Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 25, 2014

சிதம்பரம் முக்கிய தெருக்களில் ஆக்கிரமிப்பு அகற்றம்!

சிதம்பரத்தில் முக்கிய தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகம் அகற்றியது. ஆக்கிரமிப்பு ஆன்மிக நகரான சிதம்பரத்தில் நாளுக்கு நாள் முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.

போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே முக்கிய சாலைகள், தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் சென்றன. அதன்பேரில் முதற்கட்டமாக பிரசித்திப்பெற்ற தில்லையம்மன் கோவிலுக்கு சுற்றுலா பஸ்கள், வாகனங்கள் செல்லும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. கொட்டகைகள் அகற்றம் அதன்படி நகர அமைப்பு ஆய்வாளர் அறிவுச்செல்வன் தலைமையில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொக்லைன் எந்திரம் உதவியுடன் தில்லையம்மன் கோவில் தெருவின் இருபுறமும் ஆக்கிரமித்து இருந்த கடைகள், வீடுகளின் படிக்கட்டுகள், முகப்பு கொட்டகைகள் மற்றும் அங்கன்வாடி மையம் ஆகியவை அகற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து வேங்கான் தெரு மற்றும் மார்க்கெட் பகுதியிலும் நேற்று ஒரே நாளில்
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. நகராட்சி நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த சாலைகள் விஸ்தாரமாக மாறியுள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களிலும், நடந்தும் பொதுமக்கள் சிரமமின்றி செல்கின்றனர்.
-தினத்தந்தி 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...