Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மக்கள் மன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மக்கள் மன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஜூன் 05, 2015

உலக சுற்றுச்சூழல் தினம்: உலகில் மிகவும் மாசுபட்ட 20 நகரங்களில் இந்தியாவின் 13 நகரங்கள்

உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED) ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கிய சூழல் தொடர்பான நிகழ்வு ஆகும்.

இது ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையால் 1972 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த சில பத்தாண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டுவரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன.

உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்கள் 20 பட்டியலில் இந்தியாவின் தலைநகர் புதுடெல்லி உள்பட 13 நகரங்கள் இடம்பெற்று உள்ளன. இந்த 13 நகரங்களில் குஜராத்தின் வபி,ஒடிசாவின் சுகிண்டா ஆகியவை உலகின் மிகவும் மோசாமான் மாசுபட்ட நகரங்களின் 10 நகரங்கள் பட்டியலில் இடம்பெற்று உள்ளது. மிகவும் மாசு பட்ட நகரங்கள் பட்டியலில்

ஜூன் 19, 2014

குஜராத் பள்ளிக்கூடங்களில் ஆர்.எஸ்.எஸ்ஸின் நூல்கள்!

இந்தியா பன்முகத் தன்மை கொண்ட ஒரு நாடு. பல்வேறு மத நம்பிக்கைகளைப் பின்பற்றுகிற, பல்வேறு மொழிகளைப் பேசுகிற பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் காலம் காலமாக இந்தியாவில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை என்பது இந்திய விடுதலைப் போரின்போது மகத்தான விழுமியங்களாக மேலெழுந்தது. சுதந்திர இந்தியா மதச்சார்பின்மை எனும் மகத்தான அடித்தளத்தின் மீது கட்டப்பட்டது. மதச்சார்பின்மை என்பது மேல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கருத்தாக்கம் அல்ல. நமது நாட்டில் மகத்தான மரபுகளில் ஒன்று அது.ஆனால் இன்று அவை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டு வருகின்றது அதற்கு ஒரு உதாரணமாக காந்தி பிறந்த குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ் தயாரித்த நூல்கள் வதோதராவில் உள்ள பள்ளிக்கூடங்களில் பாடப்புத்தகங்களாக சேர்க்கப்பட்டுள்ளன.

குஜராத் மாநிலம் வதோதராவில் மாநகராட்சி நடத்தும் 105 ஆரம்ப பள்ளிக்கூடங்களில் ஆர்.எஸ்.எஸ்ஸின் கல்வி பிரிவான வித்யாபாரதி அகில பாரதீய சிக்‌ஷா சன்ஸ்தான் தயாரித்துள்ள நூல்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. 1 ஆம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் இவ்வாண்டு முதல் ஆர்.எஸ்.எஸ் தயாரித்த புத்தகங்கள் படித்துக் கொடுக்கப்படும். ஜீவன் விகாஸ் போதி எனப்பெயரிடப்பட்டுள்ள புத்தகங்களில்

ஜூன் 12, 2014

மீன்கள் சில உண்மைகள்!

மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

மீன்களிலே பொதுவாக நான்கு பெரும் பிரிவுகள் உள்ளன:

வலுவான எலும்புகள் கொண்ட மீன்வகைகள் (சுமார் 20,000 வகைகள்),

குருத்தெலும்பு கொண்ட எளிய வகை மீன்கள்.(சுமார் 50 வகைகள்) ,

குருத்தெலும்பு கொண்ட சுறாமீன்கள், மற்றும் திருக்கை மீன்கள் முதலியன (சுமார் 600 வகைகள்)

செதிள் இல்லா குருத்தெலும்பு உள்ள எளிய மீன் வகைகள் (விலாங்கு, ஆரல் முதலானவை; சுமார் 50 வகைகள்)

முதுகெலும்புள்ள மற்ற உயிரினங்களின் எண்ணிக்கையை விட மீன்களின் எண்ணிக்கை அதிகம். மீன்கள் குளிர் ரத்த பிராணிகள். இவற்றின் உடல் சூடு, அவை வாழும் நீரின் வெப்பநிலையைப் பொறுத்து மாறும். ஏறக்குறைய எல்லா மீன்களும் துடுப்புகளைப் பெற்றுள்ளன. இவை நீந்துவதற்குப் பயன்படுகின்றன. அதே போல் செதில்கள் மீன்களின் உடல் பாதுகாப்புக்கு உதவுகின்றன. மீன்களில் சுமார் 22 ஆயிரம் வகைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகை மீனும் நிறத்திலும் வடிவத்திலும் பருமனிலும் வேறுபட்டு உள்ளது.

