Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 29, 2012

வறண்டு கிடக்கும் வீராணம்: கலங்கி நிற்கும் விவசாயிகள்!!

கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரும் ஏரியான வீராணம் ஏரி முன்னெப்போதும் இல்லாத அளவில் வறண்டு கிடக்கிறது. இதனால் கடலூர் மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி சென்னைவாசிகளும் கலக்க மடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் வீராணம், பெருமாள், வாலாஜா, வெலிங்டன், சேத்தியாத்தோப்பு, மற்றும் நாரை ஏரி என 7 ஏரிகள் இருந்தபோதிலும் மிகப்பெரிய கொள்ளளவு கொண்டது வீராணம் ஏரி. இந்த ஏரியின் மொத்தப் பரப்பு கீழ்ப்புறம் 17 கி.மீ. மேல்புறம் 8 கி.மீ உள்ளது. இதன் நீர் கொள்ளளவு 1.44 டிஎம்சியாக இருந்தது. தற்போது 0.96 டிஎம்சி அளவு கொள்ளளவு உடையதாக மாறிவிட்டது.

வீராணம் ஏரியிலிருந்து 46 ஆயிரம் ஏக்கரில் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. இது மட்டுமில்லாமல் முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால் இந்த ஏரியிலிருந்து கடந்த 2004-ம் ஆண்டு முதல் சென்னைக்கு ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு தென்சென்னை பகுதியில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பருவமழை தொடங்கியதும் அவ்வப்போதும் பெய்யும் மழைகளாலும், மேட்டூர் அணை திறக்கப்படும்போதும் வீராணத்துக்கு நீர்வரத்து இருக்கும்.÷இந்த ஏரிக்கு முக்கிய நீர்வரத்து காவிரிநீர் மற்றும் அரியலூர் மாவட்டத்திலுள்ள சோழகங்கை எனும் பொன்னேரியின் உபரி நீராகும். இந்த ஆண்டு பருவமழை தவறியதாலும், மேட்டூர் திறக்கப்படாததாலும் வீராணம் ஏரி வறண்டு காட்சியளிக்கிறது. வீராணத்தை நம்பி விவசாயம் செய்துவரும் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய முடியாது என உறுதியாகிவிட்ட நிலையில் சம்பா பயிரிடலாம் என்றால் அதற்கும் வாய்ப்பு இல்லை என்கின்றனர். 

செப்டம்பர் 17-ல் மேட்டூர் அணையின் தண்ணீர் திறந்து, அது எப்போது வீராணத்தை வந்தடைவது? அதன்பின் பாசன வாய்க்கால் மூலம் எப்போது விளைநிலங்களை சென்றடைவது? இதுபோன்று எண்ணற்ற கேள்விகளை எழுப்புகின்றனர்

ஆகஸ்ட் 28, 2012

சிதம்பரம் நகராட்சியில் கழிவுநீர் !!

சிதம்பரம், : சிதம்பரம் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. நகர்மன்ற தலைவர் நிர்மலா சுந்தர், தலைமை தாங்கினார். ஆணையர் (பொறுப்பு) செல்வராஜ், பொறியாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு, நகராட்சி தலைவர், ஆணையர் பதில் அளித்தனர். அதன்விவரம் வருமாறு: செல்வராஜ் (மூமுக) எனது 33வது வார்டு இந்திரா நகரில் குடிநீர் மேல்நிலை தொட்டியில் தண்ணீர் ஏற்றுவதே இல்லை. அப்பகுதி மக்கள் குடிநீருக்கு அவதிப்பட்டு வருகின்றனர். லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை.. அப்பகுதியில் குடிநீர் வருகிறதோ இல்லையோ ஆனால் கழிவுநீர் மட்டும் தாராளமாக ஓடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசு உற்பத்தி ஆகிறது. குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள பாலமானில் நகரிலுள்ள கழிவுநீர் கலப்பதால் அதனை சுற்றியுள்ள நேரு நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

 திருவரசு (விடுதலைசிறுத்தை) அம்பேத்கர் திருவுருவ சிலையை நகராட்சி வளாகத்தில் நிறுவ வேண்டும். முகமதுஜியாவுதீன் (காங்) சமீபத்தில் நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனால் சிதம்பரம் கீழவீதியில் நடைபாதைகள்ஆக்கிரமிக் கப்பட்டுள்ளன. ஆகையால் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும். சிதம்பரம் நகரில் நாய் தொல்லைகள் அதிகமாக உள்ளது. அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். ஜேம்ஸ் விஜயராகவன்(திமுக) - சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளது. தினந்தோறும் பேருந்துகளில் வரும் மாணவிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.

அருகில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வழியாக பள்ளிக்கு சாலை அமைத்து தர வேண்டும். அப்புசந்திரசேகர் (திமுக) - எனது வார்டு திருபாட்டன் தெருவில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மகேஸ்வரி (திமுக) - எனது வார்டில் குடிநீர் கலங்கலாக வருகிறது. தூய்மையான குடிநீர் வழங்க வேண்டும். ரமேஷ்(தமிழக வாழ்வுரிமை கட்சி) - நகராட்சி நிர்வாகம் மக்களை தேடி போக வேண்டும். நகராட்சி தலைவர், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் வார்டு வாரியாக சென்று மக்கள் குறைகளை கேட்டு சரிசெய்ய வேண்டும். லால்கான் தெருவில் உள்ள அரசு மதுபான கடையால் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. அதை மாற்ற வேண்டும்.

 கவுன்சிலர்களின் குறைகளுக்கு பதிலளித்து நகர்மன்றத்தலைவர் நிர்மலாசுந்தர் பேசுகையில், ஏற்கனவே வார்டுகளில் நேரடியாக சென்று மக்கள் குறைகளை கேட்டறிந்து சரிசெய்து வருகிறோம். மேலும் உறுப்பினர்கள் கூறிய கோரிக்கைகள் அனைத்தும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-dinakaran

ஆப்கானிஸ்தானில் குர்ஆனை எரித்த 6 அமெரிக்க ராணுவ வீரர்கள்

ஆப்கானிஸ்தானில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை எரித்த 6 அமெரிக்க ராணுவ வீரர்களை துறை ரீதியாக தண்டிக்க அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் தங்கியுள்ள பக்ரம் விமானப்படை தளத்தின் குப்பைத் தொட்டியில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் எரிந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செயலைக் கண்டித்து ஆப்கானிஸ்தான் மக்கள் போராட்டம் நடத்தினர். இது மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்தது. இதையடுத்து அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மன்னிப்பு கேட்டார்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து பிரிகேடியர் ஜெனரல் பிரையன் ஜி. வாட்சன் விசாரணை நடத்தி அறிக்கை சமர்பித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது,ஆப்கானிஸ்தானில் சுமார் 100 குர்ஆன் மற்றும் இஸ்லாமிய நூல்களை அமெரிக்க ராணுவ வீரர்கள் எரித்துள்ளனர். அங்குள்ள அமெரிக்க வீரர்கள் ஆப்கானிஸ்தான் ராணுவத்தினரின் அறிவுரையைக் கேட்கவில்லை.இந்நிலையில் குர்ஆன் மற்றும் இஸ்லாமிய நூல்களை எரித்த 6 ராணுவ வீரர்களை தண்டிக்குமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் மனித குரல் !


செவ்வாய் கிரகத்திலிருந்து கியூரியாசிட்டி அனுப்பியுள்ள டிஜிட்டல் ஒலிப்பதிவில், மனிதர்களின் குரல் பதிவாகியுள்ளது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாசா விஞ்ஞானிகள், இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
 
நாசா விஞ்ஞானிகளால் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள, கியூரியாசிட்டி விண்கலம் அங்கு தொடர் ஆய்வில் ஈடுபட்டுள்ளது. கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தை துளையிட்டும், படம் பிடித்தும் ஆய்வறிக்கையை அனுப்பி வருகிறது. இந்நிலையில் கியூரியாசிட்டி விண்கலம் கடந்த வாரம் பதிவு செய்து அனுப்பிய ஒலிப்பதிவை, விஞ்ஞானிகள் ஆய்வு செய்தபோது, அதில் மனிதர்களின் குரலை ஒத்த பல்வேறு சப்தங்கள் பதிவாகியிருப்பதை கண்டறிந்துள்ளனர்.
 
