Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 28, 2014

சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணிக்காக வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக நீர்வரத்து!

காட்டுமன்னார்கோவில்:சென்னைக்கு வீராணம் ஏரியில் இருந்து குடிநீர் அனுப்பும் பணிக்காக வடவாறு வழியாக வினாடிக்கு 1200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. இந்த ஏரி கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் கீழணையிலிருந்து வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாக மழைநீர் வரும். மேலும், இந்த ஏரியிலிருந்து சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்காக நாள்தோறும் வினாடிக்கு 77 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த ஏரியின் மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் டெல்டா பகுதிகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 1 லட்சம் ஏக்கர் விவசாய விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மேட்டூரில் இருந்து கடந்த ஜனவரி மாதம் திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணை, கீழணை வழியாக வீராணம் ஏரிக்கு வந்ததால் வறண்டு கிடந்த ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 46.50 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.

தற்போது, கோடை வெயிலின் காரணமாகவும், சென்னைக்கு நாள்தோறும் வினாடிக்கு 77 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுவதாலும் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து கொண்டே

ஏப்ரல் 27, 2014

குஜராத்தில் லோக் அயுக்தா அமைக்கப்பட்டிருந்தால் மோடி கம்பி எண்ணிக் கொண்டிருப்பார்... ராகுல்

அகமதாபாத்: குஜராத்தில் லோக் ஆயுக்தாவும், தகவல் பெறும் உரிமை சட்டமும் அமைக்கப்பட்டு இருந்தால் அம்மாநில முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி சிறையில் தான் இருப்பார் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

16வது லோக்சபா தேர்தலின் 6 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்து விட்ட நிலையில், மீதமுள்ள 3 கட்டங்களுக்கான தேர்தல் பிரச்சாரம் சூடு பறக்க நடந்து வருகிறது. அந்தவகையில், நேற்று குஜராத் மாநிலம் பாவனார் லோக்சபா தொகுதிக்குட்பட்பட்ட போதாத் நகரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு மோடியை விமர்சித்து கடுமையாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

10 ஆணையர்கள் இருக்க வேண்டும்.ஆனால் இங்கு எவரும் இல்லை.பிற மாநிலங்களில் லோக் அயுக்தா உள்ளது. ஆனால் குஜராத்தில் லோக் ஆயுக்தா இல்லை. ஊழலை பிடிக்கும் அதிகாரம் கொண்ட ஆணையத்திற்கு இங்கு இடம் கொடுக்க வில்லை.லோக் அயுக்தா, தகவல் பெறும் உரிமை ஆணையர் இங்கு நியமிக்கப்படும் நாளில் உங்கள் காவலாளி உள்ளே (ஜெயில்) செல்வார்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.மேலும், மகாத்மா காந்தி போன்று வாழ்நாள் முழுவதும் உண்மையே பேசிய தலைவர்களை தந்த குஜராத்தில் மோடி எப்போதுமே பொய்களை

ஏப்ரல் 26, 2014

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 73.67% வாக்குப்பதிவு! சிதம்பரம் தொகுதிவாரி 79.61

சென்னை: மக்களவை தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 73.67 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் இத்தகவலை தெரிவித்தார்.

மக்களவை தேர்தலில் 6வது கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 24ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் உத்தேசமாக 72 சதவீதம் வாக்குகள் பதிவானதாக ஏப்ரல் 24ம் தேதி தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. மாவட்ட வாரியாக பதிவான வாக்குகளின் இறுதி நிலவரம் வர தாமதம் ஏற்பட்டதால் நேற்று வெளியிடப்படுவதாக இருந்த பதிவான வாக்குளில் இறுதி விபரம் இன்று (ஏப்ரல் 26) வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தொகுதிவாரியாக பதிவான வாக்குகளின் இறுதி பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன் விபரம் : * வடசென்னை 63.95 * மத்திய சென்னை 61.49* தென்சென்னை 60.04
* சிதம்பரம் 79.61
*  காஞ்சிபுரம் 75.91* திருவள்ளூர் 73.73* கடலூர் 78.63* கள்ளக்குறிச்சி 78.26* விழுப்புரம் 76.09* ஆரணி 80* திருவண்ணாமலை 78.08* தர்மபுரி 81.07* சேலம் 76.73* கிருஷ்ணகிரி

ஏப்ரல் 25, 2014

காடுமன்னர்குடி டாக்டர் சம்பத் அவர்கள் மரணம்!

