Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 09, 2014

காப்பீட்டு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு!

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் பகுதியில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டு நெற்பயிர் சாகுபடி தீவிரமடைந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், புயல், மழை, நோய் ஆகியவற்றின் காரணமாக நெற்பயிர் பாதிக்கப்பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு அரசு தேசிய வேளாண்மை காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் விவசாயிகள் பங்கு கொண்டு பயன்பெறுமாறு காட்டுமன்னார்கோவில் வேளாண்மை உதவி இயக்குநர் கனகசபை கூறியுள்ளார். பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் காப்பீடு செய்வதால் மகசூல் இழப்பு ஈடு செய்யப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறாத விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.12 ஆயித்து 800 காப்பீட்டு தொகையாக வழங்கப்படுகிறது. இதற்கு விவசாயிகள் பிரிமீயம் தொகையான ரூ.128ம் தங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் செலுத்த வேண்டும்.

பணம் செலுத்தும் போது பயிர் செய்வதற்கான ஆதாரங்களான கணினி சிட்டா மற்றும் அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆகியவற்றை இணைக்க வேண்டும். இந்த காப்பீட்டு திட்டத்தில் சேருவதற்கு வரும் 15ம் தேதி கடைசி நாளாகும். எனவே அனைத்து விவசாயிகளும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் சந்தேகங்கள் ஏற்பட்டால் அருகில் உள்ள வேளாண்மை உதவி அலுவலர்களை சந்தித்து ஆலோ சனை பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...