செவ்வாய் கிரகத்தில் மனிதர்களின் குரல் பதிவாகியுள்ளதால், அங்கு மனிதர்கள் வசிப்பது உறுதியாகியுள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். நாசா விஞ்ஞானிகளால் அனுப்பபட்ட கியூரியாசிட்டி

இஸ்லாத்தின் வழிகாட்டலை பின்பற்றும் தாய்லாந்து அமைச்சர்

ஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிக்காமல் உட்கார்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும் என தய்வானின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர் கூறியிருப்பது அந்நாட்டில் கழிப்பறை சுகாதாரம் தொடர்பான ஒரு பரவலான விவாதத்தைத் தோற்றுவித்துள்ளது.

 வீட்டிலும் சரி பொதுக் கழிப்பறைகளிலும் சரி அமைச்சர் ஸ்டீஃபன் ஷென் எப்போதுமே உட்கார்ந்துதான் சிறுநீர் கழிக்கிறார் என்று கூறியுள்ள சுற்றாடல் பாதுகாப்பு நிர்வாகம், இந்த வழக்கத்தை மக்கள் அனைவரும் பின்பற்றுவதன் மூலம் கழிப்பறைகளை மேலும் சுத்தமாக வைக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. உட்கார்ந்து சிறுநீர் கழியுங்கள் என்று ஆண்களுக்கு அறிவுறுத்தும் அறிவிப்பு பிரசுரங்களை பொது இடங்களில் ஒட்டப்பட்டச் சொல்லி உள்ளூர் நிர்வாகத்தினரை அரசு அதிகாரிகள் கேட்டுக்கொள்ளவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
source:

ஆகஸ்ட் 26, 2012

மின்வெட்டை கண்டித்து சிதம்பரத்தில் செப்.4ல் கடைஅடைப்பு நடத்த முடிவு!

மின்வெட்டை கண்டித்தும், நெய்வேலி மின்சாரத்தை முழுவதையும் தமிழகத்திற்கு வழங்கக் கோரி சிதம்பரத்தில் செப்.4-ல் கடைஅடைப்பு நடத்துவது என அனைத்து வணிக, சமூக நல அமைப்புகள் முடிவு செய்துள்ளது.

அண்மைக் காலமாக நாளொன்றுக்கு 10 மணி நேரங்களுக்கு மேலாக மின்வெட்டு செய்யப்படுவதால் பொதுமக்கள், குறிப்பாக வணிகர்கள், சிறுதொழில் முனைவோர்கள் என அனைத்து தரப்பினரும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மின்வெட்டு குறித்து சிதம்பரம் நகர தொழில், வணிக, சமூக நல அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.கூட்டத்தில் கடும் மின்வெட்டை கண்டித்தும், நெய்வேலி மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கு வழங்கக் கோரி சிதம்பரம் நகரில் கடைஅடைப்பு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. முடிவில் வர்த்தக சங்க பொருளாளர் பெரி.முருகப்பன் நன்றி கூறினார்.

மாவட்டத்தில் மின்வெட்டு இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு

கடலூர், : அறிவிக்கப்படாத மின் வெட்டால் கடலூர் மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்படாத மின்வெட்டால் தமிழக மக்கள் இருண்ட காலத்திற்கு தள்ளப்பட்ட னர். கடும் இன்னல்களை சந்தித்தனர். அப்போது மக்களை சமாதானப்படுத்திய அரசு ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் நிலைமை சீராகும் என அறிவித்தது. இந்நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக கடந்த ஒரு வார மாக நிலவி வரும் வரலாறு காணாத மின்வெட்டால் மக்கள் விழி பிதுங்கிபோய் உள்ளனர்.

இரவு 6 மணி முதல் 7வரை, 10 மணி முதல் 11 வரை, 12 முதல் 1 மணி வரை, 2 மணி முதல் 3 மணி வரை, காலை 6 மணி முதல் 9 மணி. மதியம் 12.30 மணி முதல் 4 மணி முதல் இப்படி அடுக்கடுக்கான மின்வெட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் திகைத்து போய் உள்ளனர். கடலூர் நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டிகளுக்கும் கடலூர் மாவட்ட ஊராட்சி பகுதிகளில் உள்ள 500 க்கும் மேற்பட்ட நீர்தேக்கத்தொட்டி களுக்கும் மின்வெட்டால் நீரேற்ற முடியவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நகரப்பகுதியில் தான் இப்படி என்றால் கிராம பகுதிகளிலோ குறுவை சாகுபடிக்கு போதுமான தண்ணீர் விடமுடியாமல் விவசாயிகளும் வேதனை அடைந்துள்ளனர். சாலைகள் தோறும் பரவி கிடக்கிற ஜெராக்ஸ் கடை, கம்ப்யூட்டர் சென்டர்கள், மாவு மில்கள், சிறிய வணிக நிறுவனங்கள், மற்றும் மின்சாரத்தை மட்டுமே நம்பியுள்ள பல ஆயிரம் சிறு மற்றும் குறுந்தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

 கடலூர் துறை முகப்பகுதிகளில் ஐஸ் பார்கள் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. உழவர் சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ரவீந்திரன் கூறியதாவது: மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லை. கல்பாக்கம் மற்றும் தூத்துக்குடி அனல்மின்நிலையங்களில் தொழில்நுட்ப கோளாறு, காற்று வீசாததால் காற்றாலை மின்சாரம் தயாரிப்பு பாதிப்பு, இப்படி பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. முன் எச்சரிக்கையோடு இவற்றை ஊகித்து திட்டங்கள் தயாரித்திருக்க வேண்டும். மின்சாரத்திற்கு தனியாரையே நம்பியிருக்கும் அரசிடம் உரிய

விரைவில் பாலிமர் ரூபாய் நோட்டுகள்-ரிசர்வ் வங்கி

இந்தியாவில் விரைவில் சோதனை அடிப்படையில் ஐந்து நகரங்களில் பாலிமரால் செய்யப்பட்ட பத்து ரூபாய் நோட்டுகள் சுழற்சியில் விடப்படும் என ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் கே.சி. சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். மேகாலயாவில் உள்ள ஷில்லாங்கில் ரிசர்வ் வங்கியின் கிளையை திறந்து வைத்து பேசிய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் கே.சி. சக்ரவர்த்தி, கள்ள நோட்டுகளை தடுக்கும் வகையில் பாலிமர் நோட்டுகளை பயன்பாட்டில் விடுவது குறித்து மத்திய உள்துறை மற்றும் நிதி அமைச்சகத்திடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே இது குறித்த உடன்பாடு எட்டப்பட்ட உடன் இந்தியாவில் முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் மைசூர், கொச்சின், ஜெய்பூர், சிம்லா, புவனேஷ்வர் உள்ளிட்ட ஐந்து நகரங்களில் சுழற்சியில் விடப்படும்". என்று அவர் தெரிவித்தார்.

நிலவில் முதன் முதலில் கால்பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் மரணம்!

நிலவில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்தவர் என்ற பெருமை கொண்டிருந்த அமெரிக்க விஞ்ஞானி நீல் ஆம்ஸ்ட்ராங் தனது 82-வது வயதில் காலமானார்.இதயம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்ட நீல் ஆம்ஸ்ட்ராங்கிற்கு கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி அறுவை சிகிட்சை நடந்தது. இதன் பிறகும் அவருக்கு உடல்நலன் சீரடையவில்லை. 1969-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி நீல் ஆம்ஸ்ட்ராங் அப்போல்லோ-11 விண்கலத்தில் சென்று சந்திரனில் கால்பதித்தார். நீல் ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின், மைக்கில் காலின்ஸ் ஆகியோர் கொண்ட குழு அப்போல்லோ-11 இல் சந்திரனுக்கு சென்று. மனித குல வரலாற்றில் இது பெரிய சாதனையாக கருதப்பட்டது.