காட்டுமன்னற்குடியில் கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக மருத்துவ சேவை செய்துவந்த மருத்துவர் சம்பத் அவர்கள் இன்று அதிகாலை மரணம் அடைந்தார்கள்.காட்டுமன்னார்குடி மக்களின் நாடித்துடிப்பை அறிந்து அவர்களின் தொனியிலேயே பேசும் திறமைபெற்றவர்.அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் அனைவருக்கும் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

புதிய தொழினுட்பம் படித்துவிட்டோம் என்ற பெருமையில் இருபவர்கள் மத்தியில் இவரின் மருத்துவ சேவை என்பது அளவிட முடியாதது.மக்களுக்கு விளங்கும் வகையில் சின்ன மாத்திரை ஒன்னு பெரிய மாத்திரை ஒன்னு என்று சொல்லி விளங்க வைக்கும் திறன் மறக்க முடியாத ஒன்று.காட்டுமன்னார் குடி சுற்றுவட்டாரத்தில் பெரியவர் முதல் சிறியவர் வரை இவர் நாடிபாத்திராத ஒருவர் இருக்கமுடியாது என்பது நிதர்சனமான உண்மை.

ஏப்ரல் 24, 2014

‘தமிழகத்தில் நியாயமாக தேர்தல் நடத்தப்படும்’: தேர்தல் ஆணையம் உறுதி!

தமிழகத்தில் மக்களவை தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆளும் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, தஞ்சாவூர் திமுக வேட்பாளர் டி.ஆர் பாலு தொடர்ந்த வழக்கு, உயர்நீதிமன்றத் தற்காலிகத் தலைமை நீதிபதி சதீஷ்குமார் அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் ஆளும் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்து வருவதாகவும், இதற்கு காவல்துறையினரும், அரசு அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாகவும் மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது. இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர், தேர்தலை நியாமாகவும் நேர்மையாகவும் நடத்த தேவையான நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும், பராபட்சமின்றி புகார் மீது நடவடிக்கை எடுத்து வருவதாகவும்

ஏப்ரல் 22, 2014

பண முதலைகளுக்கு ரூ.1275 கோடி சலுகைகளை வாரி வீசியிருக்கிறார் மோடி!இவர் நாட்டின் உயர் பதவியில் அமர்ந்தால்

பாரதீய ஜனதா கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சியின் கொள்கைகளையோ திட்டங்களையோ முன்னிறுத்தாமல், நரேந்திர மோடி எனும் தனி நபரை முன்னிறுத்துவது ஏன்?

பாரதீய ஜனதாவின், மதவாதக் கொள்கைகள், மசூதி இடிப்பு, குஜராத் படுகொலைகள் உள்ளிட்ட அக்கட்சியின் மதவெறி ஆதரவு முகத்தை மறைத்துக் கொள்வதே இதற்குப் பின்னால் உள்ள சூழ்ச்சி.

மோடியின் குஜராத், இந்தியாவிலேயே வளர்ச்சிப் பெற்ற மாநிலமாக உயர்ந்து நிற்கிறது என்ற பொய் பிரச்சாரம், இப்போது புள்ளி விவரங்களுடன் மறுக்கப்பட்டு வருகிறது. மோடி,குஜராத்தில் பெரும் தொழில் நிறுவனங்களை முதலீடு போடச் செய்து சலுகைகளை வாரி வழங்குகிறார். இதனால் பயன் பெறுவது ஏழை, நடுத்தர, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் அல்ல; தொழிலதிபர்களும் மேல்தட்டுப் பிரிவினரும்தான். பெரும் தொழில் நிறுவனங்கள் ஒரு மாநிலத்தில் முதலீடு செய்ய வரும்போது, எந்தத் தொழில் என்பதை மட்டுமல்ல, எந்த இடத்தில் தொடங்குவது என்பதையும் அவர்களே நிர்ணயிக்கிறார்கள். “உங்கள் மாநிலத்தில் நான் முதலீடு செய்ய நீ என்ன தருவாய்?” என்று தொழிலதிபர்கள் கேட்க, பதிலுக்கு, “திருப்பி நீ எனக்கு என்ன தருவாய்?” என்று  மாநில முதல்வர்கள் கேட்க, அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் கைகோர்த்துக் கொண்டு ஒரு புதிய உறவை உருவாக்கிக் கொள்கிறார்கள். இரண்டு பிரிவினரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும், ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டும், சொத்துகளை செல்வங்களை குவித்துக் கொள்கிறார்கள். இதுதான் இந்தியாவில் நடக்கும் அரசியல். இத்தகைய தொழிலதிபர்களால் தங்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய நபர் மோடிதான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

எப்படி வந்தது இந்த நம்பிக்கை?
குஜராத்தில் மோடி செயல்பூர்வமாக நிரூபித்துக் காட்டியதால் உருவான நம்பிக்கை. இந்தியாவில் முதல் வரிசையில் நிற்கக்கூடிய 100 முதலாளிகளில் 74 பேர் அடுத்த பிரதமராக மோடிதான் வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். (‘எக்னாமிக் டைம்ஸ்’-செப்.6, 2013)

10 ஆண்டுகாலமாக இதேபோல் பெரு முதலாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங்கியது காங்கிரசின் மன்மோகன் ஆட்சி. அதனால் ஊழல் சகதியில் சிக்கி அம்பலப்பட்டு, மக்கள் வெறுப்புக்கு உள்ளாகிவிட்டது. எனவே மன்மோகனை வைத்து வண்டியை ஓட்ட முடியாது என்ற நிலையில் மோடி என்ற புதுமுகத்தை இவர்கள் களத்தில் இறக்கியிருக்கிறார்கள்.

