Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 28, 2012

ரேஷன் கார்டை இன்னும் புதுப்பிக்கலையா?: 1ம் தேதி முதல் பொருட்கள் கிடையாது

சென்னை: ரேஷன் கார்டுகளை புதுப்பிக்க நாளை தான் கடைசி நாள். அதற்குள் புதுப்பிக்காவிட்டால் வரும் மார்ச் மாதம் 1ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியாது.

இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் ரேஷன் கார்டுகளுக்கு பதில் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படவிருக்கிறது. இதற்காக குடும்ப உறுப்பினர்களின் கைரேகை, கண்விழி பதிவுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு தயாரிக்கப்படுகிறது. அதுவரை பழைய ரேஷன் கார்டுகளை ரேஷன் கடைகளில் கொடுத்து அதில் இணைப்புத் தாள் ஒட்டி ஒரு ஆண்டுக்கு புதுப்பித்துக் கொள்ளுமாறு தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதற்காக 2 மாத அவகாசம் கொடுத்திருந்தது. அந்த அவகாசம் நாளையுடன் முடிவடையும் நிலையில் 11 லட்சம் கார்டுகள் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் புதுப்பிக்கப்படாத கார்டுகள் ரத்து செய்யப்படும் என்றும், வரும் மார்ச் 1ம் தேதி முதல் அந்த கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என்றும் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

பிப்ரவரி 27, 2012

நாளை நாடு முழுவதும் வேலை நிறுத்தம்!

புதுடெல்லி:வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து தொழிலாளர் அமைப்புகள் நாளை நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன.

இடதுசாரி தொழிலாளர் அமைப்புகளுடன், காங்கிரஸ் ஆதரவு தொழிலாளர் அமைப்புகள், பா.ஜ.கவின் கீழ் செயல்படும் தொழிலாளர் அமைப்புகள் ஆகியன இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் வேலை நிறுத்தம் வெற்றி பெறும் என்று கருதப்படுகிறது.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வங்கி, இன்சூரன்ஸ், தொலைத்தொடர்பு உள்ளிட்ட பெரும்பாலான மத்திய அரசுத் துறைகளில் பணிகள் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

ஈராக் இந்தியாவிடம் பாஸ்மதி அரிசி வாங்குவதை நிறுத்த வேண்டும் – அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள்

ஹூஸ்டன்/டெக்ஸாஸ்:
அமெரிக்காவில் அதிகம் அரிசி விளையக்கூடிய மாகாணங்களைச் சேர்ந்த அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈராக் இந்தியாவிடம் பாஸ்மதி அரிசி வாங்குவதை நிறுத்திவிட்டு தங்கள் நாட்டில் விளையும் அரிசியை வாங்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

மேலும் டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த பிரதிநிதி ‘டெட் போ’ கூறும்போது அமெரிக்கா ஈராக்கை சர்வாதிகார ஆட்சியிலிருந்து விடுவிக்கவும்?!!! மற்றும் அந்நாட்டை புனர் நிர்மாணம் செய்யவும் பல பில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளது. எனவே ஈராக் தனது வர்த்தகத்தில் அமெரிக்காவை முன்னிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தாங்கள் ஈராக்கை விடுவித்தது?? ஒரே நோக்கத்திற்க்குதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்காவை சேர்ந்த 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈராக்கின் வர்த்தகத்துறை அமைச்சர் கைர் அல்லா பபக்கருக்கு மீண்டும் அமெரிக்க அரிசி வகைகளுக்கு மாற வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளனர்.

முஹம்மது நபியை குறித்து இயேசு முன்னறிவிப்புச் செய்யும் பைபிள் கண்டுபிடிப்பு!

அங்காரா:இஸ்லாத்தின் இறுதி தூதரான முஹம்மது நபியை குறித்து இயேசு(ஈஸா நபி) முன்னறிவிப்புச் செய்யும் 15 நூற்றாண்டுகள் பழமையான பைபிள் துருக்கியில் கண்டெடுக்கப்பட்டது.

பர்ணபாஸின் சுவிசேஷம் என்று அழைக்கப்படும் இந்த நூல் 12 ஆண்டுகளாக துருக்கியில் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. பைபிளில் கூறப்படும் பர்ணபாஸ் இயேசுவின் முக்கிய சீடராவார்.

இந்த நூலை பார்ப்பதற்கு 16-வது போப் பெனடிக்ட் விருப்பம் தெரிவித்துள்ளார். இறுதி தூதர் முஹம்மது நபியின் வருகையை குறித்தும், இயேசுவின் இஸ்லாம் குறித்த பார்வையை விளக்கும் இந்த நூலின் உள்ளடக்கம், தற்போது நடைமுறையில் இருக்கும் பைபிளில் காணப்படும் கருத்துக்களுடன் முரண்படுவதால், கிறிஸ்தவ தலைமை இந்நூலை மூடி மறைத்துள்ளது என்று துருக்கியின் கலாச்சார-சுற்றுலா துறை அமைச்சர் உர்த்துக்ரூல் குனாய் செய்தியாளர்களிடம் கூறினார்.

யேசு ஆரம்ப காலக்கட்டத்தில் கூறிய கட்டளைகளும், முன்னறிவிப்புகளும் விலங்கின் தோலில் எழுதப்பட்டுள்ள இந்நூலில் அடங்கியுள்ளன. இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுதான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் குறித்த முன்னறிவிப்பாகும். யேசு பேசிய மொழியான அராமிக்கில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் 12 ஆண்டுகளுக்கு முன்பு கள்ள கடத்தல் காரர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது துருக்கி போலீஸ் கண்டுபிடித்தது. இந்த புத்தகத்தின் மதிப்பு 22 மில்லியன் ஆகும். இந்த நூலின் ஒரு பக்கத்திற்கான நகலுக்கு 2.4 மில்லியன் டாலர் மதிப்பாகும்.

யேசு(இறைத்தூதர் ஈஸா(அலை)) அவர்கள் இறுதி தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை குறித்து தனது சீடர்களிடம் முன்னறிவிப்பு செய்துள்ளார். இறுதி தூதர் வரும் வேளையில் அவரை நம்பி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று யேசு கூறியுள்ளார் என்று முஸ்லிம்கள் நம்புகின்றார்கள்.

பிப்ரவரி 26, 2012

கருப்புபண விவகாரம்-சுவிஸ் வங்கி புதிய கட்டுப்பாடு!

சுவிஸ் வங்கிகளில் பணம் செலுத்தும்போது புதிய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என அந்நாட்டின் கொள்கைகளை தயாரிக்கும் உயர்மட்ட அமைப்பு தீர்மானித்துள்ளது.

அதன்படி, வெளிநாட்டிலிருந்து சுவிஸ் வங்கியில் பணம் செலுத்துபவர்களிடம், அவர்களது வருமானவரி கணக்கு காட்டாமல் வரும் கருப்பு பணத்தை இனி ஏற்கக்கூடாது என்று அவ்வமைப்பு முடிவெடுத்துள்ளது.

இந்நாட்டு வங்கிகளில் ரகசியங்கள் பாதுகாப்பாக இருப்பதாலும், வரி குறித்த தகவல்கள் ஏதும் கேட்கப்படுவதில்லை என்பதாலும். பெரும்பாலான செல்வந்தர்கள் சுவிஸ் வங்கிகளில் பணம் செலுத்துகின்றனர்.

தடையில்லா மின்சாரம் கிடைக்க அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஜெனரேட்டர்-ஜெ.

சென்னை: மின்வாரியம் அறிவித்துள்ள மின்வெட்டு காரணமாக பத்து மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பாதிக்கப்படாமல் தடுப்பதற்காக அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளுக்கு அரசு ஜெனரேட்டர் வசதியை ஏற்படுத்தித் தரும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

புதிய மின்வெட்டுத் திட்டத்தை .தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது. இது நாளை முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வருகிறது. இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் மின் உற்பத்தியைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளை முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு எடுக்காத காரணத்தால், தமிழ்நாடு தற்போது மின் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. ஐந்து ஆண்டு கால தி.மு.க. ஆட்சி காலத்தில் 206 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கூடுதலாக ஏற்படுத்தப்பட்டது.

