கடலூர் : மாவட்டத்தில் தலைநகராகிய கடலூரில் அ.தி. மு.க., வெற்றி பெற்றதன் மூலம் 57 ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சர் தொகுதி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. இதனால், தொகுதியில் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள பிரச்னைகளுக்கு விடிவுகாலம் பிறக்கும் என மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். நாடு சுதந்திரம் அடைந்து முதல் முறையாக 1952ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கடலூர் தொகுதியில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் ராமசாமி படையாச்சி வெற்றி பெற்றார். பின்னர் அவர் 1954ம் ஆண்டு காங்., கட்சியில் இணைந்து உள்ளாட்சி துறை அமைச்சராக பதவி வகித்தார். அதன்பிறகு நடந்த 12 சட்டசபை தேர்தல்களில் கடலூர் தொகுதியில் காங்., நான்கு முறையும், அ.தி.மு.க., ஒரு முறையும், ஏழு முறை தி.மு.க., வெற்றி பெற்றன. இருப்பினும் கடலூர் தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் அமைச்சராக முடியவில்லை.
மே 18, 2011
சிதம்பரம் தொகுதி வரலாற்றை மாற்றி அமைத்தது மா.கம்யூ.,
சிதம்பரம் : சிதம்பரம் தொகுதியில் மா.கம்யூ., முதல் முறையாக கைப்பற்றி 1952ம் ஆண்டு முதல் நடந்த 14 சட்டசபை தேர்தல் வரலாற்றை மாற்றி அமைத்துள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சிதம்பரம் சட்டசபை தொகுதியில் கடந்த 1952ம் ஆண்டு முதல் நடந்த 13 சட்டசபை தேர்தல்களில் ஐந்து முறை காங்., நான்கு முறை தி.மு.க., மூன்று முறை அ.தி.மு.க., ஒரு முறை த.மா.க., தொகுதியை கைப்பற்றின. தி.மு.க., - அ.தி.மு.க., தொகுதியில் நேரடியாக களமிறங்கி வந்தன. அல்லது இரு கட்சிகளில் ஒரு கட்சி கண்டிப்பாக போட்டியிட்டு வந்தது. தி.மு.க., - காங்., - அ.தி.மு.க., ஆகிய மூன்று கட்சிகள் மட்டுமே தொகுதியில் வெற்றி பெற்று வந்த நிலையில் கூட்டணிக்கு தொகுதியை விட்டுக் கொடுத்தால் வெற்றி பெற்றதில்லை. கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் மா.கம்யூ.,க்கு ஒதுக்கப்பட்டு தோல்வியை தழுவியது. ஆனால் முதல் முறையாக இந்த தொகுதியில் காங்., - தி.மு.க., - அ.தி.மு.க., போட்டியிடாமல் தி.மு.க., கூட்டணியில் மூவேந்தர் முன்னேற்றக் கழகமும், அ.தி.மு.க., கூட்டணியில் மா.கம்யூ., கட்சியும் களமிறங்கின. இவர்களில் யார் வெற்றி பெற்றாலும் புதிய கட்சியின் எம்.எல்.ஏ., கிடைப்பார் என்ற நிலை ஏற்பட்டது. சமீப காலமாக சிதம்பரத்தில் வெற்றி பெறும் கட்சிக்கு எதிரணிதான் ஆட்சி அமைக்கும் என்ற சென்டிமென்ட் கூறப்பட்டதால் தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணிகள் இந்த தொகுதியில் போட்டியிட பின்வாங்கி விட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த தேர்தலில் 17 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க.,விடம் தோல்வியை தழுவிய மா.கம்யூ., கட்சி இந்த தேர்தலில் அ.தி.மு.க., ஆதரவுடன் வெற்றி பெற்று சிதம்பரம் தொகுதி அரசியல் வரலாற்றை மாற்றி அமைத்துள்ளது.
மும்பை மாணவர்களுடன் போட்டியிட தயாரா: ஒபாமா
வாஷிங்டன் : "நீங்கள் முதலிடத்தைத் தக்க வைக்க வேண்டுமானால், இந்திய மற்றும் சீன மாணவர்களுடன் நீங்கள் கடுமையான போட்டியில் இறங்கத் தயாராக வேண்டும்' என்று, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தின் மெம்பிஸ் நகரில், நேற்று மாணவர்களிடையே அதிபர் ஒபாமா பேசியதாவது:நீங்கள் முதலிடத்தைத் தக்க வைக்க வேண்டும். அதற்கு பீஜிங் (சீனா) மற்றும் மும்பை (இந்தியா) மாணவர்களுடன் போட்டியிட வேண்டும். அந்தப் போட்டி கடுமையானதாக இருக்கும்.அவர்கள் கடும் பசியில் உள்ளனர்; கடினமாக உழைக்கின்றனர். அவர்களைப் போல, நீங்களும் தயாராக வேண்டும். கடினமாக உழைக்க விரும்பினால், ஒரு தொழிற்சாலைக்குச் செல்லலாம். ஆனால், அந்தக் காலம் மலையேறி விட்டது.

