Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 30, 2012

சிதம்பரத்தில் தமிழ் இணைய மாநாட்டு கண்காட்சி!

சிதம்பரம்: சிதம்பரத்தில் நடைபெறும் உலகத் தமிழ் இணைய மாநாட்டு கண்காட்சியில் சிறுவர்களுக்கான பொது அறிவு, பஞ்சதந்திரக் கதைகள் உள்ளிட்ட பல தலைப்புகளில் "சிடி' மற்றும் "டிவிடி'க்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

கண்காட்சியில் 20 அரங்குகள் இடம்பெற்றுள்ளன. தமிழ் எழுத்துருக்கள் மல்டி மீடிய "சிடி', குழந்தைகளுக்கான "சிடி', பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களுக்கான "சிடி'க்கள், மொபைல் மற்றும் மடிகணினிகளில் தமிழைப் பயன்படுத்தும் மென்பொருள்கள் அச்சு வடிவமைப்பு, முன்னணி பத்திரிகை நிறுவனங்களுக்குத் தேவையான மென்பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. தமிழ் யூனிகோடு எழுத்துருக்கள், தமிழ் 99 விசைப்படகுகள், விக்கிபீடியா இணைய பக்க வடிவமைப்புகள், கைபேடு மற்றும் ஆண்ட்ராய்டு போன்ற பல கணினி கருவிகளில் மென்பொருள்கள் காட்சியில் இடம் பெற்றிருந்தன. முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சமச்சீர் கல்வி "டிவிடி', ஸ்போக்கன் இங்கிலீஷ், இலக்கணம், பொது அறிவு, பஞ்சதந்திரக் கதைகள் உள்ளிட்ட பல தலைப்புகளில் "சிடி' மற்றும் "டிவிடி'க்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. பிளஸ் 2 மாணவர்களுக்கான ஒரு மதிப்பெண் வினா வங்கி, லேர்ன் சப்ஜெக்ட் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வுக்கான சிறப்பு "சிடி'க்கள், கணி திறன் அறிய ஒளிப்பியார்டுகளில் ஏதுவான "சிடி'க்களும் 20 சதவீத தள்ளுபடி விலையில் கண்காட்சியில் விற்பனை செய்தனர்.

 இதுதவிர குழந்தைகள், நர்சரி பாடல்கள், நல்லொழுக்கக் கதைகள், வரலாற்று நூல்கள் அதிகளவில் இடம் பெற்றிருந்தன. பொன் தமிழ் மென்பொருள்கள், பொன்மடல் ஒன்பது விசைகளிலேயே விரைவாக தமிழில் தட்டச்சு "கே 12' முறையில் 10 நிமிடங்களில் கற்றுக் கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மொபைல், டேப்லட், கணிபொறிகளில் விரல், குச்சி, மவுஸ் போன்றவற்றால் கையினால் எழுதி தமிழில் உள்ளடக்கலாம். "தமிழ் 99', "கே 12' தட்டச்சு ஆங்கிலம் (ஒலிமாற்றம்) ஹைபோன், ஹைபேடு முதலியவற்றில் கையினால் எழுதி உள்ளடக்குவதோடு குறுஞ்செய்தி, ஈமெயில், கோகுல், பேஸ்புக் போன்றவற்றிக்கு எழுதி நேரடியாக அனுப்பும் மென்பொருளும் கண்காட்சியில் இடம் பெற்றன. கையடக்க சிபேர்டு கண்காட்சியில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஒட்டுமொத்த விஷயங்கள் நம் உள்ளங்கையில் அடக்கிவிடும் வகையில் மானிட்டர் கீ போர்டு, நான்கு யுஎஸ்பி., லேர்ன் போர்டு

டிசம்பர் 29, 2012

ஓர் வபாத் செய்தி!

நமதூர் கடைத் தெருவில் வசிக்கும் மைனர் மகன் முஹம்மது இக்பால் அவர்களின் துணைவியார் சலிமா பேகம் அவர்கள் இன்று மாலை சவூதி அரேபியாவில் தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.... 

எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் அனைவருக்கும் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் "ஷப்ரன் ஜமிலா" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress பிரார்த்தனை செய்கிறது.

மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை அரசேசெலுத்தும் : முதல்வர் அறிவிப்பு

பிற்படுத்தப்பட்டமிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தைஅரசேசெலுத்தும் : முதல்வர் அறிவிப்பு
பிற்படுத்தப்பட்டமிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் முழு கல்விகட்டணத்தைஅரசே செலுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது
தற்போது கல்லூரிகளில் அதிகரித்துள்ள கற்பிப்புக் கட்டணம் மற்றும்சிறப்புக்கட்டணம் ஆகியவற்றினால் பிற்படுத்தப்பட்டோர்மிகவும்பிற்படுத்தப்பட்டோர் மற்றும்சீர்மரபினர் மாணவமாணவியர்களின் கல்வி மற்றும்மாணவமாணவியர் சேர்க்கையில்எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதிருக்க அரசுமற்றும் அரசு உதவிப் பெறும் கல்லூரிகளில்பயிலும் பிற்படுத்தப்பட்டோர்மிகவும்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்மாணவமாணவியருக்குதேர்வுக் கட்டணம்முழுமையாக வழங்குவது போல்அவர்கள்செலுத்தும் கற்பிப்புக் கட்டணம் மற்றும்சிறப்புக் கட்டணம் ஆகியவற்றைபள்ளிமேற்படிப்பு உதவி திட்டத்தின் கீழ்முழுமையாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அரசு துறைகளால் உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணங்களை உடனடியாகபிற்படுத்தப்பட்டோர்மிகவும் பிற்படுத்தப்பட்டோர்சீர்மரபினர் மாணவ,மாணவிகளுக்கு பள்ளி மேற்படிப்புஉதவி திட்டத்தின் கீழ் உயர்த்தி வழங்கவும்முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பொறியியல்மருத்துவம் போன்ற படிப்புகளுக்கு அரசின் ஒதுக்கீட்டின்கீழ்தேர்வு செய்யப்படும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட,சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்விகட்டணம் உயர்த்தும் போது கல்வி உதவிதொகையும்உயர்த்தி வழங்குவதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பால்74ஆயிரத்து 181 மாணவர்கள் பயன்பெறுவார்கள்மேலும்,பிற்படுத்தப்பட்டோர்மிகவும் பிற்படுத்தப்பட்டோர்சீர்மரபினர்நலத்துறைகளின்கட்டுப்பாட்டில் இயங்கும் விடுதிகளிலும்மதுரைதிண்டுக்கல்,தேனி மாவட்டங்களில்இயங்கி வரும் கள்ள சீரமைப்பு பள்ளிகளில் பயிலும் 10 மற்றும்12 ஆம் வகுப்புமாணவர்களுக்கு இலவச வழிகாட்டி நூல்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதே போன்றுபெரம்பலூர்சிவகங்கைதிருவண்ணாமலைவிழுப்புரம்தருமபுரி,திண்டுக்கல்கிருஷ்ணகிரி மற்றும் கடலூர் ஆகிய மிகவும் பின் தங்கியமாவட்டங்களில்பயிலும் அனைத்து அரசு மற்றும் உதவிபெறும் பள்ளியில் பயிலும் 10மற்றும் 12 ஆம்வகுப்பு மாணவர்களுக்கும் விலையில்லா வழிகாட்டி 

கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை

கடலூர், : கடலூர் மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளில் புழங்கு காலத்தை 1.1.13 முதல் 31.12.13 வரை நீட்டித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி குடும்ப அட்டைகளை புதுப்பிக்கும் பணி நியாய விலை கடைகளில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெற உள்ளது.

 எனவே குடும்பத்தலைவர் அல்லது வயது வந்த குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் நியாயவிலை கடைக்கு சென்று 2013ம் ஆண்டிற் கான உள்தாள் இணைப்பு பெற்று கொண்டு கடைகளில் பராமரிக்கப்படும் 2012ம் ஆண்டின் வழங்கல் பதிவேட்டில் கையொப்பமிட்டு அல்லது இடது கை பெருவிரல் ரேகை பதிக்க கேட்டு கொள்ளப்படுகிறது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சுழற்சி முறையில் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குடும்ப அட்டை களை புதுப்பிக்க நியாய விலை கடை பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனு டைய விபரம் அந்தந்த நியாயவிலைக் கடைகளில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. தங்களுக்குரிய நாளில் நியாயவிலைக் கடைகளுக்கு சென்று குடும்ப அட்டைகளை புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

டிசம்பர் 27, 2012

வீராணம் ஏரியில் தண்ணீர் திறக்க கோரி சாலை மறியல்

வீராணம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது. எனவே கடந்த மாதம் 24-ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. இதனால் காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, பரங்கிப்பேட்டை, சிதம்பரம், குமராட்சி,லால்பேட்டை உள்ளிட்ட கடைமடை பகுதியில் சம்பா பயிர்கள் நீர் வசதியின்றி வாடத்தொடங்கின.

அதையடுத்து காட்டு மன்னார்கோவிலை அடுத்த லால்பேட்டை பொதுப் பணித்துறை அலுவலகம் முன்பு இன்று விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்துக்கு விவசாய சங்க தலைவர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் இளங்கீரன், பிரகாஷ், பார்த்தீபன் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். சாலை மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

உடனே அந்த பகுதிக்கு துணை ஆட்சியர் சுப்ரமனியன்  துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகசாமி, காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார், தாசில்தார் தில்லைகோவிந்தன், பொதுப்பணித்துறை அதிகாரி வளர்மதி ஆகியோர் விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் விவசாயிகள் சாலை மறியலை கைவிட மறுத்தனர். அதையடுத்து லால்பேட்டை, சிதம்பரம், காட்டுமன்னார்குடி, சென்னை சாலை பகுதியில் 3 மணி மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்படது.
-lalpet.net

இஸ்லாமிய சட்டத்தை நோக்கி இந்தியா!



டிச,27: விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவரும் தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும். [அல்குர்-ஆன் 24 : 2]


திருமணம் முடித்த ஒர் நபர் விபச்சாரம் செய்ததற்காக அவருக்கு மரண தண்டணை வழங்கச் சொல்லி நபிகளார் உத்தரவிட்டார்கள் (புகாரி : 6828 ஹதீஸின் கருத்து)

குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளை வழங்கினால்தான் குற்றங்கள் குறையும் என்பதும், அப்போதுதான் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சரியான நீதி கிடைக்கும் என்பதும்தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு.

குற்றச் செயல்களுக்கு திருக்குர்-ஆன் கூறும் தண்டனைகளை அதிமேதாவிகளும், அறிவுஜீவிகள் என்று தங்களைச் சொல்லிக்கொள்வோரும் விமர்சனம் செய்து வந்தனர். திருடியவர்களுக்கு கையை வெட்டுதல், விபச்சாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு கசையடி மற்றும் கல்லால் எறிந்து அவர்களை கொலை செய்யும் சட்டங்கள், கொலைக்குக் கொலை, கண்ணுக்கு கண், பல்லுக்குப்பல் என்று இஸ்லாம் கூறும் தீர்வுகள் காட்டுமிராண்டித்தனமானவை. 

