Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 31, 2010

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை:


புதுடெல்லி,ஆக31:வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்க வகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேறியது.

இதன்மூலம், வெளிநாடுகளில் குடியுரிமை பெறாத இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படும். ஆனால் அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. இரட்டை குடியுரிமை பெற்றிருப்பவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படாது என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்து வெளிநாடுவாழ் இந்தியர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த மசோதா விரைவில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

தேர்தல் சீர்திருத்தம் குறித்து அக்டோபர் அல்லது நவம்பரில் நடைபெற உள்ள தேசிய ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும், நிபுணர்களின் ஆய்வறிக்கைக்குப் பின்னர் இது தொடர்பாக புதிய மசோதா கொண்டு வரப்படும் என்றும் அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார்.

ஆகஸ்ட் 30, 2010

உலக வங்கிக்கடன் உதவி முதலிடத்தில் இந்தியா


உலக வங்கி உட்பட,சர்வதேச நிதியங்களிலிருந்து கடன் பெறுவதில், இந்தியா முதலிடம் வகிப்பதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது:வளரும் மற்றும் ஏழை நாடுகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும்,வறுமையை ஒழிப்பதற்கும் உலக வங்கி உட்பட, சர்வதேச நிதியங்கள் வட்டியில்லாமல் கடன் வழங்குகின்றன.இந்த கடனுதவிகள் முறைப்படி செலவிடப்படுகிறதா என்பதையும் அந்த அமைப்புகள் கண்காணிக்கின்றன.இதில் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் நாடுகளுக்கு கடனுதவி அதிகரித்து வழங்கப்படுகிறது. இந்த வகையில் ஏற்கனவே வழங்கப்பட்ட கடன் உதவியை சிறப்பாக கையாண்டதற்காக, இந்தியாவுக்கு சர்வதேச நிதியங்கள் தாராளமாக கடன் வழங்கியுள்ளன.

இதனால்,2009-10ம் நிதியாண்டில் உலக வங்கி உட்பட,சர்வதேச நிதியங்களிடமிருந்து, 33 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவியை பெற்று கடன்பெறும் ஏழை நாடுகள் வரிசையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இதற்கடுத்து மெக்சிகோ 31ஆயிரம் கோடி கடனுதவியை பெற்று இரண்டாம் இடம் வகிக்கிறது.தென்னாப்ரிக்கா (18,620 கோடி), பிரேசில் (18,130 கோடி), துருக்கி (14,700 கோடி) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இதில், சர்வதேச மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (ஐ.பி.ஆர்.டி.,) வாயிலாக 16 ஆயிரத்து 660 கோடியும், சர்வதேச வளர்ச்சி கூட்டமைப்பு (ஐ.டி.ஏ.,) மூலம் 6,370 கோடியும், உலக வங்கியிடமிருந்து (மொத்தம் 23,030 கோடி)இந்தியா கடனாக பெற்றுள்ளது.இதுதவிர வறுமை ஒழிப்பு திட்டங்களுக்காக அமெரிக்காவின் சர்வதேச விவசாய வளர்ச்சி நிதியம்(ஐ.எப்.ஏ.டி.,), பிரிட்டன் சர்வதேச வளர்ச்சித் துறை(டி.எப்.ஐ.,), ஜெர்மனி அரசு வங்கி மற்றும் ஜப்பான் வளர்ச்சி நிதியம் (ஓ.டி.ஏ.,) ஆகியவற்றிடமிருந்தும் அதிகளவு நிதி உதவி பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பிகாரில் முஸ்லிமுக்கு துணை முதல்வர் பதவி: பாஸ்வான்


பாட்னா: பிகாரில் வரும் சட்டசபைத் தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம்-லோக் ஜனசக்தி கட்சி கூட்டணி வெற்றி பெற்றால் துணை முதல்வர் பதவியை முஸ்லிமுக்கு வழங்கத் தயாராக உள்ளதாக ராம் விலாஸ் பாஸ்வான் அறிவித்துள்ளார்.

லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரான பாஸ்வான், தனது சகோதரர் பசுபதி குமாரை துணை முதல்வர் பதவியில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக பிகாரை ஆளும் ஐக்கிய ஜனதா தளம் -பாஜக கூட்டணியும், காங்கிரஸ் கட்சியும் புகார் கூறி வருகின்றன.

இந்நிலையில் நிருபர்களிடம் பேசிய பாஸ்வான், எங்கள் கூட்டணி வென்றால் முஸ்லிம் ஒருவரை துணை முதல்வராக்குவது குறித்துப் பரிசீலிக்கத் தயாராக உள்ளோம்.

பிகாரில் மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ள சிறுபான்மையினரும் முன்னேற்றம் பெற எங்கள் கூட்டணி பாடுபட்டு வருகிறது என்றார்.

பிகாரில் ஆட்சியைப் பிடிக்க முஸ்லீம்களின் ஆதரவு மிக மிக அவசியம் என்பதால் அவர்களது வாக்குகளைப் பெற ஐக்கிய ஜனதா தளதத்தின் தலைவரும் முதல்வருமான நிதிஷ் குமார், லாலு, பாஸ்வான், காங்கிரஸ் கட்சி ஆகியோர் பலவித சலுகைகளை அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதன் ஒரு பகுதியாக பிகாரில் தேர்தல் பிரச்சாரத்துக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பாஜக தலைவர்களில் ஒருவரான வருண் காந்தி ஆகியோர் வரக் கூடாது என்று தனது கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு நிதிஷ் குமார் நிபந்தனையும் போட்டுள்ளது நினைவுகூறத்தக்கது.

எங்கள் கூட்டணிக்கு பெரும் ஆதரவு-லாலு:

இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய லாலு, பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கூட்டணிக்கு ஆதரவு பெருகியுள்ளதால் வரும் சட்டசபைத் தேர்தலில் நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம்.

மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும். வரும் தேர்தலுக்குப் பிறகு நிதிஷ் குமார் முதல்வராக இருக்கமாட்டார். எங்கள் கூட்டணியில் யார் முதல்வராவார் என்பதைவிட நிதிஷை அதிகாரத்திலிருந்து வெளியேற்றுவதைதான் மக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர் என்றார்.

ஆகஸ்ட் 29, 2010

காவி பயங்கரவாதம் பற்றிய உள்துறை அமைச்சரின் பேச்சுக்கு கம்யூனிஸ்ட் ஆதரவு

புதுடெல்லி,ஆக29:காவி தீவிரவாதத்தால் ஆபத்து ஏற்படக்கூடும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதற்கு பாஜக கண்டனம் தெரிவித்து உள்ளது. எனினும் இந்த விஷயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகள் சிதம்பரத்தின் பேச்சை ஆதரித்துள்ளன.

சிதம்பரம் பயன்படுத்திய வார்த்தைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை அமளியில் ஈடுபட்டனர். இதை அடுத்து அவை இரு முறை ஒத்தி வைக்கப்பட்டது.

மூன்றாவது முறையாக அவை கூடிய போது மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி கூறுகையில் அமைச்சர் சிதம்பரத்தின் பேச்சு நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்கள் பலரைக் குறிப்பதாக அமைந்துள்ளது என கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பிருந்தா காரத்,"சிதம்பரம் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. பொதுப்படையாகத்தான் காவி தீவிரவாதம் பற்றி சொன்னார்" என்று சிதம்பரத்துக்கு ஆதரவாகப் பேசினார்.

பின்னர் நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பிருந்தா காரத் கூறியது: "அருண் ஜேட்லி அவரது கட்சியின் சார்பாகப் பேசியுள்ளார். சிதம்பரம் பேசிய வார்த்தை யாரையும் தனிப்பட்ட முறையில் குறிக்கவில்லை. இந்து மதத்தின் பெயரில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் குழுக்களைப் பற்றியதுதான் இப்போதைய பிரச்னை" என்றார்.

இது குறித்து கருத்து தெரிவித்த லோக் ஜன சக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான், சிதம்பரத்தின் கருத்தை ஆதரித்து பேசினார். அவர் கூறியது: "ஆர்,எஸ்.எஸ். இயக்கம்தான் மற்ற குழுக்களை வழிநடத்திச் செல்கிறது. இவ்வாறு தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் இயக்கங்களின் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏதேனும் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்தால் எந்த முகாந்திரமும் இல்லாமல் முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது" என்றார்.
நன்றி:பாலைவனத் தூது

ஆகஸ்ட் 28, 2010

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் மாறுவேடத்தில் இயக்குநர் ஆய்வு:

சிதம்பரம்:
சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனையை ஊரக மருத்துவத்துறை இயக்குநர் மற்றும் அதிகாரிகள் மாறுவேடத்தில் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து முதன்மை மருத்துவ அதிகாரி கே.நடராஜன் மற்றும் முதன்மை செவிலியர் டி.பேபி ஆகிய இருவரையும் உடனடியாக ராமநாதபுரம் மற்றும் பல்லடம் ஆகிய ஊர்களுக்கு இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தனர்.


தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனையை வியாழக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்ட போது சுகாதார சீர்கேடாக உள்ளதாகவும், சரியான பராமரிப்பு இல்லாததால் உயரதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். அதனடிப்படையில் ஊரக மருத்துவத்துறை இயக்குநர் (டி.எம்.எஸ்.) டாக்டர் புருஷோத்தம் விஜயகுமார், கடலூர் மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் ஜெயவீரக்குமார் உள்ளிட்ட அதிகாரிகளைக் கொண்ட குழு வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் 9 மணி வரை பொதுமக்கள் போன்று மாறுவேடத்தில் சென்று சோதனை மேற்கொண்டனர்.


அப்போது தலைமை மருத்துவர் டாக்டர் கே.நடராஜன் மற்றும் தலைமை செவிலியர் டி.பேபி ஆகியோரின் செயல்பாடுகள் சரியில்லாததை அறிந்து இருவரையும் முறையே ராமநாதபுரத்துக்கும், கோவை பல்லடத்துக்கும் உடனடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டனர். அதற்கு பதிலாக காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த டாக்டர் சங்கரலிங்கத்தை தலைமை மருத்துவராகவும் (பொறுப்பு), கடலூரைச் சேர்ந்த ரூபிஜோபிதத்தை தலைமை செவிலியராகவும் உடனடியாக நியமித்து இயக்குநர் புருஷோத்தம் விஜயகுமார் உத்தரவிட்டார்.


பின்னர் ஊரக மருத்துவத்துறை இயக்குநர் புருஷோத்தம் விஜயகுமார் தெரிவித்தது:


அமைச்சரின் உத்தரவின்பேரில் மருத்துவமனையை எனது தலைமையிலான குழு மாறுவேடத்தில் ஆய்வு செய்தது. அப்போது முதன்மை மருத்துவ அதிகாரி மற்றும் முதன்மை செவிலியர் ஆகியோரின் திறமையற்ற செயல்பாடு குறித்து தெரியவந்து இருவரும் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். சரியாக பணியாற்றாத செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. லேப்-டெக்னீஷியன் மலர்கண்ணன் பணிக்கு காலதாமதமாக வந்ததால் அவரிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.


மருத்துவமனையில் மொத்தம் உள்ள 22 மருத்துவர் பணியிடங்களில் 9 இடங்கள் காலியாக உள்ளன. விரைவில் அப்பணியிடங்கள் நிரப்பப்படும். 3 மருத்துவர்கள் மருத்துவ விடுப்பில் உள்ளனர். அவர்கள் உடனடியாக பணியில் சேருமாறு எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மீதம் உள்ள 10 மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். இம்மருத்துவமனைக்கு எலும்பு முறிவு டாக்டர் நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு சுற்றுச் சுவர், கட்டடங்களை பழுது நீக்கல், கழிப்பறை மற்றும் வடிகால் வசதி போன்ற பணிகலை பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளரூ.45 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் புருஷோத்தம் விஜயகுமார்.

ஆகஸ்ட் 27, 2010

பார்வையற்றோருக்கு செயற்கை கரு விழிகள் மூலம் கண் பார்வை: விஞ்ஞானி சாதனை


கண்பார்வை பறிபோனால் வேறு ஒருவரிடம் தானமாக பெற்ற கருவிழிகள் மூலம் மீண்டும் பார்வை பெற்று வருகின்றனர். தற்போது செயற்கை கருவிழிகள் மூலம் பார்வை பெற செய்து ஒரு பெண் விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார்.

அவரது பெயர் மேகிரிப்த். இவர் சுவீடனில் உள்ள லிங் கோபிங் பல்கலைக்கழகத்தில் இதற்கான ஆய்வு மேற்கொண்டார்.

இவர் மனித திசுக்களை அல்லது இணைப்பு திசுவின் வெண் புரதம் (காலோஜென்) போன்றவற்றை ஆய்வகத்தில் செயற்கையாக வளரச்செய்தார். அதை கண்களில் பொருத்தும் காண்டேக்ட் லென்ஸ் போன்று வடிவமைத்தார்.

பின்னர் பார்வை இல்லாதவர்களுக்கு அதை பொருத்தி பார்வை பெற செய்தார். இது மருத்துவ உலகின் மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது.

தற்போது கருவிழி பாதிப்பினால் உலகில் சுமார் 1 கோடி மக்கள் பார்வை இழந்து இருளில் தவிக்கின்றனர். இந்த கண்டுபிடிப்பின் மூலம் அவர்களின் வாழ்வில் மீண்டும் ஒளிபரவும் என்பதில் சந்தேகமில்லை.

ராணுவத்தை வாபஸ் பெறுவதற்கான அறிவிப்பு தாலிபான் வலுப்பெற்றுள்ளதை காட்டுகிறது:

வாஷிங்டன்,ஆக26:ஆஃப்கானிலிருந்து ராணுவத்தை வாபஸ் பெறப்படும் என்ற அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் அறிவிப்பு தாலிபான் ஆப்கானில் சக்திப் பெற்றிருப்பதைக் காட்டுவதாக மூத்த அமெரிக்க ஜெனரல் கூறியுள்ளார்.

