Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 31, 2011

30 நாட்கள் கெடு விதிப்பு கார், பைக் நம்பர் பிளேட்டில் விதிப்படி எண் எழுத வேண்டும்

அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: மத்திய மோட்டார் வாகன விதி 50, 51ன் படி அனைத்து வாகனங்களிலும் பதிவு எண் (நம்பர் பிளேட்) பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். விதிகளின்படி நம்பர் பிளேட்களை பொருத்துவதில்லை. அவரவர் விருப்பத்துக்கு ஏற்றவாறு பிளேட்டில் சிறிதாகவும், பெரிதாகவும் நம்பர்களையும்& எழுத்துக்களையும் ஸ்டைலாக எழுதிக் கொள்கின்றனர். இதனால் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.
இதனை தடுக்க வாகன உரிமையாளர்கள் விதிகளுக்கு உட்பட்டு 30 நாட்களுக்குள் (ஆகஸ்ட் மாத இறுதிக்குள்) முறையான நம்பர் பிளேட்களை பொருத்த வேண்டும். விதிகளை மீறி வாகனத்தை இயக்கினால், மோட்டார் வாகனங்களின் பதிவு சான்றிதழ் தற்காலிகமாக ரத்து செய்யப்படும். நம்பர் பிளேட்டில் இருக்க வேண்டிய எழுத்துகள், எண்கள் அளவு:
பைக் முன்புறம் நம்பர் பிளேட்: 45 மி.மீ. உயரம், 285 மி.மீ அகலம். எழுத்துகள் மற்றும் எண்கள் 30 மி.மீ. உயரமும், 5 மி.மீ. தடிமனும் இருக்க வேண்டும். 5 மி.மீ. இடைவெளி விட வேண்டும். பைக் பின்புறம் நம்பர் பிளேட்: 100 மி.மீ உயரம், 200 மி.மீ அகலம். எழுத்துகள் 35 மி.மீ உயரமும், 7 மி.மீ தடிமனும், எண்கள் 40 மி.மீ உயரமும், 7 மி.மீ தடிமனும் இருத்தல் வேண்டும். 5 மி.மீ இடைவெளி விட வேண்டும்.
கார் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் முன்புறம், பின்புறம் நம்பர் பிளேட்: 120 மி.மீ. உயரம், 500 மி.மீ. அகலம். எழுத்துகள் மற்றும் எண்கள் 65 மி.மீ. உயரமும், 10 மி.மீ. தடிமனும் இருக்க வேண்டும். 10 மி.மீ. இடைவெளி விட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜூலை 30, 2011

உலகின் 2வது அதி உயரமான சூரிய சக்திக் கோபுரம்

உலகின் 2வது அதி உயரமான சூரிய சக்திக் கோபுரம் அரிசோனா பாலைவனத்தில் நிறுவப்படவுள்ளது. இது சுமார் 2600 அடி உயரமான புகைபோக்கியுடன் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 200 மெகாவாட் மின்சாரத்தினை உற்பத்தி செய்யமுடியும் மேலும் இதன்மூலம் சுமார் 150,000 வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தினை உருவாக்கமுடியும் எனவும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இத்திட்டமானது என்விரோ மிஷன் என்ற நிறுவனத்தினால் அமைக்கப்படவுள்ளது. இதனைக் கட்டி முடிப்பதற்கு 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் 1500 புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாகுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. சூரிய சக்தி, விசையாழிகள் மற்றும் உயரமான புகைபோக்கி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இத்திட்டமானது சூழலை பாதிக்காத, செயற்திறன் வாய்ந்த சக்தி மூலம் எனஇதனை உருவாக்கவுள்ள நிறுவனத்தினர் பெருமையுடன் தெரிவித்துள்ளனர்.

ஜூலை 28, 2011

மாரடைப்பும் மாரடைப்பல்லாத நெஞ்சு வலிகளும்!

நெஞ்சு வலி என்றால் பயப்படாதவர்கள் எவரும் இருக்க முடியாது. ஏனெனில் எந்த நெஞ்சுவலியானாலும் அதனை மாரடைப்பு என்றே பலரும் கருதுகிறார்கள்.

இதயத்தின் அறைகளுக்குள் எந்த நேரமும் இரத்தம் நிறைந்திருக்கிறது ஆனாலும் அதனை இயக்கும் தசைநார்களுக்கு அந்த இரத்தம் நேரடியாகக் கிடைப்பதில்லை.

இரண்டு சிறிய இரத்தக் குழாய்கள் – கொரனரி நாடிகள் (Coronary arteries) மூலமே கிடைக்கின்றன. இவை முடியுரு நாடிகள் எனப்படுகின்றன.

இவற்றில் ஒன்றில் அல்லது அவற்றின் கிளைகளில் இரத்தம் செல்வது தடைப்பட்டால் அப் பகுதியில் உள்ள இருதயத்தின் தசை நார்களுக்கு இரத்தம் போதிய அளவு கிடைக்காது.

அந்நிலையில் தசை நார்களுக்கு போதிய ஒட்சிசன் கிடைக்காது போய்விடும்.

இது நெஞ்சுவலியாக வெளிப்படும்.

அல்லது தசை நார்களுக்கு இரத்த ஓட்டம் அடியோடு தடைப்படலாம்.

அந் நிலையில் இப்பகுதியிலுள்ள தசைகள் இறந்துவிடவும் கூடும்.

இரண்டு இந்தியர்களுக்கு மகசேசே விருது

மணிலா:இவ்வாண்டிற்கான ரமண் மகசேசே விருதை வென்றவர்களில் இரண்டு பேர் இந்தியாவைச் சார்ந்தவர்களாவர்.

ஆசியாவின் மிக உயர்ந்த விருதான மகசேசவிருது ஆண்டுதோறும் விமானவிபத்தில் இறந்த பிலிப்பைன்ஸ் அதிபர் ரமண் மகசேசேவின் நினைவாக வழங்கப்பட்டு வருகிறது.

1957-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இவ்விருது ஆசிய நாடுகளில் மனித மேம்பாடு மற்றும் சமூக நலனுக்காக பாடுபட்டோருக்கு அளிக்கப்படுகிறது. இவ்விருது ஆசியாவின் நோபல் என அழைக்கப்படுகிறது.

இவ்வாண்டு இவ்விருது வழங்கப்பட்ட 6 நபர்களில் இரண்டுபேர் இந்தியர்களாவர்.

ஜூலை 27, 2011

நோய்களை உணர்த்தும் நகங்கள்!

நகங்களை ஏதோ தேவையில்லாத பகுதியா கவோ, அல்லது அழகுபடுத்திக் கொள்வதற்காக அமைக்கப்பட்ட உறுப்பாகவோ நினைக் கிறோம். அது தவறு. மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இன்றி யமையாத முக்கிய உறுப்பு நகங்களாகும்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் நலத்தை நகத்தில் தெரிந்து கொள்ளலாம். நகத்தின் அமைப்பைக் கொண்டு, நம்முடைய குணாதிசயங்களை சில ஜோதிடர்கள் கூறுவார்கள். அது உண்மையா, பொய்யா என்பது தெரியாது. ஆனால் மருத் துவ உலகில் நகங்களை வைத்தே நம்முடைய உடலில் என்ன பிரச்சினை என்று கூறி விடுகிறார்கள் மருத்துவ அறிஞர்கள்.

நகங்கள் விரல்களுக்கு அழகு சேர்க்க மட்டுமல்ல, கரட்டின் என்ற புரதச்சத்தைக் கொண்ட நகங்கள் விரல் நுனிவரை பரவியுள்ள நரம்பு மற்றும் இரத்தக் குழாய்களை பாதுகாக்கக் கூடிய ஒரு அமைப்பாகும். நகங்கள் இல்லா விட்டால் விரல்களின் முனைகளில் கடினத் தன்மை ஏற்பட்டு விடும்..

இந்த ஆண்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்த முடியாது: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்

புதுடெல்லி : சமச்சீர் கல்வி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று பரபரப்பான வாதம் ஆரம்பமானது. ‘‘சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அமல்படுத்த முடியாது என்று தமிழக அரசு வக்கீல் வாதாடினார். இன்றும் வாதம் தொடர்கிறது. இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல் படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை கடந்த 21ம் தேதி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சவுகான், பாஞ்சால், தீபக் வர்மா ஆகியோர் விசாரித்து, ‘‘இந்த வழக்கில் எந்த தடையும் விதிக்க முடியாது. ஜூலை 26ம் தேதி இறுதி விசாரணை நடத்தப்படும்’’ என உத்தரவிட்டனர். வரும் 2ம் தேதிக்குள் சமச்சீர் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். தமிழக அரசின் மனுவுக்கு பெற்றோர் தரப்பில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஜூலை 26, 2011

பிரதிபா பாட்டீல் கையெழுத்திட்டார் இந்தியா & தென்கொரியா அணுசக்தி ஒப்பந்தம்

சியோல் : இந் தியா & தென்கொரியா இடையே அணுசக்தி தொடர்பான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. தென்கொரிய பயணம் மேற்கொண்டுள்ள குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீல் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். தென்கொரியா, மங்கோலியா நாடுகளில் குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீல் ஒரு வார அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். தென்கொரிய தலைநகர் சியோலில் அந்நாட்டு அதிபர் லீ மியுங் பாக்குடன் அவரது மாளிகையில் நேற்று விரிவான பேச்சு நடத்தினார்.

20 நிமிடங்கள் நீடித்த சந்திப்பை தொடர்ந்து இரு நாடுகளின் உயரதிகாரிகள் குழுவினர் இடையே ஒரு மணி நேர பேச்சு நடந்தது. இந்த சந்திப்புகளின்போது அணுசக்தியை அமைதியான தேவைகளுக்கு பயன்படுத்தும் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் பிரதிபாவும், லீயும் கையெழுத்திட்டனர். அணுசக்தி சப்ளை குழு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு யுரேனியம் உட்பட அணுசக்தி தொடர்பான பொருட்கள் சப்ளைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை 2008ம் ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்டது. அதன் பிறகு நேற்று வரை தென்கொரியாவையும் சேர்த்து இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் இணைந்துள்ள நாடுகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.