அவைகள் மனித நேயத்திற்கு எதிரானவை. இஸ்லாம் வழங்கச் சொல்லும் தண்டனைகள் மனிதத்தன்மை அற்றவை. இந்தச் சட்டங்களை பின்பற்றச் சொல்லிவரும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஈவுஇரக்கமற்றவர்கள்; பழமைவாதிகள்; அடிப்படைவாதிகள்; பிற்போக்குவாதிகள் என்று குற்றச்சாட்டுக்களை அள்ளிவீசினர் இந்த அதிமேதாவிகள்.

எந்த நாவினால் இஸ்லாத்தைக் குறைகூறினார்களோ! எந்த நாவு இந்த சட்டங்களெல்லாம் மனிததன்மையற்ற செயல்கள் என்று சொன்னதோ அதே நாவுகள் இப்போது இஸ்லாம் கூறும் இத்தகைய சட்டங்கள்தான் தற்போது வேண்டும் என்று சொல்கின்றன. வல்ல இறைவன் அவர்களை அவ்வாறு சொல்லவைத்துள்ளான்.

டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி பாலியல் பலாத்காரம்:

கடந்த 16.12.12 அன்று இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் தனது ஆண் நண்பருடன் நள்ளிரவில் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு திரும்பினார். அவர்கள் இருவரும் கதவுகள் மூடப்பட்ட சொகுசுப்பேருந்தில் பயணித்தனர். 

அப்போது அந்த 23 வயது மருத்துவக்கல்லூரி மாணவியின் ஆண் நண்பரை தாக்கிய ஐந்து பேர் கொண்ட கும்பல் அதே பேருந்தில் இருந்த அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது. இதைத் தடுக்க முயன்ற அவரது நண்பரை அந்தக் கும்பல் அடித்து தூக்கி வெளியே வீசி விட்டது.

பின்னர் அந்தப் பெண்ணை அரை நிர்வாண கோலத்தில் ஒரு பாலத்தில் வீசிச் சென்றுள்ளது. அப்பெண் தற்போது அபாயகரமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களில் பேருந்து ஓட்டுநரும் அடக்கம்.

தற்போது இந்தப் பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை தூக்கில் போடவேண்டும் என இந்தியா முழுவதுமுள்ள அனைவரும் ஒருமித்து குரல் எழுப்பியுள்ளார்கள். போராட்டங்கள் வெடித்துள்ளன. 

அந்தப் பெண்ணை கற்பழித்த கயவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்று மாதர் சங்க அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. மேலும் இவ்வாறு அவர்களுக்கு வழங்கப்படும் தூக்குதண்டனையை அனைவரும் காணும் வகையில் நிகழ்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் போராட்டத்தில் குதித்த மாணவிகள் வைத்துள்ளனர்.

இஸ்லாமிய சட்டத்தை கொண்டு வரச் சொல்லும் பா.ஜ.க:

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த சம்பவத்தைப்பற்றி நீண்ட நேரம் விவாதம் நடந்துள்ளது. நாடாளுமன்ற அவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவராக உள்ள பா.ஜ.க.வைச் சேர்ந்த சுஷ்மா சுவராஜ், மாணவியை பலாத்காரம் செய்த இளைஞர்களை தூக்கிலிட வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளார். அதே கோரிக்கையை அ.தி.மு.க சார்பில் மைத்ரேயன் வைத்துள்ளார்.

எந்தவிதமான எதிர்ப்புமின்றி அனைத்து கட்சி உறுப்பினர்களும் இந்தக் கோரிக்கையை வரவேற்றுள்ளனர். உள்துறை அமைச்சர் ஷிண்டேவும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவது குறித்து

டிசம்பர் 24, 2012

வீராணம் ஏரியை திறக்க கோரி விவசாயிகள் மறியல் போராட்டம்

காட்டுமன்னார்கோவில்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், குமராட்சி உள்ளிட்ட பகுதிகளின் விவசாயிகள் வீராணம் ஏரி மூலம் சுமார் 4500 ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றனர். இந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறையால் வீராணம் ஏரி தாமதமாக திறக்கப்பட்டது. அதனால் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பை தாமதமாக தொடங்கினர். இந்நிலையில் ஏரியில் கொள்ளளவு குறைந்ததால் ஏரி மூடப்பட்டது. இதனால் தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் கருகி வந்தன.

வழக்கமாக ஆண்டுக்கு 4 முறை ஏரி நிரம்பும், ஆனால் அந்த ஆண்டு 1 முறை கூட நிரம்ப வில்லை. இந்நிலையில் விவசாயத்திற்கு தண்ணீர் தராமல் சென்னைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. ஆகையால் வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நெய்வாசல், திருநாரையூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் சிதம்பரம்-காட்டுமன்னார்கோவில் சாலையில் உள்ள லால்பேட்டை பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த பொதுப்பணித்துறை அலுவலர் தில்லை கோவிந்தன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் இன்று இரவு 8 மணிக்குள் விவசாயத்திற்கு வீராணம் ஏரி திறக்கப்படவில்லை என்றால் மீண்டும்

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி டெல்டா விவசாயிகளுக்கு டீசல் மானியம்

கடலூர்: காவிரி டெல்டா சம்பா சாகுபடி விவசாயிகள் டீசல் மானியம் பெற விண்ணப்பங்கள் அளிக்கலாம் என கடலூர் மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ்குமார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காவிரி டெல்டா பகுதியில் சம்பா நெல்சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட சிறப்பு தொகுப்பு திட்டமானது தற்போது கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் உள்ள டெல்டா பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தமிழக முதல்வரால் டெல்டா பாசன நெல் விவசாயிகளுக்கு உதவும் வகையில் கூடுதல் சிறப்பு தொகுப்பு திட்டத்தையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டெல்டா சம்பா நெல்சாகுபடி விவசாயிகள் பாசனத்திற்காக டீசல் பம்ப் உபயோகப்படுத்தினால் டீசலுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளது. ஏக்கருக்கு ரூ.600 வீதம் அதிக பட்சமாக ஒரு விவசாயிக்கு 5 ஏக்கர் பரப்பளவிற்கு ரூ. 3 ஆயிரம் மானியமாக வேளாண்மை பொறியியல் துறை மூலம் வழங்கப்படும். எனவே டீசல் பம்ப் செட்டினை சொந்தமாகவோ அல்லது வாடகையாகவோ பயன்படுத்தி பாசனம் செய்யலாம். எனவே டீசல் பம்ப் மூலம் பாசனம் மேற்கொள்ளும் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் உள்ள டெல்டா நெல் விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மைத்துறை

பாலியல் வன்கொடுமைக்கு மரணதண்டனை: மத்திய அரசு ஆலோசனை !

பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கும் வகையில்,குரூரமான பாலியல் வன்முறை குற்றவாளிகளுக்கு மரணதண்டனை பெற்றுத்தரும் வகையில் சட்டங்கள் கொண்டுவர ஆலோசிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தள்ளது. டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதிகேட்டு நடக்கும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.டெல்லியில் 6 வது நாளாக நேற்றும் போராட்டம் நடைபெற்றது.

இந்தியா கேட் முன்பு கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பின்னர் ஊர்வலமாக ஜனாதிபதி மாளிகை நோக்கிச்சென்றனர். காவல்துறையின் தடுப்புகளை மீறிச் சென்ற மாணவ - மாணவிகள், ஒருகட்டத்தில் ஜ்னாதிபதி மாளிகையை ஒட்டிய சுற்றுச்சுவரில் ஏற முயற்சித்தனர்.ஆனால் ஜனாதிபதியை சந்தித்து முறையிட மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு முழக்கம் எழுப்பிய அவர்கள், காவல்துறையினர் எச்சரித்தும் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை.இதனையடுத்து காவல்துறை வாகனங்களை மாணவர்கள் தாக்கத்தொடங்கியதால்,தண்ணீரைப் பீய்ச்சி அடித்து மாணவர்களை கலைக்க நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, தடியடி நடத்தத் தொடங்கினர். மேலும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் காவல்துறையினர் வீசி எறிந்தனர். காவல்துறையினரின் தடியடியில் ஒரு சில மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். இருப்பினும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதிகேட்கும் மக்களின் போராட்டம் தொடர்ந்தது.

 மரண தண்டனை : இந்நிலையில் டெல்லி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய குற்றவாளிகள் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே அறிவித்துள்ளார். கைதாகியுள்ள அனைத்து குற்றவாளிகளுக்கும் தண்டனை பெற்றுத் தருவதற்கு போதுமான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும்,விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். மாணவி பாலியல் வன்முறையின் பின்னணி குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும். பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்.குரூரமான பாலியல் வன்முறைகளை அரிதினும் அரிதான குற்றங்களாகக் கருதி மரணதண்டனை பெற்றுத்தரும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஆலோசிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: முதலமைச்சர் ஆதரவு
    பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் ஏற்பட்டிருக்கும் உணர்வுக்கு மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுகான் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது இல்லத்தில் குழந்தைகளுடன் நடைபெற்ற சந்திப்பு நிகழ்ச்சியின் போது அவர் கூறியதாவது:- பாலியல் வழக்குகளை விரைவாக

டிசம்பர் 23, 2012

பூரண மதுவிலக்கு! ஓர் இஸ்லாமிய அணுகுமுறை!



மனித வாழ்வைச் சீரழிக்கும் நச்சுப் பொருட்களில் மது முக்கிய பங்கு வகிக்கிறது. மதுவினால் ஏற்படும் தீமைகளை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. உடலுக்கும், வீட்டிற்கும், நாட்டிற்கும் பெரும் கேடாக விளங்கும் மது என்ற விஷம் மனிதனுக்கு உகந்ததல்ல என்ற உண்மையைப் படித்தவர்களும், படிக்காத பாமரர்களும் அறிந்தே வைத்திருக்கிறார்கள். 

மதுவை ஒழிப்பதற்காக காந்தி எவ்வளவோ பாடுபட்டார். ஆங்கிலேயர் ஆட்சியில் கள்ளுக்கடை மறியல் என்ற போராட்டத்தை அறிவித்து போதைப் பொருளுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். இந்தப் போராட்டம் வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்ச்சியாகவும் இடம் பெற்றுள்ளது. எத்தனையோ சமூக ஆர்வலர்களும், மக்கள் நல இயக்கங்களும் இதற்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றாலும் மதுவை மக்கள் மனதிலிருந்து தூக்கி எறிவதற்கு இவர்களால் முடிவதில்லை. 

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் திருந்த வேண்டும் என்று நினைத்தாலும் அவர்களால் மதுவை விட்டுவிட முடிவதில்லை. எனவேதான் போதைக்கு அடிமையானவர்கள் இந்தக் குடிப்பழக்கத்தை மறக்க மருத்துவமனைகளை நாடிச்செல்கின்றனர். சில மருத்துவர்கள் பிரத்யேகமாக இந்தப் பிரச்சனைக்கு மாத்திரம் மருத்துவம் செய்ய முன் வருகிறார்கள். எவ்வளவு மருத்துவமனை பெருகினாலும் மது ஒழிந்தபாடில்லை. நாளுக்கு நாள் மதுக்கடைகளும், மதுப் பிரியர்களும் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறார்கள்.

