Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 26, 2014

மும்பையில் பெப்சி, கோக் விற்பனைக்கு தடை!

மும்பை: பாலஸ்தீனத்தின் காஸா மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இம் மோதலை முடிவுக்கு கொண்டுவராத அமெரிக்காவை கண்டித்தும் மும்பையில் பெப்சி, கோக் குளிர்பானங்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

காஸா பகுதியில் பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்து வருகிறது இஸ்ரேல். மொத்தம் 850 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 100க்கும் மேற்பட்டோர் பிஞ்சு குழந்தைகள். இந்த இனப்படுகொலையை தடுக்க அமெரிக்கா எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதனால் அமெரிக்காவின் நிலைப்பாட்டைக் கண்டித்து மும்பையில் பெப்சி, கோக் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பெந்தி பசார் பகுதியில் உள்ள அனைத்து கடைகளில் பெப்சி, கோக் போன்ற அமெரிக்க நிறுவனங்களின் குளிர்பானங்கள் விற்பனை செய்யக் கூடாது என்று
அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த கோக் நிறுவன செய்தி தொடர்பாளர், மேற்கு ஆசியாவில் அமைதி நிலவ வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. நாங்கள் எந்த ஒரு நாட்டையும் ஆதரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...