Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 29, 2014

வீராணம் ஏரியில் திடீர் உடைப்பு விளைநிலங்கள் நீரில் மூழ்கின இரவோடு இரவாக சீரமைப்பு!

காட்டுமன்னார்கோவில்:கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி மூலம் சுமார் 48 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகிறது. இந்த ஏரியில் இருந்து சென்னைக்கும் குடிநீர் அனுப்பப்படுகிறது. வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் அனுப்பப்படுகிறது.

ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி. ஒவ்வொரு ஆண்டும் விவசாய பணிகள் முடிந்தவுடன் கோடை காலத்தை முன்னிட்டு சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படுகிறது. அதற்காக ஏரியின் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்குவதில் பொது பணித்துறையினர் ஈடுபடுவது வழக்கம். இந்த ஆண்டும் கடந்த சில தினங்களாக ஏரியின் முழு கொள்ளளவு தண்ணீர் நிரப்புவதற்காக அதிக அளவு தண்ணீர் தேக்கினர். இதனால் ஏரியின் நீர்மட்டம் 46.95 அடியாக உயர்ந்தது. நீர்மட்டம் அதிகமானதால் தண்ணீர் வெளியேறி வெட்டுவாய்க்காலில் சென்றது. அதிக அளவு தண்ணீர் சென்றதால் எதிர்பாராதவிதமாக கரை உடைந்தது. இதனால் ஏரி தண்ணீர் வெளியேறி மடப்புரம் பகுதியில் உள்ள விளை நிலங்களில் தேங்கியது.

உளுந்து, பயறு விதைக்கப்பட்டுள்ள நிலங்களில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் கவலையடைந்தனர். மேலும் வயல்களில் கால்நடைகளுக்காக வைத்திருந்த வைக்கோல்களும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. உடைந்த கரையை மணல் மூட்டைகள் கொண்டு அடைக்கும் பணியில் விவசாயிகள்

ஜனவரி 28, 2014

பல லட்சம் இஸ்லாமியர்கள் திரண்ட தவ்ஹீத் ஜமாத்தின் இட ஒதுக்கீடு போராட்டம்!

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரியும், தமிழகத்தில் உள்ள முஸ்லீம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை உயர்த்த கோரியும் லட்சகணக்கான முஸ்லீம்களை ஒன்று திரட்டி தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவித்திருந்தது. அதன்படி சென்னை, கோவை, நெல்லை, திருச்சி ஆகிய இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவை காந்திபுரத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர். கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் கண்டன உரையாற்றினார்.அப்போது அவர், ”தமிழகத்தில் முஸ்லீம்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீடு போதுமானதல்ல என்றும் அதை அதிகரித்துத் தருவோம் என்று ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். ஆனால், இரண்டரை ஆண்டு காலமாகியும் இன்னும் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

அதேபோல், இந்திய அளவில் முஸ்லீம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்தாமல் காங்கிரஸ் அரசு ஏமாற்றி வருகிறது.
உடனடியாக இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் நாடாளுமன்றம், சட்டமன்றத்தை முற்றுகையிட்டு அதன் செயல்பாட்டை முற்றிலுமாக முடக்குவோம்” என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, தர்மபுரி, திண்டுக்கல் மற்றும் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் உட்பட 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை
இதேப்போன்று சென்னையிலும் ராஜரத்னம் ஸ்டேடியம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

நெல்லை, வண்ணாரப்பேட்டை தெற்குப் புறவழிச்சாலையில் ஜமாத்அத் சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது. இதற்கு ஜமாத்அத் மாநில மேலாண்மை குழு தலைவர் எம்.எஸ்.சுலைமான் தலைமை வகித்தார். இந்த போராட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், தேனி மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த ஜமாஅத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போலீசார் விரைவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். டி.ஐ.ஜி. சுமித்சரன் தலைமையில் 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பேருந்துகள் மாற்று சாலைகள் மூலமாக செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனால் பல்லாயிரக்கணக்கான ஜமாத்அத் உறுப்பினர்கள் திரண்டு வந்து போராட்டத்தில் கலந்து கொண்ட போதிலும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படவில்லை.