உலகிலேயே பணக்கார நாடு கத்தார்: போர்ப்ஸ்

நியூயார்க்: உலகிலேயே பணக்கார நாடாக கத்தாரை புகழ்பெற்ற போர்பஸ் இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

உலகின் 15 பணக்கார நாடுகளின் பெயரை போர்பஸ் இதழ் வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட 1.7 கோடி மக்கள் தொகை கொண்ட கத்தார் நாடு செல்வச் செழிப்புடன் திகழ்வதற்கு காரணம் அந்நாட்டின் இயற்கை எரிவாயும் எண்ணெய் வளமும்தான் காரணம்.

கத்தார் நாடுதான் 2022-ல் உலகக் கோப்பை கால்பந்து போட்டியையும் 2020 ஒலிம்பிக் போட்டியையும் நடத்த உள்ளது.

உலகின் பணக்கார நாடுகள் வரிசையில், லக்சம்பர்க்குக்கு 2-வது இடமும் சிங்கப்பூருக்கு 3-வது இடமும் பெற்றுள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, ஹாங்ஹாங், சுவிஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுடம் பணக்கார 15 நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

சர்வதேச நிதியம் வெளியிடும் ஒவ்வொரு நாட்டின் மொத்த உள்நாட்டு மதிப்பின் அடிப்படையில் பணக்கார நாடுகள் தேர்வு செய்யப்படுகின்றன.

பணக்காரர் என்று இருந்தால் ஏழையும் இருந்தாக வேண்டும். உலகின் மிகப் பெரிய ஏழை நாடுகளின் பட்டியலையும் போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. மிகவும் ஏழ்மையான நாடுகள் பட்டியலில் புருண்டி, லைபீரியா, காங்கோ ஆகியவை முன்னணியில் உள்ளன.

பிப்ரவரி 24, 2012

குடும்ப அட்டையைப் புதுப்பிக்க கடைசி நாள்

குடும்ப அட்டையைப் புதுப்பிக்க அரசு அனு மதித்த கெடு பிப்ரவரி 28ஆம் தேதியுடன் நிறை வுறுகிறது.

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் வழங்கப்பட்ட குடும்ப அட்டையின் காலம், 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது.

புதிய குடும்ப அட்டைகளை அச்சடிப்பதற்கு வசதியாக, தாங்கள் வழக்கமாக பொருள்களை வாங்கும் அரசு நியாயவிலைக்கடைகளில் உண்மையான தகவல்களைத் தெரிவித்து, குடும்ப அட்டைகளைப் புதுப்பிக்கும் பணி 2012 ஜனவரி முதல் தொடங்கிற்று.

புதிதாக அச்சடிக்கப்படும் குடும்ப அட்டைகளில், பெயர்களை புதிதாக சேர்த்தல், பெயர்களை நீக்குதல், குடும்பத்தலைவரின் ஒளிப்படத்தை மாற்றுதல், இருப்பிட முகவரி மாற்றுதல் போன்ற தகவல்களை தெரிவித்து வருகின்றனர். இப்பணி 2012ஆம் ஆண்டு பிப்ரவரியுடன் நிறைவுறுகிறது.

5000 பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வு-24-02-2012

சென்னை: குரூப்-4 நிலையில், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்ற, 5,000 பேரை, டி.என்.பி.எஸ்.சி., தேர்வுசெய்ய உள்ளது.

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் கூறியதாவது: நடப்பாண்டில், குரூப்-1 மற்றும் குரூப்-2 (பட்டதாரி தகுதி) தேர்வுக்குரிய காலியிட பட்டியல்கள் வந்துள்ளன. இதுதவிர, குரூப்-4 நிலையில், அரசின் பல்வேறு துறைகளுக்கு, 5,000 பேரை தேர்வு செய்யவும் உத்தரவு வந்துள்ளது.

தட்டச்சர்கள், இளநிலை உதவியாளர் உட்பட பல்வேறு பணிகளுக்கு, இவர்கள் தேர்வு செய்யப் படுவர். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், போட்டித் தேர்வில் பங்கேற்கலாம்.

இதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும். ஏற்கனவே, வெளியான வி.ஏ.ஓ., மற்றும் குரூப்-2 தேர்வு முடிவில் இடம் பெற்றவர்களுக்கு, விரைவில் பணி நியமனம் வழங்கப்படும். இந்தத் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படமாட்டாது.

டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகள், முடிவுகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் உடனுக்குடன் வெளியிடுவதுடன், தேர்வு முடிவிற்குப் பின், அதற்கான விடைகளையும் இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட உள் ளது. இவ்வாறு, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் தெரிவித்தன.

பிப்ரவரி 23, 2012

கின்னஸ் உலக சாதனையில் துபை மெட்ரோ

துபையில் செயல்பட்டு வரும் மெட்ரோ துரித தொடர்வண்டிச் சேவை கின்னஸ் உலக சாதனையில் இடம் பெறுகிறது.

துபையில் மெட்ரோ துரித தொடர்வண்டி சேவை நடைபெற்று வருகிறது. ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் இந்த மெட்ரோ சேவை 75 கிலோ மீட்டர்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. சிகப்பு மற்றும் பச்சை வழி என இரண்டு வழிகளில் இந்த சேவை இயங்கி வருகிறது. சிகப்பு வழி 52 கிலோமீட்டர்களுக்கும் பச்சை வழி 22.69 கிலோமீட்டர்களுக்கும் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு செயல்படும் இந்த மெட்ரோ சேவை உலகத்தின் நீளமான ஆளில்லாத மெட்ரோ என்ற சிறப்பினைப் பெற்றுள்ளது. இதற்காக கின்னஸ் உலக சாதனையில் இது இடம் பெறுகிறது. கின்னஸ் சான்றிதழை கின்னஸ் மத்திய கிழக்கின் பிராந்திய இயக்குனர் தலால் உமர், துபை சாலை மற்றும் போக்குவரத்து அதிகாரத்தின் தலைவர் மட்டார் அல் தாயிரிடம் வழங்கினார்.

இந்த பெருமையினை அமீரகத்தின் பிரதமரும் துபை அதிபருமான ஷேக் முஹம்மதுக்கு சமர்ப்பிப்பதாக மட்டார் அல் தாயிர் தெரிவித்துள்ளார்.

புனித திருக்குர்ஆன் பிரதி எரிப்பு: ஆப்கான் கொந்தளிக்கிறது – 5 பேர் பலி!

காபூல்:நேட்டோ ராணுவத்தினர் உலக மனித சமூகத்திற்கு நல்லுபதேசமாக திகழும் புனித திருக்குர்ஆனின் பிரதியை எரித்த சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆப்கானின் பல்வேறு பகுதிகளில் ஐந்து பேர் பலியானார்கள்.

போராட்டம் தொடரும் இரண்டாவது தினமான நேற்று காபூலில் அமெரிக்க கேம்ப் ஃபீனிக்ஸிற்கு செல்லும் ஹைவேயில் பொதுமக்கள் தடை ஏற்படுத்தினர். போலீசார் மீது கல்வீசி தாக்கிய மக்கள் கார்களின் கண்ணாடிகளை உடைத்தனர்.

காபூலில் அமெரிக்கா மற்றும் கர்ஸாய்க்கு எதிராக முழக்கமிட்டவர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதை தொடர்ந்து வன்முறை உருவானது. காபூல், ஜலாலாபாத் ஆகிய இடங்களில் ஒருவர் வீதமும், பர்வான் மாகாணத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஆனால், போராட்டம் நடத்தியோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என்று போலீஸார் கூறுகின்றனர். ஆப்கானின் பெரும்பாலான இடங்களில் நடந்த போராட்டங்களில் தாலிபான் தலைவர் முல்லா உமருக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பிப்ரவரி 21, 2012

இந்திய பணியாளர்களுக்கு நடப்பாண்டில் 11.9 சதவீதம் சம்பள உயர வாய்ப்பு: ஆய்வில் தகவல்

புதுடெல்லி, பிப்.21-

உலக மனிதவள ஆலோசனை மற்றும் அவுட்சோர்சிங் நிறுவனமான ஏயான் ஹேவிட் நிறுவனம் உலக நாடுகளில் சம்பள உயர்வு குறித்த ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வின்படி, இந்தியாவில் உள்ள பணியாளர்களுக்கு 11.9 சதவீதம் சம்பள உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஆசிய நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவுக்கே அதிகளவு சம்பள உயர்வுக்கான வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் கூறப்படுகிறது.

