Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 31, 2013

இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம் சவுதி அரேபியாவிடம் மத்திய அரசு கவலை

உள்நாட்டு மக்களுக்கு 10 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்குவதை கட்டாயமாக்கும், சவுதி அரேபிய தொழிலாளர் சட்டத்தால் லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறித்து, அந்நாட்டு அரசிடம் மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் அங்கு, மக்கள் தொகையில் 12.2 சதவீதம் பேர், அதாவது 5,88,000 பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இவர்களில் 39 சதவீதத்தினர் 15 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சொந்த மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், நிதாகத் என்ற திட்டத்தை சவுதி அரேபிய அரசு தயாரித்துள்ளது.

 இந்த புதிய தொழிலாளர் சட்டத்தின்படி, ஒவ்வொரு நிறுவனமும், உள்நாட்டு மக்களில் 10 சதவீதம் பேருக்கு கட்டாயம் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உள்நாட்டு மக்களை பணியில் சேர்த்துக் கொள்ளாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சவுதி அரேபிய தொழிலாளர் துறை முடிவு செய்துள்ளது. தற்போது இந்த பணிகளில் பெரும்பாலும் இந்தியர்கள்தான் உள்ளனர். புதிய சட்டத்தால் இவர்கள் வேலையிழக்கும் நிலையில் உள்ளனர். இந்நிலையில், தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் சென்றுள்ள வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ.அகமது, அந்நகரில் நடக்கும் மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள வந்த, சவுதி அரேபிய இளவரசரும், வெளியுறவு துணை அமைச்சருமான அப்துல் அஜிஸ் பின் அப்துல்லா பின் அப்துல் அஜிசை சந்தித்து இந்தியாவின் கவலையை எடுத்துரைத்தார். இதைக் கேட்டுக் கொண்ட சவுதி இளவரசர், இந்தியாவுடன்

மார்ச் 19, 2013

இந்தியர்கள் இனி குடியேற்ற படிவம் நிரப்ப தேவையில்லை!

இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு விமானம் மூலம் செல்லும் பயணிகள் எரிச்சலாக கருதும் விஷயங்களில் ஒன்றான குடியேற்ற படிவம் நிரப்புதல் சீக்கிரம் முடிவுக்கு வரும் என தெரிய வந்துள்ளது. சாதாரணமாக இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்பவர்கள் தங்கள் பொருட்களை எடை போடும் போதே குடியேற்ற படிவம் கொடுக்கப்படும். அதில் தங்கள் கடவுசீட்டு விபரம், செல்லும் இடம், விமான விபரங்கள் முதலியவை நிரப்பப்பட வேண்டும்.

 இது அனைவருக்கும் ஒரு எரிச்சலூட்டும் நடைமுறை என்பதோடு வளைகுடாவிற்கு தொழிலாளர்களாக செல்லும் பலர் இப்படிவத்தை நிரப்ப பிறரை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர். சிலர் போதிய படிப்பறிவின்மையால் தவறாக தகவல் எழுதுவர். இக்குளறுபடிகளை நீக்கும் பொருட்டும், இதனால் விமான நிலையங்களில் ஏற்படும் கால தாமதத்தை தவிர்க்கும் பொருட்டும் இத்தகவல்கள் டேட்டா பேஸிலிருந்து பெறப்பட்டு மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் படி விமானம் கிளம்பிய 15 நிமிடத்திற்குள் அவ்விமானம் செல்லும் விமான நிலையத்திற்கு இத்தகவல்கள் அனுப்பி வைக்கப்படும். மேலும் இத்தகவல்கள் முன்னரே விரைவாக அனுப்பப்படுவதால் சந்தேகத்துக்குரியவர்கள் குடியேற்ற அதிகாரிகளால் எளிதாக அடையாளம் காணப்பட்டு விசாரிக்கப்படுவர்.

