Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 31, 2010

லால்பேட்டையில் இந்து முன்னணி கொடியாற்ற முயற்சி

லால்பேட்டை (30-10-2010): இன்று லால்பேட்டை அருகில் காங்கிருப்பு நகரில் இந்து முன்னணியை சேர்ந்த சிலர் ஒற்றுமையாக வாழும் முஸ்லிம் இந்துக்களுக்கு இடையே மத துவேசத்தை உண்டாக்கும் விதமாக கொடியேற்ற நிகழ்ச்சி நடத்த இருந்தார்கள் , இதனை அறிந்த நமதூர் மக்கள் மற்றும் அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்தனர்

இதனால் போலீஸ் குவிக்கப்பட்டது சம்பவ இடத்தில் இருந்த காட்டுமன்னார்கோயில் காவல் துறையினர் அமைதியாக இருக்கும்படி கூறினார்கள், பின்பு அங்கு வந்த D S P ,வட்டாட்சியர் மற்றும் கிராம அதிகாரி ஆகியோர் அங்கு வசிக்கும் மக்களிடம் விசாரணை நடத்தினார்கள்
அங்கு வசிக்கும் இந்துக்களுக்கும் முஸ்லிம்களும் இந்த கொடியேற்றம் அவசியம் இல்லை என்று சொன்னதாலும் இது நாங்கள் ஒற்றுமையாக வாழ்வதை சீர்குலைக்க சிலர் செய்யும் முயற்சி என்று சொன்னதால் D S P ,வட்டாட்சியர் மற்றும் கிராம அதிகாரி கொடியேற்ற தயார் செய்த கம்பத்தை பறிமுதல் செய்தனர், இதனால் இந்து முன்னணியினரின் முயற்சி முறியடிக்கப்பட்டது
பிறகு அனைவரையும் கலைந்து செல்லும்படி காவல்துறையினர் கேட்டுகொன்டர்கள் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றார்கள் , இந்த சம்பவத்தினால் காட்டுமன்னார்கோயில் – சிதம்பரம் சாலை போக்குவரத்து சற்று மந்தமானது

இந்த சம்பவத்தின் எதிரொலியாக அனைத்து லால்பேட்டை சேர்ந்த அமைப்பினர் ஒன்று கூடி முடிவெடுத்து இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க காவல் துறையிடம் மனு அளிக்க போவதாக தெரிகிறது
source:lalpet.co.cc

டாக்டர்கள் இனி 2 சீட்டுகளில் மருந்து எழுதி கொடுக்க வேண்டும்; புதிய விதிமுறை அறிமுகம்

பாக்டீரியாக்களால் உண்டாகும் நோயை கட்டுப்படுத்தவும், பாக்டீரியாக்களை அழிக்கவும் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.

இங்கிலாந்து உள்பட பல நாடுகளில் ஒருவருக்கு தடுப்பு மருந்து கொடுக்கும் முன்பு, அது அவரது உடலுக்கு ஏற்றதா? என்பதை பல்வேறு சோதனைகள் நடத்திய பிறகே கொடுக்கிறார்கள்.

இந்தியாவில் டாக்டர்கள் தடுப்பு மருந்து கொடுக்கும் முன்பு, தனிப்பட்ட நோயாளிகளின் உடல் நிலையை பெரும்பாலும் சோதிப்பதில்லை. பெரும்பாலும் நோயை உடனே குணப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், நோயாளியின் உடல் தாங்கும் சக்தியை விட அதிக ஆற்றல் கொண்ட தடுப்பு மருந்துகளை கொடுத்து விடுவதாக புகார்கள் கூறப்படுகின்றன.

இத்தகைய தடுப்பு மருந்துகளால் பக்க விளைவுகள் உண்டாகின்றன. தடுப்பு மருந்து ஒத்துக் கொள்ளாத பட்சத்தில் வயிற்றுப் போக்கு, அலர்ஜி போன்றவை ஏற்படும். சிலருக்கு மருந்தின் வீரியம் காரணமாக வயிற்று வலி உண்டாகலாம். சிலருக்கு கல்லீரல், மூளையில் கூட பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது.

தடுப்பு மருந்துகளால் நோயாளிகளுக்கு இதர பக்க விளைவு பாதிப்புகளை கட்டுப்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாடு அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இனி டாக்டர்கள் மருந்து சீட்டு எழுதி கொடுக்கும் போது இரண்டு மருந்து சீட்டு எழுதி கொடுக்க வேண்டும். அதில் ஒரு மருந்து சீட்டு நோயாளி வைத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு மருந்து சீட்டை மருந்து, மாத்திரை கொடுக்கும் பார்மசி கடையில் வைத்துக் கொள்ளவார்கள்.

சுமார் ஓராண்டுக்கு அந்த மருந்து சீட்டு பார்மசிகளில் இருப்பு வைக்கப்படும். தடுப்பு மருந்து தவறாக கொடுக்கப்பட்டதாக நோயாளி புகார் செய்யும் பட்சத்தில் பார்மசியில் உள்ள மருந்து சீட்டை தணிக்கை செய்து விசாரிக்க பயன்படுத்துவார்கள்.

70 மருந்துகள் தடுப்பு மருந்து பிரிவில் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகளை பயன்படுத்தும் போது புதிய விதிமுறையை கடைபிடிக்காவிட்டால் 20 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : maalaimalar

கடலூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடிப் பணிகள் தீவிரம்


கடந்த 10 நாள்களாக அவ்வப்போது பரவலாக பெய்துவரும் மழை காரணமாக, கடலூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடிப் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.

கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு, 2.41 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் பயிரிடப்படுகிறது. இதில் 1.25 லட்சம் ஏக்கர் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளாகும். இந்த ஆண்டு பி.பி.டி., பொன்னி, ஏடிடி 43 சம்பா நெல் ரகங்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. கடலூர் மாவட்டத்தில் குறிப்பாக டெல்டா பாசனப் பகுதிகளில் 10 நாள்களாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் நாற்றங்கால் பணிகளும் நடவுப் பணிகளும் தீவிரம் அடைந்துள்ளன.

கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்கும் சென்னை குடிநீருக்கும், கொள்ளிடம் கீழணையில் இருந்து 1,207 கன அடி வீதம் வெள்ளிக்கிழமை தண்ணீர் திறந்து விடப்பட்டது. வீராணம் ஏரி பாசனத்துக்காக வடவாறில் 862 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ÷வெள்ளிக்கிழமை கடலூர் மாவட்டத்தில் உள்ள பிரதான ஏரிகளில் நீர்மட்டம், வீராணம் 43.6 அடி (மொத்த உயரம் 47.5 அடி), பெருமாள் 4.8 அடி (மொத்த உயரம் 6.5 அடி), வாலாஜா 5 அடி (மொத்த உயரம் 5.5 அடி) என இருந்தது. கொள்ளிடம் கீழணையில் நீர்மட்டம் 7.8 அடி (மொத்த உயரம் 9 அடி).

சம்பா சாகுபடி குறித்து வேளாண் துறை அளிக்கும் தகவல்:

மாவட்டத்தில் 97 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா நெல் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதுவரை 78,421 ஹெக்டேரில் நடவு முடிந்துள்ளது. காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் 44,988 ஹெக்டேரில் நடவுப் பணிகள் முடிந்துள்ளன.

பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில்,

""வீராணம் ஏரியின் கடைமடைப் பகுதிகளில் நாற்றங்கால் பணிகள் முடிந்துள்ளன. நடவுப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளன. டெல்டா பாசனப் பகுதிகளில், சில நாள்களாக பெய்து வரும் மழை, கடைமடைப் பகுதிகளில் நடவுப் பணிகளுக்கு ஏற்றதாக உள்ளது. சம்பா நடவுப் பணிகள் நவம்பர் 20 வாக்கில், முடிவடையும்'' என்றார்.

சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு விவசாயிகள் சங்கத் தலைவர் விஜயகுமார் கூறுகையில்,

""வீராணம் ஏரி பாசனப் பகுதிகளில் (50 ஆயிரம் ஏக்கர்) 20 சதவீதமும், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசனப் பகுதிகளில் (44 ஆயிரம் ஏக்கர்) 5 சதவீதமும் மோட்டார் பம்ப்செட் வசதி உள்ளது. இப்பகுதிகளில் காவிரி நீரை எதிர்பார்க்காமல் முன்னரே சம்பா சாகுபடிப் பணிகள் தொடங்கப்பட்டன. அப்பகுதிகளில் நடவுப் பணிகள் முடிவுற்றுள்ளன. தற்போது பெய்துள்ள மழை காரணமாக கடைமடைப் பகுதிகளுக்கு கூடுதலாக தண்ணீர் வரத் தொடங்கி இருக்கிறது. எனவே நாற்றங்கால் பணிகளும், நடவுப் பணிகளும் துரிதம் அடைந்துள்ளன'' என்றார்.

டெல்டா பாசனப் பகுதிகள் அல்லாத ஆழ்குழாய்ப் பாசனத்தை நம்பி இருக்கும் மற்ற பகுதிகளில் தற்போது, நடவுப் பணிகள் முடிந்துவிட்டன. நட்டு 15 நாள்கள் முடிவடைந்த வயல்களில் முதல் களையெடுக்கும் பணி நடந்து கொண்டு இருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்குத் தேவையான விதைநெல், ரசாயன உரங்கள், நுண்ணுயிர் உரங்கள் முறையாக கையிருப்பில் உள்ளதால், சாகுபடிப் பணிகள் சிரமமின்றி நடைபெற்று வருவதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

தண்ணீர் முறையாகக் கிடைத்து, இயற்கைச் சீற்றம் மற்றும் பூச்சி, பூஞ்சாணம் தாக்குதல்கள் இன்றி இருந்தால் கடலூர் மாவட்டத்தில், சம்பா பருவத்து நெல் உற்பத்தி 45 லட்சம் குவிண்டாலுக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அக்டோபர் 30, 2010

அன்றே பாட்டி சொன்னது - இன்றும் கை கொடுக்கிறது


பாட்டி வைத்தியம், வீட்டு வைத்தியம் என்பதை நிறையப் பேர் மறந்து போய் விட்டார்கள். ஆனால் மெடிக்கல் ஷாப்பிலும், டாக்டர்களிடமும் போய் வாங்கி சாப்பிடும் மருந்துகளை விட இந்த அனுபவ மருந்துகள் கொடுக்கும் பலன்கள் அலாதியானவை.


அனைவருக்கும் சாதாரணமாக வரும் காய்ச்சல், இருமல், தலைவலி, உடல் வலி உள்ளிட்ட சில பொதுவான பிரச்சினைகளுக்கு நமது வீட்டிலேயே எப்போதும் மருந்து தயாராக இருக்கிறது. நிறையப் பேருக்கு இது தெரியாது. தெரி்நதவர்கள் அனைவரிடத்திலும் கூறும் நல்ல பழக்கத்தை வைத்துக் கொள்வதில்லை.
தெரியாதவர்களுக்காக வழங்கப்படும் சில டிப்ஸ்கள் இது...

வறட்டு இருமல்...
வறட்டு இருமலாக இருக்கிறது. கொஞ்சூண்டு தேனை (ஒரு ஸ்பூன்) எடுத்து அப்படியே வாயில் விடுங்கள். அடுத்த சில நிமிடங்களில் இருமல் காணாமல் போய் விடுவதைப் பார்த்து ஆச்சரியப்படுவீர்கள். குழந்தைகளுக்கு இந்த நாட்டு மருந்து செமத்தியான பலனைக் கொடுக்கும். இன்னும் கொஞ்சம் விரிவான மருந்து வேண்டும் என நினைப்போர் - தேன், எலுமிச்சம் பழச் சாறு, இஞ்சிச் சாறு ஆகியவற்றை கலக்கி சாப்பிடலாம். சரசரவென இருமலும், சளியும் ஓடிப் போய் விடும்.

தேனீ கொட்டிடுத்தா...
தேனீக்கள் கொட்டினால், அய்யோ உயிர் போச்சே என்றுதான் பலரும் அலறுவார்கள். அதற்கு அவசியமே இல்லை. நாம் அனைவருமே பல் துலக்கும் பழக்கம் கொண்டவர்கள். எனவே கட்டாயம் டூத்பேஸ்ட் வீட்டில் இருக்கும். அந்த பேஸ்ட்டை எடுத்து தேனீ கொட்டிய இடத்தில் அப்படியே ஸ்மூத்தாக தடவுங்கள். அடுத்த சில நொடிகளில் வலி பறந்து போய் விடுவதைப் பார்ப்பீர்கள். டூத் பேஸ்ட்டில் இருக்கும் அமிலத்தை நிலைப்படுத்தும் வேதிப்பொருள் மற்றும் எரிச்சலைக் குறைக்கக் கூடிய தன்மையே இதற்குக் காரணம்.

காது வலிக்குதா ...
அம்மா காது வலிக்குது என்று அவ்வப்போது குழந்தைகள் அலறுவது அனைத்து வீடுகளிலும் சாதாரண விஷயம்தான். ஆனாலும், குழந்தைகளுக்கு காது வலித்து அழும்போது நாம் நிம்மதியாக இருக்க முடியாதே. அப்படிப்பட்ட நேரங்களில் சற்றும் பதட்டப்படாதீர்கள். வீட்டில் ஆலிவ் எண்ணை இருக்கிறது. இல்லாவிட்டால் அதை முதலில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிரிஞ்சை எடுத்து அல்லது இதற்கு சமமான ஒன்றை (சுத்தமாக இருப்பது அவசியம்) எடுத்து அதன் மூலம் 2 அல்லது 4 சொட்டு (2 வயது குழந்தைகளுக்கு) இதமான சூட்டில் உள்ள ஆலிவ் எண்ணையை குழந்தையின் காதில் மெல்ல விடுங்கள். பெரிய குழந்தைகளாக இருந்தால் அதிகபட்சம் 10 சொட்டு வரை விடலாம். காது வலி சட்டென பறந்து போய் விடுமாம். கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவ மையம் இதைப் பரி்ந்துரைக்கிறது.

பெருவிரல் நகத்தில் பூஞ்சைத் தொற்றா..
விரல் நகத்தில் பூஞ்சைத் தொற்று வந்து நகம் மஞ்சள் கலராக மாறி அசிங்கமாக இருக்கிறதா. கவலையே வேண்டாம். விக்ஸ் வேப்போரப் உங்களுக்குக் கை கொடுக்கும். சளி, ஜலதோஷத்திற்கு மட்டும் வேப்போரப் உதவும் என்றில்லை. இந்த விரல் பூஞ்சைத் தொற்றுக்கும் அது அருமருந்தாக உள்ளது. விக்ஸ் வேப்போரப்பில் தைமால் உள்ளது. இது பூஞ்சைத் தொற்றை விரட்டும் நல்ல மருந்தாகும். பாதிப்படைந்த விரல் பகுதியில் வேப்போரப்பை மெதுவாக தடவி வாருங்கள். பூஞ்சைத் தொற்று போய் விரல் நகம் அழகாவதை காண்பீர்கள்.

வெயில் புண்ணால் அவதியா...
கடும் வெயிலில் உடல் புண்ணாகி தகிக்கிறதா. வினீகரை வைத்து அதை விரட்டலாம். கடும் வெயில் நாடான இந்தியா போன்றவற்றில் வெயில் காலங்களில் வெயிலால் ஏற்படும் தீப்புண்கள் சகஜம். அப்படிப்பட்ட கஷ்டம் வரும்போது வினீகரைத் தடவி வந்தால் புண் போய் புன்னகை தோன்றும் உங்கள் மேனியில். ஓட்மீல் பேஸ்ட்டும் கூட நல்ல பலனைக் கொடுக்குமாம்.

பூச்சி கடித்தால் நெய்ல் பாலிஷ்...
பூச்சி கடித்தால் உடனே பயப்படாமல் வீட்டில் இருக்கும் நெய்ல்பாலிஷ், சுடச் சுட நீரை வைத்து அதை பூச்சி கடித்த இடத்தில் தடவலாம் அல்லது ஒத்தடம் கொடுக்கலாம். நீங்கள் பயன்படுத்தும் நெய்ல் பாலிஷ் சுத்தமானதாக இருக்க வேண்டியது அவசியம். இதைத் தடவினால் உடனடியாக வலியும், எரிச்சலும் குறையுமாம். இருப்பினும் வெட்டுக் காயம் போன்றவை ஏற்படும்போது இதைத் தவிர்ப்பது நலம்.

தலை முடி பிசுபிசுப்புக்கு...
பஸ், ரயில் போன்றவற்றில் ஜன்னலுக்கு அருகில் உட்கார்ந்து செல்லும்போதும், பைக் போன்றவற்றை ஓட்டிச் செல்லும்போதும் தலைமுடி சிக்காகி, பிசுபிசுப்படைவது சகஜம். சிலர் முறையாக தலைக்கு குளிக்காமல் விட்டாலும் இந்த பிசுபிசுப்பு ஏற்படுவது இயல்பு. இப்படிப்பட்டவர்கள் கவலைப்படத் தேவையில்லை. வீட்டில் உள்ள பேபி பவுடர் அல்லது டால்கம் பவுடரை எடுத்து தலைமுடியில் வைத்து நன்றாக தேய்த்தால் போதும். முடி பொலபொலவென தெளிவாகி விடும். பிசுபிசுப்பும் போய் விடும். இதெல்லாம் வெறும் அனுபவத்தால் மட்டும் கூறப்பட்ட மருத்துவம் அல்ல. உலகப் புகழ் பெற்ற ஆய்வகங்கள், பல்கலைக்கழக ஆய்வகங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் பரிந்துரைக்கப்பட்டவை.