மேலும், சீனா 9.5, பிலிப்பைன்ஸ் 6.9, ஆஸ்திரேலியா 4.6, ஹாங்காங் 5, ஜப்பான் 2.8, மலேஷியா 6.2, சிங்கப்பூர் 4.8 சதவீத அளவில் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நாடுகளில் உள்ள நிறுவனங்கள் எதிர்கால பொருளாதார சூழ்நிலையை நன்கு உணர்ந்து அதன்படி திட்டமிட்டு செயல்பட்டு வருவதால் இந்த சம்பள உயர்வுக்கு தயாராக உள்ளன என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

வருமான வரி உச்சவரம்பு ரூ. 5 லட்சமாக உயர்கிறது

புதுடெல்லி, பிப்.21-

ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை சம்பளம் பெறும் ஊழியர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை என மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது. இதனால கிட்டத்தட்ட 85 லட்சம் பணியாளர்கள் பயனடைவார்கள். வரும் நிதி ஆண்டிலிருந்து இந்த வரிச்சலுகை அமலுக்கு வரும்.

இந்த வரிச்சலுகை பெறுவதற்காக ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களில் இருந்து வருமானத்திற்கான சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.

நோன்பு இருந்தால் மூளைக்கு பாதிப்பில்லை – ஆய்வில் தகவல்

லண்டன்:நோன்பு அல்லது விரதம் இருப்பதால் உடலில் சர்க்கரை குறைந்துவிடும், வயிற்றில் அமிலம் சுரந்து அல்சர்(குடல் புண்) வந்துவிடும் என்று பலருக்கு சந்தேகம் ஏற்படுவதுண்டு. ஆனால், முஸ்லிம்கள் 14 நூற்றாண்டுகளுக்கும் மேலாக தங்களது மார்க்கத்தின் அடிப்படை கடமைகளில் ஒன்றாக நோன்பை வருடந்தோறும் ரமலான் மாதத்தில் கடைப்பிடித்து வருகின்றனர். அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் வருவதில்லை. மேலும் மாதந்தோறும் 3 நோன்புகள், திங்கள், வியாழன் கிழமைகளில் நோன்புகள், வருடத்தில் சில குறிப்பிட்ட தினங்களில் நோன்புகள் ஆகிய உபரியான(கட்டாயக் கடமை அல்ல) குறித்து இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்…)அவர்களுடைய நடைமுறையிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

நோன்பை முஸ்லிம்கள் கடைப்பிடிப்பதற்கான காரணம் ஆன்மீக வாழ்வில் இறைவன் மீதான அச்சம் ஏற்படுவதற்காகும். இதன் காரணமாக ஒரு மனிதனின் ஆன்மீக வாழ்வு பரிசுத்தமடைகிறது.

இந்நிலையில் லண்டனில் நடந்த மருத்துவ ஆய்வில் நோன்பின் மகிமையை குறித்து தெரியவந்துள்ளது. அல்சமீர், பார்க்கின்சன் நோய்கள் முதியோருக்கு வருவதை தடுப்பது எப்படி? என்ற ஆராய்ச்சின்போதுதான் நோன்பின் மகிமை மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு தெரியவந்துள்ளது.

பிப்ரவரி 20, 2012

ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் எதிர்விளைவுகள் கடுமையாக இருக்கும் – இஸ்ரேலுக்கு பிரிட்டன் எச்சரிக்கை

லண்டன்:ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவது அறிவுப்பூர்வமானது அல்ல என்று இஸ்ரேலுக்கு பிரிட்டன் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு தலைபட்சமாக அத்தகையதொரு நடவடிக்கையை மேற்கொண்டால் எதிர்விளைவுகள் மோசமாக இருக்கும் என்று இஸ்ரேல் அதிகாரிகளிடம் கூறியதாக வெளியுறவுத்துறை செயலாளர் வில்லியம் ஹேக் அறிவித்துள்ளார்.

இரண்டு விதமான தந்திரங்கள்தாம் ஈரான் மீது தற்போது செலுத்தவேண்டும். ஒருபுறம் தடைகளை ஏற்படுத்தியும், நிர்பந்தம் அளித்தும் அவர்களை கட்டுக்குள் நிறுத்தவேண்டும். இன்னொரு புறம் பேச்சுவார்த்தைகள் மூலமாக பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும். எந்த வழிகளை முன்வைத்தாலும் ராணுவ தாக்குதல் பெரிய எதிர்விளைவுகளை உருவாக்கும் என்று ஹேக் கூறியுள்ளார்.

பிரான்சு, பிரிட்டன் – இனி எண்ணெய் இல்லை – ஈரான்!

டெஹ்ரான்:ஐரோப்பிய யூனியனின் தடைக்கு பலத்த பதிலடியை கொடுக்கும் விதமாக பிரிட்டனுக்கும், பிரான்சிற்கும் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்வதை முற்றிலும் நிறுத்த ஈரான் முடிவு செய்துள்ளது. இரு நாடுகளின் நிறுவனங்களுக்கு இனி சுத்திகரிக்கப்படாத கச்சா எண்ணெயை வழங்கமாட்டோம் என்றும், இதர பயனீட்டாளர்களை கண்டுபிடிப்போம் என்றும் ஈரானின் எண்ணெய் அமைச்சக செய்தித் தொடர்பாளர் அலி ரஸா நிக்ஸாத் கூறியுள்ளார்.

ஆனால், ஈரானின் முடிவு கடுமையான எதிர்விளைவுகளை உருவாக்கும் என்று இரு நாடுகளும் கருத்து தெரிவித்துள்ளன. தினமும் 58 ஆயிரம் பேரல் கச்சா எண்ணெயை பிரான்சு ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது. ஐரோப்பாவில் இத்தாலி, ஸ்பெயின், க்ரீஸ், போர்சுகல், பிரான்சு, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு எண்ணெயை ஏற்றுமதிச் செய்வதை ஈரான் நிறுத்தும் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்ட போதிலும் ஈரானின் எண்ணெய் அமைச்சகம் இச்செய்தியை மறுத்தது.

பொருளாதார நெருக்கடியில் உழலும் இரு நாடுகளும் ஈரானின் எண்ணெயை சார்ந்தே இருக்கின்றன. எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் உலகிலேயே சவூதிக்கு அடுத்து ஈரான் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களின் எண்ணெயை வருகிற ஜூலை 1-ஆம் தேதி முதல் இறக்குமதி செய்யமாட்டோம் என்று ஐரோப்பிய யூனியன் அறிவித்திருந்தது. மேலும் ஈரானின் மத்திய வங்கியின் மீதும் தடையை அதிகரிப்போம் என்று ஐரோப்பிய யூனியன் தீர்மானித்திருந்தது. இந்நிலையில் ஈரான் பலத்த அடியை கொடுத்துள்ளது.

பிப்ரவரி 18, 2012

தமிழ்நாடு முழுவதும் நாளை 40 ஆயிரம் மையங்களில் போலியோ சொட்டு மருந்து

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

போலியோ சொட்டு மருந்து முகாம் 19-2-2012 மற்றும் 15-4-2012 அன்று நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 40,000-க்கும் மேற்பட்ட சொட்டு மருந்து மையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் பிரத்தியேகமாக நிறுவப்பட்டு 19-2-2012 அன்று சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 903 நகரும் மையங்கள் நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 838 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

பிப்ரவரி 17, 2012

முதுமையை ஓட ஓட விரட்டும் ஓட்ஸ்!

உடம்பில் நோய்கள் இருந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். ஓட்ஸ் உணவு உட்கொள்வதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்தி சந்தோசமாக வாழமுடியும் என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓட்ஸ் உணவில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் குணப்படுத்தும் அம்சங்கள் நிறைய உள்ளன என்று கடந்த 200 ஆண்டுகளாக ஜெர்மானியர்களும், கடந்த 100 ஆண்டுகளாக சீனர்களும் கடந்த 32 ஆண்டுகளாக அமெரிக்கர்களும் நி பித்துள்ளனர்.

