Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 31, 2011

அனைத்து மொழிகளிலும் பேசக் கூடிய கணணிகள்!!

அனைத்து மொழிகளிலும் பேசக் கூடிய கணணிகளை தயாரிக்க இந்திய நிறுவனமொன்று நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.அவ்வாறானதோர் பரீட்சார்த்த வடிவமைப்பை தாம் தற்போது மேற்கொண்டு வருவதாக இந்தியாவின் "சென்டர் போ டிவலப்மென்ட் ஓப் அட்வான்ஸ்ட் கம்ப்யூட்டிங்" நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரை காலமும் மௌனமொழியில் கணணியுடன் தொடர்பாடல்களை மேற்கொண்டு வந்த போதும் இந்த முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில் விரைவில் வாய்ப் பேச்சு மூலம் கணணிகளை இயக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக ஆராய்ச்சிகள் சீ-டோக்(C-Dac) நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த நிறுவனத்தின் குறித்த முயற்சிக்காக இந்திய மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சு நிதியுதவி அளித்துள்ளது.

பேசும் கணணிகளை தயாரிக்கும் பணிகள் இரண்டு முறைகளில் செயற்படுத்தப்படவுள்ளதாக சீ-டோக்(C-Dac) ஐச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரி ஹேமந்த் தர்பாரி தெரிவித்துள்ளார். வாய்மொழியிலிருந்து எழுத்துரு முறையிலும், எழுத்துருவிலிருந்து ஒலிவடிவிக்கு மாற்றும் முறையிலும் பிரஸ்தாப கணணி செயல்பட உள்ளது.

ஹஜ் பயணிகளுக்கு பாஸ்போர்ட் சலுகை!

சென்னை: "ஹஜ் பயணம் மேற்கொள்வோர், அக்கமிட்டியின் ஒதுக்கீடு கடிதத்திற்கு காத்திருக்காமல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்' என, சென்னை மண்டல துணை பாஸ்போர்ட் அதிகாரி தவ்லத் தமீம் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வோர், கடைசி நேர நெருக்கடியை தவிர்க்கும் வகையில், ஹஜ் கமிட்டியின் ஒதுக்கீடு கடிதத்திற்கு காத்திருக்காமல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள், தங்கள் விண்ணப்பத்தின் முதல் பக்கத்தில் ஹஜ் பயணி என, சிவப்பு மையால் குறிப்பிட்டு, வழக்கமான ஆவணங்கள் மற்றும் கட்டணங்களுடன் பாஸ்போர்ட் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மாநில ஹஜ் கமிட்டியிடமிருந்து ஒதுக்கீட்டு எண் பெறப்பட்டதும், போலீஸ் சரிபார்த்தல் அறிக்கை பெறப்படாத விண்ணப்பங்களுக்கும், ஹஜ் பிரிவில் எட்டு மாதங்கள் செல்லத்தக்க, சவூதி அரேபியாவுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படும். ஹஜ் பயணம் முடிந்ததும், விண்ணப்பதாரர்களின் போலீஸ் சரிபார்த்தல் அறிக்கையின் ஒப்புதல் உறுதி செய்யப்படும். அதன்பின் அவர்கள், ஹஜ் பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிட வேண்டும். அவர்களுக்கு 10 ஆண்டுகள் செல்லத்தக்க புதிய பாஸ்போர்ட் தரப்படும். இவ்வாறு தவ்லத் தமீம் தெரிவித்துள்ளார்.

source: dinamalar

குறைந்த செலவில் MBA, M.E/ M.Tech , MCA படிக்க!

தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகள், அண்ணால் பல்கலை கழககங்கள், அரசு உதவி பெரும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் MBA/ MCA/ M.E/ M.Tech/ M.Arch./ M.Plan படிக்க அண்ணா பல்கலை கழகம் வருடம் தோறும் "TANCET" என்ற நுழைவு தேர்வை நடத்துகின்றது. இந்த தேர்வை எழுதி, நல்ல மதிப்பெண் எடுப்பதின் மூலம் மிக குறைந்த கட்டணத்தில் MBA/ MCA/ M.E/ M.Tech/ M.Arch./ M.Plan படிக்கலாம் . இதில் முஸ்லீம்களுக்கு 3.5% இட ஒதுக்கீடு உள்ளது.

பெரும்பாலும் மாணவர்கள் பட்ட படிப்பை முடித்தவுடனே MBA, M.E/ M.Tech , MCA படிக்க வேண்டும் என பெற்றோர்களிடம் சொல்வார்கள். இதற்க்கு பல லட்சம் செலவாகும். எனவே பெற்றோர்கள் மாணவர்களிடம் இந்த TANCET நுழைவு தேர்வை எழுதுமாறு வழியுறுத்துங்கள், இந்த தேர்வை எழுதி தேர்சி பெறுமாரு கூறுங்கள். இந்த மூலம் உங்களின் பல லட்ச ரூபாய் மிச்சமாகும். நல்ல கல்லூரியில் படிப்பதன் மூலம் நல்ல சம்பளத்தில் நல்ல வேலையும் கிடைக்கும்.

மாணவர்களே! தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்..

மார்ச் 30, 2011

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெங்காயம்

வெங்காயத்தின் தன்மை மற்றும் பயன்கள் குறித்த ஆய்வு ஒன்றை பார்சிலோனா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் சமீபத்தில் நடத்தினர். இந்த ஆய்வில் பச்சையாக உட்கொள்ளப்படும் வெங்காயம் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக அதிக அளவில் தூண்டுகிறது என்ற உண்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து ரத்தத்தை சுத்திகரிப்பதில் வெங்காயத்தின் நறுமணம் மற்றும் அமிலத்தன்மை பெரும்பங்கு வகிக்கிறது. நாம் உண்ணும் உணவை எளிதாக ஜீரணிக்க வைப்பதுடன் தேவையான சத்துக்களை உடலின் தேவைக்கேற்ப பிரித்துக் கொடுக்கிறது.

பச்சை வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் உள்ள நோய்கிருமிகள் அழிவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. பச்சை வெங்காயத்தின் அமிலத்தன்மை மாரடைப்பு நோயிலிருந்து மனிதர்களைக் காக்கிறது என்பதும் கூடுதல் தகவல்.

தவறுகளை ஒப்புக் கொள்வோம்!!

உலகில் உள்ள படைப்புகளில் மிகச்சிறந்த படைப்பு மனிதன் என்பதை சொல்லித் தெரிய வேண்டிய தில்லை. இப்போது காணப்படுகின்ற, மெய்சிலிர்க்கச் செய்கிறபல அரிய கண்டுபிடிப்புகள் யாவும் மனிதர்கள் கண்டுபிடித் தவையே. இறைவன் அவர்களுக்கு வழங்கிய அறிவு எனும் பொக் கிஷத்தை பயன்படுத்தியே இந்த கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார் கள். என்னதான் அறிவில் சிறந்தவனாக மனிதன் இருந்தாலும், அவனிடம் தவறுகள் நிகழத்தான் செய்யும்.

 நம்மைப்படைத்த இறைவனிடம் மட்டுமே எந்த தவறும் நிகழாது.. மனிதன் என்ற வட்டத்திற்குள் யார் நுழைந்தாலும், அவர்கள் உலகின் மிகச்சிறந்த அறிவாளிகளாக இருந்தாலும், ஏன் இறைவ னின் தூதர்களாகவே இருந்தாலும் அவர்களும் தவறு செய்யக்கூடியவர்களே. இறைவனது கரத்தினால் படைக்கப்பட்ட முதல் மனிதரும்,மிகச்சிறந்த அறிவாளியுமான, மனித சமுதாயத்தின் ஆதிபிதா என்று அழைக்கப்படுகின்ற ஆதம் (அலை) அவர்கள் கூட தவறு செய்தவர்களே. அவர்களின் பிள்ளைக ளாக இருக்கின்ற நாம் அனைவரும் தவறு செய்பவர்கள் என்பதில் ஆச்சரியத் திற்கு ஒன்றுமில்லை.

ஆதமின் சந்ததிகள் அனைவர்களும் இரவிலும், பகலிலும் தவறு செய்யக்கூடியவர்களே என இறைவன் கூறியதாக நபி ஸல் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூதர் (ரலி), நூல் : அஹ்மத் (20451)

மனிதர்கள் இயல்பிலேயே தவறு செய்பவர்கள்தான் என்றாலும் அதிலே நிரந்தரமாக உழல்வது ஏற்கத்தக்கதல்ல. மாறாக தவறு செய்பவர்கள் தான் செய்த தவறை ஒப்புக் கொண்டு, மனந்திருந்தி வாழ வேண்டும்.

மக்கள் எழுச்சி:சிரியா அமைச்சரவை ராஜினாமா

டமாஸ்கஸ்:கடந்த சில வாரங்களாக தொடரும் அரசுக்கெதிரான மக்கள் எழுச்சிப் போராட்டத்தை தணிப்பதற்காக சிரியாவின் கேபினட் அமைச்சரவை ராஜினாமாச் செய்துள்ளது.

1963-ஆம் ஆண்டு முதல் அமுலிலிருக்கும் அவசரச் சட்டத்தை வாபஸ் பெறவும், அரசியல்-குடியுரிமை சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாட்டை நீக்குவதுக் குறித்தும் உடனடியாக அதிபர் பஸ்ஸார் அல் ஆஸாத் பிரகடனப்படுத்துவார் என செய்திகள் கூறுகின்றன.

2003-ஆம் ஆண்டுமுதல் பதவியில் தொடரும் 32 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையின் ராஜினாமாவை அதிபர் அங்கீகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனல் தெரிவிக்கிறது.

புதிய அரசு உருவாகும்வரை தற்போதைய அமைச்சரவை தொடரும். ஆனால், பெரும்பான்மையான அதிகாரங்களை தம் வசம் வைத்திருக்கும் அதிபரை இந்த ராஜினாமா பாதிக்காது.

மார்ச் 28, 2011

இஸ்லாத்தை ஏற்ற நேபாள நடிகை பூஜா லாமா !

நேபாளத்தின் புகழ்பெற்ற நடிகையும்,பாடகருமான "பூஜா லாமா" ஐந்து மாதங்களுக்கு முன்பு இஸ்லாத்தை தழுவினார் அல்ஹம்துலில்லாஹ்.இவருடைய வயது 28 என்பதும் இவர் புத்த குடும்பத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தனது துபாய் கத்தார் பயணத்தை முடித்து விட்டு திரும்பும்போது காத்மாண்டு என்ற இடத்தில இஸ்லாத்தை தழுவினார்.

பேட்டி ஒன்றில், இஸ்லாத்தை தழுவிய பிறகு பூஜா லாமா என்ற தனது பெயரை "ஆம்னா ஃபாரூகி" என்று மாற்றிக் கொண்டதாக கூறினார்.மேலும்"இஸ்லாம் மட்டுமே அனைத்து பிரச்சனைகளுக்கும் மனித நேயத்தின் அடிப்படையில் தீர்வு அளிக்கிறது.இஸ்லாத்தின் அழகு தனக்கு நேர் வழி காண்பித்தது இல்லையெனில் நான் இருளிலேயே இருந்திருப்பேன்.இஸ்லாம் அமைதியான மதம் என்பதை நான் உலகுக்கு கூற விரும்புகிறேன்." என்பதாக கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் "நான் காரிருளில் வாழ்ந்து வந்தேன் ,தற்கொலை செய்து கொள்ளவும் முயன்றேன்.இஸ்லாம் என் வாழ்வில் ஒளி ஏற்றியது நான் இப்பொழுது ஆபாசம்,மது ,புகை அகத்தமான உணவுகள் உண்பது அனைத்தையும் விட்டு விட்டேன்.இஸ்லாத்தை பற்றி உலகம் கூறும் அனைத்தும் அவதூறு என்பதை உணர்ந்து கொண்டேன்" என்றார் அவர்.