முயற்சித்துப் பாருங்களேன் ...

இந்தோனேஷிய சுனாமி 2 நாளாக மரத்தில் தொங்கி தவித்த 1 1/2 வயது குழந்தை உயிருடன் மீட்பு


ஜகர்தா, இந்தோனேசியாவில் உள்ள மெந்தாவி தீவில் கடந்த திங்கட்கிழமை பூகம்பம் ஏற்பட்டு சுனாமி தாக்கியது. இதில் அந்த தீவில் உள்ள ஏராளமான கிராமங்கள் அழிந்தன. ராட்சத அலைகளில் சிக்கி ஏராளமானோர் உயிர் இழந்தனர். சாவு எண்ணிக்கை 394 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 300 பேரை காணவில்லை. அவர்களில் 3-ல் 2 பங்கினர் பலியாகி இருக்க கூடும் என்று கூறப்படுகிறது.

எனவே சாவு எண்ணிக்கை 600-ஐ தாண்டும் என்று எதிர்பார்ப்பதாக மீட்பு படை அதிகாரி ஏத்எட்வர்டு கூறினார். சுனாமி பாதித்த பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இப்போதும் சிலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகின்றனர். 1 1/2 வயது குழந்தை ஒன்று சுனாமி அலையால் தூக்கி வீசப்பட்டு 2 நாளாக மரத்தின் உச்சியில் கிடந்தது. உயிருடன் இருந்த அந்த குழந்தை மரக்கிளைகளை பிடித்தபடி அழுது கொண்டிருந்தது. அந்த குழந்தையை பத்திரமாக மீட்டனர். அதேபோல 10 வயது சிறுவன் ஒருவனும் மரக்கிளைகளை பிடித்தபடி கிடந்தான். அவனையும் மீட்டனர்.

ஆனால் அவனது தாய் -தந்தை இருவருமே சுனாமிக்கு பலியாகி விட்டனர். சுனாமியில் சிக்கியவர்கள் சிலரின் உடல்கள் கால் வேறு, கை வேறாக சிதறின. அவை ஆங்காங்கே மரத்தில் தொங்கியபடி இருந்தது. பல உடல்கள் மண்ணுக்குள் புதைந்து கிடக்கின்றன. அதை தோண்டி எடுத்து வருகின்றனர். சுனாமியில் வடக்கு பெகாய் என்ற இடம் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தது. அந்த ஊரை சேர்ந்த சந்திரா என்ற பெண் கூறும்போது, பூகம்பம் ஏற்பட்டதும் நாங்கள் அச்சத்துடன் இருந்தோம். அடுத்த 10 நிமிடத்துக்கு பிறகு வீட்டுக்கு வெளியே பெரிய அளவில் வெடிச்சத்தம் போல கேட்டது. அடுத்த வினாடிகளில் சுனாமி தாக்கியது என்றார்.

மீட்கப்பட்ட பிணங்கள் கூட்டம், கூட்டமாக ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. சதேகங் என்ற இடத்தில் 98 பேர் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிக்கு நிவாரண பொருட்களை ஏற்றி சென்ற கப்பல் மெந்தாவியை சென்றடைந்துள்ளது. அங்கிருந்து நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சுனாமியில் 468 வீடுகள் முற்றிலும் இடிந்துவிட்டன. அவர்களுக்கு தற்காலிக கூடாரம் அமைத்து கொடுத்துள்ளனர்.

பிரிட்டனில் பிறக்கும் குழந்தைகளுக்கு இடும் பெயர்களில் 'முஹம்மது' என்ற பெயர் முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது

பிரிட்டனில் பிறக்கும் குழந்தைகளுக்கு இடும் பெயர்களில் 'முஹம்மது' என்ற பெயர் முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது.

கடந்த 2008-ம் வருடத்தில் மூன்றாவது இடத்தில் இருந்த இந்த பெயர் 2009 ல் அதுவரை முதன்மையாக இருந்து வந்த 'ஜாக்' மற்றும் 'ஹாரி' போன்ற பெயர்களை புறந்தள்ளிவிட்டு முதலாவது இடத்திற்கு உயர்ந்திருக்கின்றது.

2009ல் பிறந்த குழந்தைகளில் 7549 குழந்தைகளுக்கு இறைத்தூதரான 'முஹம்மது' (ஸல்) அவர்களின் பெயர் இடப்பட்டுள்ளது.

அக்டோபர் 28, 2010

சதாமின் வலது கரமுமான தாரிக் அஜீஸுக்கு மரண தண்டனை


சதாம் உசேனின் வெளிநாட்டு முகமாக திகழ்ந்தவரும், ஈராக் அரசின் குரலாக பன்னாட்டு அரங்குகளில் பல காலம் ஒலித்தவரும், ஈராக் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான தாரிக் அஜீஸுக்கு மரண தண்டனை விதித்துள்ளது ஈராக் கோர்ட்.

அவரை சாகும் வரை தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்றுமாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அவர் மீதான குற்றச்சாட்டு- ஷியா முஸ்லீம்களுக்கு எதிராக செயல்பட்டார். ஷியா முஸ்லீம்களின் கட்சிகளை ஒடுக்கினார். ஷியா பிரிவினைச் சேர்ந்தவர்களை கொலை செய்தார் என்பதாகும்.

ஈராக்கில் அமெரிக்கப் படைகள் ஆக்கிரமித்து உள்ளே புகுந்த சிலகாலத்திற்குள் சதாம் உசேன் உள்ளிட்ட தலைவர்கள் பிடிபட்டனர். அதன் பின்னர் விசாரணை கோர்ட்டை அமைத்து அவசரம் அவசரமாக விசாரணை நடத்தி சதாம் உசேனை முதல் ஆளாக தூக்கிலிட்டுக் கொன்றது அமெரிக்க ஆதரவுடன் ஆட்சி நடத்தி வந்த ஈராக் அரசு.

பின்னர் சதாமின் ஒன்று விட்ட சகோதரரான கெமிக்கல் அலியை சில மாதங்களுக்கு முன்பு தூக்கிலிட்டுக் கொன்றனர். 5000க்கும் மேற்பட்ட குர்து இன மக்களை விஷ வாயு செலுத்திக் கொன்றார் கெமிக்கல் அலி என்பது அவர் மீதான குற்றச்சாட்டு.

இந்த நிலையில் தற்போது சதாம் உசேனின் நெருங்கிய நண்பரும், அந்த நாட்டின் முன்னாள் துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான தாரிக் அஜீஸுக்கும் மரண தண்டனை அளித்துள்ளது ஈராக் அரசு.

சதாமைப் போலவே தீவிர அமெரிக்க எதிர்ப்பாளர் தாரிக் அஜீஸ். ஈராக்கின் சர்வதேச முகமாக திகழ்ந்தவர். சதாம் காலத்தில் ஈராக் சார்பில் பன்னாட்டு அரங்குகளில் இவர்தான் ஈராக்கின் குரலாக ஒலித்தார்.

அமெரிக்க ஏகாதிபத்திய போக்கை கடுமையாகவும், பகிரங்கமாகவும் கண்டித்தவர். அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு மற்றும் போர் வெறியை தொடர்ந்து கண்டித்து வந்தவர்.

இந்த நிலையில் தற்போது அஜீஸுக்கு மரண தண்டனைவிதித்துள்ளது ஈராக் உயர் டிரிப்யூனல். இதுகுறித்து அதன் செய்தித் தொடர்பாளர் முகம்மது அப்துல் சாஹிப் கூறுகையில், 74 வயதான தாரிக் அஜீஸை சாகும் வரை தூக்கிலிட்டுக் கொல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் எப்போது தூக்கிலிடப்படுவார் என்பது முடிவு செய்யப்படவில்லை. அவர் அப்பீல் செய்ய 30 நாட்கள் அவகாசம் உள்ளது என்றார்.

ஒரே கிறிஸ்தவர்
தாரிக் அஜீஸ் அடிப்படையில் கிறிஸ்தவர் ஆவார். இவரது இயற்பெயர் மைக்கேல் யூஹனா. வடக்கு ஈராக்கில் உள்ள சிஞ்சர் என்ற ஊரில் 1936ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி பிறந்தார். சைதியான் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்தவர்.

தான் கிறிஸ்தவராக இருந்தாலும் ஒரு முஸ்லீமாகவே வாழ்ந்து வந்தவர். இதற்காக தனது பெயரையும் தாரிக் அஜீஸ் என மாற்றிக் கொண்டார். சதாம் உசேனின் நம்பிக்கைக்குரிய தளபதியாக திகழ்ந்தவர். சர்வதேச அளவில் பல அமெரிக்க ஆதரவு நாடுகளாலும் மதிக்கப்பட்ட ஈராக் தலைவர் இவர் மட்டுமே.

தாரிக் அஜீஸ் தவிர முன்னாள் உள்துறை அமைச்சர் சதான் சகேர், அபித் ஹமூத் ஆகியோரையும் தூக்கிலிடுமாறு நேற்று ஈராக் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே ஷியா முஸ்லீம்களை வடக்கு ஈராக்கிலிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றிய வழக்கில் தாரிக் அஜீஸுக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல சித்திரவதை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் 10 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது பல்வேறு கொலைகளைச் செய்தார் என்று கூறி தூக்குத் தண்டனை விதித்து விட்டனர்.

நேற்று பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பின்போது சதாம் உசேனின் ஒன்று விட்ட சகோதரர் வாட்பன் இப்ராகிம் அல் ஹசன் என்பவர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி அவரை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார். இவரும் உள்துறை அமைச்சாரக இருந்தவர்தான்.

ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்து ஊடுறுவிய பின்னர் ஒரு மாதம் கழிந்த நிலையில், 2003ம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்தார் அஜீஸ். அதன் பின்னர் பாக்தாத் நகரில் அமெரிக்கா அமைத்த சிறையில் அஜீஸ் அடைக்கப்பட்டார். பின்னர் ஜூலை மாதம் அஜீஸை, ஈராக் படைகளிடம் அமெரிக்கா ஒப்படைத்தது.

அவருடன்மேலும் பல ஈராக் தலைவர்களும் ஒப்படைக்கப்பட்டனர். அமெரிக்கப் படையினரின் காவலில் அஜீஸ் இருந்தபோது அவருக்கு பலமுறை உடல் நலம் பாதிக்கப்பட்டது. பக்கவாதமும் ஏற்பட்டது. தடியை ஊன்றியபடிதான் அவர் பலமுறை கோர்ட்டுக்கு வந்து போனார் என்பது நினைவிருக்கலாம்.

வாடிகன் தலையிடுகிறது
இதற்கிடையே, தாரிக் அஜீஸை தூக்கிலிடக் கூடாது என்று வாட்டிகன் சிட்டி கோரிக்கை விடுத்துள்ளது. இந்தத் தண்டனையை தடுத்து நிறுத்தப் போவதாக அது கூறியுள்ளது.

இதுகுறித்து வாட்டிகன் செய்தித் தொடர்பாளர் பாதிரியார் பெடரிகோ லம்பார்டி கூறுகையில், இந்த தண்டனை நிறுத்தப்பட வேண்டும். இதுபோன்ற சம்பவங்களில் வாட்டிகன் மனிதாபிமான அடிப்படையில் தலையிடுவது வழக்கம். அந்த அடிப்படையில் அஜீஸைக் காக்கவும் வாட்டிகன் முயற்சிக்கும் என்றார்.

இதற்கிடையே, அஜீஸின் வழக்கறிஞர் பதீ இஸ்ஸாத் ஆரிப் ஜோர்டான் தலைநகர் அம்மானில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈராக் போரின்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த ஈராக் பாதுகாப்புப் படையினர் நிகழ்த்திய அட்டூழியங்கள் குறித்து விக்கிலீக்ஸ் தகவல்களை வெளியிட்டுள்ளது. இதனால் உலகமே அதிர்ந்து போயுள்ளது. இதிலிருந்து கவனத்தை திசை திருப்பும் வகையில் அஜீஸுக்குத் தண்டனை கொடுத்துள்ளனர்.

இந்தியாவில் இஸ்லாமிய வங்கி முறை! பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரை


இந்தியாவில் இஸ்லாமிய வங்கி முறையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆய்வு செய்யுமாறு ரிசர்வ் வங்கிக்கு பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரை செய்துள்ளார்.

மலேசியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர், அங்கு நடைமுறையில் உள்ள இஸ்லாமிய வங்கி சேவை குறித்து பார்வையிட்டதோடு, இம்முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு ரிசர்வ் வங்கியைக் கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறினார்.

பல சந்தர்ப்பங்களில் இஸ்லாமிய வங்கிச் சேவையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இம்முறை இதுகுறித்து பரிசீலிக்குமாறு ரிசர்வ் வங்கியைக் கேட்டுக் கொண்டுள்ளேன். மலேசியாவில் இது எவ்விதம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது குறித்து ஆராயுமாறு கூறப்பட்டுள்ளது.

இஸ்லாமிய வங்கிச் சேவை என்பது வட்டியில்லாமல் வங்கிச் சேவை அளிப்பதாகும். இத்தகைய சேவை தொடங்கினால் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து முதலீடுகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் 500 இஸ்லாமிய வங்கிகள் செயல்படுகின்றன. இவற்றில் புழங்கும் தொகை 1 லட்சம் கோடி டாலராகும். அடுத்த பத்து ஆண்டுகளில் இது 4 லட்சம் கோடி டாலராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நிதி அமைச்சகம் இதற்கு ஒப்புதல் அளித்தாலும், நீதிமன்றங்கள் இதற்கு ஒப்புதல் அளிக்குமா என்பது சந்தேகமே. இஸ்லாமிய வங்கி போன்ற வட்டியற்ற வங்கிச் சேவையை மாநில அரசு ஆதரிக்கக் கூடாது என்று சமீபத்தில் கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
Source:மேலப்பாளையம் பதிவுகள்

கடலூர் மாவட்டத்தில் வீதிகள் திறந்த வெளி "பார்'களாக மாறி வரும் விபரீதம் : போலீசாரின் நடவடிக்கை அவசியம் தேவை

குடி பிரியர்கள் வீதிகள், குடியிருப்பு பகுதிகளையும் திறந்த வெளி "பார்'களாக பயன்படுத்தி வருவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார் கண்டும் காணாமல் மவுனம் காத்து வருவதால் தேவையற்ற பிரச்னைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்கவும், அரசுக்கு வருமானத்தை பெருக்கிட கடந்த 2003ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி அரசு சார்பில் "டாஸ்மாக்' கடைகள் திறக்கப்பட்டன. குடிபிரியர்களின் வசதிக்காக கடந்த 2004ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஒவ்வொரு "டாஸ்மாக்' கடைகளின் அருகிலேயே "பார்' துவங்கப்பட்டது. இதனால் குடிபிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் சரக்கு வாங்கிக் கொண்டு அருகில் உள்ள "பார்'களில் அமர்ந்து குடித்து விட்டு அவரவர் வீடுகளுக்கு சென்றனர்.

இந்நிலையில் அரசு "டாஸ்மாக்' கடைகளில் "பார்' நடத்துவதற்காக டெண்டர் தொகையை அந்த கடையின் ஆண்டு விற்பனையில் 2.5 சதவீதமாக உயர்த்தியதால் டாஸ் மாக் கடைகளில் "பார்' நடத்த எவரும் முன்வரவில்லை. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள 231 "டாஸ்மாக்' கடைகளில் 54 கடைகளில் மட்டுமே "பார்' இயங்கி வருகிறது. 177 கடைகளில் "பார்' இல்லாததால், குடிபிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் தங்களுக்கு வேண்டிய சரக்குகளை வாங்கிக் கொண்டு அருகில் உள்ள கடைகளில் நொறுக்குத் தீனி, வாங்கிக் கொண்டு பஸ் நிறுத்தம், பள்ளிகள், சத்துணவு கூடங்கள், அரசு அலுவலக கட்டடங்கள் மற்றும் நகர விரிவாக்க பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் அமர்ந்து "ஹாயாக' குடிக்கின்றனர்.

இவ்வாறு குடிப்பிரியர்கள் கும்பலாக அமர்ந்து குடிக்கும் போது அருகில் வீடுகள் இருப்பதை பொருட்படுத்தாமல் ஆபாசமாக பேசிக் கொள்வதால் வீடுகளில் வசிப்பவர்கள் பெரும் தர்ம சங்கடத்திற்கு ஆளாகின்றனர். சில நேரங்களில் வீதிகளில் குடிக்கும் குடிப்பிரியர்கள் போதை ஏறி தங்களுக்குள் அடித்துக் கொள்வதும் அதிகரித்து வருகிறது. குடிப்பிரியர்கள் அடிக் கும் கொட்டத்தை பொறுக்க முடியாமல், அருகில் உள்ளவர்கள் தட்டிக் கேட்டால், அரசு ஒயின் ஷாப் திறந்துள்ளது, நாங்கள் எங்கு சென்று குடிப்பது என நக்கல் கேள்வி கேட்டு தகராறு செய்கின்றனர். இதற்கு பயந்தே எவரும் தட்டிக் கேட்க முன்வருவதில்லை.

