Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஜூன் 14, 2015

துபாயில் ஓட்டுநர் உரிமம் பெற இனி தமிழிலும் தேர்வு எழுதலாம்!

Slid2.jpgதுபாயில் ஓட்டுநர் உரிமம் பெற நடத்தப்படும் தேர்வில் இனி தமிழ் உள்ளிட்ட நான்கு இந்திய மொழிகளிலும் கேள்விகள் கேட்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. துபாயில் ஓட்டுநர் உரிமம் பெற கணினி மூலம் தேர்வு நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே உரிமம் பெற முடியும். இந்த தேர்வு ஆங்கிலம், உருது, அரபிக் ஆகிய மொழிகளில் மட்டுமே நடத்தப்படுகிறது. வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து, தமிழ், இந்தி, பெங்காலி, மலையாளம், ஆகிய இந்திய மொழிகள் உட்பட 11 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என சாலை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. மேலும், பயிற்சி வகுப்புகளும் தமிழ் உள்ளிட்ட

ஜூன் 05, 2015

உலக சுற்றுச்சூழல் தினம்: உலகில் மிகவும் மாசுபட்ட 20 நகரங்களில் இந்தியாவின் 13 நகரங்கள்

உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED) ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கிய சூழல் தொடர்பான நிகழ்வு ஆகும்.

இது ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையால் 1972 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த சில பத்தாண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டுவரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன.

உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்கள் 20 பட்டியலில் இந்தியாவின் தலைநகர் புதுடெல்லி உள்பட 13 நகரங்கள் இடம்பெற்று உள்ளன. இந்த 13 நகரங்களில் குஜராத்தின் வபி,ஒடிசாவின் சுகிண்டா ஆகியவை உலகின் மிகவும் மோசாமான் மாசுபட்ட நகரங்களின் 10 நகரங்கள் பட்டியலில் இடம்பெற்று உள்ளது. மிகவும் மாசு பட்ட நகரங்கள் பட்டியலில்

மே 29, 2015

பர்மாவில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் எதிர்நோக்கி உள்ள பிரச்சினைகள்!

1.மியான்மார் நாட்டில் ரோஹிங்கியா பகுதியில் வாழும் முஸ்லிம் இன மக்களே ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஆவர்.

 2.பர்மா அரசு இந்த மக்களுக்கு பிரஜை உரிமை , பயணம் செய்யும் சுதந்திரம் ,கல்வி பெறும் உரிமையை முற்றிலுமாக மறுத்த நிலையில் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்

 3.ரோஹிங்யா முஸ்லிம்கள் புத்த பெரும்பான்மை மக்களால் திட்டமிட்ட பிரச்சினைகள் மற்றும் தாக்குதல்களை தொடர்ந்து எதிர்கொள்கின்றார்கள்

4.கடந்த மூன்று ஆண்டுகளில் ரோஹிங்யா முஸ்லிம்கள் படகினால் தப்பித்து செல்ல முயன்றோர் எண்ணிக்கை 1,20,000 பேர் .

5.அருகே உள்ள நாடுகள் அவர்களுக்கு அடைக்கலம் தரவில்லை

6.ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பௌத்த மக்கள் பெரும்பான்மையாக வாழும் தாய்லாந்த் நாடுகளுக்கு முன்னேறினார்கள் .தாய்லாந்த் கடல் படை அவர்களை திருப்பி

நவம்பர் 28, 2014

பணி தடைக்கு (Ban) விதிவிலக்கு- UAE தொழிலாளர் துறை அறிவிப்பு!

“ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள், தமது வேலையை மாற்றிக் கொள்ளும்போது அவர்கள் மீதான ‘பணி தடை’ 1 வருடத்துக்கு விதிக்கப்படுவதில் மாற்றம் ஏதுமில்லை” என்று அறிவித்துள்ள UAE தொழிலாளர் துறை அமைச்சர் , “இந்த தடை குறித்து சில விதிவிலக்குகள் செய்யப்படலாம்” என்று தெரிவித்துள்ளது.

அமீரக தொழிலாளர் பொது சட்டப்படி, ஒரு வெளிநாட்டவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிய வந்தபின், மற்றொரு தனியார் நிறுவனத்துக்கு மாறினால், ஒரிஜினல் நிறுவனத்தில் 2 ஆண்டுகள் பணி புரிந்து இருக்காவிட்டால், அவர் மீது 1 ஆண்டு ‘பணி தடை’ விதிக்கப்படும். இது பொது சட்டம் (general rule). ஆனால், நடைமுறையில் தொழிலாளர் துறை அமைச்சு இதை அமல் படுத்துவதில்லை. மாறாக, ஒரிஜினல் நிறுவனத்தில் 1 ஆண்டு பணிபுரிந்தபின் மற்றொரு நிறுவனத்துக்கு மாறினால், கண்டுகொள்வதில்லை. ஆனால், 1 ஆண்டுக்கு குறைவான காலம் பணிபுரிந்துவிட்டு நிறுவனம் மாறினால்

நவம்பர் 23, 2014

கடலுக்கடியில் அதிநவீன நகரத்தை கட்ட தயாராகும் ஜப்பான்!