திருச்சி
திருச்சியில் ஜி.கார்னர் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை, நாகப்பட்டினம், பெரம்பலூர், சிவகங்கை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட  மாவட்டங்களில் இருந்து 60 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட  இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் ஆண்களுக்கு சமமான அளவு பெண்கள் கலந்துகொண்டனர். பல பெண்கள் கைகுழந்தையோடு கொழுத்தும் வெயிலில்  நின்று கொண்டு  கோஷங்கள் எழுப்பினர்.  கூட்டத்தில் வந்திருந்த  பச்சிளம் குழந்தைகளுக்கு 100 லிட்டர் பால் வழங்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில், இட ஒதுக்கீடு எங்களுக்கு வழங்கினால் நாங்கள் அரபு நாடுகளில் ஆடு மாடு மேய்க்க தேவையில்லை. தமிழகத்தின் முதல்வரே ஆணையம் போட அவசியமில்லை. ஆட்சியில் நீங்கள் இருப்பதால் ஆணை மட்டும் பேதுமே.. தமிழகத்தின் முதல்வரே ஆட்சிக்கு வந்தால் உயர்த்தி தருவோம் என்றீரே, மாதம் முப்பது போன பின்னும் மூச்சு பேச்சு இல்லையே, நியாயம்தானா நியாயம் தானா இஸ்லாமியர்களை வஞ்சிப்பது நியாயம்தானா.. ஏமாற மாட்டோம் ஏமாற மாட்டோம் இனியும் நாங்கள் ஏமாறமாட்டோம். இட ஒதுக்கீடு ஒன்றை தவிர வேறு எதையும் ஏற்க மாட்டோம். அதேபோல்  காங்கிரசே, 2009  தேர்தலில் இடஒதுக்கீடு தருவோம் என அறிவித்தாயே, 2009ல் அறிவித்தாயே. பத்தாண்டுகள் ஓடிப்போச்சு, இட ஒதுக்கீடு என்ன ஆச்சு.. என அ.தி.மு.க, காங்கிரஸ் என ஆளும் கட்சிக்கெதிராக அவர்கள் எழுப்பிய கோஷங்கள் விண்ணை பிளந்தது.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின்

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு போராட்டம்

மத்திய அரசு பணிகளில் இஸ்லாமியர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடும், தமிழகத்தில் 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை உயர்த்தித் தர வலியுறுத்தியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஜனவரி 27, 2014

வீராணம் ஏரிக்கரை சாலையோர புளிய மரத்தில் தீ விபத்து!போக்குவரத்து பாதிப்பு

கொள்ளுமேடு கந்தகுமாரன் இடையே சாலையோரத்தில் இருந்த மிக பழைமையான புளிய மரம் ஒன்றில் இன்று காலை தீ பிடித்ததில் அந்த மரம் முழுவதும் கருகியது, பின்னர் தீயனைப்புத்  துறையினர் வந்து தீயை அணைத்தனர்.இதனால் வீராணம் ஏரிக்கரையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


செய்தி படங்கள்: அபுல் மல்ஹர் 

கடலூரில், கலெக்டர் கிர்லோஷ்குமார் தேசிய கொடியேற்றினார்!

கடலூரில் நேற்று நடந்த குடியரசு தினவிழாவில் கலெக்டர் கிர்லோஷ்குமார் தேசிய கொடி ஏற்றி வைத்து, 230 பேருக்கு ரூ.62 லட்சத்து 89 ஆயிரத்து 892 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்தியாவின் 65–வது குடியரசு தினவிழா நேற்று நாடெங்கிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கடலூரில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

விழாவையொட்டி அண்ணா விளையாட்டு மைதானம் தேசிய கொடிகளாலும், வண்ண காகிதங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து காலை 8 மணிக்கு மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் விழா மேடைக்கு வந்து தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பிறகு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக்கொண்டார். ஆயுதப்படை போலீசாரும், தீயணைப்பு படையினரும், ஊர்க்காவல்படையினரும், தேசிய மாணவர் படையினரும், நாட்டுநலப்பணி திட்ட மாணவர்களும், சாரண– சாரணியர்களும் மிடுக்குடன் அணிவகுத்து வந்தனர். முன்னதாக கலெக்டர் கிர்லோஷ்குமார் திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.

அவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதிகாவும் உடன் வந்தார். இதைத்தொடர்ந்து காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 21 போலீசாருக்கு

ஜனவரி 26, 2014

அராஜகவாதிகள் ஆட்சிக்கு ஏற்றவர்கள் அல்ல: பிரணாப் குடியரசுத் தின உரை

வரும் மக்களவைத் தேர்தலில் மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டும். பெரும்பான் மையற்ற அரசு அமைந்தால் அது நாட்டுக்கு பேராபத்தாகிவிடும் என்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். 65-வது குடியரசுத் தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரை வருமாறு:

கடந்த சில ஆண்டுகளாக மத்தியில் பெரும்பான்மை பலம் இல்லாமல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால் இந்திய அரசியலில் குழப்பம் ஏற்படுகிறது. 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் இதே போன்ற நிலைமை ஏற்பட்டால் பெரும்பான்மை பலம் இல்லாத நிலையற்ற அரசே மத்தியில் அமையும். அதனால் சந்தர்ப்பவாதிகள் கையில் அரசு சிக்கிவிடும். அது நாட்டுக்கு பேராபத்தாகிவிடும். அதுபோன்ற சூழ்நிலை ஏற்படக்கூடாது. இப்போது ஏற்பட்டுள்ள காயங்கள் ஆறும் வகையில் நிலையான அரசு மத்தியில் அமைய வேண்டும். இந்தியாவின் நலன் கருதி வாக்களிக்க வேண்டியது அனைவரின் கடமையாகும்.

இந்தியா அழகான நாடாக வலிமைமிக்க நாடாக உருவெடுத்துள்ளது. ஆனால் சில நேரங்களில் நமது ஜனநாயகத்தில் கூச்சல், குழப்பம் நிலவுகிறது. எனினும் தன்னுடைய தவறுகளை தானே திருத்திக் கொள்ளும் வலிமை ஜனநாயகத்துக்கு உள்ளது. 2014-ம் ஆண்டு இந்திய வரலாற்றில் முக்கிய ஆண்டாக அமைய வேண்டும். நாடு மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்ப வேண்டும். அதற்கு இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதன்மூலம் இந்திய கிராமங்கள், நகரங்களை 21-ம் நூற்றாண்டின் தரத்துக்கு அவர்கள் உயர்த்திக் காட்டுவார்கள். இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு அளித்துப் பாருங்கள். அவர்கள் இந்தியாவின் தலையெழுத்தையே

ஜனவரி 25, 2014

ஓர் வபாத் செய்தி!

நமதூர் கடைத் தெருவில் வசிக்கும் ரஹ்மத்துல்லாஹ்  அவர்களின் மகன் மௌவி ஹபிபுர்ரஹ்மான் அவர்கள் இன்று  காலை கும்பகோணத்தில் தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.... 

எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் அனைவருக்கும் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் "ஷப்ரன் ஜமிலா" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress பிரார்த்தனை செய்கிறது.

ஜனவரி 12, 2014

காட்டுமன்னார் குடியில் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பட்டம்!

காட்டுமன்னார் குடியில் நேற்று 11.01.2014  சனிக்கிழமை மாலை 3.00 மணியளவில் SDPI கட்சி சார்பில் சமையல் எரிவாயு,பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்தும் ,விலை உயா்வை திரும்பப் பெறக் கோரியும் மாபெரும் கண்டண ஆா்ப்பட்டம் நடைபெற்றது.

ஜனவரி 10, 2014

சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான திருத்திய வாக்காளர் பட்டியல்!

சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான திருத்திய வாக்காளர் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2014-ம் ஆண்டிற்கான திருத்திய வாக்காளர் பட்டியலை உதவிஆட்சியர் எம்.அரவிந்த் வெளியிட்டார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடையே தெரிவித்தது: வாக்காளர் விழிப்புணர்வு குறித்து பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சைக்கிள் பேரணி, மனிதசங்கில் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு குறித்து பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகள் வைக்கப்பட்டு வருகிற ஜன.25-ம் தேதி பரிசுகள் வழங்கப்படுகிறது. கல்லூரிகளில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன என எம்.அரவிந்த் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் எம்.விஜயா, உதவிஆட்சியரின் நேர்முக உதவியாளர் தில்லைகோவிந்தன், துணை வட்டாட்சியர் (தேர்தல்) எம்.பன்னீர்செல்வம், வருவாய் ஆய்வாளர் எஸ்.அசோகன், கிராம நிர்வாக அலுவலர் திருமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வாக்காளர்கள் விபரம் வருமாறு:- 
காட்டுமன்னார்கோயில்: மொத்த வாக்காளர்கள்- 1,96,879, ஆண்கள்- 1,01,257, பெண்கள்- 95,619, இதர-1, புதிய வாக்காளர்கள்- 7683, வாக்குச்சாவடிகள் -236.