 1930-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள ஒஹியோ மாகாணத்தில் உள்ள கோனெட்டா என்ற சிறிய நகரில் பிறந்த ஆம்ஸ்ட்ராங் புருடியூ பல்கலைகழக்த்தில் இன்ஜினியரிங் படிப்பை முடித்த பின்னர் தன்னுடைய 30-ம் வயதி்ல் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி விமானியாக பணியில் சேர்ந்தார் நீல் ஆம்ஸ்ட்ராங். பின்னர் நாஸாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த ஆம்ஸ்ட்ராங், நாஸா மேற்கொண்ட நிலவு குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவில் சந்திரனுக்கு அனுப்பட்ட அப்போல்லோ-11 விண்கலத்தில் பயணித்தார். சந்திரனுக்கு சென்று திரும்பிய பிறகு நாஸா விண்வெளி ஆராய்ச்‌சி

ஆகஸ்ட் 25, 2012

வடகிழக்கு மாநிலத்தவர்களை பீதியில் ஆழ்த்திய பிரச்சாரம்: ஹிந்துத்துவா தீவிரவாத இணையதளங்களுக்கு தடை !

புதுடெல்லி:வடகிழக்கு மாநிலத்து மக்களை பீதியில் ஆழ்த்தி அவர்கள் கூட்டமாக வெளியேறக் காரணமான வதந்தி செய்திகளின் பின்னணியில் ஹிந்துத்துவா தீவிரவாத இணையதளங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அரசு தடைச்செய்த 20 சதவீத இணையதளங்களும் ஹிந்துத்துவா தீவிரவாத குழுக்களுக்கு சொந்தமானவை என்று டைம்ஸ் ஆஃப் நாளிதழ் கூறுகிறது. துவக்கத்தில் சோஷியல் நெட்வர்கிங் இணையதளங்கள் மூலமாக பாகிஸ்தான் இந்தியாவில் பீதியை கிளப்பி கலவரத்தை தூண்டுவதாக மத்திய அரசு குற்றம் சாட்டியது. ஆனால், அஸ்ஸாமில் நடந்த கலவரத்தின் பின்னணியில் ஹிந்துத்துவா தீவிரவாத குழுக்கள் கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

 அஸ்ஸாமில் சிறுபான்மை முஸ்லிம்கள் பழங்குடி போடோ இனத்தவர்களுக்கு எதிராக கலவரம் நடத்துவதாக அவதூறான செய்தியை கொந்தளிப்பை ஏற்படுத்தும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் ஹிந்துத்துவா தீவிரவாத இணையதளங்கள் வெளியிட்டுள்ளன. சீன ஆக்கிரமிப்பை கண்டித்து திபெத்து மக்கள் தற்கொலைச் செய்த புகைப்படங்களையும், வீடியோக்களையும், ஏராளமான போஸ்டர்களையும் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய முஸ்லிம்கள் அஸ்ஸாமில் ஹிந்துக்கள் மீது நடத்துவதாக கீழே குறிப்பிட்டு ஹிந்துத்துவா தீவிரவாத இணையதளங்களில் வெளியிடப்பட்டிருந்தன. சுதந்திர தினத்தில் பாகிஸ்தான் சிந்துமாகாணத்தில் உள்ள ஹைதராபாத்தில் அந்நாட்டு சுதந்திர தினத்தன்று குடியேற்றிய காட்சியை, இந்தியாவில் உள்ள ஹைதராபாத் நகரத்தில் முஸ்லிம்கள் பாக். கொடியை ஏற்றியதாக அவதூறான செய்தி பரப்பப்பட்டது.

கலவரத்தின் திரைமறைவில் வடகிழக்கு மாநிலத்து மக்களிடம் செல்வாக்கை பயன்படுத்தி அவர்களை கவர ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் தீவிரமாக முயன்றன. இதில் சில அமைப்புகள் போடோ வன்முறையாளர்களுக்கு ஆதரவு அளிப்பதாகவும் பகிரங்கமாக அறிவித்தனர். பிற மாநிலங்களில் இருந்து கூட்டமாக வெளியேறிய வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் உணவும் மற்றும் சேவைகளை வழங்க ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட ஹிந்துத்துவா

ஆகஸ்ட் 23, 2012

ஓர் வபாத் செய்தி!


நமதூர் பள்ளிவாசல் தெருவில் வசிக்கும்  முஜிபுர்ரஹ்மான் அவர்களின் தந்தை   முஹம்மது அவர்கள்  இன்று காலை தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....

எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் அனைவருக்கும் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் "ஷப்ரன் ஜமிலா" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress பிரார்த்தனை செய்கிறது.

ஆகஸ்ட் 22, 2012

இறைவனின் நாட்டம் – விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியம்..!

பொதுவாக எந்த ஒரு உயிரினமும் கலவி யில் ஈடுபட்டு ஆணின் உயிரணு மூலமாக கருத்தரிப்பதே இயற்கை. ஆனால் இதற்கு முரணாக சிலவகை பல்லிகள், பாம்புகள் போன்றவை ஆணின் உயிரணு இல்லாமல் – அதாவது, கலவியில் ஈடுபடாமலேயே கருத்தரிப்பதுண்டு. இதனை வெர்ஜின் பர்த் என்பார்கள். ஆனால், இதையும் தாண்டி இன்னொரு விநோதமான கர்ப்பத்தை சமீபத்தில் கண்டறிந்திருக்கிறது விஞ்ஞான உலகம்.

ஆம், கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்திலிருந்து பிடிக்கப்பட்ட ஒரு வகை விரியன் பாம்பு, தற்போது 19 குட்டிகளை ஈன்றுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த ஐந்து வருடங்களாக தனித்து வைக்கப்பட்டிருந்த இந்தப் பாம்பு, எந்த ஒரு ஆண் பாம்புடனும் உறவு கொண்டிருக்கவில்லை. பிறகெப்படி கரு உண்டானது என்று ஆராயக் கிளம்பினார்கள், வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். முதலில், ஆணின் உயிரணு இல்லாமல் கருத்தரிக்கும் ‘வெர்ஜின் பர்த்’தாகத்தான் இது இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், பிறந்திருக்கும் குட்டிகளை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, தாய்ப் பாம்பின் டி.என்.ஏவோடு இன்னொரு ஆண் பாம்பின் டி.என்.ஏவும் அவற்றிடம் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. அப்படியென்றால் ஆண் பாம்பின் உயிரணு இல்லாமல் குட்டிகள் பிறக்க வில்லை. அந்த உயிரணு எங்கிருந்து வந்தது என்று ஆராய்ந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். அப்போதுதான் பல புதிய தகவல்கள் கிளம்பியுள்ளன.

அதாவது, குறிப்பிட்ட அந்த விரியன் பாம்பு, ஒரு முறை ஆண் பாம்போடு உறவு கொண்டால் போதும். ஆணின் உயிரணுவை பல நாட்களுக்கு தன் உடலிலேயே பாதுகாப்பாக ஸ்டாக் வைத்துக் கொள்ளும் திறன் அதற்கு இருக்கிறது. அதன்பின் எப்போது தனக்கு கருத்தரிக்க ஆர்வம் இருக்கிறதோ, அப்போது கருவை

கொள்ளுமேடு ஈத் பெருநாள் தொழுகை


புகைப்படம்:T. முஹம்மது பைசல் 

ஆகஸ்ட் 20, 2012

ஓர் வபாத் செய்தி

நமதூர் மேலத் தெருவில் வசிக்கும்  ஜெக்கரியா அவர்களின் மகன் சலாஹுத்தின் அவர்கள்  இன்று தோஹா கத்தாரில் தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....


எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் அனைவருக்கும் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் "ஷப்ரன் ஜமிலா" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress பிரார்த்தனை செய்கிறது.

ஆகஸ்ட் 19, 2012

கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாத்தின் பிஃத்ரா விநியோகம்!