 திருக்குர்ஆன் செய்த மருத்துவம் 

குடிப்பதையே வாழ்க்கையாகக் கொண்டு,எழுத்தறிவில்லாமல் காட்டு மிராண்டிகளைப் போல் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சமுதாயம் தன் கையாலே மது பேரல்களை உடைத்தெறியும் அளவிற்குப் பெரும் மறுமலர்ச்சி ஒன்று அரபு தேசத்தில் உருவானது.அரபியர்களிடத்தில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சிக்குக் குர்ஆன் அவர்களுக்கு அளித்த அற்புத பயிற்சியே காரணம். இந்தப் பயிற்சி தான் அவர்களுக்கு மதுவின் மீது இருந்த மோகம் செல்வதற்கு சிறந்த மருந்தாக இருந்தது.

எடுத்த எடுப்பிலேயே மதுவை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று குர்ஆன் கட்டளையிடவில்லை. மதுவை ஒழிப்பதற்காக வேறுபட்ட காலகட்டங்களில் வௌ;வேறு கோணங்களில் மதுவைப் பற்றி குர்ஆன் மக்களுக்கு எச்சரித்தது. மது நல்ல பொருள் அல்ல என்ற கருத்தை முதலில் குர்ஆன் மறைமுகமாக முன்வைத்தது. 

அல்லாஹ் தன் திருமறையில்... 

பேரீச்சை மற்றும் திராட்சைக் கனிகளிலிருந்து மதுவையும், அழகிய உணவையும் தயாரிக்கிறீர்கள். விளங்கும் சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது. [அல்குர்ஆன் 16:67]

இந்த வசனம் மது தடை செய்யப்படுவதற்கு முன்னால் இறங்கிய வசனம். இந்த வசனத்தில் இறைவன் உணவு மற்றும் மது ஆகிய இரண்டையும் பற்றிப் பேசுகிறான். இதன் பிறகு மதுவில் கேடுதான் அதிகமாக இருக்கிறது என்று திருக்குர்ஆன் தெளிவாக உணர்த்தியது என்றாலும் மதுவைப் புறக்கணிக்கவேண்டும் என்ற கட்டளையை குர்ஆன் இப்போதும் இடவில்லை. 

மது மற்றும் சூதாட்டம் பற்றி (முஹம்மதே) உம்மிடம் கேட்கின்றனர்.அவ்விரண்டிலும் பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும்,மறுமையிலும் மிகப் பெரியது எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 2:219) 

இதன் பிறகு தொழுகைக்கு வரும் போது போதையுடன் வரக்கூடாது என்று குர்ஆன் கட்டளையிட்டது.ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுவது கடமையாக்கப் பட்டுள்ளது.தொழுகைக்கு போதையில்லாமல் வர வேண்டுமென்றால் குறைந்தது தொழுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாவது மது அருந்தாமல் இருக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு ஐந்து முறை கடைப்பிடிக்கும் போது எப்போதும் போதையில் திளைத்தவர்கள் சிறந்த பயிற்சிக்கு உட்படுத்தப்படுவார்கள். போதையின்றி வாழ்வதற்குப் பழகிக் கொள்வார்கள். எனவேதான் நுட்பமான நுண்ணறிவு படைத்த இறைவன் மதுவை முற்றிலும் தடுத்து விடாமல் தொழுகை நேரத்தில் மட்டும் 
அருந்த வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்தான். 

நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு  நெருங்காதீர்கள்! (அல்குர்ஆன் 4:43) இந்த வசனம் இறங்குவதற்கு பின்வரும் சம்பவம் காரணமாக இருந்தது.
அலீ (ரலி) மற்றும் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்(ரலி) ஆகிய இருவரையும் அன்சாரி குலத்தைச் சார்ந்த ஒருவர் விருந்துக்கு அழைத்திருந்தார். அவ்விருவருக்கும் மதுவைக் குடிக்கக் கொடுத்தார்.(இச்சம்பவம்) மது தடை செய்யப்படுவதற்கு முன்பு (நடந்தது). அலீ(ரலி) அவர்கள் (போதையுடன்) குல் யா அய்யுஹல் காஃபிரூன் என்ற சூராவை ஓதி மக்களுக்கு மஃரிப் தொழ வைத்தார். (போதையின் காரணத்தினால்) தொழுகையில் தவறுதலாக ஓதி விட்டார். அப்போதுதான் (மேற்கூறப்பட்ட) அல்குர்ஆன் 4:43 வசனம் இறங்கியது அறிவிப்பவர்: அலீ(ரலி) நூல்: அபூதாவூத் (3186) 

இறுதிக் கட்டமாக மதுவை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று குர்ஆன் கட்டளையிட்டது. 

ம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள் ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! மது மற்றும் சூதாட்டம் மூலம் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்குர்ஆன் 5:90) 

எத்தனையோ சட்டங்கள் ஏட்டளவில் இருக்கின்றன. மக்களில்; எவரும் இந்தச் சட்டங்களை மதிப்பதும் இல்லை. பொருட்படுத்துவதும் இல்லை. ஏனென்றால் யாருமே கடைப்பிடிக்க முடியாத அளவிற்கு மிகக் கடினமாக இச்சட்டங்கள்

டிசம்பர் 19, 2012

டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியாது!


வரக்கூடிய டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியப்போகின்றதா? என்ற கேள்விக்குறியோடு பத்திரிக்கைகளும், தொலைக்காட்சி செய்தி சேனல்களும் ஏற்படுத்திய பீதிதான் தற்போது முக்கிய இடத்தைப் பிடித்த பரபரப்பு செய்தி.



டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியும் என்று சொல்கின்றார்களே! இவர்கள் சொல்லும் இந்த கட்டுக்கதை உண்மையில் சாத்தியமா? அவ்வாறு எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் செய்திகளை யாராவது சொல்ல இயலுமா என்ற சிந்திக்கும் திறனை இவர்கள் இழந்ததுதான் இத்தகைய செய்திகளை இவர்கள் வெளியிடுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

மறைவான விஷயங்களை எவராலும் அறிய இயலாது :
நாளை என்ன நடக்கவுள்ளது?. அடுத்த நிமிடம் என்ன நடக்க இருக்கின்றது? என்பதை அறியும் ஆற்றல் எந்த மனிதருக்கும் இல்லை. இதை சிந்திக்கும் திறன் படைத்த யாரும் விளங்கிக்கொள்ளலாம். அப்படி இருக்கும்போது டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியப்போகின்றது என்ற செய்தி எப்படி மற்ற மனிதர்களுக்குத் தெரியும் என்ற சாதாரண சிந்தனைத்திறன் இருந்தாலே இது மிகப்பெரிய கட்டுக்கதை என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
வல்ல இறைவன் தனது திருமறையில் கூறிக்காட்டுகின்றான்:
யுக முடிவு நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.  [அல்குர்-ஆன் 31 : 34]

மேற்கண்ட ஐந்து விஷயங்களையும் படைத்த இறைவனைத்தவிர வேறு யாராலும் அறிந்து கொள்ள இயலாது.
மற்றொரு இடத்தில் அல்லாஹ் சொல்லிக்காட்டுகின்றான்:
(முஹம்மதே) யுக முடிவு நேரம் பற்றி அது எப்போது ஏற்படும்? என உம்மிடம் கேட்கின்றனர். அது பற்றிய விளக்கம் உம்மிடம் எங்கே இருக்கிறது? அதன் முடிவு உமது இறைவனிடமே உள்ளது. அதை அஞ்சுவோருக்கு நீர் எச்சரிப்பவரே.
அல்குர்-ஆன் 79 : 42முதல் 45வரை
மறைவான செய்திகளை தனது தூதர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்திருக்கின்றான். அப்படி சில மறைவான செய்திகளை தனது தூதருக்கு அறிவித்துக் கொடுத்த இறைவன், தனது தூதருக்குக் கூட உலக அழிவு நாள் எப்போது வரும் என்ற செய்தியை அறிவித்துத்தரவில்லை என்றால் வேறு எந்த மனிதருக்காவது இந்த செய்தியை அறிந்து கொள்ள இயலுமா?
அதுமட்டுமல்லாமல், வல்ல இறைவன் தனது திருமறையில் கூறியிருக்கக்கூடிய முன்னறிவிப்புகளின் அடிப்படையிலும், நபிகளார் கூறிக்காட்டியுள்ள முன்னறிவிப்பின் படியும் உலக முடிவு நாள் என்பது இரண்டு மூன்று நாட்களில் நடந்து முடிந்துவிடாது. அது வருவதற்குண்டான சில அடையாளங்களை அல்லாஹ்வும், அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொல்லிச் சென்றுள்ளார்கள். எண்ணற்ற சிறிய அடையாளங்களும், மாபெரும் பத்து அடையாளங்களும் நிகழாதவரை உலக அழிவுநாள் ஏற்படாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்
அந்த பத்து அடையாளங்களாவன :
1 – புகை மூட்டம்
2 – தஜ்ஜால்
3 – ஈஸா நபியின் வருகை
4 – யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை
5 – அதிசயப் பிராணி
6 – மேற்கில் சூரியன் உதிப்பது
7, 8, 9 – மூன்று பூகம்பங்கள்
10 – பெரு நெருப்பு
மேற்கண்ட பத்து அடையாளங்கள் நிகழாதவரை யுக முடிவு நாள் ஏற்படாது. (குறிப்பு : உலக அழிவு நாள் ஏற்படப்போவதற்கு முன் நடக்கும் நிகழ்வுகள் குறித்தும், அது குறித்த முழுமையான முன்னறிவிப்புகள் குறித்தும் முழுவதுமாக அறிய விரும்புவோர் சகோதரர் பீஜே அவர்கள் எழுதியுள்ள “கியாமத் நாளின் பத்து அடையாளங்கள்” என்ற நூலை பார்வையிடவும்)
இவை அனைத்தும் நிகழ்வதற்கு முன்பாகவே உலக அழிவு நாள் ஏற்படும் என்று யாரேனும் சொன்னால் அவர் பொய்யர் என்று சந்தேகத்திற்கு இடமில்லாமல் சொல்லிவிடலாம்.
டிசம்பர் 21ஆம் தேதிக்குப்பிறகும் உலகம் அழியாமல் இருக்கும் எனபதே உண்மை. இந்த அறிவு இல்லாமல் மக்களிடம் பீதியைக் கிளப்பி ஊடகங்கள் பரபரப்பை ஏற்படுத்தி காசு பார்க்கின்றன.
மாயன் காலண்டர் என்னும் மடத்தனமான காலண்டர்:
டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியப்போகின்றது என்பதற்கு இவர்கள் சொல்லும் காரணம்தான் மிகவும் வேடிக்கையானது. மாயன் காலண்டர் எனும் காலண்டர் பிரகாரம் 2012ஆம் ஆண்டின் டிசம்பர் 21ஆம் தேதியுடன் உலகம் அழிந்துவிடும் என்பதுதான் அவர்கள் கூறும் வேடிக்கையான காரணம்.
அது என்ன மாயன் காலண்டர்?:
கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், மாயா என்றோர் இனம் தென்அமெரிக்காவில் இருந்ததாம். மாயா இனத்தைச் சேர்ந்த​வர்கள் வானவியல் சாஸ்திரங்களிலும், கட்டடக் கலையிலும், கணித சூத்திரங்களிலும் கைதேர்ந்தவர்களாக இருந்தனராம். அதற்கு ஒரே சாட்சிதான் மாயன் காலண்டராம்.
தென்அமெரிக்காவில் வாழ்ந்த மாயா சமூகத்து மக்கள் பயன் ​படுத்திய காலத்தின் கணக்கு முறைகளைக் கொண்டு இந்தக் காலண்டர் உருவாக்கப்பட்டதாம். கி.மு. 3113 தொடங்கி கி.பி. 2012 டிசம்பர் 21-ம் தேதி மாயன் காலண்டர் முடிவுக்கு வருகிறது. அதற்கு பிறகு அந்த காலண்டரில் தேதிகள் இல்லையாம். வான சாஸ்திரங்களைக் கரைத்துக் குடித்த(?) மாயா இனத்தைச் சேர்ந்தவர்கள், 2012-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதியுடன் காலண்டரை முடித்துக் கொள்ள என்ன காரணம்? “அதற்குப் பிறகு இந்த உலகமே இருக்காது என்பதுதான் மாயன் காலண்டர் சொல்லும்

டிசம்பர் 18, 2012

10-12- ஆம் வகுப்பு காலாண்டு தேர்வு தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் நாளை தொடக்கம்

சென்னை, டிச. 18- அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவர அரசு தேர்வுத்துறை முடிவு செய்தது. தேர்வு பயம் இல்லாமல் பொதுத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக காலாண்டு, அரை ஆண்டு தேர்வுகளையும் பொதுத் தேர்வுபோல நடத்த திட்டமிட்டு நடத்தப்படுகிறது.

 தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒரே நேரத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகள் நடத்தப்படுகிறது. அரசு தேர்வுத்துறை தயாரித்துள்ள வினாத்தாள்களை எல்லா பள்ளி மாணவர்களுக்கும் வழங்கி இந்த தேர்வு நடத்தப்படுகிறது. பொதுத்தேர்வு போலவே காலாண்டு, அரையாண்டு தேர்விற்கும் வினாத்தாள் படிக்க 10 நிமிடமும், விடைத்தாளில் பதிவு எண் போன்ற விவரங்களை எழுத 5 நிமிடமும், மொத்தம் 15 நிமிடம் அவகாசம் அளிக்கப்படுகிறது. 10-ம் வகுப்பு தேர்வு 2 1/2 மணி நேரமும், பிளஸ்-2 தேர்வு 3 மணி நேரமும் நடக்கிறது. தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வுகள் நாளை தொடங்குகிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு 19-ந்தேதி தொடங்கி ஜனவரி 7-ந்தேதி வரை நடைபெறுகிறது. இடையில் 23-ந்தேதி முதல் 1-ந்தேதி வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை விடுமுறை விடப்படுகிறது.

 பிளஸ்-2 தேர்வு நாளை தொடங்கி ஜனவரி 10-ஆம் தேதி வரை நடக்கிறது. வருகிற 22-ஆம் தேதி வரை தொடர்ந்து நடக்கும் தேர்வுக்கு பிறகு 23-ஆம் தேதி முதல் 1-ஆம் தேதி வரை விடுமுறை விடப்படுகிறது. அதைத் தொடர்ந்து 2-ஆம் தேதி தொடங்கும் தேர்வு 10-ஆம் தேதி முடிகிறது. பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வை 10 லட்சத்து 75 ஆயிரம் பேரும், பிளஸ்-2 தேர்வை 9 லட்சம் பேரும்

சம்ஜோதா எக்ஸ்பிரஸ்:மேலும் ஒரு ஹிந்துத்துவா பயங்கரவாதி கைது!

புதுடெல்லி:2007-ஆம் ஆண்டு 68 பேரின் மரணத்திற்கு காரணமான சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான டான்சிங்கை மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கைது செய்துள்ளது. ரகசியமாக கிடைத்த தகவலின் அடிப்படையில் டான்சிங்கை என்.ஐ.ஏ கைது செய்துள்ளது.

 2008-ஆம் ஆண்டு நடந்த மலேகான் குண்டுவெடிப்பு வழக்கிலும் டான்சிங்கிற்கு தொடர்பிருப்பதாக என்.ஐ.ஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுவாமிஜி என்ற போலி பெயரில் டான்சிங் அப்பகுதியில் தங்கியிருந்துள்ளான். சம்ஜோதா எக்ஸ்பிரஸில் குண்டுவைத்த முக்கிய குற்றவாளியான ஹிந்துத்துவா பயங்கரவாதி ராஜேந்தர் சவுதரியை மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜையினில் இருந்து கடந்த 15-ஆம் தேதி என்.ஐ.ஏ கைது செய்திருந்தது. இவனுக்கு ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கிலும் தொடர்பிருப்பதாக என்.ஐ.ஏ தெரிவித்தது. ஹரியானாவில் உள்ள பஞ்ச்குலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சவுதரியை என்.ஐ.ஏ 12 தினங்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி பெற்றுள்ளது. இவ்வழக்கில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளான கமல் சவுகான், சுவாமி அசிமானந்தா, லோகேஷ் சர்மா

கடலூர் மாவட்டத்தின் 14–வது கலெக்டராக ஆர்.கிர்லோஷ்குமார் பதவி ஏற்றார்

கடலூர் மாவட்ட புதிய கலெக்டராக நேற்று பதவி ஏற்ற ஆர்.கிர்லோஷ்குமார், ‘பொதுமக்களின் குறைகளை விரைவாக தீர்க்க முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவேன்‘ என உறுதியளித்தார்.. புதிய கலெக்டர் கடலூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றிய ராஜேந்திரரத்னூ திடீரென மாற்றப்பட்டு வணிகவரித்துறை இணைக்கமிஷனராகவும், அப்பதவியில் இருந்த ஆர்.கிர்லோஷ்குமார்(வயது36) கடலூர் மாவட்ட கலெக்டராகவும் மாற்றப்பட்டனர்.

 இதைத்தொடர்ந்து கடலூர் மாவட்ட புதிய கலெக்டராக ஆர்.கிர்லோஷ்குமார் பதவி ஏற்கும் நிகழ்ச்சி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மதியம் 12–30 மணிக்கு நடந்தது. அங்கு புதிய கலெக்டராக ஆர்.கிர்லோஷ்குமார் பதவி ஏற்றுக்கொண்டார். அவரிடம் பணிமாறுதலாகி செல்லும் ராஜேந்திரரத்னூ பொறுப்புகளை ஒப்படைத்து விடைபெற்றார். மகிழ்ச்சி அடைகிறேன் புதிய கலெக்டராக பதவி ஏற்ற ஆர்.கிர்லோஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:– கடலூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பு ஏற்றதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு முன்பு கலெக்டராக இருந்த ராஜேந்திரரத்னூ எனது நெருங்கிய நண்பர். நானும் அவரும் ஒரே ஆண்டில் ஐ.ஏ.எஸ். பணிக்கு தேர்வு செய்யப்பட்டோம். அவர் ஏறத்தாழ 5 ஆண்டுகள் கடலூர் மாவட்டத்தில் நல்ல முறையில் பணியாற்றியிருக்கிறார். அரசின் திட்டங்களை வேகமாக அமல்படுத்துவதற்கும், மக்களின் குறைகளுக்கு விரைவாக தீர்வு காண்பதற்கும் முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவேன்.‘ இவ்வாறு கலெக்டர்

டிசம்பர் 16, 2012

சோவியத் யூனியன் போன்ற வீழ்ச்சி அமெரிக்காவை காத்திருக்கிறது – கார்பச்சேவ்!

அங்காரா:உலக போலீஸ் வேடமணிந்து திமிரான கொள்கைகளை பின்பற்றினால் சோவியத் யூனியன் போலவே அமெரிக்காவும் உடைந்து போகும் என்று முன்னாள் ரஷ்ய அதிபர் மிக்காயேல் கார்பச்சேவ் கூறியுள்ளார். மேற்காசியா மற்றும் கருங்கடல் பகுதியின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இஸ்தான்புல்லில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார் கார்பச்சேவ். அவர் தனது உரையில் கூறியது:தொடர்ச்சியாக செய்த தவறுகளின் மூலமே சோவியத் யூனியன் உடைந்து போனது. இந்த முட்டாள் தனத்தை அமெரிக்காவும் பின்பற்றினால்சோவியத்தின் கதிதான் ஏற்படும்.

ஆட்சியில் இருக்கும் பொழுது இஸ்லாமிய பண்பாடுகளை அழிக்கவே சோவியத் ஆட்சியாளர்கள் முயன்றனர். பனிப்போர் காலத்தில் உலக சக்திகள் மதங்களை ஆயுதமாக பயன்படுத்தினர். சோவியத் யூனியனின் ஆப்கான் ஆக்கிரமிப்பு மன்னிக்க முடியாத குற்றமாகும். அமெரிக்கா தற்போது அந்த தவறை தொடர்கிறது. இவ்வாறு கார்பச்சேவ் கூறினார்.
-thoothuonline

டிசம்பர் 15, 2012

சிதம்பரம் பகுதியில் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை

சிதம்பரம், : சிதம்பரம் புறவழிச்சாலையில் விபத்தை ஏற்படுத்தும் மெகா சைஸ் பள்ளங்களால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சிதம்பரம் பகுதியில் நடராஜர் கோயில், புவனகிரி ராகவேந்திரர் கோயில், பரங்கிப்பேட்டை பாபாஜி கோயில், பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளிட்ட பல்வேறு கோயில்களும், சுற்றுலா மையமும் உள்ளது.

இதனால் சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை, சேலம், வேலூர், கடலூர் பகுதிகளில் இருந்தும் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவு சுற்றுலா பயணிகள் இந்த நகருக்கு வந்து செல்கின்றனர். சிதம்பரம் வரும் சுற்றுலா பயணிகள் அதன் அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோயில் உள்ளிட்ட நவகிரக கோயில்கள், வேதாரண்யம், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், கும்பகோணம், திருவாரூர் பகுதியில் உள்ள கோயிலை பார்ப்பதற்கு சிதம்பரம் புறவழிச்சாலை வழியாக செல்கின்றனர். இதனால் புறவழிச்சாலை எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது. இந்த சாலை புதிதாக போடப்பட்டு இருப்பதால் கார், வேன், பேருந்து ஓட்டுனர்கள் வேகமாக ஓட்டி செல்கின்றனர். இந்த புறவழிச்சாலையில் கண்ணங்குடி ரோடு செல்லும் இடத்திலிருந்து காட்டுமன்னார்கோயில் சாலை பிரியும் பகுதி வரை சுமார் 1 கிமீ தூரம் பல இடங்களில் சாலை பெயர்ந்தும், பெரிய பள்ளங்களும் உள்ளது. வேகமாக வரும் வாகனங்கள் இந்த இடத்தில் நிலை தடுமாறிவிடுவதால் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. வெளியூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு சாலையின் நிலை தெரியாததால் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடக்கிறது. அதிக உயிரிழப்பு ஏற்படும் முன் புறவழிச்சாலையை பராமரித்து வரும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக இந்த பகுதியை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  சிதம்பரம் நகரம் எப்போதும் போக்குவரத்து மிகுந்த சுற்றுலா நகரம். தினம்தோறும் இங்கு ஆயிரக்கணக்காண சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தென்மாவட்டத்தை சென்னையுடன் இணைக்கும் முக்கிய நகரமாக இது விளங்கி வருகிறது. சிதம்பரத்தில் இருந்து வல்லம்படுகை வரையிலான தேசிய நெஞ்சாலை போக்குவரத்து செல்லமுடியாத நிலையில் உள்ளது. மேலும் இந்த சாலையில் உள்ள ஏழு கம்மா மதகின் தடுப்புகள் உள்ளிட்ட 7 சிறுபாலங்களின் மதகுகளின் தடுப்புசுவர் இடிந்து விழுந்து விட்டது. இதனால் அதிகளவு விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. இது தேசிய நெடுஞ்சாலையாக இருந்தும் நிதிஆதாரம் இல்லை என்று காரணம் காட்டி சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படாமல்

இந்தியர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள்! சர்வே

லண்டன்: உலகிலேயே இந்தியர்கள்தான் நீண்ட ஆயுளுடன் வாழ்வதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு அவர்கள் ஆரோக்கியம் குறைகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல மருத்துவ பத்திரிக்கையான லான்செட், 5 ஆண்டுகளுக்கு மேல் இந்தியா உள்ளிட்ட 50 நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 நிறுவனங்களைச் சேர்ந்த 486 பேரைக் கொண்டு ஆயுட்காலம் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அதில் சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.

