Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 28, 2012

சமுதாய தலைவர்கள் என்ற பெயரால் துரோகமிழைக்கும் தலைவர்கள்!

புதுடெல்லி:கர்ப்பிணியின் வயிற்றில் உள்ள சிசுவை கூட விட்டு வைக்காமல் வயிற்றைக் கிழித்து தீயிலிட்டு பொசுக்கிய சங்க்பரிவார பயங்கரவாதம் குஜராத்தில் கோர தாண்டவமாடிய நிகழ்வை முஸ்லிம்கள் எக்காலத்திலும் மறந்துவிட மாட்டார்கள். இந்திய வரலாறு காணாத இக்கொடிய இனப்படுகொலைக்கு தலைமை தாங்கியவர்தாம் இந்திய தண்டனைச் சட்டத்தின் உச்சபட்ச தண்டனையை பெற மிகப்பொருத்தமான குஜராத் முதல்வர் நரேந்திரமோடி.

 சமுதாய தலைவர்கள் என்ற பெயரால் வைட் காலர் வேடமிட்டு திரியும் சில முஸ்லிம் பெயர் தாங்கி தலைவர்கள் சிலர் அவ்வப்போது மோடிக்கு துதி பாடுவது வழக்கம். அவ்வகையில் 10 முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு என கூறப்படும் அமைப்பான ‘முஸ்லிம் ஆர்கனைசேசன் ஃபார் எம்பவர்மெண்ட்’ டின் சேர்மனாக இருக்கும் செய்யத் ஷஹாபுத்தீன், குஜராத் இனப்படுகொலைக்கு மோடி மன்னிப்புக் கோரினால் தேர்தலில் அவரை ஆதரிப்பது குறித்து பரிசீலிப்போம் என்று எழுதிய கடிதம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 கடந்த நவம்பர் 16-ஆம் தேதி ஷஹாபுத்தீன் 10 முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பான ‘முஸ்லிம் ஆர்கனைசேசன் ஃபார் எம்பவர்மெண்ட்’டின் சேர்மன் என்ற பெயரில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஆனால், இந்த கூட்டமைப்பில் உள்ள முக்கிய அமைப்புகள் ஷஹாபுத்தீனின் தன்னிச்சையான கடிதத்திற்கும் அவரது கருத்திற்கும் மறுப்பு தெரிவித்துள்ளனர். இத்தகையதொரு விவகாரம் குறித்து தங்களிடம் ஷஹாபுத்தீன் விவாதிக்கவில்லை என்றும், அவருடைய நிலைப்பாட்டை அங்கீகரிக்க இயலாது என்றும் ஜம்மியத் உலமாயே ஹிந்த் தலைவர் மவ்லானா அர்ஷத் மதனி கூறியுள்ளார். மோடி மன்னிப்புக் கோருவதல்ல, நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என்று ஜமாஅத்தே இஸ்லாமியின் பொலிட்டிக்கல் செயலாளர் முஹம்மது அஹ்மத் கூறியுள்ளார். ஷஹாபுத்தீனின் தலைமையிலான இந்த கூட்டமைப்பு தற்போது இயங்கவில்லை என்றும், அவர் கூறியது அவரது தனிப்பட்ட

நவம்பர் 27, 2012

நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் கொடுக்கும் திட்டம்:மத்திய அரசு பரிசீலனை

புதுடெல்லி, நவ 27-2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக எல்லா தரப்பு மக்களிடமும் ஆதரவை பெறும் வகையில், மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. ஏழை மக்கள் வேலை வாய்ப்பை பெறும் உரிமையை நிலைநாட்ட, தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் உள்ளது. அதுபோல் நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் கொடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஏழை மக்களில் கணிசமானவர்களுக்கு சொந்த நிலம் என்பது இல்லை. அவர்கள் ஒரு ஏக்கரில் 10-ல் ஒரு பங்கு நிலமாவது வாங்கும் வகையில் நிதி உதவி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 நிலம் பெறும் உரிமையை சட்டப்பூர்வமாகவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இன்னும் 6 மாதத்தில் இதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏழைகள் நிலம் பெறுவதை சட்டப்பூர்வமாக உரிமையாக்க வேண்டும் என்பதில் தேசிய ஆலோசனைக் குழு தலைவரும், காங்கிரஸ் தலைவருமான சோனியா தீவிரமாக உள்ளார். ஏழைகள் நிலம் வாங்குவதற்கு வசதியாக தலா ரூ.20 ஆயிரம் கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய அரசு தனிக்குழுவை உருவாக்கி உள்ளது. அந்த குழுவில் மத்திய அமைச்சர்கள் ஜெய்ராம் ரமேஷ், கிஷோர் சந்திரதேவ் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். பிறகு மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

 உலகில் எந்த ஒரு நாடும் ஏழைகளுக்கு இப்படி நிலம் கொடுக்கும் திட்டத்தை இதுவரை செயல்படுத்தவில்லை. நிலம்பெறும் உரிமையை இதுவரை எந்த நாடும் சட்டமாக்கவும் இல்லை. இந்தியாவில் நிலம் தொடர்பான அனைத்து உரிமைகளும் மாநில அரசுகளிடமே

மின்வெட்டு:தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தினமும் எத்தனை மணி நேரம் மின்சார விநியோகம் தடை செய்யப்படுகிறது என்பது குறித்த விரிவான அறிக்கையை தமிழ்நாடு மின்சார வாரியம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை அசோக் நகரைச் சேர்ந்த குடிமக்கள் பாதுகாவலர்கள் அமைப்பின் தலைவர் வி. ரவிச்சந்திரன் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். சென்னை மாநகரிலும் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் அடிக்கடி மின்சார விநியோகம் தடை செய்யப்படுகிறது. மின்சாரம் வழங்கப்படும் நேரத்திலும்கூட மின் அழுத்தம் குறைவாகவே உள்ளது.