நமதூர் தவ்ஹீத் ஜமாத்தின் வருடாந்திர பிஃத்ரா விநியோகம் கடந்த வருடத்தைப் போன்றே இந்த ஆண்டும் சிறப்பாக செய்யப்பட்டது.நமதூர் மட்டுமில்லாமல் பக்கத்துக்கு ஊர்களான T.புத்தூர் மற்றும் கந்தகுமாரன் ஊர்களில் உள்ள ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் பிஃத்ரா விநியோகம் செய்யப்பட்டது.அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நமது தவ்ஹீத் கிளையின் பணிகள் பக்கத்து ஊர்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.அல்ஹம்துல்லிலாஹ்...
வசூல் விபரம்:
உள்ளூர் வசூல் (தவ்ஹீத் குடும்பங்கள் மட்டும்) 13,250/-
வெளிநாடு வசூல் :                                                         11,325/-
TNTJதலைமை மூலம்  :                                                10,000/-
மொத்த வசூல்:34,575/-

கொடுக்கப்பட்ட பொருட்கள்:
1.அரிசி 
2.கோதுமை ரவா
3.சீனி 
4.கருப்பு உளுந்து 
5.து.பருப்பு 
6.ஆயில் 
7.பொ.கடலை  
8.செமியா  
9.கோழி  


செய்தி:T .முஹம்மது பைசல் 

கொள்ளுமேட்டில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் பிஃத்ரா விநியோகம்

முஸ்லிமான அடிமை சுதந்திரமானவர்,ஆண் பெண் பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபி (ஸல்)அவர்கள் விதியாக்கினார்கள்.அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) , நூல்: புகாரி 1503 ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள் பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீதும் கடமையாகிய பிஃத்ரா  எனும் பெருநாள் தர்மம் நமதூரில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் கொள்ளுமேடு மட்டுமல்லாது பக்கத்து ஊர்களான  T .புத்தூர் மற்றும் கந்தகுமாரன் ஊர்களின் உள்ள 110 ஏழை எளிய குடும்பங்களுக்கும்  பித்ரா விநியோகம் வழங்கப்பட்டது.இதைபோன்று இர்ஷாதுல் முஸ்லிமீன்,SDPI , தமுமுக சார்பிலும் நமதூரில் பிஃத்ரா வழங்கப்பட்டது.

இன்று உலக மனிதநேய தினம்!

உலக மனிதநேய தினம் World Humanitarian Day (WHD). ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. உலகளாவிய ரீதியில் யுத்தம், இயற்கை அனர்த்தங்கள், நோய், போஷாக்கின்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பல இலட்சம் மக்களை நினைவுகூரும் வகையிலும், துன்பத்திலிருந்து விடுவிக்கப் படுவோருக்காகப் பணியாற்றுவோர் மற்றும் இப் பணிகளின் போது கொல்லப்பட்டோர், காயமடைந்தோர் ஆகியோரையும் நினைகூரும் வகையிலும் இத்தினத்தைஅனுஷ்டிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.2008 டிசம்பர் 11 ம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் A/RES/63/139 இலக்கத் தீர்மானப்படி இத்தினம் ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது.

 ஒரு தனிமனிதனின் சுதந்திரத்திற்காக இஸ்லாம் பல்வேறு மனித உரிமைச் சட்டங்களை இந்த மனித குலத்திற்கு வழங்கியுள்ளது.அவற்றில் சிலவற்றை இங்கே தருகின்றோம். முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள், உங்களது இரத்தமும், உங்களது உடமைகளும் மற்றும் உங்களது கண்ணியமும் வரம்பு மீறமுடியாதவைகளாகும். (நூல்கள் : முஸ்னத் அஹ்மத் ஹதீஸ் எண் : 2037 மற்றும் ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் எண் : 1739). இனப்பாகுபாடும் இஸ்லாத்தினால் அங்கீகரிக்கப்பட்டதல்ல.

இதைப் பற்றி இறைவன் தன்னுடைய திருமறைக் குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான். மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம்: இன்னும், ஒருவருக்கொருவர் நீங்கள் அறிமுகமாகிக் கொள்வதற்காக உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்: நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிக்க கண்ணியமிக்கவர் உங்களில் மிகவும் பயபக்தியுடையவர்கள்; தான்: நிச்சயமாக அல்லாஹ், (யாவற்றையும்) நன்கறிந்தவன்: நன்குணர்பவன்.(அல் குர்ஆன் 49-13). மேலும், தனிப்பட்ட ஒருவரையோ அல்லது ஒரு நாட்டையோ அவர் பெற்றிருக்கும் செல்வம், ஆட்சி, அல்லது குலத்திற்காக இஸ்லாம் முன்னிலைப்படுத்துவதில்லை. இறைவன் அனைவரையும் சமமான அளவில் தான் படைத்துள்ளான், அவர்களிடையே உள்ள வேறுபாடுகளை அறிந்து கொள்வதற்கு அவர்கள் கொண்டுள்ள இறைநம்பிக்கையும், நற்செயல்களும் தான் காரணமாக அமைகின்றன. முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 ஓ! மனிதர்களே! உங்கள் இறைவனும் ஒருவன் தான், உங்களது மூதாதையரும் (ஆதம்) ஒருவர் தான். ஒரு அரபியானவன் அரபி அல்லாதவனை விடச் சிறந்தவன் அல்ல, ஒரு அரபி அல்லாதவன் ஒரு அரபியை விடச் சிறந்தவன் அல்ல, ஒரு சிவந்த நிறத்தை உடையவன் கறுப்பு நிறத்தை உடையவனை விடச் சிறந்தவன் அல்ல. ஒரு கறுப்பன் சிவந்த நிறத்தை உடையவனை விடச் சிறந்தவன் அல்ல. மாறாக உங்களில் சிறந்தவர் இறையச்சம் உடையவரே. (நூல்கள் : முஸ்னத் அஹ்மத் ஹதீஸ் எண் : 22978). இன்று உலகம் சந்தித்துக் கொண்டிருக்கின்ற மாபெரும் பிரச்னைகளில் ஒன்று தான் இனவெறி. மனிதனை நிலவுக்கு அனுப்பத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள முடிந்த மனிதனுக்கு, தன்னுடைய தன்னுடன் வாழும் சக மனிதனை வெறுக்காமல், சண்டையிடாமல் நேசிக்கக் கற்றுக் கொடுக்க முடியவில்லை.

முஹம்மது (ஸல்) அவர்கள் மக்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்த நாளிலிருந்து, இந்தக் கொடுமையான இனவெறிப் பழக்கத்தை எவ்வாறு துடைத்தெறிந்தார்கள் என்பதற்கு நாம் இஸ்லாத்தில் எண்ணற்ற உதாரணங்களைக் காட்ட முடியும். இஸ்லாத்தின் இறுதிக் கடமையாகிய ஹஜ் என்னும் யாத்திரையின் போது, பல்வேறு நாடுகள், இனங்கள், நிறங்கள், மொழிகளைச் சேர்ந்த இரண்டு மில்லியன் முஸ்லிம்கள் ஒரே இடத்தில் மக்கா நகரில் கூடுவது என்பது, இனவெறியை வேரடி மண்ணோடு துடைத்தெறியக் கூடிய, இஸ்லாமிய உலகளாவிய சகோதரத்துவத்தைக் காட்டுகின்றது. இஸ்லாம் நீதியை நிலைநாட்டக் கூடிய ஒரிறைவனின் மார்க்கமாகும். இதைப் பற்றி இறைவன் தன்னுடைய திருமறைக் குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்: (விசுவாசிகளே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடுமாறும், மனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்புக் கூறினால், (பாரபட்சமின்றி) நீதமாகவே தீர்ப்பளிக்குமாறும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான். (அல் குர்ஆன், 04-58).

 மேலும் இறைவன் தன்னுடைய திருமறைக் குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான். நீங்கள் நீதியாகவும் நடந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கின்றான். (அல் குர்ஆன், 49-9). தம்முடைய பகை வெறுப்பு காரணமாக, அவர்களிடையே

ஆகஸ்ட் 17, 2012

சீனாவில் உதயமான இஸ்லாமிய அமைப்பு

நன்றி:மணிச்சுடர் 

ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய தாலிபான் போராளிகள்!