பொதுவாக மீன்களுக்கு நுரையீரல் கிடையாது. மீன்கள் வாய் மூலம் நீரைக் குடித்து கன்னத்திலுள்ள செவுள்கள் மூலம் வெளியேற்றுகின்றன. அப்போது நீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகின்றன. மீன்கள் கண்ணைத் திறந்து கொண்டே தூங்குகின்றன. ஏனென்றால் இவற்றுக்கு இமைகள் கிடையாது. ஆழ்கடலில் வாழும் மீன்கள் தூங்குவதில்லை. மீன்களுக்கு புறச்செவிகள் கிடையாது. அதேசமயம் நீரில் உண்டாகும் அதிர்வுகளைத் துல்லியமாக உணர்ந்து கொள்கின்றன. காட், சுறா போன்ற மீன்களில் இருந்து எண்ணெய் எடுக்கிறார்கள். உணவாகவும், எலும்பு மற்றும் செதில்கள் உரமாகவும் பயன்படுத்தப்படுகின்றன. மிகச்சிறிய மீன் கோபி. இது 13 மி.மீட்டர் அளவே இருக்கும். மிகப்பெரிய மீன் திமிங்கலச் சுறா. இது 18 மீட்டர் நீளம்

ஜூன் 06, 2014

பாடாய்படுத்தும் சர்க்கரை நோய் !

இன்றைய வாழ்க்கை முறையில் நாம் பார்க்கும் முக்கிய நோய்களில் ஒன்றான சர்க்கரை நோய் இன்றைய தலைமுறையினரை பாடாய்படுத்தி வருகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை குறிப்பிட்ட அளவு இல்லாமல், கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும்.ஆனால் இதனை உணவு முறை கொண்டும் கட்டுப்படுத்த முடியும். சரியான உணவு வகைகளை உட்கொண்டால், சர்க்கரை நோய் தீவிரத்தின் அளவை கட்டுப்படுத்தலாம். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க, எதை சாப்பிடலாம், எதை சாப்பிட கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

சர்க்கரை நோய் என்பது எது?
நமது இரைப்பையும் குடலும் நாம் உண்ணுகின்ற உணவிலிருந்து க்ளுகோஸ் எனும் சர்க்கரையை எடுத்து இரத்தத்தில் செலுத்துகிறது.அதே சமயம் கணையத்திலிருந்து இன்சுலின் உற்பத்தியாகி இரத்தத்தில் கலக்கிறது. க்ளுகோஸ் எனும் சர்க்கரை தான் நம் உடலுக்கு கிடைக்கும் சக்தி. இது ரத்தத்தின் மூலம் உடலில் உள்ள செல்களை சென்றடைய வேண்டும். ஆனால் செல்கள் தானாக சர்க்கரையை உள்ளே அனுமதிக்காது. அதற்குத் தான் இன்சுலின் உபயோகப்படுகிறது.

இரைப்பைக்கும் முன் சிறுகுடலுக்கும் இடையில் உள்ள கணையம் (Pancreas) என்ற உறுப்புதான் இன்சுலின் என்ற ஹார்மோனைச் சுரக்கிறது. ரத்தத்தில் சர்க்கரையின் (குளுகோஸ்) அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது இந்த இன்சுலின்தான். ஒருவேளை, இன்சுலின் சுரப்பது குறைந்துபோனாலோ அல்லது நின்றுபோனாலோ சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதைத்தான் சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு

ஏப்ரல் 04, 2014

எல் நினோ' பருவநிலை மாற்றத்தால் கடும் விளைவுகள் எற்படும்!

பசிபிக் பெருங்கடலின் காற்றழுத்தம் மற்றும் காற்றின் போக்கைக் கணக்கில் கொண்டு 'எல் நினோ' உருவாகும் வாய்ப்பு காணப்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
Pacific El Nino
தெற்காசிய நாடுகள் ஒரு மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள இருப்பதாக எச்சரிக்கை எழுப்பப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகளும், வானிலை ஆய்வாளர்களும், பசிபிக் பெருங்கடலின் காற்றழுத்தம் மற்றும் காற்றின் போக்கைக் கணக்கில் கொண்டு 'எல் நினோ' உருவாகும் வாய்ப்பு காணப்படுவதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

ஆழ்கடலில் காற்றழுத்தம் ஏற்படும்போது பசிபிக் பெருங்கடலின் சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும். அதன் விளைவுகள் தெற்கு ஆசிய நாடுகளின் விவசாயத்திற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது. அது அடை மழையால் ஏற்படும் வெள்ளப் பெருக்கமாகவும் புயலாகவும் இருக்கலாம்;அல்லது மழையின்மையால் ஏற்படும் வறட்சியாகவும் மாறலாம்.
 
