Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 31, 2010

2010ஐ கலக்கிய முக்கிய சம்பவங்கள்

1. விக்கிலீக்ஸ் – அமெரிக்காவைப் பற்றி இத்தனை காலமாக உலக நாடுகள் நினைத்துக் கொண்டிருந்த தோற்றத்தை ஒரு சில நாட்களில் அப்படியே மாற்றிப் போட்டது விக்கிலீக்ஸின் ரகசிய ஆவண வெளியீடுகள். அமெரிக்க தூதரகங்களுக்கிடையேயும், தூதரகங்களிலிருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கும் அனுப்பப்பட்ட ரகசிய தகவல்களை அம்பலப்படுத்தி விக்கிலீக்ஸ்,. உலகையே ஒரு கலக்கு கலக்கி விட்டது.

2. ஸ்பெக்ட்ரம் ஊழல் – இந்தியாவையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய மிகப் பெரிய ஊழல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல். சில லட்சம், பல லட்சம், சில கோடி, பல கோடி என்ற சின்னக் கணக்கிலேயே ஊழல்களைப் பார்த்துப் பழகிப் போன இந்திய மக்களுக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி அளவுக்கு நிதி இழப்பு ஏற்பட்டிருப்பதாக கணக்கு தணிக்கை அதிகாரி கொடுத்த தகவலால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த ஊழலுக்கு யார் காரணம் என்று அத்தனை பேரும் போட்டு பிராண்டிக் கொண்டிருந்த வேளையில் அதிகாரத் தரகர் நீரா ராடியாவின் தொலைபேசிப் பேச்சுக்கள் வெளியாகி மேலும் பரபரப்பைக் கூட்டியது. இந்தியாவின் மிகப் பெரிய பரபரப்புச் சம்பவம் என்ற பெயரையும் ஸ்பெக்ட்ரம் விவகாரம் தட்டிக் கொண்டு போய் விட்டது.

கடலூர் மாவட்டத்தில் இணையதளம் மூலம் மின் கட்டணம்

மின் கட்டணத்தை இனி இணைய தளம் மூலம் செலுத்தி பயனடையலாம் என சிதம்பரம் மின் துறை செயற் பொறியாளர் செல்வசேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிதம்பரம் மின் துறை செயற் பொறியாளர் செல்வசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மின் துறை, நுகர்வோர் வசதியை கருத்தில் கொண்டு இணைய தளத்தின் மூலம் மின் கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே நுகர்வோர் இந்த வசதியை பயன்படுத்தி மின் கட்டணம் செலுத்தி பயனடையலாம். மின்வாரிய அலுவலகங்கள் மூலமும் மின் கட்டணத்தை தொடர்ந்து செலுத்தலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது

டிசம்பர் 30, 2010

தலைவலிக்கு தேன் சிறந்த மருந்து: ஆய்வில் தகவல்

பிரிட்டன் நாட்டில் வேதியியல் பிரிவு அறிவியலாளர்கள் ஜான் எம்ஸ்லே என்ற அறிஞர் தலைமையில் தேன் பற்றி சில ஆய்வுகள் மேற்கொண்டனர். அதில் அருமருந்தான தேன் பல வழிகளில் மனிதனுக்கு பயன்படுவதை அவர்கள் கண்டறிந்தனர்.

தேனில் பிரக்டோஸ் என்ற வேதிபொருள் உள்ளது. இது குடிபோதையில் உள்ளோருக்கு ஏற்படும் தலைவலி, மூச்சு திணறல் மற்றும் வாந்தி வருதல் போன்ற உபாதையிலிருந்து விடுதலையளிக்கிறது. ஆல்கஹால் உட்கொள்வோர் உடலில் அசிட்டால்டிஹைடு என்ற வேதிபொருள் உற்பத்தி ஆகிறது.

இதுதான் தலைவலி ஏற்படுவதற்கு காரணமாகிறது. இதனை தேனில் உள்ள பிரக்டோஸ் என்ற வேதிபொருள் அசிட்டிக் அமிலமாக மாற்றுகிறது. பின்னர் அது கார்பன் டை ஆக்சைடாக மாறி சுவாசத்தின் போது எளிதாக வெளியேறுகிறது.

நியண்டர்தால் மனிதன் சமைத்த தாவர உணவை உண்டதாகப் புதிய ஆய்வுகள் தெரிவிப்பு

நியண்டர்தால் மனிதர்கள் சமைத்த தாவர உணவை உண்டதாக அவர்களின் எச்சங்களை ஆராய்ந்த வரலாற்றாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நியண்டர்தால் மனிதன்
ஐக்கிய அமெரிக்காவின் ஆய்வாளர்கள் நியண்டர்தால் மனிதனின் பற்களில் சமைத்த தாவர உணவு மீதிகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். முன்னர் நடத்தப்பட்ட ஆய்வுகள் நியண்டர்தால் மனிதர் மாமிச உணவை மட்டுமே உண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த மனிதர்களின் எலும்புகள் மீது நடத்தப்பட்ட வேதியியல் ஆய்வுகளின் படியே இம்முடிவுகளை முன்னர் எடுத்திருந்தனர். பனி யுகத்தின் போது பெரும் மிருகங்கள் அழிந்தமையே இம்மனிதர்களின் அழிவுக்கும் காரணம் என சிலரால் காரணம் கூறப்பட்டது.

இளைஞர்களின் ஆராய்ச்சி ஆர்வம் : மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்

சந்திராயன் வெற்றிக்குப் பிறகு, விண்வெளி ஆராய்ச்சி செய்ய இளைஞர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளதாக, சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணா துரை பேசினார்.இந்திய வேதிப் பொறியாளர் 63வது ஆண்டு மூன்று நாட்கள் கருத்தரங்கு அண்ணாமலைப் பல்கலைக் கழக சாஸ்திரி அரங்கில், நேற்று முன்தினம் துவங்கியது.

கருத்தரங்கில் பெங்களூர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, "சந்திரனில் இந்தியா' என்ற தலைப்பில் பேசியது:

சந்திரனைப் பற்றி 1960ம் ஆண்டில் தான், முதன் முதலாக ஆராயத் தொடங்கினர். 1980ம் ஆண்டில் தான் ஒவ்வொரு நாடாக ஆராய்ந்தது. எல்லா நாடுகளும் சந்திரனில் ஒரு பகுதியை தான் பார்த்துள்ளனர். ஆனால் சந்திராயன்-1 செயற்கை கோள் மூலம் சந்திரனின் அனைத்து பகுதியையும் பார்த்தது இந்தியா மட்டும் தான்.அங்கு என்னென்ன கனிம பொருட்கள் உள்ளது. என, தெளிவாக ஆய்வு மேற்கொண்டது. மூன்று மைக்ரான் அளவில் கண்ணால் பார்க்க முடியாத வேதிப் பொருட்களும், தண்ணீர் இருப்பதற்கான ஆதாரமும் கண்டறியப்பட்டுள்ளது.

டிசம்பர் 29, 2010

அபுதாபி: வாகன அணிவகுப்பில் உலக சாதனை முறியடிப்பு

உலக சாதனைகளைப் பதிவு செய்யும் கின்னஸ் சாதனைகளில் தென் கொரியாவின் ஹ்யூண்டாய் கார் நிறுவனம் இடம்பெற உள்ளது. கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் 39 ஆம் ஆண்டு கொண்டாட்டங்களைத் தொடர்ந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் வாகன அணிவகுப்பும் நடந்தது.

இவ்வணிவகுப்பின்போது ஹ்யூண்டாய் கார் தயாரிப்பான 390 பள்ளி பேரூந்துகள் தொடர்ச்சியாக அணிவகுத்துச் சென்று முந்தைய உலக சாதனைகளை முறியடித்துள்ளது. சென்ற ஆண்டு கத்தார் நாட்டில் நடந்த அணிவகுப்பில் 325 பள்ளிப் பேருந்துகள் கலந்து கொண்டதே உலக சாதனையாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

துபாயைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஜுமா அல் மாஜித் (Juma Al Majid) நிறுவனம் ஹயூண்டாய்(Hyundai) வாகனங்களுக்கான ஐக்கிய அரபு அமீரக விநியோகஸ்தராக உள்ளது.

இந்தியாவின் முதல்‌ வெப் டி.வி., ஜனவரி 1ல் துவக்கம்

இந்தியாவின் முதல் வெப் டி.வி., இந்தியாவைப்ஸ் ஜனவரி 1ம் தேதியன்று துவக்கப்படுகிறது. கொச்சியை தலைமையிடாக கொண்டு செயல்படும் வைப்ஸ் விஷூவல் அண்ட் மீடியா பிரைவேட் லிமிடட் இந்த வெப் டி.வி., சேவையை துவக்குகிறது. இதன் நிறுவனர் கே.சசிகுமார். ‌இந்தியாவைப்ஸ் சேவை குறித்து அவர் கூறுகையில் : வளைதள ஆர்வலர்களை குறிவைத்து இந்த வெப் டி.வி., ஆரம்பிக்கப்படுவதாகவும். இதன் நிகழ்ச்சிகள் அனைத்தும் பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வெப் டி.வி., கான்சப்ட் பொருத்த வரை இதுவரை அது ஒரு பெரிய லாபகரமான பிசினசாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. வெகுஜனத்தை வெப் டி.வி., மூலம் கவர்ந்திழுப்பது அசாத்யமான காரியாமாவே கருதப்பட்டு வந்தது. ஆனால் நம்பிக்கையை மூலதனமாக கொண்டு வெப் டி.வி., சேவையை துவக்குகிறோம்.

இந்தியா வைப்சி்ல் பேஷன். இசை, சினிமா, தொழில்நுட்பம், பிளாக்கிங், லைப்ஸ்டைல், நாட்டுநடப்பு என எல்லாவற்றையும் முழுமையாக கவர் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எந்த ஒரு சவாலான சூழ்நிலையையும் சாதகமாக மாற்றிக் கொள்ளும் திறன் மிக்க இளைய தலைமுறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முதல் கட்டமாக டில்லி, மும்பை, சென்னை . பெங்களூரு, ஆகிய பெருநகரங்களின் இந்தச் சேவையை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா வைப்ஸ் வெப் டி.வி.,யை சர்வதேச அளவில் மிகப்பெரிய ஹிட்டாக்குவதே எங்கள் லட்சியம். சர்வதேச பார்வையாளர்கள் பொழுதுபோக்கு அம்சங்களை தேட ஒ‌ரே தளமாக இந்தியா வைப்ஸ் இருக்க வேண்டும் என்பது லட்சியம். இவ்வாறு சசிகுமார் கூறினார்.
source:DM

ஆப்கானில் அசைக்கமுடியாத சக்தியாக மாறும் தாலிபான்கள் - ஐ.நா வடைபடம்

காபூல்,டிச.2:ஆப்கானிஸ்தானில் நாளுக்கு நாள் தலிபான்களின் கை ஓங்கி வருவதால், அங்கு பாதுகாப்புச் சூழல் மோசமடைந்து வருவதாகத் தெரியவந்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக ஐ.நா. இரு வரைபடங்களை தயாரித்து ரகசியமாக வைத்துள்ளது.இந்த வரைபடங்கள் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புச் சூழல் மோசமடைந்து வருவதை தெளிவுபடுத்தியுள்ளன என்று 'வால் ஸ்ட்ரீட்' பத்திரிகை கூறியுள்ளது.

ஒரு வரைபடம் இந்த ஆண்டின் துவக்கத்தில் அங்கு நிலவிய பாதுகாப்பை பற்றியது. மற்றொரு வரைபடம் இந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில் அங்கு நிலவியப் பாதுகாப்பு குறித்தது.இதில் முதல் வரைபடம், ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் தலிபான்கள் கை தொடர்ந்து ஓங்கி வருவதையே காட்டுகிறது.

டிசம்பர் 28, 2010

முத்துகள் உருவாவது எப்படி?

இயற்கையின் அதிசயங்களுள் ஒன்று, முத்து. எங்கோ கடலடியில் விளையும் முத்து, அழகுப்பெண்களின் கழுத்தை அலங்கரிக்கிறது. முத்து உருவாகும் விதம் தெரியுமா உங்களுக்கு? முத்துச்சிப்பி என்ற உயிரினத்திடம் இருந்து முத்து கிடைக்கிறது. அந்த உயிரினத்தில் இருந்து முத்து கிடைப்பது வியப்பூட்டும் விஷயம். கடல் நீரில் உள்ள கால்சியம் கார்பனேட் என்ற தாதுப் பொருளையும் மற்றும் சில அங்ககப் பொருட்களையும் சிப்பி உட்கொள்வதால் முத்து தோன்று வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிப்பியினுள் முத்து சென்றுவிட்டால் அதற்கு ஓர் உறுத்தல் ஏற்பட்டு, தன்னிடம் உள்ள நாக்கர் என்ற ஒருவிதத் திரவத்தை அதன் மீது சுரந்து மூடிவிடும். அதைத் தெரிந்துகொண்ட சீனர் கள், சிப்பி வாய் திறந்திருக்கும்போது அதனுள், ஈயத்தால் செய்த சிறு புத்தர்சிலையைப் புகுத்தினார்கள். சிறிது காலம் கழித்து சிப்பியைத் திறந்து பார்க்கும்போது, முத்துத் திரவத்தால் புத்தர் சிலை பொதியப்பட்டிருக்கும். ஜப்பானியர்கள், சிப்பியின் வாய் வழியாகச் சிறு தானியத்தை உள்ளே தள்ளிவிடுவார்கள்.

அத்தியாவசியப் பொருட்கள் விலை ஏற்றம் : அமைச்சர்கள் குழு இன்று ஆலோசனை

புதுடில்லி : விண்ணை முட்டும் வெங்காய விலை, திணற வைக்கும் தக்காளி என அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது . இந்நிலையில் டில்லியில் இன்று கூடும் அமைச்சர்கள் குழு அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்துகிறது. சர்க்கரை மீது இறக்குமதி வரி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என‌ தெரிகிறது. வெங்காயம், தக்காளி, பூண்டு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தால் டிசம்பர் 11ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்துக்கு எடுக்கப்பட்ட கணக்கின்படி உணவு பணவீக்கம் 12.13 சதவீதமாக அதிகரித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
thanks:dinamalar

காட்டுமன்னார்கோவில் பகுதியில் வெள்ளத்தால் பாதிப்பு ரூ.4.5 கோடி நிவாரணம்

காட்டுமன்னார்கோவில் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் 4.5 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கும் பணி துவங்கியது. மழை, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதியில் ஏற்கனவே 22 கிராமங்களில் பாதிப்புகள் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டு 4.5 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது. நேற்று முதல் நிவாரணம் வழங்கும் பணி துவங்கியது. தாசில்தார் மேற்பார்வையில் இப்பணி நடந்து வருகிறது.