 இத்திட்டத்துக்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்து விட்டதாகவும் மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் அமுல்படுத்தப்படும் என்றும் தேசிய தகவல் மைய தலைவர் ஷெட்டி கூறினார். இவ்வாண்டு

மார்ச் 18, 2013

1,70,000 இந்திய ஹஜ் பயணிகளுக்கு அனுமதி அளிக்க சவூதி அரேபியா முடிவு!

ஜித்தா:இந்த ஆண்டு-2013 புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற இந்தியாவைச் சார்ந்த 1, 70,000 பயணிகளுக்கு அனுமதி வழங்க சவூதி அரேபியா அரசு முடிவுச் செய்துள்ளது. இதுக் குறித்து சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகம் கூறியது: மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் இ.அஹ்மது, சவூதி அரேபியாவின் ஹஜ் பயணத்துக்கான அமைச்சர் முஹம்மது அல் ஹஜ்ஜாரை சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, ஹஜ் பயணத்துக்கான ஏற்பாடுகள் குறித்தும் ஹஜ் ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ஹஜ் பயணிகளிடமிருந்து அதிகப்படியான விண்ணப்பம் பெறப்பட்டுள்ளதால் கூடுதலாக 10,000 பேருக்கு அனுமதி வழங்க வேண்டும் என அஹ்மது கோரிக்கை வைத்துள்ளார். இந்த சந்திப்பின்போது, சவூதிக்கான இந்திய தூதர் ஹமீத் அலி ராவ் மற்றும் துணைத் தூதரக அதிகாரி ஃபயாஸ் அஹ்மது கித்வாய் உடனிருந்தனர்.

நமதூரில் பெண்களுக்கான மாபெரும் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொள்ளுமேடு கிளையின் சார்பாக நமதூரில் பெண்களுக்கான மாபெரும் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சகோதரி சம்சுல்ஹுதா ஆலிமா அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றி பெண்களுக்கான தொழுகை பயிற்சியையும் அளித்தார்.மேலும் சகோதரி ஆயிசா ஆலிமா அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் பெண்கள் என்றதலைப்பில் உரையாற்றினார்.மதிய உணவு இடைவேளையின் பொது சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள் சிறிய உரை நிகழ்த்தினார்.காலை 10 மணியளவில் ஆரம்பமான நிகழ்ச்சி மாலை 4 மணி வரை பெரும் நெகிழ்ச்சியோடு நடைபெற்றது.மதிய உணவு நமது கிளையின் சார்பாக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததது.

சகோதரர் தல்ஹா அவர்களின் வீட்டில் பெண்களும் தவ்ஹீத் மர்க்கஸில் ஆண்களும் நிரம்பி இருந்ததனர்.இந்நிகழ்ச்சியில் சுமார் 150பெண்கள் கலந்துகொண்டனர்.மானியம் ஆடூர்,லால்பேட்டை,ஆயங்குடி மற்றும் T.நெடுஞ்ச்சேரி போன்ற ஊர்களில் இருந்தது பெண்கள் பெரும் அளவில் கலந்த்துக்கொண்டனர்.நெடுஞ்சேரில் இருந்து சுமார் 12 பெண்கள் கலந்துக்கொண்டது தவ்ஹீதின் எழுச்சி எந்த அளவிற்கு பெண்களின் உள்ளங்களில் சென்றடைந்துள்ளது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவே அமைந்தது.எல்லா புகழும் கண்ணியம் பொருந்திய அல்லாஹ் ஒருவனுக்கே..


செய்தி:மு.இ.அன்வர்தீன்
படம்: த.முஹம்மது

மார்ச் 15, 2013

நமதூரில் பெண்களுக்கான தர்பியா முகாம்!