இந்தியர்களின் பணம் சொற்பமே; போட்டு உடைத்தது சுவிஸ் மத்திய வங்கி

ஜெனீவா:"சுவிட்சர்லாந்து வங்கிகளில், பிற நாட்டவர்கள் சேமித்து வைத்துள்ள பணத்தோடு ஒப்பிடுகையில், இந்தியர்கள் சேமித்து வைத்துள்ள பணம் வெறும் 0.07 சதவீதம் தான்' என, அந்நாட்டு மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்குவது குறித்து நீதிக் கண்காணிப்பு மற்றும் அரசியல் ரீதியிலான நெருக்கடி சமீப காலத்தில் அதிகரித்துள்ளன. இந்நிலையில், முதன் முறையாக, சுவிட்சர்லாந்து தேசிய வங்கி (எஸ்.என்.பி.,) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அந்நாட்டு வங்கிகளில் 2010ன் இறுதி வரையிலும், இந்தியர்கள் 11 ஆயிரத்து 250 கோடி ரூபாய் (2.5 பில்லியன் டாலர்) பதுக்கி வைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

எஸ்.என்.பி., செய்தித் தொடர்பாளர் வால்டர் மியர் இதுகுறித்து கூறியதாவது: இத்தொகையில், 2.1 பில்லியன் டாலர் (9,450 கோடி ரூபாய்) சேமிப்பு மற்றும் வைப்புத் தொகையாக, இந்தியாவின் தனிநபர்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களால் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இவை போக, மீதமுள்ள 400 மில்லியன் டாலர் (1,800 கோடி ரூபாய்), இந்தியாவில் உள்ள தனிநபர்கள், தங்களின் கையாட்கள் பேரில் சேமிப்பாக வைத்துள்ளனர். யு.பி.எஸ்., மற்றும் கிரெடிட் சூசி என்ற சுவிசின் மிகப் பெரிய இரு வங்கிகளில் தான், இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் பெரும்பான்மையாக தங்கள் பணத்தை சேமித்து வைத்துள்ளன.இவ்வாறு வால்டர் மியர் தெரிவித்தார்.

ஜூலை 24, 2011

காப்பீட்டு திட்டத்தில் சேர புதிய நிபந்தனை: குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம்; வி.ஏ.ஓ. சான்றிதழ் வேண்டும்


முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ள புதிய காப்பீட்டு திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ. 4 லட்சம் செலவிடப்பட உள்ளது.
 
இந்த திட்டத்துக்கான இன்சூரன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி டெண்டர் சமர்ப்பிக்க கடைசி நாளாகும். ஒப்பந்தப்புள்ளிகளை அளிக்க விரும்பும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
 
2.5 லட் சத்துக்கும் மேற்பட்ட காப்பீட்டுதாரர்களை வைத்துள்ள நிறுவனம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மற்ற நிறுவனங்களுடன் கூட்டணி இல்லாமல் தனித்தே செயல்படும் தகுதியை இன்சூரன்ஸ் நிறுவனம் பெற்றிருக்க வேண்டும்.
 
புதிய காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் மேற்பார்வையிடும். இந்த திட்டத்துக்கு முதல்வரின் ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. பயனாளிகளுக்கான முழு காப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்துக்கு அரசே அளிக்கும்.
 
இந்த திட்டத்தின் கீழ் பயனாளியாக வேண்டுமானால் ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரமாக இருக்க வேண்டும். இதற்கான வருமான சான்றிதழை கிராம நிர்வாக அதிகாரியிடம் வாங்க வேண்டும். காப்பீட்டு திட்டத்தில் பயன் பெற விரும்பும் பயனாளிகளின் குடும்பத்துக்கு தனியாக அடையாள அட்டைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாகவோ அல்லது சம்பந்தப் பட்ட காப்பீட்டு நிறுவனத் தின் மூலமாகவோ வழங்கப்படும்.
 
காப்பீட்டு திட்டத்துக்கான அனுமதியை பெறும் காப்பீட்டு நிறுவனங்கள் உரிய முறையில் பயனாளிகளுக்கு சேவையை அளித்திட வேண்டும். ஒப்பந்தத்தை மீறும் வகையில் செயல்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.காப்பீட்டு திட்டத்தில் தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களைச் சேர்ந்த காப்பீட்டு நிறுவனங்கள் பங்கேற்கலாம்.
 
ஆகஸ்டு 22-ந்தேதி ஒப்பந்த புள்ளிகள் திறக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த போதுமான தகுதி உள்ளதா? என்று சோதிக்கப்படும். இதில் தேர்வு செய்யப்படும் நிறுவனங்கள் அளித்துள்ள விலை விவரங்கள் பின்னர் திறக்கப்படும்.
 
செப்டம்பர் 15-ந்தேதி இதற்கான அனைத்து பணிகளும் நிறைவு செய்யப்பட்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கையால் காப்பீட்டு அட்டைகள் பொது மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.

கற்றாழை…

கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது. இயற்கையான மருத்துவப்பொருட்கள் நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும்.

கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவக் குணங்கள்.

மத்திய அரசு அனுமதி பிளஸ் 2 முடித்தவர்களும் ஐஐஎம்&ல் எம்பிஏ படிக்கலாம்

புதுடெல்லி: இந்தூரில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் (ஐஐஎம்) பிளஸ் 2 முடித்தவர்களுக்காக 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்பிஏ படிப்பை நாட்டிலேயே முதன் முறையாக இந்த ஆண்டு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
பொதுவாக எம்பிஏ படிப்பில் சேர ஏதாவது ஒரு இளநிலை பட்டம் இருக்க வேண்டும். ஆனால் இந்த படிப்பில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். நுழைவுத் தேர்வு எழுத தேவையில்லை. 12ம் வகுப்பில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் நிறுவனம் நடத்தும் தகுதி மற்றும் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

ஜூலை 22, 2011

சோயாபீன்ஸ் மண்ணில் கிடைக்கும் மகத்தான சத்துணவு

செலவைக் குறைக்கும் காய்கறி!

இன்று பல நாடுகளில் மக்களின் பசியையும் மிருகங்களின் பசியையும் தீர்த்து வரும் மிக முக்கியமான உணவாகப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது சோயாபீன்ஸ்.

இது அவரைக் குடும்பத்தைச் சேர்ந்தது. அதனால் சோயா மொச்சை என்றும் இதனை வழங்குகிறோம்.

சோயா மொச்சையை அரைத்து மாவாகப் பயன்படுத்தலாம். இந்த மாவு கோதுமை மாவைவிடப் பல மடங்கு ஊட்டம் மிகுந்த உணவாகும். உடலின் கட்டுமானப் பணிக்கு கால்சியம் தேவை. கோதுமையில் உள்ளதைவிட 15 மடங்கு கால்சியம் சோயாமாவில் இருக்கிறது.

மூளை வளர்ச்சிக்கு…

வீராணத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

காட்டுமன்னார்கோவில்:வீராணம் ஏரியில் இருந்து, கடந்த 12 ஆண்டுகளில், 2வது முறையாக, ஜூலை மாதம் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.காவிரி டெல்டா கடைமடை பாசனத்திற்கு ஜூன் 12ம் தேதி மேட்டூரில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். கடந்த 8 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து போனதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இல்லாமல் போனது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு தள்ளி போனது. இந்த ஆண்டு பருவ மழை மற்றும் தமிழகத்தில் போதிய அளவு கோடை மழை பெய்ததால் மேட்டூரில் 83 அடி தண்ணீர் தேங்கியது. இதனால் 8 ஆண்டுகளுக்கு பின் எப்போதும் தண்ணீர் திறக்கப்படும் தேதியான ஜூன் 12ம் தேதிக்கும் முன்பே 6ம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.கல்லணைக்கு வந்த தண்ணீர் கீழணையில் தேக்கப்பட்டு வீராணத்திற்கும் திறக்கப்பட்டது. 

வீராணம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1,465 மில்லியன் கன அடி தண்ணீரில் தற்போது 507 கன அடி தண்ணீர் உள்ளது. தொடர்ந்து ஏரிக்கு தண்ணீர் பெறப்பட்டு வருகிறது. சென்னைக்கு தண்ணீர் சென்று வரும் நிலையில் கடந்த 12 ஆண்டுகளில் ஜூலை மாதம் வீராணத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது இது இரண்டாவது முறையாகும். இதனால் வீராணம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.குறுவை சாகுபடிக்கு தயார் நிலையில் உள்ள வீராணம் விவசாயிகள் தங்கள் விவசாய பணிகளை ஆர்வத்துடன் முன் கூட்டியே துவங்கியுள்ளனர். இருந்தாலும் ஏரிக்கு அதிக நீரை தேக்கி வைத்து விவசாயிகளின் தேவைக்கேற்ப வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

ஜூலை 21, 2011

யாருக்கு ஓட்டு என்று தெரிந்து கொள்ள நவீன இயந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு

புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை தெரிந்து கொள்ளும் புதியகருவி இணைக்கப்பட்டுள்ளது. இந்த நவீன வாக்குப்பதிவு இயந்திரத்தில் அடுத்த வாரம் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு நடப்பதாக சில அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டின.

இதனால், வாக்காளர் எந்த கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர் உறுதிபடுத்திக் கொள்ள உடனடியாக ஒப்புதல் சீட்டு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக சிறிய அச்சிடும் கருவியை இணைத்து நவீன வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது. இந்த நவீன இயந்திரத்தில் வாக்காளர் வாக்களித்தது, அவர் யாருக்கு வாக்களித்தார் என்பதை உறுதி செய்யும் ஒப்புகை சீட்டு அச்சிடப்பட்டு அவருக்கு கிடைக்கும்.

மருத்துவ படிப்புக்கு, அடுத்த ஆண்டு முதல் பொது நுழைவுத்தேர்வு


இந்தியா முழுவதும் உள்ள மத்திய, மாநில அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலை கழகங்களின் கீழ் செயல்படும் மருத்துவக்கல்லூரிகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று அகில இந்திய மருத்துவ கவுன்சில் சில மாதங்களுக்கு முன் அறிவித்தது. இதற்கு தமிழ்நாடு உள்பட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
 
எனவே எம்.பி.பி.எஸ். படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய சுகாதார அமைச்சகம் நிறுத்தி வைத்தது.   இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் சந்திர மவுலி தலைமையில் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

உள்ளாட்சி தேர்தல்: மேயர்கள்-நகரசபை தலைவர்களை நேரடியாக தேர்வு செய்ய சட்டம்; தமிழக அரசு முடிவு


உள்ளாட்சி தலைவர்களை நேரடியாக பொதுமக்களே தேர்வு செய்யும் முறை முன்பு இருந்து வந்தது.கடந்த தி.மு.க. ஆட்சியில் கவுன்சிலர்களே மாநகராட்சி மேயர், நகராட்சி, பஞ்சாயத்து தலைவர்களை தேர்வு செய்யும் முறை கொண்டு வரப்பட்டது.
 
2006-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர்களே தங்கள் உள்ளாட்சி அமைப்பின் தலைவர்களை தேர்ந்து எடுத்தனர். இதன்படி சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் (தி.மு.க.), திருச்சி மேயர் சுஜாதா (காங்), மதுரை மேயர் தேன்மொழி (தி.மு.க.), சேலம் மேயர் ரேகாபிரியதர்ஷினி (தி.மு.க.), நெல்லை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியம் (தி.மு.க.), கோவை மேயர் வெங்கடாசலம் (காங்), ஆகியோரை பெரும்பான்மை கவுன்சிலர்கள் தேர்ந்து எடுத்தனர்.