கப்பற்படையின் தலைவர் ஜெனரல் ஜேம்ஸ் கோண்வே என்பவர்தான் இவ்வாறு கூறியுள்ளார். தெற்கு ஆப்கானிஸ்தானில் வருடக்கணக்கில் அமெரிக்க ராணுவத்தினருக்கு முகாமிட நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2011 ஜூலையில் ஆஃப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவம் வாபஸ் பெறப்படும் என்ற அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் அறிக்கைக்கு ஊக்கமூட்டுகிறது ஜெனரலின் கூற்று.

சமீபக் காலங்களில் எந்த எதிர்பார்ப்பும் தேவையில்லை என அவர் ஹெல்மந்த், காந்தஹார் ஆகிய மாகாணங்களை மேற்கோள்காட்டி கூறியுள்ளார்.

ஆஃப்கானின் இதர இடங்களில் வெற்றிப்பெற்றாலும் கூட தாலிபானின் பிறப்பிடமான தெற்கு ஆப்கானில் சிரமம் தான் என அவர் கருத்துத் தெரிவித்தார். பெண்டகனின் பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றும்பொழுது அவர் இதனை தெரிவித்தார்.

ஒபாமா வருகிற டிசம்பர் மாதம் ஆப்கானிஸ்தான் போரைக் குறித்து மீளாய்வுச் செய்வார் என வெள்ளை மாளிகை நேற்று முன் தினம் அறிவித்திருந்தது.

அதிபர் தயாராக்கிய திட்டப்படிதான் போர் தற்பொழுது முன்னெடுத்துச் செல்லப்படுவதாக தேசிய பாதுகாப்பு உதவி ஆலோசகர் ஜாண் ப்ரண்ணன் தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

ஆகஸ்ட் 26, 2010

உயிருக்கு ஆபத்தாகும் மருந்து மாத்திரைகள்!

டாக்டர்கள் பரிந்துரையின்றி கடைகளுக்கு சென்று மருந்து மாத்திரைகளை வாங்கி பொதுமக்கள் பயன்படுத்தினால் அதனால் உண்டாகும் பக்கவிளைவுகளுக்கும் பாதிப்புகளுக்கும் அவர்களே பொறுப்பு.

உலகின் மிகப்பெரிய இஃப்தார் நிகழ்ச்சி: நாளொன்றுக்கு 2.5 மில்லியன் சவூதி ரியால்கள்!


நபிகளாரின் பள்ளி என்று அழைக்கப்படும் மதீனா பள்ளிவாசலில் நோன்புக்காலத்தில் தினமும் பத்து இலட்சம் மக்கள் நோன்பு துறக்க ‘இஃப்தார்’ ஏற்பாடுகள் செய்யப்படுகின்றனவாம்.
விருந்தோம்பலுக்கும் உபசரிப்புக்கும் பெயர்பெற்ற மதீனாவாசிகள் நோன்பாளிகளுக்கு உணவு வழங்கி மகிழ்வதை பெருமிதமாகவும் பாக்கியமாகவும் கருதுகின்றனர். இவ்வகையில் நாளொன்றுக்கு சுமார் 2.5 மில்லியன் சவூதிரியால்கள் செலவிடப்படுகின்றதாம்.
மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹரம் என்னும் பெரிய பள்ளியில் நோன்பு துறக்க பேரீச்சம் பழங்களும், சவூதி கஃவா என்னும் காஃபி வகை பானமும் மட்டுமே வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ள “புனித பள்ளிகள் துறை அமைச்சகம்”, மதீனாவாசிகளின் விருந்தோம்பல் உணர்வுக்கு மதிப்பளித்து, அவர்கள் விருப்பத்திற்கேற்ப நோன்பு துறப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்ள அனுமதித்துள்ளது. இத்தகவல்களை அத்துறையின் மக்கள் தொடர்பாளர் அப்துல் வாஹித் அல்ஹத்தாப் தெரிவித்துள்ளார்.

மதீனாவாசிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 10,000 பேர் கொண்ட குழு, மாலைநேரத்தொழுகைக்குப் பிறகு இதற்கான ஆயத்தங்களில் இறங்குகிறது. பகுதி, பகுதியாக, குழு,குழுவாக தினமும் சுமார் 10 இலட்சம் (1மில்லியன்) மக்களுக்கு இஃப்தார் உணவு வழங்கப்படுகிறது.

ஈத்தம்பழம், தயிர், ஷ்ரைக் எனப்படும் ரொட்டி, டக்கா எனப்படும் கஞ்சி போன்ற உணவு, சவூதி கஃவா ஆகிய உணவு வகைகள் விநியோகிக்கப்படுகின்றனவாம். மட்டுமின்றி, 20,000 குளிர்விகளில் புனித ஜம்ஜம் நீரும் வழங்கப்படுகிறது. பெருமளவு மதீனா பெண்களும் இதில் பங்கெடுக்கின்றனர்.
12 நிமிடங்கள் நீடிக்கும் இஃப்தார் நிகழ்ச்சிக்குப் பின் 2,000க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் மின்னணு துடைப்பான்கள் மூலம் சுத்தம் செய்கின்றனர். அதன் பின் மஃக்ரிபு தொழுகை முடிந்த பின்னாலும், ஈத்தம் பழங்களும், கஃவா பானமும் வழங்கப்படுகிறதாம்.
நோன்பு துறப்பு மட்டுமின்றி, நோன்பு வைப்பதற்கான சஹர் உணவும், இந்திய மற்றும் சவூதி உணவு வகைகளாக, சுமார் இரண்டு இலட்சம் பேருக்கு வழங்கப்படுகிறதாம்.

வபாத் செய்திv

கொள்ளுமேடு பள்ளிவாசல் தெருவில் இருக்கும் கணக்குபிள்ளை சபியுல்லாஹ் அவர்கள் நேற்று (25.08.2010) புதன் கிழமை காலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.அன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் பிரார்த்திப்போம் .

ஆகஸ்ட் 25, 2010

முஸ்லிம்களுக்கு 2 சதவிகித இட ஒதுக்கீடு போதாது- புதுவை முதலமைச்சருக்கு TNTJ கடிதம்

இட ஒதுக்கீடு இல்லாமலேயே இரண்டு சதவீத இடங்களுக்கு மேல் முஸ்லிம்கள் வேலை வாய்ப்பில் இருப்பதால் அதைக் குறைப்பது போல் உள்ள இந்த அளவை உயர்த்தி வழங்க வேண்டும் என தவ்ஹீத் ஜமாஅத் வேண்டுக்கோள் விடுத்துள்ளது.

பாபர் மசூதி தீர்ப்பு? பிரதமர் ஆலோசனை


அயோத்தி நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் அடுத்த மாதம் அலகாபாத் நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்க உள்ளது. தீர்ப்பை தொடர்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி கடந்த 1992ஆம் ஆண்டு, டிசம்பர் 6ஆம் தேதி இடிக்கப்பட்டது. பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடத்து வருகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

இந்த தீர்ப்பை தொடர்ந்து உருவாகும் நிலையை எதிர்கொள்வது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, அந்தோணி, ப.சிதம்பரம் ஆகியோருடன் ரகசிய ஆலோசனை நடத்தினார்.

இதனிடையே தீர்ப்பை தொடர்ந்து எழும் பிரச்சனைகளை எதிர்கொள்ள உத்திரப்பிரதேச அரசும் திட்டம் வகுத்துள்ளது. இதுகுறித்தும் விவாதிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஈராக்:ராணுவம் வாபஸ் என்ற பெரும்பொய்

ஆகஸ்ட் 20 ஆம் தேதி அதிகாலை பொழுதிற்கு முன்பு ஈராக்கின் போர் களத்திலிருந்து கடைசி அமெரிக்க ராணுவவீரனும் வெளியேறியிருப்பார் என்று உலகம் முழுவதும் பரப்புரைச் செய்யப்பட்ட செய்தி அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் தலைதப்புவதற்கான முதல்தர அக்மார்க் பொய் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் என்ற வேடமணிந்துக் கொண்டு அரை லட்சம் படைவீரர்கள் ஈராக்கின் பல ராணுவ முகாம்களிலும் ஆயுதங்களுடன் காத்து நிற்கின்றனர். இது போதாது என்று மேலும் 20 ஆயிரம் பேர் ஜனநாயகத்தை பாதுகாக்க ஈராக்கிற்கு செல்லவிருகின்றார்கள்.

சதாம் ஹுசைன் பேரழிவு ஆயுதங்களை ஒளித்து வைத்திருக்கிறார் என்ற பெரும்பொய்யைக் கூறி மெசபடோமியாவின் மண்ணில் அந்நிய ஆக்கிரமிப்புப்படையினர் காலடி எடுத்து வைத்தனர் என்பதால் அதிபர் ஒபாமாவின் இந்தப் பொய்யைக் குறித்து ஆச்சரியப்படத் தேவையில்லை.
எட்டு ஆண்டுகளுக்கு முன்புதான் தங்களது இலட்சியப்பணி பூரணமடைந்துவிட்டது எனக்கூறி ஒரு விமானத்தாங்கி கப்பலில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்.w.புஷ் எமகாதகனைப் போல் வந்திறங்கினார்.

தடை மற்றும் ஆக்கிரமிப்பினால் ஏறத்தாழ 10 லட்சம் ஈராக் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஐந்து லட்சம் பேர்கள் அயல்நாடுகளில் அகதிகளாக அவதியுறுகிறார்கள்.

கொல்லப்பட்ட அமெரிக்க படைவீரர்களின் எண்ணிக்கை 4000 தாண்டும். ஆக்கிரமிப்பின் செலவோ கணக்கிடமுடியாத அளவுக்கு.

ஆண்,பெண் சமத்துவத்திற்கும், பொருளாதார சமத்துவத்திற்கும், கல்விக்கும் புகழ்பெற்ற ஒரு தேசத்தை பரிபூர்ணமாக தகர்த்ததில் அமெரிக்க பூரணமாக வெற்றிப் பெற்றிருக்கிறது என்றுக்கூற எவருக்கும் தயக்கமில்லை.

தேர்தல் என்ற கோலாகலத்தின் மூலம் வெற்றிப்பெற்ற கட்சிகளுக்கு கடந்த ஐந்து மாதங்களாக ஒரு அமைச்சரவையை உருவாக்க இயலவில்லை. அமெரிக்க ஆதரவு இல்லையென்றால் அதிபர் நூரி மாலிக்கிற்கு முன்பு ஈரானின் ஷா பஹ்லவி உள்ளதை சுருட்டிக்கொண்டு தேசத்தை விட்டு ஓட்டம் பிடித்தது போன்று செல்லவேண்டியது நேர்ந்திருக்கும்.

முன்பு முஸ்லிம்களாகயிருந்தவர்களை ஷியாக்கள், சுன்னிகள், குர்துக்கள் என பிரித்து மூன்று பிரிவினரையும் ஒருவரையொருவர் மோதவிட்டு நாகரீகத்தின் தொட்டிலை வன்முறைக்களமாக மாற்றியது அமெரிக்காவின் நன்கொடையல்லாமல் வேறென்ன?

ஈராக்கில் குர்த் பகுதியைத் தவிர வேறு எப்பகுதியிலும் வாழும் மக்கள் பாதுகாப்பாக இல்லை.

யுரேனியம் குண்டுகளை அதிகளவில் ஈராக்கில் வீசியதன் பின்விளைவாக புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் அங்கு பரவிவருகிறது.

அபுகரீப் போன்ற சித்திரவதைசிறைகளை நம்பித்தான் நூரி மாலிக்கியின் ஆட்சி நிலைக் கொள்கிறது.

ஈராக் ஆக்கிரமிப்பு தவறான முடிவு என வாய்ச்சவாடல் விட்டு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த ஒபாமாதான் தனது முன்னாள் அதிபருக்கு சற்றும் இளைத்தவரல்லர் என்பதை நிரூபித்து வருகின்றார்.

குவாண்டனாமோ என்ற சிறைக்கொட்டகையை மூடுவேன் என்பது ஒபாமா பதவியேற்றவுடன் கூறிய இன்னொரு பொய்யாகும். இவையெல்லாம் போர் எதிர்ப்பாளர்களான அமெரிக்க வாக்காளர்களை ஏமாற்றுவதற்கு பயன்படுத்திய தந்திரங்களாகும்.

நம்பிக்கையை அதிகப்படுத்தும் ஒரு ஆசுவாசமான செய்தி என்னவெனில், இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்க பலமுறை முயற்சிச் செய்தும் ஈராக் மக்கள் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக போராட்டத்தை தொடருகிறார்கள் என்பதாகும்.

கடைசி அந்நியப் படைவீரன் ஈராக்கை விட்டு வெளியேறும் வரை போராட்டம் தொடரும் என்பதுதான் யூப்ரட்டீஷும் டைக்ரீஷும் நமக்கு தரும் செய்திகளாகும்.
நன்றி: பாலைவனத் தூது

ஆகஸ்ட் 24, 2010

10 நாட்களில் உரிய நடவடிக்கை அரசு தரப்பில் உறுதிமொழி: சென்னை போராட்டம் தற்காலிக வாபஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காவல்துறையையும் தமிழக அரசையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை சென்னையில் அறிவித்தது.

ஆர்பாட்ட அறிவிப்தை அறிந்த அரசு துறை நமது கோரிக்கைகளுக்கு 10 நாட்களில் உரிய நடவடிக்கை எடுப்பதாக நம்மை அழைத்து பேசியதை தொடர்ந்து சென்னையில் நாளை (24-8-2010) நடைபெறவிருந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்!

-தலைமைகழகம் TNTJ

ஆகஸ்ட் 23, 2010

ரமளான் நேரடி ஒளிபரப்பு வெளிநாட்டு வாழ் மக்களிடையே ஏற்படுத்திய தாக்கம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமையகத்தில் பி.ஜே அவர்கள் நிகழ்த்தும் இஸ்லாம் கூறும் குடும்பவியல் என்ற தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியை உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் நெஞ்சங்கள் பார்த்து பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் http://www.tntj.net/ http://www.onlinepj.com/ ஆகிய இரு இணையதளங்களில் நாம் கூடுதல் தொழில் நுட்பத்தில் நேரடி ஒளிபரப்பு செய்து வருகின்றோம்!