சர்வ ரோக நிவாரணி

ஓட்ஸ் உணவில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் வைட்டமின் இ , துத்தநாகம், செலினியம், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீஸ் போன்றவை காணப்படுகின்றன. இதில் அதிக அளவு புரதமும் உள்ளது.

நீரிழிவு நோயாளிகளும், கொழுப்பு சத்து, உடல்பருமன் கொண்டவர்களும், உயர் ரத்த அழுத்தம் உடையவர்களும் தினசரி ஒரு கப் ஓட்ஸ் உட்கொள்வதன் மூலம் இந்த நோய்களை கட்டுப்படுத்தலாம் என்று உணவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

பள்ளியில் சேர்க்க மாணவர்களுக்கு தேர்வு நடத்தினால் ரூ. 50000 அபராதம்: தமிழக அரசு அதிரடி

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் இந்த கல்விச் சட்டத்தை தமிழக அரசு தீவிரமாக நிறைவேற்றி வருகிறது.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் சட்ட விதிகளை மீறினால் விதிக்கப்படும் தண்டனை குறித்து தெரிவித்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

மாணவர் சேர்க்கைக்காக பெற்றோருக்கோ, குழந்தைகளுக்கோ தனியார் பள்ளிகள் தேர்வு எதையும் நடத்தக்கூடாது. இந்த விதியை முதல் முறையாக மீறும் பள்ளிகளுக்கு ரூ. 25 ஆயிரமும் தொடர்ந்து நடைபெற்றால் ஒவ்வொரு முறையும் ரூ. 50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும். மாணவர்களை உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தினால் பணி விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அங்கீகாரம் திரும்பப் பெற்ற பிறகும் பள்ளிகள் பழையபடி செயல்பட்டால் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். ஒவ்வொரு நாளுக்கும் ரூ. 10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும். மாற்றுச் சான்றிதழ்கள் வழங்க தாமதம், ஆசிரியர்களின் தவறு ஆகியன மீது பணி விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

பிப்ரவரி 15, 2012

யுரேனியம் செறிவூட்டல் பணிகள்: காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பி ஈரான் அதிரடி

டெஹ்ரான்: யுரேனியம் செறிவூட்டும் பணியில் தங்கள் நாடு அடைந்துள்ள முன்னேற்றம் குறித்த காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பி, உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது ஈரான்.

அமெரிக்கா உள்ள உலக நாடுகளின் எதிர்ப்புகளுக்கிடையே தலைநகர் டெஹ்ரான் அருகில், போர்டோ பகுதியில், பூமிக்கடியில் மிக மிக பாதுகாப்பான முறையில், அணுஆயுதங்கள் தயாரிக்க உதவும் யுரேனியம் செறிவூட்டும் பணியை ரகசியமான மலைப்பகுதியில், ஈரான் நடத்தி வந்தது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், யுரேனியம் செறிவூட்டும் பணியில் தங்கள் நாடு அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும், செறிவூட்டுதலுக்கு பயன்படும் யுரேனிய பிளேட்டுகளை பொருத்தும் காட்சிகளையும் ஈரான் நாட்டின் தேசிய தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இப்பணிகளை அந்நாட்டின் அதிபர் அகமதின்ஜாட் பார்வையிட்டார். அவருடன் ஈரான் அணுவிஞ்ஞானிகள் உடன் இருந்தனர். ஈரானின் இந்த செயல் உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தனிமைப்படுத்துங்கள்: அமெரிக்கா ஆவேசம்: ஈரான் யுரேனியம் செறிவூட்டும் பணியை வெளிப்படையாக ஆரம்பித்திருப்பது அமெரிக்காவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானை உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டும் என ஒபாமா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாஸ்போர்ட் சேவை: மேலும் 3 பிரிவினருக்கு விதிமுறையில் தளர்வு

பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறையில், மேலும் மூன்று பிரிவினருக்கு விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது; இன்று முதல் இது நடைமுறைக்கு வருகிறது.கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்ட மக்களுக்கு, பாஸ்போர்ட் சேவைகளை வழங்குவதற்காக, கோவை-அவிநாசி ரோட்டில், கடந்த ஆண்டு ஆக.,4லிருந்து பாஸ்போர்ட் சேவை மையம் (பாஸ்போர்ட் சேவா கேந்திரா) செயல்பட்டு வருகிறது. இந்த மையம் துவக்கப்பட்ட பின், புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டன.
அதன்படி, "ஆன்லைன்' முறையில் பாஸ்போர்ட் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, விண்ணப்பப் பதிவு எண், நேர்காணலுக்கான அனுமதி பெற்றவர்கள் மட்டுமே, பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு நேரில் வரலாம் என்ற, நடைமுறை உள்ளது. ஆனால், "ஆன்லைன்' மூலமாக விண்ணப்பிக்கும் பெரும்பாலானவர்களுக்கு, "அப்பாயின்மென்ட்' கிடைப்பதில்லை என்று, பரவலாக புகார் எழுந்தது.

பிப்ரவரி 14, 2012

பிப்ரவரி 14 : வாழ்வுரிமைப் போராட்டம்!

அல்லாஹ்வின் கிருபையால் தமிழகம் முழுவதும் போராட்டத்தில், அனைத்து மாவட்டத்திலும் பல ஆயிரகாணக்கனோர் பங்கேற்பு. (அல்லாஹ் அக்பர்)

எப்போதும் போல் ஆண்களை விட பெண்களே அனைத்து மாவட்டத்திலும் அதிகம்.

எல்லா புகழும் அல்லாஹ்விற்கே! எங்கள் இறைவா! இந்த மக்கள் வெள்ளத்தின் மூலமகவாது கல்மனம் கொண்ட இந்தியா ஆட்சியாளர்களின் உள்ளத்தை கரைய வைத்து வறுமையால் பீடிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு இட ஒதிக்கீடு வழங்க உன்னையே வேண்டுகிறோம். எங்கள் போராட்டத்திற்கு இட ஒதிக்கீடு பெறுவதன் மூலம் வெற்றியை தருவாயாக!

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பணம் 24.5 லட்சம் கோடி – சி.பி.ஐ

புதுடெல்லி:வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பண முதலீட்டில் இந்தியர்கள் முன்னிலையில் இருப்பதாக சி.பி.ஐ இயக்குநர் எ.பி.சிங் கூறியுள்ளார். வரி ஏய்ப்பிற்காக இவர்கள் வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்துள்ள தொகை கிட்டத்தட்ட 50 ஆயிரம் கோடி டாலர்(24.5லட்சம் கோடி) என்று சிங் கூறினார்.

ஊழலுக்கு எதிராகவும், சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்வதற்குமான இண்டர்போல் திட்டத்தின் துவக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார் எ.பி.சிங்.

அவர் கூறியது: கறுப்பு பணத்தை பதுக்கியிருப்பவர்கள் குறித்து தகவல்கள் முழுமையாக கிடைப்பதற்கு கூடுதல் கால அவகாசம் தேவையாகும். கறுப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நாடுகளில் விசாரணை அதிகாரிகள் சட்டரீதியான மனுக்களை அளித்து ஒவ்வொன்றாக வெளிக்கொணர்ந்து வருகின்றனர்.

இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் வழங்க தயார் – சவூதி மன்னர் அப்துல்லாஹ்

ரியாத்:இந்தியாவுடன் அனைத்து துறைகளிலும் நல்லிணக்கம் மற்றும் ஒத்துழைப்பையும் அதிகரிக்கவும், இந்தியாவுக்கு கூடுதலான கச்சா எண்ணெயை வழங்கவும் சவூதி அரேபியா தாயாராக இருப்பதாக அந்நாட்டின் ஆட்சியாளர் மன்னர் அப்துல்லாஹ் கூறியுள்ளார்.

பாதுகாப்பு துறையில் சவூதி அரேபியாவுடன் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காக இரண்டு தினங்கள் சுற்றுப்பயணத்திற்காக சவூதி அரேபியா சென்றுள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி மன்னர் அப்துல்லாஹ்வுடன் சந்திப்பை நடத்திய பிறகு அளித்த பேட்டியில் இத்தகவலை கூறினார்.