இதனால் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் வசிக்கும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, இப்பிரச்னையில் நீதிமன்றம் உடனடியாகத் தலையிட வேண்டும். மாநிலத்தில் தேவையான அளவில் துணை மின் நிலையங்களை தொடங்குவது உள்பட மின்சார விநியோகத்துக்கான வலிமையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும்படி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் ரவிச்சந்திரன் கோரியுள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வு முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

 அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மாநிலத்தின் பல மாவட்டங்களில் தினமும் சில மணி நேரத்துக்கு மட்டுமே மின்சாரம் வழங்கப்படுவதாகவும், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தினமும் 12 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் தடை செய்யப்படுவதாகவும் எங்களது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் தினமும் எத்தனை மணி நேரத்துக்கு மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்பது பற்றிய விரிவான அறிக்கையை தமிழ்நாடு மின்சார வாரியம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் நேரங்கள்

நவம்பர் 25, 2012

ராணுவத்தில் தொழில்நுட்ப வேலை!

ஏதேனும் ஒருபட்டப் படிப்பு முடித்துவிட்டு பாதுகாப்புப் படையில் பணிபுரிய வேண்டும்என்ற ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை அள்ளித் தருகிறது இந்தியராணுவம். டெக்னிக்கல் பிரிவு, ஆர்மி எஜுக்கேஷன், மிலிட்டரி ஃபார்ம் என்ற மூன்று பிரிவுகளின்கீழ் தகுதியுடைய பட்டதாரிகள் பணியமர்த்தப்படுகிறார்கள். டெக்னிக்கல் பிரிவின்கீழ் சிவில் (மைனிங்மற்றும் கன்ஸ்ட்ரக்‌ஷன் உள்பட), எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், புரடக்‌ஷன்(மேனுபேக்ச்சரிங் உள்பட), எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிக்கேஷன், ஆர்க்கிடெக்சர், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங், பயோ டெக்னாலஜி, ஃபுட் டெக்னாலஜி, பயோ மெடிக்கல் என்ஜினீயரிங், கெமிக்கல் என்ஜினீயரிங்போன்ற பிரிவுகளின்கீழ் உள்ள காலிப்பணியிடங்களில் பணியாற்ற, அந்தத்துறைகளில் பி.இ., பி.டெக்., பட்டம் பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 20 வயதிலிருந்து 27 வயது வரை இருக்கவேண்டும்.

 இறுதியாண்டு பொறியியல் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களும்விண்ணப்பிக்கலாம். மிலிட்டரி டிரெய்னிங் டைரக்டரேட்டின்கீழ்செயல்படும் ஆண்களுக்கான ஆர்மி எஜுக்கேஷன் கார்ப்ஸில் பணிபுரிய ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு, இசை, புவியியல், அரசியல் அறிவியல் போன்ற பாடங்களில்எம்.ஏ., படித்தவர்களும் இயற்பியல் மற்றும் கணிதப் பாடங்களில் முதுநிலைபட்டப் படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கவிரும்புபவர்கள் 23 வயதிலிருந்து 27 வயது வரை இருக்க வேண்டும். ராணுவ வீரர்களுக்கு விநியோகிக்கப்படும்பால், காய்கறி, அரிசி போன்றவை ராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும்ராணுவ தோட்டம் மற்றும் அங்கு வளர்க்கப்படும் கால்நடைகளில் இருந்தேபெறப்படுகிறது. ராணுவத்தின் மிக முக்கிய அங்கமாகச் செயல்படும் இந்த ஆர்மிஃபார்ம் பிரிவில் பணியாற்ற டெரி மற்றும் வேளாண்மையில் பட்டப் படிப்புபடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 20 வயதிலிருந்து 27 வயது வரை இருக்க வேண்டும்.

 இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்குஉளவியல் திறனறித் தேர்வு (சைக்காலஜிக்கல் ஆப்டிட்யூட் டெஸ்ட்) அலகாபாத், போபால் மற்றும் பெங்களூரு மையங்களில் நடத்தப்படும். அதைத் தொடர்ந்துமருத்துவப் பரிசோதனை இருக்கும். இந்தப் பணிகளில் சேர விண்ணப்பிக்கவிரும்புபவர்கள், தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமே அனுப்ப வேண்டும்.ஆன்லைன் மூலம் அனுப்பிய விண்ணப்பத்தை இரண்டு பிரிண்ட் அவுட்

இந்திய வரலாற்றில் முதன்முறையாக உளவுதுறை தலைவராக ஒரு முஸ்லிம் நியமனம்!

மத்திய உளவுத்துறையின் தலைவராக நெஹ்சல் சந்து பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த மாதம் 31-ந்தேதியடன் முடிவடைகிறது. இதனையொட்டி உளவுத்துறைக்கு புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில் மத்திய உள்துறை அமைச்சகம் முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக பதவி மூப்பு பட்டியலில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகள் பற்றிய அனுபவ விபரங்களை உள்துறை ஆய்வு செய்தது. இதன் அடிப்படையில் 1977-ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான ஆசிப் இப்ராகீம் பெயரை உளவுத்துறை தலைவர் பதவிக்கு மத்திய அரசு பரிசீலித்து வருவதாக உளவுத்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.