இந்த நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி வெளிநாட்டு வாழ் தமிழ் பேசும் நெஞ்சங்களிடையே மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்களின் இறை உணர்வை வழுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாகவும் முன்னணி ஆங்கில பத்திரிக்கையான THE TIMES OF INDIA முதற் பக்கச் செய்தி (இன்று 21-8-2010) வெளியிட்டுள்ளது! அல்ஹம்துலில்லாஹ்!
நன்றி :TNTJ

கடலூர் மாவட்டத்தில் கனமழை அதிகபட்சமாக 90 மி.மீ., பதிவு

கடலூர் மாவட்டத்தில் நேற்று காலை பெய்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதிகபட்சமாக கீழ்ச் செருவாயில் 90 மி.மீ., மழை பெய்தது.

கடலூர் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணிக்கு திடீரென மழை கொட்டியது. நேரம் செல்லச் செல்ல மழையின் வேகம் அதிகரித்தது. கடலூர் நகரம் முழுவதும் வெள்ளக்காடானது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக் கப்பட்டது. கடந்த 2 நாட் களாக கடல் சீற்றமாக இருந்ததால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.

நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு மி.மீ.,ல் வருமாறு:

கீழ்செருவாயில் 90, பெலாந்துறை 71, தொழுதூர் 70, விருத்தாசலம் 68, காட்டுமன்னார்கோவில் 52, மேமாத்தூர் 51, லக்கூர் 48, கடலூர் 48, ஸ்ரீமுஷ் ணம் 45, வேப்பூர் 45, குப்பநத்தம் 43.40, காட்டுமைலூர் 37, லால்பேட்டை 37, வானமாதேவி 16, சேத்தியாத்தோப்பு 13, புவனகிரி 12, பரங்கிப்பேட்டை 8, அண்ணாமலை நகர் 7, கொத்தவாச்சேரி 5, பண் ருட்டி 5, சிதம்பரம் 4 மி.மீ., மழை பெய்துள்ளது. இவற் றில் திட்டக்குடி அருகில் உள்ள கீழ்ச்செருவாயில் அதிகபட்சமாக 90 மி.மீ., மழை பெய்துள்ளது.

கடும் மழையால் கடலூரில் நேற்று வகுப்புகள் வைத்த தனியார் மெட்ரிக் பள்ளிகள் விடுமுறை அறிவித்தன.

ஆகஸ்ட் 20, 2010

தங்கத்தின் விலை


பிரிட்டன் தலைநகர் லண்டனில், புல்லியன் எக்சேஞ்ச் ஒன்று இருக்கிறது. நம்மூர் பங்குச் சந்தைகள் மாதிரி, தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் சந்தை இது தான். இதில் 14 வங்கிகள் பங்குதாரர்களாக உள்ளன. இவற்றில் 11 வங்கிகள் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவை. இவை தங்கச் சுரங்கங்களுடன் ஒப்பந்தம் செய்து, உற்பத்தி அளவுக்கேற்ப மார்க்கெட் விலையை நிர்ணயிக்கின்றன. உற்பத்தி மற்றும் தேவையை ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்துவது இந்த புல்லியன் எக்சேஞ்ச் தான். இதில், அங்கத்தினர்களான வங்கிகள் கூடி, “இன்று இதுதான் விலை’ என்று அறிவித்தால், உலகம் முழுவதும் அன்றைய விலையாக, அதுவே தீர்மானிக்கப்படுகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்தாலோ, தங்கச் சுரங்கங்களில் உற்பத்தி குறைந்தாலோ, கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலோ, தங்கத்தில் முதலீடு செய்வதும், அதன் தேவையும் அதிகரித்துவிடுகிறது. கையோடு, அன்றைய மார்க்கெட் விலையை, லண்டன் புல்லியன் அதிகரித்துவிடுகிறது.

தங்கம் விலை நிர்ணயத்தின் முக்கிய காரணியாக, ஆன்-லைன் வர்த்தகம் தான் செயல்படுகிறது. ஆன்-லைனில், எந்த நேரடி பணப் புழக்கமும் இல்லாமல், வெறுமனே, “இன்றைக்கு எனக்கு இத்தனை கிலோ தங்கம் ஒதுக்கிவையுங்கள்’ என பதிவு செய்துவிட்டால், உங்கள் கணக்கில் அந்தத் தங்கம் சேர்க்கப்படும். ஒட்டுமொத்தமாக, இந்தியாவின் தனி மனிதத் தேவைக்குப் பயன்படும் தங்கத்தை, அமெரிக்காவில் இருக்கும் ஒரே ஒரு வர்த்தகரே ஆன்-லைன் மூலம் பதிவு செய்துவிடுகிறார். இப்படித்தான், செயற்கை முறையில் தங்கத்தின் தேவை அதிகரிக்கப்படுகிறது. இந்தியாவில் தங்கம் வாங்குவோரில், 80 சதவீதம் பேர் நடுத்தர வர்க்கத்தினர் தான். 20 சதவீதம் வாடிக்கையாளர்கள் தான் செல்வந்தர்கள். விலை உயர்வால் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படுவது, நடுத்தர வர்த்தக மக்கள் தான். இந்த அதிரடி விலை உயர்வால், தங்கள் அவசியத் தேவைக்கு கூட தங்கம் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். அந்த வகையில், தங்கம் விலையை 90 சதவீதம் ஆன்-லைன் வர்த்தகமும், 10 சதவீதம் மட்டுமே தனிமனிதத் தேவையும் நிர்ணயிக்கிறது.

தங்கத்தின் கதை:

உலகின் மிகப் பழமையான நாகரிகங்களுள் ஒன்றான மெசபடோமியாவின் சுமேரிய நாகரிகத்தில் தான் (இப்போதைய ஈரான், ஈராக்) முதல் முதலில் தங்கம் ஓர் புனிதமான, ஆடம்பரமான, அலங்காரத்துக்கான நகையாக பயன்படுத்தப் பட்டது. கிட்டத்தட்ட அதே காலத்தில், தங்கம் உற்பத்தியில், முன்னணியில் இருந்த எகிப்தியர்களும், தங்கத்தை சுத்திகரிக்கும் கலையைக் கண்டுபிடித்தனர். அவர்களும் தங்கத்தை சொந்த உபயோகத்துக்குத் தான் பயன்படுத்தினர். நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சில மன்னர்கள், தங்கத்தில் நாணயம் வெளியிட்டனர். முதன் முதலில், பெரிய அளவில் சுத்தமான தங்க நாணயங்களை அறிமுகப்படுத்தியவர் கி.மு., 560 – கி.மு., 546ல் ஆண்ட லிடியா (இப்போதைய மேற்கு டர்க்கி) மன்னர் கிரீசஸ் தான். அதில், சிங்கம் மற்றும் காளையின் முகங்களைக் கொண்ட ராஜ முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. அந்த நாணயங்கள் தான் , உலகத்திலேயே முதல் முறையாக வர்த்தகப் பயன் பாட்டுக்கும் கொண்டுவரப்பட்டது.

மொத்தத் தங்கம்:

தங்க வயல் சுரங்க சேவைகள் என்ற நிறுவனம் 2003ம் ஆண்டு வெளியிட்ட தகவலின்படி, உலகத்தில் தற்போது ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 500 டன் புழக்கத்தில் உள்ளது (இதில் உங்கள் வீட்டில் எவ்வளவு இருக்கிறது?). இதில் 61 சதவீதம், 1950ம் ஆண்டுக்குப் பிறகு பூமியிலிருந்து சுரண்டப்பட்டவை. மொத்த தங்கத்தையும் ஒரு கட்டியாகச் செய்தால், நான்கு புறமும் 19 மீட்டர் கொண்ட கனசதுரம் கிடைக்கும். அவ்வளவு தான்.

சொக்கத்தங்கம்:

பொதுவாக, தங்கத்தின் மதிப்பு காரட் அடிப்படையில் அளவிடப்படுகிறது. காரட் என்ற வார்த்தை காரப் என்ற விதையில் இருந்து வந்தது. இந்த விதை, கீழ்திசை நாடுகளில், எடைக்கற்களாகப் பயன்படுத்தப்பட்டது. சொக்கத் தங்கம் என்றழைக்கப்படும் சுத்தமான தங்கம், 24 காரட் மதிப்புடையது. நேர்த்தியான நிலையில், 100 சதவீதம் சுத்தமான இத்தங்கம், நகை செய்ய உகந்தது அல்ல. நகைக்கு பயன்படுத்தப்படும் தங்கம் 22 காரட் உடையது என பரவலாக சொல்லப்படுகிறது. இது 91.67 சதவீதம் சுத்தமான தங்கம். ஆனால், 75 சதவீதம் சுத்தத் தங்கமான 18 காரட்டைப் பயன்படுத்தினாலே பெரிய விஷயம் தான் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்

நன்றி:-WWW.tntj.net

ஆகஸ்ட் 19, 2010

இரவுத் தொழுகையின் சட்டதிட்டங்கள்!

கடமையான தொழுகைக்கு பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்த, அதிக நன்மையை பெற்றுத் தரக் கூடிய தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்.
ரமலான் மாதத்திற்குப் பிறகு சிறந்தது நோன்பு அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை இரவில் தொழும் தொழுகையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­லி), நூல்கள் : முஸ்­லிம் (1982),
இரவில் தொழப்படும் தொழுகைக்கு பல பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. 1. ஸலாத்துல் லைல் (இரவுத் தொழுகை) 2.கியாமுல் லைல் (இரவில் நிற்குதல்) 3. வித்ர் (ஒற்றைப்படைத் தொழுகை) 4. தஹஜ்ஜுத் (விழித்து தொழும் தொழுகை) ஆகிய பெயர் ஹதீஸ்களில் காணப்படுகின்றன.
ரமலான் மாத்தில் தொழப்படும் இரவுத் தொழுகைக்கு பழக்கத்தில் தராவீஹ் என்று குறிப்பிடுகின்றன. இந்த பெயர் நபிமொழிகளில் குறிப்பிடப்படவில்லை.
இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாக தொழ வேண்டும். ஒருவர் இரவுத் தொழுகையை முடித்துக் கொள்ள நாடினால் ஒற்றைப் படை எண்ணிக்கை தொழுது அத்தொழுகையை முடிக்க வேண்டும்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகையைப் பற்றி கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகையைப் பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்) தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கிவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : இப்னு உமர் (ர­லி), நூல் : புகாரீ (990)
இரவுத் தொழுகையின்
நேரம்இஷா தொழுகை முடிந்ததி­ருந்து பஜ்ர் நேரம் வரும் வரை இத்தொழுகையைத் தொழலாம். நபி (ஸல்) அவர்கள் அனைத்து நேரங்களிலும் தொழுதுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகை முடித்ததி­ருந்து பஜ்ர் தொழுகை வரை (மொத்தம்) 11 ரக்அத்கள் தொழுதுள்ளார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ர­லி), நூல் : முஸ்­லிம் (1216)
நபி (ஸல்) அவர்கள் இரவின் அனைத்து நேரத்திலும் வித்ர் தொழுதுள்ளார்கள். அவர்களின் வித்ர் (சில நேரங்களில்) ஸஹர் வரை நீடித்துள்ளது. அறிவிப்பவர் : ஆயிஷா (ர­லி), நூல் : புகாரீ (996)
ரக்அத்களின் எண்ணிக்கை
நம்முடைய நிலைமைகளுக்குத் தோதுவாக பின்வரும் ஏதேனும் ஒரு முறையில் நாம் இரவுத் தொழுகையை நிறைவேற்றலாம். பின்வரும் ஹதீஸ்கள் அனைத்தும் நபியவர்கள் பல நிலைகளில் நமக்கு தொழுது வழிகாட்டியுள்ளார்கள் என்பதைத் தெளிவு படுத்துகிறது.
8+3 ரக்அத்கள்
ரமலானில்நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா (ர­லி) இடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் நபி (ஸல்) அவர்கள் ரமலானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள் என்று விடையளித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதரே! வித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குவீர்களா? என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா! என் கண்கள் தாம் உறங்குகின்றன என் உள்ளம் உறங்குவதில்லை என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர் : அபூஸலமா, நூல்கள் : புகாரீ (1147),
12+1 ரக்அத்கள்
நபி (ஸல்) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு வித்ரு தொழுவார்கள். பின்னர் பாங்கு சொல்பவர் வரும் வரை சாய்ந்து படுத்தார்கள். பிறகு எழுந்து சுருக்கமாக இரு ரக்அத்கள் தொழுதுவிட்டு சுப்ஹுத் தொழுகைக்காக (வீட்டை விட்டு) வெளியே சென்றார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர­லி), நூல்கள் : புகாரீ (183), முஸ்­லிம் (1275)
நபி (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர­லி) நூல்கள் : புகாரீ (1138), முஸ்­லிம் (1276) 10+1 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்கள் இரவில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஒரு ரக்அத்தை வித்ராகத் தொழுதார்கள். தொழுது முடித்த பின் (தம்மை அழைப்பதற்காக) தொழுகை அறிவிப்பாளர் தம்மிடம் வரும் வரை வலப்பக்கம் சாய்ந்து படுத்திருப்பார்கள். (அவர்) வந்ததும் எழுந்து) சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஸுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ர­லி), நூல்கள் : முஸ்­லிம் (1339),திர்மிதீ (404),
8+5 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்கள் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழுவார்கள். அ(ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும் உட்கார மாட்டார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ர­லி), நூல்கள் : முஸ்­லிம் (1341), திர்மிதீ (421),
9 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ர­) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள் (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள்) என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர் : மஸ்ரூக், நூல்கள் : புகாரீ (1139)
7 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ர­) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள் (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள்) என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர் : மஸ்ரூக், நூல்கள் : புகாரீ (1139)
5, 3, 1 ரக்அத்கள்
வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும். யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும், யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஅய்யூப் (ர­லி), நூல் : நஸயீ (1692), அபூதாவூத் (1212),
இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுதல்
இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவது மிகச் சிறந்ததாகும். ஜமாஅத்தாகத் தொழுதல் என்பது பள்ளிவாச­ல்தான் என்பது அவசியமில்லை. வீட்டிலும் ஜமாஅத்தாகத் தொழுது கொள்ளலாம். நபியவர்கள் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவதற்கு மிகப் பெரும் சிறப்பைக் கூறியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் இரவுத் தொழுகையை இமாம் முடிக்கின்றவரை அவரோடு நின்று தொழுகின்றாரோ அவருக்கு இரவு முழுவதும் நின்று தொழுத நன்மை எழுதப்படுகின்றது. அறிவிப்பவர் : அபூதர் (ர­லி) நூல் : திர்மிதி (734)
தொழும் முறை
நபி (ஸல்) அவர்கள் ஐந்து, ஏழு ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள். அவற்றிக்கிடையே ஸலாமைக் கொண்டோ அல்லது வார்த்தைகளைக் கொண்டோ பிரிக்க மாட்டார்கள். அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ர­லி), நூல்கள் : நஸயீ (1695),
நபி (ஸல்) அவர்கள் ஐந்து ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள். அதன் கடைசியில் தவிர மற்ற ரக்அத்களில் அமர மாட்டார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ர­லி), நூல்கள் : நஸயீ (1698)
நபி (ஸல்) அவர்களுக்கு உடல் கனத்த போது ஏழு ரக்அத்கள் தொழுதார்கள். அதில் அதன் கடைசி ரக்அத்தில் தவிர மற்ற ரக்அத்துகளில் உட்காரவில்லை. அறிவிப்பவர் : ஆயிஷா (ர­லி), நூல்கள் : நஸயீ (1699)...
நபி (ஸல்) அவர்கள வயதாகி பலவீனம் அடைந்த போது ஏழு ரக்அத்கள் வித்ரு தொழுதார்கள். அதில் ஆறாவது ரக்அத்தில் தவிர மற்ற ரக்அத்களில் உட்காரவில்லை. பின்னர் எழுவார்கள், ஸலாம் கொடுக்க மாட்டார்கள். பின்னர் ஏழாவது ரக்அத்தை தொழுவார்கள். பின்னர் ஸலாம் கூறுவார்கள். பின்னர் இரண்டு ரக்அத்கள் அமர்ந்து தொழுவார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ர­லி), நூல் : நஸயீ (1700)
வித்ர் தொழுகை ஸலாம் கொடுத்தபிறகு ஓதும் துஆ
سُبْحاَنَ مَلِكِ الْقُدُّوْسُ
ஸுப்ஹான ம­க்கில் குத்தூஸ்
(பரிசுத்தமான அரசன் (அல்லாஹ்) தூய்மையானவன்) என்று மூன்று முறை கூற வேண்டும். (நஸயீ 1681)
வீட்டில் தொழுவதே மிகச்சிறந்தது
நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தில் பாயினால் ஒரு அறையை அமைத்துக் கொண்டார்கள். சில இரவுகள் அதனுள் தொழுதார்கள். அவர்களது தோழர்களில் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள். இதைப் பற்றி அறிந்து நபி (ஸல்) அவர்கள் (அந்த அறைக்கு வராமல்) உட்கார்ந்து விட்டார்கள். பின்பு மக்களை நோக்கி வந்து ''உங்களது செயல்களை நான் கண்டேன். மக்களே உங்களது இல்லங்களிலேயே தொழுது கொள்ளுங்கள். கடமையான தொழுகை தவிர மற்ற தொழுகைகளைத் தமது வீட்டில் தொழுவதே சிறப்பாகும்'' என்று கூறினார்கள் அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ர­லி) நூல்: புகாரி (731)
இரவுத் தொழுகை தவறி விட்டால்...
ஆயிஷா (ர­லி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களுக்கு நோய் முத­யவற்றால் இரவுத் தொழுகை தவறி விட்டால் (அதற்கு ஈடாகப்) பக­ல் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். நூல்: முஸ்­லிம் (1358)
இரவுத் தொழுகையை பேணித் தொழல்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எவர் நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­லி) நூல் : புகாரி (30)