செய்தி :மு.இ.அன்வர்தீன் -கொள்ளுமேடு 

மார்ச் 13, 2013

வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு மீண்டும் குடிநீர்

காட்டுமன்னார்கோவில், மார்ச் 13- வீராணம் ஏரியின் நீர்மட்டம் 41.10 அடியாக உயர்ந்துள்ள தால் சென்னைக்கு ஒரு மாதத்துக்கு பின் மீண் டும் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

 காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி சோழர்காலத்தில் கி.பி. 9ஆம் நூற்றாண்டில் உரு வாக்கப்பட்டது. லால் பேட்டையில் இருந்து சேத்தியாத்தோப்பு வரை 16 கிலோ மீட்டர் நீளம் ஏரிக்கரை உள்ளது. இதன் மூலம் மொத்தம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு மூலமாகவும், மழை காலங்களில் பொன்னேரியில் இருந்து கருவாட்டு ஓடை மற்றும் செங்கால் ஓடை வழியாக மழைநீர் வந்தடை கிறது. வீராணம் ஏரியின் முழுநீர் மட்டம் 47.50 அடியாகும். இதன் கொள் ளளவு 1465 மில்லியன் கன அடியாகும். வீராணம் ஏரியின் நீர் மட்டத்தை 45.50 அடி யில் இருந்து 47.50 அடி யாக உயர்த்தி, அதன் கொள்ளளவை 515 மில்லியன் கனஅடியாக உயர்த்தி சென்னைக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

சென்னை பெருநகர் குடிநீர் திட்டத்திற்கு வீராணம் ஏரியின் முழு கொள்ளளவு மூலமாக கடந்த 26.9.2004 முதல் நாள்தோறும் 77 மில்லி யன் கனஅடி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஏரியில் வண்டல் மண் படிந்துள்ளதால் சென்னை குடிநீர் திட்டத்திற்கு 8 மாதங்கள் மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி இந்த ஆண்டு பருவ மழையின்போது, வீராணம் ஏரி முழு கொள்ள ளவை எட்டியது. எனவே வீராணம் ஏரியில் இருந்து சென் னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் பருவமழை தொடர்ந்து பெய்யாததால், வீராணத்தில் இருந்து விவசாயம் செய்ய கூடுத லாக தண்ணீர் தேவைப்பட்டது. எனவே வீராணம் ஏரியின் நீர்மட்டம் மளமளவென குறைந்து, கடந்த மாதம்(பிப்ரவரி) 9ஆம் தேதி ஏரியின் நீர் மட்டம் 39.50 அடியாக இருந்தது. எனவே ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்வது கடந்த ஒரு மாதமாக நிறுத்தப்பட்டது.

 இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீரா ணம் ஏரிக்கு வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர்

மாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும்!

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு? பெண் புத்தி பின் புத்தி! ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே!

என்றெல்லாம் பெண்ணினத்தை இழிவுபடுத்திப் பல்வேறு பழமொழிகள் நடைமுறையில் கூறப்படுகின்றன. அறியாமைக் காலத்தில் பெண்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கப்படவில்லை.பெண்களுக்கு ஆன்மா இருக்கிறதா? என்றெல்லாம் ஆய்வு செய்யப்பட்ட காலம் அது. 

இன்றைய காலத்திலும் பெண்கள் போகப் பொருளாகத் தான் கருதப்படுகின்றனர்.ஆனால் உண்மையிலேயே பெண்களுக் குரிய உரிமைகளை வழங்கி, அவர்களுக்குரிய கடமை களையும் தெளிவுபடுத்திய ஒரே மார்க்கம் இஸ்லாம் தான்.

பெண்ணுரிமை பறிக்கப்பட்ட காலத்தில்,மக்களை நல்வழிப்படுத்துவதற்காக அருளப்பட்டது என்று பறை சாற்றக்கூடிய  வேத நூல்கள் கூட பெண்களை ஒரு மனிதஇனமாக பாவிக்காமல்,அவர்கள் கல்வி கற்றுக் கொள்ள வேண்டுமானால் கூட கணவனிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும்,பெண்கள் வேதநூல்களைக் கூட படிக்கக் கூடாது என்று அடிமைப்படுத்திக் கொண்டிருந்த வேளையில் தான் பெண்களின் கடமையைப் பற்றி இஸ்லாம் அழகாக எடுத்தியம்புகிறது.  

