Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 31, 2013

அதிக வேலைவாய்ப்பு தரும் புதுபுது டிப்ளமோ படிப்புகள்!

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் முடிந்து விட்டது. இந்த கல்லூரிகளில் சேராத மாணவர்களுக்கு டிப்ளமோ படிப்பில் சேரும் வாய்ப்புகள் உள்ளது. தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளுக்கு தேவைப்படும் மின்சார பழுது சரிபார்த்தல், பிளம்பிங், பிட்டிங் உள்ளிட்ட பல்வேறு சிறுசிறு வேலைகளுக்கு லட்சக்கணக்கில் ஆட்கள் தேவைப்படுகின்றனர். ஆனால், இந்தப் படிப்புக்கு பெரும்பாலான இளைஞர்கள் வருவதில்லை. இத்துறைகளில் சிறிய முதலீட்டில் மிகப்பெரிய உயரங்களை எட்ட முடியும்.

கொஞ்சம் உழைப்பு, கொஞ்சம் பயிற்சி, கொஞ்சம் திட்டமிடல் இருந்தால் போதும். பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ்2 வகுப்புக்கு மேல் கல்வியைத் தொடர முடியாத நிலையில் உள்ளவர்கள், கல்லூரிக்கு செல்ல முடியாத நிலையிலும் கல்வியைத் தொடர நினைப்பவர்களுக்கு பட்டயப்படிப்பு கைகொடுக்கும். பட்டப்படிப்பை முடித்த பின்னரும் வேலை வாய்ப்பு இல்லாதவர்கள், புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள நினைப்பவர்களுக்கும் பட்டயப்படிப்பு வாய்ப்புகளை உருவாக்கும். நம் விருப்பத்துக்கு ஏற்ற பட்டயப்படிப்பை தேர்வு செய்ய இணையதளம் மூலம் தகவல்களைப் பெற முடியும். பயிற்சிக் காலம், கட்டணம், வேலை வாய்ப்பு, பயிற்சி நிறுவனங்கள் குறித்த தகவல்களின் அடிப்படையில் முடிவு செய்யலாம்.

அனிமேஷன் மாற்றம் கார்ட்டூன் படிப்பு: தமிழகத்தில் கேளிக்கைத் துறையில் அனிமேஷன் மற்றும் கார்ட்டூன் படித்தவர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. பயிற்சி நிலையங்கள் மற்றும் கல்லூரிகள் இப்படிப்பை வழங்குகின்றன. அனிமேஷன் மற்றும் கார்ட்டூன் படிப்பை முடிப்பவர்களுக்கு திரைப்படம், தொலைக்காட்சி, விளம்பரத் துறை மற்றும் இணையத்தளங்களிலும் வேலை வாய்ப்புகள் உள்ளது.

ஹோம் டெக்கரேஷன் மற்றும் இன்டீரியர் டிசைனிங்: கட்டடத்தின் உட்புற அழகை பல்வேறு கோணங்களில் இருந்து மேம்படுத்திக் காட்டுவதே இன்டீரியர் டெக்கரேஷன் எனப்படுகிறது. இருக்கும் இடத்தை தேவைக்கு ஏற்ப பயன்படுத்துவது, உள் கட்டமைப்பில் எண்ணங்களை பிரதிபலிப்பது, எளிய மாற்றங்கள் மூலம் கட்டடங்களுக்கு ரிச்சான தோற்றம் தருவது

காட்டுமன்னார்கோவில்-சிதம்பரம்- குமராச்சி வழி சாலையை சீர்செய்ய கோரிக்கை

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில் இருந்து குமராட்சி வழியாக சிதம்பரம் வரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை மேடும், பள்ளமுமாக காணப்படுவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் உயிர் இழக்கும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. இந்த பகுதியில் அதிக அளவில் கிராமங்கள் உள்ளது.

கிராமமக்கள் காட்டுமன்னார்கோவிலை அடுத்து சிதம்பரம் நகரத்துக்கு பல்வேறு பணிகளுக்காக செல்கின்றனர். மேலும் இங்கு அண்ணாமலை பல்கலைக் கழகம் செயல்படுவதால் மாணவர்கள், பணிபுரியும் அலுவலர்கள், பேராசிரியர்கள் என தினந்தோறும் 500க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர். அரசு மருத்துவமனைகள் மற்றும் பல்வேறு சிறப்பு மருத்துவமனைகள் உள்ளதால் அதிகம் பேர் இந்த சாலை வழியாக செல்ல நேரிடுகிறது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுகிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை கடந்த இரண்டு ஆண்டுகளாக சேதமடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். நெடுஞ்சாலை துறையினரிடம் கேட்டால் இந்த சாலை நகாய் என்று அழைக்கப்படும் நேஷனல் ரோடு அத்தாரிட்டி ஆப் இந்தியா என்ற மத்திய அரசின் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தான் சீர்செய்ய வேண்டும் என கூறி தட்டிக் கழித்து

தெலுங்கானா பிரச்னை: ஆந்திராவில் வன்முறை வெடித்தது!

தெலுங்கானா பகுதி மக்களின், அரை நூற்றாண்டு கால கனவு, நேற்று நனவானது. நாட்டின், 29வது மாநிலமாக, தெலுங்கானா உதயமாகிறது. ஆந்திராவை உடைத்து, தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க, ஐ.மு., கூட்டணி ஒருங்கிணைப்பு குழு மற்றும் காங்கிரஸ் செயற்குழு கூட்டங்களில், நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதனிடையே தெலுங்கானா தனி மாநிலமாக அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திராவில் வன்முறை வெடித்துள்ளதை தொடர்ந்து, எம்.எல்,ஏ., எம்.பி.க்கள் பதவி விலகி வருகின்றனர்.

ஆந்திராவை பிரித்து தனி தெலங்கானா மாநிலத்திற்கு காங்கிரஸ் காரிய கமிட்டி நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் தெலுங்கான தனி மாநிலமாக பிறப்பெடுக்க இன்னும் 122 நாட்கள் ஆகும் என்று கூறப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி. ராயபாட்டி சாம்பசிவராவ், அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் முன்னவடிவரம் சதீஷ்குமார், ஜம்மலமடுகு ஆதிநாராயணராவ், ராமசந்திராபுரம் தோட்டாநரசிம்மம் ஆகியோர் உட்பட பலரும் பதவி விலகியுள்ளனர். அத்துடன் ஆந்திராவின் திருப்பதி, கர்னூல், நெல்லூர், விசாகப்பட்டினம், அனந்தபுரம், கடப்பா, சித்தூர் ஆகிய இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உருவபொம்மையை ஐக்கிய ஆந்திரா கூட்டு நடவடிக்கை

ஜூலை 30, 2013

கடலூர் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க கண்காணிப்பு குழு

கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள பான்மசாலா, குட்கா, புகையிலை மற்றும் நிக்கோடின் சேர்க்கப்பட்ட உணவு தயாரிப்பு மற்றும் விற்பனை செய்வதை தடுப்பதற்கான ஆய்வு கூட்டம் ஆட்சியர் கிர்லோஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், வருவாய்துறை, மருத்துவத்துறை, கல்வித்துறை, வணிகவரிதுறை, போக்கு வரத்து துறை காவல்துறை, நகராட்சித்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முதற்கட்டமாக வணிக வரிதுறை தணிக்கை சாவடி, காவல்துறை தணிக்கை சாவடி மற்றும் போக்கு வரத்து துறை தணிக்கை சாவடிகளில் சோதனை மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தப்படாமல் தடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் தடை செய்யப்பட்ட பொருட்களின் விற்பனையை தடுக்கவும் மீறுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆட்சியர் கிர்லோஷ்குமார் தலைமையில் குழு

முறைக்கேட்டை தவிர்க்க 100 நாள் வேலை திட்ட பணி இணைய தளத்தில் பதிவு!

காட்டுமன்னார்கோவில் பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களிலும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. கிராமப்புற மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக 100 நாள் வேலை திட்டம் என்ற பெயரில் அரசு செயல் படுத்தி வருகிறது. இதில் குடும்பத்தில் ஒருவர் 100 நாட்கள் வேலை செய்து அதன் மூலம் அரசு அளிக்கும் ஊதியத்தை கொண்டு குடும்பம் நடத்த வேண்டும் என்பதற்காகவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் பணி செய்யும் ஊழியர்களுக்கு குறைந்த அளவே ஊதியத்தை அளித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து புகார் வந்தது. இதை அறிந்த அரசு, பணி செய்யும் தொழிலாளர்களுக்கு வங்கிகள் மூலம் ஊதியம் வழங்க முடிவு மேற்கொண்டது. இதை யடுத்து அனைத்து கிராமங்களிலும், தொழிலாளர்கள் அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு வருகிறது. மேலும், பணிகள் நடைபெறும் விதங்களை இணையதளத்திலும் பதிவு செய்து வருகின்றனர். இதனால் வரும் காலங்களில்

இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 3 ஆயிரம் பேர் 'ஹஜ்' யாத்திரை செல்ல அனுமதி: அமைச்சர்

தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அப்துல் ரகீம் இன்று காலை கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கல்லூரி மாணவிகள் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார். மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு தரமாக உள்ளதா? விடுதி அறைகள் சுத்தமாக வைக்கப்பட்டு உள்ளதா? உணவு பொருட்களின் இருப்பு சரியாக இருக்கிறதா? என்பதை ஆய்வு மேற்கொண்டார்.முன்னதாக அமைச்சர் அப்துல் ரகீம் கன்னியாகுமரியில் நிருபர்களிடம் கூறியதாவது:–

இந்த ஆண்டு 3 ஆயிரம் பேருக்கு ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதுவரை கொடுக்கப்பட்டு வந்த ரூ.20 லட்சம் மானியம் ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. சென்னையில் வக்பு வாரியத்துக்கான சொந்தமான ரூ.250 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளது. இதேபோல தமிழகம் முழுவதும் வக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலங்கள் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மேம்பாட்டுக்காக கடந்த ஆண்டு ரூ.670 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு ரூ.756 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் 1290 மாணவ–மாணவியர் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 80 ஆயிரம் மாணவ–மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். மேலும் இந்த ஆண்டு கூடுதலாக 10 மாணவர் விடுதிகள் தொடங்க

ஜூலை 29, 2013

பெட்ரோல் பங்கில் சமையல் எரிவாயு நிரப்பும் முறை விரைவில் -மத்திய அரசு

பெட்ரோல் பங்க்கிலேயே சமையல் எரிவாயு நிரப்பிக் கொள்ளும் முறையை விரைவில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டின் நான்கு முக்கிய மெட்ரோ நகரங்கள் மற்றும் பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பெரு நகரங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக இந்த 5 கிலோ எரிவாயு நிரப்பும் சிலிண்டர்கள் குறிப்பிட்ட நிறுவனங்கள், அந்நிறுவனங்களுக்கு உட்பட்ட பெட்ரோல் பங்க்களில் விற்பனை செய்யப்பட உள்ளது.

