Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 31, 2013

கழிவறை இருந்தால் மட்டுமே திருமணம்! புதிய சட்டம் அமல்

மத்திய பிரதேசத்தில் மாப்பிள்ளை வீட்டில் கழிவறை இருந்தால் மட்டுமே திருமணம் நடக்கும் என்ற சட்டமானது கொண்டுவரப்பட்டுள்ளது.

மணமகனின் வீட்டில் கட்டாயம் கழிவறை இருக்க வேண்டும் என்றும் அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்து அதை அதிகாரிகளிடம் காட்டி ஒப்புதல் பெற்ற பிறகே திருமணம் செய்து கொள்ள முடியும் என்றும் நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிய சட்டம் உள்ளது.மத்திய பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தில் திருமணம் செய்துகொள்ள விரும்பும் நபர் தனது வீட்டில் உள்ள கழிவறையில் நின்று புகைப்படம் எடுத்து அதை அதிகாரிகளிடம் காண்பிக்காவிட்டால் அவருக்கு திருமணத்திற்கான

டிப்ளமோ சிவில் எஞ்சினியர்களுக்கான பணிகள்‏!

Dredging Corporation of India நிறுவனத்தில் ஜூனியர் சர்வேயர் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதி வாந்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 13

பணி:ஜூனியர் சர்வேயர் டிரெய்னி

கல்வித் தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் சிவில் அல்லது சர்வே என்ஜினீயரிங் துறையில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 25-க்குள் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.200.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு

கடலூர் மாவட்டத்தில் கனமழை!

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் பரவலாக நேற்று முன்தினம் மாலை துவங்கி நேற்று காலை வரை விடிய, விடிய இடியுடன் கூடிய கனமழை பெய்தது. ஒரே நாள் இரவில் 8 செ.மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது. கடந்த 4 நாட்களாக வழக்கத்துக்கு மாறாக சுட்டெரித்த வெயிலும், அதனால் ஏற்பட்ட அனலின் தாக்கமும் கனமழையால் தணிந்தது. இதனால் விவசாயிகளும், மக்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையளவு விவரம்: 

சிதம்பரம் - 20
மி.மீ கடலூர் - 10.4 மி.மீ
பரங்கிப்பேட்டை - 23 மி.மீ
லால்பேட்டை - 7 மி.மீ
காட்டுமன்னார்கோவில் - 7 மி.மீ
சேத்தியாத்தோப்பு - 5.2 மி.மீ
விருத்தாசலம்

கடலூரில் கண்தான விழிப்புணர்வு முகாம் கலெக்டர் கிர்லோஷ்குமார் பங்கேற்பு!

கடலூர்- கடலூரில் நடந்த கண்தான விழிப்புணர்வு முகாமை கலெக்டர் கிர்லோஷ்குமார் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

கண்தான விழிப்புணர்வு முகாம் தேசிய கண்ணொளி இழப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் சார்பில் 28–வது தேசிய கண்தான இருவார விழா ஆகஸ்டு 25–ந் தேதி தொடங்கி வருகிற 8–ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் ஜே.சி.ஐ. கடலூர் விடியல் ஆகியவை இணைந்து கடலூர் பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையம் அருகில் கண்தான விழிப்புணர்வு கையொப்பமிடும் முகாமை நேற்று நடத்தின. முகாமுக்கு தலைமை தாங்கிய கலெக்டர் கிர்லோஷ்குமார் கையெழுத்திட்டு இதைத் தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து கண்தானம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 425 பேர் கையெழுத்திட்டனர் இதில் இணை இயக்குனர் (நலப்பணிகள்) கோவிந்தராஜன், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஜவகர்லால், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு

ஆகஸ்ட் 29, 2013

காட்டுமன்னார்குடியில் நடைபெற்ற மராத்தான் போட்டி!எம் எல் எ முருகமாறன் தொடக்கிவைத்தார்


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் உடற்கல்வி துறை சார்பில் மினி மராத்தான் ஓட்டப் போட்டி காட்டுமன்னார்கோயில் பேருந்து நிலையம் அருகில் தொடங்கியது.இதில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் என்.முருகுமாறன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார் இறுதியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கி பரிசு வழங்கினர்.அருகில் காட்டுமன்னார்கோயில் பேரூராட்சி மன்ற தலைவர் எம்ஜிஆர்தாசன் உடற்கல்வி ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்கள்.


நன்றி: முருகமாறன் முக நூல் 

இட்லி சாம்பார் தான் மிகச்சிறந்த காலை உணவு!

மும்பை : தமிழகவாசிகளை வட இந்தியர்கள் கிண்டல் செய்ய உபயோகப்படுத்தும் சொல்லான இட்லி சாம்பார் தான் உண்மையிலேயே மிகச் சிறந்த காலை உணவு என ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள மக்களின் காலை உணவு பழக்கம் குறித்து மும்பையில் உள்ள நிர்மலா நிகேதன் அறிவியல் கல்லூரி ஆய்வு நடத்தியது. இவ்வாய்வில் தமிழகத்தில் இட்லி , சாம்பார் தான் சத்தான உணவு என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவ்வாய்வில் 8 முதல் 40 வயது வரை உள்ள 3600 நபர்களின் உணவு பழக்கவழக்கங்கள் ஆரயாப்பட்டது. ஆராய்ச்சியின் முடிவில் நிறைய பேர் காலை உணவை தவிர்ப்பதும் சத்தற்ற உணவை சாப்பிடுவதும் தெரிய வந்துள்ளது. மும்பை, டெல்லி, கொல்கத்தாவில் முறையே 79%, 76%, 75% மக்கள் சத்தற்ற உணவை சாப்பிடுகின்றனர் என்றும் சென்னையில் 60% மக்கள் சத்தற்ற உணவை சாப்பிடுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மும்பையில் காலை உணவாக வெறும் கார்போஹைடிரேடுகள் நிறைந்த ரொட்டி மட்டுமே சாப்பிடுகின்றனர் என்றும் கொல்கத்தாவில் காலை உணவிலும் கார்போஹைடிரேடுகள் அதிகம் நிறைந்த மைதாவே முக்கிய உணவு பொருளாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவ்வுணவில் நார்சத்து அறவே இல்லை என்றும் புரோட்டின் குறைந்த அளவே உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தில்லி மக்கள் பயன்படுத்தும் காலை உணவில் எண்ணைய் கூடுதலாக

ஏடிஎம், மொபைல் பேங்கிங் வசதிகளுடன் கலக்கப் போகுது போஸ்ட் ஆபீஸ்!

வங்கிகளை போலவே போஸ்ட் ஆபீஸ்களிலும் சேமிப்பு கணக்கு தொடங்க முடியும். வங்கிகளை காட்டிலும் போஸ்ட் ஆபீசில் கணக்கு தொடங்கினால், டெபாசிட் செய்யும் தொகைக்கு அதிக வட்டி தருகிறார்கள். ஆனாலும் போஸ்ட் ஆபீசில் சேமிப்பு கணக்கு தொடங்க பெரும்பாலானோர் முன்வருவதில்லை. 

காரணம்... இன்னும் ஹைதர் அலி, காலத்தை போல எந்த போஸ்ட் ஆபீசில் கணக்கு வைத்திருக்கிறோமோ அங்கு மட்டுமே நமது கணக்கில் பணத்தை போடவும் எடுக்கவும் முடியும் என்பதுதான். ஏடிஎம், இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் என எந்த மாடர்ன் வசதியும் கிடையாது. நீண்ட வரிசையில் நின்றுதான் பணத்தை கட்டவும் எடுக்கவும் வேண்டும். பென்சன் வாங்கும் சீனியர் சிட்டிசன்கள் மட்டும்தான் பெரும்பாலும் போஸ்ட் ஆபீசில் கணக்கு வைத்திருக்கிறார்கள். இதுதான் தற்போதைய போஸ்ட் ஆபீசின் நிலை. ஆனால் இது அடுத்த மாதம் முதல் தலைகீழாக மாற இருக்கிறது. ஆம்... தனியார் வங்கிகளுக்கு இணையாக போஸ்ட் ஆபீஸ்களும் ஹைடெக் ஆக மாற இருக்கிறது.

கோர் பேங்கிங் சிஸ்டம் எனப்படும் அனைத்து போஸ்ட் ஆபீஸ்களும் கம்ப்யூட்டர் மூலம் இணைக்கும் விதமான நெட்வொர்க் வசதி கொண்டு வரப் போகிறார்கள். முதல் கட்டமாக இந்த வசதி சென்னையில் அண்ணாசாலை தலைமை தபால் நிலையம், மயிலாப்பூர், தி.நகர், தாம்பரம் ஆகிய 4 போஸ்ட் ஆபீசில் கொண்டு வரப்படுகிறது. அதாவது, 4 போஸ்ட் ஆபீசில் எந்த இடத்தில் கணக்கு வைத்திருந்தாலும், அதை 4 போஸ்ட் ஆபீசில் எங்கு வேண்டுமானாலும் சரி பார்க்கலாம், பணம் கட்டலாம். அதோடு, அக்டோபர் மாதம் முதல் இந்த 4 போஸ்ட் ஆபீஸ்களிலும் ஏடிஎம் வசதியும் அமைக்கப்பட உள்ளது.போஸ்ட் ஆபீஸ்களில் கணக்கு வைத்திருப்போருக்கு விரைவில் ஏடிஎம் கார்டு வழங்கப்படும் இதன் மூலம் 2.5 லட்சம் வாடிக்கையாளர்கள் பயன் அடைவார்கள்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘4 போஸ்ட் ஆபீஸ்கள் தவிர மற்ற போஸ்ட் ஆபீஸ்களிலும் கோர் பேங்கிங் சிஸ்டமை (சிபிஎஸ்) சென்னை மற்றும் அதன் புறநகர்களில் உள்ள 110 போஸ்ட் ஆபீஸ்களில் இன்போசிஸ் நிறுவனத்துடன் இணைந்து

தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு; மின் பற்றாக்குறை!