1970 ல் இருந்து 2010 ம் ஆண்டு வரை பிறந்தவர்களின் ஆயுள் காலத்தை கணக்கிடுகையில் சராசரியாக ஆண்களின் ஆயுள் 15 வருடங்களும், பெண்களின் ஆயுள் 18 வருடங்களும் அதிகரித்துள்ளது. உலகின் பிற நாட்டினரை விட இந்தியர்களின் ஆயுள் காலம் அதிகமாக உள்ளதாகவும், அவர்கள் 40 வயதிற்கும் மேல் வாழ்வதாகவும் சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 ஆரோக்கியம் குறைவு:
  இந்தியர்களின் ஆயுள் அதிகமாக இருந்தாலும் வயோதிக காலங்களில் குறைவான ஆரோக்கியத்துடனேயே வாழ்வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்திய ஆண்கள் தங்களின் ஆயுட்காலத்தில் 54.6 வயது வரை நல்ல ஆரோக்கியதுடன் இருப்பதாகவும், கடைசி 9 வருடங்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. இந்திய பெண்கள் தங்களின் 57.1 வருடங்கள் வரை நல்ல ஆரோக்கியமாக இருப்பதாகவும், தங்களின் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்துவதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது. பெண்கள் தங்களின் இறுதி 10 அல்லது 10.4 வருடங்கள் குறைவான ஆரோக்கியத்தை கொண்டுள்ளனராம். 

சுற்றுச்சூழல் மாசுபாடு:
 இந்திய வீடுகளில் எரிக்கப்படும் மரங்கள், கரிகள், சாணம் உள்ளிட்டவைகளே இந்தியர்களின் ஆரோக்கியத்திற்கு எதிராக

அரபு நாடுகளில் தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர நடவடிக்கை-வயலார் ரவி

அரபு நாடுகளில் போதிய ஆவணங்கள் இன்றி தங்கியுள்ள இந்தியர்களை தாய்நாட்டுக்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் வயலார் ரவி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மேல் சபையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்து மூலமாக பதிலளித்த வயலார் ரவி கூறியதாவது:- அய்க்கிய அரபு நாடுகளை சேர்ந்த குடியுரிமை துறை அதிகாரிகளின் பொது மன்னிப்பு முகாமையொட்டி, அங்கு விசா காலாவதியான பிறகும் தங்கியுள்ள இந்தியர்களின் விசாவை நீட்டிக்கவும், புது விசா பெறவும், தாய்நாட்டுக்கு வர விரும்புவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர அந்நாடுகளின் குடியுரிமை அதிகாரிகளுடன் இந்திய தூதரக அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். அங்கு வசிக்கும் இந்தியர்களை நீண்ட நேரம் வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர். சம்பளமும் சரியாக தரப்படுவதில்லை. வசிப்பிட வசதிகள் சரியில்லை என இந்திய தொழிலாளிகள் தொடர்ந்து தூதரகங்களில் புகார் அளித்து வருகின்றனர்.

 குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் இதைப் போன்ற 3,087 புகார்களும், சவுதி அரேபியாவில் 2,547 புகார்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஓமனில் 2,183, பக்ரைனில் 812, அபுதாபியில் உள்ள தூதரகத்தில் 491 புகார்கள் இந்தியர்களால் தூதரக அதிகாரிகளிடம்

டிசம்பர் 12, 2012

காட்டுமன்னார்கோவிலில் விவசாயிகளுக்கு சிட்டா வழங்க சிறப்பு ஏற்பாடு

கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசன பகுதிகளில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீர் இன்றி கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து காவிரி டெல்டா விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு பிரிமிய தொகையை அரசே செலுத்த முடிவு செய்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் இத்திட்டம் மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

 இத்திட்டத்தில் சேரும் விவசாயிகள் உரிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் சிட்டா மற்றும் அடங்கல் நகல்களை இணைத்து அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேற்று மாலைக்குள் அளிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் இணைய தள தொடர்பு மற்றும் மின்வெட்டு காரணமாக சிட்டா வழங்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் விண்ணப்பம் மற்றும் அடங்கலை இன்று (நேற்று) மாலைக்குள் பெற்று கொள்ளுமாறும். பின்னர் ஓரிரு நாட்களில் சிட்டாவை விவசாயிகளிடமிருந்து பெற்று கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.இதற்கிடையில் மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு போர் கால அடிப்படையில் சிட்டா வழங்க சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் கூடுதலாக தலா 5 இணையதள வசதியுடன் கூடிய கணினிகள் அமைக்கப்பட்டு சிட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது.

 கணினி இயக்குபவர், எழுதுபொருட்கள் மற்றும் ஜெனரேட்டர் வசதியும் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு உடனுக்குடன் சிட் டா வழங்கப்பட்டு வருகிறது. இன்று மாலை வரை சிட்டாக்கள்

காட்டுமன்னார்கோவிலில் மணிலா பயிரிட விவசாயிகள் ஆர்வம்

காட்டுமன்னார்கோவில், -: காட்டுமன்னார்கோவில் பகுதியில் பெரும்பாலானோர் விவசாயிகளே வசித்து வருகின்றனர். இங்குள்ள வடவாறு, வடக்கு ராஜன் வாய்க்கால், வீராணம் ஏரி ஆகியவை மூலம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. ஆனால் இந்தாண்டு தண்ணீர் பற்றாக்குறை காரணமாக நடவு செய்யப்பட்ட வயல்களில் நெற்பயிர்கள் காய்ந்து வருகின்றன. இதனால் விவசாய பணிகளுக்காக வாங்கிய கடன்களை செலுத்த முடியுமா என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். இதை கருத்தில் கொண்டு ஆழ்குழாய் கிணற்றுக்கு அருகே குறைந்த அளவே உள்ள புன்செய் நிலத்தில் மணிலா சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த ஆண்டு 40 கிலோ மூட்டை விதை மணிலாவை ரூ.2 ஆயிரத்துக்கு வாங்கி பயிர் செய்தனர். கடந்த ஆண்டு பயிர்செய்த மணிலா பயிர்கள் தானே புயலால் சேதம் அடைந்தது. இதன் காரணமாக மணிலா பயிர் பற்றாக்குறை ஏற்பட்டது. தற்போது ரூ.4 ஆயிரத்துக்கு மணிலா விதை வாங்கி விவசாயிகள் விதைப்பு பணியில் ஈடு பட்டுள்ளனர். வாடகைக்கு தண்ணீர் இறைத்தாவது மணிலா பயிரை காப்பாற்றி நெற்பயிருக்கு வாங்கிய கடனை அடைக்கலாம் என்ற எண்ணத்தில் விவசாயிகள்

2030-ஆம் ஆண்டு உலகின் தலைமையை இந்தியா,சீனா வகிக்கும் – அமெரிக்க புலனாய்வு அறிக்கை!

வாஷிங்டன்:அடுத்த 20 ஆண்டுகளில் ஆசியாவின் சக்திமிக்க நாடுகளான இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் கரங்களில் உலகின் தலைமை இருக்கும் என்று அமெரிக்க புலனாய்வு அறிக்கை கூறுகிறது. மேப்பிள் க்ராஃப்ட் என்ற சர்வதேச அமைப்பு நடத்திய ஆய்வின் முடிவுகளை உறுதிச் செய்கிறது அமெரிக்க புலனாய்வு அறிக்கை.

 2030-ஆம் ஆண்டில் உலகின் கட்டுப்பாடை சொந்தமாக்கும் திறனை நடுத்தர வர்க்க நாடுகள் பெற்றுவிடும் என்று அமெரிக்க நேசனல் இண்டலிஜன்ஸ் கவுன்சில் நடத்திய ஆய்வு அறிக்கை கூறுகிறது. உலகில் விரைவில் உருவாகும் மோதல் உணவுப் பொருட்களுக்காகவும், குடிநீருக்காகவும் நடக்கும். மேற்காசியாவும், ஆப்பிரிக்க நாடுகளும் இப்பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. உலகில் நடுத்தர வர்க்க மக்கள் தொகை 300 கோடியை தாண்டும். ஏழைகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்துவிடும். உணவுப்பொருட்கள் மற்றும் குடிநீரின் தட்டுப்பாடு, நுகர்வு சமூகமான நடுத்தர வர்க்கத்தினர் சந்திக்கும் மிகப்பெரிய சவாலாகும் என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் நடுத்தர வர்க்கத்தினரின் விழிப்புணர்வுக்கு காரணமாகும்.உலக மக்கள் தொகையில் கணிசமான தொகையினர் இந்நாடுகளில் உள்ளனர். இங்குள்ள பொருளாதார கட்டமைப்பில் இருந்து வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினர் கல்வி-சுகாதார துறையில் உயர்வு பெறுவர்.

இந்த சமூகத்தில் உள்ள பெண்கள், பொருளாதார பாதுகாப்பும், அதிகாரத்தை கையாளுபவர்களாகவும்

குப்பைக் கூடைக்குப் போன மதச்சார்பின்மை!

தமிழ்நாட்டில் தற்சமயம் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது.இந்த காய்ச்சல் ஏடிஸ் என்று சொல்லப் படுகின்ற கொசுக்கள் மூலமாக ஏற்படுகிறது.இந்த டெங்கு காய்ச்சலைத் தடுக்க வேண்டுமெனில் ஏடிஸ் கொசுக்களை ஒழிக்க வேண்டும் அல்லது கொசு கடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதையும் மீறி டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால் டெங்கு தடுப்பு கசாயம் மற்றும் மருந்துகளை உட்கொண்டு சிகிச்சை பெற வேண்டும். இது பகுத்தறிவுக்கு ஒத்தது. அறிவியலுக்கும் உட்பட்டது. ஆனால் தமிழக அரசு இந்த இரண்டுக்கும் ஒத்து வராத ஒரு கேலிகூத்தான செயலைச் செய்து டெங்கு காய்ச்சலுக்கு பரிகாரம் காண முயற்சித்துள்ளது.