சோதனை முறையாக செயல்படுத்தப்பட உள்ள இந்த முறை மக்களின் வரவேற்பை பெறும்பட்சத்தில் மெல்ல மெல்ல அனைத்து பெட்ரோல் பங்க்களிலும் விற்பனை செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது. மாநில எரிபொருள் விற்பனையாளர்களின் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தவும், அவர்களின் முதலீடுகளை ஈர்க்கவும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் எரிவாயுத்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் இந்த புதிய எரிவாயு நிரப்பும் திட்டத்திற்கு தொழில்துறை நிர்வாகிகள் பலர் வரவேற்பு அளித்துள்ளனர். அதே சமயம் இத்திட்டத்தை அரசின் நேரடி மானிய திட்டத்தின் மூலம் தண்ணீர் கேன்கள் மொபைல் ரீசார்ஜ் கார்டுகள் போன்ற எரிவாயு நிரப்பும் சிலிண்டர்களை விற்பனை செய்யவும் ஆலோசனை வழங்கி உள்ளன.

5 கிலோ சிலிண்டர்கள் தாரளமாக விற்பனை செய்யப்படும் திட்டத்தின் மூலம் 2 முதல் 3 கிலோ சிலிண்டர்களை பயன்படுத்தும் பெருநகரங்களில் தங்கி இருக்கும் லட்சக்கணக்கான மாணவர்கள், இளம் பணியாளர்கள் மற்றும் சிறு விற்பனையாளர்கள் பயன்பெற உள்ளனர். இவர்கள் மானிய விலையில் பெறும் சிறிய சிலிண்டர்களில் முறைகேடாக எரிவாயு நிரப்ப ரூ.150 அல்லது அதற்கு மேல் செலுத்தி வருகின்றனர். விசேஷங்களின் போது அதிகளவில் எரிபொருள் தேவைப்படும் குடும்பங்களுக்கும் இந்த எரிவாயு நிரப்பும் திட்டம் உதவிகரமாக

எகிப்து இராணுவத்தின் கூட்டுப்படுகொலை !

எகிப்து முன்னாள் அதிபர் முகமது மொர்சி மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதில் 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

எகிப்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வாதிகாரியாக இருந்த ஹோஸ்னி முபாரக் 2011ம் ஆண்டு ஏற்பட்ட மக்கள் புரட்சி மூலம் பதவி விலகினார். முஸ்லிம் சகோதர அமைப்பை சேர்ந்த முகமது மொர்சி ஜனநாயக முறையில் நடந்த தேர்தல் மூலம் அதிபரானார். முர்சி ஆட்சியிலும் பொருளாதார சீரழிவு வறுமை வேலையின்மை, போன்ற பிரச்னைகள் தீர்க்கப்படாததால், அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். கடந்த மாதம் கெய்ரோவின் தாரிர் சதுக்கத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கூடி மொர்சியை பதவி விலகும்படி கோரினர்.

இந்த சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு நிலை பாதிக்கப்பட்டது. கடந்த 3ம் தேதி ராணுவ புரட்சி மூலம் முர்சி ஆட்சி கலைக்கப்பட்டது. எகிப்து தலைமை நீதிபதி முகமது மன்சூர் இடைக்கால அதிபராக பொறுப் பேற்றுள்ளார்.இதற்கிடையே முன்னாள் அதிபர் மொர்சி மீது கடந்த வாரம் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இதை கண்டித்து முஸ்லிம் சகோதரத்துவ கட்சியினர் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைநகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்ததால், ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 200 பேர் கொல்லப்பட்டதாகவும், 5,000 பேர் காயமடைந்ததாகவும், முஸ்லிம் சகோதரத்துவ

ஜூலை 28, 2013

ஸ்மார்ட்போன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி விரைவில் அறிமுகம்!

பாஸ்போர்ட் தேவைப்படுபவர்கள் இனி ஸ்மார்ட்போன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான வசதி விரைவில் அறிமுகம் ஆகிறது. இதுகுறித்து பாஸ்போர்ட் சேவா திட்டத்தின் இணை செயலாளர் மற்றும் தலைமை பாஸ்போர்ட் அதிகாரி முக்தேஷ் குமார் கூறியதாவது:

பாஸ்போர்ட் தேவைப்படுபவர்கள் ஸ்மார்ட்போன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி விரைவில் வருகிறது. அதன்படி, ஸ்மார்ட்போன்களில் உள்ள எம்,பாஸ்போர்ட் சேவா அப்ளிகேஷனை பயன்படுத்தலாம். இதில் அப்ளிகேஷனில் சென்று விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விவரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இந்த வசதி ஓரிரு மாதங்களில் அறிமுகமாகிவிடும். எம்,பாஸ்போர்ட் சேவா என்ற ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷனை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்தது. இந்த அப்ளிகேஷன் தேவைப்படுபவர்கள் www.passportindia.eov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்யலாம்.

 கடந்த ஆண்டில் 74 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. இந்த ஆண்டில் அது 85 லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் 75 லட்சம் பாஸ்போர்ட்கள், இந்தியாவில் உள்ள

ஃபுர்ஜ் கலீஃபாவை விட உயரமான கட்டிடத்தை கட்ட தொடங்கியது சீனா!

துபாயில் உள்ள பர்ஜ் கலிபா என்னும் 828 மீற்றர் உயரமுடைய வணிக வளாகமே தற்போது உலகிலேயே உயரமான கட்டிடம் என்ற பெருமையைப் பெற்று விளங்குகின்றது. இதனைக் கட்டி முடிப்பதற்கு ஐந்து ஆண்டுக் காலம் ஆனநிலையில், இதனை முறியடிக்கும் விதமாக தற்போது சீனாவில் 838 மீற்றர் உயரமுள்ள கட்டிடம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. இதன் கட்டுமான வேலைகள் கடந்த 20ம் திகதி தொடங்கியது.

ஸ்கை சிட்டி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கட்டிடம் மத்திய சீனாவில் உள்ள சங்க்ஷா என்ற இடத்தில் கட்டப்பட உள்ளது. அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கும் வகையில் பத்தே மாதங்களில் இந்தக் கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என்று இந்த வேலையில் ஈடுபட்டுள்ள பிராட் குரூப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் மதிப்பு 1.46 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இந்த வேகம் சீனாவின் நிபுணர்களிடமும், இணையதள உபயோகிப்பாளர்களிடமும் தீவிர எதிர் விளைவுகளைத் தோற்றுவித்துள்ளது. குறைந்த காலத்தில் இவ்வளவு பெரிய திட்டத்தை எப்படி முடிக்கமுடியும் என்ற வினா அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. டிரெய்லர் வீடுகளின் பெருந்தொகுப்பு என்று மற்றொருவர் இத்திட்டத்தை விமர்சித்துள்ளார். எனினும், பிற்காலத்தில் இதுபோன்ற உயரமான கட்டிடங்கள் விரைவாக முடிக்கப்படுவதற்கு இந்தக் கட்டிடம் ஒரு முன்மாதிரியாகத் திகழும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சன் சிட்டி தவிர சீன அரசினால் ஏராளமான உயரமான கட்டிட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட பத்துக்கும்

குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள்!

1) நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு ''பரிந்துரை" செய்யும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்

 2) குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும் குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும். குர்ஆனின் இரண்டு சூராக்கள் அல்பகரா, ஆல இம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்

 3) உங்களில் சிறந்தவர்கள் குர்ஆனைக் கற்று அதை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி

 4) குர்ஆனை உரிய முறையில் ஓதி அதன் படி செயல்பட்டவர் நாளை மறுமையில் சங்கையான உயர்ந்த மலக்குகளுடன் இருப்பார். கஷ்டப்பட்டு திக்கித் திக்கி ஓதுபவருக்கு இரண்டு மடங்கு கூலி கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

 5) அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து(குர்ஆனிலிருந்து) யார் ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை செய்தால் அதை பத்து மடங்காக்கப்படும். அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் சொல்ல மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்தாகும். லாம் என்பது ஒரு எழுத்தாகும், மீம் என்பது ஒரு எழுத்தாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ

 6) "எவருடைய உள்ளத்தில் குர்ஆனில் கொஞ்சம் கூட மனனம் இல்லையோ அவருடைய உள்ளம் பாழடைந்த வீட்டைப்போல்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ. விளக்கம்: குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளிய நோக்கம் நாம் அதைப் படித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்குத்தான். ஆனால் முதிய வயதை அடைந்தும் குர்ஆனை ஓதத் தெரியாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். இது கவலை தரக்கூடிய ஒன்றாகும். முதிய வயதாகிவிட்டாலும் குர்ஆனைக் கற்றுக் கொள்ள முடியும். உங்களை மரணம் வந்தடைவதற்கு முன் குர்ஆனை ஓதத் தெரிந்தவர்களிடம் சென்று குர்ஆனை ஓதத் தெரிந்து கொள்ளுங்கள்.

புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பல சகோதரர்கள் குர்ஆனை சரளமாக ஓதவும் அதன்படி செயல்படவும் செய்கின்றார்கள். நாமோ பரம்பரை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு நமது வழிகாட்டியாகிய குர்ஆனைப் பற்றி எதுவும் தெரியாதவர்களாக

ஜூலை 27, 2013

துபாய் அரசின் 'சிறந்த இஸ்லாமிய ஆளுமை விருது' அறிவிப்பு

'சிறந்த இஸ்லாமிய ஆளுமை விருது' பெற்றார் டாக்டர் ஸாகிர் நாயிக் துபாய் அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் சிறந்த இஸ்லாமிய ஆளுமைக்கான விருது இந்தியாவை சார்ந்த பிரபல இஸ்லாமிய பிராச்சாரகர் ஜாகிர் நாயக்குக்கு வழங்கப்பட உள்ளது.

 ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் அரசு ஒவ்வோர் ஆண்டும் முஸ்லிம்களின் புனித மாதமான ரமலானில் அவ்வாண்டுக்கான சிறந்த இஸ்லாமிய ஆளுமைக்கான விருதை கடந்த 17 ஆண்டுகளாக வழங்கி வருகின்றது. இவ்வாண்டுக்கான சிறந்த இஸ்லாமிய ஆளுமைக்கான விருது எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைகழகத்தின் வேந்தர் அஹமது அல் தைய்யிப் என்பவருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் எகிப்தில் தற்போது நிலவும் அரசியல் சூழல்களால் தம்மால் விருது வழங்கும் விழாவில் பங்கேற்க இயலாது என்று தைய்யிப் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து இஸ்லாம் மற்றும் குரானை உலகெங்கும் பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியாவை சார்ந்த மருத்துவர் ஜாகிர் நாயக்குக்கு இவ்விருது வழங்கப்படுவதாக துபாய் சர்வதேச புனித குரான் குழு

துபாய் மாலை அலங்கரிக்கும் இவர் தான் முஹம்மத் (ஸல்) கின்னஸ் சாதனை புத்தகம்!!