கடலூர் மாவட்டத்தில் எந்தக் கட்சி வெற்றி பெரும் ஒரு அலசல்

கடலூர் மாவட்டத்தில், தொகுதி மறுசீரமைப்பில் நெல்லிக்குப்பம் நீக்கப்பட்டு, நெய்வேலி உருவாக்கப்பட்டுள்ளது. மங்களூர் (தனி), திட்டக்குடி (தனி) தொகுதியானது. தற்போது மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி (தனி), புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் (தனி) என, ஒன்பது சட்டசபை தொகுதிகள் உள்ளன.

காட்டுமன்னார்கோவில் (தனி):

வி.சி., கட்சி எம்.எல்.ஏ., ரவிக்குமார், நாகை - கடலூர் மாவட்டத்தை இணைக்கும் முட்டம் பாலம், சிதம்பரம் - காட்டுமன்னார்கோவில் சாலைகளை புதுப்பித்தது, நிரந்தர வெள்ள தடுப்பு நடவடிக்கைக்காக, 115 கோடி ரூபாய் நிதி பெற்றுத் தந்ததை சாதனைகளாக கூறுகிறார். "தொழிற்பேட்டை துவங்குவேன், நந்தனார் கல்வி நிறுவனங்களில் மகளிர் கல்லூரி, அரசு கலைக் கல்லூரி துவங்கப்படும்' என்றார். அதற்கான முயற்சியே எடுக்கவில்லை. வெள்ளம் சூழ்ந்த நேரத்தில் கூட மக்களை சந்திக்கவில்லை. மீண்டும் ரவிக்குமாரே போட்டியிடுகிறார். அ.தி.மு.க.,வில் முருகுமாறன் களமிறங்கியுள்ளார்.

சேத்தியாத்தோப்பு பகுதியில் மின் தடை நேரம் அதிகரிப்புபொதுமக்கள் கடும் அவதி

சேத்தியாத்தோப்பு:சேத்தியாத்தோப்பு பகுதியில் மின் தடை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள்,கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.கடந்த ஓராண்டாக சேத்தியாத்தோப்பு பகுதியில் தினசரி இரண்டு மணி நேரம் மின்தடை செய்யப்பட்டு வந்தது ஒவ்வொரு மாதமும் சுழற்சி முறையில் இரண்டு மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டது. அதன் படி இம்மாதம் சேத்தியாத்தோப்பு பகுதியில் காலை 8 மணி முதல் 10 மணி வரை மின் தடை செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் கடந்த ஒருவாரமாக 8 மணி முதல் 11 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மின் துறை அதிகாரிகளிடம் விசாரித்ததில் மின் தடை நேரம் 3 மணி நேரமாக மாற்றப்பட்டு விட்டதாக தெரிவித்தனர்.மின் தடை நேரம் தற்போது கூடுதலாக ஒரு மணி நேரம் நீடிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள், வியாபாரிகள், பொது மக்கள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நான் ஒருபோதும் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலை கண்டது கூட இல்லை”- உமர்ஜி

கோத்ரா:”நான் ஒருபோதும் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலை கண்டது கூட இல்லை” என கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் 8 ஆண்டுகள் அநியாயமாக சிறைத் தண்டனையை அனுபவித்துவிட்டு குற்றமற்றவர் என விடுதலைச் செய்யப்பட்டுள்ள ஸஈத் உமர்ஜி தெரிவித்துள்ளார்.

“நிரபராதிகளான முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசினேன் என்ற ஒரே காரணத்திற்காக என்னை வழக்கில் சிக்கவைத்தார்கள்” என மெளலான ஹுஸைன் இப்ராஹீம் உமர்ஜி என்ற சையத் உமர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு தொடங்கியது..

இன்று முதல் SSLC என்கிற 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியுள்ளது தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைய TNTJPNO சார்பாக எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கின்றோம்..

தமிழகம், புதுவையில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் திங்கள்கிழமை (மார்ச் 28) தொடங்குகின்றன. ஏப்ரல் 11 வரை நடைபெறும் இத்தேர்வுகளை சுமார் 8.57 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் முடிவடைந்ததை அடுத்து கடந்த 22-ம் தேதி மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள் தொடங்கின. இந் நிலையில் 10-ம் வகுப்பு, ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் திங்கள்கிழமை தொடங்குகின்றன. முதல் நாளான திங்கள்கிழமை மொழிப்பாடம் முதல் தாள் தேர்வு நடைபெறுகிறது. 29-ம் தேதி இரண்டாம் தாள், 31-ம் தேதி ஆங்கிலம் முதல் தாள், ஏப்ரல் 1-ம் தேதி ஆங்கிலம் 2-ம் தாள் தேர்வுகள் நடைபெறுகின்றன.

தவ்ஹீத் ஜமாத் ஆதரவை பெற்றது திமுக!

இடஒதுக்கீட்டை அதிகரிப்பதாக உறுதி அளித்ததால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தி.மு.க.வுக்கு ஆதரவு கருணாநிதியை சந்தித்து தெரிவித்தனர்

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக உறுதியளித்துள்ளதால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.
தி.மு.க.வுக்கு ஆதரவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் ஜெய்னுலாபுதீன், பொதுச் செயலாளர் ரஹமதுல்லா, செயலாளர் சாதிக் உள்பட நிர்வாகிகள் நேற்று அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்துக்கொண்டனர்.

பின்னர் வெளியில் வந்த ஜெய்னுலாபுதீன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கல்வி, வேலைவாய்ப்பில் அடித்தட்டு முஸ்லிம்கள் முன்னேற வேண்டுமானால் தனி இடஒதுக்கீடு தேவை என்ற அடிப்படையில் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆட்சியில் பெற்றோம்.

மார்ச் 26, 2011

சவுதி அரேபியாவில் அரசியல் கட்சி உதயம்?

மத்திய கிழக்கின் மையமாகவும், முஸ்லீம்களின் முக்கிய கேந்திர நிலையமாகவும் செயல்படும் ஒரு நாடாக சவுதி அரேபிய அரசு செயல்படுகிறது.

முஸ்லீம்களின் முக்கிய வணக்கத் தளங்களான மக்கா, மதினா போன்ற சிறப்பு மிக நகரங்களை உள்ளடக்கிய நாடாக இருக்கும் சவுதி பல காலமாக மன்னர்களினால் ஆட்சி செய்யப்படுகிறது.

சவுதியின் தற்போதைய மன்னர் அப்துல்லாஹ்வின் பாட்டனான அப்துல்லாஹ் பின் சுஊத் அவர்களின் பெயரின் அமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் இந்த சவுதி அரேபியா.

தவ்ஹீதுக்கு ஓரளவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நாடுகளில் ஒன்றாக திகழும் சவுதி அரேபியாவில் தற்போது பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

முஸ்லீம் நாடுகளின் தற்போதைய பிரச்சினைகளின் தாக்கம் சவுதியிலும் எதிரொளிக்கிறதா?

கடந்த சில மாதங்களாக மத்திய கிழக்கு மற்றும், ஆபிரிக்க முஸ்லீம் நாடுகளில் ஏற்பட்டு வரும் அரசியல் போராட்டங்களின் தாக்கம் சவுதியின் கதவுகளையும் தட்ட ஆரம்பித்திருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.

ஏன் என்றால் டியுனிஷியா மற்றும் எகிப்தின் ஆட்சியாளர்களின் ஆட்சி கவிழ்க்கப்பட்டவுடன் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க மன்னர்கள் மற்றும் அடக்கு முறை ஆட்சியாளர்கள் பலர் சிலாகித்துக் கொள்ள ஆரம்பித்துள்ளார்கள்.

மார்ச் 25, 2011

பெற்றோருக்கு நன்மை செய்யுங்கள்!

தமது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு நாம் உபதேசித்தோம். அவனுடைய தாய் அவனைச் சிரமத்துடன் (கர்ப்பத்தில்) சுமந்திருந்து, சிரமத்துடனே அவனை ஈன்றெடுத்தாள். அவனை (கர்ப்பத்தில்) சுமந்திருந்ததும், அவனுக்குப் பால் குடியை மறக்கடித்ததும் முப்பது மாதங்களாகும். முடிவில் அவன் தனது வாலிபத்தை அடைந்து, நாற்பது ஆண்டுகளை அவன் அடைந்திட்ட பொழுது, ‘என்னுடைய ரப்பே! நீ எனக்கும், எனது பெற்றோருக்கும் அருளிய உனது அருட் கொடைக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ எதனைப் பொருந்திக் கொள்வாயோ அத்தகைய நற்செயல்களை நான் செய்வதற்கும், எனக்கு உள்ளுணர்வை உதிப்பாக்குவாயாக! என் சந்ததியினரை எனக்கு நல்லிணக்கமாக்கி வைப்பாயாக! நிச்சயமாக நான் உன் பக்கமே (தவ்பாச் செய்து) மீண்டு விட்டேன். நிச்சயமாக நான் (உனக்கு வழிப்படுகின்ற) முஸ்லிம்களில் உள்ளவனாக இருக்கின்றேன்’ என்று அவன் கூறுகின்றான். (அல் குர்ஆன் 46:15)

வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது! 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து தனது இடுங்கியக் கண்களால் திருமறையை ஓதிக் கொண்டிருக்கிறார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும் 45 வயதுடைய அவர்களின் மகனும் தனது லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்துக்கொண்டிருக்கிறார்.

திடீரென ஒரு காகம் முதியவரின் அருகிலிருந்த சன்னலில் வந்து அமர்ந்தது.
‘என்ன இது?’ என்று கேட்டார் முதியவர்.

லேப்-டாப்பிலிருந்து கண்களை விளக்கிய மகன் சொன்னார், ‘அது ஒரு காகம்’

சில நிமிடங்கள் கழிந்தன. அந்த முதியவர் மீண்டும் கேட்டார், ‘என்ன இது?’

‘இப்பத்தானே சொன்னேன், அது ஒரு காகம்’ என்றார் மகன்.

சிறிது நேரம் கழித்து மூன்றாம் முறையாக அந்த முதியவர் தன் மகனிடம் கேட்டார், ‘என்ன இது?’

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் முஸ்லீம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்கவேண்டும்: முலாயம் சிங் கோரிக்கை

புதுடெல்லி:நாடாளுமன்றத்திலும்,சட்டப்பேரவைகளிலும் முஸ்லீம்களுக்கு தனி இடஒதுக்கீடு தேவை என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து,இன்று மக்களவையில் விவாத நேரத்தின்போது அவர் கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து அவர் பேசுகையில்;”மக்களவையில் முஸ்லீம் உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. முக்கியமான 14 மாநிலங்கள் சார்பாக மக்களவைக்கு 257 எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களில் ஒருவர் மட்டுமே முஸ்லீம்.