ஆகஸ்ட் 18, 2010

மதரஸாக் கல்வித் திட்டங்களில் இடையூறு ஏற்படுத்தும் நோக்கம் இல்லை: கபில் சிபல்

மதரஸாக்களில் வழங்கப்படும் இஸ்லாம் சம்பந்தமான கல்விகளில் மாறுதல் ஏற்ப்படுத்தும் நோக்கம் இல்லை என மனித வள மேம்பாட்டுத் துறைக்கான மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறினார்.

சிறுபான்மை மக்களால் நடத்தப்படும் மதரஸாக்கள் தரமான கல்வியையும் மேலும் சட்ட வரம்புகளுக்குள் உள்ள கல்வியையும் வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

குழந்தைகளின் கல்விக்கான உரிமைகள், பட்டப்படிப்பு மற்றும் கட்டாயக் கல்வி திட்டதிற்கான 2009 ம் ஆண்டிற்க்கான சட்டத்தைப் பற்றி அவர் கூறுகையில்; "சிறுபான்மை மக்களுக்கு வழங்கப்பட்ட கல்விக்கான உத்திரவாதங்களை மீறாத வகையில் செயலாற்றும்படி மாநில மற்றும் யுனியன் பிரதேசங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சிறுபான்மை மக்களின் நிர்வாகக் குழுக்களால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளுக்கான உதவிகளை அளிப்பது இயற்கையானதே. அமைச்சகம் அதற்கான சில ஆலோசனைகளை ஏற்கனவே பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளது" என்றும் அவர் கூறினார்.

கட்டாயக் கல்விக்கான சட்டத்தில் உள்ள சிக்கல்களைப் பற்றி பல பள்ளி நிர்வாகத்தினர் வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் மதரஸாக் கல்வி திட்டங்களில் இம்மாதிரியான சட்ட சிக்கல்கள் எதுவும் காணப்படவில்லை.வெளிப்படையான நிர்வாக செயல்பாடுகளை காண்பிப்பதற்கும், கல்வித் துறையுடனான சந்திப்புகளில் பங்கெடுப்பதற்கும் பதிலாக பள்ளிகளில் சேர விரும்பவர்களுக்கான தடைகளைப் பற்றியும் பள்ளிகளுக்கான தரத்தினை அளிக்கும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் இதன் மூலம் குழந்தைகளின் கல்விக்கு எவ்வித இடையூறும் ஏற்படுவதில்லை என்பதை நிலைப்படுத்த வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

அல் அக்ஸா மஸ்ஜித் உலக முஸ்லிம்களுடையது: அக்ஸா மஸ்ஜித் இமாம்

மஸ்ஜிதுல் அக்ஸா உலகத்தின் அனைத்து முஸ்லிம்களுக்கும் சொந்தமானது என அக்ஸா மஸ்ஜிதின் இமாம் டாக்டர்.பேராசிரியர்.யூஸுஃப் ஜுமா ஸலாமா தெரிவித்துள்ளார்.

துபாயில் ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் நடைபெற்று வரும் சர்வதேச திருக்குர்ஆன் விருது நிகழ்ச்சிகளின் ஒருபகுதியாக துபாய் சேம்பர் ஆஃப் காமேர்ஸின் ஆடிட்டோரியத்தில் உரை நிகழ்த்தினார் அவர்.

உரையில் அவர் கூறியதாவது;"மஸ்ஜிதுல் அக்ஸா உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் சொந்தமானது.இந்த சிந்தனையோடுதான் பிரச்சனையை அணுகவேண்டும்.அக்ஸா மஸ்ஜித் ஃபலஸ்தீன்களுக்கு மட்டும் உரிமையுடையது என செய்தி ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. அக்ஸா மஸ்ஜிது மீது யூதர்கள் உயர்த்தும் உரிமை போலியானது. அவர்களுடைய கோரிக்கையை நிரூபிக்க எவ்வித ஆதாரத்தையும் இதுவரை சமர்ப்பிக்கவில்லை.

குத்ஸின் மண்ணில் குடியேறிய யூதர்கள் 80 ஆயிரம் ஃபலஸ்தீன் முஸ்லிம்களை இங்கிருந்து விரட்டியுள்ளனர்.இங்கு முஸ்லிம்கள் நுழைவதை தடைச் செய்கின்றனர்.யூதர்களின் இத்தகைய செயல்களுக்கு குற்றம் சுமத்தவேண்டியுள்ளது.

உலக முஸ்லிம்களின் இதயம் குத்ஸ்.வரலாற்று ரீதியாகவும்,கலாச்சார ரீதியாகவும் முஸ்லிம் உலகத்தோடு அடையாளப்படுத்தப்படுகிறது குத்ஸ்.இது முஸ்லிம்களின் நம்பிக்கையோடு தொடர்புடைய வரலாறு ஆனதால் இதனை எவராலும் துடைத்து எறிய இயலாது." இவ்வாறு உரைநிகழ்த்திய அவர் ஃபலஸ்தீனில் மஸ்ஜிதுகள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் நிர்மாணிப்பதற்கு உதவி அளித்துவரும் ஐக்கிய அரபு அமீரக ஆட்சியாளர்களை பாராட்டினார்.

துபாய் அரசின் அழைப்பை ஏற்றுத்தான் டாக்டர் ஜுமா ஸலாமா வருகை புரிந்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

துபாயில் தங்குவதற்கு கட்டணமா? வதந்தி என துபாய் நகரசபை

எமிரேட்ஸில் வசிக்கும் வெளிநாட்டினர் மற்றும் உள்நாட்டு மக்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கும் திட்டம் எதுவும் இல்லை எனவும், அந்தத்தகவல் வதந்தி எனவும் துபாய் நகரசபை அறிவித்துள்ளது.
1962 ஆம் ஆண்டு முதல் கட்டிடத்திற்கான கட்டணத்தை ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் அல்லாதவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு வருகிறது.வசிப்பிடத்திற்கான ஒப்பந்தமோ,வணிக உரிமமோ புதுப்பிக்கும் பொழுது துபாய் குடிநீர் மற்றும் மின்சார விநியோகத்திற்கான இண்டிக்ரேட்டட் இ சிஸ்டம் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.ஐக்கிய அரபு அமீரக குடிமகன்கள் அல்லாதவர்களிடமிருந்து வருடத்திற்கு வாடகையில் 5 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

ஆகஸ்ட் 17, 2010

சர்க்கரை நோய்

இன்று உலக மக்களை ஆட்டிப்படைக்கும் கொடிய நோய்களுள் சர்க்கரை வியாதியும் ஒன்று. எய்ட்ஸ், கேன்சர் போன்றவற்றை விட பாடாய் படுத்திக்கொண்டிருக்கும் கொடிய நோய் இந்த நீரிழிவு நோய் என்று சொல்லப்படும் சர்க்கரை நோயே.

உலக அளவில் 246 மில்லியன் மக்கள் தற்போது நீரிழிவு நோயின் தாக்கத்தில் இருக்கின்றனர். இன்னும் 5 ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை 500 மில்லியனாக மாற வாய்ப்புள்ளது என உலக சுகாதார ஆய்வகம் தெரிவித்துள்ளது. இந்திய மக்கள் தொகையில் 60 சதவிகிதம் பேர் இந்நோயின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்கின்றனர். குறிப்பாக தென்னிந்திய மக்களே அதிகம் பாதிப்பு அடைகின்றனர்.

நீரிழிவு நோயை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

முதல் வகை

சிறு வயதிலிருந்தே கணையம் இன்சுலீனை சரிவர சுரக்காததால் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கக்கூடும். அல்லது இன்சுலின் மாறு பாட்டால் கூட இது நேரிடலாம். இவ்வகையான நீரிழிவு நோய் கடைசி வரை இருந்துகெண்டே இருக்கும்.

இரண்டாம் வகை

90 சதவிகிதம் மக்கள் இந்தவகை நீரிழிவு நோயின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். 40 வயதைக் கடந்தவர்கள் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக உடல் எடை கொண்டவர்கள், மன அழுத்தம் கொண்டவர்கள், உணவு மாறுபாடு கொண்டவர்கள், பரம்பரையாகவும் சிலர் இந்த வகை வியாதியால் பாதிக்கப்படுகின்றனர்.

மூன்றாம் வகை

இந்த வகை திடீரென உணவு மாறுபாட்டால் ஏற்படுவதாகும். கருத்தரித்த பெண்களுக்கு இந்த வகை அதிகம் உண்டாகிறது. மகப்பேறு முடிந்தவுடன் மாறிவிடுகிறது.

சர்க்கரை நோயின் அறிகுறிகள்

1.அதிகம் பசி உண்டாகும்.
2.நாவறட்சி அடிக்கடி ஏற்படும்.
3.உடல் சோர்வாகவே இருக்கும்.
4.அடிக்கடி சிறுநீர் பிரியும்.
5.கை, கால் மரத்துப் போகும். சில நேரங்களில் தடித்துப் போகும்.
6.கண் பார்வை மங்கல் உண்டாகும்.
7.பாதங்கள் உணர்வற்ற தன்மை உண்டாகும்.
8.திடீரென உடல் எடை குறைதல், கூடுதல் போன்றவை உண்டாகும்.
9.அதிக கோபம், மன எரிச்சல், மன உளைச்சல் ஏற்படும்.
10.உடலில் சிறு காயங்கள் ஏற்பட்டால் அது வெகு நாட்களுக்கு ஆறாமல் இருக்கும்.

இந்த அறிகுறிகள் இருப்பின் உடனே இரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்துக்கொள்வது நல்லது.சர்க்கரை இருக்கிறது என்று தெரிந்தவுடன் சிலர் பயங்கொள்ள ஆரம்பிப்பார்கள். ஆனால் பயம் தேவையில்லை.உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலமே இந்த நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.

உணவுக் கட்டுப்பாடு

நீரிழிவை கட்டுப்படுத்த நம்மால்தான் முடியும். எந்த மருந்துகளும் செய்யாத வேலையை நம் அன்றாட உணவுகள் செய்யும் வல்லமை கொண்டது.உணவின் தன்மையறிந்து, வகையறிந்து அளவோடு உண்ண, உணவே அற்புத மருந்தாய் வேலை செய்யும்.

நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய சில காய்கறிகள்

வாழைப்பூ, வாழைத்தண்டு, முட்டைக்கோஸ், கத்திரிப்பிஞ்சு, வெண்டைக்காய், முருங்கைக்காய், புடலங்காய், பாகற்காய், சுண்டைக்காய், கோவைக்காய், பீர்க்கம் பிஞ்சு, அவரைப் பிஞ்சு.

இந்த காய்கறிகள் அனைத்தும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. இவற்றை பச்சடியாகவோ, கூட்டாகவோ செய்து சாப்பிடலாம்.

பொன்னாங்கண்ணிக் கீரை, சிறுகீரை, அரைக்கீரை, வெந்தயக் கீரை, முசுமுசுக்கை கீரை, வல்லாரைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை. நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் ஒரு கீரையேனும் சாப்பிட வேண்டும்.

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் கீரைகள் அனைத்தும் சூப்பாகவும் செய்து அருந்தலாம். காம்பு நீக்கி, சுத்தம் செய்து அரிந்த கீரையுடன் சிறிது சீரகம், மிளகு, பூண்டு, சாம்பார் வெங்காயம், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைத்து 1 டம்ளர் அளவு வந்தவுடன் அருந்தலாம்.

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் சில உணவு வகைகள்

வெந்தயம், உளுந்து, எள், கசகசா, கேழ்வரகு, கோதுமை, சிவப்பு அவல், சீரகம், சோம்பு, ஓமம்.

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கான உணவுப் பட்டியல்

1.காலை - ஒரு கப் டீ அல்லது காஃபி (சர்க்கரை இல்லாமல்)

2.காலை டிபன் - இட்லி - 3, தோசை - 2, சப்பாத்தி - 2, சம்பா ரவை உப்புமா - 1 கப், மிளகு பொங்கல் - 1 கப் (ஏதேனும் ஒன்று மட்டும்). இதனுடன் புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி, சின்ன வெங்காய சட்னி ஏதேனும் ஒன்று சேர்த்துக் கொள்ளலாம்.

3.மதிய உணவு - 1 கப் சாதம், 1 கப் காய்கறி சாம்பார், காய்கறி பச்சடி, காய்கறி அவியல், மற்றும் கீரை.

4.மாலை - முளைகட்டிய பயறு வகைகளில் ஏதேனும் ஒன்று. 1 கப் காபி அல்லது டீ - சர்க்கரை இல்லாமல்.

5.இரவு உணவு - கோதுமை சார்ந்த உணவுகளான, தோசை, சப்பாத்தி, உப்புமா போன்றவற்றுடன் சட்னி வகைகள் சேர்த்துக் கொள்ளலாம்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை

சர்க்கரை, குளுக்கோஸ், இனிப்பு பலகாரங்கள், கேக், சாக்லேட், ஐஸ்கிரீம், வெல்லம், உருளைக் கிழங்கு, சேனைக்கிழங்கு, மாம்பழம், வாழைப்பழம், சப்போட்டா, குளிர்பானங்கள்.

கேரட், பீட்ரூட் குறைந்த அளவு மாதம் இருமுறை சாப்பிடலாம்.

உடற்பயிற்சி

சர்க்கரை நோயின் அறிகுறிகள் இருந்தாலே நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம். ஆரம்பத்தில் 20 நிமிடம் நடந்தால் போதும். பின்னாளில் நேரத்தை சற்று அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

நீரிழிவு நோய்க்கான மருந்து, மாத்திரை எடுத்துக்கொண்ட உடனேயே நடக்க ஆரம்பிக்கக்கூடாது. சிறிது நேரம் கழிந்த பின்னரே நடக்க வேண்டும். நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் கூட நல்ல பயிற்சிதான்.

நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய் சம அளவு எடுத்து இலேசாக கொதிக்க வைத்து, கொதி நிலையில் கறிவேப்பிலையை போட்டு இறக்கி பாட்டிலில் வைத்துக்கொண்டு தினமும் அதிகாலையில் நடைபயிற்சி செய்யும் முன் கால் மூட்டுகளிலிருந்து, கீழ்த் தசைப் பகுதி மற்றும் பாதங்கள் வரை பூசிக்கெண்டு நடைபயிற்சி செய்ய வேண்டும். அதுபோல் நடைபயிற்சி முடிந்த பின் உள்ளங்கால் பகுதியில் சிறிது எண்ணெய் தடவி வரவேண்டும். இவ்வாறுசெய்து வந்தால் கால்களில் உணர்ச்சியற்ற பகுதிகள் மற்றும் கால் வலி போன்றவை நீங்கி புத்துணர்வு பெறும். கால்களில் இரத்த ஓட்டம் சீராகும்

முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு! தவறான பிரச்சாரம் செய்த புல்லுருவிகள்


முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு மாநாட்டை சீர்குலைக்கும் வகையில் சமுதாயத்தின் பெயரால் வயிறு வளர்க்கும் சில புல்லுருவிகள் தமிழ்நாட்டில் உள்ள 3.5 சதவீத இட ஒதுக்கேட்டை நிரப்புவதற்கே ஆள் இல்லை எனவே இந்த மாநாடு தேவையா என்று கேட்டு தப்புப் பிரச்சாரம் செய்தனர். இத்தகைய பிரச்சாரங்கள் மூலம் முஸ்லிம்களுக்கான உரிமை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வீழ வேண்டும் என்ற நோக்கம் தான் இவர்களிடம் மிகைத்திருந்தது.

ஆகஸ்ட் 14, 2010

பாவங்களின் பரிகாரங்கள்!

நாம் ஒவ்வொரு நாளும் தெரிந்தோ தெரியாமலோ நிறைய பாவங்களை செய்து கொண்டிருக்கிறோம். அப்படி நாம் செய்து கொண்டிருக்கும் பாவங்கள் மன்னிக்கப்படுதற்கான வழிமுறைகள், ஹதீஸ்களின் தொகுப்பாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

பிறர் குறைகளை மறைத்தல்!
யார் இவ்வுலகில் பிறருடைய குற்றங்குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குற்றங்குறைகளை அல்லாஹ் மறுமையில் மறைப்பான். (முஸ்லிம்)

சபையினில் ஏற்பட்ட தவறுகளுக்கு பரிகாரமாக!
ஒரு சபையினில் பங்கெடுத்துவிட்டுக் கலையும் போது,

‘ஸூப்ஹானகல்லாஹூம்ம வபிஹம்திக அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லா அன்த்த அஸ்தஃபிருக வஅதூபு இலைக்’

பொருள் : அல்லாஹ்வே உன்னைப்புகழ்வதுடன் உனது தூய்மையை நான் துதிக்கின்றேன். உன்னைத்தவிர உண்மையில் வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நான் சாட்சி கூறுகின்றேன். உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகின்றேன். உன் பக்கமே மீளுகின்றேன்’

என்று ஓதினால் அக்கூட்டத்தில் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தும் (இறைவனால்) மன்னிக்கப்பட்டுவிடும். (திர்மிதீ)

உளு வை முறையாகச் செய்வது!
யார் உழுவை முறையாகச் செய்கின்றாரோ அவருடைய நகக்கண்கள் உட்பட அவரது உடம்பு முழுவதிலிருந்து பாவங்கள் வெளியேறி விடுகின்றன. (முஸ்லிம்)

சிறிய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கபட கடமையான தொழுகை
கடமையான தொழுகைக்கான நேரம் வந்ததும் யார் முறையாக உழு செய்து உள்ளச்சத்துடன் ஒழுங்காகத் தொழுகின்றாரோ அவருடைய அத்தொழுகை – அவர் பெரும்பாவங்கள் செய்யாதவரை – அவருடைய சிறிய பாவங்கள் அனைத்திற்கும் பரிகாரமாகிவிடும். அந்நிலை அவருடைய ஆயுள் முழுவதும் உண்டு. (முஸ்லிம்)

பாவம் போக்கும் ஐவேளைத் தொழுகை
“உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள்” என்று தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது’ என நபித் தோழர்கள் கூறினர். ‘இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புகாரி)

10 நாட்கள் செய்த பாவங்களைப் போக்கும் ஜூம்ஆத் தொழுகை!
யார் முறையாக உழு செய்து ஜூம்ஆவுக்(காக பள்ளிக்)கு வந்து மௌனமாக இருந்து குத்பா – உரையைக் கேட்கின்றாரோ அவருடைய ஒரு ஜூம்ஆவுக்கும் மறு ஜூம்ஆவுக்கும் இடையேயான பாவங்களும் மேலும் அதிகப்படியான மூன்று நாட்களின் பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிடும் (முஸ்லிம்)

ஒரு வருட பாவங்களை போக்க ஆஷூரா நோன்பு!
ஆஷூரா (முஹர்ரம் பிறை 9, 10 அல்லது 10, 11 ஆகிய) தினங்களில் நோன்பு நோற்பதன் மூலம் கடந்த ஒரு வருட (சிறிய) பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகிறேன். (முஸ்லிம்)

இரண்டு வருடங்கள் செய்த சிறிய பாவங்களைப் போக்கும் அரஃபா நோன்பு!
அரஃபா (துல்ஹஜ் பிறை 9 ஆம்) தினத்தில் நோன்பு நோற்பது கடந்த ஒரு வருடம் மற்றும் அடுத்த ஒரு வருட (சிறிய) பாவங்களுக்குப் பரிகாரமாகும். (முஸ்லிம்)

பாவம் போக்கும் ஃநபில் தொழுகை!
ஒரு முஸ்லிம் பாவம் செய்துவிட்டால் (அதை உணர்ந்து) உழுசெய்து சுத்தமாகி இரு ரக்அத்துகள் தொழுது மன்னிப்புக் கோரினால் அவரது பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிடுகிறான் (அபூதாவுத்)

சிறிய முன்பாவங்கள் மன்னிக்கப்பட!
உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லித் தம் இரண்டு முன் கைகளில் மூன்று முறை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தம் வலக்கரத்தைப் பாத்திரத்தில் செலுத்தி, வாய்க் கொப்பளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தித் சீந்தினார்கள். பின்னர் தம் முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பின்பு தலையை ஈரக் கையால் தடவினார்கள். பின்னர் தம் இரண்டு கால்களையும் கரண்டை வரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு ‘நான் உளூச் செய்வதைப் போன்றே நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்வதை பார்த்திருக்கிறேன்’ என்று கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘யாரேனும் என்னுடைய இந்த உளூவைப் போன்று செய்து, பின்னர் தீய எண்ணங்களுக்கு இடம் தராமல் இரண்டு ரக்அத்துகள் தொழுதால் அவர் முன்னர் செய்த (சிறு) பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்” என்று கூறினார்கள் என்றார்கள்” என ஹும்ரான் அறிவித்தார். (புகாரி)

முன்பாவங்களைப் போக்கும் ரமலான்!
ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் (புகாரி)

ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. (புகாரி)

லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது. (புகாரி)

நடைபாதையில் உள்ள தடைகளை அகற்றினால்?
ஒருவர் (தொழுவதற்காக) நடந்து வரும் பாதையில் ஒரு முள் மரக்கிளை கிடப்பதைக் கண்டு, அதை அந்தப் பாதையைவிட்டும் அகற்கும் பணியில் ஈடுபட்டார். அப்பணி அவரை (ஆரம்ப நேரத்தில் தொழுவதைவிட்டும்) பிற்படுத்திவிட்டது. இப்படிப்பட்ட அந்த மனிதருக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறான். அவருக்குப் பாவமன்னிப்பும் அளிக்கிறான். (புகாரி)

பிந்திய இரவில் பாவமன்னிப்பு வழங்கப்படும்!
நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுவான். (புகாரி)

அன்று பிறந்த பாலகனைப்போல் பாவமற்றவராக ஆக!
மனைவியுடன் உடலுறவு கொள்ளாமல், எந்தப் பாவமும் செய்யாமல், இந்த ஆலயத்தை ஹஜ் செய்கிறவர் அன்று பிறந்த பாலகனைப் போல் திரும்புகிறார். (புகாரி)

கடன்பட்டோருக்காக உதவுவதல்!
யார் ஏழையின் (கடன்போன்ற) சிரமங்களை எளிதாக்கி உதவுகின்றாரோ அவருடைய இம்மை- மறுமை சிரமங்களை அல்லாஹ் எளிதாக்கிவிடுகின்றான். (முஸ்லிம்)

பொறுமையுடன் இருந்தால் பாவங்கள் மன்னிக்கப்படும்!
ஒரு முஸ்லிமுக்கு நோய், வேதனை, துக்கம், கவலை, தொல்லை, துயரம் முதலான முள் குத்துவது உட்பட ஏதேனும் சோதனை நிகழ்ச்தால் அ(தனைப் பொறுத்துக் கொள்வ)தற்காக அவனுடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுகிறான். (புகாரி)

அல்லாஹ்விற்காக நோன்பு நோற்பது!
யார் அல்லாஹ்வின் வழியில் ஒரு நாள் நோன்பிருக்கிறாரோ அந்த ஒருநாள் நோன்பிற்காக அல்லாஹ் அவருடைய முகத்தை எழுபது ஆண்டுகள் நரகத்திலிருந்து தூரமாக்கி விடுகிறான். (புகாரி)

பாவங்களை அழிக்கும் தர்மம்!
தர்மம் பாவங்களை அழித்துவிடும். நீர் நெருப்பை அணைப்பதைப் போல. (திரிமிதீ)

ஹஜ் மற்றும் உம்ரா – பாவங்களுக்கான சிறந்த பரிகாரங்கள்!
ஓர் உம்ரா செய்வது அடுத்த உம்ரா செய்யும் வரையிலான பவத்திற்குப் பரிகாரமாகும். ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜிற்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை. (முஸ்லிம்)

கடல் நுரை போல உள்ள அதிகமான பாவங்களும் மன்னிக்கப்பட வேண்டுமானால்!
‘சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி’ (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே! (புகாரி)

வெளிநாடு வாழ் இந்தியருக்கு உதவ நலநிதி

புதுடெல்லி,ஆக12: வெளிநாடுகளில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்கள் நெருக்கடி ஏற்பட்டு தத்தளித்தாலோ அல்லது வேலை இழந்து சிக்கலில் இருந்தாலோ அவர்களுக்கு உதவ நல நிதி அமைக்கப்பட்டுள்ளது என்று வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார்.

