லண்டன்:இந்திய சுதந்திர போராட்ட வீரர் திப்பு சுல்தானின் மோதிரம் இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.42 கோடிக்கு விற்பனையானது.
இந்தியாவில் 18ம் நூற்றாண்டில் மைசூரை தலைமையாக கொண்டு ஆட்சி செய்தவர் திப்பு சுல்தான். அப்போது இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. ஆனால் திப்பு சுல்தான் மட்டும் பிரிட்டிஷ் படைகளான கிழக்கிந்திய படைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். பிரிட்டிஷ் படைகளை போலவே தனது படையிலும் பீரங்கி உள்ளிட்ட நவீன போர்க்கருவிகளை வைத்திருந்தார்.கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்திற்கு எதிராக தனது படைகளை கொண்டு திப்பு சுல்தான் போர் நடத்தினார். 1799ம் ஆண்டு ஸ்ரீரங்கபட்டணத்தில் போர்முடிவுக்கு வந்தது. அதில் திப்பு சுல்தான் போர்களத்தில் வீரமரணம் அடைந்தார்.
அப்போது அவரை அடையாளம் காண்பதற்காக அவரது உடலில் இருந்து திப்பு சுல்தான் அணிந்திருந்த மோதிரத்தை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். தங்கத்தில் 41.2 கிராம்
எடையில் செய்யப்பட்டிருந்தது.இது லண்டனில் உள்ள பழம்பொருட்கள் அருங்காட்சியகத்தில் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது இது ரூ.1.42 கோடிக்கு ஏலம் போனதாக அருங்காட்சியஊழியர்கள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...