ஆகவே இந்த நிலை மாற வேண்டுமானால்,மக்களவையிலும்,மாநில சட்டப்பேரவைகளிலும் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு கொண்டுவர வேண்டும்.” என்று தெரிவித்தார்.

மார்ச் 23, 2011

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி - ஒரு பார்வை

தொகுதி பெயர் : சிதம்பரம்
தொகுதி எண் : 158
அறிமுகம் : மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதி சிறிய தொகுதியாக விளங்குகிறது.

தற்போதைய எம்.எல்.ஏ. : அருண்மொழித் தேவன் (அ.தி.மு.க.)
தொகுதி மறுசீர‌மைப்பு : தொகுதி மறுசீரமைப்பில் சிதம்பரம் தொகுதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொகுதியின் எல்லைகளில்தான் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டன.

எல்லை : தற்போது சீரமைக்கப்பட்டுள்ள சிதம்பரம் தொகுதியில் ஏற்கெனவே புவனகிரி தொகுதியில் இருந்த கிள்ளை பேரூராட்சி மற்றும் பரங்கிப்பேட்டை ஒன்றியம் முழுவதும் சேர்க்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே சிதம்பரம் தொகுதியில் இருந்த திருமுட்டம் பேரூராட்சி காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவைத் தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது சிதம்பரம் பேரவைத் தொகுதியில், சிதம்பரம் நகராட்சியும், அண்ணாமலை நகர், பரங்கிப்பேட்டை, கிள்ளை ஆகிய 3 பேரூராட்சிகளும், பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 41 ஊராட்சிகள், குமராட்சி ஒன்றியத்தில் 21 ஊராட்சிகள், மேலபுவனகிரி ஒன்றியத்தில் 7 ஊராட்சிகள் உள்ளிட்ட 69 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி இத்தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஷேக் அகமது யாசின் - நினைவு கூறுவோம்!

ஷேக் அகமது இஸ்மாயில் யாசின் (Sheikh Ahmed Ismail Hassan Yassin, சூன் 28, 1937 – மார்ச் 22, 2004) ஹமாஸ் எனும் இஸ்லாமிய இராணுவ இயக்கத்தினையும், ஹமாஸ் கட்சியையும் தோற்றுவித்தவர். இவ்வியக்கம் பாலஸ்தீனியத்தில் மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள், நூலகங்கள் மற்றும் பிற நல்ல செயல்களை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வியக்கமும் ஷேக் அஹ்மத் யாசின் அவர்களும் பாலஸ்தீனியர்களிடையே நீங்கா இடம் பிடித்துள்ளனர்.

அஹ்மத் யாசின், அவர்கள் சிறுவயதில் விளையாடிக்கொண்டிருக்கும்போது ஏற்பட்ட விபத்தினால் கைகளும், கால்களும் செயல் இழந்துவிட்டது. பார்வை குறைபாடும் உடையவர். சிறு வயது முதல் சக்கர நாற்காலியினை உபயோகிக்கித்தவர். விடியற் காலை தொழுகையில் ஈடுபட்டிருந்த இவரை இஸ்ரேலிய இராணுவம் ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல் நடத்தி கொன்றது. இந்த கொடூர தாக்குதலில் இவருடன் இருந்த பன்னிரண்டு நபர்களும் கொல்லப்பட்டனர்.. இவரு மீது தொடுக்கப்பட்ட தாக்குதலை தொடர்ந்து பல்வேறு நாடுகளும் ஐக்கிய நாட்டு சபையும் இஸ்ரேல் மீது கண்டனம் தெரிவித்தது. இவருடைய இறுதி சடங்கில் இரண்டு லட்சம் பாலஸ்தீனியர்கள் கலந்து கொண்டனர்.

அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தொலைதூரக்கல்வி மையத்தில் கீழ்கண்ட படிப்புகளுக்கு டிசம்பர்-2010 ல்,தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை, கீழ்கண்ட இன்டெர்நெட் முகவரி மற்றும் வாய்ஸ்நெட் தொலைபேசி, எஸ்எம்எஸ் மூலம் மார்ச் 23-ம் தேதி முதல் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இன்டர்நெட் முகவரிகள்:

http://www.annamalaiuniversity.ac.in/
http://www.indiaresults.com/
http://www.hmh.ac.in/
http://www.schools9.com/

ஆகிய முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

வாய்ஸ்நெட் தொலைபேசி எண்கள்:

சிதம்பரம் கோடு எண்: 04144 -237356 /237357/237357/ 237358/237359.

மேலும் மொபைல் போனில் RCQ Enr.no RCQ Reg.no என டைப் செய்து 9442551111 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பினால் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

மார்ச் 22, 2011

மக்களை திசை திருப்புகிறார் மன்மோகன்: அசாஞ்சே

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓட்டுப்போட எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்ததை அம்பலப்படுத்தும் அமெரிக்க ஆவணங்கள் உண்மையானதுதானா என்று கூறி, மக்களை பிரதமர் மன்மோகன் சிங் தவறாக திசை திருப்ப முயற்சிப்பதாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இந்திய தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ள அவர், அமெரிக்க தூதரக அதிகாரிகளின் ஆவணங்கள் அனைத்தும் வெறும் கருத்துக்களே என்று கூறுவது சரியானது அல்ல என்றும், அவ்வாறு கூறுவது உண்மையல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த ஆவணங்கள் அனைத்தும் அமெரிக்க தூதரக அதிகாரிகளால் அவர்களது அதிகார திறனுக்கு ஏற்ப அனுப்பப்பட்டுள்ளன.அந்த ஆவணங்களில் அவர்கள் கூறியுள்ளது அனைத்தும் உண்மையானவையே.அதில் அவர்கள் தங்களது கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர். இந்த இரண்டு வித்தியாசத்தையும் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது.

அவசரம் அவசியம்! அனைத்து குழந்தைகளுக்கும்?

குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு முதல் தீவிரமாக அமல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் உள்ளாட்சி நிர்வாகங்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த அனைத்து குழந்தைகளும் தொடக்க பள்ளிக்கூடத்தில் படிக்கிறார்களா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஒவ்வொரு உள்ளாட்சி நிர்வாகமும் ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச கட்டாய கல்வியை வழங்க வேண்டும். அதற்கேற்றாற்போல அருகாமையில் பள்ளி இருப்பதை உள்ளாட்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். நலிந்த பிரிவையும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவையும் சேர்ந்த குழந்தைகளுக்கு பாகுபாடு காட்டப்படாமல் இருப்பதையும் அவர்கள் எந்த காரணத்திற்காகவும் தங்கள் தொடக்க கல்வியை படித்து முடிப்பதிலிருந்து தடுக்கப்படாமல் இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

உள்ளாட்சி நிர்வாகம் தனது அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியில் வகுத்துரைக்கப்படும் வழிமுறைப் படி அந்த பகுதியில் வசிக்கும் 14 வயது வரை உள்ள குழந்தைகள் பற்றிய ஆவணங்களை பராமரிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் தனது அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒவ்வொரு குழந்தையும் பள்ளியில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து வருகை தந்து தொடக்க கல்வியை முடிப்பதை உறுதிப்படுத்திக் கண்காணிக்க வேண்டும்.

இந்திய முஸ்லிம்கள் நிராகரித்த 75 ஆயிரம் கோடி வட்டிப் பணம்

ஒரு அரசு சட்டங்கள் இயற்றும் போதும் திட்டங்கள் தீட்டும் போதும் எந்த மக்களின் நலனிற்காக இவற்றை இயற்றுகிறதோ அந்த மக்களின் இயல்போடு ஒத்துப் போகின்ற வகையில் அந்த சட்டங்களும், திட்டங்களும் இயற்றினால் தான் அது வெற்றி பெறும். இல்லையென்றால் அது வெற்றி பெறாது என்பதற்கு நமது நாட்டில் பல உதாரணங்கள் இருக்கின்றன.

அதுவும் இந்தியாவைப் போல மத ரீதியாக, சாதி ரீதியாக, இன ரீதியாக, மாநில ரீதியாக, மொழி ரீதியாக, கொள்கை ரீதியாக வேறுபாடுகளை அதிகம் கொண்டுள்ள மக்கள் வாழும் நாட்டில் சட்டங்களும் திட்டங்களும் மிகவும் கவனமாக பல ஆய்வுகளின் அடிப்படையில் தீட்டப்பட்டு நடைமுறைப்படுத்தினால் மட்டும் தான் அது வெற்றி பெறும்.

கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவில் சிறுபான்மை மக்களில் பெரும்பான்மையாக வாழும் மதச்சிறுபான்மை மக்களான முஸ்லிம்களின் இயல்போடு ஒத்துவராத, அந்த மக்களோடு ஒன்றிப்போக இயலாதவங்கியியல் பரிவர்த்தனை இந்தியாவில் நடைமுறையில் இருந்தகாரணத்தால் வேண்டா வெறுப்பாக வேறு வழியில்லாமல் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் வங்கிகளோடு பண பரிவர்த்தனை செய்ததின் காரணமாக இந்தியா முழுவதும் ஏறக்குறைய 75 ஆயிரம் கோடி ரூபாய் வட்டிப் பணம் கேட்பாரற்று, முஸ்லிம்களால் நிராகரிக்கப்பட்டு வங்கிகளில் முடங்கிக் கிடக்கிறது.

மார்ச் 21, 2011

மூலப்பொருள்களின் விலை உயர்வால் நுகர்வோர் சாதனங்கள் விலை மேலும் உயரும்

புதுடில்லி:மூலப்பொருள்களின் விலை உயர்வால், நுகர்வோர் சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள், அவற்றின் தயாரிப்புகளின் விலையை உயர்த்தி வருகின்றன.அலுமினியம், தாமிரம், உருக்கு உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருள்களின் விலை, கடந்த ஆறு மாதங்களில், 60 - 70 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், ரெப்ரிஜிரேட்டர்கள், ஏர்கண்டிஷனர் சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் லாப வரம்பு, மிகவும் பாதிப்படைந்துள்ளது.

இதை ஈடு செய்யும் வகையில், இத்துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள், இச்சாதனங்களில் விலையை, சென்ற ஜனவரி மாதத்தில் உயர்த்தின. இந்நிலையில், இவற்றின் விலையை வரும்ஏப்ரல் மாதத்தில், மீண்டும்அதிகரிக்கும் வகையில், இந்நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
நடப்பாண்டு ஜனவரி மாதத்தில், எல்.ஜி., நிறுவனத்தின் 'ஸ்பிலிட்' வகை 1.5 டன் திறன் கொண்ட '5 நட்சத்திர' குறியீட்டை பெற்ற ஏர்கண்டிஷனர் சாதனத்தின் விலை, 27 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்நிறுவனம், மீண்டும் வரும் ஏப்ரல் மாதத்தில், அதன் ஏர்கண்டிஷனர் சாதனங்கள் விலையை, 5 - 7 சதவீத அளவிற்கு உயர்த்த திட்டமிட்டுள்ளது.

எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா?

இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல்.இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை!

ஆம்... எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை!அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம். அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது.

பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது.எனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்கு லெமனேட் தெரபி என்று பெயர்.

