எகிப்தில் சர்வாதிகாரம் நடத்தி வந்த ஹோஸ்னி முபாரக்கை கடந்த 2012-ம் வருடம் பதவியிலிருந்து இறக்கி ஆட்சியைக் கைப்பற்றியவர் முகமது மோர்சி. ஆனால் ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் இவரது ஆட்சியில் பொதுமக்களின் போராட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கியபோது அந்நாட்டு ராணுவத் தளபதியான அப்டெல் படா அல் சிசி மோர்சியை கடந்த வருடம் ஜூலை மாதம் பதவியிலிருந்து இறக்கி காவலில் வைத்தார்.
அவருக்குத் துணையாக இருந்த முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியினரும் ஒடுக்கப்பட்டு வந்தனர். அங்கு ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்புகளும், கலவரங்களும் நாட்டையே நிலை குலைய வைத்தது. இதனிடையில் கடந்த 25-ம் தேதி அங்கு அதிபருக்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. தனது ராணுவத் தளபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிபர் வேட்பாளராக சிசி களத்தில் இறங்கினார். பெரும்பான்மையானோரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப இன்று வெளிவந்துள்ள முடிவுகளில் சிசி மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு நடைபெற்ற 50 சதவிகித இடங்களில் 92.2 சதவிகித வாக்குகளை சிசி பெற்றிருந்தார். அவரது ஒரே போட்டியாளரான ஹம்தீன் சபஹி 3.8 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தார். 4.2 சதவிகிதம் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. சிசியின் முடிவுகள் வெளிவரத் தொடங்கியதும் கெய்ரோவில் வாணவேடிக்கை கொண்டாட்டங்களும் தொடங்கின. அவரது ஆதரவாளர்கள் எகிப்து நாட்டின் கொடியினை அசைத்தும், கார் ஹாரன் ஒலியை எழுப்பியும் தங்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தை வெளிப்படுத்தினர். எகிப்தை ஆட்சி செய்து வந்துள்ள ராணுவத்தினரின் வரிசையில் சிசி சமீபத்தியவரவாகும். எகிப்தில் நடைபெற்றுவரும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும் வலிமை படைத்தவர் இவர் என்று அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
ஆனால் அரசியல் ஆய்வாளர்களோ ராணுவ நலன்களைப் பாதுகாக்கும் மற்றொரு சர்வாதிகாரியாக இவரும் மாறக்கூடும் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...