இந்தியாவுடன் பொருளாதாரம், அரசியல், பாதுகாப்பு, வர்த்தகம் ஆகிய முக்கிய துறைகளில் ஒத்துழைப்பையும், நல்லிணக்கத்தையும் அதிகரிக்க சவூதி அரேபியா விரும்புவதாக மன்னர் அறிவித்துள்ளார்.

பிப்ரவரி 13, 2012

ஓர் வபாத் செய்தி!!!!

நமதூர் கொள்ளுமேட்டில் சிராஜுல் மில்லத் வீதியில் வசிக்கும் K. தல்ஹா மற்றும் K.தலிபா அவர்களுடைய தஹப்பனார் A முஹம்மது காசிம் அவர்கள் இன்று மாலை 6.00 மணியளவில் தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் அனைவருக்கும் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் "ஷப்ரன் ஜமிலா" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress பிரார்த்தனை செய்கிறது.


கம்பியில்லா முறையில் "பிராட்பேண்ட்' இணைப்பு திட்டம்

சென்னை : கம்பியில்லா முறையில், பிராட்பேண்ட் இணைப்பு வழங்கும்,"ஒய்மேக்ஸ்' என்ற புதிய திட்டத்தை,சென்னை தொலைபேசி அறிமுகப்படுத்தியுள்ளது. கிராமப்புறப் பகுதியில், கம்பி மூலம் "பிராட்பேண்ட்' இணைப்பு வழங்குவதில் பல சிரமங்கள் உள்ளன. இதை நிவர்த்தி செய்ய, நாடு முழுவதும், பி.எஸ்.என்.எல்., நிறுவனம் கம்பியில்லா முறையில், "பிராட்பேண்ட்' இணைப்பு வழங்கும், "ஒய்மேக்ஸ்' என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி வருகிறது. இதுகுறித்து, சென்னை தொலைபேசி தலைமைப் பொது மேலாளர் சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:

சென்னை தொலைபேசி, பரிசோதனை முறையில் ஊத்துக்கோட்டையில், "ஒய்மேக்ஸ்' தொழில்நுட்பத்தில் கோபுரம் அமைத்து, 10 இணைப்புகளை வழங்கியது. இப்பரிசோதனை முறை வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, உத்திரமேரூர், செங்கல்பட்டு, மறைமலைநகர், கும்மிடிப்பூண்டி, கேளம்பாக்கம் உட்பட 15 இடங்களில், "ஒய்மேக்ஸ்' கோபுரங்களை சென்னை தொலைபேசி அமைத்துள்ளது. இதன்மூலம், கம்பியில்லா முறையில் "பிராட்பேண்ட்' இணைப்பு வழங்க முடியும்.

பிப்ரவரி 12, 2012

இன்ஷா அல்லாஹ் "பிப்ரவரி 14" இட ஒதுக்கீடு போராட்டம்!!!!

இன்ஷா அல்லாஹ் இட ஒதுக்கீடு என்ற நமது உரிமையை வென்று எடுத்திட, நமது சமுதாயம் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் மற்ற சமுதாய மக்களைப் போன்று சம அந்தஸ்த்து பெற்றிட, தற்போது இருக்கும் இட ஒதிக்கீடு 3.5 சதவிததிளிருந்து 10௦ சதவிதமாக மற்றக் கோரியும், அரசு அங்கிகரித்த இட ஒதிக்கீட்டை அரசு மற்றும் தனியார் சார்ந்த எல்லா துறையிலும் உடனடியாக அமுல் படுத்தக் கோரியும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் வருகின்ற "பிப்ரவரி 14" அன்று மிகப் பெரிய போராட்டம் நடத்த உள்ளது. 
நமது பகுதியில் நமது மாவட்ட தலை நகர் கடலூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாபெரும் போராட்டத்தில் கலந்து கொள்ள கொள்ளுமேடு தவ்ஹீத் கிளையிளுருந்து வேன் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. போராட்டத்தில் கலந்து கொண்டு நமது தலைமுறை கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் எல்லா உரிமைகளையும் பெற்றிட வல்ல நாயகன் அல்லாஹ்வை பிரார்த்திப்போம். போராட்டத்தில் கலந்தது கொள்ள ஆர்வமுள்ளவர்கள் கொள்ளுமேடு தவ்ஹீத் கிளை சகோதரர்களை தொடர்பு கொண்டு உடனடியாக தங்கள் பெயர்களை பதிவு செய்யவும்.

செய்தி : அபு இஹாப்

பிப்ரவரி 11, 2012

11 மணிநேர மின்வெட்டு: கோவையில் பல்லாயிரம்பேர் ஆர்ப்பாட்டம் - போலீஸ் தடியடி!

கோவையில் 8 மணி நேர மின்வெட்டைக் கண்டித்து 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டன. 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

11 மணிநேர மின்வெட்டு

கோவையில் தினசரி குறைந்த பட்சம் 8 மணி நேரம் முதல், அதிக பட்சமாக 11 மணிநேரம் வரை மின் தடைநீடிப்பதால் தொழில் துறையினர் மற்றும் பொதுமக்கள் மிகுந்த நெருக்கடியில் உள்ளனர். மின் தடையைக் கண்டித்து கோவையில் உள்ள 36 தொழில் அமைப்பினர் கூட்டாக இணைந்து வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். அதைத் தொடர்ந்து நேற்று கோவையில் உள்ள சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டு தொழிலாளர்கள், தொழில் முனைவோர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

என்ஐஐடி நடத்தும் ஐடி-திறனாய்வுத் தேர்வு

சென்னை: நாட்டின் மிகப்பெரிய IT - Aptitude தேர்வை வரும் பிப்ரவரி 19ம் தேதி NIIT நடத்தவுள்ளது.

இந்தத் தேர்வின்மூலம், இதுவரை சுமார் 4 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

ஆசியாவின் மிகப்பெரிய IT பயிற்சி நிறுவனங்களில் ஒன்றான NIIT, நாட்டின் மிகப்பெரிய IT - Aptitude தேர்வாக தான் நடத்தவுள்ள 8வது தேசிய IT - Aptitude(NITAT) தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்மூலம், IT துறையில் பணிபுரிய விரும்பும் மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள், தங்களின் துறைசார்ந்த திறனை அறிந்துகொள்ள முடியும். NITAT 2012 எனப்படும் இந்த தேர்வானது, நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட நகரங்களில் பிப்ரவரி 19ம் தேதி நடத்தப்படுகிறது.

ஆசிய டிராகன் படகு போட்டியில் 7 பதக்கம் வென்ற இந்தியா

பாங்காங்:ஆசிய டிராகன் படகுப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் 6 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ளனர்.

தாய்லாந்தின் பட்டாயா நகரில் கடந்த 7 மற்றும் 8-ம் தேதிகளில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணியினர் தாங்கள் பங்கேற்ற 7 பந்தயங்களிலும் பதக்கம் வென்றுள்ளனர்.

100 மீ., 500 மீ., 2,000 மீ. ஆகிய பிரிவுகளில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இந்த பிரிவில் தாய்லாந்து தங்கம் வென்றது. கலப்பு இரட்டையர், 5 பெடல் பிரிவு, கலப்பு இரட்டையர் 5 பெடல் பிரிவு ஆகியவற்றிலும் இரண்டாவது இடத்தைப் பிடித்து இந்தியர்கள் வெள்ளி வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் பிலிப்பைன்ஸூம், 5 பெடல் பிரிவுகளில் இந்தோனேசியாவும் தங்கம் வென்றன. 500 மீ. படகுப் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்தது. இந்தப் பிரிவில் தாய்லாந்து தங்கம் வென்றது.

இந்தப் போட்டியில் தைவான், ஹாங்காங், இந்தியா, மலேசியா, வியத்நாம், கம்போடியா, பிலிப்பின்ஸ், இந்தோனேசியா, லாவோஸ், சீனா, தாய்லாந்து, மகோவா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றன.