கடந்த 2012–ம் ஆண்டில் ஜப்பானை சேர்ந்த ஒபயாசி கார்ப்பரேசன் என்ற கட்டுமான நிறுவனம் விண்வெளியில் கட்டிடம் கட்டி அங்கு சுற்றுலா பயணிகளை அழைத்து சென்று தங்க வைக்க போவதாக அறிவித்தது.

இன்னும் 40 ஆண்டுகளில் அதற்கான முயற்சியை மேற்கொண்டு திட்டத்தை நிறைவேற்ற போவதாக அறிவித்தது. இந்த நிலையில் ஜப்பான் ஷிம்சு என்ற மற்றொரு கட்டுமான நிறுவனம் கடலுக்கு அடியில் அதிநவீன நகரத்தை கட்ட போவதாக அறிவித்துள்ளது. 1500 அடி அகலத்தில் வட்டவடிவிலான கூண்டு அமைக்கப்படுகிறது. அதற்குள் வீடுகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் அமைக்கப்படுகின்றன. இங்கு 5 ஆயிரம் பேர் தங்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. இதற்கு அட்லாண்டிஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆழ்கடல் அதிநவீன நகரம் கட்ட ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவாகும் என

ஜூலை 19, 2014

காஸ்ஸாவின் மீது தீவிரவாத இஸ்ரேலின் தரைப்படை தாக்குதல்!

ஜெருசலம்: மேற்காசியாவில் அழிவு சக்தியான இஸ்ரேல் காஸ்ஸாவின் மீது தரைப்போரை துவக்கியுள்ளது. போர் நிறுத்தத்திற்கான சர்வதேச அழைப்புகளை புறக்கணித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை வடக்கு காஸ்ஸாவிற்குள் இஸ்ரேல் படையினர் அத்துமீறி நுழைந்தனர். இதனைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஃபலஸ்தீன் மக்கள் புலன்பெயர்ந்து வருகின்றனர்.

ஹமாஸின் ஏவுகணை தளங்கள் மீது நேற்று இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் இம்முறை முதன்முறையாக தரை வழி தாக்குதலை காஸ்ஸா மீது துவக்கியுள்ளது. கடந்த 6 தினங்களில் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 170ஐ கடந்துள்ளது. அரைமணிநேரம் இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை காஸ்ஸா மீது தாக்குதலை நடத்தியது. அதன்பிறகு திரும்பிச் சென்றது.ஹமாஸ் போராளிகளின் எதிர்ப்பு நடவடிக்கையில் நான்கு இஸ்ரேலிய ராணுவத்தினருக்கு காயம் ஏற்பட்டது. காஸ்ஸாவிற்கு எதிராக முழுமையான தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகிவருவதாக ஊகமான செய்திகள் வெளியாகியுள்ளன. வடக்கு காஸ்ஸாவின் எல்லையில் இஸ்ரேலிய ராணுவத்தினர் முகாமிட்டுள்ளனர். வீடுகளிலிருந்து வெளியேற கோரி இஸ்ரேலிய விமானங்கள் ஒரு லட்சம் பேர் வசிக்கும் பிட் லஹியாவில் துண்டு பிரசுரங்களை வீசின.

ஹமாஸ் தளங்களை தாக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. தாக்குதல் நடத்தப்போகும் இடங்களையும் குறிப்பிட்டுள்ளது. ஹமாஸ் ராக்கெட் தாக்குதலை நடத்தும் அனைத்து இடங்களிலும் தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. நான்காயிரத்திற்கும் மேற்பட்ட காஸ்ஸா மக்கள் ஐக்கியநாடுகள் அவை நிவாரண ஏஜன்சியின் எட்டு முகாம்களில் அபயம் தேடியிருப்பதாக ஏஜன்சியின் செய்தி தொடர்பாளர் க்ரூஸ் கன்னஸ் தெரிவித்தார். அதேவேளையில், இரட்டை குடியுரிமை உடைய 800 ஃபலஸ்தீனர்கள், இஸ்ரேலின் எரஸ்க்ராஸிங் வழியாக காஸ்ஸாவை விட்டு வெளியேறத்துவங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சனிக்கிழமை இரவு பாதுகாப்பு படையின் தலைமையகம் மீது இஸ்ரேல் விமானத்தாக்குதலை நடத்தியிருந்தது.ஹமாஸின் ராக்கெட் தாக்குதல் பெரும்பாலும் வடக்கு காஸ்ஸாவில் இருந்து நடத்தப்படுவதால் அங்கு ராணுவ நடவடிக்கை

ஜூன் 28, 2014

அபுதாபி வர்த்தக அமைப்பின் தலைவராக லூலூ(LuLu) நிறுவனத் தலைவர் தேர்வு!