காற்றாலை மின் உற்பத்தி கடந்த சில தினங்களில் திடீரென குறைந்ததால் தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் 2 ஆயிரம் மெகாவாட்டுக்கு அதிகமாக இருந்த காற்றாலை மின் உற்பத்தி புதன்கிழமை 254 மெகாவாட்டாகக் குறைந்தது. இதனையடுத்து, புதன்கிழமை காலையில் 1,703 மெகாவாட் அளவுக்கு மின் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த மின் பற்றாக்குறையைச் சரிசெய்ய பல இடங்களில் 2 முதல் 4 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்மேற்கு பருவமழை தொடங்கியவுடன் காற்றாலை மின் உற்பத்தி 3 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரித்தது. இதையடுத்து, தமிழகத்தில் அமலிலிருந்த மின்வெட்டு ஜூன் 1-ம் தேதி முதல் முற்றிலும் நீக்கப்பட்டது. அதோடு, பருவமழை காரணமாக நீர் மின் நிலையங்கள் மூலம் 1,600 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இதனால், தொழில் நிறுவனங்களுக்கான 40 சதவீத மின்வெட்டும் ரத்து செய்யப்பட்டது. செப்டம்பர் மாதத்தோடு காற்றாலை மின் உற்பத்தி குறையும் என்பதால், அதற்குள்ளாக வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் திறன் கொண்ட 2 புதிய யூனிட்டுகள், வல்லூர் அனல் மின் நிலையத்தில் புதிய யூனிட் போன்றவற்றின் மூலம் தேவையான மின்சாரத்தைப் பெறவும் பணிகள் நடைபெற்று வந்தன.

ஓரிரு நாள்களிலேயே காற்றாலை மின் உற்பத்தி 90 சதவீதம் அளவுக்குக் குறைந்துவிட்டதால், தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. நீர் மின் நிலையங்கள் மூலம் 1,600 மெகாவாட்டுக்கும் அதிகமாக இருந்த மின் உற்பத்தியும் இப்போது 1,189 மெகாவாட் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. எனவே, இரண்டு மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை மின்வெட்டு

ஆகஸ்ட் 27, 2013

இந்த ஆண்டுக்கான ஹஜ் சேவைக்கு தயார் சவுதி ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

இந்த ஆண்டுக்கான ஹஜ் சேவை செய்ய தயாராக இருப்பதாக சவுதி ஏர்லைன்ஸ் விமான அதிகாரி அப்துல்லாஹ் அல் அஜ்கர் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது.

இந்த ஆண்டு 1.2 மில்லியன் ஹாஜிகள் புனித பயணத்திற்காக வரவிருப்பதாகவும் அதற்கென முன் எப்போதுமில்லாதவகையில் 34 விமானங்கள் கூடுதலாக விட தீர்மானிக்கப்பட்டிருகிறது , ஒவ்வொரு விமானத்திலும் குறைந்தது 300 முதல் 400 வரையிலான பயணிகள் பயனிக்கமுடியும் என்று கூறினார்.மேலும் விமாங்கள் தாமதமாவதற்கு பயணிகளின் போர்டிங்

10, 12ம் வகுப்பு மாணவர்களின் பெயர், பிறந்த தேதி ஆன்-லைனில் பதிவு!

கடலூர், : நடப்பு கல்வியாண்டில் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ்-2 பொது தேர்வு எழுதவுள்ள மாணவ- மாணவிகளின் பெயர், பிறந்த தேதியை ஆன்-லைனில் பெற்றோர் பள்ளிக்கு நேரடியாக வந்து பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ்-2 பொது தேர்வு எழுதவுள்ள மாணவ- மாணவிகளின் பெயர், பிறந்த தேதி முதன் முறையாக ஆன்-லைனில் பதிவு செய்யப்படுகிறது. இது தொடர்பான பெயர் பட்டியல் தயாரிப்பு பணி ஆலோசனை கூட்டம் கடலூரில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோசப் ஆண்டனிராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் மல்லிகா, சிஇஓ நேர்முக உதவியாளர் ராஜேந்திரன் மற்றும் 406 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டில் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ்-2 பொது தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர், பிறந்த தேதியை ஆன்-லைனில் பெற்றோர் பள்ளிக்கு நேரடியாக வந்து பதிவு செய்ய வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து இன்று (26ம் தேதி) முதல் அடுத்த மாதம் 7ம் தேதிக்குள் பெயர் பட்டியல் தயாரிப்பு பணியை முடிக்க அனைத்து பள்ளி நிர்வாகிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பெற்றோர்களிடம் இருந்து மாணவ- மாணவிகள் தொடர்பான பெயர், பிறந்த தேதி மாற்றம் இருந்தால்

புத்தூர் காவல் நிலையத்தில் வாகன ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு முகாம்!

காட்டுமன்னார்கோவில் பகுதியில் சாலை விபத்துக்கள் அதிக எண்ணிக்கையில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் அதிகம் பேர் அதிவேகத்தில் சென்று விபத்துக்குள்ளாகின்றனர். தற்போது ஆட்டோக்களை விட மினிவேன் பயன்பாடு அதிக அளவு உள்ளது. இந்த வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை சரியாக பயன் படுத்துவது இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதை கருத்தில் கொண்டு புத்தூர் காவல் நிலையத்தில் வாகன ஓட்டிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு தலைமையில் நடந்தது.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பால கிருஷ்ணன், மூர்த்தி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வாகனங்களை அதிவேகமாக ஓட்டக் கூடாது. குடித்து விட்டு வாகனங்களை இயக்கக் கூடாது. பள்ளிகள் மற்றும் மருத்துவ மனைகளுக்கு அருகே மிக எச்சரிக்கையாக ஓட்ட வேண்டும். அளவுக்கு அதிகமாக பயணிகளை

சிதம்பரத்தில் இரு போலி மருத்துவர்கள் கைது!!

சிதம்பரம் நகரில் பொதுமக்களுக்கு சிகிச்சையளித்து வந்த போலி மருத்துவர்கள் இருவரை டி.எஸ்.பி. ராஜாராம் தலைமையிலான தனிப்படையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.

சிதம்பரம் நகரில் மருத்துவம் படிக்காமல் சிகிச்சையளிப்பதாக டி.எஸ்.பி. ராஜாராமுக்கு தகவல் வந்தது. இதையடுத்து தனிப்படை அமைத்து தீவிர சோதனை மேற்கொண்டார். அப்போது மருத்துவம் படித்த சான்றிதழ் இல்லாமல் சிதம்பரம் வேங்கான்தெருவில் கிளினிக் மற்றும் மருந்துக் கடை வைத்து சிகிச்சை அளித்து வந்த சங்கர் (38), பொன்னம்பல நகரில் மருந்துக் கடை வைத்து சிகிச்சையளித்து வந்த சரவணன் (38) ஆகிய இருவரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து மருந்துகள், மாத்திரைகள் மற்றும் சிரஞ்சுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார். போலீஸார் விசாரணையில் போலி டாக்டர் சங்கர் 10-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார் என்பதும், மற்றொருவரான

ஆகஸ்ட் 26, 2013

சிதம்பரம் நகரில் வாகன நிறுத்தங்கள் முறைப்படுத்தப்படுமா?

சிதம்பரம் நகரில் முறையான வாகன நிறுத்தங்கள் இல்லாததால் வாகனங்கள் சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு கடும் போக்குவரத்து நெரிசலை உண்டாக்குகிறது.

சிதம்பரம் நகரில் மொத்தம் 500-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களும், நூற்றுக்கும் மேற்பட்ட மினி லாரிகளும் இயக்கப்படுகின்றன. இவை, சாலைகளில் ஒரு வழிப்பாதையைக் கடைபிடிக்காமல் குறுக்கும், நெடுக்குமாக எவ்விதக் கட்டுப்பாடுமின்றி இயக்கப்படுகின்றன. இதனால் சிதம்பரம் நகரில் சீரானப் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மேல வீதி மற்றும் தெற்குரத வீதி உள்ளிட்ட இடங்களில் சாலைகளின் நடுப்பகுதி வரை ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, கீழரதவீதியில் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

வாகன நிறுத்தங்கள் இல்லை... சிதம்பரம் நகரில் மேலரத வீதி, தெற்குரத வீதி, வேணுகோபால்பிள்ளைத் தெரு, எஸ்.பி.கோயில் தெரு ஆகியப் பகுதிகளில் ஏராளமான வணிக வளாகங்கள், ஹோட்டல்கள் உள்ளன. எனவே இப்பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். ஆனால், இங்குள்ள ஹோட்டல் மற்றும் வணிக வளாகங்களில் முறையான வாகன நிறுத்தங்கள்

நிரம்பியது வீராணம் ஏரி.. பாசனத்துக்கு திறப்பு!

கடலூர்: தமிழகத்தின் முக்கிய ஏரியான வீராணம் ஏரி ஞாயிற்றுக்கிழமை மாலை 46.50 அடியை எட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து பாசனத்துக்காக இன்று ஏரி திறந்துவிடப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

கடலூர், காட்டுமன்னார்குடி, சிதம்பரம் பகுதி விவசாயிகளுக்கு இது மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. காவிரி டெல்டா கடைமடைப் பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்தது. காவிரியில் தண்ணீர் இல்லாததால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் கடந்த மூன்று மாதங்களாக ஏரி, குளங்கள், ஆறுகள், வடிகால் வாய்க்கால்கள் வறண்டு போயின. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி முற்றிலும் வறண்டு போனது. இதனால் ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் புதிய வீராணம் திட்டம் மூலம் சென்னைக்குக் குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு கர்நாடகத்திலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டு மேட்டூர் அணை நிரம்பியதால் காவிரியில் நீர் திறக்கப்பட்டு கீழணையிலிருந்து வடவாறு மூலமாக வீராணத்துக்கு நீர் அனுப்பப்பட்டது. வறண்டு போய் இருந்த வீராணம் ஏரி நிரம்பியதால் மீண்டும் சென்னை குடிநீருக்கு ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் நீர் அனுப்பும் பணி தொடங்கியது. தற்போது ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 46.50 அடியை

ஆகஸ்ட் 25, 2013

டிராவல் மற்றும் சுற்றுலா மேலாண்மையில் முதுநிலை படிப்பு!!

