Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 30, 2012

குவைதில் வேலைவாய்ப்பு !


நன்றி:மணிச்சுடர் 

பாஸ்போர்ட்டுக்கான புதிய வசதிகள்!

தமிழ்நாட்டில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களில் (பாஸ்போர்ட் சேவா கேந்திரா) பாஸ்போர்ட்டை நிரப்ப வரும் பொதுமக்கள் ரூ.100 கட்டினால், அவர்களே விண்ணப்ப பாரங்களை நிரப்பிக்கொடுக்கிறார்கள். பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்ப பாரங்களை நிரப்புவதற்கு சேவை வழங்குபவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரூ.100 கட்டணம் செலுத்தினால் அவர்களே விண்ணப்ப பாரங்களை நிரப்பி, பாஸ்போர்ட் அதிகாரியிடம் நேர்முக பேட்டிக்கு நேரம் வாங்கி தரும் ஏற்பாடுகளையும் செய்து விடுவார்கள். இதன் மூலம் தரகர்கள் மற்றும் ஏஜெண்டுகள் இந்த பணியில் ஈடுபடுவதை தவிர்க்க முடியும். தற்போது சனி, ஞாயிறு போன்ற வார இறுதி நாட்களிலும் பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பங்களை தாக்கல் செய்யும் வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வசதி ஜூலை மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

பாஸ்போர்ட் பெற புதியமுறை: கலெக்டர் அலுவலகத்திலேயே விண்ணப்பிக்கலாம்!


புதிதாக பாஸ்போர்ட் பெற அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய முறையினால், அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்போருக்கு புதிய வசதிகளை பாஸ்போர்ட் அலுவலகம் செய்துள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வாய்ப்பைத் தவிர, அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் விண்ணப்பிக்கும் முறை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இனி, பாஸ்போர்ட் பெற வேண்டும் என்றால் சென்னை வர வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்தந்த மாவட்ட ஆட்சியர்

ஜூன் 28, 2012

உலக அளவில் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு உணவு வீணடிக்கப்படுகிறது

kollumedu

27-உலகம் முழுவதும் ஓராண்டில் தயாராகும் உணவு பொருட்களில் மூன்றில் ஒரு பங்கு மனிதர்களின் வாயை சென்றடைவதில்லை. வீணடிக்கப்பட்டு நேராக குப்பைக்கு போகின்றன என்று அய்.நா. அறிக்கை தெரிவிக்கிறது.
 பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் ரியோ +20 என்ற பெயரில் ஜி-20 நாடுகளின் மாநாடு நடந் தது. அதையொட்டி சுற் றுச்சூழல் திட்ட அறிக்கையை அய்.நா. நேற்று வெளியிட்டது. அதில் இடம்பெற்ற அம்சங் கள் வருமாறு:

  ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் தயா ராகும் உணவு பொருட் களில் மூன்றில் ஒரு பங்கு மனிதர்களால் பயன் படுத்தப்படாமலே வீணடிக்கப்படு கிறது. போக் குவரத்தில் ஏற்படும் இழப் பில் ஒரு பகுதி வீணாகிறது. நுகர்வோர் தெரிந்தே வீணாக்குவது மீதி. வட அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகளில் மட்டும் ஆண்டுதோறும், சாப்பிடக்கூடிய நிலையில் சுமார் 22.2 கோடி டன் உணவு வீணடிக்கப்படுகிறது. சுவீடனைச் சேர்ந்த புட் அண்ட் பயோடெக் னாலஜி கல்வி நிறுவன ஆராய்ச்சியாளர்கள் குழு இதற்கான ஆய்வை கடந்த ஆண்டில் நடத்தியது. அதன்படி, உண வுப் பொருட்கள் அவை உற்பத்தியாகும் விளை நிலத்தில் தொடங்கி, போக்குவரத்து, சேமிப்பு கிடங்கு, சந்தை என தொடர்ந்து வீட்டின் உணவு மேசை வரை வீணடிக்கப்படுகின்றன. குறிப்பாக, நடுத்தர மற்றும் உயர் வருமான பிரிவினர் அதிகமுள்ள நாடுகளில் உணவுகள் அதிகபட்சம் வீணாகின் றன.

மனிதன் சாப்பிடக் கூடிய

வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்தது!

காட்டுமன்னார்கோவிலில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு கீழணையிலிருந்து வடவாறு வழியாக தண்ணீர் வரும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் இறுதியில் தண்ணீர் திறக்கப்படும். வீராணம் ஏரி மூலம் 48 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகிறது. கடந்த ஆண்டு தேக்கப்பட்ட தண்ணீர் மே மாதம் வரை ஏரியில் நிரம்பி இருந்தது. இதனால் சென்னைக்கு தட்டுபாடின்றி தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் கடுமையாக வெயில், மழையில்லாத காரணத்தால் ஏரியில் தேக்கப்பட்ட தண்ணீர் படிப்படியாக குறைந்தது. தற்போது ஏரியில் 40.10 அடி தண்ணீர் உள்ளது.

