Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 30, 2010

வாழ வைக்கும் வைட்டமின்கள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக்கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும்.

அதனால், என்ன வைட்டமின் குறைந்தால் என்ன நோய்வரும் என்பது பற்றி பார்ப்போம் :

வைட்டமின் `ஏ’ :
இது குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம். முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் `ஏ’ அதிகம் காணப்படுகிறது.

வைட்டமின் `பி’ :
இது குறைந்தால் வயிற்று மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும். கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் வைட்டமின் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.

வைட்டமின் `சி’ :
இது குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடு முஞ்சியாக காணப்படுவர். எலும்புகள் பலம் குறையக்கூடும். பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும். ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

வைட்டமின் `டி’ :
வைட்டமின் `டி’ இல்லாவிட்டால் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் `டி’ போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும். போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் உடலே வைட்ட மின் `டி’யை தயாரித்துக்கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் `டி’ அதிகம் உள்ளது.

வைட்டமின் `ஈ’ :
இது குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத் தன்மையை உண்டாக்கும். கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் `ஈ’ சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும்.
thanks:CNN

தொடர் மழையால் கிராம அடுத்த பகுதிகளில் தண்ணீர் வடியாமல் மக்கள் பாதிப்பு


தண்ணீரால் சூழப்பட்ட நெடுன்சேரி - சிதம்பரம் சாலை
தொடர் மழையால் பெரும்பாலான சாலைகள் தண்ணீர் தேங்கி குண்டும் குழியுமாக பாழாகியுள்ளது. தண்ணீர் சூழ்ந்த நகர் பகுதிகள் மற்றும் கிராமப்பகுதிகளில் தண்ணீர் வடியாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சிதம்பரத்தில் தாழ்வாக உள்ள 20க்கும் மேற்பட்ட நகர் பகுதிகள், கிராமப்பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பஸ் நிலையம், மருத்துவமனை, பள்ளி வளாகங்கள், போலீஸ் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

தற்போது மழை விட்டுள்ள நிலையிலும் தேங்கிய தண்ணீர் வடிந்தபாடில்லை. கொள்ளிடக்கரை பகுதி கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல், கரும்பு வயல்கள் மற்றும் சிதம்பரம், குமராட்சி, காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு, புவனகிரி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய பயிர்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. சிதம்பரம் நகரில் சாலைகள் குண்டும், குழியுமாக வீணாகியுள்ளது. சிதம்பரம் வழியாக அமைக்கப்படும் புறவழிச்சாலையில் தண்ணீர் வடிவதற்கு போதுமான வடிகால் வசதி செய்யப்படாததால் தண்ணீர் வடியாமல் கடல்போல் தேங்கியுள்ளது. விவசாய நிலங்கள் முழுவதும் தண்ணீர் பிடித்துள் ளது. கீரப்பாளையம், குமராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல கிராமப்பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
படங்கள்:அஹ்மத் &நஸ்ருல்லாஹ்

விக்கிலீக்ஸ்:இந்தியாவை கண்காணிக்க உத்தரவு போட்ட அமெரிக்கா

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவியை பெறுவதற்காக இந்தியா மேற்கொண்டுவரும் முயற்சிகளை தொடர்ந்து கண்காணிக்குமாறு அமெரிக்க அரசுச் செயலர் ஹிலாரி கிளிண்டன் உத்தரவிட்டதாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசிய ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச ரகசியங்களை உளவறிந்து கசியவிடுவதில் புகழ்பெற்ற இணையதளமான விக்கிலீக்ஸ் நேற்று முன்தினம் வெளியிட்ட இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட ஆவணங்களில் இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவில் பிரச்சனையை ஏற்படுத்தும் விதமான தகவல்கள் வெளியாகின.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவிக்காக முயற்சிகளை மேற்கொண்டுவரும் இந்தியாவுக்கு இம்மாத துவக்கத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாரக் ஒபாமா ஆதரவு தெரிவித்திருந்தார்.

உலகமெங்கும் செயல்படும் 270 அமெரிக்க தூதரகங்களிலிருந்து வாஷிங்டனிலுள்ள தலைமை அலுவலகத்திற்கு அளித்துவரும் அன்றாட ரகசிய தகவல்களின் ஆவணங்களை ’கேபிள் கேட்ஸ்’ என்று சுயமாக அழைக்கப்படும் ஆவணத் தொகுப்பை விக்கிலீக்ஸ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்களுக்கு கிடைத்த தகவல்களில் குறைந்தளவு அபாயத்தைக் கொண்ட ஆவணங்களை மட்டுமே 'நியூயார்க் டைம்ஸ்' உள்ளிட்ட பத்திரிகைகள் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்கிலீக்ஸ் உளவறிந்து கசியவிட்ட ரகசிய ஆவணங்களில் புதுடெல்லியிலிருந்து அனுப்பிய 3038 ரகசிய செய்திகளும் அடங்கும். இவற்றில் ஒன்றுதான் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர் பதவிக்காக இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தையும் கண்காணிக்க ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க அதிகாரிகளுக்கு போட்ட உத்தரவு.

2009 ஜூலை மாதம் நடந்த சம்பவம் இது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராவதற்கான நாடுகளில் தாம்தான் முதலாவதாக இருப்பதாக இந்தியா தன்னைத்தானே (self appointed frontrunner) கூறிக்கொள்வதாக ஹிலாரி கேலியுடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஐ.நா தலைமையகத்தில் பணியாற்றும் இந்திய அதிகாரிகளைக் குறித்து அனைத்து தகவல்களையும் சேகரிக்கவும், இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தைக் குறித்த தகவல்களை ஆராயவும் ஹிலாரி தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தங்களுடைய நட்பு நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் அமெரிக்கா நடத்தும் உளவு வேலைகளையும் அந்நாடுகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல் முறைகேடுகளில் அமெரிக்காவின் மிருதுவான அணுகுமுறைகளையும் வெளிப்படுத்துவதுதான் தாங்கள் வெளியிடும் ரகசிய ஆவணங்களின் நோக்கம் என ஜூலியன் அஸன்ஜா தலைமையிலான விக்கிலீக்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா வெளியே கூறுவதையல்ல உள்ளே கூறுவது என விக்கிலீக்ஸ் கூறுகிறது.

செய்தி:தேஜஸ&பாலைவனத் தூது

நவம்பர் 29, 2010

வீட்டுக்கே வருகிறது “பைபர் ஆப்டிக் கேபிள்

கோவை, திருப்பூர் நகர மக்களுக்கு, “டிவி’ இணைப்பு, டெலிபோன், இன்டர்நெட் உள் ளிட்ட மதிப்புமிக்க சேவைகளை “பிராட்பேண்ட்’ இணைப்பில் பி.எஸ்.என்.எல்., நிறுவனம் அளிக்க உள்ளது. “பைபர் ஆப்டிக் கேபிள்’ இணைப்பை நேரடியாக வீட்டுக்கு அளித்து, இச்சேவையை சாத்தியமாக்கியுள்ளது. அதிநவீன தொலைத்தொடர்பு சேவையில், “பைபர் ஆப்டிக் கேபிள்’ வழியாக இணைப்பில் எளிதாக பல்வேறு சேவைகளை வழங்க முடியும். இச்சேவையை, கோவை நகரில் முதலில் அறிமுகம் செய்துள்ளது பி.எஸ்.என்.எல்., இந்திய தொலைத்தொடர்புத் துறை நிறுவனமான பி.எஸ். என்.எல்.,

“3ஜி’ அலைவரிசை யான, முகத்துக்கு முகம் பார்த்து பேசும் மொபைல் போன் சேவையை சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து, தற்போது வீட்டுக்கு நேரடியாக பைபர் ஆப்டிக் கேபிள் சேவையை அளிப்பதால், கோவை மக்கள் அதிநவீன தொலைத் தொடர்பு சேவையை பெற முடியும். இந்த பைபர் ஆப்டிக் கேபிள் வழியாக, ஒரே சமயத்தில் “டிவி’ இணைப்பு, டெலிபோன், இன்டர்நெட், இன்டர்நெட் டெலிபோன், வீடியோகான் பரன்சிங் போன்ற சேவைகளை யும் எளிதாக பெற முடியும். இச் சேவையை, “எப்.டி.டி.எச்’ என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இச்சேவை அறிமுக விழா, கோவை, புரூக் பீல்டு வளாகத்தில் நேற்று நடந்தது. எஸ்.பி., கண்ணன், முதல் இணைப்பை வழங்க, புரூக் பீல்டு இயக்குனர் பாலசுப்ரமணியன் பெற்றுக் கொண்டார். எஸ்.பி., கண்ணன் பேசியதாவது:

தொலைத்தொடர்பு துறையில் அடுத்தகட்ட நவீன தொழில் நுட்பமே பைபர் டி.டி.எச்., இணைய உலகில் “ஹேக்கிங்’ போல, தொலைபேசியில் “பிரிகிங்’ என்ற முறை உண்டு. தொலை பேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பது; “டேப்’ செய்வது போன்ற வையும் இதில் அடங்கும். பைபர் ஆப்டிக் தொழில்நுட்பத்தில் அதி வேகத்தில் டேட்டாக்கள் அனுப்பப் படுகின்றன. இவற்றை இடை மறிப்பதும் கூட கடினம். எனவே, தொலைபேசி உரையாடல்களை இடைமறிப்பது தொடர்பான சட் டங்களில் திருத்தங்களை மேற் கொள்ள வேண்டும், என அரசுக்கு கோரியுள்ளோம். நவீன தொழில் நுட்பங்களை பொதுமக்கள் நாட் டின் மேம்பாட்டுக்காகவும், நல்ல செயல்களுக்காகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும், என்றார். பைபர் டி.டி.எச்., சேவை குறித்து பி.எஸ்.என்.எல்., முதன்மை பொது மேலாளர் மாத்யூ கூறியதாவது: கோவை, திருப்பூர் மாவட்டங் களில் இச்சேவை துவங்குகிறது. முதலில் நகரப்பகுதிகளுக்கு வழங் கப்படும். பின், அனைத்து இடங் களுக்கும் விரிவுபடுத்தப்படும். ஒரே இணைப்பில் கேபிள் “டிவி’; பிராட்பேண்ட், தொலைபேசி இணைப்புகளை தனித்தனியாக ஒரே சமயத்தில் பெற முடியும். இதற்கான மோடத்தில் ஐந்து இணைப்புகளுக்கான இடம் விடப் பட்டிருக்கும். மூன்று சேவைகளை இவ்விணைப்புகள் வழியாக பெறலாம். எதிர்காலத்தில் கூடுதல் வசதிகளை பெற கூடுதலான இரு இணைப்புகள் விடப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் எக்சேஞ்ச் வரை மட்டுமே பைபர் ஆப்டிக் இணைப்பு இருந்தது. தற்போது வீடு வரை வருகிறது. பிராட் பேண்ட் திட்டத்தில் 500 ரூபாய் முதல் இச்சேவையில் பெற முடியும். டெலிபோனுக்கு வழக்கமான கட்டணம் வசூலிக்கப்படும். வரும் முதல் தேதியில் இருந்து தரைவழித் தொலைபேசிக்கு வினாடிக்கு 27 பைசாவாக கட்டணம் குறைக்கப்படுகிறது. கேபிள் “டிவி’யை பொருத்த வரை இந்தியாவின் மிகத்துல்லிய மான ஒளிபரப்பாக இருக்கும். 100 ரூபாய் முதல் வாடிக்கையாளர் விரும்பும் “பேக்கேஜை’ தேர்வு செய்யலாம், என்றார். பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் முரளிதரன், துணை பொது மேலாளர் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
thanks :lalpet.co,cc

அரசு பஸ்ஸில் பயணம் செய்பவரா நீங்கள்? கண்டிப்பாக குடை எடுத்து செல்ல மறக்காதீர்கள்

காட்டுமன்னார்கோவில்: அரசு டவுன் பஸ்களில் மழைக் காலங்களில் பஸ்சுக்குள்ளேயே குடைபிடித்துச் செல்லும் அவல நிலை உள்ளது.

சிதம்பரத்தில் இருந்து குமராட்சி வழியாக தடம் எண் 2, புத்தூர் வழியாக தடம் எண் 4, வெள்ளூருக்கு தடம் எண் 23 ஏ ஆகிய டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.இந்த பஸ்கள் சீர் செய்யப்படாமல் மிகவும் மோசமான நிலையில் லேசான மழை பெய்தாலே பஸ்சுக்குள் ஒழுகும் அவல நிலை உள்ளது.சிதம்பரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனைக்குச் சொந்தமான இந்த பஸ்கள் எவ்வித மராமத்து பணிகளும் செய்வதில்லை. பழுது பார்க்கும் பணிகள் செய்யத் தேவையான எந்த பொருளும் சிதம்பரம் அரசு பணிமனையில் இல்லாததால் வெளியில் இருந்து வாங்கிப் போட்டு பில் வாங்க வேண்டிய நிலை உள்ளது. பழுதடைந்த ஒரு நட்டு வாங்க வேண்டும் என்றாலும் இதே நிலை தொடர்ந்து வருகிறது.

அரசு பஸ்களின் நிலை இப்படியிருந்தால் எப்படி அரசுக்கு வருவாய் கிடைக்கும். அதிகாரிகள் இனியாவது நடவடிக்கை எடுப்பார்களா?
Thanks:lalpet.co.cc

250,000 அமெரிக்க ரகசியங்கள் அம்பலம்; பல முக்கிய தலைவர்களின் முகமூடி கிழிந்தது

விக்கிலீக்ஸ் இன்று வெளியிட்டுள்ள ரகசிய ஆவணங்கள் மூலம் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திவரும் கொடூரங்கள் , மனித உரிமை மீறல்கள், அமெரிக்கா உலகின் பல்வேறு நாடுகளுடன் நடத்திய ராஜாங்கரீதியான பேச்சுவார்த்தைகள், தனிப்பட்ட நபர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் ரகசிய விபரங்கள் மேலும் பல அதி முக்கிய ரகசியங்கள் அம்பலமாகியுள்ளன.

அமெரிக்கா நடத்திய ரகசிய உரையாடல்களின் விபரங்களை வெளியிட்டால் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். மேலும் இது பல முக்கிய நபர்களின் உயிருக்கு ஆபத்தாக மாறும் என அமெரிக்க வெளியுறவுத்துறை கருதியதால் இந்த ஆவணங்களை வெளியிடாமல் தடுக்கும் முயற்சியில் இறங்கியது. இருப்பினும் அமெரிக்காவின் இந்த திட்டம் பலனளிக்கவில்லை.

ஹிலாரி கிளிண்டன் ஐக்கிய நாட்டுத் தலைவர்களை உளவு பார்த்ததில் தொடங்கி பிரிட்டனின் முக்கியஸ்தர்களான இளவரசர் ஆண்ட்ரீயூ , டேவிட் கேமரூன் , கார்டன் பிரவுன் ஆகியோரின் தலைகளும் இதில் உருள ஆரம்பித்துள்ளன. முக்கியமாக கார்டன் பிரவுனை பெண்கள் விடயத்தில் " வேட்டை நாய் " என இந்த ஆவணங்கள் வருணித்துள்ளன.

அமெரிக்க ராஜிய தூதர்கள் மூலமாக பான் கி மூன் உட்பட ஐக்கிய நாடுகளின் முக்கிய தலைவர்களை ஹிலாரி கிளிண்டன் வேவு பார்க்கச் சொன்னது, அவர்களின் கிரெடிட் கார்டு விபரங்கள் , விரல் ரேகைகள், டி.என்.ஏ ஆகியவற்றை சேகரித்த தகவல்கள் பரபரப்பை உண்டாக்கியுள்ளன.

மேலும் பிற நாடுகளின் தூதர்கள் பயன்படுத்தும் கணினி, தொலைத்தொடர்பு விபரங்கள் அவற்றின் கடவுச் சொற்களையும் அறிவதில் ஹிலாரி கிளண்டன் முனைப்புடன் செயல்பட்டுள்ளார் என்பதும் அம்பலமாகியுள்ளது. முக்கியமாக ஆப்கானிஸ்தான்/பாகிஸ்தான், ஈரான் மற்றும் வட கொரியா விடயங்களில் ஐக்கிய நாடுகள் தலைமை என்ன முடிவுகள் எடுக்கிறது.

எந்த பிரச்சினைகளில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதையும் முழுவதுமாக அமெரிக்கா உளவு பார்த்ததும் இந்த ஆவணங்களின் மூலம் வெளிப்பட்டுள்ளது. மேலும் இளவரசர் ஆண்ட்ரீயு, டேவிட் கேமரூன் , ஜார்ஜ் ஆஸ்போர்ன் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள் குறித்த அமெரிக்க ராஜாங்க தூதுவர்களின் விமர்சனங்களும் இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
source:CNN

யார் இந்த நிரா ராடியா?

நிரா ராடியா!
மூச்சுக்கு முந்நூறு தடவை இன்று ஊடகங்களால் உச்சரிக்கப்படும் பெயர். ஆ. ராசா, கனிமொழி, பத்திரிகையாளர் பர்கா தத் உள்ளிட்டோருடன் இவர் நடத்திய சர்ச்சைக்குரிய பேச்சுகள் அரசியல் அரங்கில் அதிர்ச்சியுடன் விவாதிக்கப்பட்டு வருகின்றன. திமுக முகாமில் பலத்த இடியோசை. விளைவு, ஓவர்நைட்டில் உலக அறிமுகம்.இவரைப் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்

துபாயில் புஜ்ரி கலிஃபா அருகில் மற்றுமொரு பிரமாண்ட கட்டிடம்


உயரமான கட்டிடங்களால், உலகின் உயரத்தை எட்டிப்பிடித்துள்ள துபாய், 2011 இல் தனது புதிய பல கட்டிடத்தொகுதிகளை திறக்கவுள்ளது.
இதில் முதன்மையானது, பொதுமக்கள் பாவணைக்கான உலகின் மிக உயரமான கட்டிடமாக இடம்பிடிக்க போகும், பிரின்ஸெஸ் டவர். துபாயின் புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்கு அருகாமையில் 107 மாடிகளை கொண்டதாக அமைக்கப்படும் இக்கட்டிடம் அடுத்தவருடம் திறக்கப்படவிருக்கிறது.