ஆப்கானிஸ்தானின் தெற்குபகுதியில் நேட்டோ படையின் யூ.எச்.60 பிளாக் ஹவ்க் என்ற ஹெலிகாப்டரை தாலிபான் போராளிகள் சுட்டு வீழ்த்தினர். அதில் 7 அமெரிக்க ராணுவ வீரர்களும் 4 ஆப்கானிஸ்தான் வீரர்களும் இருந்தனர். பயணம் செய்த 11 ராணுவ வீரர்கள் அனைவரும் பலியானார்கள். இவர்கள் தவிர அதில் இருந்த விமான ஊழியர்களும் இறந்தனர். தாலிபான்கள் சுட்டு வீழ்த்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் குவாரி யூசுப் அகமது கூறும்போது, நேட்டோ ஹெலிகாப்டரை கந்தகார் மாவட்டத்தில் ஷாவாலிகாட் பகுதியில் செனார்டோ என்ற இடத்தில்  தாலிபான்கள் சுட்டு வீழ்த்தினர். ராக்கெட் குண்டு வீசி ஹெலிகாப்டரை தாக்கி அழித்தோம். அதில் இருந்த ஊழியர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர் என கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 15, 2012

மக்கா உச்சிமாநாடு ஒன்று கூடிய முஸ்லிம் தலைவர்கள்!


ஜித்தா:உள்நாட்டு பிரச்சனைகளும், ஆக்கிரமிப்பு முயற்சிகளும் மேற்காசியாவில் அமைதிக்கு பங்கம் விளைவித்து வரும் சூழலில் சமாதானம் மற்றும் ஒற்றுமையின் வழிகளை ஆராயவும், தேசங்களை கடந்த கூட்டு ஒருமைப்பாட்டு உணர்வை தொடர்ந்து நிலைநாட்டவும் முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை மக்காவில்கூடியுள்ளனர். 
சவூதி அரேபியாவின் ஆட்சியாளர் மன்னர் அப்துல்லாஹ்வின் அழைப்பின் பெயரில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான ஒ.ஐ.சியின் உறுப்பு நாடுகள் கலந்துகொள்ளும் இந்த உச்சிமாநாடு மக்காவில் உள்ள ஸஃபா அரண்மனையில் துவங்கியுள்ளது.
சிரியாவில் உள்நாட்டுப் போரும், மியான்மர் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இன அழித்தொழிப்பு நடவடிக்கைகளும் அதிகரித்துள்ள சூழலில் மன்னர் அப்துல்லாஹ் இந்த உச்சிமாநாட்டிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
சிரியா, மியான்மர் பிரச்சனைகளுடன் ஃபலஸ்தீனில் இஸ்ரேலின் புதிய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளும், எகிப்து ஸினாயில் நடந்த தாக்குதலும் இந்த உச்சிமாநாட்டில் தீவிரமாக விவாதிக்கப்படும்.
சிரியாவில் மக்கள் எழுச்சிப் போராட்டத்தை கொடூரமாக அடக்கி ஒடுக்கும் பஸ்ஸாருல் ஆஸாதின் முயற்சிகளையும், அதற்கு துணைபோகும் ரஷ்யா, சீனா, ஈரான் ஆகிய நாடுகளின் நிலைப்பாடுகளுக்கும் எதிராக பொது கருத்தை உருவாக்குவதே இம்மாநாட்டின் முக்கிய அஜண்டா ஆகும்.
ஆஸாத் அரசை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு தடைகள் உள்பட அழுத்தங்களை கொடுக்கும் தந்திரங்களை மேற்கொள்ள சவூதி அரேபியாவின் தலைமையில் அரபு நாடுகள் முயன்று வருகின்றன. இதுத்தொடர்பாக ஐ.நா பொது அவையில் சவூதி அரேபியா கொண்டு வந்த தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேறியது. அதேவேளையில் ஷியா அலவி பிரிவைச் சார்ந்த பஸ்ஸாரை ஆதரிப்பதால் ஈரானுக்கு எதிராக அரபுலகில் கடுமையான எதிர்ப்பு எழுந்து வருகிறது.
இவ்விவகாரத்தில் அரபுக்களின் பொதுவான உணர்வை ஈரானுக்கு தெரியப்படுத்துதல் மாநாட்டின் முக்கிய நோக்கமாக இருக்கும். உச்சிமாநாட்டிற்கு மன்னர் அப்துல்லாஹ், ஈரான் அதிபர் அஹ்மத் நஜாதிற்கு அழைப்பு விடுத்திருந்தார். மன்னரின் அழைப்பை ஏற்று நஜாதும், அவரது குழுவினரும் திங்கள்கிழமையே சவூதி அரேபியாவுக்கு வருகை தந்துள்ளனர்.
மியான்மரில் இனப்படுகொலைக்கு பலியாகும் ரோஹிங்கியா முஸ்லிம்களின் பிரச்சனைக் குறித்து மாநாடு தீவிரமாக விவாதிக்கும் என்று

ஆகஸ்ட் 14, 2012

ஓர் வபாத் செய்தி

நமதூர் தெற்கு தெருவில் வசித்த மர்ஹும் மங்கலத்தார் ஜியாவுதீன் அவர்களின் தாயார் எஹ்சான் பீவி அவர்கள் இன்று தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....

எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் அனைவருக்கும் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் "ஷப்ரன் ஜமிலா" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress பிரார்த்தனை செய்கிறது.

ஆகஸ்ட் 13, 2012

மத்திய அரசின் கிராமங்களில் மாதிரி கணக்கெடுக்கும் பணி துவக்கம்

காட்டுமன்னார்கோவில் பகுதியில் மத்திய அரசின் குடும்ப நலம் மற்றும் சுகாதார துறை சார்பில் கிராமங்களில் மாதிரி கணக்கெடுக்கும் பணி நடைப்பெற்றது. தமிழகத்தில் மத்திய அரசு கிராமங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் குடும்ப உறுப்பினர்களின் விவரம், சுகாதாரம், குடிநீர், நீர் நிலைகளின் விவரம் ஆகியன பற்றி சேகரித்து கிராமங்களில் வரும் ஐந்தாண்டுகளில் பல்வேறு பணிகள் செய்வதற்காக கணக்கெடுப்பு பணியை தொடங்கி செயல்படுத்தி வருகிறது.

இதன்படி கடலூர் மாவட்டத்தில் 35 கிராமங்களில் இன்டியன் இன்ஸ்டியூட் ஆப் பாப்லேஷன் சைன்ஸ் நிறுவனத்தின் மூலம் பணியாளர்கள் நியமித்து கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் காட்டுமன்னார்கோவிலில் கீழக்கடம்பூர், மா.கொளக்குடி, இளங்கம்பூர், ஆகிய கிராமங்களை தேர்ந்தெடுத்து கணக்கெடுப்பு பணியை செய்து வருகின்றனர். இதுபற்றி கணக்கெடுப்பு பணியில் கீழக்கடம்பூரில் ஈடுபட்டுள்ள வினோத்குமார், வெங்கடேசன் ஆகியோர் கூறுகையில், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு பணி செய்யப்படுகிறது. கதவு எண் வீட்டில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை குளம், ஏரி ஆகியவற்றின் விவரங்களை பதிவேடுகளில் பதிவு செய்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

மதுபான கடையை அப்புறப்படுத்த கோரி தர்ணா போராட்டம்!

காட்டுமன்னார்கோவில், : காட்டுமன்னார்கோவில் பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. நகர செயலர் இளங்கோவன் தலைமை தாங்கினார். வட்டக்குழு காளிதாஸ் முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் பிரகாஷ், வட்ட குழு மகாலிங்கம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இதில் காட்டுமன்னார்கோவில் ரெட்டியார் ரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்படும் மதுபான கடையை அப்புறப்படுத்த வேண்டும். காட்டுமன்னார்கோவில் பகுதியில் மனைப்பட்டா இல்லாமல் அவதியுறும் மக்களுக்கு மனைப்பட்டா வழங்காமல் விவசாய விளை நிலங்களை மனைகளாக மாற்றுவதை கண்டித்தும் இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி போராட்டம் நடந்தது. இதில் அப்துல் அஜிஸ், மோகன், ஜாகீர் உசேன், சிங்கார வேல், ஷரிப், விமல்கண்ணன், ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

ஜெர்மன் ஆயுதங்களுடன் தாலிபான் போராளிகள்!

காபூல்:ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் தலைமையிலான ஆக்கிரமிப்பு ராணுவத்திற்கு எதிரான போராட்டத்தில் தாலிபான் போராளிகள் ஜெர்மன் தயாரிப்பு ஆயுதங்களை உபயோகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் தாலிபான் போராளிகளிடமிருந்து ஆப்கான் ராணுவத்தினர் கைப்பற்றிய சில ஆயுதங்கள் ஜெர்மனில் தயாரிக்கப்பட்டவை என ஜெர்மன் நாளிதழான எக்ஸ்பிரஸ் கூறுகிறது.