அபுதாபி வர்த்தக அமைப்பின் தலைவராக இந்திய தொழிலதிபர் யூசுப் அலி, 3வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஐக்கிய அரபு நாட்டின் தலைநகர் அபுதாபி. இங்கு அரசு நிறுவனமாக அபுதாபி தொழில் வர்த்தக கூட்டமைப்பு செயல்படுகிறது. அந்நாட்டு தொழில் மற்றும் வர்த்தகத்தை முறைப்படுத்தும் ஒரு அமைப்பாக இது உள்ளது. இந்த அமைப்பில் தேர்தலின் மூலம் தலைவர் மற்றும் இயக்குனர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த தேர்தலில் வெளிநாட்டை சேர்ந்த தொழிலதிபர்களும் போட்டியிடலாம். அபுதாபியில் நேற்று இந்த அமைப்புக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இந்திய தொழிலதிபர் யூசுப் அலி(58) தொடர்ந்து 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.

இவர் பிரபல லூலூ(LuLu) நிறுவனத் தலைவர். தேர்தலில் 14,555 பேர் வாக்களித்தனர். இதில் லூலூ நிறுவனத் தலைவர் யூசுப் அலி 1,721 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இவரது பதவிக்காலம் 4 ஆண்டுகள். தேர்தலில் வென்ற யூசுப் அலி கூறுகையில், ‘என் மீது தொழில், வர்த்தக துறையினர் வைத்துள்ள நம்பிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது. எனது பதவி காலத்தில் இந்தியா மற்றும் அபுதாபி நாடுகளுக்கு இடையே

ஜூன் 21, 2014

ராஜபக்‌ஷேவை சுற்றி வளைத்த 15 முஸ்லிம் நாடுகளின் தூதர்கள் – கண்டனத்தை பதிவுசெய்தனர்

மனித உரிமை மீறலின் உச்சத்துக்கே ஒரு நாடு செல்லும்போது, அந்நாட்டுக்கு எதிராக சர்வதேச நாடுகளின் நெருக்குதலும், ஐ.நா.மன்றத்தின் தலையீடும் அவசியமாகும்.

குறிப்பாக இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் இன அழிப்பைத் தடுக்க, முஸ்லிம் நாடுகள் உடனடித் தலையீடு செய்ய வேண்டும்.அந்த அடிப்படையில் இலங்கையில் அதிபர் ராஜபக்சேவை, பங்களாதேஸ் – ஈரான் – இராக் – எகிப்து இந்தோனேசியா – குவைத் – மலேசியா – மாலத்தீவு – நைஜீரியா – பாக்கிஸ்தான் – பாலஸ்தீனம் – துருக்கி – ஐக்கிய அரபு அமீரகம் – சவூதி அரேபியா – கத்தார் ஆகிய நாடுகளின் தூதர்கள் சந்தித்து தமது அதிருப்தியையும் கண்டனத்தையும் பதிவுசெய்துள்ளனர்.
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இதற்கான ‘லாபி’யை செய்துள்ளார். மத்திய கிழக்கில் உள்ள முஸ்லிம் நாடுகளில் சிங்களர்களுக்கு வேலைவாய்ப்பற்ற சூழல் உருவாகும் என்றும், இலங்கையைச் சார்ந்தவர்களுக்கு அங்கு தொழில் செய்ய இயலாத நிலை உருவானால் பொருளாதார ரீதியில் இலங்கை கடும் பின்னடைவை சந்திக்கும் என்றும் இலங்கையிலுள்ள அயலக வேலைவாய்ப்புப் பணியகம் நேற்றே எச்சரித்தது. இந்நிலையில் முஸ்லிம் நாடுகளின் தூதர்கள் கூட்டாகத் திரண்டு வந்து கண்டித்தது இலங்கை அரசை நடுங்கச்

ஜூன் 17, 2014

இலங்கையில் முஸ்லிம்கள் மீது சிங்களர் வெறியாட்டம்! 3 முஸ்லிம்கள் கொலை!! -உலக நாடுகள் கண்டனம்

இலங்கையில் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது சிங்களர்கள் நடத்தி வரும் கொலை வெறித்தாக்குதலில் 3 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். முஸ்லிம்களுக்கு சொந்தமான வணிக நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் அடித்து நொறுக்கப்பட்டு வருவதால் நாட்டின் பல பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.

