கடந்த 2012–ம் ஆண்டில் ஜப்பானை சேர்ந்த ஒபயாசி கார்ப்பரேசன் என்ற கட்டுமான நிறுவனம் விண்வெளியில் கட்டிடம் கட்டி அங்கு சுற்றுலா பயணிகளை அழைத்து சென்று தங்க வைக்க போவதாக அறிவித்தது.
இன்னும் 40 ஆண்டுகளில் அதற்கான முயற்சியை மேற்கொண்டு திட்டத்தை நிறைவேற்ற போவதாக அறிவித்தது. இந்த நிலையில் ஜப்பான் ஷிம்சு என்ற மற்றொரு கட்டுமான நிறுவனம் கடலுக்கு அடியில் அதிநவீன நகரத்தை கட்ட போவதாக அறிவித்துள்ளது. 1500 அடி அகலத்தில் வட்டவடிவிலான கூண்டு அமைக்கப்படுகிறது. அதற்குள் வீடுகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் அமைக்கப்படுகின்றன. இங்கு 5 ஆயிரம் பேர் தங்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. இதற்கு அட்லாண்டிஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆழ்கடல் அதிநவீன நகரம் கட்ட ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவாகும் என
மதிப்பிடப்பட்டுள்ளது.
இது ஆழ்கடலில் 4 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் உருவாக்கப்பட உள்ளது. இது வருகிற 2030-ம் ஆண்டுக்குள் அதிநவீன தொழில் நுட்பத்துடன் கட்டப்படும் என ஷிம்சு கட்டுமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-source: viyappu

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...