Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 31, 2013

ஒருதிரைப்படத்தை விட மக்களின் சட்டம் ஒழுங்கு நிலைதான் முக்கியம் -ஜெயலலிதா

சென்னை: விஸ்வரூபம் படத்தை தடை செய்தது அரசியல் பிரச்சினை அல்ல. அது முற்றிலும் சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். விஸ்வரூபம் தொடர்பாக உச்சநீதிமன்றத்திற்கு இப்போதைக்குப் போகப் போவதில்லை என்று கமல்ஹாசன் அறிவித்துள்ள நிலையில், முதல்வர் இதுதொடர்பாக ஆலோசனையில் இறங்கினார். தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில டிஜிபி ராமானுஜம், அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், உள்துறைச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஜெயலலிதா.

ஆங்கிலத்தில் அவர் கொடுத்த பேட்டியின் விவரம்... கடந்த சில நாட்களாக விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக டிவிகள், பத்திரிக்கைகள், இணையதளங்களில் காட்டுக்கத்தலாக இருக்கிறது.என்னைப் பறறியும், எனது அரசைப் பற்றியும் இரக்கமே இல்லாமல் குற்றச்சாட்டுக்கள், புகார்களை சுமத்தி வருகின்றனர். எனவே இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தேன். இப்பட விவகாரம் தொடர்பான அனைத்து தவறான கருத்துக்களையும் மறுக்க வேண்டியது அவசியம் என்பதற்காகவே இந்த செய்தியாளர் சந்திப்பு. இந்தப் படத்தை அரசு தடை செய்திருக்கக் கூடாது என்பது முதல் குற்றச்சாட்டு, தியேட்டர்களுக்குப் பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும் என்பதும் ஒரு புகார்.

பலருக்கு சட்டம் ஒழுங்கை அரசு எப்படி பாதுகாக்கிறது என்பதே புரிவதில்லை. அரசின் நிர்வாக செயல்பாடுகள் குறித்து எதுவும் தெரிவதில்லை. இதுகுறித்து கருத்து தெரிவிப்போர் அரசின் சிரமங்கள், நிர்வாகப் பிரச்சினைகள் குறித்து புரிந்து கொள்வதே இல்லை. ஒரு முதல்வர் என்ற வகையில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதுதான் எனது முதல் முன்னுரிமையாகும். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியது எனது கடமையாகும். மக்கள் அமைதியாக, சுமூகமான முறையில், இணக்கமான முறையில் தினசரி வாழ்க்கையை நடத்த வேண்டியது அவசியமாகும். அதை உறுதி செய்ய வேண்டியது எனது கடமையாகும். விஸ்வரூபம் படத்தை 525 தியேட்டர்களில் வெளியிடுவதாக கூறியிருந்தனர். ஆனால் இந்தப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று 24 முஸ்லீம் அமைப்புகள், தமிழ்நாடு தெளஹீத் ஜமாத் ஆகியவை சார்பில் அரசிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. உள்துறைச் செயலாளரிடம்இதைக் கொடுத்னர். அவர்களின் கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டங்களையும் அறிவித்தனர். இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலை

ஜனவரி 27, 2013

விஸ்வரூபம் பிரச்சனை: கர்நாடகாவில் கடைகளுக்கு தீ வைப்பு, 144 தடை உத்தரவு !

பெங்களூர்: கர்நாடகத்தில் விஸ்வரூபம் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பத்ராவதி பகுதியில் உள்ள சில கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டம் பத்ராவதியில் இருக்கும் தியேட்டரில் கமல் ஹாசனின் விஸ்வரூபம் நேற்று திரையிடப்பட்டது. காலை காட்சி ஓடிக் கொண்டிருக்கையில் சிலர் தியேட்டருக்குள் புகுந்து படத்தை திரையிடக் கூடாது என்று கூறினர்.