 புனிதமிக்க ரமலானை முன்னிட்டு அமீரகத்திலுள்ள துபாய் மாலில்  உலகின் மிகப்பெரிய புத்தகம் என்ற கின்னஸ் சாதனை புரிந்த இவர் தான் முஹம்மத் (ஸல்) என்ற புத்தகம் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது,நூற்றுக்கனக்காண மக்கள் கண்டுகளித்து வருகின்றனர்,உலக சாதனைப்படைத்த இப்புத்தகம் 5 மீட்டர் உயரமும் 8.6 மீட்டர் அகலமும் கொண்டு தத்ரூபமாக வடிவமைக்கபட்டுள்ளது.மேலும் இப்புத்தகத்தை காண வரும் பொதுமக்களுக்கு முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை ஒரு அறிமுகம் என்ற புத்தகம் வழங்கப்படுகின்றது.


ஜூலை 26, 2013

வெடிகுண்டுகள் தயாரிக்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பயிற்சி : திக்விஜய் சிங்

டெல்லி: வெடிகுண்டுகள் தயாரிக்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பயிற்சி அளிப்பதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங், மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் புகார் கூறியிருந்தார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திக்விஜய் சிங், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தொடர்பாக தாம் கூறியுள்ள கருத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

மத்தியபிரதேச மாநிலத்தில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக கடந்த 2004ம் ஆண்டில் கைதானவர்கள், தங்களுக்கு வெடிகுண்டு தயாரிக்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தான் பயிற்சி அளித்ததாக வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் திக்விஜய் சிங் குறிப்பிட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வெடிகுண்டுகள் தயாரிக்க பயிற்சி அளிப்பதற்கு இதைவிட வேறு ஆதாரம்

ஜூலை 25, 2013

ஜக்காத் (இஸ்லாமிய வரி)

"நிச்சயமக என் இறைவன் தன் அடியார்களில் யாருக்கு நாடுகிறானோ, அவருக்கு செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும் தான் நாடியோருக்கு சுருக்கியும் விடுகிறான்; ஆகவே நீங்கள் எந்தப் பொருளை (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்த போதிலும், அவன் அதற்குப் பிரதிபலன் அளிக்கிறான்; மேலும், அவன் கொடையாளிகள் அனைவரிலும் மிகவும் மேலானவன்" என்று (நபியே) நீர் கூறும். (34:39) 

இஸ்லாமிய ஐம்பெருங் கடமைகளுள் தொழுகையை அடுத்து முக்கியமான கடமை ஜக்காத் ஆகும். அருள் மறையில் தொழுகையைப் பற்றிக் குறிப்பிடப்படும் போதெல்லாம் ஜக்காத்தையும் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். இறைவனை வழிபடுவற்காக தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது என்றால், இறை அடியார்களுக்கு ஆதரவு அளித்து அதன் மூலம் இறையன்பைப் பெறுவத்ற்காக ஜக்காத் கடமையாக்கப்பட்டுள்ளது.

காலில் முள் தைத்தால் கண்ணில் நீர் வழிகிறது. உடம்பில் எங்கேனும் அடிபட்டால் கரம் உடனே அவ்விடத்தைத் தேய்த்துக் கொடுக்கிறது. விரலில் பட்ட காயத்துக்காக இரவெல்லாம் கண் தூங்க மறுக்கிறது. இது போன்று சமுதாயத்தில் ஒருவருக்கு ஏற்படும் பாதிப்பை மற்றவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். வறுமையால் வாடும் சகோதரனுக்கு வாழ்வளிக்க இஸ்லாம் ஜக்காத் என்ற கடமையின் மூலம் வழிவகைச் செய்கிறது.ஜக்காத்தின் தலையாய நோக்கமாக திகழ்வது ஏழ்மை எனும் ஒரு நிலையை விரட்டியடிக்க இறைவனால் உருவாக்கப்பட்ட திட்டமாகும். ஐம்பது பைசா, ஒரு ருபாய் போன்ற நாணயங்களாக அல்லது ஆடைகளாக கொடுப்பதினால் ஜக்காத் நிறைவேறிவிட்டது என கருதவேண்டாம்.

ஒரு செல்வந்தர் தனது ஆண்டு ஜக்காத்தின் மூலம் வாழத்துடிக்கும் ஒருவருக்கு ஒரு தொழில் துவங்க ஒத்துழைப்புத்தந்தால், அவர் தனது செல்வத்தைப் பெருக்கி, அவரும் பலருக்கு ஒத்துழைப்புத்தரும் சாத்தியக்கூறு ஏற்படலாம். அல்லது பல செல்வந்தர்கள் தங்கள் ஜக்காத்தை ஒன்று திரட்டி பல ஏழைகளுக்கு கூட்டுறவு முறையில் ஒரு பெரிய தொழில் துவங்க வழிவகை செய்யலாம். சமுதாயத்திலுள்ள ஒவ்வொரு செல்வந்தரும் ஆண்டொன்றுக்கு ஒரு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால் ஏழ்மை விரண்டோடிடும் என்பதில் ஐயமில்லை. இக்கருத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு அருமையாக சித்தரிக்கிறார்கள்.

 "ஓரிரு கவள உணவு அல்லது ஓரிரு பேரீத்தம்பழம் பெறுவதற்காக மக்களின் மத்தியில் சுற்றித் திரிபவர் ஏழையல்ல, வாழ்க்கைக்கு அத்தியாவசியமான வசதியைப் பெறாதவரே ஏழை. தருமம் கொடுப்பதற்காக அவரை

காட்டுமன்னார்கோவிலில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி மனு!

காட்டுமன்னார்கோவில் ரெட்டியார் ரோட்டில் இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்படுகிறது. தமிழக அரசு நெடுஞ்சாலையில் உள்ள கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் கடைகளை அகற்ற அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதில் பல கடைகள் நெடுஞ்சாலையில் இருக்கும் கடைகளை அப்புறப்படுத்தி பொதுமக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் அமைத்து வருகின்றனர். இதே போல் ரெட்டியார் ரோட்டில் செயல்படும் கடைகளை அப்புறப்படுத்தாமல் உடையார்குடி செட்டித்தெரு பகுதியில் வழி அமைத்து விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்கு ஏதுவாக தற்போது இயங்கும் டாஸ்மாக் கடைகளின் பின்புறம் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியுள்ளது. இதையறிந்த உடையார்குடி செட்டித்தெருவில் வசிக்கும் சுமார் 700க்கும் மேற்பட்டவர்கள் காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று தலைமையிடத்து துணை தாசில்தார் எழிலனிடம் மனு அளித்தனர். அதில் ஏற்கனவே இந்த பகுதியில் விடுமுறை காலங்களில் திருட்டு தனமாக மது பாட்டில்கள் விற்பனை நடைபெற்று வரும்போது இந்த வழியாக குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல முடிவதில்லை. பெரும்பாலான ஆண்கள் வேலைக்கு சென்று விடுகின்றனர். பெண்கள் மட்டுமே வசித்து வரும் நிலையில் குடித்து விட்டு ஆடைகள் இன்றி குடிமகன்கள் சாலையோரங்களில் கிடக்கின்றனர். மேலும் குடிமகன்கள் இடையே தகராறு ஏற்படுகிறது.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருப்பதற்கு ஏதுவாக டாஸ்மாக் கடைகளை குடியிருப்பு இல்லாத பகுதிக்கு மாற்றம் செய்து கொள்ள வேண்டுமென

தீவிரவாத வழக்குகளில் முஸ்லிம்கள் சிக்கவைக்கப்படுகிறார்கள் -ஆய்வில் தகவல்

CNN IBN - The Hindu இணைந்து இந்திய வாக்காளர்களிடம் நடத்திய ஆய்வின் முடிவுகள் முஸ்லிம்களுக்கு நம்பிக்கையளிப்பதாக அமைந்துள்ளது. "தீவிரவாத வழக்குகளில் முஸ்லிம்கள் வேண்டுமென்றே சிக்க வைக்கப்படுகின்றனரா?" என்ற கேள்விக்கு பெரும்பான்மை இந்திய வாக்காளர்கள் (41%) 'ஆம் அல்லது இருக்கலாம்' என்று பதிலளித்துள்ளனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஹிந்துக்கள் ஆவர்.

அதாவது, இப்படியாக ஒப்புக்கொண்டவர்களில் 40% ஹிந்துக்களும், 56% முஸ்லிம்களும் ஆவர். மார்க்கெண்டேய கட்சு போன்றவர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் கடும் முயற்சிகள் பலனளிக்க தொடங்கியுள்ளன. இதற்காக பாடுபடும் அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த செய்தி குறித்த மேலதிக தகவல்கள் பெற ஆதார

ஜூலை 23, 2013

வீராணம் ஏரியில் விளையாட்டு பூங்கா அமைக்கும் திட்டம்- உழவர் முன்னணி எதிர்ப்பு

சிதம்பரத்தில் தமிழக உழவர் முன்னணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் தலைவர் சிவராமன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், சரவணன், கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வீராணம் ஏரியில் படகு விடும் திட்டம் விவசாயிகளின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. இந்த நிலையில் விளையாட்டு பூங்கா அமைக்கும் திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. இதனால் ஏரியின் நீர் மாசுபடும் ஆபத்து உள்ளது. ஆகவே இந்த திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். விவசாயிகளின் பயிர்காப்பீட்டு கட்டணத்தை தமிழக அரசே செலுத்த வேண்டும். கூட்டுறவு பயிர்கடன்களின் உச்சவரம்பை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்த வேண்டும். கடந்த ஆண்டு விவசாயிகள் வாங்கிய கடனுக்காக செலுத்திய பயிர்காப்பீட்டு கட்டணத்தை திருப்பி தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் குமராட்சி ஒன்றிய

மத்திய அரசு மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம்: தமிழக அரசு ஏற்பாடு

மத்திய அரசு மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம்: தமிழக அரசு ஏற்பாடு - மத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்கிறது.

வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களில் சோலார் பேனல் அமைக்க மாநில அரசு மானியமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதற்கான அரசு உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்பட உள்ளது. இதற்கிடையே, வீடுகளில் மத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன் சோலார் பேனல் அமைப்பதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. ஒருவர் தனது சொந்த வீட்டுக்கு சோலார் பேனல் அமைத்து அதன்மூலம் சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்த விரும்பினால் ஆன்–லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் இணையதளத்தில் www.teda.in இ–பார்ம்ஸை கிளிக் செய்ய வேண்டும். அதில் டொமஸ்டிக் கிளிக் செய்தால் விண்ணப்ப படிவம்

ஜூலை 20, 2013

பொருளாதார மந்த நிலை அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரமே திவால்!

வாஷிங்டன்:உலகம் முழுவதும் தற்போது காணப்பட்டு வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக அமெரிக்காவின் பிரபல தொழில் நகரமான டெட்ராய்ட் நகரமே திவாலானது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஐரோப்பா உள்ளிட்ட பல உலக நாடுகள் தொடர்ந்து பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. இதற்கு வளர்ந்த நாடுகளும் தப்பவில்லை.

இந்நிலையில் அமெரிக்காவின் மிக முக்கிய தொழில் நகரமான டெட்ராய்ட் ஒட்டுமொத்தமாக திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் உள்ள டெட்ராய்ட் நகரில் போர்டு கார் தொழிற்சாலை உள்ளிட்ட முக்கிய கம்பெனிகள் உள்ளன. அமெரிக்காவின் வருவாயில் இந்த நகரம் பெரும் பங்கு வகித்தது. இப்போது, ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத அளவில் கம்பெனிகள் நலிந்து விட்டன. தற்போது பொருளாதார நெருக்கடியில் டெட்ராய்ட் நகரமே சிக்கி தவிப்பதாக மிக்சிகன் மாகாண முதல்வர் ரிக் டைசர் தெரிவித்தார்.

கடந்த 5 ஆண்டுகளாக டெட்ராய்ட் நகரம் கடனில் சிக்கி தவித்து வருகிறது. முன்பு இந்த நகரில் 20 லட்சம் பேர் வசித்தனர். பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது 5 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். தற்போது இந்த நகருக்கு ரூ.1.08 லட்சம் கோடி கடன் உள்ளது. ஒவ்வொரு டாலர் வருவாய்க்கும் 35 சதவீதம் கடன் தொகை நிலுவை உள்ளது. 2017ல் இந்த கடன் தொகை வீதம் 65 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது. இந்த கடனை அடைக்க மாகாண நிர்வாகத்திடம் நிதி இல்லாததால் திவால் நோட்டீஸ்

சமூக வலைத் தளங்களைப் 13 வயதிற்கு குறைவானவர்கள் பார்க்க உரிமை இல்லை!:உயர் நீதிமன்றம்!

முக நூல், ஆர்குட் (Face book, Orkut) போன்ற வலைதளங்களை 13 வயதிற்கு குறைவானவர்கள் பார்க்க உரிமை இல்லை என்ற கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும் என, சம்பந்தப்பட்ட வலை தளங்களின் நிர்வாகத்திடம் டெல்லி உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

 சமூக வலை தளங்களை சிறுவர்கள் பார்வையிடுவதை தடுக்கவும், இவைகளில் ஆபாசக் காட்சிகள் இடம்பெறுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கோவிந்தாச்சாரியா மனுத்தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பாக வலைத்தள நிறுவனங்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. சிறுவர்கள் பார்வையிடுவதை தடுக்க சமூக வலை தள நிறுவனங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 13 வயதிற்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளத்தை பார்வையிட அனுமதி இல்லை என்ற வாசகத்தை பெரியளவில் முகப்பு பக்கத்தில் வெளியிட வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த விவகாரம் ஒரு தலைமுறையின் பிரச்னை

ஜூலை 18, 2013

கல்வி பயின்றதால் மாலாமாவை தாக்கவில்லை -தாலிபான்கள்

இஸ்லாமாபாத்: தலையில் குண்டடிபட்டு குணம் அடைந்து இங்கிலாந்து பள்ளியில் படிக்கும் பாகிஸ்தான் மாணவி மலாலா யூசுப்சாயை நாட்டுக்கு திரும்பி வந்து மதரஸாவில் சேர்ந்து படிக்குமாறு தாலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் அங்குள்ள பள்ளியில் சேர்ந்து படிப்பை தொடர்ந்து வருகிறார்.கடந்த வாரம் அவர் ஐ.நா.வில் உரை நிகழ்த்தினார்.

இந்நிலையில் தாலிபான்  தலைவர் அத்னான் ராஷித் மலாலாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, நீ மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என்று நான் அறிவுரை வழங்குகிறேன். இங்கு வந்து உங்கள் ஊரில் உள்ள ஏதாவது பெண்கள் மதரஸாவில் சேர்ந்து இஸ்லாமிய கலாச்சாரம், அல்லாஹ்வின் புத்தகத்தை படிக்க வேண்டும். உன் பேனாவை இஸ்லாத்திற்காக பயன்படுத்து. நம்மை அடிமைப்படுத்த விரும்பும் சக்திகளை அம்பலப்படுத்து. நீ தாலிபான்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்ததால் தான் உன்னை தாக்கினோம். நீ பள்ளிக்கு சென்றதாலோ அல்லது கல்வியை விரும்பியதாலோ உன்னை தாக்கவில்லை. தாலிபான்களோ அல்லது முஜாஹிதீன்களோ ஆண், பெண் கல்விக்கு எதிரானவர்கள் அல்ல. நீ எதிரிகளின் கையில் உள்ளாய். பிறரின் பேச்சைக்

ஜூலை 17, 2013

நாடு முழுவதும் பிரசவத்திற்க்கு, இலவச சிகிச்சை அளிக்கப்படும்!-குலாம்நபி ஆசாத்

நாடு முழுவதும் பெண்களுக்கு கருத்தரிப்பு முதல் பிரசவம் வரையும், பிரசவத்துக்குப்பின் 45 நாட்களுக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் தெரிவித்தார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். மத்திய அரசு ஜனனி சுரக்ஷ யோஜனா திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவ காலம் முழுவதும் மற்றும் பிரசவத்துக்கு பிறகு 45 நாட்களுக்கும் இலவச சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி நாடு முழுவதும் உள்ள கர்ப்பிணி பெண்கள், அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சையும், பிரசவத்துக்கு இலவசமாக அவசர ஊர்தி சேவையும் பெற்றுக்கொள்ளலாம். மேலும் முதல் ஒரு ஆண்டு வரை குழந்தைக்கு இலவச சிகிச்சை அளிக்கவும் வசதி செய்யப்படும் என்று தெரிவித்தார். மேலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி வைத்த ராஷடிரீய பால் சுரக்ஷ கர்யாக்ராம் திட்டத்தின்படி, 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்த அவர்

ஜூலை 15, 2013

பி.ஏ., பி.எல்‏.சட்டப் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 15-ஆம் தேதி தொடங்குகிறது

அரசு சட்டக் கல்லூரிகளில் நடத்தப்படும் ஐந்தாண்டு பி.ஏ.,பி.எல். சட்டப் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 15-ஆம் தேதி தொடங்குகிறது. சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழகத்தில் உள்ள 6 சட்டக் கல்லூரிகளில் நடத்தப்படும் பி.எல். மற்றும் ஐந்தாண்டு பி.ஏ.,பி.எல். படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இதில் அரசு கல்லூரிகளில் நடத்தப்படும் பி.ஏ.,பி.எல். படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 15-ஆம் தேதி தொடங்குகிறது.

ஜூலை 15, 16-ஆம் தேதிகளில் பொதுப் பிரிவினருக்கும், 17-ஆம் தேதி எஸ்.சி. மற்றும் எஸ்.சி.ஏ. பிரிவினருக்கும், 18-ஆம் தேதி எம்.பி.சி. பிரிவினருக்கும், 19-ல் பி.சி. பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்தப் பிரிவில் மொத்தமுள்ள 1,052 இடங்களுக்கு நடத்தப்படும் கலந்தாய்வுக்கு மொத்தம் 4,400 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இவற்றில் 280 விண்ணப்பங்கள் தகுதியில்லாதவையாக நிராகரிக்கப்பட்டுள்ளன. சட்டப் பல்கலைக்கழக ஆற்றல்சார் பள்ளியில் நடத்தப்படும் ஐந்தாண்டு பி.ஏ.,பி.எல். ஹானர்ஸ், பி.காம்.,பி.எல். ஹானர்ஸ் படிப்புகளுக்கு இரண்டு கட்ட கலந்தாய்வு முடிவடைந்துள்ளது. இப்போது பி.ஏ.,பி.எல். ஹானர்ஸ் படிப்பில் 30 இடங்களும், பி.காம்.,பி.எல். படிப்பில் 5 இடங்களும்

ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, பஜ்ரங்தளை தடை செய்யவேண்டும்! - மாயாவதி!

லக்னோ: இந்துத்துவா கொள்கையில் தீவிர பிடிப்பு கொண்ட ஆர்.எஸ்.எஸ். வி.எச்.பி பஜ்ரங்தள் அமைப்புகளை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் மாயவாதி குரல் எழுப்பி உள்ளார். தலைநகர் லக்னோவில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு பேசிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயவதி பகுஜன் சமாஜ் கட்சி சாதிகள் மற்றும் சமூகங்கள் இடையே சகோதரத்துவத்தை வளர்க்கவே விரும்புகிறது. எனவே சாதி அடிப்படையிலான எங்கள் பேரணியால் நாட்டுக்கு எந்த பாதிப்பும் கிடையாது.

ஆனால், மத சம்பந்தமான விஸ்வ இந்து பரிசத், ராஷ்ட்ரிய சுவயம் சேவக் மற்றும் பஜ்ரங்தள் போன்ற நாட்டில் தீவிரவாதத்தை தூண்டும் அமைப்புகளை தடை செய்ய வேண்டும். அவர்கள் அரசியல் கட்சியாக செயல்படவில்லை.ஆனால், அரசியல் கட்சியாக செயல்படும் பா.ஜ.கவை இந்த அமைப்புகள் கட்டுப்படுத்துகிறார்கள். இந்த சங்பரிவார அமைப்புகள்தான் பாரதீய ஜனதா

ஜூலை 14, 2013

உடல் ஸ்கேன்களில் புற்றுநோய் செல்களை கண்டறிய உதவும் சர்க்கரை

லண்டன்: ஆராய்ச்சியாளர்கள் காந்த ஒத்ததிர்வு படமெடுத்தல் (எம்ஆர்ஐ) ஸ்கேன்களில் சோதனையின் போது வெளிச்சத்திற்ககாக கட்டிகள் மேலே சர்க்கரை பயன்படுத்தி புற்றுநோய் கண்டறியும் புதிய மற்றும் மலிவான உத்தியை உருவாக்கியுள்ளனர். அதாவது மனிதனின் மற்ற செல்களை விட புற்றுநோய் செல்கள் தங்களது வளர்ச்சிக்கு அதிகமான சர்க்கரையை ஈர்த்துக் கொள்கின்றன. இதனால் புற்றுநோயின் செல்களை எளிதாக காண்பதற்கு இந்த புது நுட்பத்தை ' குளுக்கோஸ் இரசாயன பரிமாற்றம் பூரித பரிமாற்ற (glucoCEST) 'என்று பெயரிட்டுள்ளனர்.