மார்ச் 20, 2011

லிபியா மீது அமெரிக்க விமானத் தாக்குதல்-இந்தியா கண்டனம்!

திரிபோலி: ஐ.நா. பாதுகாப்புச் சபையின் ஒப்புதல் கிடைத்ததன் பின்னணியில் லிபியா மீது அமெரிக்கா மற்றும் அதன் கூட்டுப் படையினர் அத்துமீறி லிபியாவுக்குள் விமானத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இது உலக அளவில் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. இந்தியாவும் இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுடன் சேர்ந்து ஐரோப்பிய நாடுகளின் விமானப்படையும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. லிபியா, வெனிசூலா உள்ளிட்ட பல நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி இந்தத் தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளது.

கடாபியை ஒழிக்க பல்வேறு வழிகளில் முயற்சித்து வந்த அமெரிக்காவுக்கு இதுவரை அது கை கூடவில்லை. தற்போது லிபியாவில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சியை தனக்கு சாதகமாக அது பயன்படுத்திக் கொண்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக லிபியா மீது விமானத் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களைக் காக்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஒப்புதல் பெற்றது. இதுதொடர்பான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவில்லை.

இந்த ஒப்புதல் கிடைத்ததும் அதிரடியாக அமெரிக்காவும், அதன் ஜால்ரா நாடுகளும் சேர்ந்து விமானத் தாக்குதலை நடத்தியுள்ளன.

கலைஞரின் தாராள தேர்தல் அறிக்கை!

கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப், பெண்கள் அனைவருக்கும் இலவச கிரைண்டர் அல்லது மிக்ஸி வழங்கப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மை சமூகத்தை கவரும் வகையில் சிறுபான்மை சமூக பெண்களுக்கு சிறப்புச் சலுகைகளோடு கல்வி மேம்பாட்டுத் திட்டம், சிறுபான்மை சமூக கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு தேவையான பாதுகாப்பு. முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டு அளவை மேலும் உயர்த்துவது குறித்து பரிசீலனை ஆகியன அடங்கும்.

தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.

நோயா? கவலையேப்பட வேண்டாம்! டாக்டர் வீடு தேடி வருவார்!

மூத்த குடிமக்களுக்கு மாதம் ஒருமுறை மருத்துவர்களே வீட்டுக்குச் சென்று மருத்துவப் பரிசோதனை சிகிச்சை செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படும்.

60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும், உள்ளூர் பேருந்துகளில் கட்டணமில்லாத இலவச பயணம்.

வீட்டிலேயே உட்கார்ந்து சாப்பிடுவதற்கு வசதியாக 30 கிலோ அரிசியும் இலவசம்.

பரம ஏழைகளுக்கு ரேசன் கடைகளில் மாதந்தோறும் கிலோ 1 ரூபாய் வீதம் வழங்கப்படும் 30 கிலோ அரிசி இனி இலவசமாக வழங்கப்படும்.

தத்கல் பாஸ்போர்ட் - புதிய வழிமுறை

குறுகிய காலத்தில் பெறக்கூடிய தத்கல் பாஸ்போர்ட் முறையில் புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடு செல்ல விரும்புவோர் தத்கல் முறையில் விண்ணப்பிக்கும் கால அளவைக் குறைக்கவும், ஆள் பற்றாக்குறை காரணமாக அதிகமாக பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும்போது நேர்காணலுக்கான நாள் முன்னதாகவே தெரிவிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் அதன்படி நேர்காணலுக்கு வர வேண்டும்.

மார்ச் 17, 2011

Tips of the Day - ஆயங்குடி சபியுல்லாஹ்


Kollumedu

கடலூர் மாவட்ட தேர்தல் இணையத்தளம்

2011 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக கடலூர் மாவட்ட நிர்வாகம், தமிழக அரசின் கடலூர் மாவட்ட இணையத்தளத்தில் தேர்தலுக்கென ஒரு வலைப்பக்கதினை தொடங்கி உள்ளது.

இந்த தேர்தல் இணையதளத்தில் கடலூர் மாவட்ட சட்டமன்ற தொகுதி விவரங்கள், வாக்காளர்கள் எண்ணிக்கை, பதட்டம் நிறைந்த வாக்குசாவடிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் அதிக விபரங்களுக்கு
http://www.cuddalore.tn.nic.in/election2011/default.htm

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு இன்சூரன்ஸ் திட்டம்?

புதுடெல்லி:வெளிநாட்டில் வேலைப்பார்க்கும் இந்திய தொழிலாளர்களுக்கு பென்சன், இன்சூரன்ஸ் திட்டம் துவங்குவதுக் குறித்து வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அமைச்சகம் பரிசீலித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மக்களவையில் தெரிவித்தார்.

ஆன்றோ ஆண்டனி எம்.பி மக்களவையில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் எஸ்.எம்.கிருஷ்ணா இதனை தெரிவித்துள்ளார்.

கடுமையான மோதல் நடைபெற்று வரும் லிபியாவிலிருந்து 16,200 இந்தியர்கள் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கு வர விரும்பிய அனைத்து இந்தியர்களையும் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வந்துள்ளதாக எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

லால்பேட்டையில் கல்வி விழிப்புணர்வு மாநாடு


மார்ச் 16, 2011

ஏழைகளுக்கு உதவாத இந்திய பொருளாதார வளர்ச்சி!

ஒருபுறம் இந்திய பொருளாதாரம் செழித்து பொங்கி பிரவாகமாக பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருப்பதாக நமது பொருளாதார மேதை பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி போன்ற தலைவர்கள் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்க, மறுபுறம் அதே இந்தியாவின் பல மாநிலங்களில் போதுமான ஊட்டச்சத்து உணவின்றி பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவின் ஹார்வார்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் மேற்கொண்ட ஆய்வில், இந்தியா முழுவதுமே பல மாநிலங்களில் குழந்தைகளுக்கு போதுமான ஊட்டத்து இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

குறிப்பாக பீகார், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் போன்ற ஜனத்தொகை அதிகம் நிறைந்த மற்றும் ஏழைகள் அதிகம் நிறைந்த மாநிலங்களில் இந்த ஊட்டச்சத்தின்மை அதிகம் காணப்படுகிறது.

பொது இடங்களில் அரசியல் கட்சிக் கொடிகள் பறக்கத் தடை

கடலூர் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பொது இடங்களில் அரசியல் கட்சிக் கொடிகள் பறக்கத் தடை விதிக்கப்பட்டு இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் பெ. சீதாராமன் தெரிவித்தார்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் பெ. சீத்தாராமன்கூறியது:

கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் ஏராளமாக கட்சிக் கொடிகள், கம்பங்களில் பறந்துகொண்ட இருக்கின்றன. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி பொது இடங்களில் உள்ள அனைத்து அரசியில் கட்சிக் கொடிகளும், 16-ம் தேதிக்குள் அகற்றப்பட வேண்டும். கொடிக் கம்பங்களில் பூசப்பட்டு உள்ள வர்ணங்கள் மீது வெள்ளை வர்ணம் பூசப்பட வேண்டும். இதற்கு 48 மணி நேரம் கால அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

2011 ஹஜ் பயணம் செல்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது!

ஹஜ் புனிதப் பயணம் செல்வதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு ஹஜ் குழு தெரிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் வசிக்கும் முஸ்லிம் பெருமக்களில் ஹஜ்-2011-ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது. ஹஜ் 2011-ற்கான விண்ணப்பப் படிவங்கள் சென்னை-34, புதிய எண்.13 (பழைய எண்.7), மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து 16-3-2011 முதல் பெற்றுக் கொள்ளலாம் அல்லது விண்ணப்பங்களை http://www.hajcommittee.com/ என்ற இணையதளம் மூலமாகவும் அச்சு எடுத்துக் கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

ஹஜ் குழுவின் விதிமுறைகளின் அடிப்படையில் ஒரு குழு/உறையில் ரத்த-உறவுமுறையுள்ள குடும்ப நபர்கள் அல்லது நெருங்கிய உறவினர்கள் முதலானோர் ஐந்து நபர்களுக்கு மிகாமல் உள்ளடங்கியதாக இருக்கவேண்டும். இவ்வுறையில் அந்நிய நபர் எவரையும் சேர்க்கக்கூடாது.

மார்ச் 15, 2011

சீதனத்து சந்தையில் விலை போகாதே!

உங்களில் வாழ்க்கைத் துணையில்லாதவர் (ஆண், பெண்)களுக்கு திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால், தன் நல்லருளைக் கொண்டு அல்லாஹ் அவர்களை சீமான்களாக்கி வைப்பான், மேலும் அல்லாஹ் (வாரி வழங்குவதில்) விசாலமானவன். (அல்குர்ஆன் 24:32) இந்த வசனத்தில் இறைவன் 'திருமணம் செய்து வையுங்கள்' என்ற ஏவலை பயன்படுத்தியுள்ளதிலிருந்து தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பொறுப்பு பெற்றோர்களை சார்ந்தது என்பது விளங்குகிறது.


குழந்தைகளை நல்ல விதமாக வளர்ப்பதும் அவர்களுக்கு சிறந்த வாழ்க்கைத் துணைகளை அமைத்துக் கொடுப்பதும் நல்ல பெற்றோர்களின் அடையாளமாகும். திருமண வயதை அடைந்து விட்டப் பிறகும் ஏழ்மையைக் காரணம் காட்டி திருமணத்தைத் தள்ளிப் போட வேண்டாம் என்ற வழிகாட்டலும் இங்கு கிடைத்துள்ளது. திருமணம் எனது வழிமுறை ஆகும். இதனை எவரொருவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல என்பது நபிமொழி (அனஸ் பின் மாலிக் (ரலி) நூல் : புகாரி)
 
மார்க்கத்திலும், குணத்திலும் (சிறந்த) நீங்கள் விரும்பும் மனிதர் உங்களிடம் (மணப்பெண் கேட்டு) வந்தால் அவருக்கு திருமணம் செய்து வையுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால், பூமியில் கடுமையான குழப்பமும், ஒழுக்கமின்மையும், அமைதியின்மையும் ஏற்படும். (அபூஹூரைரா (ரலி), திர்மிதி) இந்த ஹதீஸை பெற்றோர்கள் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.


பெரும்பாலான திருமணங்களில் மணமகனின் ஒழுக்கத்தைப் பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாமல் குடும்ப உறவு - குடும்ப பாரம்பரியம் - சொத்து போன்ற இரண்டாம் பட்ச தகுதிகள் முன்னிலைப்படுத்தப்பட்டு திருமணம் முடிக்கப்படுகிறது.

சிதம்பரம், புவனகிரி தொகுதிகளில் கடும் அதிருப்தியில் விவசாயிகள்

முழுமையான வெள்ள நிவாரணம், பயிர் காப்பீடு வழங்கப்படாதததால் ஆளும் திமுக அரசின் மீது சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் தாலுக்காக்களில் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் 2010 கடைசியில் பெய்த கன மழையினால், வீராணம் ஏரி மற்றும் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டிலிருந்து கூடுதல் நீர் திறந்து விடப்பட்டதாலும் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி பகுதியில் வெள்ளப் பெருக்கெடுத்து சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா நெல் சாகுபடி பாதிக்கப்பட்டது.
சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் 5 தினங்களுக்கு மேலாக நீர் சூழ்ந்து இயல்பு நிலை பாதித்தது. அப்போது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உடனடி நிவாரணமான உணவு மற்றும் அரிசி சரியாக வழங்கப்படவில்லை.

