Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 27, 2014

நீர்வரத்து இல்லாததால் வீராணம் ஏரி நீர்மட்டம் படிப்படியாக குறைவு!

கடுமையான வெயில், நீர் வரத்து இல்லாததால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை மற்றும் கொள்ளுமேடு பகுதியில் வீராணம் ஏரி உள்ளது. 1,465 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டுள்ள இந்த ஏரியின் மொத்த உயரம் 47.50 அடியாகும். இந்த ஏரிக்கு பருவமழை இல்லாத சாதாரண காலங்களில் கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், மழை காலங்களில் வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்தும் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாகவும் மழைநீர் வரும். இதன் மூலம் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் தாலுகாவில் உள்ள 44,856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பூதங்குடி நீரேற்றும் நிலையத்தில் இருந்து குழாய் வழியாக தினமும் 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு அனுப்பப்படுகிறது. இதனால் சென்னை நகரின் குடிநீர் தேவை சரிசெய்யப்படுகிறது.

வீராணம் ஏரியின் நீர்மட்டம் 42 அடிக்கு கீழ் குறையும்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் அளவும் படிப்படியாக குறைக்கப்படும். தற்போது ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து 42.90 அடியாக உள்ளது. கடுமையான வெயில் அடித்து
வருவதாலும், நீர் வரத்து இல்லாததாலும் நீர்மட்டம் இன்னும் குறைய வாய்ப்பு உள்ளது. 42 அடிக்கு கீழ் நீர்மட்டம் வரும் போது சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும். தற்போது மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகமாக வருகிறது. இதனால் மேட்டூர் அணை திறக்கப்பட்டால், கீழணைக்கு தண்ணீர் வரும். அங்கிருந்து வீராணம் ஏரிக்கு நீர்வரத்து வரும். இதனால் ஏரியின் நீர்மட்டம் உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது. அவ்வாறு உயர்ந்தால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் இருக்காது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...