Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 31, 2014

அசத்தலான அனிமேஷன் படிப்பு!

வால்ட் டிஸ்னி எப்போது மிக்கி மவுசை கண்டுபிடித்தாரோ அப்போதிருந்தே அனிமேஷன் துறைக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அதன்பிறகு தொழில் முறையிலான அனிமேஷன் படிப்புகள் வளரத் தொடங்கின. தொழில்நுட்பம் வளர வளர அந்த நுட்பங்களை அனிமேஷன் துறை இழுத்து கொண்டது.சாப்ட்வேர் மட்டுமே அனிமேஷன்களை உருவாக்கிவிடாது. அனிமேஷன் அடிப்படைகளை தெரிந்தவர்களுக்கு சாப்ட்வேர் உதவி செய்யும். கற்பனைத்திறன், விடாமுயற்சி, கடின உழைப்பு கொண்டவர்களுக்கு இத்துறை சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கி தரும்.சர்வதேச அளவில் எடுக்கப்படும் டிவி தொடர்கள், சினிமா, இன்டர்நெட் என்று ஏராளமான துறைகளில் அனிமேஷன் பயன்படுகிறது. இத்துறை நாள்தோறும் வளர்ந்து வருவதாலும், பணியாளர்களின் தேவை அதிகரித்திருப்பதாலும் நல்ல வேலைவாய்ப்பு உருவாகி உள்ளது.

படிப்புகள்:
அனிமேஷன் தொடர்பான ஏராளமான இளநிலை, முதுநிலை டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் உள்ளன. அவற்றில், பி.எஸ்சி / எம்.எஸ்சி., இன் அனிமேஷன், பிஏ/ எம்ஏ இன் மல்டிமீடியா அண்ட் விஷூவல் எபக்ட்ஸ், சர்டிபிகேடேடு கோர்ஸஸ் இன் அனிமேஷன் அண்ட் கிராபிக்ஸ், டிப்ளமோ இன் அனிமேஷன், வீடியோ கேம் ப்ரோக்ராமிங், கேம் ஆர்ட், கம்ப்யூட்டர் ஜெனரேட்டேடு இமேஜெரி ( சிஜிஐ), டிசைன், ஸ்டாப் - மோஷன் அனிமேஷன், க்ளைமேஷன் அண்ட் 3டி பிலிம் மேக்கிங் போன்றவை முக்கியமானவை.
வடிவமைப்புக்கான தேசிய கல்வி நிறவனம் (என்ஐடி), பிஐடிஎஸ், ஐஐடி மற்றும் எப்டிஐஐ புனே போன்ற கல்வி நிறுவனங்கள், அனிமேஷன், மல்டிமீடியா, வடிவமைப்பு மற்றும் கணிப்பொறி கிராபிக்ஸ் போன்ற பிரிவுகளில் பல விதமான படிப்புகளை வழங்குகின்றன.

தகுதி:
அனிமேஷன் துறை என்பது அதிகளவில் தொழில்நுட்பம் தொடர்பானது என்பதால், அத்துறையில் ஈடுபடும் ஒருவர், சமீபத்திய தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் மென்பொருள் மேம்பாடுகள் குறித்து தெளிவான அறிவை தினந்தோறும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பள்ளிப்படிப்பை
முடித்திருக்க வேண்டும். உயர்கல்வியில் சேர வேண்டுமெனில் அனிமேஷன் அல்லது மல்டிமீடியா அல்லது கவின்கலையில் இளநிலைப் பட்ட படிப்பு முடித்திருக்க வேண்டும்.
அதே சமயத்தில் இத்துறையில் சிறப்பு படிப்புகளை வழங்கும் சில கல்வி நிறுவனங்கள் சில கடுமையான விதிமுறைகளை கடைபிடிக்கின்றன. இந்நிறுவனங்கள், கட்டடக்கலை, தொழில்நுட்பம், கவின்கலை அல்லது பொறியியல் பின்னணி கொண்ட மாணவர்களை மட்டுமே எடுத்துக் கொள்கின்றன.

சேர்க்கை:
இத்துறையில் நுழைய நீங்கள் அதிகளவில் பாட புத்தகங்களை புரட்ட தேவையில்லை. தேவையான நேரத்தில் உங்களின் படைப்பாக்கம் மற்றும் கலைத்திறன்களை வெளிப்படுத்தினால் போதும். எனவே, உங்களின் வரைதல் திறன், களிமண் செய் உருத்திறன் ( க்ளே மாடலிங்) பெயிண்டிங், காட்சிப்படுத்தும் திறன் ஆகியவற்றை தேர்வின் போது வெளிப்படுத்த தயாராக இருக்க வேண்டும். இதைத் தவிர சி++ அண்ட் ஜாவா போன்ற நிலைகளிலான கணிப்பொறி அறிவும் உங்களுக்கு கூடுதல் தகுதியை அளிக்கும்.

படிப்பின் காலம்:
இத்துறை சார்ந்த படிப்புகளின் காலம் 6 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரை நீள்கின்றன. மேலும் பல பகுதிநேர மற்றும் ஆன்லைன் படிப்புகளும் உள்ளன. இத்தகைய படிப்புகள் உங்களின் நேர வசதிக்கு ஏற்றவை.

இத்துறையில் சாதிக்க:
இத்துறையில் நுழைய விரும்புவோர் முதலில் ஓவியக்கலையில் ஆர்வம் உடையவராகவும், பார்த்ததையும், கற்பனையில் நிகழ்கிற விஷயங்களையும் அப்படியே வரைந்த கொடுப்பவராகவும் இருக்க வேண்டும். வாழ்க்கையின் பல்வேறு நிலைகளையும், பழக்க வழக்கங்களையும், பல்வேறு மக்களைப் பற்றியும், போக்குவரத்து இதர வசதிகளைப் பற்றிய அறிவும் உள்ளவராக இருக்க வேண்டும்.குறிப்பாக அன்றாட விஷயங்கள் பற்றிய தெளிவு இருப்பவரே அந்தந்த காலகட்டத்தில் நல்ல ரசனையான உருவாக்கும் தகுதி உடையவராக இருக்கிறார். ஏராளமான நிறுவனங்கள் இதற்கான பாடத்திட்டங்களை நடத்துகின்றன. சிறந்த பயிற்சி நிலையங்களை தேர்ந்தெடுத்து படித்தால் அனிமேஷன் துறையில் நீங்களும் சாதிக்கலாம்.
-தினகரன் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...