Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 30, 2010

கான்சாகிப் வாய்க்காலில் நகராட்சி கழிவுநீர் கலப்பு: 10 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிப்பு

சிதம்பரம் நகரை கடந்து செல்லும் கான்சாகிப் வாய்க்கால் என்னும் பாலமான் ஓடையில் நகராட்சி மற்றும் மருத்துவமனைக் கழிவுநீர் கலந்து கறுப்பு நிறமாகக் காட்சியள

சிதம்பரம் நகரை கடந்து செல்லும் கான்சாகிப் வாய்க்கால் என்னும் பாலமான் ஓடையில் நகராட்சி கழிவுநீர் கலப்பதால் அதை நம்பியுள்ள 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் விவசாய சாகுபடி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் அணைக்கரையில் அமைக்கப்பட்டுள்ள கீழணை மதகிலிருந்து உருவாகக்கூடிய கொள்ளிடம் வடக்குராஜன் வாய்க்கால் 45 கி.மீ. காட்டுமன்னார்கோவில் புளியங்குடி வரை அமைந்துள்ளது. புளியங்குடி கோப்பாடி மதகிலிருந்து கான்சாகிப் வாய்க்கால் உருவாகி 41.08 கி.மீ. தூரத்துக்கு வெள்ளாற்றில் வடிகிறது. கான்காகிப் வாய்க்கால் செல்லும் பாதையில் 25.2 கி.மீ. தொலைவில் சிதம்பரம் நகரத்தை கடந்து செல்கிறது.
இந்த கான்சாகிப் வாய்க்காலில் சிதம்பரம் நகரில் பாலமான் என்னுமிடத்தில் அரசு மருத்துவமனை கழிவு, நகராட்சி கழிவு நீர், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவுநீர் ஆகியவை கலந்து 15 கி.மீ. தூரத்துக்கு கழிவுநீராகதான் உள்ளது. இக்கால்வாயில் உள்ள 34 மதகுகள் மற்றும் இதர வடிகால்கள் மூலம் 9994 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெருகின்றன. இக்கால்வாயின் முழு நீர்க்கொள்ளளவு 240.89 கனஅடியாகும். இக்கால்வாயில் எண்ணற்ற நிலங்களின் நீர்பிடிப்பு தண்ணீரும், வீராணம் ஏரியின் உபரிநீர் வெள்ளியங்கால் ஓடை வழியாக வெளியேற்றப்பட்டு இதில் வந்து சேருகிறது. சிதம்பரம் நகரில் பாதாள சாக்கடை திட்டம் பழுதடைந்துவிட்டதால் பல இடங்களில் புதை சாக்கடை நீர் திறந்தவெளி சாக்கடையில் விடப்பட்டுள்ளன.
அந்த கழிவுநீர் பஸ் நிலையத்துக்கு பின்புறம் ஓடும் கான்சாகிப் வாய்க்காலில் கொண்டு விடப்படுகிறது. சிதம்பரம் நகரில் ஏற்கெனவே உள்ள பாதாள சாக்கடைத் திட்டம் பழுதடைந்துவிட்டதால். ரூ.38 கோடி செலவில் புதிய பாதாள சாக்கடை விரிவாக்கத் திட்டம் செயல்படுத்த தமிழக அரசு அனுமதியளித்தது. அனுமதியளிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் அந்த பணிக்கான டெண்டர் எடுக்க யாரும் முன்வரவில்லை.தொகை குறைவாக உள்ளதால் யாரும் டெண்டர் எடுக்கவில்லை என்பதால் தற்போது அப்பணியை செயல்படுத்த ரூ.42 கோடியாக தொகை உயர்த்தப்பட்டது. அப்படியும் இன்று வரை யாரும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை. தற்போது பாதாள சாக்கடை நீர் ஆங்காங்கே திறந்தவெளி வடிகாலில் வெட்டி விடப்பட்டுள்ளன. இந்த புதை சாக்கடை கழிவுநீர் திறந்தவெளி சாக்கடை மூலம் பஸ் நிலையம் பின்புறம் உள்ள கான்சாகிப் வாய்க்காலில் கொண்டுவிடப்பட்டுள்ளன. மேலும் அரசு மருத்துவமனை கழிவுகளும் இந்த கால்வாயில் விடப்படுகிறது. இதனால் கான்சாகிப் வாய்க்கால் கழிவுநீர் குட்டை போல் காட்சியளிக்கிறது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட 75 ஆயிரம் மக்கள் மற்றும் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
மேலும் சிதம்பரம் நகரத்தில் 58 தங்கும் விடுதிகள், 23 திருமண மண்டபங்கள், 27 பெரிய உணவு விடுதிகள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் கழிவுநீர் திறந்தவெளி சாக்கடை மூலம் கான்சாகிப் வாய்க்காலில் கலக்கிறது. ஹோட்டல்கள், இறைச்சிக் கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கான்சாகிப் வாய்க்கால் கரையில் கொட்டப்படுகிறது. சிதம்பரம் நகரின் மேற்கு, தெற்கு திசைகளில் புதிதாக உருவாகியுள்ள நகர்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளின் கழிவுகள் அனைத்தும் கான்சாகிப் வாய்க்காலில் திருப்பிவிடப்பட்டுள்ளன. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஆண்டுதோறும் மேட்டூர் அணை திறக்கப்பட்டு கீழணை வழியாக கான்சாகிப் வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து சம்பா சாகுபடியும், அதன் அறுவடைக்கு பின்னர் சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவில் நவரைப்பட்ட சாகுபடியும் செய்யப்படும். நவரைப்பட்ட சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் குறைந்த அளவு பாசன தண்ணீரோடு சிதம்பரம் நகராட்சி கழிவுநீர் கலந்துவிடுவதால் ஒட்டுமொத்த வாய்க்காலிலும் கழிவுநீர் கறுப்பாக காணப்படுகிறது. இந்த நீரை கொண்டுதான் விவசாயிகள் நவரைப்பட்ட சாகுபடி செய்ய வேண்டிய நிலை உள்ளது என உழவர் கூட்டமைப்பு தலைவர் பி.ரவீந்திரன் தெரிவித்தார்.

ஏப்ரல் 29, 2010

புழல் சிறையில் முஸ்லிம்கள் உண்ணா நிலை போராட்டம்!

விசாரணைகள் முடிந்த நிலையிலும், தீர்ப்பு வழங்கப்படாமல் தாமதிக்கப்படுவதை கண்டித்து, கடந்த 12 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தடா கைதிகள், 27.04.2010 அன்று உண்ணாவிரதம் இருந்தனர்.சென்னை புழல் மத்திய விசாரணை சிறையில், முபாரக் அலி, அப்துல் ரஹீம், முஹம்மது அலிகான் குட்டி என்கிற சத்தியமங்கலம் குட்டி, குனங்குடி ஹனீஃபா(60), அலி அப்துல்லாஹ், ஏர்வாடி காசிம், ஷம்ஜித் அஹமது மற்றும் ரியாசுதீன் ரஹ்மான் என்ற எட்டு 'தடா' கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். குனங்குடி ஹனீஃபாவைத் தவிர மற்றவர்கள் 35 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள்.இவர்கள் 1997ம் ஆண்டு சேலம், ஈரோடு மற்றும் திருச்சி மாவட்டங்களில் நடந்த, தொடர் ரயில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டு, சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஜாமீன் ஏதும் கிடைக்காத நிலையில், தொடர்ந்து சிறையில் உள்ளனர்.தற்போது புழல் சிறையில் உள்ள இவர்களில் ரியாசுதீன் ரஹ்மான் மட்டும் அப்ரூவராக மாறியதால், முதல் வகுப்பு சிறையில் உள்ளார். மற்றவர்கள் சாதாரண சிறையில் உள்ளனர். இவர்கள் தொடர்பான வழக்கு சென்னை பூந்தமல்லி தடா சிறப்பு நீதி மன்றத்தில் நடந்து வருகிறது.இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது. ஆனால், அன்று தீர்ப்பு வழங்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இம்மாதம் (ஏப்ரல்) 7ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. மீண்டும் 9ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. மேற்கொண்டு விசாரிக்க வேண்டிய சாட்சிகள் ஏதும் இல்லாத நிலையில், அவரவர் தரப்பு வாதங்கள் முடிவுற்றதால், ஏப்ரல் 23ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் எனக் கூறி தள்ளி வைக்கப்பட்டது.இந்நிலையில் 'தற்போது வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிபதி பிரேம்குமார், மாற்றப்பட உள்ளார்; புதிய நீதிபதி வந்த பின்னரே தீர்ப்பு வழங்கப்படும்' என்ற தகவல் 'தடா' கைதிகளுக்கு கிடைத்தது. புதிய நீதிபதி பொறுப்பேற்று, ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட வழக்கின் சாட்சிய ஆவணங்களை படித்து முடித்து, அதன்பின் தீர்ப்பு வழங்க மீண்டும் ஒன்றிரண்டு ஆண்டுகள் கடந்து, காலதாமதமாகி விடும் என, அதிர்ச்சி அடைந்தனர். எனவே, தற்போதுள்ள நீதிபதியை மாற்றக் கூடாது; வழக்கின் தீர்ப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரினர்.இது குறித்து தங்கள் மீதான கவன ஈர்ப்பாக, நேற்று (திங்கள்) முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து, அதற்கான கடிதத்தை கடந்த 22ம் தேதி சிறைத்துறை எஸ்.பி., ராஜேந்திரனிடம் அளித்தனர். நேற்று காலை 6 மணி முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். ரியாசுதீன் ரஹ்மான் தவிர, மற்ற ஏழு பேரும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். இதனால், சிறையில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அவர்களுக்கான வக்கீல் மூலம், நீதிபதி மாற்றமில்லை என்ற தகவல் கிடைத்தது. உண்ணாவிரதத்தை கை விடக்கோரி, சிறைத்துறை அதிகாரிகளும் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து உண்ணாவிரதத்தை தடா கைதிகள் கை விட்டு, மாலை 6 மணிக்கு உணவு சாப்பிட்டனர்.

முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் டெலிபோன் ஒட்டுக்கேட்பு: மில்லி கவுன்சில் கண்டனம்

பாட்னா:புதுடெல்லி,லக்னோ,ஹைதராபாத் ஆகிய இடங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசித்துவரும் பகுதிகளில் டெலிபோன் உரையாடல்களை ஒட்டுக்கேட்பதும், கண்காணிப்பு உபகரணங்களை நிறுவியுள்ள உளவுத்துறை நிறுவனங்களின் நடவடிக்கைகளுக்கெதிராக ஆல் இந்தியா மில்லி கவுன்சிலும், ஜமாஅத்தே இஸ்லாமியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.மொபைல் மற்றும் லேண்ட்லைன் போன்களின் வழி நடத்தப்படும் அந்தரங்க உரையாடல்களை ஒட்டுக்கேட்பதும், அவற்றை பதிவுச் செய்வதும் ஒழுக்க ரீதியாகவும், அரசியல் சட்டப்படியும் தவறு என இவ்வமைப்புகள் கூறுகின்றன.ஐ.பி உள்ளிட்ட உளவுத்துறை ஏஜன்சிகள் பிரபல அரசியல் தலைவர்களின் டெலிபோன் உரையாடல்களை ஒட்டுக் கேட்டதாகவும், அவற்றை பதிவுச் செய்ததாகவும் ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியான 'அவுட்லுக்' பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.இதேபோல் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளான டெல்லி ஜும்ஆ மஸ்ஜித், ஜாமிஆ நகர் பகுதிகள், லக்னோ, ஹைதராபாத் ஆகிய இடங்களிலும் டெலிபோன் உரையாடல்களை ஒட்டுக் கேட்கப்படுவதாக 'அவுட்லுக்' பத்திரிகை கூறியிருந்தது.அரசியல் தலைவர்களின் டெலிபோன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்பதை எதிர்த்து பாராளுமன்றத்திலும் வெளியிலும் ரகளை ஏற்படுத்தியவர்கள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளை சந்தேகத்தின் நிழலில் நிறுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக போதுமான எதிர்ப்பை தெரிவிக்கவில்லை.டெலிபோன் உரையாடல்களை ஒட்டுக்கேட்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்றும், முஸ்லிம்களை பீதிவயப்படுத்துவதற்கான தந்திரம் என்றும் ஆல் இந்தியா மில்லி கவுன்சில் பொதுச்செயலாளர் டாக்டர் மன்சூர் ஆலம் தெரிவித்தார்.ஃபலஸ்தீனில் இஸ்ரேல் செய்யும் அதே வேலையைத்தான் அரசு உளவுத்துறை ஏஜன்சிகள் முஸ்லிம் பகுதிகளில் மேற்கொள்கிறது. முஸ்லிம்களும் இந்நாட்டின் குடிமக்கள்தாம். அவர்களை இஸ்ரேலின் கண்ணின் ஊடே காணும் போக்கு பிளவை ஏற்படுத்தும். தேவை ஏற்படும்போதெல்லாம் முஸ்லிம்கள் இந்நாட்டிற்காக தியாகத்தை அர்ப்பணிப்பையும் செய்துள்ளனர். அவர்களின் தேசப்பற்றை குறித்து கேள்வி எழுப்ப எவருக்கும் அதிகாரமில்லை. இவ்வாறு மன்சூர் ஆலம் தெரிவித்தார்.வெளிநாடுகளிலிருந்து இறக்குமதிச் செய்யப்பட்ட உபகரணங்களை சிறிய தூர இடைவெளியில் நிறுவியும், ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களில் உபகரணங்களை ஸ்தாபித்தும் மொபைல்,லேண்ட்லைன் போன்களின் அந்தரங்க உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன என்று ஜமாஅத்தே இஸ்லாமியின் செயலாளர் முஸ்தபா ஃபாரூக்கி குற்றஞ் சாட்டினார். இது முஸ்லிம் சமூகத்தை அந்நியப்படுத்த காரணமாகும் என அவர் கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில், டெலிபோன் உரையாடல்களை ஒட்டுகேட்ட விவகாரம் குறித்து ஒருங்கிணைந்த பாராளுமன்ற கமிட்டி விசாரணை நடத்தவேண்டுமென்ற எதிர்கட்சிகளின் கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும் என்றார்.

வேற்றுகிரக உயிரிகள் உண்டு:ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ்

வாஷிங்டன்:வேற்றுக்கிரக உயிரிகள் உண்டுமா? பல நூற்றாண்டுகளாக விஞ்ஞான உலகத்தை குழப்பத்தை குழப்பத்தில் ஆழ்த்தும் கேள்வி இது.
வேற்று கிரக உயிரிகள் உண்டு என்கிறார் இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டீஃபன் ஹாக்கிங். ஆனால் அவற்றுடன் தொடர்பு ஏற்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொள்வது மனித குலத்தின் அழிவிற்கு காரணமாக மாறிவிடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டிஸ்கவரி சேனலில் ஒரு புதிய டாக்குமெண்டரி தொடரில் பிரபஞ்சத்தின் மிகவும் மர்மமான ஒன்றைக் குறித்து ஹாக்கிங்ஸ் தனது ஆய்வை தெரிவிக்கிறார்.
கிரகங்களில் மட்டுமல்ல கிரகங்களுக்கிடையிலான வெற்றிடங்களிலும் இவை நடமாடலாம் என்கிறார். வேற்றுக்கிரக உயிரினங்களை குறித்த ஹாக்கிங்ஸின் வாதம் எளிதானது.
'இப்பிரபஞ்சத்தில் 100 பில்லியன் கேலக்ஸிகள் உள்ளன. ஒவ்வொன்றிக்கும் நூற்றுக்கணக்கான நட்சத்திரங்களும் உள்ளன. இத்தைகையதொரு விசாலமான பிரபஞ்சத்தில் பூமியில் மட்டும் உயிரினங்கள் வாழுகின்றன எனக்கூறுவது கற்பனைச் செய்யவியலாத ஒன்றாகும். அவற்றின் உருவம் எவ்வாறிருக்கும் என்பதை கற்பனைச் செய்வதுதான் உண்மையான சவாலாகும். என ஹாக்கிங்ஸ் கூறுகிறார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்& பாலைவன சோலை

ஏப்ரல் 28, 2010

போலி கௌரவம் தேவையா? !