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது புதன்கிழமை அவர் கூறியதாவது: "42 நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் இந்த நல நிதி அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் சென்று வேலை கிடைக்காமல் பணம், பொருள், தங்க இடமின்றி தவிப்போர், வேலை இழந்து தத்தளிப்போர் போன்றவர்களுக்கு அவசர உதவி அளிக்க இந்த நிதி பயன்படுத்தப்படும்.

இந்த நிதியிலிருந்து உணவு, தங்கும் வசதி, மருத்துவ வசதி, ஊர் திரும்ப விமான டிக்கெட் வசதி செய்து தரப்படும்.

இந்தியர்கள் அதிகமாக செல்லும் வளைகுடா நாடுகள், ஐரோப்பாவில் உள்ள சில நாடுகளில் இந்த நிதி அமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மாலத்தீவு, சிங்கப்பூர், பிலிப்பின்ஸ், போர்ச்சுகல், பிஜி, ஆப்கானிஸ்தான், மொரீஷஸ்,தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இந்த நிதி உதவி கிடைக்கும். மத்திய அரசின் பட்ஜெட் ஒதுக்கீடு மூலம் இந்த நிதி அமைக்கப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் வெளிநாட்டில் உயிரிழக்கும் இந்திய நாட்டவரின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு போய் சேர்க்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.

கத்தாரிலிருந்து 199 இந்திய தொழிலாளர்களும் மலேசியாவிலிருந்து ஒருவரும் சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட உள்ளனர்.

குர்ஆன் பிரதியை எரிக்கும் திட்டத்திற்கு அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் கடும் எதிர்ப்பு

கெய்ரோ,ஆக,13:பெண்டகனும்,உலக வர்த்தக மையமும் தாக்கப்பட்ட செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவின் ஃப்ளோரிடாவிலுள்ள ஒரு சர்ச்சில் புனித திருக்குர்ஆனின் பிரதியை தீவைத்துக் கொளுத்த திட்டமிட்டுள்ளதை உலகின் புகழ்பெற்ற இஸ்லாமிய பல்கலைக்கழகமான எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் வன்மையாக கண்டித்துள்ளது.

வெறுப்பைத் தூண்டும், பாரபட்சமான நடவடிக்கையை ஃப்ளோரிடாவிலுள்ள கய்னஸ்வில் சர்ச் திட்டமிட்டுள்ளது என அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் சுப்ரீம் கவுன்சில் குற்றஞ்சாட்டியுள்ளது.

இச்சம்பவத்தை அமெரிக்காவிலுள்ள இதர கிறிஸ்தவ சபைகள் கண்டிக்கவேண்டுமென்றும், கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. செப்டம்பர் 11 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவுத் தெரிவித்தும், அச்சம்பவத்தை நினைவுகூறுவதற்காகவும் கிறிஸ்தவ சர்ச் இத்தகையதொரு மிக மோசமானதொரு திட்டம் தீட்டியுள்ளது.

இந்நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் அதனை இணையதளத்திலும் பிரசுரித்தனர். இஸ்லாத்திற்கெதிரான கொந்தளிப்பை ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய டீ சர்ட்டுகள் ஏற்கனவே கய்னஸ்வில் சர்ச் வெளியிட்டது விவாதத்தை கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

ஆகஸ்ட் 13, 2010

புது இரத்தம் பாய்ச்சும் புனித ரமளான்

“ரமளான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரீ 1899, முஸ்லிம் 1957

இந்த ஹதீஸ் உண்மையில் ஓர் உயிரோட்டமான ஹதீஸாகும். இது அல்லாஹ்வுடைய தூதரின் சொல் தான் என்று நமது நம்பிக்கையைப் பலப்படுத்தும் ஹதீஸாகும்.

பள்ளிவாசல் தொடர்பில் கொஞ்சம் அலட்சியமாக இருக்கின்ற பழைய முகங்கள்! பள்ளியுடன் தொடர்பில்லாத புதிய முகங்கள்! அத்தனை பேர்களையும் இந்த ரமளான், பள்ளியில் கொண்டு வந்து சேர்த்து விடுகின்றது.

அராஜக ஷைத்தானின் ஆதிக்கம் ஒரு கட்டுக்குள் வருவதால் தானே கட்டுக்கு அடங்காத கூட்டம் பள்ளிகளில் கூடி களை கட்டுகின்றது; பள்ளி நிரம்பி வழிகின்றது. இந்த மிகப் பெரிய மாற்றத்தை ரமளான் மக்களிடத்தில் கொண்டு வந்து விடுகின்றது.

விபத்தில் கை, கால்கள் ஒடிந்து முடங்கிப் போனவர்களுக்கு அறுவை சிகிச்சை அளித்து, உலோகத் தகடுகள் பொருத்தி, அவர்கள் நடப்பதற்கு மருத்துவர்கள் பயிற்சி கொடுப்பார்கள். அந்தப் பயிற்சியில் பழைய நடையைத் திரும்பப் பெற்றுக் கொள்வார்கள்.
அது போன்று தான், பாவம் என்ற விபத்தில் மாட்டி, படுக்கையில் கிடந்த நம்மை, இந்த ரமளான் மாதம் சரி செய்து நடக்க விட்டிருக்கின்றது. நாம் அப்படியே நம்முடைய நடையைப் பெற்றுக் கொண்டு தொடர வேண்டும். புனித மிக்க இந்த ரமளான் மாதம் நமது உடலில் புது ரத்தத்தைப் பாய்ச்சி உள்ளது.

செல்போன்கள் இயங்குவதற்காக அதிலுள்ள பேட்டரிகளுக்கு மின்சாரத்தை சார்ஜ் செய்கிறோம். அது போன்று நம்முடைய உள்ளத்தில் இறையச்சத்தை சார்ஜ் செய்யும் கருவியாக இந்த ரமளான் அமைந்துள்ளது.

அதிகாலை ஸஹர் நேரத்தில் நம்மை எழச் செய்தது.

அந்த நேரத்தில் இரவுத் தொழுகைகளைத் தொழ வைத்தது.

ஐந்து நேரங்களிலும் தனியாக அல்ல! ஜமாஅத்துடன் தொழ வைத்தது.

அதிகமதிகம் தான, தர்மங்களை அள்ளி வழங்க வைத்தது.

அன்றாடம் குர்ஆனுடன் தொடர்பை அதிகப்படுத்தியது.

பொய், புறம், சினிமா, சீரியல் என அனைத்துத் தீமைகளை விட்டும் அப்புறப்படுத்தியது.

வாய் கொப்பளிப்பதற்காக உள்ளே சென்ற சுத்தமான சுவையான தண்ணீர், தொண்டைக் குழிக்குள் விழுவதற்கு எத்தனை மைல் தூரம்? ஒரு மயிரிழை தூரம் தான். இருப்பினும் அந்தத் தண்ணீர் உள்ளே செல்லவில்லை. ஏன்?

அல்லாஹ் அருகில் இருக்கிறான் என்ற அச்சம். இந்த அச்சத்தை ரமளான் நம்மிடம் பதித்தது; புதுப்பித்தது.
அனுமதிக்கப்பட்ட நமது மனைவியர் பகல் வேளைகளில் அருகில் இருந்தும், அடையாமல் தடுத்தது எது? அல்லாஹ் அருகில் இருக்கிறான் என்ற அச்சம் தான்.

எங்கோ இருந்த நம்மை இந்த ரமளான் அல்லாஹ்வின் பக்கம் மிக அருகில் கொண்டு வந்து விட்டுள்ளது.
இறையச்சம் என்ற மின்னூட்டத்தை நம்முடைய உள்ளத்தில் ஏற்றியுள்ளது.

புனித ரமளான் ஏற்றிய இந்த மின்னூட்டம் இறங்கி விடாமல், இறைவன் அருகில் இருக்கிறான் என்ற உணர்வுடன் அவன் அருகிலேயே நாம் இருக்க வேண்டும்.

அதற்கு ஒரே வழி, ரமளானில் செய்த அந்த வணக்கங்களை அப்படியே விடாது தொடர்வதாகும்.
இந்த உறுதிப்பாட்டுடன் ரமளானுக்குப் பிறகுள்ள நம்முடைய வாழ்வைத் தொடர்வோமாக!


மெக்காவில் உலகின் மிகப்பெரிய கடிகாரம்

முஸ்லிம்களின் புனித தலமான மெக்காவில் உள்ள பிரமாண்டமான கட்டிடத்தில் உலகின் பெரிய கடிகாரம் பொருத்தப்பட்டு உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

புனித மாதமான இந்த ரமலான் மாதத்தின் முதல் வாரத்திலிருந்து இது முறைப்படி இயக்கி வைக்கப்படும் எனத் தெரிகிறது.

நான்கு பக்கமும் கடிகாரம் இயங்கும் என்பது இதன் கூடுதல் சிறப்பு. 601 மீட்டர் உயரம் உள்ள கடிகார டவரில் பொருத்தப்பட்டுள்ள இந்த கடிகாரத்தின் உயரம் மட்டும் 251 மீட்டர் ஆகும். இஸ்லாமிய பாரம்பரிய கலையை வெளிப்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது

இஸ்ரேலால் லெபனான்,சிரியா தாக்கப்பட்டால் அவ்விரு நாடுகளுக்கும் ஆதரவாக ஈரான் களமிறங்கும் - ஈரான் அமைச்சர்

லெபனான்,சிரியா ஆகிய இரு நாடுகள் இஸ்ரேலால் தாக்கப்பட்டால், ஈரான் முழுமூச்சுடன் அவற்றுக்கு ஆதரவு அளிக்கும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் மனுசெஹர் மொட்டாகி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

ஈரானில் பயணம் மேற்கொண்டுள்ள லெபனான் வெளியுறவு அமைச்சர் அலி அல்-ஷாமியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, மோட்டாகி செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே அண்மையில் நிகழ்ந்த மோதலை கண்டித்ததோடு, இஸ்ரேலின் இந்த செயல்பாடு, அதன் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியது என்று மொட்டாகி குறிப்பிட்டார்.

பிரதேச மற்றும் சர்வதேசப் பிரச்சினைகளில்,ஈரானும் லெபனானும் பொது நிலைப்பாடுகளை கொள்கின்றன.நியாயமான சர்வதேச உறவுகளை அமைப்பதை இரு தரப்பும் ஆதரிப்பதாகவும், அவர் வலியுறுத்தினார்.

ஆகஸ்ட் 10, 2010

ஃபிடல் காஸ்ட்ரோவின் எச்சரிக்கை

ஆக,10:நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கடுமையான நோய்களுடன் போராடுவதற்கு கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ பொது வாழ்க்கையிலிருந்து விலகியபொழுது மீண்டும் அவர் திரும்பிவருது கடினம் என்றே பலரும் கருதியிருந்தனர்.
அரை நூற்றாண்டிற்கு முன்பு அமெரிக்காவின் மூக்கிற்கு கீழே ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்திற்கு துணிச்சல் மிக்க படையை உருவாக்கிய காஸ்ட்ரோ பின்னர் ஒருபோதும் தனது முடிவில் எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்கவில்லை.அதனால்தான், பலகாலமாக அமெரிக்க ஆட்சியாளர்களுக்கும், சி.ஐ.ஏவுக்கும் கண்ணில் விரல்விட்டு ஆட்டிக்கொண்டிருந்தார் இந்த தீரமிக்க புரட்சியாளர்.
உலக சமூகத்தை அதிர்ச்சியடையச் செய்யும் வகையில் காஸ்ட்ரோ மீண்டும் பொதுவாழ்க்கைக்கு திரும்பியுள்ளார். வயது அவருடைய புரட்சியின் வீரியத்தை சற்றும் குறைத்திடவில்லை.நேற்று முன் தினம் கியூபா பாராளுமன்றத்தில் அவர் நடத்திய உரையினை உலக முழுவதுமுள்ள ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகள் ஆவேசத்துடன் கேட்டனர். இன்றைய சிக்கல்கள் மிகுந்த உலக சூழலில் காஸ்ட்ரோவின் வார்த்தைகளுக்கு மிக்க மதிப்புள்ளது.ஈரானுக்கெதிராக அமெரிக்க நடத்திவரும் பொருளாதார தடைகளும், ராணுவ முன்னேற்பாடுகளும் ஈரானை தோல்வி அடையச்செய்யாது, மாறாக அமெரிக்காவின் வீழ்ச்சிக்கு இது வழிவகுக்கும் என காஸ்ட்ரோ எச்சரிக்கை விடுத்தார்.அமைதியான முறையில் அத்தியாவசிய தேவைகளுக்காக அணுசக்தியை மேம்படுத்த ஈரான் நடத்திவரும் முயற்சிகளுக்கு தடைப்போடுவது என்ற பெயரில் உலகில் மீண்டும் ஒரு அணு ஆயுத போருக்கு வழிவகுக்கத்தான் அமெரிக்காவும்,இஸ்ரேலும் சேர்ந்து முயல்வதாக காஸ்ட்ரோ சுட்டிக்காட்டினார்.அத்தகையதொரு போர் ஈரானோடு மட்டும் ஒதுங்கிவிடாது. மாறாக, அப்போர் மேற்காசியாவிலும், பின்னர் ஐரோப்பாவிலும் பரவும். அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும்.தற்போதைய உலக கட்டமைப்பு முற்றிலும் வீழ்ச்சியை சந்திக்கும் வகையிலான சூழலுக்கு இத்தகைய பைத்தியக்காரத்தனமான கொள்கைகள் தள்ளும் என உலகத்திற்கு காஸ்ட்ரோ எச்சரிக்கை விடுத்தார்.காஸ்ட்ரோவின் எச்சரிக்கை அமெரிக்கா அதிபர் ஒபாமாவை குறிவைத்து விடுக்கபட்டதாகும். உலகை அழிவுக்குக் கொண்டுசெல்லும் முயற்சிகளிலிருந்து விடுபடவேண்டும் என காஸ்ட்ரோ ஒபாமாவை வலியுறுத்தினார்.அமெரிக்காவின் கடந்த கால நிலைப்பாடுகளும், ஈராக்கிலும், ஆஃப்கானிலும் இன்னும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் இன்றுவரை நடத்திவரும் ஆக்கிரமிப்பு போர்களின் வரலாற்றை உற்றுநோக்கினால் அந்த நாடு ஒருபோதும் நேரான வழியில் செல்லமுடியாது என்பதை உறுதிச்செய்ய இயலும்.ஆனால் ஏகாதிபத்தியம் சுயமாக தோண்டிய குழியிலிருந்து எளிதாக கரையேற முடியாது. இந்த அனுபவங்களை முன்னிறுத்தி, உலகில் மீண்டும் ஒரு அணு ஆயுத போர் நடக்க வழி வகுக்காதீர்கள் என்ற காஸ்ட்ரோவின் எச்சரிக்கை முற்றிலும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். அதுதான் தற்காலத்தில் அமைதியை விரும்புவோரின் குரலாகும்