எம்ஆர்ஐ ஸ்கேன் பயன்படுத்துவதற்கு முன்பே மனிதனின் உடலுக்குள் குளுக்கோஸ் செலுத்தப்படும், புற்றுநோய் செல்கள் அதிகமாக ஈர்த்துக் கொள்ளவதால் எம்ஆர்ஐ ஸ்கேன்களில் எளிதாக அடையாளம் காணலாம். எதிர்காலத்தில், நோயாளிகள் சிறப்பு மருத்துவ மையங்களை காட்டிலும் உள்ளூர் மருத்துவ மையங்களிலும்

ஜூலை 13, 2013

ஓர் வபாத் செய்தி!

நமதூர் பள்ளிவாசல் தெருவில் இருக்கும் மர்ஹும் முஹம்மது யூசுப் அவர்களின் மனைவியும் கமால் பாஷா,அன்வர்,ஹஜ்ஜி முஹம்மது ஆகியோரின் தாயாருமான மஸ்தூகா பீவி அவர்கள் இன்று காலை தாருல் பனாவை விட்டும் தாருல் பாகாவை அடைந்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். 

எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் அனைவருக்கும் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் "ஷப்ரன் ஜமிலா" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress பிரார்த்தனை செய்கிறது.

நானோ தொழில்நுட்பத்தில் (Nanotechnology)ஓராண்டு எம்பில்‏

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நானோ தொழில்நுட்பத்தில் ஓராண்டு எம்பில் படிப்பில் சேர விரும்பும் முதுநிலை பட்டதாரி மாணவ, மாணவியர் ஜூலை 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மதுரை காமராசர் பல்கலைக்கழக பதிவாளர்(பொறுப்பு) கே.பிச்சுமணி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலுள்ள உயிரி பள்ளியிலுள்ள மரபணு பொறியியல் துறையில் நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஓராண்டு(2 பருவம்) எம்பில் படிப்பில் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர். இப்படிப்பில் சேருவதற்கு, எம்எஸ்சியில் இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், உயிரிதொழில்நுட்பம், சுற்றுச்சூழல் அறிவியல், வேளாண்மை, கால்நடைத்துறை, எம்பிபிஎஸ், எம்இ, எம்டெக், நானோ அறிவியல், நானோ தொழில்நுட்பம், பொருள் பொறியியல், ரசாயன பொறியியல், உயிரி தொழில்நுட்பம் முதுநிலை பட்டம் பெற்ற மாணவ, மாணவியர் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

முதுநிலை பட்டத்தில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பிக்கும் போது முதுநிலை பட்டத்தை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பங்களை பல்கலைக்கழக இணையதளம் httpwww.mkuniversity.org என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவாளர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
மதுரை-625021 என்ற முகவரிக்கு ஜூலை 20-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன், THE REGISTRAR, MADURAI KAMARAJAR UNIVERSITY என்ற தலைப்பில் மதுரையில் மாற்றத்தக்க வகையிலான வரைவோலையை இணைக்க வேண்டும்.

நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையி்ல மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். விண்ணப்பதாரர்கள்கண்டிப்பாக, மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள உயரிதொழில்நுட்பப் பள்ளியில் ஜூலை 27-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் நுழைவுத்தேர்வில் பங்கேற்க வேண்டும். அரசு விதிகளின் படி மாணவர் சேர்க்கை நடைபெறும், என தெரிவித்துள்ளார்.

நானோ உயிரித் தொழில்நுட்பம்

நானோ உயிரித் தொழில்நுட்பம் என்பது உயிரியல் மற்றும் உயிரி இரசாயனப் பயன்பாடுகள் அல்லது பயன்களுடன் கூடிய நானோ தொழில்நுட்பத்தின் கிளை ஆகும். நானோ உயிரித் தொழில்நுட்பமானது பொதுவாக புதிய சாதனங்களை உருவாக்குவதற்காக இயற்கையில் ஏற்கனவே இருக்கும் தனிமங்களில் ஆய்வு மேற்கொள்வதாக இருக்கிறது.

[1] உயிரி நானோ தொழில்நுட்பம் என்ற சொல்லானது பொதுவாக நானோ உயிரித் தொழில்நுட்பத்திற்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது.
 எனினும் சில நேரங்களில்

ஜூலை 12, 2013

26 லட்சத்தை தொட்டது கடலூர் மாவட்ட மக்கள் தொகை !

கடலூர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 26.5 லட்சம் என மக்கள் தொகை விழிப்புணர்வு நிதழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி கடலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற இந்த பேரணியை தொடங்கிவைத்து, மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் பேசியது: உணவு, உடை, இருப்பிட பற்றாக்குறை, வேலையின்மை, குடிநீர் பிரச்னை, போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சுழல் பாதிப்பு இவையாவும் மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படுகிறது. இதை உணர்ந்து பெருகிவரும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிவ் வரும் 25-ம் தேதி வரை கருத்தடை முறை குறித்த ஆலோசனை மற்றும் அறுவைசிச்சை முகாம் நடைபெறவுள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்

கடலூர் மாவட்டம் [Cuddalore) ஒரு பார்வை 
இம்மாவட்டம் 3,564 சதுர.கி.மீ. பரவியுள்ளது. கடலூர் இதன் தலைமையகம்ز
வடக்கில் விழுப்புரம் மாவட்டமும்,
கிழக்கில் வங்காள விரிகுடாவும் [Bay Of Bengal],
தெற்கே நாகப்பட்டினம் மாவட்டமும்,
மேற்கே பெரம்பலூர் மாவட்டமும் உள்ளது.

 6 தாலூக்காகளக பிரிக்கப்பட்டுள்ளது அவையாவன :
 Chidambaram - சிதம்பரம் 
 Cuddalore - கடலூர் 
 Kattumannarkoil - காட்டுமன்னார்கோவில் 
 Panruti - பன்ரொட்டி 
Titakudi - திட்டக்குடி 
Vriddachalam -

ஜூலை 11, 2013

2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்றோர் தேர்தலில் போட்டியிட முடியாது!

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற பின்னரும் கூட எம்.எல்.ஏ, எம்.பி. பதவிகளில் நீடித்துக் கொண்டிருப்போருக்கு வேட்டு வைக்கும் வகையில் உச்சநீதிமன்றம் அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தாமஸ் லில்லி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட பிரிவுகளுக்கு சில விளக்கங்களைக் கொடுத்தது. இதன்படி,

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.எல்.ஏ, எம்.பிக்களின் பதவிகள் பறிக்கப்பட வேண்டும். இந்த எம்.எல்.ஏ, எம்.பி.க்களைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் தகுதியிழப்பு சட்டப் பிரிவு நீக்கப்படுகிறது. கீழ் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றிருந்தாலும் அவர்கள் பதவியில் நீடிக்கக் கூடாது். மேலும் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்றோர் தேர்தலில் போட்டியிட முடியாது. அவர்கள் தேர்தலில் போட்டியிட தகுதி இழந்தவராக கருதப்படுவர். அதேபோல் சிறையில் இருந்தபடியே தேர்தலில் இனி போட்டியிட முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதில் ஏற்கெனவே தண்டனை பெற்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கும்

ஜூலை 10, 2013

ரமளானை வரவேற்போம்...!

மகத்துவமிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்... இந்த குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது.(அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும்.(பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் 2:185) 

மனித குல மாணிக்கம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் நம்பிக்கைக் கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமளான் மாதத்தில் நின்று வணங்குகின்றாரோ, அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும். அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி 37

இஸ்லாத்தின் பெயரால் பிரிவுகளும், மாறுபட்ட சிந்தனைகளும் தோற்றுவிக்கும் குழப்பங்களிலிருந்து மனித குலம் நீங்கிட அல்லாஹ்வின் ஒருவழியை மட்டும் தெளிவுப்படுத்தும் பேரொளிமிக்க திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட மாதம் ரமளான். உள்ளும் புறமும் எந்தவொரு அடையாளத்தைக் கொண்டும், நம்மால் இனங்காண முடியாமல் உணர்வுகளாலேயே இறைக்கருணையின் பக்கம் அடியார்களை இழுத்துச் செல்லும் அற்புத வணக்கமே நோன்பு. அது பிற நாட்களில் நோற்பதை விட குறிப்பிட்ட இம்மாதத்தில் நோற்பது இறைமார்க்கத்தை நிலை நிறுத்தும் கடமையும் ஏக இறைவனுக்குப் பிரியமான அம்சமும் ஆகும். இறையச்சம் இல்லாத அமல்கள் எதற்கும் பயனளிக்காத விழலுக்கு நீர் இறைப்பது போன்றதாகும். ஒட்டு மொத்த வாழ்வையும் இறையச்சத்திற்கு அப்பாற்பட்டு தொலைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு ரமளானின் நோன்பு இறையச்சத்தை புனரமைத்துக் கொள்ள உதவும் கண்ணியமிக்க கருவியாகும்.

தீங்கான எண்ணங்களும், மனோ இச்சைகளும் மனிதர்களை - அது ஆணாயினும், பெண்ணாயினும் - ஆட்டிப் படைக்கிறது. ஈமானுக்கு ஏற்படும் மிகப் பெரும் நோவினை இதுதான். ஈமானுக்கு நோவினை என்றால மனிதன் பிற வளங்கள் என்னதான் பெற்றிருந்தாலும் பயனற்ற வாழ்வுக்கு தான் பலியாகி விடுவான். நமக்குள் இருந்து கொண்டே நம் வாழ்வை வேரறுக்கும் தீய ஊசலாட்டத்தின் ஆணிவேரை அடையாளம் கண்டு அறுத்தெறியும் ஆன்மீகப் பயிற்சி தான் நோன்பு. மகத்தான இரட்சகனின் நேசமும், மறுமையில் நற்பயனும் பெற்றிட வழிகாட்டும் வசந்தமே ரமளான் மாதம்! கண்ணியமிக்க அல்லாஹ் கூறுகிறான்: நம்பிக்கைக் கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (2:183) இந்த நோன்பை அல்லாஹ் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் சமுதாயத்திற்கு மட்டும் கடமையாக்கவில்லை. மாறாக முன் சென்ற சமுதாயத்திற்கும்

ஜூலை 09, 2013

புத்த கயா குண்டுவெடிப்பு:பினோத் குமார் என்ற காவி பயங்கரவாதி கைது!