இதனையே தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் குடிபிரியர்கள் சமீப காலமாக விடுமுறை நாட்களில் பள்ளிகள் மற் றும் குடியிருப்பு பகுதிகளில் பகல் நேரங்களிலேயே குடித்துவிட்டு கும் மாளம் அடிக்கின்றனர். இவ்வாறு பொது இடங் களில் குடித்து விட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வரும் குடிபிரியர் களை போலீசார் கண் டிக்கா விட்டால், தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. இதனை உணர்ந் தாவது பொது இடங்களில் குடிப்போர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போலீஸ் ஒத்துழைப்பில்லை :

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி கூறியது

"டாஸ்மாக் கடைகளில் "பார்' நடத்த கடையின் ஆண்டு விற்பனைத் தொகையில் 12ல் ஒரு பங்கை ஏலத் தொகையாக நிர்ணயிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு கடைகளிலும் விற்பனை உயர்ந்துள்ளது. இதனால் "பார்' நடத்த குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும். மேலும், இரண்டு மாத தொகையை வைப்புத் தொகையாக கட்ட வேண்டும். ஏலத் தொகை பல மடங்கு உயர்ந்துள்ளதால் "பார்' நடத்த எவரும் முன் வருவதில்லை.

இதன் காரணமாக, டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்குபவர்கள் பொது இடங்களில் குடிக்கின்றனர். இவ்வாறு பொது இடங்களில் குடிப்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடவடிக்கை எடுத்தால், போலீசுக்கு பயந்து "பார்' களுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதன் மூலம் அரசுக்கும் வருமானம் அதிகரிக்கும். இதுகுறித்து எங்கள் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள் ளோம். அவர்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்

யு.ஏ.இ:ராஸ்-அல்-கைமாவின் ஆட்சியாளர் மறைவு


ராஸ்அல்கைமா,அக்.27:ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு பகுதியான ராஸ்அல்கைமா ஆட்சியாளர் ஷேக் ஸக்ர் பின் முஹம்மது அல் காஸிமி(வயது 92) மரணமடைந்தார்.. (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்).
உலகிலேயே அதிக வயதையுடைய ஆட்சியாளர் ஸக்ர் பின் முஹம்மது அல் காஸிமி ஆவார். ராஸ்அல்கைமாவை சொந்த இடமாகக் கொண்ட அவர் 1948 ஜூலை 17 ஆம் தேதி ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்தார்.

அக்டோபர் 27, 2010

தாறுமாறாக நிறுத்தப்படும் பஸ்கள் சிதம்பரம் பஸ் நிலையத்தில் பயணிகள் அவதி

சிதம்பரம் : சிதம்பரம் பஸ் நிலையத்தில் ஒதுக்கப் பட்ட இடத்தில் பஸ்கள் நிறுத்தாமல் ஆங்காங்கே நிறுத்துவதால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பஸ் நிலையத்தில் பஸ் நிறுத்தக் கட் டைக்கு எதிரே மேல் கூரையில் ஊர் பெயர் எழுதப்பட்டு அந்தந்த கட்டைகளில் பஸ்கள் நிறுத்த வேண்டும். சிதம்பரம் பஸ் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக செய்யப்பட்ட இவ்வசதியை டிரைவர்கள் பின்பற்றுவதில்லை.

அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கட்டைகளில் பஸ்சை நிறுத்தாமல் பஸ் நிலையத்தில் எங்கு வேண்டுமானாலும் நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எந்த பஸ், எங்கு நிற்கிறது என தெரியாமல் பயணிகள் பஸ் நிலையம் முழுவதும் தேடி அலைய வேண்டிய நிலை உள்ளது. பஸ்களை முறையாக ஒதுக்கப்பட்ட அந்தந்த ஊர் கட்டைகளில் நிறுத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியும் கூட டிரைவர்கள் பின்பற்றுவதில்லை. குறிப்பாக கடலூர், காட்டுமன்னார் கோவில், மயிலாடுதுறை, சீர்காழி உள் ளிட்ட முக்கிய ஊர்களுக்குச் செல்லும் பஸ்கள் எப்போதும் தாறுமாறாகவே நிற்கிறது. பயணிகள் அவதியை தவிர்க்கவும், எளிதாக பஸ் ஏறவும் சிதம்பரம் பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்துவதை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
source:dinamalar

காஷ்மீர் விசா கொள்கையில் மாற்றமில்லை: சீனா திட்டவட்டம்

காஷ்மீர் மக்களுக்கு தனி காகிதத்தில் "பேப்பர் விசா" வழங்கும் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என சீனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் வசிக்கும் இந்தியர்களுக்கு சீனா பிரத்யேகமாக "பேப்பர் விசா" வழங்கி வருகிறது.இது குறித்து சீனாவிடம் பலமுறை அதிருப்தி வெளியிட்டிருந்த இந்தியா, ஜம்மு காஷ்மீரை தனி நாடு போல சித்தரிக்கும் இந்த போக்கை கைவிட்டு, தங்களது உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும் என்று கோரியிருந்தது.ஆனால் அதை சீனா தொடர்ந்து ஏற்காமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், இவ்வார இறுதியில் வியட்நாமில் நடக்கும் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டின்போது சீனப் பிரதமர் வென் ஜியாபோவை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது, காஷ்மீரில் வசிக்கும் இந்தியர்களுக்கு சீனா பிரத்யேகமாக "பேப்பர் விசா" வழங்கி வரும் பிரச்னை எழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பீஜிங்கில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீன அயலுறவுத் துறை அமைச்சக பேச்சாளர் ஜாவோசுவிடம் இது குறித்து கேட்டபோது, "இது குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் தொடர்பில் இருக்கிறோம்" என்று மட்டுமே கூறினார்.

இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பை உறுதிப்படுத்த மறுத்த அவர், "சரியான நேரத்தில் உரிய தகவல் வரும்" என்று மட்டும் கூறினார்.

மேலும் இந்தியர்களுக்கு விசா வழங்கும் சீனாவின் கொள்கை நிலையானதாகவும், மாற்றமில்லாமலும் இருப்பதாகவும், காஷ்மீர் மக்களுக்கு தனி காகிதத்தில் "பேப்பர் விசா" வழங்கும் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இருநாட்டுத் தலைவர்களும் சந்திக்க இருக்கும் நிலையில், சீன அரசின் இந்தக் கருத்து இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சவூதி அரேபியாவில், குர்ஆனின் விஞ்ஞான அற்புதங்கள் தொடர்பான முதலாவது சர்வதேச மாநாடு


குர்ஆன் செயற்பாட்டுக் குழு: புனித அல்குர்ஆனினதும் நபித்துவப் பாரம்பரியங்களினதும் விஞ்ஞான அற்புதங்கள் தொடர்பான முதலாவது சர்வதேச மாநாடு அக்டோபர் 25ம் திகதி, சவூதி அரேபியாவின் ஜசான் நகரில் ஆரம்பமானது.

நசீஜ் இணையத்தளம் தெரிவிப்பதாவது, இந்த இரண்டு நாள் நிகழ்ச்சி, அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னாவின் விஞ்ஞான அற்புதங்களுக்கான உலக சம்மேளத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டின் ஓர் அங்கமாக, இச்சந்திப்பின் கருப்பொருளை விளக்கும் கண்காட்சியொன்று இதன் போது இடம்பெறவுள்ளது.

சம்மேளனத்தின் ஜசான் கிளையின் பணிப்பாளர் அப்துல் ரகுமான் பின் அஹ்மத் அல்வாஸ் மக்தலி தெரிவிக்கையில், நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த குர்ஆனிய ஆய்வாளர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இதில் பங்கு கொண்டு, 'குர்ஆனின் பார்வையில் நோய்த்தடுப்பு இரகசியங்களும் முறைமைகளும்', 'தண்ணீர் பற்றி குர்ஆன் மற்றும் சுன்னாவின் அற்புதங்கள்' மற்றும் 'படைப்புருவாக்கம் பற்றிய குர்ஆனின் விளக்கம்' ஆகிய தலைப்புகளில் ஆய்வுகளை முன்வைக்கவுள்ளனர் என்றார்.

MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள் கவலை பட வேண்டாம்!!!

உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள் கவலை பட வேண்டாம் .காவல் நிலையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது .உங்கள் மொபைலில் பின்புறம் IMEI என்று அழைக்கப்படும்( INTERNATIONAL MOBILE EQUIPMENT IDENTITY ) 14 இலக்க எண் மூலம் எளிதாக கண்டு அறியலாம் .இந்த IMEI NO மூலமாக தான் நமது நாட்டில் நிகழ்ந்து வரும் குற்றங்களுக்கான தடயமாக இருக்கிறது .உங்களின் MOBILE ஐ எடுத்து அதில் உள்ள SIMஐ மாற்றினாலும் அவர்கள் நிச்சயமாக சிக்கி கொள்வார்கள்..

GUARDIAN என்ற SOFTWARE ஐ உங்களின் மொபைலில் INSTALL செய்வது மூலம் இதை இன்னும் சுலபமாக கண்டுப்பிடிக்க முடியும் .நீங்கள் நினைக்கலாம் அந்த SOTWARE ஐ UNINSTALL செய்தால் அதன் பயன்பாட்டை முடக்கப்படலாம் என்று .ஆனால் அதில் PASSWORD பயன்படுத்தப்படுகிறது எனவே கொஞ்சம் சிக்கல் கலந்த விஷயம் .

அவர் உங்களின் SIM ஐ REMOVE செய்து அவரோட SIM ஐ போடும்போது அவரின் MOBILE NO உங்களின் மற்றொரு REFRENCE NO க்கு ஒரு MESSAGE வரும் .எனவே அவர் தப்பிக்க முடியாது எத்தனை முறை அவர் SWITCH OFF/ON செய்தாலும் .அவரின் MOBILE NO உங்களுக்கு குறுந்தகவல்ஆக வந்துக்கொண்டே இருக்கும் .

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்திற்கு சென்று உங்கள் MOBIL DEVICE க்கு ஏற்றாற்போல் நீங்கள் DOWNLOAD செய்துகொள்ளுங்கள் நண்பரே ..

GUARDIAN software ஐ தரவிறக்கம் செய்ய இங்கே CLICK செய்யுங்கள்.

Thanks: towheed express

துபை அரசு நிறுவனத்தில் (DEWA) 28ம் தேதி நேர்முக தேர்வு

ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் அரசுக்கு சொந்தமான Dubai Electricity and Water Authority (DEWA) நிறுவனத்தில் கீழ்கண்ட பணிகளுக்கு நேர்முக தேர்வு வரும் 28ம் தேதி காலை 8 மணி முதல் 11 மணி வரை அல் கர்ஹூட் பாலத்துக்கு அருகில் உள்ள அல்-பூம் சுற்றுலா கிராமத்தில் உள்ள லதிபா ஹாலில் நடைபெறும். தகுதியுள்ளவர்கள் மாத்திரம் நேரடியாக அவ்விடத்திற்கு சென்று நேர்முக தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

DEWA invites qualified & experienced professionals to come for personal interviews at Al-Boom Tourist Village, Latifa hall, near Al Garhoud Bridge on 28th October 2010 from 08.00hrs. to 11.00hrs. Only candidates with relevant qualification & experience need to walk-in.


Assistant Engineer Meter Testing Ref. No. WM/MM/183/10

Degree in Electronics & Instrumentation Engineering, with minimum 5years experience. Knowledge in metering and test methodologies in a utility company or testing laboratory involving testing/ verification/ calibration of various type of flow meters, measuring instruments and operation and maintenance of test benches. Experience in ultrasonic/electronic/ electromagnetic flow meter testing, advanced.

Supervisor Network Maintenance Ref. No. WM/ND/184/10

Diploma in Civil/Mechanical Engg. With minimum 3 years experience in field of House connection lines. Good computer knowledge in all basic software and basic safety.

Assistant Engineer: Network Maintenance Ref. No. WM/ND/185/10

Diploma in Civil/Mechanical Engg. with minimum 3 years experience in the field of House connection lines. Good computer knowledge in all basic software and basic safety.

Technician Network Maintenance Ref. No. WM/ND/186/10

Higher Secondary School with 2 years experience. Knowledge in plumbing fitter trade.

Mechanic/Assistant Mechanic: Transmission Ref. No. WM/TU/187/10

Diploma in Mechanic or Higher Secondary School with Minimum 3 years experience in Maintaining and repairing water pumps generation vehicles. Knowledge in Check vehicles, machinery and water pumps etc.

Assistant Technician: Transmission Ref. No. WM/TU/188/10

Higher Secondary School with Minimum 1 years experience as mechanic in reputed Establishment. Knowledge of cutting/making/fixing of A.C GRE, GRP, PVC, G. Pipes and pipeline materials /Accessories/Valves with the help of laborers. Must have Valid UAE Driving License.

Auto Electrician: Transmission Ref. No. WM/TU/189/10

Higher Secondary School with Minimum 1 years experience in reputed Establishment. Knowledge of electrical system of vehicles, equipments, machineries and tools. Carry out independent repairing and maintenance work for water & civil maintenance dept. Must have Valid UAE driving license.

Senior Engineer: Transmission Ref. No. WM/TU/190/10

Degree in Civil Engineering with minimum 7 years experience. Knowledge of Asbestos/Fiber Cement, GRP, GRE, PVC,PVC,G.I.&C.I. pipes, fittings and Pipe line repair works, good computer skill. Able to prepare specifications, Budget, correspondence with government organization, services authority, consultants, contractors. Must have Valid UAE driving license.

Technician: Transmission Ref. No. WM/TU/191 /10

Trade Certificate or secondary school with 5 years experience as technician cutting making fixing of A.C. GRE. GRP, PVC, G.I Pipes and pipeline materials Accessories, Valves. Knowledge in how cut and fix different types of pipes.

Supervisor: Transmission Ref. No. WM/TU/192/10

Diploma in Civil Engineering with minimum 05 years experience in Water Pipeline works/Civil construction.

Assistant Engineer (Electrical) Ref. No. WM/EM/ 193/10

Equipment Maintenance: Degree/Diploma in Electrical Engineering with minimum 5/10 years experience in water pumping station maintenance. Skills: Experience in installation, troubleshooting and repair Soft Starters, VFD, UPS, LV control panels and Motor up to 500KW. Must have Valid UAE driving license.

Engineer (Electrical)Equipment Maintenance Ref. No. WM/EM/194/10

Degree in Electrical & Electronic Engineering. With 10 years experience. Knowledge on installation & maintenance of Medium & Low voltage VFD, soft starters, UPS and MV/ LV switchgear. Knowledge of preventive maintenance/ corrective maintenance of all electrical equipments in water pumping station & water networks. Must have Valid UAE driving license.

Asst. Engineer - Control System Ref. No. WM/EM/195/10

Equipment Maintenance Degree / Diploma in Instrumentation & Control/Electrical/Electronic with 3-5 Years Experience in maintaining & configuring of SCADA hardware & software Packages such as Rockwell Automation : RSView, Wonderware & Various Brands of PLC Programming such as Allen Bradley, Schneider, Siemens, GE Fanuc. Application Packages such as Visual Basic, Microsoft Access 2000/2003. Must have Valid UAE driving license.

Asst. Engineer- - IT Scada Hardware Ref. No. WM/EM/196/10

Equipment Maintenance Degree / Diploma in Electronics or IT with 5 /7 Years Experience in
maintaining & servicing of IT Hardware & Software for SCADA System / Automation products such as Servers, Workstations, Printers, Administering & Configuration of Windows Server 2000 & 2003 and Networking. Microsoft Certifications, Cisco Certification, Hardware & Networking Certifications. Application Packages. Must have Valid UAE driving license.

Engineer - Instrumentation & Control Ref. No. WM/EM/ 197/10

Equipment Maintenance Degree in Instrumentation & Control Engineering with 8 -10 Years

Experience in all types of latest instruments such as process instruments, analyzers, chlorination systems. Computer Skills such as Microsoft Office, Microsoft Access. Must have Valid UAE driving license.

Asst. Engineer - HVAC - Ref. No. WM/EM/198/10

Electromechanical Maintenance - Equipment Maintenance Degree/Diploma in Mechanical Engineering is preferred with 3/5 years experience in the operation, installation and maintenance of building systems with in depth technical understanding and knowledge of all HVAC safety and control systems. Must have Valid UAE driving license.

Supervisor - Instrumentation & Control Ref. No. WM/EM/ 199/10

Equipment Maintenance Diploma in Instrumentation & Control Engineering with 3 /5 years experience in all types of latest instruments such as process instruments, analyzers, chlorination systems. Computer Skills such as Microsoft Office, Microsoft Access. Must have Valid UAE driving license.

Sr. Engineer- Coordination: Ref. No. WM/QC/ 200/10

Quality Control-(Operation Unit) Bachelor or Master in Civil /Mechanical Engineering with 7/5 years experience in Integrated Management Safety, Quality and environment.

Operator Reverse Osmosis (R/O) Plant Ref. No. WM/MM/201/10

Diploma/Trade certificate in Mechanical/electrical Engineering with Minimum 3/5 years experience in operation & maintenance of RO plant in a large organization

source: inneram.com

அக்டோபர் 26, 2010

சிதம்பரத்தில் மூன்று தொகுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு


சிதம்பரம் உள்ளிட்ட 3 தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலை ஆர்.டி.ஒ., ராமராஜ் நேற்று வெளியிட்டார்.