சென்னைக்கு வினாடிக்கு 38 கனஅடி வீதம் தண்ணீர் செல்கிறது. ஏரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோடைக்காலத்தில் வளர்ப்பதற்காக 1 லட்சம் மீன் குஞ்சுகள் மீன் வளத்துறை சார்பில் விடப்பட்டது. தற்போது ஏரி வறண்டதால் அவையும் ஆயிரக்கணக்கில் அழிந்தன. ஏரியில் தண்ணீர் வற்ற தொடங்கியதால் இறந்த மீன்கள் மற்றும் பாசிகளின் துர்நாற்றமும் வீசத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக ஏரிக்கரை ஓரத்தில் வசிக்கும் கிராம மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். ஏரி வறண்டதால் விவசாயம், பொதுமக்கள் என அனைத்து தரப்பிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலை நீடித்தால்

மியான்மரில் இருந்து முஸ்லிம்களின் புலன் பெயர்வு தொடர்கிறது!

50க்கும் மேற்பட்டவர்களின் மரணத்திற்கு காரணமான வகுப்புவாத கலவரத்திற்கு பிறகு மியான்மரில் இருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புலன்பெயர்ந்து வருகின்றனர். பெரும்பான்மை சமூகமான பெளத்தர்களின் தாக்குதலைத் தொடர்ந்து இவர்கள் தமது நாட்டைவிட்டு வெளியேற நேர்ந்துள்ளதாக அல்ஜஸீரா கூறுகிறது. மியான்மரின் மேற்கு மாவட்டமான ராக்கேனில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது பெளத்தர்கள் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டனர். தமது பூர்வீக நாடான பங்களாதேஷிற்கு செல்ல அவர்கள் ரோஹிங்கியா முஸ்லிம்கள் முயன்றபொழுது பங்களாதேஷின் கடலோர காவல்படை அவர்களை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. ரோஹிங்கியா அகதிகளை அங்கீகரிக்க பங்களாதேஷுக்கு ஐ.நா கோரிக்கை விடுத்த போதிலும் தண்ணீரும், உணவும் அளித்துவிட்டு அவர்களை மீண்டும் கடலுக்கு ராணுவத்தினர் திருப்பி அனுப்புவதாக அல்ஜஸீரா கூறுகிறது.
source:

ஜூன் 27, 2012

பாசிச இஸ்ரேலின் முகம் இருண்டது!


ஒரு நாடு விடுதலை அடையும் போது உலகின் பெரும்பாலான் மக்கள் அதற்காகசந்தோஷப்படுவதுதான் இயல்புஆனால் ஒரு நாடு தன் பிறப்பை உலகுக்குஅறிவித்தபோது அதனால் சந்தோசப்பட்டவர்களை விட,கவலையடைந்தவர்களும்கோபப்பட்டவர்களும்,குழப்பம் அடைந்தவர்களும்தான் அதிகம்.இந்தியா கூட அந்த நாட்டை ஒரு நாடாக அப்போதுஅங்கீகரிக்கவில்லைஅந்த நாடு சந்தேகம் இல்லாமல்  இஸ்ரேல்.
 
இஸ்ரேல் என்கின்ற இந்த யூத நாடு உலகில் உருவான கதையை அறிந்தவர்கள்இதை ஒரு நாடாக ஒரு காலத்திலும் அங்கீகரிக்க மாட்டார்கள். சொந்த மண்ணில்சந்தோஷமாய் வாழ்ந்த ஒரு கூட்டத்தை துரத்தியடித்து, தீவிரவாதிகள் பட்டம்கட்டி தலைமுறை தலைமுறையாக அந்த அப்பாவி மக்களுக்கு வலியையும்வேதனையும் பரிசளிக்கும் ஒரு பாசிச சக்தி இஸ்ரேல்.அதனுடைய முகத்தில்கரியை பூசுகின்ற வகையில் ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.
 
1983 ஆண்டில் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் புலிட்சர் விருது பெற்றஒரு நாவல் “The Color Purple"  இந்த நாவலின் ஆசிரியர் அமெரிக்க கறுப்பினஎழுத்தாளர் அலிஸ் வால்க்கர் (Alice Walker), இந்த நாவல் ஒரு எளிய ஆப்பிரிக்கஅமெரிக்க பெண்மணியை பற்றிப் பேசக்கூடியதாகும்இந்த நாவல் ”ஜூராஸிக்பார்க்”பட புகழ் இயக்குநர் டீவன் ்பீல்பெர்கால் திரைப்படம் ஆகவும் 1985ல்எடுக்கப்பட்டது.
 