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு: இந்திரேஷ் குமாரிடம் மீண்டும் விசாரணை

புதுடெல்லி,டிச.28:மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புத் தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் தேசிய செயற்குழு உறுப்பினரான இந்திரேஷ் குமாரிடம் சி.பி.ஐ மீண்டும் விசாரணை நடத்த உள்ளது.

விசாரணைத் தொடர்பாக இவர் ஆஜராக்கிய ஆவணங்களை பரிசோதித்து வருவதாக சி.பி.ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மக்கா மஸ்ஜித் உள்பட இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கு இந்திரேஷ் குமார் பண உதவி செய்ததாக கைதுச் செய்யப்பட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் விசாரணையின்போது வாக்குமூலம் அளித்திருந்தனர்.

டிசம்பர் 27, 2010

ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்துக்கு...

கடலூர், டிச. 26: ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலம் ஓராண்டு நீடிக்கப்பட்டு உள்ளதால், ரேஷன் கார்டுகளில் இணைக்க வேண்டிய உள்தாள்களை, பொதுமக்கள் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்து உள்ளார்.
மாவட்ட ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 6,61,200 ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலம், 31-12-2010 உடன் முடிவடைகிறது.

1-1-2011 முதல் இந்த ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை, ஓராண்டுக்கு நீடித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளது.இதற்காக ரேஷன் கார்டுகளில் இணைத்துக் கொள்ள வேண்டிய உள்தாள்களை, ரேஷன் கடைகள் மூலம் வழங்க, விற்பனையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

மொத்தம் உள்ள ரேஷன் கார்டுகளைக் கணக்கில் கொண்டு, ரேஷன் கடை விற்பனையாளர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.தேவையற்ற முறையில் கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, முன்கூட்டியே திட்டமிட்டு, அறிவிப்புப் பலகையில் ஒட்டி, தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கை ரேஷன் கார்டுதாரர்களை வரவழைத்து, உள்தாள்களை வழங்க விற்பனையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அம்மி, ஆட்டுக்கல், உரல் விற்பனை அதிகரிப்பு!!


மேட்டூர் : இரண்டு மணி நேர மின் தடையால்,மிக்சியில் மசாலா அரைக்க முடியாத பெண்கள் அம்மி, ஆட்டுக்கல், உரல் போன்ற பழமையான சாதனங்களை நாடுகின்றனர். அதனால், சமீப காலமாக மினி உரல்கள் விற்பனை அதிகரித்துள்ளது.

தொழில் நுட்ப வளர்ச்சியால் மிக்சி, கிரைண்டர் போன்ற மின் சாதனங்கள் விற்பனைக்கு வந்ததால், பெண்கள் பல தலை முறையாக மசாலா, மாவு அரைக்க பயன்படுத்திய கல் அம்மி, ஆட்டுக்கல், உரல் போன்றவற்றை புறக்கணித்தனர். நகர் புறங்களில் அடுக்குமாடி குடியிருப்பு, வாடகை வீட்டில் வசிப்பவர்கள் அம்மி, ஆட்டுக்கல், உரல் போன்ற கல் சாதனங்களை வீடுகளில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், மின் சாதங்களைப் பயன்படுத்தினர். கிராமத்தில் கூட கல் சாதனங்கள் பயன்பாடு குறைந்தது. அதனால், கல்லில் அம்மி, உரல் தயாரித்த தொழிலாளர் குடும்பத்தினர் பெரிதும் பாதித்தனர். இந்நிலையில், தமிழத்தில் கிராமம் முதல் நகரம் வரை தினமும் இரண்டு மணி நேரம் சுழற்சி முறையில் மின் தடை செய்யப்படுகிறது.

சுயஉதவிக்குழு என்னும் வட்டிக்கடை!

நம் நாட்டின் சாமானிய இந்தியனுக்கும் உதவிட விரும்பாத தேசிய வங்கிகள் சிக்கன நிர்வாக நடவடிக்கை என்ற பேரில் 40% மக்களுக்கு வங்கிச் சேவையைத் தர மறுத்தன. இதன் விளைவாக ஆங்காங்கே தொண்டு நிறுவனங்கள் புற்றீசல் போல தோன்றி கிராம அளவில் பெருகியிருக்கும் வறுமையை விரட்டப் போகிறோம் என்று கூறி கிராமப்புறங்களில் நிதியுதவிகளை அளித்து தொழில் செய்ய உதவின. கூடுதலாக நிதி தேவைப்பட்டபோது அவை வங்கிகளை அணுகின.

வங்கிகள் தங்கள் விதிமுறைப்படி முன்னுரிமைக் கடன் வழங்கும் திட்டங்களின் அடிப்படையில் தொண்டு நிறுவனங்களுக்கு உதவின. வங்கி வழங்கிய நிதி எந்த பிசிறுமில்லாமல் முறையாக வங்கிகளுக்குத் திரும்பின. தனியார் பெரிய நிறுவனங்கள் பெறும் கடன்கள் முறையாகத் திரும்பாமல் வாரக் கடன் பட்டியலில் சேர்ந்து வங்கிகளை சங்கடத்தில் ஆழ்த்திய நிலையில் தொண்டு நிறுவனங்களுக்கும் வங்கிகளுக்கும் நடந்த சிறு கடன் பரிவர்த்தனை சிக்கலில்லாமல் நடந்ததால் பல தேசிய வங்கிகளும் முதலீடு செய்ய முன்வந்தன.

துரோகம் செய்தவர்கள்!

தலித் மக்களை விட மோசமான நிலையிலுள்ள முஸ்லிம் சமுதாயத்தை கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பொருளாதாரத்திலும் தூக்கி நிறுத்த வேண்டும் என்பதுதான் முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு.

டிசம்பர் 26, 2010

மொபைல் போன்களால் உருவாகும் ‘நோமொபோபியா’!

மன அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணிகளில் புதிதாக மொபைல் போன்களும் இணைந்துள்ளன. மொபைல் போன்களால் ஏற்படும் மன அழுத்தத்திற்கு நோமொபோபியா என பெயரிட்டுள்ளனர்.

இது 24/7 காலம். 24 மணி நேரமும் போதாது என்று பதை பதைப்போரும் உள்ளனர். அந்த அளவுக்கு சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும் செயல்பட வேண்டிய காலகட்டத்தில் இன்றையதலைமுறையினர் உள்ளனர்.
இப்படிப்பட்டவர்களுக்கு பல்வேறு வகைகளில் மன அழுத்தம் ஏற்படுவது சாதாரணமானதுதான். இப்போது புதிதாக ஒரு காரணியும் இந்த மன அழுத்தப் பட்டியலில் இணைந்துள்ளது. அதுதான் நோமொபோபியா.
கை, கால்கள் இல்லாமல் கூட இன்றைய மனிதர்களால் உயிர் வாழ்ந்து விட முடியும். ஆனால் மொபைல் போன்கள் இல்லாமல் உயிர் வாழவே முடியாது என்ற நிலையில் இருப்பவர்கள் பல்கிப் பெருகி விட்டனர்.

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை ஜனவரி 10-க்குள் கிடைக்க ஏற்பாடு: தலைமைத் தேர்தல் அதிகாரி

ஜனவரி 10-ம் தேதிக்குள் வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2011 ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு (அதாவது இந்த காலகட்டத்தில் 18 வயது பூர்த்தியானவர்கள்) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த, இடம் மாற்றம் செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அக்டோபர் 25-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை காலக்கெடு அளிக்கப்பட்டு இருந்தன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் நபர்களுக்கு தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25-ம் தேதி அந்தந்த வாக்குச் சாவடிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் புகைப்பட வாக்காளர் அட்டை வழங்கப்படும்.

இன்று சுனாமி நினைவு நாள்

2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி உலகையே உலுக்கிய 'சுனாமி' யால் லட்சக்கணக்கான மக்கள் பலியானார்கள்.

2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதியன்று உலகையே உலுக்கிய மறக்க முடியாத சுனாமி வந்து போன நாள். இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் எழுந்த சுனாமி ஆழிப் பேரலைகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள், இந்தியா, இலங்கை என இந்தியக் கடலோர நாடுகளை சுழற்றிப் போட்டது.

குறிப்பாக நாகை மாவட்டத்தில் நாகை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், பொறையாறு, வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளில் பனைமர அளவுக்கு வந்த ராட்சத கடல் அலையில் சிக்கி பல்லாயிரக்கணக்கான கிராம மக்கள் பலியானார்கள். தமிழக மக்களின் நெஞ்சை உலுக்கீய இந்த சம்பவத்தை யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது.
லட்சக்கணக்கானோர் இந்த சுனாமி கோர தாண்டவத்திற்கு உயிரிழந்தனர்.

டிசம்பர் 25, 2010

பாஸ்போர்ட்: முக்கிய கேள்விகளும் தகவல் பெறும் உரிமை சட்டம் அதற்கு அளித்த பதிலும்!

பாஸ்போர்ட் பெறும் விசயத்தில் நம் சகோதரர்கள் அதிகாரிகளால் பெரிதும் அலக்களிக்கப்படுகின்றனர். இது தொடர்பாக தகவல் பெரும் உரிமை சட்டத்தின் கீழ் மதுரையைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் முக்கியமான கேள்விகளை கேட்டு, தகவல் பெரும் உரிமை சட்ட அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அவரது கடிதத்திற்கு தகவல் பெரும் உரிமை சட்டத்திலிருந்து பதில் அனுப்பப்பட்டுள்ளது. அவரது கேள்வியும் அதற்கு அரசு அளித்த பதிலும் அதிகாரிகளால் பாதிக்கப்படும் நம் சகோதரர்களுக்கு உதவியாக இருக்கும் என்பற்காக இங்கே பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.

கேட்கப்பட்ட கேள்விகள்:


1. பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து அனுப்பபடும் காவல்துறை விசாரணைக்கு (Police Verification) என்ன ஆவணங்கள் காவல்துறைக்கு சமர்பிக்க வேண்டும் என அரசு ஆனை உள்ளது? (XEROX COPY OF GOVT.ORDER ) கோருகிறேன்



2. காவல்துறை விசாரணைக்கு எதாவது கட்டணம் அரசுக்கு செலுத்த பட வேண்டுமா?



3. அபிராமம் காவல் நிலையத்தில் ரூபாய் 300 பாஸ்போர்ட் என்னபடும் காவல்துறை விசாரணைக்கு கேட்டு பெறப்படுகிறது இது அரசால் நிர்ணயம் செய்யபட்டு உள்ள கட்டணமா ?



4. பாஸ்போர்ட் எனபடும் காவல்துறை விசாரணைபோது கிராம நிர்வாக அதிகாரி (V.A.0) சான்றீதல் காவல்துறைக்கு சமர்பிக்க வேண்டும் என்று அரசு ஆனை இருந்தல் அந்த அரசு ஆனையின் நகலை (XEROX COPY OF GOVT.ORDER ) கோருகிறேன்.

டிசம்பர் 24, 2010

சிதம்பரத்தில் காய்கறி விலை இருமடங்கு உயர்வு

சிதம்பரம் நகரில் காய்கறிகளின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பூண்டு கிலோ ரூ.240க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது காய்கறி விலை கிலோ ஒன்றுக்கு விவரம் வருமாறு (பழையவிலை அடைப்புக் குறியில்):

பெல்லாரி வெங்காயம் ரூ.50 (ரூ.24),
சின்ன வெங்காயம் ரூ.40 (ரூ.20),
தக்காளி ரூ.30 (ரூ.18),
கத்திரிக்காய் ரூ.40 (ரூ.16),
வெண்டை ரூ.30 (ரூ.16),
பீன்ஸ் ரூ.40 (ரூ.20),
கேரட் ரூ.40 (ரூ.16),
அவரை ரூ.60 (ரூ.24),
பீட்ரூட் ரூ.30 (ரூ.16),
முட்டைகோஸ் ரூ.24 (ரூ.12).

ஹோட்டல்களில் விலை உயர்வு:
இதனால் நகரில் ஹோட்டல்களில் சாப்பாடு விலை உயர்ந்துள்ளது. ஒரு சாப்பாடு ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பார்சல் சாப்பாடு ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தோசை ரூ.18, ரோஸ்ட் ரூ.25, பூரிகிழங்கு ரூ.15, பூரி சாம்பார் ரூ.18, இட்லி 5 என விற்பனை செய்யப்படுகிறது.
நன்றி:http://cuddalorenews.blogspot.com

டிசம்பர் 23, 2010

இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி

இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கான இலவசக் கல்வி, விளையாட்டு மற்றும் தங்கும்விடுதிக்கான சேர்க்கை ஆரம்பமாகியுள்ளது.

2010 – 2011 கல்வி ஆண்டுக்கான சேர்க்கை தற்போது ஆரம்பமாகியுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயில விரும்பும் ஏழை மாணவர்களுக்கு (தமிழ் மொழியுடன் உருது / ஆங்கிலம் மீடியம் ) இலவசக் கல்வியும் தங்குமிடமும்இங்கு அளிக்கப்படுகிறது.ஆர்வமுள்ள மாணவர்கள் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

அரசு மதரஸா ஆஜம் மேல்நிலைப்பள்ளி
779 அண்ணா சாலை
எல்.ஐ.சி. எதிரில்
சென்னை 600 002
போன்: 0091-44-2841 2742


பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் மே 30ம் தேதியாகும்.

இந்தத் தகவலை ஏழை மாணவர் இல்லத்தைச் சேர்ந்த டாக்டர் சையத் எம்.எம். அமீன் தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் – 0091-44-28481344

பால், காய்கறியில் ஆக்சிடோசின் நஞ்சு! உணவில் பயங்கரவாதம்!

பெருகி வரும் மக்கள் தொகையின் விளைவாக உணவுத் தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. இதைப் பயன்படுத்தி பல குறுக்கு வழிகளில் உணவுப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. குறுகிய காலத்துக்குள் அதிக அளவில் உணவுப் பொருள்களைத் தயாரித்து லாபம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலான தயாரிப்பாளர்களிடம் அண்மைக் காலமாக மேலோங்கி வருகிறது.