அரசு நிறுவனம் மற்றும் கல்வி நிலையங்களில் 69% இட ஒதுக்கீடு: நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து முறையீடு

புதுடெல்லி,ஆக.10:தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப் பணிகளில் 69 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க அனுமதித்து உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது."வாய்ஸ் கன்ஸ்யூமர் கேர் கவுன்சில்' சார்பில் இந்த மறு பரிசீலனை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை அனுமதித்து கடந்த ஜூலை 13-ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதை எதிர்த்து இந்த அமைப்பு ஏற்கெனவே வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், 69 சதவீத இடஒதுக்கீடுக்கு வழிவகுக்கும் சட்டம் தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்டு,அது அரசமைப்புச் சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்ட சட்டத்தை நீதிமன்றம் பரிசீலனை செய்ய முடியாது. எனினும் தமிழக அரசின் 1993-ம் ஆண்டு இடஒதுக்கீட்டு சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.ஒரு சட்டம் அரசமைப்புச் சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டிருந்தாலும் அது உச்சநீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்பட்டதுதான் என்று 2007-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது.இதையடுத்து தமிழக அரசின் இட ஒதுக்கீடு சட்டம் உச்சநீதிமன்றத்தின் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
1993-ம் ஆண்டிலிருந்து இந்த அமைப்பு ஒவ்வோர் ஆண்டும் இடைக்காலமாக மனு தாக்கல் செய்யும்.அதன்படி தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் கூடுதலான இட ஒதுக்கீட்டுக்கு சமமாக பொதுப் பட்டியலில் உள்ள இடங்கள் அதிகரிக்கப்பட்டு வந்தன.இந்த நிலையில்தான் இந்த ஆண்டு 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதேநேரத்தில் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை எவ்வளவு என்ற விவரத்தை ஆதாரங்களின் அடிப்படையில் மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.அரசு தெரிவிக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டு அளவை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நிர்ணயிக்க வேண்டும். அதற்கேற்ப மாநில அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் தீர்ப்பு கூறப்பட்டது.இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி வாய்ஸ் கன்ஸ்யூமர் கேர் கவுன்சில் அமைப்பு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஜூலை 13-ம் தேதி தீர்ப்பை மறுபரிசீலனை செய்து அதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 08, 2010

பிரிட்டனில் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய அனுமதிக்கப்பட வேண்டும்: சாயீதா வார்சி

லண்டன்,ஆக8:பிரிட்டனில் உள்ள இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவது எந்த வகையிலும் அவர்களின் சுதந்திரத்தை பாதிக்காது. எனவே இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளார் முதல் முஸ்லிம் காபினட் அமைச்சரான சாயீதா வார்சி.
பர்தா முகத்தை மூடும் படியான ஆடையாக இருப்பதாலும் ஆண்கள் கட்டுப்படுத்துவதாலேயே இஸ்லாமிய பெண்கள் அதனை அணிகின்றனர் என கடந்த மாதம் பிரிட்டனில் வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டதில் பெரும்பான்மையானோர் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.இதனால் பெல்ஜியம், பிரான்ஸ் நாடுகளை தொடர்ந்து பிரிட்டனிலும் பொது இடங்களில் பர்தா அணிய தடை வரக் கூடும் என்ற சர்ச்சை நிலவி வந்தது. பின்னர் பிரிட்டன் அமைச்சர் டேமியன் கிரீன் பிரிட்டனில் பர்தா அணிய தடை விதிக்கப்படாது என அறிவித்ததன் மூலம் அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
ஆண்கள் கட்டாயத்தின் பேரில் மட்டும் பெண்கள் பர்தா அணிவதில்லை. பல இஸ்லாமிய பெண்கள் பர்தாவை விரும்பியே அணிகின்றனர். எனவே பர்தா அணிய தடை விதிக்கக் கூடாது என்று இஸ்லாமிய அமைச்சர் ஒருவரே தற்போது நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளதன் மூலம் இந்த விசயம் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் சீனா அபாரம்- ‌ஜப்பானை பின்னுக்கு தள்ளியது

பீஜிங்,ஆக8:சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகளின் பட்டியலில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி, சீனா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.பொருளாதார ரீதியாகவும் சரி, ராணுவ ரீதியாகவும் சரி, சர்வதேச அளவில் வல்லரசாக திகழ்கிறது அமெரிக்கா பல ஆண்டுகளாக தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.பொருளாதார ரீதியாக செல்வாக்குடைய நாடுகளின் பட்டியலில் கடந்தாண்டு வரை ஜப்பான் இரண்டாம் இடத்தில் இருந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக சீனாவில் ஏற்பட்டுள்ள அபார பொருளாதார வளர்ச்சி காரணமாக, ஜப்பானை பின்னுக்கு தள்ளி, சீனா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.கடந்தாண்டே, பொருளாதார வளர்ச்சியில் ஜப்பானுக்கு சமமாக சீனா வளர்ச்சி அடைந்திருந்தது. இருந்தாலும், இரண்டாம் இடத்தை பெற முடியவில்லை. இந்தாண்டு அதை சாதித்து காட்டியுள்ளது.சீனாவின் தலைமை நிதி கண்காணிப்பாளர் யி காங், இதை தெரிவித்தார். உலக வங்கி வெளியிட்டுள்ள மதிப்பீட்டின்படி, "பொருளாதார வளர்ச்சியில் இதே வேகத்தில் சென்றால், 2025ல் அமெரிக்காவை முந்தி, சீனா முதல் இடத்தை பிடித்து விடும்" என, தெரிவிக்கப்பட்டுள்ளது.பொருளாதார ரீதியாக செல்வாக்கு பெற்ற நாடுகளின் வரிசையில், 2005ல் பிரிட்டன் மற்றும் பிரான்சை பின்னுக்கு தள்ளியது சீனா. 2007ல் ஜெர்மனியை முந்தியது. அதேபோல், சர்வதேச அளவிலான பொருளாதார கொள்கைகளை வகுக்கும், 'ஜி-20' நாடுகளின் பட்டியலில் சீனா முக்கிய பங்கு வகிக்கிறது.

முஸ்லிம்களுக்கு துணைத்திட்டம் தேவை: ஐக்கிய ஜனதாதளம்

புதுடெல்லி,ஆக8:ஆதிவாசி மக்களுக்கான துணைத்திட்டம் போல் முஸ்லிம்களுக்கும் துணைத்திட்டம் தேவை என ஐக்கிய ஜனதாதளம் சிபாரிசுச் செய்துள்ளது.முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டைச் சிபாரிசுச் செய்துள்ள ரங்கநாத் மிஷ்ரா கமிஷன் அறிக்கையை செயல்படுத்த வேண்டும் எனவும் ஐக்கிய ஜனதாதளத்தின் தேசிய செயற்குழு கோரியுள்ளது.பீஹாரில் நடைபெறவிருக்கும் சட்டசபைத் தேர்தலின் முன்னோடியாகநிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கூட்டணிக் கட்சியான பா.ஜ.கவைவெறுப்படைய வைத்துள்ளதாக கருதப்படுகிறது.கஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள 370-வது பிரிவுத் தொடர வேண்டும், அம்மாநிலத்திற்கு பூரண சுயாட்சி வழங்கப்பட வேண்டும் எனவும் ஐக்கிய ஜனதாதளக்கட்சியின் செயலாளர் கெ.சி.தியாகி வலியுறுத்தியுள்ளார்.செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

ஆகஸ்ட் 07, 2010

சோனியா, அத்வானி உள்பட 130 பேர் எம்பி நிதியை மக்களுக்கு ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை

டெல்லி,ஆக7:கடந்த ஆண்டு மே மாதம் மன்மோகன்சிங் அரசு இரண்டாம் முறையாக பதவி ஏற்றது. கடந்த ஜுன் மாதத்துடன், 14 மாதங்கள் கடந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி உள்பட 130 எம்.பி.க்கள், தொகுதி நிதியில் ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை என்று பாராளுமன்ற இணையதளத்தை சுட்டிக்காட்டி அரசு சார்பற்ற அமைப்பு கூறியுள்ளது.
நாட்டில் ஏராளமான ஏழைகள் உணவு கிடைக்காமல் பட்டினி கிடந்து உயிர் விடும் நிலையில்,மத்திய அரசின் உணவு கிடங்குகளில் ஏராளமான உணவு தானியங்கள் மழையிலும்,வெயிலிலும் நனைந்து வீணாவதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. அதுபோல,எம்.பி.க்கள் தங்கள் தொகுதியில் நலப்பணிகளுக்கும், மேம்பாட்டு பணிகளுக்கும் செலவிட ஒதுக்கப்பட்ட தொகுதி மேம்பாட்டு நிதி, பயன்படுத்தப்படாமல் வீணாக கிடக்கிறது என்ற அதிர்ச்சியான தகவல் தற்போது வெளியாகி உள்ளது.பாராளுமன்ற இணைய தளத்தை ஆய்வு செய்து ஓர் அரசு சார்பற்ற அமைப்பு இதை கண்டுபிடித்துள்ளது.
ஒவ்வொரு எம்.பி.க்கும் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.2கோடி ஒதுக்கப்படுகிறது. இதை ரூ.3 கோடியாக உயர்த்த வேண்டும் என்று சில எம்.பி.க்கள் போராடி வரும் வேளையில், நூற்றுக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஒரு பைசா கூட இந்த நிதியில் பயன்படுத்தவில்லை.கடந்த ஆண்டு மே மாதம் மன்மோகன்சிங் அரசு இரண்டாம் முறையாக பதவி ஏற்றது. கடந்த ஜுன் மாதத்துடன், 14 மாதங்கள் கடந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி உள்பட 130 எம்.பி.க்கள், தொகுதி நிதியில் ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை என்று பாராளுமன்ற இணையதளத்தை சுட்டிக்காட்டி,அந்த அரசு சார்பற்ற அமைப்பு கூறியுள்ளது.
மத்திய மந்திரிகள் பிரணாப் முகர்ஜி, சி.பி.ஜோஷி, சச்சின் பைலட், பா.ஜனதா மூத்த தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, ஷாநவாஸ் உசேன், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ், ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ், கர்நாடக முன்னாள் முதல்-மந்திரிகள் குமாரசாமி, தரம்சிங் ஆகியோரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.ராஷ்ட்ரீய லோக்தளம் தலைவர் அஜீத்சிங் உள்ளிட்ட 4 பேர், தலா ரூ.1 லட்சமும், ஜெய்பால் ரெட்டி, சசிதரூர் உள்பட 8 பேர் தலா ரூ.2 லட்சமும், மத்திய மந்திரி ஜிதின் பிரசாதா உள்ளிட்ட 9 எம்.பி.க்கள் தலா ரூ.5 லட்சமும் செலவழித்துள்ளனர்.
அதே சமயத்தில்,தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி மு.க.அழகிரி,அதிகமான நிதியை தனது தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு செலவழித்து முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் ரூ.1 கோடியே 24 லட்சத்தை தனது தொகுதிக்காக செலவிட்டுள்ளார்.அவருக்கு அடுத்தபடியாக, சபாநாயகர் மீரா குமார் ரூ.1 கோடியே 19 லட்சமும், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் ரூ.1 கோடியே 9 லட்சமும், மத்திய சட்ட மந்திரி வீரப்ப மொய்லி ரூ.1 கோடியும், மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் ரூ.97 லட்சமும் செலவழித்துள்ளனர்.