இதன் விளைவாக வடஇந்தியாவில் கடுமையான மழை பொழிய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் கடுமையான வறட்சி ஏற்படலாம். இதனால் மக்களின் வாழ்வாரத்தைக் கடுமையாக பாதிக்கக்கூடும்.
 
கடந்த 2002 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் இதே போனறு 'எல் நினோ' எச்சரிக்கைகள் தரப்பட்டது. அதன் கடுமையான விளைவுகளை இந்தியா எதிர்கொள்ள வேண்டி வந்தது. இதேபோல 2009 ஆம் ஆண்டும்

டிசம்பர் 16, 2013

கையால் எழுதப்பட்ட பழைய பாஸ்போர்ட் 2015 ஆண்டிற்கு பிறகு செல்லாது!

இது தொடர்பாக கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சசிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சர்வதேச விமான போக்குவரத்து ஆணைய உத்தரவின்படி உலகம் முழுவதும் வினியோகிக்கப்பட்ட கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளுக்கு 24.11.2015-ந் தேதியோடு கெடுவிதிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் 25-ந் தேதி முதல் கம்ப்யூட்டரால் பதிவு(நான் மெஷின் ரீடபிள் பாஸ்போர்ட்) செய்ய இயலாத அதாவது கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளுக்கு உலக நாடுகள் விசாக்கள் வழங்க மறுத்து விடும். புதிய கையால் எழுதப்பட்டு போட்டோ ஒட்டிய பாஸ்போர்ட்டுகள் 20 ஆண்டுகளுக்கு முன்பு வினியோகிக்கப்பட்டன. அந்த பாஸ்போர்ட்டுகளை கம்ப்யூட்டரில் பதிவு செய்ய முடியாத பாஸ்போர்ட்டுகளாக கருதப்படுகின்றன.இந்திய அரசு கடந்த 2001-ம் ஆண்டு முதல் கம்ப்யூட்டர் பதிவு செய்யப்பட்ட பாஸ்போர்ட்டுகள் வினியோகித்து

டிசம்பர் 14, 2013

அறிஞர்கள் பார்வையில் நபிகள் நாயகம்!

முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி முஸ்லிமல்லாத பிற மதங்களைச் சேர்ந்த அல்லது மதக்கோட்பாடுகளில் ஈடுபாடு காட்டாத அறிஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வெளியிட்ட சில கருத்துக்கள் இவை:

முஹம்மது நபியின் வெற்றிக்கு முதல் காரணம், அவர்கள் கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி அந்தக் காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமாகும். - ஜவஹர்லால் நேரு

துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள்இ ‘முஹம்மது ஒரு சரித்திர நாயகர்’ என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக்கொள்கிறார்களே அப்படியின்றி அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம் அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள். - எஸ். எச். லீடர் -

இறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, ஒருவனே தேவன் என்பதை பிரச்சாரம் செய்து, அசைக்கமுடியாத இறைநம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமை கொண்டாடிய முஹம்மது நபி அவர்களின் நபித்துவத்தை எவர் மறுக்க முடியும்? - வாஷிங்டன் இர்விங் -

நபிகள் நாயகம் தோற்றுவித்த தெய்வத்தன்மை பொருந்திய புனிதமான அரசாங்கம் முற்றமுற்ற ஜனநாயகக் கொள்கையை மேற்கொண்டதாகும். மனித குலம் முழுவதும் பின்பற்றத் தக்க உயரிய கோட்பாடுகளை உடையது நபிகள் நாயகம் கொண்டுவந்த இஸ்லாம். அனைத்தையும் உள்ளடக்கியது இஸ்லாம். அகிலமே ஏற்றுக்கொள்ளக் கூடியது. அண்ணல் நபிகள் எளிய வாழ்க்கை அவருடைய மனிதத்தன்மையை தெளிவாக்கியுள்ளது. - டாக்டர் ஜான்சன் -

முஹம்மது நபியின் நற்பண்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். இந்த நூற்றான்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விடும் என்று எதிர்பார்க்கிறேன். - பெர்னாட்ஷா -