உலகின் உயரமான கட்டிடங்கள், மற்றும் தங்குமிடவசதிகொண்ட கட்டிடங்களுக்கான கவுன்சிலால் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் படி இதுவரை பொதுமக்கள் பாவனைக்கான உயரமான கட்டிடமாக, அஸ்திரேலியாவில் கோல்ட் கோஸ்ட் கட்டிடம் திகழ்கிறது. 323 மீற்றர் கொண்டதும் 78 மாடிகளை கொண்டதுமாக இக்கட்டிடம் கட்டப்பட்டது.

தற்போது இதை முறியடிக்கும் முயற்சியில் துபாயின் பிரின்ஸெஸ் டவர் நிறுவப்பட்டுள்ளது. இதைவிட, 91 மாடிகளை கொண்ட எலைட் ரெசிடென்ஸ் எனும் கட்டிடமும் டுபாய் மரியானாவில் கட்டிமுடிக்கபப்ட்டுள்ளது. இதுவும் அடுத்தவருட ஆரம்பத்தில் திறக்கப்படவிருக்கிறது. இவற்றின் மூலம் அடுத்த வருட முடிவுக்குள் துபாய் நகரம் மிகப்பெரும் அபிவிருத்தி தேசமாக தன்னை பிரகடனப்படுத்திக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிற

கொ‌ரிய ‌‌தீபக‌ற்ப‌த்‌தி‌ல் போ‌ர் மூளு‌ம் அபாய‌ம் : வட கொ‌ரியா எ‌ச்ச‌ரி‌க்கை

அமெ‌‌ரி‌க்காவு‌ம், தெ‌ன் கொ‌ரியாவு‌ம் இணை‌ந்து போ‌ர் ஒ‌த்‌திகை நட‌த்துவதா‌ல் கொ‌‌ரிய ‌தீபக‌ற்ப‌த்‌தி‌ல் போ‌ர் மூளு‌ம் அபாய‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதாக வட கொ‌‌ரியா எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளது.
தெ‌ன் கொ‌ரியா‌‌வி‌ன் ‌லியோ‌ன் ‌பியோ‌ல் ‌தீ‌வி‌ல் வட கொ‌ரியா கு‌ண்டுகளை ‌வீச‌ி தா‌க்‌கியது. இ‌தி‌ல் 4 பே‌ர் உ‌யி‌ரிழ‌ந்தன‌ர். இத‌ற்கு ப‌‌திலடியாக தெ‌ன் கொ‌‌ரியாவு‌ம், வட கொ‌ரியா ‌மீது தா‌க்குத‌ல் நட‌த்‌தியது.

இதை‌த் தொட‌ர்‌ந்து வட கொ‌ரியா ‌மீது போ‌ர் தொடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று தெ‌ன் கொ‌ரியாவை சே‌ர்‌‌ந்த நூ‌ற்று‌க்கண‌க்கான மு‌ன்னா‌ள் போ‌ர் ‌வீர‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம் நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

இ‌ந்‌நில‌ை‌யி‌ல் 75 போ‌ர் ‌விமான‌ங்க‌ள், 6 ஆ‌யிர‌ம் ‌வீர‌ர்களுட‌ன் அமெ‌ரி‌க்கா‌வி‌ன் யு.எ‌‌ஸ்.எ‌ஸ் வா‌‌ஷி‌ங்ட‌ன் எ‌ன்ற போ‌ர் க‌ப்ப‌ல் கொ‌ரிய ‌தீபக‌ற்ப‌த்‌திற‌்கு வ‌ந்து‌ள்ளது. த‌ற்போது தெ‌ன் கொ‌ரியாவு‌ம், அமெ‌ரி‌க்காவு‌ம் இணை‌ந்து இராணுவ ஒ‌த்‌திகை மே‌ற்கொ‌ண்டு வரு‌கி‌ன்றன.

மேலு‌ம் அமெ‌ரி‌க்க இராணுவ தளப‌தி வா‌ல்ட‌‌ர் ஷா தா‌க்குதலு‌க்கு ஆளான ‌லியோ‌ன் ‌‌பியோ‌ல் ‌தீ‌வி‌ற்கு செ‌ன்று‌ள்ளா‌ர். இதையடு‌த்து கொ‌ரிய ‌தீபக‌ற்ப‌த்‌தி‌ல் எ‌ந்த ‌நி‌மிட‌த்‌திலு‌ம் போ‌ர் மூளு‌ம் அபாய‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதாக வட கொ‌‌ரிய அர‌சி‌ன் செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பு தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளது.

வட கொ‌ரியா‌வி‌ன் மே‌ண்மை‌க்கு‌ம், இறையா‌ண்மை‌க்கு‌ம் ப‌ங்க‌ம் வ‌ந்தா‌ல் தெ‌ன் கொ‌ரிய படைக‌ள் நொறு‌க்க‌ப்படு‌ம் என செ‌ய்‌தி‌க் கு‌றி‌ப்‌பி‌ல் எ‌ச்ச‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வட கொ‌ரிய ம‌க்க‌ள் எ‌தி‌‌ரி படைகளை தோ‌‌ற்கடி‌க்க தயாராக இரு‌ப்பதாகவு‌ம், வா‌ய்வா‌ர்‌த்தைகளா‌ல் மோ‌தி‌க் கொ‌ள்ளு‌ம் சூ‌ழ‌ல் முடி‌ந்து‌வி‌ட்டதாகவு‌ம் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

source:lankasri

இங்கிலாந்தில் பள்ளி குழந்தைகளுக்கு திருமணம்


இங்கிலாந்தில் பள்ளி குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்ட பிறகும் கூட இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் ஆங்காங்கே குழந்தை திருமணம் நடைபெற்று வருகிறது. ஆனால் வளர்ச்சி அடைந்த வல்லரசு நாடான இங்கிலாந்திலும் குழந்தை திருமணம் நடந்துள்ளது.

லண்டனில் உள்ள வார்ன்டன், தொடக்கப்பள்ளியில் படிக்கும் கால்லி (6), கெதின் (5) ஆகிய குழந்தைகளுக்கு இந்த திருமணம் நடந்தேறியது.வழக்கத்துக்கு மாறான இந்த திருமண சடங்குகள் வொர்செஸ்டர் பாரிஸ் தேவாலயத்தில் நடந்தது.

இதில் பாதிரியார் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தினார். திருமணமும் பதிவு செய்யப்பட்டது. இந்த திருமணத்தில் இரு குழந்தைகளின் பெற்றோரும் கலந்து கொண்டனர். இவர்கள் திருமணம் செய்ய தேவாலயத்துக்கு செல்ல எவர்சொடைல் கார் பரிசளிக்கப்பட்டது.

இதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. திருமணம் என்றால் என்ன? அது எப்படி நடைபெறுகிறது என்பன போன்றவற்றை அறிந்து அது குறித்து கட்டுரை எழுதுவதற்காக இதுபோன்ற திருமணத்தை நடத்தியதாக பள்ளியின் துணை தலைவர் சாரா ஆலன் தெரிவித்தார்.

திருமணம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு இரு குழந்தைகளையும் அழைத்து ஆசிரியர்கள் திருமண ஒத்திகை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி . maalaimalar.com

நவம்பர் 28, 2010

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கொள்ளுமேடு, லால்பேட்டை பகுதிகள்
படங்கள்:நஸ்ருல்லாஹ்&அஹ்மத்

சவுதி "பேஸ்புக்' இணையதளத்திற்கு நெருக்கடி

ரியாத் : "பேஸ்புக்' இணையதள சேவைக்கு, சவுதி அரேபியாவில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இஸ்லாமிய வழி சட்ட திட்டங்களை கடைபிடிக்கும் சவுதி அரேபியா, குற்றம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவதில் பெயர் பெற்ற நாடு. நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாக முறைகளை நிர்வகிப்பதில் இஸ்லாமிய மதத் தலைவர்கள் தான் பெரும்பங்கு வகிக்கின்றனர்.

உலக அளவில் பிரபலமான, "பேஸ்புக்' சமூக இணையதளம் சவுதியின் சட்ட திட்டங்களை மீறுவ தாக, குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், சவுதி தகவல் தொடர்புத் துறை, "பேஸ்புக்' சமூக இணையதளத்தை கடந்த வாரம் தடை செய்தது. இதுகுறித்து சவுதி தகவல் தொடர்பு அமைச்சக ஊழியர் ஒருவர் கூறுகையில், "நாட்டு மக்கள் கடைபிடித்து வரும் கலாசார பழக்க வழக்கங்களை மீறும் வகையில், "பேஸ்புக்' இணையதள சேவைகள் உள்ளன.

இதனால், அதற்கு தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது,' என்றார்.அடுத்த சில நாட்களில் தனது முடிவை மாற்றிக் கொண்ட சவுதி தகவல் தொடர்பு அமைச்சகம், இந்த தடையை நீக்கியுள்ளது. எனினும், தனது சேவை முறைகளில் திருத்தம் செய்யும்படி, சவுதி "பேஸ்புக்' அலுவலகம் வற்புறுத்தப்பட்டுள்ளது.

இதனால், "பேஸ் புக்' இணையதளத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.சில நாட்களுக்கு முன், தனியார் "பிளாக்' ஒன்றில், "நான்தான் கடவுள்' என்று கூறி மோசடி செய்த ஒருவனை "பேஸ்புக்' உதவியுடன் சவுதி போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, வங்க தேசம் மற்றும் பாகிஸ்தான் நாடுகளும், "பேஸ்புக்' இணையதளத்தை தடை செய்துள்ளன.
source:Cnn

கொரியாவுக்குள் நுழைந்தால் நடப்பதே வேறு: அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை

தென்கொரியா, தனது மக்களை போர்க் கேடயமாக பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டியுள்ள வடகொரியா, "அமெரிக்காவின் "ஜார்ஜ் வாஷிங்டன்,' கொரியாவின் மஞ்சள் கடல் எல்லைக்குள் வந்தால் அதன்பின் என்ன நடக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது' என்று, புதிய மிரட்டல் விடுத்துள்ளது. வடகொரியா அடுத்தடுத்து விடுத்துவரும் எச்சரிக்கைகளால் தென்கொரிய மக்களிடையே மேலும் மேலும் கோபம் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில், தென்கொரியாவுக்கு சொந்தமான இயான்பியாங் தீவு மீது வடகொரியா நடத்திய தாக்குதலில் தென்கொரிய கடற்படைவீரர்கள் இருவர், 60 வயதுள்ள இரண்டு பேர் என நான்கு பேர் பலியாயினர். இச்சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.நேற்று தென்கொரியத் தலைநகர் சியோல் அருகில் உள்ள சியோன்க்னம் நகரின் ராணுவ மருத்துவமனையில், பலியான இரு கடற்படை வீரர்களுக்கான இறுதியஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதில் தென்கொரிய பிரதமர் கிம் ஹ்வாங் சிக் உட்பட அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், மதத் தலைவர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய புதிய ராணுவ அமைச்சர் கிம் க்வான் ஜின் கூறுகையில், "வடகொரியாவின் இச்செயலுக்கு நாம் இரண்டு மடங்கு பதிலடி கொடுக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.அதேநேரம், சியோலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் கடற்படை வீரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வடகொரியாவின் கொடி மற்றும் அதிபர் படங்களை எரித்து தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.

வடகொரியா புதிய மிரட்டல்:

இந்நிலையில், வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் கூறப்பட்டிருப்பதாவது: கொரியாவின் மேற்குக் கடற்பகுதியில் அமெரிக்கா தன் போர்க்கப்பலை கொண்டு வருமானால், அதன் விளைவுகள் என்ன என்று யாராலும் கணிக்க முடியாது. வடகொரியாவின் தாக்குதலில் இறந்து போன பொதுமக்களை வைத்து தென்கொரியா தீவிரப் பிரசாரம் செய்கிறது. தாக்குதலுக்கு முன், அதிகாலையில் தென்கொரியாவுக்கு போன் மூலம் வடகொரியா நோட்டீஸ் விட்டது. கடைசி நேர மோதலைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் விடுக்கப்பட்ட அந்த நோட்டீசை தென்கொரியா புறக்கணித்து விட்டு, மேலும் மேலும் வடகொரியாவைத் தூண்டிவிடும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது.இவ்வாறு அதில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சீனா முயற்சி:

இவ்விவகாரத்தில் தலையிட்டு அமைதியை ஏற்படுத்தும் படி சீனாவுக்கு பலதரப்பில் இருந்தும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, சீன வெளியுறவு அமைச்சர் யாங் ஜெய்ச்சி, வடகொரியா தூதரை நேரில் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, அமெரிக்க மற்றும் தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களுடன் போனில் உரையாடினார். இவ்விவகாரத்தில், வடகொரியாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள அமெரிக்கா, இந்த கூட்டு ராணுவப் பயிற்சி வடகொரியத் தாக்குதலுக்கு முன்பே திட்டமிட்டதுதான் என்று கூறியுள்ளது.அமெரிக்காவுடன் தென்கொரியா கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொள்ள சில மணி நேரங்களே இருந்த நிலையில் வடகொரியா விடுத்துள்ள இச்செய்தியும், சியோலில் நடந்த கடற்படை வீரர்களின் இறுதியஞ்சலி நிகழ்ச்சியும் தென்கொரியாவில் மேலும் பதட்டத்தை அதிகப்படுத்தியுள்ளது.
source:Cnn

ஒபாமா முஸ்லிமாக மாறவேண்டுமென ஹஜ்ஜின்போது பிரார்த்தித்தேன் - பாட்டி ஸாரா உமர்

அமெரிக்க அதிபர் ஒபாமா இஸ்லாத்தை தழுவவேண்டுமென புனித ஹஜ்ஜின் வேளையில் பிரார்த்தித்ததாக அவருடைய பாட்டியான ஸாரா உமர் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபிய பத்திரிகையான அல்வதனுக்கு அளித்த பேட்டியில்தான் அவர் இதனை தெரிவித்தார்.

மகனும், ஒபாமாவின் மாமாவுமான ஸஈத் ஹுசைன் உள்பட நான்கு பேரப்பிள்ளைகளுடன் 88 வயதான ஸாரா உமர் ஹஜ் புனித கடமையை நிறைவேற்ற மக்காவுக்கு வருகைத் தந்திருந்தார்.

ஒபாமாவின் குடும்பத்தினர் சவூதி அரேபிய அரசின் விருந்தினர்களாக கெளரவிக்கப்பட்டனர். தங்களை சிறப்பாக கெளரவித்ததற்கு ஒபாமாவின் பாட்டி சவூதி மன்னர் அப்துல்லாஹ்விற்கு நன்றி தெரிவித்தார்.

பாரக் ஒபாமா முஸ்லிம் என அமெரிக்காவில் ஐந்தில் ஒருபகுதியினர் நம்புவதாக சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பில் தெரியவந்தது. ஆனால், இதனை வன்மையாக எதிர்க்கும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் ஒபாமா கிறிஸ்தவர்தான் என கூறுகிறது.

செய்தி:மாத்யமம்&பாலைவனத் தூது

நவம்பர் 26, 2010

கடலூர் மாவட்டத்தில் கனமழை : தத்தளிக்கும் கொள்ளுமேடு


வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால்,கொள்ளுமேட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. டெல்டா பாசனப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
நேற்று இரவு முதல் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் நேற்று (வெள்ளிக் கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
தாழ்வானப் பகுதிகளில் மழைநீர் பெருமளவுக்குத் தேங்கி உள்ளது. நமதூரில் முறையான மழைநீர் வடிகால்கள் இல்லாததால், கூபாத் தெரு ,தாயுப் நகர், கடைத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடியாமல் வெள்ளம்போல் காட்சியளிக்கிறது.ஊர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் பெரிதும் சிரம்மத்திற்குள்ளானர்கள்.

வீராணம் ஏரியின் நீர் மட்டம் 45.5 அடி (மொத்த உயரம் 47.5அடி), உயர்ந்துள்ளது

நவம்பர் 25, 2010

மழையால் பாதித்த விவசாயிகளுக்கு நில வரி ரத்து

சென்னை: பயிர்ச்சேதம் உள்ளிட்ட பாதிப்புகளின் முழுவிவரம் அறிந்து, விவசாயிகளுக்கு இந்த ஆண்டிற்கான நிலவரி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என்று முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி அறிவித்து‌ள்ளா‌ர்.