பதவி மூப்பு வரிசையில் 1976-ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த ஆர்.என். குப்தா, ஒருங்கிணைந்த உளவுப் பிரிவு கமிட்டிக்கும், ராஜ்கோபால் தேசிய போலீஸ் கழக இயக்குனராகவும் பதவி உயர்வுடன் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், மூன்றாம் இடத்தில் உள்ள ஆசிப் இப்ராகீம் உளவுப்பிரிவின் புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இவரது பெயர் பிரதமர் தலைமையிலான பணி நியமன கமிட்டியால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 1977 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பேட்ச்சைச் சேர்ந்த ஆசிப் இப்ராகீம் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக உளவுப்பிரிவில் உள்ள பல்வேறு நிலைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். இதனால் இவரை உளவுப்பிரிவின் புதிய தலைவராக

நவம்பர் 24, 2012

தொடர் மின்வெட்டால் இண்டர்நெட் மையங்கள் முடங்கியது

கடலூர், :கடலூர் மாவட்டத்தில் மின்வெட்டு காரணமாக நவீன உலகின் வழிகாட்டியாக உள்ள இண்டர்நெட் மையங்கள் நொந்து போயுள்ளது. கட்டணமும் உயர்வு கண்டுள்ளது. உலகின் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து தரப்பு வளர்ச்சியில் கம்ப்யூட்டர் பயன்பாடு அனைத்து துறைகளிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து இண்டர்நெட் வசதி இன்றியமையா தேவையாக மாறியுள்ளது. கல்வி, வர்த்தகம், தகவல் தொடர்பு உள்ளிட்ட அனைத்து சேவையும் இண்டர்நெட் வசதி மூலம் உலகே நம் கையில் இருக்கும் வகையில் கம்ப்யூட்டர் உலகம் மாற்றியுள்ளது. மேலும் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் மின்வெட்டு இந்த தரப்பையும் நொந்து போக செய்துள்ளது.

கம்ப்யூட்டர், லேப்-டாப் வைத்திருப்பவர்கள் ஏராளமானோர் இண்டர்நெட் வசதி வைத்துள்ளனர். இவை தவிர நகர்புறங்களில் இண்டர்நெட் மையங்கள் செயல்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் சுமார் 300 இண்டர்நெட் மையங்கள் செயல்படுகிறது. பெரும்பாலும் பகல் நேரங்களில் இயக்கத்தில் இருக்கும் இந்த மையங்களில் மின்வெட்டின் காரணமாக செயல்பாடு முடங்கியுள்ளது. 70 சதவீத மையங்களில் மின்சாரம் இல்லாத போது அறிவிப்பில்லாத விடுமுறையாக மூடப்படுகிறது. வீட்டிலும் மின்வெட்டால் இண்டர் நெட் சேவையை பெறமுடியாமல் நெட் சென்டர்களுக்கு படையெடுக்கும் மாணவர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டவர்கள் எண்ணிக்கை கூடி வருகிறது. இதையடுத்து ஜெனரேட்டர் மூலம் சில இண்டர்நெட் மையங்கள் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கேற்ப வாடிக்கையாளர்களிடம் பயன்பாட்டிற்கான கட்டணம் கடலூரில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.20ல் இருந்து தற்போது ரூ.30 ஆக உயர்ந்துள்ளது.

 இது குறித்து கடலூரில் உள்ள இண்டர்நெட் மைய உரிமையாளர் குமாரிடம் கேட்ட போது, காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை நெட் சென்டர் இயங்கும். இந்த நேரத்தில் தற்போது 6 மணி நேரம் மட்டுமே மின்சாரம் இருக்கிறது. இதனால் ஜெனரேட்டர் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு நாள்தோறும் சுமார் ரூ.500 வரை கூடுதல் செலவாகிறது. இதனை

பத்து ரூபாய் நோட்டுக்கு பதிலாக நாணயம்: மத்திய அரசு தகவல்

புதுடில்லி: நாட்டில், புழக்கத்தில் உள்ள, 10 ரூபாய் நோட்டுகளை, படிப்படியாக நாணயங்களாக மாற்ற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது என, மத்திய நிதி துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா பார்லிமென்டில் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது: பத்து ரூபாய் தாளின் சராசரி ஆயுள் காலம், 9 - 10 மாதங்கள் என்ற அளவிற்கே உள்ளது. மேலும், ஒரு தாளை அச்சிட சராசரியாக 96 காசு செலவாகிறது.குறுகிய காலத்தில் அழிந்து விடக் கூடிய, 10 ரூபாய் தாளை தொடர்ந்து அச்சிடுவதால் செலவு கூடுகிறது. இச்செலவினத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், நீண்ட கால அடிப்படையில், 10 ரூபாய் தாளுக்கு பதிலாக, நாணயத்தை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில்,கடந்த 2009ம் ஆண்டு 10 ரூபாய் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, 10 ரூபாய் நாணயம் ஒன்றை தயாரிப்பதற்கான செலவு 6.10 ரூபாயாக உள்ளது. உள் நாட்டு கரன்சிகளில், குறிப்பாக சிறிய மதிப்பிலான ரூபாய் நோட்டுகளின் ஆயுள் காலத்தை நீட்டிப்பதற்கான, வழிவகைகள் ஆராயப்பட்டு வருகின்றன.இதன்படி, சோதனை அடிப்படையில், தலா, 10 ரூபாய் மதிப்பு கொண்ட 10 லட்சம் பிளாஸ்டிக் கரன்சிகளை வெளியிடுவதென்று மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தீர்மானித்துள்ளன. இவ்வாறு நமோ நாராயண் மீனா தெரிவித்தார். மற்றொரு கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பதில் அளிக்கையில், "கரன்சிகளை அச்சிடுவதில் இந்தியா தன்னிறைவு கண்டுள்ளது. நாட்டின் மொத்த தேவையான 1,760 கோடி கரன்சிகள், நான்கு அச்சகங்களில் அச்சிடப்படுகின்றன' என்று தெரிவித்தார்.