உலக அளவில் பெரும் பெயர் பெற்ற இந்த நாவலை யூதர்களின் மொழியான“ஹீப்ருவில்”மொழிபெயர்த்து விற்பனை செய்ய  இஸ்ரேலை சார்ந்த “யெடியட்புக்ஸ்” எனும் பதிப்பகம் முயற்ச்சித்தது. ஆனால் தன்னுடைய புத்தகத்தைீப்ரு மொழியில் மொழிபெயர்த்து இஸ்ரேலில் விற்பனை செய்யக்கூடாதுஎன அலிஸ் வால்க்கர் தடை செய்துள்ளார்.
  
இனப்பாகுபாடுகளை சாடும் தன் புத்தகத்தை மொழிபெயர்ப்பதற்கு முன்னால்இஸ்ரேலிலும், பாலஸ்தீனத்திலும் அரபு பேசும் மு்லீம்களுக்கு நடத்தும்கொடுமைகளை இஸ்ரேல் நிறுத்தி கொள்ள வேண்டும். பாலஸ்தீனியர்கள்குறித்த தனது அரசியல் நிலைப்பாட்டை இஸ்ரேல் மாற்றிக்கொள்ளும் வரை தன் புத்தகத்தை வெளியிடக் கூடாது எனவும் கூறியுள்ளார்.
 
ஒரு கருப்பின பெண்ணாக அமெரிக்காவில் வெள்ளையர்களின் இனக்கொடுமைகளை நான் சந்தித்திருக்கிறேன் ஆனால் பாலஸ்தீனியர்களுக்கு காட்டப்படும் இனப்பாகுபாடு என்பது மிகக்கொடுமையானது என அவர் பதிவு

ஜூன் 26, 2012

மொபைலில் பேசும் வசதியுடன் விரைவில் புதிய விமான சேவை

புதுடில்லி:விமானத்தில் செல்லும்போதும், "மொபைல் போனில்' பேசுவது, உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்ட புதிய விமானத்தை, பிரிட்டனின் விர்ஜின் நிறுவனம், விரைவில் டில்லியிலிருந்து லண்டனுக்கு இயக்கவுள்ளது. இதுகுறித்து பிரிட்டனின் விர்ஜின் விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸ்டீவ் ரிக்வே கூறியதாவது: தற்போது விமானங்களில் பயணிப்போர், "மொபைல் போனில்' பேச முடியாது.

ஆனால், நாங்கள் புதிதாக, டில்லியிலிருந்து லண்டனுக்கு, அடுத்த மாதம், 11ம் தேதியில் இருந்து இயக்கவுள்ள, ஏ-330 ரக விமானத்தில், "மொபைல் போனில்' பேசும் வசதியை ஏற்படுத்த உள்ளோம். இதற்காக, அந்த விமானத்தில் "ஏரோ மொபைல்' தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்தவுள்ளோம். இதன் மூலம், அந்த விமானம், தரையிலிருந்து 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தாலும், அதிலிருந்தபடி "மொபைல் போனில்' பேசவும், குறுந்தகவல்களை அனுப்பவும் முடியும். இதுதவிர, தொடு திரை பொழுபோக்கு வசதியையும் அறிமுகப்படுத்த உள்ளோம். அந்த விமானத்தில் மேலும்

முஸ்லிம் சிறைக் கைதிகளை விடுதலை செய்யகோரி பெண்கள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்ட​​ம்!

7 வருடத்திற்கு மேலாக சிறையில் இருக்கும் முஸ்லிம் சிறைக்கைதிகளை விடுதலை செய்யக்கோரி நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் பெண்கள் அமைப்பினர் சென்னை, மதுரை, கோவை மற்றும் நெல்லை ஆகிய இடங்களில் நேற்று(ஜுன் 24) பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

கடந்த ஆட்சியில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை விஷயத்தில் அரசு அதிகாரிகளின் ஒருசார்பு தன்மை, உளவுத்துறை அதிகாரிகளின் முஸ்லிம் விரோதப்போக்கு, கருணையில் கூட அரசின் அப்பட்டமான பாரபட்சம் ஆகியவற்றால் முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கை தகர்க்கப்பட்டு விட்டது. மேலும், விசாரணை சிறைவாசிகளாக இருந்தபோது ஜாமீன் கூட மறுக்கப்பட்டு நீண்ட நெடும் சிறைவாசத்தை அப்போதே தண்டனையாக அனுபவித்து விட்டு அவர்கள் தண்டனைக் கைதிகளாக இப்போதும் சிறையில் வாடி வருகின்றனர். பல்வேறு வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 200க்கு மேற்பட்டவர்களில் ஒருவர் கூட மதரீதியாக குற்றங்களில் ஈடுபட்டதாக வழக்கோ, தண்டனைகளோ சுமத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொது மன்னிப்பில் சிறைக்கைதிகளை விடுதலை செய்வது என்பது தற்போதைய அ.தி.மு.க.அரசின் கொள்கைக்கு விரோதமானதல்ல. அரசின் பொது மன்னிப்பு என்பது முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்கு மட்டுமல்லாது மற்ற சிறைவாசிகளுக்கும் கிடைத்திட

ஜூன் 25, 2012

எகிப்திய குடியரசின் முதல் அதிபராக டாக்டர்.மு​ஹம்மது முர்ஸி தேர்வு!