கன மழையைத் தொடர்ந்து மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. பயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. எப்பகுதிகளில் பாதிப்பு என முழு விவரம் அறிந்து, விவசாயிகளுக்கான நிலவரி இந்த ஆண்டில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

வேளாண் விவசாயிகளுக்கு மட்டுமல்ல ஏழை, எளிய, விவசாயிகள், தொழிலாளர்கள், சாமான்ய மக்கள் பயன்பெற போகும் மற்றொரு அறிவிப்பை இப்போது வெளியிடுகிறேன். 60 வயதை கடந்த விவசாய தொழிலாளர்களுக்கான மாத ஓய்வூதியத் தொகை 1998இல் 100 ரூபாய் என அறிவித்தோம். பிறகு 150 ரூபாய் என உயர்த்தினோம். பின்னர் 2000-2001 ஆம் ஆண்டில் 200 ரூபாயாக உயர்த்தினோம். அதைத்தொடர்ந்து, 2006இல் 400 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இப்போது விவசாயிகளுக்கான மாத ஓய்வூதியத் தொகை 500 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

தமிழக அரசு வேளாண் பட்டதாரிகள் சங்கம், வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறையில் பணியாற்றும் வேளாண் அலுவலர்கள், வேளாண் பொறியாளர் துறையில் சமநிலையில் பணிபுரியும் பொறியாளருக்கு இணையான சம்பளமாக திருத்தி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த முக்கியமான கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் எப்போது எனச் சொல்லவில்லை என்று கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்

இன்னும் 10 ஆண்டுகளில் மலேரியாவே இருக்காது:விஞ்ஞானிகள் கணிப்பு

இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் கொடிய வகை மலேரியாவை உலகில் இருந்தே அழித்து விடலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவத்துள்ளனர். மலேரியா ஒட்டுண்ணி பற்றி சேகரிக்கப்பட்டத் தகவல்களின் அடிப்படையில் இது கணிக்கப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகையில் பாதி மலேரியாவால் பாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மலேரியாவுக்கு 1. 2 மில்லியன் மக்கள் பலியாவதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலான இறப்புக்கு காரணம் கொசுவால் பரப்பப்படும் உயிரினம் பிளாஸ்மோடியம் பால்சிபரம். இது ஆப்பிரிக்காவை கடுமையாகத் தாக்குகிறது. மலேரியாவால் உயிர் இழப்பவர்களில் 90 சதவிகதம் பேர் ஆப்பிரிக்கர்கள் தான்.

விஞ்ஞானிகள் பிளாஸ்மோடியம் பால்சிபரம் பற்றிய தகவல்களை கடந்த 5 வருடமாக சேகரித்தனர். அதன் அடிப்படையில் தான் இதை எப்பொழுது முழுமையாக அழிக்க முடியும் என்று ஊகித்துள்ளனர்.

இந்த ஒட்டுண்ணி பரவும் வேகத்தை 90 சதவிகிதத்திற்கு மேல் குறைத்துவிட்டால் இதை இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் உலகில் இருந்து அழித்துவிடலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போதுள்ள அதிநவீனக் கருவிகளின் மூலம் இதை அமெரிக்காவில் இருந்து அழிப்பது சாத்தியம். ஆனால் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள கால்சிபரத்தை அழிப்பது சிறிது கடினம் என்று புளோரிடா பல்கலைக்கழகத்தின் ஆன்ட்ரூ டாடெம் தெரிவித்துள்ளார்.

மலேரியா உள்ள 99 நாடுகளில் 32 நாடுகள் இந்நோயை தங்கள் நாட்டைவிட்டு வெளியேற்றத் தொடங்கிவிட்டன. மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தி கொண்ட மலேரியா அதிகமாகப் பரவுவது தான் பிரச்சனையாக இருந்தது. குறிப்பாக மியான்மர், கம்போடியா மற்றும் வியட்நாமில் தான் இந்தப் பிரச்சனை அதிகம் இருந்தது
Source:thatstamil

இஸ்லாமிய பாரம்பரிய முறைப்படி அபுதாபி மசூதிக்குச் சென்ற எலிசபெத் மகாராணி!!

ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக வளைகுடா நாடுகளுக்குச் சென்றுள்ள எலிசபெத் மகாராணி நேற்று அபுதாபியில் உள்ள மிகப்பெரிய மசூதிக்குச் சென்றார். அங்கிருந்த இஸ்லாமிய மாணவர்களை சந்தித்து கலந்துரையாடவும் செய்தார்.

நேற்று மகாராணியும் இளவரசர் பிலிப்பும் லண்டனிலிருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் அபுதாபி சென்று சேர்ந்தவுடன் உடனடியாக நாட்டின் மிகப்பெரிய மசூதியாகக் கருதப்படும் ஷேக் ஜாயத் மசூதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

24 மணி நேர ஹெல்ப்லைன் சேவைஐக்கிய அரபு குடியரசில்(UAE)வசிக்கும் இந்திய தொழிலாளர்களின் நலனுக்காக 24 மணி நேர ஹெல்ப்லைன் சேவையை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நேற்று தொடங்கி வைத்தார்.
5 நாள் பயணமாக ஐக்கிய அரபு குடியரசுக்கு சென்றுள்ள பிரதிபா, இந்திய தொழிலாளர்கள் நல மையத்தை திறந்து வைத்தார். இந்த மையம் தொழிலாளர்களின் குறை தீர்ப்பதற்காக 24 மணி நேர தொலைபேசி சேவையை வழங்கும்.

பொருளாதார, சட்ட, மனநலம் சார்ந்த ஆலோசனைகளை இந்த மையம் வழங்கும். மற்ற வளைகுடா நாடுகளிலும் இதுபோன்ற மையம் விரைவில் திறக்கப்படும் என மத்திய வெளிநாடுவாழ் இந்தியர் நலத் துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார்.

இந்தியர்கள் அதிக அளவில் வசிக்கும் நாடுகளில் ஐக்கிய அரபு குடியரசும்(UAE) ஒன்று. இங்கு வசிக்கும் 17.5 லட்சம் இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் உடல் உழைப்பு தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிதம்பரத்தில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தும் பணி துவங்கியது

சிதம்பரம் இருவழிச் சாலையாக உள்ள சிதம்பரம் மேலவீதியை பல்வழிச் சாலையாக மாற்ற 65 லட்சம் ரூபாய் செலவில் அகலப்படுத்தும் பணி துவங்கியது.

சுற்றுலா தலமான சிதம்பரத்தில் புகழ் பெற்ற நடராஜர் கோவில் இருப்பதாலும், பிச்சாவரம் வனச்சுற்றுலா மையம் இருப்பதாலும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதற்கேற்ப சிதம்பரம் நகரை சிங்கார சிதம்பரமாக மாற்ற பல்வேறு திட்டங்கள் போடப்பட்டது. ஆனால் முழுமையாக எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. பல தடைகளைத் தாண்டி நகரில் நடைபாதை, பூங்காக்கள் அமைக்கப்பட்டு அவைகள் பராமரிக்கப்படாமல் போனது.

இருந்தும் தற்போதைய கலெக்டர் சீத்தாராமன் சிதம்பரம் நகரை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். அந்த முயற்சியின் ஒரு கட்டமாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் இருவழிச்சாலையாக உள்ள சிதம்பரம் மேலவீதி, போல்நராயணன் பிள்ளை தெரு, சிதம்பரம் - கவரப்பட்டு, சிதம்பரம் - டி.எஸ்.பேட்டை ஆகிய சாலைகள் பல்வழிச் சாலைகøளாக மாற்றப்படுகிறது. முதற்கட்ட பணியாக சிதம்பரம் மேலவீதி ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 65 லட்சம் ரூபாய் செலவில் அகலப்படுத்தும் பணி நேற்று துவங்கியது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று சிதம்பரம் மேலவீதி கஞ்சித்தொட்டி அருகே நடந்தது. ஆர்.டி.ஓ., ராமராஜ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் சீனுவாசன், தாசில்தார் காமராஜ் முன்னிலை வகித்தனர். விழாவில் உதவி பொறியாளர் தவராஜ், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கண்ணபிரான், சப் இன்ஸ்பெக்டர் ஜோதி உட்பட பலர் பங்கேற்றனர்

பீகார் தேர்தல் முடிவுகள் தரும் பாடங்கள்

தேர்தல் கருத்துக் கணிப்புகளை உண்மை என நிரூபிக்கும் முடிவுகள் பீகார் தேர்தலில் நிகழ்ந்தேறியுள்ளது.

நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜ.க கூட்டணிக்கு பெருவாரியான வாக்குகளை அளித்து பீகார் மக்கள் மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளனர். இந்த தேர்தல் முடிவின் பின்னணியில் பீகார் மக்கள் எதனை விரும்புகின்றார்கள் என்பது தெள்ளத்தெளிவாக விளங்குகின்றது.

முதல்வர் என்ற நிலையில் இரண்டாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமரும் நிதீஷ்குமாரின் அரசியல் தந்திரங்கள், நல்லதொரு ஆட்சிமுறைக்கும் கிடைத்த வெற்றிதான் இது.

மாநில மற்றும் தேசிய அளவில் பிரபலமான லாலுபிரசாத் என்ற அரசியல் ராவணனுக்கு கிடைத்த மிகப்பெரிய அடியாகவே பீகார் தேர்தல் முடிவுகள் மாறியுள்ளன.

யாதவ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரிடையேதான் லாலுவின் வாக்கு வங்கிகள் அடங்கியிருந்தன. இந்த வாக்கு வங்கியை தன் பக்கம் நிதீஷ்குமார் ஈர்த்துவிட்டார் என்பதைத்தான் இத்தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்துகின்றன.

தொலைநோக்கு பார்வையுடன் கூடிய ஆட்சி நடவடிக்கைகளின் மூலம் முஸ்லிம்கள், தலித்துகள், பிற்பட்ட வகுப்பினரின் ஆதரவைப் பெறுவதற்காக வன்முறையற்ற பீகார் என்ற நிதீஷின் முழக்கம் பீகார் மக்களிடம் எடுபட்டது. கால்நடை தீவன ஊழலும், மனைவி ராஃப்ரி தேவியை முதல்வராக்கி ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆட்சிபுரிந்த லாலுவின் நடவடிக்கையில் பழகிப்போன பீகார் மக்களுக்கு நிதீஷின் ஊழலற்ற ஆட்சி என்ற நிலைப்பாடு ஈர்த்தது எதிர்பார்த்த ஒன்றுதான்.

வெளிநாடுகளில் பணியாற்றும் பீகாரிகளிடமிருந்து முதலீடுகளைப் பெற்று தொழில் துறையின் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் திட்டத்திற்கு துவக்கம் குறித்ததும், அடிப்படை வசதிகளின் வளர்ச்சியும், விவசாயத்திற்கு ஆதரவான கொள்கைகளும் நிதீஷின் ஆட்சியை மக்கள் விரும்பும் ஆட்சியாக மாற்றிவிட்டது.

உறைவிடமில்லாதவர்களுக்கு நிலம் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் நிதீஷிற்கு ஆதரவாக மாறின.

பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துக்கொண்ட போதிலும் மதசார்பற்ற நம்பிக்கையை நிலைநிறுத்துவதில் நிதீஷ்குமார் மிகவும் கவனமாக இருந்தார். இது தேர்தலில் அதிகமாகவே பிரதிபலித்துள்ளது.

பா.ஜ.கவின் பிரச்சார பீரங்கியான நரேந்திர மோடியை பீகாரில் கால் ஊன்ற அனுமதிக்காதது, மோடியுடன் இணைந்து நிற்பது போன்ற புகைப்படத்துடன் வெளியான விளம்பரத்திற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது, அத்வானி பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் வரும் முன்பே நிதீஷ்குமார் விடைப்பெற்றது, பா.ஜ.க தலைவர்களுடனான இரவு விருந்தில் கலந்துக் கொள்ளாதது போன்ற நிலைப்பாடுகள் நிதீஷின் மீது முஸ்லிம் வாக்காளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்தது.

பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொண்டதும் இன்னொரு காரணமாகும். ஜாதி,மத உணர்ச்சிகளில் சிக்கித் தவித்த பீகார் அரசியலில் வளர்ச்சித் திட்டங்களின் மூலம் நிதீஷ்குமார் பெருவாரியான ஆதரவைப் பெற்றார் என்பது சரியல்ல, மாறாக ஜாதி,மத வாக்கு வங்கிகளை தனக்கு அனுகூலமாக மாற்றினார் என்பதுதான் உண்மை.

thanks:விமர்சகன்-பாலைவனத் தூது

நவம்பர் 24, 2010

ஓர் வஃபாத் செய்தி!!

நமதூர் சலாமத் புது நகர் அப்துல் கபூர் (வெள்ளை )அவர்கள் இன்று 24.11.2010 தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கொள்ளுமேடுXpress இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

புத்தமத ஆலயத்தில் சிதைந்த சிசுக்கள்


இங்கே கேரி பேக்குகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளவை... வெள்ள நிவாரண பொருட்களோ, பார்சல் மீல்ஸ்களோ என நினைக்கத் தோன்றும். ஆனால், அத்தனையும் கருக்கலைப்பு செய்யப்பட்ட சிசுக்கள்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள புத்தமத ஆலயத்தில் சட்ட விரோத கருக்கலைப்பில் அகற்றப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கருக்களை மருத்துவமனை சவக்கிடங்கு போல ஒரு இடத்தில் பாதுகாத்து வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
source:சிஎன்என்

போர்க்கள புயல்… திப்பு சுல்தான்


சமூக நல்லிணக்கத் தலைவன்
தமிழக விடுதலை வீரர்களான தீரன் சின்னமலை, சின்ன மருது ஆகியோர் திப்புவிடம் ராணுவ உதவியை பெற்றவர் கள். ஆற்காடு நவாப், ஹைதராபாத் நிஜாம் போன்றவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும், அவர்கள் ஆங்கிலேயர்களின் அரவணைப்பில் இருந்த தால் அவர்களை எதிரிகளாகவும், துரோகிகளாகவுமே கருதினார் திப்பு.


திப்பு சுல்தானின் ஆட்சிப் பகுதி கேரளாவின் மல பார், ஆந்திராவின் ஒரு பகுதி, தமிழகத்தில் கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலு£ர் உள்ளிட்ட பகுதிகளைக் கொண்டது. இதில் 10 சதவீதம் மட்டுமே முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள்.
பிற இந்து, கிறிஸ்தவ சமுதாயங்களின் நன்மதிப் பைப் பெற்ற திப்பு சுல்தானை மிகச் சிறந்த சமூக நல்லிணக்கவாதி என வரலாற்று அறிஞர்கள் புகழ்கிறார்கள். “மதங்களிடையே நல்லுறவு என்பது குர்ஆனின் கூற்று. லகும் &தீனுகும் வலியதீன் என்பதாகும்” என தனது 1787ஆம் ஆண்டின் பிரகடனத்தில் திப்பு வெளியிட்டார்.
இந்துக்களின் நண்பன்
கி.பி 14ஆம் நு£ற்றாண்டில் மராட்டிய இந்துப்படை சிருங்கேரி நகரைத் தாக்கி 17 லட்சம் வராகன் மதிப் புள்ள சொத்துக்களை கொள்ளையடித்தது. அதில் தங்கத்தால் செய்யப்பட்ட சாரதா தேவி சிலையும் ஒன்று. இதனால் மிகவும் வருத்தத்தில் இருந்த சங்கராச் சாரியாருக்கு உதவ திப்பு முன் வந்தார். பெருமளவில் நிதியுதவி செய்து மீண்டும் சிருங்கேரி மடத்தை செயல்பட வைத்தார்.


திப்புவின் மலபார் படையெடுப்பில் குருவாயூர் பிடிபட்டது. அங்குள்ள கிருஷ்ணன் கோவில் அர்ச்சகர்கள் ஓடி ஒளிந்தனர். கிருஷ்ணன்சிலையை வேறு ஊருக்கு மாற்றினர். இதையறிந்த திப்பு, தான் மதவெறியனல்ல என் பதையும், தனது நோக்கம் ஆட்சியை விரிவுபடுத்துவ தும், ஆங்கிலேயர்களை எதிர்ப்பதும்தான் என்பதையும் தெளிவுபடுத்த அந்த கோயிலுக்கு பாதுகாப்பை வழங் கினார். மீண்டும் அங்கே கிருஷ்ணர் சிலை யை கொண்டு வரச் செய்தார். குருவாயூர் வட்டத்தின் வரி வசூல் முழுமையையும் கிருஷ்ணர் கோயிலுக்கு அளித்தார். இந்துக் கள் வியந்து போய், திப்புவின் நேர்மை யைக் கொண்டாடினர்.

மைசூரை அடுத்த மேலக் கோட்டையில் ஐயர்களுக்கும் & ஐயங்கார்களுக்கும் இடை யில் வடகலையா-? தென்கலையா? என்ற உள் மத மோதல் நிலவியது. இதனால் கோயில் சடங்குகளில் பிரச்சினைகள் உருவானது. இதையறிந்த திப்பு இருபிரிவுக்கும் இடையில் சமாதானம் செய்து, இரு தரப்பும் ஏற்கும் வகையில் கோயில் நிகழச்சிகளை நடத்திட தீர்ப்பளித்தார்.
திப்புவின் தலைநகர் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் விஜய நகர பேரரசின் காலத்தில் கட்டப்பட்ட கோயில் அவ ரது அரண்மனைக்கு அருகிலேயே இருந்தது. அதில் தடையின்றி வழிபாடுகள் நடக்க உதவி செய்தார். அவர்களின் வழிபாட்டுரிமையை கட்டிக் காத்தார்.