இதையடுத்து படம் பார்த்தவர்களுக்கும், படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கும் இடேயே தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைந்து போகச் செய்தனர். இந்நிலையில் ஒரு கும்பல் இந்திரா நகரில் உள்ள செருப்பு கடை உள்பட சில கடைகளுக்கு தீ வைத்தது. மேலும் தியேட்டர் மீதும் கல்வீசினர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பலமுறை தடியடி நடத்தியும் கூட்டம் கலைந்தபாடில்லை. இதற்கிடையே சிலர் சாலையில் டயர்களை கொளுத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பத்ராவதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டது. மேலும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

மைசூர் பாலாஜி தியேட்டரிலும் விஸ்வரூபத்தை திரையிட எதிர்ப்பு கிளம்பியதால் படம் ரத்து செய்யப்பட்டது. பெங்களூர் லால்பாக் சாலையில் இருக்கும் தியேட்டரில் நேற்று காலை காட்சியில் விஸ்வரூபம் ஓடிக் கொண்டிருக்கையில் பகல் காட்சிக்கு டிக்கெட் வழங்கப்பட்டது. ஆனால் மதியம் 1 மணிக்கு படத்தை திரையிட போலீசார் தடை விதித்ததோடு தியேட்டருக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று

ஜனவரி 26, 2013

ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் போல இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு வேறு உண்டா? - கி.வீரமணி !!

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவா அமைப்புகள் இந்து பயங்கரவாதத்தினை முன்னிறுத்தி நடத்துவதாகவும், அதற்காக பயிற்சிகள் அளிப்பதாகவும் உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே கூறியிருப்பதை எதிர்த்து பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் வானத்திற்கும் பூமிக்குமாக குதித்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். அதற்கு அவர் மன்னிப்புக் கோர வேண்டும், இல்லையேல் 24-ந் தேதி கிளர்ச்சி, கண்டன ஆர்ப்பாட்டம் செய்வோம் என்றும் ஆர்ப்பரித்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் போல இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு வேறு உண்டா? ஷிண்டே உள்துறை மந்திரி. ஆதாரங்கள் இல்லாமலா அவர் பேசுவார்? ஷிண்டே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர் உள்துறை மந்திரியாக இருப்பது என்பது உயர் சாதிவர்க்கத்திற்கு உறுத்தலாகத் தானே இருக்கும். அதற்காகத்தான் இந்தப் பதவி விலகல் கூச்சல் போலும். சுசில்குமார் ஷிண்டே காவி தீவிரவாதம் குறித்து கூறியதில் தவறு என்ன? ஷிண்டேவின் கருத்துகண்டு இப்படிக் கூறுவது எதைக் காட்டுகிறது? நடுநிலையாளர்கள் ஆழ்ந்து சிந்திக்கட்டும்! இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.

ஜனவரி 23, 2013

“விஸ்வரூபம் திரைப்படத்தை ஓடவிட மாட்டோம்” தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு!


ஜன 22: நடிகர் கமலஹாசன் விஸ்வரூபம் என்ற திரைப்படத்தைத் தயாரித்து அதை ஜனவரி 25 அன்று வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார். அந்தப்படத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும், இஸ்லாம் மதத்தையும் இழிவுபடுத்தி காட்சிகள் அமைந்துள்ளதாக செய்திகள் வந்தன. இதைத் தொடர்ந்து நேற்று (21.01.2013) அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களுக்கு கமலஹாஸன் விஸ்வரூபம் திரைப்படத்தைப் போட்டுக் காட்டியுள்ளார்.

அந்தப்படத்தைப் பார்த்த அனைத்து முஸ்லிம் தலைவர்களும் இந்திய வரலாற்றில் இதுபோல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் ஒரு படம் வெளியாகவே இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
எனவே இந்தப்படத்தை வெளியிட்டால் மாபெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் மத்திய அரசும் மாநில அரசும் இப்படத்திற்கு முற்றாகத் தடை விதிக்க வேண்டும்.
அவ்வாறின்றி இப்படம் வெளியாகுமேயானால்,அப்படம் தமிழகத்தில் எந்தத் தியேட்டரிலும் வெளியிட விடமாட்டோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அவசர நிர்வாகக் குழு கூடி முடிவெடுத்துள்ளது
இப்படிக்கு
ஆர்.ரஹ்மத்துல்லாஹ்
(பொதுச் செயலாளர்)