இலங்கை அரசில் தமிழர்கள் பங்கேற்பதை பெரும்பான்மையான சிங்களர்கள் வெறுத்தனர். இதனால் தமிழருக்கு எதிரான இனவிரோத போக்கை சிங்களர்கள் கட்டவிழ்த்தனர். இதைத்தொடர்ந்து தனி ஈழம் கேட்டு விடுதலை புலிகள், ஆயுத போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆயுத போராட்டம் கடந்த சில வருடங்களாக முடிவிற்கு வந்துள்ள நிலையில், சிங்களர்கள் கவனம் தற்போது இஸ்லாமியர்கள் மீது திரும்பியுள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் 10 விழுக்காடாக உள்ள முஸ்லிம்கள், இலங்கை அரசியலில் அதிகம் பங்கெடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று பவுத்த பிட்சுக்கள் பகிரங்கமாக பேசிவருகிறார்கள். இதே கோரிக்கையை வலியுறுத்தி முஸ்லிம்கள் கணிசமாக இருக்கும் பகுதிகளில் நேற்று மாலை பவுத்த பிட்சுக்கள் ஊர்வலம் சென்றுள்ளனர். அப்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டுள்ளனர்.தலைநகர் கொழும்பில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்திலுள்ள அளுத்கம மற்றும் பெருவலா ஆகிய கடலோர நகரங்களில் இருதரப்புக்கும் நடுவே நேற்றிவு முதல் இன்று பகல் வரை மோதல் நடைபெற்று வருகிறது.

இதில் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். முஸ்லிம்களின் கடைகள், வணிக நிறுவனங்கள், பவுத்த கடும்போக்குவாதிகளால் அடித்து நொறுக்கப்பட்டன. சில பகுதிகளில் மசூதிகள் தாக்கப்பட்டதுடன், தொழுகை நடத்தியவர்களும் ரத்தம் வரும்வரை அடிக்கப்பட்டுள்ளனர். மேலும், பஸ்சில் பயணம் செய்த முஸ்லிம்களை கூட பவுத்த கடும்போக்குவாதிகள் விட்டுவைக்கவில்லை. பஸ்களை நிறுத்தி அவர்களை கீழே இழுத்து அடித்துள்ளனர். போலீசார் தலையிட்டு வன்முறையாளர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஆயினும், நிலைமை கைமீறி போனதால் அலுத்கமா, பெருவலா பகுதிகளில் இன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது., சட்டத்துறை அமைச்சர் ஹக்கீம் , "பவுத்தர்கள் தாக்குதல் நடத்தியதை காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்தது. இந்த அரசில் அங்கம் வகிக்க நான் அவமானப்படுகிறேன்" என்று தெரிவித்ததாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

ஐநா மனித உரிமை ஆணையர் நவிபிள்ளை அதிர்ச்சி!

இலங்கையில் இஸ்லாமியர்கள் மீது சிங்களர்களால் நடத்தப்பட்ட தாக்குதல் தனக்கு அதிர்ச்சியளிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்

ஜூன் 12, 2014

உலக கோப்பை கால்பந்தாட்டம் இன்று தொடக்கம்! போராட்ட களத்தில் மக்கள்

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் கடந்த ஒரு மாத கால எதிர்பார்ப்பான 20வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள், இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 11.30 மணிக்கு பிரேசில் நாட்டின் சாவ்போலோ நகரில் கோலகலமாக தொடங்குகிறது.

32 நாட்கள் நடக்கும் இப்போட்டியில் 32 நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன.உலகில் அனைத்து நாடுகளிலும் விளையாடப்படும் ஒரே விளையாட்டு கால்பந்து மட்டுமே. 4 ஆண்டுக்கு ஒருமுறை உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது. இதுவரை 19 உலக கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. 20 வது உலக கோப்பைக்கான போட்டி இந்தாண்டு தென் அமெரிக்காவின் பிரேசிலில் நடத்தப்படுகிறது. இதில், நடப்பு சாம்பியனான ஸ்பெயின், பிரேசில், அர்ஜென்டினா, குரோஷியா உட்பட 32 அணிகள் பங்கேற்கின்றன.

உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கு பிரேசில் நாட்டில் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். அந்த எதிர்ப்பையும்

ஜூன் 11, 2014

மோசுல் நகரை கைப்பற்றியது,‘ஈராக்கிய இஸ்லாமியத் தேசம்‘எனும் லெவெண்ட்‘ அமைப்பு!