இதன் காரணமாக முன்பை போல உணவில் சுகாதாரத்தையோ, வளமிக்க சத்தையோ பெற முடிவதில்லை. இதனால் ஒருகாலத்தில் உணவே மருந்தாகிய காலம் போய், இன்று உணவே விஷமாகி வருகிறது. அந்த அளவுக்கு நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுப் பொருள்களில் ஏதாவது ஒரு வகையில் விஷத்தன்மை கலக்கிறது அல்லது கலக்கப்படுகிறது.
பசுமைப்புரட்சி என்ற பெயரில் பயிர்கள் அனைத்தும் விஷத்தன்மையோடு வளர்கிறது என்றால், அவை உணவுப் பொருளாக விற்பனைக்கு வரும்போது அவற்றில், மேலும் பல வகைகளில் கலப்படம் செய்யப்பட்டு விஷத்தன்மை சேர்க்கப்படுகிறது. இதனால் இப்பொருள்களைச் சாப்பிடும் நாமும் தொற்றுநோய்களின் களமாக மாற்றப்படுகிறோம். உணவு விஷமாகி வருவதால், இன்று மனிதர்களைப் பல்வேறு தொற்றுநோய்கள் தாக்குகின்றன.

பெண்கள் பிரசவத்தின்போது நஞ்சைப் பிரித்தெடுப்பதற்காக மருத்துவர்கள் பயன்படுத்தும் ஒருவகை ஹார்மோன்தான் ஆக்சிடோசின் என்பது. இந்த மருந்தை மிகவும் குறைந்த விலைக்கு அனைத்து மருந்துக் கடைகளிலும் வாங்கலாம்.

டிசம்பர் 22, 2010

ஆஸ்த்மா அலர்ஜி நோயாளிகள் ஒழிக்க வேண்டியவைகள்!

அன்றாடம் மனிதர்களை வாட்டக் கூடிய நோய்களில் ஒன்று ஆஸ்த்மா. மக்களிடையே இது பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமை புகை பிடித்தல் நச்சுப் பொருட்கள் மற்றும் தூசிகள் போன்றவற்றால் ஏற்படக்கூடிய அலர்ஜிகள் மூலமாக ஆஸ்த்மா பாதிப்பு மனிதர்களுக்கு ஏற்படுகிறது.
டாக்டர் மணிமொழியன்

4 மாணவிகள் பலி எதிரொலி; தனியார் கம்பெனி மீது கல் வீச்சு- கண்ணாடி உடைப்பு; கடலூரில் பதட்டம்

கடலூரில் நேற்று நடந்த வேன் விபத்தில் 4 மாணவிகள் பலியானார்கள். இதனால் 2 கிராம மக்கள் சோகத்தில் உள்ளனர். மாணவிகளை இழந்த பெற்றோர்களுக்கு தனியார் கம்பெனி நிர்வாகம் இதுவரை ஆறுதல் கூறவில்லை.

ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் இன்று காலை ஏராளமானோர் ஒன்று திரண்டு தனியார் கம்பெனிக்கு சென்றனர். தனியார் கம்பெனியை பார்த்ததும் கோபத்தின் உச்சிக்கு சென்ற பொது மக்கள் ரோட்டோரம் கிடந்த கற்களை எடுத்து கம்பெனி மீது சரமாரியாக வீசினர். இதில் கம்பெனியின் கண்ணாடிகள் உடைந்தது. மேலும் கம்பெனியின் மேற்கூரையை பெயர்த்து எடுத்தனர். அதோடு அங்கு நின்ற வேன் மீது கல் வீசி தாக்கி உடைத்தனர். இதனால் பதட்டம் நிலவியது.

தகவல் அறிந்ததும் கடலூர் ஆர்.டி.ஓ. முருகேசன், துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

மத்தியபிரதேச மாநிலத்தில் சர்வதேச தப்லீக் ஜமாஅத் இஜ்திமா

டிச.21:வருகிற டிசம்பர் 25-27 வரை மூன்று தினங்கள் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வைத்து தப்லீக் ஜமாஅத்தின் சர்வதேச மாநாடு (ஆலமி தப்லீகி இஜ்திமா) நடைபெறவுள்ளது.

ம.பி தலைநகர் போபாலில் புறநகர் பகுதியில் அமைந்துள்ள காசிபுராவிலுள்ள கிராமம் ஒன்றில் வைத்து இம்மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் முஸ்லிம்கள் கலந்துக் கொள்கின்றனர்.

25 ஏக்கர் நிலப்பரப்பில் இம்மாநாடு நடைபெறவிருக்கிறது. லட்சக்கணக்கான மக்களிடையே தப்லீக் ஜமாஅத்தைச் சார்ந்த இஸ்லாமிய அறிஞர்கள், இவ்வுலகில் நேர்மையான வாழ்க்கையை வாழத் தேவையான இஸ்லாமிய அறநெறிகளைப் பற்றியும், மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்னும் சுவனத்தை அடைவதற்கான வழிமுறைக்களைக் குறித்தும் மார்க்க சொற்பொழிவாற்றுவார்கள்.

டிசம்பர் 21, 2010

வரலாறு காணாத விலை உயர்வு: ஓட்டல்களில் சாம்பாரில் வெங்காயம் குறைப்பு; ஆனியன் தோசை நிறுத்தம்

பருவமழை காரணத்தால் பல்வேறு மாநிலங்களில் காய்கறி விளைச்சல் பாதித்தது. இதனால் தக்காளி, பீன்ஸ், அவரை, உருளைக்கிழங்கு, கேரட் உள்ளிட்ட அனைத்து காய்கறிகளும் ஒருமாதமாக உயர்ந்தன.

பெரிய வெங்காயத்தின் விலை மட்டும் கிலோ ரூ.40, ரூ.50 என்று உயர்ந்தது. வெங்காயத்தின் வரத்து குறைந்ததால் அதன்விலை மேலும் உயர்ந்தது. கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் கிலோ ரூ.70, ரூ.80 என்று விற்கப்படுகிறது. சில்லரையில் ரூ.100 வரை விற்கப்படுகிறது.

வெங்காயத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து உள்ளதால் ஓட்டல் உரிமையாளர்கள் வெங்காய பயன்பாட்டை கணிசமாக குறைத்து விட்டனர். ஆனியன் தோசை, ஆனியன் பச்சடி போன்றவை ஒருசில ஓட்டல்களில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க கவுரவ தலைவர் ரவி கூறியதா வது:-

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ரூ.113.25 கோடி சேதம்; மத்திய குழு தகவல்

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழு பல்வேறு பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டது.

கல்குணம், மருவாய், மருதூர், பூதங்குடி, எல்லைக்குடி, வீராணம் ஏரி, சேத்தியாத்தோப்பு, லால்பேட்டை, ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட சாலைகள், வீடுகள், பயிர்கள், பாலங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.

அதனைத்தொடர்ந்து திருநாரையூர், கீழவன்னியூர், வீரநத்தம், சர்வராஜன்பேட்டை, மெய்யாத்தூர், பூலாமேடு, குமராட்சி, சிவாயம் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட பயிர்கள், சாலைகள், குடிசைகள், பாலங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் மத்தியக்குழு தலைவர் விஸ்வநாதன் மற்றும் முரளிதரன் ஆகியோர் கூறியது:-

டிசம்பர் 20, 2010

கள்ள நோட்டு புழக்கத்தைத் தடுக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை

கள்ள நோட்டு புழக்கத்தைத் தடுக்க மேலும் பல பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. மிக அதிக அளவில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு புழக்கத்தில் வந்துள்ளதைக் கருத்தில் கொண்டு இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.
கள்ள நோட்டுகளை பயங்கரவாத குழுக்கள் பயன்படுத்துவதாக எழுந்துள்ள சந்தேகம் அரசை மேலும் கலவரப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற நிதி அமைச்சகம், பாதுகாப்பு துறை, உள்துறை உள்ளிட்ட அமைச்சகங்களின் கலந்தாய்வு கூட்டத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.கள்ள நோட்டு புழக்கம் மிகவும் அபாயகரமான அளவுக்கு அதிகரித்துள்ளதாக இந்த கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

தீவிரவாதம்:ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கினைக் குறித்து விசாரணை தேவை - காங்கிரஸ்

புதுடெல்லி,டிச.20:இந்திய தேசத்தில் அண்மையில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கு வெட்டவெளிச்சமான சூழலில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் பயங்கரவாதத் தொடர்புக் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி 83-வது அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ் தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும். இதனை புறக்கணிக்கக் கூடாது என அந்த தீர்மானத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
தீவிரவாதம் எந்த மதத்திலிருந்து வந்தாலும் அதனை உறுதியாகவும், பயன் தரத்தக்க வகையில் எதிர்கொள்ள வேண்டும் என தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.

பைசா கோபுரம் சாய்விலிருந்து தடுத்து நிறுத்தப்படுகிறது

உலக அதிசயங்களுள் ஒன்று இத்தாலியின் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம். சுமார் 14500 மெட்ரிக் டன் எடையும் 183 அடி உயரமும் கொண்ட இந்த கோபுரத்தின் வயது 838 ஆண்டுகள். ஆண்டுதோறும் உலகெங்கிலுமிருந்து 10 லட்சம் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வரும் இந்த கோபுரம் தன்னிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சாய்ந்து வருகிறது என்பது தான் பல நூற்றாண்டுகளாக உலக மக்களை கவலை அடைய செய்வதாக உள்ளது. ஏழு அடுக்குகளைக்கொண்ட இந்த கோபுரம், வெறும் 10 அடி அஸ்திவாரத்தில் மட்டுமே அமைந்துள்ளது மட்டுமல்லாமல், இவ்வளவு எடையை தாங்கும் அளவிற்கு அந்த இடத்தின் மண் வலுவானதல்ல என்பதும் தான் இந்த கோபுரம் சாய்வதற்கான காரணங்களென்று கூறப்படுகிறது.

ஹீரோவும் ஹோண்டாவும் இனி அவரவர் பாதையில்-26 ஆண்டு பந்தம் முடிந்தது!

ஹீரோ ஹோண்டா... இந்திய மக்களின் அபிமானம் பெற்ற இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனம் இது. கடந்த 26 ஆண்டுகளாக கொடிகட்டிப் பறந்த இந்தப் பெயர், இன்னும் சில தினங்களில் மறையப் போகிறது.

வாகனத் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமான ஜப்பானின் ஹோண்டா குழுமமும், இந்தியாவின் முஞ்ஜால் குழுமத்தின் ஹீரோ நிறுவனமும் இணைந்து 1984-ம் ஆண்டு உருவாக்கியதுதான் ஹீரோ ஹோண்டா நிறுவனம்.

அன்று முதல் இன்றுவரை உலகின் முன்னணி இருசக்கர வாகனத் தயாரிப்பாளர்கள் ஹீரோ ஹோண்டாதான். இந்திய இரு சக்கர வாகனத் துறையில் 48 சதவீதத்தை ஹீரோ ஹோண்டாதான் வைத்துள்ளது.

இந்த நிறுவனத்தில் ஹோண்டாவுக்கு 26 சதவீத பங்குகள் இருந்தன.

டிசம்பர் 19, 2010

மது, சூதாட்டம், வட்டிக்கு தடை – இப்படியும் ஒரு கிராமம்!

மது, கந்துவட்டி, கல்லாமை என திசைக்கொரு தளைகளில் சிக்குண்டு, இருட்டில் தவித்த மக்களை மீட்டு, தங்கள் கிராமத்தை மாதிரி கிராமமாக மாற்றியிருக்கிறது அம்மாப்பட்டினம் பொதுநல இளைஞர் பேரவை.

பட்டுக்கோட்டை-ராமேஸ்வரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில், புதுக்கோட்டை மாவட்டத்தின் சற்று உள்ளடங்கிய கிராமம் அம்மாப்பட்டினம். ஊர் எல்லைகளில் வைக்கப்பட்டுள்ள ‘வட்டி தடை செய்யப்பட்ட கிராமம்’ என்ற அறிவிப்புப்பலகையே இக்கிராமத்தின் தனித்துவத்தை உணர்த்துகிறது. சுமார் 2000 பேர் வசிக்கும் இக்கிராமத்தில் பலருக்குத் தொழில் மளிகை வியாபாரம். மீனவர்கள், விவசாயிகளும் உண்டு.

“எல்லாருமே ஒரு காலத்தில் கடலை நம்பி பொழச்சவங்கதான். எங்கூர்ல இருந்து 12 கி.மீ தான் லங்கா. அந்தக்காலத்துல எங்க மூதாதைங்க, நம்மூர்ல மளிகைச் சாமான்களை வாங்கிட்டு படகுல போயி, லங்கா மலைத்தோட்டங்கள்ல வேலை செஞ்ச மக்கள் கிட்டவித்துவிட்டு வருவாங்க. 83ல நடந்த இனக்கலவரத்துக்குப் பெறவு, இந்த யாவாரம் முடங்கிப்போச்சு. அதுக்குப் பெறவு, தமிழ்நாட்டுல பல இடங்கள்ல மளிகைக்கடையை திறந்துட்டாங்க.

மக்கா மஸ்ஜித்:முஸ்லிம் சமுதாயத்திடம் ஆந்திர அரசு மன்னிப்புக் கேட்கும் - ஆந்திர மாநில முதல்வர்

ஹைதரபாத் : கடந்த 2007 ஆம் ஆண்டு ஹைதரபாத் மக்கா மஸ்ஜிதில் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து முஸ்லிம் இளைஞர்களை போலீசார் வேண்டுமென்றே கொடுமைப்படுத்தியிருந்தால் அதற்காக முஸ்லிம் சமுதாயத்திடம் மன்னிப்புக்கேட்க ஆந்திர அரசு தயார் என அம்மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி சட்டசபையில் அறிவித்தார்.

மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அக்பருத்தீன் உவைஸி எழுப்பிய கேள்விக்கும் பதிலளிக்கையில் முதல்வர் இதனை தெரிவித்தார்.

விக்கிலீக்ஸ்: விசாரணை என்ற பெயரில் கொல்லப்படும் காஷ்மீர் மக்கள்

காஷ்மீரில் உள்ள பாதுகாப்புப் படையினரால் காவல்நிலையங்களுக்கு விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்படுபவர்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்படுவதாக விக்கிலீக்ஸில் வெளியான தகவலை லண்டன் கார்டியன் பத்திரிகை முக்கிய செய்தியாக வெளியிட்டுள்ளது.