மே 16, 2011
முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்றார்: 33 மந்திரிகளும் பதவி ஏற்பு
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று தலைமை அலுவலகத்தில் கூடி ஜெயலலிதாவை, சட்ட சபை தலைவராக தேர்வு செய்தனர். இதையடுத்து கவர்னர் பர்னாலாவை நேற்று மாலை ஜெயலலிதா சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதை ஏற்றுக் கொண்ட கவர்னர் பர்னாலா, ஆட்சி அமைக்குமாறு ஜெயலலிதாவுக்கு கடிதம் அனுப்பினார். புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா இன்று மதியம் 12.15 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்தது. மதியம் 12.10 மணிக்கு விழா அரங்குக்கு ஜெயலலிதா வந்தார். அவரை தலைமை செயலாளர் மாலதி பூச்செண்டு கொடுத்து வர வேற்றார்.
அனைவருக்கும் வணக்கம் தெரிவித்த ஜெயலலிதா பிறகு விழா மேடைக்கு சென்று அமர்ந்தார். அவரைத் தொடர்ந்து புதிய அமைச்சராக பதவி ஏற்க இருந்தவர்கள் மேடைக்கு சென்று தங்களுக்கு உரிய இருக்கைகளில் அமர்ந் தனர். 12.40 மணிக்கு கவர்னர் பர்னாலா வந்தார். அவரை ஜெயலலிதா மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார்.
மாநிலங்களில் செல்வாக்கை இழந்து வரும் காங்கிரஸ்
தமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல் முடிவுகள், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணிக்கு வலு சேர்ப்பதாக இருந்தாலும், உண்மையில், அசாம் தவிர மற்ற மாநிலங்களில், காங்கிரஸ் தனது செல்வாக்கை இழந்து வருகிறது என்பதை காட்டுகிறது.
தமிழகத்தில், தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் இணைந்து காங்கிரஸ் போட்டியிட்டது. பயங்கர இழுபறிக்கு பின், காங்கிரசுக்கு இக்கூட்டணியில் 63 இடங்கள் ஒதுக்கப்பட்டது. கட்சிக்குள் சீட் ஒதுக்கீடு செய்வதில் எழுந்த கோஷ்டி பூசல், கட்சியை சந்தி சிரிக்க வைத்தது. அப்போதே தமிழகத்தில், காங்கிரசின் தலையெழுத்தை மக்கள் கணித்து விட்டனர்.தேர்தல் பிரசாரத்திற்காக, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, பொதுச் செயலர் ராகுல், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள் வந்தனர். இவர்களால், கட்சிக்கு செல்வாக்கு சேர்க்க முடியவில்லை. வெறும் ஐந்து இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடிந்தது. தி.மு.க., தலைமையிலான கூட்டணியை ஒட்டு மொத்தமாக பின்னுக்குத் தள்ளி, அ.தி.மு.க., ஆட்சியைப் பிடித்துள்ளது.

கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை; பிரதமர்- அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை
பெங்களூரு: கர்நாடகாவில் அரசியலமைப்புக்குட்பட்டு ஆட்சி நடக்கவில்லை என்றும், இங்கு லஞ்சம், ஊழல் மலிந்து விட்டதாகவும், எனவே இங்கு ஜனாதிபதி ஆட்சியை பிரகடனம் செய்ய வேண்டும் என கவர்னர் பரத்வாஜ் ரிப்போர்ட் அனுப்பியுள்ளார். உள்துறை அமைச்சகம் பெற்றுக்கொண்ட இந்த ரிப்போர்ட்டை அலசி ஆராய்ந்து வருகிறது. இதற்கிடையில் கவர்னர் எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் கவர்னர் மாளிகை முன்பு முதல்வர் எடியூரப்பா தலைமையில் இன்று மதியம் 12 மணி அளவில் தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து பிரதமர் மன்மோகன்சிங் மூத்த அமைசச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் டில்லியிலும், கர்நாடக மாநிலத்திலும் அரசியல் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு நீண்ட காலமாகவே பிரச்னை இருந்து வருகிறது. ரெட்டி சகோதரர்கள் முதல் உள்கட்சியில் அதிருப்பதி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் லஞ்சப்புகார் என பல இன்னல்களை சந்தித்ததார். நேற்றுடன் சுமுகமாக முடிந்தது.

தேர்தல் முடிந்ததும் மக்கள் தலையில் "பெட்ரோல் குண்டு!'
பெட்ரோல் விலை லிட்டருக்கு 5.25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் அனைத்து தரப்பினரும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் மூன்று முறை ஏற்பட்டுள்ள விலை உயர்வு இத்தோடு நிற்காது என்றும், இரண்டு வாரங்களுக்குள் மீண்டும் எகிறும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து கொள்ள, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் 2010, ஜூன் 26ல் அனுமதி அளித்தது. விலை உயர்வுக்குமுன் மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்ற பின் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.
மே 15, 2011
மக்களின் கடும் அதிருப்தியை சந்தித்த, தி.மு.க., ஆட்சிக்கு, மக்கள் முடிவு கட்டியுள்ளனர். அடுத்து அமையும், அ.தி.மு.க., ஆட்சியிடம் மக்கள் அதிகளவு எதிர்பார்த்து உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளாக நடந்த, தி.மு.க., ஆட்சியில், மின்வெட்டு, எங்கும் ஊழல், ஸ்பெக்ட்ரம் விவகாரம், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, உள்ளாட்சி பிரதிநிதிகளின் அட்டகாசம், நில ஆக்கிரமிப்புகள் போன்றவற்றால் அதிருப்தியடைந்திருந்த மக்கள், இந்த தேர்தலில், தி.மு.க.,வை படுதோல்வி அடையச் செய்துள்ளனர்.அடுத்து அமையும், அ.தி.மு.க., ஆட்சி, இவற்றை எல்லாம் சரிசெய்ய வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
முதலில், மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு காண, அ.தி.மு.க., அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அடுத்த மூன்று மாதங்களுக்கு காற்றாலை மின்சாரம் கிடைக்கும் என்பதால், அதை பயன்படுத்தி மின்வெட்டை குறைக்கலாம். அதேநேரத்தில், புதிய மின் உற்பத்தி திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும். இல்லாவிட்டால், காற்றாலை மின்சாரம் நின்றவுடன், மீண்டும் பழைய நிலைக்கு தமிழகம் போய்விடும்.
தமிழகத்தின் நிதிநிலைமை கடந்த ஐந்தாண்டுகளில் மிகவும் சீர்குலைந்து விட்டது. தற்போதைய நிலையில், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் உள்ளது. இந்த கடனை திருப்பி செலுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. எனவே, நிதிநிலையை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இலவசங்கள் அதிகம் வழங்குவது ஓட்டுக்காக மட்டுமே. ஆனால், இலவசங்கள் பற்றிய அறிவிப்புக்கு மக்களிடையே வரவேற்பு இல்லை என்பது தேர்தல் முடிவுகள் மூலம் தெரிந்து விட்டது. எனவே, அ.தி.மு.க.,வும் தன் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட இலவசங்கள் பற்றிய அறிவிப்புகளை, உடனே செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டக் கூடாது. முதலில் நிதிநிலையை சீர் செய்துவிட்டு, அதன்பின் இலவசங்களை வழங்கலாம்.
அடுத்ததாக, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரத்தில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. நல்ல போலீஸ் அதிகாரிகள் பலர் இருந்தும், ஆளுங்கட்சிக்காரர்களின் மிரட்டல்களுக்கு ஆளாக வேண்டிய நிலை இருந்தது. குறிப்பாக, மதுரை உட்பட தென் மாவட்டங்களில், ஆளுங்கட்சியினரின் வேலைக்காரர்களாகவே போலீசார் செயல்பட்டனர்.சில அமைச்சர்கள், தங்களது மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் யாராவது சொத்து வாங்கினால் கூட, தங்களிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வைத்திருந்தனர். இதை எல்லாம் முறியடித்து, போலீசாருக்கு முழு அதிகாரம் வழங்கி, தவறு செய்பவர்களை தண்டிக்க வேண்டும்.
அதேபோல, அதிகளவில் ஊழல் செய்து சொத்துக்களை குவித்து வைத்துள்ள, "மாஜி'யாகிவிட்ட, அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்து, சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.இவை தவிர, வேளாண்மை துறையின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தமிழகம் தொழில் துறையில் வளர்ந்துள்ள போதிலும், வேளாண்மை வளர்ச்சி மிகவும் மோசமாக உள்ளது. இத்துறையில் நடந்த ஊழல்களை களைந்து, விவசாயிகளுக்கு உண்மையான பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.இதேபோல, கல்வி, சுகாதாரம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்தி, மக்களுக்கு அதன் பலன்கள் சென்றடைவதை உறுதி செய்தால், அரசுக்கு கெட்ட பெயர் வராது. அடுத்தடுத்து வரும் தேர்தல்களை தைரியமாக சந்திக்கலாம்.