நாட்டில் கள்ளநோட்டு புழக்கம் குறித்து, உறுதிப்படுத்தப்பட்ட மதிப்பீடு ஏதுமில்லை. எனினும், கள்ளநோட்டை புழக்கத்தில் விடும் கொடிய செயல்பாடுகளை வேரறுக்க, மத்திய, மாநில அரசுகளும், பல்வேறு அமைப்புகளும்

நவம்பர் 22, 2012

அஜ்மல் கஸாபுக்கு தூக்கு: காங்கிரஸ் அரசின் அரசியல் ஆதாயம்!

மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டு தூக்குத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட அஜ்மல் கஸாபை அவசர அவசரமாக தூக்கிலிடப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் காங். தலைமையிலான ஐ.மு அரசின் அரசியல் ஆதாயங்கள் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். நவம்பர்26-ஆம் தேதி மும்பை தாக்குதல் நிகழ்ந்து 4 ஆண்டுகள் நிறைவுறும் வேளைக்கு முன்பாகவே இத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் துவங்கவிருக்கும் வேளையில், கஸாபிற்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதில் காங். தலைமையிலான ஐ.மு அரசு தாமதம் செய்கிறது என்ற குற்றச்சாட்டை பா.ஜ.க எழுப்பவிருந்தது.

 மேலும் எஃப்.டி.ஐ(சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு) உள்ளிட்ட விவகாரங்களில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவும் கசாபை அவசரமாக தூக்கிலிட காங். அரசு திட்டமிட்டிருக்கலாம். பொருளாதா சீர்திருத்தங்களின் பெயரால் சாதாரண மக்களிடையே நம்பிக்கையை இழந்து நிற்கும் காங். தலைமையிலான ஐ.மு அரசுக்கு வரவிருக்கும் பல்வேறு மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களும், பாராளுமன்ற தேர்தலும் கடுமையான சவால்களாக உள்ளன. குஜராத் மாநில தேர்தல் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் சூழலில் கஸாபை தூக்கிலிட்டது ஆதரவான சூழலை உருவாக்கும் என்று காங்கிரஸ் அரசு கணித்தது. கஸாபைத் தொடர்ந்து அஃப்ஸல் குருவை தூக்கிலிடும் விவகாரத்திலும் தீர்மானம் எடுக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறியிருந்தது தேர்தலை எதிர்நோக்கியே ஆகும். முன்பு எப்பொழுதும் இல்லாத நிகழ்வாக குடியரசு தலைவர் 20 தினங்களுக்குள் அஜ்மல் கஸாபின் மரணத்தண்டனையை குறைக்கக் கோரும் கருணை மனுவை நிராகரித்து தீர்மானம் எடுத்துள்ளார்.

மேலும் அரசும் குடியரசு தலைவர் கருணை மனுவை நிராகரித்தவுடன் தூக்குத் தண்டனையை ரகசியமாகவும், அவசர அவசரமாகவும் நிறைவேற்றியுள்ளது. கஸாப் உள்ளிட்டவர்களின் 11 கருணை மனுக்கள் குடியரசு தலைவரின் பரிசீலனைக்காக காத்திருந்தன. ஆனால், அதில் கடைசியில் அளிக்கப்பட்ட கருணை மனு மீது குடியரசு தலைவர் முடிவு எடுத்துள்ளார். அக்டோபர் 16-ஆம் தேதி கஸாபின் கருணை மனு குடியரசு தலைவரின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் கருணை மனுக்களை

பால்தாக்கரேயின் மரணமும், ஊடகங்களின் குருட்டுப் பார்வையும்!

நவ, 21: மதவெறி மற்றும் ஊர்வெறியை மும்பை மக்கள் மத்தியில் தூண்டிவிட்டு, நாட்டைத் துண்டாடி அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த இந்திய நாட்டில் இரத்த ஆறு ஓட்டி பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது உயிர்களையும், உடைமைகளையும் இழக்கக் காரணமாக இருந்தவர் மதவெறி பிடித்த சிவசேனா கட்சியின் தலைவர் பால்தாக்கரே. இவர் கடந்த 17.11.12 அன்று மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் மரணமடைந்ததுதான் தாமதம் இவரை ஒரு மிகப்பெரிய தேசத் தியாகியைப் போலவும், இவரைப்போல நாட்டின் மீதும், நாட்டு மக்கள் மீதும் அளவுக்கதிகமான அக்கரை கொண்ட தன்னிகரில்லாத தலைவர் யாருமில்லை என்பது போலவும் ஊடகங்கள் படம் காட்டி பில்டப் கொடுத்தனர்.  

 பால்தாக்கரே என்ற இவர் தலைமையேற்று நடத்திய கலவரங்கள் கொஞ்ச நஞ்சமா?அதையெல்லாம் இந்த ஊடகங்கள் மறந்துவிட்டனவா?   மண்ணின் மைந்தர்கள் கோசத்தை முன்வைத்து, “மும்பையில் பிறந்தவர்களுக்குத்தான் மும்பை சொந்தம்” என்ற ஊர் வெறி கோசத்தை முன்வைத்து, மும்பையில் வாழ்ந்த பிற மாநில மக்கள் மீது தாக்குதல் நடத்தி சிவசேனா பால்தாக்கரே நடத்திய கலவரங்களையும், அந்த கட்சியின் தீவிரவாதத் தொண்டர்கள் தமிழர்களுடைய சொத்துக்களை சூறையாடியதையும், அதனால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் மும்பையை விட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று தமிழ்நாட்டிற்கு ஓடி வந்ததும் இந்த ஊடகங்களுக்குத் தெரியாதா?   1993ஆம் ஆண்டு இவர் தூண்டிவிட்டதன் அடிப்படையில் மும்பையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டார்களே! அந்த கோர சம்பவங்கள்தான் இவர் செய்த தேசத் தியாகமா? அதனால்தான் இவருக்கு தேசியக்கொடி போர்த்தி மரியாதையா?   பாபர் மஸ்ஜித் இடிப்பை தொடந்து நடைபெற்ற மும்பை கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். முஸ்லிம்களின் நிறுவனங்களும் சொத்துக்களும் சூறையாடப்பட்டன .