வாக்காளர் பட்டியலில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் பெயர் சேர்ப்பதற்கும், பெயர் திருத்தம் உள்ளிட்டவைகளுக்காக கடலூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப் பட்டது. சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார் கோவில் ஆகிய 3 தொகுதிகளுக்கான வரைவு வாக் காளர் பட்டியலை சிதம்பரம் ஆர்.டி.ஒ., ராமராஜ் வெளியிட்டார்.

இந்த பட்டியலில் நவம்பர் 9ம் தேதி வரை அனைத்து ஓட்டுச்சாவடி மையங்கள் மற்றும் தாசில்தார் அலுவலகம், நகராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பார் வைக்காக வைக்கப்படுகிறது. அதற்கான அலுவலர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர்.

எனவே 2011ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி 18 வயது பூர்த்தியானவர்கள் தங் களது பெயர்களை வாக் காளர் பட்டியலில் சேர்த் துக் கொள்ளலாம். வாக் காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தாலோ, திருத்தம் இருந்தாலோ செய்து கொள்ளலாம் என ஆர்.டி.ஒ., ராமராஜ் தெரிவித்தார். நிகழ்ச்சியின் போது தாசில்தார் காமராஜ், துணை தாசில்தார் தில்லைகோவிந்தன் உடனிருந்தனர்.
வாக்காளர் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ள வாக்காளர்கள் விவரம்:
புவனகிரி- 2,00,164,
சிதம்பரம்-1,81,522,
காட்டுமன்னார்கோவில்- 1,72,644

கல்வி ஆண்டு விழாவில் அரங்கேறும் அசிங்கங்கள்! - ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!


பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் ஆண்டுவிழா உள்ளிட்ட சில விழாக்களில் மாறுவேடம் புனைந்து வருமாறு மாணவ - மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் கட்டளையிடுவதும், நிகழ்ச்சிகளில் முஸ்லிம் மாணவ - மாணவிகள் சிலரும் பல்வேறு வகையான வேடம் புனைந்து கலை நிகழ்ச்சியில் பங்கெடுப்பதையும் காண்கிறோம்.
தனது பிள்ளையை கிருஷ்ணக் கடவுளாக வேடமிட்டு, ஒரு முஸ்லிம்தாய் அழைத்து செல்வதைதான் படத்தில் பார்க்கிறோம். இந்த காட்சியை கண்டதும் நம் இதயம் ஒருகணம் இயங்க மறுத்தது!. கண்ணீர்த் துளிகள் இமையை ஈரமாக்கியது!!. இது போன்று அந்தத் தாய் செய்வதற்கு மார்க்கத்தைப் பற்றிய அறியாமை என்று கூறிவிட முடியாது. ஏனெனில், மார்க்கத்தை அவர் தெளிவாக அறிந்திருப்பதால்தான் முழுமையான பர்தாவை கடைபிடித்திருக்கிறார். அப்படியிருந்தும் இத்தகைய செயலை அவர் செய்ததற்கு காரணம், இவைகளை சாதாரணமாக கருதி, குழந்தையை நரக படுகுழியில் தள்ள முற்பட்டுள்ளார்.
பாருங்கள் என் சமுதாய மக்களே!, வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு கடவுள் இல்லை என்று நாவால் மொழிந்த இக்குழந்தை, அல்லாஹ்விற்கு இனையுண்டு என கடவுளின் அவதாரம் பூண்டிருக்கின்றது இக்குழந்தையின் உடல்!. கொஞ்சம்கூட மனம் கூசவில்லையா?. பாரதி, வள்ளுவன், புலி, கரடி என வேஷம் போட்டதின் பரிணாம வளர்ச்சிதான் இப்படி நிறுத்தியிருக்கின்றது தற்போது! மரணம் என்பது எல்லோருக்கும் நிச்சயக்கப்பட்ட ஒன்றுதான். அதனால் ஒரு கேள்வியை நாம் முன்வைக்கின்றோம்!. எந்தக்குழந்தையும் அல்லது எந்த ஒரு முஸ்லிமும் இந்த வேஷம் பூண்ட நிலையிலேயே எதோ ஒரு காரணத்தினால் மரணித்துவிட்டால் மறுமையில் வல்ல அல்லாஹ்விடம் வரும்போது இதே வேஷத்துடன்தானே எழுப்பப்படுவீர்கள்! அப்போது உங்களின் நிலை என்ன?.

இப்படி வேஷமிடுவதை ஒரு மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாகத்தான் சம்மந்தப்பட்ட மாணவ-மாணவியரும், அவர்களின் முஸ்லிம் பெற்றோரும் பார்க்கிறார்களே யன்றி, அவற்றை மார்க்கத்தோடு ஒப்பிட்டு பார்ப்பதில்லை!. பெற்றோரின் இத்தகைய உற்சாகக் கோளாறு பின்னாளில், எம்மதமும் எங்களுக்கு சம்மதமே' என்ற மனநிலைக்கு பிள்ளைகளை கொண்டுவந்து விடுகின்றது. எனவே பிள்ளைகளின் ஒவ்வொரு அசைவிலும் இஸ்லாம் இருக்கிறதா என்பதை கண்காணிப்பது பெற்றோர்களின் கடமையாக உள்ளது. வெறும் தொழுகையை மட்டும் அவசரகதியில் நிறைவேற்றிவிட்டு, மார்க்கத்தின் மகத்துவத்தை தானும் அறிந்து, தன் குழந்தைக்கும் எத்திவைக்காமல் இருப்பதின் விளைவே, இதுபோன்ற அவலநிலைக்கு முக்கியகாரணம். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'யார் பிற சமுதாயக் கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்களோ அவர்களும் அவர்களை சேர்ந்தவர்களே! நபி அவர்கள் பட்டென போட்டு உடைத்துவிட்டார்கள். நரகத்திற்கு செல்ல அல்லாஹ் இல்லை என கூறவேண்டிய அவசியம் கூட இல்லை. மாறாக இதுபோன்று வேடமிடுவதினாலேக்கூட சென்றுவிடலாம். அல்லாஹ் பாதுகாக்கவேண்டும்.

உங்களின் ஊர்களில் உள்ள பள்ளிகளுக்கு சென்று குழந்தைகளை இதுபோல் செய்யவேண்டாம் என எச்சரியுங்கள். மீறினால் குழந்தையை வேறுபள்ளிகளுக்கு மாற்றலாம் என முடிவெடுக்காதீர்கள்! ஏனெனில் அநியாயம் நடந்தால் அதை கரத்தால், நாவால், மனதால் தடுக்கவேண்டும் என்பது நபிமொழி. இந்த விசயத்திற்கு மூன்றும் ஒருசேர பொருந்தும் என்றாலும் முதல்நிலையே சாலச்சிறந்தது!.
source:அதிரை முஜீப்

மீளக்குடியேறும் முஸ்லிம்கள்!


இலங்கையின் வடபகுதிகளில் வாழ்ந்த முஸ்லீம்களை விடுதலைப்புலிகள் 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பலவந்தமாக வெளியேற்றி, இந்த மாதத்துடன் இருபது ஆண்டுகள் ஆகின்றன.

முஸ்லிம்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இலங்கை இராணுவத்திற்கு ஒத்தாசை வழங்கியதாக விடுதலைப்புலிகளால் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் தென்னிலங்கையில் தஞ்சமடைந்தனர்.

விடுதலைப்புலிகள் அமைப்பு போரில் தோற்கடிக்கப்பட்ட நிலையில், இப்படி பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் படிப்படியாக தங்களின் சொந்த இடங்களில் குடியேறிவருகிறார்கள்.

மீண்டும் சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளவர்கள், பாழடைந்து போயுள்ள பள்ளிவாசல்கள், பள்ளிக்கூடங்கள் போன்றவற்றை மறுசீரமைக்க முயற்சித்து வருகின்றனர்.

அண்மையில் இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்களுடன் ஒப்பிடு்ம்போது இவர்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் சற்று ஒழுங்குபடுத்தப்படாத நிலையே இருப்பதாகவும், தாங்கள் பல சவால்களை சந்திப்பதாகவும் இங்குள்ள ஒரு சிலர் கூறுகின்றனர்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் ஆனவர்களுக்கு உதவித் தொகை

அக்டோபர் 25, 2010

இஸ்லாமிய மதத்துக்கு மாறிய டோனி பிளேரின் உறவினர்இங்கிலாந்தின் முன்னாள் பிரதமராக இருந்தவர் டோனி பிளேர். இவரது மனைவி செர்ரி பிளேரின் ஒன்று விட்ட சகோதரி லாரன் பூத். 43 வயதாகும் இவர் இஸ்லாமிய மதத்துக்கு தான் மாறியுள்ளதாக அறிவித்துள்ளார்.
லாரன் பூத் ஈரானில் உள்ள பிரஸ் தொலைக்காட்சியில் வேலை செய்து வருகிறார். அண்மையில் ஈரானில் கோம் நகரத்திலுள்ள பாத்திமா மாசூம் என்ற சன்னதியில் இருக்கும்போது ஏற்பட்ட ஆன்மீக மன மாற்றமே தனது மத மாற்றத்திற்கு காரணம் என லண்டனிலிருந்து வெளிவரும் டெய்லி மெயில் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

தற்போது ஹிஜாப் எனும் இஸ்லாமிய ஆடையை அணிவதாகவும் 5 வேளை தொழுவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது மது அருந்துவதில்லை என குறிப்பிட்ட அவர் 25 வருடங்களாக இருந்த இந்த தீய பழக்கத்தை தற்போது விட்டுவிட்டதாக குறிப்பிட்டார். தினமும் மது அருந்தாமல் இருக்க முடியாத தான் இஸ்லாத்திற்கு மாறிய பிறகு அந்த எண்ணம் கூட இல்லாமல் இருப்பது கண்டு ஆச்சர்யப்படுவதாக கூறினார். குர்ஆனை தினமும் படித்து வருவதாகவும் கூறியுள்ள லாரன் தற்போது 60 பக்கங்கள் வரை படித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

வரும்காலங்களில் பர்தா அணிவீர்களா என்ற கேட்கப்பட்டதற்கு வரும்காலத்தில் தனது ஆன்மீகப் பாதை எங்கே அழைத்துச் செல்லும் என யார் அறிய முடியும் என பதிலளித்தார். காஸாவின் மீதான இஸ்ரேலின் பொருளாதாரத் தடையை எதிர்த்து 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 46 நபர்களுடன் சைப்ரஸிலிருந்து காஸாவுக்கு சென்றுள்ளார் லாரன் பூத். ஈராக்கிற்கு எதிரான யுத்தத்தையும் எதிர்த்தவர் பூத்

ஈராக் போரில் அமெரிக்கா நடத்திய படுகொலை:அதிர்ச்சி தரும் ,லீக் பற்றி விசாரிக்க ஐ.நா., கோரிக்கை


ஈராக் போர் தொடர்பாக, "விக்கிலீக்ஸ்' இணையதளம் வெளியிட்ட ரகசிய ஆவணங்களின் அடிப்படையில், ஈராக்கின் பொதுமக்களைக் கொன்றதில் அமெரிக்காவின் ராணுவத்திற்கு பங்கு இருக்கிறதா என்பது குறித்து, அமெரிக்க அரசு விசாரணை நடத்த வேண்டும் என, ஐ.நா., கூறியுள்ளது.ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க போர் குறித்து, 92 ஆயிரம் ஆவணங்களை வெளியிட்ட, "விக்கிலீக்ஸ்' இணையதளம், சமீபத்தில், ஈராக் போர் தொடர்பான நான்கு லட்சம் ரகசிய ஆவணங்களை வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பியது.

"இதுபோன்று ரகசிய ஆவணங்களை வெளியிடுவது கண்டனத்திற்குரியது' என, அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன், கண்டனம் தெரிவித்தது. எனினும், இந்த ஆவணங்கள் வெளிப்படுத்தும் உண்மைகள் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஈராக்கில், 2004 முதல் 2009 வரை அமெரிக்கா தலைமையில், "நேட்டோ' படைகள் போரில் ஈடுபட்டன. அமெரிக்கப் படையுடன் இணைந்து, பிரிட்டன் ராணுவமும் பங்கேற்றது. அதில் மொத்தம், ஒரு லட்சத்து ஒன்பதாயிரத்து 32 பேர் கொல்லப்பட்டனர்.

இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர், அதாவது, 66 ஆயிரத்து 81 பேர் பொதுமக்கள்; 23 ஆயிரத்து 984 பேர் ஈராக்கிற்குள் ஊடுருவ முயன்றவர்கள்; 15 ஆயிரத்து 196 பேர், ஈராக் போலீசார், மூன்றாயிரத்து 771 பேர், "நேட்டோ' ராணுவத்தினர். இதில், ஐ.நா., விதித்துள்ள, சித்திரவதைக்கு எதிரான நடைமுறைகளை மீறி, கூட்டுப் படையினர், ஈராக் பொதுமக்களை, தொந்தரவு, சித்திரவதைக்கு ஆளாக்கி, கற்பழித்துக் கொலை செய்த கொடூரங்கள், "விக்கிலீக்ஸ்' வெளியிட்ட ரகசிய ஆவணங்கள் மூலம் வெளியுலகுக்குத் தெரியவந்துள்ளது.மேலும், ஈராக்கில் உள்ள பயங்கரவாதிகளுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து அவர்கள் மூலம் இப்படுகொலையில் ஈரான் அரசு ஈடுபட்டுள்ளதும், இதை ஈராக் அரசு வேடிக்கை பார்த்துள்ளதும் இப்போது தெரியவந்துள்ளது.

இது குறித்து ஐ.நா.,வின் சித்திரவதைப் புலனாய்வுக் குழுத் தலைவர் மேன்ப்ரட் நொவாக் கூறுகையில், "ஐ.நா., விதித்துள்ள மனித உரிமைகள் மீறப்பட்டது குறித்து ஒபாமா நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஈராக் பொதுமக்கள் கொல்லப்பட்டதில் பிரிட்டன் ராணுவத்தினரும் ஈடுபட்டது குறித்து பொது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இது, குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதாக மட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்குப் பரிகாரம் செய்ததாக இருக்கும்' என கூறியுள்ளார்.இந்நிலையில், "விக்கிலீக்ஸ்' வெளியிட்ட ரகசிய ஆவணங்களால், ஈராக் பிரதமருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஈராக்கின் தற்போதைய பிரதமர் நூரி அல் மாலிகி அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "இந்த ஊடகப் பிரசாரத்தின் பின்னணியில் அரசியல் நோக்கம் இருக்கிறது. இந்த ஆவணங்களை ஈராக்கின் தேசியத் தலைவர்களுக்கு குறிப்பாக பிரதமருக்கு எதிராக பயன்படுத்தலாம் என, ஊடகங்கள் நினைக்கின்றன. ஈராக் ராணுவத்துக்குப் பிரதமர் தான் தலைவர் என்றாலும், நீதித்துறையின் உத்தரவுப் படி தான் ராணுவத்தினர் செயல்படுவர்' என, கூறப்பட்டுள்ளது.

ஆனால், முன்பு ஈராக்கில் மோதல் நடந்தபோது, அதிபர் புஷ் தலைமையிலான நிர்வாகம் அங்கு நடக்கும் சண்டையில் இறப்பவர்கள் குறித்த கணக்கு முழுவிவரம் கிடையாது என்று கூறியது. தற்போது இந்த, "விக்கிலீக்ஸ்' வெளியிட்ட ரகசிய ஆவணங்களால், அவர் கூறியது பொய் என்று ஆகியிருக்கிறது

கடலூர் டெல்டா பகுதியில் சம்பா நடவுக்கு தண்ணீர் போதவில்லை

கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில், சம்பா நடவுப் பணிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.கர்நாடகத்தில் இருந்து, நமக்கு வழங்க வேண்டிய நீரை, கேட்டுப் பெற்றுத் தர வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.கடலூர் மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி நீரால் பாசன வசதி பெறுகின்றன.

இவற்றில் வடவாறு நேரடிப் பாசனப் பகுதிகள் 11 ஆயிரம் ஏக்கரில் 10 ஆயிரம் ஏக்கரிலும், வடக்கு ராஜன் வாய்க்கால் பாசனப் பகுதிகள் 27 ஆயிரம் ஏக்கரில் 20 ஆயிரம் ஏக்கரிலும் நடவுப் பணிகள் முடிவடைந்து உள்ளன.வீராணம் ஏரி பாசனப் பகுதிகள் 50 ஆயிரம் ஏக்கரில் 20 ஆயிரம் ஏக்கரிலும் நடவுப் பணிகள் முடிவடைந்து உள்ளன.கடைமடைப் பகுதிகளான சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசனப் பகுதிகள் உள்ளிட்ட 1 லட்சம் ஏக்கரில் நாற்றங்கால்கள் தயாராகி வருகின்றன.