ஜூலை 20, 2011

கச்சா எண்ணெய் சப்ளை நிறுத்த ஈரான் எச்சரிக்கை

டெகரான் : கடன் பாக்கி ரூ.22,500 கோடியை செலுத்த தவறினால், இந்தியாவுக்கு அடுத்த மாதம் முதல் கச்சா எண்ணெய் சப்ளை நிறுத்தப்படும்ம் என ஈரான் திடீர் நிபந்தனை விதித்துள்ளது. நம்நாட்டின் பெட்ரோலிய பொருட்கள் தேவையில் பெரும்பகுதி, வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி மூலமே ஈடுகட்டப்படுகிறது. சவுதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக, ஈரான் நாட்டில் இருந்து மத்திய அரசு அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. மாதத்துக்கு 1 கோடியே 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் ஈரானிடமிருந்து வருகிறது. இதற்காக செலுத்தப்படும் பணம் ஜெர்மனியின் மத்திய வங்கி வழியாக செலுத்தப்பட்டு வந்தது.

அணுசக்தி திட்டத்தில் ஈடுபட்டதால் ஈரானுக்கு சர்வதேச நாடுகள் தடை விதித்தன. அதனால், ஜெர்மனி வங்கி மூலமாக ஈரானுக்கு கடந்த ஏப்ரல் மாதம் பணம் செலுத்துவது தடைபட்டது. மாற்று வழியில் ஈரானுக்கு பணம் செலுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஈரானுக்கு இந்தியாவின் கடன் பாக்கி ரூ.22,500 கோடியாக உயர்ந்தது.

நெல்லிக்காயின் மருத்துவ குணம்!

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்பது பழமொழி. ஆனால் ஒரு ஆப்பிளில் இருக்கும் முழு சக்தியும் ஒரு நெல்லிக்காயில் இருக்கிறது என்பது அறிவியல் உண்மை. நெல்லிக்காயை பிறை நிலா வடிவத்தில் வெட்டி தேனில் ஊறவைத்து எடுத்து காயவைத்து பத்திரப்படுத்தி தேவைப்படும்போது சாப்பிட்டு வரலாம். நெல்லிக்காய் ஊறுகாய் போட்டும் சாப்பிட்டு வரலாம். நெல்லிக்காயில் அதிக மருத்துவ குணம் இருக்கிறது என்பது தெரியும்.

ஆனால் அதில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் விஷயங்கள் இருப்பது பலருக்குத் தெரிவதில்லை. மேலும், உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கவும், உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் நெல்லிக்காய் சாப்பிடலாம்.

சரியான உயரம் தானா? எவரெஸ்ட் : குழப்புகிறது சீனா

உலகின் மிகவும் உயரமான சிகரம் என புகழ்பெற்ற எவரெஸ்ட் சிகரத்தின் உண்மையான உயரம் குறித்து சீனா வெளியிட்ட கருத்தால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நேபாள் நாட்டு அமைச்சகம் முதன்முறையாக மீண்டும் எவரெஸ்ட் சிகரத்தி‌ன் உண்மையான உயரம் குறித்து துல்லியமாக அளவிட முடிவு செய்துள்ளது. இமயமலை மலைத்தொடரில் அமைந்துள்ளது எவரெஸ்ட் சிகரம். இது உலகின் மிகவும் உயரமான சிகரம் என்ற பெருமையினை பெற்றுள்ளது.

 கடந்த 1954-ம் ஆண்டு இந்தியா தான் எவரெஸ்ட் சிகரம் 8,848 மீட்டர் உயரமுடையது என அதிகாரப்பூர்வமாக தகவல் வெளயிட்டது. இன்றுவரை அந்த அளவீடு தான் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் சீனாவோ எவரெஸ்ட் சிகரம் 8,844 மீட்டர் என கூறி குழப்புகிறது. இது குறித்து நேபாள் நாட்டின் நிலச்சீர்திருத்தம் மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கோபால் கிர், கூறியதாவது: கடந்த ஆண்டு நேபாள், சீனா இடையே எல்லைப்பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடந்த போது சீனா பிரதிநிதிகள் தான் எவரெஸ்ட் சிகரத்தின் சரியான உயரம் 8,844 என கூறினர். 

அமெரிக்கா தள்ளாட்டம்: அச்சப்படுகிறது சீனா

பீஜிங்: அமெரிக்கா தற்போது தனது பெரும் கடன் சுமையில் இருந்து மீள வழி தேடிக் கொண்டிருக்கும் நிலையில், அதன் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியான சீனா, பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளது. தற்போதைய சூழலில், சீனா தன்னைக் காத்துக் கொள்வதற்கு மிகச் சில வழிகளே இருப்பதாக, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் மொத்தக் கடன், தற்போது 14.3 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் முக்கிய வர்த்தகக் கூட்டாளியான சீனா, கடன் பத்திரங்களாக, அமெரிக்காவிடம் இருந்து 1.16 டிரில்லியன் டாலர் அளவுக்கு வாங்கியுள்ளது.

2010 அக்டோபரில், இது 906 பில்லியன் டாலராக இருந்தது. சீனாவுக்கு அடுத்தபடியாக, ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகியவை அமெரிக்காவிடம் இருந்து கடன் பத்திரங்கள் வாங்கியுள்ளன. பெரும் கடன் சுமையில் அமெரிக்கா மூழ்குவதை இரண்டாண்டுகளுக்கு முன்பே சீனா உணர்ந்திருந்தது.

ஜூலை 19, 2011

ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும் வேதிப் பொருள் மிளகாயில்..

காரசாரமான உணவிற்கு முக்கிய காரணமாய் இருப்பது மிளகாய். நமது சமையலில் மிளகாய்க்கு சிறப்பான இடம் உண்டு. இது ஊசி மிளகாய், குண்டு மிளகாய், குடமிளகாய் என மூன்று வகைகளைக் கொண்டது.

இவை காரத்தன்மையால் வேறுபடுகின்றன. குடமிளகாய் காரம் குறைந்தது. இத்தாவரத்தின் காய் சமையலுக்கும், கனிந்த கனிகள் மற்றும் விதைகள் நறுமணப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

கடுமையாக விமர்சித்த கருணாநிதி-திமுகவிலிருந்து விலக துரைமுருகன் முடிவு


திமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் துரைமுருகன் வெளியேற இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றது.

தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ. ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் மீது 2ஜி ஊழல் முத்திரை, சட்டமன்ற தேர்தல் தோல்வி, திகார் சிறையில் மகள் கனிமொழி என்று அடுத்தடுத்து விழுந்து வரும் அடியால், நிலை குலைந்து போய் இருக்கின்றார் திமுக தலைவர் கருணாநிதி.

இந்த நிலையில் இன்னொரு அதிர்ச்சியையும் அவர் சந்தித்துள்ளார். இது எதிர்பாராத விதமாக நேர்ந்த அதிர்ச்சி. திமுகவில் சீனியர், முதன்மை செயலாளர், கலைஞர் அவையின் விகடகவி என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மூலம் இந்த அதிர்ச்சி அவருக்கு வந்துள்ளது.

ஜூலை 18, 2011

அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டம் தொடரும்- உயர்நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு

சென்னை: தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டமே நடப்பாண்டிலும் தொடர வேண்டும். வருகிற 22ம் தேதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகத்தை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பை அளித்துள்ளது.


சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பாண்டுக்கு தமிழக அரசு ஒத்திவைத்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சமச்சீர் கல்வித் திட்டம் தொடரும் என்று உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், 1, 6 வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி திட்டம் தொடரலாம். மற்ற வகுப்புகளுக்கு என்ன செய்யலாம் என்பது குறித்து குழு அமைத்து பரிசீலிக்க வேண்டும். அந்த ஆய்வறிக்கை அடிப்படையில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதன்படி தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி தலைமையில் குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விசாரணையும் முடிவடைந்து விட்டது.

இந்த நிலையில், இன்று பிற்பகலில் தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச் தனது தீர்ப்பை அறிவித்தது.
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

ஜூலை 17, 2011

பெற்றோரே உஷார்: படிப்பில் மந்தமா உங்கள் செல்லம்

"என் மகனை, உயர்தர கல்விச்சேவை அளிக்கும் பள்ளியில்தான் சேர்த்திருக்கிறேன். ஆண்டுக்கு 80 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்துகிறேன். வீட்டில் தினமும் குறைந்தது நான்கு மணி நேரம் கடுமையாக பாடம் படிக்கிறான். ஆனாலும், படிப்பில் மந்தமாகவே உள்ளான். சில பாடங்களில் தேர்ச்சி பெறவே சிரமப்படுகிறான். எழுத்துக் கூட்டி வாசிக்கக்கூட தெரிவதில்லை. என் மகன், "மக்காக' போய்விடுவானோ, என பயமாக இருக்கிறது டாக்டர்..." இப்படி, உளவியல் ஆலோசகரிடம் புலம்பியவர் வேறு யாருமல்ல, தனியார் கல்லூரி பேராசிரியர்;
இவரது மகன் படிப்பதோ, 5ம் வகுப்பு!பேராசிரியரின் வேதனை கலந்த வார்த்தைகளை கேட்டு சிறிது புன்னகைத்த டாக்டர், அவரது மகனுடன் உரையாடி பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை செய்துமுடித்தபின், "நீங்கள் சொல்வது போல எதுவும் நடந்துவிடாது; உங்கள் மகனுக்கு "கற்றலில் குறைபாடு' தொடர்பான "டிஸ்லெக்ஸியா'(ஈதூண்டூஞுதுடிச்) என்ற பாதிப்பு உள்ளது. எழுத்துக்களைக் ஒன்றுகூட்டி வாசித்தல், எழுத்துக்களின் வித்தியாசத்தை அறிதல், வார்த்தையை ஒலி பிறழாமல் உச்சரித்தல், வேண்டும் போது வார்த்தைகளை நினைவுபடுத்தி திரும்பக்கூறுதல், பிழையின்றி எழுதுதல் ஆகியவற்றில் அவனுக்கு பிரச்னைகள் உள்ளன. முறையான பயிற்சி மேற்கொண்டால் நாளடைவில் எல்லாம் சரியாகிவிடும்' என்றுகூறி, சில ஆலோசனைகளையும் தெரிவித்தார்.
இந்த பேராசிரியரை போன்றே, பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர் பலரும் தங்களது பிள்ளையின் படிப்பு மீது மிகுந்த கவலை கொண்டுள்ளனர்.பெரும்பாலான பெற்றோர், பிள்ளையின் படிப்பு மந்தமானதற்கான உண்மையான காரணத்தை அறியாதவர்களாக உள்ளனர். "வகுப்பில் ஆசிரியர் நடத்தும் பாடங்களை கவனிக்காமல் கோட்டைவிட்டு விடுகிறான். ஏனோ, தானோவென்று தேர்வு எழுதுகிறான்...' என, கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். மேலும், தேர்வு விடைத்தாளில் கையெழுத்திட மறுத்து பிள்ளையை அடித்து, உதைக்கவும் செய்கின்றனர். பெற்றோரிடம் அடி வாங்கும் பிள்ளைகள், பள்ளிக்குச் செல்ல அஞ்சுகின்றனர்; தேர்வு நெருங்கினாலே நடுங்குகின்றனர்.அப்படியே தேர்வு எழுதினாலும், குறைந்த மார்க்குடன் கூடிய விடைத்தாள்களை பெற்றோரிடம் காண்பித்தால் அடிப்பார்களே,...என பீதிக்கு உள்ளாகின்றனர். பள்ளிக்குச் செல்ல மறுத்து,"வயிறு வலிக்கிறது' "தலை சுற்றுகிறது' என காரணங்களைக் கூறி பள்ளிக்குச் செல்லாமல் தவிர்க்க முனைகின்றனர்.
பதறும் பெற்றோர், பிள்ளைக்கு ஏதோ நேர்ந்துவிட்டதாக கருதி, டாக்டரிடம் அழைத்துச் சென்று பலவிதமான பரிசோதனைகளுக்கும் உட்படுத்துகின்றனர். "வயிற்று வலி' "தலை சுற்றலுக்கான' காரணம் கண்டறியப்படாத நிலையில், மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்; வீட்டில் அமைதியிழப்பும் ஏற்படுகிறது. "இதுபோன்ற நிலைக்கு காரணம், பிள்ளைகள் அல்ல; பெற்றோரே' என்கி ன்றனர், உளவியல் ஆலோசகர்கள். தங்களது பிள்ளைகளிடம் கனிவாக பேசி, கலந்துரையாடி, அவர்களது நடவடிக்கைகளை நிதானித்து கவனித்து உண்மையான காரணங்களை கண்டறிவதற்கான முயற்சியில் ஈடுபட தவறுகின்றனர். வெறுமனே "படி, படி' என மிரட்டி அச்சுறுத்துவதையே வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர்.