புத்த கயாவில் நடந்த, தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக, முக்கிய நபர் ஒருவரை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மகாபோதி கோவிலில் வைக்கப்பட்டிருந்த ரகசிய கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும், அதில், முக்கிய தடயங்கள் இருப்பதாகவும், தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.,) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, பீகார் டி.ஜி.பி., அபாயனந்த் கூறியதாவது:குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் கிடந்த வாக்காளர் அடையாள அட்டையை எடுத்து, விசாரித்தோம். இதன் அடிப்படையில், கயா மாவட்டத்தை சேர்ந்த, பினோத் குமார் என்ற நபரை கைது செய்து, விசாரித்து வருகிறோம். அவரிடமிருந்து, சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.

குண்டு வெடிப்புக்காக, அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டதும், ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், குண்டு வெடித்த இடத்தில், ஒரு பேப்பர் கிடந்தது. அதில், எந்தெந்த இடத்தில், குண்டுகள் வைக்கப்பட்டுள்ள என்ற விவரங்கள், ஆங்கில மொழியில் எழுதப்பட்டிருந்தன.மகாபோதி கோவிலின், முக்கிய இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டிருந்தன. குண்டு வெடிப்பின்போது, நிகழ்ந்த சம்பவங்கள், அந்த கேமராக்களில் பதிவாகியுள்ளன. அதை ஆய்வு செய்ததில், சில முக்கிய தகவல்கள் சிக்கியுள்ளன.குண்டு வெடிப்பு நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன், 25 வயது மதிக்கத் தக்க, ஒரு பெண்ணும், ஆணும், கோவிலுக்கு முன் உள்ள சாலையில் நடந்து செல்வது போலவும், குண்டு வெடித்ததும், சிறிது நேரம் அங்கு நின்று,திரும்பி பார்ப்பது போலவும், பின், இரண்டு பேரும், அங்கிருந்து வேகமாக செல்வது போலவும், காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். இதன் அடிப்படையில், மேலும் சிலரை பிடித்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு, அபாயனந்த் கூறினார்.

கயா மாவட்ட கலெக்டர், பாலமுருகன் கூறியதாவது:சம்பவ இடத்தில், என்.ஐ.ஏ., அதிகாரிகள், தடயங்களை சேகரித்து வருகின்றனர். விசாரணையையும்

ஜூலை 08, 2013

புத்தகயா குண்டு வெடிப்பில் நரேந்திர மோடிக்கு தொடர்பு?

புத்தகயாவில் உள்ள ஆலயத்தில் நேற்று நிகழ்ந்த குண்டு வெடிப்புக்கும் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடிக்கும் தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக தனது 'டுவிட்டர்' பக்கத்தில் திக்விஜய் சிங் எழுதியுள்ளதாவது:- புத்தகயா குண்டு வெடிப்பு சம்பவத்தில் முதல் கட்டத்திலேயே இஸ்லாமியர்கள் சிலரின் செயல்தான் என்று கூறிவிட முடியாது. இதற்கு மறுபக்கத்தையும் நாம் பார்க்க வேண்டும்.

அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டப்படும் என்று அமித்ஷா வாக்குறுதி அளிக்கிறார்.

பீகாரில் பா.ஜ.க. தொண்டர்களிடையே பேசிய குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமாருக்கு தகுந்த பாடம் புகட்டுங்கள் என்று உத்தரவிடுகிறார்.

இதற்கு அடுத்த நாள் மகாபோதி ஆலயத்துக்குள் குண்டு வெடிக்கிறது. இவற்றுக்கெல்லாம் தொடர்பு இருப்பதாக தோன்றவில்லையா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மாலேகான், டெல்லி ஜாமியா மஸ்ஜித்,சமிபத்திய பெங்களூர் குண்டுவெடிப்பு என்று நாட்டின் பல பகுதிகளும் காவி பயங்கரவாதிகளின் செயல் அதிகரித்துகொண்டே செல்லும் நிலையில் இந்த குண்டு வெடிப்பும் காவிகளின் கைவரிசையா என்று காவல்துறை ஆய்வு செய்ய வேண்டும். வெறுமனே  முஸ்லிம்களின் மீது பலிப்போட்டு அப்பாவிகளை

வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தப்பணிகளுக்கு இணையதளங்கள் விண்ணபிக்கலாம்

வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தப்பணிகளை மேற்கொள்ள விருப்பமுள்ள இணையதள மையங்கள் விண்ணப்பிக்கலாம் என கடலூர் ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்த செய்திக்குறிப்பு: தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி கடலூர் மாவட்டத்தில் அனுமதி பெற்ற இணையதள மையங்கள் மூலம் பொதுமக்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல், திருத்தல், விபரங்கள் தேடுதல், வாக்காளர் பட்டியல் நகலினை அச்சிடுதல் ஆகிய பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

இப்பணிகள் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணிக்கு விருப்பம் தெரிவிக்கும் இணையதள மையங்களுடன் மாவட்ட நிர்வாகம் இதற்காக ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ளவுள்ளது. அதேபோல் பொதுமக்களிடமிருந்து எவ்வளவு கட்டணம் பெறவேண்டும் என்பதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர்நீக்கல், திருத்தங்கள், ஒரே சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் இருப்பிடம் மற்றும் முகவரி குறித்து விண்ணப்பித்திடவும், இணைய தளம் மூலம் புகார்கள் பதிவு செய்யவும் ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும்.

வாக்காளர் பட்டியல் (ஒரு பக்கத்திற்கு) அச்சிட்டு தரவும், வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர், வாக்குச்சாவடி மையங்களின் பெயர் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் புகார்களின் நிலை குறித்து அறியவும் ரூ.3 கட்டணமாக வாங்கப்படும். வாக்காளர் பட்டியல் விவர தேடல்களின் முடிவுகளை அச்சிட்டு அளிக்க ரூ.2 கட்டணம் வசூலிக்க வேண்டும். எனவே, இப்பணிகளை மேற்கொள்ள விருப்பமுள்ள, கடலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனுமதி பெற்ற இணையதள மையங்களின் உரிமையாளர்கள் தங்களது விண்ணப்பத்தை

ஜூலை 07, 2013

கடலூர் மாவட்டத்தில் அபாயகரமான நிலையில் நிலத்தடி நீர்!

கடலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் அபாயகரமான நிலையில் உள்ளதால் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி அமல்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 683 ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான மழைநீர் சேகரிப்பு குறித்து ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கு கடலூர் காவலர் நல திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது. கூட்டத்துக்கு, தமிழக குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அமல்ராஜ் தலைமை தாங்கிப் பேசுகையில், "உலகின் மொத்த நீர் அளவில் 3 சதவீதம் மட்டுமே தூய்மையான நீராக உள்ளது. மீதமுள்ள நீர் அனைத்தும் கடல் நீராகும். பெருகி வரும் மக்கள்தொகை, நகரமயமாதல், தொழிற்சாலைகளின் வளர்ச்சி போன்ற பல்வேறு காரணங்களால் நிலத்தடி நீர் மட்டம் சமீபகாலமாக குறைந்து விட்டது.

கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை சராசரி மழை அளவு ஆண்டுக்கு 1316 மி.மீ. ஆகும். எனவே மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி நமது மாவட்டத்திலும் நிலத்தடி நீர் மட்டம் அபாயகரமான நிலையில் உள்ளது. நாம் அனைவரும் நமது வீடுகளில், சுற்றுப்புற பகுதிகளில் உடனடியாக மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மழைநீரை சேமிப்பதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரும். அதுமட்டுமின்றி நிலத்தின் ஈரப்பதம் அதிகரிக்கும். கடலோரப் பகுதிகளில் நிலத்தடி நீரின் உப்புத்தன்மை வெகுவாக குறையும். முதலில் அரசு கட்டமைப்புகளில் மழைநீர் சேகரிப்பு ஏற்படுத்த அரசு ஆணையிட்டுள்ளது. ஆகவே ஊராட்சி மன்றத் தலைவர்கள் அனைவரும் தங்களது பகுதிகளில் இத்திட்டத்தை மிகவும் முனைப்புடன் செயல்படுத்திட வேண்டும்' என்றார்.

தொடர்ந்து குடிநீரைப் பரிசோதனை செய்யும் கருவி அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டது. ஊராட்சிகளின்

ஜூலை 06, 2013

30 வருடம் பொறுமையாயிருந்த நாம்,ஏன் முர்ஸியின் ஆட்சியில் ஒருவருடம் பொறுக்கக் கூடாது!

ஒன்பது சாகாப்தங்கள் அடங்கிக் கிடந்த எகிப்தியர்களுக்கு ஜனநாயக முறைப்படி தேர்வான ஜனாதிபதி முர்ஸியுடன் ஒருவருடம் பொறுமையாக இருக்க முடியவில்லை..! ராபியத்துல் அதவிய்யாஹ்வில் கூடிய எகிப்தின் சட்டபூர்வமானஅரசையும் மக்களையும் மாத்திரமல்ல தஹ்ரீரிலே குழுமி நின்று கோஷ மிட்ட எதிரணியினரையும் இலக்கு வைத்தே இராணுவம் சதிப் புரட்சியை செய்துள்ளது என்பதனை எகிப்தியர்கள் உணர நீண்ட காலம் பிடிக்காது.

மன்னர் புவாதின் ஆட்சின் கீழ் 14 வருடங்கள், (1922-1936) 

மன்னர் பாரூக்கின் ஆட்சியின் கீழ் 16 வருடங்கள் (1936-1952) 

ஜமால் அப்துல் நாசரின் ஆட்சியின் கீழ் 16 வருடங்கள் (1954-1970) 

அன்வர் சதாத்தின் ஆட்சின் கீழ் 11 வருடங்கள் (1970-1981) 

ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சியில் 31 வருடங்கள் (1981-2012) 

என அக்கிரமக்காரர்களின் அடக்குமுறைகளில் ஒன்பது தசாப்தங்கள் அடங்கிக் கிடந்த எகிப்தியர்களுக்கு ஜனநாயக முறைப்படி தேர்வான ஜனாதிபதி முர்ஸியுடன் ஒருவருடம் பொறுமையாக இருக்க முடியவில்லை..!

