Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 05, 2014

முஸ்லிம் வாக்குகளை பிரிக்க உபி யை மூன்றாக பிரிக்க திட்டமிடும்- பிஜேபி

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான  உத்தர பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது. சட்டம்-ஒழுங்கை சீரமைக்கவும், குற்றங்களைத் தடுக்கவும் உ.பி. மாநிலத்தை 3 ஆக பிரிக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.பலாத்காரம்,சட்டம்-ஒழுங்கு குறித்து மோடியிடம் கேள்வி எழுப்ப வேண்டியதுதானே என்று காங்கிரஸ் கட்சியின்  திக் விஜய் சிங் ஊடகங்கள் மீது கேள்வி எழுப்பியுள்ளார்!

உ.பி.யில் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 73 இடத்தை பாஜக கூட்டணி பிடித்தது. சமாஜ்வாதி கட்சிக்கு 2 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. பாஜகவின் வெற்றிக்கு மோடியின் நண்பரும், உ.பி. மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளருமான அமித் ஷாவின் தேர்தல் வியூகமே காரணம் என்று கூறப்படுகிறது. இதே வெற்றியை உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தலிலும் பெற பாஜக திட்டமிட்டுள்ளது. அதற்கான வியூகங்கள் வகுக்கும் பொறுப்பு அமித் ஷாவிடம் வழங்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச சட்டசபைக்கு 2017 ஆம் ஆண்டு தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கு முன்னதாக வெற்றி வியூகத்தை இறுதி செய்ய அமித் ஷா திட்டமிட்டுள்ளார். அதற்கு ஏற்ற வகையில் உத்தர பிரதேச மாநிலத்தை 3 மாநிலமாக பிரிக்க அவர் திட்டம் தீட்டியுள்ளார். அரிபிரதேஷ், அவத் ஆகிய பகுதிகள் ஒன்றாக இருந்தால் ஜாட் சமுதாய மக்களின் எண்ணிக்கை 26 சதவீதமாக அதிகரிக்கும் என்றும், முஸ்லீம் மக்களின் எண்ணிக்கை 18 சதவீதமாக குறையும் என்றும் அவர் கருதுகிறார். இது பாஜகவுக்கு சாதகமாக
இருக்கும் என்றும் நினைக்கிறார். இதனால் மாநிலத்தை 3 ஆக பிரித்து சட்டசபை தேர்தலை சந்திக்க பாஜக முடிவு செய்துள்ளது. மேலும் உத்தர பிரதேசத்தில் அதிகரித்து வரும் பாலியல் பலாத்காரம், கொலை உட்பட பல்வேறு குற்றச் செயல்கள் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது. பெரிய மாநிலமாக இருப்பதால் குற்றங்களை தடுக்க முடியாத நிலை ஏற்படுவதாக கூறப்படுகிறது. மாநில பிரிவினை மூலம் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த முடியும் என்று பாஜக அரசு கருதுகிறது.
-webdunia

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...