கெய்ரோ:எகிப்திய குடியரசின் அதிபர் தேர்தலில் இஃவானுல் முஸ்லிமீனின் ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சியின் வேட்பாளரான டாக்டர்.முஹம்மது முர்ஸி வெற்றிப் பெற்றதாக எகிப்து தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நான்கு தினங்களாக நிலவிய சந்தேகங்களுக்கும், புதிருக்கும் இறுதியில் இன்று மதியம் 3.30 மணிக்கு(எகிப்திய நேரம்) தேர்தல் கமிஷனின் தலைமையகத்தில் எகிப்து அதிபர் தேர்தலுக்கான முடிவு அறிவிக்கப்பட்டது.

முஹம்மது முர்ஸி 13.2 மில்லியன் வாக்குகளையும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் அஹ்மத் ஷஃபீக் 12.3 மில்லியன் வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதன் மூலம் முஹம்மது முர்ஸி வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 8 லட்சம் வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

6 தினங்களாக அதிபர் தேர்தலின் முடிவை அறிய காத்து தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்டிருந்த மக்கள் இம்முடிவை ‘அல்லாஹ் அக்பர்’ (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்ற தக்பீர் முழக்கத்துடன் வரவேற்றனர்.

மகிழ்ச்சி வெள்ளத்தில் எகிப்து!
டாக்டர் முஹம்மது முர்ஸி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து எகிப்து முழுவதும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளது.

அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவை காத்திருந்த எகிப்து மக்கள், முடிவு வெளியானதும் மகிழ்ச்சி

ஜூன் 24, 2012

ஓர் வபாத் செய்தி

நமதூர் கூபாத் தெருவில் வசிக்கும் ரஃபிக் மற்றும் தாரிக் அவர்களின் தந்தை டீக்கடை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இன்று மாலை தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.....

எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் அனைவருக்கும் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் "ஷப்ரன் ஜமிலா" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress பிரார்த்தனை செய்கிறது. 

ஜூன் 23, 2012

தொகுதி மேம்பாட்டிற்காக அயராது உழைக்கும் நம்ம ஊரு எம்.எல்.ஏ முருகுமாறன்

காட்டுமன்னார்கோயில் இருந்து சேத்தியாதோப்பு குறுக்கு ரோடு வரையில் கூடுதலாக புதிய பேருந்தை காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் என்.முருகுமாறன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
   

கொள்ளுமேடு மதரசா அன்வாருல் ஹுதா பட்டமளிப்பு விழா


புகைப்படம்:முஹம்மது தவ்ஹீத் 

ஜூன் 22, 2012

கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் பேனர்கள் வைக்க கட்டுப்பாடு


தமிழக அரசின் உத்தரவை பின்பற்றி மாவட்டத்தில் பொது இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்க கட்டுப்பாடுவிதிக்க உள்ளாட்சி அமைப்புகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்த டிஜிட்டல் பேனர் கலாசாரம், தற்போது பட்டி தொட்டி எங்கும் பரவி விட்டது. தனி நபர் பிறந்த நாள் விழா முதல் மரண அறிவிப்பு மற்றும் நினைவஞ்சலி உள்ளிட்ட குடும்ப நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் பொது இடங்களில் டிஜிட்டல் பேனர் வைப்பது பேஷனாகி விட்டது. இதனை முறைப்படுத்த தமிழக அரசு கடந்த நவம்பர் 16ம் தேதி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.

விண்ணப்பம்

பொது இடங்களில் பேனர் வைப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பாக கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும். இந்த மனுவுடன், பேனர் வைக்கப்பட உள்ள இடத்தின் உரிமையாளர் அல்லது அரசாங்க இடம் எனில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரியின் தடையில்லாச் சான்று. போக்குவரத்திற்கு இடையூறு ஏதும் இல்லை என அந்தப்பகுதி போலீஸ் ஸ்டேஷனின் தடையில்லாச் சான்று. பேனர் வைக்கப்பட உள்ள இடத்தை சுற்றியுள்ள சாலைகள், தெருக்கள் உள்ளிட்ட இதர விவரங்கள் அடங்கிய சார்பு வரைபடம். அனுமதி கட்டணமாக 100 ரூபாய் மற்றும் வைப்புத் தொகை (ஒருபேனருக்கு) 50 ரூபாய் நகராட்சி கருவூலகத்தில் செலுத்தி அதன் ரசீது ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

அனுமதி

மனுவை கலெக்டர் பரிசீலனை செய்து, முழு விவரம் இருப்பின் 6 நாட்களுக்கு (பேனர் வைக்கும் நாள் முதல் அகற்றப்படும் நாட்கள் உட்பட) அனுமதி வழங்கப்படும். விவரம் இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்படும். அனுமதி பெற்ற நபர் வைக்கும் பேனர்களின் கீழ் பகுதியில் ஒரு அங்குலம் அளவில் கலெக்டரின் அனுமதி எண் மற்றும் காலக்கெடு, அனுமதிக்கப்பட்ட பேனர்களின் எண்ணிக்கையை குறிப்பிட வேண்டும்.