4 ஆண்டுகளுக்கு பிறகு கோதுமை ஏற்றுமதிக்கு தடையை நீக்கியது அரசு

புதுடெல்லி: கோதுமை ஏற்றுமதி மீது விதிக்கப்பட்டிருந்த தடையை 4 ஆண்டுகளுக்கு பிறகு அரசு நீக்கியுள்ளதாக மத்திய விவசாய அமைச்சர் சரத் பவார் தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில் கூறியதாவது:

உள்நாட்டு சப்ளையை உறுதிப்படுத்தும் வகையில் கோதுமை ஏற்றுமதிக்கு 2007ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. அதன்மூலம், உள்நாட்டு தேவைக்கும் அதிகமாக கோதுமை இருப்பு உள்ளது. அத்துடன், கடந்த ஆண்டில் பருவ மழை சிறப்பாக இருந்ததால் கோதுமை சாகுபடி அமோகமாக உள்ளது.
எனவே, 4 ஆண்டுகளுக்கு பிறகு கோதுமை ஏற்றுமதி மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. எனினும், சர்வதேச சந்தையில் கோதுமை விலை குறைவாக இருப்பதால், ஏற்றுமதிக்கான அளவை அரசு இன்னும் அறிவிக்கவில்லை.இவ்வாறு சரத் பவார் தெரிவித்தார்.
சமீபத்தில் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் தலைமையிலான அமைச்சர்கள் குழு கூட்டம் நடந்தது. அதில் கோதுமை ஏற்றுமதி மீதான தடை குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் பங்கேற்ற அமைச்சர் சரத் பவார், உற்பத்தி காரண மாக இருப்பு வைக்க இடமின்றி கோதுமை அதிக சாகுபடியாகி உள்ளதால், ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதை அமைச்சர்கள் குழு ஏற்று, ஏற்றுமதி மீதான தடையை நீக்க ஒப்புதல் அளித்தது.

தமிழகத்தில் ஒன்பது இடங்களில் புதிய கல்லூரிகள்

சென்னை:

ஜுலை 17 (டிஎன்எஸ்) தமிழகத்தில் வேதாரண்யம், திருப்பத்தூர், ஸ்ரீரங்கம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட ஒன்பது இடங்களில் புதிதாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது.

இந்த புதிய கல்லூரிகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா, வீடியோ கான்பரன்சிங் மூலம் நாளை (ஜுலை 18) திறந்து வைக்கிறார். இந்த புதிய கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக அல்லாமல், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (டிஎன்எஸ்)

அஸ்ஸாமில் வெள்ளம் : ஒரு லட்சம் மக்கள் தத்தளிப்பு

தேஜ்பூர், ஜுலை 17 (டிஎன்எஸ்) கடந்த 2 நாட்களாக அஸ்ஸாம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள உள்ள நதிகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சோனிட்பூர், லக்கிம்பூர், தீமாஜி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 105க்கும் அதிகமான கிராமங்கள் நீரில் மூழ்கி உள்ளன. சுமார் 1.50 லட்சம் மக்கள் நீரில் தத்தளித்து வருகின்றனர்.

இந்த மாநிலங்களில் உள்ள நதிகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததே இத்தகைய மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 20 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கி உள்ளன.

ஜூலை 16, 2011

மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் வசிப்பது கிராமங்களில்-சென்ஸஸ் அறிக்கை

புதுடெல்லி:இந்தியாவின் மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் வசிப்பது கிராமங்களில் என மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக மக்கள் தொகை வளர்ச்சியில் போதுமான குறைவு ஏற்பட்டுள்ளது என அறிக்கை கூறுகிறது.

121 கோடி மக்கள் தொகையை கொண்ட இந்தியாவில் 83.3 கோடி பேர் வசிப்பது கிராமங்களிலாகும். 37.7 கோடி மக்கள் நகரங்களில் வசிக்கின்றனர். 2011 ஆம் ஆண்டு கிராம-நகர பகுதிகளில் நடத்தப்பட்ட மக்கள் தொகைத்தொடர்பான கணக்கெடுப்பு அறிக்கையை மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் நேற்று வெளியிட்டார்.

2001-ஆம் ஆண்டு 27.81 சதவீதமாக இருந்த நகரமயமாக்கத்தின் சதவீதம் 2011 ஆம் ஆண்டு 31.15 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே வேளையில் கிராமங்களில் மக்கள் தொகை சதவீதம் 72.19 சதவீதத்திலிருந்து 68.81 சதவீதமாக குறைந்துள்ளது.

மக்கள் தொகையில் ஏற்பட்ட குறைவு கிராமங்களில் மக்கள் தொகை சதவீதத்தில் குறைவு ஏற்படுவதற்கு காரணம் என சென்ஸஸ் கமிஷனர் சி.சந்திரமெளலி தெரிவித்துள்ளார். கிராமங்களில் வசிப்பவர்களின் எண்ணிக்கையில் அதிகரித்துள்ள மாநிலம் உத்தரபிரதேசமாகும் (15.5 கோடி). 5 கோடி பேர் வசிக்கும் மும்பை மக்கள் தொகை அதிகமான நகரமாகும்.

ராஜ்யசபா உறுப்பினராக ரபி பெர்னார்ட் தேர்வு!

சென்னை: 
நாடாளுமன்றத்தின் ராஜ்ய சபை உறுப்பினராக அ.தி.மு.க. சார்பில் ரபி பெர்னார்ட் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவை, அவர் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார். நாடாளுமன்றத்தின் ராஜ்ய சபையில் அ.தி.மு.க. உறுப்பினராக இருந்த கே.வி.ராமலிங்கம், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தமிழக அமைச்சர் ஆனார். இதைத்தொடர்ந்து தனது எம்.பி. பதவியை அவர் ராஜினாமா செய்தார். காலியாக இருந்த இடத்துக்கு அ.தி.மு.க. சார்பில் ஆ.வில்லியம் ரபி பெர்னார்ட் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவரை எதிர்த்து சிலர் மனுதாக்கல் செய்தனர். ஆனால் ராஜ்ய சபா உறுப்பினராக ரபி பெர்னார்ட் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

ஜூலை 15, 2011

மேற்குலகை கண்டிப்போம்-விடுதலை என்பது வார்த்தை அல்ல வேட்கை என நிரூபிப்போம்

உலகில் வன்முறைகள் பெருகிவிட்டன. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, விபச்சாரம், என அழிவின் விளிம்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறது மனித சமூகம். கலாச்சார சீரழிவினால் ஒட்டு மொத்த உலகமும் பாதிப்புக்குள்ளாகிறது. இது என்னுடைய கருத்தல்ல. மனித நேயம் கொண்ட, பகுத்தறியும் சக்தியில்லா விலங்கினங்களையும் பகுத்தறிந்து ஆராய்ந்து முடிவெடுக்கும் திரண்படைத்த மனிதர்களையும் வேறுபடுத்தி காட்டும் சிந்திக்கும் திரண் கொண்ட சீரிய மனிதர்களின் எண்ணங்களில் உலாவிக் கொண்டிருக்கும் கருத்தாகும்.

இது போன்ற கலாச்சார சீரழிவுகள் மேற்குலகின் இறக்குமதி. பெண்களை போகப்பொருளாக்கி, வியாபார சந்தைகளில் நடமாட விடுகின்றனர். அதனை ஏற்றுக் கொண்ட மேற்குலக கலாச்சாரத்தில் வாழ்பவர்களை நாகரீக கோமான்கள் என்றும், சிந்தனை சிற்பிகள் என்றும், அதனை அடியோடு வெறுப்பவர்களை பழமைவாதிகள், அங்ஙானத்தில் மூழ்கி இருப்பவர்கள் என்றும் பிதற்றுகின்றனர்.

ஒரு பெண் – தாய், மனைவி, சகோதரி என பல பரிணாமங்கள் எடுக்கிறால். ஆனால் அதை புறம் தள்ளிவிட்டு விங்ஙானத்தின் உச்சியில் இருப்பதாக பிதற்றி கொள்ளும் அங்ஙானத்தின் விழிம்பில் இருக்கும் மூடர்கள் அப்பெண்களை அரை நிர்வான தோற்றத்துடனும், முழு நிர்வாணத்திற்கு உட்படுத்தியும் அகம் மகிழ்கின்றனர். இதற்கு நாகரீகம் என்ற வெற்று சாயம் பூசி பெண்ணியம் பேசுகின்றனர்.

நீரிழிவு நோயின் அறிகுறிகளும், முதலுதவியும்

நீரழிவு நோயாளிகளுக்கு கொடுக்கப் படும் மருந்தானது அவர்களில் குருதியில் உள்ள சீனியின் அளவைக் குறைத்துக் கட்டுப் பாட்டிலே வைத்திருக்க உதவுகிறது.

எல்லோரும் அறிந்தபடி குருதியில் குளுக்கோஸின் ( சீனியின்) அளவு அதிகரிப்பதே நீரழிவு நோய் எனப்படுகிறது.

குருதியில் சீனியின் அளவு அதிகரிப்பது மட்டுமல்ல , சீனியின் அளவு குறைவது கூட பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது கைப்போ கிளைசீமியா(HYPOGLYCEMIA) எனப்படும்.

குறிப்பாக நீரழிவு மாத்திரை எடுக்கும் ஒருவர் அந்த வேளை சாப்பிடாமல் விட்டால் அல்லது அதிகமான அளவிலே மாத்திரைகளை எடுத்தால் சடுதியாக சீனியின் அளவு குறைந்து விடலாம்.

இவ்வாறு சீனியின் அளவு குறையும் போது ஒருவருக்கு கீழ் வரும் அறிகுறிகள் ஏற்படலாம்…..