 இயந்திர துப்பாக்கி, பிஸ்டல்ஸ், மோர்ட்டார், வெடிப்பொருட்கள் ஆகியன தாலிபான் வசமிருக்கும் ஜெர்மன் ஆயுதங்களாகும். 2006-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டு பாதுகாப்பு அமைச்சகம், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பியிருந்தது. ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு விற்பனைச் செய்த 4500க்கும் மேற்பட்ட ஜெர்மன் தயாரிப்பு Walther துப்பாக்கிகள் காணாமல் போனதாக எக்ஸ்பிரஸ் பத்திரிகை கூறுகிறது. 2004-க்கும், 2008-க்கும் இடையே அமெரிக்காவில் இருந்து கப்பல் மூலமாக ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பப்பட்ட ஆயுதங்களில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதங்கள் மாயமானது. ஜெர்மன் ஆயுதங்கள் பாகிஸ்தானின் கறுப்பு சந்தையில் அதிகமாக கிடைப்பது தாலிபான் போராளிகளுக்கு உதவுவதாக அப்பத்திரிகை கூறுகிறது.

 ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு ராணுவ வீரர்களில் இருந்து தாலிபானுக்கு அணி மாறும் நான்கில் ஒருவரும் ஆயுதங்களை அரசுக்கு திரும்ப அளிப்பதில்லை என்று

அஸ்ஸாம் கலவர பூமியில் தீவிரமாக பணியாற்றும் ரிஹாப் தன்னார்வ சேவைத் தொண்டர்கள் !


கொக்ராஜர்:அஸ்ஸாமில் போடோக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே நிகழ்ந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் 149 அகதிகள் முகாம்களிலும் ரிஹாப் தன்னார்வ சேவைத் தொண்டர்களின் துயர் துடைப்பு பணிகள் தொடர்கின்றன. இந்த முகாம்களில் 3,20,750 மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பிரச்சனைகளால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கியிருக்கும் 20 முகாம்களில் ரிஹாப்
சேவைத் தொண்டர்களால் செல்ல இயலவில்லை. ஊடக செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
ரிஹாப் இந்தியா பவுண்டேசன் பொதுச் செயலாளரும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினருமான ஒ.எம்.அப்துல் ஸலாம் முகாம்களில் நடைபெறும் துயர் துடைப்பு பணிகளுக்கு தலைமை தாங்கி வழி நடத்தி வருகிறார்.
தினமும் 150 ரிஹாப் தொண்டர்கள் சேவை களத்தில் பணியாற்றி வருகின்றனர். முதல் கட்டமாக உணவு, துணிகள், மருந்து ஆகியவற்றை முகாம்களுக்கு கொண்டு சேர்ப்பதே தங்களுடைய பணி என்று ஒ.எம்.அப்துல் ஸலாம் கூறுகிறார். அத்துடன் அகதி முகாம்களில் தங்கியிருப்போர்

ஓர் வபாத் செய்தி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் கடலூர் மாவட்ட முன்னாள் தலைவர் S.M. ஜின்னா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இன்று 13.08.2012 பிற்பகல் 12.00 மணியளவில் சிதம்பரம் வட்டம் பின்னத்தூரில்

தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.....


எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் அனைவருக்கும் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் "ஷப்ரன் ஜமிலா" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress பிரார்த்தனை செய்கிறது.

ஆகஸ்ட் 11, 2012

திருக்குர்ஆனின் நற்செய்தியை உலக மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கவேண்டும் – யூசுஃப் எஸ்டஸ்!

துபாய்:திருக்குர்ஆனை அதிகமாக புரிந்து, எல்லா பிரிவு மக்களுடனும் அதிகமான நல்லிணக்கத்தை ஏற்படுத்தி உலகில் அனைவருக்கும் திருக்குர்ஆனின் நற்செய்திகளையும், மகத்துவங்களையும் புரியவைப்பது அனைத்து முஸ்லிம்கள் மீதும் கடமையாகும் என்று பிரபல அமெரிக்க அறிஞர் யூசுஃப் எஸ்டஸ் கூறியுள்ளார். பதினாறாவது துபாய் புனித திருக்குர்ஆன் விருது தொடர்பாக வழங்கப்படும் இவ்வாண்டிற்கான சிறந்த இஸ்லாமிய ஆளுமையாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருதை பெறும் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 மேலும் அவர் கூறியது:திருக்குர்ஆனின் நற்செய்திகளும், சிந்தனைகளும் உலகின் குறைந்த சதவீத மக்களுக்கு மட்டுமே தற்பொழுது புரிந்துள்ளது. இதர மக்களுக்கும் இந்த சிந்தனைகளை கொண்டுசேர்ப்பது குறித்து ஒவ்வொரு முஸ்லிமும் இறைவனிடம் பதில் அளித்தாக வேண்டும் என்று யூசுஃப் எஸ்டஸ் கூறினார். துபாய் துணை ஆட்சியாளர் ஷேக் மக்தூம் பின் முஹம்மது ராஷித் யூசுஃப் எஸ்டஸுக்கு சிறந்த இஸ்லாமிய ஆளுமைக்கான விருதை வழங்கினார். திருக்குர்ஆன் ஓதுதல் போட்டியில் முதல் பரிசை குவைத்தைச் சார்ந்த யாஸீன் பின் ஹஸ்ஸன் பெற்றார். இரண்டரை லட்சம் திர்ஹம் முதல் பரிசாகும். பங்களாதேஷைச் சார்ந்த ஐனுல் ஆரிஃப் இரண்டாவது பரிசைப் பெற்றார். சாட் நாட்டைச் சார்ந்த யஃகூப் ஆதம் மூன்றாவது பரிசைப் பெற்றார். இரண்டாவது பரிசாக இரண்டு லட்சம் திர்ஹமும், மூன்றாவது பரிசாக ஒன்றரை லட்சம் திர்ஹமும் பரிசாக அளிக்கப்பட்டன. இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தைச் சார்ந்த முஹம்மது தாரிக்கும்

ஆகஸ்ட் 09, 2012

அமெரிக்காவில் பள்ளிவாசலுக்கு தீ வைத்த பயங்கரவாதிகள் !

அமெரிக்காவில் மிசெüரி பகுதியில் உள்ள பள்ளிவாசலில் தீயில் எரிந்து நாசமானது. விஸ்கான்சின் பகுதியில் உள்ள குருத்வாராவில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த மறுநாளே இஸ்லாமிய மையம் எரிந்து சாம்பலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. திங்கள்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. தீப்பற்றி எரிந்தபோது இதில் எவரும் இருக்கவில்லை என்று மிசெüரி பகுதி தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீப்பற்றியதற்கான காரணத்தை புலனாய்வு (எப்பிஐ) அதிகாரிகளுடன் இணைந்து தீயணைப்புத் துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை இப்போது ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. தீ விபத்துக்கான காரணம் முழுமையாகக் கண்டறியப்படும் என்று எப்பிஐ அதிகாரி மைக்கேல் கேஸ்ட் தெரிவித்தார். வழிபாட்டுத் தலத்தில் ஏதேனும் வன்முறை நிகழ்ந்திருப்பது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அமெரிக்க-இஸ்லாமிய உறவுக்கான கவுன்சில்

ஆகஸ்ட் 08, 2012

மஸ்ஜிதுல் அக்ஸாவை பாதுகாக்க காஸ்ஸாவில் பிரம்மாண்ட பேரணி !

காஸ்ஸா:மஸ்ஜிதுல் அக்ஸா என்றழைக்கப்படும் பைத்துல் முகத்தஸை பாதுகாக்க கோரி காஸ்ஸாவில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. ஃபலஸ்தீன் இஸ்லாமிய இயக்கமான ஹமாஸ் இப்பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தது. பைத்துல் முக்கத்தஸின் தற்போதைய முற்றத்தை பூந்தோட்டமாக மாற்ற யூத சியோனிச அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்த வீதிகளில் இறங்கினர்.