பிறர் பார்க்கிறார், அடுத்தவர் நினைக்கிறார், மற்றவர் மதிப்பிடுகிறார் என்று வாழ ஆரம்பித்தால் நம் மூளைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், திறமைக்கும், திருப்திக்கும் என்ன வேலை?
நல்லதே எண்ணி, நல்லதே செய்து நற்பண்புகளுடன் வாழ்ந்தால், பிறர் தீர்ப்புக்கும், பிறர் சான்றிதழுக்கும், பிறர் மதிப்பீட்டுக்கும் நாம் காத்துக்கிடக்க வேண்டியதில்லை.கணவரும், மனைவியும் தாங்கள் வளர்த்து வந்த கழுதையுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்."யாராவது ஒருவர் கழுதை மீது அமர்ந்து செல்லலாமே'' என்றார் அவ்வழியே சென்ற ஒருவர். அதனால் கணவர் கழுதை மீது ஏறி உட்கார்ந்தார்.''கொடுமைக்கார புருஷனாக இருப்பார் போலும். தான் மட்டும் சுகமாக அமர்ந்து கொண்டு மனைவியை நடக்க விடுகிறார்'' என்றார் இன்னொருவர். இப்போது மனைவியை அமரவைத்து கணவர் நடக்க ஆரம்பித்தார். "புருஷனை மதிக்காதவள். திமிராக கழுதை மீது அமர்ந்து செல்கிறாள்'' என்ற மற்றொருவரின் கமென்ட்டைத் தொடர்ந்து கணவரையும் தன்னுடன் ஏற்றிக் கொண்டாள் மனைவி. "கொஞ்சமாவது ஈவு, இரக்கம் இருந்தால் பாவம் இந்த கழுதையை இப்படி கஷ்டப்படுத்துவார்களா?'' என்றார் வேறொருவர். இறுதியில் கணவர் மனைவி இடையே சண்டை வந்து விட்டது. "உங்களால்தான் இந்த அவமானம்'' என்றார் மனைவி. "உன்னால் என் கவுரவமே போச்சு'' என்றார், கணவர். நம் வாழ்வில் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு அடுத்தவர்கள் சொல்வதை கேட்பதும், போலி கௌரவவுமே முக்கியக் காரணம்.போலி கௌரவம் மனிதனுக்கு குழந்தைப் பருவத்திலே தானாகவே ஏற்பட்டு விடுகிறது. ஓடிக் கொண்டிருக்கும் சிறுவன் கால்தடுக்கி விழுகிறான். யாராவது பார்த்து விட்டார்களா என இங்குமங்கும் பார்க்கிறான். யாரும் பார்க்க வில்லையென்றால் எழுந்து, துடைத்துக் கொண்டு தொடர்ந்து ஓடுகிறான். யாராவது பார்த்து விட்டால், அதுவும் சிரித்து விட்டால் போச்சு. அசிங்கம், அவமானம்! கண்ணீர் ஆறாய் ஓடுகிறது. தடுக்கி விழுவது கூட பெருங்குற்றம் என பிஞ்சு மனம் நம்புகிறது.உலகில், போலி கௌரவத்தின் தலைமையகம் அமெரிக்காதான் என்றால் அது மிகையல்ல. அடுத்த பத்தாண்டுகளுக்கு கிடைக்கக் கூடிய எல்லா கடன் சலுகைகளையும் இப்போதே பெற்று நீயா, நானா என்று போட்டி போட்டு கவுரவம் பார்ப்பதில் அமெரிக்கர்கள் கில்லாடிகள். கிடைக்கிறது என்பதற்காக சக்தியை மீறி வாங்கிய வீட்டுக்கடன்களில் திவாலாகி, "அமெரிக்காவில் வீடு வேண்டுமா? ரொம்ப சீப்'' என்று இங்கு டீக்கடை முன்பு நில புரோக்கர்கள் கிண்டலாக கேட்கும் அளவுக்கு கடந்த ஆண்டு அங்கு பெரும் நெருக்கடி."என்னை அடியுங்கள், உதையுங்கள், சாகடியுங்கள்; ஆனால் மற்றவர் முன் அவமானப்படுத்தாதீர்கள்'' என்ற வேண்டுகோள் நம் சமூகத்தில் பிரபலம். விசாரணையின்றி, பொறுமையின்றி மிருகத்தனமாக நடந்துகொள்ள குடும்பத்தினருக்கு அனுமதி உண்டு. ஆனால் அதை மற்றவர்கள் பார்க்க மட்டும் கூடாது என்ற 'கௌரவ நிலைப்பாடு' இங்கு வேரூன்றி விட்டது.இந்த போலி கௌரவம் படித்தவர்களையும் வாட்டி எடுக்கும் சக்தி கொண்டது."சக மாணவர்கள் முன் ஆசிரியர் என்னை திட்டி விட்டார்; அதனால் எனக்கு அவமானமாக இருந்தது'' என்று அம்மாவிடம் பையன் புலம்பினால் அது போலி கௌரவத்தின் அறியாப்பருவம். "இன்னொரு டீச்சர் முன்பு என்னைக் குறை சொல்லாதீங்க சார். என் கௌரவம் என்னாவது?'' என்று ஒரு டீச்சரே தலைமையாசிரியரிடம் குறைபட்டுக் கொள்வது போலி கவுரவத்தின் விபரீத வளர்ச்சி. தவறு தவறுதான். அதை யார் சொன்னால் என்ன? எங்கு சொன்னால் என்ன? அதற்கும் கௌரவதிற்கும் என்ன சம்பந்தம்? நாம் கௌரவமானவர்கள் என்று நமக்குத் தெரிகிறது. ஆனால் நாம் அணியும் செருப்புக்கு எப்படி தெரியும்? பலர் மத்தியில் செருப்பு ரிப்பேராகிறபோது அதை தூக்கிப் போட்டு விட்டு வெறுங்காலோடு நடந்தால் சுமார் கவுரவம்; விலை உயர்ந்தது, சரி செய்து விடலாம் என அச்செருப்பை கையில் ஏந்தியபடி, தலைநிமிர்ந்து நடந்தால் சூப்பர் கவுரவம். இதை விடுத்து, பிறருக்கு தெரியக்கூடாது என்பதற்காக காலை தரையில் தேய்த்தபடி நடந்து வந்து வண்டியில் ஏறினால், அது போலி கௌரவம்.பாழாய்ப்போன டூவீலர் என்ஜின் திடீரென எக்குத்தப்பாகி பெட்ரோலைக் குடித்து விடுகிறது. வண்டி பாதி வழியில் நின்று விடுகிறது. மனைவி ஒரு பக்கம், மற்றவர் ஒரு பக்கம், அவ்வளவுதான். போயே விட்டது நாம் கட்டிக்காத்த கவுரவம்! அருகில் உள்ள பெட்ரோல் 'பங்க்'குக்கு வண்டியைத் தள்ளிச் சென்றால் உடலுக்கு கவுரவம்தான். ஆனால் உள்ளத்துக்கும், உடன்வரும் செல்லத்துக்கும் அது கவுரவக் குறைச்சல் ஆயிற்றே. "என்ன ஆச்சு?'' என்று ஏதோ வண்டியில் குண்டு வெடித்த மாதிரி சிலர் கேட்பார்களே அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று நினைத்தால், அது போலி கௌரவம். வண்டி பிரச்சினைக்கும், வாழ்க்கை கௌரவத்திற்கும் என்ன தொடர்பு? - யோசித்துப் பாருங்கள்.சாப்பிடாவிட்டால் கூட சிலரின் உடல் வஞ்சனை இன்றி வளர்ந்து விடுகிறது. இதற்காக உடலின் அளவைக் குறைக்க முயற்சி எடுக்க வேண்டுமேயன்றி, 'எல்லோரும் கிண்டல் செய்கிறார்கள்' என்று கவுரவம் பார்த்து வெளியில் வருவதைக் குறைக்கக் கூடாது. வீட்டுக்கு போலீஸ் வருவது பாஸ்போர்ட் விண்ணப்பம் தொடர்பாகத்தானே. இதில் 'மற்றவர்கள் வேறுமாதிரி நினைத்து விடப்போகிறார்கள்' என பயப்படுவது ஏன்?இப்படி எங்கும் எதிலும், எப்போதும் பெரியவர்கள் கூட கௌரவம் பார்ப்பதால் இளைய தலைமுறையும் இதையே பின்பற்றி, தன் திறமையை வெளிக்கொண்டு வர தயங்குகிறது. 'உனக்கு தெரிந்ததைப் பேசு' என்று ஒரு நிகழ்ச்சியில் சொன்னால் 'சரியாகப் பேசவில்லையென்றால் எல்லோரும் தவறாக நினைப்பார்கள்' என்று சிறுவர்கள் பயப்படுகின்றனர். 'யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை. முடிந்தவரை முயற்சி செய்' என்று அவர்களை ஊக்கப்படுத்தினால்தான் நாளைய இன்டர்விஞ்க்களை அவர்கள் வெல்ல முடியும். 'ஊக்குவிப்பார் யாரும் இல்லையெனினும், குறைசொல்வோருக்கு குறைவில்லை'' எனும் நிலை ஆபத்தானது.பிறர் பார்க்கிறார், அடுத்தவர் நினைக்கிறார், மற்றவர் மதிப்பிடுகிறார் என்று வாழ ஆரம்பித்தால் நம் மூளைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், திறமைக்கும், திருப்திக்கும் என்ன வேலை? நல்லதே எண்ணி, நல்லதே செய்து நற்பண்புகளுடன் வாழ்ந்தால், பிறர் தீர்ப்புக்கும், பிறர் சான்றிதழுக்கும், பிறர் மதிப்பீட்டுக்கும் நாம் காத்துக்கிடக்க வேண்டியதில்லை.தன்னுடைய முக்கியமான வாடிக்கையாளர்களுக்காக 'பபே' விருந்துக்கு ஏற்பாடு செய்தது ஒரு வங்கி. ஒரு கையில் தட்டு; மறுகையில் இரண்டு ஸ்பூன்கள். சப்பாத்தி, சிக்கன் என போர்க் ஸ்பூனுக்குள் சிக்காத அயிட்டங்கள். பலமாகக் கொத்தினால் போட்டிருக்கும் கோட்டுக்குள் குழம்பு சீறி சிதறும் ஆபத்து. அதில் ஒரே ஒருவர் மட்டும் ஆரம்பத்தில் இருந்தே அசத்தினார். ஆம், ஸ்பூன்களை வீசிவிட்டு கையால் எடுத்து, கடித்து, மென்று சாப்பிட்டு 'எங்கேப்பா ஐஸ்கிரீம்' என்று கேட்டபடி நகர்ந்தார்! மற்றவர்கள் முகம் சுளித்தனர். ஆனால், பிறர் மத்தியிலும் தனக்காக சாப்பிட்டவர் அவர் ஒருவர்தான் என்பதை மறுப்பதற்கில்லை.குறை சொல்வது, பொறாமைப்படுவது, அவசரப்பட்டு பேசுவது, ஒரு விஷயத்தை கேள்விப்பட்ட உடன் அப்படியே நம்பி விடுவது போன்றவை மனிதனின் பலவீனங்கள். நம் பண்புகளையும், உழைப்பையும், வெற்றியையும் அவ்வளவு சீக்கிரம் சக மனிதர்கள் நம்பி ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சி அடைவதில்லை. 'மற்றவர்' என்று நாம் கருதும் அந்த மனிதர்களுக்கும் இது பொருந்தும். இந்நிலையில் பிறர் பார்வைக்கும், சொல்லுக்கும் நாம் மதிப்பளித்து அவர்கள் பார்க்கிறார்களே, அவர்கள் முன் திட்டு வாங்குகிறோமே என்றெல்லாம் சங்கடப்படத் தேவையில்லை.உடைக்கப்படுகிறோமே என்று கௌரவம் பார்க்கும் கல் சிலையாவதில்லை; உருக்கப்படுகிறோமே என்று கௌரவம் பார்க்கும் தங்கம் நகையாவதில்லை, பிசையப்படுகிறோமே என்று கௌரவம் பார்க்கும் மண் பாத்திரமாவதில்லை; அடித்து, துவைக்கப்படுகிறோமே என்று கௌரவம் பார்க்கும் துணி சுத்தமாவதில்லை; நம் குறைகள் நம்மிடமிருந்து நீங்க, நமக்கு வேண்டியவர்கள் நம்மை கையாளும் போதுதான் நம் அறிவு முழுமையாகிறது. இதை யார் பார்த்தால் என்ன? எங்கு பார்த்தால் என்ன? நம் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் ஒரு விஷயம் நிஜ கௌரவமா அல்லது போலி கௌரவமா என்பதுதான் கேள்வி.போலி கௌரவம் பொல்லாதது. அதை அறவே விட்டொழிப்போம். பிறர் மத்தியில் சுட்டிக் காட்டப்படும் தவறுகள் அவமானமல்ல; திருத்திக் கொள்வதே பரிகாரம். உண்மையில்லாத பட்சத்தில், நம்மை நோக்கி வந்து விழுகிற பழிச்சொற்கள் அசிங்கமல்ல; அதை பிறர் பார்த்தால் ஏற்படுகிற அவமானமும் நமக்கல்ல!!

source: Mohideen

இந்திய பிரிவினையை முதலில் தூண்டியது சாவர்கர்- மணி சங்கர் அய்யர் பேச்சு.



புதுடெல்லி:காங்கிரஸ் கட்சி துவங்கப்பட்டு 125 ஆண்டுகள் முடிவடைவதை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.அதில் ஒரு பகுதியாக டெல்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பாக, 'சமூக நல்லிணக்கமும், இந்திய தேசிய காங்கிரஸும்’ என்ற தலைப்பில் டெல்லியில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கில் மணி சங்கர் அய்யர், ஆனந்த் சர்மா, கிருஷ்ணா தீராத் மற்றும் காங்கிரஸ் எம்.பிக்களும் கலந்துக் கொண்டனர்.நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய ராஜ்யசபா உறுப்பினரான மணிசங்கர் அய்யர் கூறியதாவது: "பாரதீய ஜனதா கட்சியும், ராஷ்ட்ரிய சுயம் சேவக்கும்(R.S.S) இந்தியாவை துண்டாட முயல்கின்றன. 16-ஆம் நூற்றாண்டில் பாபர் தனது மகன் ஹிமாயூனுக்கு எழுதிய கடிதத்தில், இந்திய மக்களிடையே மதரீதியான எந்தவொரு வேறுபாட்டையும் உருவாக்கக் கூடாது’ என்று கூறியுள்ளார். நான் அதே செய்தியை பா.ஜ.க வின் தலைவர் நிதின் கட்காரிக்கும் கூற விரும்புகிறேன்.கட்காரி தனது தத்துவக்கொள்கையை மாற்றிக் கொள்ளவேண்டும்.மேலும் பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸும் சாவர்கரின் குழந்தைகளாகும்.காங்கிரஸ் மதசார்பற்றக் கொள்கையில் நம்பிக்கைக் கொண்டுள்ளது. முதன் முதலில் இரு நாட்டுக் கொள்கையை முன்மொழிந்தது முஸ்லிம் லீக் என்பது தவறான கருத்தாகும். இரு ராஷ்ட்ர கொள்கையை முதலில் முன்வைத்தது தாமோதர் வினாயக் சாவர்கர் ஆவார்.பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸும் ஹிந்துத்துவாவைப் பற்றி பேசுகின்றன, ஆனால் அதன் பொருள் அவர்களுக்கு தெரியாது. அவர்கள் விரும்புவதெல்லாம் முஸ்லிம்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்பட வேண்டும் என்பதையே." இவ்வாறு அவர் உரை நிகழ்த்தினார்.

தீண்டாமை தீண்டாத இஸ்லாம் !!

நன்றி: தினமணி

ஏப்ரல் 27, 2010

இரத்ததான முகாம்

தமிழகத்தில்
இரத்ததானம் செய்வதில் முதலிடத்தில் இருக்கும் தவ்ஹீத் ஜமாஅத் சௌதி அரேபியாவில் உள்ள
ரியாத் மண்டலத்தில் இரத்ததான முகாமை நடத்தியது.

நன்றி:தினமலர்

கடலூர் மாவட்டத்தில் பலத்த ​பாதுகாப்பு ஏற்பாடுகள்

கடலூர்:
எதிர்க்கட்சிகள் இன்று ​(செவ்வாய்க்கிழமை)​ அறிவித்து இருக்கும் முழு அடைப்பை முன்னிட்டு,​​ பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக,​​ கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் தெரிவித்தார்.
திங்கள்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் கூறியது:
கடலூர் மாவட்டத்தில் 1,800 போலீஸôர் மற்றும் அதிகாரிகள் மற்ற பணிகளை அனைத்தையும் நிறுத்தி விட்டு,​​ பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.​ அரசு அலுவலகங்கள்,​​ பள்ளிகள்,​​ கல்லூரிகள்,​​ வணிகப் பகுதிகள்,​​ பஸ் நிலையங்கள்,​​ ரயில் நிலையங்கள் போன்றவற்றுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.​ ​வர்த்தக நிறுவனங்களை மூடுமாறு யாராவது கட்டாயப்படுத்தினால்,​​ அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள்.​ வன்முறையில் ஈடுபடுவார்கள் என்று சந்தேகப்படுவோர் ​ திங்கள்கிழமை இரவு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்படுவார்கள்.​ செவ்வாய்க்கிழமை முழு அடைப்பு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவோர் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள்.​ கடுமையான சட்டங்களில் அவர்கள் மீது வழக்குத் தொடரப்படும்.​ அவர்களைக் கைது செய்து வைப்பதற்காக,​​ திருமண மண்டபங்கள் தயாராக உள்ளன.
போலீஸ் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.​ 156 போலீஸ் வாகனங்கள் ஆயுதம் தாங்கிய போலீஸôருடன் ரோந்துப் பணியில் ஈடுபடும்.​ சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.​ மக்கள் பயமின்றி தங்கள் பணிகளைச் செய்யலாம்.​ அனைத்து உள்ளூர் பஸ்கள் இயக்கமும் திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு மேல் நிறுத்தப்படும்.​ செவ்வாய்க்கிழமை காலை முதல் பஸ்கள் அனைத்தும்,​​ போலீஸ் பாதுகாப்புடன் கான்வாயில் அனுப்பப்படும்.​ ஆயுதம் தாங்கிய போலீஸôர் பாதுகாப்புக்காகச் செல்வார்கள் என்றார் எஸ்.பி.