சட்டம் ஒழுங்கு, தடையற்ற மின்சாரம், கட்டுக்குள் விலைவாசி: மக்கள் ஆர்வம்
மக்களின் கடும் அதிருப்தியை சந்தித்த, தி.மு.க., ஆட்சிக்கு, மக்கள் முடிவு கட்டியுள்ளனர். அடுத்து அமையும், அ.தி.மு.க., ஆட்சியிடம் மக்கள் அதிகளவு எதிர்பார்த்து உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளாக நடந்த, தி.மு.க., ஆட்சியில், மின்வெட்டு, எங்கும் ஊழல், ஸ்பெக்ட்ரம் விவகாரம், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, உள்ளாட்சி பிரதிநிதிகளின் அட்டகாசம், நில ஆக்கிரமிப்புகள் போன்றவற்றால் அதிருப்தியடைந்திருந்த மக்கள், இந்த தேர்தலில், தி.மு.க.,வை படுதோல்வி அடையச் செய்துள்ளனர்.அடுத்து அமையும், அ.தி.மு.க., ஆட்சி, இவற்றை எல்லாம் சரிசெய்ய வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளாக நடந்த, தி.மு.க., ஆட்சியில், மின்வெட்டு, எங்கும் ஊழல், ஸ்பெக்ட்ரம் விவகாரம், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, உள்ளாட்சி பிரதிநிதிகளின் அட்டகாசம், நில ஆக்கிரமிப்புகள் போன்றவற்றால் அதிருப்தியடைந்திருந்த மக்கள், இந்த தேர்தலில், தி.மு.க.,வை படுதோல்வி அடையச் செய்துள்ளனர்.அடுத்து அமையும், அ.தி.மு.க., ஆட்சி, இவற்றை எல்லாம் சரிசெய்ய வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அ.தி.மு.க.,வின் கோட்டையாகியது கடலூர் மாவட்டம்
கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம், 27 ஆண்டுகளுக்குப் பிறகு, அ.தி.மு.க.,வின் கோட்டையாக மாறியுள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி அமைத்த காலங்களில் கூட, கடலூர் மாவட்டத்தில் தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்று வந்தது. கடந்த 84ம் ஆண்டு மற்றும் 91ம் ஆண்டு தேர்தல்களில், மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க., படுதோல்வி அடைந்தது.
இதற்கு அப்போது கூறப்பட்ட காரணம், கடந்த 84ல், எம்.ஜி.ஆர்., உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாலும், அப்போதைய பிரதமர் இந்திரா சுட்டுக் கொல்லப்பட்டதாலும், 91ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்திருந்த காங்., கட்சியின் அப்போதைய பிரதமரான ராஜிவ், தேர்தல் பிரசாரத்தின் போது மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட அனுதாபத்தினாலும், அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றதாக கூறப்பட்டது.
வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள்
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற புதிய எம்.எல்.ஏ.க்கள் வருமாறு:-
கன்னியாகுமரி: 1. கன்னியாகுமரி- பச்சை மால் (அ.தி.மு.க.), 2.நாகர்கோவில்-நாஞ்சில் முருகேசன் (அ.தி. மு.க.), 3. குளச்சல்-பிரின்ஸ் (காங்கிரஸ்), 4. பத்மநாபபுரம்- புஷ்ப லீலா ஆல்பன் (தி.மு.க.), 5. விளவங்கோடு-விஜய தரணி (காங்கிரஸ்), 6. கிள்ளியூர்-ஜான் ஜேக் கப் (காங்கிரஸ்),
நெல்லை: 7. திருநெல்வேலி- நைனார் நாகேந்திரன் (அ.தி. மு.க.), 8. பாளையங்கோட்டை- மைதீன்கான் (தி.மு.க.), 9. நாங்குனேரி-எர்ணாவூர். நாராயணன் (ச.ம.க.), 10. ராதாபுரம்-மைக்கேல் ராயப்பன் (தே.மு.தி.க.), 11. அம்பை - இசக்கி சுப்பையா (அ.தி.மு.க.), 12. ஆலங்குளம்-பி.ஜி.ராஜேந்திரன் (அ.தி. மு.க.), 13. தென்காசி-சரத்குமார் (ச.ம.க.), 14. கடையநல்லூர்- செந்தூர் பாண்டியன் (அ.தி. மு.க.), 15. வாசுதேவநல்லூர்- டாக்டர் துரையப்பா (அ.தி. மு.க.), 16. சங்கரன்கோவில்- சொ.கருப்பசாமி (அ.தி. மு.க.)
மே 14, 2011
3வது முறையாக முதல்வர் ஆகிறார் ஜெயலலிதா அதிமுக ஆட்சியை பிடித்தது
தமிழகத்தில் அதிமுக மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, 3வது முறையாக முதல்வராகிறார். தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 13ம் தேதி தேர்தல் நடந்தது. ஒரு மாதத்துக்குப் பிறகு நேற்று ஓட்டுகள் எண்ணப்பட்டன. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டன. அதன்பின் மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. ஆரம்பத்தில் ஒரு சில தொகுதிகளில் ஓட்டு இயந்திரத்தில் பிரச்னை ஏற்பட்டது. அதன்பின் அவைகள் சரி செய்யப்பட்டு மீண்டும் எண்ணப்பட்டன.
ஓட்டு எண்ணிக்கை ஆரம்பித்தபோதே அதிமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் இருந்தது. நேற்று இரவு 8.45 மணி நிலவரப்படி அதிமுக 123 இடங்களில் வெற்றியும், 24 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. மொத்தம் 151 இடங்களை பிடிக்கும் உறுதியான நிலையில் இருந்தது.