இறைத்தூதரை அவமதித்த சவூதி வலைப்பூ பதிவர் மலேசியாவில் கைது


கோலாலம்பூர்:ட்விட்டர் சமூக இணையதளம் வாயிலாக முஸ்லிம்களின் உயிரினும் மேலான இறைத்தூதர் முஹம்மது நபியை குறித்து கேலி செய்யும் வகையில் விமர்சனம் செய்த சவூதி அரேபியாவை சார்ந்த வலைப்பூ பதிவரை மலேசியா போலீஸ் கைது செய்தது. 23 வயதான ஹம்ஸா கஸ்காரி சவூதி அரேபியா அதிகாரிகளின் உத்தரவின் பேரில் மலேசியாவில் வைத்து கைதானார்.

அரசியல் புகலிடம் தேடி நியூசிலாந்திற்கு செல்லவிருந்த ஹம்ஸா, விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கடந்த வாரம் ஹம்ஸா, ட்விட்டர் சமூக வலை தளத்தில் முஹம்மது நபியின் பிறந்த நாளில் அவர்களைக் குறித்து அவமதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை ட்விட்டரில் போஸ்ட் செய்தார். இவரின் கருத்துக்களுக்கு எதிராக சவூதி அரேபியா மார்க்க அறிஞர்களும், மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கஸ்காரி தனது ட்விட்டர் கருத்தை வாபஸ் பெற்றார். இவரின் ட்விட்டர் அக்கவுண்ட் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 09, 2012

முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழக சட்டசபையில் செல்ஃபோனுக்கு தடை

சென்னை:பாரதீய பண்பாட்டை வாய்கிழிய பேசும் பா.ஜ.கவின் கர்நாடகா மாநில அமைச்சர்களின் ஒழுக்கச்சீரழிவு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில் தமிழ சட்ட சபையில் மொபைல் ஃபோனுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முடிவு, புதன்கிழமை நடைபெற்ற அவைக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

எம்.எல்.ஏ.க்கள் அவசரமாக தொலைபேசி பேச வேண்டுமென்றால், பேரவை ‘லாபி’யில் பொதுத் தொலைபேசிகளை வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கர்நாடக சட்டப் பேரவையில் செல்போனில் ஆபாச படம் பார்த்ததாகக் கூறப்படும் சம்பவத்தின் காரணமாக, மாநிலத்தின் பா.ஜ.க அமைச்சர்கள் 3 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் தமிழக சட்டப் பேரவையில் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எகிப்து பாராளுமன்றத்தில் ‘அதான்’ அழைப்பை விடுத்த எம்.பி

கெய்ரோ:எகிப்து பாராளுமன்ற கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது எம்.பி ஒருவர் பாங்கு(தொழுகைக்கான அழைப்பு) கூறியது சர்ச்சையானது. கடந்த செவ்வாய்க்கிழமை அஸர்(மாலைநேர) தொழுகை வேளையில் ஸலஃபி கட்சியான அந்நூரை சார்ந்த எம்.பி மம்தூஹ் இஸ்மாயீல் எழுந்து அதான் கூற துவங்கினார். உடனே சபாநாயகர் ஸஅத் அல் கதாதனி அமைதியாக அமருமாறு கூறினார். ஆனால் இஸ்மாயீல் அதனை பொருட்படுத்தாமல் தனது அதானை பூர்த்தி செய்தார்.
‘நீங்கள் வேண்டுமானால் வெளியே மஸ்ஜிதுக்கு சென்று அதான் கூறி தொழுகை நடத்துங்கள். இது விவாதம் நடைபெறும் இடம்’ என சபாநாயகர் கூறினார். ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு வேறு வழிகளை தேடலாம் என கூறிய சபாநாயகர் நடப்பு கூட்டத்தில் பேசக்கூடாது என எச்சரிக்கை விடுத்தார்.

பிப்ரவரி 07, 2012

இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கான வழிமுறை

குறைந்த கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் வெளிநாடுகளுக்கு செல்வது அதிகரித்துள்ளது. எனவே, அங்கு தங்கியிருக்கும்போது, கார் ஓட்டும் அவசியம் ஏற்படுவதை தவிர்க்க இயலாது. அத்தகைய சூழலில் அந்த நாட்டின் டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் மட்டுமே காரை வாடகைக்கு எடுத்து ஓட்டவோ அல்லது சொந்தமாக கார் வாங்கி ஓட்டவோ முடியும்.

எனவே, வெளிநாடு செல்பவர்கள் எந்த நாட்டிற்கு செல்கின்றனரோ அந்த நாட்டின் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது அவசியமாகிறது. திக்கு தெரியாத அயல்நாட்டில் போய் இறங்கியவுடன் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது எளிதான காரியமல்ல. அங்குள்ள டிரைவிங் ஸ்கூல்கள் மூலம் எளிதாக பெற்றுவிடலாமே என்றாலும், கூடுதல் கட்டணத்தை கொடுத்து தண்டம் அழும் சூழ்நிலை ஏற்படலாம்.

இதை தவிர்க்க நம் நாட்டிலேயே இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பெற்றுச்சென்றால் பாதிப் பிரச்னையை குறையும். எனவே, நம் நாட்டிலேய இன்டர்நேஷனல் லைசென்ஸ் பெறுவதற்கான வழிமுறைகளை இங்கே காணலாம்.

சமூக வலைத்தளங்க​ளும் – இஸ்லா​மிய அடிப்படை வாதங்களும்

பல நாடுகளில் சமூகப் புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் முகநூல், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் இந்தியாவில் சமூக பிணைப்புகளை ஏற்படுத்தவில்லை, அது வெறும் அரட்டையடிப்பதற்கான இணைய வசதி மட்டும் தான் என்ற சந்தேகம் இருந்தது, ஆனால் மத்திய அரசாங்கம் முன்னெச்சரிக்கையாக அதன் செயல்பாடுகளில் தலையிடுவதற்கும், தேசிய நலத்திற்கு எதிரான செயல்களை கண்காணித்து தணிக்கை செய்வதற்குமான முயற்சியில் சட்ட வரைவுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

ஆனால் எனது தமிழ் முகநூல் facebook நண்பர்களிடம் கடந்த இரண்டு நாட்களாக ஒரு குறிப்பிட்ட விடயத்தை பற்றிய தீவிர விமர்சனங்கள், பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது. அது போன்ற கடுமையான பின்னோட்டங்கள் comments கள் , அணுமின் எதிர்ப்புகளுக்கோ அல்லது மூவர் தூக்கு தண்டனை எதிர்ப்பிற்கோ, முல்லை பெரியாறு அணை விவகாரத்திற்கோ கூட எழுந்தது இல்லை.

அது இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் கடையநல்லூரில் வாழும் “இஸ்லாமிய நாத்திகர்” ஒருவரின் வாழ்க்கை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. அவரை காப்பாற்ற உடனடியாக உதவி தேவை என்றொரு அவசர செய்தியை நண்பர் தனது முகநூலில் வெளியிட்டது தான் தாமதம்… கொட்டி தீர்த்துவிட்டனர்..

பிப்ரவரி 06, 2012

பிப்ரவரி 14ல் முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்!

உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களுக்கு நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். அவ்வாறு அழைக்கப்பட்ட போராட்டங்களில் பங்கு கொண்டும் இருக்கிறீர்கள்.

அதுபோன்ற போராட்டங்களில் ஒன்றாக பிப்ரவரி 14 போராட்டத்தை நீங்கள் கருதிவிட வேண்டாம். தலைவர்களுக்குப் புகழ் சேர்ப்பதற்காகவோ, அரசியல்வாதிகளிடம் உங்களைக் காட்டி தலைவர்கள் ஆதாயம் அடைவதற்காகவோ, கேளிக்கை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிப்பதற்காகவோ, தலைவர்களின் தர்ம தரிசனத்துக்காகவோ உங்களை அழைக்கவில்லை.

இது முழுக்க முழுக்க உங்களுக்காகவும், உங்கள் நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவும், நீங்கள் படும் அவஸ்தைகளை உங்கள் வழித் தோன்றல்கள் பெறக்கூடாது என்பதற்காகவும் நடத்தப்படும் வாழ்வுரிமைப் போராட்டமாகும்.