கடலுக்கடியில் கேபிளில் பழுது- இண்டர்நெட் சேவைகள் பாதிப்பு


தென்கிழக்கு ஆசிய நாடுகளை இந்தியா வழியாக ஐரோப்பாவுடன் இணைக்கும் கடலுக்கடியிலான இண்டர்நெட் கேபிளில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் பல நாடுகளில் இண்டர்நெட் சேவைகளில் ஒரு பகுதி பாதிக்கப்பட்டுள்ளது.இந்த கேபிள் சேவையை பாரதி ஏர்டெல், டாடா கம்யூனிகேசன் உள்பட 16 சர்வதேச தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இணைந்த அமைப்பு நடத்தி வருகிறது.இத்தாலி அருகே கடலுக்கடியில் இந்த கேபிளில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கும் பணிகள் நடக்கவுள்ளதால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளி்ல் இண்டர்நெட் சேவைகள் மேலும் பாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.இந்த கடலடி இண்டர்நெட் கேபிளுக்கு சிங்கப்பூர், இந்தியா, மலேசியா, தாய்லாந்து, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு நாடுகள், செளதி அரேபியா, இத்தாலி, துனீசியா, அல்ஜீரியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் டெர்மினல் ஸ்டேசன்கள் எனப்படும் மையங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
source:thatstamil

ஏப்ரல் 26, 2010

பாலங்களின் தடுப்பு சுவர்கள் உடைப்பு: விபத்துகள் அதிகரிக்கும் அபாயம்

சேத்தியாத்தோப்பு :
அறந்தாங்கியிலிருந்து சோழத்தரம் வரையில் உள்ள பாலங்கள் அனைத்தும் தடுப்புச் சுவர்கள் இடிந்து விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
கடலூர் மாவட்டத்தின் எல்லை காட்டுமன்னார் கோவில் ஒன்றியம் அறந்தாங்கியில் முடிகிறது. அறந்தாங்கியிலிருந்து சோழத்தரம் வரையிலான 5 கி.மீ. தூரத்தில் 6 பாலங்கள் உள்ளன. இவற்றில் அனைத்து பாலங்களின் தடுப்பு சுவர்களும் இடிந்துள்ளது. சென்னை - கும்பகோணம் போக்குவரத்தில் பிரதான நெடுஞ்சாலையாக திகழும் இச்சாலையில் கடந்த ஒரு வருடமாக அணைக்கரை பாலத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக தற்போது போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. என்றாலும் கூட ஜெயங்கொண்டம், தஞ்சாவூர் சுற்றுப் பாதையிலான காட்டுமன்னார்கோயில், ஸ்ரீமுஷ்ணம், அணைக்கரை ஆகிய ஊர்களுக்கு இரவும் பகலுமாக ஆயிரக்கணக்கான கார், வேன்களும் 500க்கும் அதிகமான பஸ்களும் இப்பாலங் களை கடந்து செல்கின்றன. இவ்வளவு போக்குவரத்து நிறைந்துள்ள பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள பாலங்கள் தடுப்பு சுவர்கள் அனைத்தும் உடைந்திருப்பதை ஏனோ அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு உயிர்பலிகள் ஏதும் நிகழும் முன் நெடுஞ்சாலைத்துறையினர் உடைந்த பாலத்தின் மதில் சுவர்களை கட்டி முடிக்க வேண்டும்.

அபுதாபி:இந்த ஆண்டு மூன்று மாதத்தில் ஒன்றே கால் லட்சம் போக்குவரத்து விதி மீறல்கள்

அபுதாபி:இந்த ஆண்டு முதல் மூன்று மாதங்களில் அபுதாபி, அல் அய்ன் மாகாணங்களில் 1,20,902 போக்குவரத்து விதி மீறல்கள் நடைபெற்றுள்ளது. ட்ராஃபிக் போலீஸ் துணைத்தலைவர் கர்னல் இஸ்ஹாக் முஹம்மது இத்தகவலை தெரிவித்தார்.சீட் பெல்ட் அணியாமல் 13,300 வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. ட்ராஃபிக் எச்சரிக்கையை புறக்கணித்ததற்கு 8,798 நபர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வாகனம் ஓட்டும்பொழுது மொபைல் ஃபோன் உபயோகித்ததற்கு 4,736 நபர்களுக்கும், அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டியதற்கு 2,845 நபர்களுக்கும் போக்குவரத்திற்கு இடையூறுச் செய்ததற்காக 2,780 நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கடந்த ஓராண்டில் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வந்தவர்கள் 5 லட்சம் பேர்


கடந்த ஓராண்டில் மட்டும் பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக 5 லட்சம் பேர் வந்துள்ளனர்.இந்தியாவில் அனைத்து நோய்களுக்கும் சர்வதேச தரத்திலான மருத்துவ சிகிச்சை குறைந்த செலவில் அளிக்கப்படுவதுதான் பல்வேறு நாட்டவரையும் இந்தியாவைத் தேடி வரவைத்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளிலும் அனைத்து நோய்களுக்கும் குறைந்த செலவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனினும் பெரும்பாலான வளர்ந்த நாடுகளைச் சேர்ந்தோர் இந்த நாடுகளைவிட இந்தியாவுக்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்வதையே பெரிதும் விரும்புகின்றனர்.இதற்கு முக்கிய காரணம், நோயாளிகளிடம் இந்திய மருத்துவர்கள், நர்ஸ்கள் உள்பட மருத்துவமனை ஊழியர்கள் அன்போடும், தன்மையுடனும் நடந்து கொள்ளுவதுதான் என்பது தெரியவந்துள்ளது.கடந்த ஆண்டு தில்லி அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய அமெரிக்க பெண் கேத்லீன் என்பவர் கூறுகையில், எனக்கு கர்ப்பப்பையில் பிரச்னை இருந்தது. இதற்கு சிகிச்சை அளிக்க அமெரிக்காவில் அதிகமான தொகை கேட்டனர். அவர்கள் கேட்ட தொகை எனது தகுதிக்கு அதிகமானது.இதையடுத்து விசாரித்தபோதுதான் தில்லி அப்பல்லோவில் குறைவான செலவில் தரமான சிசிக்சை கிடைக்கிறது என்று கேள்விப்பட்டேன். உடனே நான் தில்லிக்கு புறப்பட்டு வந்து சிகிச்சைப் பெற்றேன்.தில்லி அப்பல்லோ மருத்துவமனையின் சிகிச்சை மட்டுமல்லாமல் அங்கு ஊழியர்கள் என்னை கவனித்ததும் சிறந்தவகையில் இருந்தது என்று அவர் கூறினார்.சமீபத்தில் மேக்ஸ் ஹெல்த்கேர் மருத்துவமனையில் இடுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மரியா ரோஸ்மேரி என்பவர் கூறுகையில், இந்திய மருத்துவர்கள் மிகவும் திறைமைவாய்ந்தவர்களாகவுள்ளனர். இதை அனுபவ ரீதியாக உணர்ந்துள்ளேன். அதைப்போல மருத்துவர்கள் மட்டுமல்லாது மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் என்னிடம் நடந்து கொண்டவிதம் என்னை பெரிதும் கவர்ந்தது. அவர்களது அன்பான கவனிப்பால் நான் மகிழ்ச்சி அடைந்தேன். எனது சொந்த நாட்டுக்குத் திரும்பியதும் எனது நண்பர்கள் உள்பட அனைவரிடமும் சிகிச்சை பெற விரும்பினால் இந்தியாவுக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள். சிகிச்சைக்காக இந்தியாவைத் தவிர வேற எந்த நாட்டுக்கும் செல்லாதீர்கள் என்று கூறிவருகிறேன் என்றார் மரியா ரோஸ்மேரி.வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும், வெளிநாட்டவர்களுக்கும் குறைந்த செலவில் தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்கும் நோக்கில் மருத்துவ சுற்றுலா திட்டத்தை இந்திய அரசு ஊக்குவித்து வருகிறது.இதன் மூலம் வெளிநாட்டவர்கள் இந்தியாவில் எளிதாக மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ளும் வகையில் விதிமுறைகளை தளர்த்தியுள்ளது.அரசின் இந்த நடவடிக்கையால் இந்தியா மருத்துவ சுற்றுலா மையமாக பிரபலமடைந்து வருகிறது. இதன் மூலம் நாட்டுக்கு கணிசமான வருவாயும் கிடைக்கிறது. வரும் காலங்களில் இது அதிகரிக்கும் என்று இந்திய மருத்துவ சுற்றுலா அமைப்பின் செயல் இயக்குநர் பிரதீப் துக்ரல் தெரிவித்தார்.
நன்றி :தினமணி

அமெரிக்க ஏகாதிபத்தியம்---சோமாலியா ஆக்கிரமிப்பு




கொல்லைப்புற வழியாக சோமாலியாவை ஆக்கிரமிக்க அமெரிக்கா நடத்திய போர் படுதோல்வியில் முடிந்துவிட்டது. சோமாலியா என்றவுடனேயே நமது நினைவுக்கு வருவது, அந்நாட்டைப் பிடித்தாட்டும் பஞ்சமும், பட்டினியால் எலும்பும் தோலுமாகிப் போன அந்நாட்டு மக்களும்தான். இப்படிபட்ட பஞ்சப் பரதேசியான நாடும் அதன் மக்களும், தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போருக்கு ஒரு மரண அடி கொடுத்திருப்பது உங்களுக்குத் தெரியுமா?
ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கா நடத்தி வரும் ""தீவிரவாதத்துக்கு எதிரான போர்'' வெளியே தெரிந்த அளவிற்கு, சோமாலியாநாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த போர் பொதுமக்களின்கவனத்துக்கு வரவில்லை. இதற்குக் காரணம், அமெரிக்கா, ஈராக்கிலும்ஆப்கானிஸ்தானிலும் தனது படைகளை இறக்கி, அந்நாடுகளை ஆக்கிரமித்திருப்பதைப்போல் சோமாலியாவில் ஆக்கிரமிப்புப் போரை நேரடியாக நடத்தவில்லை. மாறாக, ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள தனது பிராந்திய அடியாளான எத்தியோப்பியப்படைகளின் மூலம் ஆக்கிரமிப்புப் போரை நடத்தியது. இதன் காரணமாக பெரும்பாலான முதலாளித்துவப் பத்திரிகைகளால் சோமாலியாவில் நடந்து வந்த இந்தப் போர், சோமாலியாவுக்கும் எத்தியோப்பியாவுக்கும் நடக்கும் அண்டைநாட்டுச் சண்டையாகப் புறக்கணிக்கப்பட்டது.
அமெரிக்கா, ஏழை நாடான சோமாலியா மீது தொடுத்த இந்த ஆக்கிரமிப்புப் போரை, தீவிரவாதத்துக்கு எதிரான போரின் மூன்றாவது போர் முனையாகக் குறிப்பிட்டு வந்தது. சோமாலியா மக்கள் கடுமையான பஞ்சத்துக்கு இடையிலும் போராடி, எத்தியோப்பியப் படைகளைத் தோற்கடித்து, இந்த மூன்றாவது போர் முனையில் அமெரிக்காவின் மூக்கை அறுத்திருக்கிறார்கள்.
சோமாலியா,ஆப்பிரிக்கக் கண்டத்தின் கிழக்கு முனையில் இந்தியப்பெருங்கடலையொட்டி அமைந்துள்ளது. மேலும், ‹யஸ் கால்வாயின் தென்பகுதி, ஏடன் வளைகுடாவையொட்டி சோமாலியா அமைந்திருப்பதாலும்; உலகில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயில் ஏறத்தாழ 30 சதவீதம் இக்கடல் பகுதிவழியாகத்தான் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்படுவதாலும் "பனிப்போர்'
காலந்தொட்டே சோமாலியாவைத் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர மேல்நிலை வல்லரசுகள் முயன்று வந்தன.
அமெரிக்காவுக்கும் சோவியத் சமூக ஏகாதிபத்திய ரசியாவிற்கும் இடையே பனிப்போர் நடந்து வந்த காலத்தில், அவை, சோமாலியாவையும் அதன் அண்டை நாடான எத்தியோப்பியாவையும் மோதவிட்டுப் பதிலிப் போரை நடத்தின. "ஓகாடேன் போர்'' என்றழைக்கப்பட்ட இப்பதிலிப் போரில்,சோமாலியாவை அமெரிக்காவும், எத்தியோப்பியாவை ரசியாவும் ஆதரித்தன. இப்போரில் சோமாலியா மிகவும் அவமானகரமான தோல்வியைச் சந்தித்தது. இப்போரினையடுத்து, சோமாலியாவில் வசித்துவந்த இனக்குழுக்கள், அமெரிக்கா தயவுடன் அந்நாட்டை ஆண்டு வந்த அதிபர் சியாத் பார்ரேக்கு எதிராகக் கலகம்செய்தன. இந்த உள்நாட்டுக் கலகத்தால் அதிபர் சியாத் பார்ரே 1990களின் ஆரம்பத்தில் பதவியை விட்டு ஓடினான். அதிகாரத்தை யார் கைப்பற்றிக் கொள்வது என்ற போட்டி ஏற்பட்டதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட அமெரிக்கா,ஐ.நா.வின் மூலம் உதவிநிவாரணம் என்ற பெயரில், ஏறத்தாழ 30,000 துருப்புகளை சோமாலியாவில் கொண்டு வந்து இறக்கியது. எனினும், சோமாலியா மக்களின் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டங்களின் காரணமாக, அமெரிக்கா 1995இல் தனது படைகளை சோமாலியாவில் இருந்து விலக்கிக்கொண்டது.
அதன்பிறகு சோமாலியா, ஏறத்தாழ பத்து ஆண்டுகள், தடியெடுத்தவனெல்லாம்
தண்டல்காரன் எனும் வகையில், யுத்தப் பிரபுக்களின் கைகளில் சிக்கிக்கொண்டது. யுத்தப் பிரபுக்களுக்கு இடையே அதிகாரத்துக்கு நடைபெற்றுவந்த நாய்ச்சண்டை, மற்றும் பஞ்சம், பட்டினிக்குள் சிக்கிக் கொண்டு, சோமாலியாசிதைந்து சின்னாபின்னமானது.
இந்நிலையில், சோமாலியாவைச் சேர்ந்த மிதவாத முஸ்லீம் அமைப்புகளும்,
தேசியவாத அமைப்புகளும் இணைந்து, ""இஸ்லாமிய ஐக்கியக் கவுன்சில்'' என்றஅமைப்பை ஏற்படுத்தி, பதவிவெறி கொண்ட யுத்தப் பிரபுக்களுக்கு எதிராகப்போராடத் தொடங்கின. இவ்வமைப்பு, 2006ஆம் ஆண்டு, யுத்தபிரபுக்களைமுற்றிலுமாகத் தோற்கடித்து, சோமாலியா நாட்டின் அதிகாரத்தைக்கைப்பற்றியது.இவ்வமைப்பின் கீழ் சிதறுண்டு கிடந்த நாடு ஒன்றுபடுத்தப்பட்டு, மைய அரசுஏற்படுத்தப்பட்டது. விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்ற பொருளாதாரக் கண்ணிகளும், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற மக்கள் நலன் சேர்ந்த உறுப்புகளும் தொடர்ந்து இயங்கும் வண்ணம் சோமாலியா புனரமைக்கப்பட்டது; ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே குறைந்த கட்டணத்தில் கைபேசி சேவை அளிக்கும் வண்ணம் சோமாலியாவில் ""பொருளாதார வளர்ச்சியும்'' ஏற்படத் தொடங்கியது.
இதனைக் கண்டு அமெரிக்கக் கழுகுக்கும் மூக்கு வியர்க்கத் தொடங்கியது.
சோமாலியா மீது படையெடுக்க வேண்டும் என்றால், உலக நாடுகளின் முன் ஒருகாரணத்தை முன்வைக்க வேண்டும். அதற்காக ஒரு புளுகு மூட்டையைத் தயாரித்தது,அமெரிக்கா. சோமாலியாவை ஆளும் இஸ்லாமிய ஐக்கியக் கவுன்சில்,அல்காயிதாவுடன் தொடர்புடைய அமைப்பு என்றும்; 1998 ஆம் ஆண்டு நைரோபியிலும், தர்இஸ்லாமிலும் அமெரிக்கத் தூதரகங்களுக்குக் குண்டு வைத்தஅல்காயிதா பயங்கரவாதிகளுக்கு, இஸ்லாமிய ஐக்கிய கவுன்சில் சோமாலியாவில்அடைக்கலம் கொடுத்திருப்பதாக ஒரு கோயபல்” பிரச்சாரத்தை நடத்தத்தொடங்கியது, அமெரிக்க அரசு.
"பனிப்போர்' காலத்தில், சோவியத் ரசியாவின் அடியாளாக இருந்தஎத்தியோப்பியா, 2000இல், ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமெரிக்காவின் நம்பகமானகூட்டாளியாக மாறியது. சோமாலியாவுக்கும், எத்தியோப்பியாவுக்கும் இடையே பலபத்தாண்டுகளாக இருந்துவரும் பகையைத் தனது ஆக்கிரமிப்பு நோக்கங்களுக்குப்பயன்படுத்திக் கொண்டது, அமெரிக்கா. இஸ்லாமிய ஐக்கியக் கவுன்சிலால்தோற்கடிக்கப்பட்ட சோமாலியாவின் யுத்தப் பிரபுக்களின் தலைமையில் ஒருபொம்மை அரசை நிறுவும் திட்டமும் அமெரிக்காவில் தயாரானது.
இஸ்லாமிய ஐக்கியக் கவுன்சில் யுத்தப் பிரபுக்களோடு அதிகாரப் பகிர்வுசெய்து கொள்ள முன் வந்து போரைத் தவிர்க்க முயன்றது. ஆனால், அமெரிக்காவோ,எத்தியோப்பியா எல்லையோரம் தலைமறைவாகத் திரிந்த சோமாலியாவின் யுத்தப்பிரபுக்களுக்கு சி.ஐ.ஏ.மூலம் இரகசியமான வழிகளில் ஆயுத உதவி அளித்து, போர்ஏற்பாடுகளை முடுக்கி விட்டது. அமெரிக்காவின் மத்தியப் படையணியின் தளபதிஜான் அபிஸெசூத் எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு நவம்பர் 2006இல்""விஜயம்'' செய்தார். அதற்கு அடுத்த மாதம் எத்தியோப்பியப் படைகள்,சோமாலியாவுக்குள் நுழைந்து, அமெரிக்காவின் ஆசையை நிறைவேற்றி வைத்தன.
"அல்காயிதா பயங்கரவாதிகளை அழித்தொழிப்பது'' என்ற பெயரில் நடத்தப்பட்டஇந்த ஆக்கிரமிப்புப் போரினால், கடந்த இரண்டே ஆண்டுகளுக்குள் 16,000க்கும்மேற்பட்ட சோமாலியா மக்கள் மாண்டு போனார்கள். ஒருகட்டத்தில், இராணுவத்தாக்குதல்களால் அன்றாடம் சாகும் பொதுமக்களின் எண்ணிக்கை, ஈராக்கைவிடசோமாலியாவில் அதிகமானது.
எத்தியோப்பியப் படைகளுக்குத் துணையாக, சோமாலியாவையொட்டிய சர்வதேசக் கடல்பரப்பில் இருந்து அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், ஆடுமேய்க்கும் அப்பாவிகள் 130 பேர் கொல்லப்பட்டனர். அடேன் ஹஷி ஆசூரோ என்ற"பயங்கரவாதியை''க் கொல்ல அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலிலும் பலசாமானிய மக்கள் கொல்லப்பட்டனர்.
எத்தியோப்பிய இராணுவச் சிப்பாய்கள், சோமாலியாப் பெண்களைக் கும்பல் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்துவதும்;அப்பாவி மக்களைத் தொண்டையைஅறுத்துக் கொலை செய்வதும் அன்றாட நிகழ்வுகளாகிப் போனது. இப்பயங்கரவாதப்படுகொலைகள் ஒருபுறமிருக்க, தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்களால்,சோமாலியாத் தலைநகர் மோகாதிஷ் ஆள் அரவமற்ற சுடுகாடாகிப் போனது.தட்டுத்தடுமாறி எழுந்து கொண்டிருந்த சோமாலியாப் பொருளாதாரம், மீண்டும்செயற்கையான பஞ்சத்தை சோமாலியாவின் மீது திணித்தது. இராணுவத் தாக்குதல்கள் மற்றும் பஞ்சம், பட்டினியில் இருந்து தப்பிக்க ஏறத்தாழ 25 இலட்சம்சோமாலியார்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக அலையத் தொடங்கினர்.
பஞ்சத்தைக் காட்டி, நிவாரண உதவி என்ற பெயரில் ஐ.நா. மூக்கை நுழைத்தது.ஐ.நா.வின் இந்த "உதவியை'' பட்டினிக்குள் தள்ளப்பட்ட சோமாலியா மக்களுக்குக் கிடைக்காமல்,அமெரிக்காவால் கொம்பு சீவிவிடப்பட்ட யுத்தப்பிரபுக்கள் தட்டிப் பறித்துக் கொண்டனர். மேலும், சோமாலியாவில் அமைதியை நிலைநாட்டுவது என்ற பெயரில் ஐ.நா. ஆதரவு பெற்ற அமைதிப் படையும்இறக்கிவிடப்பட்டது.
அமைதிப் படையோ, அமெரிக்கா திணித்த பொம்மை அரசைக் காக்கும் பணியைத்திறம்படச் செய்தது. சோமாலியா கடற்பரப்பில் நடக்கும் கடற்கொள்ளையைத்தடுப்பது என்ற பெயரில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தங்கள்கடற்படையை சோமாலியா கடற்பரப்பில் நிறுத்திக் கொள்ளும் அனுமதியும் ஐ.நா.வால் வழங்கப்பட்டது, இப்படியாக, ஐ.நா.வின் ஆசியோடு, சோமாலியாவை அடிமைப்படுத்தும் அமெரிக்காவின் திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்தது.எனினும், அமெரிக்காவின் ஆதிக்கக் கனவு முழுமையாகக் கைகூடவில்லை. பட்டினிபோட்டும், ஏவுகணைத் தாக்குதல்களால் பயமுறுத்தியும் சோமாலியாவைஅடிமைப்படுத்திவிடலாம் என்ற அமெரிக்காவின் திட்டத்தை, சோமாலியா மக்களின்ஆயுதப் போராட்டம் முறியடித்துவிட்டது. ஜார்ஜ் புஷ், அமெரிக்க அதிபர்பதவியில் இருந்து இறங்கிய அதே சமயத்தில், எத்தியோப்பியப் படைகள்சோமாலியாவில் இருந்து புறமுதுகிட்டு ஓடிப் போயின.ஆப்பிரிக்கக் கண்டம் முழுவதையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரவேண்டும் என்ற அமெரிக்காவின் மாபெரும் திட்டத்தின் ஒரு பகுதிதான்சோமாலியா ஆக்கிரமிப்பு. எத்தியோப்பியப் படைகள் சோமாலியாவை விட்டுவிலகிவிட்டாலும், அமெரிக்கா சி.ஐ.ஏ. மூலம் சோமாலியா யுத்தப்பிரபுக்களுக்கு இரகசியமாக ஆயுத உதவி செவதை நிறுத்தவில்லை என முதலாளித்துவப் பத்திரிகைகளே அம்பலப்படுத்துகின்றன. சோமாலியா, சூடான், எரிட்ரீயா ஆகிய நாடுகளைக் கண்காணிக்க ஆப்பிரிக்காவின் கிழக்கு முனையில் ஏற்கனவே 1,800 அமெரிக்கச் சிப்பாய்களோடு இராணுவத்தளம்அமைத்து இயக்கி வரும் அமெரிக்கா, தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டம்முழுவதிலும் தனது ஆதிக்கத்தை விரிவாக்க, ""ஆப்ரிகாம்'' என்ற பெயரில்புதிய படை அணியொன்றையே உருவாக்கியிருக்கிறது. ஆப்பிரிக்காவின் எண்ணெய்
வளத்தையும்; வைரம், யுரேனியம் போன்ற மூல வளங்களையும் கைப்பற்றிக்
கொள்வதுதான், அமெரிக்க மேலாதிக்கத்தின் நோக்கம்.
சோமாலியாவில் இருந்து எத்தியோப்பியப் படைகள் விலகிய பிறகு, அந்நாட்டில்மீண்டும் இஸ்லாமிய ஐக்கியக் கவுன்சிலின் ஆட்சி அமைந்துள்ளது. எனினும்,அமெரிக்காவின் இராணுவ முற்றுகையை எதிர்த்து ஆயுதந்தாங்கிப் போராடியஇஸ்லாமிய ஐக்கியக் கவுன்சிலின் ஆயுதப்படையான அல்ஷாபாபில் முஸ்லீம்தீவிரவாதிகளின் செல்வாக்கு ஓங்கிவிட்டதாகவும், அவ்வமைப்பு சோமாலியாவில்தனக்குச் செல்வாக்கு உள்ள பகுதிகளில் ஷாரியத் சட்டத்தைஅமல்படுத்திவருவதாகவும் முதலாளித்துவப் பத்திரிக்கைகள் புலம்புகின்றன.இப்போக்குக் கவலைக்குரிய விசயம்தான் என்றாலும், வினை விதைத்துவிட்டு தினைஅறுக்க அமெரிக்க ஆதரவாளர்கள் ஆசைப்படலாமா?
நன்றி : அயூப்கான்