சிதம்பரம்: மொத்த வாக்காளர்கள்

ஜனவரி 09, 2014

லஞ்ச அதிகாரிகளை பிடிக்க டெலிபோன் அழைப்பு- உதவி மையத்தை தொடங்கி வைத்தார், அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஊழலை ஒடுக்குவதற்கான உதவி மையத்தை (ஹெல்ப் லைன்) முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தொடங்கிவைத்தார்.

இதன் டெலிபோன் எண் 011–27357169. இந்த மையம், காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும். லஞ்சம், ஊழல் பற்றி தகவல் அறிந்தவர்கள், இந்த உதவி மையத்தை டெலிபோனில் தொடர்பு கொள்ளலாம். அங்கிருக்கும் ஊழல் ஒழிப்பு துறை அதிகாரி, லஞ்சம் கேட்பவரை எப்படி ரகசியமாக படம் (ஸ்டிங் ஆபரேஷன்) பிடித்து சிக்க வைக்கலாம் என்று யோசனை சொல்வார். அதன்படி, ரகசியமாக படம் பிடித்த பிறகு, மீண்டும் அதே ஊழல் ஒழிப்புத்துறை அதிகாரியை அணுக வேண்டும். அதன்பிறகு, லஞ்சம் கேட்பவர் பொறி வைத்து பிடிக்கப்படுவார்.

இத்தகவல்களை அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:– ரகசியமாக படம் பிடித்த 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உதவி மையம் மூலம், ஒவ்வொரு டெல்லிவாசியும் ஊழல் ஒழிப்பு போராளியாக மாறலாம். ஒரே டெலிபோன் அழைப்பில் ஊழலை அம்பலப்படுத்தி

ஜனவரி 05, 2014

சிந்திப்போம் விட்டொழிப்போம்!

 
தமிழகத்தில் பல வருடங்கள் பக்தி பரவசத்துடன் ஓதிவரும் சுப்ஹான் மவ்லிதின் வரிகள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு முரணாக அமைந்துள்ளது என்று நாம் பலவருடங்களாக கூறிவருகிறோம்.

நம் கருத்துக்கு எதிர் கருத்துக் கூறுபவர்கள் நாம் தவறான அர்த்தம் அதற்கு கொடுப்பதாக குற்றம் சுமத்தினர். 
எனவே சுப்ஹான மவ்லிதின் சரியான பொருளை அவர்களைச் சார்ந்த மவ்லித் ஓத வேண்டும் என்று வலியுறுத்தும் தேங்கை சர்புத்தீன் என்ற மவ்லவி எழுதிய சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் என்ற புத்தகத்திலிருந்து மொழிபெயர்ப்பை எடுத்து எழுதியுள்ளோம். 
அதோடு அந்த மவ்லித் வாரிகளுக்கு எதிர் கருத்து கூறும் திருக்குர்ஆன் நபிமொழிகளை மட்டும் நாம் எடுத்தொழுதியுள்ளோம். அதில் நம் கருத்துக்களை சேர்க்கவில்லை. மவ்லித் ஓதினால் நன்மையுண்டு என்று எண்ணுபவர்கள் அதன் உண்மை நிலை இதன் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.
1.மவ்லித் வரிகள்

اَلسَّلام عَلَيْكَ يَا مَاحِي الذُّنُوْبِ        اَلسَّلاَمُ عَلَيْكَ يَا جَالِي الْكُرُوْبِ

பாவங்களை அழிப்பவரே! நும் மீது ஸலாம் !
கவலைகளை அகற்றுபவரே! நும் மீது ஸலாம் !

اَنْتَ غَفَّارُ الْخَطَايَا           وَالذُّنُوْبِ الْمُوْبِقَاتِ

இழிவூட்டும் சிறுபிழைகள் யாவும் பொறுப்பது தாங்களன்றோ,
அழிவேற்படுத்தும் வன்பிழைகள் அனைத்தும் பொறுப்பது தாங்களன்றோ

كَفِّرُوْا عَنِّيْ ذُوْنُبِيْ    وَاعْفُ لِيْ عَنْ سَيِّئَاتِ

என்னில் நிகழும் பெரும் பிழைகள் யாவையும் மன்னித் தருள்வீரே!
சின்னஞ் சிறிய தீமைகளை சீராய் பொறுத்தருள் புரிபவரே!
குர்ஆன் வரிகள்
அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? (அல்குர்ஆன் 3:135)
தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! (அல்குர்ஆன் 39:53)
எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டு அழிப்பாயாக! நல்லோருடன் எங்களைக் கைப்பற்றுவாயாக!” (அல்குர்ஆன் 3:193)

