Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 23, 2014

கடலூர் மாவட்டத்தில் மழைவெள்ள பாதிப்புக்கு இலக்காகும் 64 கிராமங்கள்- ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார்

கடலூர் மாவட்டத்தில் மழைவெள்ள பாதிப்புக்கு இலக்காகும் 64 கிராமங்களை கண்டறிந்து அங்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகெளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பருவ மழை பெய்துவருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. ஆட்சியர் அலுவலகம், கேட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் வெள்ளக்கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இவை 24 மணிநேரமும் செயல்படும். வெள்ளக்கட்டுப்பாட்டு அறையுடன் பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் எந்த நேரத்திலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இந்த மழைகாலத்தில் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ உதவி அளிப்பதற்காக சுகாதாரத்துறையினர் தயார் நிலையில்
உள்ளனர். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதிய மருந்துகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இதேப்போல் அரசு கால்நடை மருத்துவமனைகளில் கால்நடைகளுக்குத் தேவையான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை மழைவெள்ளச்சேதங்கள் எதுவும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் மழைவெள்ளகாலங்களில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் மழைவெள்ள பாதிப்புக்கு இலக்காகும் 64 கிராமங்களை கண்டறிந்துள்ளோம். அந்த கிராமங்களில் வெள்ள சேதம் ஏற்படாமல் இருக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, அந்த கிராமங்களிலேயே மணல்மூட்டைகளை தயார் நிலையில் வைத்துள்ளோம் என்றார்.
-Dinamani 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...