 மும்பை கலவரம் குறித்து விசாரணை நடத்திய கிருஷ்ணா கமிஷன்,கலவரத்திற்கு காரணம் பால்தாக்கரே என்றும் கூறி அவரை கைது செய்ய வேண்டும் என்று தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். ஆனால் தன்னை கைது செய்தால் மும்பை நகரம் பற்றி எரியும் என்று இவர் மிரட்டினாரே! இப்படி காவல்துறைக்கும் நீதிமன்றத்திற்கும் சவால் விட்டதால்தான் இவருக்கு குண்டுகள் முழங்க அரசு மரியாதையா?   பத்திரிக்கையாளர்களை தாக்கி தீவிரவாதத்தை வெளிக்காட்டிய பால்தாக்கரேயின் தீவிரவாத முகம் அதற்குள்ளாகவா ஊடகங்களுக்கு மறந்துவிட்டது?   மும்பைக்கு பிழைப்புக்காக வந்த பீகார்காரர்களையும், வட மாநிலத்தவர்களையும் உங்கள் நாட்டுக்கு ஓடுங்கள் என்று கூறி விரட்டிவிரட்டி அடித்தார்களே சிவசேனா தீவிரவாதிகள். ஒரு ஆட்டோ டிரைவர் கூட பிற மாநிலத்தவராக இருந்தால் இங்கு இருக்கக்கூடாது என்று இந்திய அரசியல் அமைப்பு சாசனச்சட்டத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய இவர்தான் ஊடகங்களின் பார்வையில் தேசத்தியாகியா?   மும்பையின் முதலாளிகளை அன்ன தாதாக்கள் என்றும், தென்னிந்தியர்களை லுங்கிவாலாக்கள்,கிரிமினல்கள், குண்டர்கள், சூதாடிகள் என்றும் கூறி மும்பை நகரத்தில் கூட்டம், கூட்டமாக நகரை விட்டு தென்னிந்தியர்களை கருவறுத்ததால்தான் தமிழகத்து ஊடகங்கள் இவருக்கு பாராட்டு மழை பொழிகின்றனவா? இப்படி நூற்றுக்கணக்கான

நவம்பர் 21, 2012

அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டார்: புனே ஜெயிலில் தண்டனை நிறைவேற்றம் !

மும்பை: மும்பை தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டஅஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். அவருடைய கருணை மனுவை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்ததை அடுத்து தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான்.

மும்பை சிறையில் அடைக்கப்பட்ட கசாப்புக்கு தூக்குத்தண்டனை விதித்து, மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. இந்தநிலையில், கசாப் தரப்பில் கடந்த செப்டம்பர் மாதம் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை மகாராஷ்டிர அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்தது. மேலும், கசாப்பின் கருணை மனுவை தள்ளுபடி செய்யும்படி, ஜனாதிபதிக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் கசாப்பின் கருணை மனுவை ஜனாதிபதி பிராணாப் முகர்ஜியும் நிராகரித்தார். இதனையடுத்து , புனேயில் உள்ள எரவாடா சிறையில் இன்று காலை 7.30 மணிக்கு கசாப்பிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த தகவலை

வடவாற்றின் கரையை சீரமைக்க கோரிக்கை

காட்டுமன்னார்கோவில், : காட்டுமன்னார்கோவிலில் உள்ள வடவாற்றின் இரு கரைகளும் பலமிழந்து காணப்படுகிறது. இரு கரைகளிலும் சுமார் 25 கிராமங்கள் உள்ளது. வடவாற்றின் தென்கரையில் சாலைகள் மோசமடைந்து உள்ளது. பொதுமக்கள் மிகுந்த சிரமங்களுக்கு இடையே இந்த கரை சாலையை பயன்படுத்தி வருகின்றனர். வடக்கு கரை பகுதி மிகவும் மோசமடைந்து முள் புதர்கள் மண்டி பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு மிகவும் மோசமாக உள்ளது.

கடந்த ஆட்சியில் இந்த சாலை காட்டுமன்னார்கோவிலில் இருந்து கஞ்சங்கொல்லை வரை செம்மண் சாலை போடப் பட்டு பொதுமக்கள் பயன்படுத்தினர். தற்போது சாலை மிகவும் மோசமடைந்த நிலையில் உள்ளது. ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் இக்கரையில் மயான கொட் டகை உள்ளது. ஊராட்சி தலைவர்கள் மயான கொட்டகை செல்லும் வரை மட்டுமே சாலையை சீரமைக்கின்றனர். மீதமுள்ள சாலைகள் மோசமடைந்து உள்ளது. இச்சாலையை சீரமைத்து

நவம்பர் 20, 2012

பற்றி எரியும் காசா , இஸ்ரேலுக்க பக்கபலமாக செயல்படும் அமெரிக்கா!