திருக்குர்ஆனுக்கும் தூதர் முஹம்மது அவர்களுக்கும் என் விசுவாசத்தை வழங்குகிறேன். குர்ஆனின் கொள்கைக்கு இணங்க ஒரே விதமான ஆட்சியை உலகெங்கும் நிறுவக்கூடிய காலம் வெகுதூரத்தில் இல்லை. - நெப்போலியன்

இஸ்லாத்தின் நிறுவனருடையதைக் காட்டிலும் அதிக ஆச்சரியம் தரக்கூடிய வாழ்க்கை முறை வரலாற்றிலே வேறெங்கும் இல்லை. அவரைப்போல் உலகத்தின் தலைவிதியில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திய மனிதர்களைக் காணுதலும்

டிசம்பர் 12, 2013

இந்தியா- பாகிஸ்தான் அணு ஆயுதப் போர் மூண்டால் 200 கோடி பேர் கொல்லப்படுவர்!

இந்தியா, பாகிஸ்தான் இடையே அணுஆயுதப் போர் மூண்டால் சுமார் 200 கோடி பேர் கொல்லப்படுவார்கள் என்று சர்வதேச அமைப்பு எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக சர்வதேச மருத்துவர்களின் அணுஆயுத போர் தடுப்பு கூட்டமைப்பின் (ஐ.பி.பி.என்.டபிள்யூ.) இணைத் தலைவர் ரா ஹெல்பன்ட், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

1947-ம் ஆண்டு முதல் இந்தியா வும் பாகிஸ்தானும் 3 முறை கடும் போர்களில் ஈடுபட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே அணு ஆயுத போர் மூண்டால் பேரிழப்புகள் ஏற்படும். உலக மக்கள் தொகையில் 3-ல் ஒரு பங்கு மக்கள்டுகொல்லப்படு வார்கள். அதாவது சுமார் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் கொல்லப்படும் அபாயம் உள்ளது. தெற்காசியாவில் அணுகுண்டுகள் வெடித்தால் அமெரிக்காவின் வேளாண் உற்பத்தி 10 சதவீதம் குறைந்துவிடும். அருகில் உள்ள சீனாவில் கோதுமை உற்பத்தி 50 சதவீதம் பாதிக்கப்படும். இதனால் சீனாவில் உணவுப் பஞ்சம் ஏற்படும். அணுகுண்டு கதிர்வீச்சால் சுமார் 100 கோடி பேர் கொல்லப்பட்டால், அதன்பின் அந்த சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்படும் உணவுப் பஞ்சத்தால் மேலும் 100 கோடி

மஹராஷ்ட்ரா சட்டப்பேரவையில் மூட நம்பிக்கைக்கு எதிரான மசோதா தாக்கல்!

மஹராஷ்டிர சட்டப் பேரவையில் மூடநம்பிக்கை எதிர்ப்பு மசோதாபுதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.சமூக நீதித்துறை அமைச்சர் சிவாஜிராவ் மொகே இந்த மசோதாவை தாக்கல்செய்தார். பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், பாதுகாப்பானசமூகச் சூழலை உருவாக்குவதற்கும், அப்பாவி பொதுமக்களை மூடநம்பிக்கைகளில் இருந்து பாதுகாக்கவும் இந்த மசோதா வழி வகுக்கும் என்று சட்டப்பேரவையில் சிவாஜிராவ் கூறினார்.

டிசம்பர் 11, 2013

ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

ஓரினச் சேர்க்கை என்பது அதிகபட்சம் ஆயுள் தண்டனை வழங்கக் கூடிய வகையில் குற்றம்தான் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாயா அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது.ஓரினச் சேர்க்கை சட்ட விரோதமல்ல என, கடந்த 2009 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அந்தத் தீர்ப்பில், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377-ன்படி ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர், பரஸ்பரம் விருப்பத்துடன் தனிமையில் உறவு கொள்வது குற்றமாகாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓரினச் சேர்க்கைக்கு எதிரான தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், அகில இந்திய இஸ்லாமிய தனிச் சட்ட வாரியம், உத்கல் கிறிஸ்தவ கவுன்சில், அபோஸ்தல் தேவாலய கூட்டமைப்பு போன்ற மத அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஓரினச் சேர்க்கை குற்றம்தான் என உச்ச நீதிமன்றத்தால் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

'ஓரினச் சேர்க்கை குற்றம். இந்தக் குற்றத்தில் ஈடுபடுவோர்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்க முடியும்' என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.
மேலும், சட்டப் பிரிவு 377-ஐ நீக்குவது குறித்து அரசே முடிவு செய்ய

