Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 15, 2015

கொள்ளுமேடு ஊராட்சி பயனியர் நிழற்குடை பணி என்.முருகுமாறன் அவர்கள் ஆய்வு.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் தொகுதியில் உள்ள கொள்ளுமேடு ஊராட்சி, வீராணம் ஏரிக்கரையில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூபாய். 4 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடை கட்டுவதற்கு நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு அவற்றிற்க்கான பணி துவங்க உள்ள இடத்தில் அளவீடு செய்யப்பட்ட போது சட்டமன்ற உறுப்பினர் என்.முருகுமாறன் அவர்கள் ஆய்வு செய்தார். அருகில் காட்டுமன்னார்கோயில் ஒன்றிய பெருந்தலைவர் மணிகண்டன், EKPமணிகண்டன் ஆகியோர் உள்ளனர்.
நன்றி:என்.முருகுமாறன் MLA

ஆகஸ்ட் 14, 2015

ஓர் வபாத் செய்தி!

நமதூர் தெற்குத்தெருவில் வசிக்கும் A.K இஸ்மாயில் அவர்களின் சகோதரர் காதர் ஒலி அவர்கள்  நேற்று நள்ளிரவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் "ஷப்ரன் ஜமிலா" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress பிரார்த்தனை செய்கிறது.