அறிவிக்கப்படாத ஒரு இந்து அறநிலையத் துறையை திப்பு தன் ஆட்சியில் இருந்த பெரும் பான்மை இந்து மக்களுக்காக நடத்தினார் எனலாம். அம்மக்களின் வழிபாட்டு உரிமைகளுக்காகவும், செலவினங்களுக்காகவும் ஏராளமான நிலங்களையும் & நிதிகளையும் வாரி வழங்கினார்.
ஆங்கிலேயர்களை எதிர்த்தார். ஆனால் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு உதவிகள் செய்தார். இவரது உதவிகள் அனைத்தும் பல இன மக்கள் வாழும் நாட்டின் ஆட்சியாளர் என்ற அடிப்படையில் நீதியாகவே இருந்தது.
ஓரிறைக் கொள்கை கொண்ட திப்பு, பிற மக்க ளின் பல கடவுள் வழிபாட்டுக்கு இடையூறு செய்ய வில்லை. அவர்தான் திப்பு!
மது விலக்கு
தமது மக்களின் சமுதாய, பொருளாதார ஆன்மீக நன்மைக்காக மது காய்ச்சுவதும், விற்பதும் முழுமை யாக தடை செய்யப்பட வேண்டும் என திப்பு (வரு வாய் துறை சட்டம் 1787) அறிவித்து அதை அமல் படுத்தினார்.
மது விற்பனையை தடை செய்ததோடு, அத் தொழிலை செய்து வந்தவர்களுக்கு மாற்று வேலை வாய்ப்புகளுக்கும் அவர் ஏற்பாடு செய்தார். இது குறித்து தனது ஆட்சி பணியாளர் மீர் சாதிக் என்பவ ருக்கு 1787ல் திப்பு ஒரு கடிதம் எழுதினார்.


‘முழுமையான மதுவிலக்கு கொண்டு வருவதில் உள்ள பொருளாதார லாப நஷ்டங்களுக்காக தயங் கவோ, ஒதுங்கவோ கூடாது. இது மக்களுக்கு நல்ல தல்ல. இதில் உறுதியான முடிவெடுக்க வேண்டும். நமது இளைஞர்களிடம் நல்லொழுக்கம் உருவாக்க வேண்டியது நமது கடமை. நமது மக்களின் உடல் நலம், வளமான வாழ்வு இவற்றைவிட நமது அரசு கஜானாவை நிரப்புவதை முக்கியமாக கருதுவது எப் படி சரியாகும்? என இடித்துரைத்தார் அக்கடிதத்தில். இன்று அரசு வருவாய்க்காக மதுக்கடைகளை நடத்துகிறோம் என நியாயப்படுத்தும் ஆட்சியாளர்க ளுக்கு திப்புவின் கடிதம் ஒரு சரியான விளக்கமாகும்.
விவசாயம்
விவசாயம்தான் ஒரு நாட்டின் ஜீவநாடி என்பதை உணர்ந்த திப்பு ‘உழுபவனுக்கு நிலம் சொந்தம்’ என்ற புரட்சிகர திட்டத்தை அமல்படுத்தினார். விவசாயிக ளுக்கு கடன் வழங்கினார். விவசாயத்தில் பண்ணை யாளர் போக்குக்கு எதிராக, உழைக்கும் விவசாயிக ளுக்கு ஆதரவாக செயல்பட்டார்.
நீர்வளம் காக்க குளங்கள், ஏரிகளை தோண்டி னார். சிறிய அணைகளையும், கால்வாய்களையும் உரு வாக்கினார். புதிய ஒட்டு ரக மா மரக்கன்றுகள் விவ சாயிகளுக்கு வழங்கப்பட்டது. கரும்பு பயிரிட ஊக்க மளிக்கப்பட்டது. விவசாய உற்பத்தி பொருள்களை அரசே நல்ல விலைக்கு கொள்முதல் செய்தது. அரசே, ஏற்றுமதி & இறக்குமதியை கையாளும் வகை யில் வணிகக் கப்பல்களும் வாங்கப்பட்டது. 1790ல் காவிரியின் நடுவே அணை கட்ட அடிக்கல் நாட்டினார் திப்பு.
தொழில்கள்
திப்புவின் தொழில் கொள்கை, உள்நாட்டு தொழில்களுக்கே முன்னுரிமை தந்தது. இரும்பை காய்ச்சி வடிக்கும் 5 உருக்காலைகளை திப்பு உருவாக்கினார்.
துப்பாக்கிகள், பீரங்கிகள் போன்ற நவீன ஆயுதங் களை பிரான்ஸ் பொறியாளர்களின் துணையுடன் உருவாக்கினார்.
பட்டு உற்பத்தி, காகிதம் தயாரித்தல் இவற்றின் தொழில்நுட்பங்களை அறிந்துவர தொழில் வல்லுனர்களை பிரான்சுக்கு அனுப்பினார்.
1788ல் தொழிலதிபர்களுக்கு கடிதம் எழுதிய திப்பு, நமது பொருளாதார, தொழில் கொள்கைகள் வளர்ச்சி, முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும் என்றார்.
முத்து வளர்த்தல், கிரானைட் கற்களை பாலீஷ் செய்தல், தோல் பதனிடல் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்களை வெளிநாடுகளிலிருந்து வரவழைத்து உள்நாட்டில் பயிற்சியளிக்க வைத்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
திப்பு இயற்கையின் ரசிகர். உயிரினங்களின் நேசர். பறவைகள், விலங்கினங்களை அழிப்பதால் இயற்கை யின் சமநிலை பாதிக்கப்படும் என எச்சரித்தார். உயிரின காப்பகங்களை அமைத்ததோடு, அரிதான விலங்குகளை வேட்டையாடவும் தடை செய்தார்.

காவிரியோரம் அமைந்திருந்த ஆயுதத் தொழிற் சாலை ஒன்றின் கந்தகக் கழிவுகள் ஆற்று மீனை அழித்துவிடக் கூடும் என்பதால், அந்த தொழிற் சாலையை வேறு இடத்துக்கு மாற்றினார். இப்போது போபால் விஷ வாயு விபத்து நடந்து 26 ஆண்டு காலமாய் அம்மக்கள் படும் துயரத்தை நினைக்கும் போது, திப்புவின் இச் செயல்கள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன.
தவறு செய்யும் விவசாயிகளுக்கு வித்தியாசமான முறையில், ’’சேவை செய்யும்’’ தண்டனை வழங்கப் பட்டது. அவர்கள் வாழும் சிற்று£ரில் இரண்டு மாமரங்கள், இரண்டு பலா மரங்கள் நட்டு, அவற்றுக்கு நீர் ஊற்றி வளர்த்து, மூன்றடி உயரம் வரை அதை வளர்க்க வேண்டும் என்று ஆணையிட்டார் திப்பு. இன்றைய புவி வெப்பமயமாதல் பிரச்சினை குறித்து அன்றே கவலைப்பட்டிருக்கிறார் திப்பு.
திப்புவும் & மார்க்கமும்
இஸ்லாத்தை எல்லா நிலைகளிலும் போற்றிய திப்பு, ஒரு தொழுகையாளி மட்டுமல்ல. அழைப்புப் பணியிலும் ஆர்வம் காட்டியிருக்கிறார். நெப்போலிய னுக்கு அவர் இஸ்லாத்தைப் பற்றி விளக்கமாக கடிதம் எழுதியிருக்கிறார்.
இன்றைய ஓமன் தலைநகர் மஸ்கட் அன்று பெரும் வணிக நகராக இருந்தது. பல இந்திய வணிகர்களின் போக்குவரத்து நகராகவும் இருந்தது. அங்கு ஒரு பள்ளிவாசலை கட்ட திப்பு நிதியுதவி அளித்துள்ளார். மதரஸாக்களுக்கும், உலமாக்களுக்கும் வாரி வழங்கியி ருக்கிறார். குர்ஆனை அனைவரும் ஓத வேண்டும் என முஸ்லிம்களிடம் வலியுறுத்தியிருக்கிறார்.
பார்ஸியை ஆட்சி மொழியாக்கிய திப்பு உலகப் புகழ்பெற்ற இஸ்லாமிய அரசை நிறுவ விரும்பினார். தனது தலைநகர் சிரீறங்கப்பட்டினத்தில் அரண்மனை அருகே பள்ளிவாசலை கட்டினார். அவர் கொல்லப் பட்ட பிறகு, எரிக்கப்பட்ட அவரது அரண்மனை நூல கத்தில் 44 குர்ஆன் பிரதிகளும், குர்ஆன் தப்ஸீர் நூல்களும், 41 ஹதீஸ் நூல்களும், 56 இஸ்லாமிய அறிவியல், வரலாறு, வானியல், சட்ட நு£ல்களும் கண்டெடுக்கப்பட்டன.


திப்பு தன் நாணயங்களுக்கு அரபி, பார்ஸி பெயர் களை சூட்டினார். அதில் கலீஃபாக்கள் அபூபக்கர், உமர், உஸ்மான், அலி ஆகியோரின் பெயர்களைச் சூட்டினார். தங்க & வெள்ளி நாணயங்களிலும் கலீஃ பாக்களின் பெயர்களை பொறித்தார். ஆனால் எதி லும் தனது பெயரை அவர் பொறிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மனித நேயம்
இன்றைய கேரள மாநிலம் மலபார் திப்பு ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போது ஒடுக்கப்பட்ட சமூகத்துப் பெண்கள் ஜாக்கெட் (மேலாடை) அணிந்து மார்பகங்களை மூடாமல் வாழ்வது அறிந்து பதறினார் திப்பு.
1785&ல் மலபார் கவர்னருக்கு எழுதிய கடிதத்தில், இது தொன்மையான பழக்கமா-? அல்லது வறுமையா? வறுமை என்றால், அவர்கள் மேலாடை அணிய அனைத்து நிதி உதவிகளையும் செய்யுங்கள். இது மத நம்பிக்கை எனில், நம்பிக்கையை புண்படுத்தாத வண் ணம் நட்பு ரீதியாகப் பேசி நடவடிக்கை எடுங்கள். ஆண்களுக்கு இல்லாமல், பெண்களுக்கு மட்டும் இது சுமத்தப்பட்டால் அது நீதிக்குப் புறம்பானது. தமது தாய்மார்களும், சகோதரிகளும் பாதி நிர்வாணமாக நடமாடுவதை எப்படி அந்த இன இளைஞர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்? என அக்கடிதத்தில் திப்பு அங்கலாய்த்திருக்கிறார்.
இறுதியில் அந்த பெண்கள் மேலாடை அணிய வேண்டும் என்ற திப்புவின் முயற்சி வென்றது.


ஷஹீதானார் ‘திப்பு’
ஆங்கிலேயர்களை அலற வைத்து, அவர்களை தென்னிந்தியாவிலேயே தடுத்து நிறுத்தி போராடிக் கொண்டிருந்த திப்பு, இறுதியாக மூன்றாம் மைசூர் போரில் ஆங்கிலேயருடன் போரிட்டார். துரோகம், எதிரிகளின் பெரும் படை, நவீன ஆயுதங்கள் எல்லாம் எதிரணியின் பக்கம். திப்புவின் படை வீரப் போரிட் டது. எனினும் தோல்வியைச் சந்தித்தது. திப்பு சரண டையவும், சமாதானம் பேசவும் ஆங்கிலேயர்கள் வாய்ப்பு வழங்கினாலும், அவர் அதை நிராகரித்தார். இறுதியாக தன்னந்தனியாக வாளைச் சுழற்றி எதிரி களை வீழ்த்த, எங்கிருந்தோ வந்த குண்டுகள் திப்புவை துளைத்து மண்ணில் சாய்த்தது. தப்பிவிட வாய்ப்பிருந்தும் அதை அவர் செய்யவில்லை.
தன் வீரர்களின் உடல்களுக்கு மத்தியில் 1799, மே&4 அன்று திப்பு ஷஹீதானார். இந்திய விடுதலைக்கு உர மானார். அவர் அருகில் அவர் நேசித்த திருக்குர் ஆனும், ‘இறைவனின் வாள்’ என பொறிக்கப்பட்ட வாளும் மட்டுமே அப்போது கிடந்தன.
நன்றி மறந்த தேசம்
இந்தியாவின் விடுதலைக்கும், சுதந்திரத்திற்கும் காரணமாக யார், யாரோ குறிப்பிடப்பட்டிருக்கிறார் கள். ஆனால் திப்புவின் தியாகமும், வரலாறும் மறைக் கப்படுகிறது.
நடிகர் சஞ்சய்கான் என்பவர் ‘திப்புவின் வாள்’ என்று தூர்தர்ஷனுக்கு தொலைக்காட்சித் தொடர் ஒன்றை தயாரித்தார். ஆனால், அது ‘ஒரு கற்பனைக் கதை’ என அடைப்புக் குறிக்குள் போட வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டது. அதன் பிறகே மத்திய அரசின் தொலைக்காட்சி அனுமதி அளித்து, தன்னை கேவலப்படுத்திக் கொண்டது.


1980களின் இறுதியில் நடைபெற்ற இச்சம்பவம் வரலாற்று ஆர்வலர்களையும், தேசப்பற்றாளர்களை யும் உலுக்கியது. அந்த டி.டி. தொலைக்காட்சியில் அதிக மக்கள் பார்க்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் பகல் நேரத்தில் ஒளிபரப்ப அனுமதி வழங்காமல், சனிக்கிழமை இரவு 10 மணிக்கு பிறகே ஒளிபரப்ப அனுமதிக்கப்பட்டது. அந்நாட்களில் மக்கள் முன் கூட்டியே உறங்கிவிடும் பழக்கத்தில் வாழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே காலகட்டத்தில் நேருவினால் கற்பனை என கூறப்பட்ட, ராமாயணம், மஹாபாரதம் போன்ற தொடர்கள் அதே தொலைக்காட்சியில் ஞாயிற்றுக் கிழமையின் பகல் பொழுதுகளில் ஒளிபரப்ப அனுமதிக்கப்பட்டது.


அமெரிக்காவில் மரியாதை
இன்றைய ஏவுகணை தொழில்நுட்பத்தின் தந்தை திப்பு சுல்தானே. அவர்தான் குறுந்தொலைவு பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளை தயாரித்து பயன் படுத்தினார். இது குறித்து முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தனது ‘அக்னிச் சிறகுகள்’ என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
நான் பயிற்சி பெற அமெரிக்காவின் தலைசிறந்த ராக்கெட் தொழில்நுட்ப ஆய்வுக் கூடமான வாலோ பஸீக்கு சென்றேன். அமெரிக்க ராணுவ ஆய்வு அமைப்பான நாசாவின் அந்த இடத்தின் வரவேற்பு கூடத்தில் ராக்கெட் தாக்குதல் நடக்கும் ஒரு போர்க் களத்தின் மிகப் பெரிய ஓவியத்தைப் பார்த்தேன்.

அது பிரிட்டிஷாரை எதிர்த்து 200 ஆண்டுக ளுக்கு முன்பு சிரீரங்கப்பட்டிணத்தில் திப்பு நடத்திய விடுதலைப் போர் காட்சி என்பது என் வியப்பை அதிகரித்தது.
திப்புவின் தாய் மண்ணே நினைவு கூறத் தவறிய அவரது ராக்கெட் போர் நுட்பத்தை, உலகின் மறு கோடியில் நவீன ராக்கெட் நுட்பத்தின் உயர்தள மான நாசாவில் நினைவு கூறப்பட்டு ஓவியமாக நிற்பது எனக்கு ஒரு இந்தியன் என்ற வகையில் பெருமிதத்தையும், பெருமகிழ்ச்சியையும் தந்தது. இவ்வாறு அப்துல் கலாம் எழுதியுள்ளார்.


நிறைவாக…
மாவீரன் திப்புவை, வரலாறு போற்றுகிறது. ஆனால் அவரது வரலாறு மறைக்கப்படும் துரோகம் அறிந்து இதயம் கனக்கிறது. விழிகளில் அருவிகள் திரள்கிறது. இந்திய ராணுவத்தில் பல பெயர்களில் வீரதீர விருதுகள் வழங்கப்படுகின்றன. அவற்றில் ஒன்றுக்கு கூட திப்புவின் பெயர் சூட்டப்படவில்லை. நாடாளுமன்றத்தில் யாராவது குரல் கொடுப்பார் களா? உத்தம தியாகியை நாடு நினைவு கூறுமா? பார்ப்போம். source: சமுதாய ஒற்றுமை- எம். தமீமுன் அஞ்சாரி

புதிய தொழில்நுட்ப கேமரா


நேர்கோட்டுப் பாதையில் இல்லாத பொருட்களைப் படம் பிடிக்கக்கூடிய கேமராவை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள்.
இந்தக் கேமராவில் இருந்து வெளியாகும் லேசர் ஒளிக்கற்றைகள் சுவர் போன்ற வஸ்துக்களில் தெறித்து, படம்பிடிக்கப்பட வேண்டிய பொருளை ஒளிரச் செய்யும். அந்த ஒளிர்வின் மூலம் சுவர் போன்ற வஸ்துக்களில் தெறிக்கும் பிம்பங்களைப் பதிவு செய்வது கமராவின் தொழில்நுட்பமாகும். இதன் மூலம், அறையின் வெளியே இருக்கும் கமராவின்; மூலம்; அறையின் உள்ளே இருக்கும் பொருளை படம் பிடிக்கலாம்.

இது எக்ஸ் கதிர்கள் இல்லாமல் எக்ஸ்-ரே படம் பிடிக்கும் தொழில்நுட்பம் போன்றதாகுமென மசசூசெட்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ரமேஷ் ரஸ்கர் தெரிவித்தார்.
source:புதுமடம் TNTJ

கடலூர் மாவட்டத்தில் கன மழை:


வடகிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால், கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பின.

கடந்த 2 நாளாக மாவட்டத்தில் கடலூர் உள்ளிட்ட பல இடங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.வெள்ளாற்றில் நீர்வரத்து இல்லாததால் கடந்த 2 ஆண்டுகளாக திட்டக்குடி அருகில் உள்ள வெலிங்டன் ஏரி நிரம்பாமல் இருந்தது. இந்த ஆண்டு வெள்ளாற்றில் சுமாராக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் வெலிங்டன் ஏரி நிரம்பி வருகிறது.