என்ன நடந்தாலும் சரி, மக்கள் பயணிப்பதை மட்டும் நிறுத்தவே மாட்டார்கள். வளர்ந்த நாடாயினும் சரி, வளரும் நாடாயினும் சரி, சுற்றுலா மற்றும் உபசரிப்பு துறை நல்ல வருமானம் தரும் ஒன்றாக இருக்கிறது. இன்றைய நிலையில், அத்துறையின் மொத்த மதிப்பு, தோராயமாக 1,800 கோடி டாலர்கள். மேலும், ஏறக்குறைய 10 கோடி மக்கள் இத்துறையில் பணிபுரிகிறார்கள் என்று ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது.

இதுதவிர அடுத்த 10 ஆண்டுகளில் 6.5 கோடி புதிய பணி வாய்ப்புகள் இத்துறையில் ஏற்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டிராவல் மற்றும் சுற்றுலா மேலாண்மை படிப்பின் நோக்கம் சுற்றுலா மற்றும் உபசரிப்பு தொழில்களில் நடுநிலை அளவிலான மற்றும் உயர்நிலை அளவிலான மேலாளர்களை இப்படிப்பு உருவாக்குகிறது. மேலாண்மை நுட்பங்களைப் பற்றிய பிராக்டிகல் அம்சங்கள் மட்டுமின்றி, தேவையான தியரி அம்சங்களையும் கொண்டதாக இப்படிப்பு திகழ்கிறது. இந்த வகையில், இப்படிப்பு வேறுசில பொது மேலாண்மை படிப்புகளைவிட வேறுபட்டு நிற்கிறது.

சுற்றுலா மற்றும் உபசரிப்பு தொழில்துறையில் புதிதுபுதிதாக ஏற்படும் தேவைகள் மற்றும் சவால்களை திறம்பட சமாளிக்கும் வகையிலான நிபுணர்களை உருவாக்குவது இப்படிப்பின் நோக்கம். ஒருவர் கல்வி நிறுவனப் பணியில் இருந்தாலும் சரி அல்லது நடைமுறை தொழில்துறையில் இருந்தாலும் சரி அவர்கள் இருவருக்கும் சுற்றுலா மற்றும் உபசரிப்பு துறையில் ஆராய்ச்சிகளை

ஆகஸ்ட் 24, 2013

கடலூர் மாவட்டத்திற்கு உள்ள உரிமையை பெற்றிடவேண்டும் -விவசாயிகள்

கடலூர்:காவிரியில் கடலூர் மாவட்டத்திற்கு உள்ள உரிமையை பெற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைகேட்புக் கூட்டத்தில் கலெக்டரிடம் முறையிட்டார்.

கடலூரில், நேற்று கலெக்டர் கிர்லோஷ்குமார் தலைமையில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது.கூட்டத்தில் மேட்டூர் அணையிலிருந்து கல்லணைக்கு வந்து சேரும் காவிரி நீரில் 10 சதவீதம் கீழணை பாசனத்திற்கு திறந்து விட வேண்டும். ஆனால் கல்லணையை நிர்வகிக்கும் திருச்சி கோட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள்  தங்கள் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளான திருச்சி, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களுக்கு உரிய அளவில் திறந்து விடுகின்றனர். ஆனால், சென்னைக் கோட்டத்தைச் சேர்ந்த கீழணை பாசனத்திற்கு மிகக் குறைவாக திறந்து விடுகின்றனர். நேற்று முன்தினம் மேட்டூரில் இருந்து கல்லணைக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

அதில், கீழணைப் பாசனத்திற்காக கல்லணையில் இருந்து 1,500 கன அடிநீர் திறந்து விட வேண்டும். ஆனால், 304 கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது.இந்த நீர், 81 கி.மீ., தூரத்தைக் கடந்து கீழணைக்கு சொற்ப அளவே வருகிறது. இதுவே, கல்லணை முதல் கீழணை வரையுள்ள 81 கி.மீ., தூரத்தில் 7 மணல் குவாரிகள் செயல்படுகிறது. இங்குள்ள பள்ளங்கள் நிரம்பி வர வேண்டும். மேலும் இப்பகுதியில் தான் வேதாரண்யம், தஞ்சை, கும்பகோணம், அரியலூர், சிதம்பரம் பகுதி கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கான ஆழ்குழாய் கிணறுகள்

மியான்மரில் ஐ.நா.தூதர் மீது தாக்குதல் நடத்திய புத்த தீவிரவாதிகள்!!

மியான்மர் நாட்டில் கடந்த மார்ச் மாதம் முஸ்லிகளுக்கு எதிராக புத்த மதத்தினர் வன்முறையில் இறங்கினர். இதில் குறைந்தது 43 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான வீடுகள் நொறுக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் இடம் பெயரும் நிலை ஏற்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஐ.நா. மனித உரிமைகள் தூதர் டோம்தாஸ் ஓஜியா குயின்டானா, கடந்த திங்கட்கிழமை மியான்மரில் பயணம் மேற்கொண்டார். மெய்க்டிலா என்ற இடத்தில் அவரது காரை 200–க்கும் அதிகமானோரை கொண்ட வன்முறைக் கும்பல் ஒன்று வழி மறித்து தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் தூதர் டோம் தாஸ் கூறுகையில், ‘‘என்னை போலீசாரால் பாதுகாக்க முடியவில்லை. இதே போன்றுதான் அந்த வன்முறை கலவரங்களின் போதும் நடந்திருக்க வேண்டும்’’ என்றார். இந்த தாக்குதலை தொடர்ந்து விசாரணை நடத்த

மதுஅருந்துமிடமாக மாறிய பரங்கிப்பேட்டை பஸ் நிலையம்!

பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்தில் மது அருந்துமிடமாக மாறியுள்ளது இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரங்கிப்பேட்டை பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதுதவிர பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், போலீஸ் நிலையம், நீதிமன்றம், பத்திரபதிவு அலுவலகம், தொலைபேசி நிலையம், கிராம நிர்வாக அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், தீயணைப்பு நிலையம், தபால் நிலையம், அரசு வங்கிகள், தனியார் வங்கிகள், அரசு மருத்துவமனை உள்ளிட்ட ஏராளமான அரசு அலுவலங்கள் உள்ளது.

பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்துக்கு அன்றாட அலுவல்களுக்காக பரங்கிப்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள ஏராளமான கிராம மக்கள் வந்து செல்வது வழக்கம். மேலும் பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்துக்கு கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்கள் தினமும் வந்து செல்கின்றனர். பொது மக்கள் அதிகம் பயன்படுத்து இந்த பஸ் நிலையத்திற்குள் 2 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால், அங்கு குடிப்பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கி பஸ் நிலைய வளாகத்திலும்,அங்குள்ள பெட்டிக் கடைகளிலும் மது அருந்தும் இடமாக பஸ் நிலையம்

ஆகஸ்ட் 22, 2013

கல்வி உதவித் தொகை குறித்த தகவல்களை தரும் இணையதளங்கள்!

மாணவர்கள் தங்கள் படிப்பிற்கு ஆகும் செலவை பல்வேறு முறைகளில் ஈடு செய்கின்றனர். அதில் ஒன்றாக கல்வி உதவித் தொகை விளங்குகிறது. படிக்கும் மாணவர்களின் கல்வித் திறன், இனம், நாடு, எடுத்திருக்கும் படிப்பு ஆகியவற்ற்ற்றை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு உதவித் தொகைகள் வழங்கபடுகின்றன. பெரிய பெரிய நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் கூட கல்வி உதவித் தொகையை வழங்கி வருகின்றன. அந்த வகையில் கல்வி உதவித் தொகை குறித்த தகவல்களை தரும் சில இணையதளங்களைப் பற்றி இங்கு அறிவோம்.

 www.scholarshipsinindia.com

 www.education.nic.in

 www.scholarship-positions.com 

 www.studyabroadfunding.org

 www.scholarships.com

 www.scholarshipnet.info

 www.eastchance.com

 www.financialaidtips.org

இந்த இணையதளங்களில்,

மங்கலம்பேட்டையில் பேருந்து நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை!

விருத்தாசலம்:விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டை பேரூராட்சி உள்ளது. முதல் நிலை பேரூராட்சியான மங்கலம்பேட்டையில் 15 வார்டுகள் இருக்கின்றது. இதில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

மங்கலம்பேட்டையில் பேரூராட்சி அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் உயர் நிலைப்பள்ளி, பல தனியார் கல்வி நிறுவனங்கள், காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், தனியார், கூட்டுறவு வங்கிகள், மின்சார வாரிய அலுவலகம், கால்நடை மருத்துவமனை என பல அலுவலகங்கள் உள்ளது. இப்படி பல தனியார், அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு என தினம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மங்கலம்பேட்டைக்கு வருகின்றனர். மங்கலம்பேட்டையை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களின் தேவைகளுக்கு தினம் இங்குதான் வர வேண்டும். இப்படி பேரூராட்சியாக உள்ள மங்கலம்பேட்டையில் பேருந்து நிலையம் இல்லை. இதனால் தினம் நகருக்கு வரும் பொதுமக்கள் பெரும் சிரமப்படும் நிலை உள்ளது.