பல்வேறு மஸ்ஜிதுகளில் இருந்து புறப்பட்ட மக்கள் கூட்டம் ஜபலிய்யா சாலையில் நிரம்பி வழிந்தது. யூதர்களின் சதித்திட்டத்திற்கு எதிராகவும், யூத தலைவர்களுக்கு எதிராகவும் பேரணியில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மஸ்ஜிதுல் அக்ஸாவை பாதுகாக்க முஸ்லிம்களை ஊக்கப்படுத்தும் முழக்கங்களும் எழுப்பப்பட்டன. யூதர்களின் சதித்திட்டங்கள் மற்றும் தாக்குதல்களில் இருந்து அக்ஸாவை பாதுகாக்க மக்கள் தயாராக உள்ளார்கள் என்பதை பேரணியில் திரண்டுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் திரள் நிரூபிப்பதாக போராட்டத்திற்கு

ஸய்யித் நஸிம் அஹ்மத் புதிய தேர்தல் கமிஷனர்-குடியரசு தலைவர்

புதுடெல்லி:ஸய்யித் நஸிம் அஹ்மத் ஸெய்தி புதிய தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பிறப்பித்துள்ளார். இந்திய தேர்தல் கமிஷனில் தலைமைத் தேர்தல் கமிஷனர் ஒருவரும், தேர்தல் கமிஷனர்களாக இரண்டு பேரும் இடம் பெற்றிருப்பர். தலைமைத் தேர்தல் கமிஷனராக இருந்த எஸ்.ஒய். குரைஷி ஓய்வு பெற்ற பின்னர், தேர்தல் கமிஷனர்களில் ஒருவராக இருந்த வி.எஸ். சம்பத் தலைமைத் தேர்தல் கமிஷனராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே, காலியாக இருந்த தேர்தல் கமிஷனர் பதவிக்கு, ஸய்யித் நஸீம் அஹ்மத் ஸெய்தி செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

 மற்றொரு தேர்தல் கமிஷனராக ஹெச்.எஸ். பிரம்மா உள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஸெய்தி, கடந்த 1976-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்வானார். கடந்த ஜூலை 31-ம் தேதி ஓய்வு பெறுவதற்கு முன்னர், விமான போக்குவரத்துத் துறைச் செயலராக இருந்தார். மேலும், இவர் தனது பதவிக் காலத்தில், விமான போக்குவரத்துத் துறையின் தலைமை இயக்குநராகவும் இருந்துள்ளார். சர்வதேச விமானப்

இரண்டாவது முறையாக து.ஜனாதிபதியானார் ஹமீத் அன்சாரி

புதுடெல்லி:ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரான ஹாமித் அன்ஸாரி மீண்டும் துணை குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். என்.டி.ஏ(தேசிய ஜனநாயக கூட்டணி) வேட்பாளர் ஜஸ்வந்த் சிங்கை 252 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார் அன்ஸாரி. பதிவான 736 வாக்குகளில் அன்ஸாரிக்கு 490 வாக்குகளும், ஜஸ்வந்த் சிங்கிற்கு 238 வாக்குகளும் கிடைத்துள்ளன. உடல் சுகவீனம் காரணமாக சென்னையில் சிகிட்சைப் பெற்றுவரும் அமைச்சர் விலாஸ்ராவ் தேஸ்முக் உள்பட 47 எம்.பிக்கள் வாக்களிக்கவில்லை. எட்டு வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன.

 75 வயதான ஹாமித் அன்ஸாரி தொடர்ச்சியாக 2-வது முறையாக துணை குடியரசு தலைவராக தேர்வுச் செய்யப்படும் 2-வது நபர் ஆவார். இதற்கு முன்பு எஸ்.ராதாகிருஷ்ணன் இந்த தகுதியை பெற்றுள்ளார். ஹாமித் அன்ஸாரியின் வாழ்க்கைக் குறிப்பு: பிறந்த ஊர்:கொல்கத்தா சொந்த ஊர்:உத்தரபிரதேச மாநிலம் காசிப்பூர் வகித்த பதவிகள்:1961-ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சிப் பெற்று வெளியுறவுத்துறையில் பணி. ஆஸ்திரேலியாவிற்கான இந்திய தூதர், ஐக்கிய அரபு நாடுகள், ஆப்கானிஸ்தான், ஈரான், சவூதி அரேபியா போன்ற நாடுகளுக்கான இந்திய தூதர். ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்த பிரதிநிதியாக பணியாற்றியவர்.

 அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் 2000-ம் ஆண்டு மே மாதம் முதல் 2002 மார்ச் வரை துணை வேந்தராகப் பணியாற்றினார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கவுரவ பேராசிரியராகவும்

ஆகஸ்ட் 07, 2012

பாவமன்னிப்பு எனும் மகத்தான கூலி!


வல்ல ரஹ்மானின் அளப்பெரும் கிருபையால் இவ்வருட சங்கை மிகு ரமளானில் நாம் அனைவரும் இருந்துகொண்டிருக்கின்றோம். நமக்கும் வல்ல ரஹ்மானுக்கும் அதிக நெருக்கம் உள்ள இவ்வேளையில், அவனிடம் அதிகமதிகம் பாவமன்னிப்பு தேடுபவர்களாக இருக்க வேண்டும்.
கண்ணியமும் மகத்துவமும் மிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில்...

அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத்தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள்' (அல்குர்ஆன் 3:135)

'யாரேனும் தீமையைச்செய்து அல்லது தமக்குத் தாமே தீங்கிழைத்து பின்னர் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடினால், அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையோனாகவும் அவர் காண்பார்' (அல்குர்ஆன் 4:110)

'அவர்கள் அல்லாஹ்விடம் திரும்பி, அவனிடம் பாவமன்னிப்புத் தேட வேண்டாமா? அல்லாஹ் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன்'   (அல்குர்ஆன் 5:74)

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் உலக காரியங்களுக்காகவே அதிக நேரத்தை செலவிடுகின்றோம். அதில் படைத்த இறைவனை நினைப்பது என்பது மிகக் குறுகிய நேரமே. ஐவேளை தொழுகையில் மட்டுமே இறைவனுடைய நினைப்பு வருகிறது. பள்ளியை விட்டு வெளியே வந்தால் உலக நினைப்புகளில் மூழ்கி விடுகின்றோம். இந்த அளவுக்கு ஷைத்தானின் சூழ்ச்சி நம்மை இறை நினைப்பை விட்டும் பாராமுகமாக்கி விடுகிறது. 

இதனால் வாழ்வில் பல தவறுகளை இழைக்கின்றோம். நாம் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பவனாக இருக்கின்றான். எனவேதான் அவனிடமே பாவமன்னிப்பு தேடவேண்டும் என்றும், நாளை மறுமையில் அவனிடமே மீளுதல் உண்டு என்பதை உணர்ந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேட வேண்டும். மேற்கண்ட வசனங்களும் இதையே உணர்த்துகிறது.

மேலும் செய்த தவறை மறுபடியும் செய்யாமல் அல்லாஹ்விற்கு பயந்து அதிலிருந்து முழுமையாக விடுபட்டு நன்மையான காரியங்களின் பக்கம் திரும்ப வேண்டும் என்றும் இவ்வசனங்கள் உணர்த்துகிறது.

நபி(ஸல்) அவர்களின் இஸ்திஃக்ஃபார் 
(முஹம்மதே!) உமது பாவத்தில் முந்தியதையும் பிந்தியதையும் உமக்காக அல்லாஹ் மன்னிப்பதற்காகவும், தனது அருட்கொடையை உமக்கு முழமைப்படுத்திடவும், உமக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காகவும், அல்லாஹ்  மகத்தான உதவியை உமக்கு செய்வதற்காகவும், தெளிவான ஒரு வெற்றியை உமக்கு நாம் அளித்தோம். (அல்குர்ஆன் 48:1,2,3)

இந்த வசனத்தில் முஹம்மது(ஸல்) அவர்களின் முன் பின் பாவங்களை மன்னித்து விட்டதாகக் அல்லாஹ் கூறுகின்றான். இப்படியொரு பாக்கியத்தைப் பெற்ற அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அன்றாடம் பாவம செய்து கொண்டிருக்கவில்லை. அதேசமயம் தினமும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடிக்

ஆகஸ்ட் 05, 2012

மதுரை:முஸ்லிம் பிரமுகருக்கு பார்சலில் வெடிக்குண்டு! பின்னணியில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள்?