மோடி ஆட்சி முறைகேடாக தொழிலதிபர்களுக்கு வாரி வழங்கிய சலுகைகளை

குஜராத் கலவரத்தின்போது ஏதோ ஒரு தீய சக்தி எல்லோரையும் இயக்கியது!

உலகை உலுக்கிய புகைப்படங்களில் ஒன்று குதுபுதீன் அன்சாரியினுடையது. உடலில் காயங்களுடனும் சட்டையில் ரத்தக் கறைகளுடனும் கண்களில் மரண பயத்துடனும் இரு கைகளையும் கூப்பி உயிர்ப் பிச்சை கேட்கும் குதுப்பின் படம்தான் குஜராத் கலவரத்தின் கொடூர முகத்தை உலகம் முழுவதும் கொண்டுசென்றது. 2002, பிப்ரவரி மாதத்தில் முஸ்லிம்கள் மீது இந்து அமைப்புகள் நடத்திய வெறியாட்டத்தை நரேந்திர மோடியின் காவல் துறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சூழலில், அகமதாபாதில் துணை ராணுவப் படைகள் நுழைந்தன. 

அகமதாபாத் நகரின் மேல் கரும்புகை சூழ்ந்திருந்தது. ஆங்காங்கே தீவைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களின் வீடுகளில் ஒன்று குதுப்பினுடையது. இரு நாட்களாகவே வெவ்வேறு கும்பல்கள் அந்தப் பகுதியையே சூறையாடிக்கொண்டிருந்த நிலையில், உயிருக்குப் பயந்து பதுங்கியிருந்தார் குதுப். அன்று காலை அந்த வீடும் கலவரத்துக்கு இலக்கானது. வீட்டைச் சுற்றிலும் தீ சூழ்ந்திருந்த நிலையில் - மரணத்தின் தீ நாக்குகள் - நெருங்கிக் கொண்டிருந்த சூழலில்தான் - அதிர்ஷ்டவசமாக ஒரு ராணுவ வாகனம் அந்தப் பகுதியில் நுழைந்தது. குதுப் மீட்கப்பட்டார். ‘ராய்ட்டர்ஸ்’ நிறுவனத்தில் பணியாற்றிய அர்கோ தத்தாவால் எடுக்கப்பட்ட குதுப்பின் படம் மறுநாள் உலகெங்கும் உள்ள பல முன்னணிப் பத்திரிகைகளிலும் வெளியான பின் அந்தப் படம் குதுப்பை வாழ்நாள் முழுக்கத் துரத்தத் தொடங்கியது. 

அவர் உயிர் பிழைக்க குஜராத்திலிருந்து மகாராஷ்டிரம் சென்றார்; அங்கிருந்து அவர் வேலையை விட்டு அந்தப் புகைப்படம் துரத்தியது. மேற்கு வங்கம் சென்றார்; அங்கும் துரத்தியது. 10-க்கும் மேற்பட்ட முதலாளிகள் இந்தப் படத்தைப் பற்றித் தெரியவந்த பின்னர், அவரை வேலையை விட்டுத் துரத்தினர். ஒருகட்டத்தில் குதுப்பே இந்தத் துரத்தலுக்கு முடிவுகட்டினார். அவர் மீண்டும் குஜராத் திரும்பினார். அடிப்படையில் ஒரு தையல்காரரான அவர், தன் தையல் இயந்திரத்திடம் தன்னை ஒப்படைத்துக்கொண்டார். சிறிய வீடொன்றை அவர் இப்போது கட்டியிருக்கிறார். அங்கு தாய், மனைவி, இரு குழந்தைகளுடன் வசிக்கும் குதுப்பைச் சந்தித்தேன். இன்னமும் மறையாத பயமும் நிறைய தயக்கமும் உறைந்திருக்கும் குதுப்பிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகள் நேரடியானவை அல்ல. ஆனால், அவற்றின் பின் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன. மனிதத்தின் மனசாட்சியை உலுக்கும் வார்த்தைகள் அவை.

