ஈராக் மற்றும் சிரியாவில் பகுதிகளில் செயல்படும் போராளி குழுவான ஈராக்கிய இஸ்லாமியத் தேசம்‘ மற்றும் ‘இசிஸ்‘ என்று அழைக்கப்படும் ‘லெவெண்ட்‘ அமைப்புகள், ஈராக் மற்றும் சிரியாவின் உள்ள ஷியா ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடிவருகின்றனர்.தற்போது அரசின் கட்டு பாட்டில் உள்ள ஈராக்கின் மோசுல் நகரை இவர்கள் கைப்பற்றிய பிறகு அங்கிருந்து மக்கள் வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மோசுல் நகரை கைப்பற்றியுள்ள, ‘ஈராக்கிய இஸ்லாமியத் தேசம்‘ மற்றும் ‘இசிஸ்‘ என்று அழைக்கப்படும் ‘லெவெண்ட்‘ அமைப்புகள் மேலும் முன்னேறி வருகின்றன. ‘இது அந்தப் பிராந்தியத்துக்கே மிகவும் அபாயகரமானது‘ என்று அமெரிக்கா கூறியுள்ளது. அல்கொய்தாவின் ஒரு கிளை அமைப்பான ‘இசிஸ்‘, இப்போது கிழக்கு சிரியா, மேற்கு மற்றும் மத்திய ஈராக் ஆகிய பகுதிகளில் கணிசமான அளவுக்கு நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. மேலும் ஈராக்கின் கிர்குக் மற்றும் சலாஹதீன் மாகாணங்களிலும் அந்த அமைப்பினர் முன்னேறி வருகின்றனர்.
இந்நிலையில் நாட்டில் பெரும்பான்மையாக வசிக்கும் சன்னி முஸ்லிம்களுடன் இணைந்து
செயல் பட்டு சட்டம் ஒழுங்கை சீர் செய்யுமாறு, ஷியா முஸ்லிமான, அந்நாட்டு பிரதமர் நூரி அல் மாலிக்கியிடம் அமெரிக்கா கோரியுள்ளது. ஈராக்கின் பாரபட்சமான கொள்கைளை முன்னெடுக்கிறார் என்ற குற்றச் சாற்றுக்கு நூரி அல் மலிக்கி ஆளாகியுள்ளார். இதற்கான காரணமாக அங்கு இன வன்முறைகள் ஏற்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...