டிசம்பர் 05, 2013

”டிசம்பர் 6” பாபர் மஸ்ஜித் உண்மை வரலாறு! (Tamil & English)

1949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸ்லிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 



பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமனர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று ஒரு கும்பல் கலாட்டாவில் இறங்கியது.
வன்முறைக் கும்பல் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலை களை வைத்ததாக பைஸாபாத் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசுகள் தொழுகைக்குத் தடை விதித்ததிலிருந்து பாபர் மசூதி பிரச்சினை நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக நீடித்து வருகிறது.
‘இராமர் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதே பாபர் மஸ்ஜித்’ என்ற புளுகு மூட்டையை சூதுவாது அறியாத இந்துக்கள் மனதில் அவிழ்த்துவிட்டு அவர்களில் பலர் அந்தப் பொய்யை நம்புகின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.
‘இராமருக்காகக் கட்டப்பட்ட கோவில் ஒன்று அயோத்தியில் இருந்து அதை இடித்து விட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது’ என்ற சங்பரிவாரத்தின் வாதம் உண்மையாக இருந்தால் பாபர் மசூதிக்காக எந்த முஸ்லிமும் போராடமாட்டார். பிறருக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிர மிப்புச் செய்து அதில் பள்ளிவாசல் கட்டுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
பாபர் மசூதி பற்றி சங்பரிவாரத்தினரின் வாதங்கள் முற்றிலும் பொய்யாக இருப்பதால் தான் பாபர் மசூதிக்காக முஸலிம்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இராமர் என்று ஒருவர் வாழ்ந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சட்டர்ஜி, ஏ.கே. மஜும்தார், நேரு உள்ளிட்ட பல தலைவர்கள் கூறியுள்ளதன் அடிப்படையில் இராமர் கற்பனைப் பாத்திரம் என்று கூறி பிரச்சினையை நாம் திசை திருப்ப மாட்டோம்.
ஏனெனில் அந்த இடத்தில் இராமர் கோவில் இருந்ததா? அது பாபரால் இடிக் கப்பட்டதா? அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டப்பட்டதா என்பதுதான் பிரச்சினையே தவிர இராமர் கற்பனைப் பாத்திரமா வரலாற்றுப் பாத்திரமா என்பது அல்ல.
இராமர் கற்பனைப் பாத்திரமாகவே இருந்தாலும் அவருக்காகக்

நவம்பர் 04, 2013

புகார்களை அனுப்ப தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணயதளம்!

தமிழக முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு இணையதளம் மூலம் நம்முடைய கோரிக்கைகள் அல்லது புகார் மனுக்களை அனுப்பலாம்.புகார்களை அனுப்பி விட்டு அதனுடைய நிலவரம் கூட அறியாமல் இருந்த நிலைமாறி இன்று உங்களுடைய கோரிக்கைகளின் நிலை குறித்தும் நீங்கள் அறிந்துகொள்ளும் வகையில் இந்த இணைய தளம் அமைந்துள்ளது.

முதல்வரின் தனி பிரிவிற்கு புகார்களை அனுப்ப உங்களுக்கென ஒரு மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைப்பேசி இருந்தால் போதுமானது. முதல்வரின் தனிப்பிரிவு தளமான http://cmcell.tn.gov.in/ என்ற

நவம்பர் 03, 2013

குளிர்பானங்கள் நீரழிவு நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கிறது! ஆய்வில் தகவல்!

மனித வாழ்க்கையில் முக்கிய அம்சமாக மாறிவிட்ட குளிர்பானங்கள் (Soft Drinks) நீரழிவு நோய்க்கான வாய்ப்பை அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

உடலுக்கு அதிகமான அளவில் சர்க்கரை கிடைப்பது குளிர்பானங்கள் மூலமாகும். இக்காரியத்தில் ஐஸ்க்ரீம், மிட்டாய்களை குளிர்பானங்கள் பின்னுக்குத் தள்ளிவிட்டது. க்ரெடிட் நியூஸ் ரிசர்ச் இன்ஸ்ட்யூட் நடத்திய ஆய்வு இதனை தெரிவிக்கிறது. ஒரு கப் குளிர்பானத்தில் எட்டு ட்யூஸ்பூன் சர்க்கரை அடங்கியிருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இது மனித உடலில் சாதாரணமாக இருக்கவேண்டிய சர்க்கரையின் அளவை விட அதிகமாகும். உடல் பருமனுக்கும் காரணம் குளிர்பானங்கள்தாம் என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். சர்க்கரை திரவ நிலையில் உடலுக்குள் சென்றால் விரைவாக உடலுக்குள் கரைந்து பெரிய அளவில் கலோரி ஒன்றிணைந்து

அக்டோபர் 27, 2013

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு!