ஈராக் மற்றும் சிரியாவில் பகுதிகளில் செயல்படும் போராளி குழுவான ஈராக்கிய இஸ்லாமியத் தேசம்‘ மற்றும் ‘இசிஸ்‘ என்று அழைக்கப்படும் ‘லெவெண்ட்‘ அமைப்புகள், ஈராக் மற்றும் சிரியாவின் உள்ள ஷியா ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடிவருகின்றனர்.தற்போது அரசின் கட்டு பாட்டில் உள்ள ஈராக்கின் மோசுல் நகரை இவர்கள் கைப்பற்றிய பிறகு அங்கிருந்து மக்கள் வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 மோசுல் நகரை கைப்பற்றியுள்ள, ‘ஈராக்கிய இஸ்லாமியத் தேசம்‘ மற்றும் ‘இசிஸ்‘ என்று அழைக்கப்படும் ‘லெவெண்ட்‘ அமைப்புகள் மேலும் முன்னேறி வருகின்றன. ‘இது அந்தப் பிராந்தியத்துக்கே மிகவும் அபாயகரமானது‘ என்று அமெரிக்கா கூறியுள்ளது. அல்கொய்தாவின் ஒரு கிளை அமைப்பான ‘இசிஸ்‘, இப்போது கிழக்கு சிரியா, மேற்கு மற்றும் மத்திய ஈராக் ஆகிய பகுதிகளில் கணிசமான அளவுக்கு நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. மேலும் ஈராக்கின் கிர்குக் மற்றும் சலாஹதீன் மாகாணங்களிலும் அந்த அமைப்பினர் முன்னேறி வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டில் பெரும்பான்மையாக வசிக்கும் சன்னி முஸ்லிம்களுடன் இணைந்து

ஜூன் 05, 2014

சிரியா அதிபராக கொடுங்கோலன் பஷர் அல் ஆசாத் மீண்டும் தேர்வு

தன்  சொந்த நாட்டு மக்களையே கொன்று குவித்து அகதிகளாக்கிய கொடுங்கோலர்களின் கையில் ஆட்சி அதிகாரம் சென்று சேர்வது தொடர்ந்து நடந்துகொண்டே வருகின்றது அந்த வரிசையில் தற்போது சிரியாவின் அதிபராக முடிசூடியுள்ளார் ஆசாத்!

தற்போது சிரியாவின் அதிபராக உள்ள ஆசாத்தின் மேற்பார்வையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 88.7 சதவீத வாக்குகள் பெற்று பஷர் அல் ஆசாத் சிரியா அதிபராக மீண்டும் தேர்வாகியுள்ளார்.

சிரியாவில் அதிபர் ஹபீஸ் அல் ஆசாத் தொடர்ந்து 29 ஆண்டு காலம் ஆட்சி நடத்தினார். அவர் 2000-ம் ஆண்டு மறைந்த பின்னர், அவரது மகனான பஷர் அல் ஆசாத் அதிகாரத்துக்கு வந்தார். 14 ஆண்டுகளுக்கு முன் தேர்தல் நடந்தபோது எதிர்ப்பின்றி 99 சதவீத ஓட்டுக்களை கைப்பற்றி வெற்றி பெற்ற அவர், மீண்டும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலிலும் அமோக வெற்றி பெற்றார். பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இதில், 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் உள்பட ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 65 லட்சம் பேர் சொந்த நாட்டை விட்டு வெளியேறி ஜோர்டான், மற்றும் லெபனான் உள்ளிட்ட பல அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், அந்நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த 3-ம் தேதி நடைபெற்றது.

திட்டமிட்டபடி காலை ஏழு மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் எதிர்பாராத வகையில் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க திரண்டதால் நள்ளிரவு வரை வாக்குப்பதிவு நீட்டிக்கப்பட்டது. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் 73.42 சதவீதம் அளவுக்கு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் தற்போதைய அதிபராக உள்ள பஷர் அல் ஆசாத், மொத்தம் பதிவான வாக்குகளில் 88.7 சதவீதம் வாக்குகளை பெற்று, மீண்டும் வெற்றி

மே 29, 2014

எகிப்து அதிபர் தேர்தல்:ராணுவத் தளபதி சிசி அமோக வெற்றி

எகிப்தில் சர்வாதிகாரம் நடத்தி வந்த ஹோஸ்னி முபாரக்கை கடந்த 2012-ம் வருடம் பதவியிலிருந்து இறக்கி ஆட்சியைக் கைப்பற்றியவர் முகமது மோர்சி. ஆனால் ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் இவரது ஆட்சியில் பொதுமக்களின் போராட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கியபோது அந்நாட்டு ராணுவத் தளபதியான அப்டெல் படா அல் சிசி மோர்சியை கடந்த வருடம் ஜூலை மாதம் பதவியிலிருந்து இறக்கி காவலில் வைத்தார்.