கலவரத்தில் நீங்கள் சிக்கியிருந்த அந்தக் காலகட்டத்தை இன்றைக்கு நினைவுகூர முடியுமா?
நான் அந்தக் காலகட்டத்துக்குள் செல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன். உங்களுக்குத் தெரியும், அப்போது என்ன நடந்தது என்று. நாட்டுக்கே தெரியும், அப்போது என்ன நடந்தது என்று. நான் மீண்டும் அதைச் சொல்ல விரும்பவில்லை. ஒரு விஷயம் மட்டும் சொல்வேன். நான் அன்றைக்குச் செத்துவிட்டேன். அப்படியான நிலையில் உயிர் மட்டும் உள்ள ஒரு பிணமாகத்தான்

ஏப்ரல் 21, 2014

தமிழகத்தின் பெருமையை மோடி தெரிந்து கொள்ள வேண்டும்! -ராகுல் காந்தி

ராமநாதபுரம்: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமல்ல, அடுத்து வரும் தேர்தல்களிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு மக்கள் விரும்பும் ஆட்சியை  அமைப்போம் என்று ராமநாதபுரத்தில் ராகுல் காந்தி பேசினார்.அகில இந்திய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, இன்று காலை 11 மணியளவில் மதுரைக்கு  தனி விமானத்தில் வந்தார். பின்னர், ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரத்திற்கு சென்ற அவர், அங்கு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்  திருநாவுக்கரசரை ஆதரித்து பேசினார். அவர் பேசியதாவது:மீனவர் பிரதிநிதிகள் மும்பையில் என்னை சந்தித்து, மீனவர்களுக்கென தனி இலாகா, தனி அமைச்சர்  நியமிக்க வேண்டுமென கோரினர். இதை ஏற்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலேயே மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சந்திக்கும் துன்பங்களை நான் நன்கு அறிவேன். 

எவ்வளவு சீக்கிரம் இப்பிரச்னையில் தீர்வு காண முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் தீர்ப்போம். வன்முறை, மத துவேசம், ஒருவருக்கு ஒருவரை விரோதமாக்கி லாபம்  பெறுவதில் காங்கிரசுக்கு நம்பிக்கையில்லை. அதை எப்போதும் விரும்புவதில்லை. இந்திய வரலாற்றில் காணாத வளர்ச்சியை கடந்த பத்தாண்டு கால காங்கிரஸ்  ஆட்சியில் இந்தியா கண்டுள்ளது. இது மிகப்பெரிய சாதனை. 15 கோடி ஏழை மக்களை வசதியான நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். எந்த அரசும் இவ்வளவு குறுகிய  காலத்தில், இந்த அளவு மக்கள் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றியதில்லை. தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 5கோடி பேருக்கு வேலை  கொடுத்துள்ளோம். தகவல் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றித் தந்ததன் மூலம், எந்த தகவலையும் சாதாரண ஏழை மக்களும் பெற முடியும். எங்கு ஊழல் நடந்தாலும்  மக்களுக்கு தெரிந்து விடுகிறது. ஊழலை ஒழிப்பதற்கான முக்கிய ஆயுதமாக லோக்பால்

முஸ்லிம்கள் சொத்துகளை வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்க வேண்டும்!குஜராத்தில் காவி பயங்கரவாதியின் மிரட்டல்

பாவ்நகர்: குஜராத் மாநிலத்தில் பாவ்நகரில் ஹிந்துக்களுக்கு சொந்தமான வீட்டை முஸ்லிம்கள் வாங்க விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தின் தலைவர் டொகாடியா தடை விதித்துள்ளதுடன் முஸ்லிம்கள் வீட்டை காலி செய்யவும் கெடு விதித்திருப்பது அங்கு பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

குஜராத்தின் பாவ்நகரில் முஸ்லிம் தொழிலதிபர் ஒருவர் மெகானி சர்க்கிள் என்ற பகுதியில் ஒரு வீட்டை விலைக்கு வாங்கினார். ஆனால் முஸ்லிம்கள் இப்படி சொத்துகள் வாங்குவதை ஹிந்து தீவிரவாத அமைப்புகளான ராம் தர்பார்ஸ், ராம் தூன்ஸ் போன்றவை தடுப்பது அங்கு வழக்கம். இந்த நிலையில் தற்போது முஸ்லிம் தொழிலதிபர் வீடு வாங்கியதற்கும் இந்த அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அத்துடன் இந்த விவகாரத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத்தும் தலையிட்டுள்ளது.

முஸ்லிம் தொழிலதிபர் வாங்கிய வீட்டை ஆக்கிரமித்து அங்கே பஜ்ரங் தள் பெயர் பலகையை தொங்க விட வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் டொகாடியா உத்தரவிட்டும் இருக்கிறார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த டொகாடியா, ஹிந்துக்கள் சொத்துகளை முஸ்லிம்கள் வாங்குவதை தடுக்க பாவ்நகரை கலவரம் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் ஹிந்துக்களின் அசையா சொத்துகளை வேறு சமூகத்தினர் வாங்க முடியாது. அத்துடன் இப்படி சொத்துகளை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துக் கொள்வதன் மூலம்தான் வேறு சமூகத்தினர் சொத்து வாங்குவதை தடுக்க முடியும் என்று கூறியிருக்கிறார். மேலும் அந்த வீட்டில் வசித்து வரும் முஸ்லிம்கள் வீட்டைக் காலி செய்ய 48 மணி நேர கெடுவையும் டொகாடியா விதித்துள்ளார்.