இந்தப் பகுதிகளில் அக்டோபர் இறுதியில் நடவுப் பணிகள் தொடங்கி, நவம்பர் 20-ம் தேதி வாக்கில் முடிவடையும் என்று விவசாயிகள் தெரிவிக்கிறார்கள் .நடவுப் பணிகள் வேகமாக நடந்து வருவதால் தண்ணீர் தேவை அதிகரித்து வருவதாக விவசாயிகள் கூறுகிறார்கள். விவசாயிகளின் தண்ணீர் தேவைக் கோரிக்கைகளை ஏற்று கடந்த 5-ம் தேதி கடலூர் மாவட்டக் காவிரி பாசனப் பகுதிகளுக்கு கல்லணையில் இருந்து 3,528 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சம்பா நடவுப் பணிகளில் விவசாயிகளின் உத்வேகம் அதிகரித்தது.ஆனால் தண்ணீர் வரத்து படிப்படியாகக் குறைந்து, வெள்ளிக்கிழமை கல்லணையில் இருந்து கடலூர் மாவட்ட பாசனப் பகுதிகளுக்கு 1,207 கன அடியும், சென்னைக் குடிநீருக்காக கூடுதலாக 100 கன அடியும் திறக்கப்பட்டு, கீழணைக்கு வந்து கொண்டு இருக்கிறது. கடலூர் மாவட்ட சம்பா பாசனத்துக்கு கீழணையில் இருந்து, வடக்குராஜன் வாய்க்காலில் 148 கனஅடி, குமிக்கி மண்ணியாறில் 88 கனஅடி, வீராணம் ஏரிக்கு 900 கனஅடி, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பகுதிகளுக்கு 268 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.நடவுப் பணிகள் வேகமாக நடந்து வருவதால் தற்போது வந்துகொண்டு இருக்கும் தண்ணீர் போதாது என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.

இது குறித்து பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில்,
"கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் 40 சதவீதத்துக்கும் குறைவான பகுதிகளில் மட்டுமே நடவுப் பணிகள் முடிவடைந்து உள்ளன. மற்றப் பகுதிகளுக்கு நாற்றங்கால் தயாராகிக் கொண்டு இருக்கிறது.படிப்படியாக நடவு நடந்து வருகிறது. ஆயினும் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை உள்ளது.இந்த நேரத்தில் கூடுதல் தண்ணீர் திறந்து விட்டால்தான் நடவுப் பணிகள் விரைவாக முடிவடையும். ஆனால் தண்ணீர் வரத்து குறைந்து உள்ளது.மேட்டூர் அணையிலும் நீர்மட்டம் குறைவாக உள்ளது.

ஜனவரி முதல் அக்டோபர் 20-ம் தேதி வரை, தமிழகத்துக்கு கர்நாடகம் 169 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட்டு இருக்க வேண்டும்.ஆனால் 70.44 டி.எம்.சி. தண்ணீர்தான் திறந்து விடப்பட்டு உள்ளது. எனவே கூடுதல் நீரை, கர்நாடகத்திடம் இருந்து, தமிழக அரசு கேட்டுப் பெற வேண்டும்.வருகிற நீரையும் முறையாக விநியோகிக்க, பொதுப் பணித்துறையில் போதுமான அதிகாரிகள் இல்லை. பல பணியிடங்கள் காலியாக உள்ளன. 40 லஸ்கர் பணியிடங்களில் 15 பேர் மட்டுமே உள்ளனர்' என்றார்.

இது குறித்து பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் செல்வராஜ் கூறியது
"நீர் மேலாண்மை குறித்து கடந்த 18-ம் தேதி விவசாயிகளிடம் கலந்து ஆலோசித்தோம். நீர் வீணாகாமல் இருக்க விவசாயிகளின் ஆலோசனைப்படிதான் நீர் விநியோகம் 25 சதவீதம் குறைக்கப்பட்டது.மேட்டூர் அணையிலும் நீர் மட்டம் குறைந்து வருகிறது. எனவே விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். நமது டிவிஷனில் லஸ்கர் பிரச்னை இல்லை. ஆனால் 5 ஓவர்சீயர் பணியிடங்கள் காலியாக உள்ளன' என்றார்.

அக்டோபர் 24, 2010

விவசாய பணிக்கு ஆட்கள் கிடைப்பது...குதிரைக்கொம்பு வட மாநில தொழிலாளர்களால் ஆறுதல்தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், பயனாளிகளை சேர்க்கும் பணி தீவிரமாகியுள்ளதால், கிராமங்களில் விவசாய கூலி தொழிலுக்கு ஆட்கள் கிடைப்பது குதிரைக்கொம்பாகியுள்ளது. இதனால், வட மாநிலங்களிலிருந்து ஆட்களை அழைத்து வந்து பணி மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும், மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை துரிதப்படுத்தும் வகையில், கிராமப்புறங்களில் மக்கள் அதிகளவில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இத்திட்டத்தில், தினசரி கூலியாக 100 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்திற்கு கூலி உயர்ந்துள்ளதால், கிராமப்புறங்களில் விவசாய தொழிலுக்கான கூலிகள் உயர்ந்துள்ளன. இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளை துரிதப்படுத்தும் வகையில், பயனாளிகள் அதிகளவில் சேர்க்கும் முயற்சி நடக்கிறது. ஏற்கனவே, 100 நாட்கள் வேலை செய்த பயனாளிகளை கொண்டு மகளிர் சுயஉதவிக்குழு அமைக்கும் பணி நடக்கிறது. கிராமப்புறங்களிலுள்ள மக்களிடம் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் சேரும் ஆர்வம் அதிகரித்துள்ளது. பொள்ளாச்சி தாலுகாவிலுள்ள ஊராட்சிகளில், மக்கள் அதிகமுள்ள ஊராட்சிகளில், 200 பயனாளிகள் வரையும், குறைந்த அளவு மக்கள் தொகையுள்ள ஊராட்சிகளில் 150 பயனாளிகளையும் சேர்க்கும் பணி நடைபெறுகிறது. பெரும்பாலான ஊராட்சிகளில் சராசரியாக 130 பயனாளிகள் வரை பணியாற்றுகின்றனர்.

இதனால், விவசாய கூலி தொழிலுக்கு ஆட்கள் கிடைப்பது குதிரைகொம்பாகியுள்ளது. கேரள எல்லையோர கிராமங்களில், கூலியாட்கள் பற்றாக்குறையாக உள்ளதால், கேரளப்பகுதிகளிலிருந்தும், வட மாநிலங்களிலிருந்து ஆட்களை அழைத்து வந்து பணிகள் மேற்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. வெளி மாநில ஆட்களை அழைத்து வரும் போது, தற்போது வழங்கும் கூலியை விட கூடுதலாக சம்பளம் வழங்க வேண்டியுள்ளதால் விவசாயிகள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது: தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நடக்கும் பணிகள் துரிதப்படுத்த பயனாளிகள் அதிகளவில் சேர்க்கப்படுகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஒன்றியத்திலும் சராசரியாக 500 முதல் 900 பயனாளிகள் வரை சேர்ந்துள்ளனர். மக்கள் தொகை அதிகமுள்ள பெரிய அளவிலான ஊராட்சிகளில் 110 பயனாளிகளும், குறைந்த மக்கள் சிறிய ஊராட்சிகளில், 90 பயனாளிகள் வரையும் சேர்ந்துள்ளனர்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கூறியதாவது: உள்ளூரில், விவசாய கூலி தொழிலுக்கு ஆட்கள் கிடைப்பது அரிதாகியுள்ளது. கிடைக்கும் ஆட்களை கொண்டு பணி மேற்கொண்டாலும், கூலி அதிகரித்துள்ளதால் சிரமம் ஏற்படுகிறது. வட மாநிலங்களிலிருந்தும், கேரள மாநிலங்களிலிருந்தும் குடும்பம், குடும்பமாக ஆட்களை அழைத்து வந்து பணி மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால், கூடுதல் செலவு ஏற்படுகிறது. விளைச்சலுக்கு ஏற்ப விலை கிடைக்காத நிலையில், கிடைக்கும் வருவாயில், பெருந்தொகையை சம்பளமாக கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்க்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, விவசாயிகள் கூறினர்

இஸ்லாமிய சமுதாயம் படிப்பினை பெறுமா?

எனதருமை இஸ்லாமிய சமுதாயமே! தஃவாபணியின் முக்கியம் பற்றி இந்த சமுதாயம் இனியாவது சிந்நிக்குமா? இன்றைக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்ந நபி (ஸல்) அவர்கள் ஒன்றுமே எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக இருந்தும் 40 ஆண்டு காலம் உண்மையாளன் என்ற பெயர் பெற்றனர். அதன் பின் மனித சமுதாயத்திற்கு ஒருவழிகாட்டியாக இறைவனால் அனுப்பப்பட்ட இனிய தூதர் ஆனார்கள்.

இந்த மனிதசமுதாயத்திற்கு அனைத்துத் துறைகளிலும் வழிகாட்டியதோடு மனித நேயத்தை கற்றுக்கொடுத்து, பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்கும் போது தான் மட்டும் உண்ணுவது முறையல்ல என்ற உன்னத மனித நேயத்தையும் கற்றுக்கொடுத்தனர். மனித நேயமிக்க இந்த இஸ்லாமிய மார்க்கம் இன்று இந்தியாவில் மிகப் பெரிய ஒரு அபாயத்தை எதிர் நோக்கி உள்ளதை எண்ணி வேதனைப்படுகின்றேன்.

இந்தியாவில் இஸ்லாம் எப்படி பரவியது என்பதைப் பற்றி கொஞ்சம் சிந்திப்போம். இந்தியாவில் முதன் முதலில் வியாபாரமாகத்தான் இஸ்லாம் பரவியது. அவர்கள் செய்த வியாபாரத்தில் நேர்மை இருந்தது. இறையச்சம் மிக்கவர்களாக ஒழுக்க சீலர்களாகதாங்கள் செய்கின்ற அனைத்தும் இறைவனின் பொருத்தத்தை பெறவேண்டும் என எண்ணிச் செய்தார்கள். அதன் காரணமாக இஸ்லாம் இந்திய மண்ணில் பரவியது. இதன் பிறகு இந்திய மண்ணில் 800 ஆண்டுகள் ஆண்ட முஸ்லிம்கள் மன்னர்கள் என்ன செய்தார்கள்? இவர்கள் இம்மக்கள் மத்தியில் புனித இஸ்லாத்தை, இஸ்லாத்தின் ஏற்ற மிகு கொள்கையை எடுத்து வைத்தார்களா? குர்ஆன், ஹதீஸ்படி ஆட்சி நடத்தினார்கள்?

அரபி மொழியில் உள்ள குர்ஆனை தமிழ் நாட்டில் தமிழிலும், மகாராஷ்டிராவில் மராத்தியிலும், இந்தியாவில் அந்தந்த மாநில மொழிக்கொப்ப இந்த குர்ஆன் அன்று மொழி பெயர்த்து கொடுக்கப்பட்டு, அவற்றை மக்கள் மத்தியில் எடுத்து வைத்திருந்தால், தாங்கள் இந்த நாட்டை ஆண்டபோது ஒரு இஸ்லாமிய ஆட்சி செய்திருப்பார்களேயானால் 800 ஆண்டுகள் முஸ்லிம்கள் ஆண்ட இந்த பூமியில் ஒரு பாபரி மஸ்ஜித் இன்று இடிக்கப்படுமா? இந்த இழி நிலை ஏற்படுமா? இது இஸ்லாமிய நாடாக அல்லவா மாறி இருக்க வேண்டும்.என்ன செய்தார்கள் இந்த முஸ்லிம் மன்னர்கள்? நபி பட்டம் கிடைத்து 23 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த நபி (ஸல்) அவர்களின் தியாகம், உழைப்புக் காரணமாக உலகில்இன்று மூன்றில் ஒரு பங்கு நாடுகள் இஸ்லாமிய நாடுகளாக உள்ளன. (குர்ஆன், ஹதீஸ்படி நடக்கவில்லை என்றாலும்) அப்படி அவை தோன்றின. இங்கே என்ன செய்தார்கள் இவர்கள்? கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

முஸ்லிம் அரசர்களின் ஆட்சிக்குப் பிறகு அரசியலில் ஈடுபட்ட சமூகக் காவலர்கள் எனக் கூறிக்கொண்டு ஏகப்பட்ட பட்டம் பெற்றுள்ள இந்த கண்ணியம் மிக்கவர்கள் என்ன செய்தார்கள்? இஸ்லாத்தின் மனிதப் பண்பை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நினைத்தார்களா? இல்லை! மேடை கிடைத்தால் போதும் என மக்களை மூடர்களாக்கி இவர்கள் அரசியலில் அந்தஸ்து வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அரசியல் பிழைப்பு நடத்தினார்கள். இவர்கள் இஸ்லாத்தை எடுத்துச் சொன்னார்களா? ஆண்டுக்கு ஒரு முறை நபிக்கு விழா எடுக்கும் இவர்கள் அன்றைக்காவது தஃவா பணி செய்கிறார்களா?

இல்லை! இல்லை! நாங்கள்தான் ரசூலுல்லாஹ்வின் போதனைகளைப் பின்பற்றுகிறோம் எனக் கூறிக்கொண்டு முஸ்லிம் அல்லாத மக்களிடம் பணிசெய்கிறோம் எனக் கூறும் இவர்கள் தாங்கள் மட்டும் தான் முஸ்லிம்கள் என எண்ணி தமக்கு என ஒரு சட்டத்தைப் போட்டு கொண்டு இந்த வரையறைக்குள்ளே தான் எங்கள் ஜமாஅத்தில் இணையலாம் எனக் கூறுகின்றார்கள்.

எந்த நிலையிலாவது இஸ்லாத்தை அதன் முழுவடிவத்தை செயல் படுத்தவேண்டும் என நினைத்தார்களா? அரசு புள்ளிவிவரப்படி இன்று உள்ள முஸ்லிம்களில் 46% வறுமைக் கோட்டில் உள்ளார்கள் எனக் கூறுகிறதே! முஸ்லிம்களில் எத்தனை பெரிய பணக்காரர்கள் தன் சொத்தை கணக்கிட்டு ஜகாத் ஏழைகளுக்கு கொடுக்கிறார்கள்? இன்றும் எத்தனை முஸ்லிம்கள் வீட்டில் வேலை செய்யும் அரிஜன இன மக்கள் இருக்கின்றார்கள். ஜாதி இஸ்லாத்தில் இல்லை எனவே இந்த நிலையோடு ஏன் வாழ்கின்றீர்கள்? எனக் கேட்டு இஸ்லாத்தில் இணைந்த அரிஜன்கள் எத்தனை? அடிமைத் தொழிலை தவிர வேறு ஒன்றும் தொழில் செய்ய முடியாத ஒரு அடிமை சமுதாயத்திடமாவது இஸ்லாம் எடுத்துரைக்கப்பட்டதா?

இனியாவது முஸ்லிம் சமுதாயம் தஃவாபணியின் (அழைப்பு) முக்கியம் பற்றி சிந்தித்து இஸ்லாத்தை மக்கள் மத்தியில் பரப்பவேண்டும். அப்படி இந்த இஸ்லாம் பரப்பப்படுமானால் எந்த பாபர் மஸ்ஜிதும் இடிக்கப்படுகின்ற சூழ்நிலையை காணமுடியாது.

source:readislam

குஜராத் கலவரத்தை மோடிதான் தலைமை தாங்கி நடத்தினார்:முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர்அகமதாபாத்:2002ல் குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்திற்கு தலைமை தாங்கி நடத்தியவர் முதல்வர் நரேந்திர மோடிதான் என்று வாக்குமூலம் அளித்துள்ளார் முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர் கோர்தான் ஜடாபியா.

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) நேற்று ஜடாபியாவை வரவழைத்து கிட்டத்தட்ட 7 மணிநேரம் விசாரித்தது. அப்போது மோடியின் பங்கு குறித்து வாக்குமூலம் அளித்தார் ஜடாபியா.

இதுகுறித்து ஜடாபியா கூறுகையில், கலவரத்தின்போது மூத்த போலீஸ் அதிகாரிகள், தொழிலதிபர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார் மோடி. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த என்னை மோடி கண்டு கொள்ளவில்லை.அதிகாரப்பூர்வ கூட்டங்களுக்கும் என்னை அவர் அழைக்கவில்லை.

கலவரத்தை தலைமை தாங்கிய நடத்தியவரே நரேந்திர மோடிதான் என்று கூறியுள்ளார் ஜடாபியா..


கலவர வழக்கில் ஜடாபியா மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் நேற்றைய விசாரணையின்போது தனக்கும்,கலவரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு தான் பொறுப்பல்ல என்றும் கூறி 10பக்க கடிதத்தையும் அளித்துள்ளார் ஜடாபியா.

source: thatstamil

அக்டோபர் 22, 2010

கர்காரே படுகொலை:பதில் அளிக்க போலீசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவுமும்பை தாக்குதலின்போது மர்மமான முறையில் கொல்லப்பட்ட மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படைத் தலைவர் ஹேமந்த் கர்காரேயின் கொலையின் பின்னணியில் ஹிந்துத்துவா சக்திகள் செயல்பட்டுள்ளன என்பதனை சுட்டிக்காட்டி சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களில் பதில் அளிக்க மும்பை போலீஸ் கமிஷனருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பீகார் மாநில எம்.எல்.ஏக்களான ராதாகாந்த் யாதவும், ஜோதி பெடேக்கரும் சமர்ப்பித்த மனுக்களை பரிசீலித்த உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மும்பை தாக்குதலின்போது காமா மருத்துவமனையில் நடந்த தாக்குதலுக்கு காரணம், அஜ்மல் கஸாபோ அல்லது அபூ இஸ்மாயிலோ காரணமல்ல எனவும், அத்தாக்குதலின் பின்னணியில் அபினவ் பாரத் என்ற ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்புதான் செயல்பட்டுள்ளது எனவும் ராதாகாந்த் யாதவ் தான் அளித்த மனுவில் கூறியுள்ளார்.