முர்ஸி முழுமையானவர் என்றோ இக்வான்கள் மட்டும் இறைநேசர்கள் என்றோ நான் சொல்லவில்லை, அவர்களும் கோரவில்லை, ஆனால் ஜனாதிபதி முர்ஸியோடும் இக்வான்களோடும் முரண்பட்டோருக்கு முன்டுகொடுத்த சர்வதேச பிராந்திய சக்திகள் இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் பரம விரோதிகள்..! முபாரக்கிற்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் போராட்டத்தை முபாரக்கின் இராணுவம் காவு கொண்ட பொழுது இக்வான்கள் அதனை மீட்டெடுக்க கைகொடுத்தார்கள், இன்றுவரை இராணுவத்தின் சதிவலைகளுக்குள்ளேயே அரபு வசந்தம் அடிபட்டுக் கிடந்தது. ராபியத்துல் அதவிய்யாஹ்வில் கூடிய எகிப்தின் சட்டபூர்வமான அரசையும் மக்களையும் மாத்திரமல்ல தஹ்ரீரிலே குழுமி நின்று கோஷ மிட்ட எதிரணியினரையும் இலக்கு வைத்தே இராணுவம் சதிப் புரட்சியை செய்துள்ளது என்பதனை எகிப்தியர்கள் உணர நீண்ட காலம் செல்ல மாட்டது..!

இஸ்லாமியர்கள் இஸ்லாத்தை அல்ல... அன்று இஸ்லாம் இஸ்லாமியர்களை மீண்டும் அரங்கிற்கு அழைத்து வரும்... அசத்தியம் அழிந்தே தீரும் ..! எகிப்திய மண்ணில் கொளுத்திவிடப் படும் சத்தியத் தீபம் எகிப்தின் மூளை முடுக்குகளில் மாத்திரமல்ல, உலகின் நாளா திசையிலும் கொழுந்து விட்டெரியும் .! அது மத்திய கிழக்கின் விடியலாக... வளைகுடாவின் வசந்தமாக வரலாற்றை பொன்னெழுத்துக்களால் பொறித்துச் செல்லும்!

மேலும் இது சம்ந்தமாக கலாநிதி யூசுஃப் அல் கர்ளாவி கூறுகையில் முபாரக்கின் 30 வருட ஆட்சியிலும், அதற்கு முன்னர் 30 வருடங்களும் பொறுமையாயிருந்த நாம்,ஏன் முர்ஸியின் ஆட்சியில் ஒருவருடம் பொறுக்கக் கூடாது! அறுபது வருடப் பிரச்சினைகளை ஒரு வருடத்தில் எவ்வாறு தீர்க்க முடியும் எனக் கேட்டுக்

அரசு பணிக்கு 30,000 பேர்: டி.என்.பி.எஸ்.சி.,- டி.ஆர்.பி., மும்முரம்‏!

சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகளில், 30 ஆயிரம் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகளை அளிப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமும் (டி.என்.பி.எஸ்.சி.) ஆசிரியர் தேர்வு வாரியமும் (டி.ஆர்.பி.) மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.

அரசு தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி. ஆகிய இரு அமைப்புகளும், தமிழக அரசு துறைகளில் புதிய நியமனங்களை செய்வதில் பெரும் பங்கை ஆற்றி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும், சராசரியாக இரு அமைப்புகளும்தலா 30 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் பணியை செய்து வருகின்றன. நடப்பு ஆண்டிலும், வரும் செப்டம்பருக்குள், 30 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான பணிகளில், இரு அமைப்புகளும், மும்முரமாக ஈடுபட்டுள்ளன. குரூப்-4 தேர்வு மூலம் 5,566 பேரை தேர்வு செய்ய, ஆகஸ்ட் 25ல், போட்டித்தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வை 6 லட்சம் பேர் வரை எழுத உள்ளனர்.

இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் 5,566 பேரும் நியமிக்கப்படுவர். இவர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் வரை மாதச்சம்பளம் கிடைக்கும்.

இதேபோல் சுகாதாரத்துறையில் 2,594 உதவி மருத்துவர்களை நியமனம் செய்ய, செப்டம்பர், 22ம் தேதி, போட்டித் தேர்வை நடத்துகிறது. இதனை, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவை மட்டுமில்லாமல் பல்வேறு குறைந்த பணியிடங்களுக்கான தேர்வுகளும், தொடர்ந்து நடக்க உள்ளன.

அரசு பள்ளிகளில், இடைநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான

ஜூலை 04, 2013

எகிப்தில் ராணுவ புரட்சி:வீட்டுச் சிறையில் முர்ஷி! இடைகால அதிபாரானார் அட்லி மன்சூர்

எகிப்தில் ஜனநாயகரீதியில் தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி மோர்சியை ராணுவம் அதிரடியாக நீக்கியுள்ளது. அவரை ராணுவம் வீட்டுச் சிறையில் அடைத்துள்ளது. மேலும் நாட்டின் அரசியல் சட்டத்தையும் முடக்கிவிட்ட ராணுவம், மூத்த நீதிபதி மன்சூரின் தலைமையில் இடைக்கால அரசையும் அமைத்துள்ளது.

துனீசியாவில் ஆரம்பித்த அரபு வசந்தம் பல அரேபிய நாடுகளுக்கும் பரவி நீண்டகாலம் ஆட்சியில் இருந்தவர்களை பதம் பார்த்தது. அந்த வகையில் எகிப்து நாட்டின் அதிபராக நீண்ட காலம் பதவி வகித்து வந்த ஹோஸ்னி முபாரக்கும் மக்கள் போராட்டத்தால் பதவி விலக நரேந்தது. இதையடுத்து அங்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டது. அதில், இஸ்லாமிய கட்சியான முகம்மது மோர்ஸி அதிபராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவர் கொண்டு வந்த சீர்திருத்தங்களுக்கும் எதிர்ப்பு கிளம்பியது. அவரையும் பதவி விலகக் கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

இந் நிலையில், மோர்ஸி பதவி விலக 48 மணி நேரம் கெடு விடுத்தது ராணுவம், இந்த கெடு நேற்றிரவு முடிந்த நிலையில் ராணுவம் தலைநகர் கெய்ரோவில் உள்ள அதிபர் மாளிகையை அதிரடியாக முற்றுகையிட்டது. அவரை பதவி விலக வைத்து, வீட்டுச் சிறையில் அடைத்தது.எகிப்தின் பல்வேறு பகுதிகளில் முர்சியின் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் 14 பேர் பலியாகியுள்ளனர் என்று அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. முர்சியை ராணுவம் வீட்டுக் காவலில் வைத்துள்ளது.இதற்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தற்போது அந்நாட்டின் தலைமை நீதிபதி அட்லி மன்சூரை இடைக்கால அதிராக ராணுவம் நியமித்துள்ளது. இதையடுத்து அதிபர் பதவி விலகிவிட்டதாகவும், அரசியல் சாசன சட்டத்தை ரத்து செய்வதாகவும் ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும் விரைவில் தேர்தல நடைபெற நடவடிக்‌கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் இது ராணுவம் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு என மோர்சி அறிவித்துள்ளார். மேலும் எங்களிடமிருந்து மக்கள் புரட்சியை ராணுவம் பறித்துக் கொண்டுவிட்டது என்றும்

ஃபலஸ்தீனுக்கு இந்தியா நிதி உதவி!

புதுடெல்லி: மேற்காசியா சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஃபலஸ்தீனுக்கு இன்று செல்லவிருக்கும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ.அஹ்மத், இந்தியாவின் உதவியாக 10 லட்சம் டாலர் தொகையை அந்நாட்டின் பிரதமர் டாக்டர் ராமி அப்துல்லாஹ்விடம் அளிப்பார்.ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன் நேற்று இ.அஹ்மத், ஜோர்டானில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

மஹ்மூத் அப்பாஸ், கடந்த ஆண்டு இந்தியா வந்தபோது பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்த 10 லட்சம் டாலர் உதவி தொகையை இ. அஹ்மத் வழங்குகிறார்.ஃபலஸ்தீன் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ரியாத் மாலிகி, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் நபீல் ஷாத், ஹெப்ரான் ஆளுநர் கமால் ஹுமைத், ஜெரிக்கோ ஆளுநர் மாஜித் ஃபித்யானி ஆகியோருடன் இ.அஹ்மத் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை மஸ்ஜிதுல் அக்ஸாவில்

ஜூலை 03, 2013

அடப்பாவிகளா அநியாயமா கொன்னுடீங்களே!இஷ்ரத் படுகொலை போலி -சிபிஐ

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மாணவி இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அம்மாநில போலீசாரும் ஐபி உளவுப் பிரிவும் இணைந்து நடத்திய "போலி என்கவுன்ட்டர்" நடவடிக்கை என்று சிபிஐ இன்று தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 2004ஆம் ஆண்டு குஜராத்தின் அகமதாபாத் புறநகரில் முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்யும் நோக்கத்துடன் ஊடுருவிய தீவிரவாதிகள் என்று மும்பை மாணவி இஷ்ரத் ஜஹான், ப்ரனேஷ் பிள்ளை என்ற ஜாவேத் ஷேக், அம்ஜத் அலி ரானா, ஜீஷான் ஜோகர் ஆகிய 4 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் இந்த 4 பேரும் அப்பாவிகள் என்றும் குஜராத் போலீசார் நடத்தியது போலி என்கவுன்ட்டர் என்றும் புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. சிபிஐ விசாரணையில் ஐ.பி. மத்திய புலனாய்வு அமைப்பு அதிகாரி ராஜேந்திர குமாருக்கும் இந்த என்கவுன்ட்டரில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. பின்னர் இதை விசாரிக்கும் சிபிஐ அதிகாரி மிரட்டப்படுகிறார்.அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சிபிஐயே கோரியது.

இந்நிலையில் இந்த வழக்கில் அகமதாபாத் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று முதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. அதில், அகமதாபாத் புறநகரில் குஜராத் போலீசார் 4 பேரை சுட்டுக் கொன்றது போலி என்கவுன்ட்டர். இந்த போலி என்கவுன்ட்டரை குஜராத் போலீசாரும் மத்திய புலனாய்வு அமைப்பான ஐபியும் இணைந்து மேற்கொண்டன. குஜராத் உயர் போலீஸ் அதிகாரிகளான பாண்டே உள்ளிட்டோர் இந்த போலி என்கவுன்ட்டர் சம்பவத்துக்குக் காரணம். ஐபி அமைப்பின் அதிகாரி ராஜேந்திரகுமாரின் பங்கு குறித்து அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும். இந்த வழக்கில் போலி எண்கெளன்டரை மூடி மறைக்க குஜராத் போலீசார் முயன்றனர். ஆதாரங்களை அழிக்கவும் முயன்றனர். இந்த விவகாரத்தில் 4 பேரையும் கடத்தி, சட்டவிரோதமாக சிறை வைத்து, மயக்க மருந்து செலுத்தி மயக்கமாக்கி, கொலை செய்துள்ளனர்.