ஏப்ரல் 25, 2010

செல்போனின் தரத்தை அறிவது எப்படி?

காலையில் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தது முதல் இரவு தூங்கப்போகும் வரை உபயோகப் படுத்தக்கூடிய பொருட்கள் எல்லாமே தரமானதாக இருக்க வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் விரும்புவோம். அப்படி அன்றாடம் உபயோகிக்கக்கூடிய பொருள்களில் செல்போன் அதிமுக்கியமான பொருளாக மாறியுள்ள கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குடும்பத்திற்கு ஒன்று என்றிருந்த நிலை மாறிப்போய் தனி நபரொருவர், ஒன்றிற்கு மேல் செல்போன்களை பயன்படுத்துகின்ற சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறோம். செல்போன்களை அதிகமான நேரம் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அதிகளவில் இருக்கிறது என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது, இன்ஷா அல்லாஹ் பாதிப்புகள் குறித்து பிறகு வரக்கூடிய பதிப்புகள் மூலம் தெரிந்து கொள்வோம்.இந்த செய்தியின் மூலம் நாம் வாங்கியிருக்கின்ற அல்லது வாங்கப்போகின்ற செல்போன்களின் தரம் என்ன என்பதை தெரிந்துக் கொள்வோம். அதாவது நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருள்களின் தரம் உயர்ந்த அல்லது குறைவான அல்லது போலியான பொருட்கள் மார்க்கெட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்ற சூழலில் செல்போனின் தரத்தை எதனை அடிப்படையாக கொண்டு நிர்ணயிப்பது பற்றி அறிவோம்.

உங்களுடைய செல்போனில் *#06# என்று அழுத்திய உடன் நீங்கள் பயன்படுத்தக் கூடிய செல்போனில் அடையாள நம்பர் 15 இலக்கங்களில் தெரியவரும். அப்படி கிடைக்ககூடிய எண்களில் 7 மற்றும் 8வதாக வரக்கூடிய எண்களை கீழ்கண்ட பட்டியலோடு ஒப்பிட்டு பார்த்து உங்களின் செல்போனின் தரத்தை அறிந்து கொள்ளுங்கள்.

7 மற்றும் 8வது எண் 00 என்றிருந்தால் தரமான தொழிற்சாலையில் தயாரித்தது என்பது மட்டுமல்ல உங்களின் செல்போனும் மிக மிக தரம் உயர்ந்தது என்பதை குறிக்கும். (மிக மிக நன்று)

7 மற்றும் 8வது எண் 01 அல்லது 10 என்றிருந்தால் தயாரித்த நாட்டின் பெயர் பின்லாந்து மற்றும் தரமான பொருள் என்பதை குறிக்கும். (மிக நன்று)7 மற்றும் 8வது எண் 08 அல்லது 80 என்றிருந்தால் தயாரித்த நாட்டின் பெயர் ஜெர்மனி மற்றும் தரம் தாழ்ந்தது அல்ல என்பதை குறிக்கும். (நன்று)

7 மற்றும் 8வது எண் 02 அல்லது 20 என்றிருந்தால் ஒருங்கிணைப்பு செய்தது துபாயில். தரமான பொருள் அல்ல என்பதை குறிக்கும். (சுமார்)

7 மற்றும் 8வது எண் 13 என்றிருந்தால் ஒருங்கிணைப்பு செய்தது அஜேர்பயிஜான்;. தரம் குறைந்த பொருள் மற்றும் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்ககூடியதுமாகும். (மோசம்)

மேற்சொன்ன செய்திகள் அனைத்தும் எதிர்வரும் காலங்களில் தரமான பொருள்களை தேர்ந்தெடுக்க உதவியாக இருக்கும் என்பதற்காகவே இந்த தகவல்களை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆப்கானை விட்டு வெளியேறுகிறது நேட்டோ


தாலின்(எஸ்தோனியா):ஆப்கானிஸ்தானில் நேட்டோ தலைமையிலான அந்நிய ஆக்கிரமிப்பு படையினர் மக்கள் ஆதரவை இழந்துள்ள சூழலில் ஆப்கானிலிருந்து வெளியேற அமெரிக்காவும், நேட்டோவும் தீர்மானித்துள்ளன.
எஸ்தோனியா நாட்டின் தாலினில் நடைபெற்ற நேட்டோ வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மாநாட்டில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. நேட்டோ படையினர் ஆப்கானிஸ்தானை விட்டு இவ்வாண்டு நவம்பர் முதல் வெளியேற ஆரம்பிப்பர்.ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரிடம் ஆப்கானிஸ்தானி பாதுகாப்பு பொறுப்பை ஒப்படைப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது. அதிகாரத்தை ஒப்படைப்பதற்கான ஒப்பந்தத்தில் இம்மாதம் ஜுலையில் கையெழுத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஆப்கானில் ஸ்திரத்தன்மையையும், பாதுகாப்பையும் உறுதிச் செய்ய பல ஆண்டுகள் தேவைப்படும் எனக்கூறிய நேட்டோ நாடுகள் அதுவரை ஆப்கானில் குறைந்த அளவில் செயல்படவும் தீர்மானித்துள்ளன.2011 ஆம் ஆண்டு ஜுலையில் அமெரிக்க ராணுவம் ஆப்கானிலிருந்து வாபஸ் பெற துவங்கும் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என ஹிலாரி கிளிண்டன் மாநாட்டில் அறிவித்தார்.தாலிபான் வலுவாக உள்ள காந்தஹாரில் கடுமையான ராணுவ நடவடிக்கையை துவக்குவதற்கு தயாரான சூழலில்தான் நேட்டோ படையினரின் வாபஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.





செய்தி:மாத்யமம்

ஏப்ரல் 24, 2010

மறுக்கப்பட்ட நீதி -குணங்குடி ஹனிபா

புனையப்பட்ட பல்வேறு வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டப் பின்னும் நீதி மறுக்கப்பட்ட நிலையில் பல ஆண்டுகாலங்களாக சிறைச்சாலையில் வாழும் குணங்குடி ஹனிபா அவர்களோடு



நன்றி :ஜுவி

ஏப்ரல் 23, 2010

ஈரானின் ராணுவ பலத்தை இஸ்ரேலால் எதிர்க்கொள்ள இயலாது: ஈரான் பாதுகாப்புத்துறை அமைச்சர்

தெஹ்ரான்:ஈரானின் ராணுவ பலத்தை எதிர்க்கொள்ள இஸ்ரேலுக்கு துணிவில்லை என்று ஈரானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் அஹ்மத் வாஹிதி தெரிவித்தார்.ஈரானின் வடக்கு நகரான பபோலில் FNA வுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்தார்.’ஈரானின் ராணுவ மற்றும் ஆன்மீக பலம் இஸ்ரேலுக்கு மரணத்தையும் துயரத்தையும் விளைவிக்கும்.’ இஸ்ரேல் சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் சந்தித்துவரும் பிரச்சனைகளை நினைவுக்கூறிய வாஹிதி ,’சியோனிஷ அரசு சர்வதேச தனிமைப்படுத்தப்படுதலிருந்தும், உள்நாட்டுப் பிரச்சனையிலிருந்தும் தப்பிக்கலாம் என கற்பனைச் செய்கிறது. ஆனால் அது தோல்வியையே தழுவும்.மேற்கு கரையும், பைத்துல் முகத்தஸும் இன்று சியோனிஷ அரசுக்கு முக்கிய பிரச்சனையாக திகழ்கிறது. இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் இஸ்ரேல் நாசத்தை விளைவிக்கும் பதிலடியை ஈரானின் படைகளிடமிருந்து எதிர் கொள்ளவேண்டி வரும்.லெபனானுக்கு எதிராக நடந்த 33 நாள் போரை விட கடுமையான விளைவுகள் ஏற்படும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஈரானுக்கெதிரான அணுஆயுத அச்சுறுத்தல் மனித இனத்தை அழிப்பதற்கான அந்நாடுகளிலிருந்து வரும் அடையாளமாகும்.வாஹிதி இதனை தெரிவிப்பதற்கான காரணம் என்னவெனின்ல் சமீபத்தில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா,ஈரான் மற்றும் வடகொரியாவுக்கெதிராக அணு ஆயுத தாக்குதல் குறித்து அச்சுறுத்தினார்.அணுஆயுதக் குறைப்பை பற்றி ஒரு பக்கம் பேசும் அமெரிக்கா டெஹ்ரான் மற்றும் பியோங்யாங் (வடகொரியா தலைநகர்)கிற்கு எதிராக அணு ஆயுத தாக்குதலை குறித்தும் பேசுகிறது. ஒபாமாவின் அச்சுறுத்தலைப் பற்றிக் குறிப்பிட்ட ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத் ஒபாமாவிற்கு அனுபவம் போதவில்லை எனத்தெரிவித்தார்.ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லாஹ் காமினி ஈரானின் புரட்சிப் படையினர் மற்றும் ராணுவ கமாண்டர்கள் கலந்துக் கொண்ட நிகழ்ச்சியில் உரையாற்றுகையில், அமெரிக்காவின் அணுஆயுத அச்சுறுத்தலைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது,’ஒபாமாவின் அறிக்கை ஆச்சரியமாக உள்ளது. உலகம் இதனை ஊன்று கவனிக்க வேண்டும்.21 ஆம் நூற்றாண்டில் அணுஆயுத தாக்குதலைக் குறித்துப் பேசும் அமெரிக்காதான் மனித உரிமைகளுக்கு ஆதரவாகவும், தீவிரவாதத்திற்கு எதிராகவும் பிரச்சாரம் செய்கிறது.’ என்றார்.ஈரானின் தரைப்படை கமாண்டர் பிரிகேடியர் ஜெனரல் அஹ்மத் ரசா போர்டஸ்டான் கடந்த புதன் கிழமை கூறுகையில்,’ஈரானின் தரை,கப்பல்,விமானப்படைகள் நாட்டிற்கெதிரான அச்சுறுத்தலை எதிர்க்க தயாராக உள்ளது என்றார்.மேலும் அவர் தெரிவிக்கையில், ’ஆயுதப்படைகள் எந்த அச்சுறுத்தலுக்கும் பதிலடிக் கொடுக்க எந்நேரமும் விழிப்புடனும், தயாராகவும் இருக்கின்றன’ என்றார்.