மே 12, 2011
ஐ.ஏ.எஸ்., இறுதித்தேர்வு முடிவு வெளியீடு; தமிழக மாணவர்கள் அபார சாதனை
சென்னை:ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான இறுதிக்கட்ட தேர்வில், தமிழக மாணவர்கள் அபார சாதனை படைத்துள்ளனர். நேற்று வெளியான தேர்வு முடிவில், அகில இந்திய அளவில் முதல் மூன்று இடங்களை தமிழக மாணவர்கள் பிடித்ததுடன் இல்லாமல், ஒட்டுமொத்தத்தில் 100க்கும் மேற்பட்டோர் தேர்வு பெற்று சாதித்துள்ளனர்.
மத்திய தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) ஆண்டுதோறும், ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்காக, அகில இந்திய அளவில் போட்டித் தேர்வுகளை நடத்தி, தகுதியானவர்களை தேர்வு செய்கிறது. இந்த தேர்வுகளில், வழக்கமாக, வட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களே அதிகளவில் தேர்வு பெறுவர். வட மாநிலங்களில், ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட தேர்வுகளுக்கு அதிகளவில் பயிற்சி மையங்கள் இயங்கி வருவதும், அவர்கள் தாய்மொழியான இந்தியில் தேர்வெழுதும் வாய்ப்பும், அதிகளவில் வெற்றிபெற வழி வகுக்கிறது. இத்தகைய பயிற்சி மையங்கள், அதிகளவில் தமிழகத்தில் இல்லாதது குறையாக இருந்தது. சென்னையில் உள்ள அண்ணா ஐ.ஏ.எஸ்., அரசு பயிற்சி மையம் மட்டும், மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வந்த நிலையில், இத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில், சைதை துரைசாமி மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் உட்பட பல பயிற்சி மையங்கள் தோன்றியபின், தமிழக மாணவர்கள் அதிகளவில் வெற்றி பெற்று வருகின்றனர்.

ஓட்டு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு : 234 தொகுதிகளிலும் நாளை காலை 8 மணிக்கு ஆரம்பம்
""வழக்கமான ஓட்டுஎண்ணிக்கையை விட முடிவுகளை வெளியிட, 10 முதல் 15 சதவீதம் கூடுதல் நேரம் ஆகும்,'' என, தலைமை தேர்தல் அதிகாரிபிரவீன்குமார் தெரிவித்தார்.
தேர்தல் ஏற்பாடுகள் குறித்துபிரவீன்குமார் கூறியதாவது:தமிழகத்தில் 91 மையங்களில் 234 தொகுதிகளுக்கான ஓட்டுகள் நாளை எண்ணப்படுகிறது. இதில், 16 ஆயிரத்து 966 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். பாதுகாப்பு பணியில் 45 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதில், 27 கம்பெனிகள் ஏற்கனவே வந்துவிட்டன. மீதம் 18 கம்பெனிகள் இன்று வருகின்றன.காலை 5 மணிக்கே, ஓட்டுஎண்ணிக்கை மையத்துக்கு,தொகுதியின் பார்வையாளர்,தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி வந்துவிடுவர். எந்தெந்த மேஜையில் ஓட்டு எண்ணிக்கைக்கு எந்த ஊழியரை பயன்படுத்துவது என்பது அப்போது முடிவு செய்யப்படும். காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியதும், தொகுதி தேர்தல் அதிகாரியின் மேஜையில் தபால் ஓட்டுகள்எண்ணப்படும்.அரை மணி நேரத்துக்கு பின், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் ஓட்டுகள் எண்ணப்படும்.