ஏரியின் கரை அண்மையில் 29 கோடியில் பலப்படுத்தப்பட்டு உள்ளதால், இந்த ஆண்டு 23 அடி உயரத்துக்கு மட்டுமே (மொத்த உயரம் 29.7 அடி) நீர் பிடிக்க வேண்டும் என்று பொதுப் பணித்துறை அறிவுறுத்தி உள்ளது.ஞாயிற்றுக்கிழமை ஏரியின் நீர் மட்டம் 19.4 அடியாக இருந்தது. ஏரிக்கு 460 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக வெலிங்டன் ஏரிக்கு நீர் வரத்து இல்லாததால் அதன் வாய்க்கால்களில் தூர்வாரும் பணி நடைபெறவில்லை. ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் முன் வாய்க்கால்களைத் தூர் வாரவேண்டும் என்று, நாம் விவசாய அமைப்பின் கடலூர் மாவட்டச் செயலாளர் வேணுகோபால் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

மற்ற ஏரிகளில் ஞாயிற்றுக்கிழமை நீர் மட்டம் (மொத்த கொள்ளளவு அடைப்புக் குறிக்குள்) வருமாறு:

வீராணம் 45.5 அடி (47.5 அடி). ஏரிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

வாலாஜா 6.5 அடி (5.5 அடி). ஏரிக்கு விநாடிக்கு 3,605 கன அடி வீதம் நீர் வந்து கொண்டு இருக்கிறது. வரத்து நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

பெருமாள் ஏரி 5.5 அடி (6.5 அடி) ஏரியில் இருந்து விநாடிக்கு 1504 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது.

கடலூர் மாவட்டத்தில் முக்கிய ஊர்களில், ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்துள்ள மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

மே.மாத்தூர் 87,
கொத்தவாச்சேரி 64,
கடலூர் 60,
குப்பநத்தம் 50,
விருத்தாசலம் 44,
பண்ருட்டி 40,
பரங்கிப்பேட்டை 29,
வானமாதேவி 29,
அண்ணாமலை நகர் 24,
லக்கூர் 24,
சிதம்பரம் 23,
காட்டுமயிலூர் 22,
ஸ்ரீமுஷ்ணம் 20,
சேத்தியாத்தோப்பு 18,
வேப்பூர் 13,
கீழ்ச்செறுவாய் 12,
பெலாந்துரை 11,
லால்பேட்டை 10.
கொள்ளுமேடு 12

நவம்பர் 23, 2010

சவுதி அரேபியர் தலை வாளால் துண்டிக்கப்பட்டது

சவுதி அரேபியாவை சேர்ந்தவர் மோசென் அல் துசாரி. இவர் ரியாத் நகரில் காரில் சென்றபோது போக்குவரத்து விதியை மீறி கார் ஓட்டியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த போலீஸ்காரர் ஒருவர் அவரை தடுத்து நிறுத்த முயன்றார். இதனால் கோபம் கொண்ட அவர் தன் துப்பாக்கியால், அந்த போலீஸ்காரரை சுட்டுக்கொன்றார்.

இது தொடர்பாக போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு மரணதண்டனை விதித்தது. வாளால் தலையை துண்டிக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி அவர் ரியாத் நகர் அருகே உள்ள கர்ஜ் என்ற இடத்தில் வாளால் தலை துண்டித்து கொல்லப்பட்டார். இந்த ஆண்டு மட்டும் இவருடன் சேர்த்து மொத்தம் 23 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது
source:tamilulakam

ஐ.நா.,வில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு இந்தியால் 23வதுபிரிவில் திருத்தங்களை கொண்டு வர வேண்டும்

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாவதற்கு, சட்டத்தில் தேவையான திருத்தங்கள் உடனடியாக செய்யப்பட வேண்டும்` என்ற தீர்மானம், அமெரிக்க பார்லிமென்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

அமெரிக்க பார்லிமென்டின் பிரதிநிதிகள் சபையில், எம்.பி., கஸ் பிலிரகிஸ் என்பவர் கொண்டு வந்த தீர்மானத்தில் இது குறித்து கூறப்பட்டிருப்பதாவது:
உலக அமைதி மற்றும் தெற்காசிய பிராந்தியத்தின் வளர்ச்சிக்காக இந்தியா பாடுபடுகிறது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான அங்கு, அனைத்து அரசியல் விமர்சனங்களும் சுதந்திரமாக வெளியிடப்படுகின்றன, மதிக்கப்படுகின்றன. அதனால், ஐ.நா.,வில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு, அதன் சட்டத்தில் 23வது பிரிவில் தேவையான திருத்தங்களை உடனடியாகக் கொண்டு வர வேண்டும் என, பிரதிநிதிகள் சபை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐதராபாத் மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் ஹரித்துவார் சாமியார் கைது

மராட்டிய மாநிலம் மாலேகானில் சில ஆண்டுகளுக்கு முன்பு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் இந்து சாமியார்ணகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக பெண் சாமியார் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே ஆஜ்மீர் குண்டு வெடிப்பிலும் ஐதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பிலும் இந்து சாமியார்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது பற்றி சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

மாலேகான், ஆஜ்மீர், ஐதராபாத் ஆகிய குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் கைதானவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. உள்ளூர் போலீசாருடன் சேர்ந்து சி.பி.ஐ. பல்வேறு தகவல்களை திரட்டியது.

அப்போது ஹரித்து வாரைச் சேர்ந்த அபினவ் பாரத் என்ற அமைப்பு குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டு இருப்பதை கண்டு பிடித்தனர்.

அபினவ் பாரத் அமைப்பின் தலைவராக அசீமானாந்த் செயல் பட்டு வந்தார். இவர் இந்து ஜீயர் ஆவார். அவரை கைது செய்யும் நடவடிக்கையில் சி.பி.ஐ. போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

குண்டு வெடிப்பு தொடர்பான டெலிபோன் உரையாடல்கள், தஸ்தா வேஜிகள் ஆகியவற்றை சி.பி.ஐ. திரட்டியது. இதில் அசீமானாந்த்தும் அவரது சீடர்களும் சேர்ந்து குண்டு வெடிப்பு சதியில் ஈடுபட்டு இருப்பதை கண்டு பிடித்தனர்.

இதையடுத்து நேற்று போலீஸ்படை ஹரித்து வாரில் உள்ள அபினவ்பாரத் அமைப்பின் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாமியார் அசீமானாந்த்தை கைது செய்தனர்.

ஏற்கனவே இந்த சம்பவத்தில் சாமியாரின் சீடர்கள் சுனில் டாங்ரே, ராமச்நந்திரகல்சங்ரா ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.இருவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களது தலைக்கு தலாரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

அசீமானாந்த் கைது செய்யப்பட்டதையடுத்து அவரது சீடர்களை பிடிப்பதில் சி.பி.ஐ. தீவிரம் காட்டி வருகிறது.

கைதான அசீமானாந்த் உயிரியல் பட்டதாரி ஆவார் இவரது சொந்த ஊர் மேற்கு வங்காள மாநிலம் ஹீக்ளி ஆகும். ஐடின் சட்டர்ஜி, நாபாகுமார் சர்க்கான் என்ற பெயர்கள் இவருக்கு உண்டு.

அதிகரித்து வரும் சமூகத் திருமணங்கள்!!

திருமணச் செலவை தாங்கமுடியாததால் யெமன் நாட்டில் ஆண்கள் சமூக திருமணங்களை விரும்புவது அதிகரித்து வருகிறது.

மணப்பெண்ணின் வீட்டினர் கேட்கும் மஹ்ர்(திருமணக் கொடை) மற்றும் திருமணச் செலவுகளை ஈடுகட்ட முடியாத சூழலில் பெரும்பாலான ஆண்கள் திருமண வயதை தாண்டியும் மணமுடிக்க முடியாத சூழலில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

மஹ்ர் தொகை மட்டும் 11.5 லட்சம் யெமன் ரியால்(5000 டாலர்) ஆகிறது. மூன்று தினங்கள் நீளும் திருமண நிகழ்ச்சிகளுக்கான செலவுகள் தனி. இந்த செலவுகளை ஈடுகட்ட முடியாமல்தான் பெரும்பாலான யெமன் நாட்டு ஆண்கள் சமூக திருமணங்களை விரும்புகின்றனர்.

10 முதல் 1600 தம்பதிகள் பங்கேற்ற சமூகத் திருமணங்கள் யெமனில் நடந்தேறிவிட்டன. கடந்த மாதம் நடைபெற்ற 1600 தம்பதிகளுக்கான சமூகத் திருமண நிகழ்ச்சிதான் இதுவரை நடந்ததில் பெரியதாகும்.

தலைநகரின் ஸ்போர்ட்ஸ் அரங்கில் 1600 தம்பதிகள் பாரம்பரிய கலாச்சார உடையுடன் அணிவகுத்து நின்றது ருசிகரமான காட்சியாகும்.ஆர்ஃபன் சாரிட்டபிள் ஆர்கனைசேசன் என்ற அமைப்புதான் இத்திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடுச் செய்திருந்தது.

சவூதி இளவரசர் சுல்தான் பின் அப்துல் அஸீஸ்தான் இத்திருமணத்திற்கான ஸ்பான்சர். திருமணம் முடிக்கப்பட்ட அனைத்து மணமக்களும் அநாதைகளாவர்.

மஹ்ர் செலவுக்காக ஒவ்வொருவருக்கும் இரண்டரை லட்சம் யெமனி ரியால்(900 டாலர்) சவூதி இளவரசர் வழங்கினார். திருமணம் தாமதிப்பதனால் பாலியல் ரீதியான அராஜகம் உண்டாவதை தடுப்பதற்காகவே உள்ளூர் சமூக அமைப்புகள், ஷேக்குமார்கள், அரசு மற்றும் ராணுவம் ஆகியோர் எடுத்த முயற்சியின் விளைவாகவே இத்தகைய சமூக திருமணங்கள் யெமனில் நடந்தேறுகிறது. இது சமீபகாலமாக அதிகரித்து வருவதாக அல்ஜஸீரா தொலைக்காட்சி தெரிவிக்கிறது.

சில தனியார் நிறுவனங்களும் இத்தகைய சமூகத் திருமணங்களுக்கு ஸ்பான்சர் செய்கின்றன.

அங்கே அப்படி என்றால் இங்கே பாருங்கள் நம் தாய்திரு நாட்டின் கொடுமையை பரிதாபமாக இருக்கிறது.

வரதட்சணை மரணங்கள் அதிகரித்துவரும் சூழலில், இக்குற்றம் சாட்டப்பட்டோர் மீது கொலைக் குற்றம் சுமத்த உச்சநீதிமன்றம் கீழ் நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இத்தகைய கொடூரமான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரணத்தண்டனை விதிக்கவேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்தது.

நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, ஞான் சுதா மிஷ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இத்தீர்ப்பை வழங்கியது. இதுவரை வரதட்சணை மரணங்களுக்கு அதிகபட்சமாக ஆயுள்தண்டனை மட்டுமே வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

source:பாலைவனத் தூது

நவம்பர் 22, 2010

ச‌ட்ட மேலவை‌ வா‌க்காள‌ர் ப‌ட்டிய‌‌ல் த‌மிழக‌ம் முழுவது‌ம் இ‌ன்று வெ‌ளி‌யிட‌ப்படு‌கிறது

ச‌ட்ட மேலவை‌யி‌‌ன் ப‌ட்டதா‌ரி, ஆ‌சி‌ரிய‌ர் தொகு‌‌தி‌க்கான வரைவு வா‌க்காள‌ர் ப‌ட்டிய‌‌ல் த‌மிழக‌ம் முழுவது‌ம் இ‌ன்று வெ‌ளி‌யிட‌ப்படு‌கிறது.

15 நா‌ட்களு‌க்கு‌ள் பெய‌ர் திரு‌த்த‌ம், பு‌திதாக பெய‌ர் சே‌ர்‌க்கலா‌ம் எ‌ன்று தே‌ர்த‌ல் ஆணைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

த‌மிழக ச‌ட்டமேலவை‌க்கான உறு‌ப்‌பின‌ர்க‌ளி‌ன் தலா 7 பேரை ப‌ட்டதா‌ரி, ஆ‌சி‌ரிய‌ர்க‌ள் வா‌க்க‌ளி‌த்து தே‌ர்வு செ‌ய்யலா‌ம். இத‌ற்காக தொகு‌திக‌ள் ‌பி‌ரி‌க்க‌ப்ப‌ட்டு வா‌க்காள‌ர் ப‌ட்டிய‌ல் தயா‌ரி‌க்கு‌ம் ப‌ணி நடைபெ‌ற்று வரு‌‌கிறது.

வா‌‌க்காள‌ர் ப‌ட்டிய‌லி‌ல் பெய‌ர் சே‌ர்‌‌ப்பத‌ற்காக 3 ல‌ட்ச‌ம் ப‌ட்டதா‌ரிகளு‌ம், 72 ஆ‌யிர‌ம் ஆ‌சி‌ரிய‌ர்களு‌ம் ‌வி‌ண்ண‌‌ப்‌பி‌த்து‌ள்ளன‌ர். ‌வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள் ச‌ரிபா‌ர்‌க்கு‌ம் ப‌ணிக‌ள் முடி‌ந்து மா‌நில‌ம் முழுவது‌ம் இ‌ன்று ச‌ட்ட மேலவை‌க்கான வரைவு வா‌க்காள‌ர் ப‌ட்டிய‌ல் வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டது.

மாநகரா‌ட்‌‌சி ம‌ண்டல அலுவலக‌ங்க‌ள், வ‌ட்டாட‌்‌சிய‌ர் ம‌ற்று‌ம் துணை வ‌ட்டா‌‌ட்‌சிய‌ர் அலுவக‌ங்க‌ளி‌ல் பொதும‌க்க‌ள் பா‌ர்வை‌க்கு வை‌க்க‌‌‌ப்ப‌ட்டு‌ள்ளது. இ‌ந்த வரைவு‌ வா‌‌க்காள‌ர் ப‌ட்டிய‌‌லி‌ல் பெ‌ய‌ர் ‌திரு‌த்த‌ம் செ‌ய்ய ‌விரு‌ம்புவோ‌ர், பு‌திதாக பெய‌ர் சே‌ர்‌க்க ‌விரு‌ம்புவோ‌ர் அத‌ற்கு‌ரிய படிவ‌ங்க‌ள் மூல‌ம் ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்கலா‌ம்.

வரைவு வா‌க்காள‌ர் ப‌ட்டிய‌லி‌ல் ‌திரு‌த்த‌ம் செ‌ய்யவு‌ம், பு‌திய பெய‌ர் சே‌ர்‌க்கவு‌ம் டிச‌ம்ப‌ர் 7ஆ‌ம் தே‌தி கடை‌சி நாளாகு‌‌ம். இதனையடு‌த்து டிச‌ம்ப‌ர் 29ஆ‌ம் தே‌தி இறு‌தி வா‌க்காள‌ர் ப‌ட்டி‌ய‌ல் வெ‌ளி‌யிட‌ப்ப‌டு‌கிறத.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பம் பெற
இங்கே கிளிக் செய்யவும்

மொழிவாரி மாநில நாள்:

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 54 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில்... நமது அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகியவை ‘மாநில நாள்’ கொண்டாடி வருகின்றன.

ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இதில் கொண்டாட பெரிதாக எதுவும் இல்லையென்றாலும், எல்லைப் போராட்டத்துக்காக அரும்பாடுபட்ட தலைவர்களைப் பற்றிய நினைவுபடுத்துதல் கூட பெரிதாக இல்லை.

இந்த நிலையில், அரசு நிகழ்த்த வேண்டிய ஒரு நிகழ்வை கருத்தரங்காக நடத்தியிருக்கிறது ‘தி சண்டே இந்தியன்’ பத்திரிகை.

இதில் தமிழக திட்டக் கமிஷன் துணைத் தலைவர் நாகநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதலைச் சிறுத்தைகள் ரவிக்குமார், பா.ம.க.வின் வேல்முருகன், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் வெங்கடேஷ் ஆத்ரேயா ஆகியோர் தங்களது கருத்துக்களை எடுத்து வைத்தார்கள்.

கருத்தரங்கத்தில் கலந்துகொண்ட வழக்கறிஞரும், மொழியியல் அறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்.

‘‘சென்னை, ராஜதானியாக இருந்த சென்னை மாகாணம், ஒரிஸா மாநிலத்தின் பெட்டகஞ்சம் மாவட்டத்திலிருந்து குமரி வரை விரிந்திருந்தது. மொழிவாரி மாநிலங்கள் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு அமைத்த குழுக்களின் பரிந்துரையின் பேரில் தமிழகத்தின் பல பகுதிகள் கேரளாவுக்கும், கர்நாடகத்துக்கும், ஆந்திரத்துக்கும் சென்றுவிட்டன.