அவருக்குத் துணையாக இருந்த முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியினரும் ஒடுக்கப்பட்டு வந்தனர். அங்கு ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்புகளும், கலவரங்களும் நாட்டையே நிலை குலைய வைத்தது. இதனிடையில் கடந்த 25-ம் தேதி அங்கு அதிபருக்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. தனது ராணுவத் தளபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிபர் வேட்பாளராக சிசி களத்தில் இறங்கினார். பெரும்பான்மையானோரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப இன்று வெளிவந்துள்ள முடிவுகளில் சிசி மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நடைபெற்ற 50 சதவிகித இடங்களில் 92.2 சதவிகித வாக்குகளை சிசி பெற்றிருந்தார். அவரது ஒரே போட்டியாளரான ஹம்தீன் சபஹி 3.8 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தார். 4.2 சதவிகிதம் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. சிசியின் முடிவுகள் வெளிவரத் தொடங்கியதும் கெய்ரோவில் வாணவேடிக்கை கொண்டாட்டங்களும் தொடங்கின. அவரது ஆதரவாளர்கள் எகிப்து நாட்டின் கொடியினை அசைத்தும், கார் ஹாரன் ஒலியை எழுப்பியும் தங்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தை வெளிப்படுத்தினர். எகிப்தை ஆட்சி செய்து வந்துள்ள ராணுவத்தினரின் வரிசையில் சிசி சமீபத்தியவரவாகும். எகிப்தில் நடைபெற்றுவரும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும் வலிமை படைத்தவர் இவர் என்று அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

ஆனால் அரசியல் ஆய்வாளர்களோ ராணுவ நலன்களைப் பாதுகாக்கும் மற்றொரு சர்வாதிகாரியாக இவரும் மாறக்கூடும் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

மே 22, 2014

சிறுவர்களை வைத்து ஆபாச படம் எடுத்த அமெரிக்க காவல்துறை!

அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் சிறுவர்களை வைத்து ஆபாச படம் தயாரித்த காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டடோர் கைது செய்யப்பட்டனர்.அமெரிக்காவில் ஆபாசபடம் தயாரிப்பது குற்ற செயல் அல்ல. ஆனால் சிறுவர்களை வைத்து ஆபாச படம் தயாரிப்பதுதான் குற்றமாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில் நியூயார்க் பகுதியில் ஒரு கும்பல் ஆபாசபடம் தயாரிப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் 70 பேர் கொண்ட கும்பல் சிறுவர்களை வைத்து ஆபாசபடம் தயாரிப்பது தெரியவந்தது. விசாரனையின்போது, அவர்கள் நியூயார்க் புறநகர் பகுதி காவல்துறை அதிகாரிகள் என்பது தெரியவந்தது. மேலும் பல, உயர் பதவிகளை வகிப்பவர்கள் இதில் சம்மந்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து ஆபாசபடங்கள் சேமித்து வைத்திருந்த 600 லேப்டாப், மற்றும் பல ஸ்மார்ட்போன்கள், கம்ப்யூட்டர் சாதனங்கள் ஆகியவை பறிமுதல்

ஏப்ரல் 19, 2014

தென்கொரிய கப்பல் விபத்து: 28 உடல்கள் மீட்பு!

சியோல், ஏப் 18 - தென்கொரிய கப்பல் விபத்தில் உயிரிழந்த 28 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 268 பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தென்கொரியாவின் தென்மேற்கு கடல் பகுதியில் பயணிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்தது. கடலுக்குள் மூழ்கிய 300-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் உள்ளிட்ட 475 பயணிகளை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். இந்த நிலையில் 28 பேருடைய உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 268 பயணிகள் மாயமாகியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சியோல் அருகே உள்ள இன்சியோன் துறைமுகத்திலிருந்து சீவொல் கப்பல் செவ்வாய்க்கிழமை புறப்பட்டது.480 அடி நீளமும், 6,586 டன் எடையும் கொண்ட இந்தப் கப்பல் 1994-ம் ஆண்டு ஜப்பானில் தயாரிக்கப்பட்டது. இதில் அதிகபட்சமாக 900 பேர் பயணிக்கலாம். எனினும், சம்பவ தினத்தன்று இந்தப் கப்பலில் 477 பயணிகள் இருந்தனர். தவிர 150 வாகனங்களும் இருந்தன.

தென்மேற்குக் கடற்கரையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் ஜெஜூ தீவை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, திடீரென்று கப்பல் ஒரு பக்கமாகச் சாய்ந்தது. அடுத்த சில நிமிடங்களில் தலைகீழாகக் கவிழ்ந்தது. உதவி கோரி இந்தப் கப்பலில் இருந்து சிக்னல் அனுப்பப்பட்டது. உடனே, 100 கடலோர காவலர்களும், கடற்படை கப்பல்களும், மீன்பிடி கப்பல்களும், 18 ஹெலிகாப்டர்களும் விரைந்து வந்து 15 பள்ளி மாணவர்கள் உள்பட 179 பேரை உயிருடன் மீட்டனர். இந்த விபத்தில் இதுவரை 28 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 268 பேரைக் காணவில்லை என அதிகாரப்பூர்வமாக

ஏப்ரல் 04, 2014

எல் நினோ' பருவநிலை மாற்றத்தால் கடும் விளைவுகள் எற்படும்!