Source:FARSNEWS

ஏப்ரல் 22, 2010

இந்தியத் தூதரகங்களில் அதிகாரிகள் பற்றாக்குறை: மக்களவையில் அப்துல் ரகுமான் எம்.பி



வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களில் அதிகாரிகள் போதுமான அளவில் பணியில் இல்லை என்றும் இதனால் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்குப் போதுமான உதவிகளும் ஒத்தாசைகளும் கிடைப்பதில்லை என்றும் வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் அப்துல் ரகுமான் மக்களவையில் குற்றம் சாட்டினார்.
வெளியுறவுத்துறை அமைச்சக மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கடந்த செவ்வாய்க் கிழமை (20-04-2010) அன்று அவர் கலந்து கொண்டு பேசியதாவது:

இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வெளிநாடுகளில் வசித்து வந்தவன் என்ற முறையில் எனக்கு வெளிநாடு வாழ் இந்தியர்களின் நிலை தெளிவாகத் தெரியும். அவர்கள் என்ன பிரச்சினைகளை எல்லாம் சந்திக்கின்றனர் என்பதை நன்கு அறிவேன். அவர்களில் மிகுதமானோர் கல்வி கற்காத நிலையில் உள்ளனர். அவர்களுக்கு வேலைவாங்கித் தரும் ஏஜென்டுகளில் மற்றும் அந்நாட்டின் வேலை தரும் நிறுவனங்களால் பலர் ஏமாற்றப்படுகின்றனர். இதனால் வெளிநாடுகளில் அவர்கள் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்கும் நிலையும் ஏற்படுகிறது. அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. மேலும் சரிவர உதவியும் ஓத்துழைப்பும் கிடைப்பதில்லை. இந்திய தூதரகத்தினர் பல உதவிகள் செய்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அங்கு தேவையான அளவில் அதிகாரிகள் பணியில் இல்லை. மிக குறைந்த அளவில் இரண்டு அல்லது நான்கு என்ற அளவில் தான் இருக்கிறார்கள். இந்த நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு போதுமான உதவிகளும் ஒத்தாசைகளும் கிடைப்பதில்லை.

இந்திய அரசு ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய பணியாளர்களுக்காக இந்திய மக்கள் நலக்குழு ( INDIAN COMMUNITY WELFARE COMMITTEE ) என்ற பெயரில் நலக்குழுவை அமைத்து நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. இதுபோல மற்ற நாடுகளிலும் அமைத்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் பாதுகாப்புடன் வாழ வழிவகுக்க வேண்டும். அது அவசரமாக அமல்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும். அதற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்.

இலங்கைத் தமிழ் மக்களின் நிலையை ஆய்வு செய்ய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் நாடாளுமன்றக் குழுவினரை இலங்கைக்கு அனுப்பி வைத்தார். தமிழக அரசின் தகவலின் அடிப்படையில் இந்திய அரசால் இலங்கை தமிழர் மறுவாழ்வுக்காக ரூபாய் 500 போடி அறிவிக்கப்பட்டு, ரூபாய் 90 கோடி ஒதுக்கப்பட்டும் வெறும் ரூபாய் 63 கோடி மட்டுமே செலவிடப்பட்டிருப்பது கவலைக்குறிய விசயமாகும். மாண்புமிகு வெளிவுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணன் அவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

அதுபோல சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கான உதவிகளை இந்திய அரசு செய்ய வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் சொந்த மொழியில் புகார் அளித்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண வழி வகை செய்ய வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டு உரிமை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இதை வரும் தேர்தலிருந்தே நடைமுறைபடுத்த வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

மக்கள் தொகை ஓவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஹஜ் பயணத்துக்காக தமிழகத்துக்கு 3000துக்கு சற்று கூடுதலான இடங்கள் மட்டுமே ஓதுக்கப்பட்டுள்ளது. நான் பிரதிநிதித்துவம் வகிக்கும் வேலூர் தொகுதியில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேல் ஹஜ் பயணம் மேற்கொள்வோர் உள்ளனர். எனவே தமிழகத்துக்கு ஹஜ் பயண இடஓதுக்கீட்டை இரண்டு மடங்கு அதிகரிக்கும்படி மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு மக்களவையில் எம். அப்துல் ரஹ்மான் பேசினார்.


ஆஃப்கானில் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் உற்பத்தியில் மேற்குலக படைகளின் பங்களிப்பு - ஆஃப்கான் எம்.பி


கள்ளத்தனமான போதை பொருட்களை வெளிநாட்டு இராணுவத்தினர் உற்பத்தி செய்து கடத்துவதாக ஆஃப்கானின் எம்.பி நஸிமா நியாஜி தகவல்களை வெளியிட்டுள்ளார்.
மேலும் கஞ்சா செடியை எப்படி பயிரிட்டு வளர்ப்பது என்பது பற்றி ஆப்கன் மக்களுக்கு பிரிட்டிஷ் இராணுவத்தினர் பயிற்சி கொடுப்பதாகவும் தகவல் தெரிவித்தார்.

ஆஃப்கனின் அந்நியப்படைகள் தொடர்ந்து இருக்கும் வரை கஞ்சா பயிரிடுவதும், வளர்ப்பதும் மற்றும் கஞ்சா கடத்தலும் தொடரும் என எஃப்.என்.ஏ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த நஸிமா நியாஜி கூறினார்.

ஆஃகானில் அந்நிய இராணுவத்தின் செலவுகளை ஈடுசெய்யும் அளவிற்கு ஹெல்மண்ட் பிராந்தியத்தில் அப்படைகள் பயிரிடும் கஞ்சாக்கள் நிவர்த்தி செய்கின்றன. அமெரிக்கா ஆஃப்கானில் நுழைவதற்கு முன்பாக ஒரு கடுகளவேனும் ஹெராயின் இப்பிராந்தியத்தில் இல்லை என்றும் நியாஜி கூறினார்.

தான் அந்த பிராந்தியத்திற்கு சென்ற பொழுது அந்நியப்படைகள் கஞ்சா செடிகளை அழிப்பது போல் பாவலா காட்டினார்கள். ஆனால் எதார்த்தத்தில் அந்நியப்படைகள் தான் பயிரிட்டு வளர்த்து வருகிறார்கள் என்பதை தனது ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்ததாக கூறினார் அந்த பெண்மணி.

மேலும் அவர் கூறுகையில் ஆயுதம் தரிக்காத வாழ வசதியில்லாத தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்காக பயிரிடும் ஏழை விவசாயிகளின் பயிர்களை மட்டும் அழித்துவிட்டு பெரும் பணக்காரர்களின் கஞ்சாப் பயிர்களை மட்டும் பாதுகாக்கின்றனர் இந்த அந்நியப்படைகள்.

2001-ல் அமெரிக்கப்படைகள் ஆஃகானை கைப்பற்றியதிலிருந்து 40 மடங்கு கஞ்சா உற்பத்தி அதிகரித்துள்ளதாக ஈரான் அறிவிக்கிறது.ஐக்கிய நாடுகள் சபையுடன் சேர்ந்து ஈரான் உலக அளவில் கஞ்சா கடத்தலை கட்டுப்படுத்துவதற்காக முயன்று வருகிறது.

தாலிபான்கள் தங்களால் முடிந்த அளவு எல்லா கஞ்சா பயிற்களையும் அழித்து வந்தார்கள். தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பொழுது 185 டன்கள் மட்டுமே வருடத்திற்கு உற்பத்தி செய்யப்பட்டன, ஆனால் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வந்த பிறகு 3400 டன்கள் வருடத்திற்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. 2007-ல் மட்டும் 8200 டன்கள் வருடத்திற்கு உற்பத்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேற்குலகமும் ஆஃகான் அரசும் அமெரிக்காவை இந்த விஷயத்தில் குற்றம் சுமத்துகின்றன. வாஷிங்டன் கஞ்சா உற்பத்தியை சிறிதும் கண்டுகொள்ள வில்லை, மாறாக ஒட்டு மொத்த பலனையும் இதன் மூலம் பெற்று வருகின்றது என்றார்.
நன்றி :Farsnews

ஏப்ரல் 21, 2010

370 வயதாகும் சென்னை- மதராஸ்-மதரசா பட்டண‌ம். வரலாறு




மதரசா பட்டண‌ம் – மதராஸ் - சென்னையில் முதலில் குடியேறியவர்கள் முஸ்லீம்கள் - ஆற்காடு நவாப்.. சென்னையின் முதல் மசூதியைக் கட்டியவர் ஒரு இந்து வியாபாரி. புனித தாமஸின் கல்லறையை (இப்போது சாந்தோம்) அங்குள்ள முஸ்லீம்கள்தான் பாதுகாத்து, பராமரித்து வந்தனராம்.

சென்னை: மயிலாப்பூர் என்றால் உடனே நினைவுக்கு வருவது பிராமண சமூகத்தினர்தான். ஆனால் ஒரு காலத்தில் அங்கு பெரும்பான்மையாக வசித்தவர்கள் முஸ்லீம்கள் என்றால் நம்ப முடிகிறதா?. நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறார் ஆற்காடு இளவரசர் நவாப் முகம்மது அப்துல் அலி.13வது நூற்றாண்டின் தொடக்கத்திலேயே சென்னை நகரில் முஸ்லீம்கள் குடியேறி விட்டனராம். மெட்ராஸ் முஸ்லீம்கள் மற்றும் மசூதிகள் என்ற பெயரில் ஒரு ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை இயக்கியிருப்பவர் எஸ்.அன்வர். இந்த டாக்குமென்டரி குறித்து அன்வரும், ஆற்காடு நவாப்பும் செய்தியாளர்களிடம் கூறுகையில், வெனிஸ் நகரத்து வியாபாரியான மார்க்கோபோலா, தனது சுற்றுலா கையேட்டில் அந்தக் காலத்து சென்னை நகர வாழ்க்கை குறித்து தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.அதில், 13வது நூற்றாண்டில் மயிலாப்பூர் பகுதியில் முஸ்லீம்கள் பெருமளவில் வாழ்ந்ததாக அவர் கூறியுள்ளார். போர்ச்சுகீசியரான டுவார்ட் பார்போசா தனது நூலில் கூறுகையில், 16வது நூற்றாண்டின் தொடக்கத்தில், மயிலாப்பூரில் உள்ள புனித தாமஸின் கல்லறையை (இப்போது சாந்தோம்) அங்குள்ள முஸ்லீம்கள்தான் பாதுகாத்து, பராமரித்து வந்தனராம்.மதரசா பட்டனம் என்பதுதான் உருமாறி மதராஸ் என்று வந்திருக்கலாம் என்றும் ஒரு கருத்து உள்ளது. சைதாப்பேட்டை ஆன சைதாபாத்...அதேபோல இன்று அழைக்கப்படும் சைதாப்பேட்டை முன்பு சைதாபாத் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்துள்ளது. அங்கு 18வது நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆற்காடு நவாப் சதாத்துல்லா கான் ஒரு மசூதியைக் கட்டி அந்தப் பகுதிக்கு சைதாபாத் என்று பெயரிட்டார்.அதேபோல சென்னையின் முதல் மசூதியைக் கட்டியவர் ஒரு இந்து வியாபாரி என்பது சுவாரஸ்யமான விஷயம். அவரது பெயர் காசி வீரண்ணா. மூர் தெருவில் 1670களில் அவர் ஒரு மசூதியைக் கட்டினார். காசி வீரண்ணாவுக்கு கோல்கண்டா சுல்தான்களுடன் நல்ல தொடர்பு இருந்தது.ஆங்கிலேயர்கள் நமது நாட்டுக்கு வந்தபோது நமது நாட்டில் நிலவிய சமூக நல்லிணக்கத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. காரணம், அப்போது மக்கள் மத ரீதியாகவ பிரிந்து கிடக்கவில்லை. அனைவரும் ஒன்றாக, நல்லிணக்கத்துடன் வசித்து வந்தனர்.உதாரணத்திற்கு, முஸ்லீம் மன்னர்கள் இந்துக்களை உயர் அதிகாரிகளாக வைத்திருந்தனர். விஜய நகர மன்னர்கள், முஸ்லீம்களை உயர் பதவிகளில் வைத்திருந்தனர்.இந்தியாவின் ஆத்மாவாக அப்போதே மதச்சார்பின்மை இருந்து வந்துள்ளது. அப்போது அனைத்து மதத்தினரும் சம உரிமைகளுடன், சம அந்தஸ்துடன் வாழ்ந்து வந்துள்ளனர்.ஆற்காடு நவாப் வம்சத்தினர் ஏராளமான கோவில்களுக்கும், சர்ச்சுகளுக்கும் பெருமளவில் நிலங்களை, நிதியை தானமாக அளித்துள்ளதே நல்லிணக்கத்திற்கு நல்ல சான்றாகும்.இவையெல்லாம் நமது நாட்டின் அருமையான மத நல்லிணக்கத்திற்கு சான்றுகள் ஆகும் என்றனர்.


நன்றி: இளையான்குடி குரல்






அரைகுறை ஆடைகளை அணிவதாலும் கண்மூடித்தனமான உறவுகள் வைப்பதனாலும் பூகம்பங்கள் ஏற்படுகின்றன - ஈரான் உலமா

பெண்கள் அறைகுறையாக அணியும் ஆடைகள், மார்க்கத்திற்கு புறம்பான வகையில் கண்மூடித்தனமாக ஆண்களிடம் உறவுகளை பேணும் பெண்களினால் தான் பூகம்பங்கள் ஏற்படுகின்றன என்று ஈரான் நாட்டின் மூத்த உலமா ஒருவர் தெரிவித்துள்ளார்.அண்மையில் ஈரான் அதிபர் அஹ்மத்நிஜாத், மிகப்பெரிய பூகம்பம் ஒன்று விரைவில் தெஹரானை தாக்கவுள்ளது, அதனால் தெஹ்ரானில் வாழும் 12 மில்லியன் மக்கள் தங்கள் வசிப்பிடத்தை மாற்றுமாறு கூறியிருந்தார்.அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை குத்பாவில் உரையாற்றிய இந்த உலமா, நிறைய பெண்கள் அடக்கமாக ஆடைகளை அணிவதில்லை. இது ஆண்களை வழிதவறச் செய்கிறது, தங்கள் மானத்தை காப்பாற்ற தவறிவிட்டார்கள், விபச்சாரத்திலும் ஈடுபடுகிறார்கள். இதனால் இன்றைய நாட்களில் பூகம்பங்கள் போன்ற இயற்க்கை சீற்றங்கள் அதிகம் நிகழ்கின்றன என்றார்.ஈரானிய இஸ்லாமிய நாட்டில் வாழும் பெண்கள் தங்கள் ஆடைகளை தலையிலிருந்து பாதம்வரை மறைத்திருக்க வேண்டும். ஆனால் நிறைய பெண்கள் குறிப்பாக இளைஞிகள் இஸ்லாத்தை பின்பற்றுவதில்லை என்றும், மிகவும் இறுக்கமான ஆடைகளை அவர்கள் அணிவதாகவும், தலைஅணிகள் பாதி இழுத்தபடி அனைத்து உரோமங்களை காட்டும் படி நடப்பதால் இறைவனின் கோபப்பார்வையினால் பூகம்பங்கள் ஏற்படுகின்றன என்றார்.மண்ணிற்குள் புதைவதில் இருந்து நாம் எப்படி தப்ப முடியும்? இறைவனிடம் மன்னிப்பு கேட்டு தஞ்சம் அடைவதும் , இஸ்லாமிய முறைப்படி நம் வாழ்க்கையை அமைப்பதும் தவிற வேறு எந்த வழியும் இல்லை என்றார் அந்த உலமா.ஒரு உயர்ந்த பண்டிதர் எனக்கு சொல்லி இருந்தார், மக்கள் அனைவரும் தம்மை படைத்தவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். இயற்கை சீற்றங்கள் நம்மை நெருங்குகின்றன என்று! தெஹ்ரானை ஒரு பூகம்பம் தாக்கும் பட்சத்தில் இறைவனின் அருள் மட்டும்தான் அதை எதிர்கொள்ள உதவும், ஆதலால் நாம் நம் இறைவனை ஏமாற்றமடையச் செய்ய வேண்டாம் என்று தன் ஜும்மா உரையை முடித்தார் காஸிம் சேதுகி என்ற அந்த உலமா.ஈரானின் ஒரு அமைச்சர் கூறுகையில், மன்னிப்பும் இறைவனை துதி செய்வதும் தான் இது போல பூகம்பங்களை சமாளிக்கும் சூத்திரமாகும் என்று தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில் நம்மால் பூகம்பத்தை நிறுத்த எந்த ஒரு கருவியையும் உருவாக்க முடியாது. மாறாக அது இறைவனின் சட்டகம், அதிலிருந்து தப்பிக்க இறைவனை வணங்க வேண்டும், பாவங்களை தவிர்க்க வேண்டும், பாவ மன்னிப்பை கோர வேண்டும், தருமம் செய்ய வேண்டும் மற்றும் தன்னை சுயமாக இறைவனின் பாதையில் அர்ப்பணிக்க வேண்டும் என்றார் மஹ்ஸூலி.முன்னதாக, பெரிய வகையான பூகம்பம் ஒன்று தாக்கவுள்ளதாக ஆராய்ச்சி நிபுனர்கள் அரசிற்கு எச்சரிகை விடுத்திருந்தனர். 2003ஆம் ஆண்டில், ஈரானின் பாம் என்ற இடத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் சுமார் 31,000 உயிர்கள் மாண்டன. பாமின் ஜனத்தொகையின் கால்வாசி தொகை அது. பழைய கலாச்சார சின்னங்கள் அனைத்தும் அளிந்தன.

source: Times Of India & பாலைவனத் தூது

ஏப்ரல் 20, 2010

காஸ்ஸா நிலைகுலையாமல் இருப்பதற்கு காரணம் என்ன?