இந்த நாட்டில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் உங்கள் கண்ணெதிரில் உயரத்துக்குச் சென்று கொண்டிருப்பது நீங்கள் அறிந்ததுதான். எல்லா சமுதாயத்தவரும் உயர் கல்வி பெற்று நல்ல வேலை வாய்ப்புக்களையும், அரசியல் அதிகாரத்தையும் பெற்றுள்ளதை நாம் அறிவோம்.ஆனால் உங்களின் நிலை என்னவென்பது உங்களுக்குத் தெரியுமா?

ஈரான் மீதான நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்

வாஷிங்டன்:
ஈரான் மீது ராணுவ தாக்குதலுக்கு தயாராகி வரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவிலும், கனடாவிலும் கண்டன போராட்டங்கள் நடைபெற்றன. நூற்றுக்கணக்கான போர் எதிர்ப்பு ஆர்வலர்களின் தலைமையில் இரு நாடுகளின் முக்கிய நகரங்களில் பேரணிகள் நடந்தன.

அமெரிக்காவில் வாஷிங்டன் டி.சி, நியூயார்க், போஸ்டன், ஷிக்காகோ, ஃபிலடல்பியா, சான் பிரான்சிஸ்கோ உள்பட அறுபது நகரங்களில் போராட்டங்கள் நடந்தன. நியூயார்க்கில் இஸ்ரேல் தூதரகம், அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் ஆகியவற்றிற்கு முன்னால் திரண்ட மக்கள் “No war, no sanctions, no intervention, no assassinations,” (போரும் வேண்டாம், பொருளாதார தடைகளும் வேண்டாம், தலையீடுகளும் வேண்டாம், கொலைகளும் வேண்டாம்” என கோரும் பேனர்களை கைகளில் ஏந்தியிருந்தனர்.

கனடாவில் முக்கிய நகரங்களான வான்கோவர், கால்கரி ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடந்தன. ஈரானின் மீது இஸ்ரேல் விமான தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியான சூழலில் போர் எதிர்ப்பு ஆர்வலர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதைப்போன்ற போராட்டங்கள் பிரிட்டன், அயர்லாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

பிப்ரவரி 05, 2012

குருதிக் குளமாக மாறிய சிரியா

டமாஸ்கஸ்:பதினொன்று மாத சிரியா அரசு எதிர்ப்பு போராட்டத்தில் மிக அதிகமாக இரத்தம் சிந்தப்பட்ட தாக்குதலில் ஹிம்ஸ் நகரத்தில் 300க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் டாங்குகளும், மோர்ட்டார்களும் உபயோகித்து ஹிம்ஸை தாக்கிய சிரியாவின் வெறி பிடித்த ராணுவம் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை சுட்டுக் கொலைச் செய்ததாக அல் ஜஸீரா கூறுகிறது.

1300 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சிரியா எதிர்ப்பு போராளி இயக்கமான ஃப்ரீ சிரியா ஆர்மி அரசு ராணுவ செக்போஸ்ட் மீது நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பழிவாங்க சிரியாவில் விடுதலை போராட்டம் முதலில் துவங்கிய ஹிம்ஸ் நகரத்தில் ராணுவம் கோரத்தாண்டவத்தை அரங்கேற்றியது. மரண எண்ணிக்கை 400ஐ தாண்டும் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அருகில் உள்ள நகரமான காலிதியாவிற்கு ராணுவம் தனது தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது. இங்கேயுள்ள மருத்துவமனை நிறைந்து வழிந்ததால் வெளியே பந்தல்கட்டி காயமடைந்தவர்கள் கிடத்தப்பட்டுள்ளனர்.

சர்ச்சைக்குரிய விளம்பரம்: ஸாம்சங்கிற்கு ஈரான் எதிர்ப்பு

சியோல்:இஸ்ரேலி உளவாளிகள் ஈரானின் அணுசக்தி நிலையத்தை தகர்ப்பது போன்ற விளம்பரத்தை பரப்புரைச் செய்த தென்கொரியாவின் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான ஸாம்சங்கிற்கு ஈரான் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து ஈரானில் ஸாம்சங்கின் தயாரிப்புகளுக்கு தடை ஏற்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக ஈரான் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இஸ்ரேல் தொலைக்காட்சி சேனலான ‘ஹாட்’ டில் ஸாம் சங்கின் ‘கேலக்ஸி டேப்’ கம்ப்யூட்டர் தொடர்பாக வெளியான விளம்பரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதேவேளையில் இவ்விளம்பரத்திற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என ஸாம்சங் நிறுவனம் கூறியுள்ளது.

ஈரான் அணுசக்தி நிலையம் போன்ற ஒரு கட்டிடத்திற்கு அருகே உள்ள ஒரு சிற்றுண்டி சாலையில் இருந்து கொண்டு இரண்டு மொஸாத் உளவாளிகள் நடத்தும் ஆபரேசன் இந்த விளம்பரத்தில் காட்சிகளாக உள்ளன. இதில் ஒருவர் தான் கையில் வைத்திருக்கும் ஸாம்சங்கின் ‘கேலக்ஸி டாபின்’ பொத்தான்களை அழுத்தும்போது சற்று தொலைவில் இருக்கும் அணுசக்தி நிலையம் வெடித்து சிதறுகிறது.

பிப்ரவரி 03, 2012

அப்துல் நாஸர் மஃதனிக்கு எதிராக புதிய ஆதாரங்களை ஜோடிக்கும் கர்நாடகா பாஜக அரசு

பெங்களூர்:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் விசாரணைக்கு இடையே பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனிக்கு எதிராக புதிய ஆதாரங்களை ஆஜர்படுத்த அரசு தரப்பு முயற்சித்து வருகிறது.

ஆவணங்களின் நகல்களை எதிர்தரப்பு வழக்கறிஞருக்கு அளிக்காமல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு மஃதனியின் வழக்கறிஞர் பி.உஸ்மான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அரசு தரப்பு வாதம் பூர்த்தியானதை தொடர்ந்து எதிர்தரப்பின் பதில் வாதத்திற்காக வழக்கு விசாரணை பிப்ரவரி ஏழாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் செல்போன் தொடர்பான குற்றங்கள்

புதுடெல்லி:செல்போன்களில் நாளுக்கு நாள் புதிய வசதிகளும், தொழில்நுட்பங்களும் அறிமுகமாகி வரும்நிலையில், இதைப் பற்றி கவலை தரும் இன்னொரு தகவலும் வெளியாகியுள்ளது.

வரும் 2013ம் ஆண்டில் இந்திய நீதிமன்றங்களில் பதிவாகும் மூன்றில் ஒரு பங்கு வழக்குகளில் செல்போன்கள் எதாவது ஒரு விதத்தில் தொடர்புடையதாக இருக்கும் என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞரும், இணையம் தொடர்பான சைபர் சட்ட வல்லுனருமான பவன் துக்கல் கூறியுள்ளார்.

செல்போன் பயன்பாடு அதிகரிப்பதே இதற்கு காரணம் என்ற அவர், இப்போது பெரும்பாலான குற்றங்கள் செல்போன் மூலமே நடக்கின்றன என்றும் கவலை தெரிவித்தார். மக்களின் செல்போன் நடவடிக்கைகளை கண்காணித்து, அதற்கேற்ப ஒழுங்குமுறைகளை உருவாக்க, தனியாக ஒரு சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து: உச்சநீதிமன்றம்

டெல்லி:2ஜி வழக்கில் தொடர்புடைய அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ஸ்பெக்ட்ரம் லைசென்களையும் உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

11 தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 122 லைசென்ஸ்களையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த 122 லைசென்ஸ்களில் 85 லைசென்ஸ்கள் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

ரத்து செய்யப்பட்ட லைசென்ஸ்களில் டாடா நிறுவனத்தின் 3 லைசென்ஸ்களும், வீடியோகான் நிறுவனத்தின் 21 லைசென்ஸ்களும், லூப் டெலிகாம் நிறுவனத்தின் 21 லைசென்ஸ்களும், யூனிநார் நிறுவனத்தின் 22 லைசென்ஸ்களும், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் 13 லைசென்ஸ்களும், சிஸ்டமா-ஸ்யாம் நிறுவனத்தின் 21 லைசென்ஸ்களும், எடிசலாட்-டிபி நிறுவனத்தின் 15 லைசென்ஸ்களும், எஸ் டெல் நிறுவனத்தின் 6 லைசென்ஸ்களும், ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் 9 லைசென்ஸ்களும் அடக்கம்.