2008 ஆம் ஆண்டு மலேகானில் நடந்த குண்டுவெடிப்பில் அதற்கு காரணமான உண்மையான குற்றவாளிகளான அபினவ் பாரத் பயங்கரவாதிகளை கர்காரே கைதுச் செய்திருந்தார்.இதற்கு பழிவாங்க அபினவ் பாரத் கர்காரேக்கு குறிவைத்தது.

முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலான எஸ்.எம்.முஷ்ரிஃப் தனது கர்காரேயைக் கொன்றது யார்? என்ற நூலிலும் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக யாதவ் குற்றஞ்சாட்டுகிறார். இதனைக் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தவேண்டும் என ராதாகாந்த் யாத் கோரிக்கை விடுத்துள்ளார்.

முஷ்ரிஃப் எழுதிய புத்தகங்களில் உண்மைகளல்ல, அபிப்ராயங்கள்தான் உள்ளன என அரசு தரப்பில் வாதாடிய துணை சோலிசிட்டர் ஜெனரல் டாரியஸ் கம்பாட்டா வாதிட்ட பிறகும் நீதிமன்றம் அதனை அங்கீகரிக்கவில்லை.

கர்காரேயின் மரணத்தைக் குறித்து வேறு சிலரும் சந்தேகத்தை முன்வைத்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், பொறுப்பான போலீஸ் அதிகாரி இதற்கு பதிலளிக்கவேண்டுமென உத்தரவிட்டது.

இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் நவம்பர் 29 ஆம் தேதி இதற்கு பதில் அளிக்கப்படும் என அரசுதரப்பு வழக்கறிஞர் பி.எ.பால் அறிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்&பாலைவனத் தூது

அக்டோபர் 21, 2010

ஏழை நாடுகளுக்கு outsource ஆகும் விவசாயம்


அவுட் சோர்ஸிங் என்பது உற்பத்தி, சேவை என அனைத்து துறைகளிலும் கொடி கட்டி பறக்கும் காலமிது. விவசாயம் மட்டும் இதற்கு விதி விளக்கா என்ன? விவசாயமும் தற்போது ஆப்ரிக்க மற்றும் ஆசிய நாடுகளுக்கு அவுட் சோர்ஸ் ஆக தொடங்கி உள்ளது. மற்ற துறைகளில் அவுட் சோர்ஸிங் என்றால் வளரும் நாடுகளுக்கு புதிய வேலை வாய்ப்பு, அன்னிய முதலீடு என்று ஒரு சில பயன்கள் கிடைக்கும். ஆனால் விவசாயத்தை அவுட் சோர்ஸ் செய்ய படுவதால் ஏழை நடுகள் மிக பெரிய பட்டினி சாவிற்கு அழைத்து செல்ல பட இருக்கின்றனர்.

சோமாலயா, சூடான் போன்ற நாடுகள் பற்றி கேள்வி பட்டாலே நம் அனைவரின் கண் முன்னாலும் நிற்பது அந்நாட்டு மக்கள் பட்டினியில் வதை படுவது பற்றி நாம் பார்த்த புகை படங்களாக தான் இருக்கும். அவ்வாறு பஞ்சத்தில் வாழும் நாடுகள் உணவு பொருட்களை சீனா மற்றும் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய போகிறார்கள் என்றால் ஆச்சிரியமாக இருக்கிறதா? அது தான் உண்மை!

உலக மக்கள் தொகை இன்று இருப்பதைவிட 2050ல் ஐந்து பில்லியன் உயரக்கூடும்.ஆனால் விவசாய நிலமோ அதற்கேற்ப்ப உயர சாத்தியம் இல்லை. தற்போது பெட்ரோலிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுபாடு நாளை உணவு பொருளுக்கும் வர கூடிய சாத்திய கூறு அதிகம் உள்ளது. இன்று அரபு நாடுகளிடம் பெட்ரோடாலர் பணம் அதிகம் குவிந்துள்ளது. சீனா, கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிடம் ஏற்றுமதி மூலம் அதிக அன்னிய செலாவனி குவிந்துள்ளது. இந்த இரண்டு வகை நாடுகளும் வருங்காலத்தில் தனது மக்களின் உணவு பொருட்களுக்கான தேவைக்கு வெளி நாடுகளை சார்ந்திருக்கும் கட்டாயத்தில் உள்ளது. இது ஒருபுறம் இருக்க மறுபுறமோ முதலீடுகளுக்கு வழி இல்லாமல், நல்ல இயற்கை வளங்கள், ஊழல் எதேச்சதிகார ஆட்சியாளர்களை கொண்டு, அவ்வப்போது பஞ்சத்தில் வாடும் ஏழை ஆப்ரிக்க நாடுகளும், ஒரு சில ஆசிய நாடுகளும் உள்ளன.

இவ்வகை நாடுகளிடம் அன்னிய முதலீட்டு கையிருப்பும் மிக குறைவு. அதன் விளைவு

1.உணவு பற்றாக்குறையை எதிர் நோக்கும் அரபு மற்றும் ஆசிய நாடுகள் ஏழை ஆப்ரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் பணத்தை முதலீடு செய்கின்றனர். மிக அதிக அளவில் நிலங்களை வாங்கி குவித்து அல்லது நீண்ட கால குத்தகைக்கு எடுத்து, சிறு மற்றும் குறு ஏழை விவசாயிகளின் நிலத்தை பிடுங்கி தங்கள் நாடுகளுக்கு தேவையான உணவை நவீன விவசாயம் செய்து தங்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

2.தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் நிதி துறையில் பெரும் லாபம் குறைவதாலும், உணவு பொருளின் விலை ஏற்றத்தாலும் தனியார் முதலீட்டு நிறுவனங்களும், மிக பெரிய பன்னாட்டு கார்போரேசன்களும் ஏழை நாடுகளின் விவசாயத்தில் அதிக முதலீடு செய்து பெரும் லாபம் பார்க்க முனைகின்றனர்.
இதனால் பெரும்பாலான ஏழை விவசாயிகள் தங்கள் நிலத்தை இழந்து வறுமையின் பிடிக்கு கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது

விவசாயிகளிடமிருந்து நிலத்தை பிடுங்குவது வரலாற்றில் புதிது அல்ல. அமெரிக்கா செவ்விந்திய மக்களிடமும், ஆப்ரிக்க, ஆஸ்திரேலிய பழங்குடி மக்களிடம் ஐரோப்பியர்கள் நிலத்தை பிடுங்கியது வரலாற்று செய்தி. ஆனால் இன்று ஏழை நாடுகளிடம் மீண்டும் நிலத்தை பிடுங்கும் அவல நில உலகெங்கும் நடக்க ஆரம்பித்துள்ளது. ஆனால் பத்திரிக்கைகளில் பெரிய அளவு இந்த செய்தி வெளியாவது இல்லை.

சமீபத்தில் தென் கொரிய நிறுவனம் மடகாஸ்கர் நாட்டின் பாதி விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து தென் கொரிய நாட்டுக்கு தேவையான உணவு பொருட்களை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் இட்டது. அந்நாட்டு மக்கள் புரட்சிக்கு பின் இத்திட்டம் கை விட பட்டது. இது போன்ற செயல்களில் முக்கியமாக இறங்கியிருக்கும் நாடுகள் சினா,கொரியா,ஜப்பான்,அரபு நாடுகள் மற்றும் சில மேலை நாடுகள். இந்தியாவை சேர்ந்த கம்பெனிகளும் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்திய கம்பெனிகள் மடகாஸ்கரில் நெல்,கோதுமை மற்றும் பயறு வகைகள், மலேசியா ,இந்தோனேசியா போன்ற நாடுகளில் எண்ணெய் வித்து மற்றும் பயிறு வகைகள் போன்றவற்றை உற்பத்தி செய்வதில் அர்வம் காட்டுகிறார்கள்.

இவ்வகை வியாபரத்தில் சீனாவின் பங்கு மிகவும் குறிப்பிட தக்க அளவில் வளர்ந்து வருகிறது. சீனாவின் மக்கள் தொகை வளர்ச்சியாலும்,தொழிற்மயமாதலும் விவசாய நிலம் குறைந்து வருகிறது. சீனா தன் வருங்கால விவசாய தேவையை பூர்த்தி செய்ய ஆப்ரிக்க(காங்கோ,சாம்பியா,சூடான்,சோமாலியா என பல நாடுகள்),தென் அமெரிக்க,ரஷ்யா,பாக்கிஸ்தான் என பல நாடுகளில் பெருமளவு நிலத்தை வாங்கி குவித்து வருகிறது. இனி வரும் காலங்களில் சீனா சுமார் ஒரு மில்லியன் சீன விவசாயிகளை ஆப்ரிக்க நாடுகளில் விவசாயத்துக்காக குடி அமர்த்த போவதாக செய்திகள் வந்து கொண்டுள்ளது.

அது போல் அரபு நாடுகள் தங்கள் நாடுகளில் விவசாயம் செய்ய அதிக செலவு ஆவதாலும் ,தண்ணீர் பற்றாக்குறையாலும் தங்கள் வருங்கால உணவு தேவையை சரி செய்ய பாக்கிஸ்தான்,கம்போடியா,பிலிபைன்ஸ் போன்ற ஆசிய நாடுகளிலும், தென் அமரிக்க நாடுகள் மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் பெருமளவில் நிலங்களை வாங்கி குவிக்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் கம்போடியா நாட்டில் குவைத், கத்தார் போன்ற நாடுகள் சுமார் 125,000 ஏக்கர் நிலங்களை குத்தகைக்கு வாங்கி உள்ளது.

தற்போதய நிதி நெருக்கடியால் மற்ற துறைகளில் லாபம் குறைவதாலும், விவசாய பொருட்களின் விலை ஏற்றத்தாலும் பெரும்பாலான மேலை நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் இது போல் பெரிய அளவு ஏழை நாடுகளில் விவசாய நிலங்களில் முதலீடு செய்ய தொடங்கி உள்ளனர்

இதனால் ஏழை நாடுகளுக்கு ஏற்படும் நன்மைகளாக கூற படுபவை

1.ஏழை நாடுகளிடம் விவசாயத்தில் முதலீடு செய்ய அதிக பணம் இல்லாததால் புதிய தொழில் நுட்பம் பயன்படுத்தி தேவையான் இடு பொருட்களை இட்டு அதிக உற்பத்தியை பெருக்க வாய்ப்பு இல்லாமல் உள்ளது. இவ்வகை முதலீடுகளால் நவீன தொழில் நுட்பத்தை பயன் படுத்தி அதிக அளவு உற்பத்தியை ஏற்படுத்த் முடியும்.

2. பல நாடுகளில் அதிக அளவு விவசாயம் செய்யும் நிலங்கள் இருந்தாலும் முதலீடு இல்லாததால் அவற்றை அந்நாட்டு மக்கள் விவசாயம் செய்வதில்லை. இது போன்ற வெளி நாட்டு முதலீடு மூலம் அந்த நிலங்களில் விவசாயம் செய்து உற்பத்தி பெருக்கம் செய்யலாம்

3. வெளி நாட்டினர் முதலீடு செய்யும் போது அவர்கள் நல்ல சாலை, சேமிப்பு கிடங்கு, துறைமுகம் போன்ற உள் கட்டமைப்பு வசதிகளை பெருக்குவர். அதை பயன் படுத்தி ஒட்டு மொத்த நாடே வளர்ச்சி அடையும்.

4.பெரும்பாலான நாடுகள் ஏழை நாடுகளிடம் நிலத்தை குத்தகைக்கு எடுக்கும் போது அந்நாடுகளில் நல்ல மருத்துவமனை கட்டி தருவது, கல்வி நிறுவனங்கள் அமைப்பது போன்ற வளர்ச்சி பணியில் அதிக கவனம் செலுத்த உறுதி அளித்துள்ளனர்.

5.ஏழை நாடுகளில் இது அதிக வேலை வாய்ப்பை உருவாக்கும

source: Sathukapootham's blog

அக்டோபர் 20, 2010

இராக்: அமெரிக்கப் படை விலக்கம் ஊரை ஏய்க்கும் நாடகம்!


‘‘அமெரிக்கப் படைகள் இராக்கில் நடத்தி வந்த போர் நடவடிக்கைகள் ஆகஸ்ட் 31, 2010 அன்றோடு முடிவடைந்துவிட்டதாக” அறிவித்திருக்கிறார், அமெரிக்க அதிபர் ஒபாமா. அவர் இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு இரண்டு வாரங்கள் முன்னதாக, இராக்கை ஆக்கிரமித்திருக்கும் அமெரிக்கப் படைகளின் ஒரு பகுதி இராக்கிலிருந்து வெளியேறியது. இந்த நடவடிக்கைகள் மூலம், “இராக் தற்பொழுது சுதந்திரமான சுயாதிபத்தியமுள்ள நாடாக ஆகிவிட்டதாகவும், இராக்கிற்கு விடுதலை பெற்றுத் தரும் தனது நடவடிக்கை வெற்றிகரமாக முடிவடைந்துவிட்டதாகவும்” உலக நாடுகளுக்கு அமெரிக்கா அறிவித்திருக்கிறது.

பாரக் ஒபாமா அதிபர் தேர்தலில் போட்டியிட்டபொழுது, இராக் போர் மீதான அமெரிக்க மக்களின் அதிருப்தியை ஓட்டுக்களாக அறுவடை செய்து கொள்ளும் தந்திரத்தோடு, இராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை அளித்தார். இப்பொழுது இந்தப் படை விலக்கத்தைக் காட்டி, அமெரிக்க மக்களுக்கு தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார், அவர். ஆனால், இந்தப் படைவிலக்கம் குறித்த செய்திகளை மேலோட்டமாகப் பார்த்தாலே, இதுவொரு மோசடி நாடகம் என்பதைப் பாமரர்கள்கூடப் புரிந்து கொள்ளலாம்.

இராக்கிலிருந்து வெளியேறியுள்ள அமெரிக்கப் படை அமெரிக்காவிற்குத் திருப்பியனுப்பப்படவில்லை. இராக்கிலிருந்து கூப்பிடு தூரத்தில் அமைந்துள்ள குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவ முகாமில்தான் தங்க வைக்கப்பட்டிருக்கிறது. 1990-இல் அமெரிக்கா இராக் மீது போர் தொடுத்தபொழுது, அமெரிக்கப் படைகள் குவைத் வழியாகத்தான் இராக்கிற்குள் நுழைந்தன என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த வெளியேற்றத்திற்குப் பிறகும் இராக்கில் 50,000 முதல் 70,000 துருப்புகள் வரை அடுத்த ஆண்டு வரை தங்கியிருப்பார்கள் என்றும், இத்துருப்புகள் ‘தீவிரவாதிகளை’ எதிர்த்துப் போராடுவதற்கு இராக் இராணுவத்திற்கு உதவி செய்வார்கள் என்றும் அறிவித்திருக்கிறது, அமெரிக்க அரசு.

அமெரிக்க அதிபர் வாக்களித்துள்ளபடி இத்துருப்புகள்கூட இராக் நாட்டிலிருந்து அடுத்த ஆண்டே விலக்கிக் கொள்ளப்பட்டாலும், அதனால் இராக்கில் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்துவிட்ட தாகக் கருதிவிட முடியாது. ஏனென்றால், அமெரிக்க அரசால் இராக்கில் நுழைக்கப்பட்டுள்ள இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான தனியார் கூலிப் படைகள் வெளியேறுவது பற்றி ஒபாமா வாயே திறக்க மறுக்கிறார்.

இதற்கும் மேலாக, இராக் நாட்டை தனது நிரந்தர இராணுவத் தளமாக மாற்றும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தி வருகிறது, அமெரிக்க ஏகாதிபத்தியம். இதன்படி, இராக்கிலுள்ள பாலாத் என்ற ஊருக்கு அருகே 40 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 20,000 துருப்புகள் தங்கக்கூடிய இராணுவத் தளமொன்றையும், அல்-அஸாத் என்ற ஊருக்கு அருகே 17,000 துருப்புகள் தங்கக்கூடிய இராணுவத் தளமொன்றையும் அமைத்து வருகிறது, அமெரிக்க ஏகாதிபத்தியம். இந்த இரண்டு தளங்களையும் சேர்த்து, இராக் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறிதும் பெரிதுமாக 94 இராணுவத் தளங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது, அமெரிக்க ஏகாதிபத்தியம்.

இதுவொருபுறமிருக்க, அமெரிக்க இராணுவத் தலைமை பீடமான பென்டகனின் திட்டப்படி, இராக்கிலிருந்து வெளியேறியுள்ள படைக்கு ஈடாக மற்றொரு படையை இராக்கில் இறக்கிவிட்டுள்ளது, அமெரிக்கா. அரசு தந்திர நிபுணர்கள், பொருளாதார ஆலோசகர்கள், சமூக சேவகர்கள் என்ற போர்வையில் நுழைந்துள்ள இந்த அரசியல் படையின் கண்ணசைவிற்குத் தகுந்தபடிதான் இராக் பொம்மையாட்சி நடக்கும். இதற்குத் தகுந்தபடி இராக்கில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகம் 800-க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால், இராக்கிலுள்ள அமெரிக்கத் தூதரகம்தான் அந்நாட்டில் ஆட்சி அதிகார மையமாக இருக்கும்.