ஜூலை 14, 2011

பறவை உருவத்தில் உளவு பார்க்கும் கருவி

விஞ்ஞான தொழிநுட்ப வளர்ச்சியானது அனைத்து துறைகளிலும் பல நவீன மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது.போர் மற்றும் உளவு பார்த்தலிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக பண்டைய காலத்தில் உளவு பார்ப்பதற்கு பல்வேறு உத்திகள் கையாளப்பட்டன. ஒற்றர்கள் மூலம் உளவு பார்த்தல், பறவைகள் மற்றும் மிருகங்கள் மூலம் உளவு பார்க்கும் நடைமுறைகள் அக்காலத்தில் பின்பற்றப்பட்டன.அதன் பின்னர் செய்மதி மூலம் உளவு பார்க்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.தற்காலத்தில் அதைவிட மிக நுணுக்கமான முறைகள் கையாளப்படுகின்றன.அமெரிக்க இராணுவமானது இத்தகைய பல உளவு பார்க்கும் கருவிகளை தயாரித்துள்ளது. இவற்றை யாராலும் எளிதாக அடையாளம் காண முடியாத வண்ணம் அவை உருவாக்கப்பட்டுள்ளன. இவை உருவத்தில் பறவைகள் மற்றும் பூச்சிகள் வடிவிலும் காணப்படுவதால் அவற்றை அடையாளம் காண்பது எதிரிகளுக்கு சற்று கடினம்.

உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி தீவிரம்

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் வரும் அக்டோபர் 26-ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து, உள்ளாட்சி தேர்தலுக்கான
ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நகர் பிரிவு, புறநகர் பிரிவு என இரு பிரிவுகளாக தேர்தல் நடத்தப்படுகிறது. நகர் பிரிவில் மாநகராட்சி, நகராட்சி,
பேரூராட்சிகள், புறநகர் பிரிவில் மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சிகள் இடம் பெற்றுள்ளன. நகர் பிரிவில் உள்ள உள்ளாட்சிகளுக்கு வாக்குப்பதிவு
இயந்திரங்களும், புறநகர் உள்ளாட்சி தேர்தலில் வாக்குப் பெட்டிகளும் பயன்படுத்தப்பட உள்ளன. சட்டசபை தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் அடிப்படையில் ஊராட்சிகளில் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இப்பணி வரும் 18-ம் தேதிக்குள் முடிக்கப்படும். தற்போது வாக்குசாவடிகள் அமைப்பது தொடர்பாக ஆய்வுகள் நடந்து வருகின்றன. வாக்குச் சாவடிகளில் மாற்று திறனாளிகள் வசதிக்காக சரிவுப்பாதை அமைக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

விபத்தில் கால் இழந்தவருக்கு இறந்தவரின் கால்களை பொருத்தி சாதனை!

வாலன்ஷியா :
விபத்தில் கால்களை இழந்தவருக்கு இறந்தவரின் கால்களை பொருத்தி ஸ்பெயின் டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். ஸ்பெயினின்
வாலன்ஷியாவில் உள்ள பிரபல லா பீ மருத்துவமனையில் ஸ்பெயினின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் பெட்ரோ கவதாஸ் தலைமையிலான மருத்துவர்கள் குழு இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. 
சிகிச்சைக்கு பிறகு நோயாளி மெதுவாக உடல்நலம் தேறிவருவதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள், 48 மணி நேர தொடர் கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். கால் மாற்று ஆபரேஷன் செய்ய கடந்த ஆண்டு நவம்பரில் ஸ்பெயின் மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்தது. அதன் பிறகு, இறப்பவர்கள் பற்றிய தகவல்களை மருத்துவ குழுவினர் பெற்று, யாருடைய காலை பொருத்தலாம் என்று ஆராய்ச்சி செய்து வந்தனர். சமீபத்தில் இறந்தவரது கால்கள், இவருக்கு நன்கு பொருந்தும் என்பதால் உடனடியாக ஆபரேஷனுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கால்களை தானமாக வழங்க இறந்தவரது குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். 

ஜிசாட்-12 செயற்கை கோளுடன் நாளை பாய்கிறது பிஎஸ்எல்வி-சி17

ஸ்ரீஹரிகோட்டா : ஜிசாட்-12 தகவல் தொடர்பு செயற்கை கோளை சுமந்து கொண்டு பி.எஸ்.எல்.வி-சி17 ராக்கெட் நாளை மாலை விண்ணில் பாய்கிறது. நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஜிசாட்-12 என்ற செயற்கை கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கினர். 1410 கிலோ எடையுள்ள இந்த செயற்கை கோளில் 12 இஎக்ஸ்டி-சி பாண்ட் டிரான்ஸ்பாண்டர்கள் உள்ளன. இந்த செயற்கை கோள் பி.எஸ்.எல்.வி-சி17 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை மாலை 4.48 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 53 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று காலை 11.48 மணிக்கு தொடங்கியது.

கடலூர் மாவட்டத்தில் 35 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு அங்கீகாரம்

குறிஞ்சிப்பாடி:
கடலூர் மாவட்டத்தில் 35 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சுப்ரமணியபிள்ளை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் 2011-2012 கல்வி ஆண்டில் ஆசிரியர் பயிற்சி அளிக்க அனுமதி பெற்றுள்ள 35 பயிற்சி நிறுவனங்கள் விவரம் வருமாறு:

ஜூலை 13, 2011

மும்பையில் மூன்று இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்; 17 பேர் பலி

மும்பை: மும்பையில் இன்று மாலை மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. மும்பையின் மேற்கு தாதர் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் வெடிகுண்டு வெடித்தது. இதே போல், ஜாவேரி பஜார் பகுதியில் 2வது குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. மூன்றாவது குண்டுவெடிப்பு தெற்கு மும்பையில் உள்ள ஓபரா ஹவுஸ் அருகே நடந்துள்ளது. அனைத்து குண்டுவெடிப்பும் மக்கள் நெரிசல் அதிகமுள்ள இடங்களிலும், பரபரப்பான நேரத்திலும் நடந்துள்ளது.


இந்த குண்டுவெடிப்புகளில், 17 பேர் பலியானதாகவும், 80க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் 4 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 1993ம் ஆண்டு, இதே ஜாவேரி பஜாரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது. நகரில் தொடர்குண்டுவெடிப்புகள் நடத்ததப்பட இருப்பதாக போலீஸ் கண்ட்ரோல் ரூமிற்கு மர்ம அழைப்பு வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு தேசிய புலனாய்வு துறையினர் விரைந்துள்ளனர்.

உணவு உற்பத்தி பாதிப்பு ஏற்படும் அபாயம்! : வீட்டு மனைகளாக மாறும் விளை நிலங்கள்

ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தினால், பயிர்களில் களை எடுக்க ஆட்கள் இன்றி, பல விவசாயிகள் தங்களது விளை நிலங்களை, வீட்டு மனைகளாக மாற்றி வருகின்றனர். இதே நிலை நீடித்தால், உணவு உற்பத்தி பாதிக்கும் என, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். 
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் (100 நாள் வேலை) ஏரி தூர்வாருதல், குளம் சீரமைத்தல் என பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இதனால், கிராமங்களில் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என, சில ஆண்டுகளாக விவசாயிகள் புலம்பி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் நெல், வேர்க்கடலை என பயிரிடும் விவசாயிகளுக்கு நாற்று நடவும், களை எடுக்கவும், அறுவடை செய்யவும் ஆட்கள் தேவைப்படுகின்றனர். தற்போது களை எடுக்க ஆள் இல்லையே என, கிராமங்களில் விவசாயிகள் தினசரி புலம்பி வருகின்றனர். சில விவசாயிகள் களை எடுக்க ஆட்கள் தேடி, அதிகாலை 5 மணிக்கெல்லாம் ஊர் ஊராக டிராக்டரை வைத்துக் கொண்டு அலையும் காட்சியை, கிராமங்களில் பார்க்க முடிகிறது.
கிராமங்களில் உள்ள விவசாய கூலித் தொழிலாளர்களோ 100 நாள் வேலைக்குத் தான் செல்கிறார்களே தவிர, விவசாய வேலைக்கு வர மறுக்கின்றனர்.

ஜவுளி, சிகரெட், மொபைல் விலை "விர்...' : விற்பனை வரியில் மாற்றம் எதிரொலி

அரசின் வரி வருவாயை அதிகரிப்பதற்காக, சுருட்டு, பீடி, பான்பராக், மொபைல் போன், ஜவுளி மற்றும் ஜவுளிப் பொருட்கள் உட்பட பலவற்றின் மீதான விற்பனை வரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதன் மூலம், அரசுக்கு, ஆண்டுக்கு 3,900 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும்.
தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதே நேரத்தில், கடந்த அரசு, ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடனை விட்டுச்சென்றுள்ளது. எனவே, புதிய நலத் திட்டங்களை வெற்றிகரமாக அமல்படுத்தவும், நிதி நிலவரங்களை சீரமைக்கவும், கூடுதல் வருவாயை திரட்ட வேண்டிய நிலையில் அரசு உள்ளது. இந்த நிதி ஆதாரங்களை அதிகரிக்க, வருவாயைப் பெருக்கும் பல நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நிதி ஆதாரத்தைத் திரட்டுவதற்கான ஒரு வாய்ப்பாக நேற்று முன்தினம் முதல், விற்பனை வரி மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.

ஜூலை 12, 2011

நெல் பயிரிட விரும்பும் விவசாயிகள் அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்

விருத்தாசலம் : சம்பா பட்டத்தில் நெல் பயிரிட விரும்பும் விவசாயிகள் வேளாண்மை அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என திட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 
கடலூர் மாவட்டத்தில் சம்பா பட்டத்திற்கு கோ 50 நெல் ரகம் ஏற்றதாகும். 130 - 135 நாட்கள் வயது கொண்ட இந்த ரகம் அதிக மகசூல் தர வல்லது. மேலும் மானாவாரி சாகுபடிக்கு அண்ணா 4 என்ற நெல் ரகம் ஏற்றதாகும். இது வறட்சியைத் தாங்கி வளரும். 
இதன் வயது 100 - 105 நாட்கள். களர் உவர் நிலத்திற்கு ஏற்ற திருச்சி 3 என்ற நெல் ரகம் 135 நாட்கள் வயது உடையது. எக்டருக்கு 5,833 கிலோ மகசூல் தர வல்லது. மேற்கண்ட மூன்று நெல் ரகங்களை பயிர் செய்ய விரும்பும் விவசாயிகள் விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள் ளது.

