Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 28, 2011

ஸ்பெக்ட்ரம் முறைகேடு; 2 செல்போன் நிறுவனங்களின் ரூ.5 ஆயிரம் கோடி சொத்துக்கள் முடக்கம்; அமலாக்க பிரிவு விரைவில் நடவடிக்கை

புதுடெல்லி, ஏப்.28- ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதல்படி சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் முன்னேற்றங்கள் குறித்த விவரங்களை அவ்வப்போது இரு தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து வருகின்றன.

அமலாக்கப்பிரிவு நடத்திய விசாரணைகள் குறித்த அறிக்கையை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அமலாக்கப்பிரிவு வக்கீல் வேணுகோபால் இந்த அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது, நீதிபதிகளிடம் கூறிய வேணுகோபால் ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ஈடுபட்ட 2 செல்போன் நிறுவனங்கள் பண பரிவர்த்தனை மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் செய்து உள்ளன.

எனவே இந்த நிறுவனங்கள் தலா ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேலான சொத்துக்களை முடக்க உள்ளோம் என்று கூறினார். ஆனால் அவை எந்த நிறுவனங்கள் என்ற விவ ரத்தை அவர் தெரிவிக்கவில்லை. இதுபற்றி அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது அந்த இரு நிறுவனங்கள் பெயரை தெரிவித்தனர்.

“யுனினார்” என்ற செல்போன் நிறுவனத்தை நடத்தி வரும் “யுனிடெக் வயர்லெஸ்”, ஷாகித் பல்வாவின் “சுவான் டெலிகாம்” ஆகியவைதான் இந்த நிறுவனங்கள் என்பது தெரியவந்தது. இதில் யுனிடெக் நிறுவனம் ரூ.138 கோடி மட்டும் முதலீடு செய்து ரூ.2,480 கோடி சம்பாதித்து இருப்பதை அமலாக்கப்பிரிவு கண்டு பிடித்தது.

இந்த நிறுவனத்தின் ரூ.2,340 கோடி சொத்துக்களை அமலாக்கப் பிரிவு முடக்க முடிவு செய்துள்ளது. இதேபோல சுவான் நிறு வனத்திடம் இருந்து ரூ.2818 கோடி சொத்துக்கள் முடக்கப்படுகின்றன. இரு நிறுவனங்களிலும் சேர்த்து மொத்தம் ரூ.5,158 கோடி சொத்துக்கள் முடக்கம் செய்யப்படுகின்றன.

முதலில் யுனிடெக் வயர்லெஸ் நிறுவனத்தின் சொத்துக்களையும், அடுத்து சுவான் நிறுவனத்தையும் முடக்க உள்ளனர். இதற்காக இரு நிறுவனங்களுக்கும் நோட்டீசு அனுப்பப்பட உள்ளது. இதை தவிர ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ஈடுபட்ட லூப்டெலிகாம், லூப் மொபைல், எஸ்.டெல் ஆகிய நிறுவனங்கள் உள்பட மேலும் 5 நிறுவனங்களின் சொத்துக்களையும் முடக்கவும் அமலாக்கப்பிரிவு தயாராகி வருகிறது.

தொழில் தரகர் நீரா ராடியா சகோதரி தனது பெயரில் நடத்தி வரும் 5 நிறுவனங்கள் மூலம் விர்ஜின் தீவில் பணமுதலீடு செய்து இருப்பதையும் அமலாக்கப்பிரிவு கண்டு பிடித்து உள்ளது. இது ஸ்பெக்ட்ரம் ஊழல் பணமாக இருக்கலாம் என கருதுகிறார்கள். எனவே இதுபற்றி விசாரித்து வருவதாக அமலாக்கப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஸ்பெக்ட்ரம் தொடர்பாக அமலாக்கப்பிரிவு, சி.பி.ஐ. அமைப்புகள் தங்கள் விசாரணையை மே 31-ந் தேதிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் இன்னும் விரிவாக விசாரணை நடத்த வேண்டியது இருப்பதால் காலஅவகாசம் வேண்டும் என்று இருதரப்பில் இருந்தும் சுப்ரீம் கோர்ட்டில் அனுமதி கேட்டனர். இதையடுத்து நீதிபதிகள் ஜூலை 2-வது வாரம் வரை விசாரணை நடத்த அனுமதித்து உத்தர விட்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...