அல்லாஹ் தன் திருமறையில்: 

பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன (அல்குர்ஆன் 2:228) என்று பெண்ணுரிமை போற்றிய மார்க்கம் தான் இஸ்லாம்.

குடும்ப சொத்திலோ அல்லது தந்தை வைத்து விட்டு சென்ற சொத்திலோ பெண்களுக்கு பங்கு கிடையாது. அதில் அவர்கள் உரிமை கோர இயலாது என்றெல்லாம் கடந்த 30 ஆண்டுகள் வரை நாம் வாழும் நாடுகளில் இருந்து வந்துள்ளதை நாமனைவரும் அறிவோம். 

ஆனால் இதையெல்லாம் சிந்தித்துப் பார்க்க இயலாத காலத்தில் அதாவது 1435 ஆண்டுகளுக்கு முன் இஸ்லாமிய மார்;க்கம் உரிமைகளை வழங்கியுள்ளது என்றால், இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் பெண்களுக்கு எந்தளவுக்கு உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன என்பதை விளங்கிக் கொள்ளலாம். 

குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் பெற்றோரும்,உறவினர்களும்,விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்கு உண்டு.பெற்றோரும் உறவினர்களும் விட்டு சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. இப்பங்கீடு கட்டாய கடமை. (அல்குர்ஆன்: 4:7)

அதே போல் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கேவலமான செயல்களில் ஒன்றான வரதட்சணையை ஒழிக்க முடியாத சமுதாயத்தில் வாழும் வசதியற்றோர், தங்களுக்கு பெண் குழந்தைகள் பிறந்து விட்டால்,பிறந்த பச்சிளம் பெண் பிள்ளையை கள்ளிப்பால் குடிக்க வைத்து சாகடிப்பதும்,அல்லது கருவிலேயே கொலை செய்வதும் நடந்து வருவதை நாம் கண்டுதான் வருகிறோம். இந்த இழிச் செயலை தடுக்க யாரும் வக்கில்லை. 

இதே போல் 1435 ஆண்டுகளுக்கு முன் அந்த அறியாமைக் கால மக்களும் தங்களுக்கு பெண்குழந்தை பிறந்து விட்டால் கொலை செய்து வந்தனர். ஆனால் இஸ்லாம் அதை தடுத்து நிறுத்தியது. 

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தம் இரு பெண் குழந்தைகளை அவர்கள் பருவமெய்தும் வரை நன்கு பரிபாலித்து நல்லொழுக்கப் படுத்துகிறாரோ அவர் மறுமைநாளில் வருவார். அவரும் நானும் இவ்வாற இருப்போம் என நபி(ஸல்) அவர்கள் தங்கள் விரல்களுக்கு மத்தியில் இணைத்துக் காண்பித்தார்கள். (அனஸ்(ரலி) முஸ்லிம்)

ஆனால்  நம்முடைய சமுதாயத்திலும் மார்க்கம் தெரியாத காரணத்தினால் பெண்களுக்குப் பல்வேறு விதமான கொடுமைகள் இழைக்கப்பட்டன. பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டது.பள்ளியில் சென்றுதொழுவது, மனதிற்குப் பிடித்த

வீராணம் ஏரியை தூர்வார ரூ.40 கோடி ஒதுக்கீடு

வீராணம் ஏரியை தூர்வார முதல் கட்டமாக ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை அமைச்சர் தெரிவித்தார். கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரியை, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம், சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்றுப் பார்வையிட்டு நீர்ஆதாரத்தை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