மே 11, 2011
எதிர்மறை எண்ணங்கள் உடையவரா நீங்கள்?
மனநோய்கள் பல விதம். ஒவ்வொன்றும் ஒரு விதம். அதுபோலவேதான் அதற்கான தோற்றக் காரணிகளும் அமைந்திருக்கின்றன. தனியாள் வேற்றுமைகள் மனநோயின் பரிமாணத்தை மாற்றி விடுகின்றன.
* ஹிட்லர் போன்ற சில அதிகார வர்க்கத்தினரை கூட மனநோய் பாதித்திருந்தாலும் அவர்களை மக்கள் ஒதுக்கி விடவில்லை. பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம், சூழ்நிலை, மனவாகு, உடல் அமைப்பு என்கிற பல்வேறு கூறுகள் மனநோயின் வித்துகளாக உள்ளன. அன்பு மனைவியை பறிகொடுத்த ஒருவன் பித்தனாகி விடுகிறான். ஆனால் மற்றொருவன், மனைவி இறந்தால்தான் புது மாப்பிள்ளை என்றாகி விடுகிறான். நெருக்கடியான காலங்கள் ஒருவரை மனநோயாளியாக மாற்றி விடுகிறது.
5 மாநிலங்களில் ஆளும்கட்சிகளுக்கு சிக்கல்: பரபரப்பான கருத்துக் கணிப்பு முடிவுகள்
ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலின் முடிவு பற்றி, ஒட்டுப்பதிவுக்கு பின் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பரபரப்பான முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழகம் உட்பட தேர்தல் நடந்த ஐந்து மாநில மக்கள், ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் என்பதும், ஆளுங்கட்சிகளுக்கு சிக்கல் ஏற்படும் என்பதும் தெரியவந்துள்ளது.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மேற்கு வங்கத்தில் நேற்று மாலையுடன் கடைசிகட்ட ஓட்டுப்பதிவு முடிந்தது. மேற்கு வங்கம் தவிர மற்ற நான்கு மாநிலங்களில், ஒரு மாதத்திற்கு முன்பே ஓட்டுப்பதிவு முடிந்து இருந்தது. ஓட்டுப்பதிவுக்கு பின், கருத்துக் கணிப்புகள் நடத்திய பல மீடியாக்கள், அதன் முடிவை, மேற்கு வங்கத்தில் கடைசி கட்ட ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு தான் வெளியிட வேண்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு இருந்தது. இதனால், தேர்தல் முடிவு எப்படியிருக்கும் என பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஓட்டு எண்ணிக்கை நாளை மறுநாள் நடக்கிறது.

மே 10, 2011
இன்றோடு முடிந்தது தேர்தல்!! 13ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை.
இன்று மேற்குவங்க சட்டசபைக்கான இறுதிகட்ட தேர்தல் நடைபெறுகின்றது. இதில் 14 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறுகின்றது. மொத்தம் 97 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று தேர்தல் நடைபெறுகின்ற அனைத்துத் தொகுதிகளும் மொவோயிஸ்ட்களின் ஆதிக்கம் அதிகம் உள்ள தொகுதிகள் ஆகும். எனவே, இந்தத் தொகுதிகளில் உச்சகட்டப் பாதுகாப்புக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
மேற்குவங்க சட்டசபைக்கான தேர்தல்கள் 6 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில், இதுவரை மொத்தம் ஐந்த கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், இன்று நடைபெறும் ஆறாவது மற்றும் இறுதிகட்ட தேர்தலுக்கு மாவோயிஸ்ட்களின் அச்சுறுத்தல் இருப்பதால் துணைராணுவப்படையின் பாதுகாப்புடன் தேர்தல் நடைபெறுகின்றது.
மே 09, 2011
பாபர் மஸ்ஜித் வழக்கு : என்னது மூனா பிரிக்கனுமா?????? அலஹாபாத்தின் டூபாகூர் தீர்ப்பிற்கு இடைக்கால தடை
பாபர் மஸ்ஜித் வழக்கில் அலஹாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய அநியாயத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று திங்கள் கிழமை காலை விசாரனைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த சுப்ரிம் கோர்ட்டி நீதிபதிகள் ”முதல் கட்டமாக அலஹாபாத் நீதிமன்றம் வழங்கிய அநியாயத் தீர்ப்பிற்கு இடைக்கால தடை” விதித்துள்ளனர்.
மேலும் அலஹாபத் உயர் நீதிமன்றத்தின்
திர்ப்பு முற்றிலும் வழக்கத்திற்கு மாறானதாகவும் அதாவது வழக்கமாக தீர்ப்பளிக்கும் நீதிக்கு எதிரானதாகவும் மிகவும் ஆச்சிரிமானதாகவும் (Strange and surprising) உள்ளது என கடுமையாக விமர்ச்சித்துள்ளனர்.
இவ்வாறு பிரித்து தீர்ப்ளித்துள்ளது, இதே போன்று பல தொடர்ச்சியான வழக்குகள் வர வாய்ப்பாக அமைந்து விட்டது எனவும் சுப்ரிம் கோர்ட் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

அதாவது இந்த தீர்ப்பை பார்த்த பிறகு
பிளஸ் 2 தேர்வு முடிவு ; மாணவ - மாணவிகள் ;சம அளவில் சாதனை
பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளின் முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. இதில் வழக்கம் போல மாணவியே முதலிடத்தை பிடித்து அபார சாதனை படைத்துள்ளார். விழுப்புரம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த மாணவன் வேல்முருகன் இரண்டாமிடத்தை பிடித்தார். 3 வது இடத்தை மாணவ, மாணவிகள் 4 பேர் பிடித்துள்னர். கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரித்திருக்கிறது.
பதினெட்டு ஆண்டுகள் கழித்து மும்பை கலவரம் தொடர்பான வழக்கிலிருந்து முஸ்லிம்கள் விடுவிக்கப்பட்டனர்
மும்பை:பதினெட்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பிறகு கடந்த மே 4 அன்று சுலைமான் பேக்கரி வழக்கில் கைது செய்யப்பட்ட ஒன்பது முஸ்லிம்களை மும்பை உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு பிறகு நடந்த கலவரத்தில் போலீசார் முஸ்லிம்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். ஆனால் அப்பாவி முஸ்லிம்கள் மீது குற்றம் சாட்டி சிறையில் அடைத்தனர்.
மனித உரிமை பாதுகாப்பு கழகத்தின் தலைவரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் யூசுப் முச்சலாவின் மேற்பார்வையில் வழக்கறிஞர் விஜய் பிரதன் மற்றும் அவருடைய துணை வழக்கறிஞர் சகீர் கான் கூறியதாவது மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி சௌந்தூர் பல்டோட, அஷ்பாக் அஹ்மத், நூருல் ஹுதா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்துள்ளதாகவும் ஆனால் அஷ்பாக் அஹ்மத், நூருல் ஹுதா இருவரும் பதினெட்டு வருட சிறைவாசத்தால் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இவ்வழக்கில் சுலைமான் பேக்கரி பகுதியை சேர்ந்த 76 பேர் கைது செய்யப்பட்டனர்.
உலக வரலாறு படைத்த மேற்குவங்க சபாநாயகர்
மேற்குவங்கத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது சாரி கூட்டணி, தொடர்ந்து, 34 ஆண்டுகள் ஆட்சியில் நீடித்ததை போல, அம்மாநில சபாநாயகர் ஹசிம் அப்துல் கலிம், 1982, மே 6ம் தேதியில் இருந்து, தொடர்ந்து, 29 ஆண்டுகள், இடது சாரி கூட்டணி ஆட்சிக்கு சபாநாயகர் பதவி வகித்தார்.
இதன் மூலம், உலகிலேயே, அதிக ஆண்டுகள், சபாநாயகராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஹசிம் அப்துல் கலிம். மேற்குவங்கத்தில், நடப்பு தேர்தலில், ஆட்சி மாற்றம் இருக்கலாம் என்று அரசியல் வல்லுனர்கள் கூறி வரும்போது, "போதும் இந்த வருத்தம் அளிக்க கூடிய சபாநாயகர் வேலை' என்கிறார்.