கடந்த 6 நாட்களாக பாலஸ்தீன நாட்டின் காசா பகுதி மக்கள் மீது இஸ்ரேன் ராணுவம் குண்டு வீசி கொடூரமாண தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இதனால் காசா பகுதி எங்கும் தீ பற்றி எரிகின்றது.
பலியாகும் குழந்தைகள் அப்பாவி பொதுமக்கள்
ராக்கிட்டுகளை ஏவி அப்பாவி முஸ்லிம் மக்களை கொன்று குவித்து வருகின்றது. வீட்டில் துங்கிக் கொண்டிருந்தவர்கள், வாகனத்தில் குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தவர்கள் , கடை தெருவில் நின்று கொண்டிருந்தவர்கள் என அப்பாவி பொதுமக்கள் இதில் கொள்ளப்பட்டுவருகின்றனர்.
இன்று மதியம் வரை இஸ்ரேலின் தாக்குதலுக்கு 108 111 (செய்தியை எழுதி முடிப்பதற்குள் மேலும் 3 நபர்கள் கொள்ளப்பட்டுவிட்டனர்) நபர்கள் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதில் 27 பேர் பிஞ்சு குழந்தைகள் கொள்ளப்பட்டுள்ளனர் என்பது இஸ்ரேலின் அரக்க குணத்தையும் கொடூர பயங்கராவாத்தையும் காண்பிக்கின்றது. மேலும் இந்த தாக்குததில் 720 க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
பக்கபலமாக செயல்படும் ஒபாமாவின் அமெரிக்க அரசு
முஸ்லிம்களின் மீதனா இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு பின்னால் ஒபாமாவின் அமெரிக்க அரசு பக்க பலமாக உள்ளது என்பது தற்போது தெரியவந்துள்ளது.
   அமெரிக்க தேர்தல்
கடந்த 2008 ஆம் ஆண்டு ஒபாமா வெற்றி பெற்றதும் தான் பயங்கரவாதி இஸ்ரேல் இதே போன்று காசா மீது தாக்குதல் நடத்தியது. இதில் 1400 அப்பாவி மக்கள் கொள்ளப்பட்டனர்.
தற்போதும் அதே போன்று ஒபாமா 2 வது முறையாக வெற்றி பெற்றதும் இஸ்ரேல் தாக்குதலை துவங்கியுள்ளது.
   இஸ்ரேலின் பாதுகாப்பு வளயத்திற்கு அமெரிக்கா நிதி
இஸ்ரேல் தனது நாட்டை பாதுக்காத்து கொள்ள ”Iron Dome rocket-defense system” என்ற பாதுகாப்பு வளையத்தை வானில் உருவாக்கி வைத்துள்ளது. ராக்கிட்டுகள் தாக்கினாலும் அதை இந்த Iron Dome தடுத்து விடும். இஸ்ரேல் நாட்டின் முக்கிய நகரங்களில் இது தற்போது வானில் நிறுவப்பட்டுள்ளது.
விசயம் என்னவெனில் இதை உருவாக்க ஒபாமா அரசு தான் பொருளதார உதவி செய்துள்ளது கடந்த 2010 ஆண்டும் இந்த ஆண்டும் சேர்த்து மொத்ததம் 275 மில்லியன் டாலரை (ஒரு மில்லியன் டாலர் என்பது கிட்ட தட்ட 5.5 கோடி இந்திய ரூபாய்) இந்த பாதுகாப்பு வளையத்தை உருவாக்க ஒபாமா அரசு கொடுத்துள்ளது.
தற்போது இஸ்ரெலின் கொடூரமாண தாக்குதலுக்கு இந்த பாதுகாப்பு வளையம்

மாவட்டம் முழுவதும் மகளிர் பேருந்துகளை இயக்க எஸ்பியிடம் வலியுறுத்தல்

கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்டவர்களின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு மகளிர் பேருந்து இயக்குவதுடன் கண் காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட எஸ்பியிடம் பாமக தரப்பில் நேரில் வலியுறுத்தப்பட்டது. கடலூர் மாவட்ட முதல் பெண் எஸ்பியாக பொறுப்பேற்றுள்ள ராதிகாவை பாமக  நிர்வாகிகள் நேரில் சந்தித்து பேசினர் அப்போது .

மாவட்டம் முழு வதும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. கிண்டல், கேலி என ரவுடிகளின் பிடியில் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே மாவட்டம் முழுவதும் மகளிர் பேருந்துகள் இயக்குவதுடன், பேருந்து நிலையம், பொது இடங்களில் போலீசார் கண்காணிப்பு தீவிரப் படுத்த வேண்டும். இதற்காக தனி போலீஸ் குழு அமைக்க வேண்டும் வேண்டும் என கூறி உள்ளனர்.

உலக பயங்ரகவாதி இஸ்ரேலுக்கு எதிராக சைபர் யுத்தம்!


உலக பயங்ரகவாதி இஸ்ரேல் கடந்த புதன் கிழமையிலிருந்து பாலஸ்தீன நாட்டில் காசா பகுதிகளில் ராக்கட்டுகள் மூலம் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றது.
பிஞ்சு குழுந்தைகள், பெண்கள், அப்பாவி மக்கள் உள்பட பல பாலஸ்தீன பொதுமக்கள் இதில் கொள்ளப்பட்டு வருகின்றனர்.

இன்று காலையில் கூட காரில் சென்ற 3 நபர்கள் பயங்ரமாக கொள்ளப்பட்டுள்ளனர்.