ஆள் பற்றாக்குறை, இடுபொருள்களின் விலையேற்றம், உரத் தட்டுபாடு, நெல்லுக்கு போதிய விலை இல்லாததது இவைகளை மீறி விவசாயிகள் சம்பா சாகுபடி பயிரிட்டனர். இந்நிலையில் கன மழையினால் வெள்ளப் பெருக்கெடுத்து பயிர்கள் மூழ்கி மேலும் சேதத்தை ஏற்படுத்தியது.

மார்ச் 14, 2011

ஆயுத இறக்குமதியில் இந்தியாவுக்கு முதலிடம்!

உலகில் அதிக அளவு ஆயுதங்களை இறக்குமதிச் செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது. சீனாவை முந்திய இந்தியா ஆயுத இறக்குமதியில் முதலிடத்தை பிடித்துள்ளது.

ஸ்டாக்ஹோம் இண்டர்நேசனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்ட்யூட்டின் ஆய்வில் இந்தியாவை ஆயுத இறக்குமதியில் முதலிடத்திலிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

2006-ஆம் ஆண்டு முதல் 2010-ஆம் ஆண்டுவரை ஒன்பது சதவீதம் அனைத்து சர்வதேச ஆயுதங்களையும் இந்தியா இறக்குமதிச் செய்துள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. அதேவேளையில், சீனா ஆறு சதவீதம் மட்டுமே சர்வதேச அளவில் ஆயுதங்களை இறக்குமதிச் செய்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. சீனா
உள்நாட்டில் ஆயுதங்களை தயாரிப்பதாக ரிசர்ச் இன்ஸ்ட்யூட்டின் ஃபெலோ ஸீமன் வெஸ்மான் கூறுகிறார்.

அமெரிக்கா ஆயுத ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ளது.
32.5 பில்லியன் டாலர் தொகையை இந்தியா பாதுகாப்பிற்காக பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கியதை விட 40 சதவீதம் அதிகமாகும். பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையில் 70 சதவீதத்தையும் இந்தியா ஆயுத இறக்குமதிக்காக பயன்படுத்துகிறது. இவற்றில் 82 சதவீத ஆயுதங்கள் ரஷ்யாவிலிருந்து இறக்குமதிச் செய்யப்படுகின்றன.

கடலூர் மாவட்டத்தி தேர்தல் பணி துவங்கியது

கடலூர் மாவட்டத்தில் தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால், தொண்டர்கள் உற்சாகத்துடன் தேர்தல் பணியை துவக்கியுள்ளனர். தமிழகத்தில் சட்டசபை பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 13ம் தேதி நடக்க உள்ளது. மனுத்தாக்கலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளது. ஆனால் தி.மு.க., - அ.தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் தொண்டர்கள் யாருக்கு பிரசாரம் செய்வது என புரியாமல் குழம்பிப்போய் உள்ளனர்.

அ.தி.மு.க., வில் தே.மு.தி.க., வுக்கு ஒதுக்கப்பட்ட 41 இடங்களுக்கு கூட இதுவரை தொகுதி ஒதுக்கீடு செய்யவில்லை. ம.தி.மு.க., - கம்யூ., கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து மந்த நிலையிலேயே உள்ளன. கடலூர் மாவட்டத்தில் தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டு விட்டது. இம்மாவட்டத்தில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற கடலூர், (நெல்லிக்குப்பம்) பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி தொகுதிகளை மீண்டும் தி.மு.க., தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த மூன்று தொகுதிகளிலும் உள்ள சிட்டிங் எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது.

 கூட்டணி கட்சியான பா.ம.க.,விற்கு நெய்வேலி தொகுதி ஒதுக்கப்பட்டு வேல்முருகன் எம்.எல்.ஏ., போட்டியிடுகிறார். அதற்கான பிரசார பணிகளை இப்போதே ஜரூராக துவங்கி விட்டனர். புவனகிரி தொகுதியை பெற காங்., - வி.சி., மற்றும் பா.ம.க., வும் போராடி வந்தன. இதற்கிடையே இது பா.ம.க., வுக்கு மிகவும் சாதகமான தொகுதி என்பதால் வி.சி., கட்சியிடம் புவனகிரி தொகுதியை விட்டுக் கொடுக்குமாறு கேட்டுள்ளது. அதற்கு வி.சி., இசைவு தெரிவித்துள்ளதால் புவனகிரி தொகுதியில் பா.ம.க., போட்டியிடுவது ஊர்ஜிதமாகியுள்ளது. வி.சி., கட்சி இம்மாவட்டத்தில் 2 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தலித் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய தொகுதி என்பதாலும், திருமாவளவன் பிறந்த ஊர் என்பதாலும் திட்டக்குடி (தனி), காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதிகளில் போட்டியிட ஆர்வமாக உள்ளது.

மார்ச் 13, 2011

என்றுதான் தணியும் இந்த ஏகாதிபத்திய மோகம்?

லிபிய அதிபர் மும்மார் கடாஃபி ஒரு சர்வாதிகாரி என்பதிலும், அவரது ஆட்சி பொற்கால ஆட்சியொன்றும் அல்ல என்பதிலும் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. அதேநேரத்தில், உலக சர்வாதிகாரிகளில் மிகவும் மோசமான சர்வாதிகாரி என்றோ, ஏனைய ஆட்சியாளர்களைவிட அவரது தலைமையிலான ஆட்சி மோசமானதென்றோ வர்ணிக்கவும் முடியாது என்பதுதான் நிஜம்.


லிபிய அரசியலையும், லிபியாவின் கடந்த நூற்றாண்டு சரித்திரத்தையும் புரிந்து கொள்ளாமல் எழுதும் பல மேலைநாட்டுப் பத்திரிகைகளும், கடாஃபியை ஒரு கொடுங்கோலனாக வர்ணிப்பதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்த முயலும் தொலைக்காட்சிச் சேனல்களும், குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதுபோல லிபியாவில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தைப் பயன்படுத்தி அந்த நாட்டின் எண்ணெய் வளத்துக்குக் குறிவைக்கும் ஏகாதிபத்திய சக்திகளும், பிரச்னையை வளர்க்க முயற்சிக்கின்றனவே தவிர, முறையான தீர்வுக்கு வித்திடவில்லை என்பதை யாருமே சொல்லத் தயாராக இல்லை. இதற்குக் காரணம், அதிபர் மும்மார் கடாஃபியை வீழ்த்தியாக வேண்டும் என்று மேலைநாடுகள் கடந்த 30 ஆண்டுகளாகவே திட்டமிட்டு வருவதுதான்.


உலக எண்ணெய் வளத்தில் 2% லிபியாவில்தான் கிடைக்கிறது. இன்னும் பல எண்ணெய்க் கிணறுகள் கண்டுபிடிக்கப்படக் கூடும் என்பதுதான் எதிர்பார்ப்பு. ஆனால், எல்லா எண்ணெய்க் கிணறுகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தாமல், நீண்ட காலத்துக்கு லிபியாவின் எண்ணெய் வளத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற அதிபர் மும்மார் கடாஃபியின் பிடிவாதம், அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகளுக்கு எரிச்சல் ஊட்டுவதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?

ஹேக்கிங் என்றால் என்ன?

இணையத்தை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால் “ஹேக்கிங்” (Hack) என்ற வார்த்தை அறியாமல் இருக்க மாட்டீர்கள் அப்படி நீங்கள் இதை தெரிந்து இருக்கவில்லை என்றால் இணையத்தை பயன்படுத்த போதுமான அறிவை நீங்கள் இன்னும் பெறவில்லை என்பதே நிஜம். எனவே ஹேக்கிங் பற்றி தெரியாதவர்களும் தெரிந்தவர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டிய இடுகை இதுவாகும்.

ஹேக்கிங் என்றால் என்ன?
உங்களை அறியாமல் உங்கள் மூலமாகவே அல்லது உங்களுக்குத் தெரியாமல் உங்கள் மின்னஞ்சல், வங்கி மற்றும் பல இணையக் கணக்குகளின் கடவுச்சொல்லை (Password) திருடுவதே ஹேக்கிங் ஆகும்.

எதற்கு இதை செய்கிறார்கள்?
ஒரு சிலர் இதை பொழுதுபோக்காக செய்கிறார்கள், இன்னும் ஒரு சிலர் தங்களுக்கு பிடிக்காதவர்களின் கணக்கை முடக்க செய்கிறார்கள். ஒரு சிலர் பணத்துக்காக செய்கிறார்கள் அதாவது நீங்கள் பணம் கொடுத்தால் அவர்கள் நீங்கள் கூறும் கணக்கை ஹேக் செய்து கொடுத்து விடுவார்கள். இன்னும் ஒரு சிலர் மற்றவர்களின் வங்கிக்கணக்கை ஆட்டையை போட்டு பட்டை நாமம் சாத்தி விடுவார்கள்.

ஆழ்கடலில் அலைகளும்! இருள்களும்!!

கடந்த வெள்ளியன்று ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 1800 ஆக அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கானோரை தேடும் பணியும் நடைபெற்று வருவதாலும், தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதாலும் பலி எண்ணிக்கை மேலும் உயர கூடும் என அஞ்சப்படுகிறது. ஜப்பானில் உலக நாடுகளின் படைகள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த தருனத்தில் சுனாமி பற்றி இஸ்லாம் என்ன கூறுகின்றது என்று பார்போம்..

அல்லாஹ் தன்னுடைய வேவதத்தில் 24:40 திரு குர்ஆன் வசனத்தில் கடலைப் பற்றிக் குறிப்பிடும் போது ஆழ் கடலில் இருள்களும், அலைகளும் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இவ்விரண்டும் மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பை உள்ளடக்கி நிற்கின்றன.

ஒருவன் கடலுக்குள் மூழ்கும் போது ஆழம் செல்லச் செல்ல இருள்கள் அதிகரித்துக் கொண்டே சென்று முடிவில் தன் கையையே கண் முன்னால் கொண்டு வந்தால் அதை அவனால் காண முடியாத அளவுக்குக் கடுமையான இருள்கள் இருக்கும் என்று இவ்வசனம் கூறுகின்றது.

10 தொகுதிகளில் தனித்துப் போட்டி - எஸ்.டி.பி.ஐ

சென்னை துறைமுகம் உட்பட 10 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. தனித்துப் போட்டிடப் போவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. அதன்படி தனித்துப் போட்டியிடும் தொகுதிகளில் முதல்கட்டமாக ஆறு தொகுதிகளை எஸ்.டி.பி.ஐ. அறிவித்துள்ளது

இதுக்குறித்து அக்கட்சின் தலைவர் தெஹ்லான் பாகவி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது; "முஸ்லிம்களுக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு, வக்புவாரிய சொத்துக்களை முறைப்படுத்துவது, உலமா நலவாரியத்திற்கு அதிக நிதிகளை ஒதுக்குவது போன்ற கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட கட்சிகள் சரியான முறையில் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால், எஸ்.டி.பி.ஐ.-ன் மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி எஸ்.டி.பி.ஐ. 10 தொகுதிகளில் தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ளது.