ஆகஸ்ட் 05, 2010

ரமலானை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் 724 சிறைக்கைதிகளுக்கு விடுதலை

அபுதாபி,ஆக5:புனித ரமலான் மாதத்தையொட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் 724 சிறைக்கைதிகளை விடுதலைச்செய்ய ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீஃபா பின் செய்யத் அல் நஹ்யான் உத்தரவிட்டுள்ளார்.
அபுதாபி சிறையிலிருந்து 426 பேரும்,இதர சிறைகளிலிருந்து 298 பேரும் விடுதலைச் செய்யப்படுவர்.நீதிமன்றத் தீர்ப்பில் கூறியுள்ள அபராதம் உள்ளிட்ட பணம் தொடர்பானவைகளை தள்ளுபடிச் செய்யவும் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.சிறையிலிருந்து விடுதலைச் செய்யப்படுவோரில் பல்வேறு நாடுகளைச் சார்ந்தோர் அடங்குவர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

அஜ்மீர் மற்றும் மக்கா மஸ்தில் குண்டுவைத்த ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி கைது

புதுடெல்லி,ஆக5:2007-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்திலிலுள்ள அஜ்மீர் தர்காவிலும், ஹைதராபாத்தில் மக்கா மஸ்ஜிதிலும் நடந்த குண்டுவெடிப்புகளில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் ராமச்சந்திர கல்சங்கராவை போலீஸ் கைதுச்செய்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரிலிருந்து மூன்று நாட்கள் முன்பு இவரைக் கைது செய்ததாக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தீப் டாங்கே என்ற பிரேமானந்துடன் இரண்டு இடங்களிலும் வெடிக்குண்டுகளை வைத்தது கல்சங்கரா என்பது ஏற்கனவே கண்டறியப்பட்டிருந்தது. ஏற்கனவே கைதுச்செய்யப்பட்டிருந்த தேவேந்திர குப்தா குண்டு வைத்தது கல்சங்கராதான் என்று வாக்குமூலம் அளித்திருந்தார்.
குப்தா கைது செய்யப்பட்டவுடன் டாங்கேயும்,கல்சங்கராவும் தலைமறைவாகினர். இவர்களை பிடித்துத் தருபவர்களுக்கு சி.பி.ஐ இரண்டு லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
:தேஜஸ் மலையாள நாளிதழ்

ஆகஸ்ட் 04, 2010

சவூதியில் 65 சதவீதம் பெண்கள் பணி புரிகிறார்கள்

ரியாத்,ஆக4:சவூதி அரேபியாவில் பெண்களில் 65 சதவீதம் பேர் பணி புரிகிறார்கள் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பெண்களில் 79 சதவீதம் பேர் கல்வி அறிவுப் பெற்றுள்ளனர். வேலையில்லாத பெண்களில் 78.3 சதவீதம் பேரும் பல்கலைக்கழக மாணவிகளாவர். சவூதியில் பெண்களின் சதவீதம் 45 சதவீதம் ஆகும்.
அஸட் மேனேஜ்மெண்ட் நிறுவனமான அல் மஸஹ் கேப்பிட்டல்தான் இந்த புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது. பெரும்பாலான பெண்கள் பணிபுரிவது அரசுத் துறைகளிலாகும்.
தேசத்தின் சொத்தில் பெரும்பாலும் கையாளுவது பெண்களாகும். 1190 கோடி டாலர் பணம் சவூதியில் பெண்கள் வசமுள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது. பெரும்பாலும் வெறுமனே இருக்கும் இப்பணத்தை சரியான வழியில் பயன்படுத்தினால் பொருளாதாரத் துறையில் பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்த இயலும் என அல் மஸஹ் கேப்பிட்டலின் நிறுவனர் ஷைலேஷ் தாஷ் தெரிவிக்கிறார்.
சொத்து விஷயத்தில் சவூதி பெண்கள் மட்டுமல்ல, மேற்காசியாவின் மொத்த சொத்துக்களின் 22 சதவீதமும் பெண்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.இதில் மேற்காசிய உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

இஸ்லாமிய உடை தொடர்பான மனு மீது நடவடிக்கை எடுக்கும்படி கல்வித்துறைக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

கொச்சி,ஆக4:இஸ்லாமிய முறைப்படி ஆடை அணிய உத்தரவு கோரும் மனு மீது நடவடிக்கை எடுக்கும்படி கேரள கல்வி அமைச்சருக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மலப்புரத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தொழிற்கல்லூரியில் இஸ்லாமிய முறையில் உடை அணிய அனுமதிக்கக்கோரி மனுதாக்கல் செய்திருந்தார். அவர் கல்வி அமைச்சரிடமும் மனு கொடுத்திருந்தார்.
பொறியியல் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று முஸ்லிம் இடஒதுக்கீடு கோட்டாவில் பாலக்காடில் ஒரு கல்லூரியில் சேர்க்கையும் பெற்றிருந்தார். கல்லூரி சீருடை சட்டத்தின்படி இஸ்லாமிய கலாச்சார உடையை அனுமதிக்கமுடியாது என்று கல்லூரி நிர்வாகிகள் கூறியுள்ளனர். உடனே தன்னை வேறு கல்லூரிக்கு மாற்றும்படி அந்த மாணவி கோரினார்.
சில கிறிஸ்தவ பள்ளிகள் முஸ்லிம் மாணவிகளுக்கு முக்காடு அணிய அனுமதி மறுத்ததிலிருந்து இஸ்லாமிய உடையும், முக்காடும் கேரளாவில் பரவலாக பேசப்படுகிறது. இதனைத் தொடர்ந்து முஸ்லிம் மாணவிகள் உயர்நீதிமன்றத்தை அனுகியுள்ளனர்.இவ்விசயத்தில் முஸ்லிம் மாணவிகளின் தனிப்பட்ட மற்றும் சமய உரிமைக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் குரல் கொடுத்துள்ளன.

ஊடகங்கள் முன்னிலையில் ஒபாமாவை விவாதத்திற்கு அழைக்கும்

ஆக4:ஈரான் அதிபர் அஹமதி நிஜாத் அமெரிக்க அதிபர் ஒபாமாவை தன்னுடன் நேருக்கு நேரான தொலைகாட்சி விவாதமொன்றுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அஹமதி நிஜாத் கூறும்போது;"நான் வரும் செம்டெம்பர் மாத இறுதியில் நியூயார்கில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கு செல்லவுள்ளேன் அங்கு பராக் ஒபாமாவை சந்திக்க தயாராகவுள்ளேன் அத்துடன் அவருடன் உலக பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்கவும் உள்ளேன்" என அவர் குறிப்பிட்டார்.
உலகளாவிய ஊடகங்களுக்கு மத்தியில் இவ்விவாதம் நடைபெற வேண்டுமெனவும் யாருடைய விவாதம் அதிகம் ஏற்றுக் கொள்ளப்பட வேஎண்டியது என்பதை பார்க்கவேண்டும்" எனவும் அவர் தெரிவித்தார்.இவ்வாறான பல விவாதத்திற்கான அமைப்புகள் முன்னாள் அமெரிக்க அதிபர்களுக்கும் அஹமதி நிஜாத் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் அவர்கள் அதனை நிராகரித்திருந்தனர்

குர்ஆனை எரிக்கும் திட்டத்திற்கெதிராக அமெரிக்க முஸ்லிம்கள்

வாஷிங்டன்,:உலக வர்த்தக நிறுவனமும், பெண்டகனும் தாக்கப்பட்ட செப்டம்பர் 11 ஆம் தேதி புனித திருக்குர்ஆனின் பிரதிகளை தீவைத்துக் கொழுத்துவதற்கு ஃப்ளோரிடாவிலிலுள்ள கிறிஸ்தவ சர்ச் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க முஸ்லிம்கள் களமிறங்கியுள்ளனர்.கிறிஸ்தவ சர்ச்சின் மோசமான திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக குர்ஆனின் நற்செய்தியை பெரும்பாலான மக்களுக்கு கொண்டுசெல்ல அமெரிக்க இஸ்லாமிக் ரிலேசன்ஸ்(Cair) அமெரிக்க முஸ்லிம்களுக்கு அழைப்புவிடுத்துள்ளது.ரமலான் வருவதைத் தொடர்ந்து இஃப்தார் நிகழ்ச்சிகளை ஏற்பாடுச் செய்து அங்கு முஸ்லிமல்லாதவர்களுக்கு அல்குர்ஆனின் பிரதிகளை அன்பளிப்பாக அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.அத்துடன் சட்ட வல்லுநர்கள்,பத்திரிகையாளர்கள்,அண்டை-அயலார் ஆகியோருக்கு குர்ஆனின் செய்தியை கொண்டு சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது."இஸ்லாம் பீதி" பரப்ப முயலும் திட்டத்திற்கெதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டத்தில் அனைத்து நபர்களும் ஒத்துழைப்பார்கள் என கெய்ரின் தேசிய தகவல் தொடர்பு இயக்குநர் இப்ராஹீம் கூப்பர் தெரிவிக்கிறார்.கெய்ன்ஸ் விலேயில் 'தி டோவ் வேர்ல்ட் அவ்ட்ரீச் செண்டர்' தான் செப்டம்பர் 11 ஆம் தேதி குர்ஆனின் பிரதிகளை எரிப்பதற்கு அழைப்புவிடுத்திருந்தது.இஸ்லாம் ஷைத்தானின் செய்தி என்று ஃப்ளோரிடா சர்ச்சின் பாதிரி டெரி ஜான்சன் என்பவனின் கருத்து. சர்ச்சின் அழைப்பை வாபஸ் பெறவேண்டும் என நேசனல் அசோசியேசன் ஃபார் இவான்ஞ்சலிக்கல்ஸ் (N.A.E) கோரியுள்ளது.செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

ஆகஸ்ட் 03, 2010

திறப்புவிழாவிற்கு தயாராகும் மதுரை பன்னாட்டு விமானநிலையம்

பெருங்குடி : மதுரை பன்னாட்டு விமானநிலைய புதிய டெர்மினல் கட்டடம் திறப்பு விழாவிற்கு தயாராகி வருகிறது.மதுரைக்கு பெரிய ரக விமானம் மற்றும் சரக்கு விமான போக்குவரத்திற்கான வசதி இல்லை. இதனால், வெளிநாட்டு விமான போக்குவரத்திற்கும் வசதி இல்லாமல் இருந்தது. விமானநிலையங்களை விரிவாக்கும் திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாயில், ரன்வே விரிவாக்கும் பணி, பெரிய விமானங்களை நிறுத்த "ஏப்ரன்', பிரச்னைக்குரிய விமானங்களை தனியாக நிறுத்தி சோதனை செய்ய "ஐசோலேடட் பாஸ்' மற்றும் பன்னாட்டு விமானநிலையத்திற்கான புதிய டெர்மினல் கட்டடம் கட்டும் பணிகள் நடந்தன.
டெர்மினல் கட்டட பணி தவிர மற்ற பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகின்றன. புதிய கட்டடத்தில் "சென்சார் சிஸ்டம்' பொருத்தப்பட்டு, பயணிகள் இருப்பதற்கேற்ப செயல்படும் விளக்கு, மின்விசிறி, ஏ.சி., வசதி செய்யப்பட்டு உள்ளன. அறைகளில் புகை, தீ இருந்தால், எச்சரிக்கை மணி அடித்து, தீயணைப்புதுறையை அழைக்கும் "அலார்மிங்' வசதியும் உள்ளது. பத்து நாட்களுக்கு முன் மதுரை வந்த விமானபோக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் படேல், டெர்மினல் கட்டடத்தை பார்வையிட்டார். பின், 15 நாட்களில் திறப்புவிழா நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன்படி, தற்போது பணிகள் முடிந்து, திறப்பு விழாவிற்கு டெர்மினல் கட்டடம் தயாராகி வருகிறது. ஆக.16ல் திறக்கப்படலாம், என எதிர்பார்க்கப்படுகிறது.

117 ஆண்டுகளாக மூடிக்கிடந்த மசூதியில் சிறப்பு தொழுகை

வேலூர் : வேலூர் அருகே, 117 ஆண்டுகள் மூடிக்கிடந்த, 400 ஆண்டு பழமையான மசூதியில், நேற்று முன்தினம் சிறப்பு தொழுகை நடந்தது. வேலூர் மாவட்டம், ஆற்காடு பெரிய அசேன் புறா பைபாஸ் ரோடு, புதிய ரயில்வே மேம்பாலம் அருகே, 400 ஆண்டு பழமையான, "அசரத் சையத் ஷாபித் அலி ஷா' மசூதி உள்ளது. மசூதியை சுற்றியுள்ள 10 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, கடந்த 117 ஆண்டுகளாக, தொழுகை நடத்தப்படாமல் மூடிக் கிடந்தது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக ஆற்காடு நகர நிர்வாகிகள் மற்றும் ஜமாத் நிர்வாகிகள், கடந்த ஒரு மாதமாக, மசூதியை திறந்து தொழுகை நடத்த முயற்சி மேற்கொண்டனர். தனியார் ஆக்கிரமிப்பிலிருந்த மசூதிக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டு, சீரமைப்பு செய்யப்பட்டு, நேற்று முன்தினம் மாலை, சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா பேட்டை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டனர்.

ஆகஸ்ட் 02, 2010

இந்தியா அச்சுறுத்தலாக உள்ளது: அமெரிக்கா தான் எதிரி பாகிஸ்தான் மக்கள் கருத்து

இஸ்லாமாபாத், ஜூலை. 31-

பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக இருப்பது இந்தியாவா? தலிபான்களா? அல்லது அல்கொய்தா தீவிரவாதிகளா? என அந்நாட்டில் உள்ள “பே” (பி.இ.டபிள்யூ) ஆய்வு மையம் கருத்து வாக்கு கெடுப்பு நடத்தியது. அதில் 53 சதவீதம் பேர் அண்டை நாடான இந்தியா பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர். 23 சதவீதம் பேர் தலிபான்கள் என்றும், 3 சதவீதம் பேர் அல்கொய்தா தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் உள்ளது என்றும் கருத்து கூறியுள்ளனர்.

எனவே, இரு நாடுகளுக்கு இடையே உள்ள பதட்டத்தை குறைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தி ஒப்பந்தம் செய்ய வேண்டும். இதன் மூலம் இந்தியாவுடனான வர்த்தகம் பெருகும். நாடு வளர்ச்சி அடையும் என 72 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அமெரிக்கா பற்றிய எண்ணம் பாகிஸ்தான் மக்களிடையே மிகவும் மோசமாக உள்ளது. அமெரிக்காதான் தங்களின் எதிரி என 59 சதவீதம் மக்கள் கருத்து கூறியுள்ளனர். அவர்களில் 8 சத வீதம் பேர் மட்டுமே அதிபர் பராக் ஒபாமா மீது மதிப்பும் நம்பிக்கையும் வைத்துள்ளனர்.

மேலும் ஆப்கானிஸ்தான் மீண்டும் தலிபான்கள் வசமாகி விட்டால் பாகிஸ்தானுக்கு நல்லதல்ல என 25 சதவீதம் பேரும், 18 சதவீதம் பேர் நல்லது என்றும், 57 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்க விரும்ப வில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இக்கருத்தை அமெரிக்காவின் செய்தி தொடர்பாளர் பி.ஜே.கிரவுலி ஒப்புக்கொண்டுள்ளார்.