மதுரை:மதுரையில் முஸ்லிம் பிரமுகர் ஜமால் மைதீன் என்பவருக்கு வந்த பார்சலில் 2 வெடிகுண்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஜமால் மைதின் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது அலுவலகத்திற்கு வந்த பார்சலலை வாங்க அவரத அலுவலகத்தில் யாரும் இல்லாததால் அருகிலிருந்த நகைப் பட்டறையில் ஒப்படைக்கப்பட்டது. பார்சலை வாங்கிய பட்டறைக்காரரர் பார்சலை பிரித்துப் பார்த்த போது அதில் டைமர் பொருத்தப்பட்டு வெடிக்கும் நிலையில் தயாராக ஒரு குண்டும், தயார் நிலையில் இல்லாத நிலையில் மற்றொரு குண்டும் இருப்பது கண்டறியப்பட்டது. மறவர்சாவடியில் உள்ள பட்டறைக்கு விரைந்து வந்த போலீசார் பார்சலை கைப்பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். முஸ்லிம் பிரமுகர் ஒருவருக்கு வெடிக்குண்டு பார்சல் அனுப்பியதன் பின்னணியில் ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் கைவரிசை இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே போலீஸார் தங்களது விசாரணையை அவர்கள் பக்கம் திருப்புவார்களா? என கேள்வி எழுந்துள்ளது.

ஆகஸ்ட் 04, 2012

எத்தனை வழக்கு போட்டாலும் அஞ்சமாட்டோம்!-MRK பன்னீர்செல்வம்

கடலூர்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளதை தொடர்ந்து கடலூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், அவரது மனைவி செந்தமிழ்செல்வி, மகன் கதிரவன் உள்ளிட்டோர் மீது மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 3.10.2011 அன்று வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணை தொடர்பாக மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நேரில் ஆஜராக உத்தரவிட்டு 3 பேருக்கும் சம்மன் அனுப்பியது. இதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் செந்தமிழ்செல்வி, கதிரவன் ஆகியோர் கடலூர் நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜராகினர்.

வழக்கறிஞர்கள் சிவராஜ், வனராசு, மனோகரன், சக்திவேல், சுந்தர் உள்ளிட்டவர்கள் முன்னாள் அமைச்சர் தரப்பில் வாதிட்டனர். நீதிபதி ராபர்ட் கென்னடி ரமேஷ் வழக்கை விசாரித்து வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தார். பின்னர் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதா அரசு திமுக முன்னாள் அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகள் மீது சொத்து குவிப்பு, நிலஅபகரிப்பு உள்ளிட்ட பொய் வழக்குகள் போட்டு திமுகவினர் தான் அதிகளவு சொத்து குவித்துள்ளனர் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் உருவாக்க நினைக்கிறார். இது அரசின் காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது. முதல்வராக இருந்த போது ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியவர் ரூ.60 கோடிக்கு ஊழல் செய்துள்ளார். இதை மறைக்க தற்பொழுது திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது சொத்து குவிப்பு வழக்கு போட்டுள்ளார். இதே நிலையில் வழக்கில் உள்ள ஜெயலலிதா வாய்தா வாங்கி வருகிறார். இதை மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். எவ்வளவு வழக்கு போட்டாலும் எதற்கும் அஞ்சாதவர்களாக இருப்போம்.

 தொடர்ந்து மக்கள் சேவையை செய்து வருவோம். தற்பொழுது முழுமையான சேவை கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆடிப்பெருக்கின் போது திமுக ஆட்சியில் ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால் தற்பொழுது காவிரியில் தண்ணீர் இல்லை. பொதுமக்களும், புதுமண தம்பதிகளும் வானத்தையும், பூமியையும்

ஆகஸ்ட் 02, 2012

லால்பேட்டையில் மடிக்கணிணி வழங்கும் விழா

லால்பேட்டை அரசினர் மேல் நிலைப்பள்ளியில் தமிழகஅரசின் விலையில்லா மடிக்கணிணி மற்றும் சீருடை வழங்கும் விழா இன்று 01.08.2012 காலை 10 மணியளவில் 189 மாணவர்களுக்கு மடிக்கணிணியும் 6ஆம்வகுப்பு முதல் 10 ஆம் வகுப்புவரை மாணவர்களுக்கு சீருடையும் வழங்கும் விழா பள்ளிவளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திருமதி P.மங்கையர் திலகம்,தலைமை ஆசிரியர் வரவேற்புரை நிகழ்த்தினார் சிறப்புரை:திரு K.A.பாண்டியன் அவர்கள் ஒ.பெ.தலைவர் குமராட்சி ஹாஜி A.R. சபியுல்லா பேரூராட்சி தலைவர் பெ.ஆ.கழக தலைவர் லால்பேட்டை, திருஞானசம்பந்தம் அவர்கள் செயல்அலுவலர் பேரூராட்சி லால்பேட்டை, மடிக்கணிணிசீருடைவழங்கி சிறப்புரை:திரு N.முருகுமாறன்.M.L.A அவர்கள் வழங்கினார்கள். நன்றியுரை ஆதித்தன் உதவி தலைமை ஆசிரியர் ஆ.மே.பள்ளி லால்பேட்டை, மற்றும்

புனே குண்டுவெடிப்பு:டிஃபன் பாக்ஸை எடுத்துச் சென்ற தயானந்த் பாட்டீல் கைது!

புனே:மஹராஷ்ட்ரா மாநிலம் புனே நகரத்தை நேற்று பீதியில்ஆழ்த்திய தொடர் குண்டுவெடிப்பில் டிஃபன்ஸ் பாக்ஸில் வெடிக்குண்டை எடுத்துச் சென்றபொழுது வெடித்ததால் காயமுற்று சிகிட்சை பெற்றுவரும் உள்ளூர் டெய்லரான தயானந்த் பாட்டீல் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். புனேயில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ஜங்லி மகராஜ் சாலையையொட்டிய பகுதியில் நேற்றிரவு, நான்கு இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதனால், புனே நகரமே அதிர்ச்சிக்கு உள்ளானது.

பாலகந்தர்வா கலையரங்கம், சினிமா தியேட்டர் மற்றும் தேனா வங்கி அருகிலும், கார்வாரே சவுக் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து வரிசையாக சக்தி குறைந்த வெடிகுண்டுகள் வெடித்தன. இதில், குப்பைத் தொட்டியில் ஒரு குண்டும், சைக்கிள் கேரியரில் ஒரு குண்டும் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த குண்டு வெடிப்புகள் நேற்றிரவு 7.28 முதல் 7.35 மணிக்குள் அடுத்தடுத்து நிகழ்ந்தன. இதில் ஒருவர் படுகாயமடைந்தார். மற்றொரு நபர் டிஃபன் பாக்ஸில் வெடிக்குண்டை தூக்கிச் சென்றபொழுது வெடித்ததில் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இவர் தற்பொழுது மருத்துவமனையில் சிகிட்சைப் பெற்று வருகிறார். அவரது பெயர் தயானந்த் பாட்டீல். உள்ளூரில் டெய்லராக பணிபுரிகிறாராம். இந்நிலையில் தயானந்த் பாட்டீல் அப்பாவி என டிஎன்ஏ என்ற பத்திரிகை கூறுகிறது. தயானந்த் பாட்டீல், குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் டிஃபன் பாக்ஸையும், வாட்டர் பாட்டில் பேக்கையும் விட்டுச் சென்றாராம். சில நிமிடங்கள் கழித்து அதனை எடுத்து வரும்பொழுது பேக் கனமாக இருப்பதை உணர்ந்து திறந்து பார்க்க முயன்றபொழுது குண்டுவெடித்ததாக தெரிவித்தாராம். இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. இப்பத்திரிகை இச்சம்பவத்தை திசை திருப்புகிறதா? என்பதும் சந்தேகமாக உள்ளது.

 மலேகானில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் 2006-ஆம் ஆண்டு நடத்திய குண்டுவெடிப்பில் வெடிக்குண்டுகள் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்தன. அதே பாணியில்தான் புனேயில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. மேலும் அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பைத்