மே 08, 2011
40 வயதில் ஆரோக்கியமாக இருப்பது எப்படி
40 வயதை தொட்டுவிட்டாலே மனித வாழ்க்கையில் பல உடல் உபாதைகள் எட்டி பார்க்க தொடங்கிவிடும்.ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன், மூட்டு வலி என பல பிரச்சனைகளின் தொடக்கம் இந்த 40 வயதுதான்.
இவ்வாறு 40 வயதில் பிரச்சனைகளை சந்திப்பதோ அல்லது எவ்வித உபாதையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பதோ , உங்களது 20 வயதுகளில் நீங்கள் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட்டீர்களோ, எந்த மாதிரியான வாழ்க்கை முறையை பின்பற்றினீர்களோ அதை பொறுத்துதான் அமையும் என்கின்றனர் மருத்துவ மற்றும் கட்டுடல் ஆலோசனை நிபுணர்கள்.

ஆன்-லைனில் வேலைவாய்ப்பு பதிவு; 70 லட்சம் பேரின் பெயர்கள் இணைய தளத்தில் பதிவு
சென்னை, மே.7-
ஆன்-லைனில் வேலை வாய்ப்பு பதிவு செய்வது தொடர்பாக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
15.9.10 முதல் வேலை வாய்ப்பு அலுவலகப்பணிகள் இணைய தளம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலக உயிர்ப்பதிவேட்டின் விபரங்கள் இணைய தளத்தில் ஏற்றம் செய்யப்பட்டது. பின்னர் அனைத்து வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும் பதிவு செய்துள்ள சுமார் 70 லட்சம் மனுதாரர்களின் பதிவு விபரங்கள் இணையதளத்தில் ஏற்றம் செய்யப்பட்டுள்ளது.

முடிவுகளுக்கு பின் என்ன? குட்டிக் கட்சிகள் ஆலோசனை
தேர்தல் முடிவுகள் வரும் 13ம் தேதி வெளி வர உள்ள நிலையில், அதற்கு பிறகு எத்தகைய நிலையை எடுக்க வேண்டும் என்பது குறித்து தேர்தலில் போட்டியிட்ட குட்டிக் கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்து சரியாக ஒரு மாதம் கழித்து, ஓட்டு எண்ணிக்கை வரும் 13ம் தேதி நடந்து முடிவுகள் வெளிவரப் போகின்றன. இதில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும், எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது குறித்து தமிழகம் முழுவதும் அரசியல்வாதிகளிடம் மட்டுமின்றி அரசியல் ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பல இடங்களில், இது தொடர்பாக அவரவர்கள் சக்திக்கு ஏற்ப பெட்டிங் கட்டுவதும் நடந்து வருகிறது. அத்துடன் வழக்கம் போல், ஒரு சிலர் ஒரு பக்கம் மீசையை எடுக்கிறேன், மொட்டை அடிக்கிறேன் என வழக்கமான பந்தயங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
சிமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா பணிவாய்ப்பு-07-05-2011
சிமென்ட் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடையும் நோக்கத்தில் 1965ல் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் நிறுவப்பட்ட சிமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (சி.சி.ஐ.,) நிறுவனம் இத்துறையில் மிகவும் பெயர் பெற்றது. ரூ.900/ கோடி முதலீட்டை தற்சமயம் கொண்டுள்ள சி.சி.ஐ., நிறுவனத்தில் 7 பிரிவுகளில் மொத்தம் 21 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
என்னென்ன பிரிவுகள்
சி.சி.ஐ.,யில் மெக்கானிகல் இன்ஜினியரிங் பிரிவில் 8 இடங்களும், எலக்ட்ரிகல் இன்ஸ்ட்ரூமெண்டேஷன் மற்றும் ஜியாலஜி மைனிங்பிரிவுகளில் 3 இடங்களும், கெமிக்கல் புரொடக்சன் பிரிவில் 5 இடங்களும், மனித வளத்தில் 2 இடங்களும், நிதியில் 3 இடங்களும், மார்க்கெடிங் பிரிவில் ஒரு இடமும் நிரப்பப்பட உள்ளன.
என்ன தேவை

மே 06, 2011
வாஷிங்டன்:அல்-குவைதா தலைவர் ஒசாமா பின்லாடன் இறந்தது தொடர்பான புகைப்படங்களை வெளியிடாமல் இருப்பதற்கு, அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு, ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.பாகிஸ்தானில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டது, ஒசாமா தான் என்பதை உறுதி செய்யும் வகையில், அவரது சடலத்தை அமெரிக்க படையினர் புகைப்படங்களை எடுத்துள்ளனர். இந்த புகைப்படங்களை வெளியிடப் போவது இல்லை என, அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்து விட்டார். அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்புக்கு, அமெரிக்காவிலேயே, ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.