பேருந்து நிலையம் இல்லாததால் பொதுமக்கள் மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள மிக குறுகிய இடமான கடைத் தெருவில் நின்று பேருந்து ஏற வேண்டிய நிலை உள்ளது. பேருந்து ஏறும் இடத்தில் பயணிகள் நிழற்குடை என எவ்வித அடிப்படை வசதியும் இல்லை, இதனால் மழைக்காலங்களில் மழையில் நனைந்துகொண்டும், வெயிலிலும் அவதிப்படும் நிலை

ஆகஸ்ட் 21, 2013

சிரியாவில் பஷார் அரசின் அட்டுழியம் - ரசாயன தாக்குதலில் 213 பேர் பரிதாப பலி!!

சிரியாவில் பஷர் அல்-ஆசாத் குடும்பத்தினர் கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் பதவி விலகி ஜனநாயக ஆட்சி மலரவும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது அது கலவரமாக மாறி 3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

போராட்டக்காரர்கள் ராணுவத்துடன் போரிட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். அதை அதிபர் ஆசாத் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து ராணுவத்தை ஏவி பொதுமக்களை கொன்று குவித்து வருகிறார். ராணுவம் நடத்தி வரும் வான் வழி, ஏவுகணை மற்றும் குண்டு வீச்சு தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். உயிர் பிழைத்த பலர் உடல் உறுப்புகள் சிதைந்து ஊனமுற்றவர்களாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிரியாவை விட்டு வெளியேறி அண்டை நாடுகளான துருக்கி, லெபனானில் தஞ்சம் அடைந்துள்ளனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர்.

சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. சபை கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. 29-வது மாதத்தை எட்டியுள்ள இந்த போராட்டத்தில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், இன்று காலை தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள அய்ன் டர்மா, சமால்கா, ஜோபர் ஆகிய பகுதிகளில் அதிபரின் படைகள் ரசாயன குண்டுகளை வீசி பயங்கர தாக்குதலில் ஈடுபட்டன. சுவாசத்தின் மூலம் நுரையீரலுக்குள் ஊடுருவி நரம்பு மண்டலத்தை முற்றிலுமாக செயலிழக்க வைக்கும் தடை செய்யப்பட்ட நச்சுப்பொருள் இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, குழந்தைகள், பெண்கள் உள்பட 213 பேர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

அவர்களின் உடல் உறுப்புகள் மிகவும் சிதைந்து போய் இருப்பதாகவும் பலரது கருவிழிகள் உருகி வழிந்த நிலையிலும் பலரது வாயிலிருந்து நுரை தள்ளியபடி உள்ளதாகவும் ஆஸ்பத்திரி பணியாளர்கள்

மோசமான நிலையில் பிச்சாவரம் நுழைவுவாயில் சாலை!

சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையத்தின் நுழைவு வாயில் சாலையில் நீர் தேங்கி குட்டை போல் உள்ளதால், அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சிதம்பரத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது பிச்சாவரம் வனப்பகுதி. சென்னை, புதுவை, கடலூர் மார்க்கமாக வாகனங்களில் வரும் சுற்றுலாப் பயணிகள் சிதம்பரத்துக்கு வராமல் பி.முட்லூர் அருகே பிரியும் சிதம்பரம் நகருக்கு வரும் புறவழிச் சாலையில் வழியாக வந்து பாதியில் பிரியும் கிள்ளை செல்லும் சாலையின் வழியாக பிச்சாவரத்துக்கு செல்லலாம். பிச்சாவரத்தின் கடற்கரை நீளம் 6 கி.மீ. மேற்கே உப்பனாறும், தெற்கே கீழத்திருக்கழிப்பாலை கிராமமும், வடக்கே சுரபுண்ணைக் காடுகளும் எல்லைகளாக உள்ளன. பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ளது.

இக்காடுகளில் உப்பங்கழிகளும், அடர்த்தியான மாங்குரோவ் செடிகளும் உள்ளன. கடலோரத்தில் உப்பனாற்றில் உள்ள இக்காடுகளில் 4400 கால்வாய்கள் உள்ளன. இக்காடுகளை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர். பிச்சாவரத்தில் உள்ள அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகத்தில் படகுகுழாமை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தி வருகிறது. தினந்தோறும் வரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி மூலம் சுரபுண்ணைக் காடுகளை ரசித்து வருகின்றனர்.

இந்த சுற்றுலா வளர்ச்சி மையத்தின் நுழைவு வாயில் பகுதியில் சாலையில் நீர் தேங்கி குட்டைபோல் காட்சியளிக்கிறது. அந்த குட்டையை கடந்துதான் படகுகுழாமுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லும் நிலை

இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை:மத்திய அரசு சர்வே!

டெல்லி: இந்தியாவில் உள்ள பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களில் முஸ்லிம்கள்தான் மிகவும் ஏழையாக இருப்பதாக மத்திய அரசு கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் உள்ள பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்து மத்திய அரசு கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. அதில் கூறப்பட்டுள்ள கணக்கெடுப்பு முடிவு வருமாறு

முஸ்லிம்கள்: இருப்பதிலேயே முஸ்லிம்கள் தான் மிகவும் ஏழையாக உள்ளார்களாம். அவர்களில் தனிநபர் மீதான ஒரு நாள் சராசரி செலவு ரூ.32.66 ஆகும்.

சீக்கியர்கள்: சீக்கியர்கள் பிற மதத்தவரை விட நன்றாக வாழ்கிறார்களாம். அவர்களில் தனிநபர் மீதான ஒரு நாள் சராசரி செலவு ரூ.55.30 ஆகும்.

இந்துக்கள், கிறிஸ்தவர்கள்: இந்துக்களில் தனிநபர் மீதான ஒரு நாள் சராசரி செலவு ரூ.37.50 ஆகவும், கிறிஸ்தவர்களின் செலவு ரூ. 51.43 ஆகவும் இருந்துள்ளது. மாதச் செலவு 2009-2010ல் சீக்கியர்களில் தனிநபர் மீதான சராசரி மாதச் செலவு ரூ.1, 659, அதே சமயம் முஸ்லிம்களின் செலவு ரூ.980 ஆக இருந்துள்ளது. கிராமங்கள் கிராமப்புறங்களில் முஸ்லிம்களில் தனிநபர் மீதான சராசரி மாதச் செலவு ரூ.833, இந்துக்களுக்கு

ஆகஸ்ட் 20, 2013

மத்திய அரசு பள்ளியில் 4043 ஆசிரியர் பணியிடங்கள் : பி.எட்., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசுப் பள்ளிகளான கேந்திர வித்யாலயாவில் காலியாக உள்ள 4043 முதுநிலை பட்டதாரி, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் நூலகர், இசை ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி பணியிடங் களுக்கு முதுநிலை பட்டத்துடன் பி.எட் அல்லது பட்டப்படிப்புடன் பி.எட்., படித்தவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள்: மொத்தம் 4043 இடங்கள். இவற்றில்
793 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும்,
1059 பட்டதாரி ஆசிரியர் பணியிடங் களும்,
2191 நூலகர், இசை ஆசிரியர், தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடம் உள்ளன.

1.முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்:

793. பாட வாரியாக காலியிடங்கள் விவரம்: ஆங்கிலம்85, இந்தி69, இயற்பியல்85, வேதியி யல்82, பொருளியல்56, வணிக வியல்94, கணிதம்91, உயிரியல்75, வரலாறு34, புவியியல்39, கம்ப் யூட்டர் சயின்ஸ்80. பயோ டெக்னா லஜி3. (இதில் 404 இடங்கள் பொதுப் பிரிவினருக்கும், எஸ்சி பிரிவுக்கு 118 இடங்களும், எஸ்டியினருக்கு 58 இடங்களும், ஓபிசியினருக்கு 213 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.). தகுதி: தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் மண்டல கல்லூரியில் சம்பந்தப்பட்ட பாடத்தில் இரண்டாண்டு எம்.எஸ்சி படிப்பு அல்லது சம்பந்தப்பட்ட பாடத்தில் 50 சதவீத தேர்ச்சியுடன் எம்.எஸ்சி பட்டம் மற்றும் பி.எட்., முடித்திருப்பதோடு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கற்றுத்தரும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

அ. கம்ப்யூட்டர் சயின்ஸ் முது நிலை ஆசிரியர்: தகுதி குறைந்தபட் சம் 50 சதவீத தேர்ச்சியுடன் கம்ப்யூட் டர் சயின்ஸ் அல்லது தகவல் தொழில்நுட்பவியல் பாடங்களில் பி.இ., அல்லது பி.டெக்., அல்லது டிப்ளமோ அல்லது ஏதேனும் ஒரு பி.இ., அல்லது பி.டெக் தகுதியுடன்

அமைச்சர்கள், விஐபிக்கள் வாகனங்களில் சிவப்பு சைரனை அகற்ற வேண்டும் - உச்சநீதிமன்றம்

அமைச்சர்கள், விஐபிக்கள் உள்ளிட்ட அனைவரது வாகனங்களிலும் சிவப்பு சைரன்  பயன்படுத்துவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். மற்றபடி, அரசியல் சட்ட பதவிகளில் உள்ளவர்கள் மட்டுமே வாகனங்களில் சைரனை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கார்களில் சைரனை பயன்படுத்துவதை முறைப்படுத்த வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, வி.கோபால கவுடா ஆகியோர் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய உள்துறை அமைச்சராக இருப்பவர்கள், கார்களில் சிவப்பு சைரன் விளக்கு பொருத்திக் கொள்ள அனுமதி உள்ளது. ஆனால், ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தபோது, தனக்கு சிவப்பு சைரன் விளக்கு, பாதுகாப்பு வாகனங்கள் எதுவும் தேவையில்லை என்று மறுத்தார். முரண்பட்டதாக இருந்தாலும் இது உண்மையான கூற்று.