 அது என்ன தெரியுமா? மதுரை அரசு மருத்துவமனை நிர்வாகம் சங்பரிவார அமைப்புக்களான விஸ்வ ஹிந்து பரிசத், பாரத் ஹெரிடேஜ் பவுண்டேசன், கோவர்த்தன் அறக்கட்டளை இந்து மாணவர் சங்கம், காஞ்சி சங்கராச்சாரியின் ஜன கல்யாண் ஆகியவற்றை இணைத்துக் கொண்டு மிருத்யஞ்சய யாகம், தன்வந்திரி யாகம் ஆகிய யாகங்களை மதுரை அரசு மருத்துவமனையின் 62-வது வார்டு மனநலப்பகுதி அருகே உள்ள காளியம்மன் கோவில் முன்பு வைத்து நடத்தியது. படம்: உணர்வு அதிகாலை 4 மணிக்கு துவங்கிய இந்த யாகம் 3 மணி நேரம் தொடர்ந்து நடந்தது. இந்த யாகங்களில் டாக்டர்கள், நர்ஸ்கள், பணியாளர்கள், நோயாளிகளின் உறவினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் 5 கலசங்களில் இருந்த நீரை எடுத்து டெங்கு காய்ச்சலுக்கான 4 சிறப்பு வார்டுகள் மற்றும் டெங்கு அவசர சிகிச்சை பிரிவில் கொண்டு போய் தெளித்தனர். இப்படிச் செய்தால் டெங்கு பரவாது என்று மதவாதிகள் நம்பலாம். மருத்துவர்களும், தமிழக அரசும் நம்பலாமா?
என்பதே நமது கேள்வி.

 மனிதனின் அறிவை மூட நம்பிக்கை என்ற இருள் சூழ்ந்துள்ளது.இந்த மூடநம்பிக்கை அகலாத வரை மெத்தப் படித்த மருத்துவர்களும் இது போன்ற காரியத்தைத்தான் செய்வார்கள். இறைவன் எந்தவொரு நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். (புகாரி 5678). டெங்குவை ஏடிஸ் கொசுக்கள் உருவாக்குகின்றன. இந்த ஏடிஸ் கொசுக்களின் லார்வா பருவ முட்டைகளை தவளைகள் உண்கின்றன. அதனால் அதிக தவளைகளை நீர் நிலைகளில் வளர்த்து, கொசு வளர்ச்சியைத் தடுக்கலாம். அதன் மூலம் டெங்கு காய்ச்சலை ஒழிக்கலாம். இ;நத முறையை தமிழக அரசு பின்பற்றினால் அதில் குறை காண முடியாது. சித்த வைத்தியத்தில் நில வேம்பு கசாயம் என்ற மருந்து இருக்கிறது. இது டெங்கு பாதிப்பை குறைக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். இந்த கசாயத்தை தமிழக அரசு ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் விலையில்லாமல் வழங்கி வருகிறது. தமிழக அரசின் இந்த சேவையிலும் யாரும் குறை காண முடியாது. அதுபோல் ஆங்கில மருத்துவத்தில் ரத்த தட்டையணுக்களை ஏற்றி சிகிச்சை தருகிறார்கள். இந்த சிகிச்சையையும் தமிழக அரசு தருகிறது. இதுவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று தான்.

 இப்படி டெங்குவை ஒழிக்க அறிவியல்பூர்வமான நடவடிக்கையை எடுக்கும் தமிழக அரசு அதோடு சேர்த்து யாகம் வளர்த்து மூட நம்பிக்கையை அதிகரிக்கும் இந்த செயலைத் தான் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. தமிழக அரசு ஒரு மதச்சார்பற்ற மாநில அரசு.இந்த அரசு மதச்சார்பான யாகம் வளர்ப்பது மதச் சார்பின்மைக்கு எதிரானதாகும். அரசு இடங்களில் கோவில் இருக்கக் கூடாது. அவ்வாறு அத்துமீறி கட்டப்பட்டுள்ள கோவில்களை இடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் எத்தனையோ தீர்ப்புகளை

டிசம்பர் 09, 2012

அமெரிக்காவை மிரட்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வடகொரியா தயாரிப்பு .

அமெரிக்காவை மிரட்டும் வகையில் வடகொரியா கண்டம் விட்டும் கண்டம் பாயும் ஏவுகணையை தயாரித்துள்ளது. இந்த ஏவுகணையை வடகொரியாவில் இருந்து ஏவி அமெரிக்காவை தாக்க முடியும். ஏவுகணையின் சோதனையை கடந்த ஏப்ரல் மாதம் வடகொரியா நடத்தியது. ஆனால் ஏவுகணை ஏவப்பட்ட சில வினாடிகளில் அது வெடித்து சிதறியது. இதனால் அந்த சோதனை தோல்வியில் முடிந்தது. மீண்டும் இந்த வாரத்தில் ஏவுகணை சோதனையை நடத்தப்போவதாக வடகொரியா அறிவித்துள்ளது.

 எந்த நேரத்திலும் அந்த சோதனை நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடகொரியாவில் இருந்து ஏவப்படும் இந்த ஏவுகணை ஜப்பான் நிலப்பரப்பு வழியாக பாய்ந்து செல்லலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அப்படி தங்கள் நாட்டு பகுதி வழியாக வந்தால் அதை சுட்டு வீழ்த்த ஜப்பான் தயாராக உள்ளது. அதற்காக எம்.ஐ.எம்.-104 என்ற பேட்டிரியாட் வகை ஏவுகணைகளை தயாராக நிறுத்தியுள்ளது. 4 ஏவுகணைகளை ஜப்பானில் தெற்கு எல்லைப் பகுதியிலும் 3 ஏவுகணைகளை ஜப்பான் தலைநகரம் டோக்கியோ அருகிலும் நிறுத்தியுள்ளது. இந்த ஏவுகணைகள் எதிரி நாட்டின் ஏவுகணைகளை வானத்திலேயே இடைமறித்து தாக்கும் திறன் கொண்டதாகும்.

  இதுதொடர்பாக ஜப்பான் பாதுகாப்பு துறை அமைச்சர் சதோஷி மோரி மோட்டோ வெளியிட்டுள்ள செய்தியில் ஜப்பான் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் இந்த

டிசம்பர் 08, 2012

பாலஸ்தீன் ! காந்திஇன் பார்வை...

பாலஸ்தீன வரலாறு - இஸ்ரேல் பற்றிய காந்தியின் கருத்து இஸ்ரேல் அரசு உருவாக ஆதரவு திரட்டுவதில் ஈடுபட்டிருந்த ஜியோனிசத் தலைவர்கள் தங்களுக்குச் சாதகமான அறிக்கை ஒன்றை மகாத்மா காந்தியிடமிருந்து பெறப் பெரிதும் முயன்றனர். அத்தகைய அறிக்கை தங்கள் நோக்கத்திற்கு மாபெரும் தார்மீக வலுச்சேர்க்கும் என்று அவர்கள் நம்பினர்.

 ‘‘யூதர்கள் பாலான எனது பரிவு, நீதியைப் பார்ப்பதில் எனது கண்களை மறைத்துவிடவில்லை. தங்களுக்கென்று ஒரு தாய்நாடு வேண்டுமென்ற யூதர்களின் கோரிக்கையை என்னால் ஏற்க முடியவில்லை. மற்ற மக்களைப் போலவே அவர்களும் ஏன் தாங்கள் பிறந்து வளர்ந்த நாட்டையே சொந்த நாடாகக் கொள்ளக் கூடாது?’’ பாலஸ்தீனர்களது உரிமையைப் பற்றிப் பேசுகிறபோது, ‘‘ஆங்கிலேயர்களுக்கு எப்படி இங்கிலாந்து சொந்தமோ பிரெஞ்சுக்காரர்களுக்கு எப்படி பிரான்ஸ் சொந்தமோ அதைப் போலவே பாலஸ்தீனம் அராபியர்களுக்குச் சொந்தமானது. அராபியர்கள்மீது யூதர்களைத் திணிப்பது தவறானதும் மனிதத்தன்மையற்றதும் ஆகும். மானமிகு அராபியர்களை ஒழித்துப் பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியையோ அல்லது முழுவதையுமோ யூதர்களின் தேசமாக்குவது என்பது மனித குலத்திற்கே எதிரான குற்றம்’’ என்றார் காந்தி

டிசம்பர் 06, 2012

பாபரி மஸ்ஜித்:துயர நிகழ்விற்கு 20 ஆண்டுகள் நிறைவு!

இன்று பாபரி தினம். வரலாறு இருண்டுபோன கறுப்பு டிசம்பரின் இருபதாம் ஆண்டு நிறைவு. குழி தோண்டி புதைக்கப்பட்ட மதசார்பற்ற ஜனநாயக விழுமியங்களுக்கு கனலும் எதிர்ப்புகள் மூலம் எங்களது அனுதாபங்களை தெரிவிக்கிறோம்.

 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் நாள் மதவெறிப்பிடித்த பயங்கரவாத கூட்டம் பாபரி மஸ்ஜிதை இடித்து தள்ளியது. அந்த புனித இறை இல்லத்தின் குவி மாடங்களில் காவி கயவர்களின் கும்பல் காலால் மிதித்த பொழுது இந்தியாவின் ஆன்மாவில் பயம் மற்றும் துவேசத்தின் வகுப்புவாத நெருப்பு பற்றி எரிந்தது. ஹிந்துத்துவா பயங்கரவாதத்தின் அக்னி குண்டத்தில் ஒரு சமுதாயம் உயிரோடு வீசப்பட்டது. பாபரி மஸ்ஜித் இடிப்பை தொடர்ந்து நிகழ்ந்த வகுப்பு கலவரங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 2500க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் உயிர்கள் பலி வாங்கப்பட்டன.

 1528-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி பேரரசர் பாபரி உத்தரவின் பேரில் அவரது ஆளுநர் மீர்பாஹி பாப்ரி மஸ்ஜிதை கட்டினார். 1936-ஆம் ஆண்டு சன்னி சென்ட்ரல் வக்ஃப் போர்டின் கீழ் மஸ்ஜித் பதிவுச் செய்யப்பட்டது. 1949-ஆம் ஆண்டு டிசம்பர் 22-ஆம் தேதி இரவு ஐம்பதிற்கும் மேற்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதிகள் மஸ்ஜிதுக்குள் அத்துமீறி நுழைந்து மிஹ்ராபில் ராமனின் சிலையை வைத்ததைத் தொடர்ந்து இரத்தக்களரி மிகுந்த வரலாறு துவங்கியது. 1990-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி சோமநாத்தில் இருந்து அயோத்தியை நோக்கி அத்வானி நடத்திய ரதயாத்திரை ரத்த யாத்திரையாக மாறியது. யாருடைய உதவிகளும் கிடைக்காத அப்பாவி முஸ்லிம்களின் நெஞ்சை பிளந்துகொண்டு அத்வானியின் ரதம் உருண்டது. 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி ஏற்கனவே தீட்டிய சதித்திட்டத்தின் அடிப்படையில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் பாபரி மஸ்ஜிதை தகர்த்தனர்.

