Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 24, 2015

ஓர் வபாத் செய்தி!

நமதூர் தெற்கு தெருவில் வசிக்கும் அத்திக் அவர்களின் தந்தை  ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் இன்று காலை தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் "ஷப்ரன் ஜமிலா" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress பிரார்த்தனை செய்கிறது.

வீராணம் ஏரியை குத்தகைக்கு விடும் விவகாரம்: மீன்பிடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

வீராணம் ஏரியில் மீன்பிடி உரிமையை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதை கண்டித்து மீன்பிடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வீராணம் ஏரி காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை மற்றும் கொள்ளுமேடு பகுதியில் வீராணம் ஏரி உள்ளது. இதன் மூலம் சித்தமல்லி, அறந்தாங்கி, சென்னிநத்தம், மணவெளி, வானமாதேவி, புடையூர், நத்தமலை, வாழக்கொல்லை, கந்தகுமரன், சின்னமணல் மேடு, வெய்யலூர், கூத்தங்குடி ஆகிய கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்தநிலையில் வீராணம் ஏரியில் மீன் பிடிக்கும் உரிமையை தனியாருக்கு குத்தகைக்கு விட இந்த ஆண்டு

பன்றிக்காய்ச்சல் நோய் பற்றி பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை- கலெக்டர்

மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் நோய் தடுப்பு தடுப்பூசி, மாத்திரைகள் போதுமான அளவு இருப்பு உள்ளதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் பன்றிக்காய்ச்சல் நோய் என்பது ‘ஏ‘ இன்ப்ளூயென்ஸா வகை வைரஸ் கிருமியினால் வரக்கூடிய சுவாச நோய் ஆகும். மனிதனுக்கு இந்நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஸ்வைன் ப்ளூ ஒரு மனிதனிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது. மனிதனுக்கு பொதுவாக வரக்கூடிய ப்ளூ காய்ச்சலுக்குரிய அறிகுறிகளுடன் தான் பன்றிக்காய்ச்சல் நோயும் வரும். வைரஸ்கள் உடலில் பரவியதும் சளி, காய்ச்சல், தொண்டை வலி, சோர்வு, உடல்வலி, குளிர் போன்ற அறிகுறிகள் தோன்றும். சிலருக்கு குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கும் ஏற்படக்கூடும்.

கைகளை நன்றாக கழுவ வேண்டும் இதனால் நிமோனியா மற்றும் சுவாச உறுப்புகள் செயல் இழப்பு

பிப்ரவரி 09, 2015

கொள்ளுமேட்டில் தீ விபத்து! அதிர்ச்சியில் மக்கள்!

கொள்ளுமேடு கடைத் தெருவில் உள்ள சிறு குடுசை கடைகள் தீயில் எரிந்து சாம்பலானது!சரியாக நள்ளிரவு 2:30 மணியளவில் நடந்த இந்த கோர சம்பவதில் குடிசை கடைகள் அனைத்தும் தீயில் கருகி சாம்பலானது.பொதுமக்கள் தீயை அணைக்க பெரும் முயற்சி செய்தும் கடைகள் எதையும் காக்க முடியவில்லை.

 தொடர்ச்சியாக நடைபெறும் இது போன்ற தீ விபத்து? சம்பவங்களால் கொள்ளுமேடு மக்கள் பெரும் குழப்பத்தில் இருகின்றனர். இவ்விபத்துகள்  தானாக நடைபெறுகின்றனவா அல்லது ஏதும் சதி  வேலைகள் இருக்குமா என்ற அச்சம் எழுகின்றது. இந்த சம்பவத்தில் காவல்துறை சரியான முறையில் செயல்பட்டு மக்களின் அச்சத்தை போக்கவேண்டும் என்று கொள்ளுமேட்டுவாசிகள் பெரும் ஆவலுடன் எதிர்பார்கின்றனர்.

இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட அணைத்து கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும் அல்லாஹ் பொறுமையையும் பெரும் பொருளாதாரத்தையும் கொடுப்பானாக என்று கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ் பிரார்த்திக்கும் அதேவேளையில். இதில் ஏதேனும் சதிவேலைகள் இருந்தால் அதில் ஈடுபட்டவர்களுக்கு அல்லாஹ் நேர்வழியை காட்டுவானாக என்றும் பிரார்திகின்றோம். அனைத்தையம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே.

- அபூ தனாஸ் கொள்ளுமேடு