பசிபிக் பெருங்கடலின் காற்றழுத்தம் மற்றும் காற்றின் போக்கைக் கணக்கில் கொண்டு 'எல் நினோ' உருவாகும் வாய்ப்பு காணப்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
Pacific El Nino
தெற்காசிய நாடுகள் ஒரு மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள இருப்பதாக எச்சரிக்கை எழுப்பப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகளும், வானிலை ஆய்வாளர்களும், பசிபிக் பெருங்கடலின் காற்றழுத்தம் மற்றும் காற்றின் போக்கைக் கணக்கில் கொண்டு 'எல் நினோ' உருவாகும் வாய்ப்பு காணப்படுவதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

ஆழ்கடலில் காற்றழுத்தம் ஏற்படும்போது பசிபிக் பெருங்கடலின் சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும். அதன் விளைவுகள் தெற்கு ஆசிய நாடுகளின் விவசாயத்திற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது. அது அடை மழையால் ஏற்படும் வெள்ளப் பெருக்கமாகவும் புயலாகவும் இருக்கலாம்;அல்லது மழையின்மையால் ஏற்படும் வறட்சியாகவும் மாறலாம்.
 
இதன் விளைவாக வடஇந்தியாவில் கடுமையான மழை பொழிய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் கடுமையான வறட்சி ஏற்படலாம். இதனால் மக்களின் வாழ்வாரத்தைக் கடுமையாக பாதிக்கக்கூடும்.
 
கடந்த 2002 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் இதே போனறு 'எல் நினோ' எச்சரிக்கைகள் தரப்பட்டது. அதன் கடுமையான விளைவுகளை இந்தியா எதிர்கொள்ள வேண்டி வந்தது. இதேபோல 2009 ஆம் ஆண்டும்

டிசம்பர் 22, 2013

துருக்கி: 14 ஆண்டுகளுக்குப் பின்னர் ஹிஜாப் அணிய சுதந்திரம்!

இஸ்தான்புல்: துருக்கி நாட்டுப் பெண்கள் தலைமுக்காடுடன் கூடிய ஹிஜாப் எனப்படும் பூரண ஆடை அணிய, கடந்த 14 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு, ஹிஜாப் அணிய சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு கடந்த மாதம் நான்கு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலை முக்காடு அணிந்து வந்து துருக்கி நாடாளுமன்றத்தில் செயலாற்றினர். அவர்களுக்கு மற்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பெண்கள் தலைமுக்காடு அணிந்து வரத் தடையில்லை; விருப்பம் போல அணிந்து வரலாம் என்ற உரிமை அளிக்கப்படுவது பெண்ணுரிமைக்கும் மதசுதந்திரத்திற்கும் மதிப்பளிப்பதாக உள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கருத்தளித்தனர். கடந்த 14 ஆண்டுகளாக ஹிஜாப் மற்றும் தலை முக்காடு அணிவதற்கு இருந்த தடை இதன்மூலம் முடிவுக்கு வந்துள்ளது. "இனி என் தலை முக்காட்டை நான் தொடர்ந்து அணிவேன்; நீக்க மாட்டேன் - என்னுடைய இந்த முடிவை எல்லோரும் வரவேற்பார்கள் என்றே எதிர்பார்க்கிறேன்" என்று கூறியுள்ளார் துருக்கியின் நாடாளுமன்ற உறுப்பினரான கோனுல் பெகின் ஷகுல்பே என்கிற பெண். 20 ஆம் நூற்றாண்டில் இறுதியில் 1999 ஆம் ஆண்டு, அமெரிக்கத் துருக்கியரான மெர்வ் கவாக்சி என்னும் பெண்மணி துருக்கிய நாடாளுமன்றத்திற்கு தனது பதவியேற்புக்காக தலை முக்காடுடன் வந்த போது,அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். பின்னர் துருக்கியின் குடியுரிமையையும் அவர் இழக்க நேர்ந்தது.