டெங்கு காய்ச்சல் (Dengue fever) அல்லது எலும்பு முறிவுக் காய்ச்சல் மனிதர்களிடையே டெங்கு வைரசால் ஏற்படும் ஒருஅயனமண்டலத் தொற்றுநோய் ஆகும், இது கொசுக்களால் பரவுகிறது. இந்நோய் வந்தால் கடும்காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, தோல் நமைச்சல் போன்ற உணர்குறிகள் ஏற்படும்.

தொற்றுநோய் தீவிரமடைந்த நிலையில் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் டெங்கு குருதிப்போக்குக் காய்ச்சல் (கடுமையான குருதிப்போக்கை ஏற்படுத்தும்) மற்றும் டெங்கு அதிர்ச்சிக் கூட்டறிகுறி என்பன உண்டாகும். இது உயிர் ஆபத்துகளை விளைவிக்க கூடிய ஒரு கொடிய நோயாகும். இது உடலை மிகவும் வருத்தும் நோய் ஆகையால் எலும்பை முறிக்கும் காய்ச்சல் (breakbone fever) எனவும் அழைக்கப்படும்.வடக்கு ஆர்ஜெண்டீனா, வடக்கு அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், பார்படோஸ், பொலிவியா, பெலிஸ், பிரேசில், கம்போடியா,கொலம்பியா, கோஸ்ட்டா ரிக்கா, கியூபா, பிரான்ஸ், கெளதமாலா, குயான, ஹெயிட்டி, இந்தியா, இந்தோனேசியா, இலங்கைபோன்ற வறண்ட, உலர் வெப்ப வலய நாடுகளில் இந்த நோய் பெரும்பாலும் பரவுகின்றது.

டெங்கு மற்றும் சிக்கன் குனியா நோயின் அறிகுறிகள்! கடுமையான காய்ச்சல், மூட்டுவலி, உடல்வலி, தலைவலி, கண்கள் சிவத்தல், கண்களில் வலி மற்றும் கைகால் வீக்கம். மேற்கண்ட நோய் அறிகுறிகள் உடலில் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அணுகி இரத்த பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றுக்கொள்ளவும்.

தடுக்கும் முறைகள்:டெங்கு மற்றும் சிக்கன்குனியா காய்ச்சல், பகல் நேரங்களில் கடிக்கக்கூடிய ஏடிஸ் என்ற கொசுவினால் பரவுகின்றது. இக்கொசுகள் வீட்டை சுற்றியுள்ள பயன்படுத்தாத பொருட்கள், பாட்டில், பிளாஸ்டிக் கப், ஆட்டுக்கல், தேங்காய் மட்டை, டயர் போன்ற பொருட்களில் தேங்கியிருக்கும் நீரில் உற்பத்தியாகிறது.

கொசு ஒழிப்பு நடவடிக்கைகள்:ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்தல் மற்றும் நீர் சேமிக்கும் பாத்திரங்களை தேய்த்து கழுவி உலர வைத்தல் போன்றகளை செய்து ஏடிஸ் கொசு உற்பத்தியை தடுத்து டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கலாம்.

பயன்படுத்தாத பாட்டில்கள், பிளாஸ்டிக் கப், டயர், உடைந்த பானை, தேங்காய் மட்டை போன்ற தேவையற்ற பிற பொருட்களை அப்புறப்படுத்டுவதன் மூலம் கொசு உற்பத்தியை தடுக்கலாம்.

சிமெண்ட் தொட்டி, குடிநீர் தேக்கும்

செப்டம்பர் 13, 2013

சொந்த நாட்டிலே அகதிகளாய் முஸ்லிம்கள்-முசாபராபாத் சோகம்


இந்து பாசிச பயங்கரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரத்தில் கிட்ட தட்ட 38 ஆயிரம் மக்கள் வலுக்கட்டாயமாக தங்களின் சொந்த ஊரைவிட்டு விரட்டப்பட்டுள்ளனர் இவர்கள் அனைவரும் ஆதரவற்று தங்களின் உடமைகளையும்  உரிமைகளையும் இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் பெரும்பாலான மக்கள் பெண்கள், குழந்தைகள்,வயதானவர்களாக உள்ளனர்.முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் சரியான குடிநீர்,உணவு இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்....பெரும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ள நம் உறவுகளுக்காக இறைவனிடம் பிரார்த்திப்போம்.