ரஃபா: நான்கு ஆண்டுகளாக தொடரும் இஸ்ரேலின் தடையை காஸ்ஸாவாசிகள் எவ்வாறு எதிர்த்து நிற்கின்றார்கள்? என்ற கேள்வி நம் முன்னால் எழுகிறது. அதற்கு பதில் சுரங்கங்கள் மூலமாகத்தான் என்பதாகும்.
காஸ்ஸா-எகிப்து எல்லையில் சுரங்க நிர்மாணம் ஒரு குடிசைத் தொழிலாக வளர்ந்து வருகிறது. இத்தொழில் ஏற்பட்டுள்ள போட்டிக் காரணமாக சுரங்கங்கள் தோண்டுவது அவ்வளவு லாபகரமானதாக இல்லை என்று கூறுகிறார் ஃபலஸ்தீனைச் சார்ந்த இளைஞர் ஒருவர்.
சமீபத்தில் பிரிட்டன் பாராளுமன்றம் தயாராக்கிய ஒரு அறிக்கையின்படி 73 அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே காஸ்ஸாவிற்குள் செல்ல இஸ்ரேல் அனுமதித்துள்ளது. ஆனால் காஸ்ஸாவிலுள்ள கடைகளில் 4000க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனைக்கு உள்ளது. அதுமட்டுமல்ல சமீபத்தில் சிமெண்டின் விலை 90 சதவீதம் குறைந்துள்ளது. இஸ்ரேலால் தகர்க்கப்பட்ட 4000க்கும் மேற்பட்ட வீடுகளின் நிர்மாணம் தற்ப்பொழுது வேகமாக நடைபெற்றுவருகிறது.
இஸ்ரேலால் மேற்குக்கரையில் வழங்கப்படும் பெட்ரோல், டீசல் விலையை விட காஸ்ஸாவில் கிடைக்கும் பெட்ரோல், டீசலின் விலை மிகக்குறைவாகும். இவையெல்லாம் எகிப்திலிருந்து சுரங்கங்கள் வழியாக வருகிறது.
அரபு இளைஞர்கள் தங்கள் திறமையை காட்ட பயன்படுத்தும் ஃபோர் வீல் ட்ரைவ் வரை காஸ்ஸாவில் காணமுடிகிறது. சுரங்கங்கள் நிர்மாணிப்பதை தடுக்க இஸ்ரேல் அடிக்கடி குண்டுவீசும். அமெரிக்காவின் நிர்பந்தம் பொறுக்க முடியாத சூழல் வரும்பொழுது எகிப்திய அதிகாரிகள் கட்டுப்பாட்டை விதிப்பார்கள். தற்ப்பொழுது எல்லையில் ஸ்டீல் சுவர் கட்டுவதற்கான முயற்சியில் எகிப்து ஈடுபட்டுள்ளது. ஆனால் அரசியல் நிர்பந்தம்,மற்றும் சர்வதேச அளவிலான காஸ்ஸா மக்களுக்கான ஆதரவும் காரணமாக தீவிர நடவடிக்கைகளில் ஈடுபடாமலிருக்கிறது எகிப்து ஹுஸ்னி முபாரக்கின் அரசு.
இஸ்ரேலிய கொடூரத் தாக்குதலுக்கு பிறகு ஹமாஸ் இடிபாடுகளை மாற்றுவதற்கும், மின்சாரம், நீர் ஆகியவை புனர்நிர்மாணிக்கவும் முக்கியத்துவம் அளித்திருந்தது. அதனால் ஹமாஸுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்தது. அமெரிக்க தடையின் காரணமாக வங்கிகளின் செயல்பாடுகள் ஸ்தம்பித்தாலும் ஹவாலா மூலமாக பட்டுவாடா நடைபெறுகிறது. மஹ்மூத் அப்பாஸின் கட்டுப்பாட்டிலிருக்கும் மேற்குகரையை விட இது பரவாயில்லை என்பது காஸ்ஸா மக்களின் கருத்து.
இதற்கிடையே ஹமாஸை பலகீனப்படுத்துவதற்கான முயற்சிகளும் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் இஸ்ரேல் மீது தொடுக்கப்பட்ட ஏவுகணை தாக்கி ஒரு தாய்லாந்து பிரஜையான விவசாயிக் கொல்லப்பட்டதற்கான பின்னணியும் இதுதான் காரணம் என கருதப்படுகிறது.
சவூதி அரேபியாவின் ஆதரவுடன் தீவிர பிரிவான ஸலஃபி அமைப்பு ஒன்று இஸ்லாமிய கிலாஃபத் நிர்மாணிப்பது குறித்து பிரச்சாரம் செய்துவருகிறது. ஆனால் தாடி மற்றும் ஆடையின் நீளம் பற்றித்தான் அவர்களுக்கு முக்கிய கவலை. ஸல்ஸலா என்ற பிரிவும் சில இடங்களில் செயல்பட்டு வருகிறது. நான்கு வருடங்களாக தளராமல் உறுதியாக நிற்கும் ஹமாஸை தடைகள் மூலம் தோற்கடிப்பது இயலாத காரியம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
மொஸாத்-சி.ஐ.ஏ பாதுகாப்பில் வசித்துவரும் மஹ்மூத் அப்பாஸின் கோமாளித்தனமான விளையாட்டுத்தான ஹமாஸின் ஆதரவை அதிகரிக்கச் செய்கிறது.

நிவாரண உதவிகள்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கொள்ளுமேட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன் நள்ளிரவில் கடைத்தெருவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குடிசைக் கடைகள் எரிந்து சாம்பலானது.பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு உதவும் வகையில் கொள்ளுமேடு கிளை தமுமுகவினரால் பொதுமக்களிடம் நிவாரண நிதி வசூலிக்கப்பட்டது.பாதிக்கப்பட்ட வியாபாரிகளான ஷேக் கிற்கு ரூ. 8500 , அப்துல்லாவிற்கு ரூ.7000 ,யூனுஸ் க்கு ரூ. 5000 , பக்கிர்சவுக்கு ரூ.3500 , ஒபி,உபைது,பாபு,அன்வர்,ஜகரியா,ஆகியோருக்கு தலா ரூ.1000 , ராஜாவுக்கு ரூ.1075 ம் வழங்கப்பட்டது. இந்நிதியை கடந்த 15 / 04 /2010 வியாழக்கிழமை ஜமாத்தார்கள் பொதுமக்கள் முன்னிலையில் கொள்ளுமேடு தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் வழங்கினார்கள்.

நன்றி: கொள்ளுமேடு பை.மு ரிபாய் (துபை)

ஏப்ரல் 19, 2010

லால்பேட்டை, கொள்ளுமேடு பகுதிகளில் மின் தடை நேரம் மாற்றம்

சிதம்பரம்:
சிதம்பரம் மற்றும் பு.முட்லூர் துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான சிதம்பரம் நகரம், அம்மாபேட்டை, மணலூர், அண்ணாமலை நகர், மாரியப்பா நகர் புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (19ம் தேதி) முதல் காலை 9மணியில் இருந்து 12 வரையிலும், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் காட்டுமன்னார்கோவில் நகரம், லால்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், ஸ்ரீமுஷ்ணம் நகரம் மற்றும் சுற்றுப்பகுதியில் மதியம் 12 மணி முதல் 3 மணிவரையிலும், சேத்தியாத்தோப்பு நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கொள்ளுமேடு ,கந்தகுமாரன் ,நெடுன்சேரி பகுதியில் மாலை 3 மணி முதல் 6 மணி வரையும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்தியாவின் ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டிய விஷயம் !


ஐநா: இந்தியாவில் டாய்லெட்டுகளை விட செல்போன்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்று ஐநா அறிக்கை தெரிவிக்கிறது.இந்தியாவில் மொத்தம் 54.5 கோடி செல்போன்கள் இயங்கிவருகின்றன. வரும் 2015ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 100 கோடியை தொடும் என கணிக்கப்படுகிறது.ஆனால், இந்தியாவில் சுகாதாரமான கழிப்பிடங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 36,6 கோடி மட்டுமே என ஐநா சுற்றுச்சூழல் பல்கலைக்கழக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 10 ஆண்டு காலத்தில் செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அபாரமான வளர்ச்சியை கண்டது.கடந்த 2000ம் ஆண்டில் செல்போன் வைத்திருப்பவர்கள் நூற்றுக்கு 0.35 என்ற விகிதத்தில் இருந்தனர். ஆனால் தற்போது இந்த விகிதம் 100க்கு 45 என்ற அளவுக்கு அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ளது.சர்வதேச அளவில் சுற்றுப்புற சுகாதாரத்தில், நூற்றாண்டு வளர்ச்சி இலக்கை வரும் 2025ம் ஆண்டுக்குள் எட்டவேண்டும் என ஐநா கூறி வருகிறது.இதற்காக பல்வேறு வளரும் மற்றும் பின் தங்கிய நாடுகளிலும் சுற்றுப்புற சுகாதாரத்துக்கான ஆலோசனைகள் மற்றும் உதவிகளை ஐநா வழங்கி வருகிறது.உலகளவில் 110 கோடி மக்கள் முறையாக சுகாதாரமான கழிப்பிடங்கள் இல்லாமல் இருக்கிறார்கள் என ஐநா மதிப்பிட்டுள்ளது. வரும் 2025ம் ஆண்டுக்குள் பூமியின் எல்லா மக்களுக்கும் சுகாதாரமான கழிவறைகள் கிடைக்க வேண்டும் என்பதே ஐநாவின் குறிக்கோள். ஆனால், இந்தியா போன்ற நாடுகள் பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சியை சந்தித்து வந்தாலும், சுற்றுப்புற சுகாதாரத்தில் பின் தங்கி இருப்பது கவலை அளிப்பதாக இருக்கிறது என்று ஐநா பல்கலைக்கழக இயக்குனர் ஸாபர் அடீல் தெரிவிக்கிறார்.உலகின் பாதி மக்கள் தொகையினர் முழுமையான சுகாதார கழிவறைகளை பயன்படுத்துவதற்காக 2015ம் ஆண்டுக்குள 358 பில்லியன் அமெரிக்க டாலர்களை பல்வேறு நாடுகளிலும் அமைக்க ஐநா முடிவு செய்துள்ளது என்று அவர் தெரிவித்தார்

மேற்கத்திய நாடுகளில் பெருகிவரும் இஸ்லாம்


உலகில் எத்தனையோ மதங்கள் உள்ளன. கடவுளே இல்லை என்று சொல்லக்கூடிய கொள்கைகளும் மக்களை குழப்பிப் பார்க்கின்றன. ஆனால், இவற்றுள் இஸ்லாம் என்ற மார்க்கம் – கொள்கை, மிகப் பழமையானதும் அதே நேரம் மிக இளமையானதும் ஆகும்.பழமையானது – உலகின் முதல் மனிதன் தொடங்கி உலகில் தோன்றிய அத்துணை நபிமார்களும் ஓரிறைக் கொள்கையையே போதித்தனர். ஆதலால், உலகின் பழமையான மார்க்கம் இஸ்லாமே.இளமையானது – முகமது (ஸல்) அவர்கள் தான் இவ்வுலகிற்கு வந்த இறுதி நபி. அவர்களே முந்தைய நபிமார்களை மெய்ப்படுத்தி, ஓரிறைக் கொள்கையை அழுத்தமாகவும், ஆதாரபூர்வமாகவும் எடுத்து மக்களுக்கு போதித்தார். ஆதலால், இஸ்லாமே அனைத்திலும் இளமையானது.1400 ஆண்டுகளுக்கு முன்பு, அரேபியப் பாலைவனத்தில் ஊறத் தொடங்கிய இஸ்லாம் எனும் சத்திய ஊற்று, இப்போது உலகம் முழுவதும் கடலென பரவிக் கிடக்கின்றது. வாளால் பரவிய மார்க்கம் என்று ஊடகங்கள் ஓயாது ஒலித்தாலும், அதற்கான பதிலை தன்னகத்தே பிரதிபலித்துக் கொண்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகின் இரண்டாவது பெரிய மதமாக (மார்க்கம்) இருந்த இஸ்லாம், இந்த ஆண்டு உலகின் மிகப்பெரிய மார்க்கமாக கத்தோலிக்க கிறிஸ்துவத்தை தாண்டி வளர்ந்துள்ளது.உலக மக்கள் தொகையில், 19.2 விழுக்காடு முஸ்லிம்கள் எனவும், 17.4 விழுக்காடு கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் என்றும் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவராக உள்ள “போப்” பின் ஆளுகைக்குட்பட்ட வாடிகன் நகரத்தில் இருந்து வெளிவரும் லொசெர்வேடோர் ரொமானோ (L’Osservatore Romano) என்ற செய்திப் பத்திரிகை தெரிவிக்கின்றது. உலக மக்கள் தொகையில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 113 கோடி மக்களாவர்; முஸ்லிம்களின் எண்ணிக்கை 130 கோடி எனவும் அப்பத்திரிகை தெரிவிக்கின்றது. வாடிகன் 2008 க்கான ஆண்டுப்புத்தகம் (Year Book) -இல் வெளியிடப்பட்டுள்ள இந்த புள்ளி விபரத்தை மேற்கத்திய உலகின் பெரும்பாலான செய்தி ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. இச்செய்தி உலகில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம் (Fastest-growing religion) என்பதை நமக்கு ஆதாரத்தோடு தருகின்றது.இத்தாலியில் தொழுகைசில ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த கணக்கெடுப்பின்படி, கடந்த 12 ஆண்டுகளில் 1200 புதிய பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ளன. அதாவது ஆண்டுக்கு, 100 புதிய பள்ளிகள்; ஒரு வாரத்திற்கு இரண்டு பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்படுகின்றன. பிரபல அமெரிக்க செய்தி ஊடகம் சி.என்.என். (CNN) இந்த தகவலை நமக்குத் தருகின்றது.குறிப்பாக அமெரிக்காவில் வாழும் கறுப்பின அமெரிக்கர்கள் மத்தியில் இஸ்லாம் மிக வேகமாக பரவி வருகின்றது. சமூகத்தில் சிறுபான்மையினராக இருக்கும் அவர்கள் ஏற்றத்தாழ்வு கற்பிக்கப்படுவதை கண்டு வெதும்பி இஸ்லாம் கூறும் சமத்துவத்தை நாடி இஸ்லாத்தை தழுவுகின்றனர்.அமெரிக்கா மட்டுமன்றி ஐரோப்பாவிலும் இதே நிலைதான். கிறிஸ்துவத்தின் மீது நம்பிக்கை குறைந்து சர்ச்சுகளுக்கு கூட்டம் வருவது குறைந்து கொண்டே செல்கின்றது. இங்கிலாந்தில், சர்ச்சுகள் மூடப்பட்டு “பார்” களாக மாற்றப்படுகின்றன; அதே நேரம் பல சர்ச்சுகள் முஸ்லிம்களால் முழு நேர வாடகைக்கு எடுக்கப்பட்டு பள்ளிவாசல்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நாமே அதுமாதிரியான பள்ளிவாசலில் இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் சென்றிருக்கும் போது, அங்கே ஜூம்ஆ தொழுதுள்ளோம்.இஸ்லாம் தனி மனித உரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பினும், ஓர் எல்லைக்குட்பட்டே வழங்கி உள்ளது; தனி மனித உரிமைகளை விட சமுதாயத்தின் உரிமைகளுக்கு முதலிடம் கொடுக்கின்றது. ஆனால், மேற்கத்திய உலகமோ சமுதாயத்தின் உரிமைகளை கண்டு கொள்வதே இல்லை. இதனை கீழ்க்கண்ட எடுத்துக்காட்டின் மூலம் விளங்கலாம். ஒரு பெண் தனக்குப் பிடித்த ஆடையை அணிவது அவளுடைய தனி மனித உரிமை என்கிறது மேற்கு. அது, உடலின் பாகங்களை அசிங்கமாக வெளிப்படுத்தினாலும் சரியே; ஆனால், இஸ்லாமோ கீழ்த்தரமாக ஆடை அணியும் பெண்ணால், சமுதாயத்திற்கு தீங்கு விளையும்; தவறான செயல்களுக்கு தூண்டுதலாக அமையும்; அதனால், அப்பெண்ணின் தனிமனித உரிமையும் பாதிக்கப்படும்; ஆகவே மறைக்க வேண்டிய பாகங்கள் மறைக்கப்பட்டு, ஒரு பெண் இயங்குவதில் தவறில்லை என்று பொது நன்மையை நாடி கூறுகின்றது. இதே போன்றே ஓரினச் சேர்க்கையை ஆதரிப்போர் இதனை தனி மனித உரிமை என்கின்றனர்; ஆனால், இதனால் சமூக கட்டமைப்பு கெட்டு, சமுதாய ஒழுக்கம் தவறி, மாபெரும் அநீதி இழைக்கப்படுவதை அவர்கள் உணர்வதில்லை. ஆனால், இஸ்லாம் ஓரினச் சேர்க்கையை வேரோடு சாய்க்கின்றது. சமூக உரிமைகளை மதிக்கும் இஸ்லாத்தின் இக்கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு மேற்கத்திய உலகம் மிக வேகமாக இஸ்லாத்தினை நோக்கி நெருங்கி வந்து கொண்டுள்ளது.ஃபிரான்ஸில் ஹிஜாஜுபுக்கான போராட்டக் காட்சி)இவ்வாறு இஸ்லாத்தினை நோக்கி முஸ்லிமல்லாதோர் வரும் இவ்வேளையில், மேற்கத்திய முஸ்லிம்களிடையேயும் வெகுவாக விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஃபிரான்ஸில் பள்ளிகளில் முஸ்லிம் மாணவிகள் இஸ்லாமிய முறைப்படி, தலையை மறைத்துக் கொண்டு (Headscarves) வருவதைத் தடுக்க சட்டம் இயற்றிய போது, ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் இறங்கி தமது உரிமைக்குரிலை எழுப்பினர். பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வசிக்கும் நாடுகளான எகிப்து, குவைத், ஈராக், லெபனான் மட்டுமன்றி மேற்கத்திய உலகம் முழுமையாக, ஸ்வீடன், கனடா, பிரிட்டன், அமெரிக்கா என பல நாடுகளிலும் முஸ்லிம்கள் குறிப்பாக பெண்கள் போராட்டங்கள் நடத்தினர்.“ நமக்குத் தேவை மாற்றம்” – (Change We need) என்ற தேர்தல் கோஷத்தை முன் வைத்து, அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் பராக் ஒபாமா. கென்ய நாட்டைச் சேர்ந்த கறுப்பின முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த தந்தைக்கும், வெள்ளை அமெரிக்கத் தாய்க்கும் பிறந்தவராவார் இவர். இவர் முஸ்லிமாக வாழவில்லை எனினும், முஸ்லிம்களை எல்லாம் தீவிரவாதிகளாக சித்தரித்த மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்காவிற்கு முஸ்லிம் பின்னணியிலிருந்து, அதுவும் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் முதல் குடிமகனாக ஆகியுள்ள நிகழ்வு கண்டிப்பாக மாற்றம் ஏற்பட்டுள்ளதையே காட்டுகின்றது.(நீதிமன்றம் மூலம் ஹிஜாம் அணிய போராடி வெற்றி பெற்ற இங்கிலாந்து முஸ்லிம் பெண் சபீனா பேகம்)முஹம்மது (ஸல்) -வைப் போன்று ஒருவர் இவ்வுலகின் சர்வாதிகாரியாக பொறுப்பேற்பாரானால், உலகின் அனைத்து பிரசினைகளையும் களைவதில் வெற்றி பெற்று, உலக மக்கள் வெகுவாக எதிர்பார்க்கும் அமைதியையும், மகிழ்ச்சியையும் கொண்டு வர முடியும் என்ற ஜார்ஜ் பெர்னாட் ஷா வின் கூற்றுக்கிணங்க, இன்ஷா அல்லாஹ், அமெரிக்க வெள்ளை மாளிகையை ஒரு சீரிய இஸ்லாமிய சிந்தனையுள்ள முஸ்லிம் ஒருவர் அலங்கரிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.