விஸ்வரூபம் படத்தை தடை செய்ய வேண்டும்! -இஸ்லாமிய அமைப்புகள்

சென்னை:நடிகர் கமலஹாசன் தயாரித்து, நடித்து வெளியாக உள்ள ‘விஸ்வரூபம்’ படத்தை தடை செய்யக் கோரி அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது. விஸ்வரூபம் படம் வெளியிடுவதற்கு முன் இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர்களிடம் கண்டிப்பாக திரையிட்டுக் காட்டப்படும் என்று கமலஹாசன் உறுதியளித்ததன்பேரில் 21.01.2013 அன்று திரையிட்டுக் காட்டப்பட்டது.படத்தில் முஸ்லிம்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பல்வேறு காட்சிகள் இடம் பெற்றுள்ளன. திருமறைக் குர்ஆன் தீவிரவாதத்தை போதிக்கும் நூலாகவும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் மிக மோசமாக கொச்சைப்படுத்தும் விதத்திலும் படத்தில் பல்வேறு காட்சிகள் இடம் பெற்றுள்ளன. முஸ்லிம்களுக்கு எதிராக விஷம் கக்கியுள்ள கமலின் விஸ்வரூபம், விஸ்வரூபம் எடுக்கும் இஸ்லாமிய இயக்கங்கள் இந்நிலையில் படைத்தை கண்டப்பின்தான் தெரிகிறது. முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வளவு விஷம கருத்துக்கள் திணிக்கப்பட்டுள்ளன என்பது. படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதியாக காட்டுவதோடு முஸ்லிம்களின் புனித குர்ஆன் தீவிரவாதத்தை போதிப்பது போன்ற காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. அதோடு இன்னும் கூடுதலாக முஸ்லிமாக நடித்துள்ள கமல் தனது மனைவியை வெளிநாட்டர்களுக்கு கூட்டிகொடுப்பது போன்ற காட்சியும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. விஸ்வரூபம் படத்தை பார்த்த இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு அதிரடியாக படத்தை தடை செய்யக்கோரி அறிக்கை வெளியிட்டுள்ளது. விஸ்வரூபம் படம் தடை செய்யப்படாவிட்டால் கடுமையான போராட்டங்களிலே அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் இறங்கும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் ‘விஸ்வரூபம்’ படத்தை தடை செய்யக் கோரி அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது.

ஜனவரி 20, 2013

நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்!

ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயை முற்றிலுமாக ஒழிக்க ஆண்டுதோறும் இலவச சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான முதல்கட்ட போலியோ முகாம் இன்று நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் போலியோ மருந்து வழங்கப்படும். பேருந்து மற்றும் ரயில் நிலையங்களிலும் சொட்டு மருந்து வழங்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. சொட்டு மருந்து காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படுகிறது. அடுத்த கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 24 ம் தேதி நடைபெற உள்ளது. ஏற்கெனவே, பலமுறை கொடுத்திருந்தாலும், இன்றும் போலியோ மருந்து கொடுக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜனவரி 19, 2013

ஜார்க்கண்டில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது !!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் உள்ளிட்ட 2 பேர் ஆளுநரின் ஆலோகர்களாக நியமிக்கப்பட உள்ளனர். பா.ஜனதா தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி விலக்கிக் கொண்டதையடுத்து, முதல்வர் அர்ஜுன் முண்டா பதவி விலகினார். இதனையடுத்து மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தலாம் என ஆளுநர் சையது அகமது மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார்.

இந்தப் பரிந்துரையை ஏற்று,ஜார்க்கண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நேற்று முன்தினம் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கொல்கத்தாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஜார்க்கண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பான ஆவணத்தில் நேற்று கையெழுத்திட்டார். ஜார்க்கண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்ததையடுத்து, முன்னாள் மத்திய உள் துறை செயலாளர் மதுகர் குப்தா மற்றும் ஒய்வுபெற்ற சி.ஆர்.பி.எப் இயக்குநர் கே.விஜயகுமார் ஆகியோர் மாநில ஆளுநர் சையது அகமதுவின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜத்தாவில் நடமாடும் (மொபைல்) பள்ளிவாசல் !

