இந்தியா பன்முகத் தன்மை கொண்ட ஒரு நாடு. பல்வேறு மத நம்பிக்கைகளைப் பின்பற்றுகிற, பல்வேறு மொழிகளைப் பேசுகிற பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் காலம் காலமாக இந்தியாவில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.
மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை என்பது இந்திய விடுதலைப் போரின்போது மகத்தான விழுமியங்களாக மேலெழுந்தது. சுதந்திர இந்தியா மதச்சார்பின்மை எனும் மகத்தான அடித்தளத்தின் மீது கட்டப்பட்டது. மதச்சார்பின்மை என்பது மேல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கருத்தாக்கம் அல்ல. நமது நாட்டில் மகத்தான மரபுகளில் ஒன்று அது.ஆனால் இன்று அவை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டு வருகின்றது அதற்கு ஒரு உதாரணமாக காந்தி பிறந்த குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ் தயாரித்த நூல்கள் வதோதராவில் உள்ள பள்ளிக்கூடங்களில் பாடப்புத்தகங்களாக சேர்க்கப்பட்டுள்ளன.
குஜராத் மாநிலம் வதோதராவில் மாநகராட்சி நடத்தும் 105 ஆரம்ப பள்ளிக்கூடங்களில் ஆர்.எஸ்.எஸ்ஸின் கல்வி பிரிவான வித்யாபாரதி அகில பாரதீய சிக்ஷா சன்ஸ்தான் தயாரித்துள்ள நூல்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. 1 ஆம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் இவ்வாண்டு முதல் ஆர்.எஸ்.எஸ் தயாரித்த புத்தகங்கள் படித்துக் கொடுக்கப்படும். ஜீவன் விகாஸ் போதி எனப்பெயரிடப்பட்டுள்ள புத்தகங்களில்
யோகா, சனாதன கலாச்சாரம், வேத கணிதம், சமஸ்கிருத ஸ்லோகங்கள் உள்ளிட்டவை அடங்கியுள்ளன. சங்கீத புத்தகங்களில் சரஸ்வதி, கணபதி, கிருஷ்ணா பஜனைகளும், சிவாஜி, ராணி லட்சுமிபாய், மஹாராணா பிரதாப் ஆகியோரை துதிக்கும் கீதங்களும் அடங்கியுள்ளன.
கிறிஸ்தவ மிஷனரிகளின் மதமாற்ற சாபத்தை தடுக்கவேண்டும் என்று இந்த புத்தகங்களுக்கான இணையதளம் கூறுகிறது. ஆர்.எஸ்.எஸ் ஸ்தாபகர் ஹெட்கோவர், 2-வது தலைவர் கோல்வால்கர் ஆகியோருக்கு புத்தகங்களில் முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் அனைத்துவிதமான வளர்ச்சியையும் நோக்கமாக கொண்டே புத்தகத்தை பாடத்திட்டத்தில் உட்படுத்தியதாக மாநகராட்சியில் பள்ளிக்கூட வாரிய தலைவர் கெயுர் ரோகாடியா தெரிவித்தார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...