இப்படி உயர் பதவியில் இருந்த அவரே மறுத்துள்ளபோது, சைரனை அமைச்சர்களும், விஐபிக்களும் பயன்படுத்த அனுமதிப்பது எந்த வகையில் நியாயம்? மக்கள்தான் அரசுக்கு வரிக்கு செலுத்துகின்றனர். அவர்கள்தான் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில், அவர்களும் கார்களில் சிவப்பு சைரன் விளக்கை பயன்படுத்த ஏன் அனுமதிக்கக்கூடாது? இந்த விஷயத்தில் உரிய உத்தரவை பிறப்பிக்க 4 வார காலம் அவகாசம் வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நீதிமன்றங்களின் உத்தரவுகளை எல்லாம் அரசு புறக்கணித்து வருகிறது. உடனடியாக விஐபி வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களிலும் சைரனை நீக்க வேண்டும். மேலும், சிவப்பு விளக்குகளை பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இது ஆங்கிலேயர் ஆட்சிக்கால பிரதிபலிப்பாக உள்ளது.

அரசியல்சட்ட பதவியில்

லால்பேட்டை அரசு பள்ளியில் 151 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி!

காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை அரசு மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது. இதற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், பேரூராட்சி மன்ற தலைவருமான சபியுல்லா தலைமை தாங்கினார்.

லால்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் நஜிர்அகமது, பேரூராட்சி கவுன்சிலர் ஷேக்தாவூத், ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் மங்கையர்திலகம் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. முருகுமாறன் கலந்து கொண்டு 151 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினார். உதவி தலைமை ஆசிரியை சுயசிங்கி, சத்துணவு பொறுப்பாளர் அன்பழகன்,

ஆகஸ்ட் 19, 2013

இஸ்லாமிய வங்கியியல் முறையில் நிதி நிறுவனம் நடத்த அனுமதி!- ரிசர்வ் வங்கி

திருவனந்தபுரம்: இஸ்லாமிய பொருளாதாரச் சட்டங்களின் அடிப்படையில் நிதி நிறுவனம் துவங்க கேரள அரசுக்கு இந்திய மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. சேரமான் ஃபினான்ஸியல் சர்வீஸ் லிமிட்டட் (CFSL) என்ற பெயரில் கேரள மாநில தொழில் வளர்ச்சி நிறுவனத்தால் நடத்தப்படும் நிதி நிறுவனம் Non-Banking Finance Company அடிப்படையில் இயங்கும். இந்நிறுவனத்திற்கு ரூ.40 கோடி நிதி திரட்ட முடியும் என்று கேரள அரசு நம்புகிறது.

இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் இயங்கும் இந்நிறுவனம் வட்டியை வசூலித்தல், வட்டி அளித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாது. இந்நிறுவனம்

பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) மரணம்!

சென்னை: பிரபல எழுத்தாளர், மனோதத்துவ நிபுணர், பேச்சாளர் பேராசிரியர் அப்துல்லாஹ் இன்று (19/08/2013) அதிகாலை மரணமடைந்தார். நுரையீரல் புற்றுநோயால் அவதிப்பட்ட பேராசிரியர் அப்துல்லாஹ், சில நாட்களுக்கு முன்பு சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிட்சை பெற்று வந்தார். நேற்று உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு வெண்டிலேட்டரில் அப்துல்லாஹ்வுக்கு சிகிட்சை அளிக்கப்பட்டது. சிகிட்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 1.30 மணியளவில் அவர் மரணமடைந்தார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று கொள்ளுமேடுXpress பிரார்த்தனை செய்கிறது.

சேசாசலம் எனும் இயற்பெயர் கொண்ட பெரியார்தாசன் 1949 ஆகஸ்ட் 21ம் நாள் சென்னை பெரம்பூரில்,

ஆகஸ்ட் 18, 2013

ஓட்டுப்போட்ட உடன் அத்தாட்சி சீட்டு நாகலாந்து இடைத்தேர்தலில் அறிமுகம்!!

நமது நாட்டில் தேர்தல்களில் மின்னணு வாக்கு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் இன்றளவும் சந்தேகங்கள் எழுப்பி வருகின்றன. அத்தாட்சி சீட்டு இந்த நிலையில், ஒரு வாக்காளர் தனது ஓட்டை பதிவு செய்தபின்னர், அதற்கான அத்தாட்சி சீட்டு உடனே வெளிவருகிற முறையை மின்னணு வாக்கு எந்திரத்தில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் எழுப்பினர்.இது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்தது. அத்துடன் இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு ஏற்ற வகையில், 1961–ம் ஆண்டைய தேர்தல் நடத்தை விதிகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டு

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் நிறைந்த லிச்சி பழம்!

லிச்சி பழம் நாம் அதிகம் அறியப்படாத பழம். சீனாவை பூர்வீகமாக கொண்ட இந்த பழம் இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகளில் அதிகமாக கிடைக்கிறது. லிச்சி பழம் சிவப்பு நிறத்தில் ஒரு பெரிய விதை போல மூடபட்டு இருக்கும் அதனுள்ளே வெள்ளை நிறத்தில் பழம் உள்ளது.. முட்டை வடிவத்தில் இருக்கும். இது பல ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது.

லிச்சிபழம் வெப்ப மண்டல பகுதிகளில் காணப்படுகிது. எதற்காக லிச்சி பழத்தை உடல் நலம் தரும் பழம் என கருதுகிறோம். லிச்சி பழத்திலிருந்து கிடைக்கும் கலோரி 76. புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்ஷியம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தையாமின், ரிபோப்ளோவின், நியாசின், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலை கட்டுப்படுத்தி குடலின் தசைநார்களை சீராக இயங்க வைக்கும். நார்ப்பொருள் 0.5 கிராமும், எலும்பு, பல் பலம் பெற உதவும் கால்சியம் 10 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 35 மிகி, இரும்பு சத்து 0.7 மிகி உள்ளது என்கிறார்கள் உணவுச் சத்து நிபுணர்கள். இதயமும், ஈரலும் உடலின் பிரதான பாகங்கள். இந்த இரண்டு உடல் உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைப்பதில் லிச்சிக்கு முதலிடம்.

பொதுவாக லிச்சி மரத்தின் பழம், விதை, பூ, வேர்ப்பட்டை ஆகிய அனைத்துக்கும் மருத்துவ பயன்பாடு அதிகம். லிச்சி பழத்தை தினமும் உண்டு வந்தால் இதயம் நல்ல ஆரோக்கியத்துடன்

ஆகஸ்ட் 17, 2013

எகிப்து கலவரம்: அய்.நா. சபையின் அவசர கூட்டத்துக்கு அழைப்பு!

எகிப்து தலைநகர் கெய் ரோவில் முகாமிட்டிருந்த மோர்சியின் முஸ்லிம் பிரதர்குட் இயக்கத்தைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான ஆதரவாளர் களை கலைக்க ராணுவம் முற்பட்டது. அப்போது பாதுகாப்பு படைக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அது கலவரமாக மாறியது. இந்த கலவரத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் ஆதரவாளர் களை நோக்கிசுட்டனர். இந்த தாக்குதலில் இது வரை 638 பேர் கொல் லப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் படுகாயமடைந்தனர்.

பலரின் நிலைமை மோசமாக உள்ளதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ் சப்படுகிறது. இந்த வன் முறையில் ஆயுதம் ஏந் தியவர்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினரும் கொல்லப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது. இதையடுத்து எகிப்தில் அவசர நிலை பிரகடனம் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்க அரசுப் படைகளுக்கு

மாவட்டத்தில் தொடர் மழையால் விவசாயம் பாதிப்பு!

தானே புயலில் இருந்து ஒரளவு மீண்டுவந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கியிருப்பது விவசாயிகளை வேதனையடைச் செய்துள்ளது. இழப்பை ஈடுசெய்ய உடனடியாக நிவாரணம் அறிவிக்க வேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வறட்சியால் தவித்த தமிழகத்தில், கடந்த சில வாரங்களில் பெய்த மழையால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், மழை காரணமாக, கடலூர் மாவட்டம் சி.என். பாளையம் பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் குருவை சாகுபடியை மேற்கொண்ட இந்தப் பகுதி விவசாயிகள், கிணற்று நீரை மட்டுமே நம்பியிருந்தனர். ஆள் பற்றாக்குறை, உரம் விலை உயர்வு, மின்வெட்டு போன்ற பல்வேறு நெருக்கடிகளை சமாளித்து, விளைவிக்கப்பட்ட நெற்பயிர் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தொடர் மழை விவசாயிகளின் ஒட்டுமொத்த உழைப்பையும் அழித்து விட்டது. கடலூர் மாவட்டத்தில், தானே புயலால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து விவசாயிகள் ஓரளவு மீண்டு வந்த நிலையில், குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை பயிர்கள் நீரில் முழ்கி உள்ள நிலையில், சம்பா சாகுபடி செய்ய முடியாத நிலையில் இருப்பதாக

சிறுபான்மையின மாணவ – மாணவியர்களுக்கான கல்வி உதவித்தொகை 2013-14!

