Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 17, 2014

கடலூர் மாவட்டத்தில் மழையால் மூழ்கிய 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் நாசம்!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், புவனகிரி, பரங்கிபேட்டை, சிதம்பரம் பகுதிகளில் 1 லட்சத்து 37 ஆயிரம் ஏக்கர் நிலம் காவிரி மூலம் பாசனவசதி பெறுகிறது. இந்த ஆண்டு காவிரி ஆற்றில் தண்ணீர் வந்ததை அடுத்து அனைத்து பகுதிகளிலும் சம்பா பயிர் பயிரிடப்பட்டது.

பெரும்பாலும் நேரடி விதைப்பு மூலம் நெல் பயிரிட்டனர். அவை வளர்ந்து வந்த நிலையில் பருவமழை தொடங்கியது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்துபெய்த பலத்த மழையினால் இந்த பகுதியில் பெரும்பாலான நெய்பயிர்கள் நீரில் மூழ்கின. 3 நாட்களுக்கு மேலாக மூழ்கி கிடந்த பயிர்கள் பெரும்பாலும் அழுகிய நிலையில் இருந்தன. இந்த பயிர்களை காப்பாற்ற வேண்டும் என்றால் உடனடியாக யூரியா உரம் போடவேண்டும். அப்போதுதான் பயிர் பச்சைதண்மை ஏற்பட்டு மீண்டும் வளர ஆரம்பிக்கும். ஆனால் கடலூர் மாவட்டத்தில் யூரியா உரம் தட்டுப்பாடு நிலவுகிறது. விவசாய கூட்டுறவு சங்கம் மூலம் குறிப்பிட்ட அளவு மட்டுமே உரம் சப்ளை செய்யப்படுகிறது.

அது போதுமானதாக இல்லை.வெளிகடைகளிலும் யூரியா உரம் கிடைக்கவில்லை. எனவே அழுகிய பயிர்களை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் உரம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளன. உடனடியாக உரம் கிடைக்காவிட்டால் விவசாயிகள் பலத்த நஷ்டத்துக்கு ஆளாவார்கள் என விவசாய சங்க பிரதிநிதிகள்
கூறுகின்றனர். இது தொடர்பாக காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க துணை தலைவர் கண்ணன் பிள்ளை கூறியதாவது:– மழையினால் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியிருந்தது. இதனை காப்பாற்ற தேவையான யூரியா உரம் 10 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு மட்டுமே சப்ளை செய்யப்பட்டுள்ளது.

இந்த உரத்தை உடனடியாக பயன்படுத்தினால் மட்டுமே பயிர்களை காப்பாற்ற முடியும். ஆனால் உரம் கிடைக்கவில்லை. ஆகவே குறைந்தபட்சம் 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் நாசமாகிவிடும் என எதிர்பார்க்கிறோம். தமிழ்நாட்டிலுள்ள 3 உர அலைகள் சமீபத்தில் யூரியா உர்பத்தியை நிறுத்தி விட்டன. இதுதான் உர தட்டுப்பாட்டுக்கு முக்கியமான காரணமாகும். சரியான முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் உரம் தட்டுப்பாட்டை போக்கி பயிர்களை காப்பாற்றியிருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...