 வீராணம் ஏரியின் பிரதான கரையின் நீளம் 16 கி.மீ. (லால்பேட்டை- சேத்தியாத்தோப்பு வரை). எதிர்கரையின் நீளம் 30.65 கி.மீ. பிரதான கரையில் 28 பாசன மதகுகளும், எதிர்வாய் கரையில் 6 பாசன மதகுகளும் உள்ளன. ஏரி மூலம் பாசனம் பெறும் மொத்த பரப்பளவு 44,856 ஏக்கராகும். ஏரிக்கு கீழணையிலிருந்து வடவாறு மூலமாக நீர் வருகிறது. மழைக்காலங்களில் பொன்னேரியிலிருந்து கருவாட்டுஓடை மற்றும் செங்கால்ஓடை வழியாக கூடுதலாக மழை நீர் வந்தடைகிறது. ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47.50 அடியாகும் (1465 மில்லியன் கனஅடி). காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியில் பூதங்குடி எனுமிடத்தில் சென்னை குடிநீர் அனுப்பப்படும் நீரேற்று நெடுமாடத்தை அமைச்சர்கள் கே.வி.ராமலிங்கம், எம்.சி.சம்பத் ஆகியோர் நேரில் சென்றுப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், “ஏரியை தூர்வாருவதற்கு முதல் கட்டமாக தமிழக முதல்வர் ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். மொத்தமாக நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது. எனவே ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்து ஏரி தூர்வாரப்படும்’ என அமைச்சர் தெரிவித்தார்.

 பின்னர் அமைச்சரிடம், விவசாய சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் “வெள்ளாற்றின் பாசனத்தின் மூலம் பயன்பெறும் வகையில் பிலாந்துறை அணைக்கட்டிலிருந்து வடிவமைப்பில் விருத்தாசலம் டி.வி.புத்தூர் முதல் சிதம்பரம் வட்டம், வட்டத்தூர் வரை 18 ஏரிகள் உள்ளன. இவை ஆண்டுதோறும் மழை காலங்களில் முழுமையாக நீர் சேமிக்க முடியாமல் வீராணத்துக்கு வருவதால், வீராணத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இந்த 18 ஏரிகளை ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்தினால் வெள்ளப் பாதிப்பை தவிர்க்கலாம். மேலும் 13,650 ஏக்கர் விளை நிலங்களுக்கு

மார்ச் 09, 2013

1979 ஆப்கான் போர்: மாயமான ரஷ்ய படை வீரர் இஸ்லாமியராக மாறிய சம்பவம் !!

ரஷ்யா- ஆப்கானிஸ்தான் (1979) இடையே நடந்த போரின் போது காணாமல் போன இராணுவ வீரர் ஒருவர் தற்போது கண்டறியப்பட்டுள்ளார். தென் ஆப்கானிஸ்தானில் ஹெராட் என்ற பகுதியில் இவர் மூலிகை வைத்தியராக பணியாற்றுவதுடன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ரஷ்ய படை ஆப்கான் மீது தொடுத்த போரின் போது அந்நாட்டின் சிகப்பு படையில் பணியாற்றியுள்ளார். இவரது இயற்பெயர் பகிரிடின் ககி மோவ், போரின் போது 2 மாதங்களிலிலேயே யுத்தத்தில் காயமடைந்த இவரை ஆப்கான் மக்கள் காப்பாற்றி பாதுகாத்து வந்துள்ளனர். பின்னர் ஆப்கானிலேயே திருமணம் முடித்துக்கொண்டு இஸ்லாமியராக மாறி தன் பெயரை சேக் அப்துல்லா என மாற்றிக்கொண்டார்.

தற்போது காணாமல் போன 264 சிகப்பு படை வீரர்களை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்ட போது, இவரை கண்டுபிடித்துள்ளனர். சேக் அப்துல்லாவும் தான் பணியாற்றிய குழு குறித்தும் அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் பற்றியும் தெரிவித்துள்ளார். 1979ல் ஆப்கானுடனான போரில் 15,000 சோவியத் வீரர்கள் கொல்ல