விக்கிலீக்ஸ் அதிரடியாக பல்வேறு நாடுகளின் ரகசியங்களை அமபலப்படுத்தி வருகிறது இந்நிலையில் தற்போது இந்தியாவைப் பற்றியும் பல செய்திகள் இந்த இணையதளத்தில் வெளியாகியுள்ளன. குறிப்பாக காஷ்மீரில் தீவிரவாதிகள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்களிடம் உண்மையை வரவழைப்பதற்காக காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் அவர்களை பல்வேறு கொடுமைக்கு ஆளாக்குவதாக, விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது இதை கார்டியன் பத்திரிகை முக்கிய செய்தியாக வெளியிட்டது. டில்லியில் உள்ள அமெரிக்க தூதர் மூலம் இந்த செய்தி விக்கிலீக்சுக்கு கிடைத்துள்ளதாக தெரிகிறது.

டிசம்பர் 18, 2010

வீராணம் ஏரியை பார்வையிட்ட மத்தியக் குழுவினர்

சிதம்பரம், டிச. 17: வெள்ளப் பெருக்குக்கு காரணமான கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி மற்றும் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு ஆகிய பகுதிகளை மத்தியக் குழுவினர் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

மத்திய உள்துறை இணைச் செயலர் எல்.விஸ்வநாதன் தலைமையில் மத்திய திட்டக் குழு முதுநிலை ஆராய்ச்சி அலுவலர் ஏ.முரளிதரன், மத்திய நிதி அமைச்சக் உதவி இயக்குநர் ஜிதேந்திரகுமார், மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சக சார்பு செயலர் எஸ்.எஸ்.பிரசாத், வெள்ள நிவாரண சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங்பேடி ஆகியோர் கொண்ட குழுவினர் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் வெள்ளச் சேதப்பகுதிகளையும், நீரில் மூழ்கி அழுகிய நெற்பயிர்கள், வெற்றிலை, மஞ்சள், கருணை உள்ளிட்ட பணப் பயிர்கள் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.

விமானம் பறப்பது எப்படி?

இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்
பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் .சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது...

இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது
ஒரு பறக்கும் பொருளில் நான்கு விதமான விசைகள் உண்டு
ஆ ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (LIFT)

இ முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust
ஈ கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight
உ பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag
ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்க வேண்டும்

ஒமான் தொழிலாளர் முகாமில் தீ விபத்து: 4 தமிழர்கள் உள்பட 5 இந்தியர்கள் மரணம்

நிஸ்வா(ஒமான்),டிச.18:கட்டிடத் தொழிலாளர்கள் வசிக்கும் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 தமிழர்கள் உள்பட 5 இந்தியர்கள் மரணமடைந்தனர். மரணமடைந்த இன்னொரு நபர் கேரளாவைச் சார்ந்தவராவார்.

நிஸ்வாவிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பிஸியாவில் இந்த கோர விபத்து நடந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த ஜோனி, தென்காசிக்கு அருகே புளியங்குடியைச் சார்ந்த மணிக்கண்டன், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சார்ந்த சுப்ரமணியன், தென்காசி அருகே குற்றாலத்தைச் சார்ந்த பாலச்சந்திரன் ஆகியோர் இத்தீவிபத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

டிசம்பர் 16, 2010

எது நிஜம்?:தினமணி தலையங்கம்


நீதிமன்றங்களின், குறிப்பாகக் கூறவேண்டுமானால் நீதித்துறையுடன் தொடர்புடையவர்களின் கருத்துகள் விவாதப் பொருளாகி வருவது வேதனைக்குரிய ஒன்று. நீதிபதிகளே இப்படியா, நீதித்துறையே இப்படித்தானா என்று சராசரி இந்தியன் நம்பிக்கை இழந்துவிட்டால் அதன் விளைவுகள் இந்திய சுதந்திரத்தின், மக்களாட்சி அமைப்பின் அடித்தளத்தையே ஆட்டம்காண வைத்துவிடுமே என்பதுதான் நமது அச்சத்துக்குக் காரணம்.
கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்துக்கு வந்த வழக்கு ஒன்றின் விசாரணையின்போது நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவும், நீதிபதி கியான் சுதா மிஸ்ராவும் தெரிவித்த கருத்து நீதித்துறையையே ஒரு வினாடி அதிர வைத்தது.

""அலகாபாத் உயர் நீதிமன்றத்தைப் பற்றிப் பல புகார்கள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. அந்த நீதிமன்றத்திலுள்ள நீதிபதிகள் சிலரின் வாரிசுகளும் உறவினர்களும் பட்டம் பெற்று அந்த நீதிமன்றங்களில் பணிபுரியத் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே சொகுசுக் கார்களும், பிரம்மாண்டமான பங்களாக்களும், வங்கிகளில் பெரும் சேமிப்புகளுமாகக் கோடீஸ்வரர்களாய் வளையவரத் தொடங்கி விடுகிறார்கள்.

பழைய ரேஷன் கார்டு: மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு


தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகள், வரும் ஆண்டு ஜூன் மாதத்துடன் காலாவதியாவதால், அவற்றை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

ரேஷன் கார்டுகள், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. இதன்படி, ஏற்கனவே, 2005ல் வழங்கப்பட்ட ரேஷன் கார்டுகள், கடந்தாண்டு டிசம்பருடன் காலாவதியாகின. இந்நிலையில், மத்திய அரசு, அனைவருக்கும் பிரத்யேக அடையாள எண் வழங்கும் பணியை துவக்க உள்ளதாலும், தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகளை கண்டறிந்து ரத்து செய்யும் பணி நடந்ததாலும், புதிய ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.ஏற்கனவே புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளில், உள்தாள்களை ஒட்டி, வரும் 2011, ஜூன் வரை செல்லத்தக்க வகையில் மாற்றம் செய்யப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் அடுப்பு உண்டு; எண்ணெய் இல்லை

தொடர்மழை ஓய்ந்தாலும், தொடரும் மேகமூட்டத்தாலும், குளிர்ந்த காற்று வீசுவதாலும், கிராமப்புற மக்கள் அடுப்பு எரிக்க முடியாமல், அவதிப்படுகின்றனர். இதனால் மண்ணெண்ணெய் அடுப்புகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இத்துடன், கள்ளமார்க்கெட்டில் லிட்டர் 30 வரை மண்ணெண்ணெய் விற்பனையாகிறது. வடகிழக்குப் பருவமழை கடந்த 10 தினங்களாகக் கொட்டித் தீர்த்ததில், கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.பல குடிசைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டபோது, கான்கிரீட் மற்றும் ஓடுவேய்ந்த வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது.

கர்காரே கொலை:திக்விஜய்சிங்கின் அறிக்கைக் குறித்து விசாரணை நடத்தவேண்டும் - ஜம்மியத்துல் உலமா

முன்னாள் மஹாராஷ்ட்ரா ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்காரே மும்பைத் தாக்குதலின்போது தான் கொல்லப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தனக்கு தீவிர ஹிந்துத்துவா அமைப்புகளிடமிருந்து உயிருக்கு மிரட்டல் வருவதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங்கிற்கு தொலைபேசியில் தெரிவித்ததை திக்விஜய்சிங் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தார்.

இதனைக் குறித்து உயர்மட்டக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மத்தியபிரதேச மாநில ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் ஹாஜி முஹம்மது ஹாரூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொறுப்பான ஒரு அரசியல் தலைவர் என்ற நிலையில் திக்விஜய் சிங்கின் அறிக்கையை புறக்கணிக்க இயலாது. இதற்கு முன்னர் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.ஆர்.அந்துலே இதைப் போன்றதொரு குற்றச்சாட்டை முன்வைத்த பிறகும் அதற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்&பாலைவனத் தூது

டிசம்பர் 15, 2010

இந்தியாவில் பாதி பேர் லஞ்சம் கொடுக்கின்றனர்:-ஊழலுக்கு எதிரான சர்வதேச தன்னார்வ அமைப்பு நடத்திய ஆய்வில் தகவல்.


இந்தியாவில் 54 சதவீதம் பேர் கடந்த ஓராண்டில் தங்களது வேலைகளை முடிப்பதற்கு லஞ்சம் கொடுத்ததாக "டிரான்ஸபரன்ஸி இன்டர்நேஷனல்" என்ற ஊழலுக்கு எதிரான சர்வதேச தன்னார்வ அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

உலக நாடுகளில் ஊழல் தொடர்பான ஆய்வை இந்த அமைப்பு நடத்தியது. கல்வி, நீதி, மருத்துவம், காவல், பத்திரப் பதிவு உள்ளிட்ட 9 துறைகளில் கடந்த 12 மாதங்களில் லஞ்சம் கொடுத்து காரியம் சாதித்தீர்களா என்ற கேள்வி மக்களிடம் கேட்கப்பட்டது. இதுபோன்ற பல்வேறு கேள்விகளுக்கு மக்கள் தந்த பதில்களின் அடிப்படையில் ஊழல் மலிந்த நாடுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. ஊழல் எதிர்ப்பு தினமான கடந்த 9-ம் தேதி இந்தப் பட்டியலைக் கொண்ட ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

மத்திய அரசா? மலையாளிகள் அரசா?

ஆ.ராசா மீது வந்த புகார்களுக்கு பதிலளிக்காமல் ஒன்றரை வருடமாக மௌனம் காத்தது ஏன்?’’

‘‘மத்திய ஊழல் கண்காணிப்புத் துறைக்கு ஊழல் குற்றம் சாட்டப்-பட்ட தாமஸையே ஆணையர் ஆக்கியிருப்பது என்ன நியாயம்?’’இப்படி அடுத்தடுத்து பிரதமர் மன்மோகன் சிங்கின் டர்பனை உருவி தலையில் குட்டிக் கொண்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

கோர்ட் இப்படியென்றால்... திரும்பிய திசையெல்லாம் ஊழல் வழியும் ஆட்சி என ஊடகங்கள் ஒட்டுமொத்தமாக ஆதாரங்களுடன் செய்தி வெளியிட... ஆடிப்போயிருக்கிறார் மன்மோகன் சிங். ‘‘இப்படியொரு பதவியில் இருப்பதை விட, கவுரவமாக விலகி விடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அதனால் அவர் எந்த நேரமும் ராஜினாமா செய்யலாம்’’ என்கின்றன பிரதமர் அலுவலக வட்டாரத்தினர்.

மேலும் அவர்கள், ‘‘மத்திய நிதியமைச்சராக இருக்கும் பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் பதவி மீது வெகுநாட்களாக மோகம் உண்டு. அதேநேரம் ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணியும் பிரதமர் பதவியை எதிர்பார்த்து சோனியாவின் சிபாரிசுக்காக காத்திருக்கிறார்.பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் பதவி என்பது 2004 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடனேயே பேசப்பட்ட விஷயம். காங்கிரஸின் மூத்த தலைவரான அவருக்கு பிரதமர் பதவி என பேசுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், ஏ.கே. அந்தோணி பிரதமர் பதவிக்கு ஆசைப்பட ஒரே காரணம், அவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்பது மட்டுமல்ல... மத்திய அரசிலும், சோனியாவைச் சுற்றியிருக்கும் அத்தனை பேரும் மலையாளிகள் என்பதால்தான்’’ என்கின்றனர்.

டெல்லியில் நிலவும் மலையாளிகள் ராஜ்யம் பற்றி தலைநகர பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் வட்டாரத்தில் பேசினோம்.

கல்விக் கடனுக்கு வட்டி தள்ளுபடி!!!

கல்வி இன்று வணிகமாகிவிட்டது. பணம் இருந்தால் தான் உயர்கல்வி என்ற மோசமானநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இஞ்சினியரிங் படிக்க வேண்டும் என்றால் 4-5 லட்சம்வரை தேவைப்படுகிறது. மாறிப்போன மக்களின் மனநிலை தான் இதற்கு காரணம்.

இஞ்சினியரிங் படிக்கும் எல்லா மாணவர்களுக்கும் வேலை உறுதியாக கிடைக்கும் என்ற நிலை இருக்கிறது என்றால், சரி பரவாயில்லை என்று கடன் வாங்கியாவது படிக்க வைப்பதில் நியாயம் இருக்கிறது. வேலைக்கு எந்தவித உத்திரவாதமும் இல்லாத நிலையில் கூட அறியாத அடித்தட்டு, நடுத்தர மக்கள் தங்கள் சக்திக்கு மீறி வீடு வாசலை விற்று வட்டிக்கு வாங்கி படிக்க வைக்கின்றனர். இந்நிலையில் வங்கிகளில் கல்விக்
கடன் பெறுவது அவ்வளவு சுலபமான வழியல்ல. ஆனாலும் வங்கிகளில் வழங்கப்படும்

கல்விக் கடனுக்கு 2010-2011 ஆம் ஆண்டிலிருந்து வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது என்று வங்கிகள் அறிவித்துள்ளன.

பாப்ரி மஸ்ஜித்:சன்னி வக்ஃப்போர்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்

பாப்ரி மஸ்ஜித் உரிமையியல் வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கெதிராக சன்னி வக்ஃப்போர்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.

ஆதாரங்களுக்கு பதிலாக நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி சுன்னி வக்ஃப்போர்டு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.

2.77 ஏக்கர் மொத்த நிலத்தை சுன்னி வக்ஃப்போர்டுக்கும், நிர்மோஹி அகாராவுக்கும், ஹிந்து மகாசபைக்கும் பங்கீடுச்செய்து அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவியலாது என மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது.

டிசம்பர் 14, 2010

சிதம்பரம் மேலவீதி அகலப்படுத்தும் பணி கிடப்பில் போடப்பட்டதால் மக்கள் பாதிப்பு

சிதம்பரத்தில் 65 லட்சம் ரூபாய் செலவில் துவங்கிய மேலவீதி அகலப்படுத்தும் பணி மழை காரணமாக நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலா தலமான சிதம்பரம் நகரை அழகுபடுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதன் ஒரு கட்டமாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் இருவழிச்சாலையாக உள்ள சிதம்பரம் மேலவீதி, போல்நராயணன் பிள்ளை தெரு, சிதம்பரம் - கவரப்பட்டு, சிதம்பரம் - டி. எஸ். பேட்டை ஆகிய சாலைகள் பல்வழிச்சாலைகøளாக மாற்றப்படுகிறது.