கேரளாவோடு இணைக்கப்பட்ட குமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை தாலுகா ஆகியவை பலத்த போராட்டத்துக்குப் பிறகு தமிழகத்தில் இணைந்தன. ஆனாலும் தேவிகுளம், பீர்மேடு, முல்லைப் பெரியாறு, நெய்யாறு, பாலக்காடு ஆகிய பகுதிகள் கேரளத்துக்குப் போய்விட்டன. தேவிகுளம், பீர்மேடு இரண்டு வட்டாரங்களிலும் அப்போது மொத்தம் இரண்டே இரண்டு மலையாள கிராமங்கள்தான் இருந்தன.
இன்றும் திருவனந்தபுரம் ஆவணக் காப்பகத்தில் உள்ள ஓலைச் சுவடிகள் அனைத்தும் தமிழில்தான் உள்ளன. இதே போல இன்று கர்நாடக மாநிலத்திலுள்ள மாண்டியா, கோலார் தங்கவயல், பெங்களூர் ஆகியவையும் தமிழர் பகுதிகளே. பெங்களூர் முற்காலங்களில் வெங்களூர் என்று தமிழர்களால் அழைக்கப்பட்டு வந்தது. மேலும் தமிழகப் பகுதிகளான சித்தூர், திருப்பதி, காளஹஸ்தி ஆகியவை ஆந்திராவுக்கு சென்றுவிட்டன. திருப்பதி கோயில் கல்வெட்டுக்கள் தமிழிலேயே உள்ளன. காளஹஸ்தி கோயில் ஆவணங்கள் தமிழில்தான் இருக்கின்றன. சித்தூரில் இன்றும் தமிழர்களே அதிகம் வாழ்கிறார்கள். இப்படியாக, நாம் நமக்குரிய ஏகப்பட்ட பகுதிகளை இழந்துவிட்டோம். இதற்கு யாரையும் குற்றம் சொல்லி இப்போது பயனில்லை. தமிழகம் இழந்த பகுதிகளில் உள்ள இயற்கை வளங்களைத் தமிழகத்துடன் பங்கிட்டுக் கொள்ள மறுக்கும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இந்த வரலாற்று உண்மைகளை உணர-வேண்டும். அங்குள்ள பூர்வகுடிகளாக உள்ள தமிழர்களைப் பாதுகாக்கவேண்டும்’’ என்றார்.

source:tamilagaarasiyal

இரட்டை கோபுரம் தகர்ப்பு: மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.3125 கோடி நஷ்ட ஈடு


கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள இரட்டை கோபுரத்தை விமானம் மூலம் மோதி தகர்த்தனர்.இதில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

இதை தொடர்ந்து மீட்பு பணியில் சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். மேலும், தாக்கு தலில் தரைமட்டமான கட்டிட இடிபாடுகளையும் அகற்றினர்.

இதை தொடர்ந்து நச்சு தூசி, புகை மற்றும் இடிபாடுகளில் இருந்து வெளியான அசுத்த வாயுக்கலால் பல நோய்களுக்கு ஆளாகினர். எனவே, மீட்பு பணியில் ஈடுபட்ட தங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என இன்சூரன்சு நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இதையடுத்து அவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வந்தது. முடிவில் அவர்களுக்கு ரூ.3125 கோடி நஷ்ட ஈடு வழங்க இன்சூரன்சு நிறுவனம் ஒப்புக் கொண்டது.

இந்த முடிவை மீட்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களும் ஒப்புக் கொண்டன. சுமார் 95 சதவீதம் பேர் ஏற்றுக் கொண்டு அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

அவர்களுக்கு விரைவில் நஷ்டஈடு தொகை வழங்கப்படும். பாதிக்கப்பட்ட நோயின் தன்மைக்கு ஏற்ப இத்தொகை வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
source:lankasriworld

நவம்பர் 21, 2010

ஒரு கோரிக்கை!!

காட்டுமன்னார்கோயிலில் இருந்து சென்னைக்கு புறப்படும் இரவு 10 மணி பேருந்தை கூட்ட நெரிசலில் தவறவிட்டு, பிறகு சிதம்பரம் சென்று அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டபோது எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. வேறொரு ஊரில் இருந்து 2 மணி நேரம் கியூவில் நின்றுதான் சென்னைக்கு புறப்பட முடியும் என்றால் பிறகு எதற்கு நம்மூருக்கு சென்னை பேருந்து. ஒரு சிறப்புநிலை பேரூராட்சிக்கு கிராமத்திலிருந்து வரும் ஒரு பேருந்து நம்மூரை Connection என்றால் என்ன அர்த்தம்? பேசாமல் முட்டத்தை சிறப்புநிலை பேரூராட்சியாக்கி காட்டுமன்னார்கோயிலை அதனுடன் இணைந்த ஒரு கிராமமாக ஆக்கிவிடலாம்.

A.R Travels என்ற ஆம்னி வண்டி நம்மூரிலிருந்து சென்னைக்கு இருந்தது. யார்? கண்பட்டதோ வந்த கொஞ்ச நாட்களிலிலேயே அதுவும் நின்றுவிட்டது. இன்னும் விழுப்புரம் கோட்ட வண்டியை, 3+2 நம்பி இருக்கிறோம். வாழ்க்கையின் வலிகளை மறந்து, பயணத்தில் கொஞ்சம் கண்ணயரலாம் என்று நினைக்கும் நம்மூர் மக்களுக்கு ஒரு Ultra Deluxe வண்டி என்பது நிறைவேறாத ஒரு ஆசையாய் இருந்துவிடுமோ என அச்சமுறுகிறேன்.

18 வார்டு மக்களின் கோரிக்கை இது நிறைவேற்றி தாருங்கள் என்று ஒரு விஐபிக்கு(MLA அல்ல) நான் அனுப்பிய கோரிக்கை அதில் எது நிறைவேறியிருக்கிறது என்று நீங்களே பாருங்கள்.

1.சென்னைக்கு ஒரு Ultra deluxe பேருந்து
2.இருபத்திநான்கு மணி நேரமும் இயங்கும் மருத்துவமணை மற்றும் மருந்தகம்
3.பேருந்துநிலையத்தில் சுலாப் கூட்டணியோடு ஒரு கழிப்பிடம்
4.Library ல் புதிய Programming Language புத்தகங்கள்.
5.இரவு நேரத்தில் பேருந்து நிலையத்தில் தங்கும் பயணிகளுக்கு இரவுநேர உணவகம்
6.குறைந்தபட்சம் ஒரு வீட்டிற்கு மாதம் 1000 ரூபாய் சம்பாதிக்கும் அளவுக்கு அவர்கள் தயாரிக்கும் பொருள்களை விற்கும் ஒரு உழவர்சந்தை அல்லது E-Commerce portal
7.ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு சுயஉதவி குழு
8.படித்த இளைஞர்களுக்கு வங்கிகள் கடனுதவி செய்தால் அவர்கள் ஒரு entrepreneur ஆவார்கள். அது Car ஆக இருந்தாலும், கம்பியூட்டராக இருந்தாலும்.
9.ஒரே ஒரு தியேட்டர்(ரெட்டியார் மனசு வைத்தால்)
10.பாதாள சாக்கடை திட்டம்(இது இப்பொழுது சேர்த்தது)

நேரடியாகவே கேட்கிறேன் மாண்புமிகு.துரை.ரவிக்குமார் அவர்களே இவற்றை நிறைவேற்றி தாருங்கள். நாங்கள் நன்றி மறவோம். உங்களின் அடுத்த ஐந்தாண்டில் காட்டுமன்னார்கோயிலை கடலூர் மாவட்டத்தின் முதன்மை நகரமாக்குவதற்கு நாங்கள் உறுதுனையாய் இருப்போம்.
தொடர்பு செய்தி:
தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களிலிருந்து தேர்வு செய்யப்படும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக செனட் உறுப்பினராக காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் துரை.ரவிக்குமாரை முதல்வர் கருணாநிதியின் பரிந்துரையின் பேரில் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் நியமித்துள்ளார்.

செனட் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள துரை.ரவிக்குமார் திங்கள்கிழமை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன், பதிவாளர் எம்.ரத்தினசபாபதி ஆகியோரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துப் பெற்றார்.அப்போது மக்கள்-தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம் உடனிருந்தார்.
thanks:காட்டுமன்னார்கோயில் பிளாக்

வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேற்றம்

தொடர் மழையால் வீராணத்திற்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால் 425 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.பருவ மழை தீவிரமடைந்திருப்பதால் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதனால் ஏரிக்கு கீழணையில் பெறப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இருந்தும் அரியலூர் மாவட்ட பகுதியில் பெய்துவரும் மழையால் செங்கால் ஓடை வழியாக 200 கன அடியும் மற்ற ஓடைகள் வழியாக 200 கன அடி என மொத்தம் 400 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பாதுகாப்பு கருதி ஏரியின் கொள்ளளவு 978.20 மில்லியன் கன அடி இருப்பு வைத்துக்கொண்டு உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது. தற்போது பூதங்குடி பாசன வாய்க்கால் மூலம் 50 கன அடி, சென்னை குடிநீருக்கு 75 கன அடி அனுப்புவது போக வெள்ளாற்று வடிகால் மூலம் 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
source:dinmalar

பிரதீபா அரபு நாடுகளில் சுற்றுப் பயணம்: நாளை புறப்படுகிறார்

டெல்லி: குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நாளை ஐக்கிய அரபு நாடுகளுக்கு 5 நாளம் பயணமாகப் புறப்படுகிறார்.

இதற்காக அவர் நாளை டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்படுகிறார்.

ஐக்கிய அரபு நாடுகளில் 5 நாட்கள் சுற்றுப் பயணம் மெற்கொள்ளும் அவர், வரும் 25-ம் தேதி வரை அபுதாபி, சார்ஜா, துபாய் உள்ளிட்ட நகர்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மேலும், அங்கு நடக்கும் தொழில் அதிபர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

அபுதாபியில் நடக்கவிருக்கும் இந்திய வர்த்தக கண்காட்சியைத் துவக்கி வைக்கிறார். பிரதீபா அரபு நாடுகளுக்குச் செல்வது இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் 25-ம் தேதி அவர் சிரியாவுக்குச் செல்கிறார். அங்கு 29-ம் தேதி வரை சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இந்த தகவலை இந்திய வெளியுறவுத்துறை (கிழக்கு) செயலாளர் லதா ரெட்டி தெரிவித்தார்
source:thatstamil

நவம்பர் 19, 2010

பிரான்சு நாட்டில் எடை குறைப்பு மருந்து சாப்பிட்ட 500 பேர் பலி!!

பிரான்சு நாட்டில் உள்ள மருந்து நிறுவனம் ஒன்று உடல் எடையை குறைக்க புதிய மருந்தை வெளியிட்டது. இந்த மருந்தை பல லட்சம் பேர் வாங்கி சாப்பிட்டு வந்தனர். இவர்களில் சிலர் திடீரென இறந்து விட்டனர். வேறு ஏதோ காரணங்களால் அவர்கள் இறந்து இருக்கலாம் என கருதப்பட்டது.

ஆனால் எதனால் இறந்தார்கள் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வில் எடை குறைப்பு மாத்திரை சாப்பிட்டதால் தான் இறப்பு ஏற்பட்டது என்பது தெரிய வந்தது. இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் இந்த மாத்திரை சாப்பிட்டதால் உயிர் இழந்தது தெரிய வந்துள்ளது. இதனால் மாத்திரைக்கு உடனடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்து நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
source:cnn

பசுக்களில் பால் கறக்க ரோபோ


மெல்போர்ன் : ஐரோப்பிய நாடுகளில் பசு க்களில் பால் கறக்க ரோபோ இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் வழக்கம் சிறிது சிறிதாக அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.


ஆள் பற்றாக்குறையே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. தற்போது ஆஸ்திரேலியாவிலும் விரைவில் அறிமுகமாக உள்ளது. சிட்னி பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா பியூச்சர்டைரி இணைந்து பசுக்களில் பால் கறக்கும் ரோபோ இயந்திரத்தை தயாரித்துள்ளன. இது குறித்து ஆஸ்திரேலியா பியூச்சர் டைரி தலைவர் ஷிர்லே ஹர்லாக் கூறுகையில், ‘எனது 40 ஆண்டு கால பால் பண்ணை அனுபவத்தில் இது மிகப்பெரிய வளர்ச்சி. அனைத்து பண்ணைகளுக்கும் ரோபோ இயந்திரம் பொருந்தாது’ என்றார்.
source:cnn

பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கியது அமெரிக்காதான்-ஹிலாரி கிளிண்டன்

சில பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கியது அமெரிக்காதான் என்றும் ஒஸாமா பின்லேடன் போன்ற பயங்கரவாதிகளை அமெரிக்கா முன்னர் ஆதரித்து வந்தது என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன். ஏபிசி தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின் போது ஒப்புக் கொண்டார்.

சோவியத் யூனியனுக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்கா இவ்வாறு செய்தது. ஆனால் இவ்வாறு செய்தது அமெரிக்காவுக்கே பெரும் பிரச்சனையாகிப் போனது என்று ஹிலாரி கூறினார்.

நாம் இப்போது யாருக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறோமோ அவர்களில் ஒரு பகுதியினர் அமெரிக்காவால் உருவாக்கப்பட்டவர்கள். ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனைத் தோற்கடிப்பதற்காக முஜாஹிதீன் படையினரை நாம்தான் உருவாக்கினோம் என்றும் அவர் கூறினார்.

நாம் அவர்களுக்குப் பயிற்சி அளித்தோம்; அவர்களுக்கு ஆயுதம் வழங்கினோம்; அவர்களுக்கு நிதி உதவியும் அளித்தோம். உஸாமா பின் லேடன் உள்ளிட்ட சிலருக்கு இவை வழங்கப்பட்டன. ஆனால் இது நமக்கு ஆதரவாகச் செயல்படவில்லை என்றும் ஹிலாரி கூறினார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் போருக்கு ஆதரவு அளித்தமைக்காக பாகிஸ்தான் மிகப்பெரிய விலையைக் கொடுத்துக் கொண்டுள்ளது. "பாகிஸ்தான் தன்னுடைய நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு சில நெளிவுகளைச் செய்தது. ஆனால் அதற்காக பாகிஸ்தான் தற்போது மிகப்பெரும் விலையைக் கொடுத்துக் கொண்டுள்ளது" என்று ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார்.
source:இந்நேரம்.காம்

கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் மருந்துகள் விற்பனை: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

கடலூர் மாவட்ட கூட்டுறவு விற்பனை (மார்க்கெட்டிங் சொசைட்டி) சங்கங்கள் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படும் என்று, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

57-வது அகில இந்திய கூட்டுறவு வாரவிழா கடலூரில் திங்கள்கிழமை கொண்டாடப் பட்டது.

விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நலத் திட்ட உதவிகளை வழங்கியும், சிறந்த கூட்டுறவு சங்கங்கள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கியும் பேசியது:

கடலூர் மாவட்டத்தில் 2007-08-ம் ஆண்டில் 400 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.12 கோடியும், 2008-09ம் ஆண்டில் 8,300 குழுக்களுக்கு ரூ.72 கோடியும், 2009-10ம் ஆண்டில் 12,462 குழுக்களுக்கு ரூ.106.5 கோடியும் சுழல்நிதி வழங்கப்பட்டு இருக்கிறது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வட்டி இல்லாக் கடன் வழங்க ரூ.190 கோடி ஒதுக்கப்பட்டு, இதுவரை ரூ.130 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது. 6 இடங்களில் மண் பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் மருந்து விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. முதல் கட்டமாக கடலூர், பண்ருட்டியில் இத்திட்டம் விரைவில் தொடங்கப்படும். பின்னர் மாவட்டத்தின் பிற ஊர்களிலும் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் மருந்து விற்பனை செய்யப்படும். கடந்த ஆட்சி காலத்தில் கடலூர் மாவட்டத்தில் 167 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் நலிந்து உருக்குலைந்து கிடந்தன. அவற்றுக்கு ரூ.42 கோடி மானியம் வழங்கப்பட்டது இந்த ஆட்சியில் என்றார் பன்னீர்செல்வம்.

விழாவுக்கு ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமை வகித்தார். கடலூர் எம்.எல்.ஏ. கோ.அய்யப்பன், கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு, மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. ரவிக்குமார், கடலூர் நகராட்சி துணைத் தலைவர் தாமரைச்செல்வன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பிரான்ஸிஸ் மேரி ஞானமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டுறவு சங்கங்களின் தனி அலுவலர் எஸ்.ஆர். வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட மத்தியக் கூட்டுறவு சங்கங்களின் தனி அலுவலர் ந.மிருணாளினி திட்ட விளக்க உரை நிகழ்த்தினார்.

கோயில் பூசாரிகளுக்கு இலவச சைக்கிள்

முன்னதாக திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் நடந்த நிகழ்ச்சியில், கடலூர் மாவட்டத்தில் உள்ள நிதி வசதி இல்லாத கோயில்களில் அர்ச்சனை செய்யும் அர்ச்கர்கள், பூசாரிகள் 399 பேருக்கு இலவச சைக்கிள்களை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கினார். நிகழ்ச்சிக்கு ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமை வகித்தார். இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் தங்கராஜ், துணை ஆணையர் ஜெகந்நாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நவம்பர் 18, 2010

மாநகரும் மணி'நீரும்..

தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து கொண்டிருக்கிறது. அதிலும், கனமழை. ஆனால் இந்த மழை நீர் வீணாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இவற்றைத் தேக்கி வைக்கும் ஏரிகள் இன்று தூர்ந்து போய்விட்டன. அல்லது வீட்டுமனைகளாகவும், போக்குவரத்துப் பணிமனைகளாகவும், புதிய பேருந்து நிலையங்களாகவும் மாறிவிட்டன.

மழை கொட்டும்போது நகரத்தில் வாழும் மனிதர்கள் பெரும்பாலானோர் சொல்லக் கூடியது இதுதான். ""எதுக்கு நகரத்தில் மழை பெய்யணும்?, கிராமத்துல பெய்தாலும் பயனுள்ளதாக இருக்கும்''. இதற்குக் காரணம், கிராமத்தில் விவசாயம் தழைக்கட்டுமே என்ற நல்ல எண்ணம் போலத் தோன்றினாலும், அங்கே ஏரி நிரம்பினால்தான் இவர்களுக்குத் தண்ணீர் தட்டுப்பாடு வராது என்கிற எண்ணம்தான் இந்த கூற்றுக்கு அடிப்படை. நகரங்களின் குடிநீர்த் தேவை எல்லாமும் நகருக்கு வெளியே உள்ள ஊரகப் பகுதிகளில் இருக்கும் ஏரிகளில் இருந்துதான் பெறப்படுகிறது.