இன்று (19-11-2012) காலை இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்
பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக சைபர் யுத்தம் ஆரம்பமாகியுள்ளது.  இஸ்ரேல் நாட்டின் 663  இணையதளங்கள் hack செய்யப்பட்டுள்ளனது.
hack செய்யப்பட்ட இணையதள பட்டியல்
அநியாமான இஸ்ரேலின் தாக்குதல்கள் பாலஸ்தீன மக்கள் மீது தொடர்ந்தால் இஸ்ரேல் நாட்டின் அரசு பெரும் பாதிப்பை சந்திக்கும் இது சாம்பில் தான் என hacker ல் அறிவி்ப்பு விடுத்துள்ளனர்.
Anonymous என்ற hacking குருப் இதை செய்து வருகின்றது.இஸ்ரேலின் மிகப் பெரும் வங்கியாக இருக்கும் ஜெருசெலத்தில் உள்ள பேங்கின் இணையதளத்தை முடிக்கி அதன் database களை அளித்துள்ளது.
இது குறித்து இஸ்ரேல் நாட்டி நிதி அமைச்சர் Yuval Steinitz கூறுகையில்,
44 மில்லன் hacking attack-கள் அரசு இணையதளம் உள்பட இஸ்ரேல் நாட்டி பல முக்கிய இணையதளங்களுக்கு வந்து கொண்டிருக்கின்றது. அரசு இணையதளம் ஒன்றும் இதில் hack செய்யப்பட்

நவம்பர் 19, 2012

ஹமாஸின் அதிரடி ராக்கெட் இஸ்ரேல் தலைநகரை தாக்கியது !

ஃபலஸ்தீன் போராட்ட வரலாற்றில் முக்கிய தினமாக கடந்த வியாழன்(15/11/2012) அமைந்தது. ஃபலஸ்தீன் போராளிகளின் தீரமிக்க நாயகன் அஹ்மத் ஜஃபரி கடந்த புதன்கிழமை சியோனிச பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டார். அவரது இரத்தக்கறை உலரும் முன்னரே பதிலடிக்கொடுத்தது ஹமாஸின் ராணுவ பிரிவான இஸ்ஸத ்தீன் அல் கஸ்ஸாம். ஹிஜாரத்துஸ்ஸிஜ்ஜீல் என்ற பதிலடித் தாக்குதலில் ராக்கெட்டுகள் சரமாரியாக இஸ்ரேலின் தலைநகரான டெல் அவீவை தாக்கின. டெல் அவீவின் இதய பகுதியை ஃபலஸ்தீன் போராளிகளின் ராக்கெட்டுகள் தாக்கும் என்பதை இஸ்ரேல் மக்களோ, அரசோ கனவில் கூட எண்ணவில்லை.

நேற்று(16/11/2012) 300க்கும் மேற்பட்ட ராக்கெட்டுக்களை அல் கஸ்ஸாம் இஸ்ரேல் மீது ஏவுயுள்ளது. இதில் நான்குபேர் கொல்லப்பட்டுள்ளனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். ஒரு உளவு விமானம் வீழ்த்தப்பட்டுள்ளது என்பது அங்கிருந்து வரும் செய்தியாகும். தாங்கள் பாதுகாப்பானவர்கள் என்பது அண்மைக்காலமாக இஸ்ரேல் மக்கள் கருதியிருந்தனர். அமெரிக்க-மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெற்ற எங்களை ஏழ்மையில் வாடும் ஃபலஸ்தீனர்களின் எதிர்ப்புப் போராட்டம் என்ன செய்துவிடும்? என்று மனப்பால் குடித்தனர். ஆக்கிரமிப்பு அரசான இஸ்ரேல் உருவாகி 64 ஆண்டுகள் நிறைவுறுகின்றன. அதனிடையில் கடந்த 40 ஆண்டுகளாக டெல் அவீவை ஒரு ராக்கெட் கூட தொட்டதில்லை. ஆனால், தற்போது வரலாறு திசை திரும்பியுள்ளது. அல் கஸ்ஸாமின் ராக்கெட்டுகள் டெல் அவீவின் நெஞ்சை பிளந்துள்ளது. கடந்த சில பத்தாண்டுகளுக்கு பிறகு டெல் அவீவில் முதன் முதலாக அபாயமணி முழங்கியுள்ளது. ஃபலஸ்தீன் எதிர்ப்புப் போராட்ட போராளிகளின் ராக்கெட்டுகள் தங்களின் இதய பகுதியில் தாக்கியதால் ஏற்பட்ட மரண ஓலத்தின் அதிகாரப்பூர்வ குரலாக

ஆன்லைன் தேர்வு முறை - TNPSC அறிவிப்பு.

போட்டித்தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிடவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் ஆன்லைன் தேர்வுமுறையை டி.என்.பி.எஸ்.சி. அறிமுகப்படுத்த உள்ளது. முதல்கட்டமாக, தோட்டக்கலை அதிகாரி, உதவி பொறியாளர், பள்ளி முதுநிலை ஆசிரியர், உதவி ஆசிரியர் ஆகிய தேர்வுகளில் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. TNPSC சமீப காலமாக போட்டித்தேர்வுகள் தொடர்பாக பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறது. முக்கியமாக, தேர்வுக்கான ஆண்டுத்திட்டம், இணையவழி விண்ணப்பம், இணையவழி நுழைவுச் சீட்டு பதிவிறக்கம், தேர்வுக்கூடங்களில் வீடியோ பதிவு, வினாவுக்கான விடைகள் வெளியிடுதல், இணையவழி சான்றிதழ் சரிபார்ப்பு, விரைவான தேர்வு முடிவுகள், பதவி ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு, வெளிப்படையான தெரிவுமுறை, குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் தேர்வுக்கு வருகை புரிந்தோரின் விவரங்கள் போன்றவற்றை குறிப்பிடலாம். இத்தகைய சீர்திருத்தங்களை தொடர்ந்து, அடுத்த கட்டமாக கணினிவழித் தேர்வுகளை (ஆன்லைன் தேர்வுமுறை) கொண்டுவர முடிவு செய்துள்ளது.

