Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 27, 2013

ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பற்றாக்குறை...


ஐஏஎஸ் மற்றும்ஐபிஎஸ் அதிகாரிகள் பற்றாக்குறை
இந்தியா முழுவதும் ஐஏஎஸ் மற்றும்ஐபிஎஸ் அதிகாரிகள் பற்றாக்குறை காரணமாகமத்திய அரசின் பணிகள் தொய்வடையும் நிலை உள்ளதுநாடு முழுவதும்3000க்கும்மேற்பட்டபணி இடங்கள் காலியாக உள்ளனஅரசுக்கு சிவில் சர்வீஸ் துறையின்தேவை அதிகரித்துள்ளதே பற்றாக்குறைக்கு காரணமாகும்ஆனால் இந்தபற்றாக்குறை 2025ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.

பற்றாக்குறையை குறைப்பதற்கு அதிக எண்ணிக்கையில் அதிகாரிகளைஎடுப்பதற்கான திட்டம் ஏதும் அரசுக்கு இல்லை.DOPT Department of Personnel and Trainingஅதிக எண்ணிக்கையில் அதிகாரிகளை எடுப்பதால்சிவில் சர்வீஸ் துறையின் கட்டஅமைப்பு பாதிக்கப்படும் என அஞ்சுகிறது.

மொத்த பற்றாக்குறை புள்ளி விவரம்:
பதவி
தேவையானஅளவு
பணியில் அமர்த்தபட்டவை
காலி இடங்கள்
ஐஏஎஸ்
6154
4377
1777 (29%)
ஐபிஎஸ்
4730
3475
1255 (27%)
ஐஎஃப்ஓஎஸ்
3078
2700
378(12%)

மாநிலங்கள் வாரியான ஐஏஎஸஅதிகாரிகளின் பற்றாக்குறை புள்ளி விவரம்:
மாநிலம்
தேவையான அளவு
பணியில் அமர்த்த பட்டவை
காலி இடங்கள்
உத்திர பிரதேசம்
592
376
216 (36%)
பீஹார்
326
198
128 (39%)
ராஜஸ்தான்
296
184
112 (38%)

இந்த வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் 180ஐஏஎஸ் மற்றும்150ஐபிஎஸ் அதிகாரிகளை பணியில் அமர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.
மத்தியஅரசுப்பணிகள்தேர்வாணையத்தால் (Union Public Service Commission)இதற்கான தேர்வு நடத்தப்டுகிறது.மேலும் இதுவேஇந்த வருடம் நடத்தும் தேர்வே)இந்திய வரலாற்றில் அதிக எண்ணிக்கையில் ஐஏஎஸ் அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வாகும்.ஏனன்றால்

2005 – 2006ஆம் ஆண்டு  89ஐஏஎஸ்அதிகாரிகளையும்
2007 ஆம் ஆண்டு110ஐஏஎஸ் அதிகாரிகளையும்
2008ஆம் ஆண்டு120ஐஏஎஸ் அதிகாரிகளையும்
2009 ஆம் ஆண்டு130ஐஏஎஸ் அதிகாரிகளையும்
2010ஆம் ஆண்டு150ஐஏஎஸ் அதிகாரிகளையும்
2011 – 2012ஆம் ஆண்டு170ஐஏஎஸ் அதிகாரிகளையும்

பிப்ரவரி 26, 2013

ஹைராபாத் இரட்டைக் குண்டுவெடிப்பு: ஊடகங்கள் சற்றும் மாறவில்லை – ரயீசுத்தீன்!

2007-ஆம் ஆண்டு மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு ஊடகங்கள் கடைப்பிடித்த போக்கு சற்றும் மாறவில்லை என்று அநியாயமாக ஹைதராபாத் இரட்டைக் குண்டுவெடிப்பு வழக்கில் போலீசாரால் பிடிக்கப்பட்டு பின்னர் விடுதலையான முஹம்மது ரயீசுத்தீன் கூறியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை காலையில் போலீஸ் ரயீசுத்தீனை விசாரணைக்காக பிடித்துச் சென்றது. பின்னர் அன்றைய தினம் இரவு வெகு நேரம் கழித்தே விடுவித்தது. பயங்கரவாதி முஹம்மது ரயீஸ் கைது என்று ஒரு தெலுங்கு நியூஸ் சானல் செய்தி வெளியிட்டது. ரயீஸுத்தீன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஹைதராபாத் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையின் வேகம் அதிகரித்துள்ளதாக பிரபல செய்தி நிறுவனமான ஐ.எ.என்.எஸ் செய்தி வெளியிட்டது. “ஊடகங்கள் சற்றும் மாறவில்லை - அன்றும் (மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு) எங்களை அவர்கள் தீவிரவாதிகளாக பிரகடப்படுத்தினார்கள். இன்றும் அறிவிக்கின்றார்கள்” என்று ரயீசுத்தீன் கூறுகிறார்.

மேலும் அவர் கூறியது: குண்டுவெடிப்புக் குறித்த விசாரணையில் முக்கிய கதாபாத்திரமாக ஊடகங்கள் அறிமுகப்படுத்தும் ஸைது மக்பூலுடனான தொடர்பைக் குறித்து போலீஸ் முக்கியமாக விசாரித்தது. 2007-ஆம் ஆண்டு ஷாஹித் பிலால் குறித்து விசாரித்தார்கள். தற்போது மக்பூலைக் குறித்து விசாரிக்கிறார்கள். 2007-ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பில் ஷாஹித் பிலால் காரணமல்ல என்பது நிரூபணமானது.தற்போது நடந்த குண்டுவெடிப்பின் உண்மையான குற்றவாளி யார்? என்பதை கண்டுபிடிக்கவேண்டும்.இவ்வாறு

முஹம்மது நபி, அம்பேத்கார், காந்தி ஆகியோரின் மதுவுக்கு எதிரான கருத்துக்களை பொதுமக்களிடம் சேர்க்கிற டெலிவரிபாய் நான் - வைகோ !!

மதுவிலக்குக் கருத்துக்களைப் பரப்புவதில் முஹம்மது நபி, அம்பேத்கர், காந்தி ஆகியோரின் செய்திகளை விநியோகிக்கும் சிறுவனாகவே தான் இருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். கடந்த 18ம் தேதி முதல் மதுவிலக்கை வலியுறுத்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ள வைகோ நேற்று காலை வில்லியம்பாக்கத்தைச் சென்றடைந்தார். இன்று காஞ்சிபுரம் நோக்கி நடைப்பயணம் தொடர்கிற வைகோ, முன்னிரவில் திருக்கழுகுன்றத்தில் பொதுக்கூட்டத்தில் பேசுகையில் " மது என்னும் அரக்கனை ஒழிக்க அனைவரும் பாடுபடவேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். ''முஹம்மது நபி, அம்பேத்கார், காந்தி ஆகியோரின் மதுவுக்கு எதிரான கருத்துக்களை பொதுமக்களிடம் சென்று சேர்க்கிற டெலிவரிபாய் வேலையைத் தான் இந்த நடைப்பயணத்தில் செய்துவருகிறேன்" என்று வைகோ தெரிவித்தார்.

பிப்ரவரி 22, 2013

குஜராத் போலி என்கவுண்டர் - காவல்துறை அதிகாரி கைது!

அகமதாபாத் : 2004 ஆம் ஆண்டு குஜராத் அகமதாபாத் நகரில் நடைபெற்ற என்கவுண்டரில் இஸ்ரத் ஜஹான் என்ற மாணவி உள்ளிட்ட 4 பேர் கொலை செய்யப்பட்டனர். என்கவுண்டரை நடத்திய காவல்துறை அதிகாரிகள் இஸ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பெரும் லஸ்கர் எ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் என தெரிவித்தனர். இஸ்ரத் ஜஹானை சுட்டுக் கொன்றது போலி என்கவுண்டர் என புகார் எழுந்த நிலையில், இது குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்தது. போலி என்கவுண்டர் குறித்து விசாரணை செய்து வந்த சி.பி.ஐ போலி என்கவுண்டரில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி ஜி.எல்.சிங்காலை கைது செய்துள்ளது.

source:inneram.com

சுயதொழில் செய்யும் இளைஞர்களுக்காக இரண்டு நாள் கருத்தரங்கு‏..

சுயதொழில் செய்யும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்காக இரண்டு நாள் கருத்தரங்கு சென்னையில் நடக்க உள்ளது. இளைஞர் மேம்பாட்டிற்காகவும், கிராமப்புறக் கல்விக்காகவும் பணியாற்றி வரும் ‘புதிய தலைமுறை’ அறக்கட்டளை, குறு, சிறு மற்றும் நடுத்தர வளர்ச்சி நிலையத்துடன் (–MSME-Di – Micro Small and Medium Enterprises – Develop Institute ) இணைந்து இளைஞர்களுக்காக, ‘சுயதொழில் 2013’ என்கிற கருத்தரங்கம், கண்காட்சி, கையேடு ஆகியவற்றினை நடத்துகின்றது.

 வருகின்ற மார்ச் 1 மற்றும் 2ம் தேதியில் இரண்டு நாட்கள், சென்னை கிண்டியில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி நிலைய வளாகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியினை தமிழக ஆளுநர் துவக்கி வைக்கிறார். இளைஞர்கள் சொந்தமாக சுயதொழில் செய்து வாழ்வில் முன்னேற வழி செய்யும் வகையில், சுயதொழில் முனைவோருக்கான வழிகாட்டி நிகழ்ச்சியாக, இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. பட்டதாரிகள், தொழிற்கல்வி கற்போர், புதிதாக சுயதொழில் தொடங்குவோர், கிராமப்புற இளைஞர்கள், சுய உதவிக்குழுக்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர்கள், பகுதி நேர தொழில் செய்ய விரும்புபவர்கள் ஆகியோர், ‘சுயதொழில்-2013’ ல் பங்கேற்கலாம். தகவல் தொழில்நுட்பம், தையல் கலை, மெக்கானிக்கல், வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரித்தல், வேளாண்மை உற்பத்தி, எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெட்ரானிக்ஸ் போன்ற துறை சார்ந்த சுய தொழில் வேலை வாய்ப்புகள் கண்காட்சியில் இடம்பெறுகின்றன.

 மேலும், தர மதீப்பீடு எப்படிச் செய்வது, வங்கிக்கடன் பெறும் வழிமுறைகள், புதிய உத்திமுறைகளை பயன்படுத்துதல், தன்னார்வத் திறமையை எவ்வாறு முன்னிலைப்படுத்துவது போன்ற தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற இருக்கின்றது. ‘சுயதொழில்-2013’ கண்காட்சியில் கலந்துகொள்ள முன்பதிவு செய்ய வேண்டும். மேலும், நுழைவுக்

பிப்ரவரி 17, 2013

இஸ்லாத்துக்கு அழைக்கும் விஞ்ஞானம்

வானமும் பூமியும் விலகாது
கோள்கள், துணைக்கோள்கள், நட்சத்திரங்கள் யாவும் நீந்திச் செல்ல அவைகளின் படைப்பாளானால் வடிவமைக்கப்பெற்ற பேரண்டப் பெருவெளியே ஆகாயம்.
 இது பூகோளத்தைப் போன்று பற்பல கோள்களையும், நிலவைப் போன்று பற்பல துணைக் கோள்களையும் கொண்டிருந்தாலும், அவை எவற்றிலும் வாழ்வதற்குரிய வசதியை இதுவரை கண்டறியாத அறிவியல் கண்களுக்கு இப்பூமியில் காணப்படும் வாழ்க்கை வசதி அளப்பறிய வியப்பை அளிக்கிறது.

'அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியை தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்..' (அல்- குர்ஆன் அத்தியாயம் 40 ஸுரத்துல் முஃமின் - வசனம் 64),
'அவனே உங்களுக்கு இப்பூமியை (நீங்கள் வாழ்வதற்கு) வசதியாக ஆக்கினான்..' (அல்-குர்ஆன் அத்தியாயம் 67 ஸுரத்துல் முல்கு - 15வது வசனம்)

பிப்ரவரி 16, 2013

கரு வளர்ச்சிப்பற்றி அல்குர்ஆன்!

கனடா நாட்டில் இருக்கும் Toronto நகரில் வாழும் மிகப்புகழ் பெற்ற கரு வளர்ச்சி நிபுணர் Dr.Keith L.Moore என்பவர் நயாகரா நீர் வீழ்ச்சி பகுதியில் நடை பெற்ற இஸ்லாமிய மருத்துவர் சபையின் 18 வது ஆண்டு கூட்டதில் ஓர் உரை நிகழ்த்தினார். அந்த உரையில் டாக்டர் மூர் மனிதக் கரு வளர்ச்சி மற்றும் இனப் பெருக்கத்தைப் பற்றிப் பேசக்கூடிய புனித திருக்குர்ஆனின் வசனங்களை விளக்கினார். ” திறுமறை நெடுகிலும் மனித வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்தைப் பற்றிய வசனங்கள் காணக்கிடக்கின்றன” என அப்போது குறிப்பிட்டார்.சமீபகாலமாக திருமறையின் ஒரு சில திரு வசனங்களின் பொருள் முழுமையாக விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளன என்றார். அவர் தனது ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வசனங்களையும், அவர் தரும் விஞ்ஞான விளக்கத்தையும் கான்போம்.

 உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் ஒன்றன்பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களைப் படைக்கிறான். அவனே அல்லாஹ்! உங்களுடைய இறைவன்! அவனுக்கே ஆட்சி அதிகாரம் (முழுதும் உரித்தாகும்) அவனைத் தவிர வேறு நாயன் இல்லை! அவ்வாறிருக்க (அவனை விட்டும்) நீங்கள் எப்படித் திருப்பப்படுவீர்கள்? (அல்குர்ஆன் 39: 6) கருப்பயில் உள்ள சிசுவைப் பற்றிய முதல் படம் கி.பி.15 ம் நூற்றாண்டில் வாழ்ந்த Leonardo da vinchi என்ற இத்தாலியரால் வரையப்பட்டது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த Galen என்பவர் தன்னுடைய “கரு உருவாக்குதல்” என்ற நூலிலும் (Placenta), கருவை மூடியிருக்கும் மெல்லிய சவ்வைப்பற்றியும், விளக்கியிருந்தார். “மனிதக்கரு கருப்பையில் வளர்ந்தது என்பது பற்றி கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த மருத்துவர்கள் அறிந்திருந்தனர்” என்பதர்கான சாத்தியக்கூறே கிடையாது. (ஏழாம் நூற்றாண்டில் தான் குர்ஆன் அருளப்பட்டது ) அப்படி இருக்கையில், குர்ஆன் இறங்கி மனிதக் கரு வளர்ச்சிப்பற்றி கூறக் கூடிய காலத்தில் வாழ்ந்த மருத்துவர்கள் மனிதக் கரு படிப்படியாக வளர்ச்சியடைந்தது என்பதை அறிந்திருக்க சாத்தியமே இல்லை!

 இன்னும் சொல்லப்போனால் கி.பி.15 ம் நூற்றாண்டு வரை “மனிதக் கரு படிப்படியாக வளர்ச்சியடைகிறது” என்பதைப் பற்றி எவரும் பேசவோ நிரூபிக்கவோ இல்லை! கி.பி.16ம் நூற்றாண்டுக்குப்பிறகு Microscope கருவியை Leewenhook என்பவரால் கண்டு பிடிக்கப்பட்ட பிறகுதான் கோழிக் கருவின் ஆரம்ப நிலைகள் பற்றிய விளக்கங்கள் கிடைக்க ஆரம்பித்தன . அப்போது கூட மனிதக் கரு வளர்ச்சி பற்றி எவரும் விளக்கிடவில்லை! கி.பி.20ம் நூற்றாண்டில் Streeter(1941) என்பவரும் முதன் முதல் கரு நிலைகளைப் பற்றிய முறையான விளக்கத்தை

சிரியா புரட்சியாளர்களின் பிடியில் முக்கிய நகரங்கள்!

சிரிய வடக்குப்பகுதியில் உள்ள அல்சத்ததா என்ற எண்ணெய் வயல் நகரத்தில் இடம்பெற்ற போரில் 100இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போரின் இறுதியில் அந்த எண்ணெய் நகரத்தை புரட்சிப் படையினர் கைப்பற்றியுள்ளனர். இதில் 30 புரட்சிப் படையினரும், 30-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் இறந்து விட்டதாக மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளனர். சிரியாவில் உள்நாட்டு சண்டை உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இதில் சிரிய அரச படை ஒவ்வொரு முக்கியப் பகுதிகளையும் போராளிகள் வசம் இழந்து வருகிறது. கடந்த 2 வருடங்களாக நடந்து வரும் சண்டைக்கு அங்கு 70,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

 சிரிய கிளர்ச்சிப் படை சமீபத்தில் அந்நாட்டின் வடக்கேயுள்ள இராணுவ விமானத் தளத்தைக் கைப்பற்றியது மிக முக்கிய போர் வெற்றி என கூறப்படுகிறது. இதன் தொடர்பாக பிரிட்டனைப் பின்னணியாகக் கொண்டு சிரியாவில் இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தலைவர் ராமி அப்துல்-ரஹ்மான் ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கையில்:சிரிய கிளர்ச்சிப் படை அதன் போராட்டத்தின் உச்சக் கட்டமாக சமீபத்தில் மிகச் சிறந்த ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது. அதாவது சிரியாவின் வடக்கு மாகாணத்தில் உள்ள அலெப்போ நகரில் அமைந்திருக்கும் அல்-ஜர்ராஹ் இராணுவ விமானத் தளத்தை இராணுவத்துடன் கடுமையாகப் போராடி கிளர்ச்சிப் படை கைப்பற்றியுள்ளது என அவர் கூறியுள்ளார்.

 சமீப காலமாக சிரிய எல்லைகளில் உள்ள முக்கிய நகரங்களை புரட்சிப் படை கைப்பற்றி வந்துள்ளது. மேலும் இவற்றை மீட்பதற்காக இராணுவத்துக்கும் கிளர்ச்சிப் படைக்குமிடையே கடும் போர் இடம்பெற்று வருகின்றது. இதன் ஒரு கட்டமாக கிளர்ச்சிப் படை ரக்னா மாகாணத்தில் உள்ள யூப்ரடீஸ் ஆற்றின் மீது கட்டப் பட்டிருக்கும் சிரியாவின் மிகப் பெரிய அணையையும் கைப்பற்றியுள்ளது. இந்த நீர்த்தேக்கத்தில் உள்ள நீர் மூலம் ஒரு நாளைக்கு 880 மெகாவாட் நீர்மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. இம்மின் உற்பத்தி நிலையம் மூலமே சிரியாவின் பெரும்பாலான மின் தேவை பூர்த்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த அணை மீது இராணுவம் குண்டு மழை பொழிந்தால்

பிப்ரவரி 12, 2013

அவசரமாக அப்சல்குருவை தூக்கிலிட்டது தவறு: உமர் அப்துல்லா கேள்வி!

பாராளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல்குரு டெல்லி திகார் ஜெயிலில் நேற்று முன்தினம் காலை மிக ரகசியமாக தூக்கில் போடப்பட்டான். இதற்கு காஷ்மீர் முதல்- மந்திரி உமர் அப்துல்லா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:- அப்சல் குருவை தூக்கில் போடப்போவது பற்றி வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்குத்தான் என்னிடம் தகவல் தெரிவித்தனர். உடனடியாக நான் தலைமை செயலாளரையும், டிஜிபியையும் தொடர்பு கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க உத்தரவிட்டேன்.

 ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தவும் அறிவுறுத்தினேன். ஒருவரை தூக்கில் போடுவதற்கு மத்திய அரசு இவ்வளவு அவசரம் காட்டியது ஏன் என்று தெரியவில்லை. இது தவறான நடவடிக்கையாகும். குறிப்பிட்ட ஒரு இனத்த வரை மட்டும் தூக்கிலிடுவது ஏன் என்று தெரியவில்லை. இதனால் காஷ்மீர் இளைஞர்கள் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாக உணர்கிறார்கள். தங்களுக்கு உரிய நீதி கிடைக்காது என்று நினைக்கிறார்கள். அப்சல் குருவை தூக்கிலிடும் முன்பு அவரது குடும்பத்தினருடன் சந்திக்க விடாதது மிகவும் துரதிர்ஷ்டமாகும். அப்சல் குருவை தூக்கில் போடப்போவதாக ஸ்பீடு போஸ்ட்டில் தகவல் அனுப்பியதாக சொல்கிறார்கள். தற்போதைய இண்டர்நெட் யுகத்தில் இவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று புரியவில்லை.

அப்சல் குருவை தூக்கில் போடப்பட்டபோது காட்டிய வேகத்தை மற்றவர்கள் மீதும் காட்டுவார்களா? ராஜீவ் கொலையாளிகளும்

பிப்ரவரி 10, 2013

வீராணம் ஏரியில் தண்ணீர் இல்லாததால் வெற்றிலை பயிர்கள் கருகும் அபாயம்

வெற்றிலை பயிர் 
காட்டுமன்னார்கோவில். : வீராணம் ஏரியில் தண்ணீர் இல்லாததால் வெற்றிலை பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு வடவாறு மூலம் தண்ணீர் வரும். மழை காலங்களில் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை வழியாக தண்ணீர் வரும். ஏரியில் தேக்கப்படும் தண்ணீர் மூலம் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன. மேலும் சென்னைக்கும் குடிநீர் அனுப்பப்படுகிறது. இந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து சரிவர தண்ணீர் திறக்கப்படாததால் வீராணம் ஏரி ஒரு முறை கூட முழு கொள்ளளவு ஆன 47.50 அடி நிரம்பவில்லை. இதன் காரணமாக இந்த பகுதியில் பயிரிடப்பட்ட விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது.

 ஏரியை நம்பி நெற்பயிர் மட்டுமல்லாது வெற்றிலை சாகுபடியும் செய்யப்பட்டு வந்தது. இந்த ஆண்டு தண்ணீர் இல்லாததால் சாகுபடி செய்யப்பட்ட வெற்றிலை கொடிகால்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெற்றிலை சாகுபடி என்பது பல்லாண்டு பயிர் ஆகும். வீராணம் ஏரி கரை ஓரத்தில் உள்ள லால்பேட்டை, கொல்லமலை கீழ்பாதி, மேல்பாதி, திருச்சின்னபுரம், மானியம் ஆடூர், கந்த குமாரன், நெடுஞ்சேரி புத்தூர், கொள்ளுமேடு, நத்தமலை ஆகிய கிராமங்களில் சுமார் 140 ஏக்கர் விளை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ளது. ஏரி தண்ணீரை மட்டுமே நம்பி இந்த பயிர் செய்யப் படுகிறது. இந்த பகுதியில் சுமார் 10 லிருந்து 15 ஆழ்குழாய் கிணறுகள் மட்டுமே உள்ளது. ஏரியில் தொடர்ந்து தண்ணீர் இல்லாமல் வறண்டு வருவதால் பல லட்சம் செலவு செய்து வெற்றிலை சாகுபடி செய்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். இதுபற்றி கந்த குமாரனை சேர்ந்த வெற்றிலை சாகுபடி செய்த விவசாயி செல்லப்பன் கூறியதாவது:

வீராணம் ஏரியின் தண்ணீரை நம்பி சாகுபடி செய்தோம், தற்போது ஏரி வறண்டு வருகிறது. சென்னைக்கு குடிநீர் அனுப்புவதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு எங்களை போன்ற விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே இல்லை. வெற்றிலை சாகுபடி என்பது 3 ஆண்டு பயிராகும். ஒரு ஏக்கர் பயிர் செய்ய 4 லிருந்து 5 லட்சம் வரை செலவு செய்துள்ளோம். முதல் ஆண்டு மேட்டு பாத்திகள் அமைத்து கிடங்கு ஏற்படுத்த வேண்டும். கிடங்கில் தண்ணீர் தேங்கியே இருக்க வேண்டும். இந்த தண்ணீரை பயன்படுத்தியே வெற்றிலை கொடிகளுக்கு இறைப் போம். முதலில் மேட்டு பாத்திகளில் செம்பை, அகத்தி செடிகளை உற்பத்தி செய்வோம். இவை வளர்ந்த உடன் வெற்றிலை விதை கொடிகளை வாங்கி வந்து பதியம் போடுவோம். அதன் பிறகு வெற்றிலை கொடிகள் படர்வதற்கு ஏதுவாக அகத்தி, செம்பை மீது ஏற்றிவிடுவோம். 1 வருடம் கழித்து வெற்றிலையை பறிப்போம். 2 ஆண்டுகள் வரை வெற்றிலை பறித்து வருவோம். தற்போது தண்ணீர்

ஏன் இந்த அவசரம்?

அப்ஸல் குருவின் மீது உரிய ஆதாரங்கள் இருந்தால் ஏன் இவ்வாறு அவசரமாக தண்டனையை நிறைவேற்றவேண்டும் என்று அவருக்காக வாதாடியவரும், வழக்கறிஞருமான காமினா ஜெய்ஸ்வால் கேள்வி எழுப்பியுள்ளார். அவசரத்தில் தண்டனையை நிறைவேற்றியது ஏராளமான கேள்விகளை எழுப்புகிறது. அரசியல் லாபத்திற்காகவே அரசு இவ்வாறுச் செய்துள்ளது. உரிய காலம் கழிந்த மரணத்தண்டனைகளை ஆயுள் தண்டனையாக மாற்றுவதுக் குறித்த மனு உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. இதில் தீர்ப்பு வரும் முன்னரே அரசு உச்சநீதிமன்றத்தை மறி கடந்து செயல்பட்டுள்ளது. மரணத் தண்டனை விதிக்கபட்ட ஒருவரை திகார் சிறையில் மரண செல்லில் அடைத்ததே ஒரு கொடிய தண்டனையாகும். இவ்வாறு ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

பிப்ரவரி 07, 2013

சவூதி அரசுக்கே தெரியாமல் அமெரிக்கா இயக்கிய உளவு விமானப்படை தளம்!

டெஹ்ரான்: சவூதி அரேபியாவில் அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ. ஆளில்லா உளவு விமான நிலையத்தை ரகசியமாக நிர்வகித்து வந்ததாக வெளியாகி இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவூதியில் கடந்த 2 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்ட இந்த ஆளில்லா விமானம் மூலம்தான் அல் கொய்தா மூத்த தலைவரான அன்வர் அல்-அவ்லாகி கடந்த 2011 செப்டம்பர் மாதம் கொல்லப்பட்டார் என்பதும் தெரியவந்துள்ளது.

1991-ம் ஆண்டு வளைகுடா போருக்காக சவூதி அரேபியாவிற்கு சென்ற சுமார் 10 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் 2003ம் ஆண்டுதான் அந்த நாட்டை விட்டு வெளியேறினர். தற்போதும் அங்கு அமெரிக்க ராணுவ பயிற்சி மையம் மட்டுமே அதிகாரபூர்வமாக இயங்கி வருகிறது. ஆனால் இந்த மையத்தில் சவூதி அரேபியா அரசுக்கே தெரியாமல் ஆளில்லா விமான நிலையத்தை சி.ஐ.ஏ. ரகசியமாக நிர்வகித்து வந்திருக்கிறது.
-oneindia.com 

பிப்ரவரி 04, 2013

கொடுமையான பாலியல் குற்றத்துக்கு தூக்குத் தண்டனை : அமைச்சரவை முடிவு !

கொடுமையான பாலியல் குற்றங்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கும் அவசர சட்டத்தை கொண்டு வர மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க தண்டனையை கடுமையாக்குவது,துரிதமாக வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பளிப்பது பற்றி பரிந்துரைக்க உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு தனது அறிக்கையை கடந்த 23 ஆம் தேதி மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. அதில், பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், கும்பலாக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கும்படி பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

ஆனால், மரண தண்டனை விதிக்க வர்மா குழு பரிந்துரை செய்யவில்லை. இந்நிலையில், வர்மா குழுவின் அறிக்கையை பரிசீலிக்க மத்திய அமைச்சரவையின் சிறப்பு கூட்டம் டெல்லியில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங்தலைமை தாங்கினார். கூட்டத்தில், பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை விதிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்க அவசர சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோருக்கு குறைந்தபட்சமாக 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்து அந்த பெண்ணுக்கு கடுமையான காயம் ஏற்படுத்துவோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்க அவசர சட்டம் வழி செய்கிறது.இப்படி ஆயுள் தண்டனை பெறுபவர்கள் சாகும்வரை சிறையிலேயே இருக்கவேண்டும்.முன்கூட்டியே விடுதலை ஆக முடியாது. இந்த அவசர சட்டத்தில், பாலியல் பலாத்கார குற்றம் என்பதற்கு பதிலாக பாலியல் வன்முறை குற்றம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கொடுமையான பாலியல் குற்றங்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்படும். இது தவிர பெண்கள் மீதான ஆசிட் வீச்சுக்கும் அவசர சட்டத்தில் தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆசிட் வீசுபவருக்கு

லால்பேட்டை தப்லீக் இஜ்திமா

லால்பேட்டை தப்லீக் இஜ்திமாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

source:lalpetexpress.com