ரியாதிலிருந்து பைசல்nanri


நன்றி :(from : tntj.net)




ஏப்ரல் 18, 2010

பிச்சாவரத்தில் ரூ.2 கோடி வருவாய்


கிள்ளை : பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் வெளிநாட்டினர் உட்பட 4 லட்சத்து 61 சுற்றுலா பய ணிகள் வந்ததன் மூலம் அரசுக்கு 2 கோடியே 4 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பிச்சா வரத்தில் வன சுற்றுலா மையம் உள்ளது. 1,358 ஹெக்டர் பரப்பில் சதுப்பு நிலக் காடுகளில் 4,444 கால்வாய் திட்டுகளும், நீர் முள்ளி, நரி, வெண்,சிறு, கருங்கண்டன் என18 க்கும் மேற்பட்ட வகையான மூலிகைத் தாவரங்கள் நிறைந்துள்ளன. இயற்கை சீற்றங்களை தடுக்கும் அர ணாக இக்காடுகள் அமைந் துள்ளது. மூலிகை தன்மை யுள்ள காற்றை சுவாசிப் பதால் பல்வேறு நோய்கள் குணமடைகிறது. காடுகளை பாதுகாக்க 1984 ஜூன் 16ல், 5 ஏக்கர் பரப்பில் 6 படகுகளுடன் சுற்றுலாத் தலமாக துவங் கப்பட்டது. 1987 மார்ச் 13ல் தமிழ்நாடு ஓட்டல், காடு களின் நடுவில் 6 காட் டேஜ், 20 கட்டில், 2 டார் மென்டரியுடன் தங்கும் விடுதி அமைக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்ததைத் தொடர்ந்து கூடுதல் பட குகள், சிறுவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அரிய வகை சிற்பங்கள் அமைக் கப்பட்டது. வெளி மாவட்டம், மாநிலம் மற்றும் வெளி நாட்டு சுற்றுலாப் பயணி கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. சமீபத் தில் முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர், ஐகோர்ட் தலைமை நீதிபதி கோகலே உள்ளிட் டோர் காடுகளை பார்த்து வியந்து சென்றனர். மேற்கு வங்க துணை முதல்வர் நிர்மல்சன் இப்பகுதி வனங்களை போல் மேற்கு வங்கத்தில் அமைக்க இங்கு ஆய்வு செய்தார். கடந்த நான்கு ஆண் டுகளில் ஏப்ரல் முதல் மார்ச் வரை வெளிநாட் டினர் மற்றும் இந்தியர் என பிச்சாவரம் வந்த சுற் றுலா பயணிகளும், அத னால் கிடைத்த வருவாயும் வருமாறு: 2006-07ல் 90 ஆயிரம் சுற்றுலாப் பயணிகளால் 28 லட்சம் ரூபாயும், 2007-08ல் ஒரு லட்சத்து 5 ஆயிரம் பயணிகளால் 31 லட்ச மும், 2008 -09 ஒருலட்சத்து 42 ஆயிரம் பயணிகளால் 60 லட்சமும், 2009-10 ல் ஒரு லட்சத்து 24 ஆயிரம் பயணி களால் 85 லட்சம் ரூபாய் என மொத்தம் 2 கோடியே நான்கு லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத் துள்ளது. குறிப்பாக கோடை காலத்தில் சுற்றுலாப் பய ணிகள் அதிகம் வருகின்ற னர். கடந்த 2008-09ம் ஆண்டை விட 2009-10ல் வருவாய் அதிகமாக இருந் தாலும், சுற்றுலாப் பயணி கள் எண்ணிக்கை குறைந் துள்ளது.



மக்கள் என்போர் வெறும் எண்ணிக்கை அல்ல

உலகில் மனிதர்கள் தோன்றாமல் இருந்திருந்தால் எப்படி இருக்கும்? விரக்தி வேதாந்தத்தில் சிக்கியவர்கள் “அந்த உலகம் அமைதியானதாக, அழகானதாக இருக்கும்” என்று பதில் கூறலாம். ஆனால், மனிதர்கள் இல்லை என்றால் இந்த உலகத்தைப் பற்றி வேறு யார்தான் அக்கறைகொள்வார்கள்? இப்படிப்பட்ட சிந்தனைகள் இருப்பவர்களும், இதைப்பற்றியெல்லாம் யோசிக்காதவர்களுமாக இந்த உலகில் இன்று சுமார் 670 கோடி மக்கள் வாழ்கிறார்கள். மிகச் சரியாக இந்த 2010ம் ஆண்டில் உலகின் மக்கள் தொகை எவ்வளவு? ஒவ்வொரு நாட்டிலும் எவ்வளவு? இந்தியாவில் எவ்வளவு?

இதை மதிப்பிடுவதற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நேற்று (ஏப்ரல்-1) உலகின் அனைத்து நாடுகளிலும் தொடங்கியிருக்கிறது. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை இந்தியாவில் குடியரசுத் தலைவர் நேற்று முறைப்படி தொடங்கி வைத்தார். இது இந்தியாவின் 15வது மக்கள் தொகை கணக்கெடுப்பாகும்.

மிக பழங்காலத்து மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி சீனாவில் ஹான்ஸ் பரம்பரையினர் ஆட்சிக்காலத்தில் (கி.மு. 200) நடந்ததாக பதிவாகியுள்ளது. அதற்கும் முன்னதாக, இந்தியாவில் கி.மு 800-600 ஆண்டுகளிலேயே ஒருவகையான மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கிவிட்டதாக இலக்கியச் சான்றுகள் கூறுகின்றன. அப்போது இந்தியா என்கிற ஒரே நாடாக இருந்ததில்லை என்றாலும் அப்போதிருந்த சிறுசிறு நாடுகளின் மன்னர்கள் பல்வேறு தேவைகளுக்காக, குறிப்பாக வரிவிதிப்புக்காக, இந்த முயற்சியைச் செய்திருக்கிறார்கள். அக்பர் ஆட்சிக் காலத்தில் (1556-1605) மக்களின் தொழில்கள், அவர்களது செல்வநிலை உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் திரட்டப்பட்டனவாம். இன்றைய நடைமுறைக்கு முன்னோடியாக அமைந்தது, பிரிட்டிஷ் ஆட்சியின்போது பல்வேறு பகுதிகளில் 1865 - 1872 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புதான். இந்திய மாநிலங்களில் ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு என்பது 1881ல் தொடங்கியது. அதன் பின் பத்தாண்டுகளுக்கு ஒருமுறைகூட இடையில் நிறுத்தப்படாமல் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பு முறை உலக அளவில் எப்போது தொடங்கியது? இங்கிலாந்தில் விக்டோரியா ஆட்சி காலத்தில் 1841ல் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. எனினும் அதற்கும் 40 ஆண்டுகளுக்கு முன்பாகவே, 1801ல் அங்கே இப்படிப்பட்ட கணக்கெடுப்புப் பணி தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. சில உயிர்க்கொல்லி தொற்றுநோய்கள் பரவியதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட காலகட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்காகவும், தப்பியவர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்காகவும் அந்தத் தகவல்கள் பயன்படுத்தப்பட்டன.

அமெரிக்காவில் 1790ம் ஆண்டில் குடிமக்களின் எண்ணிக்கையை கணக்கிடுவது என அரசாங்கம் முடிவு செய்தது. எதற்காகத் தெரியுமா? போர்க்களங்களில் இறக்கிவிடுவதற்காக! ராணுவத்திற்கு எத்தனை இளைஞர்கள் கிடைப்பார்கள் என்பதைக் கணக்கிடுவதற்காக! பிற்காலத்தில் அரசின் பல்வேறு நோக்கங்களுக்குப் பயன்படும் வகையில் அங்கேயும் மாற்றம் செய்யப்பட்டது.

இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்கு ரூ.2,209 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதைச் சார்ந்த நடைமுறைகளுக்காக மொத்தம் 25 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேருக்கு நேர் வீடுகளுக்குச் சென்று தகவல்களைத் திரட்டும் பணியில் குறிப்பாக ஆசிரியர்கள், பல்வேறு அரசுத்துறையினர் இதற்கென தனி ஊதியத்துடன் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவர்களை வழக்கமான பணிகளிலிருந்து திசைதிருப்பாமல், வேலையின்றி இருக்கும் இளைஞர்களை இப்பணியில் ஈடுபடுத்தலாமே என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மத்திய அரசு அதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.

இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டை வழங்குவது என்ற நெடுந்திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது. அதற்கு இந்தக் கணக்கெடுப்பு உதவும். அதற்காக ‘தேசிய மக்கள் தொகை பதிவேடு’ (என்பிஆர்) முதல்முறையாக ஏற்படுத்தப்படுகிறது.

இதுவரை நடந்த கணக்கெடுப்புகளிலிருந்து மாறுபட்டதாக இதில் உயிரியல் சார்ந்த (பயோமெட்ரிக்) தகவல்களும் பதிவு செய்யப்படவுள்ளன. அதாவது கணக்கெடுக்கப்படுபவரின் கைவிரல் ரேகை, முக்கிய அங்க அடையாளங்கள் போன்றவற்றுடன் அவர்களுடைய புகைப்படங்களும் பதிவு செய்யப்படும். அத்துடன், அவர்களிடம் செல்பேசி இருக்கிறதா, கணினி இருக்கிறதா, இணையவலை இணைப்பு இருக்கிறதா, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டிருக்கிறதா என்பன போன்ற கேள்விகளும் கேட்கப்படவுள்ளன.

முதல் கட்டமாக மக்கள் குடியிருக்கும் வீடுகள் தொடர்பான கணக்கெடுப்பு இவ்வாண்டு ஏப்ரல்-ஜூலை மாதங்களுக்கிடையே மேற்கொள்ளப்படுகிறது. இரண்டாம் கட்டமாக ஒவ்வொரு தனிமனிதர் பற்றிய தகவல்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 9 முதல் 28 வரை நாடு முழுவதும் நாடு முழுவதும் 35 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களில், 640 மாவட்டங்களில், 7,742 நகரங்களில், 6 லட்சம் கிராமங்களில் ஒரே நேரத்தில் திரட்டப்படவுள்ளன.

இந்த கணக்கெடுப்பின் வேறு சில ஏற்பாடுகளும் சுவையானவை. சேர்ந்து வாழ்கிற இருவர் தங்களை மணமானவர்கள் என்று குறிப்பிட விரும்பினால் அவ்வாறு குறிப்பிடலாம். பொருளாதார வளர்ச்சி குறித்த எதிர்கால மதிப்பீடுகளுக்காக ஒருவரிடம் அவரது வங்கிக் கணக்குகள், செல்பேசி பயன்பாடு, மடிகணினி பயன்பாடு போன்ற தகவல்களும் விசாரிக்கப்படும். உங்கள் வீட்டின் சமையலறை எந்த இடத்தில் - வீட்டிற்கு உள்ளேயா, வெளியேயா - அமைந்திருக்கிறது என்பதும் கேட்கப்படும். இரண்டாவது கட்ட கணக்கெடுப்பில் கல்வித் தகுதிகள் கேட்டறியப்படும்.

இவ்வாறு திரட்டப்படும் தகவல்கள் ரகசியமாகவே வைக்கப்படும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தனிப்பட்ட குடிமக்களின் இத்தகவல்களை யாரும் பெற முடியாது. உயர்நீதிமன்றங்கள் கூட இத்தகவல்களை அளிக்குமாறு ஆணையிட முடியாது. அதே போல், ஒருவர் தன்னைப் பற்றிய தகவல்களைத் தர மறுக்கவும் கூடாது.

எதிர்காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் மேலும் பல தகவல்கள் திரட்டப்படலாம். அப்படிப்பட்ட கணக்கெடுப்புகள் வெறும் புள்ளி விவர பட்டியல்களுக்காக அல்லாமல், மக்களின் வாழ்க்கையை முன்னேற்றத் திசையில் செலுத்துவதற்குப் பயன்பட வேண்டும். மேடு பள்ளங்களைக் கண்டறிந்து, சமத்துவப் பாதையை உருவாக்க உதவ வேண்டும். ஏனெனில் மக்கள் என்போர் எண்ணிக்கை சார்ந்தவர்கள் அல்ல... சமுதாய எண்ணம் சார்ந்தவர்கள்.

ஏப்ரல் 17, 2010

வீடுகளுக்கு மின் இணைப்பு கிடைப்பதில் கால தாமதம்

கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் வீடுகளுக்கு மின் இணைப்பு கிடைப்பதில், பெருத்த காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஏராளமானோர் ஒரு மாதத்துக்கும் மேலாக மின் இணைப்பு கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். வீடுகளுக்கு மின் இணைப்பு கேட்டு பணம் செலுத்திய அன்றே மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று மின் வாரிய விதிமுறைகள் உள்ளன. ஆனால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வீடுகளுக்கு மின் இணைப்பு கேட்டு பணம் செலுத்திவிட்டு இணைப்பு கிடைக்காமல், காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இவ்வாறு காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
மின்சார மீட்டர்கள் தட்டுப்பாடே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக மின்வாரியத் தலைமை அலுவலகம், மின்சார மீட்டர்கள் வழங்குவதில் பிரச்சனை இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. கடலூர் மாவட்டத்தின் தேவைக்கு ஏற்ப மின் வாரியம், மின்சார மீட்டர்களை வழங்கவில்லை என்று கடலூர் மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
இது குறித்து கடலூர் மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் ரவிராம் கூறியது:
மின்சார மீட்டர் விநியோகத்தில் கடந்த ஒரு மாதமாகப் பிரச்னை உள்ளது. மீட்டர்கள் வரவர, 6 டிவிஷன்களுக்கும் பிரித்துக் கொடுத்து மின்இணைப்புகளை வழங்கி வருகிறோம். வாரியத்தால் வழங்கப்படும் மின்சார மீட்டரில் 60 சதவீதம் புதிய இணைப்புகளுக்கும், 40 சதவீதம் ஏற்கெனவே பொருத்தப்பட்டு பழுதடைந்த மீட்டர்களை மாற்றுவதற்கும் வழங்க வேண்டும் என்றும் மின்வாரியம் உத்தரவிட்டு இருக்கிறது. காத்திருப்போர் பட்டியலில் உள்ள அனைவருக்கும் விரைவில் இணைப்பு வழங்கி விடுவோம் என்றார் ரவிராம்.

