Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 31, 2014

நீர் ஆதாரத்தை மேம்படுத்த கடலூர் மாவட்டத்தை என்எல்சி தத்தெடுக்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

கடலூர், : நீர் ஆதாரத்தை மேம்படுத்த கடலூர் மாவட்டத்தை என்எல்சி தத்தெடுக்க வேண்டுமென குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். கடலூர் மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைகளை முன்வைத்து பேசியதாவது: வீராணம் ஏரியை தூர் வார அரசு ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்டும் பணிகள் துவங்கப்படவில்லை. என்எல்சி நிறுவனம் நாளொன்றுக்கு 72 ஆயிரம் கி.லிட்டர் தண்ணீரை உறிஞ்சி எடுக்கிறது. இவ்வாறு வெளியேற்றப்படும் தண்ணீரில் 22 ஆயிரம் ஏக்கர் மட்டுமே பாசன வசதி பெறுகின்றன. என்எல்சி நிறுவனம் கடந்த ஆண்டு ஆயிரத்து 534 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. அதிலிருந்து ரூ ஒரு கோடியே 34 லட்சம் மட்டுமே ராயல்டியாக கலெக்டரிடம் வழங்கப்பட்டு அந்த நிதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடலூர் மாவட்டத்தின் நீர்வளத்தை உறிஞ்சி லாப மீட்டும் என்எல்சி மிகவும் பின்தங்கிய இந்த மாவட்டத்தை தத்தெடுத்து ரூ.50 கோடி மதிப்பீட்டில் தடுப்பணைகள், செயற்கை முறை நீர்செறிவு ஆழ்துளை கிணறுகளை அமைக்க வேண்டும். ஏரிகளை தூர் வாரி நீராதாரத்தை மேம்படுத்த வேண்டும். கொள்ளிடம் ஆறு வழியாக 40 கி.மீ தூரத்திற்கு கடல்நீர் உட்புகுந்து உப்புநீராகி விட்டது. இதனால் 25 ஆயிரம் ஏக்கரில் விவசாயம்
மற்றும் 50 கிராமங்களில் குடிநீர் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக ஆய்வு நடத்தி கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும். இது போல் வெள்ளாற்றிலும் உப்புநீர் உட்புகுவதை தடுக்க தீர்த்தாம்பாளையம், சி.முட்லூர், ஆதிவராகநல்லூர் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டவேண்டும். சிதம்பரம் வட்டத்தில் கான்சாகிப் வாய்க்கால்களை தூர் வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும்.
-தினகரன்


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...