பேனர் அளவுகள்

நூறடிக்கு மேல் உள்ள சாலையில் 15 அடி உயரம், 24 அகலம்; 60 முதல் 100 அடி சாலையில் 12 அடி உயரம், 20 அடி அகலம்; 40 முதல் 60 அடி சாலையில் 10 அடி உயரம், 16 அடி அகலம்; 20 முதல் 40 அடி சாலையில் 8 அடி உயரம், 5 அடி அகலம்; 10 முதல் 20 அடி சாலையில் 3 அடி உயரம், இரண்டரை அடி அகலம்; சாலை மையத் தடுப்புகளில் 4 அடி உயரம் இரண்டரை அடி அகலம். சாலையோரம் அல்லது மையத் தடுப்புகளில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே பேனர் வைக்க அனுமதி வழங்கப்படும். 10 முதல் 40 அடி சாலைகளில் ஒருபுறமும், 40 அடிக்கு மேற்பட்ட சாலைகளில் இருபுறமும் பேனர்களை சாலையின் வாட்டத்திற்கே அமைக்க வேண்டும். ஒவ்வொரு பேனருக்கும் குறைந்தது 10 மீட்டர்இடைவெளி இருக்க வேண்டும்.

தடை செய்யப்பட்ட பகுதிகள்

கல்வி நிறுவனங்கள், மத சார்பான இடங்கள், உள் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் மருத்துவமனைகள், புராதான சின்னங்கள், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், சாலை - தெரு சந்திப்பின் 100 மீட்டருக்குள் பேனர் வைக்கக் கூடாது.

அபராதம்

அனுமதியின்றி வைக்கப்படும் பேனர் அகற்றப்படுவதுடன் அதற்குரிய அபராதம் வசூலிக்கப்படும். அதேப்போன்று அனுமதி பெற்று வைக்கப்படும் பேனர்கள் அரசுக்கு எதிராக இருந்தால் அந்த பேனருக்கு வழங்கிய அனுமதி ரத்து செய்வதோடு, அவை உடனடியாக அகற்றப்படும். பேனர் வைப்பவர்கள் விதிகளை மீறினாலோ, காலக்கெடுவிற்குள் அகற்றாவிட்டாலோ, பேனர் அமைக்க சாலை உள்ளிட்ட

இணையதள கோளாறு மின் கட்டணம் செலுத்த முடியாமல் மக்கள் அவதி

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் பகுதியில் இணையதள கோளாறு காரணமாக மின்சார கட்டணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். தமிழக அரசு மின்சார கட்டணத்தை இணையதளம் மூலம் கட்ட அறிவுறுத்தியது. இதன்படி கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள மின்வாரிய அலுவலகம், தனியார் கணினி மையங்களில் செலுத்தினர். இதன் காரணமாக குறிப்பிட்ட அலுவலகத்திற்கு சென்று நாள் முழுவதும் காத்திருந்து மின் கட்டணம் செலுத்தும் நிலையிலிருந்து விடுதலை கிடைத்ததாக கூறப்பட்டது. மின் இணைப்பு கட்டணத்திற்காக மட்டுமே சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு செல்வது தவிர்க்கப்பட்டது. வெளியூர்களுக்கு செல்பவர்கள் அதே பகுதியில் தங்களுடைய கிராமத்திற்கு அளிக்கப்பட்ட கோடு நம்பரையும் தன்னுடைய வீட்டின் மின் இணைப்பு எண்ணையும் கூறி செலுத்தினர். இதன் காரணமாக நேரம் மிச்சமானது என்று கூறப்பட்டது. மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதள சேவை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதில் ஏற் பட்ட பிரச்னை காரண மாக சில தினங்களாக தனி யார் இணையதளம் செயல்படவில்லை. இதனால் மின் இணைப்பு கட்டணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் இணைய தள கோளாறை சரிசெய்து ஆன்லைனில் கட்டணம் செலுத்தும் நிலையை

ஜூன் 21, 2012

காட்டுமன்னார்கோவில் பகுதியில் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை!

காட்டுமன்னார்கோவில் பகுதியில் மணல் திருட்டை தடுக்கும் விதமாக பொதுப்பணித்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். காட்டுமன்னார்கோவில் பகுதியில் கொள்ளிடக்கரையோரத்தில் உள்ள கிராமங்களில் சிலவற்றில் கொள்ளிடம் ஆற்றில் திருட்டு மணல் அள்ளும் பணியில் சிலர் ஈடுபடுகின்றனர். இதனால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. மணல் தட்டுபாடு ஏற்படும் காலங்களில் மணல் கடத்தலில் இப்பகுதியை சேர்ந்த சிலர் ஈடுபட்டு அதிக விலைக்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றனர்.