முதல்கட்ட பணியாக சிதம்பரம் மேலவீதி ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 65 லட்சம் ரூபாய் செலவில் அகலப்படுத்தும் பணி துவங்கியது. கடந்த மாதம் 24ம் தேதி இந்த பணி துவங்கியது. மேல வீதி பஸ் நிறுத்தம் அருகே இருந்து கீழ்புறமாக சாலையோராத்தில் இரண்டு அடி அகலத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டது. பணி துவங்கியதும் மழை பெய்ததால் பணிகள் தடைபட்டது. தற்போது மழை விட்டு வெயில் காய்ந்து வரும் நிலையில் கூட பணிகள் துவக்கப்படவில்லை. இதனால் சாலையோர பள்ளத்தில் இரவு நேரங்களில் வாகனங்கள் வருபவர்கள், நடந்து செல்பவர்கள் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.எனவே பொதுமக்களுக்கு பாதிப்பின்றி சாலை அகலப்படுத்தும் பணியை விரைவாக முடிக்க வேண்டும்

குவைத்தில் அதிக லாபமீட்டும் டோனி பிளேயரின் நிறுவனம்!!


எண்ணெய் வளம் கொழிக்கும் குவைத்தில் அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி வரும் டோனி பிளேயரின் ஆலோசனை மையம் £27 மில்லியன் வருமானமீட்டி வருவதாக் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஏற்கனவே டோனி பிளேயரின் வருமானம் குறித்து பல சர்ச்சைகள் தொடர்வதால் இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டௌனிங் ஸ்ட்ரீட்டை விட்டு வெளியேறிய பின் £20 மில்லியனாக இருந்த டோனி பிளேயரின் வருமானம் தற்போது கிடைத்துள்ள புதிய தகவலுக்குப் பின் £40 மில்லியனாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அணுவாயுதப் போர் தொடுக்க வட கொரியா மிரட்டல்

சோல் அமெரிக்காவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் நிலவும் ஒத்துழைப்பால் அவ்வட்டாரத்தில் அணுவாயுதப் போர் தொடங்கக் கூடும் என்று வட கொரியா நேற்று எச்சரித்தது.
தென் கொரியத் தீவின்மீது வட கொரியா தாக்குதல் நடத்தி கிட்டத் தட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகும் அவ்வட்டாரத்தில் பதற்ற நிலை நீடித்து வருகிறது.
இந்நிலையில், தென் கொரியா உண்மையான தோட்டாக்களைப் பயன்படுத்தும் கடற்படை பயிற்சியைத் தொடங்கியிருக்கிறது.
திங்கட்கிழமை முதல் வெள்ளிக் கிழமை வரை 27 இடங்களில் பயிற்சி நடைபெறவிருக்கிறது. வழக்கமான இந்தப் பயிற்சி, தற்போதைய பதற்றநிலையில் கூடுதல் கவனத்தை ஈர்க்கிறது.

சிதம்பரத்தை அடுத்த வல்லம்படுகையில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த முதலை

சிதம்பரம்
 
                 நேற்று நள்ளிரவு சிதம்பரத்தை அடுத்த வல்லம்படுகை பாரதிதாசன் தெருவில் வசிக்கும் ரமேஷ் என்பவரது வீட்டுக்குள் ஒரு முதலை புகுந்தது. அதனைக்கண்டு அந்த வீட்டு நாய் குரைத்ததால், படிகள் வழியாக மாடிக்கு முதலை விரைந்தது.


எனினும் நாய் தொடர்ந்து குரைத்ததால், ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்விழித்தனர். மாடிப்படியை நோக்கி நாய் குரைத்ததால், “திருடன் புகுந்திருக்கலாமோ?” என்ற சந்தேகம் ஏற்பட்டது. உருட்டுக்கட்டை, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சகிதமாக மாடிக்கு சென்ற போது, ஒரு மூலையில் முதலை பதுங்கியிருந்தது தெரிய வந்தது. 
 
                  இது பற்றி ஊருக்குள் சேதி பரவியதால் பீதியடைந்த கிராமத்தினர் ரமேஷ் வீட்டுக்கு திரண்டு சென்றனர். நீண்டநேரம் போராடி, போக்குகாட்டிய முதலையை பிடித்து கயிற்றில் கட்டிய பிறகுதான் நிம்மதியடைந்தனர். பிடிபட்டமுதலை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

thanks:cuddalorenews

புகைப்பிடித்தலும் இதயமும்- சில உண்மைகள்?

மாரடைப்பு ஏற்படக் கூடிய காரணிகளில் நாம் கட்டுப்பாட்டில் வைக்கக் கூடிய ஒன்று புகைப்பிடிக்கும் பழக்கமாகும். 80 சதவீத மாரடைப்பு இந்த புகைப் பிடிக்கும் தீய பழக்கத்தால் மட்டும் வருகிறது.
நம் உடலுக்கும் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த கேடுகெட்ட பழக்கம் இன்று பரவலாக உள்ளது. பெருமைக்காகவும் பொழுது போக்கிற்காகவும் ஆரம்பிக்கும் இந்த பழக்கம் நாளடைவில் நம்மை அடிமையாக்கி விடுகிறது.எனவே இந்த கொடிய பழக்கத்திலிருந்து விடுபட்டு வாழ்வோமாக

மலேகான் குண்டுவெடிப்புக் குற்றவாளிகளை காப்பாற்ற அத்வானியும், ராஜ்நாத்சிங்கும் முயற்சித்தது ஏன்? - திக் விஜய் சிங் கேள்வி

மும்பை தாக்குதலின்போது மர்மமான முறையில் கொல்லப்பட்ட ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்காரேக்கு ஹிந்துத்துவா தீவிரவாதிகளிடமிருந்து மிரட்டல் விடுக்கப்பட்ட தகவலை வெளியிட்டதற்காக தன்னை விமர்சிக்கும் பா.ஜ.கவுக்கு பதிலடியாக திக் விஜய் சிங் புதிய கேள்வியொன்றை எழுப்பியுள்ளார்.

கர்காரே விசாரணை மேற்கொண்டிருந்த மலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகளை பாதுகாப்பதற்கு அத்வானியும், ராஜ்நாத்சிங்கும் முயன்றது ஏன்? என பா.ஜ.க தெளிவுப்படுத்த வேண்டுமென திக் விஜய் சிங் கோரியுள்ளார்.

டிசம்பர் 13, 2010

சர்வமும் நானே சர்வரும் நானே: சீன ஓட்டலில் அசத்தும் ரோபோ

சீனாவின் ஜினான் நகரில் புதிதாக ஒரு ஓட்டல் திறக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 6 சர்வர்கள். 6 பேரும் ரோபோக்கள். இவர்கள் பரிமாற வசதியாக டேபிள்கள் அனைத்தும் வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருக்கின்றன. ரோபோக்கள் வருவதற்கு சைக்கிள் போன்ற வாகனமும் இருக்கிறது.

ஆர்டர் செய்த ஐட்டங்களை கிச்சனில் இருந்து எடுத்து வருவது ரோபோக்கள்தான். டிரேயில் வைத்து தள்ளியபடி சைக்கிள் வாகனத்தில் வருகின்றன. சாப்பிடுகிறவரின் அருகில் வந்ததும் டிரேயில் இருப்பவற்றை அவர்கள் முன்பு எடுத்து வைக்கின்றன. ‘போதும்’ என்று கமாண்ட் கொடுத்தால் காலி பாத்திரங்களை எடுத்து டிரேயில் வைத்துக்கொண்டு சென்று விடுகின்றன.

இண்டெர்நெட் வாய்ப் கால்:அடுத்த ஆண்டு முதல் துவங்கும் - எடிசலாத்

துபாய்,டிச.13:ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வாய்ஸ் ஆஃப் இண்டெர்நெட் ப்ரோட்டோகால்(வாய்ப்) என்ற இணையதளம் வழியான தொலைத்தொடர்பு வசதி அடுத்த ஆண்டு துவக்கத்திலிருந்து செயல்படத் துவங்கும் என ஐக்கிய அரபு அமீரகத்தின் தொலைத்தொடர்பு சேவையாளரான எடிசலாத் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுத் தொடர்பான நடவடிக்கைகள் ஏறக்குறைய முடிவடைந்துவிட்டதாக எடிசலாத்தின் சீனியர் துணைத்தலைவர் அப்துல்லாஹ் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.

மாவீரன் மருத நாயகம்!!

வரலாற்றின் பக்கங்களில் புழுதி படிவதும், காலம் அதனை துடைத்து மானுடத்தின் பார்வைக்கு கொண்டு வருவதும் எப்போதும் நிகழக் கூடியதாகவே இருக்கிறது.
1997ல் கலைஞானி என திரையுலகம் வர்ணிக்கும் பிரபல நடிகர் கமல்ஹாசன் மிகப் பெரிய வரலாற்று படத்தை எடுக்கப் போவதாக அறிவித்தார்.அப்படத்தின் தொடக்க விழாவுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். அன்றும் முதல்வராக இருந்த கலைஞர் மூப்பனார் உள்ளிட்ட புகழ் பெற்றவர்கள் எல்லாம் கலந்து கொண்டதால் அப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை பெற்றது.

படத்திற்குப் பெயர் மருதநாகயம்! படமோ நிஜத்தில் நடந்த வரலாறை பின்னணியாகக் கொண்டது. திரையுலகில் வாழக்கையை தொலைக்கும் தமிழகம், இதை பரபரப்பாக விவாதித்தது. யார் அந்த மருத நாயகம்? அவரது போராட்ட வரலாறு என்ன? இந்த கேள்விகள் பலரையும் உசுப்பியது போல் தமிழக முஸ்லிம்களையும் உசுப்பியது.
காரணம், அவர் ஒரு முஸ்லிம். ஆங்கிலேயரை எதிர்த்த விடுதலைப் போராட்ட வீரன்! அடங்க மறுத்த வீரத் தமிழன்! அப்படி பல செய்திகள் கொஞ்சம், கொஞ்சமாய் வெளிவந்தது.

படிக்கும்போதே பாஸ்போர்ட்!

பாஸ்போர்ட் வாங்குவது எளிதான விசயமே. விண்ணப்பத்தில் சரியான தகவல்களை அளித்தால் 45 நாட்களுக்கு பாஸ்போர்ட் கிடைத்து வருகிறது.


thanks:தினகரன்

டிசம்பர் 12, 2010

சதாம் தூக்கு தண்டனை.. கடைசி நிமிடங்கள் :விக்கிலீக்ஸ் அம்பலம்

வாஷிங்டன் : ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டபோது, கடைசி நேரத்தில் நடந்த சம்பவங்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.
சதாம் உசேன் கடந்த 2006&ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி தூக்கிலிடப்பட்டார். அப்போது நடந்த சம்பவங்கள் குறித்த தகவல்களை அமெரிக்க அதிகாரிகள் கடந்த 2007&ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி அனுப்பியுள்ளனர். அந்த தகவல்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:பாக்தாத்தில் (அப்போதைய) அமெரிக்க தூதர் ஜல்மே கலில்சத் மற்றும் அரசு தலைமை வக்கீல் முன்கித் பரூன் ஆகியோர் சதாம் தூக்கு குறித்து ஆலோசனை நடத்தினர். தூக்கு மேடை சரியில்லை என்பதால் அமெரிக்க வீரர்கள் புதிதாக மேடை கட்டியதாக கலில்சத்திடம் பரூன் கூறியுள்ளார்.
சதாம் தூக்கிலிடப்படும் இடத்துக்கு ஈராக் அதிகாரிகள் 14 பேர் ஹெலிகாப்டரில் வருகின்றனர். அவர்களிடம் அமெரிக்க வீரர்கள் சோதனை நடத்தி செல்போன்களை கைப்பற்றுகின்றனர். பரூன் மற்றும் நீதிபதி ஆகியோர் சதாம் உசேனை சந்தித்து தீர்ப்பை வாசித்து காட்டுகின்றனர். பிறகு அவர் தூக்கு மேடைக்கு அழைத்து செல்லப்படுகிறார்.

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தனி நலவாரியம்: முதல்வர்


வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
சென்னை தாம்பரம் ரயில்வே மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு நிறைவு விழாவில் முதல்வர் கருணாநிதிக்கு "நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்' விருது வழங்கப்பட்டது.
விழாவில் அவர் பேசியது:

இந்த விழாவில் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொகிதீன் என்னை பெரியார் வழியில் நடந்த பெரும் தொண்டர், அண்ணாவின் அருமைத் தம்பி என்றெல்லாம் பாராட்டி விட்டு, காயிதே மில்லத் அடியொற்றி நடந்தவன் என்ற வாசகத்தை விட்டுவிட்டது மன்னிக்க முடியாத குற்றம்.

தாய்மொழியான உருது மொழியில் பயிலவும், தேர்வு எழுதவும் அரசு உதவ வேண்டும் என்று இங்கே கோரிக்கை வைக்கப்பட்டது. சிறுபான்மையினருக்குப் பாடநூல் தயாரித்தல், தேர்வு நடத்துதல் குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மதம், சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரைத்துள்ளார். அதை நிறைவேற்றும் கடமை மத்திய அரசுக்கு உள்ளது.

தாம்பரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததால் அகற்றப்பட்ட சிறுகடைக்காரர்களுக்கு மாற்று இடம் வழங்குவதுபற்றி பரிசீலிக்கப்படும். மாவட்ட ஆட்சித்தலைவருடன் கலந்து பேசி தாம்பரம் நகராட்சி மூலம் கடைகள் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் கருணாநதி.துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் போது,

"பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு 3.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கியதன் மூலம் பொறியியல் கல்லூரியில் 4,660 மாணவர்களும், மருத்துக் கல்லூரியில் 129 மாணவர்களும் பயன் அடைந்துள்ளனர்'' என்றார்.
மத்திய இணை அமைச்சர் இ.அகமது, சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்

புர்ஜ் காலிபா கட்டடத்தில் இந்தியர்கள் ஆதிக்கம்


துபாய் : உலகின் உயரமான புர்ஜ் காலிபா கட்டடத்தில், இடம் வாங்கியவர்கள் பட்டியலில் இந்தியர்கள் முன்னிலை வகிக்கின்றனர். உலகிலேயே உயரமான கட்டடம் என்ற பெருமையை துபாயில் கட்டப்பட்டுள்ள புர்ஜ் காலிபா கட்டடம் பெற்றுள்ளது. இக்கட்டடம், இந்த ஆண்டு துவக்கத்தில் திறப்பு
விழா கண்டது. அதில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களை, உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி கோடீஸ்வரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் வாங்கியுள்ளனர்.