"ராஜிவ் காந்தி கொலையாளிகளே தூக்கிலிடப்படாத நிலையில் எந்த ஒரு வழக்கு வந்தாலும் சந்திப்போம்" என்று விஷம பேச்சையும் கொட்டியிருக்கிறார்

ஏப்ரல் 20, 2014

சிறுபான்மையினருக்கு எதிராக பாஜக தலைவர்களின் பேச்சு! பெரும் அச்சத்தில் சிறுபான்மை மக்கள்

புதுடெல்லி: பாஜக  ஆட்சிக்கு வந்ததும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு ராமர் கோயில் கட்டுவது பற்றி முடிவெடுப்போம் என்று அக்கட்சி செய்தி தொடர்பாளர் முக்தர் அப்பாஸ் நக்வி பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவோம் என தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது,பொது சிவில் சட்டம், காஷ்மீர் மக்களின் சலுகைகளை பறிப்பது போன்ற திட்டங்கள் சிறுபான்மையினர் ஓட்டுகளை பாதிக்கும் என்பதால், அந்த விஷயத்தை பிரசாரத்தில் சொல்லாமல் அக்கட்சி தலைவர்கள் அடக்கி வாசித்தனர். அதே போல், சிறுபான்மையினருக்கு எதிராக பேசக் கூடாது என்றிருந்தனர். ஆனாலும், அக்கட்சியினர் யாராவது ஏதாவது பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர்.

பாஜ தேர்தல் ஒருங்கிணைப்பாளர் அமித்ஷா, உ.பி.யில் கலவரம் பாதித்த பகுதியில் பேசும் போது, பழிவாங்க விரும்பினால் பாஜவுக்கு ஓட்டு போடுங்கள் என்று பேசி சர்ச்சையில் சிக்கினார். அவரது பிரசாரத்திற்கு தடைவிதிக்கப்பட்டு தற்போது தடை நீக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, மோடியை விமர்சிப்பவர்களுக்கு இந்தியாவில் இடம் கிடையாது, பாகிஸ்தானுக்கு ஓடுங்கள் என்று கிரிராஜ் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

அந்த சர்ச்சை அடங்குவதற்குள் பாஜ செய்தி தொடர்பாளர் முக்தர் அப்பாஸ் நக்வி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், பாஜ ஆட்சிக்கு வந்ததும், அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு ராமர் கோயில் கட்டுவது

ஒற்றுமையே இந்தியாவின் வலிமை! மோடி பிரித்தாள நினைக்கிறார்:ராகுல்காந்தி!

ஆங்கிலேயரைப் போன்று இந்தியாவை மோடி பிரித்தாள முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அஸ்ஸாம் மாநிலம், நகானில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

ஆங்கிலேயர் ஆட்சியைப் போன்று பாஜகவும், மோடியும் பிரித்தாளும் கொள்கையில் நம்பிக்கை கொண்டுள்ளனர். மகாராஷ்டிரத்துக்கு செல்லும் மோடி, அங்கு மக்களைத் தூண்டி விடும் வகையில் பேசி வருகிறார். கர்நாடகத்தில் அக்கட்சியினரால் பெண்கள் தாக்கப்படுகின்றனர். பா.ஜ.க.வினர் விமர்சனத்தை மட்டுமே முன்வைக்கின்றனர். ஆட்சியில் நிகழ்ந்த நல்ல விஷயங்களில் ஒன்றைக் கூட பேச மறுக்கிறார்கள். ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் உள்ளிட்டோரின் ஒற்றுமையே இந்தியாவின் வலிமை. குஜராத் மக்கள் தங்கள் கடின உழைப்பால் கைத்தறி ஆலைகள் மற்றும் பிற தொழிற்சாலைகளை நிறுவியுள்ளனர். இது மோடியின் அரசு வருவதற்கு முன்னரே ஏற்பட்ட வளர்ச்சி.

ஆனால், இந்த வளர்ச்சி அனைத்தும் தம்மால்எடுக்கப்பட்ட நடவடிக்கையால் வந்தது என அவர் உரிமை கொண்டாடுகிறார். இந்தியாவில் மாற்றம் கொண்டு வரப்போவதாக மோடி பேசி வருகிறார். ஒரு தனி மனிதனால் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. கோடிக்கணக்கான மக்களின் ஒன்றுபட்ட நடவடிக்கையால் தான் அதனை செய்ய முடியும். பெண்களுக்கான சேவை குறித்து பாஜக வெறும் வாய்ஜாலம் மட்டுமே காட்டுகிறது. பெண்களின் வலிமை பற்றி

ஏப்ரல் 19, 2014

தென்கொரிய கப்பல் விபத்து: 28 உடல்கள் மீட்பு!