கணினிவழித் தேர்வு என்பது தற்போது நடைமுறையில் உள்ள OMR விடைத்தாளில் விடையளிக்கும் கொள் குறிவகை தேர்வு போன்றதாகும். கணினி வழித் தேர்வில் கேள்விகளும் விடைகளும் கணினித்திரையில் தோன்றும். விண்ணப்பதாரர்கள் கேள்விக்கான நான்கு விடைகளில் மிகச்சரியான ஒரு விடையினை தேர்வு செய்து கணினியின் Mouse மூலம் கிளிக் செய்து சமர்ப்பிக்க வேண்டும். இவ்வகைத் தேர்வில் தேர்வு நேரத்திற்குள் விடைகளை மறு ஆய்வு செய்யவும், மாற்றவும், ஒரு கேள்வியை விடுத்து அடுத்த கேள் விக்குச் செல்லவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. வினாவும் விடையும் ஒரு சேர தோன்றுவதால் வினாவுக்கான வரிசை எண் மாற வாய்ப்பில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட விடைகளை (Multiple Answer) தேர்ந்தெடுக்கவும் வாய்ப்பில்லை. தேர்வில் இடம்பெறும் கேள்வி மிகப் பாதுகாப்பான முறையில் இணைய வழியாக தேர்வுக்கூடங்களுக்கு தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரம் முன்னர் அனுப்பப்படுவதாலும், தேர்வர்கள் குறிப்பிடும் விடைகள் உடனுக்குடன் தேர்வாணையத்திலுள்ள கணினியில் பெறப்படுவதாலும் இவ்வகைத் தேர்வு மிகவும் பாதுகாப்பானது.

கேள்விகளும் விடைகளும் வரிசை முறையின்றி கலந்து (ரேண்டம் முறை) விண்ணப்பதாரர்களுக்கு திரையில் தோன்றச் செய்வதால், விண்ணப்பதாரர்கள் அருகிலிருக்கும் சக விண்ணப்பதாரர்களைப் பார்த்து விடையளிக்கவும் முடியாது. விண்ணப்பதாரர்களின் நடவடிக்கைகள் Camera மூலமாகவும், கணினிப் பதிவுகள் மூலமாகவும்

ஆன்லைன் தேர்வு முறை - TNPSC அறிவிப்பு.


போட்டித்தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிடவும்வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் ஆன்லைன்தேர்வுமுறையை டி.என்.பி.எஸ்.சி. அறிமுகப்படுத்த உள்ளதுமுதல்கட்டமாகதோட்டக்கலை அதிகாரிஉதவிபொறியாளர்பள்ளி முதுநிலை ஆசிரியர்உதவி ஆசிரியர் ஆகிய தேர்வுகளில் இந்த புதிய திட்டம்செயல்படுத்தப்படுகிறது.

TNPSC சமீப காலமாக போட்டித்தேர்வுகள் தொடர்பாக பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறதுமுக்கியமாக,தேர்வுக்கான ஆண்டுத்திட்டம்இணையவழி விண்ணப்பம்இணையவழி நுழைவுச் சீட்டு பதிவிறக்கம்,தேர்வுக்கூடங்களில் வீடியோ பதிவுவினாவுக்கான விடைகள் வெளியிடுதல்இணையவழி சான்றிதழ் சரிபார்ப்பு,விரைவான தேர்வு முடிவுகள்பதவி ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வுவெளிப்படையான தெரிவுமுறை,குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் தேர்வுக்கு வருகை புரிந்தோரின் விவரங்கள் போன்றவற்றை குறிப்பிடலாம்.

இத்தகைய சீர்திருத்தங்களை தொடர்ந்துஅடுத்த கட்டமாக கணினிவழித் தேர்வுகளை (ஆன்லைன் தேர்வுமுறை)கொண்டுவர முடிவு செய்துள்ளதுகணினிவழித் தேர்வு என்பது தற்போது நடைமுறையில் உள்ள OMRவிடைத்தாளில் விடையளிக்கும் கொள் குறிவகை தேர்வு போன்றதாகும்.

கணினி வழித் தேர்வில் கேள்விகளும் விடைகளும் கணினித்திரையில் தோன்றும்விண்ணப்பதாரர்கள்கேள்விக்கான நான்கு விடைகளில் மிகச்சரியான ஒரு விடையினை தேர்வு செய்து கணினியின் Mouse மூலம்கிளிக் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வகைத் தேர்வில் தேர்வு நேரத்திற்குள் விடைகளை மறு ஆய்வு செய்யவும்மாற்றவும், ஒரு கேள்வியைவிடுத்து அடுத்த கேள் விக்குச் செல்லவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதுவினாவும் விடையும் ஒரு சேரதோன்றுவதால் வினாவுக்கான வரிசை எண் மாற வாய்ப்பில்லைஒன்றுக்கு மேற்பட்ட விடைகளை (Multiple Answer) தேர்ந்தெடுக்கவும் வாய்ப்பில்லை.

தேர்வில் இடம்பெறும் கேள்வி மிகப் பாதுகாப்பான முறையில் இணைய வழியாக தேர்வுக்கூடங்களுக்கு தேர்வுதொடங்குவதற்கு சில மணி நேரம் முன்னர் அனுப்பப்படுவதாலும்தேர்வர்கள் குறிப்பிடும் விடைகள்உடனுக்குடன் தேர்வாணையத்திலுள்ள கணினியில் பெறப்படுவதாலும் இவ்வகைத் தேர்வு