திருட்டு மணல் அள்ளுவதை தடுக் கும் பொருட்டு பொது பணித்துறையினர் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் மணல் அள்ளுவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டிருந்த பாதைகளை கனரக இயந்திரங்கள் மூலம் சேதப்படுத்தி தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதே போன்று சி. அரசூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் மணல் ஏற்றுவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டிருந்த பாதையில் பள்ளம் தோண்டிதுண்டித்துள்ளனர்.
source:Dinakaran

சிதம்பரம் தபால் நிலையத்தில் ரயில்வே, விமான டிக்கெட் முன்பதிவு அஞ்சல் துறைக்கு கோரிக்கை

சிதம்பரம் தபால் நிலையத்தில் ரயில்வே, விமான டிக்கெட் முன்பதிவு வசதியை ஏற்படுத்திதர வேண்டும் என தலைமை அஞ்சல் துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமை அஞ்சல்துறை தலைவருக்கு, பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., அனுப்பியுள்ள மனு:

 இந்திய ரயில்வே மற்றும் விமானங்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பயன்பெறும் வகையிலும், அவர்கள் ரயில்வே நிலையங்களில் சென்று காத்திருக்க வேண்டிய அவல நிலையில் இருந்து விடுபடவும், அஞ்சல் நிலையங்களிலேயே ரயில்வே, விமான டிக்கெட் போன்றவற்றிற்கு முன்பதிவு மேற்கொள்ள தக்க வசதிகள் உருவாக்கியுள்ளதாகவும், இதனை பொதுமக்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும் என்றும் அஞ்சல்துறை கொடுத்துள்ள அறிவிப்பு பாராட்டத்தக்கது. சிதம்பரம் தலைமை அஞ்சலகத்தில் இவ்வளவு காலமாக முன்பதிவு செய்யும் வசதி ஏற்பாடு நடக்கவில்லை. அதற்கான காரணம் தெரியவில்லை.

சிதம்பரம் ரயில்வே நிலையத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் டிக்கெட் முன்பதிவிற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அஞ்சல்துறை அறிவித்ததுபோல் சிதம்பரம் தலைமை அஞ்சலகத்தில் ரயில் மற்றும் விமான டிக்கெட் முன்பதிவு வசதியை உடனடியாக

ஜூன் 20, 2012

இரயில்வே பணிக்கு ஆட்கள் தேர்வு ....

Railway Recruitment Board சார்பாக இரயில்வேயில் 128 பணியிடங்களுக்கு ஆட்கள்தேர்வு செய்யப்படவுள்ளார்கள்இந்த பணியிடங்களுக்கு உரிய ஆட்களை தேர்வுசெய்ய  16.12.1012 ஆம் தேதி தேர்வுநடைபெறும்இத்தேர்வை எழுதவிரும்புகிறவர்கள் தங்களது விண்ணப்பங்களை 16.07.2012 ஆம் தேதிக்குள்அனுப்ப வேண்டும்...

ஹஜ் கார்ப்பரேஷன் – மத்திய அரசு பரிசீலனை

புதுடெல்லி:புனித ஹஜ் தொடர்பான காரியங்களை கையாள புதிய அமைப்பு உருவாக்கப்படும் என்று சிறுபான்மை நலன் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். ஹஜ் ஏற்பாடுகள் குறித்து ஆராய நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட சல்மான் குர்ஷித் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் இதனை தெரிவித்தார்.

 மேலும் அவர் கூறியது:ஹஜ் தொடர்பான அனைத்து காரியங்களையும் கையாள சுதந்திரமான ஹஜ் கார்ப்பரேசனை உருவாக்கவேண்டும் என்ற கருத்து முன்னில் உள்ளது. இவ்விவகாரம் குறித்து கூடுதலாக விவாதிக்க வேண்டியுள்ளது. ஹஜ்ஜிற்கு மானியம் தேவையில்லை. இதனை படிப்படியாக குறைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய வழியில் அரசு செல்லவேண்டும் என்று மக்களும் விரும்புகின்றனர். சொந்த பணம் மட்டுமே உபயோகித்து ஹஜ்ஜிற்கு செல்லவேண்டும் என்பதை பெரும்பாலோர் நம்புகின்றனர். அவ்வாறு செல்ல விரும்புவோருக்கு அதற்கான வசதியை ஏற்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஹஜ் காரியங்களுக்காக தனியாக ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்பது குறித்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு முஸ்லிம் அறிஞர்கள் உள்ளிட்டோரிடம் விவாதித்துள்ளது.

