கடலூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான போட்டி தேர்வை 37 ஆயிரம் பேர் நேற்று எழுதினார்கள்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கான போட்டி தேர்வு நேற்று நடத்தப்பட்டது. இத்தேர்வு எழுத கடலூர் மாவட்டத்தில் 47 ஆயிரத்து 929 பேர் விண்ணப்பித்திருந்தனர். இத்தேர்வுக்காக கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, பண்ருட்டி, திட்டக்குடி, விருத்தாசலம் ஆகிய இங்களில் 101 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. 10 ஆயிரம் பேர் வரவில்லை
இத்தேர்வு மையங்களில் நேற்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி மதியம் 1 மணிக்கு முடிவடைந்தது. தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தவர்களில் 10 ஆயிரத்து 218 பேர் தேர்வு எழுதவரவில்லை. இதனால் 37 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள். முன்னதாக தேர்வு
மையங்களை கலெக்டர் சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி மனோகரன், உதவி கலெக்டர் ஷர்மிளா மற்றும் பறக்கும் படையினர் பார்வையிட்டனர். தேர்வு மையங்களுக்கு எளிதில் வருவதற்காக கூடுதலாக பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்வு நடைபெறும் அனைத்து தேர்வு கூடங்களிலும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
-dailythanthi

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...