இந்நிலையில், அக்கட்டடத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ள பெரும்பாலான குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களை வாங்கியவர்கள் பட்டியலில், இந்தியர்கள் முன்னிலை வகிப்பதாக ரெடின்.காம் என்ற இணையதளத்தில் புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அந்த இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ள புள்ளிவிவர அறிக்கை:புர்ஜ் காலிபா கட்டடத்தில் கடந்த ஏழு மாதத்தில் 36 கோடி மதிப்புடைய இடங்களை இந்தியர்கள் வாங்கியுள்ளனர்.

வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர் பி.ஆர்.ஷெட்டி, அக்கட்டடத்தின் 100வது மாடி முழுவதையும் வாங்கியுள்ளார்.தானுப் குழும தலைவர் ரிஸ்வான் சாஜன் சமீபத்தில் அதில் இடம் வாங்கியுள்ளார். இதேபோன்று தொழிலதிபரும், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ரா, புர்ஜ் காலிபா கட்டடத்தில் வீடு வாங்கியுள்ளார்.

புர்ஜ் காலிபா கட்டடத்தில் இடம் வாங்கியவர்கள் பட்டியலில் ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளை சேர்ந்த கோடீஸ்வரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் இரண்டாம் இடம் வகிக்கின்றனர். இதை தொடர்ந்து, ஆஸ்திரேலியா, ஓமன், சீனா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அதிகளவில் இடம் வாங்கியுள்ளனர்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனம்: வீடியோ காட்சிகள்!

பத்திரிகையாளர்கள் பேசிக்கொண்டு தெருவில் நடந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள் சின்னஞ்சிறு உருவங்களாய். அவர்களைக் குறிபார்த்து ஹெலிகாப்டர்கள் மேலே பறக்கின்றன. உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இயந்திர இரைச்சல்களோடு குண்டுகள் சீறுகின்றன. உயிருக்காக அங்குமிங்கும் ஓடி செத்து விழுகின்றனர் பத்திரிகையாளர்கள். நம் கண்முன்னால் நடப்பதாய் வீடியோ காட்சிகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. கண்ணிமைக்கும் நேரத்தில் மனித உயிர்களை இரத்தச்சகதியில் வீழ்த்திவிட்டு, நகர்கிறார்கள். காட்சிகள் ஒன்றொன்றாய் தொடர்கின்றன. அதிர்ச்சியும், பதற்றமும் நம் நாடி நரம்புகளிலெல்லாம் துடிக்கிறது.

ஈராக் போரில் அப்பாவி பொதுமக்களும், பத்திரிகையாளர்களும் அமெரிக்க இராணுவத்தால் எந்த வறைமுரையுமற்று கொன்று குவிக்கப்பட்டனர் என்று செய்திகள் வந்த் போதெல்லாம் அமெரிக்கா அதனை மறுத்து வந்தது. தந்து நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ரியுட்டர்ஸ் நிறுவனம் அதற்கான ஆதாரங்களைத் திரட்ட எவ்வளவோ முயற்சித்தது. இப்போது விக்கிலீக்ஸ் அந்தக் கொடூரங்களை வீடியோக் காட்சிகளாக்கி உலகத்தின் பார்வைக்கு வைத்திருக்கிறது.

இந்த அமெரிக்காதான் உலகத்துக்கே ஜனநாயகம் பற்றி பாடம் எடுக்கும். சுதந்திரம் குறித்து பெரிமிதம் கொள்ளும். மனித உரிமைகளுக்குத் தன்னை காவலனாய் முன்னிறுத்தும். ஏகாதிபத்தியத்தின் இரக்கமற்ற யுத்தவெறியும், மனித உயிர்களை ஒரு பொருட்டாக மதிக்காத அதன் குரூர மனநிலையும் இதுதான்.

thanks:lankasri

மனித உரிமைகள் ஆணையத்தின் நடைமுறைகள் என்ன?

உலக மனித உரிமைகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 10-ம் தேதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த நாளில் மனித உரிமைகள் ஆணையத்தின் நடைமுறைகள் என்ன என்பது குறித்து மக்கள் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது. இரண்டாம் உலகப்போரில் (1939-1945) உலகம் முழுவதும் 5.5 கோடி பேர் இறந்த போதுதான் மனித உயிர்கள் மதிப்பிட முடியாதது என்று உலக நாடுகள் உணர்ந்தன.

உலக மனித உரிமைகள் தினம்:

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ரூஸ்வெல்ட்டின் மனைவி எலினார் ரூஸ்வெல்ட் 1945-ம் ஆண்டு மனித உரிமைகள் மீறல் பிரகடனத்தை வெளியிட்டார். அந்த பிரகடனம் 3 ஆண்டுகள் கழித்து 1948-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் நாள் ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதை ஆதரித்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொண்ட நாளே ஒவ்வொரு ஆண்டும் உலக மனித உரிமைகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்தியாவில்...

மனித உரிமைகள் என்பது அரசியலமைப்பு உறுதிப்படுத்தும் அல்லது இந்திய நீதிமன்றங்களின் மூலம் அமலாக்கக் கூடிய வாழ்வு, சுதந்திரம், சமத்துவம் மற்றும் கண்ணியம் ஆகிய உரிமைகளை குறிக்கும்.இந்தியாவில் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் நாள் அமலுக்கு வந்தது. அப்போது தேசிய அளவில் மனித உரிமைகள் ஆணையம் என்றும் அந்தந்த மாநிலங்கள் அளவில் மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி 12.10.1993-ல் மத்திய அரசு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை செயல்படுத்தத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் 17.04.1997 முதல் மாநில மனித உரிமைகள் ஆணையம் செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் எங்கு உள்ளது?:

சென்னையில்
"திருவரங்கம்' எண் 143,
பி.எஸ். குமாரசாமி ராஜா சாலை (பசுமைவழிச் சாலை)
சென்னை 600 028

என்ற சாலையில் இயங்கி வருகிறது. இந்த ஆணையத்தின் தலைவராக நீதியரசர் ஏ.எஸ். வெங்கடாசல மூர்த்தி செயல்பட்டு வருகிறார். ஆணையத்தின் உறுப்பினர்களாக ஏ.ஆர். செல்வக்குமார், கே. மாரியப்பன், எஸ். பரமசிவன் ஆகியோர் செயல்படுகின்றனர்.

யார் மீதான புகார் விசாரிக்கப்படும்?

அரசுப் பணிகளின் போது அரசு அலுவலரால் ஏற்படும் மனித உரிமை மீறல்கள், மனித உரிமை மீறல்களை தடுக்கத் தவறுதல் மேலும் அத்தகைய நிகழ்வுகளுக்கு உடந்தையாக இருத்தல் ஆகியவை பற்றிய புகார்கள் மட்டுமே ஆணையத்தால் விசாரணை செய்ய முடியும். தனி நபர்களால், தனி நபர் மீது மீறப்படும் மனித உரிமை மீறல் குறித்த புகார்கள் குறித்து ஆணையம் விசாரணைக்கு எடுக்காது. மனித உரிமைகள் மீறல் குறித்த புகார்களை பாதிக்கப்பட்ட நபரோ அல்லது அவரைச் சார்ந்தவர்களோ எழுத்து மூலம் அளிக்க வேண்டும்.

புகார்கள் ஏதும் வராத நிலையில் மனித உரிமை மீறல் குறித்து வெளிவரும் பத்திரிகை செய்திகளை ஆணையமே புகாராக பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்.புகார்களுக்கு கட்டணங்கள் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. மேலும் புகார்தாரர்களுக்கு அறிவிப்புகள், அழைப்பாணைகள், விசாரணை உத்தரவுகளுக்கும் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படமாட்டாது.

மறுக்கப்படும் புகார்கள் எவை?

ஆணையத்தின் சட்டம், நடைமுறை விதிப்படி, பிற ஆணையங்களின் முன் ஏற்கனவே விசாரணையில் உள்ள புகார்கள். தெளிவற்ற குறிப்புகளைக் கொண்ட புகார்கள், மனித உரிமை மீறல் நிகழ்வு நடைபெற்ற ஓராண்டுக்குப்பின் பெறப்படும் புகார்கள், பெயர், கையொப்பம், முகவரி இல்லாமல் அனுப்பப்படும் புகார்கள். உரிமையியல் மற்றும் சொத்து உரிமைகள், ஒப்பந்தங்கள், தொழிலாளர்கள்-பணியாளர்கள் அலுவல் தொடர்பான புகார்கள், நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயம் முன் பரிசீலனையில் உள்ள புகார்கள் ஆகியவை ஆணையத்தால் மறுக்கப்படும்.

விசாரணையில் காவலர்கள்:

ஆணையம் சார்பில் பெறப்படும் புகார்களை புலனாய்வு பிரிவில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளைக் கொண்டு விசாரணை செய்து ஆணையம் அறிக்கை பெறுகிறது. இந்தப் புலனாய்வு பிரிவில் ஐ.ஜி. அந்தஸ்துக்கு குறையாத போலீஸ் அதிகாரி தலைமையில் ஒரு போலீஸ் கண்காணிப்பாளர் (எஸ்.பி.), 2 டி.எஸ்.பி.க்கள், 2 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் விசாரணை அதிகாரிகளாக செயல்படுகின்றனர். தேவைப்படும் சில புகார்களை மட்டுமே போலீஸ் அதிகாரிகள் விசாரிப்பார்கள்.

இவ்வாறு விசாரிக்கப்படும் புகார்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஆணையத்துக்கு தெரியவரும் போது, மேல் நடவடிக்கை தேவை இல்லை என ஆணையம் கருதினால் புகார் முடித்து வைக்கப்படும். விசாரணையின் முடிவில் புகார்கள் நிரூபணமானால், பாதிக்கப்பட்ட நபர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு நிவாரணம் வழங்கிட குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் மீது வழக்கு தொடர, நடவடிக்கை எடுக்க அரசுக்கு அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆணையம் பரிந்துரை செய்யும்.

இது வரை...

தமிழகத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தொடங்கப்பட்ட 1997-ம் ஆண்டுக்கு பிறகு 2010 மார்ச் வரை 1 லட்சத்து 3 ஆயிரத்து 199 புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 97 ஆயிரத்து 615 மனுக்கள் ஆணையத்தால் முடிக்கப்பெற்றுள்ளன.

thanks:cuddalorenews

கர்காரேக்கு விடுக்கப்பட்ட கொலைமிரட்டல் குறித்து விசாரணை நடத்தப்படும் - மஹாராஷ்ட்ரா துணை முதல்வர்

மும்பை தாக்குதலின்போது கொல்லப்பட்ட மஹாராஷ்ட்ரா ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்காரேக்கு கொலைச் செய்யப்படுவதற்கு முன்பு ஹிந்துத்துவா தீவிரவாதிகளிடமிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதைக் குறித்து விபரங்களை அளிக்க போலீசாருக்கு உத்தரவிடப்படும் என மஹாராஷ்ட்ரா மாநில துணைமுதல்வர் அஜீத் பவார் தெரிவித்துள்ளார்.

இதுத் தொடர்பாக உள்துறை அமைச்சர் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் கூட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொலைபேசி மூலம் தனக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக கர்காரே தன்னை அழைத்துக் கூறினார் என காங்கிரஸ் தலைவர் திக் விஜய்சிங் விடுத்துள்ள அறிக்கையைக் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் அஜீத் பவார் இதனைக் குறிப்பிட்டார்.

செய்தி:தேஜஸ்&பாலைவனத் தூது

டிசம்பர் 09, 2010

கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது


நீண்ட காலமாக புற்று நோய்க்கு(CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ்(JOHNS HOPKINS) சொல்கிறார். இங்கே உங்களின் பார்வைக்காக ஆங்கிலத்திலுருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்துள்ளேன்.


கேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்:
1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது, அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர் சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான செல் உருவாகிறது.

3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாக இருக்கும்போது கேன்சருக்கான செல் அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டயுமர்(tumors) ஏற்படுவதற்கான வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.

4) ஒருவருக்கு கேன்சர் இருக்கிறது என்றால் அவருக்கு பலவிதமான சத்து குறைபாடு (nutritional deficiencies) உள்ளதாக அர்த்தமாகிறது. இதற்கு மரபு, சுற்றுச்சூழல், உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணிகளாகிறது.

5) சிறப்பான உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த ஊட்ட சத்து குறைப்பாட்டை நீக்கலாம். தேவையான சத்துள்ள உணவின் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

6) கீமொதெரபீ சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் செல்களை மட்டுமல்லாமல், எலும்பு, இரைப்பை போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. மேலும் குடல், கிட்னி, இதயம், மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது

7) கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான செல்கள், உறுப்புகள், திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது

8) ஆரம்பகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியின் (tumor) அளவைக் குறைக்க செய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியினை அழிக்க பெரும்பாலும் உதவுவதில்லை.

9) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சு மூலம் நோய் எதிர்ப்பு சக்தியானது அதற்க்கு ஏற்றார் போல் சமரசம் செய்து கொள்ளும் அல்லது அழிக்கப் பட்துவிடும். இதனால் மனிதனுக்கு பலவிதமான பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படும்.

10) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் கேன்சர் செல்கள் எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில் அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்கள் மற்ற இடங்களில் பரவ ஒரு காரணமாகி விடுகிறது.

11) கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள் பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை நாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.

12) இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணிக்க கடினமாகவும், ஜீரணமாக அதிக நேரமும் எடுத்துக் கொள்கிறது. மேலும் ஜீரணமாக அதிக செரிமான நொதித் தேவைப்படுகிறது. ஜீரணமாகாத இறைச்சியானது குடலில் தங்கி அழுகி, மெதுவாக நஞ்சாகிவிடுகிறது.

13) கேன்சர் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே இறைச்சி சாப்பிடுவதை தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதால், நொதியானது (enzymes) தனது சக்தியை கேன்சர் செல்லின் கடினமான சுவரை தாக்கி, உடலின் அழிக்கும் செல்லானது (body's own killer cells) கேன்சர் செல்லை அழிக்க உதவியாகிறது.

