கடலூர் மாவட்டத்தில் தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
கல்வி உதவித்தொகை தமிழ்நாட்டில் வாழும் மதவழி சிறுபான்மையினரான கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் பிரிவை சார்ந்த தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்வி பயிலும் மாணவ–மாணவிகள் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2014–2015–ம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான காலவரையரை புதியதற்கு 30–9–2014 மற்றும் புதுப்பித்தலுக்கு 15–11–2014 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு 2,279 மாணவர்களுக்கு புதிய கல்வி உதவித்தொகை மைய அரசால் 2014–2015–ம் ஆண்டிற்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை பெற விரும்பும் மாணவ– மாணவிகள் கடந்த ஆண்டு பொது தேர்வில் குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர், பாதுகாவலர் ஆண்டு வருமானம் அனைத்து வகையிலும் ரூ.2½ லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஆன்–லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்:
www.momascholarship.gov.in என்ற இணைய தள முகவரியில் ஆன்–லைன் மூலம் விண்ணப்பித்த மாணவ–மாணவிகள் பதிவு செய்யப்பட்ட அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கையொப்பமிட்டு, அத்துடன் மதிப்பெண் சான்றிதழ், சாதி மற்றும் வருமான சான்றிதழ் ஆகியவற்றின் நகலுடன், கல்விக்கட்டணம் செலுத்திய ரசீது, இருப்பிட முகவரி, வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களுக்கான ஆவணங்களை இணைத்து
அவர்கள் பயிலும் கல்வி நிலையங்களில் 10–10–2014–க்குள் புதியதிற்கும், 20–11–2014–க்குள் புதுப்பித்தலுக்கும் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி உதவி தொகை மாணவ–மாணவிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட உள்ளதால் கல்வி உதவி தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போது வங்கி கணக்கு விவரங்களை தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும்.
மத்திய அரசால் தெரிவு செய்யப்பட்ட கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ– மாணவிகள் செலுத்தும் முழுக்கல்வி கட்டணங்களும் திரும்ப வழங்கப்படும். ஏனைய கல்வி நிறுவனங்களில் விடுதியில் தங்கி பயில்பவருக்கு ரூ.30 ஆயிரம் மற்றும் விடுதியில் தங்காமல் பயில்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வரை அதிகபட்சமாக கல்வி உதவித்தொகை வழங்கப்படும். கல்வி நிலையங்கள் மேற்படி ஆன்–லைன் மூலம் மாணவ– மாணவிகளால் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை அவ்வப்போது பரிசீலித்து, தகுதி பெற்ற விண்ணப்பங்களை ஆன்–லைன் மூலம் பரிந்துரை செய்ய வேண்டும்.
மேலும் அந்த விண்ணப்ப படிவங்களில் கையொப்பமிட்டு, அத்துடன் அனைத்து சான்றாவணங்களையும் 20–10–2014–க்குள் புதியதற்கும்,
25–11–2014–க்குள் புதுப்பித்தலுக்கும் சிறுபான்மையினர் நல ஆணையர், 807 அண்ணாசாலை (5–வது தளம்) சென்னை–2 என்ற முகவரிக்கு தவறாமல் அனுப்ப வேண்டும். உரிய ஆவணங்கள் இல்லாத விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. கல்வி உதவித்தொகை பெறும் வாய்ப்பினை கடலூர் மாவட்ட சிறுபான்மையின மாணவ– மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவலை கலெக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...