ஒசாமா படம் வெளியிடாததால்அமெரிக்காவிலும் சர்ச்சை

மே 05, 2011
கத்தரி வெயில் : சூடானது தமிழகம்
சென்னை: கத்தரி வெயில் தொடக்க நாளான நேற்று வேலூரில் 106 டிகிரியும், சென்னையில் 105 டிகிரி வெயிலும் நிலவியது. இந்நிலையில் அரக்கோணத்தில் ஐஸ்கட்டி மழை பெய்துள்ளது. கோடை காலத்தில் வரும் கத்தரி வெயில் காலம் நேற்று தொடங்கியது. இந்த காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே தமிழகத்தில் வெயில் வாட்டி எடுக்கத் தொடங்கிவிட்டது.
கடந்த வாரம் குமரிக் கடல் பகுதியில் வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்ட காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் காற்றுடன் மழை பெய்தது. இதனால் சில இ டங்களில் வெயிலின்தாக்கம் குறைந்து கடல் பகுதியில் இருந்து தரைப் பகுதி நோக்கி குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. இதனால் அதிகாலைநேரங்களில் லேசான குளிர் நிலவியது.
இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மேலும் லேசான காற்று சுழற்சி ஏற்பட்டது. இதன் காரணமாக கேரளாவில் பலத்த மழை பெய்தது. இதன் சாரல் மழைபோல் தமிழகத்திலும் கோத்தகிரியில் 90 மிமீ மழை பெய்துள்ளது. சேலம், தருமபுரி மாவட்டங்களில் 80 மிமீ மழை பெய்துள்ளது. மாரண்டஹள்ளி, கரூர், பரமத்தி, கோவை ஆகிய இடங்களில் 70 மிமீ மழை பெய்துள்ளது. இதற்கிடையே நேற்று மதியம் வட தமிழகத்தில் அடங்கிய திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்ட பகுதியில் வளி மண்டல மேல் அடுக்கில் சுழற்சி ஏற்பட்டது.
இதன் காரணமாக அந்த பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. குறிப்பாக அரக்கோணத்தில் பெய்த மழையில் வானில் இருந்து ஐஸ்கட்டிகள் விழுந்தன. அதை மக்கள் ஆர்வமுடன் எடுத்து பார்த்தனர். ஒருபுறம் இப்படி இருக்க சென்னையில் மீனம்பாக்கத்தில் நேற்று 105 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 104 டிகிரியும் வெயில் கொளுத்தியது. அதேபோல வேலூரில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது.
இது தவிர மதுரை 93.2, கோவை 90, திருச்சி 100.4, சேலம் 93, கடலூர் 100.4, புதுச்சேரி 102.4, நாகப்பட்டினம் 99, பாளையங்கோட்டை 104, தூத்துக்குடி 97, கன்னியாகுமரி 95, வால்பாறை 82, கொடைக்கானல் 68 டிகிரியும் வெயில் நிலவியது. கத்தரி வெயில் தொடக்க நாளான நேற்று வெயில் கொளுத்தியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. வெயிலில் செல்லவே பலர் அச்சம்காட்டினர்.

மே 04, 2011
மெல்லக் கொல்லும் ரத்த மிகு அழுத்த நோய்
பி.பி.(Blood pressure- BP) என்ற வார்த்தையைக் கேட்டாலே நமக்கெல்லாம் பி.பி. ஏறுகிறது. அந்த அளவுக்கு நம்மை அச்சுறுத்துகிற பிரச்சனையாக உயர் ரத்த அழுத்தம் இன்றைக்கு விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இளம் வயதினர்கூட இந்தப் பிரச்சனையால் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த ஐம்பது ஆண்டுகளாக நம் நாட்டில் ரத்த மிகு அழுத்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. நம் நாட்டில் மட்டும் சுமார் ஐந்து கோடி பேர் ரத்த மிகு அழுத்தநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பாதிப் பேருக்கு தங்களுககு ரத்தமிகு அழுத்த நோய் உள்ளது என்ற உண்மை தெரியாது என்பதுதான் மிகப்பெரிய சோகம்.
உண்மையில் ரத்த அழுத்தம் என்றால் என்ன?
உண்மையில் ரத்த அழுத்தம் என்றால் என்ன?
காட்டுமன்னார்கோவில் விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள்
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் வேளாண்மை துறை மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.இது குறித்து காட்டுமன்னார்கோவில் வேளாண் துறை உதவி இயக்குனர் மதிவாணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: வேளாண் இடுபொருட்கள் 50 சதவீத மானியத்தில் ஜிப்சம் வினியோகம் செய்யப்படுகிறது. பசுந்தாள் உரப்பயிர் தக்கை பூண்டு, ஜின்சல்பேட் மானிய விலையில் காட்டுமன்னார்கோவில், திருமுட்டம், ஆயங்குடி வேளாண் விரிவாக்க மைய கிடங்குகளில் விற்பனை செய்யப்படுகிறது. குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் ஜிப்சம் மற்றும் சிங்சல்பேட் வாங்கி பயனடையவும், சம்பா சாகுபடி விவசாயிகள் கோடை மழையை பயன்படுத்தி தக்கை பூண்டு பசுந்தாள் உரப்பயிர் விதைத்து மடக்கி உழுது மண் வளத்தை பெருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இஸ்லாமிய பயங்கரவாதம் என்பதை ஏற்க முடியாது: கருணாநிதி
சென்னை: "ஒசாமா பின்லாடன் பின்பற்றிய பயங்கரவாதத்திற்கு, "இஸ்லாமிய பயங்கரவாதம்' என்று லேபிள் ஒட்ட எத்தனிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து, முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை: உலக நாடுகளில் அதிர்வையும், அச்சத்தையும் ஏற்படுத்தி, உலக வல்லரசுகளில் ஒன்றான அமெரிக்காவுக்கே பெரும் சவாலாக இருந்து வந்த ஒசாமா பின்லாடன் எனும் உசாமா பின் முகமது பின் அவாத் பின் லாடினின் கதையை, 40 நிமிடங்களில் அமெரிக்கப் படை முடித்துவிட்டது.