சவுதியில் 70 சதவீதம் பேர் குண்டர்கள் : ஆய்வில் தகவல்

துபாய் : "சவூதி அரேபிய மக்கள் தொகையில், 70 சதவீதம் பேர் உடல் பருமன் பிரச்னை கொண்டவர்கள்' என, ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அறிவியல் கண்டுபிடிப்புகளின் காரணமாக, தற்காலத்தில் நவீன வசதிகள் அதிகரித்து, மக்களின் உடலுழைப்பு வெகுவாக குறைந்து விட்டது. மேலும், எண்ணெய் மற்றும் கொழுப்புச் சத்துள்ள பொருட்களை அதிக அளவு பயன்படுத்துதல் போன்ற காரணங்களால், மக்களுக்கு உடல் பருமன் அதிகரித்து வருகிறது. அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், சவுதி அரேபிய மக்கள் தொகையில், 70 சதவீதம் பேர் உடல் பருமன் பிரச்னை கொண்டவர்கள் என, தெரியவந்துள்ளது.
உடல் பருமன் காரணமாக, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரக கோளாறுகள் மற்றும் இதயம் தொடர்பான பிரச்னைகளும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, அந்நாட்டு அரசு தயாரித்து வரும் பெரிய நோய்கள் பட்டியலில், உடற்பருமனையும் சேர்த்துள்ளது. உடற்பருமனால் ஏற்படும், நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்துவதோடு, உயிர் இழப்புகளையும் அதிக அளவில் ஏற்படுத்துகின்றன.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் மருத்துவ காப்பீடு : அமலாகிறது தமிழக அரசின் புதிய திட்டம்

சென்னை: "நான்கு ஆண்டுகளுக்கு, ஒவ்வொரு குடும்பமும் நான்கு லட்ச ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை பெற்றுக்
கொள்ளும் வகையில், 950 வகையான சிகிச்சை முறைகளுக்கு அனுமதிக்கும், புதிய மருத்துவ காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படும். இத்திட்டம் செயலுக்கு வரும் வரை, குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கான செலவை, அரசே செலுத்தும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் அறிக்கை: மனிதவள மேம்பாட்டில் முக்கிய காரணிகளாக விளங்குவது தரமான கல்வி மற்றும் சுகாதாரம். அந்த அடிப்படையில், மாநிலத்தில் சுகாதாரமான சூழ்நிலையை உருவாக்க வேண்டுமெனில், அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவை வழங்க வேண்டும். ஆனால், தற்போதுள்ள மருத்துவ காப்பீட்டுத் திட்டம், மக்களின் சுகாதார தேவைகளை முழுமையாக நிறைவு செய்யும் வகையில் இல்லை. இந்த காப்பீட்டுத் திட்டம், தனியார் காப்பீட்டு நிறுவனங்களும், தனியார் மருத்துவமனைகளும் வளர்ச்சியடையவே வழிவகுத்தது.

ஜூலை 11, 2011

புதிய ரேஷன் கார்டுகள் 2 மாதத்தில் வழங்கப்படும்: அமைச்சர் புத்திசந்திரன் தகவல்

தமிழக உணவுத்துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட அமைச்சர் புத்திசந்திரன் நேற்று ஊட்டி வந்தார். ஊட்டி தமிழகம் மாளிகையில் கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் அவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

அதைத்தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஊட்டியில் உள்ள சிவில் சப்ளை குடோனுக்கு சென்று ஆய்வு செய்தார். ஆய்வு முடிந்ததும் அமைச்சர் புத்திசந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்களை பதுக்குவோர் மற்றும் கடத்துபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உணவுத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. உணவு பொருட்களில் கலப்படம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ரஷியாவில் கப்பல் மூழ்கியது: 103 பேர் பலி

மாஸ்கோ, ஜுலை 11-
ரஷியாவின் மத்திய பகுதியில் லோவ்கா ஆறு ஓடுகிறது. இதில் கப்பல் மற்றும் படகு போக்குவரத்து நடைபெறுகிறது. நேற்று ஒரு சொகுசு கப்பலில் 188 சுற்றுலா பயணிகள் மற்றும் ஊழியர்கள் பயணம் செய்தனர். தடார்சன் என்ற இடத்தில் சென்ற போது அந்த கப்பல் தண்ணீரில் மூழ்கியது.

இது குறித்து மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அவர்கள், அங்கு விரைந்து வந்தனர். அவசர காலத்தில் தண்ணீரில் மூழ்கும் 50 வீரர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஆற்றில் குதித்து தண்ணீரில் மூழ்கியவர்களை காப்பாற்றினார்கள்.

மத்திய மந்திரிசபை மாற்றம்: புதுமுகங்கள் 12 பேருக்கு வாய்ப்பு; தினேஷ் திரிவேதி ரெயில்வே மந்திரி

மத்திய மந்திரி சபையில் சில இலாகாக்கள் காலியாக இருப்பதாலும், சில மந்திரிகளின் செயல்பாடு சிறப்பாக இல்லாததாலும் மந்திரி சபையை மாற்றி அமைக்க பிரதமர் மன் மோகன்சிங் முடிவு செய்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் இது தொடர்பாக 3 தடவை அவர் ஆலோசனை நடத்தினார்.

மந்திரி சபை மாற்றம் இன்று பிற்பகல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உத்தரபிரதேச ரெயில் விபத்தில் 63 பேர் பலி ஆனதாலும், மத்திய அரசு தலைமை வக்கீல் கோபால் சுப்பிரமணியம் திடீரென ராஜினாமா செய்வதாக கூறியதாலும் மந்திரி சபை மாற்றம் தாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது. நாளை அல்லது நாளை மறுநாள் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்று தெரிகிறது.

ரியல் எஸ்டேட் மோசடியை தடுக்க விரைவில் வருகிறது புதிய சட்டம்

புதுடில்லி : 
ரியல் எஸ்டேட் தொழிலில், பொதுமக்கள் ஏமாற்றப்படுவதை தடுக்கும் வகையிலான மசோதா, பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது. மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சியில், ரியல் எஸ்டேட் துறையின் பங்கு, 9 சதவீதம். இருந்தாலும், இத்துறை முறைப்படுத்தப்படாமல் உள்ளது. ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருவோர் மீது, பொதுமக்கள் புகார் கூறுவது அதிகரித்து வருகிறது.

எனவே, ரியல் எஸ்டேட் துறையை முறைப்படுத்தவும், ஏமாற்றப்படுவதில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கவும் வகை செய்யும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு மசோதா, தயாராகியுள்ளது. இந்த மசோதாவவை, பார்லிமென்டில், வரும் மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், சம்பந்தப்பட்ட நிலம் தொடர்பான விவரங்களை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டியிருக்கும். மேலும், பணிகள் முடியும் நாள் பற்றிய விவரத்தையும் முன் கூட்டியே தெரிவிக்க வேண்டியிருக்கும்.

தற்போது இந்த மசோதா, சட்ட அமைச்சகத்தின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பின், மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற்று, பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜூலை 10, 2011

திகார் ஜெயிலில் இருக்கும் பெண் தண்டனை கைதிகளில் 46 சதவீதம் பேர் கொலை குற்றவாளிகள்


டெல்லியில் உள்ள திகார் ஜெயில்தான் நாட்டில் உள்ள ஜெயில்களிலேயே மிகப்பெரியதாகும். இங்குதான் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த ஜெயிலில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி பிரிவுகள் உள்ளன.
கைதிகள் விபரம் குறித்து ஆண்டுதோறும் ஆய்வு அறிக்கை வெளியிடப்டுவது வழக்கம். அதன்படி நடப்பு 2011-ம் ஆண்டுக்கான ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  

4 மாதங்களுக்கு பின் சென்னைக்கு வீராணம் குடிநீர்: குழாய்களை சரி செய்யும்பணி தீவிரம்


முதல்-அமைச்சர் ஜெயலலிதா கோரிக்கையை ஏற்று ஆந்திரா அரசு சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீரை திறந்து விட்டது.   கண்டலேறு அணையில் இருந்து இப்போது நிமிடத்துக்கு 1800 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
 
இன்று காலை நிலவரப்படி தமிழக எல்லையில் 840 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரிக்கு 718 கன அடி தண்ணீர் வருகிறது. இதுவரை 681 மில்லியன் கனஅடி கிருஷ்ணா தண்ணீர் வந்து இருக்கிறது. பூண்டி ஏரியில் தற்போது 1329 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.
 
புழல் ஏரியில் 1794 மில்லியன் கனஅடி தண்ணீர் இருக்கிறது. செம்பரம்பாக் கம் ஏரியில் 2196 மில்லியன் கன அடியும், சோழவரம் ஏரியில் 90 மில்லியன் கன அடியும் தண்ணீர் இருப்பு உள்ளது.

ஜூலை 09, 2011

திங்கள்கிழமை அமைச்சரவை மாற்றம்- சோனியாவுடன் மன்மோகன் ஆலோசனை

டெல்லி:பிரதமர் மன்மோகன் சிங் தனது அமைச்சரவையில் திங்கள்கிழமை மாறுதல் செய்யவுள்ளார். இதை உறுதிப்படுத்தும் வகையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, பிரதமர் மன்மோகன் சிங் இன்று சந்தித்துப் பேசினார்.

முன்னதாக திமுக தலைவர் கருணாநிதியுடன் இன்று பிரணாப் முகர்ஜி பேச்சு நடத்தினார். அதன் விவரத்தை அவர் பிரமதருக்கு தொலைபேசியில் தெரிவித்தார். இதையடுத்து சோனியாவை சந்தித்தார் பிரதமர்.

சிறுபான்மை சமூக முன்னேற்றத்திற்கு அரசு உறுதி பூண்டுள்ளது-சல்மான் குர்ஷித்

புதுடெல்லி:சிறுபான்மை சமூகத்தின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். இந்தியாவில் 150 மாவட்டங்களில் துவக்கிய வளர்ச்சி திட்டங்களின் வெற்றியை உறுதி செய்வதற்கு கவன பரிசோதனை துவக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை சமூகத்தின் வளர்ச்சியை நோக்கமாக கொண்ட திட்டத்தை கண்காணிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு தின பயிற்சி முகாமை துவக்கி வைத்தார் அவர். அமைச்சகம் துவக்கிய திட்டங்கள் குறித்து புகார் எழுந்துள்ளதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் திட்டம் ஏன் உபயோகமாகவில்லை என்பதை எவரலாலும் கூற இயலவில்லை. இனியும் ஏராளமானவை செய்ய வேண்டியுள்ளது.

"சூரிய ஒளியிலிருந்து 3000 மெகாவாட் மின்சாரம்:அரசு திட்டம்

"இன்னும் ஐந்து ஆண்டுகளில்சூரிய ஒளியிலிருந்து 3000மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது,''என, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்தின்துணை பொது மேலாளர் குருராஜன்தெரிவித்தார்.
இந்திய தொழில்கள் கூட்டøப்பு, தமிழ்நாடு மின் நுகர்வோர் சங்கம் சார்பில், கோவையில் எரிசக்தி சேமிப்பு மற்றும் மரபுசாரா எரிசக்தி குறித்த ஒருநாள் கருத்தரங்கு கோவையில்நடந்தது.கருத்தரங்கு துவக்கவிழாவுக்கு, இந்திய தொழில்கூட்டமைப்பின் கோவை மண்டல தலைவர் ரவிசாம் தலைமைவகித்தார். தமிழ்நாடு மின் நுகர்வோர் சங்கத்தின் தலைவர்மகேந்திர ராம்தாஸ் வரவேற்றார்.