 மானியம் இல்லாமல் இயங்கும் விதத்தில் புதிய அமைப்பு உருவாக்கப்படும். ஹஜ்ஜின் பெயரால் கிடைக்கும் மானியம் உண்மையில் விமான நிறுவனங்களுக்கே போய் சேருகின்றன. இதன்

ஜூன் 19, 2012

அல்லாஹ்வுக்கு நன்றி சொல்கிறேன். இது எல்லோருக்குமான வெற்றி – கலாநிதி முர்ஸி

source:http://www.meelparvai.net
ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணும் பணிகள் அநேகமான இடங்களில் முடிவுக்கு வந்துள்ளன. இதன் பிரகாரம் கலாநிதி முர்ஸி வெற்றி பெற்றுள்ளதாக அவரது பிரச்சார அலுவலகம் அறிவித்துள்ளது. எனினும், இறுதித் தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக நாளை மறுநாளே வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலாநிதி முர்ஸி 52.50 வீதமான வாக்குகளை பெற்றுள்ளதாகவும், போட்டியாளரான அஹ்மத் ஷபீக் 47 வீத வாக்குகளைப் பெற்றுள்ளதாகவும் முர்ஸியின் பிரச்சாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

பெரும்பாலான சுயாதீன ஊடகங்கள் கலாநிதி முர்ஸி தொடர்ந்தும் முன்னிலையில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன. அஹமத் ஷபீக்கின் பிரச்சார அலுவலகத்தில் கடந்த இரு மணித்தியாலங்களாக அமைதி நிலவுவதாக அல்-அஹ்ராம் செய்தியாளர் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ முடிவுகளை மட்டுமே தாம் ஏற்றுக் கொள்வோம் என ஷபீக்கின் அலுவலகம் அறிவித்துள்ளது. திங்கட்கிழமை அதிகாலை தனது பிரச்சார அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய கலாநிதி முஹம்மத் முர்ஸி, “இந்த வெற்றிக்காக நான் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்கிறேன். சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் ஆதரவாக வாக்களித்த எல்லா எகிப்தியர்களுக்கும் நன்றிகள். இது எல்லா எகிப்தியர்களுக்குமான வெற்றியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சி நிறைந்த

சட்டக்கல்லூரி விண்ணப்பங்கள் தேதி நீட்டிப்பு ...


எங்கெல்லாம் சட்டத்தின்படிஆட்சி நடக்கிறதோஅல்லது குறைந்தபட்ச மரியாதை சட்டத்திற்கு கொடுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் சட்டப்படிப்பு படித்தவர்களுக்கு அதிக மரியாதையும் அதற்கேற்ற வருமானமும் உள்ளது.


ஆனால் இன்றைய இந்தியாவில் பலர் இந்த துறையை தேர்ந்தெடுக்க தயங்குவதைப் பார்க்கிறோம்உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடானஇந்தியாவில் இப்படிப்பை தேர்ந்தெடுப்பதில் உள்ள தயக்கம் என்பது சற்று கவலைக்குரியது. ஒரு மனிதன் தன் வாழ்வின் இக்கட்டானசூழ்நிலைகளில் நம்பி இருக்ககூடிய  தொழில்களில் வக்கீல்தொழிலும் ஒன்று என்பதை நாம் மறந்து விடக்கூடாது.


+2 தேர்வில் முதல் இடத்தில் வரும் மாணவர்களிடம் நீங்கள் அடுத்து என்ன படிக்க போகிறீர்கள் என்று கேட்டால் டாக்டர் என்றும் எஞ்சினியர்என்றும் சொல்வார்கள்ஆனால் Professional Courses வரிசையில் வரும் சட்டத்துறை குறித்து அவர்களுக்கு ஏனோ தோன்றுவதில்லைஆனால்இத்துறை பல்வேறு வாய்ப்புகளை தன்னுள் மறைத்து வைத்துக்கொண்டு சத்தம் இல்லாமல் பல சரித்திரங்களை படைத்து கொண்டுள்ளது.


தமிழகத்தை பொறுத்த வரையில் சட்டப்படிப்பை படிக்க அம்பேத்கர் சட்டப்பல்கலைகழகம் பல்வேறு பாடதிட்டங்க்களை வைத்து உள்ளது,இந்த வருடத்திற்கான படிப்புக்கான விண்ணப்படிவங்கள் சென்ற மாதம் 28.05.2012 ல் கொடுக்கப்படுகின்றது.
  
தமிழ்நாடு அரசு சட்டப்பல்கலைக்கழகத்தின் சார்பாக வழங்கப்படும் படிப்புகள் பின் வருமாறு :

B.A.,B.L (Hons.)

B.L. (Hons.)
M.L
P.G.Diploma and Cert. Course (DDE)
yr B.A.B.L(Affiliated Govt. Law Colleges)
yr B.L. (Affiliated Govt. Law Colleges) 

விண்ணப்பங்கள் பெற வேண்டிய முகவரி :

ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க கீழுள்ள வலைத்தளத்திற்கு செல்லவும்

அல்லது

கீழ்கண்ட முகவரியில் நேரடியாகவோ 

ஜூன் 18, 2012

மனிதா! உன்னை புரிந்துகொள்!