அமெரிக்கா இராக்கை ஆக்கிரமித்த பிறகு, தனது மேலாதிக்க நலன்களுக்குத் தகுந்தவாறு படைபல ஒப்பந்தமொன்றை உருவாக்கியது. இந்த ஒப்பந்தம்தான் இன்று இராக்கின் எழுதப்படாத சட்டத் தொகுப்பாக விளங்குகிறது. இந்தச் சட்டத்தின்படி, இராக்கின் வான்வழிப் பாதையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இராக்கிற்கு கிடையாது. அந்த அதிகாரம் இந்த ஒப்பந்தத்தின் வழியாக அமெரிக்காவிடம் அடகு வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா இராக்கை நேரடியாக ஆக்கிரமித்த பின், அதன் எண்ணெய் வளத்தில் 60 சதவீதத்தைக் கைப்பற்றிக் கொண்டுவிட்டது. சதாம் உசேன் ஆட்சியின்பொழுது நாட்டுடமையாக்கப்பட்டிருந்த இராக்கின் எண்ணெய் வயல்களைத் தனியார்மயமாக்கி, அவற்றை அமெரிக்க எண்ணெய்க் கழகங்களின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் இராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது என்ற உண்மை இந்தக் கைப்பற்றல் மூலம் மீண்டும் பளிச்சென அம்பலப்பட்டிருக்கிறது.
source:வினவு!

பர்தாவை தடை செய்ய வேண்டும்!- சிவசேனா கோரிக்கை

மும்பை,அக்,20:முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா எனப்படும் பர்தாவைத் தடை செய்ய வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியுள்ளது.கடந்த அக்டோபர் 15-ம் தேதியன்று புறநகர் சாந்தாகுரூஸில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இருந்து பர்தா அணிந்த பெண்ணால் இரண்டரை மாத ஆண் குழந்தை கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
குழந்தையை திருடுவதற்கு பர்தா பயன்படுத்தப்படுகிறது எனில் சட்டப்படி அதைத் தடை செய்ய வேண்டும் என சிவசேனை பத்திரிகையான சாம்னா தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பர்தாவையும், உடல் முழுவதையும் மறைக்கும் வகையிலான ஆடைகளையும் பிரெஞ்சு அரசு தடை செய்துள்ளதை சாம்னா பத்திரிகை பாராட்டியுள்ளது.
பர்தாவை தடைசெய்ய புரட்சிகர நடவடிக்கையை பிரெஞ்சு அதிபர் எடுத்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.துருக்கியிலும் கமால் பாஷா, பர்தாவுக்கு தடை விதித்தார். இந்தியாவில் மட்டும் ஏன் இந்த நிலை என்று சாம்னா பத்திரிகையில் வெளியான தலையங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

பால்தாக்கரேக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்!
அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதே இந்துத்துவாவினரின் வேலையாகிவிட்டது. அவ்வப்போது இஸ்லாத்திற்கும் , முஸ்லிம்களுக்கும் எதிராக ஏதாவது ஒன்றைக் கூறி அமைதியைக் கெடுத்து சட்டம் ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்துவதே இந்துத்துவாவினரின் ஒரே குறிக்கோளாகும்.

இந்த அடிப்படையில்தான் அடுத்த சர்ச்சையை இந்துத்துவா வெறியன் சிவசேனா கட்சியின் தலைவர் பால்தாக்கரே கிளப்பியுள்ளார். முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பால்தாக்கரே தமது கட்சி ஏடான சாம்னாவில் தலையங்கம் எழுதியுள்ளார். பர்தாவை தடைசெய்ய வேண்டும் என்பதற்கு பால்தாக்கரே கூறியுள்ள காரணம்தான் முட்டாள்தனமானதாகும்.

சாந்தாகுரூசில் வி.என்.தேசாய் மாநகராட்சி மருத்துவமனையில் பிறந்து இரண்டு மாதமே ஆன ஆண்குழந்தையை கடந்த பதினைந்தாம் தேதி பர்தா அணிந்த ஒரு பெண் திருடிச் சென்று விட்டாராம் . இதன் காரணமாகத்தான் திருட்டிற்குப் பயன்படும் பர்தா எனும் ஆடையை தடைசெய்ய வேண்டும் என்ற அறிவுப்பூர்வமான(?) காரணத்தை பால்தாக்கரே கூறியுள்ளான்.

பர்தாவை தடைசெய்ய வேண்டும் என்பதற்கு பால்தாக்கரே கூறியுள்ள காரணம் மிகவும் முட்டாள்தனமானதாகும். பர்தா என்பது பெண்களுக்கு கண்ணியத்தையும், பாதுகாப்பையும் தரக்கூடிய ஒரு ஆடையாகும். இந்த கண்ணியமிக்க ஆடையை அணிந்து ஒருவர் ஒரு தவறை செய்து விட்டால் அந்த ஆடையையே தடைசெய்ய வேண்டும் என்பது முட்டாள்தனமானதாகும்.

எத்தனையோ பேர் போலீஸ் அதிகாரி போல் சீருடை அணிந்து மக்களை ஏமாற்றி பலகேடுகெட்ட காரியங்களைச் செய்கின்றனர். மேலும் வங்கி அதிகாரிகளைப் போல் சீருடை அணிந்து மிகப் பெரும் மோசடியில் ஈடுபடுகின்றனர். சமீபத்தில் கூட வருமான வரித்துறை அதிகாரிகளைப் போல் நடித்து ஒரு வீட்டில் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது பத்ரிகைகளில் பரபரப்பான செய்தியாக வெளிவந்துள்ளது.

பல்வேறு துறைகளில் உள்ளவர்களின் சீருடைகளை அணிந்து சமூகவிரோதிகள் பல்வேறு சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக அனைத்து சீருடைகளையும் தடை செய்ய வேண்டுமென்று பால்தாக்கரே கூறுவரா?

காவியாடை அணிந்து எத்தனையோ பேர் காமலீலைகளில் ஈடுபட்டு கையும் களவுமாக மாட்டிக் கொண்டு ஊடகங்களால் கேவலப்படுத்தப்படுகின்றனர். எனவே காவியாடை அணிவதற்கு தடைவிதிக்க வேண்டுமென்று பால்தாக்கரே கூறுவாரா?

பர்தா என்ற கண்ணியமிக்க ஆடையை அணிவதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்று கூறுவதின் மூலம் அமைதியாய் உள்ள முஸ்லிம் சமுதாயத்தை தூண்டிவிட்டு பெரும் கலவரத்தை உண்டாக்க வேண்டும் என்பதே பால்தாக்கரே போன்ற இந்துத்துவவாதிகளின் நோக்கமாகும்.

எனவே இதுபோன்ற சமூகவிரோத கருத்துக்களைத் தெரிவித்து முஸ்லிம்களின் கோபத்தை தூண்டும் பால்தாக்கரே மீது மத்திய அரசும், மகராஷ்டிர மாநில அரசும் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் இந்திய அளவில் முஸ்லிம்கள் மாபெரும் போராட்டத்தில் குதிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை எச்சரிக்கையாகச் சொல்லிக்கொள்கிறோம்.

குஜராத் இனக் கலவரம்:குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரங்கள் ஆன்லைனில்


மும்பை,அக்.20:2002ஆம் ஆண்டு குஜராத்தில் ஏராளமான முஸ்லிம்களைக் கொலை செய்து இன சுத்திகரிப்பு நடத்திய சங்கபரிவாரங்களுக்கு எதிரான வழக்குகளில் தகுந்த ஆதாரங்களை சமர்பித்து முக்கிய பங்காற்றி மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் "நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பு (The Citizens for Justice and Peace)" தான் இதுவரை இந்த இந்து தீவிரவாதிகளுக்கு எதிராக திரட்டிய மொத்த ஆதாரங்களையும் பொதுமக்கள் பார்வைக்காக இன்டர்நெட்டில் வெளியிட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாய நாடான இந்திய தேசத்திற்கு உலக நாடுகளின் முன்னிலையில் மாபெரும் அவமானத்தையும், தலைக் குணிவையும் ஏற்படுத்திய இந்த இன சுத்திகரிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க, இதனை நடத்திய இந்து தீவிரவாத கும்பல்களுக்கு உரிய தண்டனை கொடுத்து நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று களமிறங்கிய இந்த The Citizens for Justice and Peace அமைப்பு, தகுந்த ஆதாரங்கள் இருந்தும் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குப் பதில், குற்றம் செய்த தீவிரவாதிகளைப் பாதுகாக்கும் பணிகளை செய்து வந்த அரசுக்கெதிராக போராடி வந்தது.தான் சேகரித்த ஆதாரங்களை உடனுக்குடன் நீதிமன்றத்தில் சமர்பித்தும் வந்தது. ஆனால் நமது நீதிமன்றங்கள் தம்மால் முடிந்த அளவிற்கு விசாரணையை காலம் தாழ்த்தின என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வருத்தம் தரக்கூடிய விஷயம்.
மற்றொரு புறம், குற்றவாளிகளுக்கெதிராக தேவைக்கு அதிகமாகவே கிடைத்த ஆதாரங்கள் ஒவ்வொன்றையும் தட்டிக்கழித்தும், நீதி விசாரணையை காலவரையின்றி இழுத்தடித்தும் வந்தன.இந்நிலையில் எங்களுக்கு கிடைத்த ஆதாரங்கள் அனைத்தையும் பொதுமக்கள் முன் சமர்பிக்க எங்களால் இயன்ற அளவு முயற்சிகள் செய்து வந்துள்ளோம்.
புதிய முயற்சியாக அனைத்து ஆதாரங்களையும் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இதனை http://www.gujarat-riots.com/ என்ற இணைய தளத்தில் கொடுத்துளோம் என்று TCJP அமைப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து தாங்கள் எடுத்துவரும் இதுபோன்ற முயற்சிகளால் குற்றவாளிகள் தண்டிக்கபடுவார்கள் என்று தாங்கள் நம்புவதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.கீழ்காணும் முக்கிய ஆவணங்கள் இப்போது பதிவு செய்யப்பட்டுள்ளன:
* தேசிய மனித உரிமை கழகத்தின் (NHRC) அதிகாரப்பூர்வ அறிக்கை
* தேசிய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை
* குஜராத் மாநில அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கை* உச்ச நீதிமன்றம் மற்றும் பிரத்தியோக விசாரணை நீதிமன்றங்களின் தீர்ப்புகள்
* கலவர நேரத்தில் முக்கிய தலைவர்கள் பேசிய தொலைபேசி உரையாடல்கள். அதில் யார் யாருடன் பேசினர், கலவர நேரத்தில் என்னென்னவெல்லாம் பேசினார்கள் என்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட ஆதாரம்
* மாநில அரசு தெரிவித்த நிவாரண பணிகள் மற்றும் புணர்நிர்மான, மறுவாழ்வுக்கான பணிகளுக்கான அறிக்கைகள்
* முன்னாள் மாநில உளவுத்துறை தலைவர் RB ஸ்ரீகுமாரின் சட்டபூர்வ ஒப்புதல் அறிக்கைகள் (affidavits) அதன் மற்ற இணைப்புகள்தேசிய அவமானமாகக் கருதப்படும் முஸ்லிம்களுக்கெதிரான இந்த இன சுத்திகரிப்பு நடவடிக்கையை குஜராத் மாநில அரசாங்கம் தான் ஆசீர்வதித்து முன்னின்று நடத்தியது என்பதற்குப் போதுமான ஆதாரம் உள்ளதா? என்று அனைவராலும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விக்கு, மிகுந்த எச்சரிக்கையுடன் கூடிய எங்களின் தொடர் முயற்சி வெகு விரைவில் விடை கிடைக்கும் என்று தாங்கள் நம்புவதாக இந்த அமைப்பினர் தெரிவித்தனர்.ஆனால் இந்த ஆதாரங்கள் எல்லாம் தகுந்த முறையில் விசாரிக்கப்பட்டு முறையான நீதி வழங்கப்படுமா என்பதை இப்போது நாம் அறுதியிட்டுக் கூற முடியாது.
ஓரிரு மாதங்கள் பொறுத்திருந்து பாப்போம் என்றும் "இந்திய தேசத்தின் நீங்கா அவமானமாக நிலைபெற்றுவிட்ட இந்த கருப்பு நாட்களை நேர்மையோடு விசாரித்து நீதிவழங்க உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நமது இந்திய தேசத்தின் அரசியல் அமைப்பிற்கு நீதியை நிலைநாட்டும் நேர்மையும் தைரியமும் உண்டா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்" என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

கூகுளின் ஆளில்லா தானியங்கி (Robot) கார் : பீதியில் முன்னணி நிறுவனங்கள்!


இணையதள ஜாம்பவான் கூகுல், பல தொழில்நுட்பத்தில் காலடி பதித்துள்ளது (பல நிறுவனங்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது). அது தற்போது ஆளில்லா கார் ஒன்றை பரிசோதித்து வருகிறது. அந்த பரிசோதனைக்கார் ஏற்கனவே ஆயிரக்கணக்கான மயில்களை பயணித்து பரிசோதனையில் வெற்றிபெற்றுள்ளது. ஒரு சில நேரங்களில் பரிசோதனையில் தடுமாறியதாகவும், அதை சிறம்பட செயல்படுத்த அணைத்து நடவடிக்கைகளை செய்து வருவதாகவும் அறியப்படுகிறது.
இந்த கார் தொழில்நுட்பத்தில் இன்னுமோர் மயில் கல்லானாலும், இது பலரிடம் பல கேள்விகளையும், தயக்கங்களையும் ஏற்படுத்தி உள்ளது.

நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்ட அலஹாபாத் நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடி செய்ய வேண்டும்: டெல்லி எம் எல் ஏ உச்ச நீமின்றத்தில் மனு!


லோக் ஜனசக்தி கட்சியின் டெல்லி எம்.எல்.ஏ சோயிப் இக்பால் அவர்கள் சமீபத்தில் பாபர் மஸ்ஜித் நிலத்தின் மீது அலஹாபாத் உயர் நீதின்றம் அளித்த தீர்ப்கை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார்.
மனுவில் ”இந்த தீர்ப்பு இந்திய அடிப்படைய சாசன சட்டத்திற்கு எதிரானது. முழுக்க முழுக்க நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனது அலஹபாத் உயர் நீதின்மறம் அளித்த தீர்ப்பை தள்ளுபடி செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்
எம்.எல்.ஏ சோயிப் அவர்களின் வழக்கறிஞர் கஷ்யப் இதை தெரிவித்துள்ளார்.
பி.டி.ஐ செய்திகுறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாபர் மஸ்ஜித் நிலம் தொடர்பாக அலஹாபாத் உயர் நீதிமன்ற வழக்கில் இவர் சம்பந்தப்படாதவர் என்பது குறிப்பிடதக்கது.
இந்திய நாட்டின் குடிமகன் என்ற அடிப்படையில் இந்திய நாட்டின் இறையான்மைக்கும் மதசார்பற்ற தன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வண்ணம் அலஹாபாத் தீர்ப்பு அமைந்துள்ளதை எதிர்த்து இவர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.

அக்டோபர் 19, 2010

அதிவேக வளரும் நகரங்களின் பட்டியலில் 3 இந்திய நகரங்கள்

சர்வதேச அளவில், அதிவேக வளரும் நகரங்களின் பட்டியலில், இந்திய நகரங்களான சென்னை,பெங்களூரு மற்றும் ஆமதாபாத் இடம்பிடித்துள்ளது.

சர்வதேச அளவில் எல்லாதுறைகளிலும் வளர்ச்சி அடைந்து வரும் நகரங்களின் பட்டியலை, போர்பஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. போர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில், ஆசிய கண்டத்தில் உள்ள நகரங்களே அதிக இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் சீனாவில் உள்ள 4 நகரங்களும் இடம்பெற்றுள்ளன , செங்டு, சோன்கிங், சுஜோ மற்றும் நான்ஜிங் நகரங்கள் இடம்பெற்றுள்ளது.