இஷ்ரத் ஜகான் உள்ளிட்டோர் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட ஏ.கே.-47, 2 பிஸ்டல்கள் குஜராத் ஐபி அலுவலகத்தில் இருந்து போலீசாரால் கொண்டு வரப்பட்டு சம்பவ இடத்தில் போடப்பட்டன. அதிகாரி வன்சாராவின் உத்தரவுப்படி இதை ஐபிஎஸ் அதிகாரியான ஜி.எல். சிங்கால் (இந்த விவகாரத்தில் இப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்) தான் ஐ.பி. அலுவலகத்துக்கு ஜூலை 14ம் தேதி சென்று இந்த ஆயுதங்களை வாங்கிக் கொண்டு வந்துள்ளார். பின்னர் அதை போலி எண்கெளன்டர் நடந்த இடத்தில் போட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் எண்கெளன்டருக்கு முன்பாகவே எப்ஐஆரை குஜராத் போலீசார் தயார் செய்துள்ளனர். மேலும் கோதார்பூர் வாட்டர் ஒர்க்ஸ் பகுதியில் வைத்து இந்த போலி எண்கெளன்டர் நடத்தப்பட்டபோது இந்த நான்கு பேரையும் சுட ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும், கமாண்டோவும் மறுத்துள்ளனர். இதனால் கிரைம் பிராஞ்ச் போலீசாரிடையே சண்டை கூட நடந்துள்ளது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் கமாண்டோவிடம் இருந்து துப்பாக்கிகளைப் பறித்த மற்ற போலீசார் இஷ்ரத் ஜகான் உள்ளிட்டோரை சுட்டுக் கொன்றனர் என்று சிபிஐயின் குற்றப் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்த என்கவுன்ட்டர் தொடர்பாக புகார் கூறப்பட்ட குஜராத் முன்னாள் அமைச்சர்

ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் கடை திறந்திருக்கும்!

கடலூர் மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ்குமார் விடுத்துள்ள செய்திகுறிப்பு: அரசு உத்தரவின் பேரில் ஜூலை மாதம் முதல் மாதத்தின் முதல் இரண்டு ஞாயற்றுக்கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் மாதத்தின் முதல் இரண்டு வெள்ளிகிழமைகளில் விடுமுறை நாட்களாகவும் அறிவிக்கப்படுள்ளது. இதன் மூலம் வாரத்தின் முதல் இரண்டு ஞாயற்றுகிழமைகளும், விடுமுறை தவிர்த்து அனைத்து நாட்களிலும் ரேஷன் கடைகள் திறந்திருக்கும். மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை

சீனாவில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் -மணிச்சுடர் செய்தி


உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோயால் 1 கோடி பேர் பாதிப்பு: ஐ.நா. அதிர்ச்சி தகவல்!

எய்ட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோய் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் கடந்த 32 ஆண்டுகளாக பரவி வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உலக அளவில் எய்ட்ஸ் நோய் பாதித்தவர்களில் 70 சதவீதம் பேர் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

தற்போதைய கணக்கெடுப்பின்படி 1 கோடி பேரை கடுமையான எய்ட்ஸ் தாக்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்கள் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து மாத்திரைகள் சாப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த தகவலை ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. மேலும் வருகிற 2015-ம் ஆண்டில் 65 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் மரணம் அடைவர். அல்லது பாதிக்கப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது. அவற்றை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளதாக ஐ.நா சபை அறிவித்துள்ளது

Acquired Immune Deficiency Syndrome (Aids) - என்பதே இதன் விரிவாக்கம். அதாவது மனித உடலிலுள்ள நோய் எதிர்ப்புச் சக்தியை குறைத்துவிடும் வைரஸ் தாக்குதலே எய்ட்ஸ் எனப்படும். மனிதனின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும் வைரஸ் ஆன HIV + (Human Immunodeficiency Virus) மனிதனின் இரத்தத்தில் கலந்துவிடுவதனால் எய்ட்ஸ் மனிதனைத் தாக்கிவிடுகிறது. இரத்தத்தில் கலந்த ஹெச்.ஐ.வி வைரஸின் முதல் வேலையாக மனித இரத்தத்தில் இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்திச் செல்களான வெள்ளை அணுக்களை அழிக்கிறது. அச்செல்களை அழிப்பதோடல்லாமல் ஹெச்.ஐ.வி வைரஸும் பல்கிப் பெருகிக் கொண்டே செல்கிறது. இவ்வாறாக மனித உடலில் உள்ள வெள்ளை அணுக்களை அழித்து, நோய் எதிர்ப்புச் சக்தியைக் (Anti Body) குறைத்து விடுவதால் பிறகு அம்மனிதனுக்குத் தாக்கும் பாக்டீரியாக்கள் மூலமாக காய்ச்சல், தலைவலி போன்ற எந்தவிதமான நோய் ஏற்பட்டாலும் அது குணமாவதற்கு நெடுங்காலம் எடுத்துக் கொள்கிறது. பிறகு தாக்கப்படும் நோயினால் அவர் மரணத்தை அடைந்து விடுகிறார்.
சில சமயம் அதிக பட்சமாக 6முதல் 10வருடங்கள் கூட இந்த பாதிப்புக்கு எடுத்துக் கொள்கிறது. எனினும் எய்ட்ஸ் பாதித்த மனிதன் மிக விரைவிலேயே அவர் தன் நோய் எதிர்ப்புச் சக்திக்கேற்ப மரணத்தைச் சந்தித்து விடுகிறான்.

 எய்ட்ஸின் துவக்கம்
1983-ல் மருத்துவ வல்லுனர்களான லுக் மான்டாக்னெர் மற்றும் நேஷனல் கேன்சர் இன்ஸ்ட்டியூட்டை சேர்ந்த ராபர்ட் கேலோ குழுவும் மனிதர்களுக்குத் தாக்கும் புதுவகையான வைரஸ்ஸைக் கண்டறிந்தனர். அவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவாக இந்த வைரஸ் ஆனது முறையற்ற பாலியல் தொடர்புகளின் போது உருவாகி இரத்தத்தில் கலந்து விடுவதை கண்டறிந்தனர்.

எய்ட்ஸ் எப்படி பரவுகிறது?
எய்ட்ஸ் பரவ காரணமான எச்.ஐ.வி கிருமி மூன்று வழிகளில் பரவுகிறது. என்றாலும் கூட, பாதுகாப்பற்ற உடல் உறவுதான் இன்று இந்த உலகில் ஏராளமானோருக்கு நோய்த் தொற்றை ஏற்படுத்தியிருக்கிறது.

1. பாதுகாப்பற்ற உடல் உறவு (ஆசன வாய் மற்றும் பெண் உறுப்பு வழியாக புணர்தல்).

2.பரிசோதனை செய்யப்படாத எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தத்தை ஏற்றுவது. பயன்படுத்திய ஊசிகளை மீண்டும் பயன்படுத்தும் போது

3.கருவுறும் முன் அல்லது கருவுற்ற நிலையில் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகும் பெண்ணின் சிசுவுக்கு எச்.ஐ.வி தொற்று பரவ வாய்ப்பு.

ஆரம்ப அறிகுறிகள் ஹெச்.ஐ.வி தாக்கிய முதல் மூன்று வாரங்களிலேயே அம்மனிதனுக்கு

ஜூலை 02, 2013

சவுதி அரேபியாவில் இருந்து திரும்பும் தமிழர்களுக்கு வேலை வழங்க வேண்டும்: கருணாநிதி

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சவுதி அரேபியாவில் நிதாகத் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டு, அதன் பெயரால் அந்த நாட்டில் பணியாற்றி வந்த வெளிநாட்டினரையெல்லாம் திரும்ப அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு.

இதன் காரணமாக 60 ஆயிரம் இந்தியர்கள் அந்த நாட்டிலே பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் இந்தியாவுக்குத் திரும்ப அனுப்பப்படவிருப்பதைப் பற்றியும், அந்த 60 ஆயிரம் இந்தியர்களில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தமிழர்கள் என்பது பற்றியும் அவர்கள் தொடர்ந்து அங்கேயே பணியாற்ற இந்திய அரசும், தமிழ் மாநில அரசும் உதவிட முன் வர வேண்டுமென்றும் கடந்த வாரம் நான் விடுத்த அறிக்கையிலே கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் வேறு வழியின்றி சவுதி அரேபியாவில் பணியாற்றி வரும் இந்தியர்களை அங்கிருந்து இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பிடும் வேலையில் இந்தியத் துதரகம் கடந்த இரண்டு மூன்று நாட்களாகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட இந்தியர்களுக்கு ஏற்கனவே இந்தியத் தூதரகம் சார்பில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு திரும்பி வரும் தமிழர்களை வரவேற்று, அவர்களுக்கான வாழ்வாதாரத்தை அளித்திடும் வகையில் உடனடியாகத் தேவையான நிதி உதவி, கடன் உதவி உள்ளிட்ட உதவிகளைச் செய்து அவர்களுடைய குடும்பங்களைக் காப்பாற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகள் முன் வரவேண்டுமென்றும், அவர்களுக்குத் தமிழகத்திலேயே நிரந்தரப் பணி வழங்கிட வேண்டுமென்றும்

நமதூர் புளிய மரத்து விளக்கு தினகரன் செய்தி!

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது கொள்ளுமேடு. இந்த கிராமம் வீராணம் ஏரிக்கரையில் உள்ளது. கரை முழுவதும் சேத்தியாத்தோப்பு வரை புளிய மரங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளது. புளிய மரத்தை மின் கம்பமாக சில பகுதிகளில் மாற்றி வருகின்றனர். கிராமத்துக்கு இரவு நேரங்களில் செல்வதற்கு வசதியாக மின் விளக்குகளை புளிய மரங்களின் பொருத்தி உள்ளனர். மழை காலங்களில் புளிய மரங்களில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகளிலிருந்து மின் கசிவு ஏற்பட்டால் பெரும் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதே போன்று சாலையோர புளிய மரங்களில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதை மின்சார வாரியம் கண்டு கொள்வது கிடையாது. உயிர் பலி ஏற்பட்ட உடன் தங்களுக்கு இதில் தொடர்பு இல்லை என்று கூறி தப்பித்துக்கொள்ள நினைக்கிறது. தெரு மின் விளக்குகள் எரியாமல் உள்ளதை கண்டுகொள்வதில்லை. ஆகவே கொள்ளுமேடு பகுதியில் புளிய மரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகளை அகற்ற வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி:தினகரன்

நமதூர் ஊராட்சி மன்ற தலைவர் சிராஜுத்தீன் அவர்கள் இதில் கவனம் செலுத்தி புளிய மரத்தில் உள்ள விளக்குகளை அகற்றி மின்கம்பன்களை அமைக்குமாறு கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ் கேட்டுக்கொள்கிறது.