மே 03, 2011
வாக்காளர் அடையாள அட்டை தொலைந்தால்?
புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை தொலைந்தாலோ, சிதைந்த நிலையில் இருந்தாலோ அல்லது தரம் குறைந்த புகைப்படமாக இருந்தாலோ, கருவூலம் அல்லது சார்நிலை கருவூலத்தில் முகவரி சான்றுடன், "0001சி' படிவத்தில் புகைப்படத்துடன், 15 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் அல்லது வாக்காளர் அடையாள அட்டை மையத்தில் பணமாக செலுத்தி, அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளலாம். முகவரி மாறியிருந்தாலும் விண்ணப்பிக்கலாம். இதற்கும், 15 ரூபாய் செலுத்த வேண்டும்.
மே 02, 2011
70 வயதாகி விண்ணப்பித்தால் ஹஜ் பயணம் உறுதி – ஹஜ் கமிட்டி!
இஸ்லாம் நிறுவியுள்ள 5 தூண்களில் இறுதியானதும், மிக முக்கியமானதுமான ஹஜ் பயணம் செய்யும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைப்பது அரிதான விசயமாகத் தான் இருக்கிறது.
ஹஜ் செய்வதற்கு பொருளாதார வசதிகள் இருந்தும் சரியான பொருப்பாளர்கள் இல்லாத காரணத்தினாலும் வயதாகியவர்கள் யாரை துணைக்கு அழைத்துச் செல்வது எந்த நோக்கிலுமே பலரது ஹஜ் பயணங்கள் தள்ளிப்போகின்றன அல்லது ரத்தாகி விடுகின்றன.

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார் - ஒபாமா அறிவிப்பு
அல்காயிதா இயக்கத் தலைவர் ஒசாமா பின் லேடன், சிஐஏ உளவாளிகளால் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.
ரஷியா மற்றும் அமெரிக்காவின் சிம்மசொப்பனமாக விளங்கியவர் ஒசாமா பின்லேடன். கடந்த செப்டம்பர்-11, 2001 அன்றைய நியூயார்க் வர்த்தக மையம் தகர்ப்பில் மூளையாகச் செயல்பட்டவர் என்று குற்றங்சாட்டப்பட்டு சர்வதேச அளவில் அமெரிக்காவின் ஆதிக்கம் மேலோங்கி ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க ராணுவ ஆக்கிரமிப்புக்குக் காரணமாக இருந்தவர். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் முதல் தற்போதைய அதிபர் பாரக் ஒபாமாவரை உயிரோடு ஒசாமாவைப் பிடித்து சட்டத்தின்முன் நிறுத்துவதே தங்கள் தலையாய நோக்கம் என்று அவ்வப்போது அறிவிப்பது வழக்கம். இதுவரை பலமுறை கொல்லப்பட்டதாக ஊடகங்களால் அறிவிக்கப் பட்டவர்.

பெஸ்ட் பேக்கரி வழக்கு:யாஸ்மின் ஷேக்கும் பல்டி
மும்பை:2002 ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையுடன் தொடர்புடைய பெஸ்ட்பேக்கரி வழக்கில் ஒரே சாட்சியான யாஸ்மின் ஷேக் திடீரென பல்டியடித்துள்ளார். மனித உரிமை ஆர்வலர் தீஸ்தாவின் தூண்டுதலால் தவறான சாட்சியம் அளிக்கும்படி வற்புறுத்தப்பட்டதாக அந்த வழக்கின் ஒரே சாட்சியான ஷேக் யாஸ்மின் பானு மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
மும்பை அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகி தண்டணை அறிவிக்கப்பட்டவர்கள் அனைவரும் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர். இந்நிலையில் யாஸ்மின், “அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் மனித உரிமை ஆர்வலர் தீஸ்தா சீதல்வாத் கூறியதன் பேரில் பொய் சாட்சியம் அளித்தேன்.

மே 01, 2011
ஐ.டி., துறையில் பிரகாசமான வாய்ப்பு இருக்கு
இனி வரும் பத்தாண்டுகளில் ஐ.டி., துறையில் 75 லட்சம் பணி வாய்ப்புகள் உள்ளன. அதாவது, ஓராண்டுக்கு 7.5 லட்சம் பணிக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர், என பிரபல ஆடிட்டர் கணேஷ் மகாதேவன் பேசினார்.
ஐ.டி., துறையின் தற்போதைய போக்கு குறித்து டி.சி.எஸ்., நிறுவனத்தை சேர்ந்த கணேஷ் மகாதேவன் பேசியதாவது:

அருணாச்சல் முதல்வர் பயணித்த ஹெலிகாப்டர் மாயம்
இட்டாநகர்:அருணாச்சல முதல்வர் தோர்ஜி கண்டு உள்ளிட்ட ஐந்து பேர் பயணித்த ஹெலிகாப்டர் காணாமல் போனது.தவாங்கிலிருந்து நேற்று காலை 9.56 மணியளவில் முதல்வருடன் ஹெலிகாப்டர் தலைநகர் இட்டாநகருக்கு பறந்தது.ஹெலிகாப்டர் புறப்பட்டு 20 நிமிடங்களுக்குள் ஸெலாபாஸ் பிரதேசத்தின் வான் பகுதியில் வைத்து ஹெலிகாப்டருடனான தகவல் தொடர்பு அறுந்துபோனது.
விமானப்படையின் இரண்டு ஹெலிகாப்டர்கள் தேடுதலில் ஈடுபட்டபோதும் மோசமான வானிலையை தொடர்ந்து திரும்பியதாக பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் ரஞ்சீவ் ஸாஹு தெரிவித்துள்ளார்.காணாமல் போன ஹெலிகாப்டரை ராணுவத்தால் இதுவரை கண்டுபிடிக்கமுடியவில்லை.தரைப்படை மற்றும் விமானப்படையினரும், மாநில போலீசாரும் ஹெலிகாப்டரை தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாக டி.ஐ.ஜி ராபின் ஹிபு தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி வெளியிடப்படும்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
முன்னதாக +2 தேர்வு முடிவுகள் மே 14ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 13ம் தேதியன்று வெளியாவதால், பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடும் தேதியை மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ம் தேதியன்று வெளியிடப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)