சென்னை மாநகரை மட்டுமே எடுத்துக் கொண்டால், குடிநீர் தேவையின் 80 சதவீதம் தண்ணீர் மாநகருக்கு வெளியிலிருந்துதான் கொண்டுவரப்படுகிறது. அப்படிக் கொண்டு வந்து கொடுத்தும்கூட பற்றாக்குறை உள்ளது. சென்னை மாநகரில் ( 174 சதுர கிலோமீட்டர் பரப்பளவு) ஆண்டுக்கு சுமார் 60 நாள்களுக்கு மட்டுமே மழை பெய்கிறது. இந்த மழையின் அளவு 1,200 மிமீ. இந்த மழை நீரை முறையாகச் சேமிக்க முடிந்தால், நாள்தோறும் 5 பேர் உள்ள குடும்பத்துக்கு 125 லிட்டர் தண்ணீர் கிடைக்கும்.

மழைநீர் சேமிப்புத் தொட்டி ஒவ்வொரு கட்டடத்திலும் இருக்க வேண்டும் என்று அரசு சட்டம் கொண்டுவந்தது. அவற்றை அனைத்து வீடுகளும் அமைக்கவும் செய்தன. இந்த அமைப்பு நிலத்தடி நீர் அளவு மேம்பட உதவுகிறது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அவை உண்மையில் மழைநீர் சேமிப்புத் தொட்டி அல்ல. மழைநீர் சேமிப்பு அமைப்பு மட்டுமே.சிங்கப்பூர், டோக்கியோ நகரங்களிலும் ஜெர்மனியிலும் புத்திசாலித்தனமான மழைநீர் சேமிப்பு முறைகளைக் கையாள்கிறார்கள்.

கடந்த தலைமுறையில் நமது பாட்டிமார்கள் நம் வீட்டு முற்றத்தில் அண்டா உள்ளிட்ட பாத்திரங்களில் மழைநீரைச் சேமித்து வைத்து, அந்தத் தூய்மையான நீரை ஒரு வாரம் சமையலுக்குப் பயன்படுத்திய அதே பாணிதான். ஆனால் இவர்கள் கட்டடங்களில் அமைக்கப்பட்ட தொட்டிகளில் மழைநீரைச் சேமித்து வைக்கிறார்கள்.சிங்கப்பூர் விமான நிலைய கட்டடத்தின் மேற்பரப்பிலும், சுற்றுப் பகுதியிலும் பெய்யும் மழையைத் தரைதளத் தொட்டிகளில் சேமித்து வைக்கிறார்கள். இதன் பெரும் பகுதி கட்டடத்தைப் பராமரிப்பதிலும், கழிவறைக்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மழை நீர் விமான நிலையத்துக்கு ஒர் ஆண்டுக்குத் தேவைப்படும் தண்ணீரில் மூன்றில் ஒரு பகுதியைச் சமாளிக்க உதவுகிறது. இதனால் அவர்களுக்கு ஆண்டுக்கு 4 லட்சம் டாலர் சேமிப்பு.

இதே முறை வானுயர் கட்டடங்களிலும் பயன்படுகிறது. சிங்கப்பூரிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள் அனைத்திலும் மழைநீர்த் தொட்டி உள்ளன. அவர்கள் இந்த நீரைக் குடிநீருக்காக ஒரு பகுதியையும், மீதியை பிற தேவைகளுக்காகவும் பயன்படுத்துகின்றனர்.
ஜெர்மனியில் உள்ள வீடுகள் மழைநீர்த் தொட்டியை கருவூலம் போலக் காக்கின்றனர். ஏனென்றால், அங்கே தொழில்துறை மாசு அதிகம். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத்துக்குக் கட்டணம் அதிகம்.

ஆகவே அவர்கள் மழை நீரை வீட்டின் அடியில் பெரிய தொட்டிகளில் சேமித்து வைத்து, அதைக் குடிக்கவும் சமையலுக்கும் பயன்படுத்துகிறார்கள்.
சென்னை மாநகரில், 1,800 சதுர அடி கட்டட மேற்பரப்பு (அல்லது மொட்டைமாடி) உள்ள வீட்டில் மழைநீர்த் தொட்டியைப் பெரியதாகத் தரைக்குக் கீழே அமைக்க முடிந்தால், தற்போது பெய்யும் மழையளவுப்படி 58 நாளில் 1,00,800 லிட்டர் மழைநீரைச் சேமிக்க முடியும். இந்த நீர் தூய்மையானது. 6 நபர்கள் உள்ள ஒரு குடும்பம் இந்த நீரை ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம். தற்போது சுத்திகரிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் 20 லிட்டர் போத்தல் நீரின் விலை குறைந்தபட்சம் 40. அப்படியானால் இந்த மழை நீரில் பாதியைச் சேமிக்க முடிந்தாலும் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் மிச்சப்படுத்த முடியும்.

இலங்கையில் ஊரகப் பகுதிகளிலும் மலைப்பாங்கான இடங்களில் அமைந்துள்ள வீடுகளுக்கும் இந்த மழைநீர் தொட்டிகள் மூலம்தான் குடிநீர் கிடைக்கிறது. ஜெர்மன் அரசு இத்தகைய மழைநீர்த் தொட்டிகள் கட்டும் வீடுகளுக்கு அதன் அளவுக்கு ஏற்ப மானியமும் வழங்குகிறது.
ஆனால் நாம் செய்துகொண்டிருப்பது என்ன? தற்போது வெறுமனே வீடுகளில் அரை மீட்டர் அகலம் உள்ள சதுரத் தொட்டி அமைத்து, ஒரு மீட்டர் ஆழம் வரை சரளைக் கற்கள், மணல் போட்டு, சில இடங்களில் 15 மீ ஆழத்துக்குத் துளையிட்டும் வைப்பதால் நிலத்தடி நீர் பெருகுகிறது, அவ்வளவே. ஆனால், அந்த குடும்பத்துக்குக் கிடைக்கக்கூடிய குடிநீர் கிடைக்க தற்போதைய மழைநீர் சேகரிப்பு அமைப்பு பயன்படுவதாக இல்லை.

ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர்த் தொட்டி இருக்குமானால், சென்னை மாநகர மக்களின் தண்ணீர்த்தேவை கணிசமாக ஈடுகட்டப்படுமே? அரசாங்கம் ஊரக ஏரிகளை நகரத்தின் குடிநீர்த் தேவைக்காக எடுத்துக் கொண்டுவிட்டது. நகர மக்களையும் உருப்படியாக மழைநீரைச் சேமித்து வைக்கச் சொல்லித் தரவில்லை. கட்டாயப்படுத்தவில்லை. இதைப்பற்றி எல்லாம் கவலைப்படவும் இல்லை.

கனமழை பெய்துகொண்டே இருக்கிறது மாநகர வீதிகளிலும், மொட்டை மாடிகளிலும்... நதிநீர்தான் வீணாகக் கடலில் கலக்கிறது என்றால் மழைநீரும்கூடப் பயன்படுத்தப்படாமல் வீணாகிறது. வருமானத்தை ஊதாரித்தனமாகச் செலவிட வைப்பதன் மூலம்தான் பொருளாதரம் வளமாக இருக்கும் என்கிற தவறான தத்துவத்தைப் பரப்புவதுடன் நிறுத்திக் கொண்டு, மக்களின் அடிப்படைத் தேவையான மழைநீரைச் சேமிப்பதை ஊக்குவிக்க வேண்டும் நமது ஆட்சியாளர்கள்.
இனியாவது, விழித்துக்கொள்ளலாமே...

தலையங்கம்:தினமணி

சிதம்பரத்தில் ஆர்.டி.ஓ., அலுவலகம் திறப்பு விழா

சிதம்பரத்தில் புதியதாக கட்டப்பட்ட வட் டார போக்குவரத்து அலுவலகம் திறப்பு விழாவில் முக்கிய நகரங்களுக்கு செல்ல 10 புதிய பஸ்கள் இயக்கப் பட்டன.

சிதம்பரம் புறவழிச்சாலையில் சி.முட்லூரில் 89.5 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலக திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர் செல் வம் தலைமை தாங்கினார். துணை போக்குவரத்து ஆணையர் முருகானந்தம் வரவேற்றார். போக்குவரத்து ஆணையர் ராஜாராமன், கலெக்டர் சீத்தாராமன், டி.ஆர்.ஓ., நடராஜன், எம்.எல்.ஏ., ரவிக்குமார் முன்னிலை வகித்தனர்.

போக்குவரத் துத் துறை அமைச்சர் நேரு, புதிய அலுவலகம் மற்றும் ஓட்டுனர் தேர்வு தளத்தை திறந்து வைத்தார். கடலூர் - திருச்சி, நெய்வேலி - பழனி, சிதம்பரம் - திருப்பதி, விருத்தாசலம் - சென்னை, சிதம்பரம் - சென்னை உட்பட முக்கிய நகர பகுதிகளுக்குச் செல்லும் 10 புதிய பஸ்களை சுகாதாரத்துறை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

விழாவில் சேர்மன்கள் முத்து பெருமாள், மாமல் லன், பேரூராட்சி தலைவர்கள் முகம்மது யூனுஸ், ரவிச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர்கள் நல்லத் தம்பி, மதியழகன், தமிழ் நாடு மீனவர் நலவாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி, சிதம்பரம் கவுன் சிலர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகர், ஆர்.டி.ஓ., ராமராஜ், தாசில்தார் காமராஜ், ஊராட்சி தலைவர்கள் தவமந்திரி வெங்கடேசன், தனலட்சுமி ரவி, லட்சுமணன், அம்சவள்ளி தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயக்குமார் நன்றி கூறினார்
source:dinamalar

உங்கள் கணிணியில் தமிழ் எழுத்துக்கள் தெரியவில்லையா?

உங்கள் கணிணியில் தமிழ் எழுத்துக்கள் தெரியவில்லையா?
ஒரே கட்டம் கட்டமாகவே தெரிகிறதா?
வரும் மெயில்களில் இருக்கும் தமிழ் எழுத்துக்கள் தெரியாமல் கட்டம் கட்டமாக மட்டும் காண்பிக்கிறதா?

கவலையை விடுங்கள்!!!
கீழே கொடுக்கப்பட்ட மென்பொருள் டௌன் லோட் (DOWNLOAD) செய்து இன்ஸ்டல் செய்வதன் மூலம் தமிழ் எழுத்துக்களை தங்கள் கணிணியில் அடையலாம்.
DOWNLOAD HERE

உங்களுடைய wi-fi மொபைல் ஃபோனில் தமிழ் எழுத்துக்கள் தெரியவில்லையா?
தமிழர்களாகிய நமக்கு தமிழ் இணையதளங்கள் தெளிவாக தெரிய உங்களுடைய wi-fi மொபைல் ஃபோனில் ஒபேரா மினி இணைய உலாவி (அல்லது) ஸ்கைபயர் இணைய உலாவி தரவிறக்கி உங்கள் மொபைலுக்கு மாற்றி நிறுவி தமிழ் இணைய தளங்களை தமிழில் காணலாம்.

ஒபேரா மினி இணைய உலாவி (OPERA MINI BROWSER)
பொதுவாக ஒபேரா மினி தவிர மற்ற மொபைல் உலாவிகளில் தமிழ் இணைய தளங்களை பார்க்க முடியாது. ஒபேரா மினி இணைய உலாவியில் தமிழ் தளங்களை காண சிறிய மாற்றம் செய்ய வேண்டும்.

உங்கள் மொபைல் ஃபோனில் தரவிறக்க http://www.opera.com/mini/ செல்லுங்கள் Download பட்டனை க்ளிக் செய்து தரவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்.
தரவிறக்கிய பின் உங்கள் மொபைலுக்கு மாற்றி நிறுவி கொள்ளுங்கள்.
Install செய்த பிறகு opera:config செல்லுங்கள்
"Use bitmap fonts for complex scripts menu" - க்ளிக் செய்து தேர்ந்து எடுத்தால் தமிழில் காணலாம்.
ஸ்கைபயர் இணைய உலாவி (SKYFIRE BROWSER)
ஆனால் ஸ்கைபயர் இணைய உலாவியில் எந்த மாற்றமும் செய்ய தேவை இல்லை. ஸ்கைபயரின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 1.5 சிம்பியன் இணையங்குதளத்தை (NOKIA) உபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு என்று வெளியாகி உள்ளது. இது தொடுதிரை (Touch Screen) மொபைல்களையும் ஆதரிப்பது சிறப்பம்சம். ஸ்கைபயரின் இணையதளம். http://www.skyfire.com/ உங்கள் கணினியில் தரவிறக்க இந்த சுட்டிக்கு http://get.skyfire.com/ செல்லுங்கள். தரவிறக்கிய பின் உங்கள் மொபைலுக்கு மாற்றி நிறுவி கொள்ளுங்கள்.

நேரடியான உங்கள் மொபைலில் இருந்து ஸ்கைபயரை தரவிறக்க உங்கள் மொபைலில் இருந்து இந்த m.skyfire.com முகவரியை அணுகுங்கள்.
உங்கள் மொபைலுக்கு ஏற்ற பதிப்பு தரவிறக்கப்பட்டு நிறுவப்படும்.

யுனிகோட் என்றால் என்ன?
'யுனிகோட்' எந்த இயங்குதளம் ஆயினும், எந்த நிரல் ஆயினும், எந்த மொழி ஆயினும் ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்துவமான எண் ஒன்றை வழங்குகிறது.

அடிப்படையில் கணினிகள் எண்களுடன்தான் தொழிற்படுகின்றன. அவை எழுத்துக்களையும் பிற வரியுருக்களையும் எண்வடிவிலேயே சேமிக்கின்றன. 'யுனிகோட்' கண்டறியப்படு முன்னர் இவ்வாறு எழுத்துக்களுக்கு எண்களை வழங்க நூற்றுக்கணக்கான குறியீட்டு முறைகள் இருந்தன. இவற்றில் எந்தவொரு முறையிலும் போதுமான அளவு எழுத்துக்கள் இருக்கவில்லை: உதாரணமாக, ஐரோப்பிய ஒருங்கியத்திலுள்ள மொழிகளை உள்ளடக்கவே பல்வேறு குறியீட்டு முறைகள் தேவைப்பட்டன. ஆங்கில மொழியில் கூட எந்தவொரு குறியீட்டு முறையினாலும் பொதுவாகப் புழங்கும் எல்லா எழுத்துக்களையும், தரிப்புக் குறிகளையும், மற்றும் தொழிநுட்பக் குறிகளையும் உள்ளடக்க முடியவில்லை. மேலும் இக்குறியீட்டு முறைகள் ஒன்றுடன் ஒன்று முரண்படுகின்றன. அதாவது, இரு குறியீட்டு முறைகள், இரு வேறு எழுத்துக்களுக்கு ஒரே எண்ணையோ, அல்லது ஒரே எழுத்துக்கு இரு வேறு எண்களையோ புழங்கலாம். இதனால் எந்தவொரு கணினியும் (குறிப்பாகப் பரிமாறிகள்) பல்வேறு குறியீட்டு முறைகளை ஆதரிக்க வேண்டியுள்ளது; இந்நிலையிலும் வெவ்வேறு குறியீட்டு முறைகளுக்கு இடையிலோ அல்லது இயங்குதளங்களுக்கு இடையிலோ தரவுகள் பரிமாறப்படும் போது, அத் தரவுகள் பழுதுபடச் சாத்தியமுள்ளது.
செய்தி:லப்பைகுடிகாடு.காம்

நவம்பர் 15, 2010

அல்கைதாவை தோற்கடிக்க முடியாது : பிரிட்டனின் புதிய இராணுவ தலைமை அதிகாரி

மேற்குலகத்தினால் அல்கைதா குழுவினரையும், இஸ்லாமிய இராணுவத்தையும் ஒரு போதும் தோற்கடிக்க முடியாது என இங்கிலாந்தின் புதிய இராணுவ தலைமை அதிகாரி ஜெனரல் சேர் டேவிட் ரிச்சார்ட் தெரிவித்துள்ளார்.
நாளை பிரிட்டனின், செனொடாஃபில் உள்ள இராணுவ வீரர்களின் நினைவாலயத்தில் அஞ்சலி செலுத்தவுள்ள டேவிட் ரிச்சார்ட், சற்று முன்பதாக த சண்டே டெலிகிராப் ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியின் நாசி இராணுவத்தினருக்கு எதிராக இரண்டாம் உலகமகா யுத்தத்தில் சண்டையிட்டது போல், தற்போது மேற்குலகம் இஸ்லாமிய கிளர்ச்சிக்குழுக்களுடன் சண்டையிடுகிறது. எனினும் இது ஒரு ஆபத்தான கொள்கைத்திட்டமாக கருதப்படக்கூடியது.

இஸ்லாமிய இராணுவ கட்டமைப்பை ஒடுக்குவது அசாதாரமாணது. அதனை ஒரு போதும் அடைய முடியாது. எனினும் இங்கிலாந்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் அவசியமானது.

பிரித்தானிய இளவரசர் வில்லியம், ஆப்கானுக்கு அனுப்பப்பட்டுள்ள இங்கிலாந்து படையினரில் இணைக்கப்பட்டுள்ளதை நான் விரும்பவில்லை. அவருடைய சகோதரர், ஹரி ஹெலிகொப்டர் பைலொட்டாக ஹெல்மாண்ட் மாகாணத்தில் பணிபுரிவதும் அப்படித்தான்.