ஜித்தாவில் செயல்பட்டுவரும் இந்த மொபைல் பள்ளிவாசல், வார விடுமுறை நாட்களில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு நம்மைத் தேடி வருகிறது. படத்தில் காணும் இந்த மொபைல் பள்ளிவாசல், ஜித்தாவில் உள்ள’கார்னிச் பீச்’ என்று அழைக்கப் படும், மக்கள் அதிகம் கூடும் கடல் கரைப் பகுதியில் கடந்த வாரம் வெள்ளிக் கிழமை அன்று எடுக்கப் பட்டதாகும். இந்தப் பள்ளி வாசலின் முக்கிய நோக்கம். அசர், மஃரிப், இஷா தொழுகைகளை சிலர் இதுபோன்ற பொழுது போக்கு பகுதிகளுக்கு செல்லும் போது வஃக்துக்கு தொழ இயலாமல் தொழுகையை இழக்க நேரிடும் அவ்வாறான சூழல்களில் இந்தப் பள்ளிவாசல் வஃக்துக்கு தொழுகையை நிறைவேற்ற உதவி புரிகின்றது.

 இதன் வசதிகள் ஒரு பள்ளி வாசலில் இருக்கும் பாங்கு சொல்ல மைக் ஸ்பீக்கர்.. உளூ செய்ய தண்ணீர், முஸல்லாக்கள், நூற்றுக்கணக்கனோர் நின்று தொழும் வகையில் விரிப்புகள் இன்னும் பள்ளிவாசலுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இதில் உள்ளன. மேலும் இதற்குள் கழிப்பிட வசதியும் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் பள்ளிவாசலை, ஜித்தா இஸ்லாமிய அழைப்பகம் ஏற்பாடு செய்துள்ளது. ஆம்புலன்ஸ் போன்ற உயிர்காக்கும் வாகன சேவையைப் போல், மறுமைக்கு முக்கிய காரணியான தொழுகையை நிறைவேற்ற இதுபோன்ற மொபைல் பள்ளி

ஜனவரி 14, 2013

கொள்ளுமேடு மேலத் தெருவில் பெண்கள் பயான்


நமதூர் மேலத் தெருவில் சகாபுதீன் அவர்கள் வீட்டில் கொள்ளுமேடு தவ்ஹீத் கிளையின் சார்பில் இன்று மதியம்  பெண்கள் பயான் நடைபெற்றது. மானியம் ஆடூரைச்  சேர்ந்த  கொள்கை சகோதரி  ஆலிமா நிசாரா அவர்கள் மஹ்சரில்  மனிதனின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்...

கொள்ளுமேடு தவ்ஹீத் மர்கசில் நல்லொழுக்க தர்பியா முகாம்

கொள்ளுமேடு தவ்ஹீத் மர்கசில் நேற்று 13.01.2013 (ஞாயிறு) அஸர்  முதல் இஸா  வரை நல்லொழுக்க தர்பியா முகாம் அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் வெகு  சிறப்பாக நடைப்பெற்றது.

ஆயங்குடி தவ்ஹீத் மார்கஸ் இமாம் முஹம்மது தம்பி அவர்கள் கொள்கை உறுதி என்ற 
தலைப்பில் உரையாற்றினார். நமதூரை சேர்ந்த தவ்ஹீத் சகோதரர் முஹம்மது ரஜ்வி  அவர்கள் குர் ஆன்  இறக்கப்பட்ட வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார். மேலும் அமீரகத்திலிருந்து தாயகம் சென்றுள்ள முஹம்மது தாரிப் சபை ஒழுக்கம் என்ற தலைப்பில் 
உரையாற்றினார்.


நமதூர் மர்கஸ்  இமாம் நியமத்துல்லாஹ் அவர்கள் நல்லொழுக்க தர்பியா முகாமை தொகுத்து வழங்கினார்கள்.திரளான மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள் அல்ஹம்துலில்லாஹ்.எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே .


செய்தி: அபுஇஹாப் 





ஜனவரி 05, 2013

விமான டிக்கெட்டை செல்போனில் காண்பித்து பயணம் செய்யலாம்

ரெயில்களில் முன்பதிவுசெய்து பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் பரிசோதகர் வரும்போது தங்கள் பயணச்சீட்டை காண்பிக்க வேண்டும். ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களும் இதேபோன்று ஆன்லைன் முன்பதிவு சீட்டை டிக்கெட் பரிசோதகரிடம் காட்ட வேண்டும். ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது பி.என்.ஆர். எண்ணுடன் பயண சீட்டு விவரங்கள் செல்போன் எண்ணுக்கும் அனுப்பப்படும்.

 இந்த நிலையில், பயணச்சீட்டு தாள் வீணாவதை தடுக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், பயணச்சீட்டு விவரங்களை டிக்கெட் பரிசோதகரிடம் செல்போனில் காண்பித்தே பயணம் செய்யும் வசதியை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. ரெயில் பயணிகள் மத்தியில் இந்த புதிய முறைக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. செல்போனிலேயே டிக்கெட் விவரங்களை காண்பித்துவிடுவதால், டிக்கெட்டை எடுத்து வந்திருக்கிறோமா? மறந்துவிட்டோமா? என்ற சந்தேகமோ, பரபரப்போ ஏற்படாததால் ஆன்லைனில் முன்பதிவுசெய்து பயணம் செய்யும் பயணிகள் தற்போது இந்த வசதியைத்தான் அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். அடையாள அட்டையை மட்டும் காண்பித்தால் போதுமானது. இந்த நிலையில், பயணச்சீட்டு விவரங்களை செல்போனில் காண்பித்து பயணம் செய்யும் வசதி சென்னை உள்பட அனைத்து விமான நிலையங்களிலும் கடந்த 1-ந்தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 ரெயில்வே துறையை போன்று பயணச்சீட்டை பயன்படுத்துவதால் பேப்பர் வீணாவதை தடுக்கவும், மின்சேமிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் மத்திய விமான போக்குவரத்து பாதுகாப்புத்துறை இந்த புதிய முறையை கொண்டுவந்துள்ளது. பயணச்சீட்டு விவரங்கள் கொண்ட தகவலை செல்போனில் காண்பித்தோ, டேப்லெட் அல்லது லேப்டாப்-ல் காட்டியோ பயணிகள் விமான நிலையத்திற்குள் சென்றுவிடலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்பிறகு வழக்கமான முறையில், போர்டிங் பாஸ் பெற்றுக்கொண்டு, பாதுகாப்பு சோதனை முடிந்து விமானத்தில் பயணம் செய்யலாம். கர்நாடகா உள்பட ஒருசில மாநிலங்களில் அரசு போக்குவரத்துக்கழகங்களிலும் இத்தகைய வசதி

கற்பிக்கும் முறையில் மாற்றம் வருகிறது விரைவில்...

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (National council for Research and Training – NCERT ) புது தில்லியில் இருபது பள்ளிகளில்கலை மற்றும் சூழல் சார்ந்த(pedagogy) பயிற்றுவிக்கும் முறையை அறிமுகப்படுத்தப்படுத்தி உள்ளது. இதற்கு பைலட்திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஏப்ரல்2013 முதல் அனைத்து மாநிலங்களிலும் உள்ள அரசு ஆரம்பநிலை பள்ளிகளில்(primary level) செயல்படுத்தஉள்ளது. கலை மற்றும் அழகியல் (arts and aesthetics) கல்வித்துறையின் கீழ் இந்த பைலட்திட்டம் செயல்படும். தேசிய பாடத்திட்ட கட்டமைப்பின் (National Curriculum Framework) NCF 2005 பரிந்துரை படி இது தொடங்கபடுள்ளது, பொருள் உணராமல் கற்கும் முறையை மற்றுவது இதன் நோக்கமாகும். இந்த திட்டத்தின்படி கற்பிப்பதற்கான செயல் முறை பயிற்சி மே2011 இல் தொடங்கப்பட்டது. RTE சட்டம் 2009 படி, பள்ளிகளுக்கு அதிக ஆசிரியர்கள் தேவை, அதற்கு பதிலாக NCERT பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலமாக கற்பிக்கும் தரத்தை உயர்த்த உள்ளது.

- தகவல்–கோடம்பாக்கம்ரஃபீக்