சியோல், ஏப் 18 - தென்கொரிய கப்பல் விபத்தில் உயிரிழந்த 28 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 268 பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தென்கொரியாவின் தென்மேற்கு கடல் பகுதியில் பயணிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்தது. கடலுக்குள் மூழ்கிய 300-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் உள்ளிட்ட 475 பயணிகளை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். இந்த நிலையில் 28 பேருடைய உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 268 பயணிகள் மாயமாகியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சியோல் அருகே உள்ள இன்சியோன் துறைமுகத்திலிருந்து சீவொல் கப்பல் செவ்வாய்க்கிழமை புறப்பட்டது.480 அடி நீளமும், 6,586 டன் எடையும் கொண்ட இந்தப் கப்பல் 1994-ம் ஆண்டு ஜப்பானில் தயாரிக்கப்பட்டது. இதில் அதிகபட்சமாக 900 பேர் பயணிக்கலாம். எனினும், சம்பவ தினத்தன்று இந்தப் கப்பலில் 477 பயணிகள் இருந்தனர். தவிர 150 வாகனங்களும் இருந்தன.

தென்மேற்குக் கடற்கரையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் ஜெஜூ தீவை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, திடீரென்று கப்பல் ஒரு பக்கமாகச் சாய்ந்தது. அடுத்த சில நிமிடங்களில் தலைகீழாகக் கவிழ்ந்தது. உதவி கோரி இந்தப் கப்பலில் இருந்து சிக்னல் அனுப்பப்பட்டது. உடனே, 100 கடலோர காவலர்களும், கடற்படை கப்பல்களும், மீன்பிடி கப்பல்களும், 18 ஹெலிகாப்டர்களும் விரைந்து வந்து 15 பள்ளி மாணவர்கள் உள்பட 179 பேரை உயிருடன் மீட்டனர். இந்த விபத்தில் இதுவரை 28 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 268 பேரைக் காணவில்லை என அதிகாரப்பூர்வமாக

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஓட்டு போட பயன்படுத்த வேண்டிய ஆவணங்கள்!

கடலூர்,ஏப்.17- வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஓட்டு போட என்னென்ன ஆவணங்களை பயன்படுத்தலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் கிர்லோஷ்குமார் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வாக்காளர் அடையாள அட்டை பாராளுமன்ற தேர்தல் வருகிற 24-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ள அனைவரும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, அனுமதி அளிக்கப்பட்ட வாக்காளர் புகைப்பட சீட்டு, மாற்று புகைப்பட அடையாள ஆவணங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குப்பதிவின் போது, வாக்காளர்கள் தங்களுடைய அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான ஆவணமாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை பயன்படுத்த வேண்டும். அதனை அளிக்க இயலாத வாக்காளர்களும், புகைப்படம் பொருந்தாததால் வாக்காளரின் அடையாளத்தை மெய்ப்பிக்க இயலாதவர்களும், தங்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக 11 வகை யான ஆவணங்களை பயன்படுத்தலாம்.

ஆதார் அட்டை அதாவது கடவுச்சீட்டு,

ஓட்டுனர் உரிமம்,

மத்திய மற்றும் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால், வரையறுக்கப்பட்டுள்ள பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்,

வங்கி மற்றும் அஞ்சலக கணக்கு புத்தகங்கள்,

நிரந்தர கணக்கு எண் அட்டை (பேன் கார்டு),

ஆதார் அட்டை,

தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட

ஏப்ரல் 17, 2014

தமிழக ஹஜ் பயணிகளை தேர்வு செய்ய 21ம் தேதி சென்னையில் குலுக்கல்!

சென்னை: புனித ஹஜ் பயணம் சென்று வர தமிழகத்தில் விண்ணப்பித்தவர்களை தேர்வு செய்ய வரும் 21ம் தேதி சென்னையில் குலுக்கல் நடைபெறுகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஹஜ் 2014-ற்காக சுமார் 13,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் புனிதப் பயணிகளிடமிருந்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவால் பெறப்பட்டுள்ளன.

எனவே, புனிதப் பயணிகளை குலுக்கல் முறை மூலம் தேர்வு செய்யுமாறு மும்பை, இந்திய ஹஜ் குழு, மாநில ஹஜ் குழுவை கேட்டுக் கொண்டுள்ளது. மும்பை, இந்திய ஹஜ் குழு கேட்டுக் கொண்டபடி ஹஜ் 2014-ற்கான புனிதப் பயணிகளைத் தேர்வு செய்ய குலுக்கலை நடத்த தமிழ் நாடு மாநில ஹஜ் குழு முடிவு செய்துள்ளது. இந்தக் குலுக்கல் நிகழ்ச்சி 21.4.2014 அன்று காலை 11.30 மணியளவில் சென்னை, ராயப்பேட்டை, புதுக்கல்லூரியிலுள்ள, ஆனைக்கார் அப்துல் சுக்கூர் அரங்கத்தில் நடைபெறும்.