இங்கிலாந்து இராணுவம் தான் என்ன செய்கிறது என்பதை முழுமையாக விளங்கிக்கொள்ளவில்லை. கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நேட்டோ நிறைவேற்றும் என எதிர்பார்த்தே ஆப்கான் மக்கள் களைப்படைந்து விட்டனர்.

என அவர் தெரிவித்துள்ளார்.
SOURCE:Lankasri

ஆடு வங்கி; உலகின் முதன் முறையாக


கடன் வழங்கவும்,சேமிப்புக்களை மேற்கொள்ளவும் பணத்துக்குப் பதிலாக ஆடுகளைப் பயன்படுத்தும் வகையில் இந்தியாவில் ஒரு வங்கி உருவாக்கப்பட்டுள்ளது.


இந்தியாவின் அலஹாபாத்திலிருந்து 70 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள கொரவான் என்ற இடத்தில் பெண்கள் ஒன்றிணைந்து இந்த வங்கிமுறையைத் தோற்றுவித்துள்ளதாக P.T.I செய்தி ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

பிரேமா என்ற பெண்ணும் அவரது தோழிகளும் இணைந்து பிரத்தியேகமாக ஆடுகளைக் கொண்டு செயற்படும் இந்த வங்கிமுறையைத் தோற்றுவித்துள்ளனர். ஆடுகளை வளர்ப்பதில் முழுநேரம் ஆர்வம் கொண்ட பெண்களுக்கு நாம் அவற்றை கடனாக வழங்குகின்றோம்.

அந்த ஆடுகள் இரண்டு அல்லது மூன்று குட்டிகளை ஈன்றதும் அதில் ஒன்றை அவர்கள் வைப்பாகத் திருப்பித் தர வேண்டும். ஆடுகள் அனைத்தும் வாராவாரம் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.

ஒரு ஆடு இறந்து விட்டால் சந்தையில் கிடைக்கும் ஆடொன்றின் மூலம் அல்லது வங்கியில் உள்ள ஒன்றின் மூலம் நிலைமையைப் பொறுத்து மாற்றீடு செய்யப்படும். எமது வங்கியிலுள்ள ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் தமது மூலதனமாக இருபது ஆடுகளைக் கொண்டிருக்க வேண்டும்.

அது அவர்களின் சுயநிதித் தேவைப் பூர்த்திக்குப் போதுமானதாகும். இதுவே எமது திட்டத்தின் நோக்கம் என்று பிரேமா விளக்கமளித்துள்ளார்.
செய்தி:CNN

கடலில் மிதக்கும் நகரங்கள் உருவாக்க திட்டம்!!


உலகில் தற்போது சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டுள்ளது. அதிகப்படியான கார்பன் வெளியேற்றப்படுவதால் இதுபோன்று மாசு ஏற்பட்டு மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.

எனவே, சுற்றுச்சூழல் மாசு ஏற்படாத வகையில் கடலில் மிதக்கும் நகரங்களை உருவாக்க ஜப்பான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஜப்பானில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கடலில் மிதக்கும் நிலங்களை உருவாக்கி அதன் மூலம் விவசாயம் செய்யப்படுகிறது. கடலில் எங்கு பார்த்தாலும் பசுமை மயமாக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மிதக்கும் நகரங்கள் உருவாக்கப்பட உள்ளன.

இந்த திட்டம் பசிபிக் கடலில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கடலில் 1 கி.மீட்டர் தூரத்துக்கு நகரம் அமைக்கப்பட உள்ளது. இங்கு 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மக்கள் வரை வாழ முடியும்.

இந்த நகரங்களை இணைக்கும் வகையில் மிதக்கும் சாலைகள் அமைக்கப்படுகின்றன. இவ்வாறு அமைக்கப்படும் நகரங்கள் மற்றும் கிராமங்களில் புல்வெளிகள் மற்றும் வனப்பகுதியும் உருவாக்கப்படுகிறது.

இவை மிக மெல்லிய உலோக கலவையுடன் கடல் நீரில் உள்ள மெக்னீசியம் மூலம் தயாரிக்கப்படும் உலோகத்துடன் கலந்து உருவாக்கப்படும்.

எதிர்காலத்தில், இது போன்ற கற்பனை நகரம் அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல் மாசுபடாத புதிய சமுதாயம் ஏற்படும்.
செய்தி:maalai malar

நவம்பர் 14, 2010

மரணத்தருவாயில்…

நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்!

“ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும்,
நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள்
மீட்கப்படுவீர்கள்” (அல்-குர்ஆன் 21:35)
“மரண வேதனை சத்தியத்தைக் கொண்டு (மெய்யாகவே) வருகின்றது; (அப்போது அவனிடம்) நீ எதை
விட்டும் விரண்டோடிக் கொண்டிருந்தாயோ அது தான் (இந்நிலை என்று கூறப்படும்)”
(அல்-குர்ஆன் 50:19)

“நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!” (அல்-குர்ஆன் 4:78)

மலக்கல் மௌத் உங்களின் உயிர்களைக் கைப்பற்றுவார்!

“அவன் தன் அடியார்களை அடக்கியாளுபவனாக இருக்கிறான்; அன்றியும், உங்கள் மீது பாதுகாப்பாளர்களையும் அனுப்புகிறான்; உங்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால், நம் அமரர்கள் அவர் ஆத்மாவை எடுத்துக் கொள்கிறார்கள் – அவர்கள் (தம் கடமையில்)
தவறுவதில்லை” (அல்-குர்ஆன் 6:61)

மரணத்தருவாயில் பாவமன்னிப்பு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது!

“இன்னும் எவர்கள் தீவினைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை
மரணம் நெருங்கிய போது, ‘நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி)
மன்னிப்புத் தேடுகிறேன்’ என்று கூறுகின்றார்களோ, அவர்களுக்கும், எவர் காஃபிர்களாகவே
மரிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பு இல்லை, இத்தகையோருக்குத் துன்பம்
கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்” (அல்-குர்ஆன் 4:18 )

அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனைச் செய்யும் அநியாயக்காரர்களின் உயிரை மலக்குகள்
கைப்பற்றும் வேளையில்!

“அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, ‘எனக்கு வஹீ வந்தது’ என்று கூறுபவன்; அல்லது ‘அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்’ என்று கூறுபவன், ஆகிய இவர்களை விடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) ‘உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்;

இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய
வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்’ (என்று கூறுவதை நீர் காண்பீர்)” (அல்-குர்ஆன் 6:93)

மலக்குகள் நிராகரிப்பவர்களின் உயிர்களைக் கைப்பற்றுகின்ற வேளையில்!

“மலக்குகள் நிராகரிப்போரின் உயிர்களைக் கைப்பற்றும் போது நீங்கள்
பார்ப்பீர்களானால், மலக்குகள் அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கூறுவார்கள்: ‘எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்’ என்று” (அல்-குர்ஆன் 8:50)

சமீபமாக இருக்கும் அல்லாஹ்!

“மரணத் தறுவாயில் ஒருவனின் (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது – அந்நேரம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆயினும், நாமோ அவனுக்கு உங்களை விட சமீபமாக இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்கிறீர்களில்லை. எனவே, (மறுமையில் உங்கள் செயல்களுக்கு) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள் என்று இருந்தால் – நீங்கள் உண்மையாளராக இருப்பின், (அவ்வுயிரை) மீளவைத்திருக்கலாமே!” (அல்-குர்ஆன் 56:83-87)

மரணத்தருவாயில் அவகாசம் அளிக்கப்படமாட்டாது!

“அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: ‘என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!’ என்று கூறுவான். ‘நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக’ (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு
திரையிருக்கிறது” (அல்-குர்ஆன் 23:99-100)

நீங்கள் எந்த மரணத்தைக் கண்டு அஞ்சுகிறீர்களோ அந்த மரணம் உங்களை அடைந்தே தீரும்!

“‘நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும்; பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள் – அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பான்’ (என்று) (நபியே!) நீர் கூறுவீராக” (அல்-குர்ஆன் 62:8)

மரணம் வருமுன் நற்செயல்களை புரியுங்கள்!

“அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால்,- ‘மந்திரிப்பவன் யார்?’ எனக் கேட்கப்படுகிறது. ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான். இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும். உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது. ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை; அவன்

தொழவுமில்லை. ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான். பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் – மமதையோடு சென்று விட்டான். கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்! பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான். வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா?” (அல்-குர்ஆன் 75:26-36)

“உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); ‘என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான
தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே’ என்று கூறுவான்”
(அல்-குர்ஆன் 63:10)

thanks: AHAMED& தேரிழந்தூர் ஆன்லைன்

மரண தண்டனை ரத்து செய்ய இந்தியா, அமெரிக்கா எதிர்ப்பு

நியூயார்க் : மரண தண்டனையை ரத்து செய்வது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) தீர்மானத்தை எதிர்த்து இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட 38 நாடுகள் ஓட்டு போட்டுள்ளன. ஆனால் 107 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. கடுமையான குற்றம் புரிந்தவர்களுக்கு நீதிமன்றங்கள் மூலம் மரண தண்டனை வழங்கப்படுகிறது. இந்நிலையில் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் கோரி வருகின்றன. இதையடுத்து, சில நாடுகள் மரண தண்டனையை ஒழித்துவிட்டன. இது குறித்து ஒருமித்த கருத்து ஏற்படுத்த ஐ.நா.சபையும் முயன்று வருகிறது.


இதன் அடிப்படையில் மரண தண்டனையை ரத்து செய்வது தொடர்பான தீர்மானத்தின் மீது ஐ.நா. சபையில் ஓட்டெடுப்பு நடைபெற்றது. 107 நாடுகள் ஆதரித்தும், 38 நாடுகள் எதிர்த்தும் ஓட்டு போட்டுள்ளன. 36 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இந்தியா, சீனா, அமெரிக்கா, ஈரான், சவுதி அரேபியா ஆகியவை தீர்மானத்துக்கு எதிராக ஓட்டு போட்ட நாடுகளில் குறிப்பிடத்தக்கவை.


கடந்த 2007ம் ஆண்டு ஐ.நா. பொது சபையில் இதுபோன்று ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது 104 நாடுகள் ஆதரித்தும், 54 நாடுகள் எதிர்த்தும் ஓட்டு போட்டன. 29 நாடுகள் கலந்து கொள்ளவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் மரண தண்டனையை ரத்து செய்வதற்கான ஆதரவு பெருகி இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த தீர்மானத்துக்கு பெரும்பாலான நாடுகள் ஆதரவு தெரிவித்தாலும், அவர்களது கருத்தை மற்ற நாடுகள் மீது திணிக்க முடியாது என இந்தியா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன.


ÔÔகுற்றவாளிகளை சட்டப்படி தண்டிப்பதற்கான உரிமை ஒவ்வொரு நாட்டுக்கும் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை மிகக் கடுமையான குற்றம் புரிகிறவர்களுக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இது மிகமிக அரிது. அதிலும் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு மரண தண்டனை கொடுப்பதில்லைÕÕ என இந்திய அதிகாரி அக்வினோ விமல் ஐ.நா.சபையில் தெரிவித்தார்.

Source:CNNTAMIL

மீள்குடியேற வேண்டும் -முஸ்லிம் மக்கள்

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்திலிருந்து 20 வருடங்களுக்கு முன்னர் பலவந்தமாக விடுதலைப்புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை உரிய முறையில் அங்கு மீள்குடியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்ப்பாணத்தில் அமர்வுகளை நடத்திவருகின்ற கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் சார்பில் சாட்சியமளித்தவர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு சாட்சியமளித்தவர்களில் ஒருவராகிய
சர்மிளா ஹனிபா வடமாகாணத்தைச் சேர்ந்த இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கான வரையறுக்கப்பட்ட திட்டம் ஒன்று அரசாங்கத்திடம் இல்லை என்பதை அவர் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

மீள்குடியேற்றத்தின்போது, இனங்களிடையே நல்லுறவை ஏற்படுத்துவது தொடர்பில் முக்கியமாகக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதையும் நல்லிணக்க ஆணைக்குழுவினரிடம் அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து மனிக்பாம் முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களை மீள்குடியேற்றுவதில் காட்டப்படுகின்ற அதே அளவிலான அக்கறை இடம்பெயர்ந்த முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதிலும் காட்டப்பட வேண்டும் எனவும் இடம்பெயர்ந்துள்ள வடமாகாண முஸ்லிம்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.

யாழ்ப்பாணத்திற்குச் சென்றுள்ள கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு மூன்றாவது நாளாக குடத்தனை, நெல்லியடி, சாவகச்சேரி ஆகிய இடங்களில் நடத்திய விசாரணைகளின்போது ஆயுத முனையில் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளவர்கள், இறுதிக்கட்ட யுத்தத்தின்போது காணாமல் போனவர்கள் தொடர்பாகவே அதிகமானவர்கள் சாட்சியமளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளுக்குச் சென்று பிபிசி செய்தியாளர்கள் செய்திகளைத் திரட்டலாம். அதற்குத் தடையில்லை என அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் விசாரணைகள் ஆரம்பமாகியபோது அங்கு செல்வதற்கு பிபிசி செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய இப்போது இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
source:BBC

தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20% இடஒதுக்கீடு: மசோதா நிறைவேற்றம்

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மாநில அரசின் வேலைவாய்ப்புகளில் 20 சதவீத ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நிறைவேறியது.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மாநில அரசின் பணிகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கோவையில் கடந்த ஜூனில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மாநில அரசின் பணியிடங்களில் ஏற்படும் காலியிடங்களில் 20 சதவீத ஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக செப்டம்பர் 5-ம் தேதி ஆளுநரால் அவசர சட்டம் (தமிழ்நாடு அவசர சட்டம் 30) பிறப்பிக்கப்பட்டு செப்டம்பர் 7-ல் தமிழ்நாடு அரசிதழின் சிறப்பிதழில் வெளியிடப்பட்டது. இந்த சட்ட மசோதா புதன்கிழமை (நவம்பர் 10) அறிமுகம் செய்யப்பட்டது.

அதன் மீது வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதம்:

வி.பி. கலைராஜன் (அதிமுக):

தமிழகத்தில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 80 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் வகையில் இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் தமிழில் பேச முடியாத நிலை உள்ளது. வர்த்தக நிறுவனங்கள் தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்று அறிவித்தீர்கள். அதற்கும் வெற்றி கிடைத்ததாகத் தெரியவில்லை. முதல்வரின் குடும்பத்தினர் நடத்தும் திரைப்பட நிறுவனங்களுக்கு ரெட் ஜெயிண்ட், கிளவ்டு நைன் என ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டுவதற்காக இதனைக் கூறவில்லை. தமிழகத்தில் தமிழர்களுக்கு முன்னுரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காக இதனை கூறுகிறேன். இந்த தலைமைச் செயலக கட்டடத்தை கட்டுவதற்குக் கூட தமிழர்களைப் பயன்படுத்தவில்லை.

சி. ஞானசேகரன் (காங்கிரஸ்):

தமிழகத்தில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க சட்டம் கொண்டு வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது வருத்தத்தை தருகிறது. இந்தச் சட்டத்தை காங்கிரஸ் வரவேற்கிறது. 20 சதவீதம் என்பதை 50 சதவீதமாக அதிகரித்து திருத்தம் செய்ய வேண்டும் என்றார்.

மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. நன்மாறன், பேரவை இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் வை. சிவபுண்ணியம், மதிமுக எம்.எல்.ஏ. சதன் திருமலைக்குமார் ஆகியோர் 20 சதவீத ஒதுக்கீட்டை 50 சதவீதமாக அதிகரிக்க வலியுறுத்தினர். விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ. ரவிக்குமார், 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இந்த ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றார்.

விவாதத்துக்கு பதில் அளித்து சட்ட அமைச்சர் துரைமுருகன் பேசியது:

இன்று ஒரு புனிதமான நாள். வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது வேதனையான விஷயம். 20 சதவீதம் என்பதை அதிகரிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தனர். இது முதல்படிதான். எதிர்காலத்தில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 100 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் நிலையும் வரும். தமிழுக்காக இந்த அரசும், முதல்வர் கருணாநிதியும் அளப்பரிய பணிகளை ஆற்றியுள்ளனர். அதில் ஒன்றுதான் இந்தச் சட்டம். யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்தச் சட்டத்தை மாற்ற முடியாது என்றார். அதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் எதிர்ப்பின்றி இந்தச் சட்டம் நிறைவேறியது.

கடலூரில் இன்று வேலை வாய்ப்பு முகாம்

கடலூர் மஞ்சகுப்பம் செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கலைக் கல்லூரியில் இன்று 14/11/2010 ( ஞாயிற்றுகிழமை) சிறப்பு வேலை வைப்பு முகாம் நடைபெறுகிறது.

பத்தாம் வகுப்பு முதல் தொழிற் பயிற்சி மற்றும் கலை மற்றும் அறிவயல் துறையில் இளநிலை பட்டம் பெற்றவர்கள் வரை இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம்.

வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள்

Hyundai India Motors Ltd.,
Nokia India Pvt. Ltd.,
Updater Services Ltd.,
JKM Auto,
Avalon Technologies,
TVS Logistics Services Ltd.,
AE & E Chennai Works Ltd.,
TMI Networks,
Larsen and Toubro,
Sodexo and the Serene Groups.

நேரம் : காலை 9.00 மணியில் இருந்து மாலை 5.00 மணி வரை

வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள்

அசல் சான்றிதழ்,
நகல் சான்றிதழ் 2,
மற்றும் புகைப்படம் 2,
மற்றும் ஓட்டுனர் உரிமம் ( ஓட்டுனர் வேலைக்கு) கொண்டுவரவும்.