சிறுபான்மையின இஸ்லாமிய மாணவ – மாணவியர்களுக்கான கல்வி உதவித்தொகை 2013-14 தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் சிறுபான்மையின (இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள்,புத்தமதத்தினர், சீக்கியர்கள், பார்சிகள்) மாணவ – மாணவியர்களுக்கு ப்ரீ மெட்ரிக் (PRE MATRIC), போஸ்ட் மெட்ரிக் (POST MATRIC), மெரிட் கம் மீன்ஸ் பேஸ்ட் ஸ்காலர்ஷிப்ஸ் (MERIT CUM MEANS BASED SCHOLARSHIPS) என்ற மூன்று நிலைகளின் கீழ் ஆண்டு தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

 2013-14ம்கல்வியாண்டிற்கு, புதிதாக(FRESH) உதவித்தொகை பெற மற்றும் பெற்று கொண்டிருக்கும் உதவித்தொகை புதுப்பித்தல்(RENEWAL) செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றது

ப்ரீ மெட்ரிக் (PRE MATRIC), போஸ்ட் மெட்ரிக் (POST MATRIC), மெரிட் கம் மீன்ஸ் பேஸ்ட் ஸ்காலர்ஷிப்ஸ் (MERIT CUM MEANS BASED SCHOLARSHIPS) பற்றிய விபரம் மற்றும் கல்வி உதவித்தொகை பெற விண்ணபிக்க வேண்டிய முறை,கடைசி நாள்,தேவையான சான்றிதழ்களின் விபரம் கீழ் வருமாறு

       பள்ளிபடிப்பு -ப்ரீ மெட்ரிக் (PRE MATRIC)  

தகுதிகள்: 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ – மாணவியர்கள்
2) குடும்ப (பெற்றோர்/பாதுகாவலர்) ஆண்டு வருமானம் 1லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3) முன் ஆண்டின் இறுதித் தேர்வில் 50% மதிப்பெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (1 ஆம் வகுப்பிற்கு தேவையில்லை)
4) வேறு எந்த அரசு கல்வி உதவியும் பெற்றிருக்க கூடாது
5) ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரு நபர்களுக்கு மட்டும்
6)மாணவியர்களுக்கு 30% ஒதுக்கீடு

உதவித்தொகை விபரம்:ஆண்டிற்கு அதிகபட்சமாக- ரூ6,850 (சேர்கை,கல்வி,
பராமரிப்பு கட்டணம்

விண்ணப்பிக்கவேண்டிய முறை:புதிதாக இந்த கல்வி  உதவிக்கு  விண்ணப்பிக்கும் மாணவர்கள்(prematric_fresh_appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்

ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள்  புதுப்பித்தல் விண்ணப்பத்தை (Renewal form) (prematric_renewal_appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்
                   
விண்ணப்பங்களை கீழே உள்ள இணையத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் http://www.bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htm
பூர்த்தி செய்யப்பட விண்ணப்பம் மற்றும் குறிப்பிட்டு உள்ள ஆவணங்களையும் இணைத்து உங்கள் கல்வி நிலையங்களில் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்ப்பிக்க

ஆகஸ்ட் 16, 2013

மறக்கடிக்கப்பட்ட மகாகவி அல்லாமா முஹம்மது இக்பால்!!

இந்திய திருநாட்டின் விடுதலை நாளை கொண்டாடும் இந்த நேரத்தில் நாட்டின் விடுதலைக்காக தன உயிராலும், உணர்வாலும் பாடுப்பட்ட உண்மையான தலைவர்களைப் பற்றி அறிய நாம் கடமைப்பட்டுள்ளோம்.அந்த வரிசையில் ஒரு மாபெரும் கவிஞராக.. பழுத்த தேசபக்தராக வாழ்ந்த மகாகவி அல்லாமா முஹம்மது இக்பால் அவர்களின் நினைவுகள் இன்று அடியோடு மறக்கடிக்கப்பட்டதற்கு காரணம்.. அவர் முஸ்லிம் என்பதைத் தவிர வேறு காரணமில்லை.

 1938 இல், லாகூரில் மகாகவி இக்பால் மரணமடைவதற்கு சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி ஒன்றில் ஜவஹர்லால் நேருவும் கலந்து கொள்கிறார். அவர் மேடையிலிருந்த மகாகவி இக்பாலை நோக்கி இப்படி சொல்கிறார்: "ஜின்னாஹ் ஒரு அரசியல்வாதி! நீங்களோ ஒரு தேசபக்தர்!" பாகிஸ்தான் பிரிவினைக்குக் காரணகர்த்தா இவர் என்று சொல்பவர்களுக்கு இது நெத்தியடியாகும். இருந்தும் மகாகவி இக்பால் தொடர்ந்து பாசிச சந்திகளால் பழிக்கப்படுகிறார்.

இந்திய துணைக்கண்டத்தின் பன்முகப் பண்பாட்டை மிகவும் விரும்பியவர் மகாகவி. இக்பால் அவர்களால் எழுதப்பட்ட "ஸாரே ஜகான் சே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா ஹமாரா" என்று தொடங்கும் பாடல் 1947 ஆகஸ்ட்டில் ஆங்கிலேயர் விரட்டியடிக்கப்பட்டு இந்தியாவின் நாடாளுமன்றத்தில் முதன்முதலாக ஒலித்தது. மறைந்த நேரு அவர்களால் அதிகம் கையாளப்பட்ட பாடலும் இதுவாகும்.

உலகத்தில் சிறந்தது எங்கள் இந்த தேசம். 
இந்த பூந்தோட்டம் எங்களுடையது......... என நீண்டு செல்கின்றன பாடல் வரிகள். ராணுவத்தின் முழக்கமாக விளங்கும் இந்தப் பாடலின் வரிகள், இந்தியாவின் சுதந்திர மற்றும் குடியரசு தினங்களில் மட்டும் மக்களின் காதுகளுக்கு எட்டும். அவை நாள்தொறும் நாட்டில் ஒலிக்கப்பட வேண்டும். பொதுமையும், இந்திய மண்ணின் பண்பையும் விளக்கும் இப்பாடல் இந்திய தேசிய கீதமாய் அங்கீகரிக்கப்படாமல் ஓரங்கட்டப்பட்டது அதை எழுதியவர் ஒரு முஸ்லிம்

ஆகஸ்ட் 15, 2013

ஓட்டை உடைசலான அரசு பேருந்துகள்! காட்டுமன்னார்குடி பகுதி மக்கள் வேதனை!

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவிலில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் இரண்டு பஸ்களும் ஓட்டை உடைசலாக இருப்பதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நீண்ட தூர பயணத்திற்கு ஏற்ப தரமான பஸ் விட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தின் கடைகோடி பகுதியாக விளங்கி வரும் நகரம் காட்டுமன்னார்கோவில். நூற்றுக்கணக்கான கிராமங்களை உள்ளடக்கியது. காட்டுமன்னார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வியாபாரம் மற்றும் பல்வேறு பணிகளுக்காக தினமும் சென்னை செல்பவர்கள் அதிக அளவில் உள்ளனர். வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு பின் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் அதிகம். காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையத்தில் இருந்து தினமும் இரவு 11.00 மணிக்கு (தடம் எண்-149,) 11.30 மணிக்கு (தடம் எண் 149-பி) ஆகிய இரு அரசு பஸ்கள் சென்னைக்கு இயக்கப்படுகின்றன. தினமும் இந்த பஸ்சில் முழு அளவு பயணிகள் செல்வது குறிப் பிடத்தக்கது.

நீண்ட தூரம் செல்வற்கு ஏற்ற தகுதியில் இந்த இரு பஸ்களும் இல்லை என்பது வேதனையான

புத்த கயா குண்டுவெடிப்பு வழக்கு: ஹிந்து சாமியார் 'பிரம்மச்சாரி கைது!

பாட்னா: பீகார் மாநிலம் புத்த கயா மகாபோதி வழிபாட்டுத் தலத்தில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையதாக கருதப்படும் அரூப் பிரம்மச்சாரி என்ற ஹிந்து சாமியாரை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் அரூப் பிரம்மச்சாரி, புத்தகயாவில் தங்கியிருந்துள்ளார். கடந்த ஜூலை 7-ந் தேதி புத்தகயாவில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இச்சம்பவத்திற்குப் பின்னர் அவர் தலைமறைவாகி விட்டார். குண்டுவெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சி புத்த கயா கோயில் நிர்வாகிகள் உட்பட பலரிடமும் விசாரணை நடத்தியது.மேலும் வினோத் மிஸ்திரி என்பவர் உட்பட 6 சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருகிறது. அவரிடம் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 முறை விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் புத்த கயாவில் தங்கியிருந்து குண்டுவெடிப்புக்குப் பின்னர் தலைமறைவாக இருந்த அரூப் பிரம்மச்சாரியை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.

அவர் தற்போது ராம்பூர் காவல்

வறுமையை அகற்றுவதற்கு உயர் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்-ஜனாதிபதி சுதந்திர தின உரை

இந்தியாவின் 67–வது சுதந்திர தின விழா இன்று (வியாழக்கிழமை) சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.அப்போது அவர் கூறியதாவது:–

ஊழல் பிரச்சினை நமது ஜனநாயக அமைப்புகள் தேசத்தின் குணாதிசயங்களை பிரதிபலிக்கும் கண்ணாடிகளாக விளங்குகின்றன. நமது பாராளுமன்றமும், சட்டசபைகளும் சட்டம் இயற்றுதல், விவாதம் நடத்துதல் ஆகியவற்றை விட சண்டை நடக்கும் அரங்கங்கள் போல் காணப்படுகின்றன. அரசாங்கத்தில் உள்ள ஒவ்வொரு அமைப்புகளுக்கும் நமது அரசியல் சட்டம் தனித்தனி அதிகாரங்களை வழங்கி இருக்கிறது. அந்த அதிகார வரம்புகளுக்குள் அவை செயல்பட வேண்டும். விவாதங்கள் நடைபெற்று முடிவு காணப்பட நமக்கு பாராளுமன்றம் தேவை.