செப்டம்பர் 01, 2013

அரசு கல்லூரிகளில் பொதுவான டிரஸ் கோடு! ஆபாச உடைகளுக்கு தடை! நாளை முதல் அமல்!

சென்னை: கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான உடைகளை அணிந்து கல்லூரிக்கு வருகின்றனர். சில மாணவர்கள் டி ஷர்ட், டிராக் ஷூட் போன்றவற்றோடும் கல்லூரிக்கு வருகின்றனர். இதனால் கல்லூரிகளின் கண்ணியத்துக்கு குறைவு ஏற்படுகிறது. இதையடுத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டி ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிய தடை விதிக்கப்படுகிறது.

மாணவ, மாணவிகளுக்கு உடை கட்டுப்பாடு அமல்படுத்தப்படுகிறது. கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் டி ஷர்ட் அணிந்து வரக்கூடாது. மாறாக முழுக்கை சட்டை மற்றும் பேண்ட் அணிந்து கம்பீரமாக வர வேண்டும். மாணவிகள் ஜீன்ஸ் மற்றும் ஸ்லீவ்லெஸ் ஷர்ட்டுகள் அணிந்து வரக்கூடாது. ஆபாச உடையணிதல் கூடாது. மாணவிகள் சல்வார் கமீஸ் அல்லது சேலை அணிந்துதான் கல்லூரி வர வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கல்லூரி கல்வி இயக்குனர் செந்தமிழ் செல்வி கூறியதாவது:

மாநிலம் முழுவதும் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் 3 லட்சம் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். சிலர் அணியும் உடையால் ஏற்படும் தாக்கத்தை

ஆகஸ்ட் 31, 2013

கழிவறை இருந்தால் மட்டுமே திருமணம்! புதிய சட்டம் அமல்

மத்திய பிரதேசத்தில் மாப்பிள்ளை வீட்டில் கழிவறை இருந்தால் மட்டுமே திருமணம் நடக்கும் என்ற சட்டமானது கொண்டுவரப்பட்டுள்ளது.

மணமகனின் வீட்டில் கட்டாயம் கழிவறை இருக்க வேண்டும் என்றும் அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்து அதை அதிகாரிகளிடம் காட்டி ஒப்புதல் பெற்ற பிறகே திருமணம் செய்து கொள்ள முடியும் என்றும் நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிய சட்டம் உள்ளது.மத்திய பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தில் திருமணம் செய்துகொள்ள விரும்பும் நபர் தனது வீட்டில் உள்ள கழிவறையில் நின்று புகைப்படம் எடுத்து அதை அதிகாரிகளிடம் காண்பிக்காவிட்டால் அவருக்கு திருமணத்திற்கான

ஆகஸ்ட் 29, 2013

இட்லி சாம்பார் தான் மிகச்சிறந்த காலை உணவு!

மும்பை : தமிழகவாசிகளை வட இந்தியர்கள் கிண்டல் செய்ய உபயோகப்படுத்தும் சொல்லான இட்லி சாம்பார் தான் உண்மையிலேயே மிகச் சிறந்த காலை உணவு என ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள மக்களின் காலை உணவு பழக்கம் குறித்து மும்பையில் உள்ள நிர்மலா நிகேதன் அறிவியல் கல்லூரி ஆய்வு நடத்தியது. இவ்வாய்வில் தமிழகத்தில் இட்லி , சாம்பார் தான் சத்தான உணவு என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவ்வாய்வில் 8 முதல் 40 வயது வரை உள்ள 3600 நபர்களின் உணவு பழக்கவழக்கங்கள் ஆரயாப்பட்டது. ஆராய்ச்சியின் முடிவில் நிறைய பேர் காலை உணவை தவிர்ப்பதும் சத்தற்ற உணவை சாப்பிடுவதும் தெரிய வந்துள்ளது. மும்பை, டெல்லி, கொல்கத்தாவில் முறையே 79%, 76%, 75% மக்கள் சத்தற்ற உணவை சாப்பிடுகின்றனர் என்றும் சென்னையில் 60% மக்கள் சத்தற்ற உணவை சாப்பிடுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மும்பையில் காலை உணவாக வெறும் கார்போஹைடிரேடுகள் நிறைந்த ரொட்டி மட்டுமே சாப்பிடுகின்றனர் என்றும் கொல்கத்தாவில் காலை உணவிலும் கார்போஹைடிரேடுகள் அதிகம் நிறைந்த மைதாவே முக்கிய உணவு பொருளாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவ்வுணவில் நார்சத்து அறவே இல்லை என்றும் புரோட்டின் குறைந்த அளவே உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தில்லி மக்கள் பயன்படுத்தும் காலை உணவில் எண்ணைய் கூடுதலாக