ஜூலை 08, 2011

பிஇ: இன்று பொது கலந்தாய்வு துவக்கம்- 1.4 லட்சம் மாணவ- மாணவிகளுக்கு அழைப்பு

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு இன்று முதல் 35 நாட்களுக்கு நடக்கிவிருக்கிறது. இதில் கலந்து கொள்ளுமாறு 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


தமிழகத்தில் உள்ள 484 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 25 ஆயிரம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 28-ம் தேதி முதல் நடந்து வருகிறது.

இன்று மாற்று திறனாளிகள் மாணவ-மாணவிகளுக்கான கலந்தாய்வு நடந்தது. கண்பார்வை குறைபாடு உடையவர்கள், ஊனமுற்றவர்கள், காது கேட்காதவர்கள் என 3 பிரிவுகளில் தலா 1000 ஆயிரம் இடம் வீதம் 3 ஆயிரம் இடங்கள் உள்ளன.

ஆப்ரிக்காவின் புதிய நாடடு தெற்கு சூடான் நாளை உதயம்

ஜூபா: சூடான் நாட்டிலிருந்து தெற்கு சூடான் எனும் புதிய நாடு நாளை உதயமாகிறது. இதற்காக முதல் சுதந்திர தின விழா தெற்கு சூடான் நாட்டின் ஜூபா நகரில் கொண்டாடப்படவுள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் மிகப்பெரிய நாடு சூடான். எண்ணெய் வளம் மிக்க இந்த நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வலுத்து வந்தது. இதனால் ஏற்பட்ட உள்நாட்டு போரி்ல் 1.5 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர்.

கடந்த 2005-ம் ஆண்டு ஏற்பட்ட அமைதி பேச்சவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி சூடானை இரண்டாக பிரிக்க மக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த மக்கள் வாக்கெடுப்பில் சூடான் இரண்டாக பிரிய ஆதரவு பெருகியதைத்தொடந்து. அதிபர் பஷீர்அல்-அசாத் சூடானை, சூடான், தெற்கு சூடான் என இரண்டாக பிரிக்கும் முடிவுக்கு அனுமதியளித்தார். அதன்படி நாளை (9-ம் தேதி) தெற்கு சூடான் தனி நாடு ஆப்ரிக்க கண்டத்தில் உதயமாகிறது. தலைநகர் ஜூபாவில் கோலாகல விழாவுடன் ‌கொண்டாடப்படுகிறது. புதிய ராணுவ வீரர்கள் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக தீவிர ஒத்திகையில் ஈடுபட்டனர். இரு நாடுகளின் எல்லையாக அபைய், தெற்கு கோர்டோபான் நகரங்கள் பிரிக்கப்பட்டன. ‌தெற்கு சூடான் நாடு உதயமாவ‌தற்கு , அதிபர் பஷீர் அல்-ஆசாத் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ஜூலை 07, 2011

குழந்தைகளைப் பாதிக்கும் ஆஸ்த்மா.

இன்று குழந்தைகளைப் பாதிக்கும் மிகப் பெரிய பிரச்னையாகக் கருதப்படுவது, ஆஸ்துமா. சுமார் 10 சதவிகிதக் குழந்தைகள் ஆஸ்துமாவால் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். போதிய விழிப்பு உணர்வு இல்லாதது மட்டுமே, குழந்தைகள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுவதற்கான காரணம்.

‘ஆஸ்துமாவை சரியாக கவனிக்காமல் விட்டு விட்டால்… மற்ற குழந்தைகள்போல வெளியே சென்று விளையாட முடியாது. அடிக்கடி பள்ளிக்கு விடுப்பு எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்ப தால், பாதிக்கப்பட்ட பிஞ்சுகளின் வாழ்க்கைத் துள்ளலே குறைந்துவிடும்.

60 கோடி பெண்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பில்லை-ஐ.நா

உலகளவில் வேலைக்கு செல்லும் பெண்களில் பாதிக்கு மேற்பட்டவர்களுக்கு அவர்கள் பணிபுரியும் இடங்களில் பாதுகாப்பில்லை என ஐ.நா தெரிவித்துள்ளது. ஏறத்தாழ 60 கோடி பெண்களுக்கு தொழில் சட்டங்களின் அடிப்படையில் ஆதாயங்கள் கிடைப்பதில்லை. இவர்களில் பெரும்பாலோர் பணிபுரியும் இடங்களில் பாரபட்சத்தை சந்திக்கிறார்கள் என நேற்று முன்தினம் ஐ.நா வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

பாலின சமத்துவத்திற்கும், பெண்களை சக்திப்படுத்துவதற்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் துவக்கப்பட்ட ‘ஐ.நா பெண் (UN Women)’ என்ற ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு தான் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் தற்பொழுதும் அதிகமாக காணப்படுவதாகவும் பல பெண்களும் தங்களின் அடிப்படை உரிமைகளைக் குறித்து விழிப்புணர்வு பெற்று வருவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. 28 நாடுகளின் பாராளுமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் 30 சதவீதத்தை எட்டவோ அதனை தாண்டவோ முடிந்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தயாநிதிக்கு பங்கு என சி.பி.ஐ., அம்பலம்: சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல்

புதுடில்லி:"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு விவகாரத்தில், தயாநிதிக்கும் பங்கு உள்ளது என, சி.பி.ஐ., அம்பலப்படுத்தியுள்ளது. "2004ம் ஆண்டு, தயாநிதி, தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவனபங்குகளை மலேசியநிறுவனத்திற்கு விற்க, அதன் உரிமையாளர் சிவசங்கரனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். அதற்கான அடிப்படைமுகாந்திரம் உள்ளது' என, சி.பி.ஐ., நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த விரிவானஅறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் இதுவரையில் நடந்துள்ள விசாரணை விவரங்கள் அடங்கிய 71 பக்கங்கள்கொண்ட அறிக்கையை, சி.பி.ஐ., நேற்று சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்தது.இந்த வழக்கு விசாரணையை கண்காணித்துவரும் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய "பெஞ்ச்' முன், சி.பி.ஐ., மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், அந்த அறிக்கையை அளித்தார்.

ஜூலை 06, 2011

ரயில்வேயில் புதிய இ-டிக்கெட் சேவை: இதில் ஏஜன்டுகளுக்கு இடமில்லை

புதுடில்லி : தனிநபர்கள் மட்டுமே முன்பதிவு செய்யும் வகையில், புதிய இ-டிக்கெட் சேவையை இந்தியன் ரயில்வே விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. சேவைக்கட்டணமும் குறைகிறது.

ஐ.ஆர்.சி.டி.சி., மூலம் டிராவல் ஏஜன்டுகளும், வணிக நிறுவனங்களும் அதிகளவில் ரயில்வே டிக்கெட் இ-டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வந்தனர். இதனால், தனிநபர்களுக்கு டிக்கெட் எளிதில் கிடைக்காத நிலை ஏற்பட்டது. மேலும், டிராவல் ஏஜன்டுகள் பதிவு செய்யும் இ-டிக்கெட்டுகளை அதிக விலை வைத்து விற்பதாகவும் புகார்கள் எழுந்தன. இதை தவிர்க்கும் பொருட்டு, இந்தியன் ரயில்வே, புதிய இ-டிக்கெட் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, தனிநபர்கள் முதன்முறையாக, தாங்களாகவே பதிவு செய்து கொண்டு, இந்த சேவையை பெறலாம். இதற்கு கட்டணம் ஏதுமில்லை.

ஜூலை 05, 2011

மாணவ, மாணவியருக்கு இலவச பஸ் பாஸ் : முதல்வர் வழங்கினார்


சென்னை : மாணவ, மாணவியருக்கான இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளில், 1 முதல், 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் மற்றும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும், 26.3 லட்சம் மாணவ, மாணவியர், இலவச பஸ் பாஸ் பெற தகுதியுடையவர்கள்.

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம், கடந்தாண்டு, 3.40 லட்சம் மாணவ, மாணவியருக்கு இலவச பஸ் பாஸ்களை வழங்கியது. இந்த கல்வியாண்டில் (2011-12), 3.60 லட்சம் மாணவ, மாணவியர் இலவச பஸ் பாஸ் பெற உள்ளனர். மாணவ, மாணவியர் படிக்கும் பள்ளிகளுக்கே சென்று, அவர்களை போட்டோ எடுத்து, அங்கேயே இலவச பஸ் பாஸ் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகளை மாநகர போக்குவரத்துக் கழகம் செய்துள்ளது.

சமச்சீர் கல்வி குழு அறிக்கை இன்று தாக்கல்?

சென்னை:சமச்சீர் கல்வித் திட்டத்தின் பாடத் திட்டங்களை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை, ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டு அமல்படுத்துவதை தள்ளி வைக்கும் விதமாக, சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்', தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்துக்கு தடை விதித்தது.

இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சமச்சீர் பாடத் திட்டங்களை ஆய்வு செய்ய ஒரு குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்றும், அந்தக் குழு ஜூலை 6ம் தேதிக்குள் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதன்பின் ஒரு வாரத்தில் பிரதான வழக்கை ஐகோர்ட் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.


சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, ஒன்பது பேர் அடங்கிய குழுவை தமிழக அரசு நியமித்தது. இக்குழு ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தயார் செய்துள்ளது. ஐகோர்ட்டில் நேற்று அறிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தாக்கல் செய்யப்படவில்லை. ஐகோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 04, 2011

அரசு பள்ளிகளில் ஆசிரியர் வருகை : இன்று முதல் "ஆன்-லைனில்' பதிவு

கடலூர் : அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை "ஆன்-லைனில்' பதிவு செய்ய மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஆரம்ப பள்ளி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 1,689 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் சரவர பள்ளிக்கு வருவதில்லை என புகார் எழுந்தது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய "ஆன்-லைனில்' வருகைப் பதிவு செய்யும் திட்டத்தை அமல்படுத்த கலெக்டர் அமுதவல்லி உத்தரவிட்டுள்ளார்.

இதற்கான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் தலைமையில் கடந்த 1ம் தேதி நடந்தது. அதில், முதல் கட்டமாக ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை "ஆன்-லைனில்' பதிவு செய்யவும், பின்னர் பிற பள்ளிகளுக்கு செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதனையொட்டி மொபைல் போன் மூலம் வருகைப் பதிவேட்டை கடலூரில் உள்ள தேசிய தகவல் மையத்திற்கு எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்புவது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

சிதம்பரத்தில் புதிய போலீஸ் ஸ்டேஷன் : பழைய கட்டடம் இடிக்கும் பணி துவங்கியது

சிதம்பரம் : சிதம்பரத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் புதிய போலீஸ் ஸ்டேஷன் கட்டுவதற்காக 106 ஆண்டுகள் பழமை வாய்ந்த போலீஸ் ஸ்டேஷன் இடிக்கும் பணி துவங்கியது. சிதம்பரம் மேல வீதியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1904ம் ஆண்டு கட்டப்பட்ட கடலூர் மாவட்டத்திலேயே பழமையான கட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன் இயங்கி வருகிறது. 106 ஆண்டுகள் பழமை வாய்ந்த போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் பல முறை மராமத்து பணிகள் மேற்கொண்ட போதும் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலைக்கு மாறியது.