அப்போதைய துருக்கி பிரதமர் புலண்ட் ஈசிவிட் தலை முக்காடு அணிவதற்கு எதிராகக் கடுமையாகப் பேசினார். "இந்தப் பெண் அவருக்குரிய இடத்திற்குச் செல்லட்டும்; இங்கிருந்து வெளியேறட்டும்" என்று தலை முக்காடு அணிந்திருந்த மெர்வ் கவாக்சியைப் பார்த்து அப்போது கூறப்பட்டது நினைவு கூரத்தக்கது. இச்சம்பவத்திற்குப் பின்னர் துருக்கியிலிருந்து வெளியேறிய கவாக்சி, பெண்களின் மத சுதந்திரத்திற்காகப் போராடினார்."முஸ்லிம் பெண்கள் தங்கள் நம்பிக்கைகளின் படி வாழும் சுதந்திரம்

டிசம்பர் 14, 2013

முல்லாவுக்கு மரணத்தண்டனை:வங்காளதேசத்தில் கலவரம்!

டாக்கா:ஷேக் ஹஸீனா அரசின் பாசிச நடவடிக்கையின் ஒரு பகுதியாக வங்கதேச ஜமாஅத்தே இஸ்லாமியின் மூத்த தலைவர் அப்துல் காதர் முல்லா(65) தூக்கிலிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜமாஅத்தே இஸ்லாமி தொண்டர்கள் நடத்திய போராட்டத்தில் அவர்களுக்கும், அவாமி லீக் தொண்டர்களுக்கும் இடையே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதலில் 5 பேர் உயிரிழந்தனர்.

ஜமாத்தே இஸ்லாமி அமைப்பின் மூத்த தலைவர் அப்துல் காதர் முல்லாவிற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதிசெய்ததையடுத்து, வியாழக்கிழமை இரவு அவர் தூக்கிலிடப்பட்டார். பரித்பூர் மாவட்டத்தில் அப்துல் காதர் முல்லாவின் சொந்த கிராமமான அபிராபாத்தில் வெள்ளிக்கிழமை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜமாஅத்தே இஸ்லாமியின் மாணவர் பிரிவான ஸத்ரே ஸபீர் உறுப்பினர்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். அவர்கள் போலீசுடன்

டிசம்பர் 12, 2013

இந்தியா- பாகிஸ்தான் அணு ஆயுதப் போர் மூண்டால் 200 கோடி பேர் கொல்லப்படுவர்!

இந்தியா, பாகிஸ்தான் இடையே அணுஆயுதப் போர் மூண்டால் சுமார் 200 கோடி பேர் கொல்லப்படுவார்கள் என்று சர்வதேச அமைப்பு எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக சர்வதேச மருத்துவர்களின் அணுஆயுத போர் தடுப்பு கூட்டமைப்பின் (ஐ.பி.பி.என்.டபிள்யூ.) இணைத் தலைவர் ரா ஹெல்பன்ட், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

1947-ம் ஆண்டு முதல் இந்தியா வும் பாகிஸ்தானும் 3 முறை கடும் போர்களில் ஈடுபட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே அணு ஆயுத போர் மூண்டால் பேரிழப்புகள் ஏற்படும். உலக மக்கள் தொகையில் 3-ல் ஒரு பங்கு மக்கள்டுகொல்லப்படு வார்கள். அதாவது சுமார் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் கொல்லப்படும் அபாயம் உள்ளது. தெற்காசியாவில் அணுகுண்டுகள் வெடித்தால் அமெரிக்காவின் வேளாண் உற்பத்தி 10 சதவீதம் குறைந்துவிடும். அருகில் உள்ள சீனாவில் கோதுமை உற்பத்தி 50 சதவீதம் பாதிக்கப்படும். இதனால் சீனாவில் உணவுப் பஞ்சம் ஏற்படும். அணுகுண்டு கதிர்வீச்சால் சுமார் 100 கோடி பேர் கொல்லப்பட்டால், அதன்பின் அந்த சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்படும் உணவுப் பஞ்சத்தால் மேலும் 100 கோடி

நவம்பர் 27, 2013

உலக வர்த்தக கண்காட்சி 2020 : துபையில் நடைபெறுகிறது!!

அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட எக்ஸ்போ-2020 துபையில் நடைபெறவுள்ளது. இதற்கான தகுதி சுற்றுகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்றது.

மொத்தம் ஏழு நாடுகள் பங்கேற்றன, இறுதியாக நடைபெற்ற போட்டியில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி துபாய் முதல் இடம் பிடித்தது.168 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட Bureau International des Expositions என்ற அமைப்பு 2020ம் ஆண்டில் World Expo 2020 நடக்கப் போகும் நகரத்தைத் தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பை நடத்தியது. பாரிசில் OECD சென்டரில் வைத்து இந்தத் தேர்தலில் மொத்தம் 3 சுற்று வாக்கெடுப்புகள் நடைபெற்றன. இதனால் அமீரகம் எங்கும் இந்த வெற்றியை வரவேற்று கொண்டாடங்கள் நடைபெறுகின்றன. 2020ஆம் ஆண்டு நடைபெறும் இந்த உலக வர்த்தக கண்காட்சி மூலம் மத்திய கிழக்கு