பிப்ரவரி 02, 2012

ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் எதிர்வருகிற நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஒபாமாவே போட்டியிடுகிறார்.

குடியரசு கட்சி சார்பில் போட்டியிட வேட்பாளர் தெரிவு நடைபெற்று வருகிறது.
இக்கட்சி சார்பில் போட்டியிட விரும்புபவர்களின் செல்வாக்கை அறிய ஒவ்வொரு மாகாணத்திலும் உட்கட்சி தேர்தல் நடத்தப்படுகிறது.
குடியரசு கட்சி சார்பில் மிட் ரோம்னி உட்பட 12க்கும் மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர். பல மாகாணங்களில் ரோம்னி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார்.

எனவே தேர்தலில் மிட் ரோம்னி வேட்பாளராக நிறுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈராக்கில் ஒரே நாளில் 17 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

குற்றங்களில் ஈடுபட்ட 17 பேருக்கு ஒரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இத்தகவலை அந்நாட்டு நீதித்துறை அமைச்சரகம் தெரிவித்துள்ளது. ஈராக்கில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் மட்டுமின்றி பொருட்களுக்கு சேதம் விளைவிக்கும் குற்றங்களுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.

இதேபோன்று கடந்த மாதம் 34 பேருக்கு ஒரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் மட்டும் 51 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு பின்னடைவு-ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபன் ஆட்சி

காபூல் : ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள நேட்டோ படைகளின் வெளியேற்றத்துக்கு பின் பாகிஸ்தானின் மறைமுக உதவியுடன் ஒட்டு மொத்த ஆப்கானிஸ்தானும் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் வரும் என்று ரகசிய அமெரிக்க ராணுவ தகவலை மேற்கோள் காட்டி அமெரிக்காவிலிருந்து வெளியாகும் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது.

இது குறித்து கேட்கப்பட்ட போது நேட்டோவின் செய்தி தொடர்பாளர் ஜிம்மி கம்மிங்ஸ் அமெரிக்க ராணுவ தகவலை உறுதி செய்தார். ஆனால் அது நேட்டோ படைகள் வெளியேற்றத்தின் பிறகு ஆப்கனில் ஏற்பட உள்ள மாற்றங்கள் குறித்த 

பல்வேறு வாய்ப்புகள் குறித்த அறிக்கையே என்று கூறினார்.

அதை முழுமையான ஆய்வறிக்கை அல்ல என்று ஜிம்மி கூறினாலும் இவ்வறிக்கை அமெரிக்காவின் தோல்வியை காட்டுவதாகவே அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். ஹமீது கர்சாயின் அரசு மற்றும் அமெரிக்காவுடன் சமரசம் செய்து கொள்ள கூடாது என்ற தாலிபானின் வாதத்துக்கு வலு சேர்ப்பதாக இவ்வறிக்கை உள்ளது.

மமக தலைவர் ரிபாயிக்கு ஆயுள் தண்டனை!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜே.எஸ். ரிபாயிக்குப் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் கொலை வழக்கு ஒன்றில் ஆயுள்தண்டனை விதித்துத் தீர்ப்பு கூறியுள்ளது.

நாகூரைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இந்து முன்னணி தலைவரான இவரின் வீட்டுக்குக் கடந்த 1995 ஆம் ஆண்டு தபால் மூலம் பார்சல் குண்டு ஒன்று வந்தது. அதிலுள்ள குண்டுவெடித்து முத்துக்கிருஷ்ணனின் மனைவி தங்கம் பரிதாபமாக பலியானார். இந்த வழக்கில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தற்போதைய தலைவர் ரிபாயி, குத்புதீன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு பூந்தமல்லியிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று இவ்வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில், தற்போது ஜாமீனில் உள்ள ரிபாயி, குத்புதீன் மற்றும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக தீர்ப்பானது. சிறையில் விசாரணை கைதிகளாக இருந்த இருவர் விடுதலை செய்யப்பட்டனர்.

47 நாட்கள் நடைபயணமாக சென்று மக்காவை அடைந்த அமீரக குடிமகன்

துபாய்:அமீரகத்தைச் சேர்ந்த ஜலால் பின் தானேயா உடல் மற்றும் மனதளவில் பாதிப்புடைய சிறுவர்களுக்கு உதவி புரியும் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நன்கொடை சேகரிக்கும் விதமாக அபுதாபியில் உள்ள ருவைசிலிருந்து மக்காவிற்கு 47 நாட்களுக்கு முன் தனது லட்சிய பயணத்தைத் தொடங்கினார். அவர் 47 நாட்களுக்குப் பின் கடந்த திங்கள் அன்று மக்காவை அடைந்துள்ளார்.

அவர் மக்காவில் உள்ள புனித காபாவை அடைந்த பின்னர் தனது ட்விட்டரில் ” ‘புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே’ நான் புனித மஸ்ஜிதுல் ஹராமை அடைந்து விட்டேன்” என்று கூறியுள்ளார். மேலும் நான் எனது லட்சிய பயணத்தை முடித்துவிட்டேன் என்றும் தற்போது உம்ரா செய்யப்போகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினின் சுயசரிதை – எதிர்ப்புகளுக்கு இடையே வெளியீடு

கொல்கத்தா:சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினின் சுயசரிதையான ‘நிர்வசன்’(நாடு கடத்தப்பட்டவர்) தொகுப்பு மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொல்கத்தாவில் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

அந்த புத்தகத்தை வெளியிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புத்தகக் கண்காட்சி அரங்கத்துக்கு வெளியிலேயே புத்தகம் வெளியிடப்பட்டது.

முன்னதாக இந்த சுயசரிதை புத்தக வெளியீட்டுக்காக, புத்தகக் கண்காட்சி நடைபெறும் மைதானத்தில் ஓர் அரங்கு முன்பதிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த புத்தக வெளியீட்டுக்கு எதிர்ப்பு வலுத்ததையடுத்து, சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக புத்தகக் கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் அதை ரத்து செய்துவிட்டனர்.

இந்தியா: பெண் குழந்தைகளுக்கு மிக ஆபத்தான இடம் – ஐ.நா

புதுடெல்லி:பெண் குழந்தைகளுக்கு உலகிலேயே அபாயகரமான இடம் எது? என்று கேள்வி எழுப்பினால் இனி உறுதியாக பதில் கூறமுடியும். ஐ.நா புள்ளி விபரத்தின் அடிப்படையில் ஒரு வயதிற்கும் ஐந்து வயதிற்கும் இடைப்பட்ட பெண் குழந்தைகள் வேதனைகளையும், துயரத்தையும் அனுபவிப்பதில் நமது இந்திய தேசம் முன்னணியில் உள்ளது.

ஆண் குழந்தைகளை விட ஒரு வயதிற்கும் ஐந்து வயதிற்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் 75 சதவீதம் மரணிப்பதாகவும், ஆண்-பெண் மரண சதவீதத்தில் மிக அதிகமான வித்தியாசம் காணப்படும் ஒரே தேசம் இந்தியா என்றும் ஐ.நாவின் அறிக்கை கூறுகிறது.

பெண் குழந்தைகளுக்கு பாரபட்சம் இழைக்கப்படுவதற்கு எதிரான வலுவான எச்சரிக்கையாக இந்த அறிக்கையை ஐ.நா குறிப்பிடுகிறது.

உலகம் முழுவதும் பெண் சிசு கொலைகள் குறைந்தே வருகின்றன. ஆனால், உலகில் பிரசித்திப் பெற்ற நாடுகளான இந்தியாவிலும், சீனாவிலும் இதர நாடுகளை விட பெண் சிசு கொலைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் போதுமானது அல்ல. 2000-ம் ஆண்டு காலக்கட்டங்களில் 56 ஆண் குழந்தைகளுக்கு 100 பெண் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐ.நா அறிக்கை கூறுகிறது.