ஹஜ் 2014-ற்காக, தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலமாக விண்ணப்பித்துள்ள புனிதப் பயணிகள் இக்குலுக்கலில் கலந்து கொண்டு

ஏப்ரல் 14, 2014

14 ஆண்டுகளுக்கு பிறகு 3 முஸ்லிம் இளைஞர்கள் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்து விடுதலை!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 3 முஸ்லிம் இளைஞர்களை நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்து விடுதலைச் செய்துள்ளது.

தீவிரவாத குற்றம் சுமத்தி சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் நிரபராதிகள் என்பது தெளிவானதின் அடிப்படையில் லக்னோவில் உள்ளூர் நீதிமன்றம் இவர்களை விடுவித்துள்ளது.இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்தது. டாக்டர் ஸய்யித் அப்துல் முபீன், கலீம் அக்தர்,குல்சார் அஹ்மத் வானி ஆகிய 3 முஸ்லிம் இளைஞர்கள் நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிமி இயக்க உறுப்பினர் ஷிப்லி பேகை சாட்சியாக மாற்றி கட்டாய வாக்குமூலம் பெற்ற கைஸர்பாக் போலீஸ் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ், இவர்கள் மீது வழக்குப் பதிவுச் செய்தார். அலிகர் பல்கலைக் கழகத்தில் மருத்துவ மாணவராக பயின்றுக்கொண்டிருக்கும்போதுதான் ஸய்யித் முபீனை உ.பி போலீஸ் கைதுச் செய்தது.முதலில் ஆக்ரா குண்டுவெடிப்பு வழக்கில் முபீன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.பின்னர் அதில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

பாராபங்கி,கான்பூர், லக்னோ குண்டுவெடிப்புகளின் குற்றமும் முபீன் மீது சுமத்தப்பட்டது.கலீம் அக்தர்

ஏப்ரல் 13, 2014

வருகிற 15–ந்தேதி முதல் 45 நாட்கள் கடலில் மீன்பிடிக்கத்தடை-கலெக்டர் அறிவிப்பு

வருகிற 15–ந்தேதி முதல் 45 நாட்கள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கிர்லோஷ்குமார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன், தமிழக கிழக்கு கடற்கரை நெடுகிலும் உள்ள பகுதி முழுவதிலும்(திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15–ந்தேதி முதல் மே மாதம் 29–ந்தேதி முடிய 45 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவலைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதை தடை செய்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 13 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இத்தடை ஆணையின் படி இந்த ஆண்டும் விசைப்படகுகள் மற்றும் இழுவலைப்படகுகள் மூலம் மேற்காணும் தடை செய்யப்பட்ட 45 நாட்களுக்கும் கடலில் சென்று மீன்பிடிக்க வேண்டாம் என கடலூர் மாவட்ட மீனவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கடலில் மீன்கள் இனவிருத்திக்கு ஏற்ற காலமான மேற்கண்ட 45 நாட்கள், மீனவர்கள் கடலில் மீன்பிடிப்பதை நிறுத்தி

பாஜக மீது தாக்கு: ஜெ.வின் அதிரடி பல்டிப் பாய்ச்சலின் பின்னணியில் தவ்ஹீத் ஜமாத்?

சென்னை: லோக்சபா தேர்தலில் புதிய திருப்பமாக பாரதிய ஜனதாவை மிகக் கடுமையாக தாக்கி பேசியிருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. தமிழகத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு டெபாசிட் கூட கிடைக்கக் கூடாது என்று திடீரென ஜெயலலிதா பேசியிருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதாவுடன்தான் அதிமுக கூட்டணி அமைக்கும் என்று தொடக்கத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இடதுசாரிகளுடன் அதிமுக நெருக்கம் காட்டியது. ராஜ்யசபா தேர்தல்களில் இடதுசாரிகளை அதிமுக ஆதரித்தது. அதன் பின்னர் பாஜக தனியே ஒரு கூட்டணி அமைக்க பெரும் போராட்டம் நடத்தியது. இடதுசாரிகளோ அதிமுக அணியில் இடம்பெற்றனர். ஆனால் திடீரென இடதுசாரிகளை விரட்டியடித்தது அதிமுக. பாஜக தலைமையில் மெகா கூட்டணி அமைந்தது.