தமிழக அரசு புதிய திட்டம்: விண்ணப்பித்த 15 நாளில் ரேஷன் அட்டை


எந்தப் பொருளும் கோராமல், ரேஷன் அட்டை மட்டும் கேட்டு விண்ணப்பிப்போருக்கு 15 நாளில் அட்டை வழங்கப்படும் என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார். இந்த அட்டைகள் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கே நேரடியாக அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சட்டப் பேரவையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு, பதில் அளித்து அமைச்சர் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:

தமிழகத்தில் மக்கள் தெரிவிக்கும் விருப்பத்தின் அடிப்படையில் அரிசி பெறுவதற்கான ரேஷன் அட்டைகள், அரிசிக்குப் பதிலாக கூடுதல் சர்க்கரை பெறுவதற்கான அட்டைகள் போன்றவற்றுடன் எந்தப் பொருளும் வேண்டாத குடும்ப அட்டைகளும் வழங்கப்படுகின்றன. இந்த அட்டைகள் வழங்குவதற்கு நீக்கல் அல்லது அட்டையில்லாத சான்றிதழ் அளிக்க வேண்டும் என்ற வழிமுறை பின்பற்றப்படுகிறது. விண்ணப்பித்த 60 நாள்களுக்குள் ரேஷன் அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எந்தப் பொருளும் வேண்டாதவர்கள்: ரேஷன் கடைகளில் எந்தப் பொருளையும் விரும்பாமல் அட்டை மட்டுமே வேண்டுமெனக் கூறி சிலர் விண்ணப்பிக்கின்றனர். அவர்கள், தாங்கள் வசிக்கும் இருப்பிடத்துக்கான ஆதாரத்தை அளித்தால் அதன் அடிப்படையில் 15 நாளில் துரிதமாக விரைவு முறையில் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும். இதற்கென வடிவமைக்கப்பட்ட படிவத்தில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அவர்கள் வசிக்கும் இருப்பிட முகவரிக்கான ஆதார ஆவணங்களை இணைத்து சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் அல்லது உதவி ஆணையாளர் அலுவலகத்தில் மனுவினைக் கொடுக்க வேண்டும். அது, பரிசீலிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் முகவரிக்கு ரேஷன் அட்டைகள் நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் ரேஷன் அட்டைக்கான கணக்கெடுப்பு, ரேஷன் அட்டை அச்சடிப்பு, நியாய விலைக் கடைகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள் ஒதுக்கீடு செய்தல், கிடங்குகளில் இருந்து பொருள்களின் நகர்வு, ரேஷன் கடைகளில் இருப்பின் அளவு ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும். இதற்கு வசதியாக, பொது விநியோகத் திட்டத்தின் கீழ், இணைக்கப்பட்டுள்ள அனைத்துத் துறைகள், நிறுவனங்கள் ஆகியவற்றை இணைத்து பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடுகளுக்கான ஒருங்கிணைந்த தீர்வு முறை நடப்பாண்டில் செயல்படுத்தப்படும்.இந்தத் திட்டத்தில் தகுதியுள்ள ரேஷன் அட்டைதாரர்களின் அனைத்து குடும்ப நபர்களின் கைவிரல் ரேகை மற்றும் கண் விழித் திரை ஆகியவற்றை பதிவு செய்து அதன் அடிப்படையில் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட உள்ளன என்று தனது அறிவிப்பில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

ஏப்ரல் 16, 2010

பாதையை விட்டு விலகியது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் 2}வது ஏவுதளத்தில் இருந்து மஞ்சள் நிறப் புகையைக் கக்கி கொண்டு விண்ணில் சீறிப் பாயும் ஜி

இந்தியாவிலேயே முற்றிலும் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினுடன் வியாழக்கிழமை விண்ணில் ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.-டி3 ராக்கெட், இஸ்ரோவின் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்தது."ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் கிரையோஜெனிக் என்ஜினில் தீப்பொறி ஏற்பட்டதா, இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ராக்கெட் திசை மாறியதற்கான காரணம் ஓரிரு தினங்களில் கண்டறியப்படும்'' என்று இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.விண்ணில் ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.டி3 ராக்கெட் மற்றும் ஜிசாட் 4 செயற்கைக்கோளின் மொத்த மதிப்பு ரூ.420 கோடியாகும். இ

தில் ராக்கெட்டின் மதிப்பு மட்டும் ரூ.170 கோடியாகும். ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் மொத்த எடை 416 டன்னாகும். சுமார் 2,000 விஞ்ஞானிகளின் கூட்டுமுயற்சியில் 18 ஆண்டு கடும் உழைப்பில் கிரையோஜெனிக் என்ஜின் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. "குறைகளைக் கண்டறிந்து நிவர்த்தி செய்து, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினுடன் கூடிய ராக்கெட் ஓராண்டுக்குள் ஏவப்படும்' என்று இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் நம்பிக்கைத் தெரிவித்தார். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து ஜிசாட்4 செயற்கைக்கோளுடன், ஜி.எஸ்.எல்.வி.டி3 ராக்கெட் 29 மணி நேர கவுன்டவுனுக்குப் பிறகு வியாழக்கிழமை மாலை 4.27 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் மஞ்சள் நிறப் புகையை கக்கி கொண்டு விண்ணை நோக்கி சீறிப் பாய்ந்தது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குளிர்விக்கப்பட்ட "கிரையோஜனிக்' என்ஜின் மூலம் ஜி.எஸ்.எல்.வி.டி3 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் நிகழ்வை உலக நாடுகள் பலவும் கவனித்து வந்தன.

ஏறத்தாழ 1022 விநாடிகளில் ராக்கெட் 36,000 கிலோ மீட்டர் கடந்து, ஜிசாட்4 செயற்கைக்கோளை புவி வட்ட சுற்றுப் பாதையில் செலுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.ராக்கெட்டின் மொத்த பயண நேரமான 1022 விநாடிகளில், 720 விநாடிகள் கிரையோஜெனிக் என்ஜின் மூலமே ராக்கெட் செலுத்தப்பட இருந்தது.ராக்கெட் ஏவப்பட்ட சில நொடிகளில் முதல் நிலையை (திட எரிபொருள்) தாண்டியது. அடுத்து இரண்டாவது நிலையையும் (திரவ எரிபொருள்) தாண்டி ராக்கெட் விண்ணில் சென்று கொண்டிருந்தது.ஒவ்வொரு நிலையையும் ராக்கெட் தாண்டிச் செல்ல, சதீஷ் தவாண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் கட்டுப்பாட்டில் இருந்த விஞ்ஞானிகள் உற்சாகத்துடன் கைதட்டி ஆரவாரம் செய்தபடி இருந்தனர். சில நொடிகளில் 2வது நிலையைத் தாண்டி, குளிர்விக்கப்பட்ட கிரையோஜெனிக் நிலையை ராக்கெட் எட்டியது. கிரையோஜெனிக் நிலைக்குச் சென்றதும் குலுங்கிய ராக்கெட் எதிர்பார்த்த பாதையிலிருந்து விலகியது.அடுத்த விநாடியே, கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகள், ராக்கெட்டின் சிக்னலைப் பெற பலவாறு முயன்று தோல்வியுற்றனர்.சற்று நேரத்தில், இஸ்ரோவின் கட்டுப்பாட்டை இழந்த ஜி.எஸ்.எல்.வி. டி}3 ராக்கெட், கடலில் விழுந்தது. கட்டுப்பாட்டு அறையில் இருந்த நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் கிரையோஜெனிக் என்ஜின் வெற்றியடையாததால் சோகத்தில் ஆழ்ந்தனர். அங்கிருந்த மூத்த விஞ்ஞானிகளில் பலர் இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணனுக்கு ஆறுதல் கூறியபடி இருந்தனர். கட்டுப்பாட்டு அறையே சோகமயமாக மாறியது. ஓராண்டுக்குள் அடுத்த ராக்கெட்: பின்னர், கட்டுப்பாட்டு அறையில் இருந்த இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் பேசியது:ஜி.எஸ்.எல்.வி.}டி3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து சென்றது. முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலையையும் தாண்டி சென்றது. விண்ணில் ஏவப்பட்டதிலிருந்து 293 விநாடிகள் சீராகப் பயணித்த ராக்கெட், மூன்றாம் நிலைக்குச் (கிரையோஜெனிக்) சென்றது. அப்போது ராக்கெட் சிறிது குலுங்கி, அதன் பாதையிலிருந்து விலகிச் சென்று கடலில் விழுந்தது. இஸ்ரோவின் கட்டுப்பாட்டையும் அது இழந்தது. இதில் கிரையோஜெனிக் என்ஜினில் தீப்பொறி ஏற்பட்டதா என்று உறுதியாகத் தெரியவில்லை. கிரையோஜெனிக் தோல்வி குறித்து 2, 3 நாள்களில் ஆய்வு செய்யப்படும். ஓராண்டுக்குள் மீண்டும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ராக்கெட் செலுத்தப்படும். மீண்டும் சாதிப்போம் என்ற நம்பிக்கை இஸ்ரோவிடம் உள்ளது. மிகவும் சிக்கலான கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை கையாண்டுள்ளோம்.

இத்தொழில்நுட்பத்தில் நாம் பயணிக்க வேண்டியது நீண்ட தொலைவு உள்ளது.செப்டம்பரில் ஜி.எஸ்.எல்.வி.: வரும் செப்டம்பரில் ரஷ்யாவிடம் இருந்து பெறப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினுடன், ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவப்பட உள்ளது என்றார் அவர்.

ஏப்ரல் 15, 2010

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா? ஒரு நிமிடம் இதையும் பாருங்களேன்?



அடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும், தேவைபடாது என்று தெரிந்து விட்டது, நான் போயிருந்த ஒவ்வொரு தடவையிம் சரிவர சான்றிதல் கொண்டுவராததால் நிராகரிக்கபட்டவர்கள் அதிககதிகம்.நமக்கு தெரிந்தவங்க யாரும் நிராகரிக்க கூடாது, நம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு பகிரலாமே என்ற நல்லெண்ணத்திலும்தான் இப்பதிவு.
ஒகே ரெடி ஸ்டார்ட்.முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள் https://passport.gov.in/pms/Information.jspContinue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.


District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்Service Desired: என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)


Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்)


First Name: உங்களது பெயர்உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் "if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full" என்பதை கிளிக் செய்து


Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்


Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்Date of


Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)


Place of Birth: பிறந்த ஊர்


District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்


Qualification: உங்களது படிப்பு


Profession: தொழில்


Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)Height (cms): உயரம்Present


Address: தற்போதைய முகவரி


Permanent Address: நிரந்தர முகவரிPlease give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை


Phone No: தொலைபேசி எண் Mobile No : மொபையில் எண்


Email Address: இமெயில் முகவரி


Marital Status: திருமணமான தகவல்


Spouse's Name: கணவர்/மனைவியின் பெயர்


Father's Name: தந்தை பெயர்


Mother's Name: தாயார் பெயர்தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் "If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there." என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் "If you have a Demand Draft, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து


DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் "If you have held a passport or hold a passport at present,


click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்


Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்


Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்


File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள்[] கண்டிப்பாக எழுதவும்[] தேவைப்பட்டால் மட்டும் எழுதவும்அனைத்தையும் நிரப்பியவுடன், "Save" என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவை ஒட்டவும். அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)ரேசன் கார்டு குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்) தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்) மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்) கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்) வாக்காளர் அடையாள அட்டை வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்) துணைவின் பாஸ்போர்ட் பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ் பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ் கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும் வேறு சான்றிதல்கள்


10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும். உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ். பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்,


மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும். பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும். அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்ம் குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும். நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள், அவர்கள் கொடுக்கும் நேரம் என்பது சும்மா... நாள் மட்டும்தான் உண்மை, முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்... கால் கடுக்க நிற்க வேண்டும், ஆதலால் நன்றாய் சாப்பிட்டுவிட்டு, தண்ணீரை எடுத்து செல்லவும்.அவ்வளவுதான் முடிந்தது மேலும் தகவல்களுக்குசீக்கிரமாக பாஸ்போர்ட் கிடைக்க வாழ்த்துக்கள். :)


நன்றி: mastanoli.blogspot.கம


ஏப்ரல் 14, 2010

31 சதவிகித முஸ்லிம்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளனர்: என்.சி.ஏ.இ.ஆர் ஆய்வறிக்கை!




இந்தியாவில் உள்ள முஸ்லிம்களில் 31 சதவீதத்தினர் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பதாக தேசிய பயன்பாட்டு பொருளியல் ஆய்வுக் குழுவின் (என்.சி.ஏ.இ.ஆர்) ஆய்வு தெரிவிக்கிறது. இந்நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் 10 முஸ்லிம்களில் 3 பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.
அவர்களின் சராசரி மாத தனி நபர் வருமானம் ரூ. 550 க்கும் குறைவாக உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது. முஸ்லிம்களுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 4 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பது என்ற ஆந்திரப் பிரதேச அரசின் முடிவுக்கு இடைக்கால அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த ஆய்வு முடிவுகளும் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்கள் மற்றும் இதர சிறுபான்மையினர், மதம் மாறிய தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கும் கல்வி வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என ரங்கநாத் மிஸ்ரா குழுவும் ஏற்கெனவே அரசுக்கு பரிந்துரை செய்து அறிக்கை அளித்திருந்தது. இந்த சூழ்நிலையில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி, கிராமப்புற மக்களில் தனி நபர் மாத வருமானம் ரூ.356 க்கு கீழும், நகர்ப்புற மக்களின் தனி நபர் மாத வருமானம் ரூ.538க்கு கீழும் இருந்தால் அவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாவர். அந்த ஆய்வில் மேலும் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்: “2004-05 ஆண்டு நிலவரப்படி வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற முஸ்லிம்களின் சராசரி மாத தனி நபர் வருமானம் ரூ.338 ஆக இருந்தது.
பழங்குடியினரின் சராசரி ஆண்டு குடும்ப வருமானம் ரூ. 20 ஆயிரம். தாழ்த்தப்பட்டவர்களின் சராசரி ஆண்டு குடும்ப வருமானம் ரூ. 22,800. இதர பிற்பட்ட மக்களின் சராசரி ஆண்டு குடும்ப வருமானம் ரூ. 26,091. முஸ்லிம்களின் சராசரி ஆண்டு குடும்ப வருமானம் ரூ.28,500. முஸ்லிம் சமுதாயத்தில் கல்வி ரீதியாக நிறைய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் குறு மற்றும் குடிசைத் தொழில்களில் ஈடுபடுவதன் மூலமே வருமானத்தை ஈட்டுகின்றனர்’ என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மொத்தம் 13 கோடியே 80 லட்சம் முஸ்லிம்கள் இருப்பதாக கடந்த 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தெரியவந்தது. இது இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 13.4 சதவீதம் ஆகும்.

பெற்றோரை புறக்கணிக்கிறீர்களா? உங்கள் சொத்து பறிபோகும். எச்சரிக்கை!!!

பெற்ற மகன்களால் புறக்கணிக்கப்பட்டு பரிதவிக்கும் பெற்றோர், மூத்த குடிமகன்கள் பராமரிப்புத் தொகைக்காக இனி நீதிமன்றங்களுக்கு போய் ஆண்டுக் கணக்கில் அல்லாட வேண்டாம். ஆர்.டி.ஓ.,விடம் புகார் செய்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் சமூக நலத்துறை முயன்று வருகிறது.தாங்கள் பெற்ற குழந்தைகளை கண்ணும், கருத்துமாக வளர்த்து ஆளாக்கும் பெற்றோர், 'வயதான காலத்தில் குழந்தைகள் எங்களைப் காப்பாற்றும்' என்று பெருமையோடு சொல்வதுண்டு. அவ்வாறு பெற்றோரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, குழந்தைகள் செயல்படுகிறார்களா, பெற்றோரின் தேவைகளை நிறைவேற்றி, அவர்களை பாதுகாக்கிறார்களா என்றால் சந்தேகம்தான். முடிந்த வரை பெற்றோர் உழைப்பைச் சுரண்டிக்கொண்டு, வயதான காலத்தில் அவர்களை ஓரங்கட்டியவர்களும் நம்மில் உண்டு. வசதி படைத்த இடங்களில் கூட, வயதான காலத்தில் உபத்திரவமாக இருக்கிறார்களே எனக் கூறி, பெற்றோரை முதியோர் இல்லத்தில் தள்ளிவிடும் மகன்களும் இல்லாமல் இல்லை.'எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று பெற்றோரை விழுந்து விழுந்து கவனித்து நம்பிக்கையைப் பெற்று, சொத்துக்களை தன் பெயருக்கு மாற்றி எழுதிக்கொண்டு, அதன் பின் பெற்றோரை விரட்டியடிக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டு, வயதான காலத்திலும், தன்னம்பிக்கையோடு உழைத்து வாழும் முதியோரை நாம் காண முடிகிறது. இப்படி புறக்கணிக்கப்பட்ட பெற்றோர், முதியோர் நீதிமன்றத்துக்கு போய் அலைந்து, திரிந்து மகன், மகளிடம் பராமரிப்புத் தொகை வாங்கும் நிலையிலும் அவர்கள் இல்லை. அப்படியே நீதிமன்றத்துக்குப் போனாலும், வழக்குகள் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்படுவதால், தள்ளாத வயதிலும் நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி, இறங்கி சிரமத்துக்குள்ளாக வேண்டியுள்ளது. இவ்வாறு பரிதவிக்கும் பெற்றோர், மூத்த குடிமகன்கள் இனி கவலைப்பட வேண்டியதில்லை.பெற்றோர், மூத்த குடிமக்கள் நல மற்றும் பராமரிப்புச் சட்டம் 2007இன்படி புகார் கொடுத்தால், உடனுக்குடன் பிரச்சினையை தீர்த்து பராமரிப்புத் தொகை பெற்றுத் தரும் வகையில், 2009 டிச., 31இல் தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, அருகிலுள்ள ஆர்.டி.ஓ.,விடம் (கோட்டாட்சியர்) பாதிக்கப்பட்ட முதியோர் புகார் செய்தாலே போதும். அவர் சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து, முதியோருக்கு, பெற்றோருக்கு பராமரிப்புத் தொகை பெற்றுத் தர முடியும். மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்களிடமும் புகார் செய்யலாம்.வழக்கை விசாரித்து முடிவுக்கு கொண்டு வரவும், பராமரிப்புத் தொகை தர மறுப்போருக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது சிறைக்குள் தள்ளவும், அபராதமும், தண்டனையையும் சேர்த்து வழங்கவும் ஆர்.டி.ஓ.,க்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வயோதிகத்தின் காரணமாக, விசாரணைக்கு வர முடியாத முதியோர், தங்களுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அதிகாரிகள் தரப்பில் ஒருவரை பிரதிநிதியாக நியமித்துக் கொள்ளவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது.இந்த வாய்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சமூக நலத்துறை பல கட்ட முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. சமூக நலத்துறை ஆணையர் நிர்மலா கூறியதாவது: சிறீரங்கத்தில் தந்தை இறந்துவிட்டதாக கூறி, பல லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தனது பெயருக்கு மகன் மாற்றிக் கொண்டார். தந்தையையும் ஓரங்கட்டி விட்டார். விஷயமறிந்த தந்தை, ஆர்.டி.ஓ.,விடம் புகார் செய்தார். விசாரணையில், மகன் மோசடி செய்தது உண்மை என தெரிந்து, சொத்துக்கள் அனைத்தையும் தந்தை பெயருக்கே மாற்றிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் புதிய உத்தரவின் மூலம், எழுதி வைத்த உயிலைக்கூட பெற்றோர் மாற்றி எழுதவும் வகை செய்யப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களும், பெற்றோரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு நிர்மலா கூறினார்