தாமதம் இன்றி நீதி வழங்க நமக்கு நீதிமன்றங்கள் தேவை. ஊழல் நமக்கு பெரும் சவாலாக உள்ளது. நம்மை எதிர்நோக்கியுள்ள சவால்களை முறியடித்து மக்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.அடுத்த சுதந்திர தினவிழாவை சந்திப்பதற்கு முன்னால் நமது நாடு பொதுத்தேர்தலை சந்திக்க உள்ளது. நமது குடியாட்சியின் மிகச்சிறந்த இந்த பெரிய விழாவில் நாம் அனைவரும் பங்கேற்று நிலையான அரசை தேர்ந்து எடுக்கும் வாய்ப்பு நம்முன்னே உள்ளது. நிலையான அரசு ஏற்படுவதன் மூலம் நாட்டின் பாதுகாப்பும், பொருளாதார வளர்ச்சியும் உறுதி செய்யப்படும். சமூக நல்லிணக்கம், அமைதி, நல்லிணக்கம், முன்னேற்றம் ஆகியவற்றை நோக்கிய நமது பயணத்தில் தேர்தல் ஒரு முக்கிய மைல் கல் ஆகும்.

கல்வி முறையின் மூலம் சமுதாயத்தில் மாற்றம் கொண்டு வரமுடியும். உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகம் ஒன்று இல்லாமல் உலக சக்தியாக மாறுவதை கனவு காணமுடியாது. உலகின் விரைவான வளர்ச்சியை கொண்ட நாடாக கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா உருவெடுத்து உள்ளது. நாட்டின் பாதுகாப்பு நாம் இன்று உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவை பெற்றுள்ளோம். வறுமையை அகற்றுவதற்கு உயர் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு,

சுதந்திர தின செய்தி!

இந்தியனாய் இருப்பதில் பெருமிதம்கொள்வோம்! மனிதநேயத்துடன் அன்போடு பழகுவோம்! நாட்டு மக்கள் அனைவரும் சம உரிமையோடு வாழ பாடுபடுவோம்!!

 "சாரே ஜஹான்சே அச்சாஹ் ஹிந்துஸ்தான் ஹமாரா.. ஹமாரா..!"

என்றும் உங்கள் 
-கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ் 


ஆகஸ்ட் 14, 2013

இந்திய சுதந்திர வரலாறு -ஆங்கிலேயர் ஆட்சி!

வாஸ்கோ ட காமா 1498 ல் கடல் வழியே இந்தியாவுக்கு வழி கண்டு பிடித்தார்.இதனால் இந்திய ஐரோப்பிய வாணிகம் வளர்ச்சியடைந்தது.

போர்ச்சுகல் மக்கள் கோவா, டையூ, டாமன் மற்றும் மும்பையில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர்.இவர்களையடுத்து டச் நாட்டவர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் வாணிக முகாம்களை சூரத்தின் வடக்கு கரையோரத்தில் நிறுவினர்.1619 ல் பிரெஞ்சு காரர்களும் அவர்களை பின் தொடர்ந்தனர்.உள்ளுக்குளே நடந்த போர்களும், குழப்பங்களும் ஐரோப்பியர் தேடிக்கொண்டிருந்த நுழைவு வாயிலாக அமைந்தன. இதன் மூலம் அவர்கள் அரசியல் ஆதிக்கத்தையும் செலுத்த ஆரம்பித்தனர்.

ஆங்கிலேயர் அரசாட்சி:
மற்ற எல்லா ஐரோப்பியா நாடுகளும் தங்களது வசம் இருந்த பகுதிகளை ஆங்கிலேயரிடம் நாளடைவில், அதாவது இந்த ஒரே நூற்றாண்டில் இழந்தனர். இதற்கு விதிவிலக்காக பிரெஞ்சு நாட்டவர்களின் பாண்டிசேரி, சந்தேர்நாகூர் மற்றும் டச்சின் ட்ராவனகொர் துறைமுகமும், மற்றும் போர்ச்சுகல் நாட்டினரின் கோவா, டையூ,டாமன்  இருந்தன. ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனம் முகலாய பேரரசர் ஜெஹாங்கிரின் அனுமதிப் பெற்ற பிறகு இந்தியாவுடன் 1617 ல், வணிகம் கொள்ள ஆரம்பித்தது நாளடைவில் அவர்களது ஆதிக்கத்தினால் சட்டப்படி இருந்த முகலாய பேரரசர் பருக் சியார் அவர்ர்களுக்கு தஸ்டக்குகள் அல்லது வரியில்லாமல் வங்காளத்தில், 1717 ல், வாணிகம் செய்ய அனுமதி வழங்கினார்.

ஆங்கிலேயருக்கு எதிராய் போரிட்ட முதல் மன்னர் நவாப் சிராஜுத்  தவ்லா:
வங்காள மாகாணத்தை தனது வம்சாவளியின் மூலம் ஆண்ட, வங்காளத்தின் நவாப் சிராஜ் உட துலாத் ஆங்கிலேயரரின் இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது 1757 ல் பிளாசே போருக்கு வழி வகுத்தது.
இதில் ராபெர்ட் கிளைவின் தலைமையில் சென்ற கிழக்கிந்திய நிறுவனத்தின் படை நவாபை வீழ்த்தியது.நிலங்களை அரசியல் நோக்குடன் ஆங்கிலேயர்கள் ஆக்கிரமித்ததில் இதுவே முதல் தரமாகும்.இந்த நிறுவனம் ராபர்ட் கிளைவை முதல் வங்காள ஆளுநராக 1757 ல் நியமித்தது.1764 ல் பக்சார் போருக்கு பின்னர் வங்காளத்தை ஆட்சி செய்ய முகலாய பேரரசர் ஷா அலாம் II இடமிருந்து அனுமதிப்பெற்றது. இதுவே இந்தியா முழுதும் ஆங்கிலேயரின் ஆட்சிக்குள் வர முதல் படியாக இருந்தது.

வங்காளத்தின் வணிகத்தை தான் மட்டுமே கையாண்டது கிழக்கிந்திய நிறுவனம்.அவர்கள் ஒரு புது நில வரியை அறிமுகப்படுத்தினர். பெர்மனென்ட் செட்டில்மென்ட் என்ற இதன் வழியாக நிலங்கள் பியூடல் முறையில் கையாளப்பட்டன.1850 முடிவகளில் கிழக்கிந்திய நிறுவனம் இந்திய துணைகண்டத்தின் பெரும்பாலான பகுதிகளை (இன்றைய பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசம்) தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.அவர்கள் பிரித்து ஆள் என்ற கொள்கையை தீவிரமாகப் பயன்படுத்தினர். அரசர்களால் கட்டுபடுத்தப்பட்ட மாநிலங்களுக்கும், சமுக மற்றும் மத சார்ந்த குழுக்களுக்கும் இருந்த பகைமையை இவர்கள் மிகவும் அறிவு பூர்வமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

ஆங்கிலேயரின் அரசாட்சியின் பொழுது, அரசாங்கத்தின் சொல்லப்படாத கொள்கைகளால் இந்தியாவில் பஞ்சங்கள் உருவாகின. மிக கொடுமையான பயங்கர பஞ்சம் (கிரேட் பாமின் ஆப் 1876–78), 6.1 மில்லியனிலிருந்து 10.3 மில்லியன் மக்கள் வரை கொன்றது.

அதனை தொடர்ந்த இந்தியன் பாமின் ஆப் 1899–1900, 1.25 இலிருந்து 10 மில்லியன் மக்கள் வரை சரித்து. மூன்றாம் பிளக் பாண்டமிக் தனது ஆதீனத்தை சீனாவில் கொண்டிருந்தது. மத்திய 19 ஆம் நூற்றாண்டில் துவங்கிய அது கண்டங்கள் முழுதும் அல்லது இந்தியாவில் மட்டும் 10 மில்லியன் மக்களை கொன்றது.இந்த பஞ்சங்களும் வியாதிகளும் அதிகரித்த போதிலும் இந்திய துணைகண்டத்தின் மக்கள் தொகை 1750 ல் 125 மில்லியனாக இருந்து,1941 ல் 389 மில்லியனாக மாறியது .

முகாலாய பேரரசர் பகதூர் ஷா சபர் தலைமையில் முதல் போர்: 
கிழக்கிந்திய நிறுவனத்தை எதிர்த்து நடந்த முதல் இயக்கம் 1857

கீழணையில் ஷட்டர் பழுதால் கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீர்!!

காட்டுமன்னார்கோவில்: கீழணையில் ஷட்டர் பழுதானதால் தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கர்நாடகாவில் பலத்த மழை பெய்ததால் உபரி நீர் மேட்டூர் அணைக்கு திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர், கல்லணைகள் நிரம் பின. இந்த அணைகளிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் முழுவதும் திறக்கப்பட்டது. கீழணையின் முழு கொள்ளளவான 9 அடியும் தேக்கப்பட்டது. மேலும் நீர் வரத்து தொடர்ந்ததால் கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 781 கன அடி வீதம் உபரி நீர் திறக்கப்பட்டு கடலுக்கு சென்றது.கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றுக்கு வந்த அதிக அளவு உபரி நீரை கடலுக்கு அனுப்புவதற்கு ஏதுவாக வடக்கு, தெற்கு கொள்ளிட பிரிவில் உள்ள சுமார் 72 மதகுகள் திறக்கப்பட்டன. இதில் 4 மதகுகளை திரும்ப மூட இயலவில்லை.நீர்வரத்து குறைந்ததை அடுத்து கல்லணையிலிருந்து கீழணைக்கு தண்ணீர் அனுப்பும் பணி நிறுத்தப்பட்டது.இந்நிலையில் ஷட்டர் செயல்படாததால் கீழணையில் தேக்கப்பட்ட தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது.

9 அடி தேக்கி வைத்திருந்த

ஆகஸ்ட் 13, 2013

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மீதான சொத்துகுவிப்பு வழக்கு: 5–ந் தேதிக்கு தள்ளிவைப்பு!