14) IP6, Flor-ssence, Essiac, anti-oxidants, vitamins, minerals, EFAs etc, போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தி, உடலின் அழிக்கும் செல்கள் (body's own killer cells) மூலம் கேன்சர் செல்களை அழிக்க உதவி செய்கிறது. வைட்டமின் E போன்றவை உடலில் உள்ள பாதிக்கப்பட்ட, தேவையற்ற செல்களை நீக்கும் முறையை ஊக்குவிக்கிறது. (Other supplements like vitamin E are known to cause apoptosis, or programmed cell death, the body's normal method of disposing of damaged, unwanted, or unneeded cells)

15) கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே! நேர்மறையான, ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கிறது. கோபம், மன்னிக்கும் மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின் அமிலத்தன்மையையும் அதிகரிக்கிறது எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும், ஆசுவாசப்படுத்திகொள்ளவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!

16) ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலையில் கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை. தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது. மூச்சுப் பயிற்சியானது (Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.

உடலில் கேன்சர் செல் வளர காரணிகள்:-
1) கேன்சர் செல்லுக்கு சர்க்கரை ஒரு நல்ல உணவு. எனவே சர்க்கரையை தவிர்ப்பது கேன்சர் செல்லுக்கு தவையான ஒரு முக்கிய உணவை நிறுத்துவது போன்றது. சர்க்கரைக்கு மாற்றாக உள்ள NutraSweet, Equal, Spoonful, etc போன்றவையும் Aspartame எனும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும் பாதிப்பானாதே! எனவே குறைந்த அளவில் தேன், மொலஸஸ், Manuka போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். Table Salt-ல் வெள்ளை நிறத்திற்க்காக கெமிக்கல் சேர்ப்பதால் இதற்கு மாற்றாக Bragg's amino or sea salt போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

2) பால் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது, குறிப்பாக இரைப்பை-குடல் (gastro-intestinal) பகுதியில் சளியால் கேன்சர் செல் நன்கு வளரும். எனவே பாலுக்கு மாற்றாக இனிப்பில்லாத சோயாப் பாலை எடுத்துக் கொள்வதன் மூலம், கேன்சர் செல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.

3) அமிலத் தன்மையில் கேன்சர் செல் நன்கு வளரும். இறைச்சி சம்பந்தமான உணவுகள் அமிலத் தன்மை வாய்ந்தது. எனவே மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிக்குப் பதிலாக மீன், குறைந்த அளவு சிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் இறைச்சியானது பிராணிகளின் ஹோர்மோன், ஒட்டுண்ணிகள், ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது, இது மிகவும் ஆபத்தானது..

4) ஒரு சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழு தானியங்கள், விதைகள், பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில் வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாக இருக்கலாம், பீன்சயும் சேர்த்து. ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் உயிரோட்டமுள்ள நொதிகளை அளிக்கிறது, இவை 15 நிமிடங்களில் நன்கு உறிஞ்சப்பட்டு, ஊட்ட சத்து அளித்து நல்ல செல்கள் வளர உதவுகிறது. ஆரோக்கியமான செல்கள் வளர உதவும் உயிரோட்டமுள்ள நொதிகளை பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! நொதிகள் (enzymes) 104 degrees F (40 degrees C) வெப்பத்தில் அழிந்து போய் விடுகிறது.

5) டீ, காஃபீ, சாக்லெட் போன்றவற்றில் அதிககளவு காஃபீன் உள்ளதால் இவைகளை தவிர்த்து விடவும். இதற்கு மாற்றாக க்ரீன் டீ (Green Tea) எடுத்துக் கொள்ளவும்! இதில் கேன்சர் செல்களை எதிர்க்க கூடிய ஆற்றல் உள்ளது. சுத்திகரீக்கப்பட்ட நீரை மட்டுமே அருந்தவும். நச்சு மற்றும் உலோக கலவை அதிகமுள்ள குழாய் நீரை தவிர்த்து விடவும். Distilled water is acidic, avoid it.

thanks:RAFEEK AHMED.H - Dubai(kayalpatnamislam)

இன்று சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்

உலகம் முழுவதும் ஆபத்தான பிரச்னைகளில் ஒன்று ஊழல். ஊழலை ஒழிக்கும்விதமாக ஆண்டுதோறும் டிச.9-ம் தேதியை சர்‌வதேச ஊழல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஊழல் அரசுகளை மட்டும் பாதிப்பதில்‌‌லை. தனியார் தொழில் நிறுவனங்கள், கல்வி, நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தொற்றுநோய் போன பாதிக்கக்கூடியது. சாதாரண குடிமக்கள் ஆண்டுக்கு ரூ. 250 கோடி லஞ்சமாக பொதுத்துறை நிறுவனங்களுக்கு செலுத்துகின்றனர் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இதிலிருந்து ஊழல் எந்தளவுக்கு உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

"அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்; மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (லஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்" -திருக்குர்ஆன் 2:188.

விக்கிலீக்ஸ் உணர்த்தும் பாடம்!

கடந்த மூன்று நாட்களாக, உலகம் விழித்துக் கொள்வது விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிடும் தகவல்களுக்காகத்தான் என்று சொல்லலாம். கடந்த ஜூலை மாதம் ஈராக் மற்றும் ஆப்கான் குறித்து அமெரிக்க ராணுவத்தின் ரகசிய அறிக்கையை விக்கிலீக்ஸ் வெளியிட்டு அதிர்ச்சியைத் தந்தது.

அதன் தொடர்ச்சியாக, பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் அமெரிக்க அரசுத்துறை அதிகாரிகளுடன் கடந்த ஆண்டுகளில் பரிமாறிக் கொண்ட ரகசியத் தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் தற்போது விக்கிலீக்ஸின் கையில் சிக்கியுள்ளன. இத்தகவல்களில் மிகவும் ரகசியமானவை sவீஜீக்ஷீஸீமீt என்ற இணையதளத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அமெரிக்க ராணுவத்தினர் உள்ளிட்ட மூன்று லட்சம் பேருக்கு இந்த இணையதளத்திற்குள் செல்ல அனுமதி உண்டு. அவர்களில் ஒருவர் மூலமாகவே இந்த ரகசிய ஆவணங்கள் விக்கி-லீக்ஸின் கைகளுக்குள் சிக்கியுள்ளன.

மொத்தம் 2,51,287 ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவற்றில் 3,000 ஆவணங்கள் இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதர-கத்திலிருந்து அனுப்பப்பட்டவை என்று கூறும் விக்கிலீக்ஸ், அவற்றில் 243 ஆவணங்களை மட்டும் இதுவரை வெளியிட்டுள்ளது. மீதி ஆவணங்களைச் சிறிது சிறிதாக அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் வெளியிட விக்கிலீக்ஸ் திட்டமிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சார்ந்த ஜுலியன் அசான்ஜ் தலைமையில் நடைபெறும் விக்கிலீக்ஸ் நிறுவனத்-திற்கென்று எந்த அலுவலகமும் கிடையாது. இந்நிறுவனத்திற்குத் தகவல்கள் தருபவர்கள் யாரென்று வெளியுலகிற்குத் தெரியாது. இந்நிறுவனத்திற்கு பணியாளர்கள், நிர்வாகிகள், தலைவர் என சுமார் 100&க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எங்கிருக்கிறார்கள், எப்படி பணியாற்றுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அசான்ஜ் மீது நடவடிக்கை எடுக்க நடந்த முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை.

விக்கிலீக்ஸ் ஆவணங்கள் வெளியிடப்படுவது குறித்து அமெரிக்கா கலவரம் அடைந்துள்ளது. அந்த ஆவணங்களை வெளியிடக்கூடாது என்று கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக அரங்கில் அமெரிக்காவின் வெளிப்படையான நடவடிக்கைகளுக்குப் பின்னே திரைமறைவில் அது நடத்தும் நேர் எதிரான நாடகங்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்துகிறது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள சிறு தகவல்கள் உள்ளே பொதிந்திருக்கும் மிக பிரமாண்டமான ஐஸ்கட்டியின் நுனி மட்டுமே. ஆனால், இந்த ஒரு சோறு, ஒரு பானைச் சோற்றுக்கு பதமாக அமைந்துள்ளது. தான் உறவு கொள்ளும் மற்ற நாடுகள் மற்றும் அதன் தலைவர்கள் குறித்து அமெரிக்கா உள்ளூர எவ்வளவு துச்சமான கருத்தைக் கொண்டுள்ளது என்பது இதன்மூலம் வெளிப்பட்டுள்ளது. மற்ற நாட்டு தலைவர்களை ஆல்பா நாய், ஹிட்லர், மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்ற பட்டப்பெயர்களை அமெரிக்க அதிகாரிகள் சூட்டியுள்ளது தெரிகிறது.

தனது நேட்டோ சகாவான பிரிட்டன், ஆப்கான் யுத்தத்தில் கடைப்பிடித்து வரும் சாதகமற்ற போக்கு குறித்து அமெரிக்க அதிகாரிகள் கடுமையான விமர்சனம் வைத்துள்ளனர். வெளிநாட்டுத் தூதரகங்களில் பணியாற்றும் தங்கள் அதிகாரிகளை அந்நாட்டு தலைவர்களை உளவு பார்க்கச் சொல்வதும், ஐ.நா. அமைப்பில் உள்ள அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் உள் விவகாரங்களை மோப்பம் பிடிக்கும்படி அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனே கேட்பது மானக்கேடான விஷயம்.

அரபு நாடுகளில், தனது எண்ணெய் நலத்தைப் பாதுகாக்க அமெரிக்கா கடைப்பிடிக்கும் தில்லுமுல்லுகளும் இப்போது வெளியாகியுள்ளன. அரபு நாடுகளின் ஒற்றுமையைச் சீர்குலைக்க அவர்களிடையே உள்ள ஷியா, சன்னி பிரிவுகளிடையே அமெரிக்கா தொடர்ந்து உருவாக்கி வரும் பகைமையை இந்த ஆவணங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஈரானுக்கும் சவுதிக்கும் இடையே கடுமையான பிளவு உள்ளதாக இந்த ஆவணங்களில் தெரிவிக்கப்-பட்டுள்ளது.

ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவை, சவுதி அரசர் அப்துல்லா கோரு-வதாகத் தெரிவிக்கப்-பட்டுள்ளது. அதேபோல், பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் குறித்து சவுதி மன்னர் முன்வைத்துள்ள கடுமையான விமர்சனங்களும் வெளிவந்துள்ளன. இவற்றை பாகிஸ்தான் அரசும் ஈரான் அதிபரும் மறுத்துள்ளனர். அரபு நாடுகளிடையே உள்ள நல்லுறவைச் சீர்குலைக்க அமெரிக்காவே திட்டமிட்டு இந்த ஆவணங்களை வெளியிடுவதாக ஈரான் அதிபர் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், சவுதி மன்னர் இதுவரை இந்த ஆவணங்கள் குறித்து வாய் திறக்கவில்லை.

இந்தியா குறித்து இரண்டு தகவல்கள் மட்டுமே வெளிவந்துள்ளன. ‘இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, பிரேசில் ஆகிய நாடுகள் ஐ.நா.பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினராகத் தங்களை தாங்களே முன்னிறுத்தி உள்ளன’ என்று ஹிலாரி கிளின்டன் கூறியுள்ளதாகத் தெரிகிறது. அப்படியெனில், இந்தியாவின் நிலைப்பாட்டை மற்ற நாடுகள் எவையும் ஆதரிக்கவில்லையா? இந்தியாவிற்கு அப்பதவியைப் பெற்றுத்தர ஒபாமா முயற்சிப்பதாகக் கூறியது பொய்யா? அடுத்து ‘துருக்கியால் கூட்டப்பட்ட ஆப்கான் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ள& பாகிஸ்தானைக் காயப்படுத்தக்கூடாது என்பதற்காக & இந்தியாவிற்கு அழைப்பு அனுப்பப்படவில்லை’ என்ற தகவல் இந்தியாவை மேலும் கோபமூட்டும்.

அமெரிக்கா தந்த அணு உலைகளை பாகிஸ்தான் அரசு யுரேனியம் செறிவூட்-டலுக்குப் பயன்படுத்துவதால், அணுக்கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது என்ற நிலையில், அவற்றை அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்ல முயன்ற போது, பாகிஸ்தான் மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று கூறி அந்த அரசு அதற்கு மறுப்பு தெரிவித்ததை ஒட்டி, அமெரிக்கா அம்முயற்சியைக் கைவிட்டது என்று தெரியவந்துள்ளது. இதன்மூலம், பாகிஸ்தானின் அணு ஆயுதத் தயாரிப்புகளை அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை என்பது தெரிகிறது. ஈரானுக்கு ஒரு நீதி, பாகிஸ்தானுக்கு ஒரு நீதியா?

சீனாவில் கூகுல் இணையதளம் மூலம் கருத்துச் சுதந்திரத்தை அந்நாட்டு மக்கள் பயன்படுத்துவதைத் தடுக்க கூகுலை முடக்கும் நடவடிக்கைகளில் சீனா இறங்கியதாகவும், ஈரானுக்கு அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படும் பொருட்களை வடகொரியா, சீனா மூலம் கடத்த அவ்வரசு அனுமதித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைச் சீனா கடுமையாக மறுத்துள்ளது.

இந்த ஆவணங்கள் மூலம் ஒரு தகவல் தெளிவாகத் தெரிகிறது. உலக நாடுகள் அமெரிக்க ஆணைக்கு உட்பட்டு நடக்கும் காலம் மலையேறிவிட்டது. இனியும் அந்நாடுகளைக் கட்டுப்படுத்த முடியாது என்ற நிலையில், அமெரிக்கா பீதியுடன் செயல்படுவது தெரிகிறது.

இந்த ஆவணங்கள் மூலம், தகவல் உரிமைச்சட்டம் உலக அரங்கில் அரங்-கேறியுள்ளது. விக்கிலீக்ஸ் அம்பலப் படுத்தியுள்ள இந்த ஆவணங்களால் ஒட்டு-மொத்த உலகமும் ஒருவித அதிர்ச்சியை அனுபவித்திருக்கிறது. அதேசமயம், இனிமேலும் அரசுகள் வெளிப்படையின்றி மக்களுக்குத் தெரிவிக்காமல் ரகசிய நடவடிக்-கைகளை மேற்கொள்ள முடியாது என்ற பேருண்மையை அதே உலகத்திற்கு எடுத்தும் சொல்லியிருக்கின்றன இந்த ஆவணங்கள்!
thanks :tamilagaarasiyal.(கலை)

கடலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் பணிபுரிய வரும் 11ம் தேதி நேர்காணல்

108 ஆம்புலன்சில் பணிபுரிவதற்கான நேர் காணல் வரும் 11ம் தேதி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது.