இந்நிலையில் இக்கட்டடத்தை இடித்து விட்டு 50 லட்சம் ரூபாய் செலவில் புதிய போலீஸ் ஸ்டேஷன் கட்ட முடிவு செய்யப்பட்டு காவலர் குடியிருப்பு வாரிய கட்டடம் கட்டும் பணிக்கான ஆயத்த பணிகளை துவங்கியுள்ளது. முதல் கட்டமாக பழைய போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள மகளிர் காவல் நிலைய கட்டடத்திற்கும், குற்றப்பிரிவு மகளிர் காவல் நிலையம் மாடிக்கும், மகளிர் பிரிவு குற்றப்பிரிவு கட்டடத்திற்கும் மாற்றப்பட்டது. தஸ்தாவேஜிகளும் உடனடியாக மாற்றப்பட்டதையடுத்து கட்டடம் இடிக்கும் பணி துவங்கியது. முழுமையாக இடிக்கப்பட்ட பிறகு புதிய போலீஸ் ஸ்டேஷன் கட்டும் பணி ஒரு மாதத்தில் துவங்கும்

தாய்லாந்தில் முதல் பெண் பிரதமர் யிங்லக் : எதிர்க்கட்சியான ப்யூதாய் வெற்றி


பாங்காக் :
தாய்லாந்தில் எதிர்க்கட்சியான ப்யூதாய் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதால், இக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமரின் சகோதரியுமான யிங்லக் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட உள்ளார். மொத்தமுள்ள 500 இடங்களில் 260 இடங்களை ப்யூதாய் கட்சி கைப்பற்றியுள்ளது. ஆளும் ஜனநாயகக் கட்சிக்கு 163 இடங்கள் கிடைத்துள்ளன. எதிர்க்கட்சியான ப்யூதாய் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதால் முன்னாள் பிரதமர் ஷினவத்ரேவின் சகோதரியும், இக்கட்சியின் தலைவருமான யிங்லக்,44, புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட உள்ளார். தற்போதைய பிரதமர் அபிஜித், புதிய பிரதமராகவுள்ள யிங்லக்குக்கு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். யிங்லக், தாய்லாந்து நாட்டின் முதல் பெண் பிரதமராகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு பள்ளிகளில் ஆங்கில வழியில் சேர மாணவர்கள் போட்டி

மாநகராட்சி பகுதிகள் மற்றும் மாவட்ட தலைநகர்ப் பகுதிகளில் இயங்கி வரும் அரசுப் பள்ளிகளில், தமிழ் வழி சேர்க்கையை விட, ஆங்கில வழி மாணவர் சேர்க்கை அமோகமாக நடந்துள்ளது. தலைநகர் சென்னையில் உள்ள பல அரசுப் பள்ளிகளில், மொத்த மாணவர் சேர்க்கையில் 15 சதவீதத்திற்கும் குறைவாகவே தமிழ் வழி சேர்க்கை நடந்துள்ளது.

ஒவ்வொரு கல்வியாண்டிலும், நகரப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில், மாணவர்கள் தமிழ் வழியில் சேர்வதை விட, ஆங்கில வழியில் சேர்வதற்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தனியார் பள்ளிகளில், ஆண்டுக்கு 30 ஆயிரம், 40 ஆயிரம் ரூபாய் கல்விக் கட்டணமாக இருக்கிறது. ஆனால், அரசுப் பள்ளிகளில் ஆண்டுக் கட்டணம் 1,000 ரூபாய்க்குள் இருக்கிறது. 

ஜூலை 03, 2011

ஈராக்,ஆப்கான் உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்கா நடத்திய போரில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் பலி; ரூ.200 லட்சம் கோடி சேதம்

ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்கா நடத்திய போரில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் பலியாகினர். கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி அமெரிக்காவில் உள்ள இரட்டை கோபுரங்கள் மற்றும் பென்டகன் (ராணுவ தலைமையகம்) மீது அல் கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.

இதை தொடர்ந்து தீவிரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கியது. அவர்கள் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக், ஏமன் உள்ளிட்ட நாடுகளில் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது. எனவே, தீவிரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்கா இறங்கியது.

கணிப்பொறி (வளர்ந்து வரும் அறுவை சிகிச்சை முறை)

இந்தக் காலத்தில் எல்லா அறுவைச் சிகிச்சை முறைகளிலும் அடுத்தடுத்து முன்னேற்றம் அதிகரிக்கிறது. உடலின் சிக்கலான பாகங்களில்கூட, துல்லியமாக அறுவை சிகிச்சை செய்யும் தொழில்நுட்பங்கள் வளர்கின்றன.
அறுவை சிகிச்சையில் மனிதத் திறன் ஒரு பக்கம் இருந்தாலும், தொழில்நுட்பமும் இன்றைய காலகட்டத்தில் அவ்வளவு முக்கியமான ஒன்று!
ஒரே அறுவை சிகிச்சை வல்லுனரால் ஒவ்வொரு நாளும் ஒரே அளவு சீராகவும் துல்லியமாகவும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாது. 

தொழில்நுட்பம் வளர்ந்த இந்த நேரத்தில், நோயாளிகளின் எதிர்பார்ப்பும் ’100 சதவிகிதப் பலன்’ என்று ஆகிவிட்டது. இதை நிறைவேற்றத்தான் இப்போது வந்துள்ளது, ‘கணிப்பொறித் துணை அறுவை சிகிச்சை முறை (கம்ப்யூட்டர் நேவிகேஷன்)’.

முதுகுத் தண்டு அறுவை சிகிச்சைக்கு ஒரு சில இடங்களில் மட்டுமே இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

ஜூலை 02, 2011

அல் அக்ஸா மஸ்ஜிதில் நுழைய இஸ்ரேல் தடை


ஜெருசலம்:போராட்டத்திற்கு பயந்து ஜெருசலத்தில் புராதன நகரத்தில் அமைந்துள்ள புனித மிக்க அல் அக்ஸா மஸ்ஜிதில் நுழைய இஸ்ரேல் ராணுவம் கட்டுப்பாட்டை விதித்துள்ளது.
45 வயதிற்கு கீழே உள்ள நபர்கள் மஸ்ஜிதில் நுழைய தடை விதிக்குமாறு இஸ்ரேல் ராணுவ அதிகாரி உத்தரவிட்டுள்ளதாக மஆன் செய்தி ஏஜன்சி தெரிவிக்கிறது. முன்பு பல முறை இஸ்ரேல் ராணுவம் அல் அக்ஸா பகுதியில் பலஸ்தீன் போராளிகள் மீது தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டிருந்தது. போராளிகளுக்கு அஞ்சி 45 வயதிற்கு கீழே உள்ள பலஸ்தீன் முஸ்லிம்கள் அல் அக்ஸா மஸ்ஜிதில் நுழைய இஸ்ரேலிய ராணுவம் இதற்கு முன்பும் பல முறை தடுத்துள்ளது.

ஜூலை 01, 2011

நரை முடியால் அவதியா?

நரைமுடி என்பது பலரது தலையாய பிரச்சனை. எளிய தீர்வாக கறிவேப்பிலை, மருதாணி போன்வற்றை கொண்டு கைவைத்தியம் செய்து வருவது என்பது பழைய கால பழக்கமாகி விட்டது.
தற்போது பியூட்டி பார்லர்களுக்கு படையெடுத்து பணத்தை தண்ணீராக வாரி இறைத்து வருகின்றனர். ஆனால் முழு பலன் கிடைக்காமல் புலம்புவது தான் மிச்சம்.
வயது வித்தியாசமின்றி சிறியவர், பெரியவர் என அனைவரும் இப்பிரச்னையால் அவதிப்படுவது அதிகரித்து வருகிறது. பரம்பரை, உணவுப்பழக்கம் எல்லாம் காரணமாக கூறப்பட்டாலும் தீர்வு கேள்விக்குறியாகவே உள்ளது.

வெள்ளிக்கிழமை முதல் 25 பைஸா நாணயம் இனி நினைவில் மட்டும்

டெல்லி:தற்போது நடைமுறையில் உள்ள மிகவும் குறைந்த மதிப்புடைய நாணயமான 25 பைஸா வெள்ளிக்கிழமை முதல் நமது நினைவுகளில் மட்டுமே தஞ்சம் புகும். ஐந்து, பத்து, இருபது பைஸா நாணயங்களை தொடர்ந்து 25 பைஸா நாணயமும் நினைவுகளில் மட்டும் இடம் பெறப்போகிறது.
பணவீக்கம் அதிகரித்துள்ள சூழலில் 25 பைஸா நாணயம் மதிப்பை இழந்துவிட்டதால் அதனை வாபஸ் பெறுவதற்கு காரணமாக கூறப்படுகிறது. வங்கிகளிலும், ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியாவின் அலுவலகங்களில் இருந்தும் வியாழக்கிழமை மாலைக்குள் 25 பைஸா நாணயங்களை மாற்றலாம். 25 பைஸா நாணயத்தின் பண மதிப்பை விட அதிகமானது அதன் தயாரிப்பு செலவாகும். 25 பைஸா வாபஸ் பெறுவதை தொடர்ந்து இனி 50 பைஸா நாணயம் இந்தியாவில் மிக மதிப்பு குறைந்த நாணயமாகும். பொருட்களின் தயாரிப்பு விலையிலும் இதன் அடிப்படையில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

சமையல் கியாசுக்கு விண்ணப்பிக்க கூடுதல் இருப்பிட சான்று ஆவணம்

புதிய சமையல் கியாஸ் பெற விண்ணப்பிப்பதற்கு தாங்கள் வசிக்கும் இருப்பிடத்திற்கான ஏதாவது ஒரு சான்று சமர்ப்பிக்க வேண்டும். குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை பான் கார்டு, டிரைவிங் லைசென்சு, பாங்கி கணக்கு போன்றவற்றில் ஏதாவது ஒரு ஆவணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.
 
தற்போது கூடுதலாக ஒரு ஆவணத்தை இருப்பிட சான்றாக விண்ணப்பிக்கலாம் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இனிமேல் சமையல் கியாசுக்கு விண்ணப்பிக்க கூடியவர்கள் மத்திய அரசு வழங்கும் சிறப்பு அடையாள அட்டை எண் உள்ள கடிதத்தையும் தங்களது அறிமுக, மற்றும் இருப்பிட சான்றாக சமர்ப்பிக்கலாம்.
 
இதுபற்றி தகவல் இந்தியன் ஆயில் நிறுவன பாரத் பெட்ரோலிய, இந்துஸ்தான் பெட்ரோலிய, எல்.பி.ஜி. வினியோகஸ்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு இழுத்தடிப்பால் முடங்குகிறது உடன்குடி அனல்மின் திட்டம்

உடன்குடி அனல்மின் நிலைய திட்டத்தில், முந்தைய தி.மு.க., அரசு விதிப்படி நிலக்கரி ஒப்பந்தம் செய்யாததால், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், பணி மேற்கொள்வதற்கான அனுமதியை தாமதப்படுத்தி உள்ளது. இதனால், திட்டப் பணிகள் முடங்கி, நிர்ணயிக்கப்பட்ட காலவரையரைக்குள் முடிக்க முடியாத நிலை எழுந்துள்ளது.