பிறவிக் கிடைப்பது மிகப் பெரும் பாக்கியமாகும். அதிலும் மனிதராய்ப் பிறப்பது மகத்தான அருட்கொடையாகும். ஏக இறைவனின் உள்ளமையையும், வல்லமையையும் பறைசாற்றும் அற்புத அத்தாட்சிகளில் ஒன்றாக மனித இனம் விளங்குகிறது.எந்த ஒரு பொருளுமாக இல்லாதிருந்த நிலையிலிருந்து மனிதன் என்ற உள்ளமைக்கு அல்லாஹ் படைத்தான்.

படைத்ததோடு தனது கடமை முடிந்து விட்டதாய் கருதாமல், மனித இனம் சிந்திக்கவும் செயல்படவும் அறிவையும், ஆற்றலையும் தந்தான்.அந்த அறிவையும், ஆற்றலையும் மனித இனம் தன் மனம்போன போக்கில் பயன்படுத்துமேயானால், அவை நஷ்டத்துக்கு ஆளாகிவிடும் என்று மகத்தான தன் கருணையால் தன்புறத்திலிருந்து பிரகாசமான வேதத்தையும் உயர்மிகு திருத்தூதர்களின் ஞான உபதேசங்களையும் தந்து அவற்றைக் கொண்டு செயல்பட அழைக்கிறான்.

விரைவாக முன்னேற வேண்டுமென்ற உந்துதலுக்கும், பேராசைக்கும் ஆட்படும் மனிதனோ நறுமணமிக்க மார்க்கத்தின் எந்த வாசனையையும் எடுத்துக் கொள்ள தயாரில்லை.மனிதன் தயங்குகிறான். இவ்வுலக வாழ்வை மட்டும் நோக்கமாகக் கொண்ட மலிவான கொள்கைகளின், வியாபாரங்களின் கவர்ச்சி வலைகளில் சிக்கி மயங்குகிறான். மதிகெட்டு தன் வாழ்வை நாசப்படுத்திக் கொள்கிறான்.அவற்றை வென்றெடுக்கும் ஆயுதமாக வல்ல நாயன் அல்லாஹ் வளம் பொருந்திய ஈமானை அருட் செய்திருக்க அதைப் பயன்படுத்தவும், பட்டைத் தீட்டவும் செய்யாமல் தவறான சிந்தனைகளாலும், காரியங்களாலும் தரம்தாழ்ந்த மனிதர்களின் தொடர்புகளாலும் மனிதன் சத்தியத்தை மறந்து மதிமயங்கி போய் விடுகிறான். அத்தகைய மதிமயக்கத்திலிருந்து மனித சமூகத்தை விடுவித்து உண்மையின்பால் உறுதியாகிட திருமறையும், திருநபி வாழ்வியலும் வழிகாட்டுகின்றன.அவற்றிலிருந்து சில முத்துக்களை மனித சமூகத்தின் சிந்தனைக்கு விருந்தாக்குகிறோம்.

தான் யார்? தன்னைப் படைத்தது யார்? தான் எதனால் படைக்கப்பட்டிருக்கிறோம்? தனது தன்மைகள் என்ன? தனது வாழ்வை வணக்கங்களால் எப்படி அலங்கரித்துக் கொள்வது? தனக்குண்டான கடமையும், பொறுப்பும் என்னென்ன? என்பன போன்ற அடிப்படை கேள்விகளுக்கு அல்லாஹ்வின் மார்க்கம் தரும் விழிப்புணர்வைக் கொண்டு உண்மையான இம்மை மறுமை முன்னேற்றங்களைப் பெறும் வழிமுறைகளைப்பற்றி மனித இனம் ஒரு கணம் சிந்திக்க வேண்டுகிறோம்மனிதன் தன்னைப்பற்றி முதலில் சிந்திக்கட்டும்
முன்னர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் அவனைப் படைத்தோம் என்பதை மனிதன் சிந்திக்க வேண்டாமா?   (அல்குர்ஆன் 19:67)
மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதைச் சிந்திக்கட்டும்.       (அல்குர்ஆன் 86:5)

முதல் மனிதர் மண்ணால் படைக்கப்பட்டார்
களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம் (அல்குர்ஆன் 23:12)
மனிதனின் படைப்பைக் களிமண்ணிலிருந்து துவக்கினான்.      (அல்குர்ஆன் 32:7)
பின்பு விந்திலிருந்து படைக்கப்பட்டான்
மனிதனை விந்துத் துளியால் அவன் படைத்தான் (அல்குர்ஆன் 16:4)
மனிதனை விந்திலிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா?...     (அல்குர்ஆன் 36:77)
கர்ப்பப்பையில் சுமக்கப்பட்டான்
(மனிதனை) அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள்.(அல்குர்ஆன் 31:14)                      
மனிதர்களில் ஆண்களையும் பெண்களையும் படைத்தான்!
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்;(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு