Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 26, 2014

மோடி பதவி ஏற்பு விழா 5 மாநில முதலமைச்சர்கள் புறக்கணிக்கிறார்கள்!

இந்தியாவின் 15–வது பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவி ஏற்கிறார். ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள வெளிப்புற முற்றத்தில் மாலை 6 மணிக்கு பதவி ஏற்பு விழா நடக்கிறது. பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க தெற்காசிய கூட்டமைப்பு உறுப்பு நாடுகளின் (சார்க்) தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதனை ஏற்று சார்க் நாட்டு தலைவர்கள் பங்கேற்கிறார்கள். ஆனால் மோடி பதவி ஏற்பு விழாவை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய 5 மாநில முதலமைச்சர்கள் புறக்கணிக்கிறார்கள்.

மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க இலங்கை ராஜபக்சே அழைக்கப்பட்டதற்கு தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். ராஜபக்சேவை அழைத்த செயல் ‘‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. எனவே அதனை தவிர்த்திருக்க வேண்டும்’’ என்று அவர் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தார். இதன் காரணமாக மோடி பதவி ஏற்பு விழாவில் அவர் பங்கேற்வில்லை. தமிழக அரசு சார்பிலும் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்க
மாட்டார்கள் எனத் தெரிகிறது. கேரள மாநில முதல்வர் உம் மன்சாண்டியும் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க வில்லை.மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் மோடி பதவி ஏற்பு விழாவை புறக்கணித்து உள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...