மார்ச் 11, 2011

ஓர் வஃபாத் செய்தி!

நமதூர் பள்ளிவாசல் தெரு மர்ஹூம் மெளலவி இனாயத்துல்லாஹ் அவர்களின் மகள் ராபியத்துல் பஷிரியா அவர்கள் இன்று காலை தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கொள்ளுமேடுXpress இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

மார்ச் 10, 2011

"இஸ்லாமிற்கு வழிகாட்டியது பைபிள்"

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

சகோதரர் யூஸா எவன்ஸ் (Yusha Evans), இருபத்தொன்பது வயது இளைஞரான இவர், இஸ்லாத்திற்கு வந்த கடந்த பனிரெண்டு வருடங்களில் செய்த பணிகள் இன்றியமையாதவை. மாதம் இருவராவது இவரது தாவாஹ் பணியால் இஸ்லாத்தை தழுவி வருகிறார்கள். பல்கலைக்கழகங்களால் விரும்பி அழைக்கப்படும் நபர்களில் ஒருவராய் இருக்கிறார்.

இன்றைய இளைய தலைமுறை முஸ்லிம்களுக்கு பெரும் உத்வேகமாய் இருக்கக்கூடிய இவர் மனோதத்துவம் பயின்றவர். இவர் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கலிபோர்னியாவில் "How the Bible Led me to Islam" என்ற தலைப்பில் தான் இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி கூறிய கருத்துக்கள் இங்கே உங்கள் பார்வைக்காக.

அந்த சொற்பொழிவு சுமார் ஒன்றரை மணி நேர ஒன்று. முழுவதுமாக இங்கே எழுதினால் மிக நீண்ட பதிவாகிவிடும் என்பதால் சில விஷயங்கள் விடப்படுகின்றன.

ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!

சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகத்தின் பெரிய நகரங்களில் தனியார் செல்போன் சிம்கார்டு உபயோகிப்பவர்களின் செல்போனில் “வாய்ஸ் சாட்” என்ற பெயரில் மனம் விட்டு பேசலாம் என்று பெண்களின் பெயரில் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) வருவது கடந்த 1 வருடமாக வாடிக்கையாக இருந்து வருகிறது.

கோவையில் பெரும்பாலான செல்போன் உபயோகிப்பவர்களுக்கு இதுபோன்ற எஸ்.எம்.எஸ்.க்கள் அதிக அளவில் வரத்தொடங்கியது. "நீங்கள் ஸ்பைசி சாட்டுக்காக பொண்ணு பார்த்துக் கொண்டே இருக்கீங்களா எல்லாவற்றையும் பற்றி மனம் விட்டு பேச, உங்களுடைய லைப் ரொம்ப இன்ட்ரஸ்டிங்காக மாற கால் பண்ணுங்க. பல்லவி, சுமா, மாலதி ஆகியோர் உங்கள் போனுக்கு காத்திருக்கிறார்கள்." இப்படி தான் அந்த எஸ்.எம்.எஸ்.சில் கூறப்பட்டிருந்தது.

சில நேரங்களில் இது போன்ற குறுந்தகவல்கள் திருமணமானவர்களின் வீடுகளில் வீண் பிரச்சினைகளைக் கூட உருவாக்கியது. இதனால் ஏராளமானவர்கள் கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் புகார் செய்தனர்.

காட்டுமன்னார்கோவிலை கைப்பற்ற வி.சி.,- தே.மு.தி.க., பகீரத முயற்சி

காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதியில் சீட் பெற தி.மு.க., கூட்டணியில் வி.சி.,யும், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வும் பகீரத முயற்சியில் இறங்கியுள்ளன.காட்டுமன்னார்கோவில் தொகுதியை பொறுத் தவரை தலித் பெரும்பான்மை உள்ள தனி தொகுதியாக விளங்கி வருகிறது. இத்தொகுதியில் இதுவரை நடந்த 11 சட்டசபை தேர்தல்களில் 6 முறை தி.மு.க.,வும், இரு முறை காங்., கட்சியும், அ.தி. மு.க., - வி.சி., தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 2006 சட்டசபை தேர்தலில் அ.தி. மு.க., கூட்டணி சார்பில் வி.சி., வேட்பாளராக களம் இறங்கிய ரவிக்குமார் வெற்றி பெற்றார். தொடர்ந்து இரண்டு முறை எம்.எல்.ஏ., வாக இருந்த வள்ளல்பெருமானை பார்த்து பழகிய மக்கள் புதிய முகமாக தெரிந்த ரவிக்குமாரை தேர்ந்தெடுத்தனர்.ஆனால் இன்றைய சூழ்நிலையில் சிட்டிங் எம்.எல்.ஏ., ரவிக்குமாரால் அதிருப்தியடைந்த வி.சி., தொண்டர்கள், தொகுதி மக்கள், வள்ளல்பெருமானே தேவலாம் என்ற விரக்திக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எப்போதாவது இவர் தொகுதிப் பக்கம் வந்தால் கட்சியினருக்குள் பிரச்னை ஏற்பட்டு விடுகிறது. இதனால் இந்த முறை வி.சி., கட்சியில் புதிய வேட்பாளர் போட்டியிட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும் என வி.சி., கட்சியினரே தெரிவிக்கின்றனர். ஆனால் தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் வி.சி., சிட்டிங் எம்.எல்.ஏ., ரவிக்குமார் அமைச்சர் பன்னீர்செல்வம் ஆதரவோடு மீண்டும் போட்டியிட முயற்சிக்கிறார்.

ஆனால் ரவிக்குமார் மீண்டும் போட்டியிட்டால் கண்டிப்பாக தோற்கடிப்போம் என வி.சி., தொண்டர்களே சவால் விடுகின்றனர்.தி.மு.க., கூட்டணி நிலைமை இப்படி இருக்க, அ.தி.மு.க.,வே தொகுதியில் போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது.ஆனால் தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தே.மு.தி.க., ஒற்றைக்காலில் நிற்பதாக கூறப்படுகிறது.

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு

மார்ச் 09, 2011

எந்த நாட்டுக்கு என்ன பொருள் தேவை?

வடகம், வத்தல், ஊறுகாய்… போன்றவை எல்லாம் நம் முன்னோர்களின் கண்டுபிடிப்பு. இவற்றுக் இப்போது சர்வதேச அளவில் விற்பனை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மாங்காய் ஊறுகாய், கொத்தமல்லி சட்னி… என்று விதம் விதமாக கேட்கிறார்கள்.

உலர வைக்கப்பட்ட காய்கறிகள் : ரஷ்யா, ஃபிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின்

மாம்பழச் சாறு : சவுதி அரேபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள்.

ஊறுகாய் மற்றும் சட்னி : ரஷ்யா, அமெரிக்கா, பெல்ஜியம், நெதர்லாந்து, ஃபிரான்ஸ்

பதப்படுத்தப்பட்ட பழங்கள் : அமெரிக்கா, நெதர்லாந்து, இங்கிலாந்து, சவுதி அரேபியா.

இந்தியாவின் கைமணம் கமழும் முறுக்கு, மிட்டாய், வெல்லம், கடலைமிட்டாய்… போன்றவற்றுக்கும் வெளிநாட்டில் ஏராளமான வாய்ப்பு உள்ளன.
கடலை மிட்டாய் : இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர்

கண்டுபிடிப்புகளின் தந்தை தாமஸ் ஆல்வா எடிசன்!

மாணவன் என்ற தளத்தில் படித்த கட்டுரை உங்கள் பார்வைக்கு..


Genius is
1% Inspiration and
99% perspiration
அதாவது மதிநுட்பம் என்பது 1 விழுக்காடு ஊக்கம் 99 விழுக்காடு வியர்வை என்ற புகழ்பெற்ற பொன்மொழியை கேள்விப்பட்டிருப்பீர்கள். நாம் தெரிந்துகொள்ள இருப்பவர் வேறு யாருமல்ல அந்த பொன்மொழியை கூறியவரும் வாழ்ந்துகாட்டியவருமான ஈடு இனையற்ற கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன்.

ஓர் ஏழை அமெரிக்க குடும்பத்தில் 1847 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ந்தேதி பிறந்தார் எடிசன். பள்ளியில் அவர் மந்தமாக இருந்த்தால் படிப்பி ஏறவில்லை ஆனால் இயற்கையிலேயே எதைப் பார்த்தாலும் ஏன்? எப்படி? என்று கேள்வி கேட்பதோடு ஆராய்ட்சி செய்து பார்க்கும் துறுதுறுப்பு அவரிடம் இருந்தது.

ஒருமுறை கோழி அடைகாத்து குஞ்சு பொறிப்பதை பார்த்து தானும் முட்டைகள் மேல் அமர்ந்து குஞ்சு பிறக்குமா? என்று முயன்று பார்த்திருக்கிறார் எடிசன். நமக்கு நகைப்பாக இருக்கலாம். ஆனால் பிஞ்சு வயதிலேயே கேள்வி கேட்கும் அவரின் செயல்பாடுகள்தான் பிற்காலத்தில் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்த அவருக்கு உதவியது.

ஆரம்பித்திலேயே எடிசன் பள்ளியைவிட்டு வெளியேறியதால் அவர் இரயில் வண்டியில் செய்த்தித்தாள் விற்கும் வேலை பார்க்கத்தொடங்கினார். அங்கும்கூட அவர் ஒரு ரயில்பெட்டியில் ஒரு சிறு அச்சு இயந்திரத்தை வைத்து தானே செய்தித்தாள்களை தயாரிக்கத் தொடங்கினார். மேலும் இரயில் வண்டியின் ஒரு சிறிய ஆராய்ட்சி கூடத்தை உருவாக்கி நேரம் கிடைக்கும்போதெல்லாம் வெவ்வேறு ஆராய்ட்சிகளை செய்துபார்ப்பார்.

மார்ச் 08, 2011

கொள்ளுமேடு ஜமாஅத் நிர்வாகிகள் தேர்வு


கொள்ளுமேடு தவ்ஹீத் பள்ளியின் நிர்வாகிகள் தேர்வு நேற்று நடைப்பெற்றது,இதில் நமதூர் பக்கிர் முஹம்மது அவர்கள் கொள்ளுமேடு ஜமாஅத் தலைவராக தேந்தெடுக்கப்பட்டார். மேலும்

முஹம்மது தல்ஹா அவர்கள் ஜமாஅத் செயலாளராகவும்

அப்துர்ரஹ்மான் (கிராம சபை உறுப்பினர்) அவர்கள் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.ஜமாத்தை ஒருங்கிணைக்கும் பொருட்டு ஜமாஅத் கமிட்டி நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்,அவர்களின் விபரம்

முஹம்மது இஸ்மாயில்

சபிக்குர்ரஹ்மான் (ஆசிரியர்)

உமர்ஹத்தாப்

அப்துல்வதூது

முஹம்மது ரஜ்வி

முஹம்மது சலீம்

முஹம்மது அன்சாரி

நிஹ்மத்துல்லாஹ்.

முஹம்மது ஆசிக்

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். (திருக்குர்ஆன். 3:104) என்ற அல்லாஹ்வின் வார்த்தையை முழுமைப்படுத்தும் விதத்தில் நம்முடைய ஜமா அத் செயல்பட எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றோம்.