மார்ச் 08, 2013

சாவேஸ்:தென் அமெரிக்காவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி

கராக்கஸ்:ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த உடனேயே அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுடன் நல்லுறவை ஸ்தாபிக்க முயற்சிப்பதுதான் 3-ஆம் உலக நாடுகளின் முக்கிய செயல்திட்டமாக இருக்கும். ஆனால், அமெரிக்கா மற்றும் அமெரிக்காவின் நட்புநாடுகளுக்கு எதிரான அணியில் உறுதியாக நிற்கவேண்டும் என்பது ஹியூகோ சாவேஸின் பாணியாகும். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஈராக் அதிபர் ஸதாம் ஹுஸைன், ஈரானின் தற்போதைய அதிபர் அஹ்மத் நஜாத், சிரியாவின் பஸ்ஸாருல் ஆஸாத், வடகொரியாவின் கிம் ஜோங் இல் ஆகியோருடன் சாவேஸ் நல்லுறவை பேணியதன் காரணமும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நிலைப்பாடாகும்.

 பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பத்தில் பிறந்து ஆட்சி கட்டிலில் அமர்ந்த சாவேஸ் ஏழைகளுக்காகவும், சாதாரண மக்களுக்காகவும் நடைமுறைப்படுத்திய நலத்திட்டங்கள் அவரை மக்கள் தலைவராக மாற்றியது. வளர்ச்சியடையாத நாடான வெனிசுலாவை வளரும் நாடுகளில் ஒன்றாக மாற்றியது சாவேஸின் திறமை என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். வறுமை, ஊட்டச்சத்துக் குறைபாடு, கல்வியறிவின்மை, கடுமையான நோய்கள் ஆகியவற்றை ஒழிக்க கொண்டு வந்த திட்டங்கள் பாராட்டைப் பெற்றன.அண்மையில் இயற்கை பேரழிவில் வீடுகளை இழந்தவர்களை தனது வீட்டில் தங்கச் செய்து அனைவரது கவனத்தையும் சாவேஸ் ஈர்த்தார். சாதாரண மக்களின் ஆதரவு இல்லையென்றால் அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ பல தடவை மேற்கொண்ட சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றிப் பெற்றிருக்க முடியாது.எதிர்கட்சியினர் ராணுவத்தை பயன்படுத்தியும், அமெரிக்காவின் ஆதரவோடும் சாவேஸை எதிர்கொண்ட பிறகும் மக்கள் ஆதரவு அவருக்கு பலத்தை தந்தது. 48 மணிநேரத்தில் ராணுவ புரட்சி தோல்வியை தழுவியது. சாவேஸ் ஆட்சிக்கட்டிலில் மீண்டும் அமர்ந்தார்.

 நாட்டின் வளமான எண்ணெயை பொருளாதார-அரசியல் ஆயுதமாக பிரயோகித்தார் சாவேஸ். அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளான பிரிட்டன், இஸ்ரேல் ஆகியவற்றுக்கு எதிராக விமர்சனங்களை வெளியிடவும் சாவேஸ் தவறவில்லை. பேரழிவு ஆயுதம் என்ற பொய்யைக்கூறி சதாம் ஹுஸைனை அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும் தனிமைப் படுத்தி தாக்குதல் நடத்தியபொழுது ஈராக் சென்று அவருக்கு ஒற்றுமை உணர்வையும், ஆதரவையும் தெரிவித்தார் சாவேஸ். 2009-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்கு கிடைத்தபொழுது அதனை கடுமையாக விமர்சித்தவர் சாவேஸ் ஆவார். தென் அமெரிக்காவிலும், மேற்காசியாவிலும், இந்தியாவின் கேரளத்தில் கூட சாவேஸால் ஈர்க்கப்பட்டவர்கள் ஏராளம்.

இந்நிலையில் சாவேஸ் தனக்கு புற்றுநோய் என்பதை வெளிப்படையாக அறிவித்தார். தனக்கும், கியூபா, அர்ஜெண்டினா நாட்டு இடது சாரி தலைவர்களுக்கு புற்றுநோய் ஏற்பட காரணம் அமெரிக்கா தான் என்று சாவேஸ் மருத்துவமனையில் வைத்து கூறியிருந்தார். சிகிட்சைக்காக க்யூபாவுக்கு