கரசேவகர்கள் என்ற காவி கபோதிகளின் கும்பல் மஸ்ஜிதை இடித்து தள்ளும்போது தடுக்க முனையாமல் மாநில போலீசும், மத்திய ராணுவ படையினரும் பார்வையாளர்களாக நின்றனர். பிரதமர் நரசிம்மராவ் மெளன விரதம் மேற்கொண்டார். சர்வதேச அளவில் எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து 1992 டிசம்பர் ஏழாம் நாள், பாபரி மஸ்ஜித் மீண்டும் கட்டப்படும் என்று நரசிம்மராவ் தேசத்திற்கு வாக்குறுதியளித்தார். இருபது ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இதுவரை மஸ்ஜித் கட்டப்படவில்லை. பாபரி மஸ்ஜித் நிலைப்

இடிக்கப்பட்டது மசூதி மட்டுமல்ல... : தோழர் டி.கே.ரங்கராஜன், எம்.பி

1992- டிசம்பர் 6 சுதந்திர இந்திய வரலாற்றில் ஒரு கறுப்பு நாள். 450 ஆண்டுகால பழமை வாய்ந்த வரலாற்றுச் சின்னமான பாபர் மசூதியை ஆர்எஸ்எஸ் பரிவாரம் இடித்துத் தள்ளி தரைமட்டமாக்கிய நாள். அன்று அந்த மதவெறிப்பிடித்த நாசகரக் கும்பல் இடித்துத் தள்ளியது மசூதி கட்டிடத்தை மட்டுமல்ல, இந்தியாவின் பாரம்பரியமான மத நல்லிணக்கத்தை, மக்கள் ஒற்றுமையை, மதச்சார்பின்மை கோட்பாட்டையே தகர்த்தனர். இதனால் தான் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைவரான தோழர் ஜோதிபாசு, இவர்களை காட்டுமிராண்டிக் கும்பல் என்று வர்ணித்தார். பாபர் மசூதி இடிப்பு என்பது ஒரே நாளில் நடந்தேறிய எதிர்பாராத நிகழ்வல்ல.

ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரம் கொஞ்சம் கொஞ்சமாக வெறியேற்றி திட்டமிட்டே செய்த வேலை அது. அத்வானி நடத்திய ரத யாத்திரை, செங்கல் பூஜை, கரசேவை என தொடர்ச்சியாக கலவர விதைகளை தூவி நடத்தப்பட்ட அராஜக அறுவடை தான் பாபர் மசூதி இடிப்பு என்பது. பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் கலவரம் வெடித்தது. 1992 டிசம்பர் 6 ம்தேதிக்கும் 13ம் தேதிக்கும் இடையில் நடந்த கலவரங்களில் பலி யானவர்கள் எண்ணிக்கை 1200 பேர். மிகவும் பாதிக்கப்பட்ட மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிராவில் 259 பேர், குஜராத்தில் 246 பேர், உ.பி.யில் 201 பேர், ம.பி.யில் 161 பேர், ராஜஸ்தானில் 48 பேர், தில்லியில் 15 பேர், கர்நாடகத்தில் 73 பேர் என கணக்கிடப்பட்டுள்ளது. எனினும் பலி எண்ணிக்கை இதை விட கூடுதலான எண்ணிக்கையிலேயே இருக்கும். குறிப்பாக இந்தியாவில் வர்த்தக தலைநகரம் என்று கருதப்படும் மும்பையில் நடந்த கலவரங்கள் பயங்கரமானவை. பாஜக மற்றும் சிவசேனை கட்சிகள் இதை முன்னின்று நடத்தின. சிவசேனை கட்சி என்பது தென்னிந்தியர்களுக்கு எதிராக குறிப்பாக தமிழர்களுக்கு எதிராக துவக்கப்பட்ட கட்சி.

 பிரதேச வெறியையும், மதவெறியையும் ஒரு சேர நஞ்சு போல் கக்கி வளர்ந்தது இந்த கட்சி. பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து டிசம்பர் 8ம்தேதி சிவசேனை கட்சியின் தலைவர் பால்தாக்கரே தனது பத்திரிகையில் எழுதிய தலையங்கத்தில் “ராம ஜென்ம பூமிக்காக போராடி அதை கைப்பற்றிய இந்துக்களே வெற்றியாளர்கள். முஸ்லிம்கள் இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். மீண்டும் அவர்கள் விஷமத்தனமான எழுச்சிக் கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் பாபரின் டூம்களுக்கு ஏற்பட்ட கதிதான் அவர்களுக்கும் ஏற்படும்” என்று எழுதியிருந்தார். 1992 டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மும்பையில் நடந்த வன்செயல்களில் 557 பேர் இறந்தனர். நாளொன்றுக்கு 125 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. சிவசேனை மற்றும் பாஜகவினர் முஸ்லிம்களை குறி வைத்து வேட்டையாடியதோடு அவர்களது கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களையும் சூறையாடினர். பெரும்பான்மை வகுப்புவாதம் சிறுபான்மை வகுப்புவாதத்தை ஊட்டி வளர்க்கிறது. இவை இரண்டுமே ஆபத்தானவை. நாட்டு மக்களிடையே பிளவை

டிசம்பர் 05, 2012

விரைவில் செல்பேசி ரோமிங் கட்டணம் ரத்தாகிறது

புதுடெல்லி:செல்பேசி 'ரோமிங்' கட்டணம் விரைவில் ரத்தாகிறது. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்லும் போது செல்பேசிக்கு வரும் அழைப்புக்கு “ரோமிங்” கட்டணம் தற்போது வசூலிக்கப்படுகிறது. நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் ஒருவரை மற்றொருவர் தொடர்பு கொள்ளும் போது இக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ரோமிங் கட்டணத்தை ரத்து செய்ய தொலைத் தொடர்புத் துறை திட்ட மிட்டுள்ளது. 2013 மார்ச் முதல் இதை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 இது அமல்படுத்தப்பட்டால் ஒருவர் நாட்டில் எந்த பகுதிக்கு சென்றாலும் அவரது செல்போனில் வரும் அழைப்புக்கு கட்டணம் கிடையாது. அதே சமயம் அவர் வெளியூர் சென்று அங்கிருந்து மற்றொருவருடன் செல்பேசியில் தொடர்பு கொண்டால், அது உள்ளூர் அழைப்பாக கருதப்பட்டு அதற்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். இந்த திட்டம் அடிக்கடி வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்வோருக்கு குறிப்பிட்ட அளவு செல்பேசி கட்டணம் குறையும். மேலும் எண்ணை மாற்றாமல் செல்பேசி சேவை நிறுவனங்களை மாற்றிக் கொள்லும் திட்டம் (எம்.என்.பி) தொடர்பான கட்டுப்பாடுகளும் நீக்கப்படுகிறது. தற்போது ஒருவர் தனது செல்போன் எண்ணை மாற்றாமல் வேறொரு செல்பேசி சேவை நிறுவனத்திற்கு மாறும் வசதி உள்ளது. ஆனால் இந்த திட்டத்தின் கீழ் ஒரே வட்டத்திற்குள் உள்ள வேறொரு நிறுவனத்தின் செல்பேசி சேவைக்கு மட்டுமே மாற முடியும். வேறொரு வட்டத்தில் உள்ள செல்பேசி சேவை நிறுவனத்திற்கு மாற முடியாது.

இத்திட்டம் அமுலுக்கு வந்தால் நாட்டின் எந்த பகுதிக்கு மாறினாலும் ஒரே செல்பேசி எண்ணில்

காட்டுமன்னார்கோவில் பகுதியில் டெங்கு காய்ச்சல்!!

காட்டுமன்னார்கோவில்:காட்டுமன்னார்கோவிலில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. கிராமங்கள் அதிகம் உள்ளதால் கொசுக்களின் உற்பத்தி அதிகளவில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்தும் கொசுக்களை அழிக்க முடியவில்லை. கிராமங்களில் குப்பைகள் மலைபோன்றும், கழிவு நீர் குளம் போலவும் தேங்கியும் காணப்படுகிறது. இப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் கால்நாட்டாம்புலியூரை சேர்ந்த செல்வராணி, காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த கல்யாணசுந்தரம், உத்திராபதி, வீராணந்தபுரத்தை சேர்ந்த அறிவழகன், அழிஞ்சிமங்கலத்தை சேர்ந்த ஐயப்பன், மற்றும் துர்காதேவி, சத்யா என பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள், பெற்று வருபவர்கள். தனியார் மருத்துவமனைகளுக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் வருகின்றனர்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை கூறினால் அசிங்கம் என்று நினைத்து வெளியில் கூற முடியாமல் ரகசியமாக பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மக்களின் அறியாமையால் டெங்கு காய்ச்சல் பரவல் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. ஆகவே மாவட்ட நிர்வாகம் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களிடம் ஏற்பட்டுள்ள அறியாமையை போக்கி சிகிச்சைக்கு தயார் படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 டெங்கு விழிப்புணர்வு சேவை!
 கடலூர் மாவட்ட சுகாதார பணிகள் துறை, நாட்டு நலப்பணித்திட்டம் ஆகியவை இணைந்து டெங்கு நோய் தடுப்பில் மாணவ, மாணவிகளை ஈடுபடுத்த புதிய செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளனர். அதன் முதல்கட்டமாக டெங்கு விழிப்புணர்வு சேவை பணியில் ஈடுபடும் மாணவ மாணவிகளுக்கான கால அட்டவணை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதற்கான நிகழ்ச்சி கடலூர் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாலை நடந்தது. மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட தொடர்பு அலுவலர் திரு முகம் தலைமை தாங்கினார். மலேரியா தடுப்பு அலு வலர் கஜபதி சிறப்புரையாற்றினார். இதில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு குறும்படம் காண்பிக்கப்பட்டது.

ஒவ் வொரு வாரமும் மாணவ, மாண விகள் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள பொது மக்களுக்கு டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசு தடுப்பது எப்படி எனவும், அதை அழிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளித்து

மும்முனை மின்சாரம் கேட்டு சிதம்பரத்தில் 7ம் தேதி பந்த்

சிதம்பரம்,: சிதம்பரத்தில் அனைத்து கட்சி கூட்டம் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி னார். நகர்மன்ற உறுப்பினர் நடராஜன், நகர துணை செயலாளர் பாலசுப்பிரமணியன், நகர காங்கி ரஸ் தலைவர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கவுன்சிலர் தியாகு, சேகர், தேமுதிக ரவி, சமாஜ் வாடி சார்பில் வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ராஜா, ரமேஷ்பாபு, வெங்கடேசன், விஜயகுமார், கற்பனைச்செல்வம், காமராஜ், மாதவன், ராதாகிருஷ்ணன், முருகப்பன், கண்ணன், ஜீவா உட்பட பலர் கலந்து கொண் டனர். காவிரியில் தண்ணீர் இல்லாததால் டெல்டா பகுதியில் சம்பா நடவு செய்யப்பட்ட பயிர் காய்ந்து கருகி வருகிறது. இதனால் நாகை, தஞ்சை, திருவாரூர், அரியலூர் மாவட்டங்களில் 5 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு தலா ரூ. 10 லட்சம் நிவார ணம் வழங்க வேண்டும். பம்புசெட்டுகளு க்கு 12 மணி நேரம் மும் முனை மின்சாரம் வழங்க வேண்டும், சம்பா பயிரை காப்பற்ற கோரி வருகிற 7ம்தேதி டெல்டா பகுதியில் பந்த் நடத்தப்பட உள்ளது. அன்று சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் பகுதியில் பந்த் நடத்தி சிதம்பரம் தலைமை தபால்நிலையம் முன் மறியல் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
-source:Dinakaran

அன்னிய முதலீடு: இன்று ஓட்டெடுப்பு!

புதுடெல்லி: சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று ஓட்டெடுப்பு நடைபெறுகிறது. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு நிலவி வருகிறது.இதுகுறித்து நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என்று பெரும்பாலான எதிர்க்கட்சிகள் வற்புறுத்தின. முதலில் இக்கோரிக்கையை ஏற்காத மத்திய அரசு பின்னர் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தப்படும் என்று அறிவித்தது.அதன்படி, இப்பிரச்சினை குறித்து ஓட்டெடுப்புக்கு வகை செய்யும் 184-வது பிரிவின் கீழ் நேற்று நாடாளுமன்றத்தில் காரசார விவாதம் தொடங்கியது.