செய்தி:அபுல் மல்ஹர்

ஹஜ் புனித யாத்ரீகர்களுக்கு வசதிகளை பெருக்குமாறு எம்.பிக்கள் கோரிக்கை

ஹஜ் புனிதயாத்திரைக்கு மானியங்களை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக ஹாஜிகளுக்கு குறைந்த் பயணக் கட்டணம், விசாலமான வசதிகள் ஆகியவற்றை ஏற்பாடுச்செய்ய விமான நிறுவனங்களுடன் நீண்டகால ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டுமென முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இந்தியாவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஹஜ்ஜிற்கு செல்லும் புனித யாத்ரீகர்களுக்கு சவூதி அரேபியாவில் உயர்ந்த தங்குமிட வசதிகளை செய்வது, ஹாஜிகளுக்கு அளிக்கும் தற்காலிக பாஸ்போர்ட் நிரந்தரமாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளையும் முஸ்லிம் எம்.பிக்கள் முன்வைத்துள்ளனர்.

தொகுதி ஒதுக்குவதில் தலைவலியை தரும் "கடலூர் மாவட்டம்'

கடலூர் மாவட்டத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்குவதில் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.கடலூர் மாவட்டத்தில் 9 சட்டசபை தொகுதிகளில் கடந்த தேர்தலில் தி.மு.க., மூன்று தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான பா.ம.க., ஒரு தொகுதியிலும், அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தை கட்சி தலா இரண்டு தொகுதிகளிலும், தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க., ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.

கடந்தமுறை தி.மு.க., அணியில் இருந்த கம்யூ., கட்சிகள் அ.தி.மு.க.,வுடனும், அங்கிருந்த வி.சி., தி.மு.க., அணிக்கு மாறியுள்ளன. மேலும், தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க., அ.தி.மு.க., அணியில் சேர்ந்துள்ளது.மாவட்டத்தில் தி.மு.க.,- அ.தி.மு.க., சமபலத்தில் உள்ள நிலையில், கணிசமான ஓட்டு வங்கியை வைத்துள்ள பா.ம.க., மற்றும் வி.சி., கட்சியும் இணைந்துள்ளதால் தி.மு.க.,விற்கும், தே.மு.தி.க., வரவால் அ.தி.மு.க.,விற்கும் கூடுதல் பலத்தை ஏற்படுத்தியுள்ளது.

மார்ச் 07, 2011

கியாமத் நாள் எப்படி சாத்தியமாகும்?

‘அவ்வாறன்று, அவர்கள் சீக்கிரமே அறிந்து கொள்வார்கள். மேலும் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்’. (அல்குர்ஆன் 78:4-5)
அவர்கள் எதைப்பற்றி வினா எழுப்புகின்றனர்? அவர்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனரோ அந்த மகத்தான செய்தியைப் பற்றியா (வினா எழுப்புகின்றனர்?) அவ்வாறன்று! அவர்கள் இனிமேல் அறிந்து கொள்வார்கள். மேலும் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்.

நபி (ஸல்) காலத்து மக்கள் மறுமை நாளைப்பற்றி ஐயம் கொண்டிருந்தனர். அதுபற்றி அடிக்கடி கேள்விகள் எழுப்பி வந்தனர்.
1. அந்த நாள் எப்போது வரும்?
2. அது எப்படி சாத்தியமாகும்?
3. அப்படி என்ன தான் அந்த நாளில் நடந்து விடும்?
இவையே அவர்களின் கேள்விகள். இம்மூன்று கேள்விகளில் முதல் கேள்விக்கு இறைவன் அளித்த விடையை இதுவரை கண்டோம். ‘அதை பின்னர் அறிந்து கொள்வார்கள்’ என்று கூறி அது எப்போது வருமென்பதை தன்னைத் தவிர வேறெவரும் அறிய முடியாது என்று விளக்கினான்.

இரண்டாவது கேள்வி
மனிதன் மரணித்து மண்ணோடு மண்ணாகி விடுகிறான். அவனது எலும்புகள் உட்பட அனைத்தும் அழிந்து பின்னர் அவன் எப்படித் திரும்பவும் உயிர் கொடுக்கப்பட்டு எழுப்பப்படுவான்? இதை எங்களால் நம்ப முடியவில்லையே? மறுமை நாள் குறித்து அவர்கள் எழுப்பிய இரண்டாவது கேள்வி இது!
இவ்வாறு அவர்கள் கேள்வி எழுப்பியதைத் திருக்குர்ஆன் பல இடங்களில் சுட்டிக்காட்டுகின்றது.

மக்கிய இந்த எலும்புகளை யாரால் உயிர்ப்பிக்க இயலும்? என்று மனிதன் கேட்கிறான். (அல்குர்ஆன் 37:78)

SMS மூலம் உள்ளூர் ரயில் டிக்கெட் அறிமுகம்!

மும்பையில் உள்ளூர் மின்சார ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் தங்களது மொபைல் போனில் பட்டனை தட்டினால் போதும்; ரயில் டிக்கெட் மொபைலுக்கு வந்து விடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது


மும்பையில் வேலைக்கு செல்பவர்களில் பெரும்பாலானோர், உள்ளூர் மின்சார ரயில்களையே நம்பியுள்ளனர். இவர்கள் இனி, தினமும் வரிசையில் நின்று, டிக்கெட்' எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது எந்த ரயில் நிலையத்தில் இருந்து எந்த ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்பதை, மொபைல் போனில் எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பினால் போதும். டிக்கெட் தொடர்பான தகவல்கள், மொபைல் போனில் உடனடியாக கிடைத்து விடும்.

அதை அவைத்துக்கொண்டு ரயிலில் பயணம் செய்யலாம். இதற்கான கட்டணம், மொபைல் போன், "சிம்'மின், "போஸ்ட் பெய்டு' அல்லது "பிரீ பெய்டு' கட்டணத்தில் கழிக்கப்படும். ஆனாலும் சில சிக்கல்கள் இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். ஒன்று, டிக்கெட் புக் செய்ய, சிறப்பு அம்சங்கள் கொண்ட மொபைல் போன், பயணிகளுக்கு தேவைப்படும். இரண்டு, எவ்வாறு கட்டண பரிவர்த்தனையை மேற்கொள்வது என்பதில் குழப்பம் ஏற்படும்.

அசத்தியது இந்தியா:ஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

 எதிரி ஏவுகணையை இடைமறித்து அழிக்கும் திறன் வாய்ந்த அதிநவீன ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது.

ஒரிசாவின் வீலர் தீவில் ஒருங்கிணைந்த பரிசோதனை மையத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இந்த பரிசோதனை வெற்றிகரமாக இருந்ததாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. துல்லியமான, விருப்பமான முடிவை எட்டும் நோக்கில் இந்த சோதனை நடைபெற்றது.

முதலில் மேம்படுத்தப்பட்ட பிருத்வி ஏவுகணை சண்டிப்பூர் கடற்கரைப் பகுதியில் இருந்து காலை 9.33 மணிக்கு நடமாடும் ஏவுவாகனம் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

மார்ச் 06, 2011

லிபியாவில் தீவிரமடையும் கலவரம்!

லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிரான பொதுமக்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வெள்ளிக்கிழமையான நேற்று காலை திரிபோலி மாவட்டத்தில் தஜோரா என்ற இடத்தில் உள்ள மசூதியில் தொழுகை நடந்தது. தொழுகை முடிந்ததும் சுமார் 1500 பொதுமக்கள் தலைநகர் திரிபோலியை நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

எகிப்து கொடிகளையும், அதிபர் கடாபிக்கு எதிரான பேனர்களையும் ஏந்தியபடி வந்தனர். அதிபர் கடாபி ஆட்சியை விட்டு விலகு என்ற கோஷங்களை எழுப்பினர்.

அவர்களது பேரணி போராட்டம் நடைபெறும் சதுக்கத்தை நெருங்கியது. அப்போது, “கடாபி ஒழிக” தஜோரா உங்களுக்கு சவக்குழி தோண்டும் என்று சுவர்களில் எழுதினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது ராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குல் நடத்தினர்.

எங்கே செல்கிறது இந்தியா?

புதுடில்லி : காங். எம்.பி. கன்வர் மகன் லலித் தன்வர் மற்றும் டில்லியை சேர்ந்த முன்னாள் எம்.பி.யின் மகளான யோகிதாவிற்கும், டில்லியில் உள்ள ராஜஸ்தான் பேலஸ்சில் 14மில்லியன் பவுண்டு செலவில் நடந்த இந்த திருமணம் மிகவும் சாதாரணமாக நடந்ததாக சொல்லப்படுகிறது.

திருமண பரிசாக 429 ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திருமண நிச்சயதார்த்தில் கலந்து கொண்டவர்களுக்கு, சில்வர் பிஸ்கட், சபாரி ஆடைகள் மற்றும் ஐயாயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய 100 டிஷ்கள் மற்றும் 12 டிஜிட்டல் ஸ்கிரீன்கள் பயன்படுத்தப்பட்டன. மணமகன் அலங்காரம் செய்தவருக்கு ஐயாயிரத்து ஐந்நூறு டாலர் பணம் தரப்பட்டது.

ஒருவார காலம் நடந்த திருமண நிகழ்ச்சியில் அரசியல் முக்கிய தலைவர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் உள்பட 18 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் உணவு தயாரித்தனர். மொத்த திருமண செலவு 55 மில்லியன் டாலர்களை தாண்டும் எனவும், இதுவரை எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என கணக்கீட முடியவில்லை என மணமகனின் மேலாளர் தெரிவித்துள்ளார். வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் இன்று கலந்து கொள்கிறார்.

இந்நிலையில், இந்தியா ஏழைநாடு என்ற முறையில், இங்கிலாந்தில் இருந்து தரப்படும் 280 மில்லியன் பவுண்டு வழங்கி வரும் வேலையில், ஒரு திருமண நிகழ்ச்சிக்காக 14 மில்லியன் இங்கிலாந்து பவுண்டு செலவழிக்கப்பட்டது உலகளவில் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இதுபோன்று செல்வ செழிப்போடு திருமணங்கள் நடைபெறும் இந்தியாவிற்கு ஆண்டு தோறும் அளிக்கப்படும் நிதிஉதவி தேவைதானா என அந்தாட்டு எம்.பி.க்கள் கூறுவதாக பத்திரிகைகள் கருத்து தெரிவிக்கின்றன.

மார்ச் 05, 2011

துவேஷம் விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்…!

வரலாறு அபாயகரமானது. பிசாசாக உருமாறி மக்களை ஆட்கொண்டு ஆட்டிப்படைப்பது. நம் நாட்டின் வரலாறு என்னும் பெயரில் எழுதப்பட்டிருப்பது, பரப்பப்படுவது பெரும்பாலும்கடந்த காலத்தின் உண்மையான சித்தரிப்பு அல்ல. எழுதுபவர்களின் கண்ணோட்டத்திற்கு ஏற்ப, அவர்களது குறுகிய சாதி, சமய, அரசியல் தேவைகளுக்கு ஏற்றவண்ணம் திரித்து, மறைத்து, கூட்டிக்கழித்து எழுதப்பட்டிருப்பது. சமுதாயப் பொறுப்புணர்வு இல்லாமல், தங்கள் துவேஷங்களையே வண்ணக் கலவையாக்கி வரலாற்றைத் தீட்டியிருக்கிறார்கள் பல மேதாவிகள்.

