வியடைந்தார் என அவ்வறிக்கை கூறுகிறது.

பிப்ரவரி 03, 2011

'இந்திய மனித உரிமை நிலவரம்'

பயங்கரவாத சந்தேக நபர்களை இந்திய பொலிஸார் சித்ரவதை செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ள ஹுயூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு இந்தியாவின் பயங்கரவாத தடைச்சட்டத்தில் மறுசீரமைப்பு தேவை என்றும் வலியுறுத்தியுள்ளது.
சந்தேக நபர்கள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுவது முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகச் சொல்லுகின்ற நியூயோர்க்கை தளமாகக் கொண்ட இந்த அமைப்பு, அப்படியான அதிருப்தி, தீவிரவாத அமைப்புக்களின் ஆட்சேர்ப்புக்கு வலுவூட்டலாம் என்றும் கூறியுள்ளது.

கடந்த தசாப்த காலத்தில் பல இந்திய நகரங்கள் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. சந்தைகளும், ரயில் வண்டிகளும், கோயில்களும் மற்றும் மசூதிகளும் இலக்கு வைக்கப்பட்டன.

உலமாக்களுக்கு இலவச சைக்கிள்: கருணாநிதி அறிவிப்பு!

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த உலமாக்களுக்கும், பள்ளிவாசல்களில் பணிபுரியும் மோதினார்களுக்கும், தமிழக கோவில் பூசாரிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டதை போல இலவச சைக்கிள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்-அமைச்சர் கருணாநிதி ஏற்று உலமாக்களுக்கும், மோதினார்களுக்கும் இலவசமாக சைக்கிள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து வரும் மாணவர்கள் வேலை செய்யத் தடை! பிரிட்டன் குடிவரவு அமைச்சர் அதிரடி

பிரிட்டனுக்குள் வரும் ஜரோப்பிய யூனியன் அல்லாத நாடுகளின் மாணவர்களுக்கு கல்வி நேரம் போக ஏனைய நேரங்களில் தொழில் செய்வதற்காக நடமாடுவது நிறுத்தப்படும் என்று பிரிட்டனின் குடிவரவு அமைச்சர் டேமியன் கிரீன் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கான விசாவில் வருபவர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படுவதன் மூலம் உள்ளூர் தொழிலாளர்கள் அநாவசியமான நெருக்குதல்களுக்கு ஆளாகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Source:CNN

கலைஞர் வீடு வழங்கும் திட்டம்: பேரூராட்சியில் கணக்கெடுப்புப் பணி

கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்காக பேரூராட்சியில் கணக்கெடுப்புப் பணி துவங்கப்படவுள்ளது. இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2011 முதல் 2016 வரையுள்ள 5 ஆண்டு காலங்களில் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பேரூராட்சிகளில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தினை செயல்முறைப்படுத்துவதற்காக, குடிசை வீடுகள் கணக்கு எடுக்கப்பட உள்ளது. இம்மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகளில் அமைந்துள்ள குடிசை வீடுகளின் சுவர்கள் எத்தகையதாக இருப்பினும், அனைத்து ஓலை கூரைகள் உள்ள குடிசை வீடுகளும் கணக்கெடுக்கப்படும்.

டிப்ளோமா, +2 படித்தவர்களுக்கு BPO வேலை!

ஓரளவு ஆங்கில பேச்சாற்றல், எழுத்து திறன் உள்ள டிப்ளோமா , +2 படித்தவர்களுக்கு சென்னையில் உள்ள BPO-ல் வேலைக்கான நேர்முக தேர்வு (INTERVIEW) நடைபெற்று கொண்டுஇருக்கின்றது. வேலையில் சேர விரும்புவோர் நேரடியாக அலுவலகத்திற்க்கு சென்று நேர்முக தேர்வில் கலந்து கொள்ளவும். மாத சம்பளம்: ரூ.7,000 மற்றும் இன்சென்டீவ்ஸ் (ஆங்கில திறனை பொருத்து அதிக சம்பளம் வழங்கப்படும்). நேர்முக தேர்வில் கலந்து கொள்ள வேண்டிய முகவரி: Soft Logic Systems, No: 10, PT Rajan Salai, KK Nagar, Chennai – 600078 (Land mark: Above Karnataka bank). நேரம்: காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை. கடைசி தேதி: பிப்ரவரி 20. தொடர்பு கொள்ள வேண்டிய நபர்: சகோ.இம்ரான்.
தகவல்: S.சித்தீக்.M.Tech. TNTJ

காட்டுமன்னார்கோவில் பகுதியில் ரூ.84 லட்சம் செலவில் சாலை பணிகள்

காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி பகுதியில் சிறப்பு சாலைத் திட்டத்தின் கீழ் 84 லட்சம் ரூபாய் செலவில் சாலைகள் போடும் பணி நடந்து வருகிறது. காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி பகுதியில் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் சிமென்ட் சாலை போட 85 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பணிகள் துவங்கி நடந்து வருகிறது. டி.கே.பி. நகர், ஜெயராம் நகர், காளியம்மன்கோவில் தெரு, பெரியார் நகர், அண்ணா நகர், ஆர்.சி. தெரு உள்ளிட்ட 13 தெருக்களில் சிமென்ட் சாலை போடும் பணி படிப்படியாக துவங்கப்பட உள்ளது. மேலும் பேரிடர் தடுப்பு மேலாண்மை திட்டத்தின் கீழ் சிறப்பு சாலை போட 55 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் சில நாட்களில் விடப்படும் என்பதால் அதில் உப்புக்கார தெரு, காந்தியார் தெரு, பெரியார் நகர் தெரு, அண்ணா நகரில் கருணாநிதி தெரு உள்ளிட்ட 7 சாலைகள் அந்த நிதியில் போடப்பட உள்ளதாக பேராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.