 அன்னிய முதலீடு விவகாரத்துடன், அது தொடர்பான அன்னிய செலாவணியை முறைப்படுத்தும் சட்ட (பெமா) திருத்தங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு விவாதத்துக்கு அப்போது முன்வைக்கப்பட்டது. அதற்கு பா.ஜனதா மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இரண்டையும் தனித்தனியாக விவாதித்து ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று அவர் வற்புறுத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பாசுதேவ ஆச்சாரியா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா ஆகியோரும் அதே கோரிக்கையை விடுத்தனர். ஆனால், மத்திய உள்துறை அமைச்சருமான,அவை முன்னவருமான சுஷில்குமார் ஷிண்டே, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் ஆகியோர் அந்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இரண்டுமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. எனவே, ஒன்றாக நடத்துவதுதான் சரியானது என்று அவர்கள் கூறினர். இறுதியாக, சபாநாயகர் மீராகுமார், இரண்டு பிரச்சினைகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு விவாதிக்கப்படும் என்று தீர்ப்பு அளித்தார். அதன்பிறகு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிரான தீர்மானம் மீதான விவாதத்தை தொடங்கி வைத்து எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் பேசினார்.

 ஒன்றரை மணி நேரம் ஆவேசமாக பேசிய அவர், அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது சிறு வணிகர்களுக்கு எதிரான சதி என்று கூறினார். அவ்வப்போது, ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் நடந்தது. சோனியா காந்தி, அத்வானி ஆகியோர் உறுப்பினர்களை அமைதிப்படுத்தினர். திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சவுகதா ராய் பேசுகையில், அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தால், அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறினார். அவர் பா.ஜனதா தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தார். கூட்டணி கட்சியான தி.மு.க. சார்பில் பேசிய டி.கே.எஸ்.இளங்கோவன், சில்லறை வர்த்தகத்தில் 30 கோடி பேர் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் நலன்களை கடுமையாக பாதிக்கும் என்பதால், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை கடுமையாக எதிர்க்கிறோம். ஆனால், இந்த அரசு கவிழ்வதை

டிசம்பர் 04, 2012

அன்னா ஹசாரே உண்ணாவிரதத்துக்கு முக்கியத்துவம்; அமானதுல்லாஹ் கான் விஷயத்தில் அலட்சியம்!

அன்னா ஹசாரேவின் "ஆடம்பர" உண்ணாவிரதத்துக்கு ஆரவாரத்துடன் செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள், அணிவகுத்து நின்ற அரசு இயந்திரங்கள், அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்வதை கண்டித்து, ஒரு வாரமாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அமானதுல்லாஹ் கான் குழுவினரை கண்டுக்கொள்ளவில்லை. அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து கைது செய்வதை கண்டித்தும் - அவர்களை விடுதலை செய்யக்கோரியும், 26/11 முதல், டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதம் துவங்கிய "லோக் ஜனசக்தி கட்சி"யின் பொதுச்செயலார் அமானத்துல்லாஹ் கான் உள்ளிட்ட முஸ்லிம் பிரமுகர்களின் உடல் நிலை மோசமடைந்து வருகிறது.

அன்னா ஹசாரே உண்ணாவிரதங்களை மேற்கொண்டபோது, நிறைவேற்ற சாத்தியமே இல்லாத பல கோரிக்கைகளை முன் வைத்தாலும் - ஆளும் வர்க்கம் அஞ்சி நடுங்கி பல காரியங்களை செய்து முடித்துவிட்டு ஹசாரேவிடம் மண்டியிடுவதை பார்த்து வருகிறோம். ஆனால், முஸ்லிம்களின் பிரச்சினைகளை முன்வைத்து நடத்தப்பட்டு வரும் உண்ணாவிரத போராட்டத்தை அரசு அலட்சியப்படுத்துவத்தால், முஸ்லிம்கள் கொதிப்படைந்துள்ளனர். மேலும், முஸ்லிம்கள் மீடியாக்களின் மீது கொண்டுள்ள கோபமும் நியாயமாகவே படுகிறது. ஹசாரேவின் உண்ணாவிரத பந்தலை சுற்றி-சுற்றி வந்த ஊடகங்கள், மணிக்கொருறு முறை சூடான செய்திகள் கொடுத்துக்கொண்டிருந்த

நரேந்திர மோடிக்கு விசா தரவே கூடாது.அமெரிக்க எம்.பிக்கள் வலியுறுத்தல்

வாஷிங்டன்: குஜராத் கலவரப் புகழ் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா வருவதற்கு விசா தரக் கூடாது என்று 25 அமெரிக்க எம்.பிக்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனை வலியுறுத்தியுள்ளனர் இதனால் மோடி தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. 2002ல் குஜராத்தில் நடந்த இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்திற்கு முக்கிய காரணமான மோடி, அந்தக் கலவரத்தால் பாதிக்கப்பட்டோருக்கு முழுமையான நிவாரணம் தரவில்லை. தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன்பு இன்னும் சரிவர தண்டிக்கப்படவில்லை என்ற காரணங்களைக் கூறி ஹில்லாரியிடம் இந்த கோரிக்கையை அவர்கள் வைத்துள்ளனர்.

இதுகுறித்து அந்த எம்.பிக்கள் ஹில்லாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில், மோடி இந்தியாவில் பெரிய பதவியை (பிரதமர் பதவி) குறி வைத்து நகர்ந்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு விசா தர முடிவெடுத்தால் அது அவருக்கு சாதகமாக அமையும். மேலும் குஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க விடாதபடி செய்ய வழிவகுத்து விடும். மேலும் விசாரணை மற்றும் வழக்குகளுக்கு அவர் மேலும் குந்தகம் செய்யும் நிலை உருவாகி விடும் என்று அவர்கள் கூறியுள்ளனர். நவம்பர் 29ம் தேதி இந்தக் கடிதத்தை அவர்கள் ஹில்லாரிக்கு எழுதியுள்ளனர். இந்தக் கடிதத்தை குடியரசுக் கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜோ பிட்ஸ் மற்றும் பிராங்க் உல்ப் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இருவரும் குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தபோது இந்தக் கடித விவரத்தை வெளியிட்டனர்.

இந்த கடிதத்தில் முக்கிய எம்.பிக்களான ஜான் கான்யர்ஸ், டிரென்ட் பிராங்க்ஸ், ஜேம்ஸ் மோரன், மைக்கேல் ஹோண்டா, பில் பாஸ்சரல், பார்பரா லீ, எட்வர்ட் மார்க்கி, ஜிம் ஜோர்டன், டேன் பர்டன், மைக்கேல் கோபுவானா, டோக் லாம்போர்ன் ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர். 2002 கலவரத்திற்குப் பின்னர் மோடிக்கு விசா தர அமெரி்ககா தொடர்ந்து மறுத்து வருகிறது. சமீபத்தில் இங்கிலாந்து அரசு, மோடிக்கு விசா தருவது

டிசம்பர் 03, 2012

எதற்கும் துணிந்த இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாத்!

இஸ்ரேல் உளவு அமைப்பான “மொசாத்” மூலம் ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் கூறியிருந்தார். ராஜீவ் படுகொலை சம்பவத்திற்கு முன்பாகவே மொசாத் பற்றி எச்சரித்திருந்தார் அராபத். இந்நிலையில் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன் எழுதியுள்ள புத்தகத்தில் ராஜீவ் கொலைக்கும் மொசாத் அமைப்புக்கும் சம்மந்தம் உள்ளது என்று பல ஆதாரங்களுடன் எழுதியது பழைய கதை ஆனால் வேலுச்சாமி எழுதிய புத்தகம் வெளிவந்தவுடன் சேஷன் புத்தகத்தையும் பலர் புரட்ட துவங்கியிருக்கிறார்கள்.

 பாலஸ்தீன விவகாரத்தில் எத்தனையோ நாடுகள் எதிர்த்தும் எதற்கும் அசராமல் இஸ்ரல் திமிராக இருப்பதற்கு காரணமே இஸ்ரேலிய உளவுப்படை. இஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்கும் மொசாத்தின் தலைமை அலுவலகத்தில் பணிபுரிவோர் இரண்டாயிரம் பேர். அத்தனை பெரும் உளவாளிகள். ஆனால் யாரென்று அறிந்து கொள்ளமுடியாத பல்லாயிரக்கணக்கான ரகசிய உளவாளிகள் மொசாத் அமைப்பிற்கு உலகெங்கிலும் நடமாடி கொண்டிருக்கிறார்கள் நமக்கு பக்கத்தில் ஒரு மொசாத் இருந்தால்கூட ஆச்சரியமில்லை உலகத்தில் இருக்கும் உளவு நிறுவங்களில் வேலை பார்ப்பவர்களின் சம்பளத்தைவிட பல மடங்கு அதிகமானது மொசாத்தின் சம்பளம். உலகத்தில் உளவு அமைப்புகளுக்காக வரையறுக்கப்பட்ட வரம்புகளைக் காட்டிலும் அதிக அதிகாரத்தை கொண்டிருப்பது மொசாத் மட்டுமே இஸ்ரேலில் மட்டுமல்லாமல் தேவைப்பட்டால் உலகின் வேறெந்தப் பகுதியிலும் கூட ஒரு மொசாத் ஏஜெண்ட், நமது தேசத்தின் எதிரி என்று கருதக்கூடியவர்களைக் கொல்லுவதற்கு இஸ்ரேல் அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

அரசியல் கொலைகளை அதிகாரபூர்வமாகச் செய்வதற்கு மொசாத் அமைப்பிற்கு அனுமதி இருக்கிறது. இந்த உளவு அமைப்பில் உலகத்தில் உள்ள எவரும் சேரலாம் யூதர்களுக்கு முன்னுரிமை உண்டு. ஆனால், அவர்கள் அளிக்கும் பயிற்ச்சிகள் பரம ரகசியமாக வைக்கப்படும். ராஜீவ் கொலையில் அந்நிய சதி பற்றி விசாரணை நடத்திய நீதிபதி ஜெயின், தமது அறிக்கையிலும் விடுதலைபுலிகள், மொசாத் மற்றும் அமெரிக்க உளவு நிறுவனமான சி,ஐ,ஏ இடையிலான தொடர்புகளை புலன் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இப்படி ஒரு முடிவுக்கு நீதிபதி ஜெயின் வருவதற்கு காரநாமே ஒரு புத்தகம்தான் மோசத்தில் அதிகாரியாகப் பணியாற்றி, அதிலிருந்து வெளியேறிய விக்டர் ஓஸ்ட்ரோஸ்கி (Victor Ostrovsky) மொசாத் ரகசிய செயல்பாடுகளைப் பற்றிய நூல் ஒன்றை எழுதியுள்ளார். நூலின் பெயர் “By way of deception”.

இதில் “மொசாத் நிறுவனம், ஒரே நேரத்தில் சிங்கள ராணுவத்திற்கும் தமிழ் கொரில்லா குழுவிக்கும் பயிற்சிகளை அளித்தது” என்று குறிப்பட்டுள்ளார். அப்படி பயிற்சி பெற்றது விடுதலைப்புலிகள் தான் என்று கூறப்பட்டது. ஆனால், 1984-ம் ஆண்டில் ஈழ விடுதலைக்காக அங்குள்ள தமிழர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து