இதில் ஒவ்‌வொரு நகரங்களின் வளர்ச்சி குறித்தும் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய நகரங்களின் வளர்ச்சி குறித்து காண்போம், முதலில் சென்னை நகரத்தின் வளர்ச்சி :

சென்னை நகரத்தில், மிகக்குறுகிய காலத்தில், ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரி அசுர வளர்ச்சி பெற்றுள்ளதாகவும், ஆசியாவின் டெட்ராய்ட் என்று குறிப்பிடும் அளவிற்கு சென்னை உயர்நது வருவதாகவும், இதுமட்டுமல்லாது, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன்ஸ் உபகரணங்கள் தயாரிப்பு, சாப்ட்வேர் சேவைகள் மற்றும் ஹார்டுவேர் தயாரிப்பு பிரிவிலும் சென்னை முன்னிலை வகிப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெங்களூரு :

இந்தியாவின் சிலிக்கான்வேலி என்ற புனைப்பெயரால் குறிப்பிடப்பட்டுள்ள பெங்களூரு நகரம், நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மற்றும் பன்னாட்டு ஐடி நிறுவனங்களின் இந்திய தலைமையகமாக உள்ளதாகவும், தேசிய அளவில் எப்எம்சிஜி சந்தையில், நான்காவது பெரிய நகரமாக இது விளங்குவதாகவும், பல மில்லியனர்களை தன்னகத்தே கொண்டுள்ளதாகவும், இந்திய அளவில் வெகுவேகமாக வளர்ச்சியடைந்து வருவதாகவும், வேலையில்லாதோருக்கு எண்ணற்ற வேலைவாய்ப்புகளை வழங்குவதிலும், பெரும் தொழிலதிபர்களுக்கு, முதலீடு செய்ய ஏற்ற இடமாக பெங்களூரு திகழ்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆமதாபாத் : குஜராத் மாநிலத்தின் வர்த்தக தலைமையகமாக விளங்கும் ஆமதாபாத் நகரம், தொழில்துறை வளர்ச்சிக்கு ஏற்ற நகரமாகவும், நகரத்தின் வளர்ச்சி , பிரமிக்கத்தக்க வகையில் உள்ளதாகவும், முன்னணி கெமிக்கல்ஸ் மற்றும் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனங்கள் மிகுந்துள்ளதாகவும், பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் தலைமையகங்களை ஆமதாபாத்தில் அமைக்க முன்வருவதாகவும், தகவல்தொழில்நுட்பத்துறையில் அசுர வளர்ச்சி பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த பட்டியலில், சர்வ‌தேச அளவில் சிறந்த மெட்ரோபாலிடன் நகரங்களான நியூயார்க், லண்டன், பாரீஸ், ஹாங்காங், டோக்கியோ, சியோல், ஷாங்காய், சிங்கப்பூர், பீஜிங், டில்லி, சிட்னி, டொரண்டோ, மும்பை, மெக்சிகோ நகரங்கள் கணக்கில் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போலிஸ் நிலையங்களில் ஆயுத பூஜைசேலம் அருகே மேட்டூர் நகரில் போலிஸ் நிலையம் ஒன்றில் போலிசார் ஆயுத பூஜையை ஒட்டி, தங்களது போலிஸ் நிலையத்தில் இருக்கும் துப்பாக்கி போன்ற ஆயுதங்களுக்கு பூஜை செய்ய முனைந்தபோது, அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த பெரியார் திராவிட கழகத்தினர் போலிஸ் நிலையத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதாக அவர்கள் மீது போலிசார் வழக்குப் பதிவு செய்ததாகச் செய்திகள் வந்தன.

இந்த ஆயுத பூஜை நடைமுறை குறித்து கருத்து தெரிவித்த பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலர் விடுதலை ராசேந்திரன், ஒரு மதச்சார்பற்ற நாட்டில், அரசு அலுவலகங்களில் இது போன்ற மத நடைமுறைகள் மற்றும் பண்டிகைகளைக் கொண்டாடக்கூடாதென்ற அரசாணை இருந்தும் இதை மீறி போலிசார் இதைச் செய்வதைக் கண்டிக்கும் விதமாக தங்களது இயக்கத்தினர் போலிஸ் நிலையத்துக்கு சென்று அந்த பூஜை செய்யப்படுவதை மொபைல் தொலைபேசி மூலம் புகைப்படம் எடுக்க முயன்றபோது, போலிசார் அவர்களது மொபைல் தொலைபேசிகளைப் பிடுங்கி உடைத்துவிட்டதாகக் கூறினார்.
தாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறையில் ஈடுபடவில்லை என்று குறிப்பிட்ட ராசேந்திரன், போலிசார் ஒரு குறிப்பிட்ட மதப்பண்டிகையை நடத்துவது என்பது சரியல்ல, மதத்தைப் பின்பற்றாதவர்களுக்கும், பிற மதங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இது கவலையை அளிக்கும் என்றார்.

இது குறித்து தமிழோசைக்கு கருத்து வெளியிட்ட தமிழகக் காவல் துறைத் தலைமை இயக்குநர் , லெத்திகா சரண், 'எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் ஒரு மதச்சார்பற்ற படைதான். இந்த விஷயத்தை ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த ஒரு விஷயமாக நாங்கள் பார்க்கவில்லை' என்று கூறினார்.

அக்டோபர் 18, 2010

முழு அடைப்பைக் கைவிட ஆட்சியர் வேண்டுகோள்!கடலூர்:என்.எல்.சி.ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக 19-ம் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கும் முழுஅடைப்பைக் கைவிட வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக உரிய தீர்வு காண,தமிழக முதல்வர்,நடுவண் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் இப்பிரச்னைக்குத் தொழிலாளர் அலுவலர் முன்னிலையில்,பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண ஆணையிட்டு உள்ளது.இந்நிலையில் சென்னை மண்டல தொழிலாளர் ஆணையர் சமரச பேச்சுவார்த்தைக்கு நாள் குறித்து உள்ளதால், 19-ம் தேதி கடலூர் மாவட்டத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ள முழுஅடைப்பை, கைவிட வேண்டும்.

அத்துடன் பண்டிகைக் காலம் நெருங்கி இருப்பதால், முழுஅடைப்பினால் பொதுமக்களுக்கும் வணிகர்களுக்கும்,பாதிப்பு ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு, இப்போராட்டத்தைக் கைவிடுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.மேலும் இத்தகைய போராட்டங்களால் பொதுமக்களுக்குச் சேதம் ஏற்படுமாயின், அது கடுமையாகக் கருதப்பட்டு, சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

சேத்தியாத்தோப்பு : சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் மற்றும் என். எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத் திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்துக்கட்சி சார்பில் சேத்தியாத்தோப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கக் கோரி சர்க்கரை ஆலை தொழிலாளர்களும், பணி நிரந்தரம் மற் றும் சம்பள உயர்வு கோரி என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து கட்சி சார்பில் சேத்தியாத்தோப்பு பஸ் நிலையம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

அக்டோபர் 17, 2010

அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறது AIMPLB


லக்நோ: செப்டம்பர் 30 அன்று அலகாபாத் உயர்நீதி மன்றம் பாப்ரி மஸ்ஜித் வழக்கில் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய தாருல்உலூம் நத்வதுல் உலமா தீர்மானித்துள்ளது . அக்டோபர் 16,2010 அன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது இக்கூட்டத்திற்கு மௌலானா செய்யத் முஹம்மத் ரபி ஹசனி நத்வி அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏன் எதிர்க்கிறீர்கள் என்று மூத்த வழக்கறிஞர்ஒருவரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு , "இத்தீர்ப்பு அனைவரும் ஏற்றுக்கொண்ட சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தாமல் வெறும் ஒரு சார்பாக மத நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது " என்று பதிலளித்தார் நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்வதென்றால் முஸ்லிம்களின் நலன், அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஷரியத் சட்டத்தின் அடிப்படையிலேயே பேச்சுவர்த்தை அமைய வேண்டும் மேலும் பல இடங்களில் உள்ளது போல கோவிலுக்கு அருகிலேயே மஸ்ஜித் இருப்பதற்கு ஆட்சேபனை இல்லை என்றாலும் இங்கு நாம் அனுமதிக்க முடியாது காரணம் இங்கு கோவிலை இடித்துவிட்டு மஸ்ஜித் கட்டியதாக கூறப்படுவதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று குறிப்பிட்டார்.

முன்னதாக பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான், சோஷியல் டெமோக்ரேடிக் பார்டியின் தேசிய தலைவர் இ.அபூபக்கர், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தேசிய தலைவர் மவ்லானா உஸ்மான் பேக் ஆகிய தலைவர்கள் உ பி சன்னி வக்ப் போர்டு தலைவரை நேரில் சந்தித்தனர். அப்போது வழக்கில் வாதாடுவதற்கு பிரபலமான வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவர். அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை அங்கீகரித்து சமரசத்திற்கு தயாராகவேண்டும் என்ற வாதத்தை ஏற்கமுடியாது என்று தெரிவித்தார் . நம்பிக்கையை மட்டும் ஆதாரமாகக் கொண்டுள்ள இந்த தீர்ப்பில் பேச்சுவார்த்தை நடத்துவது பலன் தராது. இவ்வழக்கில் மாயாவதி தலைமையிலான உ.பி அரசு வக்ஃபோர்டிற்கு பூரண சுதந்திரம் அளித்துள்ளது. வழக்கை முன்னெடுத்துச் செல்ல பொருளாதார ரீதியான குறைபாடுகள் உண்டு என சுஃபர் அஹ்மத் ஃபாரூக்கி தெரிவித்தார். இதற்கு பதிலளித்த தலைவர்கள் கூறுகையில்,பாப்ரி மஸ்ஜித் வழக்கு என்பது ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களின் பிரச்சனையாகும். வழக்கை நடத்துவதில் இந்திய முஸ்லிம்கள் அனைவரும் உடனிருப்பர் என உறுதி வழங்கினர். உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வதற்கு தேவையான விபரங்களை ஒரு வழக்கறிஞர் குழு தயாராக்கி வருவதாக வழக்கறிஞர் ஸஃபர்யாப் ஜீலானி தெரிவித்தார் மேலும் உச்சநீதிமன்றத்திலிருந்து நீதியை எதிர்பார்க்கிறோம். வழக்கை நடத்துவதற்கு பெருமளவிலான பணம் தேவைப்படும். என்றும் தெரிவித்தார்.

முஸ்லிம்கள் தரப்பில் பாப்ரி மஸ்ஜித் வழக்கில் துவக்கம் கால மனுதாரரான ஹாஷிம் அன்சாரி கூறியதாவது: பாப்ரி மஸ்ஜித் வழக்கில் சன்னி வக்ஃப் போர்டுடன் நிற்பேன். சமுதாய துரோகத்திற்கு ஒருபோதும் துணை போகமாட்டேன். அயோத்தியில் சில ஹிந்து சன்னியாசிகளுடன் நான் நடத்திய கலந்துரையாடலை ஊடகங்கள் தவறாக பரப்புரைச் செய்தன என்றும் அன்சாரி குறிப்பிட்டார்.

உலக நாடுகளில் செல்போன் உதவியால் வறுமை குறைகிறது: ஐ.நா.சபை தகவல்


நியூயார்க், உலக நாடுகளில் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் 500 கோடியே எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது விரைவில் ஒவ்வொரு பேரிடமும் ஒரு செல்போன் இருக்கும் அளவுக்கு வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது.

தற்போது வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் 100 பேருக்கு 58 பேரிடம் செல்போன் உள்ளது. ஏழை நாடுகளில் 100 பேரில் 25 பேரிடம் செல்போன் இருக்கிறது. செல்போன் உபயோகத்தால் உலக நாடுகளில் வறுமை குறைந்து வருகிறது என்று ஐ.நா.சபை ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. செல்போன் வைத்து இருப்பவர்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை செல்போன் மூலமே எளிதாக பெற்று விடுகின்றனர்.

இதனால் அவர்கள் குறிப்பிட்ட இடத்துக்கு பணம் செலவு செய்து செல்ல தேவையில்லை. வீண் அலைச்சல் குறைகிறது. இது போன்ற காரணங்களால் மக்களுக்கு பல வழிகளில் செலவுகள் குறைகின்றன. எனவே வறுமை நிலையும் குறைகிறது என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது. செல்போன் மூலம் ஏராளமான மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

ஆல்ப்ஸ் மலையை குடைந்து பிரமாண்ட ரயில் பாதை


செட்ரான் : உலகின் மிக நீண்ட மலைத்தொடரான ஆல்ப்ஸ் மலையை கு‌‌டைந்து பிரமாண்டமான கணவாய் ரயில்பாதையினை சுவிட்சர்லாந்து வெற்றிகரமாக நடத்தியது. ஐரோப்பா கண்டத்தின் வடக்கு, தெற்கு பகுதியினை இணைக்கும் ஆல்பஸ் மலைத்தொடரில் அமைந்துள்ளது கோத்ராட் கணவாய் இம்லைப்பகுதியினை குடைந்து 57 கீமீ தூரத்தி்ற்கு (34 மைல்கள்) ரயில் பாதை அமைக்க 9.8 மில்லியன் சுவிட் பிராங்க்கள் ( 10.6 மில்லியன் டாலர்கள் ) திட்டச்செலவு மதிப்பிடப்பட்டு கடந்த 1994-ம் ஆண்டு கட்டுமானப்பணிகள் தொடங்கின.

இந்த ரயில்பாதை சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரினையும், இத்தாலியின் மிலன் நகரினை இணைக்கின்றன. மொத்தம் 10 மீட்டர் விட்டளவு கொண்ட மலையினை குடைந்து பாதை அமைக்க சிசிசி எனும் அதி நவீன இயந்திரம் வரவழைக்கப்பட்டு 50 சுரங்கத்தொழிலாளர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டனர். மலையை குடையும் இயந்திரத்தின் பணியை சுவிஸ் டி.வி. ஐரோப்பா கண்டம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பியது. பிறகு கட்டுமானத்தொழிலாளர்கள் இந்த பணி வெற்றிகரமாக முடிந்ததையெடுத்து கைத்தட்டி ஆராவாரம் செய்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.

இதன் கட்டுமானப்பிரிவின் தலைவர் ஹெனிஸ் ஈகர்பார் தெரிவிக்கையில், ஐரோப்பா கண்டத்தின் மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த பணியில் மொத்தம் 2500 பேர் ஈடுபட்டனர். கட்டுமானப்பணியின் போது 8 பேர் இறந்துள்ளனர். அவர்களுக்கு இந்த வெற்றிய‌ை சமர்ப்பிக்கிறோம் என்றார். கோத்ராட் கணவாய் வழியாக ரயில் போக்குவரத்து தொடங்கினால் இரு நகரங்களுக்கிடையே பயண தூரம் இரண்டு மணிநேரம், 60 நிமிடங்கள் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது. பயணிகள் மற்றும் சரக்குபோக்குவரத்திற்கும் இந்த கணவாய் பயன்படுத்தப்பட்டால் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் ஏற்படும்.

எனினும் இந்த 2017-ம் ஆண்டில் தான் ரயில் போக்குவரத்திற்கு திறந்துவிடப்படும் என கூறப்படுகிறது. சவிட்சர்லாந்து போக்குவரத்துத்துறை அமைச்சர் பீட்டர் பியூகிளிஸ்டர் கூறுகையில், உலகின் மிக நீண்ட கணவாய் ரயில்பாதையை அமைத்த பெருமை சவிட்சர்லாந்து நாட்டிற்கு கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு முன்பு ஜப்பானில் உள்ள ஷிகான் கணவாய் ரயில்பாதை தான் (53.9 கி.மீ. ) உலகின் நீண்ட ரயில் பாதை என்ற பெருமையினை பெற்றிருந்தது.

புற்று நோய்க்கு மனிதனே காரணம் - ஆய்வு

புற்று நோய் ஏதோ இனம்புரியாத இயற்கை விளைவுகளால் ஏற்படுவதல்ல மாறாக மனிதன் தனக்காக உருவாக்கிக் கொண்ட அதிநவீன வாழ்வுதான் காரணம் என்று மான்செஸ்டர் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மனிதனின் உற்பத்தி நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள உடல்ரீதியான மாற்றங்களே சமீப புற்று நோய்க் கட்டிகளுக்குக் காரணம் என்று இவர்கள் கூறுகின்றனர்.
இதனை உறுதி செய்ய அவர்கள் எகிப்திய மம்மிக்களை தங்களது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். நூற்றுக்கணக்கான மம்மிக்களை ஆய்வு செய்ததில் ஒரேயொரு மம்மியில் மட்டும் புற்று நோய் இருந்தது உறுதியானது.
பண்டைய எகிப்திய பிரதிகளில் காணப்படும் புற்று நோய்ப் போன்ற நோய்க்கான குறிப்புகள் அனைத்தும் குஷ்ட ரோகத்தினால் ஏற்படும் உடல் ரீதியான அறிகுறிகளை புற்று நோய் என்பதாக அது கூறியுள்ளது என்று இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வின் தலைவரான மைக்கேல் ஸிம்மர்மேன் மாம்மிக்களில் கட்டிகள் இருந்ததற்கான அடையாளம் இல்லை என்பதால் புற்று நோய் அந்தக் காலக்கட்டத்தில் இல்லை என்று கூறமுடியும் என்று கூறுகிறார்.
"இதனால் புற்ற்நோய் அல்லது புற்று நோய் உருவாக்கக் காரணிகள் தொழிற்புரட்சிக்குப் பிந்தைய வாழ்வு முறையே என்று நாம் கருத இடமுண்டு" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
"சுற்றுசூழலில் இயற்கையாக உள்ள எந்த ஒரு கூறும் புற்று நோய்க்கு காரணமாக இருக்கவில்லை. இதனால் இது மனிதனால் ஏற்பட்டுள்ள சீரழிந்த, மாசாகிப்போன சூழ்நிலைகளால் உருவானதே" என்று நாம் கூற முடியும்." என்று சக ஆய்வாளரும் பேராசிரியருமான ரொசாலி டேவிட் கூறுகிறார்.
அதாவது எய்ட்ஸ், புற்று நோய் என்பதெல்லாம் ஆதிகாலம் தொட்டே இருந்து வருபவை என்ற பொய்யை மருத்துவ ஆய்வும் கார்ப்பரேட் ஆய்வும் கூறிவரும் இந்த நிலையில் புற்று நோய்க்கு ஒரு வரலாற்றுப் பார்வையை அளிக்க இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல்வேறு காலத்தின் உடல்களை ஆய்வு செய்ததில் நவீன சமூகங்களுக்கு கிடைத்த செய்தி என்னவெனில் "புற்று நோய் என்பது மனிதனால் உருவாக்கப்பட்டதே" என்பதுதான் என்று இந்த ஆய்வாளர்கள் அடித்து‌க் கூறுகின்றனர்.
நியூஸ் : வெப் துனியா