ஆகஸ்ட் 20, 2013

அமைச்சர்கள், விஐபிக்கள் வாகனங்களில் சிவப்பு சைரனை அகற்ற வேண்டும் - உச்சநீதிமன்றம்

அமைச்சர்கள், விஐபிக்கள் உள்ளிட்ட அனைவரது வாகனங்களிலும் சிவப்பு சைரன்  பயன்படுத்துவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். மற்றபடி, அரசியல் சட்ட பதவிகளில் உள்ளவர்கள் மட்டுமே வாகனங்களில் சைரனை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கார்களில் சைரனை பயன்படுத்துவதை முறைப்படுத்த வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, வி.கோபால கவுடா ஆகியோர் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய உள்துறை அமைச்சராக இருப்பவர்கள், கார்களில் சிவப்பு சைரன் விளக்கு பொருத்திக் கொள்ள அனுமதி உள்ளது. ஆனால், ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தபோது, தனக்கு சிவப்பு சைரன் விளக்கு, பாதுகாப்பு வாகனங்கள் எதுவும் தேவையில்லை என்று மறுத்தார். முரண்பட்டதாக இருந்தாலும் இது உண்மையான கூற்று.

இப்படி உயர் பதவியில் இருந்த அவரே மறுத்துள்ளபோது, சைரனை அமைச்சர்களும், விஐபிக்களும் பயன்படுத்த அனுமதிப்பது எந்த வகையில் நியாயம்? மக்கள்தான் அரசுக்கு வரிக்கு செலுத்துகின்றனர். அவர்கள்தான் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில், அவர்களும் கார்களில் சிவப்பு சைரன் விளக்கை பயன்படுத்த ஏன் அனுமதிக்கக்கூடாது? இந்த விஷயத்தில் உரிய உத்தரவை பிறப்பிக்க 4 வார காலம் அவகாசம் வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நீதிமன்றங்களின் உத்தரவுகளை எல்லாம் அரசு புறக்கணித்து வருகிறது. உடனடியாக விஐபி வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களிலும் சைரனை நீக்க வேண்டும். மேலும், சிவப்பு விளக்குகளை பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இது ஆங்கிலேயர் ஆட்சிக்கால பிரதிபலிப்பாக உள்ளது.

அரசியல்சட்ட பதவியில்

ஆகஸ்ட் 18, 2013

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் நிறைந்த லிச்சி பழம்!

லிச்சி பழம் நாம் அதிகம் அறியப்படாத பழம். சீனாவை பூர்வீகமாக கொண்ட இந்த பழம் இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகளில் அதிகமாக கிடைக்கிறது. லிச்சி பழம் சிவப்பு நிறத்தில் ஒரு பெரிய விதை போல மூடபட்டு இருக்கும் அதனுள்ளே வெள்ளை நிறத்தில் பழம் உள்ளது.. முட்டை வடிவத்தில் இருக்கும். இது பல ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது.

லிச்சிபழம் வெப்ப மண்டல பகுதிகளில் காணப்படுகிது. எதற்காக லிச்சி பழத்தை உடல் நலம் தரும் பழம் என கருதுகிறோம். லிச்சி பழத்திலிருந்து கிடைக்கும் கலோரி 76. புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்ஷியம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தையாமின், ரிபோப்ளோவின், நியாசின், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலை கட்டுப்படுத்தி குடலின் தசைநார்களை சீராக இயங்க வைக்கும். நார்ப்பொருள் 0.5 கிராமும், எலும்பு, பல் பலம் பெற உதவும் கால்சியம் 10 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 35 மிகி, இரும்பு சத்து 0.7 மிகி உள்ளது என்கிறார்கள் உணவுச் சத்து நிபுணர்கள். இதயமும், ஈரலும் உடலின் பிரதான பாகங்கள். இந்த இரண்டு உடல் உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைப்பதில் லிச்சிக்கு முதலிடம்.

பொதுவாக லிச்சி மரத்தின் பழம், விதை, பூ, வேர்ப்பட்டை ஆகிய அனைத்துக்கும் மருத்துவ பயன்பாடு அதிகம். லிச்சி பழத்தை தினமும் உண்டு வந்தால் இதயம் நல்ல ஆரோக்கியத்துடன்