சென்னை: தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மாணவர்களுக்கு நாளையே இலவச புத்தகம், நோட்டு, சீருடைகள் வழங்கப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான ஆண்டு தேர்வுகள் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றன. இதனை தொடர்ந்து கோடை விடுமுறைக்காக பள்ளிகளுக்கு கடந்த மே 1ந் தேதி முதல் விடுமுறை விடப்பட்டது இதையடுத்து பள்ளிகள் மீண்டும் ஜூன் மாதம் 2ந் தேதி முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. வெயில் அதிகமாக உள்ளதால் ஜூன் 9ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்தன. எனினும், திட்டமிட்டபடி ஜூன் 2ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
தனியார் பள்ளிகள் அவரவர் விருப்பப்படி முடிவெடுத்து கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் நாளை அரசு பள்ளிகள்
திறக்கப்படுகின்றன. முதல் நாளிலேயே மாணவ, மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், சீருடைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...