தமிழ்நாடு அரசின் இ.எம்.ஆர்.ஐ., நிறுவனத்தின் 108 ஆம்புலன்ஸ் சேவையும், கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து நடத்தும் நேர்காணல் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 11ம் தேதி நடக்கிறது. இந்த நேர்காணலில் 108 ஆம்புலன்சில் பணிபுரிவதற்கான அவசர சிகிச்சை டெக்னிஷியன், டிரைவர் பதவிக்கும் தேர்வு நடக்கிறது. பி.எஸ்சி., தாவரவியல், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி, உயிர் வேதியியல் பாடப் பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள். 20 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் அசல் கல்வி, அனுபவ சான்றுடன் வர வேண்டும்.

அதேப்போன்று 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 5 ஆண்டு முன் அனுபவம் உள்ள 25 வயது முதல் 38 வயது வரை உள்ள டிரைவர்கள் தங்களது கல்வி, அனுபவ சான்றுடன் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்பட்டு நியமனம் வழங்கப்படும். இவ்வாறு வேலைவாய்ப்பு அலுவலர் வைத்தியநாதன் (பொறுப்பு) தெரிவித்துள்ளார்

டிசம்பர் 08, 2010

இந்தியாவில் சேடான் டீசல் எக்ஸ்எப்பை அறிமுகப்படுத்தியது ஜாக்குவார்


பிரிட்டிஷ் பிரீமியம் கார் தயாரிப்பு நிறுவனமான ஜாக்குவார் லாண்ட் ரோவர் நிறுவனம், இந்தியாவில் டீசல் அடிப்படையிலான லக்சுரி (சொகுசு) காரான சேடான் எக்ஸ்எப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜாக்குவார் லேண்ட் ரோவர் நிறுவனம், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரீமியர் கார் பிரிவின் தலைவர் ரோஹித் சூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : முற்றிலும் இந்தியாவிலும் தயாரிக்கப்பட்ட இந்த கார், 3.0 லிட்டர் வி6 சிலிண்டரை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதாகவும், இந்த டீசல் காரின் விலை ரூ. 48.37 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : இதன்மூலம், பிரிட்டிஷ் தொழில்நுட்பத்திலான காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருப்பதாகவும், விற்பனை இலக்கு குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்றும், விரைவில், எங்கள் நெட்வொர்க்கை விரிவுபடுத்த முதலில் தி்டடமிட்டுள்ளதாகவும், கடந்த நிதியாண்டில் 242 கார்களை விற்பனை செய்துள்ளதாகவும், தற்போதைய அளவில் 3 டீலர்ஷிப்கள் உள்ளதாகவும், இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 10 புதிய ஷோரூம்களை திறக்க திட்டமிட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு தங்கள் நிறுவனம் அறிமுகப்படுத்திய 5.0 லிட்டர் பெட்ரோல் எக்ஸ்எப் மற்றும் சூப்பர்சேஞ்ச்டு எக்ஸ்எப்ஆர் உள்ளிட்ட கார்களுக்கு இந்திய சந்தையில் அமோக வரவேற்பு உள்ளதாகவும், லேண்ட் ரோவர் நிறுவன தயாரிப்புகளை முற்றிலும் இந்தியாவிலேயே அசெம்பிளிங் செய்யும் திட்டம் இருப்பதாகவும், இது 2011ம் ஆண்டின் இறுதியில் சாத்தியமாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த ‌அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சௌர்சே:DM

வெளிநாடுவாழ் இந்தியர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் உரிமையில் விதிமுறை மாற்றம் தேவை

வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்தியாவில் எப்போது வேண்டுமானாலும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்துக்கொள்ளும் வகையில் விதிமுறையை மாற்றவேண்டும். இதற்கு இந்திய தேர்தல் ஆணையம் வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுத் தொடர்பாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலச்சங்கம் சனிக்கிழமை இந்திய தேர்தல் கமிஷனுக்கு முறையீடு அனுப்பியுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் விடுமுறையின் போதுதான் இந்தியாவுக்குச் செல்கின்றனர். ஆனால், அங்கு வாக்காளர் பட்டியலில் குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே பெயர் சேர்க்க முடியும் என்கின்றனர். எனவே, பலர் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். எனவே, தற்போதுள்ள நடைமுறையில் மாற்றம் செய்து எப்போது வேண்டுமானாலும் இந்தியாவில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் தனிப் பிரிவை ஏற்படுத்துவது அவசியம்.

கேரளத்தில் அடுத்து வரவிருக்கும் நியம சபா தேர்தலிலிருந்து இந்த முறையைக் கொண்டுவரவேண்டும் என இந்த அமைப்பின் தலைவர் கே.வி.சம்சுதீன் கேட்டுக்கொண்டுள்ளார்.

வெண்டைக் காயின் மருத்துவக் குணங்கள்


காய்கள், கனிகள் அனைத்தும் இயற்கையின் கொடையே. இதில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் நிறைந்துள்ளன. மனிதர்களின் அன்றாட உணவுத் தேவைகளில் காய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொழுப்புச் சத்து குறைந்த வைட்டமின் சத்துக்கள், தாதுக்கள்
நிறைந்தவைதான் காய்கறிகள்.

இவைகளை சமைத்து உண்பதால் உடலுக்கு வலு கிடைக்கும். இவை எளிதில் ஜீரணமாகும். மலச்சிக்கலைப் போக்கி நீண்ட ஆயுளைக் கொடுக்கும். இந்த இதழில் அனைவருக்கும் பரிச்சயமான வெண்டைக் காயின் மருத்துவக் குணங்களைப் பற்றி அறிந்து கொள்வோம். வெண்டையை ஏழைகளின் நண்பன் என்று கூட சொல்லலாம். சைவ உணவு உண்பவர்கள் அதிகம் சேர்க்கும் காயாகும்.

எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. வீட்டின் கொல்லைப் புறத்தில் வளர்க்கலாம். இது இந்தியாவின் வெப்பமான பாகங்களில் பயிராகும். சிறு செடியாக காணப்படும். இதன் காய் சமையலுக்கு பயன்படுகிறது. இலை, விதை, மருத்துவத்திற்கும் பயன்படுகிறது.

இதன் காயால், நாள்பட்ட கழிச்சல், பெருங்கழிச்சல், குருதிக் கழிச்சல் போகும். நல்ல சுவையைக் கொடுக்கும்.

ஞாபக சக்தி
மனிதனுக்கு நினைவாற்றல் அவசியத் தேவையாகும். ஞாபக சக்தியை இழப்பது மனிதனுக்கு நோய் போன்றது. ஞாபக சக்தியை தூண்ட வெண்டைக்காயை சமையல் செய்து அடிக்கடி சாப்பிட வேண்டும். இது மூளை நரம்புகளைக் தூண்டி அங்கு சுரக்கும் நாளமில்லாச் சுரப்பியை நன்கு சுரக்கச் செய்யும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வெண்டைக் காயை எண்ணெயில் வதக்கி கொடுப்பது நல்லது. அவர்களின் வளர்ச்சியில் வெண்டைக் காய் முக்கிய பங்கு வகிக்கிறது.

இரத்தம் சுத்தமடைய
இரத்தத்தை சுத்தமடையச் செய்து அதனைச் சீராக செயல்படச் செய்கிறது. இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களைக் கரைக்கிறது. இரத்த அழுத்தத்தைப் போக்கி இதய அடைப்புகளைத் தடுக்கிறது. சிறுநீரக கோளாறுகளைப் போக்குகிறது. வயிற்றுக் கடுப்புடன் இரத்தம் வெளியேறுவதை தடுக்குகிறது.

மலச்சிக்கலைப் போக்கும்
மலச்சிக்கல் தான் நோய்க்கு மூலகாரணம். மலச்சிக்கலைப் போக்க வெண்டைக்காய் சிறந்த மருந்தாகும். இதில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இவை உடலின் செரிமான சக்தியைத் தூண்டி மலச்சிக்கலைப் போக்கும்.

வயிற்றுப்புண் ஆற
வயிற்றில் உண்டான புண்கள் ஆற வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் வயிற்றுப் புண் எளிதில் குணமாகும். அசீரணக் கோளாறு நீங்கி நன்கு பசியைத் தூண்டும்.

சரும பாதிப்பு நீங்க
புறச் சூழ்நிலைகளால் பாதிக்கப்படும் சருமத்திற்கு வெண்டைக்காய் சேர்த்துக் கொள்வதால் சருமத்திற்கு பளபளப்பைக் கொடுத்து பாதிப்புகளை நீக்குகிறது.

குழந்தை நன்கு வளர
தினமும் பிஞ்சு வெண்டைக் காயை நன்கு கழுவி குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுக்கலாம். இது குழந்தைகளை அறிவு ஜீவியாக எதிர்காலத்தில் மாற்றும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெண்டைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். அதிக சர்க்கரை உடம்பில் கூடிவிட்டால் வெண்டைக் காயை மூன்று துண்டாக நறுக்கி அதை குறுக்காக நறுக்கி இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து காலையில் நன்கு கலக்கி காயை எடுத்துவிட்டு, வெறும் வயிற்றில் அந்த நீரை மட்டும் அப்படியே குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு குறையும். தேவைப்படும்போது இதை பயன்படுத்தலாம்.

உடல் வலுப்பெற
உடல் சோர்வு, மனச்சோர்வு இருந்தால் மனிதன் நிரந்தர நோயாளிதான். இதைப் போக்க வெண்டைக்காயை சமைத்து உண்டு வந்தால் உடல் வலுப்பெறும். வெண்டைக்காயை சிறிதாக நறுக்கி மோரில் கலந்து வெயிலில் காயவைத்து வத்தலாக செய்து அதை வறுத்து உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும். நன்கு முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து அருந்தி வந்தால் உடல் வலு கிடைக்கும். மயக்கம் தலைசுற்றல் நீங்கும். சமைத்து உண்பதற்கு பிஞ்சு வெண்டைக்காய் சிறந்தது.

100 கிராம் வெண்டைக்காயில் உள்ள சத்துக்கள் சக்தி – 31 கலோரி கார்போஹைட்ரேட் – 7.03 கிராம் சர்க்கரை – 1.20 கிராம் – 3.2 கிராம் கொழுப்பு – 0.10 கிராம் புரதம் – 2.00 கிராம் நீர்ச்சத்து – 90.17 கிராம

source:CNN

மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சந்திரனில் 3 ஏக்கர் நிலம் வாங்கிய பேராசிரியர்

ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த பேராசிரியர் முரளிமோகன். இவரது மனைவி வசுமதி. முரளிமோகன் தற்போது எத்தியோப்பியாவில் உள்ள லிஜிம்னா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.


இவர் தனது மனைவி பிறந்தநாளுக்கு சந்திரனில் உள்ள நிலத்தை வாங்கி பரிசாக தர முடிவு செய்தார்.

இதன்படி அவர் சந்திரனில் உள்ள நிலத்தை விற்க உரிமை பெற்றுள்ள அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லூனார் பப்ளிக் சொசைட்டிக்கு சென்றார். அங்குள்ள அதிகாரிகளிடம் 70 டாலர்கள் கொடுத்து தன் மனைவி வசுமதி பெயரில் 3 ஏக்கர் நிலத்தை வாங்கினார். பின்னர் அந்த நில பத்திரத்தை மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கினார்.

இதுபற்றி அவர் கூறும்போது,

என் மனைவிக்கு விலை மதிக்க முடியாத சொத்தை பரிசாக வழங்கி உள்ளேன். இன்னும் 50 ஆண்டுகளில் மனிதர்கள் நிச்சயமாக சந்திரனில் குடியேறி விடுவார்கள். அப்போது நாங்களும் அங்கு குடியேறுவோம் என்றார்.

சுதந்திர ஃபலஸ்தீன்:அர்ஜெண்டினா அங்கீகாரம்

பிரேசிலுக்கு அடுத்தப்படியாக அந்நாட்டின் அருகிலுள்ள அர்ஜெண்டினாவும் சுதந்திர ஃபலஸ்தீன் நாட்டிற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

1967 ஆம் ஆண்டு எல்லைகளடங்கிய ஃபலஸ்தீன் நாட்டை தாங்கள் அங்கீகரிப்பதாக அர்ஜெண்டினா வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெக்டர் டய்மர்மன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-ஃபலஸ்தீன் பிரச்சனைக்கு பரிகாரம் 1967 ஆம் ஆண்டு எல்லைகளடங்கிய ஃபலஸ்தீன் நாட்டை அங்கீகரிப்பதாகும் என அவர் தெரிவித்தார்.

இஸ்ரேலைப் போலவே சுதந்திர நாட்டை உருவாக்கும் ஃபலஸ்தீன் மக்களின் உரிமையை நாங்கள் அங்கீகரித்திருக்கிறோம். சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளை கணக்கில் கொண்டு பிராந்தியத்தில் அமைதியான சூழலைக் கொண்டுவருவதுதான் தங்களது விருப்பம் என ஹெக்டர் தெரிவித்தார்.

அர்ஜெண்டினா அதிபர் கிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் கிரிஷ்னர் தங்களின் ஆதரவைத் தெரிவித்த கடிதத்தை ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸிற்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளையில், அர்ஜெண்டினாவின் தீர்மானத்திற்கு இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இத்தீர்மானம் கவலை அளிப்பதாகும் எனக்கூறிய இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் டிகல் ஃபாமர் அமைதியை விரும்பும் அர்ஜெண்டினா இதரவழிகளை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும் என அவர் குற்றஞ்சாட்டினார்.

அர்ஜெண்டினாவின் நடவடிக்கையை வரவேற்ற ஃபலஸ்தீன் தூதர், இதர லத்தீன் அமெரிக்க நாடுகளும் ஃபலஸ்தீன் நாட்டிற்கு தங்கள் ஆதரவை தரும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

உருகுவே அடுத்த ஆண்டு ஃபலஸ்தீன் சுதந்திர நாட்டை அங்கீகரிக்கப் போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி:தேஜஸ்&பாலைவனத் தூது