கடலூர்: சொத்து குவிப்பு வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடலூர் கோர்ட்டில் ஆஜர் ஆனார். வழக்கு விசாரணையை அடுத்தமாதம்(செப்டம்பர்) 5–ந் தேதிக்கு தள்ளி வைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

சொத்து குவிப்பு வழக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்ததாக தி.மு.க. முன்னாள் அமைச்சரும், கடலூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அவரது மனைவி தமிழ்செல்வி, மகன் கதிரவன் ஆகியோர் மீது கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2011–ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு கடலூர் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு மாஜிஸ்திரேட்டு கிங்ஸ்லிராபர்ட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் ஆஜர் ஆனார். அவரது சார்பில் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார் வாதாடினார்.

பின்னர் இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம்(செப்டம்பர்) 5–ந் தேதிக்கு தள்ளி வைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். முன்னதாக எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கோர்ட்டுக்கு வரும் தகவலை அறிந்து மாவட்ட அவைத்தலைவர் து.தங்கராசு,

ஆன்லைனில் வேலைவாய்ப்பை பதிவு செய்வது எப்படி?

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001-ல் முதல் கொண்டுவரப்பட்டாலும், தற்போதுதான் முழுமையான நடைமுறைக்கு வந்துள்ளது எனலாம்.

மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன்லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது. தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை மாறி, தற்போது அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ளவும் முடியும்.

புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி? புதியதாக ஆன்லைனில் பதிவு செய்ய குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை கண்டிப்பாக கையில் வைத்திருத்தல் வேண்டும். முதலில் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று click here for new user ID registration என்று இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் I agree என்று கிளிக் செய்தால் அடுத்து வரும் பக்கத்தில் பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி, குடும்ப அட்டை எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும்.

அடுத்து வரும் பக்கத்தில உங்களது Personal detail, Contact detail, Qualification detail, Technical detail ஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number Createஆகிவிடும். கவணிக்க

1: Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக் செய்து Save கொடுக்கவும். இதே போன்று Technical Detail-ம் செய்ய வேண்டும்.

 2: மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.

3: ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home பகுதியில் Modify Contact பகுதிக்கு சென்று மாற்றி கொள்ளலாம்.

4: Update Profile-ல் சென்று Renewal செய்து கொள்ளலாம். Renewal செய்வதற்கான விவரம்: உதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும்.

 Register Number : ARD2012M00007502 வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்: CUD - என்பது (வேலைவாய்ப்பு அலுவலகம், கடலூர்)
பதிவு செய்த ஆண்டு: 2010 ஆண் / பெண் : M/F பதிவு எண்: 7802 பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், அப்படி இல்லாமல் 4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும்

User ID: ARD2012M00007502 Password: dd / mm / yyyy கடவு சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும். உங்களது ID CARD இப்படிதான்

ஆகஸ்ட் 12, 2013

ஒரு நபர் தவறு செய்தால் ஒரு சமூகத்தையே தேசவிரோதிகளாக சித்தரிக்க முடியுமா? பவார் கேள்வி

நிரபராதிகளான முஸ்லிம்களை பொய் வழக்கில் சிக்கவைத்து தீவிரவாதிகளாக சித்தரிப்பதால் அவர்கள் சமூகத்தில் இருந்து தனிமைப் படுத்தப்படுகின்றனர் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

புனேயில் கட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றினார் சரத் பவார்.அப்பொழுது அவர் கூறியது: என்னவானாலும் ஒரு முஸ்லிமால் பள்ளிவாசலில் குண்டுவைக்க முடியாது என்று நான் 3 அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மஹராஷ்ட்ரா உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீலிடம் தெரிவித்திருந்தேன்.இதனைத் தொடர்ந்து பாட்டீல் மறைந்த ஹேமந்த் கர்கரேயை என்னிடம் அனுப்பினார்.அப்பொழுது நான் அவரிடம், குண்டுவெடிப்பு வழக்குகளில் முஸ்லிம்களை சிக்கவைப்பது குறித்த எனது சந்தேகங்களை தெரிவித்தேன்.

15 தினங்களுக்கு பிறகு கர்கரே மீண்டும் என்னை சந்திக்க வந்தார்.இந்தூரில் ஒரு சன்னியாசினி(ப்ரக்யாசிங்) தான் இச்சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாகவும், ஒரு ராணுவ அதிகாரியின்(புரோகித்) ஆதரவு அவருக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.செய்யாத குற்றத்திற்காக 19 முஸ்லிம்கள் 3 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு எவ்வாறு இந்த தேசத்தை சொந்த நாடாக கருதமுடியும்?இந்த வகையில் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட ஒரு நபர் ஏதேனும் ஒரு தவறைச் செய்தால் ஒரு சமூகத்தை முழுவதும் தேசவிரோதிகளாக சித்தரிக்க முடியுமா? பவார் கேள்வி எழுப்பினார்.

நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை

நமதூர் முஸ்லிம் உயர் நிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் சரிப்பார்க்கும் பனி நடந்துவருகின்றது!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தல், மற்றும் முகவரி உள்ளிட்ட திருத்தம் செய்ய இந்திய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் படி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

நமதூர் முஸ்லிம் உயர் நிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் சரிப்பார்க்கும் பனி நடந்துவருகின்றது, நமது சமுதாய சகோதர, சகோதரிகள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தல், நீக்குதல், பெயர் மாற்றம், முகவரி மாற்றம் போன்றவைகள் இருந்தால் ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை நடைபெறும் இம்முகாம்களில் சென்று மாற்றும் செய்து கொள்ளுமாறு கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ் இணையத்தளம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.


சென்னையில் பார்க்க வேண்டிய சுற்றுலாத்தலங்கள்!

மெரீனா கடற்கரை : மெரீனா கடற்கரை உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாகும். இதன் நீளம் 13 கி. மீ. ஆகும். இந்தியாவின் கிழக்குக் கடற்பகுதியில் அமைந்துள்ள மெரீனா, இந்திய மாநகரங்களில் ஒன்றான சென்னையின் கடல் எல்லையை வரைவு செய்வதாயும் அதன் அடையாளங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. இக்கடற்கரையை ஒட்டி புகழ்பெற்றோரின் உருவச்சிலைகள், நினைவிடங்கள், சமாதிகள் அமைந்துள்ளதால் இது சென்னை நகரின் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.


மாமல்லபுரம் : மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். 7ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கிய துறைமுகமாக விளங்கிய நகரமாகும். இந்நகரம் மகாபலிபுரம் என்றும் அழைக்கபடுகிறது. இந்நகரில் உள்ள கடற்கரைக் கோயில் உலகப்புகழ் பெற்றது. சென்னையில் இருந்து சுமார் 60கி.மீ தொலைவிலும், பாண்டிச்சேரியில் இருந்து 130 கி.மீ தொலைவிலும், திருச்சியில் இருந்து 250 கி.மீ தொலைவிலும் மாமல்லபுரம் அமைந்துள்ளது. ரயிலில் வருவோர் செங்கல்பட்டில் இறங்கி விட்டால் அங்கிருந்து 30கி.மீ தூர பயணம்தான். சென்னை, திருச்சியில் சர்வதேச விமானநிலையம் உள்ளது. டிசம்பர்- ஜனவரி மாதத்தில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் நாட்டியவிழா ஒன்றும் மாமல்லபுரத்தில் நடத்தப்படுகிறது.

அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா (வண்டலூர் பூங்கா) : அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா சென்னையின் தெற்கு பகுதியில் 30 கீ.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இப்பூங்கா வண்டலூர் பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது. இப்பூங்கா 1855ல் தோற்றுவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் விலங்கியல் பூங்காவாகும். இங்கு 170க்கும் மேற்ப்பட்ட பாலுட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன உள்ளது. கிண்டி தேசியப் பூங்கா : சென்னை மாநகராட்சியில் அமைந்துள்ள ஒரு தேசியப் பூங்கா. இது, இந்தியாவில் எட்டாவது சிறிய தேசியப் பூங்காவாகும். அரிய வகை தேசியப் பூங்காக்களில் இப்பூங்காவும் ஒன்று. இப்பகுதி பரங்கியர் காலத்தில் மில்பர்ட்டு ரோடிரிக்கிசு (Gilbert Rodericks) என்பவரின் சொந்த வேட்டையாடும் பகுதியாக இருந்தது, பின்னர் 1958ல் தமிழ் நாடு வனத்துறையின் கண்காணிப்பிற்கு மாற்றப்பட்டது.

வேடந்தாங்கல் : வேடந்தாங்கல் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர். இவ்வூரில் உள்ள பறவைகள் சரணாலயம் மிகவும் புகழ்பெற்றது (மொத்தப் பரப்பு 30 ஹெக்டேர்). இங்கு ஆண்டுதோறும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் பறவைகள் வருகின்றன. இவ்விடத்திற்கு கனடா, சைபீரியா, பங்களாதேசம், பர்மா, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளில் இருந்து பறவைகள் வருகின்றன. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு தங்கி முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும். இங்கு வரும் பறவைகளில் நீர்க்காகங்கள், பலவித கொக்குகள், நாரைகள், கூழைக்கடா, நீர்க்கோழி போன்றவை குறிப்பிடத்தக்கவை.

வள்ளுவர் கோட்டம் : உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரின் நினைவாக 1976 ஆம் ஆண்டு கட்டப்பட்டது வள்ளுவர் கோட்டம். முன்னால் அமைக்கப்பட்டிருக்கிற பிரம்மாண்டமான தேர், திருவாரூர் கோயில் தேரை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. தேரின் பீடம் 25 அடி. சதுரப் பளிங்கால் ஆனது. ஏழு அடி உயரமுள்ள இரு யானைகள் தேரை இழுப்பது போன்று