2.மவ்லித் வரிகள்

يَا مَنْ تَمَادى وَاجْتَرَمْ      تُبْ وَاعْتَرِفْ وَارْجُ الْكَرَمْ
وَلُذْ بِمَنْ حَلَّ الْحَرَمْ    وَنُوْرُهُ عَمَّ الْبِلاَدِ

பாவத்தில் நீடித்திருப்பவனே! குற்றம் இழைத்துவிட்டவனே! நீ பாவமன்னிப்புக் கேள்! உன் குற்றத்தை ஒப்புக் கொள்!
நபியின் கொடைத்தன்மையை எதிர்பாத்துக் கொள்!
புனிதம் மிக்க ஹரம் ஷரீபின் பொன்னடி பதித்த பூமான் நபியிடம் புகலிடம் தேடிக் கொள். அவர்களின் பேரொளி அனைத்து நாடுகளையும் பொதுவாகச் சூழ்ந்து கொண்டது.
குர்ஆன் வரிகள்
அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்றமாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன்” என்றும் கூறுவீராக!

(அல்குர்ஆன் 72 : 22)
அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே

ஜனவரி 04, 2014

ஓர் வபாத் செய்தி!

நமதூர் கடைத் தெருவில் வசிக்கும் மர்ஹூம் அப்துல் ஜப்பார் அவர்களின் மகனும், முஹம்மது ஹாரிஸ் மற்றும் முகம்மது ஆசிக்  ஆகியோரின் தகப்பனார் முஹம்மது பாருக்  அவர்கள் இன்று  மாலை தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....

எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் அனைவருக்கும் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் "ஷப்ரன் ஜமிலா" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress பிரார்த்தனை செய்கிறது.

காட்டுமன்னார்கோவில் பகுதியில் வாக்கு சாவடி மையங்கள் ஆய்வு!

காட்டுமன்னார்கோவில், : காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாராளுமன்ற தேர்தலுக்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி வட்டாட்சியர் அலுவலகத் தில் செயல்படும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தொடங்கி செயல்படுத்தி வருகின்றனர். காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியில் 236 வாக்குசாவடி மையங்கள் உள்ளது. இவை 23 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆய்வு பணி கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் குடிநீர் சுகாதாரம், மின் வசதி, கட்டிடங்களின் தரம், இணைய தள வசதி, தொலைபேசி வசதி, மாற்று திறனாளிகள் வாக்களிப்பதற்கு ஏதுவாக சாய்வு தளங் கள் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆய்வில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டாட்சியர்கள் ஆகியோர் ஈடு பட்டு வருகின்றனர். வரும் 6ம் தேதிக்குள் ஆய்வு பணியை முடித்து அறிக்கை அனுப்ப தேர்தல் ஆணை யம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணிகள் தீவிர மாக நடைபெற்று வருகிறது.

ஜனவரி 01, 2014

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சி – பிரசாந்த் பூஷண்!

தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சி திகழும் என்று அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரும், வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் தெரிவித்தார்.திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு உலைகளுக்கு எதிராக இடிந்தகரையில் கடந்த2ஆண்டுகளாக மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இப்போராட்டத்துக்கு தொடக்கத்தில் இருந்தே ஆதரவு தெரிவித்து வரும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஞாயிற்றுக்கிழமை இடிந்தகரைக்கு வந்தார்.

அங்கு போராட்டத்துக்காக அமைக்கப்பட்டிருக்கும் பந்தலில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் அவர் பேசினார்.அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கப் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயகுமார், நிர்வாகிகள் புஷ்பராயன், ஜேசுராஜன், முகிலன் உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூடங்குளத்தில்அமைக்கப்பட்டுள்ள அணு உலைக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வரும் குழுவுக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு அளிக்கும். வருகிற மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட உள்ளது. கட்சி சார்பில் போட்டியிட நேர்மையானவர்களை தேர்வு செய்து வருகிறோம். கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடும் போராட்டக் குழுவைச் சேர்ந்த உதயகுமார் போன்றவர்கள் அரசியலுக்கு வந்தால் அவர்களை ஆம் ஆத்மி கட்சி வரவேற்கும்.தமிழக மீனவர்கள் விஷயத்தில் மத்திய அரசின் நடவடிக்கை மோதல் போக்கை வளர்க்கும் வகையில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் சமரசப் பேச்சுவார்த்தை