இடதுசாரிகளை அதிமுக விரட்டிவிட்டதே, தேர்தலுக்குப் பின்னர் பாஜக அரசுக்கு ஆதரவளிக்கத்தான் என்று கூறப்பட்டது.இதை உறுதிப்படுத்தும் வகையில் லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது ஒருமுறை கூட பாரதிய ஜனதாவை ஜெயலலிதா விமர்சிக்கவே இல்லை.இதை சுட்டிக்காட்டி திமுக, இடதுசாரிகள் பிரசாரம் மேற்கொண்டனர். காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கூட இதை சுட்டிக்காட்டி பாஜகவின் பி டீம்தான் அதிமுக என்று விமர்சித்தார்.

இதில் உச்சகட்டமாக அதிமுகவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக திடீரென தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நேற்று அறிவித்தது. தவ்ஹீத் ஜமாத்தும் பாஜகவை அதிமுக விமர்சிக்காததால் இம்முடிவு எடுத்திருப்பதாக அந்த அமைப்பு கூறியிருந்தது.தனால் ஜெயலலிதா அதிர்ச்சி

ஏப்ரல் 12, 2014

சிதம்பரம் நாடாளும் மன்ற தொகுதி வேட்பாளர்கள்!


சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் இறுதி செய்யப்பட்ட 15 வேட்பாளர்கள் பட்டியல்...

ராஜேந்திரன் – யானை (பகுஜன் சமாஜ் கட்சி)

சந்திரகாசி – இரட்டைஇலை (அ.தி.மு.க.,)

வள்ளல்பெருமான் – கை (இந்திய தேசிய காங்.,)

திருமாவளவன் – மோதிரம் (விடுதலைசிறுத்தைகள் கட்சி)

ஏழுமலை – விசில் (அகிலபாரதஇந்து மகா சபா)

சுதா மணிரத்தினம் – மாம்பழம் (பா.ம.க.,)


சுயேச்சைகள் : . ஆனந்தன் (எ)கவிஞர்ஆனந்த மாலை – தேங்காய்
சண்முகம் – கட்டில்
சந்திரகாசன் – பச்சை மிளகாய் 
செந்தமிழ்ச்செல்வி

ஏப்ரல் 04, 2014

எல் நினோ' பருவநிலை மாற்றத்தால் கடும் விளைவுகள் எற்படும்!

பசிபிக் பெருங்கடலின் காற்றழுத்தம் மற்றும் காற்றின் போக்கைக் கணக்கில் கொண்டு 'எல் நினோ' உருவாகும் வாய்ப்பு காணப்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
Pacific El Nino
தெற்காசிய நாடுகள் ஒரு மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள இருப்பதாக எச்சரிக்கை எழுப்பப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகளும், வானிலை ஆய்வாளர்களும், பசிபிக் பெருங்கடலின் காற்றழுத்தம் மற்றும் காற்றின் போக்கைக் கணக்கில் கொண்டு 'எல் நினோ' உருவாகும் வாய்ப்பு காணப்படுவதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

ஆழ்கடலில் காற்றழுத்தம் ஏற்படும்போது பசிபிக் பெருங்கடலின் சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும். அதன் விளைவுகள் தெற்கு ஆசிய நாடுகளின் விவசாயத்திற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது. அது அடை மழையால் ஏற்படும் வெள்ளப் பெருக்கமாகவும் புயலாகவும் இருக்கலாம்;அல்லது மழையின்மையால் ஏற்படும் வறட்சியாகவும் மாறலாம்.
 
இதன் விளைவாக வடஇந்தியாவில் கடுமையான மழை பொழிய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் கடுமையான வறட்சி ஏற்படலாம். இதனால் மக்களின் வாழ்வாரத்தைக் கடுமையாக பாதிக்கக்கூடும்.
 
கடந்த 2002 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் இதே போனறு 'எல் நினோ' எச்சரிக்கைகள் தரப்பட்டது. அதன் கடுமையான விளைவுகளை இந்தியா எதிர்கொள்ள வேண்டி வந்தது. இதேபோல 2009 ஆம் ஆண்டும்

ஏப்ரல் 03, 2014

சிதம்பரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரகாசி மனு தாக்கல்!


சிதம்பரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்

சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதிக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரகாசி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் கலந்து கொள்வதற்காக அரியலூர் பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை முன்பு நூற்றுக்கணக்கான அ.தி.மு.க.வினர் கையில் அ.தி.மு.க. கொடியுடன் குவிந்திருந்தனர்.
சிதம்பரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் செங்கோட்டையன் தலைமையில் வேட்பாளர் சந்திரகாசி மற்றும் கே.கே.கலைமணி, எம்.எல்.ஏ.க்கள் அரியலூர் துரை.மணிவேல், காட்டு மன்னார்கோவில் முருகுமாறன் உள்பட நிர்வாகிகள் அண்ணா சிலை, எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் அங்கிருந்து ஜெயங்கொண்டம் ரோடு வழியாக வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக வந்தனர். அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சரவணவேல்ராஜிடம் சந்திரகாசி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அ.தி.மு.க. மாற்று வேட்பாளராக சந்திரகாசியின்