‘நம் நாட்டில் இந்துக்களும் முஸ்லிம்களும் இருவேறுபட்ட இனங்கள், வேறுபட்ட கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள்… அவர்களிடையே பாலமிட முடியாத பிளவுகள் காலங்காலமாக இருந்திருக்கின்றன…’ என்பவை போன்ற மதவாதக் கருத்துகள் இத்தகைய வக்கரித்த வரலாற்றின் வார்ப்புகள் தாம்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நம் நாட்டின் வரலாறு சொல்லொணாச் சிதைவுக்கு உள்ளாயிற்று. தங்கள் ஆதிக்கத்துக்கு உட்பட்ட மக்களைப் பிரித்தாளும் ராஜதந்திரத்தின் அற்புதக் கருவியாக வரலாற்றை ஆங்கிலேயர் பயன்படுத்தினர். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மகோன்னதத்தை வலியுறுத்த, அதற்கு முன்னர் முஸ்லிம்கள் ஆண்ட காலத்தை இருண்டகாலமாகச் சித்தரித்தனர். முஸ்லிம் மன்னர்களைக் கொடுங்கோலர்கள் என்றும் கொள்ளைக்காரர்கள் என்றும் மதவெறியர்கள் என்றும் இந்தியக் கலாச்சாரத்தைச் சீரழித்தவர்களென்றும் காட்டி, அவர்களது கொடிய ஆதிக்கத்திலிருந்து இந்துக்களை மீட்கவந்த ரட்சகர்களாகவும் கருணா மூர்த்திகளாகவும் தங்களைச் சித்தரித்துத் தங்கள் ஆதிக்கத்தை நியாயப் படுத்தினர். திட்டமிட்டு, நாசூக்காக வரலாற்றில் விஷத்தைக் கலந்தனர்.

கேன்சரை எதிர்க்கும் கேரட்

காரட் சாப்பிடுவதால் நம்முடைய உடலில் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் உருவாகிறது என்பது தெரிந்த செய்திதான். ஆனால் காரட்டில் உள்ள எந்த பகுதி புற்றுநோய் கட்டிகளை அழிக்கிறது என்பது இப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இங்கிலாந்திலும், டென்மார்க்கிலும் உள்ள நியூகாஸில் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுபற்றிய ஆராய்ச்சிகளை எலிகளைக் கொண்டு செய்துவருகிறார்கள். எலிகளில் காணப்படும் புற்றுநோய்க்கட்டிகள் மூன்றில் ஒருபங்காக குறைவது எதனால் என்பதற்கான விடை இப்போது கிடைத்திருக்கிறது.

காரட்களை சேமிக்கும்போது வேர்ப்பகுதிகளில் கறுப்பு நிற புள்ளிகள் தோன்றி அழுகல் தொடங்கி விடுகிறது. இந்த நோய்க்கு liquorice rot என்று பெயர். இந்த நோயை ஒழிக்க Falcarinol எனப்படும் இயற்கையான பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பூச்சிக்கொல்லிக்கு புற்றுநோய்க்கட்டிகள் வளர்ச்சியடைவதை கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகள்

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 1,165 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவைகளாக அறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் புதன்கிழமை தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில்
திட்டக்குடி (தனி) தொகுதியில் 90,
விருத்தாசலம் தொகுதியில் 139,
நெய்வேலி தொகுதியில் 109,
பண்ருட்டி தொகுதியில் 160,
கடலூர் தொகுதியில் 73,
குறிஞ்சிப்பாடி தொகுதியில் 167,
புவனகிரி தொகுதியில் 188,
சிதம்பரம் தொகுதியில் 101,
காட்டுமன்னார்கோயில் (தனி) தொகுதியில் 144
ஆக மொத்தம் 1,165 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவைகளாகக் கருதப்படுகின்றன.

மார்ச் 02, 2011

அறுவடை பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை : விவசாயிகள் கடும் பாதிப்பு

சேத்தியாத்தோப்பு : நெல் அறுவடை மற்றும் கரும்பு வெட்ட தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக விவசாய பணிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. நாட்டின் முதுகெலும்பான விவசாயம் முழுக்க, முழுக்க தொழிலாளர்களை மட்டுமே நம்பியுள்ளது. என்னதான் நவீன ரக இயந்திரங்கள், தொழில் நுட்பங்கள் வேளாண் துறையில் பயன்படுத்தப்பட்டாலும் தொழிலாளர்கள் இல்லாமல் விவசாயம் இல்லை என்பது தான் உண்மை.

இந்நிலையில் இந்த ஆண்டு சம்பா பருவ அறுவடை, கரும்பு வெட்டும் பணி ஆகியவற்றிற்கு தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக அறுவடை பணிகள் பாதிப்பிற்குள்ளானது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை சம்பளம் பெற்று வந்த விவசாய தொழிலாளர்களை தற்போது வேலைக்கு அழைத்தால் அவர்கள் விதிக்கும் நிபந்தனைகள் விவசாயிகளை திக்கு முக்காட வைக்கிறது. நாள் ஒன்றுக்கு 150 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை சம்பளம், காலை 11 மணிக்கு 2 பன்னுடன் டீ, மதியம் 3 மணிக்கு 2 வடை, 2 பஜ்ஜி, 2 போன்டா இவற்றில் ஏதாவது ஒன்றும் டீயும் அவசியம் வாங்கித் தர வேண்டும். இதைவிட முக்கியமாக சம்பளத்தை வேண்டுமானாலும் மறுதினம் கொடுக்கலாம். அவசியமாக 70 ரூபாய் மதிப்புள்ள குவாட்டர் பாட்டில் கண்டிப்பாக வாங்கித்தர வேண்டும்.

யுஏஇ-யில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை!

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்கு அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் பணி துவங்கி உள்ளது. இதன் ஒரு கட்டமாக அமீரகத்தில் வாழும் இந்திய மக்கள் அங்குள்ள தூதரக இணையதளத்தில் விண்ணபித்து கொள்ள வேண்டும். அதில் அவர்களது விசா எண், முடிவடையும் காலம், பாஸ்போர்ட் எண் மற்றும் முடிவடையும் தேதி, முகவரி, செல்பேசி எண், இந்திய முகவரி போன்ற சில தகவல்கள் கொடுக்க வேண்டும். பின்னர் மின்னஞ்சலுக்கு மற்ற விவரங்கள் வரும். அடையாள அட்டை இந்திய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இதுவரை இதில் பதிவு செய்யாதவர்கள் உடனே இதை பயன்படுத்தி கொள்ளவும்.


http://uaeindians.org/registration.aspx
- பாலைவனத் தூது

IAS, IPS படிக்க Civil Services தேர்வு கனவை நினைவாக்க களம் இறங்குங்கள் மாணவர்களே!

இந்தியாவை நிர்வகிக்கும் முக்கிய பதிவிகளுக்குக்கான நுழைவு தேர்வை
மத்திய அரசின் UPSC வருட வருடம் நடத்தி வருகின்றது. மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்), சுங்கத்துறை, வெளியுறவு துறை உட்பட 24 அரசு உயர் பதவிகளுக்கான (IAS, IPS, IFS etc...) முதல் கட்ட நுழைவு தேர்வு Civil Services Preliminary Examination 2011 விண்ணப்பம் தற்போது வினியோகிக்கப்பட்டு வருகின்றன. தேர்வை பற்றிய முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவையே நிர்வகிக்கும் முக்கிய அரசு பதவிகளுக்கான தேர்வு என்றும் இதை சொல்லலாம். முஸ்லீம்கள் ஒடுக்கப்படுவதற்க்கும், உரிமைகள் நசுக்கப்படுவதர்க்கும் இது போன்ற மாவட்ட ஆட்சியர், காவல் துறை ஆணையர், கண்கானிப்பாளர் போன்ற பணிகளில் முஸ்லீம்கள் இல்லாததே (அல்லது மிக குறைவாக இருப்பதே) காரணம். இந்த
தேர்வை எழுதி வெற்றி பெறுவதன் மூலம் நாமும் மாவட்ட ஆட்சியராகவும், காவல் துறை ஆணையராகவும், உள்துறை, உளவுத்துறை என இந்தியாவின் முக்கிய அதிகார பொருப்புகளில் அமர முடியும். இந்த தேர்விற்க்கான கட்டணம் வெரும் ரூ.70 தான். இப்படி அதி முக்கியதுவம் வாய்ந்த இந்த தேர்வை எழுதும் முஸ்லீம்களின் எண்ணிக்கை மிக குறைவு.

முஸ்லீம் சமூகத்தை பாதுகாக்க களம் இறங்குங்கள் மாணவர்களே!

இது வெறும் தேர்வு அல்லது வேலை மட்டும் அல்ல, இந்த பணிகளில் நாம் சேர்ந்தால்தான் நமது சமுதாயத்திற்க்கு பாதுகாப்பு அளிக்க முடியும்,
குஜராத்திலும், கோவையிலும் இன்னும் இந்தியாவின் பல்வேறு பகுதியிலும் முஸ்லீம்களுக்கு எதிரான கோர தாக்குதலுக்கு இந்த துறைகளில் நாம் இல்லாததே (அல்லது மிக குறைவாக இருப்பதே) காரணம். சமுதாய முன்னேற்றத்திற்க்கும், பாதுகாப்பிற்க்கும் இது போன்ற தேர்வுகளில் நமது சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் தேர்சி பெற வேண்டும், தேர்சி பெற்று இது போன்ற பதவிகளில் அமருவதின் மூலமே நமது பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். இன்னும் எத்தனை காலம் தான் நாம் ஆர்பட்டம் போராட்டம் என்று வாழ்வது, நமது உரிமையை மீட்க,
சமுதாயாத்திற்க்கு பாதுகாப்பு வழங்க நாமும் மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்), காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்) ஆகுவோம் வாருங்கள்.

மார்ச் 01, 2011

ஏப்ரல் 13ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல்! இன்று முதல் தேர்தல் நடைமுறை அமல்!

புதுடில்லி: வரும் ஏப்ரல் 13ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என டில்லியில் தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் சட்டசபை தேர்தலை சந்திக்கிறது. இத்தேர்தலுக்கான தேதி விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்திற்கான சட்டசபை காலம் மே 16 ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இங்கு தேர்தல் நடத்துவதற்கான வாக்காளர் பட்டியல், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் மின்னனு இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து முன்ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. தேர்தல் பணி தொடர்பாக தேர்தல் கமிஷன் பல முறை ஆய்வு கூட்டங்களை நடத்தி ஏற்பாடுகள் முடிந்து ஓட்டுப்பதிவுக்கு தயாராக இருப்பதாக தமிழக தேர்தல் கமிஷன் அறிவித்தது.

இந்நிலையில் டில்லியில் தலைமை தேர்தல் கமிஷன் குரேஷி தலைமையில் இன்று தேர்தல் நடத்தும் நாள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் தேர்தல் கமிஷனர் குரேஷி தேர்தல் நடக்கும் நாள் விவரத்தை அறிவித்தார். இதன்படி தமிழகத்தில் வரும் ஏப்ரல் 13ம்தேதி தேர்தல் நடக்கிறது.

Source:dinamalar